நல்வரவு_()_


Showing posts with label இசையும் பூஸும்:). Show all posts
Showing posts with label இசையும் பூஸும்:). Show all posts

Tuesday, 9 October 2012

இது முடிவு.. வைதேகி ஒரு லூஸேதான்:)

பாகம் ஒன்றிலிருந்து தொடர்கிறது... முதலாவது பாகம் படிக்க.. கையை இங்க வைங்க:)
யார் என்னதான் சொன்னாலும், காலம் இப்போ எவ்வளவோ முன்னேறிவிட்டதே என ஊடகங்களில், மீடியாக்களில் புலம்பினாலும், ஒரு பெண்ணுக்கு விலைமதிக்க முடியாத சொத்தெனில் அது அவளுடைய கற்புத்தான். அதைக்கூட நான் விரும்பிய போதெல்லாம் விட்டுத் தந்தாயே வைதேகி. என்னை ஒரு காதலனாக எண்ணாமல், கணவனாக எண்ணி, முழு நம்பிக்கையோடு வாழத் தொடங்கினாய்.

“ஊசி இடம் கொடுத்தால்தானே நூல் நுழைய முடியும் என்பார்கள்” அது உண்மையேதான், அந்த நூலாகிய என்னை, நூறு வீதத்துக்கும் மேலாக நம்பியமையால், நுழைய இடம் கொடுத்தாய். ஆனால் என் இளரத்தம், உன்னை மதிக்கத் தவறினேன். என் நட்புக்கே முன்னுரிமை அளித்தேன். ஆனாலும் எப்பவுமே உன்னில் எந்த மாறுதலையும் நான் கண்டதில்லை, எப்பவும் ஒரே மாதிரித்தான் நீ இருந்தாய்.

எம் மூன்று வருடக் காதலில் ஒருநாள் நீ சொன்னாய், “என் உடம்பில் ஏதோ மாற்றம் தெரிகிறது, எனக்குப் பயமாக இருக்கிறது, வாருங்கள் சேஜ்க்குப் போய் மோதிரம் மாத்திடலாம், பதிவுத் திருமணம் செய்திடலாம் என. அப்ப கூட நண்பர்கள்தான் எனக்குப் பெரிதாகத் தெரிந்தர்கள், திருமணம் பற்றி யோசிக்க முன்னமே, நண்பர்களோடு சேர்ந்து நடாத்திய சண்டையில், தவறுதலாக பொதுமகன் ஒருவர் இறக்க,  குற்றம் செய்யாத என்னில் பழி வந்து விழுந்தது.

நான் “கொலைக் குற்றவாளி” எனும் பெயரில் கைது செய்யப்பட்டு உடனேயே பாதாள சிறையில் அடைக்கப்பட்டேன். அதை அறிந்து நீ, எப்படித் துடித்திருப்பாய் வைதேகி.

னக்குக் காச்சல்க்குணமாக, தடிமன்குணமாக இருக்கு எனச் சொன்னாலே.. பத்துத் தரம் விசாரிப்பாய், சூப் செய்து எடுத்து வந்து ஊட்டி விடுவாய், தைலம் பூசி விடுவாய், அப்படிப்பட்ட நீ, இதை எப்படித் தாங்கியிருப்பாய்?.

எனக்குத் தெரியும் நீ என்னை நம்புவாய். நான் கத்துவேன், கூப்பாடு போடுவேன், கோபிப்பேன், ஆனால் கொலை செய்யுமளவுக்குத் துணிய மாட்டேன், அந்தளவு தூரம் கெட்டவனுமல்ல, அவை எல்லாம் உதட்டிலிருந்து உருவாபவையே தவிர உள்ளத்திலிருந்தல்ல என்பது உனக்கு மட்டும் நன்கு தெரியும். என் பெற்றோரைவிட, சகோதரத்தை விட, என் நண்பர்களையும் காட்டிலும் என்னைப் புரிந்து கொண்டவளும், என் மீது தூய அன்பைக் காட்டியவளும் நீதான். நான்தான் அதைக் காலம் தாழ்த்தி உணர்ந்திருக்கிறேன் வைதேகி.

நான் “பயங்கரக் கொலையாளி” யாம், அதனால் வெளித்தொடர்பேதும் இருக்கப் படாதென, யாரையாவது சந்திப்பதையோ அல்லது கடிதத் தொடர்பு வைப்பதையோ தடுத்து விட்டர்கள் வைதேகி, இறுதியாக அன்று, உன்னோடு ஒரு வசனமாவது பேச விடும்படி ஆசைப்பட்டுக் கெஞ்சிக் கேட்டேன், ஆனால் மறுத்து விட்டார்கள் வைதேகி.

ஆரம்பம் நான் சிறைவைக்கப் பட்டிருந்த ஒரு ஜெயிலில், கடைசியும் முதலுமான உன் ஒரு காதல் மடல் என் கைக்குக் கிடைத்தது, அந்த ஜெயிலர் மிகவும் நல்லவர் என்பதனால் என்னிடம் தந்தார். அதில் நீ எனக்காகக் காத்திருப்பதாகவும், நமக்கு ஒரு மகன் பிறந்திருப்பதாகவும் எழுதியிருந்தாய்.. சாந்து.. சாந்து என, நீ அன்பைக் கொட்டி எழுதியிருந்த மடல் பார்த்து நான் துடித்துப் போய் விட்டேன் வைதேகி... இப்பகூட அதை என்னுடனேயே வைத்திருக்கிறேன்ன்.. அதை தினமும் அடிக்கடி படிப்பதுதான் என் சந்தோசம், பொழுதுபொக்கு, மன அமைதி எல்லாமே.
னக்கு, என் மனைவி எனும் அஸ்தத்தைத் தரமுன்னமே கைது செய்துவிட்டார்களே வைதேகி. இப்போ நம் மகனுக்கு 11 வயதாகியிருக்கும், நன்கு வளர்ந்திருப்பான், உன்னைப்போலவா இல்ல என்னைப்போலவா இருப்பான்?.

எனக்குத் தெரியும், நீ எப்பவுமே என்னைக் குறை கூற மாட்டாய், அடுத்தவர் கூறினாலே சண்டைக்குப் போவாய், அப்படிப்பட்ட நீ, என்னை ஒரு நல்லவராகவே நம் மகனுக்கு ஊட்டி வளர்த்திருப்பாய். நான் நிரபராதி வைதேகி, அது உனக்கு நன்கு தெரியும்.

இந்தப் 12 வருட ஜெயில் வாழ்க்கையில், நீ கொட்டிய அன்பையும் கூறிய தத்துவங்களையும் மட்டுமே இரைமீட்டிக் காலத்தைக் கடத்தி இருக்கிறேன். உன் அன்பு எனக்குக் கிடைத்திராவிட்டால் நான் என்றோ காணாமல் போயிருப்பேன் வைதேகி.

நாளைக்கு நாம் சந்திக்கப் போகிறோம், “நீ என்னைத் திட்டுவாயா வைதேகி?”, இல்லை நிட்சயமாக என்னைத் திட்ட மாட்டாய், உனக்குத் திட்டத் தெரியாது. இறைவன் எனக்காக அனுப்பிய ஒரு தேவதையாகத்தான் பார்க்கிறேன் உன்னை இப்போ.

திருமணமாகாமலே கையில் ஒரு கைக் குழந்தையையும் தந்துவிட்டு வந்தேனே..இந்தப் 12 பாலைவன வருடங்களையும், எப்படி நீ கடந்திருப்பாய்? ஊராரின் வசை மொழிகளை எல்லாம் எப்படித் தாங்கியிருப்பாய்?. நான் முடிவெடுத்திட்டேன் வைதேகி, நாளைமுதல், உனக்காகவும் நம் மகனுக்காகவுமே வாழப் போகிறேன்.

இனி நான் பேச மாட்டேன், உன்னையே பேசவிட்டு, 24 மணி நேரமும் உன் பேச்சையே கேட்டு மகிழப் போகிறேன். நான் இப்பொழுது பழைய “சாந்தன்” அல்ல.. மூலஸ்தானத்திலிருந்து வெளிப்பட்டிருக்கும், நீ நம்பிய, நீ எதிர்பார்த்த உன் “சாந்து” வாகத்தான் வெளியே வரப்போகிறேன்.

இந்த ஜெயில் வாழ்க்கையில் உன்னை நினைக்காத நேரமில்லை, நிறையவே உன்னை மிஸ் பண்ணிவிட்டேன். ஒருவேளை, இப்படி ஒரு பழி என்னில் விழுந்திராவிட்டால், உனை நான் புரிந்து கொள்ளாமலே போயிருப்பேனோ என்னவோ?, இப்பிரிவின் மூலம் உன்னை நான் நிறையவே புரிந்து கொண்டேன்.

என்னை அழைத்துச் செல்ல, நாளைக்கு நீயும் மகனும் வருவதாகச் சொன்னார்கள், அந்த நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன், உனக்கு தூக்குவதுதானே ரொம்பப் பிடிக்கும், நாளை உன்னைப் பார்த்ததும் தூக்கப் போகிறேன், அதை நம் மகன் வெட்கத்தோடு பார்க்கப் போகிறான்.

நிஜமாகவே என்னை விரும்பிய “நீ ஒரு லூஸுதான், எனக்கு மட்டும் நீ லூஸுப் பெண்தான்”

நாளையிண்டைய தீபாவளிதான் நமக்கு “தலைத் தீபாவளி”



அனைத்தும், அதிராவின் “சொந்தக் கிட்னியில்” உருவான கற்பனையே:...
====================================
காதல் என்றால்
தெய்வம் கூட மறுப்பதில்லையே
அது, வேதம் தெரிந்த குருவைக் கூட 
விடுவதில்லையே
சொன்னவர் நம்மட கண்ணதாசன்
==============================================

Sunday, 7 October 2012

வைதேகி ஒரு லூஸு:)

காலையில் பத்திரிகையைக் கம்பிவழியே வீசிவிட்டுப் போகிறார் ஜெயில் காவலர்.எடுத்துத் திறந்தேன் முகப்பிலேயே தலைப்பு.. “பயங்கரக் கொலையாளி எனக் கைது செய்யப்பட்டு, 12 வருடங்களின் பின்பு, நிரபராதி எனத் தீர்பாகி, நாளை விடுதலையாகிறார் சாந்தன்”.

டித்ததுமே என்னால் நம்ப முடியவில்லை, நாளை எனக்கு விடுதலையா? 12 பாலைவன வருடங்களின் பின், நான் என் வைதேகியையும் மகனையும் சந்திக்கப் போகிறேனா?...

என் மனமோ பின்னோக்கிப் பறக்கிறது...நான் சின்னப் பையனாக வயல் வெளியில் சுற்றித் திரிந்தேன், அன்பு பாசம் என்றால் என்னவென எனக்குத் தெரியாது, என் வீட்டிலோ வெளியிலோ ஆருமே என்னில் அன்பு காட்டியதில்லை, ஏதோ உண்டேன், உறங்கினேன், படித்தேன்.... நண்பர்களோடுதான் என் வாழ்க்கை நகர்ந்தது.

நண்பர்களோடு சேர்ந்து நீதி, நியாயம், சட்டம் என ஊரைத் திருத்துவது, இதனால் இவன் உதவாக்கரை, உருப்படாதவன் எனும்  பட்டங்களையே மக்கள் எனக்குச் சூட்டினார்கள்.

ஆனால், என் மனமெனும் மூலஸ்தானத்திலும் ஒரு உள்ளம் இருக்கிறது, அது தூய்மையானது, அன்புக்காக ஏங்குகிறது என்பதை ஆருமே உணர்ந்து கொள்ளவில்லை.

அப்போதுதான் என் வாழ்வில் ஒரு தென்றலாக வைதேகி வந்தாள், அடுத்த தெருவில் வசிப்பவள், 
பெற்றோருக்கு ஒரே பிள்ளை.

எப்படி வைதேகி என்னுள் நீ வந்தாய்?ஒரு பூ மலர்வதை எப்படி பார்க்க முடியாதோ, அப்படித்தான் எமக்குள்ளும் அன்பு மலர்ந்தது. என் மூலஸ்தானம் எனும் அடி மனதில் இருந்து புறப்பட்ட அன்பை மட்டுமே அவள் பார்த்தாள், ஒரு துளி அன்புக்காக ஏங்கிய எனக்கு, குடம் குடமாக அன்பைக் கொட்டினாள். நான் பிறந்து வளர்ந்ததற்கு அப்படி ஒரு அன்பை ஆரிடமும் பெற்றதில்லை. திக்குமுக்காடிப் போனேன்.

நீ நிறையப் பேசுவாய் வைதேகி, உன் அன்பில் கட்டுண்ட நான், அந்த மழையிலிருந்து  நிமிர முடியாமல் மூழ்கிக் கிடந்தேன். பின்பு சில நாட்களில் எனக்கது பழகிவிட்டது, அன்பின் அருமை தெரியாதவனாகிவிட்டேன், நீ அதிகமாகக் காட்டிய அதீத அன்பும் அக்கறையும் எனக்கு மலிவாகிப் போனது.

எனக்கு அப்பொழுது வயது 22. இளமைத் துடிப்பு, இளரத்தம்.. வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தேன். நீ வாழ்க்கை முறைபற்றி அதிகம் சொல்லுவாய், கணவன் மனைவி உறவுபற்றி விலாவாரியாய் விபரிப்பாய், அப்போதெல்லாம் போதும் நிறுத்து என்பேன், உன்னோடு கோபிப்பேன் காரணமே இல்லாமல் திட்டுவேன்.

நீ அனைத்தையும் பொறுத்துக் கொண்டாய், எதிர்த்துப் பேச மாட்டாய், மெளனமாக அழுவாய், ஆனால் அன்பைச் சொரிவதை மட்டும், எப்போதும் நீ நிறுத்தியதில்லை. அது எப்படி வைதேகி, எப்பவுமே உன்னால் ஒரேமாதிரியே இருக்க முடிந்தது?.


எனக்கு நீ ஒரு பாட்டிபோல புத்திமதி சொல்வாய், நண்பர்களை விடு, எனக்கவர்களைப் பிடிக்கவில்லை, படித்து முன்னேறு, உன்னுள் இருக்கும் அதீத பவரைப் படிப்பில் காட்டு என்பாய், நான் தான் அன்று அதனைக் கேட்கத் தவறிவிட்டேன். நட்புத்தான் பெரிசு என்றேன்.  “நீ எனக்கு முக்கியமில்லை, நண்பர்கள்தான் முக்கியம்” என்றுகூடத் திட்டினேனே.. அதைக்கூடப் பொறுத்துக் கொண்டாயே வைதேகி? அது எப்படி உன்னால் முடிந்தது? அப்படி எதைத்தான் என்னிடம் கண்டாய்?

ஒரு சிறிய பிரச்சனையைக் காரணம் காட்டியே, எதிர்த்துச் சண்டை போட்டுப் பிரிந்து செல்லும் காதலிகள் மத்தியில், நீ இப்போ எனக்கு ஒரு சூரியனாகத் தெரிகிறாய். அதை அன்று உணரத் தவறி விட்டேனே.

நான் எது கேட்டாலும் மறுக்காமல் புன்னகையோடு செய்தாய். மொத்தத்தில் நீ என்னை நம்பி, மனதால ஏற்றுக் கொண்டிருந்தாய். அப்போதுதான் நான் உன்னை அடக்கி ஆள/ழ:) த் தொடங்கினேன்.

இப்படித்தான் நீ இருக்க வேண்டும் என்றேன், நீ கதைப்பதைக் குறைத்து, நான் கதைப்பதைக் கூட்டினேன், என் கருத்துக்களையே நீ கேட்கும் சூழலை உருவாக்கினேன். எனக்குக் கிடைக்கும் நேரத்தில் நீயும் என்னோடு வந்து பேசவேண்டும் என்றேன்.

அதெப்படி வைதேகி அத்தனைக்கும் முகம் சுழிக்காமல் வளைந்து கொடுக்க உன்னால் முடிந்தது. பெற்றோர் ஊரார் உன்னைத்தான் திட்டினார்கள், சாந்தனைக் கைக்குள் போட்டுக்கொண்டுவிட்டாய்  என. அதை எல்லாம் எனக்காகப் பொறுத்துக் கொண்டாயே.

என் துன்பங்களிலெல்லாம் பங்கெடுத்தாய், இதமாக தடவிக் கொடுத்தாய். நல்ல காதலியாக, நண்பியாக, நல்ல ஒரு தாயாக மொத்தத்தில் ஒரு மனைவி எப்படி இருக்க வேண்டுமோ அதுக்கும் மேலாக நீ எனக்கு அமைந்திருந்தாய், உனக்காக வாழாமல் எனக்காகவே வாழப் பழகிக் கொண்டாய்.

ஊசிக்குறிப்பு: 
வானத்தில்... கடும் காத்து, மழை காரணமாக, தவிர்க்க முடியாமல்:). .. அடுத்த பாகம் வரை தொடர்ந்து, அத்தோடு நிறைவு பெறும் என்பதை மிகவும் ஏழ்மையாக...:)) ஹையோ இப்பவும் டங்:) ஸ்லிப்பாகுதே:.. தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன்:).
==========================================
நீ ஏமாற்றப் பட்டாலும், பிறரை ஏமாற்றாதே,
உன் வாழ்நாளிலேயே அதன் பலனைக் காண்பாய்..!!!
==========================================

Tuesday, 1 November 2011

இசையும் பூஸும்:) (கதையும்)..



முன்பு ஊரில் இருந்தபோது, இலங்கை வானொலியில் “இசையும் கதையும்” என ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்பாகும், கிழமையில் ஒருநாள். அதைக் கேட்கத் தவறுவதில்லை.


அதன் நினைவாக... அப்போ தொடக்கமே நானும் ஒன்று அப்படி எழுதோணும் என ஆசை. அதைத்தான் என் கற்பனையில் உருவாக்கி ஒரு இனிமையான கற்பனைக் கதையாக இங்கே வடித்திருக்கிறேன்:)).
=====================================================
இது தேசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்.... நேரம் நான்ன்ன்ன்கு மணி, முப்பது நிமிடங்கள்... இசையும் கதையும்.... இன்று தொகுத்து அனுப்பியிருப்பவர்...
வடமாகாணத்திலிருந்து...  “மியாவ்” அவர்கள்:))...

 வழங்குபவர் கே.எஸ்.ரஜாஆஆஆஆஆ(அவரின் ஸ்டைலே ஸ்டைல்தான்.. அதை ஆராலும் அவரைப்போல் உச்சரிக்கவே முடியாது:))..

டொட்ட டொயிங்...............
======================================================


ம்யா... எழும்பம்மா... வெய்யில் அறைக்குள்ள வந்தது கூடத் தெரியாமல் நித்திரை கொள்கிறாய்” என்ற அம்மாவின் குரல் கேட்டு, திடுக்கிட்டு விழிக்கிறேன்...

தொடர்ந்து .... ரம்யா! அப்பா உன்னை சுவாமி அறைக்குள் வரட்டாம்.. முகம் கழுவிக்கொண்டு கெதியாப்போ.. எல்லாம் நல்ல சேதிதான்... என ஒரு புன்னகையோடு சொன்ன அம்மாவைப் பார்த்ததும், சடாரென எழுந்துவிட்டேன், நல்ல சேதி எனில் அது நிட்சயம்... என் திருமணம் சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்கும், என எண்ணியபடி பார்த்ரூமை நோக்கி ஓடுகிறேன்...

பேஸ்ட் போட்டுத் தீட்ட பொறுமை இருக்கவில்லை, போத்தலில் இருந்த  “அண்ணாபற்பொடி” யைத் தொட்டு, ஒரு தடவை பல்துலக்கிக்கொண்டு, கொஞ்சம் தண்ணியால முகத்தையும் கழுவிக்கொண்டு, வெளியே வந்தேன், அம்மம்மா நின்றா, அவவின் சேலைத்தலைப்பை இழுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டு.. சுவாமி அறை நோக்கி ஓடினேன்:).

அங்கே அப்பா கும்பிட்டுக்கொண்டு நின்றவர் என்னைப் பார்த்ததும்...  “வாம்மா... இன்றுதான் மாப்பிள்ளை வீட்டிலிருந்து தகவல் வந்துது, அவர்களுக்கு உன்னையும், நமது குடும்பத்தையும் நன்கு பிடித்துவிட்டதாம், வருகிறமாதம் மாப்பிள்ளை ஊருக்கு வருவாராம், அப்பவே திருமணத்தை வைத்திடலாம் என்றார்கள்”... என்று சொல்லி தீர்க்க சுமங்கலியாக இரம்மா.. எனத் திருநீறு பூசிவிட்டார்.

நேரே என் அறைக்கு ஓடிவந்து கட்டிலில் விழுந்தேன்...


..

இது கனவா அல்லது உண்மையில் நிஜமா...  “மாப்பிள்ளை இவர்தான், பிடிச்சிருக்கோ” எனப் படம் காட்டியபோதே... அவரை நன்கு பிடித்திருந்தது..

இதை உடனே என் ஒரே ஒரு தோழி அதிராவிடம் சொல்லிட வேண்டும், அதிராவும் நானுமாகத்தான் அவரின் படம் பார்த்தோம். அதிரா சொன்னா.. உனக்கேற்ற ஜோடியாகவே சூப்பராக இருக்கிறார் என்று. இப்போ இதைக் கேட்டால், அதிரா மிகவும் சந்தோசப்படுவா. அதிராவுக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. நாம் இருவரும் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களே இல்லை.

இப்போ அதிராவை விட்டு வெளிநாடு போகப்போவதை நினைக்க மனம் கலங்குது.

அவர் பக்கத்து ஊரவர்தான், சின்னவயதில் கோயிலில் சுவாமி காவும்போது பார்த்திருக்கிறேன் அவரை. ஆனால் பல்கலைக்கழகம் முடிந்ததும் நேரே வெளிநாடு போயிருந்தார். மிகவும் நல்லவர் என எல்லோரும் சொல்லியிருந்தார்கள். எப்படிப்பட்டவராயினும், கோபம் வராதவராக, அன்பானவராக இருந்திடவேண்டும் என மனம் வேண்டிக்கொண்டது.

காலையில் எதுவும் சாப்பிட முடியவில்லை எனக்கு. மீண்டும் அம்மா சொன்னா,  “இன்று மாலை 4 மணியுடன் ராகுகாலம் முடியுதாம், அதன்பின்னர் நல்ல நேரமாம், மாப்பிள்ளை உன்னோடு கதைக்கப்போகிறாராம் எங்கேயும் போயிடாமல் ஆயத்தமாக இரு ஃபோன் வரும்” என.

எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை... என்ன கதைப்பது? எப்படிக் கதைப்பது?... எதுவும் புரியவில்லை.. காத்திருந்தேன்.... சரியாக 4.30 க்கு ஃபோன் அலறியது..

எனக்கு கை கால் எல்லாம் வெடவெடத்தது, வியர்த்துக் கொட்டியது... ஒரு சொல்ல முடியாத இன்பப் படபடப்பு.... அப்பா ஃபோனை எடுத்தார் கதைப்பது கேட்குது...

அவரேதான், பின்பு அம்மாவும் நலம் விசாரித்தா... பின்னர் “ரம்யா”... அம்மாவில் குரல் கேட்டுத் திடுக்கிட்டேன்... எனக்கு வார்த்தை வரவில்லை, கோட்லெஸ் ஃபோனைக் கொண்டு வந்து, ரூமிலே தந்துவிட்டு கதவைச் சாத்திவிட்டு அம்மா நகர்கிறா....

பக்கத்தில் ஆராவது நின்றிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என ஒருகணம் எண்ணினேன், மெதுவாக “ஹலோ” என்றேன், நாக்குக் குழைந்தது, கை ஃபோனைப் பிடிக்க முடியாமல் நடுங்கியது.... உச்சிமுதல் உள்ளங்கால் வரை என்னவோ செய்தது.... எதிர்ப்பக்கத்திலிருந்து.. “ஹலோ ரம்யா.... நான் முகில் பேசுகிறேன்”...

அப்படியே அக்குரல்.. காதில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்தது...ஆளைப் பிடித்ததுக்கு மேலாக குரலைப் பிடித்துப் போயிட்டுதெனக்கு.





என்னென்னவோ கேட்டார், சொன்னார்... நீங்கள் சிரிப்பது கேட்க இனிமையாக இருக்கிறது என்றார், எனக்கு எதுவும் பேச வரவில்லை, ஃபோனை வைத்தாயிற்று. அடிக்கடி எடுக்கிறேன், கதைக்கலாம் என்றார்.

இது என்ன பேசவே மாட்டாத பெண்ணோ, இதையெல்லாம் கட்டி நான் என்ன செய்யப்போகிறேன் என நினைத்திருப்பாரோ... நான் வாய் திறந்தால் மூட மாட்டேன் என்பது, வீட்டில் உள்ளோருக்கல்லவா தெரியும்:)).

ஃபோனிலும் மெயிலிலும் நாட்கள் நகர்ந்தன... ஊருக்கு வந்துவிட்டார். நாளை அவர் எங்கள் வீட்டுக்கு முதன் முதலில் வரப்போகிறார்.. அடுத்த கிழமை திருமணம்...  அனைத்துமே ஆரவாரமாக நடந்துகொண்டிருக்கு...

நான் அழகான சந்தனக் கலர் சேலை உடுத்து அவர் வருகைக்காகக் காத்திருக்கிறேன்.. அதோ கார் வந்து எம் கேட்டில் நிற்பது தெரிகிறது... முதலாவதாக அவர்தான் இறங்குகிறார்....

இதுதான் பாட்டு, கேட்டுப் பாருங்கோ

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))), இதில ஒரு பூஸைப் போட்டுத் தந்திருக்கலாம், அதை விட்டுப்போட்டு பச்சை ரோசாவைப்போட்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இருப்பினும் ஊஊஊ ரியூப்பில போட்டமைக்கு டாங்ஸ்ஸூஊஊ:))... விடமாட்டமில்ல:))).

ராஜாத்தி என்ன தேடி வருவாரே ராஜா ராஜா
ரோஜாப்பூ மாலை சூடி தொடுவாரே லேசா லேசா
ராஜாத்தி என்ன தேடி வருவாரே ராஜா ராஜா
ரோஜாப்பூ மாலை சூடி தொடுவாரே லேசா லேசா
முதல் சந்திப்பு..... வாழ்க்கையில் மறக்க முடியாத சந்திப்பு... நிறையப் பேசினோம், உணவுண்டோம்... நாட்கள் கடுகதி வேகத்தில் பறந்தது... திருமணம் முடித்தாயிற்று. 


அவர் எனக்கு கணவராகிட்டார்... என் கழுத்திலே தாலி, அதைத் தொட்டுப் பார்க்கிறேன்... சொல்ல முடியாத ஒரு பூரிப்பு..., நாணம்...,  பெரீய பதவி உயர்வு கிடைத்ததைப் போன்ற பரவசம்...





அனைத்தும் நிறைவாகி... மாப்பிள்ளை வீட்டுக்குப் போக கார் தயாராக சோடனையோடு வாசலில் வந்து நிற்கிறது, அப்பா ஓடிவந்து கட்டியணைத்து அழுகிறார்.... 


வாழ்க்கையில் முதல் தடவையாக அப்பாவின் கண்ணிலே கண்ணீரைப் பார்க்கிறேன்... அம்மா என்னைப் பார்க்காமல் வேறு பக்கம் திரும்பி நிற்கிறா... தங்கை மெளனமாக அழுவது தெரிகிறது... அண்ணன் கண்கள் இரண்டும் சிகப்பாகி காரோடு நிற்கிறார்.... உறவுகள் எல்லோரும் வழியனுப்ப தயாராகி நிற்கிறார்கள்.. நான் அழுகிறேன்... 


புதுமணப் பெண் அழக்கூடாது... சந்தோசமாகப் புறப்பட்டுப் போகவேணும் எனச் சொல்கிறார்கள்.... என்னால் முடியவில்லை தேம்பித் தேம்பி அழுகிறேன்..... காரில் ஏற வரும்போது பார்க்கிறேன், பந்தலின் ஓரத்திலே அதிரா... மீண்டும் ஓடுகிறேன் அதிராவைக் கட்டியணைத்து ஓவென அழுதுவிட்டேன்... 


தன் கண்களைத்துடைத்தபடி, அதிரா... “எதற்காக அழுகிறாய், சந்தோஷமாகப் போய் வா” என வழியனுப்புகிறா... கார் புறப்பட்டுவிட்டது மாப்பிள்ளை வீடு நோக்கி...... 





======================================================
பின் இணைப்பு:

======================================================


குட்டி ஆசை இணைப்பு:
எனக்கு இதை தொடர் பதிவாக்கினால் என்ன என ஒரு குட்டி ஆசை, அதனால இமா, ஸாதிகா அக்கா, ஆசியா, இளைய தளபதி நிரூபன், எங்கட நகைச்சுவை மன்னன் மாயா... ஆகியோரை அன்போடு அழைக்கிறேன், உங்களால முடியும், நேரம் கிடைக்கும்போது, உங்களுக்கு பிடித்த தலைப்பில் எழுதுங்கோ, முடியாவிட்டாலும் ஓக்கை, கோபமில்லை.

இது உங்களுக்கு இல்லை:
கிரிஸ் அங்கிள்... பிளீஸ்ஸ், இமா சொல்லச் சொல்ல ரைப் பண்ணிக்கொடுங்கோ, உங்களுக்கு நான் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும், பைலட் அண்ணனிடம் கொடுத்து அனுப்பி வைக்கிறேன்:))