நல்வரவு_()_


Friday 1 June 2018

கண்ணழகியைக் கலைத்த அதிரா...

நில்லுங்கோ மம்மி... கப்பல் பார்த்திட்டு வாறேன்:)
வ உங்களுக்குத் தெரிஞ்ச கண்ணழகியேதான்:).. ஒவ்வொரு வருடமும் தவறாமல் வருவா. ஆனா வழமையா ஏழியா வந்திடுவா. இம்முறை காலை 8 மணிபோல வந்தா.. அதனால அவவை விட்டுக் கலைத்து, பக்கம் பக்கமாகப் படமெடுத்திட்டேன்ன்:)) பூஸோ கொக்கோ:))

ங்களுக்குத் தெரியும்தானே பிளேனுக்கு றிவேர்ஸ் கியர் இல்லை, அதனால பின்னாலே நகர பிளேனால முடியாது, அப்படித்தான் கப்பலையும் நினைச்சிருந்தேன்.. ஆனா பாருங்கோ நடு ஆத்தில் வச்சு என்ன அழகா ஃபுல் ரேன் பண்ணி றிவேசில போனா தெரியுமோ? நான் அப்பூடியே ஷாக்க்க் ஆகிட்டேன்:))..

இது கிழக்கிலே சூரியன், நான் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி எடுத்தமையால் இருட்டாகவே இருக்கு படங்கள் அனைத்தும். முதல் படம் வீட்டில் இருந்து எடுத்தமையால், வெயில் என் பின்னால் இருந்துது.

ரிவேர்ஸ் எடுக்க திரும்பும்போது அதிராவுக்கு பம்:) ஐக் காட்டுறா கர்ர்ர்ர்ர்ர்:))

திரும்பி விட்டா:)

இது கீசாக்காவுக்காக ஆதாரத்துடன்:))., இல்லை எனில், அதிரா எடுக்கல்லே வேறு ஆரோ எடுத்திருக்கினம் என சவுண்டு விடுவா கர்ர்ர்:))

அஞ்சூஊஊஊஊ வாங்கோ கப்பல் பார்த்துக் கொண்டே நடக்கலாம்:)) தள்ளி எல்லாம் விட மாட்டேன்ன்:)) பயமெனில் அம்முலுவையும் கூட்டி வாங்கோ:))

தண்ணி கொஞ்சம் உள்ளே போயிருந்தபோது.. பாசி மிக அழகாக இருந்தது.. கீதாவை நினைச்சு எடுத்தேன்:)

சீ ஹல்ஸ் அழகாக உறக்கம் கொள்கிறார்கள்... இது கோமதி அக்காவின் புறாச் செல்லங்களுக்கு எசப்பாட்டு:))

ஆற்றங்கரையை அழகுபடுத்தும் மலர்களில் சில:).. ஆவ்வ்வ் பிங்கி:) அஞ்சு பெயர் தேடிச் சொல்லவும்:))

பிங் ரியூலிப்ஸ்ஸ்:)


ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச் மை கார்.. இப்போதான் கழுவினேன்:)) இதில்தான் வீட்டிலிருந்து கண்ணழகியைக் கலைச்சுக் கொண்டு வந்து பிடித்தேன்:))

கார்டினிலே மகள் விளையாடிய களைப்பில் நித்திரை கொள்றா:).. டெய்சிக்கு வெயில் வெக்கை தாங்க முடியவில்லை.. குளிர் வேணுமாம்:)

வெயில் காலம் தொடங்கி விட்டமையால், ஸ்பரோ பிடிக்கத் தொடங்கிட்டா டெய்சி கர்ர்:)) தெய்வாதீனமாக உயிருடன் பறிச்சு.. தண்ணி கொடுத்து களைப்பைப் போக்கி பறக்க விட்டோம்:))

 எங்கட முற்றத்து குண்டுராணி:)

இந்த ஒரேஞ் மலர்கள் கொள்ளை அழகெல்லோ.. எங்கட பக்கத்து வீட்டுப் பருவமங்கை:)


ஊசி இணைப்பு:
பாருங்கோ.. கீதா ரெங்கன் எவ்ளோ அழகா மயில்களுக்கு உணவு குடுக்கிறா:) மயிலுக்கெல்லாம் குடுக்கத் தெரியுது.. பூஸ் என்றால் மட்டும் அடிச்சுக் கலைக்க வாறா கர்ர்ர்ர்ர்ர்:))
---------------------------------------------------------------------

ஊசிக்குறிப்புக்கள்:) 

 ========================================================================
========================================================================
படம் படமாப் போட்டுப் பெருமை பேசியே:), எல்லோரையும் பொத்துப் பொத்தென மயங்கி விழ வச்ச:) பெருமைக்குரியவர்:- உங்கள் பெருமதிப்புக்கும் பேரன்புக்கும் உரிய புலாலியூர்ப் பூஸானந்தா அடிகளார்:))
_________________()_________________

159 comments :

  1. Replies
    1. ஹலோ யாரிது:)) பெயரில்லாத ஆட்களை எல்லாம் ஆரு உள்ளே விட்டதூஊஊ?:)) ஹா ஹா ஹா ஓ அஞ்சுவோ?:) கைக் கட்டைப் பார்த்துத்தான் அடையாளமே கண்டு பிடிச்சேன்ன்:)) வாங்கோ வாங்கோ... கை சுகமோ?:) வெரி சோரி ..கை விரல் சுகமோ?:)

      Delete
    2. [im]https://vignette.wikia.nocookie.net/erboentertainment/images/1/17/Tom%26jerry_jerry.png/revision/latest/scale-to-width-down/250?cb=20140208114045[/im]

      Delete
    3. நல்ல சுகம் போல தெரியுதே:)) இனி ஆரும் இருந்தபாடில்லை:))

      Delete
    4. அது மியாவ் நடக்க ஓட கூட டான்ஸ் ,டைப்பிங்லாம் முடியுது இந்த கிச்சனுக்கு என்டர் பண்ணும்போது மட்டும்

      ராதா நுழைஞ்சவுடன் ஜிவாஜி அங்கிள் உடம்பு சிலிர்க்கும் முதல் மரியாதை படத்தில் வர மாதிரி சிலிர்க்குது அதான் இன்னும் டூ வீக்ஸ் இவரையே குக் இன்சார்ஜ் போட்டாச்

      Delete
    5. ///அது மியாவ் நடக்க ஓட கூட டான்ஸ் ,டைப்பிங்லாம் முடியுது இந்த கிச்சனுக்கு என்டர் பண்ணும்போது மட்டும் ///

      ஹா ஹா ஹா ஓவரா ருஸி கண்டிட்டீங்க:)) இனி நீங்களாகவே அடுத்த கையையும் வெட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை:))..

      //ராதா நுழைஞ்சவுடன் ஜிவாஜி அங்கிள் உடம்பு சிலிர்க்கும் முதல் மரியாதை படத்தில் வர மாதிரி சிலிர்க்குது ///

      ஹா ஹா ஹா அது வேற சிலிர்ப்பாச்சே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
  2. இன்று ஷொப்பிங் டே. So will come afterwards

    ReplyDelete
    Replies
    1. ஹலோ ஷொப்பிங்கைச் சாட்டிட்டு ஊர் சுத்த வெளிக்கிட்டிட்டீங்க அப்பூடித்தானே?:)

      Delete
  3. //நில்லுங்கோ மம்மி... கப்பல் பார்த்திட்டு வாறேன்:)//

    இதில் பிழை உள்ளது

    கிராண்ட்மா என்றல்லவோ வரணும் :)

    ReplyDelete
    Replies
    1. ///கிராண்ட்மா என்றல்லவோ வரணும் :)//

      ஹையோ அஞ்சு .. அது உங்களைப் பார்த்துச் சொல்லல்லே:)) ஹா ஹா ஹா கிக் கிக் கீஈஈஈஈஈஈ:))

      Delete
    2. ஷாப்பிங் டே என்று சொல்லிவிட்டு அரை மணி நேரத்தில் வந்த முதல் பெண்மணி ஏஞ்சலிந்தானே. 8.30க்கு கமெண்ட் போட்டுட்டு திரும்பி 9 மணிக்கு புது கமெண்ட் போட்டிருக்கிறார். அதை நீங்கள் கவனிக்கவில்லையே அதிரா.

      Delete
    3. ஒரு அப்பாவி கை இன்னும் முழுதும் குணமாகாத பெண் தடுக்கி முடுக்கி போனில் கமெண்ட் போட்டேன் :)
      எல்லாம் ரெண்டாவது வரக்கூடாதே இல்லைனா அந்த லொக் லொக் பாட்டியை மியாவ் என்தலையில் கட்டிருவாங்க :)
      நானே என் கணவர் செய்றா காபியை சாப்பாட்டை சாப்பிட்டிட்டுருக்கேன் ... ஜாலியா :

      Delete
    4. @ நெ.த
      ///8.30க்கு கமெண்ட் போட்டுட்டு திரும்பி 9 மணிக்கு புது கமெண்ட் போட்டிருக்கிறார். அதை நீங்கள் கவனிக்கவில்லையே அதிரா.///

      ஹையோ அது எனக்குக் குளிர் விட்டுப் போச்சு நெ.தமிழன்:)).. இதோ வோக் போகிறேன் என்பா ஆனா பொக மாட்டா..:) ஷொப்பிங் போகிறேன் என்பா பட் போக மாட்டா:)) எனக்கிப்போ பழகிப்போச்ச்ச்ச்ச்ச்:)) ஹா ஹா ஹா.. ஸ்ரீராமுக்குச் சொன்ன அதே பயமொயிதேன் இங்கினயும்:).. “அதிகம் கொக்கரிக்கும் கோழி சிறிய முட்டைகளை இடும்”... சவுண்டு மட்டும்தேன்ன்ன் ச்ச்ச்ச்ச்சும்மா பில்டப்பூஊஊஊஉ ஹையோ மீ இப்போ கட்டிலுக்குக் கீழே:))

      Delete
    5. ///எல்லாம் ரெண்டாவது வரக்கூடாதே இல்லைனா அந்த லொக் லொக் பாட்டியை மியாவ் என்தலையில் கட்டிருவாங்க :)///

      ஹா ஹா ஹா அந்தப் பயம் இருக்கட்டும்:))

      Delete
  4. அடி என்னடி ராக்கம்மா பாடல் அப்போது ரொம்ப ரசித்த பாடல். இதுவும் "கேட்டுக்கொடி உறுமி மேளம்" பாடலும்... இன்னொரு பாட்டு "நல்வாழ்த்து நான் சொல்லுவேன்..."

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. ஆவ்வ்வ்வ் நீங்க சொல்லும் அத்தனை பாடல்களும் அடிக்கடி தேடித் தேடிக் கேட்பேன் எனக்கும் மிகவும் பிடிச்ச பாடல்கள் அவை... ஆனா ஏன் இப்படியான பாடல்களைப் போடாமல் வெள்ளிக்கிழமையில் பாகவதர் பஜனை பாடுறீங்க ஹா ஹா ஹா:))

      Delete
  5. ஜன்னல் வழியே எட்டிப்பார்க்கும் பூனைக்குட்டி சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. இது சரிப்பட்டே வராதூஊஊஊஉ அவசரமா ஓடிவந்து கடமை முடிந்ததென சைன் போட்டிட்டு ஓடிட்டார் ஸ்ரீராம்:).... நாங்க விடமாட்டோம்ம்.. பெண்கள் எல்லாம் பொயிங்குவோம்:).. பெண்கள் புரட்சியை உருவாக்குவோம்ம்ம்...:)

      அடைப்போம் அடைப்போம்.. கிச்சினை அடைப்போம்..
      திறப்போம் திறப்போம் .. புளொக்ஸைத் திறப்போம்ம்..:)

      அஞ்சூஊஊஊ அம்முலூ கீதா கீசாக்கா கோமதி அக்கா அனு எல்லோரும் ஓடிவாங்கோ டெய்லி போஸ்ட் போட்டு எல்லோரையும் ஓட வைபோம்ம்ம்...

      ஆஆஆஆஆஆ அப்பூடி என்ன நான் ஜொள்ளிட்டேன்ன் பெண்களே என்னைக் கலைகினமே ஹையோ.. அஞ்சூஊஊஊஉ வெயார் ஆ யூஊஊஊஊஊஉ கொஞ்சம் என் கையைப் பிடிங்கோ:))...

      Delete
    2. அதிரா நான் வந்துட்டேன்...உங்களுக்குக் கை கொடுக்க!! எபி கிச்சனை க்ளோஸ் பண்ணிப்புடுவோமா...ஹா ஹா ஹா ஹா

      ஏஞ்சல் பாவம்...நான் இப்ப கையைப் பிடிச்சுட்டேன் அதிரா...வாங்க இப்படி

      கீதா

      Delete
    3. //இது சரிப்பட்டே வராதூஊஊஊஉ அவசரமா ஓடிவந்து கடமை முடிந்ததென சைன் போட்டிட்டு ஓடிட்டார் ஸ்ரீராம்:).... நாங்க விடமாட்டோம்ம்.//

      இல்லை... எனக்குத் தோன்றியதைச் சொன்னேன்... அப்படியெல்லாம் இல்லீங்க... அது சரி, அது ஏன் உங்க கால் முகத்தை மட்டும் போட்டிருக்கீங்க?

      Delete
    4. ஆஆஆஆஆ வாங்கோ கீதா வாங்கோ..
      //ஏஞ்சல் பாவம்..///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நானுக்கு:) இந்த லைன் கறுப்பாத் தெரியுதே:))

      ////நான் இப்ப கையைப் பிடிச்சுட்டேன் அதிரா...வாங்க இப்படி

      கீதா//
      ஆங்ங்ங் புரட்சியை உருவாக்குவோம்ம்.. பெண்கள் ஆட்சியை புளொக்ஸ்ஸில் கொண்டு வருவோம்ம்.. கோசம் போடுங்கோ கீதா:)).. என்ன இது வாயை மட்டும் அசைக்கிறா சத்தமே வருகுதில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.. இல்ல இல்ல எபுளொக் கிச்சினை மூட வேண்டாம்:)) பிறகு எங்களுக்கும் பட்டினியாகிடுமெல்லோ:)) ஹா ஹா ஹா..

      Delete
    5. //அப்படியெல்லாம் இல்லீங்க...//
      [im]https://images-blogger-opensocial.googleusercontent.com/gadgets/proxy?url=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-NBUiBD0Ed40%2FVBxRtkIIKKI%2FAAAAAAAAQEw%2FvfJurNCH5Sc%2Fs1600%2Fgato.jpg&container=blogger&gadget=a&rewriteMime=image%2F*[/im]

      Delete
    6. ///அது சரி, அது ஏன் உங்க கால் முகத்தை மட்டும் போட்டிருக்கீங்க?///

      ஹா ஹா ஹா இதில சந்தேகமோ?:)) முழுசாப் போட்டால் காக்கா போயிடுவீங்க பார்க்காதமாஆஆஆஆஆஆஆறி:)).. இப்பூடிப் போட்டதனால மீதியைக் கேய்க்கிறீங்க:)) ஹா ஹா ஹா.. அது சரியான வெயில் கண்ணே தெரியல்ல.. இதில போய் முழுசா எங்கே எடுக்கிறது:))

      Delete
    7. நான் எங்கே “கால்” ஐப்போட்டேன்ன்?:) முகம் மட்டும்தானே தெரியுது ஹா ஹா ஹா:))

      Delete
  6. பாதி அதிரா தெரிகிறாரே... மீதி? கப்பல் அவ்வளவு பக்கத்தில் தெரிகிறதே...

    ReplyDelete
    Replies
    1. மீதி அதிரா பின்பு வருவா ஹா ஹா ஹா:)..

      கப்பல் மிக அருகில்தான்.. இது சின்னக் கப்பல், பெரிசிலே மேலே சுவிமிங் ஃபூல்.. அதில் பென்னாம்பெரிய ரீவி .. ரீவியில் படம் ஓடுவதுகூடத் தெரியும்.. படம் எடுத்தேன் அதனையும், ஆனா இதை விட மோசமா டார்க்கா வந்திருக்கு.. அது சூரியனை நோக்கிக் கமெராவை பிடிக்கும்போது எப்படி எடுபடும்.

      Delete
  7. பறந்து வந்து அமரும் மயில்களுக்கிடையே ஒரு வண்ணமயில்!

    ReplyDelete
    Replies
    1. அந்த வண்ண்மயில் நாந்தேன்!!! ஹிஹிஹிஹிஹிஹி

      அப்ப்டித்தானே அதிரா சொல்லிருக்காங்க...ஹிஹிஹி

      கீதா

      Delete
    2. ///
      ஸ்ரீராம்.Friday, June 01, 2018 9:16:00 am
      பறந்து வந்து அமரும் மயில்களுக்கிடையே ஒரு வண்ணமயில்!//

      ஹா ஹா ஹா அதேதான்..

      Delete
    3. //Thulasidharan V ThillaiakathuFriday, June 01, 2018 2:19:00 pm
      அந்த வண்ண்மயில் நாந்தேன்!!! ஹிஹிஹிஹிஹிஹி//

      ஹா ஹா ஹா என் செக்:) ஐ விட ஸ்பீட்டா வந்து விளக்கம் குடுக்கிறா கீதா:))

      Delete
  8. ஊசிக்குறிப்புகள் வழக்கம்போல அசத்தல்.

    மறுபடியும் எ அ எ அ வா? இதுவும் நீங்கள்தானா?​

    ReplyDelete
    Replies
    1. அதே அதே.. இன்னும் வரும்:)) ஹா ஹா ஹா..

      Delete
  9. ​ஊசிக்குறிப்புகளை வைத்து அழகாய் ஒவ்வொரு கதையே எழுதலாம். மலர்களின் படங்கள் அருமை. ஓய்வெடுக்கும் பூனையாரும் அருமை!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ஸ்ரீராம் நானும் பார்த்துட்டு அப்படித்தான் நினைத்தேன் ஆஹா கதையே இருக்கேனு அதிலயும் பார்த்தீங்கனா....நான் என் கதைகள் இரண்டில் அந்த வரிகளையும் பயன்படுத்தியிருக்கேன்....இப்ப இங்க அதை அதிராவும் போட்டுருக்காங்க

      கீதா

      Delete
    2. மிக்க நன்றிகள் ஸ்ரீராம் அனைத்துக்கும்.

      Delete
    3. உண்மைதான் கீதா.. தத்துவ வசனங்கள்தானே...

      Delete
  10. மலரின் படங்களும், ஊசிக்குறிப்புகளும் ரசிக்க வைத்தன..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..

      அதெப்பூடி உங்களால மட்டும் ஒரு வசனத்தோடு எஸ்.. ஆக முடியுது:)).. கரந்தை அண்ணனைப்போல:)) நானும் பல சமயம் நினைப்பதுண்டு ஒரு கொமெண்ட்டோடு நிறுத்திட்டால் நேரட்த்தை கொஞ்சம் சேமிக்கலாமே என ஆனா முடியல்லியே ஹா ஹா ஹா.. மிக்க நன்றி.

      Delete
  11. படங்கள் எல்லாம் அருமை!

    //தண்ணி கொஞ்சம் உள்ளே போயிருந்தபோது.. பாசி மிக அழகாக இருந்தது.. கீதாவை நினைச்சு எடுத்தேன்:)//
    எந்த தண்ணி? யாருள்ளே போயிருந்தது? அதை விட முக்கியமான கேள்வி, தண்ணி போடும் பொழுது ஏன் கீதா ரெங்கன் நினைவு வந்தது?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பானுமதி அக்கா வாங்கோ...

      //எந்த தண்ணி? யாருள்ளே போயிருந்தது? அதை விட முக்கியமான கேள்வி, தண்ணி போடும் பொழுது ஏன் கீதா ரெங்கன் நினைவு வந்தது?//

      ஹா ஹா ஹா சூப்பரா ஜிந்திச்சிருக்கிறீங்க:)) இதுக்கே நோபல் பரிசு தரலாம்:)).. ஹா ஹா ஹா இது வேற தண்ணி ஹையோ ஹையோ..

      மிக்க நன்றி பானுமதி அக்கா.

      Delete
  12. தில்லையகத்து கீதாவின் செல்ல நாயின் பெயரும் கண்ணழகி அல்லவா

    ReplyDelete
    Replies
    1. ஹை ஜிஎம்பி சார் ஆமாம் ஸார்....என் கண்ணழகியின் பெயர் போட்டு பாருங்க அதிரா கலைச்சுட்டாங்க!!! ஹா ஹா ஹா ஆ

      கீதா

      Delete
    2. வாங்கோ ஜி எம் பி ஐயா.. அதேதான்:)) ஆனா அவ பெயர் வச்சது நேக்குத்தெரியாது:), நான் பெயர் வச்சது அவவுக்குத் தெரியாது.. ஆனா பெயர் வச்சபின்புதான் சந்திச்சோம்ம் ஹா ஹா ஹா மிக்க நன்றி.. இன்று உடனே வந்திட்டீங்க.

      Delete
    3. ///பாருங்க அதிரா கலைச்சுட்டாங்க!!! ஹா ஹா ஹா ஆ//

      ஹா ஹா ஹா இது வேற கலைக்கிறது கீதா:) இது ஆசையில் கலைப்பது:))

      Delete
  13. ////
    அஞ்சுவுக்கு மிகவும் பிடிச்ச பாடலை:)) அன்போடு.. டெடிகேட் செய்கிறேன் ஹா ஹா ஹா:))
    //

    ம்க்கும் உங்களுக்கு தெரியுமா .மதன் ஒருமுறை சொன்னார் யாரவது தனக்கு இஷ்டமானதை கேக்க தன்னோட ப்ரண்ட் சுற்றியுள்ளோர் நேமை சொல்லி வாங்கிப்பாங்களாம் அஃதொரு சைகொலோஜி :)
    என் பேரை சொல்லி உங்க ஆசையை நிறைவேத்திக்கிட்டீங்க :)
    ஆனா மம்மியை பார்க்க ஸ்வீட்ட்டா இருக்காங்க அதுக்கே பாக்கலாம் பாடலை

    ReplyDelete
    Replies
    1. யெஸ் யெஸ்...பந்தில .பக்கத்து இலை பாயாசம் கேள்விப்பட்ட்டிருப்பீங்களே ஏஞ்சல்!!! ஹா ஹா ஹா ஹா ஹா..அப்படித்தான்

      கீதா

      Delete
    2. ///என் பேரை சொல்லி உங்க ஆசையை நிறைவேத்திக்கிட்டீங்க :)//

      ஆசையா.. அன்பா... தடவித்தடவி.. ஒரு பாட்டைத்தேடி எடுத்து சமர்ப்பிச்சா:)).. “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்” நன்றி அதிரா எனச்ஜொள்ளாமல் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இப்போ ஒரு அழகிய சுவீட் 16 பாட்டுப் போட்டிருந்தா மட்டும் டங்கூ டங்கூ என்றிருப்பா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. வயசுக்கேற்றபடிதானே டெடிகேட் பண்ண முடியும்:)) ஹையோ அஞ்சு கல்லைக் கீழே போடுங்கோ உங்க கைக்கு அது நல்லதில்ல:))

      Delete
    3. //
      யெஸ் யெஸ்...பந்தில .பக்கத்து இலை பாயாசம் கேள்விப்பட்ட்டிருப்பீங்களே ///

      பழையபடி எதிர்க்கட்சியில சேர்த்திட்டாய்யா சேர்ந்திட்டா:)).. மயிலைக் காட்டி மானைக்காட்டி:) என் கட்சியில மருட்டி சேர்த்து வச்சனே:))... பொழுது சாயமுன்பே கட்சி மாறிட்டாவே:)) இனி என்ன ஐடியாப் பண்ணலாம்ம்:)) ஹா ஹா ஹா...

      Delete
  14. அந்த மலர் golf asters னு நினைக்கிறன் .எங்க தோட்டத்தில் wild சீட்ஸ் போட்டு முழுக்க அழகா இருக்கு ..
    உங்க ஊர் நல்ல வெயில் போலிருக்கே எங்களுக்கு மழை மழை அதுவன்றி வேறில்லை /கர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
    Replies
    1. போன வருடம் சமர் இருக்கவில்லை ஒரே மழை.. ஆனா இம்முறை மழையே வா மழையே வா எனக் கூப்பிடுறேன் வருகுதில்லை:)) எனக்கு ஓவர் குளிரும் தாங்க மாட்டேன் ஓவர் வெயிலும் தாங்க மாட்டேன்ன்.. இருப்பினும் எங்களுக்கு ஆறு இருப்பதால் சில்லெனக் காத்தடிச்சுக்கொண்டிருக்குது வீட்டுக்குள்.

      Delete
    2. என் உருளைக்கிழங்கு, வெங்காயம், கோவா.. பீன்ஸ் எல்லாம் நன்கு வளர்கிறதே:))

      Delete
  15. ஓஹோ அது கீதா ரெங்கனா ஆமா .எப்புடி கண்டுபிடிச்சேன்னா அவங்களுக்கு பிடிச்ச ப்ளூ கலர் காம்பினேஷன் டிரஸ் அண்ட் அம்ப்ரெல்லா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா எனக்கும் ஏனோ தெரியல்ல அந்த வீடியோப் பார்த்ததும் டக்கெனக் கீதாவின் நினைப்பே வந்துது:)..

      Delete
  16. இல்லைனு நானும் சொல்றேன் முழு முகம் தெரில அதனால் படம் நீங்க எடுக்கலை .
    கண்ணழகிக்கு மேக்கப் எல்லாம் போடுவார்களா ?
    மலர்கள் எல்லாம் அழகு வெயில் அழகா இருந்தாலே மலர்கள் புன்னகைக்கும் .

    ReplyDelete
    Replies
    1. ///முழு முகம் தெரில அதனால் படம் நீங்க எடுக்கலை .///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உப்பூடி உசுப்பேத்தினால் மீ போட்டிடுவேன் எனும் ஐடியாப்போல:)) உந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்சாத புலிக்காட்டுப் பூஸாக்கும் இது:)) ஹையோஓ ஜாமீ என்னைக் காப்பாத்துங்ங்ங்:))..

      கண்ணழகிக்கு எதுக்கு மேக்கப்?:) அவ இயற்கையிலேயே அழகு.. பாருங்கோ என்ன அழகான சொண்டு.. அழகான கண்ணு:))..

      கீசாக்காவுக்காக நான் என்ன போட்டாலும் அந்த ரைம் பார்த்து அவ பிசியாகிடுவா:) முன்பும் இப்படி நடந்திருக்கெனக்கு:)) அவ்ளோ பொருத்தம் இருவருக்கும் ஹா ஹா ஹா:))

      Delete
  17. விளக்கங்கள் கொடுத்து எதையும் தக்க வைக்க முடியாது .ஊசிகுறிப்பு அருமை .

    ReplyDelete
    Replies
    1. உண்மைதானே அஞ்சு எவ்ளோ அழகான தத்துவம்... மியாவும் நன்றி.

      Delete
  18. என் பொண்ணு தோட்டத்தில் இருக்கிறா ஆனா மழை தூறினா வந்திடுவா .
    magpie பார்த்தா ஓடிவருவா வீட்டுக்கு ஆனா அணிலை மட்டும் துறதோ துரத்தின்னு ஓட்டுவா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா வெயில் வந்திட்டாலே அவர்களுக்கு குஷிதானே.. ஆனா டெய்சிப்பிள்ளைக்கு குளிர்தான் விருப்பம்.. வெயில் வெக்கை அவவால தாங்க முடியுதில்லை:)..

      Delete
  19. அதிரா திஸ் இஸ் டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஒ பேட் எப்ப உங்க போஸ்ட் வருது தெரியலை...இப்போ எல்லாம் ப்ளாகர் அப்டேட் பண்ணமாட்டேங்குது எங்க தளத்துல போய் பார்க்கணும்....
    கீதாக்கா வீட்டுல திங்க போனீங்களா...அங்க எனக்கும் வைச்சுருங்கனு சொல்லிட்டு உங்க கூட கப்பல்ல சுத்த வந்துட்டேனாக்கும்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா சில சமயம் அப்படித்தான் கீதா.. நம் கண்ணைக் கட்டிவிடும்.. தெரியவே தெரியாது ஆராவது சொன்னால் மட்டும்தான் தெரியும்.

      கீசாக்கா பக்கம் ஓடினேன்ன்.. பழைய போஸ்ட்டையே ரிபிரெஸ் பண்ணிப்போட்டு, கீதா பழசைப்பற்றிக் கதைக்கிறா என விட்டு விட்டேன்ன்..:) பின்புதான் கண்டு பிடிச்சு கொமெண்ட் போட்டு விட்டேன்:)) ஹா ஹா ஹா

      Delete
  20. அதிரா ரொம்பம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப தேங்க்ஸு.....அந்தப் பாசி ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப அயகு!!! ஹையோ ரொம்பவே அழகா இருக்கு எனக்காக எடுத்துப் போட்டதில் ரொம்ப சந்தோஷம்...வாங்கோ பூஸாரே ஒரு பிக் ஹக்!!!!

    இனி பூஸாரை கலைக்கவே மாட்டேன் (ஹையொ...தெரியாம சொல்லிப்புட்டோமோ ஓவரா எமோஷனல் ஆகி!!! விடு ஜூட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்)

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ..ஓவரா உணர்ச்சி வசப்படப்பிடாது:))

      ///இனி பூஸாரை கலைக்கவே மாட்டேன் (///
      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் வாக்கு மாறக்கூடாது:) கூடவே இன்னொரு ஜத்தியமும் பண்ணுங்கோ:)).. அதாவது அஞ்சுவை மட்டும்தேன் கலைப்பேன் என ஹா ஹா ஹா ஹையோ இது நமக்குள் இருக்கட்டும்:))

      Delete
  21. என்னாது என் செல்லம் கண்ணழ்கியைக் கலைத்த அதிரா !!! ஆ ஆ ஆ ஆ ஏஞ்சல் வாங்க இப்படி எனக்குத் தெரியணும் பூஸார் என் செல்லத்தைக் கலைக்க என்ன செஞ்சாங்கோனு....அவர் வாலைப் பிடிங்க....

    நோ நோ நோ நோ...இது அடுக்காது...நியாயமில்லை...நான் நேரா தேம்ஸ் வந்து ஹையோ இப்பவே மூச்சு வாங்குதே....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ///அவர் வாலைப் பிடிங்க....//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒரு செக்கனில கட்சி மாறிட்டாவே:)) நல்லவேளை என் செக் க்கு இப்போ கையில வெட்டுப்பட்டதோடு காது கேட்பதும் குறைஞ்சிருக்கு ஹையோ ஹையோ:))..

      ///நான் நேரா தேம்ஸ் வந்து ///

      வாங்கோ வாங்கோ பெண் புரட்சிக்காக போராடுவோம்ம்..:)) டெய்லி புளொக் எழுதிப் புரட்சியை உருவாக்குவோம்ம்:).. கிச்சினை மூடுவோம்ம் வோஷிங் மெசினை தேம்ஸ்லே வீசுவோம்ம்:)... காரை எடுப்போம்ம்.. ஊர் சுற்றுவோம்ம்.. ஹையோ எதுக்கு கூட்டமாக் கலைக்கினம்ம்ம்ம்ம்ம்ம்:))

      Delete
    2. ///அவர் வாலைப் பிடிங்க...// escapeeeeeeeeeeeeeeee:))

      https://media.istockphoto.com/photos/little-fluffy-tabby-kitten-runs-like-a-man-picture-id513634496

      ஹா ஹா ஹா மிக்க நன்றி கீதா..

      Delete
  22. ஊசிக்குறிப்புகள் செம அதிரா...

    அது சரி ஊசி இணைப்பு ஹா ஹா ஹா ஹா ஹாஹா.... ஹையோ இப்படி பப்ளிக்கா ரகசியத்தை என் படத்தைப் போட்டுட்டீங்களே....

    பூஸாரைக் கலைச்சேனா............. ஓ குருவும் சிஷ்யையும் ஹிஹிஹிஹி அதுக்குத்தான் எசப்பாட்டு!!! இருங்க இருங்க நானும் ஒரு எசப்பாட்டு போடுவேனே....

    கீதா

    ReplyDelete
  23. என்ன எடுத்தவுடனேயே ஸ்பெல்லிங் மிஸ்டேக்.

    அப்பூடியே ஷாக்க்க் - நீங்க வழமையா, ஷாக்ட் ஆயிட்டேன் என்றுதானே எழுதுவீங்க.

    மீதியையும் படிச்சுட்டு வரேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா வாங்கோ நெ.தமிழன் வாங்கோ... அது என்னமோ ஆகிப்போச்செனக்கு.. இப்போதான் உங்கள் கொமெண்ட் பார்த்து ஷாக்ட்ட்ட்ட் ஆகிட்டேன்ன்ன்ன்:))

      Delete
  24. முதல்ல கப்பல் படம் பார்த்தபோது, இதனை ஏற்கனவே நீங்கள் இங்கு பகிர்ந்திருக்கிறீர்களே என்று நினைத்தேன்.

    அப்புறம்தான், ரிவர்ஸுக்காக, மீண்டும் போட்டோ பிடித்துப் போட்டிருக்கிறீர்கள். நல்லா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. இவ ஒவ்வொரு வருடமும் தவறாமல் வந்து போவா.. இம்முறை கலைத்துப்போய்ப் பார்த்ததோடு .. அதேதான் ரிவேர்ஸ்லயும் போனாவா ஆசையா இருந்துது பார்க்க..

      Delete
  25. பூக்கள் படங்கள் ரொம்ப அழகாக இருக்கு. அதுவும் ஆற்றங்கரையை அழகுபடுத்தும் மலர்களும் பிங்க் துலிப்ஸ் மலர்களும் மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் இங்கு ஸ்பிரிங் தொடங்கிட்டாலே கவுன்சிலால பூ விதைகள் கன்றுகள் என எல்லா இடமும் கொண்டு வந்து நடுவார்கள் பின்பு பூத்து முடிய திரும்ப துப்பரவாக்கியும் விடுவினம்... ஒரே மலர்களாகவே இருக்கும்.

      அதை விட பற்றைகள் காடுகள் போல[சிறு சிறு இடங்கள்] இருப்பவற்றிலும் விதம் விதமான பூக்களாகப் பூத்துச் சொரிந்திருக்கு.. நிறையப் படங்கள் எடுப்பேன்.. பின்பு எதுக்கு இது சிலசமயம் எல்லோருக்கும் பிடிக்காது என நினைச்சு விட்டிடுவேன். நன்றி.

      Delete
  26. கப்பல் பின்னால் இருப்பதுபோல் உங்க முகத்தின் பாதியோடு நல்லா போட்டோஷாப் பண்ணியிருக்கீங்க. கம்ப்யூட்டரிலும் நல்ல திறமையோடு இருக்கீங்களே... பாராட்டுகள் (இதை பாராட்டுன்னு தவறா புரிஞ்சிக்கிட்டு டாங்க்ஸ் என்று சொல்கிறீர்களா என்று பார்க்கிறேன்.ஹாஹாஹா)

    ReplyDelete
    Replies
    1. ////கம்ப்யூட்டரிலும் நல்ல திறமையோடு இருக்கீங்களே... பாராட்டுகள் //

      கொம்பியூட்டர் கிரபிக்ஸ் ல எனக்கு ஏ ஆக்கும்:).. ஹா ஹா ஹா

      //இதை பாராட்டுன்னு தவறா புரிஞ்சிக்கிட்டு டாங்க்ஸ் என்று சொல்கிறீர்களா என்று பார்க்கிறேன்.ஹாஹாஹா)//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
  27. ஒரே ஒரு வாழைப்பழத்தை வைத்து 10-20 படங்கள் பிடித்துவைத்துக்கொள்ளும் திறமை உங்களிடம்தான் உண்டு என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா பின்னே ஒரு விரல்ல அடிபட்டதுக்கே ஒம்பேது நாள் றெஸ்ட் எடுக்கும் :) ஆட்கள் வாழும் நாட்டில:)) படமெடுத்தது ஒரு டப்பாஆஆஆஆஆ?:)) ஹா ஹா ஹா:))

      Delete
    2. 9 நாள் இல்லை. 90 நாட்கள்.

      Delete
  28. அதிரா கப்பலும் ரிவேர்ஸ் எடுக்கும். இலங்கையிலிருந்து தமிழ்நாடு வரும் போது தலைமன்னாரிலிருந்து ராமேஸ்வரம் வரை கப்பலில் தானே அப்போதெல்லாம். அப்படி வரும் போது கவனிச்சுருக்கேன்.

    ஏரோ ப்ளேன் ரிவர்ஸ் எடுக்காதா....பறக்கும் போது அது..க்ரவுண்டில் இருந்தால் எடுக்கும் அதை இருங்க அதுக்கு ஏதோ டெக்னிக்கலா சொல்லுவாங்க...எனக்குச் சொல்லத் தெரியலை...Turboprop engines have gearing and are capable of reversing direction, by placing the throttle in what is called the "beta range."

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஓ நான் கவனிக்கவில்லை கீதா... இது பெரீய கப்பல் அப்படியே முழு வட்டமடிச்சு திரும்பி ரிவேஸ்ல போனது பார்க்க அழகாக இருந்துது.. வீடியோ எடுக்காமல் விட்டு விட்டேன்.

      //ஏரோ ப்ளேன் ரிவர்ஸ் எடுக்காதா....பறக்கும் போது அது..க்ரவுண்டில் இருந்தால் எடுக்கும் அதை இருங்க அதுக்கு ஏதோ டெக்னிக்கலா சொல்லுவாங்க.//

      இல்லை கீதா பிளேனுக்கெல்லாம் ரிவேர்ச் கியர் இல்லை.. முன்னால மட்டுமே திருப்ப முடியும்...

      அப்படியே வானில் வட்டமடித்து திரும்ப முடியுமே தவிர, பின்னால போக முடியாது. எயார்போர்ட்டில் ரன்வேயில் ஏறும் வரை.. ஒரு குட்டி ட்ரக்டர் வந்து கட்டி இழுத்தும் போகும்... விண்டோ சீற்றில் இருக்கும்போது அவதானிக்கலாம்... அல்லது வெயிட்டிங் ஏரியாவிலும் வெளியே பிளேனுக்கு முன்னால் குட்டியாக ஒரு வாகனம் வீர வாகுதேவர் போல:)) பென்னாம்பெரிய பிளேனைத் தள்ளிக்கொண்டு போகும் அதன் ஓடுபாதை வரை:))..

      //what is called the "beta range."// இது பற்றி தெரியல்ல கீதா.. தேடிப் பார்க்கோணும்.

      Delete
    2. ஆங்ங்ங் கீதா.. பீஸ் பீஸாக பின்னிப் பெடல் எடுத்திட்டேன்:)).. அதாவது சிவில் பிளேன்களில் ரிவேர்ஸ் கியர் இல்லையாம்.. எயார் போஸ் பிளேன்களில் மட்டும் அதுவும் சில பிளேன்களுக்கு மட்டும் ரிவேர்ஸ் கியர் இருக்கிறதாம்ம்.. ஆவ்வ்வ்வ் பாருங்கோ ஒரு கப்பல் பார்க்கப் போய் ஒரு ஆராட்ச்சியே பண்ணி முடிச்சிட்டோம்ம்.. நன்றி கீதா.. நீங்க சந்தேகத்தை உருவாக்கி விட்டமையாலதான் தெளிவு கிடைச்சது:).

      Delete
  29. கண்ணழகி செம க்யூட் ரொம்ப ரசித்தேன் அதிரா....ஹையோ அப்படியெ எடுத்துக் கொஞ்சணும் போல இருக்கு...

    கீதா

    ReplyDelete
  30. பாருங்கோ.. கீதா ரெங்கன் எவ்ளோ அழகா மயில்களுக்கு உணவு குடுக்கிறா:) மயிலுக்கெல்லாம் குடுக்கத் தெரியுது.. பூஸ் என்றால் மட்டும் அடிச்சுக் கலைக்க வாறா கர்ர்ர்ர்ர்ர்:))//

    ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராம் என்ன சொல்லிருக்கார் பாருங்கோ...அது நானாக்கும்!!! ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் பார்த்திட்டுத்தான் கொமெண்ட் போட்டவர்.. மயில்களுக்குள் ஒரு மயில் என:))

      Delete
  31. உங்க கார் ரெனால்ட் ஸீனிக்கா? பார்க்க அழகா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. இல்ல நெ.தமிழன் எனக்கு ஏனோ ரெனோல்ட் பிடிப்பதில்லை:))..

      இது Vauxhall Meriva [ கார் அல்ல MPV ]. எனக்கு கார் பிடிப்பதே இல்லை.. அது கீழே இருந்து ஓடுவதைப்போல இருக்கும் என்று:)).. SUV தான் கேட்டிருந்தேன்... முன்பு அதுதான் வச்சிருந்தேன்ன்[Toyota RAV4]..நல்ல உயரமாக இருக்கும்... இதுவும் உயரம் என்பதால் பார்த்ததும் பிடிச்சுப்போச்ச்ச்:))... அனைத்துக்கும் மிக்க நன்றி நெ.த.

      Delete
  32. சீகல் அழகூகூஊஊஊஊஊஊஊ ரொம்ப அழகு

    பிங்கிப் பூக்கள் ஆஹா!! செமையா இருக்கு…டுலிப்ஸ் செம அழகு!!! ஹையோ…

    டெய்சியைப் பிடிக்கணும் போல இருக்கு செம அழகு!!! அது சரி உங்கூர் வெயிலே தாங்கலையா அப்போ இங்க இந்த வெயில் என்ன சொல்லுவீங்களோ…ஆஹா…

    குண்டு ராணியும் பருவ மங்கைகளும் அழகு!!! லவ்லி!!

    அடி என்னடி ராக்கம்மா பாட்டு ரொம்பப் பிடிக்கும்!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ///அது சரி உங்கூர் வெயிலே தாங்கலையா அப்போ இங்க இந்த வெயில் என்ன சொல்லுவீங்களோ…ஆஹா//

      உண்மைதான் கீதா.. அது உடம்பு குளிருக்குப் பழகிவிட்டது.. அதனால வெயில் தாங்க முடிவதில்லை..

      //அடி என்னடி ராக்கம்மா பாட்டு ரொம்பப் பிடிக்கும்!! //
      உண்மைதான் அந்த மியூசிக்.. குழந்தைகளுக்குக் கூடப் பிடிக்கும். மிக்க நன்றிகள் கீதா.

      Delete
  33. பூனைகள் நாய் வளர்ப்பவர்களைப் பார்த்து நான் ஆச்சர்யப்படுகிறேன். எனக்கு அவற்றில் அவ்வளவு ஆர்வம் இருந்ததில்லை.

    ReplyDelete
    Replies
    1. நினைக்கத்தான் ஒருமாதிரி இருக்கும் நெ.தமிழன்.. வளர்க்கும்போதுதான் ஒரு குழந்தையாகவே மாறிவிடும்... நாம் வளர்க்கும் வளர்ப்பிலும் இருக்கு.

      எங்கட அம்மாவுக்கு டெய்ஷியைப் பார்க்க ஆச்சரியம்.. இது என்ன உன்னோடு மட்டும் பேசுதே.. உன் குரல் கேட்டதும்தான் ஓடி வாறா.. அப்போ நாங்களெல்லாம் மனிசராக தெரியவில்லையா என ஒரே அமளி ஹா ஹா ஹா.

      Delete
  34. பாதி நீங்கனு எப்படிச் சொல்லுறது?!! அதிரா...நோ சாட்சி!!! சாட்சி!!! கீதாக்காவுக்குப் பதில் இந்த கீதா க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

    டெய்ஸி பறவை பிடிக்கத் தொடங்கிட்டாளா..ஆஹா எங்க கண்ணழகி பூஸாரைக் கண்டாலே துரத்து துரத்து...நு துரத்தி...அப்புறம் அணில், வீட்டு ஜன்னலுக்குக் காகம் வந்துவிடக் கூடாது அதை...குரங்கு வந்தால் ஹையோ....ஓட்டுவா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ///நோ சாட்சி!!! சாட்சி/// நான் தான் படமெடுத்தேன் என ஜாட்சிக்கு என்னைப் போட்டதே தப்பாக்கிடக்கே:)) ஜாட்சிக்கே ஜாட்சியாஆஆஆஆஆ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.

      அதிலயும் முசுப்பாத்தி என்னவெனில்.. பென்னாம்பெரிய புறாவை தூர ஒளிச்சிருந்து.. வாலை ஆட்டி ஆட்டிக் குறி பார்த்து ஜம்ப் பண்ணுவா.. ஹா ஹா ஹா:))..

      //எங்க கண்ணழகி பூஸாரைக் கண்டாலே துரத்து துரத்து...நு துரத்தி...அப்புறம் அணில், வீட்டு ஜன்னலுக்குக் காகம் வந்துவிடக் கூடாது அதை...குரங்கு வந்தால் ஹையோ....ஓட்டுவா///
      ஓ ஹா ஹா ஹா பார்க்க சுவீட்டா இருக்குமெல்லோ?:))

      Delete
  35. கண்ணழகியைக் கலைத்த அதிராவா? கலாய்த்த அதிராவா?

    ReplyDelete
    Replies
    1. கலைத்தேன் ஸ்ரீராம்:) அதாவது வீட்டிலிருந்து போவதைப் பார்த்துவிட்டு.. ஆற்றங்கரையால் கலைத்து அருகில் போனேன் ஹா ஹா ஹா:))

      Delete
  36. இந்த 'என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு' பாடல், நான் 4-5ம் வகுப்பு படிக்கும்போது பிரபலமான பாடல். இதனை பள்ளி மாணவர்கள் பாடிக்கொண்டிருப்பார்கள் (இதென்ன... ரவுடிப் பசங்க பாடற பாட்டு என்று என் அம்மா சொல்லுவார்)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அம்மாக்களுக்குப் பிடிக்காதுதான்.. பெண்களைக் கிண்டல் பண்ணுவதுபோல இருக்கும்:))...

      இன்னொரு பாடல்.. என்னடி மீனாட்சி நீ சொனது என்னாச்சு.. அதுவும் பிரபலம் எல்லோ? ஒருநாள் ஸ்கூல் படித்தபோது ஒரு பெரிய மனிதர்.. உயரம் நல்ல கம்பீரமான உடம்பு ஆனா ஏதோ லவ் ஃபெயிலியர் போல .. மனநிலை பாதிக்கப்பட்டவராக .. ரோட்டிலே பெரிய சத்தமாகப் பாடிக்கொண்டு போனார்.. என்னடி மீனாட்சி.. எனும் பாட்டை. கேட்க கஸ்டமாக இருந்துது... மனதில் அக்காட்சியும் நீங்கா இடம் பிடித்து விட்டது.

      Delete
  37. மயில்களுக்கு உணவு கொடுக்கும் காட்சி மிக அருமையா இருக்கு. தமிழ்நாட்டுல நிறைய இடங்கள்ல மயில்கள் இருந்தது. (எங்க கிராமத்திலும்தான்). அதனைக் கொன்று இறகுகளைப் பறித்து அதில் விசிறி போன்றவை செய்துவிட்டார்கள் அநியாயமாக.

    பஹ்ரைனிலும், ஒரு பூங்காவில் ஒரு பெண் (ஆன்'டி) காலை 7.10க்கு தினமும் நிறைய பூனைகளுக்கான உணவை எடுத்துவருவார் (கார்ன்ஃப்ளெக்ஸ் போல). உடனே பூங்காவில் இருக்கும் அத்தனை பூனைகளும் அவரை நோக்கி ஓடிவரும். அவைகளுக்கு அவைகளோட இடங்கள்ல (பூங்காவைச் சுற்றி) கொஞ்சம் கொஞ்சம் உணவு வைப்பார். அவைகளோட பேசுவார். எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கும் (பூனைகளும் அவரைப் பார்ததவுடனே அவரை நோக்கி ஓடுவதும், அவரைப் பின் தொடர்வதும்)

    ReplyDelete
    Replies
    1. //மயில்களுக்கு உணவு கொடுக்கும் காட்சி மிக அருமையா இருக்கு. // உண்மைதான் அந்த வீடியோ எனக்கும் நன்கு பிடித்து விட்டது... அப்படி கூட்டமாக மயில்களை எங்கும் பார்த்ததில்லை.

      உண்மைதான் முன்பு நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது ஊரில் பெரும்பாலும் எல்லாக் கோயில்களிலும் மயில்கள் வளர்ப்பார்கள்.. மயில் பார்க்கவென்றே கொயிலுக்குப் போவதும் உண்டு... பின்பு இப்போ அப்படி எங்கும் இல்லை என்றே நினைக்கிறேன்.

      //ஒரு பெண் (ஆன்'டி) // யூ மீன் அஞ்சு ஆன்ரி:) ஹா ஹா ஹா ஹையோ நான் எதுவும் ஜொள்ளல்ல ஜாமீஈஈஈ என் சந்தேகத்தைக் கிளியர் பண்ணினேன்:))..

      ஓ எந்த உயிரினமும் அப்படித்தான், ஏன் இப்போ நம்மிடம் கோல்ட் ஃபிஸ் இருக்கு.. தொட்டியின் அருகில் நடந்தாலே கிளாஸ் விளிம்புக்கு ஓடிவந்து ஆ...ஆ... என வாயை விரித்துக் கேட்பார்கள் உணவு... ஆரம்பம் எனக்கு பயங்கர ஆச்சரியமாக இருந்துது மீனும் உணவு கேட்குமோ என.. இப்போ பழகி விட்டது. நன்றி.

      Delete
  38. எல்லா படங்களும் அழகு.
    கோமதி அக்காவிற்கு இசைப்பாட்டு படமும் அழகு.

    ஊசிக்குறிப்பு அருமை.

    மயில்கள் காணொளி மிக அருமை.
    எண்ணம் அழகானால் எல்லாம் அழகுதான் என்பது மிக சரி.
    உங்கள் எண்ணம் அழகு, படங்களும் அழகு.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ.. ஹா ஹா ஹா மியாவும் நன்றி...

      Delete
  39. பக்கத்து வீட்டு பருவ மங்கை மனம் கவர்ந்தாள்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும்தான்.. மிக அழகிய கலர் எல்லோ??

      Delete
  40. கப்பல் பார்க்கும் பூனைக்குட்டி அழகு.

    ReplyDelete
  41. //'என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு'//

    பாடல் கேட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. பாட்டுப் பிடிக்காதோ? எனக்கு அந்த மியூசிக்தான் ரொம்பப் பிடிச்சது. மிக்க நன்றி கோமதி அக்கா.

      Delete
  42. அருமை
    அருமை
    ரசித்தேன் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கரந்தை அண்ணன் வாங்கோ.. மிக்க நன்றி.

      Delete
  43. கப்பலை முழுசாப் பார்க்காம பூசார் வீட்டுக்குத் திரும்புவது கஷ்டந்தான்.. பார்க்கட்டும். ஒன்றும் அவசரமில்லை. சிட்டுக்குருவியைப் பிடிக்காமலிருந்தால் சரி.

    பூப்பூவாப் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம்பூ.. என்ற வரிகள்வேறு குறுக்கே, அதிராவின் வண்ண்ணப் படங்களில் தடுமாறி ஜிந்திக்க முயற்சிக்கையில். எக்கச்சக்கப் பிரகாசம், ஓவர்ஜொலிப்பு தாங்கமுடியாமல் தமிழ்வாணனைப்போல் கறுப்புக்கண்ணாடியைப் போட்டுக்கொண்டு படித்துமுடித்தேன். இனிமேல் கறுப்புக்கண்ணாடிபோட்டுக்கொண்டபின் தான் கதவைத் திறக்கவேண்டும்.

    ஆனாலும், ஒரு ஞானிக்கு இவ்வளவு விவகாரம், அலங்காரம் தேவைதானா..!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஏகாந்தன் அண்ணன் வாங்கோ...

      // 2018 5:19:00 pm
      கப்பலை முழுசாப் பார்க்காம பூசார் வீட்டுக்குத் திரும்புவது கஷ்டந்தான்//
      ஹா ஹா ஹா... சிட்டுக்குருவியைப் பிடிச்சது எங்க வீட்டுச் செல்லம் டெய்ஷிப்பிள்ளை:)).. நல்லவேளை கடிச்சிடாமல் மம்மிக்கு கிவ்ட் என தூக்கி வந்தமையால் குருவியைக் காப்பாத்திட்டோம்ம்:)).

      ///அதிராவின் வண்ண்ணப் படங்களில் தடுமாறி ஜிந்திக்க முயற்சிக்கையில். எக்கச்சக்கப் பிரகாசம், ஓவர்ஜொலிப்பு தாங்கமுடியாமல் தமிழ்வாணனைப்போல் கறுப்புக்கண்ணாடியைப் போட்டுக்கொண்டு படித்துமுடித்தேன்.///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நீங்கள் புகழ்வது புல்லாஆஆஆஆஆரிக்குதெனக்கு:) ஹையோ நெ.தமிழன் இதைப் பார்த்திடக்கூடா:))..

      //இனிமேல் கறுப்புக்கண்ணாடிபோட்டுக்கொண்டபின் தான் கதவைத் திறக்கவேண்டும்.//
      அடுத்து ஒரு அழகிய பாடல் இயற்றலாம் என இருக்கிறேன்ன்:)) ஹா ஹா ஹா தவறாமல் வந்து பாட்டை ரசிக்கோணும்:)).

      ///ஆனாலும், ஒரு ஞானிக்கு இவ்வளவு விவகாரம், அலங்காரம் தேவைதானா..!//
      ஞானியும் மனிசந்தானே ஏகாந்தன் அண்ணன்?:)) ஹா ஹா ஹா ஆவ்வ்வ்வ்வ் டத்துவமா வருதே எனக்கு:))

      Delete
  44. கீழே இப்போதுதான் கவனித்தேன்.. அதெப்படி என் கையெழுத்தைப் பார்க்குமுன்பே மிக்க நன்றி என்றீர்கள். ஞான திருஷ்டியில் காட்சி தட்டுப்பட்டுவிட்டதோ?!

    ReplyDelete
    Replies
    1. ///அதெப்படி என் கையெழுத்தைப் பார்க்குமுன்பே மிக்க நன்றி என்றீர்கள்.///

      ஹா ஹா ஹா அப்படியே உங்கள் எழுத்துப்போல இருக்கோ?:)) ஆவ்வ்வ்வ்வ் இது போதும் எனக்கு:)) பெங்களூர் பிராஞ் ல இருக்கும்:) பாங்கில, சைன் பண்ணி.. வழிச்சுத் துடைச்சிட வேண்டியதுதேன் ஹா ஹா ஹா:))

      Delete
  45. இப்படி அரைக்கால் கணக்கில் உங்களைப் படம் காட்டாதீர்கள். உங்கள் கௌ அண்ணா இங்கு வந்தால் பிரச்சினை ஆயிடும். எபி-யில் தாராளமாக அவர்போடும் கீர்த்தி சுரேஷின் பத்துப் பதினைந்து படங்களோடு இதையும் சேர்த்துக் கலக்கிவிட்டுடுவார்.. அப்பறம் புதன் பகவானே வந்தால்கூட எபி வாசகர்களைக் காப்பாற்றமுடியாது!

    ReplyDelete
    Replies
    1. ///இப்படி அரைக்கால் கணக்கில் உங்களைப் படம் காட்டாதீர்கள். உங்கள் கௌ அண்ணா இங்கு வந்தால் பிரச்சினை ஆயிடும். //

      ஹா ஹா ஹா இதை கெள அங்கிளின்:) மருமகன் :) சொல்லிக் குடுத்திடுவாரோ தெரியல்லியே:)).. இனிக் கீர்த்தி வரமாட்டா அங்கு.. கெள அண்ணனின் மாமிதான் வருவா:)) ஐ மீன் கீர்த்தியின் அம்மம்மா:)) ஹா ஹா ஹா ஹையோ படிச்சதும் கிழிச்சு... திரிவேணி சங்கமத்தில எறிஞ்சிடுங்கோ ஏகாந்தன் அண்ணன் பிளீஸ்ஸ்ஸ்ஸ்:))..

      ஹா ஹா ஹா வருகைக்கும் கொமெண்ட்ஸ்க்கும் மியாவும் நன்றிகள்.

      Delete
  46. பதிவில்..... கண்களைக் கவரும் வண்ண வண்ணப் பூக்கள். காட்சிகளைக் கண்முன் நிறுத்தும் தத்ரூபமான படங்கள். வரிக்கு வரி புன்னகைக்கத் தூண்டும் வசீகர எழுத்து. அதிராவுக்கு நிகர் அதிராதான்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அறிவுப்பசிஜி வாங்கோ.. மிக்க நன்றி மிக்க நன்றி.. சொக்கிப் போக வைக்கிறது உங்கள் பின்னூட்டங்கள்..

      Delete
  47. அனைத்து படங்களும் அருமை

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மொகமட் வாங்கோ மிக்க நன்றி.

      Delete
  48. கனகாலமா காணேல்லை கண்ணழகியை. இதை பார்த்து உங்க பழைய பதிவுகள் ஞாபகம் வருது. என்னதான் சொல்லுங்க நீங்க இருக்கும் இடம் சூப்பரோ சூப்பர். எனக்கும் இப்படி ஆற்றங்கரை,அல்லது கடற்கரை பக்கமா இருக்க விருப்பம்.
    இதற்காகவே அம்மம்மா வீட்டுக்கு பருத்தித்துறைக்கு போவது. இப்போ இங்கும் ஆறு இருக்கு. கொஞ்சதூரம் போகோனும்.
    படங்கள் எல்லாமே அழகா இருக்கு அதிரா. முதலாவது படம் சூப்பர்ப்.
    வா...வ் இவ்வளவி மயிகளாஆஆ.... நான் இவ்வளவு மயில்கள் ஒன்றாக பார்க்கவேயில்லை. வீடியோவில் வண்ண மயில்கள் அழகு. இங்கு எங்க பக்கத்து சிட்டியில் இருக்கும் முருகன் கோவிலில் மயில் வளர்க்கிறார்கள். எங்கட ஊரிலும் கோவிலில் மயில்கள் இருக்கின்றன.
    டெய்சி சரியான குழப்படியோ... இப்படியெல்லாம் செய்யக்கூடா..பாவம் ஸ்பரோ.

    சரி சரி..ஏதோ பழைய கோபம் இருக்கு போல.. அதுதான் என்னையும்,அஞ்சுவையும் கூட்டிக்கொண்டு போய் தள்ளுற பிளான்.... நடக்கட்டும்...
    அடி என்னடி ராக்கம்மா பாட்டு வீட்டில் முணுமுணுக்கப்படும் பாடல் இங்கு. ஆனா நான் இல்லை. ஹா..ஹா..
    ஊசிக்குறிப்புகள் அத்தனையும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ...

      எங்கே காணவில்லையே என யோசித்தேன்..

      ////என்னதான் சொல்லுங்க நீங்க இருக்கும் இடம் சூப்பரோ சூப்பர். ///
      ஹா ஹா ஹா உண்மைதான் அம்முலு ஆனா எனக்குத்தான் அலுத்து விட்டது.. குளிர் அதிகம் ஆற்றினால்தானோ என ஃபீல் பண்ணுகிறேன்.. ஆனா வெயில் காலத்தில் இதமான காத்தடிக்குது நல்லாயிருக்கு.

      நானும் இதில்தான் இவ்ளோ மயில்கள் பார்த்தேன்.. இப்படிக் கூட்டமாய் எப்படி வளர்க்கிறார்களோ கோழி வளர்ப்பதைப்போல.. இதை விற்பார்களோ வெளி நாடுகளுக்கு என எண்ணத் தோணுது.

      ஹையோ வெயில் வந்திட்டால் போதும்.. நேற்றும் ஒரு சுண்டெலியை ஓட விட்டு விட்டுப் பிடிக்கிறா.. நான் ஜன்னலால பார்த்திட்டு சூஸ் கூடப் போடாமல் தடக்கி விழுந்தடிச்சு ஓடிப்போனேன்.. என்னைப் புதினம் பார்த்தாவா.. சுண்டெலி ஓடிட்டுது:)) நான் ஆளைத்தூக்கி வந்திட்டேன்.. கொஞ்சம் லேட்டா திறந்து விட்டால்ல்.. அதிலேயே போய் சுத்திச் சுத்தி தேடுறா:)) கர்ர்:))..

      சே.சே. தள்ளி விடமாட்டேன்ன் பயபடாமல் வாங்கோ:)).. பாட்டு.. ஹா ஹா ஹா மிக்க நன்றி அம்முலு அனைத்துக்கும்..

      Delete
  49. வணக்கம் பூசாரே !

    எண்ணமிகும் எழிலணையும் இதம்பலவும் ஏற்கும்
    ஏற்றமிகு உணர்வுகளும் இயற்கைஎழில் போற்றும்
    வண்ணமிகும் வார்ப்புகளாய் வழங்குகிறாய் ஆக்கம்
    வந்துதினம் கண்டுவிட்டால் மகிழ்ந்துமனம் பூக்கும் !

    அரும்புகளும் அதிசயமும் அழகழகாய் இருந்தும்
    அவசியமாய் ஏதுமிலை ஆசைகளும் வருந்தும்
    கரும்புகளாய் முன்பிருந்த கதையெதுவும் இல்லை
    கண்டபடி எழுதுவதால் கருப்பொருளும் இல்லை !

    வலிந்துகவி எழுதமனம் வரள்வதனைப் போலே
    மந்தநிலை கண்டறிவு மருங்கிவிடும் இன்றே
    நலிந்தழியும் தமிழறங்கள் நானிலத்தும் வாழ
    நல்லபதி வெங்குமினி நவின்றிடுவாய் நன்றே !

    களத்துநிலப் பூவனயக் கவிதைகளும் தந்தாய்
    கார்மேகத் தூதனயக் கதைபலவும் தந்தாய்
    உளமகிழக் கைவேலை உருப்படியாய்த் தந்தாய்
    உறவுகளும் கற்றறிய உணவுமுறை தந்தாய் !

    படிப்படியாய் மாறுதிந்தப் பைந்தமிழாள் பக்கம்
    பார்த்து'அதைக் கருத்திடுவோர் பார்க்கவிலை ஆக்கம்
    அடிக்கடியில் லாவிடினும் அரும்பதிவு ஒன்றை
    அகம்நிறையத் தந்திட்டால் அகன்றிடுமே ஏக்கம் !

    என்ன கல்லைத் தேடுறாப்ல இருக்கு ஐயோ ஐயோ நான் அவனில்லை திட்டாதீங்கோ உதவிக்கு இந்த அஞ்சு அக்காவும் வரமாட்டாவே இந்த நேரத்தில நம்ம பூசார் கருத்துள்ள பல பதிவுகள் தந்தாங்க இப்போ கண்டபடி போனவிடம் வந்தவிடம் எல்லாம் போட்டு கடுப்பேத்துறாங்க அதனால்தான் இப்படிக் கவிதை எழுதினேன் மன்னிச்சிடுங்கோ பூஸ் !
    அவ்வவ்வ்வ்வ் .......


    படங்கள் பரவசப் படுத்துகின்றன வழக்கம் போல ஊசிக்குறிப்பும் அருமை வாழ்த்துகள் அதிரா ! ஆமா அந்த வாழைப்பழம் இன்னுமா அப்படியே இருக்கு !

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மேஜரே வாங்கோ.... கவிஞரையும் காணல்லியே கவிதை எழுதி முடியல்லியோ என நினைச்சேன்ன்.. பிக்கோஸ்ஸ்ஸ்ஸ்:)) என் போஸ்ட்டுக்கு கவிதை வடிப்பதென்ன சிம்பிளோ?:)) சரி சரி முறைக்காதீங்க:))..

      //வந்துதினம் கண்டுவிட்டால் மகிழ்ந்துமனம் பூக்கும் !//
      அதுதானே அப்பூடிச் சொல்லுங்கோ:)) ஆனா அஞ்சுகூட டெய்லி வாறாவில்லையே கர்ர்ர்ர்:))

      //கரும்புகளாய் முன்பிருந்த கதையெதுவும் இல்லை
      கண்டபடி எழுதுவதால் கருப்பொருளும் இல்லை !//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹையோ இது நெ.தமிழன் கண்ணில பட்டிடக்குடா ஜாமீஈஈஈ:))..

      ///நல்லபதி வெங்குமினி நவின்றிடுவாய் நன்றே !//

      சரி சரி இருங்கோ இருங்கோ... தோஓஓஓஓஓஓ வருது ஒரு கவிதைப்பாடல் விரைவில்:)) பூஸோ கொக்கோ:)) ஹா ஹா ஹா..

      Delete
    2. ///படிப்படியாய் மாறுதிந்தப் பைந்தமிழாள் பக்கம்
      பார்த்து'அதைக் கருத்திடுவோர் பார்க்கவிலை ஆக்கம்///

      ஹா ஹா ஹா எழுதுவதற்கு நிறைய இருந்தும்.. இந்த சமர் என்னைப் படுத்தும் பாடு.. பார்ப்பதெல்லாம் படமெடுத்துப் போடச்சொல்லி மனம் துடிக்குதே:)).. விண்டர் தொடங்கிட்டால்ல்.. ஒரே கும்ம்ம்ம்மிருட்டாகிடும்.. அப்போ வீட்டுக்குள்ளிருந்து கற்பனை வளர்க்க வரும்.. இது இயற்கையின் அழகுகளோ என் கற்பனையை உடைச்செறியுதே ஹா ஹா ஹா..

      ///என்ன கல்லைத் தேடுறாப்ல இருக்கு ஐயோ ஐயோ நான் அவனில்லை திட்டாதீங்கோ ///

      நோஒ..னோஒ கல்லெல்லாம் எடுத்துப் பழக்கமில்லை நேக்கு.. சுவிஜ் ஐத்தான் தேடுகிறேன்:))

      [im]http://www.netanimations.net/kamikaze-cat6.gif[/im]

      Delete
    3. ///இந்த நேரத்தில நம்ம பூசார் கருத்துள்ள பல பதிவுகள் தந்தாங்க இப்போ கண்டபடி போனவிடம் வந்தவிடம் எல்லாம் போட்டு கடுப்பேத்துறாங்க அதனால்தான் இப்படிக் கவிதை எழுதினேன் மன்னிச்சிடுங்கோ பூஸ் !
      அவ்வவ்வ்வ்வ் .......///

      ஹா ஹா ஹா ஆங்ங்ங் இதைப் பார்த்ததும் சுவிஜ் ஐ ஓவ் பண்ணி பிளேனை லாண்ட் பண்ணிட்டேன்...:)).. திட்டினாலும் முட்டினாலும் வேலை மினக்கெட்டு கவிபடைக்கும் உங்களோடு எனக்கென்ன பகை:)) .. அழகிய கவிதை.. நன்கு சிந்திச்சு எழுதியிருக்கிறீங்க.. அதுக்காக இந்தாங்கோ உங்களுக்கு நானே என் கையால செய்தது.. பின்ன என்ன அஞ்சு வீட்டிலயா களவெடுப்பேன்ன்.. எப்பூடி ரேஸ்ட்டா இருக்கா?:))..

      [im]https://1.bp.blogspot.com/-i2Uu0pX149w/WoRFHwyYjrI/AAAAAAAAMHM/jbgo7EKNvEEINwM-v4uY45wDwvCS0IIcQCEwYBhgL/s1600/20180126_205034.jpg[/im]

      Delete
    4. //ஆமா அந்த வாழைப்பழம் இன்னுமா அப்படியே இருக்கு !///

      ஹா ஹா ஹா அங்கு பார்த்ததை மறக்கவில்லையோ நீங்க ஆவ்வ்வ்வ் மறந்திருப்பார்கள் என நினைச்சேன்ன்.. மிக்க நன்றி சீராளன்.. அனைத்துக்கும் நன்றி.

      Delete
    5. ஐயோ ஐயோ என்மேல இப்படி எதுக்கு சுட்டு தள்றீங்க மீ பாவம் விட்டுடுங்கோ
      ஆமா இந்தச் சாப்பாடு எல்லாம் நமக்கு பிடிக்காது பாருங்கோ இன்ய்தப் பாஸ்ட் பூட் பப்படப் பூட் எல்லாம் நமக்கு செட் ஆவாது நல்லா நாட்டுக் கோழி வறுவலும் சோறும்தான் நமக்கு பிடிக்கும் ம்ம்கும் இருந்தும் நன்றி மியாவ்

      Delete
    6. ஹா ஹா ஹா கவிஞருக்கு பாஸ்ட் ஃபூட் எல்லாம் ஒத்துக்கொள்ளாதோ:)) இருங்கோ அஞ்சு அக்காவின் அடுத்த சமையல் குறிப்பு வெளிவரட்டும் ஒளிச்சு எடுத்து வாறேன்ன்:)).. ஹா ஹா ஹா.. மிக்க நன்றி மீள் வருகைக்கு.

      Delete
    7. சீராளன் - முதலில் கவிதையை முழுவதும் படித்தேன். கடைசி செய்யுளைப் (படிப்படியாய் மாறுது) படிக்கும்போதுதான், நீங்கள் எடுத்துக்கொண்ட கருப்பொருள் முழுவதும் விளங்கியது.

      செய்யுளும் அருமை. அதன் பொருளும் நல்லா கையாண்டிருக்கீங்க. பொதுவா நீங்க கையாளாத வடிவம். எனக்கு மிகவும் பிடித்திருந்தது.


      பூவனயக் கவிதைகளும் - பூவனைய கவிதை இங்கு 'க்' வராது
      தூதனயக் கதை - இங்கும் 'க்' வராது.

      பாராட்டுகள் சீராளன்.

      Delete
    8. சீராளன் - இந்தக் கவிதை எதனையோ (சந்த வடிவத்தில்) எனக்கு ஞாபகப் படுத்திக்கொண்டே இருந்தது. இன்று கண்டுபிடித்துவிட்டேன்.

      திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய குற்றாலக் குறவஞ்சி.

      வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
      மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்
      கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பார்
      கமன சித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பார்

      தேன் அருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்
      செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
      கூனல் இளம் பிறை முடித்த வேணி அலங்காரர்
      குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே

      Delete
  50. //இது கீசாக்காவுக்காக ஆதாரத்துடன்:))., இல்லை எனில், அதிரா எடுக்கல்லே வேறு ஆரோ எடுத்திருக்கினம் என சவுண்டு விடுவா கர்ர்ர்:))//
    அது! அந்த பயம் இருக்கட்டும்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ.. இப்பெல்லாம் நீங்க எங்கேயும் 1ஸ்ட்டா வாறீங்களே இல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

      Delete
  51. படங்கள் எல்லாம் கொள்ளை அழகு. அது சரி, நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவே நீங்க எடுத்தது தானா? பூக்கள் விதம் விதமான நிறங்களில் கண்களையும் மனசையும் பறிக்குது! ஊசிக்குறிப்பு அபாரம். அதிலும் அந்த இரண்டாம் குறிப்பு!

    இத்தனை கருத்துக்கள் வந்தாச்சு. சும்மாவே நான் தாமதமா வருவேன். இப்போ 2 நாள் தாமதம். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
    Replies
    1. //அது சரி, நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவே நீங்க எடுத்தது தானா?//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உப்பூடிச் சொன்னா மட்டும் நான் முழுப்படத்தையும் போட்டு விடுவேன் எனும் நினைப்பாக்கும்:))..

      அடுத்தமுறை பூஸ்ட் குடிச்சு உடனேயே ஸ்பீட்டா ஓடி வாங்கோ:)) மிக்க நன்றிகள் கீசாக்கா.

      Delete
  52. எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும். முத்தாய்ப்பான சொற்றொடர்.

    ReplyDelete
  53. ஹலோவ் மியாவ் .சீராளனின் கருத்தே எனதும் :)நீங்க படம் படமா போட்டா அதுவும் அழகழகா படம் போடறதால் எங்களால் உங்களை கலாய்க்க முடியல்ல :) .எங்களுக்கு பொழுது போகணும் விரைவில் ரெசிபிக்கள் அல்லது வேறு நீங்க பல்ப் வாங்கிய பதிவுகளை போட்டா நாங்க ஒன்று கூடி உங்களை ஓட ஓடா கலாய்க்க வஸந்தியா நோ நோ வசதியா இருக்கும் :)

    ReplyDelete
    Replies
    1. மியாவ் ..............இந்தா கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்திட்டாங்கல்ல அன்புள்ள அஞ்சு அக்கா இனி என்மேல கல்லு விழுமா ஹா ஹா ஹா பூசாரே நாங்களும் பெரிய ஹேங்குதான் ஒத்தையில நிக்கல்ல ஹா ஹா ஹா
      சரி சரி கோபிக்காம நாங்க கலாய்க்கக் கூடியதும் நல்லா கவிதை உணர்வைத் தூண்டக் கூடியதுமாக ஒரு பதிவு போடுங்க சும்மா அசத்துகிறோம் சரியா !

      Delete
    2. ///ஹலோவ் மியாவ் .சீராளனின் கருத்தே எனதும் :)நீங்க படம் படமா போட்டா அதுவும் அழகழகா படம் போடறதால் எங்களால் உங்களை கலாய்க்க முடியல்ல :) //


      ஆவ்வ்வ்வ் இப்பூடியும் ஒரு கருத்திருக்கோ கவிதையில:)) கோணம் கோணமா ஜிந்திக்கினமே எல்லோரும்:)) பார்ப்போம் நெல்லைத்தமிழன் எப்பூடி ஜிந்திக்கிறார் என:))..

      //விரைவில் ரெசிபிக்கள் அல்லது வேறு நீங்க பல்ப் வாங்கிய பதிவுகளை போட்டா //

      இருங்கோ இருங்கோ தாத்தா தேடுறார் உங்களை:)) ஹா ஹா ஹா..

      Delete
    3. // ஹா ஹா ஹா பூசாரே நாங்களும் பெரிய ஹேங்குதான் ஒத்தையில நிக்கல்ல //

      நான் ஜொன்னனே ஜொன்னனே:)) வர வர எனக்கு எதிர்க்கட்சிதான் கூடிட்டேஏஏஏஏஏஏ வருது:)) விரைவில எல்லோரும் மூக்கடைச்சுப்போய்:) நிக்கிறமாதிரி ஒரு போஸ்ட் போடப்பொறேன்ன்:).. வெயிட் அண்ட் சீ யா:)) ஹாஆஆஅக்க்க்க்ஹாஆஆஆஆஆஆ..ஹாஆஆ:))

      Delete
  54. அன்னிக்கே சொல்ல நினைச்சேன் அந்த முதல் படம் பூசுக்குட்டி வேடிக்கை பார்த்திட்டு போற மாதிரிதான் எங்க ஜெஸி பொம்மியும் முதல் நாள் கூட்டிட்டு வரும்போது மகள் மடியில் உக்கார்ந்து கண்ணாடி வழியா விண்டோ வாச் பண்ணிட்டே வந்தா :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அதை வடிவாப் பாருங்கோ அஞ்சு.. காருக்குள் இருந்து புதினம் பார்த்துப் போறா:)..

      ஓ ஜெஷி மடியில இருந்திருக்கிறா.. எங்கட டெய்சி.. தானா வந்து ஏறியிருந்தால் ஒழிய நாமாக வச்சிருக்கவே முடியாது மடியில ஹா ஹா ஹா... எனக்கு மல்ட்டி மாதிரியும் இன்னொரு பேபிப்பூஸ் வேணும்ம்ம்ம்:))

      Delete
  55. Replies
    1. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இதாரிது... ஒருகணம் ஆடிப்போயிட்டேன்ன்ன்ன்ன் :)) வாங்கோ சிவா வாங்கோ.. முதல் தடவையாக அப்பா ஆகியிருப்பது கேட்டுச் சந்தோசம் வாழ்த்துக்கள்.

      உங்கட இம்ஸ் அம்மா விடம் சொல்ல்லி விட்டேன் சிவாவை புளொக் பக்கம் வரச் சொல்லுங்கோவன் என:))...

      பழையவர்களை மீண்டும் பார்க்கும்போது சொல்ல முடியாத மகிழ்ச்சி.. மிக்க சந்தோசம் சிவா.. மிக்க நன்றி... முடியும்போது எட்டிப் பாருங்கோ.

      Delete
    2. :)...பழையவர்களை மீண்டும் பார்க்கும்போது சொல்ல முடியாத மகிழ்ச்சி. True lines Baby Athira Thank you..& Sure will be back..Time Permits)

      Delete
    3. ஹா ஹா ஹா சிவா.. இன்னமும் பேபி:) போடுவதை மறக்கவில்லை:)) நீங்க ரைம் ஒதுக்கி அதிராவிடம் மட்டும் வாங்கோ:) இமா றீச்சரிடம் எல்லாம் போக வேண்டியதில்லை :)) ஹையோ படிச்சதும் கிழிச்சுக் கூவத்தில தாட்டிடுங்கோ சிவா...
      மீண்டும் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி.

      Delete
    4. அதிரா யாரிது எங்கேயோ கேட்ட குரல் எங்கேயோ பாராத முகம் :)

      Delete
    5. அதோன்னுமில்லை இன்னிக்கு இவர் பேபி :) அதான் உங்களையும் பேபி சொல்றார்

      Delete
  56. விதம் விதமாக படமெடுத்து சிறப்பாக பதிவிட்டிருக்கிறீர்கள். இந்த வருட சிறந்த புகைப்படத்துக்கான விருது உங்களுக்கு தான்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சிகரம் பாரதி வாங்கோ..

      ///இந்த வருட சிறந்த புகைப்படத்துக்கான விருது உங்களுக்கு தான்!//
      ஹா ஹ ஹா ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாப் பேசுங்கோ:)) இங்கின எல்லோருக்கும் மூக்கால புகை வந்திடப்போகுதூஊஊஊ:))

      மிக்க நன்றி.

      Delete
  57. வணக்கம் சகோதரி

    உங்கள் கண்ணழகியின் வலையில் சிக்கி நானும் வந்து விட்டேன். கண்ணழகியின் பார்வைக்கு யாரும் தப்பிக்க முடியாதல்லவா? அது போல் தங்கள் எழுத்து நடையில் யாராலும் வீழாமல் இருக்க முடியாதல்லவா.. ஹா ஹா ஹா ஹா

    கண்ணழகி மிக அற்புதமாக இருக்கிறாள்.
    மலர்கள் படங்கள் ஒவ்வொன்றும் மிக அருமை. உங்கள வீட்டு செல்லங்கள் மிக அழகு. அனைத்துப் படங்களுமே நீங்கள் மிக அழகாய் எடுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். ஆற்றங்கரை அருகிலேயே தங்கள் வீடா? எனவே ரசிப்பதற்கு நிறைய காட்சிகள் கிடைக்கும். வாழ்த்துக்கள்.

    ஊசிக்குறிப்புகளை படித்து மிகவும் ரசித்தேன்.

    சகோதரி ஏஞ்சல் அவர்கள் தங்கள் நெருங்கிய தோழி என்பதால், அவர் கை விரல் காயம் ஆறி நலம் பெற்று வருகிறாரா என்பதையும் இங்கு விசாரித்துக் கொள்கிறேன். ஏனோ அவரது தளத்திற்கு செல்ல முடியவில்லை. மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ்வ் வாங்கோ கமலா சிஸ்டர் வாங்கோ. முதன் முதலா வந்திருக்கிறீங்க.. நல்வரவு மிக்க மகிழ்ச்சி.. வலது காலை எடுத்து வச்சு வாங்கோ...

      //உங்கள் கண்ணழகியின் வலையில் சிக்கி நானும் வந்து விட்டேன்///
      ஹா ஹா ஹா அவ கண்ணைக் காட்டியே மயக்கிப் போடுவா எல்லோரையும்:))..

      //நீங்கள் மிக அழகாய் எடுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.//

      ஆவ்வ்வ்வ் இன்னும் கொஞ்சம் சத்தமாச் சொல்லுங்கோ:)) எல்லோருக்கும் காதில கேட்டுக்.. கண்ணில புகை வரட்டும்:)).

      //சகோதரி ஏஞ்சல் அவர்கள் தங்கள் நெருங்கிய தோழி என்பதால், ///
      ஹையோ உங்களுக்கு ஆரோ தப்பான தகவல் தந்திருக்கினம்:)) அவவும் மீயும் டிவோஸ் எடுத்து இப்போ வன் வீக் ஆகுதூஊஊஊஊஊஊ:) இப்போ பயங்கர எனமீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆகிட்டோம்ம் ஹா ஹா ஹா:))..

      அவவுக்கு இப்போ கை ஓரளவுக்கு.. கீபோர்ட் ஐத்தட்டி என்னைக் கலாய்க்கும் அளவுக்கு நலமாகிவிட்டது:)).

      //ஏனோ அவரது தளத்திற்கு செல்ல முடியவில்லை//
      ஏன் அப்படி.. தெரியவில்லையே.. அவ இதைப் படிப்பாதானே அப்போ கவனிப்பா...

      Delete
    2. நன்றி சகோதரி கமலா ஹரிஹரன் இப்போ .கை 98% சுகம் .
      ஆவ் !!யாரது என் ப்ளாகுக்கு வர விடாம கமலா சகோவை தடுக்கறது :)

      Delete
  58. மயில்கள் உணவு உண்ணும் காணொளியும் மிகவும் அருமை. எவ்வளவு மயில்கள்.. . ஒரு மயிலை காண்பதற்காக முருகன் கோவிலில் கேட் போட்டு பூட்டியிருக்கும் நத்தவன இடத்தில் தவமாய் தவமிருப்போம். நிறைய மயில்களை காண்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பிட மறந்து விட்டேன் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அதேதான் எவ்ளோ மயில்கள் நானும் வீடியோவைப் பார்த்ததும் ஷாக்ட் ஆகிட்டேன்ன்ன்:).

      உண்மைதான் நம் ஊர்களில் கோயில்களில் தான் காணலாம். ஆனா கேரளா ஆந்திரா பகுதிகளில் விபசாய நிலங்களில் மயில்கள் வந்து மேய்கின்றன.. குக்கிங் சனலில் பார்த்தேன்.

      அனைத்துக்கும் மிக்க மிக்க நன்றிகள்.

      Delete
  59. வணக்கம் சகோதரி

    நேற்று உங்கள் தளம் வந்து இந்தப்பதிவுக்கு இரு கமெண்டுகள் கொடுத்தேன். காக்கா தூக்கி கொண்டு எங்கே போட்டதோ தெரியவில்லை. ஸ்பேரோ பிடித்த தங்கள டெய்ஸி காக்கா பிடித்தால் (யாரையும் அல்ல.. ஹா ஹா)
    நான் எழுதிய கமெண்ட்ஸ் கிடைக்கும்.
    அதில் என்ன எழுதியுள்ளேன் என நினைவுக்குக் வரவில்லை.

    கண்ணழகி அற்புதம்.. மிக்க நன்றி..

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா மன்னிச்சுக்கோங்க மன்னிச்சுக்கோங்கோ.. அது என்னமோ இப்போ கொஞ்ச நாட்களாய் மெயில் நோட்டிபிகேசன் எதுவும் வருகுதில்லை.. அதனால நானா தேடிப்போய் வெயிட்டிங் கொமெண்ட்ஸ் செக் பண்ணினால்தான் தெரியும்.

      போஸ்ட் போட்டு வன் வீக்க் ஆகுதா... இனி கொமெண்ட்ஸ் வராது என நினைச்சு செக் பண்ண மறந்து விட்டேன்...

      இன்னும் டெய்ஸிப்பிள்ளை ஒரு ஸ்பரோவைப் பிடிச்சிட்டா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது பறக்க முடியாமல் இருக்குது.. தண்ணி சாப்பாடு குடுத்து ஒரு பொக்ஸ் ல வைத்திருக்கிறேன் பார்ப்போம்ம் என்ன ஆகுதோ..:(.

      மிக்க நன்றிகள்.

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.