நல்வரவு_()_


Tuesday 13 December 2011

எதிர்பார்ப்பு இருந்தால்தானே ஏமாற்றம் இருக்கும்:)

சமீபத்தில் பூஸ் ரேடியோவில் கேட்ட ஒரு பிரசங்கம். 


எதையும் எதிர்பார்க்காதீர்கள், எதிர்பார்ப்பு இருந்தால்தானே ஏமாற்றம் இருக்கும். உங்கள் கடமையை நீங்கள் சரிவரச் செய்யுங்கள். நாம் பெற்றோராக இருக்கும்போது பிள்ளைகளுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாகச் செய்திட வேண்டும். ஆனா அக்கடனை திருப்பி பிள்ளைகளே எமக்கு அடைப்பார்கள் என எதிர்பார்க்கக்கூடாது. தாம் பட்ட கடனை பிள்ளைகள், தம் மக்களுக்கு அடைப்பார்கள், பெற்றோருக்கல்ல. 


 நாம் அடுத்தோருக்கு நல்லது செய்தால், அவர்களிடம் இருந்தே திரும்ப எமக்கு பலன் கிடைக்காது போகலாம், ஆனால் அதற்குரிய பலன், ஆரோ தெரியாதோர் மூலமாக எமக்குக் கிடைக்கும். 

 டொட்ட டொயிங்....

 அடுத்து அமெரிக்கன் இட்லி:).. 

 இதென்ன பெரிய விஷயமோ எண்டெல்லாம் நினைச்சிடாதீங்க.... இட்லி மல்லிகைப்பூப்போல வரோணும் எண்டால் சரியாப் பாடுபடோணும்:))..

அதுவும் அரிசியில் செய்யும்போது இன்னும் கஸ்டம். இம்முறை மகியின் உதவியோடு செய்திட்டேன். அம்மாவுக்குச் சொன்னேன், அரிசியில் இட்டலிக்கு வைத்திருக்கிறேன் என... அம்மாவுக்குச் சிரிப்பு.. நல்லா வருதோ எனச் சொல்லு என்றா. பின்னர் சொன்னேன் சூப்பராக வந்திருக்கு என.. அவவால நம்ப முடியேல்லை... கர்ர்ர்ர்ர்ர்:)).

 அடுத்த நியூஸும் குடுத்திட்டன், அம்முலு எனக்கு அப்பம் சுட ரெசிப்பி அனுப்பியிருக்கிறா, சூப்பராக வந்துதாம் என்றேன், உண்மையாகவோ செய்துபோட்டுச் சொல்லு பார்ப்பம் என்றா. நான் ஓடிப்போய் அப்பச் சட்டியும் வாங்கி வந்திருக்கிறேன், இனி எப்ப செய்வனோ தெரியேல்லை.. ஆனா விரைவில் நடக்கும்:). ஊரில் இருக்கும்போது, அம்மா அரிசி ஊறவைத்து அப்பம் சுடுவா, சூப்பராக இருக்கும், ஆனா இப்போ அதெல்லாம் கைவிட்டாச்சு.

 சரி விஷயத்துக்கு வருவம்...

மகியின் மல்லிகே இட்லி



இது.. நான் செய்த சம்பலும், ஆம்பாறும்... எங்கள் நாட்டில் சம்பல் என்போம், அதை ஸ்ரைலாக தேங்காய் சட்னி என்பீங்கள் தமிழ் நாட்டில்... 

இருப்பினும் மகியினுடையதைப்போல, நல்ல பஞ்சாக வரவில்லை எனக்கு:(



இம்மாதம் எங்கள் ஏரியா Street lights  ...கிரிஸ்மஸ் சோடனை லைட்டுக்கள்...   

அதை ஆரம்பிக்க சுவிஜ் ஓன் பண்ணுவதற்காக எங்கள் மகனின் வகுப்பிலிருந்து 8 பேரை தெரிவு செய்தார்கள், அதில் மகனும் ஒருவர்... இன்னொரு ஸ்கூலும் வந்திருந்தார்கள்... ஓரிடத்தில் எல்லோரும் கூடி,  குட்டித் திருவிளாப்போல இருந்தது, இவர்கள் பாட்டுப்பாடி, முடிவில் சன்ராவை  கூப்பிடுங்கள் அவர் வந்தால்தான் சுவிஜ் ஓன் பண்ணலாம் என எனவுன்ஸ் பண்ணினார்கள்... எல்லோரும் சன்ரா... சன்ரா.. எனக் கோஷமிட... அருகிலே பாதுகாப்புக்காக பார்க் பண்ணியிருந்ததுபோல இருந்த ஒரு போலீஸ் ஜீப்பிலிருந்து, சன்ரா ஸ்டைலாக இறங்கி வந்தார்... உடனே சுவிஜ் ஓன் பண்ணியதும்... அனைத்து கிரிஸ்மஸ் அலங்கார லைட்டுகளும் பளாஜ் என மின்னின... பின்பு சன்ரா அனைத்துப் பிள்ளைகளுக்கும் சுவீட்ஸ் கொடுத்தார்.....


எங்கட மலை, பனி (snow) மலையாகிவிட்ட காட்சி:)


ஊசி இணைப்பு:)
இம்முறை, ஊசி இணைப்பு பெருத்து விட்டது, அஜீஸ் பண்ணுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:))


சமீபத்தில்  Restaurant (Hotel + Restaurant)ஒன்றுக்குப் போயிருந்தோம்.... அது 18 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது, ஆனா இப்பவும் என்ன அழகாக இருக்கு பளீச்சென.. அதன் அழகில் மயங்கி படமெடுத்தேன்.. 

இது toilet,  படத்தில் படம் கிளியர் போதாது, நேரிலே இப்போ புதுசாக் கட்டியதுபோலவே இருந்தது..


இது ஹொரிடோ.... கிரிஸ்மஸ் அலங்காரமும்.. செய்யப்பட்டிருக்கு...



======================================================
கூரையில் ஏறிக் கோழி பிடிக்கத் தெரியாதவர்கள்
வானத்தில் ஏறி வைகுண்டம் காண்பினமோ?
======================================================
உஸ் எனக்கு கையும் ஓடல்ல காலும் ஓடல்ல... ஏனெண்டால் இது தொண்ணூத்தி ஒன்பதூஊஊஊஊஊஊஊ:))).. நான் பதிவைச் சொன்னேன்:))

Tuesday 6 December 2011

பூஸ் குட்டிகள் உயகம்:)




என்னை எழுதட்டாம் குழந்தைகள் உலகம் பற்றி... அஞ்சு என்னை அன்பாக அழைத்திருக்கிறா.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... நான் முடியாதுவிட்டால் உடனேயே சொல்லிடுவேன், ஆனால் முடியும் எனச் சொல்லிவிட்டால் சொன்ன வாக்கை காப்பாற்றாமல் விடுவதில்லை... அது என் கொள்கை என்று கூடச் சொல்லலாம். இது சொல்லிட்டேன்.. 


ஆனா அப்போ என்னமோ சரக்கு நிறைய இருப்பதுபோல ஒரு நினைவு:)), இப்போ எழுதலாம் என்றால் எதுவுமே வருகுதில்லை அவ்வ்வ்வ்வ்வ்வ்:))).


இன்னுமொன்று... இத்தலைப்பு குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என்பதா, அல்லது குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதா, அல்லது குழந்தைகளைப் பெற்றோர் எப்படி வளர்க்கிறார்கள் என்பதா.. எனப் புரியவில்லை... அதனால ஏதோ எனக்குத்தெரிந்த பாஷையில... அதாங்க மியாவ்..மியாவ்:))) ஏதோ என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.


குழந்தைப் பருவம் மிக இனிமையானதே கள்ளங்கபடமில்லை எந்தக் கவலையுமில்லாத பருவம்... ஆனால் அதில் வறுமையோ.. அல்லது ஏதும் பிரச்சனையோ இல்லாமல் இருக்க வேண்டும். ஆனா குழந்தையாக இருக்கும்போது விரைவாக வளர்ந்திட வேண்டுமென்றே எக்குழந்தையும் எண்ணுகிறது அது ...இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்பதை பின்னாளில்தான் உணர்வார்கள்:).

ஹாய்... நலமோ? ஏன் ஒருமாதிரிப் பார்க்கிறீங்க:)) நான்தான் குட்டி மியாவ். அம்மா சொன்னவ, குழந்தைகள் பற்றி தான் எழுதுவதைவிட, நான் சொன்னால்தான் நல்லதாம்.. அதுதான் நான் வந்திருக்கிறன்.

நான் ஓரளவுக்கு நல்லாத் தமிழ் கதைப்பன். ஆனா எனக்கு தமிழ், எழுதப் படிக்க வருகுதில்லை, அது சரியான ஹார்ட்டாக இருக்கு, ஆனா எண்ட கிரான் பேரன்ஸ் எல்லாம் சொல்லுவினம், தமிழ் தான் எங்கட பாஷையாம், அதால நாங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டுமென்று,  அம்மா சொல்லித் தருவா, ஆனா ஃபோஸ் பண்ண மாட்டா. நானும் தம்பியும் கொஞ்சம் கொஞ்சம் எழுத்துக்கள் எழுதுவம்.

நாங்கள் வெளிநாட்டில இருக்கிறமையால் எங்களுக்கு இங்கத்தைய பழக்கவழக்கம்தான் தெரியுதாம், ஊர்ப்பழக்கம் தெரியாதென, அப்பா, அம்மா சொல்லித் தருவினம்.

வீட்டுக்கு ஆரும் வந்தால், நாங்கள் எங்கிருந்தாலும் அப்பா கூப்பிட்டு வந்தவைக்கு ஹலோ சொல்லுங்கோ, வந்திருந்து கதையுங்கோ என்பார். அதேபோல, அவை திரும்பிப் போகும்போது இருந்தபடி பாய்(BYE) சொல்லப்படாது எழும்பி வாங்கோ... கிட்ட வந்து பாய் சொல்லுங்கோ என்பார்.

அம்மா சொன்னவ, சில வீடுகளில், வீட்டுக்கு ஆரும் போனாலும் அங்குள்ள பிள்ளைகள் ரீவி பார்த்தபடி, கேம் விளையாடியபடி இருப்பினமாம், கதைகேட்டாலும் காதில விழாதாம்.. அப்படி நீங்கள் பழகப்படாது, பிறகு அப்பா அம்மாவின் தவறுதான் என ஆட்கள் சொல்லுவினமாம். இந்த வயதிலயே எல்லாப் பழக்கத்தையும் பழகிட வேணும், வளர்ந்தால் மாத்துவது கஸ்டமாம்.

எங்கட வீட்டுக்கு, எங்கட ஒரு சொந்தக்கார ஆன்ரியும் அங்கிளும் வந்திருந்தவை. அவர்களுக்கும் எங்கட வயதிலேயே 2 boys. ஆனா அவயளிடம் எந்த ரோயிஸோ அல்லது கேம்சோ இல்லை. எங்கட வீட்டுக்கு வந்திருந்த நேரம் அந்த 2 வது தம்பிக்கு 4 வயதிருக்கும். அவர்கள் எங்கட கேம்ஸை எடுத்து ஆசையாக விளையாடினார்கள்.

அப்போ எங்கட அம்மா கேட்டா, ஏன் இப்போ எல்லாப் பிள்ளைகளிடமும் நிண்டெண்டோ, ஐபொட் டச் இருக்கே, உங்கள் பிள்ளைகளுக்கு ஏன் வாங்கிக் கொடுக்கவில்லை என்று.

அதுக்கு அவர்களின் அம்மா சொன்னா, அவர்கள் எதுவும் கேட்க மாட்டார்கள், அதனால் வாங்கிக் கொடுக்கவில்லை என.

பிறகு அம்மாவும் அப்பாவும் கதைத்ததை நான் கேட்டேன்.. அவர்கள் வேறு நாட்டிலிருந்து எங்கட நாடு பார்க்க வந்தவையாம். நல்ல பெரிய வீடு, கார் எல்லாம் இருக்கு.

ஆனா ஒரு ஒழுங்கான உடுப்பு குழந்தைகளுக்கு போடவில்லை, காலையில் ஊர் பார்க்க வெளிக்கிடும்போது சீரியலை பாலில் கரைத்து வேண்டாம் வேண்டாம் என அழ அழ கலைத்துக் கலைத்து இருவருக்கும் ஊட்டி விட்டுத்தான் புறப்படுவினம். பின்னேரம் களைத்துப் போய் வருவினம், அம்மா கேட்பா சின்னாட்களுக்கு என்ன சாப்பாடு கொடுத்தீங்கள் என்று, அதுக்கு bun  வாங்கிக் கொடுத்தோம், எங்களுக்கு பசிக்கவில்லை, சாப்பிடாமல் வந்திட்டோம் என்பார்கள்.

அப்பிள்ளைகளுக்கு, வெளி உணவு, ஒரு பாஸ்ட் ஃபூட் கொடுப்பதில்லை. அப்படி பணம் மிச்சம் பிடிக்கினம். ஆனா ஊர் சுத்திப் பார்க்கினம், ஏனெனில் அது சகோதரங்களுக்குள் போட்டியாம், நான் இந்த நாடு போனேன், நீ எங்கு போனாய் இப்படி.

ஆனா இதனால பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். எங்களுக்கு இப்ப இப்பத்தான் வெளியில எங்காவது போய்வர விருப்பம், மற்றும்படி கேம்ஸ் விளையாடத்தான் பிடிக்கும். அந்தப் பிள்ளைகளும் அழுவார்கள் வெளியே வரமாட்டோம் வீட்டிலிருக்கப் போகிறோம் என, ஏனெனில் அப்போ அவர்கள் சின்னப்பிள்ளைகள்... ஆனா விடாமல் கூட்டிப் போவினம். அப்பத்தான் அம்மா கதைச்சா, பிள்ளைகளுக்கு எந்த வயசில எது தேவையோ அதைச் செய்யாமல், ஒழுங்கான, சாப்பாடு, உடை, ஹேம்ஸ் எதுவும் இல்லாமல், பெருமைக்காக ஊர்சுற்றி என்ன செய்யப்போகினம் என.

ஊருக்குப் போனால் அந்த மூத்த மகன் வீட்டில் நிற்க முடியாதாம்... வயலின், ஹிட்டார், மியூசிக்.. ரை குவென் டூ, சுவிமிங் என தொடர்ந்து வகுப்பாம்... அப்போ அவருக்கும் ஆசை இருக்கும்தானே வீட்டில நின்று விளையாட, அவர்கள் விடமாட்டினமாம். ஏனெனில் சகோதரரின் பிள்ளை எல்லாத்துக்கும் போகிறாராம், அதற்குப் போட்டியா இவரையும் அனுப்புகிறார்களாம்.

எனக்கு இந்த பருவம் பிடிச்சிருக்கு, ஆனா தம்பி சொல்லுவார் தான் big  ஆக இருப்பதுதான் தனக்கு விருப்பமாம், ஏனெண்டால் எல்லா இடமும் தனியே போய் வரலாமாம்.

பாட்டு உண்மைதானே?:)

எங்கட வகுப்பில என் ஃபிரெண்ட்ஸ் சேர்ந்து தனியே போய் படம் பார்ப்பினம், என்னையும் கேட்டவை, ஆனா எனக்கு தெரியும் வீட்டில விடமாட்டினம் என அதனால நான் வரமாட்டேன் எனச் சொல்லிடுவேன். அம்மாவிடம் கேட்டனான் அம்மா சொன்னவ, ஹை ஸ்கூல் முடிச்ச பிறகு நீங்க தனியே போய் வரலாம் என்று.

எங்களிடம் மணி ஆல்பம் இருக்கு, அதில தாள் காசுகள் சேர்ப்பம், ஸ்பைடர்மான் உண்டியலில் கொயின்ஸ் சேர்ப்பம்... அடிக்கடி அதை எடுத்து நானும் தம்பியும் எண்ணிப் பார்ப்பம்.. அது எங்களுக்கு பிடித்தமான பொழுது போக்கு.

PUSS IN BOOTS படம் வெளிவருது... (http://www.pussinbootsmovie.co.uk/?utm_source=google&utm_medium=ppc&utm_term=puss+in+boots+movie&utm_campaign=Puss+In+Boots+-+Brand+)நாங்கள் பார்க்கப்போறோம்...

நீங்களும் மறக்காமல் பாருங்கோ.. கனடா அமெரிக்காவில வந்திட்டுது, நல்லா இருக்குதாம் அந்தப் பூஸ்ஸ்ஸ்... அம்மாதான் எங்களை விட மும்முரமாக நிற்கிறா, தான் அந்தப்படம் பார்க்கோணுமெண்டு:)).

எனக்கு நித்திரை வருது.... குட்நைட்.


======================================================
ஊசி இணைப்பு:
பெற்ற மனம் பித்து என்பார் - சிலர் 
பிள்ளை மனம் கல்லு என்பார்
பெற்றவரும் அந்நாளில் பிள்ளைகள்தானே - மனம்
பித்தாகிப் போகுமுன்னர் கல்லுகள்தானே?
======================================================


அஞ்சு கேட்டதுக்கு, என்னால பெரிசா எதுவும் எழுத முடியவில்லை, ஏதோ என் கிட்னிக்கு தக்க சுருக்கமாக:)) உளறியிருக்கிறேன் ஏற்றுக்கொள்ளுங்கோ.