நல்வரவு_()_


Monday 28 June 2010

ஆருடைய தப்.....பூ:))))


யார் தப்பு??


சத்தியமாக என் “தப்பு” இல்லிங்கோ..., நான் ஒரு அப்பாஆஆஆஆவி...:)

பாடசாலை செல்லும்போது
உன்னை - உன்
கைபற்றி கவனமாக
அழைத்துச் செல்வேன்!!

பாதி வழியிலே
கால் வலிக்கிறதென்பாய்
என் முதுகில் - உன்னை
உப்பு மூட்டையாகச்
சுமந்தே செல்வேன்!!

நாவற்பழம் கேட்பாய்
என் தோழில்
உனைத் தாங்கி
பழம் பறிக்க வைப்பேன்
எனக்கும் தந்து
நீயும் உண்பாய்!!

எனக்கு
பல்கலைக்கழக
அனுமதி கிடைத்தது
கேட்டு - அந்த
அறியாத வயதிலும்
அனைவரைக் காட்டிலும்
அதிகம்
ஆனந்தப்பட்டவள் நீ!!

அந் நாளில், உன் அம்மா
உனது கையை, எனது கையில்
ஒப்படைத்து - கவனம்
என்று கூறி பாடசாலை
அனுப்பி வைப்பார்!!

உனக்கு வேலியாக
இருந்த எனக்கு
இன்று - வேலி
அமைத்துவிட்டனர்
உன் பெற்றோர்!!

நீ என்னுடன்
இருந்தபோது
நான் எதுவுமே
எண்ணியதில்லை
ஆனால் - இன்று
என்மனம் தவியாய்த்
தவிக்கிறது
உனைக் காண!!

நீ வயதிற்கு வந்தது
உன் தப்பா - இல்லை
கடவுளின் தப்பா?
தவிப்புடன் நான்!!

நம்பமாட்டீங்களோ? சாமியைத் தொட்டுச் சொல்கிறேன்....
இது என் கிட்னியிலிருந்து, உருவாகிய கவிதை.....

பூ((பின்)) இணைப்பு:
நான் வளர்க்கும் செவ்வந்திப் பூஊஊஊஊஊ...




Wednesday 23 June 2010

ஆரும் ஏசப்பூடாது... ஏசினால் வாடிவிடும்ம்ம்ம்:)

நான் ரோசாவைச் சொன்னேன்...

இப்போ இங்கு எங்கு பார்க்கினும் ரோசாவனமாகவே காட்சி தருகிறது.... பல பல வர்ணங்கள், சைசுகள்.... வீடுகளையும் வீதிகளையும் அலங்கரிக்கிறது. வீடுகளில், ரோட்டோரமுள்ளதை மட்டுமே படமெடுக்க முடிந்தது, முற்றத்தை எடுத்தால் சிலருக்குப் பிடிக்காது என்ற பயத்தில்:),... எல்லாம் எடுக்கமுடியவில்லை... எடுத்ததை எல்லாம் போடவில்லை. என் பிகாசா ஆல்பத்தில் போடத்தான் எடுத்தேன், ஆனால் ரோசா, அடம்பிடிக்கிறதே.... இங்கு போடச்சொல்லி...

படம் பார்த்து ஆரும் ஏசவாணாம், ஏசினால் ரோசா வாடும், ரோசாத்தோட்டம் வாடினால்.... பூஸ் தாங்காதே....:)




இந்தாங்கோ இது உங்களுக்கு....

இந்தாங்கோ இது உங்களுக்கு....

இந்தாங்கோ இது உங்களுக்கு....

இந்தாங்கோ இது உங்களுக்கு....

இந்தாங்கோ இது உங்களுக்கு....சுமை தாங்க முடியாமல் நிலம் நோக்குகிறார்..(வாடவில்லை)
இந்தாங்கோ இது உங்களுக்கு....

இந்தாங்கோ இது உங்களுக்கு....

இந்தாங்கோ இது உங்களுக்கு....

இந்தாங்கோ இது உங்களுக்கு....
இந்தாங்கோ இது உங்களுக்கு....

இந்தாங்கோ இது உங்களுக்கு....
யாருக்கெல்லாம் குடுக்கிறீங்கள் என ஆரும் குறுக்க கேள்வி கேட்டு, என் “மூட்” ஐக் கெடுத்திடப்பூடாது:)... சொல்லிட்டேன்:). தைரியம் இருந்தால் ஆராவது தொடர்வினமோ பார்ப்பம்...:)

இது எங்க வீட்டு, வயலட் பூக்கள்.... எங்க வீட்டு ராணி(தேனி) இருக்கிறா... நான் போட்ட வட்டத்துள்... பாருங்கோ.... பீ கெயார்புல்.... நான் தேனிக்குச் சொன்னேன்.




பின் இணைப்பு:
இப்போ “சமர்” என்பதால், மன்னிக்கவும் கோடைகாலம் என்பதால்(சமர் எண்டு சொல்லப்பூடாதாம், எங்கேயோ, யாரோ சொன்னார்கள் எனக்கு, பெயர் மறந்துபோனேன், யார் நல்ல விஷயம் சொன்னாலும் பொறுக்குவதுதானே எனக்கு வேலை:)).. உல்லாசப் பிரயாணிகள் கப்பல் எங்கள் ஆற்றில் வரத்தொடங்கிவிட்டது..... வடிவாப்பாருங்கோ... “கண்” தெரியுதோ? நான் கப்பலைக் கேட்டேன்...

க்க்க்க்கக்்க்க்க்க்க்க்க்க்க்க்
“காலம் பொன்னானது, அதைக்,
காலம் தாழ்த்தி உணர்ந்துவிடக்கூடாது”
க்க்க்க்கக்்க்க்க்க்க்க்க்க்க்க்
<>

Thursday 17 June 2010

மறை பொருள் ரகசியங்கள்......

நான் ரெடி, நீங்க ரெடியோ?


லைப்பைப் பார்த்ததும் எல்லோரும் யோசிப்பீங்கள், நானும் ஏதோ சொல்ல வெளிக்கிடுகிறேன் என. அப்படியில்லை, இதுவரை காலமும், ஹீலிங் என்றால் என்ன, தியானம் என்றால் என்ன?, வர்ம வைத்தியம் என்றால் என்ன?, என எனக்கு “கடுகளவு” கூடத் தெரியாது.

முதன்முதலில் ஹைஷ் அண்ணன் “அறுசுவை” தளத்துக்கு வந்து, “மறைபொருள் ரகசியம்” எனத் தலைப்பிட்டபோது, சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்ப்பது போலதான் பார்த்தேன்... என்னோடு நிறையப்பேர் அப்படித்தான் பார்த்தார்கள்:).

தன்பின்பு, ஒவ்வொரு பகுதியாக புதுப்புது, நல்ல விஷயங்கள், மருத்துவங்கள் என, பல பல கற்றுக்கொண்டோம். தியானம் செய்வதெல்லாம், விரும்பாத ஒன்றாக இருந்த எனக்கு, அனைத்திலும் நிறையவே நம்பிக்கை வந்தது. மூச்சுப்பயிற்சி செய்யக் கற்றுக்கொண்டேன். அதனால் நான் அடைந்த நன்மைகள் பல. இப்படி நிறையவே சொல்லலாம்.... , இத்தோடு நிறுத்துகிறேன். “மறைபொருள் ரகசியம்” பகுதிகளைக் காண விரும்புபவர்கள்... இங்கே வாங்கோ...

பகுதி 1

பகுதி 2
பகுதி 3
பகுதி 4
பகுதி 5
பகுதி 6


னக்கு எப்பவுமே, சின்ன வயதிலிருந்தே, தத்துவங்கள், பொன்மொழிகள், அர்த்தமுள்ள வாக்கியங்கள் மிகவும் பிடிக்கும். அப்படியானவற்றைச் சேகரிப்பதிலேயே, என் பாதிப்பொழுதுகள் முன்பெல்லாம் கழிந்தது. இப்போது நேரம் போதாமல் இருப்பினும், கிடைக்கும் நேரத்தைப் பயன்படுத்தி அவற்றைச் சேகரிப்பேன்.


ப்படித்தான்... மறை பொருள் ரகசியங்கள் சொல்கின்றபோது, ஹைஷ் அண்ணன், இடையிடையே அப்பப்ப தத்துவ வரிகளையும் அவர், இணைக்கத் தவறுவதில்லை. அதில் ஓடியோடிப்:) பொறுக்கி சேகரித்ததன் தொகுப்பையே இங்கு தருகிறேன்.

1)முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

2)ஒருவரை வாதத்தில் வெல்வது வெற்றியல்ல, அவரின் மனதை வெல்வதே வெற்றியாகும்.

3)அறிவை அறிவால் அறிந்த நிலையே முக்தி.

4)அறிவை அறிந்தோர் அன்பின் அறமே ஞானம்.

5)நமக்கோ, பிறருக்கோ தற்காலத்திலும், பிற்காலத்திலும் உடலாலும், மனதாலும், சமூகத்தினாலும், ஊறு விளையாத எந்த ஒரு ஆசையும், நியாயமான ஒரு ஆசைதான்.

6)அறிவுக்கு அடிமையாவதே பக்தி,
அறிவை அறிவால் அறியப் பழகுதல் யோகம்.

7)மனத்தை அடக்க நினைத்தால் அலையும்,
மனத்தை அறிய நினைத்தால் அடங்கும்

8)எண்ணம், சொல், செயலால் எவருக்கும்
எப்போதும் நன்மையே விளைவிக்க நாட்டமாயிருங்கள்.

9)அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம்
மூன்று வகையிலும் அறிவு வறுமை அடைகிறது.

10)சிந்தனை, ஒழுக்கம், சீர்திருத்தம், சிக்கனம், சேவை
இவை ஐந்தும், செழிப்பான வாழ்வளிக்கும்

11)உறவிலே கண்ட உண்மை நிலையே, தெளிவு.. துறவு

12)பகைமை வைத்துக் கொண்டு ஒருவரை வாழ்த்த முடியாது,
வாழ்த்தும் போது பகைமை நிற்காது.

13)உண்மைதான் நம்மை மாற்றுமே தவிர,
உண்மையை நாம் ஒரு போதும் மாற்ற முடியாது.

14)எப்போதும் விழிப்போடும், சிந்தனையோடும்
ஆற்றும் செயல்களினால், முன் வினையின் தீமைகள் தடுக்கப்படும்.

15)அன்பு என்பது, எந்த ஒன்றையும் உடலாலோ மனதாலோ,
இணைத்துப்பிடித்துக் கொண்டு இருப்பது.

ஹைஷ் அண்ணன் பணம் செலவழித்துப் படித்தவற்றை, எமக்கு இலவசமாகச் சொல்லித் தந்தமைக்கு(அவர் எங்கே சொல்லித்தந்தார்:), நாங்கள் சண்டைப்பிடித்து, தேங்காய் உரிப்பதுபோலல்லவா கேட்டுக் கேட்குத் தெரிந்து கொண்டோம்.... சரி சரி இது எமக்குள் இருக்கட்டும்:)), பிரதியுபகாரமாக எதையும் செய்ய முடியவில்லை.... “மிக்கநன்றி” என இலகுவாகச் சொல்வதைத்தவிர.




சேகரித்த அனைத்தையும் ஒட்டுமொத்தமாக இங்கே போட முடியவில்லை, இன்னும் இருக்கு... அடுத்த பகுதியில் தொடரும்..ம்ம்ம்ம்ம்.

பின் இணைப்பு:

நான் எடுத்த படங்கள்..... உங்களால் முடியுமோ:)?..... இதுக்கெல்லாம் தைரியம் வேணுமெல்லோ... பிளேன் லாண்ட் பண்ணப்போகும்போது எடுத்தேன்.....




எங்கள் முற்றத்து பூமரம்... இப்போது பூத்திருப்பவர்......


##########################
பறவையின் சிறகுகள் விரிந்தால்தான்
வானத்தில் அது பறக்கும்...
##########################


Saturday 12 June 2010

என்சோய்:) வீக்கெண்டு...

இதன் முதல் பகுதியை காண இங்கே கையை வையுங்கோ...

Welcome ...... படம் பார்த்து ஆரும் பயந்திடப்பூடாது..



இது என்னவென உங்களுக்குத் தெரியுதோ? எனக்கும் தெரியவில்லை:(. ரோசாப்பூச் செய்ய வெளிக்கிட்டேன் இப்பூடியாகிட்டுது....


கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று காவல் புரிகின்ற சேவகா....
பென்குயின் குடும்பமாம்....



...............................................INTERVAL...............................................

இது எங்கள் குடும்பப் பாடல்.... பார்த்து மகிழுங்கோ...



...............................................................................................................

Green Apple Duck ஏன் இப்பூடி முறைக்கிறார்?


இவருக்கு லெவல் அதிகம், தான்தான் அழகாம்... அப்பூடி ஒரு நினைப்பு இவவுக்கு....



Duck Pond


செம்மறி ஆடே.... செம்மறி ஆடே... செய்தது சரியா சொல்.....


ஓக்கை ஓக்கை அமைதி அமைதி அனைவருக்கும் உண்டு...
இது ஸாதிகா அக்கா கேட்டமைக்காக... உருளை ரோசாப்பூ... ஸாதிகா அக்கா, இதன் பி்ன்னணியில் ஒரு கதை இருக்கு, காதைக் கிட்டக் கொண்டுவாங்கோ பின்னர் சொல்கிறேன்......


மேலே என் பிகாசா அல்பம் பாருங்கோ, அதிலயும் நானேதான்(நம்புங்கோ) என்ன அயகாகச் செய்து காட்டுகிறேன்

இது ஜீனோப்பப்பிக்கு ஒரு வாழைப்பழப்பப்பி:


இதுவரை எனக்கு விருதுதந்த சகோஸ் ஜெய்லானிக்கும், ஜலீலாக்கா, ஆசியா, செல்வியக்கா, ஸாதிகா அக்கா, மனோஅக்கா அனைவருக்காகவும் எங்கள் கார்டின் பூவெடுத்துச் செய்த..... மீனுக்குட்டி...





கண்ணான கருத்துக்களை அப்பப்ப அள்ளி வழங்கிக்கொண்டிருக்கும் அன்பு அக்காக்களுக்கும், அன்பு நண்பிகளுக்குமாக, இரு கண்கள்.. நானேதான் தங்கையாக இருப்பதால்... எனக்குத் தங்கைமார் யாரும் இல்லை... உப்பூடி முறைக்கப்பூடாது....




இது தொடர்ந்து பின்னூட்டங்கள் போட்டுக்கொண்டிருக்கும் ஜெய்..லானி, ஜீனோ,ஹைஷ் அண்ணன்???, மற்றும் எட்டிப்பார்க்கும்போது பின்னூட்டம் போடும் அன்புச் சகோஸ் அனைவருக்குமாக....



இது, முதன்முதலில் தன் பிகாசா ஆல்பத்தில், படங்களை இணைத்து, பழங்களையும் மரக்கறிகளையும் கொண்டு சிற்பங்களைச் செதுக்கும் ஆவலை எமக்குத் தூண்டிவிட்ட அன்புக் ஹைஷ் அண்ணனுக்காக.... திமிசுக்கட்டைமீன் இல்லை இது Cucumber King Fish..



இந்த பூஸ் ஐஸ்கிரீம்.....
எப்படியாவது ஏதாவது கார்விங், நானும் செய்தே தீரவேண்டும் என என் மனதில் ஆவல் தோன்றக் காரணமாக இருந்த இமாவுக்கும், என்னோடு தொடர்ந்து சண்டையிட்டு, அடித்து, நுள்ளி, கிள்ளி சேட்டைகள்:) செய்துகொண்டிருக்கும்.... வாணி, ஜலீலாக்கா, ஸாதிகா அக்கா, ஆசியா, சந்தனா, உங்களுக்காகத்தான்..... கனக்க இல்லை அஜீஸ் பண்ணி கொஞ்சம் கொஞ்சமாகக் குடியுங்கோ...., பிளீஸ்!!! ... இலா கேட்டால் மட்டும் கொஞ்சூண்டு கொடுங்கோஓஓஓஓ



பின் இணைப்பு:
இது பூஸுக்கு மட்டும் Bread Shoes(size - 6)


என் கார்விங் பார்த்து யாராவது சிரிப்பீங்களோ??? இதோ பூஸார் ரெடியாகிட்டார்..... பீ கெயார்புல்!!!!!(நான் என்னைச் சொன்னேன்). உங்களுக்குத் தெரிந்த அதே கோடாரிப் பூஸார்....




ஆ.......... உண்மையாகவோ? “நட்புப்பகுதி” லயோ? தூக்கிக்கொண்டோ?



###############################

உங்களுக்குத் தெரிந்த உண்மைகளையெல்லாம்,

நீங்கள் சொல்ல வேண்டியதில்லை,

ஆனால் நீங்கள் சொல்பவை எல்லாம்

உண்மையாக இருக்கட்டும்....... பேபி அதிரா.

###############################

Sunday 6 June 2010

“தீபுக்குட்டி”

வாணி, குழந்தைப்பருவமாக பரண் ஐ ஆரம்பித்தா, ஒரு வயதுப் பையனான அரண் ஆக மாற்றி அதை இமா தொடர்ந்தா... பின்னர் சந்தனா சாந்தி யை இணைத்து ஒரு கதை எழுதினா... அனைவரையும் ஒன்றிணைத்து நான் “தீபுக்குட்டியை” எழுதுகிறேன்..... இன்னும் விரும்புபவர்கள் தொடருங்கோ.




அன்பான உங்களுக்கு.....
என்னைத் தெரிகிறதா? நான்தான் தீபுக்குட்டி. என் பெயர் தீபனா, என்னை எல்லோரும் செல்லமாக தீபுக்குட்டி என்றே அழைப்பார்கள், இப்போ எனக்கு தீபனா என்ற பெயர் மறந்தேவிட்டது. எனக்கு வயது 11. எனக்கு ஒரு தம்பி, பெயர் தீபக்.

நான் இப்பொழுது ஆறாம் வகுப்பில் படிக்கிறேன். கொஞ்ச நேரம் மட்டுமே, இக்கணனியோடு இருக்க எனக்கு அப்பா அம்மாவிடமிருந்து அனுமதி கிடைத்திருக்கிறது. அதுக்குள் சோட் அண்ட் ஸ்வீட் ஆக என் முந்தைய அனுபவங்களைச் சொல்லிவிடலாம் என வலைப்பூவுக்கு வந்தேன். நான் வலைப்பூ வைத்திருப்பது அப்பா அம்மாவுக்கு விருப்பமில்லை, அவர்கள் விரும்பாத எதையும் செய்ய எனக்கும் விருப்பமில்லை. காரணம் படிப்பைக் குழப்பிவிடுமாம். அது உண்மைதான், ஆனாலும் நான் நன்கு படிப்பேன். இருப்பினும் இடையிடையாவது வந்து ஹலோ சொல்லிப்போவேன்.

இப்பொழுது நான், பெண்கள் உயர்தரப் பள்ளியில் படிக்கிறேன். இதற்கு முன் கலவன்(ஆண்கள், பெண்கள்) பிறைமறி ஸ்கூலில் படித்தேன். அங்கு 1ம் வகுப்பிலிருந்து 5ம் வகுப்பு வரையுமே உண்டு. நான் முதலாம் வகுப்பிலே சேர்ந்தபோது, என் குரூப்பிலே நாங்கள் ஐந்துபேர் இருந்தோம். என்னோடு
1.
டொமார் 2.பரண்
3. அரண்
4.
சாந்தி.

முதல்நாள் வகுப்பிலே, நான் அழுதுகொண்டிருந்தபோது, தனது பொக்கட்டிலிருந்த சொக்காவை எனக்குத் தந்து, என் அழுகையை நிறுத்தச் சொன்னது டொமார்தான். அன்று தொடங்கி, நாங்கள் ஐவரும் நல்ல பெஸ்ட் ஃபிரெண்ட் ஆகிவிட்டோம்.

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து என்னை எல்லோரும் தீபுக்குட்டி என்றே அழைத்தார்கள். எனக்கது பிடிப்பதில்லை. இது என்ன இது “மசுக்குட்டி” மாதிரி இருக்கே எனப் பலதடவை நினைத்ததுண்டு. ஆனால் முதலாம் வகுப்பிலே சேர்ந்த அன்று, எங்கட ரீச்சர் என்னிடம் வந்து “தீபுக்குட்டி!! பூனைக்குட்டி மாதிரி இருக்கிறாயம்மா, இரட்டைக்குடும்பி யார் கட்டிவிட்டது” எனக் கேட்டபோது, கோபத்திலே எனக்கு முகம் சிவந்தே விட்டது. அப்பொழுதுதான் அவவின் பெயர் “ஐசுக்குட்டி” என்பது தெரிந்தது. அன்றிலிருந்து தீபுக்குட்டி என்ற பெயரும் எனக்கு நன்கு பிடித்துவிட்டது.

அப்பாடசாலையின் அதிபர், எங்கள் அப்பாவின் நண்பர். வெள்ளிக்கிழமைகளில் எல்லோரும் பிரேயர் ஹோலிலே ஒன்றுகூடித் தேவாரம் படிப்பதுண்டு. அதன் பின்னரே வகுப்புக்கள் ஆரம்பமாகும். தேவாரம் சொல்லிக்கொடுக்க, அதிபர்தான் யாராவது ஒரு பிள்ளையை மேடைக்கு அழைப்பது வழக்கம். பெரும்பாலும் தீபுக்குட்டி என என்னையே அழைப்பார், நான் டொமாரையும் சாந்தியையும் அழைத்துச் செல்வேன், மூவரும் தேவாரம் சொல்லிக்கொடுப்போம். அரண் கிரிஸ்தவர், பரண் இஸ்லாமியர் என்பதால் அவர்களுக்கு வேறு ஹோலிலே பிரேயர் நடக்கும்.

எமக்குள் சண்டையே வந்ததில்லை. ஒருநாள் தமிழ் ரீச்சர் படிப்பிச்சா “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்”, “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என. அதைக் கேட்ட டொமார், இன்ரவலில் எமக்கு , தன் அண்ணாவின் நண்பன் சொன்னாராம் “அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல்”, “ஆலயம் தொழுவது வேலை மினக்கேடு” எனச் சொல்லி, விழுந்து விழுந்து சிரிக்க, இதைக்கேட்ட எனக்கு பொல்லாதகோபம் வந்துவிட்டது, உடனே யோசித்தேன் இது நகைச்சுவைதானே இதுக்கெல்லாம் கோபப்படலாமா என, நானும் விழுந்து விழுந்து சிரிக்க, எல்லோருமே அன்று சிரித்து உருண்டதை மறக்கவே முடியாது. டொமார் நல்ல நகைச்சுவையாளன், எப்போதும் ஏதாவது சொல்லி சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பான்.

முதல்நாள் பாடமாக, ரீச்சர் வந்து, வெள்ளைப்பலகையிலே ஒரு அழகான தாராவை வரைந்து, பார்த்துக்கீறி, பெயிண்ட் பண்ணுங்கோ எனச் சொல்லிப்போட்டு, அடுத்த வகுப்பு ரீச்சரோடு அரட்டை பண்ணப்போய்விட்டா. நானும் கீறியே கீறிப்பார்த்தேன், வரமாட்டேன் என்றுவிட்டது. உடனே பயத்திலே அழத்தொடங்கிவிட்டேன். அப்போ அரண்தான், எனக்கு தாராவை அழகாகக் கீறித் தந்தான், நானும் நல்ல வடிவாக பெயிண்ட் பண்ணினேன், ரீச்சர் பார்த்துப்போட்டு மிகநன்றாக இருக்கெனச் சொன்னா. நான் இப்பவும் அப்படத்தை என் அறையிலே ஒட்டி வைத்திருக்கிறேன்.

பாருங்கோ இவர்தான் அந்தத் தாராப்பிள்ளை:


ஐந்தாம் வகுப்பிலே “புலமைப் பரீட்சை” நடக்கும். அதிலே நான் “அதிதிறமைச் சித்தி” பெற்று “நாம் விரும்பும் பாடசாலையை” தெரிவு செய்து வந்துவிட்டேன். சாந்தி இன்னொரு பாடசாலைக்குப் போய்விட்டா. அரண், டொமார் ஒரு ஆண்கள் பாடசாலையிலும், பரண் இன்னொரு ஆண்கள் பாடசாலைக்குமாக, எல்லோரும் பிரிந்து போய்விட்டார்கள். நாம் பிரிந்தபின், ஒருவரையும் சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. சாந்தி மெயில் அனுப்பியிருந்தா, அதில், தான் டொமாரைக் கண்டதாகவும், அவர்கள் ஸ்கூல் யூனிபோம் இப்போ சோட்ஸ் இல்லையாம், ட்றவுஷர் தான் போடவேண்டுமாம், தன்னால் டொமாரோடு கதைக்க முடியவில்லை, தூரத்தில்தான் கண்டேன், சிரித்துவிட்டுப் போனான் பார்க்கவே வெட்கமாக இருந்தது என.

டொக்.. டொக்... டொக்.... , கொஞ்சம் பொறுங்கோ என் அறைக்கதவை யாரோ தட்டீனம், என்னவெண்டு கேட்டுக்கொண்டு வாறேன். அது அம்மாதான் கூப்பிட்டவ, “ஏன் இன்னும் லைட் எரியுது? இன்னும் நித்திரைகொள்ளவில்லையோ?” எனக் கேட்டுவிட்டுப் போறா. எனக்குக் கொம்பியூட்டர் இருக்கு, ஆனால் விடுமுறை காலங்களில் மட்டுமே, இன்ரநெற் பார்க்கும் அனுமதி உண்டு. நேற்றுத்தான் என் பரீட்சை எல்லாம் முடிந்தது. அதனாலேயே, இன்று இன்ரநெற்றில் கேம் விளையாட அனுமதிக்கப்பட்டேன்.

இக் குறுகிய நேரத்துள் என் கதையின் சுருக்கத்தைக் கூறிவிட்டேன். முடிந்தால் மீண்டும் சந்திக்கிறேன். இனியும் விழித்திருந்தால் அடிதான் விழும், எனவே படுக்கப்போகிறேன். அனைவருக்கும் குட்நைட்.....




---------------------------------------------------------------------------------------------------
பின் இணைப்பு:
இவர் எங்கள் கிட்டடிச் சொந்தக்காரர்.... பக்கத்து வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர்.. அப்படியெண்டால் அதிராவுக்கு என்ன முறை என்பதைக் கண்டுபிடியுங்கோ... என்மீது கொஞ்சம் பொறாண்மை:), என்னை பார்த்து ஒரு லுக் விடுகிறார் பாருங்கோ..
She is proud of her BEAUTY:).


-------------------------------
“நிழல்கூட வெளிச்சம் உள்ளவரைதான் துணைக்கு வரும்,
ஆனால் உண்மையான நட்பு,

உயிர் உள்ளவரை துணைக்கு வரும்”
-------------------------------