நல்வரவு_()_


Sunday 28 March 2010

இமாவுக்குப் பரிசு!!! அதிராவுக்கு அவார்ட்டு!!!

இது எனக்கு முதல்முதலாக கிடைத்திருக்கிறது.. குரங்கின் கை பூமாலையாகிடக்கூடாதே என பத்திரமாக இங்கே போடுகிறேன்... இதன் ஆதி அந்தம் பற்றியகதையேதும் எனக்குத் தெரியாது, கும்பலிலே கோவிந்தாவாக நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன்... இதை எதற்காக எனக்கு தந்திருக்கினம் எனவும் யாரும் சொல்லவில்லை(என்னிடம் அப்படி என்னதான் உள்ளது? அவார்ட்டு வாங்க???).




இதை எனக்கு அன்பாக அளித்தவர்கள்.... ஆசியா, செல்வியக்கா, ஜலீலாக்கா.. அனைவருக்கும் மிக்க நன்றி.

இதை நான் சந்துவாகிய சந்தனாக்கு கொடுக்கிறேன். மற்றவர்கள் எல்லோரும் பெற்றுவிட்டார்கள் என்றே நினைக்கிறேன்...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இது இமாவுக்கு அதிராவின் அன்புப் பரிசு:




இது என்னவென யோசிக்கிறீங்களோ? இதுதான் ஊறுகாய். போன செப்ரெம்பர் மாதம் அரட்டையில் நடந்த உரையாடலில் என்னை “ஊறுகாய்” க்கு ஒப்பிட்டார் இமா. உடனேயே கடைக்கு ஓடிப்போய் பத்து தேசிக்காயும் உப்பும் வாங்கினேன். (திகதி 04-10-2009).


தேசிக்கய்களை 4/5/6 ஆகக் கீறி(பிளந்து) உள்ளே, முட்ட உப்பை நிரப்பினேன்.(திகதி 04-10-2009).



பின்னர் ஒரு போத்தலில் போட்டு மூடிவைத்தேன். இடைக்கிடை வெயிலில் காய வைத்தேன்.(திகதி 04-10-2009).


அப்படியே விட்டேன். கிட்டத்தட்ட நாலரை மாதங்களின் பின்பு, தேசிக்காய் எல்லாம் நன்கு உப்பிலே ஊறி, உக்கி இப்படி ஆனது (திகதி 24-03-2010).




வெந்தயம், மஞ்சள், செத்தல்மிளகாய், பெருஞ்சீரகம் சேர்த்து வறுத்து பவுடராக்கி, ஒரு பாத்திரத்தில் ஏழு தேசிக்காய்களைப் பிளிந்து, இப்பவுடரை அதில் கரைத்தெடுத்தேன்(திகதி 24-03-2010).


பின்னர் அதனுள் அவ் ஊறிய தேசிக்காய்களைக்கொட்டி நன்கு பிரட்டினேன். (திகதி 24-03-2010).



மீண்டும் அதே போத்தலில் போட்டு மூடிவிட்டேன். இது இப்போ ஊறுகாயாகிவிட்டது... இனி உணவுக்கு பயன்படுத்தலாம்..... இதுதான் யாழ்ப்பாணத்து முறையில் தயாரிக்கப்படும் ஊறுகாய்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இது போனவருடமே செய்யத் தொடங்கிவிட்டமையால், கைவிட மனம் வரவில்லை. இமாவுக்கே அதனைப் பரிசளிப்போம் என எண்ணியே மிகுதியைப் படமெடுத்தேன். இது சமையல் குறிப்பல்ல, இமாவுக்கு பரிசு என்பதால் அளவுகள் நான் குறிப்பிடவில்லை, இது ”அங்கு” போடுவதற்காக, ஸ்டெப் பை ஸ்டெப்பாக நான் செய்த கடைசிக் குறிப்பு.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மக்கள்ஸ்ஸ்ஸ்.. அதிராஆஆ ஊறுகாயோ????
வோட் பண்ணுங்கோ....


ஆ..... இதென்ன இது??? பப்பி, பூஸ், இலாக்கா மூவரும் வோட் பண்ணியிருக்கிறார்களே.. இது என்ன கொடுமை??? இது அன்பு இலா... எனக்கு அனுப்பிய அன்பு “வோட்” Three in one kik...kik...kik...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அன்புத் தம்பி ஜீனோ, கொசு மெயிலில் அனுப்பியது அன்பு அக்காவுக்கு... அதுக்கு கப்ஷனும் கொடுத்திருக்கிறார்....


“காலை எழுந்ததும்,சுத்த பத்தமாய்ப் பல் விளக்கும் பூஸார்”


“கார்ன் ப்ளேக்ஸ் டாப்பாவினுள்ளே பூந்து ப்ரேக் பாஸ்ட் சாப்பிடும் பூஸார்”

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

யாரது அதிராவை ஊறுகாய் எனச் சொன்னது.... பூஸார் தேடிக்கொண்டிருக்கிறார்... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
“தான் மண்ணுக்குள் புதைய சம்மதிக்காதுவிட்டால், விழிக்க முடியுமா விதை?”
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Sunday 21 March 2010

பிளேன் லாண்டட்!!! குலசாமியின் படையலோடு!!!!

பின்னூட்ட குலசாமிக்கு ஒரு படையல் (தொடர் பதிவு)



ஆசியாவின் அழைப்பை ஏற்று... ஒவ்வொரு இடத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பொறுக்கி எடுத்துவந்து “குலசாமி”க்குப் படைக்கிறேன். இன்னும் பலரின் நகைச்சுவைப் பதிவுகள் மனதில் இருக்கு.

எங்கிருக்கெனத் தேடிப்பிடிக்க இன்னொரு கிழமை போய்விடும்.. எனவே கிடைத்ததை மட்டும் போடுகிறேன் யாரும் குறைநினைத்திடாதீங்கோ மக்கள்ஸ்ஸ்.

ஆசியா “காப்பி” அடிக்கப்படாது என்றீங்கள்.... ஆனால் களவெடுக்கப்படாது எனச் சொல்லலியே..... ஒவ்வொரு வீடாகப் புகுந்து களவுதான் எடுத்தேன்...படங்களை. ஆனாலும் புத்தியாக கிளவுஸ் போட்டுக்கொண்டுதான் எடுத்தேன் எனவே “எந்த ஆமி, அதிரடிப்படை வந்தாலும் என்னை அடையாளம் காட்ட முடியாது... கீஈஈ...கீஈ..கீஈஈ”. இதை ஆரம்பித்துவைத்த மார்ச் எம்பிக்கும் (அதுதாங்க பங்குனி அமைச்சருக்கும்...... ஆசியா உபயம்..) கொஞ்சூண்டு நன்றியைத் தெரிவித்துக்கொண்டு...

படையல் ஆரம்பம்.....

இது பைலட் அண்ணனாகிய ஹைஷ்!!

பீலிங்ஸ் பதிவு!!!!
***அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் உணர்வு பூர்வமான வரவேற்புக்கும், வாண வேடிக்கைகளுக்கும், கவிதைக்கும் மிகவும் நன்றி. நானே ரொம்ப கஷ்டப்பட்டு எப்படியோ இந்த உணர்வுகள் எனும் மாயையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வ்ந்து கொண்டு இருக்கும் போது மீண்டும் அன்பு எனும் வலையில் சிக்க வைக்க பார்க்குறீங்களே, இது நியாயமா? தர்மமா?

இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் எல்லாம் அன்பு தங்கை அதிரா ஸ்டைலில் “லெவெல்” ஆக...

வாழ்க வளமுடன்

பைலட்டாக மாறிட்டார் இப்போ!!!
***ஜீனோ அப்படியே போகும் வழியில் துபாயில் இருந்து ஒரு மண் நோ நோ இரண்டு மண் பிரியாணிக்குள் 4 அவிச்ச முட்டை மறைஞ்சு போக போகுதாம் அதை ஆட்டை போட்டுட்டு போய்டுவோம் :)

***நம்ம இரண்டு பேருக்கும் தான் அவிச்ச கோலிமுட்டை பிடிக்குமே :)))).

வடிவேலு பார்த்தீபன் ரேஞ்சுக்குப் போயிட்டார்!!!
***நாங்க வடிவேலுமாதிரி பூஸ் கடிச்சா பூஸுக்குதான் 10 ஊசி எங்க போடுவாங்க என எனக்கு தெரியாது எனக்கும் ஊர்வம்பு பிடிக்காது.

புகை புகையா வந்த பதிவு...(வயிற்றெரிச்சல்தான்...:))!!!
***என்னாஆஆ இது ராத்திரியில் யாரும் பெரியவா இல்லை என்பதால் ஜெமினி டீவி மிட்நைட் மசாலா எல்லாம் நடந்து இருக்கு...எங்கே போனானாங்க சீரீயஸான ஆள்கள் எல்லாம் :)

***சீனியர்ஸ்ஸ்ஸ்ஸ் பிளீஸ்ஸ்ஸ் லுக் இன் டூ த மேட்டர்...இந்த ஜூனியர்ஸ் அட்காசம் தாங்க முடியலே !!!

இது குண்டக்க மண்டக்க!!!
***அன்னத்தை தேடிய அன்னத்தை காவல்துறை காட்டுக்குள் விரட்டிவிட்டு விட்டதா? சென்னையில் இருந்து வந்த பிங்~போ~கட்டிய பூஸ்ஸை விட்டு காட்டுக்குள் போன அன்னத்தை தேட சொல்றீங்களோ?

***அதிரா பீரீ எலி டெலிவரிக்கு ரெடி எங்க போய் விட்டனும் சொல்லுங்கோ :))))
-------------------------------------------------------------

இது பப்பியாகிய ஜீனோ!!

இது பீலிங்ஸ் பகுதி....!!!

***அக்காவைப் பாத்தீங்களா?
அதிரா அக்காவைப் பாத்தீங்களா?
இலாக்கா கொஞ்சம் நீங்க பாத்துச் சொல்லுங்கோ..
செல்வி ஆன்ரீ கொஞ்சம் நீங்கதான் கேட்டு சொல்லுங்கோ..
நியூ ஆன்ரீ..நீங்களும்தான் பாத்துச் சொல்லுங்கோ!!!
அக்காவைப் பாத்தீங்களா -ஜீனோவிண்ட
அதிரா அக்காவைப் பாத்தீங்களா? :):)
[மச்சானைப் பாத்தீங்களா,மலைவாழைத் தோப்புக்குள்ளே-ன்னு அன்னக்கிளி-லே சுஜாதா பாடுவாங்களே,அதே ட்யூனு...ஆரும் மாத்திப் படிக்கக் குடாது!]

***//வெளிநாட்டுக்கு 7 ஸ்ரார் ஹோட்டல் புக்பண்ணிப்போயிருப்பார்... டோராவோடு தங்கநிலவுக்காக.// அக்கான்னா அக்காதான்...எப்பூடி இப்பூடிஎல்லாம் கரீக்ட்டா தம்பியப் பத்தி சரியாகக் கணிச்சு வைச்சிருக்கீங்கள்! நீங்க ரொம்ப நல்லவங்கள்..வல்லவங்கள்..நாலும் தெரிஞ்சவங்கள்.


கிட்னியை பூஸ் மன்னிக்கவும் யூஸ் பண்ணும் ஜீனோ!!!
***அக்காவ்...அதிராக்காவ்..கோழி முட்டை,கோலி முட்டை எல்லா முட்டையும் ஒண்ணுதான்..பிரியாணிக்குள்ள புதைந்துகிடக்கும் முட்டை ஜீனோக்கு, பிரியாணி எல்லா...ஆ...ஆம் அண்ணனுக்கு! ஆட்டை போட்டுடுவம் ஹைஷ் அண்ணே..அதுல ஜீனோ ரொம்போ எக்ஸ்பர்ட்டு..கூடோ அண்ணன் இருக்கும்போது என்ன பயம்?? ஹி,ஹி!!

***நல்லிரவு ஹைஷ் அண்ணே..வீ வில் டாக் அபவுட் அவர் ட்ராவல் ப்ளான் இன் த ஹொட் லைன்..நாட் ஹியர்!! /எல்லாரும் பாம்புக் கண்ணும் எலிக் காதோடையும் திரியினம் இங்க.../ எண்டு அக்காவே சொல்லிருக்காங்கள்..ஸோ நீங்கள் தூங்குங்கோ..நம் கனவுகள் நிட்சயம் நனவாகும்.


சிரிக்கவைத்த ஜீனோ!!!
***//நான் கட்டிலுக்குக் கிழ இருந்துதான் ரைப்பிங் நடக்குது.... இலா இடமிருக்கு வாங்கோ... ஒரு சேவ்ரிக்காக இங்கேயே இருந்து கதைப்போம்...//ஷ்..ஷ்..இங்க பாருங்க அதிராக்கா! ஜீனோவும் கட்டிலுக்கு கீழாலதான் பதுங்கியிருக்கிறார். நம்ம இங்கருந்தே சேவ்ரியா கதைப்பம்.

***//இப்பத்தான் 4 பால்பற்கள் விழுந்திருக்கு.// OMG!!! பால் பற்களோ?? ஜீனோ ஃ பெயின்ட் ஆயிடும் போலருக்கே..ஆரும் வந்து தண்ணி தெளியுங்கோ..ப்ளீஸ்!
------------------------------------------------------------

இது யங்மூனாகிய இளமதி!!

நகைச்சுவையோடு கிட்னியையும் யூஸ் பண்ணிய.. இளமதி!!!

***//அதிரா பூனை எப்போதும் படிக்கறவங்க பக்கமதான் “பூனை என் பக்கம்”//
அண்ணா! அதிராபூனையாஆஆஆஆஆஆஆஆ?
பூனை பள்ளிக்கூடம் போகதொடங்கீட்டுதா?
பூனை என் பக்கம் என்கிறீங்களே குப்பைமேனி செடி எல்லாத்தையும் பிடுங்கி அழிச்சிட்டீங்களோ;).....
ஏதோ ஒருவழியாய் பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் என்றிருந்தால் சரிதான்.

அதிரா! என்ன வரவர பற்றி வீக்காகிறமாதிரி இருக்கு. பவர் குறைவா தெரியுது?
உடல்நலம் சரி இல்லையோ?................ அல்லது வேலை அதிகமோ?

தன்னால... தன்னைக்காட்டிக்கொடுத்த இளமதி:):)!!!
அப்ப ஊரிலை உங்களின் வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி இருந்த கோயிலுக்கு நான் கும்பிட வந்தபோது உங்களைப் பார்த்தனான் . கோயில்லை கும்பிடேக்கையும் வெளிவீதிலை போகிற பூனையிலைதான் கண். அம்மாவின் கையை உதறிப்போட்டு வீதிக்கு ஓடி அந்தப் பூனைகளுக்கு பின்னாலை போய் பூஸ் பூஸ் எண்டு திரிஞ்சதையும் உங்களை காணாமல் அம்மா கோயில் முழுக்க தேடினதையும் மறக்கேல்லை:) அப்ப தெரியாது அது நீங்கள்தான் எண்டு. இப்ப எல்லாம் விளங்குது............
------------------------------------------------------

இது டேலியாவாகிய இமா!!!


ஜீனோவின் அல்பம் பார்த்து, ஜீனோக்கு இமா போட்ட கொமெண்ட்டுக்கு நிறுத்தமுடியாமல் சிரித்த அதிரா..கிக்...கிக்...

புராதன காலத்திலும் ஆடையுடன்...(இது ஜீனோ எழுதியது)

*** ஆதாரத்தோட நிரூபிக்கிறீங்க. ;).....(இது இமா)

புரிஞ்சிருக்கு ஆனா புரியல்லே, அதிராவுக்கு செல்லப்பட்டங்கள் கொடுக்கும் இமா!!!
***நீங்கள் கமண்ட்ஸ் சொல்லாமல் இருக்கிறதே ஒரு கமன்ட் தானே அதீஸ். ;) ஒரு திருத்தம், 1+1+1+1=4. ம்... சொல்லவேணும், முன்னம் ரெண்டு கடற்காகம் வந்து திரியும். இப்ப வாறேல்ல. என் செல்ல மருமகனை இனி நான் பகிடி பண்ண மாட்டன். அவர் அங்க ஆமிக்காரன் உடுப்புப் போட்டு என்னைப் பார்த்துப் பல்லக் காட்டினவர், பயந்து போனன். வேணாம், எனக்கெதுக்கு ஊர் வ.....!!! ;))).வாணி வந்திட்டா மொப்ஸ். நீங்களே பிடிச்சுக் கொள்ளுங்கோ.

அக்கறையாக அன்பு காட்டும் இமா!!!
***வந்து பார்த்து விட்டு என்னடா அதிரா இப்பிடி டிசைன் டிசைனாக உறக்கமாகிக் கிடக்கிறாங்களே என்று யோசித்தேன். ;)
-------------------------------------------------------------

இது சந்துவாகிய சந்தனா!!!

பீலிங்ஸ் பகுதி!!!
அதிரா.. எலிக்கறி சாப்பிடும் நிலைமைக்கு ஆளாகிட்டீங்களா தமிழினமே?? :)))

இது பப்பிக்கு ஆப்பு:)!!!
இந்த பப்பி (மரியாதை போதுமா) பீட்டர் தாங்க முடியல.. ஏதோ பழைய பாட்டெல்லாம் பாடிக்காட்டுது.. வயசாகிட்டே போகுது அதுக்கு..

ஒண்ணுமே தெரியாத அப்பாவியாகிய சந்து!!!
இலா.. பரவாயில்லயே நீங்க ஸ்விம் எல்லாம் பண்றீங்க? இந்தக் குளிர்ல எப்படி முடியும்? சுடு தண்ணி வச்சிருப்பாங்களா?

ஹைஷ்.. கைய வச்சதுக்கே இந்த நிலைமையா? :)) அந்தக் குளிர் லயே வாழறவங்களுக்கு அடாப்ட் ஆயிடும்ன்னு நினைக்கறேன்..

என்னை நன்கு சிரிக்க வைத்த சந்து!!!
ஜீனன்னே.. (என்ன அடுத்ததா அக்கான்னு கூப்பிடறதுக்குள்ளாற நானே முந்திக்கறேன்..)

கடைசி கேள்வி செம பன்ச்.. ஹா ஹா..

பயாஸ் கோப்பு ல வர்ற நாய்க்குட்டீஸ் எல்லாம் க்யூட் ஜீனோ (கவனிக்க.. உங்களச் சொல்லல..).
--------------------------------------------------------

இது புவஹா... ஜல்..ஜல்..ஜலீலாக்கா..!!!

சிரிக்க வைத்திட்டார்!!!!
***(வடிவேலு: ஐய்யோ ஐய்யோ அடி ஆத்தி ஜார்ஜாவுலய இம்புட்டு மல பெய்து) அங்கேயும் ஆரம்பிச்சிட்டீங்களா நம்மூரு பயலுவ‌ அவ்வ்வ்வ்வ்வ்
அப்ப இனிமே சிலுக்கு ஜிப்பா போட முடியாதா ஜார்ஜாவுல‌?

***( கண்ணாடி கதவு தட தடன்னு ஆடுது) நெஜமாவே பேய் தான் தட்டுதா எல்லா கதவையும் மூடிட்டு டிவிய ஜோரா வைத்து கொண்டு ஒரு நாள் முழுவது பயந்து கொண்டு இருந்தேன். கதவ திறந்ததும் ஹால் அங்கேயே உட்கார்ந்து கொண்டு இருந்தேன்.

***இரவு 9.30 மணிக்கு அவர் வீட்டுக்கு வந்தததும் தான் உயிரே வந்தது.
ஆனால் இப்ப அடிக்கிற பேய் காத்தும், மண்ணு காத்தும் என்ன பார்த்து தான் பயந்து ஓடும்...

ஆஹா.... உண்மையைச் சொன்ன ஜலீலாக்கா!!!
***//பி.கு: பூனை கடிச்சு வைக்க போகுது என்ற பயத்தில்தான் டீ இல்லை ரீ.//
ஓஹோ அப்படியா சங்கதி நான் இத கவனிகக்லையே. அதிரா இப்ப‌டியா ப‌ய‌ம் ப‌டுத்துவ‌து அவ‌ர் ப‌த‌ட்ட‌த்தில் டீக்கு ரீ ந்னு எழுதிட்டார் பாருங்க‌ள்.

இது பீலிங்ஸ்சம்மா பீலிங்ஸூ!!!
***அதிரா ரொம்ப அருமை..
பூஸை பார்த்து பார்த்து எனக்கும் இப்ப ரொம்ப பிடித்துவிட்டது.
வீட்டில் கீழே இறங்கினால் நிறைய பூஸ் வரும் இப்ப நான் மனசுக்குள் அதனிடம் அதிரா போல் பேசுகிறேன்.
---------------------------------------------------------

இது இப்போ எதிர்க்கட்சியில் இருந்து விரட்டும்:) செல்வியக்கா!!!

இது அவவின் சொந்தக்கதை சோகக்கதை:)!!!
***அப்பாடா, ஒரு வழியா பிளாக் பிரச்னையை சரி பண்ணியாச்சு. இப்ப ஃபாலோயர்ஸ் பிரச்னையும் இலலை.யாரெல்லாம் என் பின்னாடி வர்றீங்களோ, வாங்க! பத்திரமா கூட்டிப் போறேன்.

வச்சிட்டா ஆப்பு அதிராவுக்கு!!!
***அதிரா, முதல் ஃபாலோயர் நீதான்!!!!பிரித்தானியாவுக்கு வருவதற்கு அடுத்த ஆளும் ரெடியாகிட்டு இருக்காங்க.
தேங்க்ஸ் சகோ. ஹைஸ்! அப்படியே ஃப்ளைட்டை பாண்டிச்சேரி ஓட்டி வந்து அவரையும் பிக்கப் செய்து கொள்ளச் சொன்னார். பிரித்தானியாவில் அவருக்கும் ஏதோ வேலை இருக்காம்:-(

மிரட்டுறா என்னை:(!!!
***அதிரா எங்கே காணோம்? கட்டிலுக்கு கீழேயோ?

***சகோதரர். ஹைஸ், உங்கள் பார்சலுக்காக எங்கள் லக்கி எப்படி காத்துக் கொண்டிருக்கான்னு மலர்வனத்தில் பாருங்கோ. பார்சலுக்கு நன்றி.

பீலிங்ஸ் பகுதி!!!
***ஆனா, பூஸைப் பார்த்தால் ரொம்பவே பாவமாக இருக்கு. அதனால் இது வேண்டாம். ஒரு பாக்கெட் பிஸ்கட் மட்டும் அனுப்புங்கோ, போதும் எங்கட லக்கிக்கு.
அதிரா, போதுமா? பூஸை விடச் சொல்லிட்டேன் சகோதரர் ஹைஸிடம். இவ்வளவு பாவமாகப் பார்த்தால் எங்க லக்கியே விட்டுடுவான்:-) அவனுக்கும் எங்களைப் போல இளகிய மனசாக்கும்!
-------------------------------------------------------------

இது “பிங் போ” கட்டிய பூஸ் அனுப்பிய ஸாதிகா அக்கா!!!

சிரிக்க வைத்தார் பூஸை!!!
***அதிராராராராவ்வ்வ்வ்வ்.. சூசூசூசூப்ப்ப்ப்ப்பர்ர்ர்ர்ர். டபுள்மீனிங்கில் அசத்தல் கவிதை படைத்த அதிராவுக்கு இப்பொழுது ஒரு பொக்கே அனுப்புகிறேன் மெயிலில். (பூஸ் என்றால் இந்த ஸாதிகாவுக்கு ரொம்ப பயம்)

இது கின்னசில் இடம்பிடிக்க முயற்சித்த சாதனை!!!
***சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாகியும் என்னால் ரோடை கிராஸ் பண்ண முடியவில்லை.வாகனங்கள் ஒரு பக்கம் நிறுத்தப்பட்டதும் மறுபக்கம் வந்து கொண்டுள்ளது என்பதைக்கவனிக்காமல் கிராஸ் செய்ய ஒரு ஆம்னி பஸ் காரன் கிறீச் என்ற சப்ததுடன் பிரேக் நிறுத்தி ..ஜன்னல் வழியாக தலையை நீட்டி திட்ட ஆரம்பிப்பதற்குள் நான் சாலையை கிறாஸ் செய்து ஒடியே விட்டேன்.
-----------------------------------------------------------

இது திருமதி ஹூசைனாகிய ஹூசைனம்மா!!!

என்னைக் கவிண்டு:) கவிண்டு:) சிரிக்க வைத்திட்டார்..!!!

***//ஸாதிகா said...அதிரா ... டபுள்மீனிங்கில் அசத்தல் கவிதை//
என்னது, டபுள் மீனிங்கா? அய்ய, நான் அதிராவை நல்ல பிள்ளைன்னுல்ல நினச்சிருந்தேன்!! ;-))
-----------------------------------------------------------

இது சுவீட் வொயிஸ் குழந்தை இலாக்கா!!!

டீப்பாஆ திங் பண்ணினார் சின்ன:) கிட்னியோடு!!!
***பல்லு விளக்க சொல்லி கொடுத்தவங்க பாசிட்டிவ் ஆட்டிடூட் பத்தியும் சொல்லி இருந்தா இப்படியான தேடல் இருக்காது...
லைனா எல்லாரும் வந்து மூட் அவுட்டுன்னு சொல்லிட்டது எனக்கே ரொம்ப கஷ்டமா இருந்தது... பாருங்க நெகட்டிவ் எனெர்ஜியும் ஒரு தொத்துவியாதி தான்...

***ஒரு சத்தம் போட்டதும் ப்ரொஜெக்டர் ஓட்டிய பூஸ் எஸ்ஸ் ஆயிடுச்சி...இனி பிஷ் பிரை காட்டினாதான் வருவார் பூஸார்..


***ஜீனோ!! ரொம்ப சவுண்ட் வேணாம் எனக்கு எலி காது.. எல்லாமே கேக்கும்... அதிரா பின்னாடியே சிரிக்கறது கூட...

***அதிரா!!! உங்களுக்கு நல்லிரவு!!! கனவுகள் இல்லாத உறக்கம் வரட்டும்...

என்னே அக்கறை தம்பியில்!!!
***இன்னைக்கும் "பொறை" தானா.. இந்த பக்கம் வந்து காலிபிளவர் சப்ஜியும் பகாறா கானாவும் சாப்பிட்டு போ...

***இங்க இருக்கும் ஜீனோ தம்பி வெஜிடேரியன் சிங்கம்... ஹெர்பிவோரஸ்:)).

குப்புறக் கிடந்து சிரிக்க வச்சுட்டா...!!!
***ஜீன்ஸ் எதுக்கு இப்ப லா போடுறே.. நீ சீங்காபூர்ர்ல இருந்தியா... தெரியும் ஜீனோ....இப்படி யாருடா ஓசி சாப்பாடு போடுவாங்க.. எங்கடா காய் வெட்டிகொடுக்கலாம்ன்னு இருக்கே... ஆமா.. எதுக்கு

அதிராகிட்ட பிஸின்னு சொல்லி.. ஆபிஸ்ல இருக்க ஆணி எல்லாம் வெறும் ஆணி இதுல நல்லது எது கெட்டது எது ...இப்ப யாருக்கும் பிரியலன்னா .... மீ த எஸ்கேப்பஊஊஊ...ஜீனோ!!! டீக்கடைக்கு ஷட்டர் போடு.. காலையில ஆரம்பிக்கலாம் பாட்டை..

***நோ..நோ... நமக்குள்ள என்ன.. எல்லாம் பேசி தீத்துக்கலாம்... அதிரா.. அங்க கொஞ்சம் இடமிருக்கா... நானும் ஒளியத்தான்.... மீ த... எஸ்கேப்ப்ப்பூ....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என்னை நானே ரசிச்சுக்கொள்ளும் நிலைமை ஆனது!!!!!!!!!!!!!!


(சே ..சே... எனக்கு நானே கொமெண்ட் போடுவது அழகல்ல... சோ.. காப்பி பேஸ்ட் மட்டும்தேன்...).

***ஆசியா வாங்கோ... என்ன இப்படிச் சொல்லிட்டீங்க.. ஆட்களை அழைக்க தலைப்பு போட்டிருக்கென.... இது பீலிங்ஸ்சு... பீலிங்ஸ்சு... உங்களெல்லோருக்கும் சொல்லி புரிய வைக்க முடியாதே... என் உடன்பிறப்பாவது வந்து ஆறுதல் சொல்வார் எனப் பார்த்தேன்.... காணலியே... எந்த மாமரத்துக்குக் கீழ இருந்து பாடிக்கொண்டிருக்கிறாரோ... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

***என் பீலிங்ஸ்ஸ்ஸ்ஸ் எங்கட வீட்டு மீனுக்குட்டிகளுக்குக்கூட வரக்குடாது... தாஆஆஆஆங்க மாட்டினம்... அப்படியே தண்ணியில மிதப்பினம்....இமா... இன்னொரு டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!!!

***செல்வியக்கா இதுக்குத்தான் அப்பவே சொன்னேன் இளங்கோ மாமாவோட கூட்டுச் சேரவேண்டாம் என.... பார்த்தீங்களோ இப்போ அவரின் பெயரை எடுத்ததும் சூப்பராக இருக்கு.. செல்வியக்கா... இண்டைக்கு மட்டும் அதிராவைக் காப்பாற்றிடுங்க....

***அதாரது.. தம்பியை சிங்க..(ம்)...ர் என்றெல்லாம் சொல்றது... தம்பி தங்கக்கம்பியாச்சே.... தம்பி ஏன் இன்னும் பாடேல்லை... பாக் பக்கிங் முடிஞ்சுதோ? உதவிக்கு அக்கா வாறதோ? இன்னுமா ஹைஷ் அண்ணன் வந்து சேரேல்லை? ஆக்சிலரேற்றரை அமத்துறதுக்குப் பதிலா பிரேக்கை இறுக்கி அமத்திக்கொண்டிருக்கிறாரோ என்னவோ? கடவுளே... இந்த மரியோ பிரதேர்சை கடவுள்தான் காப்பாத்தோணும்...

***ஆங்.... இலா.... அதுதானே பார்த்தேன்... உள்ளேன் ஐயா... கட்டிலுக்குக் கீழேதான்...

***மிக்க நன்றி ஹைஷ் அண்ணன். அது தொட்டி இல்லை:) அது பிங் “தொட்டில்” ஆக்கும்..

***நட்பில என்ன வரப்போகுது வெளியில???
பின்குறிப்பு:
அதிரா ஒருமாதம் வேலை அலுவலாக வெளியூர் செல்கிறேன்... எங்கட நாட்டுக்குக் கீழே வலதுபக்கமாக இருக்கும் நாட்டுக்கு... அதிரா எஸ்கேப்....

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நான் தான் சொன்னதை ஒயுங்கா செய்யும் கிளிப்பிள்ளையாச்சே.. அதனால எண்ணிப்பாருங்கோ மக்கள்ஸ் பத்துத்தான் கரெக்ட்டாப் போட்டிருக்கிறேன்.. நான் கணக்கில புலியாக்கும்:) நான் சொல்லல்லே ஜீனோ உபயம்.

அப்பாடா ரொம்ப ரயேட்டாகிட்டேன்.... கொஞ்சம் ரெஸ்ட் தேவையாம் எனக்கல்ல பூஷாருக்கு......

(இது ஆர் அனுப்பிய படம் என்றெல்லாம் குண்டக்க மண்டக்க கேள்வி கேட்கப்படாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்).


பின் இணைப்பு வேணும்தானே?:)
ஏதாவது குறைகிறை கண்டுபிடித்து என்னைக் கலைத்தாலும் என இதோ பிளேனைப் பிடித்திட்டேன்... உஷ் அப்பாடா... தலை தப்பியதே தம்பிரான் புண்ணியம்.... சீயா.. மீயா...


பைலட் அண்ணன் பத்திரமாய்க் கொண்டுபோய் “அங்க” இறக்கிடுங்கோ.... எனக்குக் கொஞ்சம் “டேலியா”:) பூத் தேவையாக்கிடக்கு..... தம்பியிண்ட வைஃப் க்கு கொடுக்க:).

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சிரிப்பு வருது... சிரிப்பு வருது.... சிரிக்க சிரிக்க சிரிப்பு வருதூஊஊஊஊஊஊஊஊ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எனக்கு பிடித்த இலக்கத்தில், எனக்கு பிடித்த இலக்கத்தை எடுத்துக்கொண்டு, எனக்குப் பிடித்த மீதியை, தொடர அழைக்கிறேன் மீதி இலக்கத்துக்குரியவர்கள்... 1. சந்தனா. 2. ஜலீலாக்கா 3.கவிசிவா.
இதுதான் கணக்கு.... (4 - 1 = 3)... இது எப்பூடி???


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Saturday 13 March 2010

தாத்தாவின் நினைவுகள்......



இது முழுக்க முழுக்க என் கற்பனையில் உருவான கதை...........

சொன்னான்! என் ‏நண்பன் கார்த்திகேசு அப்பவே சொன்னா‫‫‪ன், "சிவநாதா, வெளிநாடு குளிர் அதிகமாமே! உன்னால் தாங்க முடியுமா?" என்று. எனக்கும் அது தெரிந்திருந்தது, இருப்பினும் என் மகனின் வார்த்தைகளை என்னால் தட்ட முடியவில்லை. மகனதும் மருமகளதும் அன்பான அழைப்பை ஏற்று, இங்கு, இந்தக் குளிர்நாட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டேன்.


என் கிராமத்து நாச்சார் வீட்டில், குளிர்காலமானால் நான் எங்கேயும் வெளியே செல்வதில்லை, அந்தப் பக்கத்துப் பிள்ளையாரை எட்டிப் பார்ப்பதோடு சரி. வீட்டுத் திண்ணையிலுள்ள அந்த சாய்மனைக் கதிரையில் தான், என் பொழுது கழியும். அதிலும் என் மனைவி, மீனாட்சி இறந்ததிலிருந்து, நான் எங்கேயும் போவதில்லை. பிள்ளையாரிடம் போவதோடு சரி.

மீனாட்சி காலமானதன் பின், நான் தனியேதான் அக்கிராமத்து வீட்டிலிருந்தேன். ஆனால், தனிமை என்பதை நான் என்றுமே உணர்ந்ததில்லை. என் பொழுது முழுக்க, அத் திண்ணையிலேயே கழியும். ஏதாவது தேவைக்கு மட்டும்வீட்டினுள் சென்று வருவேன். திண்ணையிலேயே கட்டிலும் இருந்தது.

சமைப்பதற்கு, வீட்டைச் சுத்தம் செய்வதற்கென்று "சரசு" என்ற பிள்ளை வருவாள். தெருவால் போவோர் வருவோர் எல்லாம், வேலிக்கு மேலால் எட்டிப் பார்த்து, நான் இருப்பது தெரிந்தால், " என்னையா? எப்படி இருக்கிறீங்கள்? என ஒரு எட்டு வந்திருந்து கதைத்துவிட்டுப் போவார்கள். குசினி வாசலில் நிற்கும் நாவல் மரமும், முன் படலையுடன் நிற்கும் நெல்லி மரமும் காய்க்கத் தொடங்கிவிட்டால் போதும், அந்த அயல் குழந்தைகள் எல்லாம், எங்கள் வீட்டில்தான் நிற்பார்கள். மீனாட்சி இருந்த காலத்திலும் சரி, பின்னரும் சரி, மீனாட்சியோ நானோ, யாரையும் தடுத்ததில்லை. அதனால் எங்கள் வீட்டில் எப்பவும் தனிமை ஏற்பட்டதில்லை.


இப்பொழுதுதான், தனிமை என்பதை உணர்கிறேன். இங்கு காலையில், எட்டு முப்பது மணிக்கு எல்லோரும் புறப்பட்டு விடுவார்கள், பின்னேரம் நான்கு மணிக்கே திரும்புவார்கள். அதுவரை நான், வீட்டில் தனிமையிலேயே இருப்பேன். என் மகன், எனக்கு பொழுது போவதற்காக சகல வசதியும் செய்துதான் தந்திருக்கிறார், தமிழ் தொலைக்காட்சி, புத்தகங்கள், பேப்பர் என நிறைய வசதி செய்து தந்திருக்கிறார்கள். ஏதோ அந்தக் காலத்தில் படித்து வைத்த படிப்பு, இப்போ பேப்பர் படிக்க உதவுகிறது.


காலையில், எல்லோரும் போன பின்னர், பூட்டிய வீட்டினுள், "ஜெயில் வாழ்க்கை" என்பார்களே!, அதனை இப்போதுதான் நான் உணர்கிறேன். நான் விடும் மூச்சு எனக்குக் கேட்கிறது. அந்தளவு அமைதி. கதவு, ஜன்னல் எல்லாம் எப்பவுமே பூட்டியபடியேதான் இருக்கும். திறந்தால் குளிர் வந்துவிடுமாம். வெளியில் ரோட்டால் கார்போவது, கண்ணால் பார்த்தால்தான் தெரியும். சத்தம் எதுவுமே வீட்டினுள் கேட்காது.

எனது மருமகள், பார்த்துப் பார்த்து எனக்கு எல்லாம் செய்வார், மாலையில் சமைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுவார். மறுநாள், ஏதோ "மைக்குறோவேவ்" என்கிறார்கள் அதனுள் வைத்தால் ஒரு நிமிடத்தில் சூடாகிவிடும், சாப்பிட்டுவிடுவேன். ஆரம்பத்தில், எனக்கு இந்த உணவுகள் ஒத்துக்கொள்வதில்லை, காலப்போக்கில், இப்போ பழக்கமாகிவிட்டது.தேனீர்கூடப் போடப்பழகிவிட்டேன். என்னால் எவருக்கும் தொந்தரவு வரக்கூடாதென்றுதான் நான் எப்பவும் நினைப்பேன்.

மகன் என்னை இங்கு அழைக்கும்போதே நான் சொன்னேன், "தம்பி, இங்கே சமையலை, வீட்டைப் பார்த்துக்கொள்ள சரசு வந்து போகிறாள், எந்நேரமும் நண்பர்கள் வந்து போவார்கள், உறவினர்கள் வருவார்கள். இரவில்கூட இருவர் வந்து, இந்தத் திண்ணையில் படுப்பார்கள். நான் கதைத்துக்கொண்டே உறங்கிவிடுவேன், என்னைப்பற்றி நீ கவலைப்படாதே, வசதி வருகிறபோது ஒரு தடவை வந்து பார்த்துவிட்டுப்போ, எனக்கு இங்கு மீனாட்சி இல்லாதது தவிர, வேறு எந்தக் குறையும் இல்லை", என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். மகன் கேட்கவில்லை. உங்களை அங்கே தனியே விட்டுவிட்டு, என்னால் இங்கு நிம்மதியாக இருக்க முடியாதப்பா, குழந்தைகளும் கேட்கிறார்கள், என்று ஒரே பிடியாகக் கூப்பிட்டுவிட்டான்.

இங்கு குளிர்காலமானால், பக்கத்து வீட்டுக்காரரைக்காண்பதே, மாதத்தில் ஒருமுறை அல்லது இருதடவைகள்தான். அதுவும் வெளியில் போய்வருகிறபோது தப்பித்தவறிக் கண்டால்தான். ஆரம்பத்தில் என்னைப் பார்த்து "ஹலோ" என்றார்கள், நான் எதுவும் சொல்லவில்லை. பின்னர் மகன்தான் சொல்லித்தந்தான், யாராவது ஹலோ என்று சொன்னால், நீங்களும் திருப்பிச் சொல்லுங்கள், இல்லையெனில் உங்களுக்குப் பிடிக்கவில்லையோ என்று நினைப்பார்கள் என்று. அதிலிருந்து நானும் "ஹலோ" சொல்லப் பழகிக்கொண்டேன்.

இப்போ அவர்கள் சொல்ல முதலே, நான் சொல்லி விடுவேன். எங்கள் பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு நான்கு வயதில் ஒரு குழந்தை இருக்கிறது, அது என்னைப் பார்த்து "மிஸ்டர் சிவநாதன்" என்று அழைக்கும். முதலில் எனக்கு, இதென்ன ஒரு குழந்தை பெயர் சொல்கிறதே என்று ஒரு மாதிரித்தான் இருந்தது. ஊரில் என்றால் ஒரு வயது அதிகமானாலும் பெயர் சொல்லி அழைக்க மாட்டார்களே. எமது கலாச்சாரம் வேறு, இவர்கள் கலாச்சரம் வேறு. எல்லாமே முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. இடத்திற்கேற்றபடி நாம்தான் எம்மை மாற்றிக்கொள்ள வேண்டும், என்று புரிந்துகொண்டேன்.

பகலில், நான் தனிய இருக்கிறேன் என்று, மகனும் மருமகளும் மாறி மாறிரெலிபோனில் விசாரித்துக் கொள்வார்கள். எனக்கும் "ரெலிபோன் காட்" என்று வாங்கித் தந்திருக்கிறார்கள். தனிய இருக்கிறபோது ஊருக்கு எடுத்துக் கதையுங்கள் என்று. ஊரில் கார்த்திகேசு வீட்டில் போன் இல்லை. கொமினிகேசனுக்கு இடையிடையே கூப்பிட்டுக் கதைத்துக் கொள்வேன். கார்த்திகேசு சொல்வான் "ஒழுங்கையால் போகிறபோது, உன் வீட்டுத் திண்ணையைப் பார்க்க, எனக்கு வயிறெரிகிறது" என்று. எனக்கும் நினைக்க கவலையாகத்தானிருக்கிறது. ஒருவேளை மீனாட்சி இருந்திருந்தால், நான் இங்கு வந்திருக்க மாட்டேன். அல்லது இருவருமாக வந்திருந்தால் பொழுதுபோவது தெரியாமல் கதைத்துக் கொண்டிருந்திருப்போம்.

மீனாட்சியும் நானும் எப்போதும் சண்டைப் பிடித்ததில்லை. அவளும் என்னிடம் அன்பாகவும் பணிவாகவும் நடந்து கொள்வாள். நானும் அன்பாக நண்பர்கள் போலவே பழகிவந்தேன். எங்கள் கிராமத்தில், எங்களைப்பற்றிச் சொல்லிக் கொள்வார்கள், தம்பதிகள் என்றால் இப்படியல்லவா இருக்கவேண்டும் என்று. அப்படி அன்பாகத்தான் இருந்தோம். திடீரென வந்த ஒரு காய்ச்சலால், யாராலும் மீனாட்சியைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.

----------------தொடரும்....

======================================================

======================================================
இன்று பின் இணைப்பு:

வண்ணாத்துப் “பூஸ்”




======================================================
~~~வசந்தம் என்பது, வாழ்வில் ஒருமுறையேனும் வராமல் போகுமோ~~~
======================================================

Sunday 7 March 2010

Ambulance!!!



அம்பியூலன்ஸ்!!!

என்ன அப்படிப் பார்க்கிறீங்க? பயப்படாதீங்கோ... எல்லாம் என் அனுபவம்தான் பேசுது.
சின்ன வயதிலிருந்தே அம்பியூலன்ஸ், பயரெஞ்சின்... சயரின்(siren) கேட்டால், என்னையறியாமலேயே கை கால் நடுங்கும், இதயமெல்லாம் என்னவோ செய்யும், இதயத்துடிப்பு அதிகமாகிவிடும். இப்பகூட அப்படித்தான் அம்பியூலன்ஸ் சயரின் கேட்டால்... உள்ளுக்குள் யார் இருக்கிறார்களோ என்ன அவஸ்தைப்படுகிறார்களோ என எண்ணி, அச் சத்தம் தொலைதூரம் போகும்வரை எனக்கு நாடித்துடிப்பெல்லாம் அடங்கியதுபோல இருக்கும்.


இங்கு கார் றைவிங் பழகியபோது, எனக்கு பழக்கியவர் சொல்லித்தந்த விதிமுறை, கார் ஓடிக்கொண்டிருக்கும்போது இப்படி ஏதாவது சயரின் சத்தம் கேட்டால், உடனே சிக்னலைப் போட்டுவிட்டு, காரை எந்தக் கரையாயினும் சரி நிறுத்திவிட வேண்டும், நிறுத்தக்கூடாத இடமாயிருந்தாலும் பறவாயில்லை, எமது வாகனத்தை நிறுத்திவிட வேண்டும் அப்போதான் அவர்கள் வெட்டி எடுத்துக்கொண்டு போவார்கள், சயரின் சத்தம் கேட்டால் நாம் ஓடக்கூடாது.... அவர்கள் எம்மை முந்திப்போகக்கூடியளவுக்கு பக்கத்தில் ரோட்டு இருப்பின் நாம் ஓடலாம்.


இதேபோல், ரோட்டைக் கடப்பதற்காக நாம் நிற்கும்போது(Pedestrian Crossing), பட்டனை அமத்திவிட்டு பச்சை சிக்னலுக்காக காத்திருப்போம், பச்சை சிக்னல் வந்ததும், கடக்க தொடங்குவோம். அப்படி பச்சை சிக்னல் வரும்போது எங்காவது அம்பியூலன்ஸ் சயரின் கேட்டால், நாம் கடக்கக்கூடாது, வெயிட் பண்ணிப்பார்க்க வேண்டும் அல்லது, அது கடந்த பின்பே நாம் கடக்க வேண்டும். இப்படியிருக்கும்போது, கடந்த வாரத்தில் ஒருநாள் மோலுக்குப்(Mall) போயிருந்தேன். ஒரு கரையிலிருந்து அடுத்த பக்கத்திற்கு ரோட்டைக் கடக்க வேண்டியிருந்தது. பட்டனை அழுத்திவிட்டு, காத்திருந்தோம். அதாவது இரு பக்கத்திலும் நிறையப்பேர் ரோட்டைக் கடப்பதற்காக நின்றுகொண்டிருந்தோம்.






இங்கு இன்னொரு கதையையும் சொல்லவேண்டும். இங்குள்ள ஆச்சிமார், அதாவது 70, 80 வயதுக்காரர்கள் பெரும்பாலும்(எல்லோரும் அல்ல) மகாராணியாரைப்போலவே உடையணிந்திருப்பார்கள். அதாவது அரைப்பாவாடை, அதற்கேற்ற மச்சிங் பிளவுஸ், பொருத்தமான சூஸ், தொப்பியும் போட்டிருப்பார்கள், லிப்ஸ்ரிக், கியூரெக்ஸ், முகப்பூச்சு, மச்சிங் கான்ட்பாக்... இப்படித்தான் வெளிக்கிட்டு மோலுக்கு வருவார்கள். பார்க்க ஆசையாக இருக்கும்.



சரி, அன்று பட்டனைப் பிறெஸ் பண்ணிவிட்டுக் காத்திருந்தோம், பச்சைலைட் வந்தவேளை, திடீரென அம்பியூலன்ஸ் சயரின் கேட்டது, இதே ரோட் பக்கமாக வந்துகொண்டிருப்பது தெரிந்தது. உடனே ரோட்டைக் கடப்பதற்காக ரோட்டிலே காலை வைத்துவிட்டு எல்லோரும் உள்ளே எடுத்துவிட்டோம். அதைக்கவனிக்காதவர்கள் கடக்க ஆயத்தமானபோது, இருபக்கத்திலுமிருந்து, எதிர்பக்கமிருந்து கடக்க தொடங்கியவர்களை “Ambulance is coming, stand there, stand there” எனக் கத்தினார்கள்.


ஆனால் ஒரு, வயதான ஆச்சிக்கு மட்டும் எதுவும் கேட்கவில்லை. 80 வயதுக்கு மேல் இருக்கலாம் அவவுக்கு, குயினைப்போலவே அழகாக, நான் மேலே கூறியபடி, மேக்கப் பண்ணிக்கொண்டு வந்திருந்தா. அவ ரோட்டைக் கடக்கத் தொடங்கிவிட்டா, அவவின் பக்கமிருந்தவர்களாவது அதைத் தடுத்திருக்கலாம், தடுக்கவில்லை,(வேண்டுமென்றல்ல, எல்லோரும் திகைத்த நிலை) நான் எதிர்ப்பக்கத்தில் இருந்தமையால் ஓடிப்போய்த் தடுக்கவும் முடியவில்லை. எனக்குத்தான், சயரின் சத்தம் காதில் கேட்டதும், எல்லாத் துடிப்பும் ஸ்தம்பித்துவிடுமே, பிறகெப்படி அடுத்தவருக்கு உதவமுடியும். அம்பியூலன்ஸ் கிட்ட வந்தே விட்டது, ஆச்சி அப்போது நடுரோட்டில் கடந்தவண்ணமிருந்தா, அவ பயந்திடுவார் என நினைத்தோ என்னவோ, அம்பியூலன்ஸ் றைவர், வெட்டி எடுத்துக்கொண்டு போகாமல் மிக அருகில்வந்து நிறுத்தினார்.


அப்போதுதான் ஆச்சி திடுக்கிட்டதுபோல பார்த்துக் கண்டுகொண்டா, அவவுக்கு சரியான அந்தரமாகப் போய்விட்டது. முகமெல்லாம் மாறிவிட்டது, ஓடுவதுபோல காலை எடுத்து வைத்து இக்கரைக்கு வந்தா, வரும்போது சொல்லிக்கொண்டே வந்தா.. "sorry.. sorry... I didn’t notice that... I didn’t notice that" என. அதன்பின்பு அம்பியூலன்ஸ் போய்விட்டது. ஆனால் எனக்கு அந்த ஆச்சியை நினைக்க சரியான கவலையாகிவிட்டது, நானும் சேர்ந்து அவவைத் தடுக்காமல் பார்த்துக்கொண்டு நின்றேனே என மனதில் ஒரு உறுத்தலாக இருந்தது. ஆனால் அத்தனையும் நடந்தது... ஒரு 2 நிமிடத்திலும் குறைந்த இடைவெளியில்தான்.... வயதாகிவிட்டால் எமது நிலைமையும் இப்படித்தானே. நாம் தான் எம்மால் முடிந்தவரை வயதானோருக்கு உதவ வேண்டும்.

' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' '

இது Catnip Rose இல்லை....:) soap ஆல் செய்யப்பட்ட ரோசாப்பூவின் வாசத்தோடு உறங்குகிறார் பூஸார்..... இது அன்பு இளமதியின்.. வாசனைமிக்க பரிசு....


~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

பின் இணைப்பு:


"எது அழகு?"



----------------------------------------------------------------------
"முல்லைக்கு முட்டுக்கொடுக்க தேரைத் தேடாதீர்கள்
உடைந்த கால்களுக்கு உங்கள் தோளைக் கொடுங்கள்"
----------------------------------------------------------------------

Tuesday 2 March 2010

காதலியே கை விட்டாய்!!!!



காதலிக்கு ஒரு கடிதம்!!!
என் கனவுகளைக் கலைத்தவளே காதலியே கைவிட்டாய்
நினைவுகளைக் குலைத்தெனது நிம்மதியைப் போக்கிவிட்டாய்
ஆரம்ப நாட்களிலே அஞ்சினேன் உனைக்காண
எப்படி இருப்பாயோ? என்னென்ன கேட்பாயோ?
என்றெல்லாம் தயங்கினேன் இரவெல்லாம் விழித்திருந்தேன்!!

நாளும் குறித்தனர் நாம் சந்திக்க
நடுங்கினேன்.. உனைப்பற்றி நான் சிந்திக்க
ஆறுதல் தந்தான் அருமை நண்பன்
அறிமுகம் செய்தான் உன் சகோதரிகளை!!


அவர்களைப் போலவேதான் அன்பே நீ இருப்பாய் என்று
அச்சத்தை ஓட்டினான் ஆசைபல ஊட்டினான்
முத்தான முத்தே உன் மூத்த சகோதரிகளான
பத்துப் பேரையுமே பார்த்துக்கொண்டேன் நன்றாக!!



அந்த நாளும் வந்தது அறைக்குள்ளே காத்திருந்தேன்
கறுப்பு டிஷைன் போட்டிருந்த வெள்ளைநிற உடையினிலே
சிரிப்புமலர் போலசைந்து சித்திரமே நீ வந்தாய்
ஆவலோடு கரங்களிலே அள்ளியுனை நானெடுத்தேன்!!

அந்தோ என் செய்வேன்? அன்று நான் ஏமாந்தேன்..
சற்றேனும் உன்னிடத்தில் சகோதரிகள் சாயலில்லை..
முற்றிலும் புதியவளாய் மோசக்காரி நீயிருந்தாய்...
அன்று நீ - நீயாக இல்லாமல், உன் அக்காமார் போலிருந்தால்..


“இன்று நான் பட்டதாரி ஆயிருப்பேன் பரிதவித்து நிற்கமாட்டேன்”

((என்ன எல்லோருக்கும் பீலிங்ஷாக இருக்கோ?:):), பத்து வருட வினாத்தாள்களை மட்டுமே பார்த்துவிட்டு, தேர்வில் எதிர்பார்த்த கேள்விகள் வராததால், தோல்வி அடைந்த மாணவர், பின்னொரு நாளில், அந்தக் கேள்வித்தாளை, காதலியாக நினைத்து வடித்த கவிதை... பல பல வருடங்களுக்கு முற்பட்டது))

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

நாங்களெல்லாம் எதிரியைக் கூடக் காப்பாற்றி....



பாசமாய்!! அன்பைப் பொழியும் பரம்பரையாக்கும்....



பின் இணைப்பு:
கடவுளை மற எனச் சொல்லும் கருத்து சரிதானா.. தெரியவில்லை.. மனதுக்கு வாசகம் பிடித்திருந்தது...



~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
"எதையும் தாங்கும் இதயம் இருந்தால், இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்"... அண்ணா.
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~