நல்வரவு_()_


Wednesday 24 December 2014

சன்ரா பிளீஸ் எங்கட வீட்ட வாங்கோ:)


கொஞ்சம் கால தாமதமாகி விட்டது:), இருப்பினும் இன்னும் சன்ராவே வெளிக்கிடேல்லையாம் நோத் போலிலிருந்து.... அவர் வெளிக்கிட்டு ரெயிண்டியரை ஆயத்தம் பண்ணுவதுக்குள் நான் போஸ்ட் போட்டிடுவனே:)...

வீட்டில் விருந்தினர் வருகை அதனால திரும்ப முடியாமல் போச்ச்ச்ச்:).. இருந்தாலும் வாழ்த்துப் போட்டிடோணும்... என கங்கணம் கட்டிப் புறப்பட்டு விட்டேன்.

இம்முறை நான் செய்த சில கிறிஸ்மஸ் குயில் கார்ட்ஸ்ஸ்:).. இதுகூட அஞ்சு செய்யும்படி உறுக்கியமையாலேயே ஆரம்பிச்சு, முடிச்சிட்டேன்ன்..

இதெல்லாம் படம் பார்த்தாலே புரியும்தானே:)





@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஆவ்வ்வ்வ் இதுதான் இம்முறை ஸ்பெஷல்.. இங்கின புளொக்குகளில் நம் சொந்த பந்தம் ஆரும் செய்திராததை அதிரா முதன் முதலா செய்திட்டேன்ன்ன்...
இது ரிஸூ கொலாஸ் (Tissue Collage) இதில் கொலாஸ் என்பது ஃபிரெஞ் வேர்ட் ஆம்ம் அதனால்தான் இப்பூடி உச்சரிக்கப்படுகிறது:).

Tissue பேப்பரை குட்டியாக வெட்டி எடுத்து, பின்பு இப்பூடி குட்டிக் குட்டி உருண்டைகளாக உருட்டி, நம் விருப்பத்துக்கேற்ப ஒட்டி எடுப்பது.


ஊசிக்குறிப்பு:)..

ஆவ்வ்வ்வ் சன்ரா வரப்போறார்ர்:) பிறகு பார்சல் உடைக்கோணும் நேக்கு கையும் ஓடல்ல:) லெக்ஸ்ஸும் ஆடல்ல:).. அதனால மீண்டும் சந்திப்போம்ம்.. பாய் பாய்.. இது வேற பாய்:).

======================================================================
அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ், புதுவருட  நல்வாழ்த்துக்கள்
======================================================================

Sunday 21 December 2014

மாம்பழத்து வண்டு :) (^_^)கேக்(^_^)


வாங்கோ வாங்கோ.. இந்த புதுவருடத்துக்கும்.. கிரிஸ்மஸ்க்கும், நீங்கள் ஏதும் புதுமையா செய்ய வேண்டாமோ?:) அதுதான் இம்முறை சைவப் பிரியர்களுக்காகவே இதைத் தேடி:) கஸ்டப்பட்டுக்:) கண்டுபிடிச்சு:) செய்து:) சாப்பிட்டுப் பார்த்து:) பிறகு இங்கின போட்டிருக்கிறேன்:).

பேஸ்புக்கில் கண்ணில அகர் அகர் தட்டுப் பட்டுதா.. அப்படியே அந்த லிங்கை கிளிக் பண்ணி தேடிப் போனால் இவர் கிடைச்சார்.. சுலபமாக இருக்கே என அகர் அகரோடு சேர்த்து அதே கையோடு இவரையும் செய்து முடித்தேன் சூப்பரா இருந்துது.

சாதாரணமாக கேக் அடிப்பதெனில் சீனியையும் மாஜரினையும் அதிக நேரம் அடிக்க வேணும் எல்லோ. இது அப்படியில்லை, மங்கோ பல்ப் இனுள் சீனியை சேர்த்து, கரையும் வரை அடித்தால் போதும்.. டக்கென கரைந்திடும்.

இந்த லிங்கில் பாருங்கோ.. இதைப் பார்த்துத்தான் செய்தேன்.

http://mystylerecipes.blogspot.co.uk/2012/08/eggless-mango-cake.html

Ingredients
  • All purpose flour - 21/2 cup
  • Fresh Mango puree - 2 cup ( cut mango into cubes and blend it into a smooth paste in a blender without adding water)
  • Salt – a pinch
  • Sugar - 11/2 cup
  • Baking powder - 2 tsp
  • Baking soda - 1 tsp
  • Oil (vegetable ) - 1/4 cup
  • Milk - 1/4 cup(use as required).
இவை அங்கிருக்கும் தேவையான பொருட்கள். ஆனா நான் இதில் உப்பு சேர்க்கவில்லை. இதில் எண்ணெய் போட்டிருக்கு, நான் அதற்குப் பதில் மாஜரினை உருக்கி சேர்த்தேன். பேக்கிங் சோடா மட்டும்தான் இருந்துது.. அதில் 2 தே.கரண்டி சேர்த்தேன்.

முடிவில் பால் சொல்லியிருக்கு. நானும் சேர்த்தேன், ஆனா என் மனதுக்கு படுது பால் சேர்க்காமல் விட்டிருக்கலாம் என. ஏனெனில் கேக்கின் நடுப்பக்கம் கொஞ்சம் கழித்தன்மையாக இருந்துது.

அடுத்து இதில் ஃபிரெஸ் சா செய்து போட்டிருக்கு மாம்பழத்தை, நான் மங்கோ பல்ப் தான் 2 கப் சேர்த்தேன்.


Method
Sift the flour, salt, baking powder & baking soda together. Sieve 2-3 times, keep aside.
Whisk the mango puree and sugar together until sugar is dissolved. Add oil and whisk.
Preheat oven to 350 degrees.
Mix the dry ingredients little by little to the wet ingredients and combine well. Add milk if the batter is very thick.
Transfer the batter into a cake pan greased with butter. Place it in the oven, bake for 35- 40 mins or until tooth pick inserted in the center comes out clean.
Let it cool completely before you make pieces.

செய்முறையில் மாற்றமில்லை.. இப்படியே செய்தேன்.  மிகச் சுலபம். எங்கள் முன்வீட்டு ஸ்கொட்டிஸ் ஆன்ரி அங்கிளுக்கும் கொடுத்தேன், நன்றாக இருக்கென சொன்னார்கள். வீட்டிலும் மளமளவென முடிந்துவிட்டது.

எங்கள் ஆற்றில் தோன்றிய வானவில்.. எப்பூடி அழகு??:)


எங்கள் மலை பனிமலையாகி விட்டது டும் டும் டும்:).
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சொந்த நாற்காலியில் மட்டுமே- ஒருவர் சுகந்திரமாக உட்கார முடியும்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Tuesday 16 December 2014


அதிரா கிச்சின் (*_*) அகர் அகர்


நெடுநாள் கனவு ஒன்று... இன்று சனி மாற்றத்தில் நிறைவேறியது:)... இது பற்றிய என் சொந்தக் கதை:) சோகக் கதை:) படிக்க, கொஞ்சம் இங்கின ஒரு எட்டுப் போட்டு வாங்கோவன்:).. அப்போதான் உங்களுக்கு இதன் முக்கியத்துவம் புரியுமாக்கும்:).

எப்பவோ வாங்கிய அகர் அகர். இப்போ கொஞ்ச நாளாக எப்படியும் செஞ்சிடொணும் எனும் எண்ணத்தை மனதில் எழுப்பிச்சுது.

உடனே நெட்டில் தேடினேன்(ஒவ்வொரு புளொக்காக போய் தேடும் அலுப்பில்:)).. அங்கு முதலாவதாக இருப்பது ஜலீலாக்காவின் குறிப்பு:). இரண்டாவதாக தெரிஞ்சது மகியின் குறிப்பு.

இப்படி பலபல குறிப்புக்கள் பார்த்து மனதில் ஒரு ஐடியாவை வரவச்சுக் கொண்டு களமிறங்கினேன்.

என்னில் ஒரு பழக்கம்.. எச் சமையல் குறிப்பையும் அப்படியே ஈ அடிச்ச கொப்பிபோல பண்ண மாட்டேன். ஐடியாக்களை எடுத்துக் கொண்டு(அடிப்படையை மாற்ற முடியாதுதானே),  மிகுதி என் எண்ணத்துக்கு மாற்றம் செய்வது வழக்கம்.... அதனால சிலசமயம் கோவிந்தா:) ஆன கதையும் உண்டு:)

கஸ்டமாக இருக்குமோ? அகர் அகர் கரையுமோ? கரைய நேரமெடுக்குமோ? பின்பு பதம் சரியாக அமையா விட்டால் இறுகாமல் விட்டிடுமோ.. இப்படி பல பயத்தோடு ஆரம்பித்தேன்ன் ச்ச்சோஒ சிம்பிளாக முடிஞ்சுது.

மகி சொல்லியிருக்கிறா, அகர் அகரை 8 மணித்தியாலம் ஊறவைக்கச் சொல்லி. ஆனா நான் செய்தது நேரடியாக சுடுதண்ணி ஊத்தி அப்படியே அடுப்பில் வைத்து காய்ச்சினேன் கரைந்து விட்டார்:). அது ஒவ்வொரு வகையானதாக இருக்கலாமாக்கும்.

பாதியை டிஸ் இல் ஊற்றி ரெட் கலர் சேர்த்தேன், மிகுதியை அடுப்பில் விட்டபடியே மங்கோ பல்ப் 4 கரண்டி அளவில் சேர்த்துக் காய்ச்சிப் பின்பு இறக்கினேன்.
 இது என் கன்னி மியாவ்:) அவ்வ்வ் டங்கு ஸ்லிப்பாச்ச்ச்சு  “கன்னி அகர் அகர்”:)
 ஊசிக்குறிப்பு:
அடுத்து இளநியில்... பாலில் எல்லாம் செய்து அசத்த உள்ளோம்:). 
அகர் அகர் க்கென்றே facebook இல் ஒரு பேஜ் இருக்கு அதில் ஜலீலாக்காவினுடையதும் இருக்கு, இப்போ லிங் கிடைக்கவில்லை எனக்கு, முடிஞ்சால் ஒருக்கா லிங்கை பின்னூட்டத்தில் போட்டு விடுங்கோ ஜல் அக்கா.

<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>
அழகானவற்றை எல்லாம் நாம் விரும்புவதில்லை - நாம்
விரும்புபவை அழகாக இருக்கின்றன--
இப்படிக்குப் புலாலியூர்ப் பூஸானந்தா:)
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><> 

Monday 1 December 2014

அதிரா வீட்டெலி:)

என்ன தலைப்பே ஒரு மாதிரி இருக்கே எனத்தானே ஓசிக்கிறீங்க?:) பின்ன இது புது விதமான இட்லியாச்சே... :) நீங்கள் இதுவரை எந்தக் கடையிலும், எந்த நாட்டிலும், எந்த வீட்டிலும்:) சாப்பிட்டிராத இட்லி:).. அதிரா மேக் பண்ணிய ஆரியபவான் இட்லி:)..

சரி இப்போ தலைப்புக்கு வருவோம்:).. வீட்டெலி என்பதை.. படு..ஸ்பீட்டாச்:) சொன்னால், என்ன கேட்குது சத்தம்.. :) அதுதான் இது:)

ஓடியாங்கோ.. ஓடியாங்கோ.. சுடச்சுட சட்னியோடு சாப்பிடுங்கோ:) அப்பூடியே காசை என் எக்கவுண்டில போட்டிட்டு:))..

இது நீங்க எல்லோரும் செய்யும் முறையில்தான் மா வைத்தேன்:)..

இலங்கையில், இட்லி - தோசை எனில் நாம் எப்பவும்  நிறைய வெங்காயம், செத்தல் மிளகாய், கறிவேப்பிலை + விரும்பினால் கொஞ்சம் ஷனா டால் சேர்த்து வதக்கி, மாவில் சேர்ப்பது வழக்கம்.

ஆவ்வ்வ்வ் பொயிண்ட்டுக்கு வந்தாச்ச்ச்ச்ச்சு:)... கப்கேக் மேக்கரில் இட்லி செய்வமே என ஓசிச்சேன்...

பிளக்கை ஓன் பண்ணிவிட்டு, மெதுவாக ஒரு Brush ஆல் எண்ணெய் கொஞ்சம் தடவி விட்டேன் குழிகளில்.. பின்பு இட்லி மாவை இப்படி ஊற்றினேன்...  மூடி வேக விட்டேன்..

என்னாச்சோ.. ஏதாச்சோ.. எனக் கை கால் எல்லாம் உதறலெடுக்க:).. வைரவரை வேண்டிக்கொண்டு:) ரிப்பன் கட் பண்ணாமல்:)  ஓபின் பண்ணினேன்:)... கப்கேக் மேக்கரை:).. என்ன ஆச்சரியம்.. சூப்பரா வந்திருந்துதே..  ஒரு தடவைதான் எண்ணெய் பூசி விட்டேன், பின்னர் தேவைப்படவில்லை, ஒவ்வொரு தடவை வேகவும் 5-8 நிமிடங்கள் மட்டுமே எடுத்ததாக நினைவு.

இதோ.. அதிராவின் கிச்சினில், ஐந்தே நிமிடத்தில், சுடச்சுட ரெடியாகி விட்டது.. “சத்துணவு இட்லி”..:) .. ஆனா ஒன்று ஆவியில் அவிக்கும் அதே சுவை வராததுபோல ஒரு ஃபீலிங்:(.. மற்றும்படி நல்ல புசுபுசுப்பாக:) இருந்துது.

நீங்க நம்ப மாட்டீங்க:), சொன்னாலும் சொல்லுவீங்க:) உள்ளே எப்படி வெந்ததோ என:), அதனால அதிராவோ கொக்கோ:).. ச்சும்மா பின்னிப் பெடலெடுத்திட்டேன்ன்.. ஹையோ பிச்சு உள்பக்கம் வெந்திருக்கா எனவும் காட்டியிருக்கிறேன் பாருங்கோ.. எவ்ளோ அழகா வெந்திருக்கு.

ஊசி இணைப்பு:)
இது சமீபத்தில் செய்த கப்கேக்...
¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬
 “விழிகளைக் காயப்படுத்தும் துன்பங்கள் வேண்டும்!!
அப்போதுதான், கண்ணீரைத் துடைக்கும் கைகள்,
 யாருடையதெனத் தெரியும்”
¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬

Tuesday 18 November 2014

சந்தர்ப்பம்!!



தவைத் தட்டாத காரணத்தினால் எத்தனையோ சந்தர்ப்பங்கள் இழக்கப் பட்டிருக்கின்றன... என நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது உண்மைதானே.

அதுபோலத்தான், கடவுளில் நம்பிக்கை வைத்து நன்கு கும்பிடுவோம், ஆனால் ஏதும் ஒரு பிரச்சனை ஏற்பட்டால் ..கடவுள் கூடக் கை விட்டு விட்டாரே எனப் புலம்புவதும் உண்டுதானே. ஆனால் பூஸ் ரேடியோவில் கேட்டேன், கடவுள், நம்பிக்கை வைத்திருக்கும் தம் பக்தர்களைக் கை விடுவதில்லையாம், அவர் நமக்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருவாராம், நாம் தான் அச் சந்தர்ப்பங்களை சரியாகப் பயன் படுத்தாமல் தவற விட்டு விட்டு, கடவுளைக் குறை கூறுகிறோமாம்.

ஒரு குட்டிக் கதை.

ஒருவர் மிக கடவுள் நம்பிக்கையானவர், அவருக்கு கடவுள் தன்னை எப்பவும், கை விட மாட்டார், காப்பாற்றுவார் எனும் நம்பிக்கை இருந்தது.

அப்போ ஒரு நாள், அவர்கள் ஊரில் வெள்ளம் பெருக்கெடுக்கத் தொடங்கி விட்டது. இவரின் வீட்டுக்குள்ளும் வெள்ளம், ஊரெல்லாம் வெள்ளம், அப்போ தோணிகளில் சென்று சென்று மக்களைக் காப்பாற்றினார்கள். அப்போ தோணிக்காரர் ஒருவர் இவரை வந்து ஏறும்படி அழைத்தார், அதுக்கு இவர்..  “இல்லை, எனக்கு யாரின் உதவியும் தேவையில்லை, என்னைக் கடவுள் வந்து காப்பாற்றுவார்” எனக் கூறி, வீட்டின் கூரையில் ஏறி அமர்ந்து கொண்டார்.

பின்பு கூரைகளில் இருப்போரைக் காப்பாற்றவென தீயணைக்கும் படையினர் வந்து அழைத்தனர்.. அதுக்கு இவர் அப்பவும்..  “இல்லை, எனக்கு யாரின் உதவியும் தேவையில்லை, என்னைக் கடவுள் வந்து காப்பாற்றுவார்” 

எனக் கூறிக் கொண்டு , போக மறுத்து விட்டார். பின்னர் வெள்ளப் பெருக்கு இன்னும் அதிகமாகிவிட்டது, இவர் பக்கத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தில் தாவி ஏறிக் கொண்டார், உச்சிக் கொப்பிலே இருந்தார்..

அப்போ ஹெலி வந்து மக்களைக் காப்பாற்றியது, அப்பவும் இவர் ஹெலியில் ஏற மறுத்து..  “இல்லை, எனக்கு யாரின் உதவியும் தேவையில்லை, என்னைக் கடவுள் வந்து காப்பாற்றுவார்” எனக் கூறி போக மறுத்து விட்டார்.

மறுநாள் இன்னும் வெள்ளம் அதிகமாகி, மரத்தை மூடி விட்டது, இவர் வெள்ளத்தோடு அடிபட்டு, இறந்து போய்ச் சொர்க்கத்தில் சேர்ந்தார்...

அப்போ கடவுளைத் திட்டினார்ர்.. “உன்னை நான் எவ்வளவு நம்பினேன், நீ என்னைக் கை விட்டு விட்டாயே” என.

அதுக்கு கடவுள் சொன்னார்...

 “நீ என் மீது வைத்த நம்பிக்கையை வீணடிக்காமல்தான், நான் உனக்கு ஒவ்வொரு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தந்தேன், ஆனால் அதைப் புரிந்து கொள்ளாமல் நீ, நானே நேரில் வருவேன் என தவறாக எதிர்பார்த்து, அத்தனை சந்தர்ப்பங்களையும் இழந்து விட்டாயே, இதுக்கு நான் என்ன செய்வேன்” என்றார்.

இப்படித்தான் நமக்கு அளிக்கப்படும் சந்தர்ப்பங்களை நாம் சரியாகப் பயன்படுத்திட வேண்டும். எதுவும் நேராகக் கிடைக்கும் என எதிர்பார்ப்பது தவறு.
========================================================================
ஸ்ஸ்ஸ்ஸ் மக்களுக்கு “அட்வைஸ்” :) பண்ணிப் பண்ணியே:) நான்  நொந்து நூலாகிடுவன் போல இருக்கே வைரவா:)..
========================================================================
நன்றி காட்டுவது 3 வகைப்படும்:
1.இதயத்தால் உணர்தல்.
2.சொற்களால் தெரிவித்தல்.
3.பதிலுக்கு உதவி செய்தல்.
கரீட்டா?..: இப்படிக்குப் புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்..
===================================================================================================

Monday 10 November 2014

இது எங்கட கார்டின் இல்லை:)

ஸ்ஸ்ஸ் ஏன் முறைக்கிறீங்க எல்லோரும்.. நம்புங்கோ:) இது எங்கட வீட்டுக் கார்டின் இல்லை:).. நம்பமாட்டினமாம் கர்ர்:).. ஹா..ஹா..ஹா..:).

பிரித்தானியாவில் SURREY   எனுமிடத்தில் இருக்கும் கார்டின்.. பெரீஈஈஈஈய பரப்பளவில் அனைத்து மரக்கறிகள், பழங்கள் என எல்லாம் செய்து.. சனங்களை ஓபினாகப் போக விடுவினம். ரிக்கெட் எதுவுமில்லை. நாம் போய் அங்கு பாக் இருக்கும் எடுத்துப் போய் நம் விருப்பத்துக்கு பிடுங்கி பாக்கில் போட்டு எடுத்து வந்து கொடுத்தால் நிறுத்து விலை போடுவினம். நடந்தெல்லாம் போக முடியாது, காரில்தான் போய் ஒவ்வொரு இடமாக பார்க் பண்ணிப் பண்ணிப் பார்க்கோணும்.. அவ்ளோ பெரிசூஊஊஊஊ:)..

பெரிதாக எந்த செக்கியூரிட்டியும் கிடையாது. எம் இஸ்டத்துக்கு பழங்கள் பிடுங்கி முடிந்தவரை சாப்பிடலாம்..

எனக்கு புளொக்கில் போடும் பிளான் இருக்கவில்லை, அதனால அனைத்தையும் படமெடுக்கவில்லை. முன்பும் போயிருக்கிறோம். எத்தனை தடவை போனாலும் அலுக்காது.

பீற்றூட், கரட், ஸ்பினாஜ்(கீரை), பலவகை பீன்ஸ், உருளைக்கிழங்கு, கபேஜ், லீக்ஸ், மறோ, ஹொலிபிளவர்... சோளம்..

பழங்களில்.. ஸ்ரோபெரி, பிளாக்பெரி, கிரான்பெரி... கிட்டத்தட்ட  அனைத்து பெரிகளும்... சில பக்கம் நாம் போகவில்லை களைத்து விட்டோம்ம்..

சூரியகாந்தி கண்டோம்ம்.. அதில் அதிசயம் என்னவெனில் இம்முறைதான் முதன் முதலில் மரூண் கலரில் கண்டோம்...
சரி வாங்கோ கார்டின் பார்க்கலாம்...
----------------------------------------------------------------------------------------------------------------------

இது பீற்றுட்... பெரிய வயல் போல இருந்துது, நம் விருப்பத்துக்கு எதை வேணுமானாலும் பிடுங்கலாம்.. கொடுமை என்னவெனில் நம் மக்கள்ஸ்ஸ்.. ஆடு மாடு உளக்குவது போல அனைத்தையும் உளக்கி, ஓடியாடித்தான் பிடுங்குகிறார்கள்..

இதேபோலத்தான் ஸ்பினாஜ்.. கீரை வயலும்... தேடித் தேடிப் பார்த்து நல்ல குருத்து இலைகளாகப் பிடுங்கி வந்தோம்... கடையில் வாங்கும் ஸ்பினாஜ் சலாட்போல தண்ணி இலையாக இருக்கும்.. இது நல்ல தடிப்பு.. சரியாக பொன்னாங்கண்ணிக் கறிபோல இருந்துது சுவை.. ஒரு மாதமாக பிரிஜ்ஜில் வைத்துச் சமைத்தேன்.. பழுதாகவே இல்லை.


எனக்கு நீண்ட காலமாக ஆசை, பீற்றூட் இலைகள் பிடுங்கி வறை செய்யோணும் என.. அதனால் ஆசை தீர பார்த்துப் பார்த்து, பிடுங்கி வந்தேன். இந்த பீற்றூட் கிழங்குகள்.. நான் எப்பவுமே சாப்பிட்டிராத ருசியாக இருந்தன அவ்ளோ இனிமை. சனங்கள் பிடுங்கிறார்கள்.. பின்பு கிழங்கு கொஞ்சம் சின்னனெனில் எறிந்து போட்டு மற்றதைப் பிடுங்குகிறார்கள்... பார்க்கப் பார்க்க கவலையாக இருந்துது.

இது பீன்ஸ்ஸ், இவ்வளவுதான் இந்த மரத்தின் உயரம்.. சூப்பர் சுவை.

இது பிளாக் பெரி.. இப்போதான் கறுப்புக் கறுப்புக் கொத்து கொத்துப் பழங்கள் சாப்பிட முடியவில்லை ஒரே புளிப்பு(முத்தவில்லை).. அதனால மக்கள் பிடுங்கி பிடுங்கி எறிந்திருக்கிறார்கள்..

இது ராஸ்பெரி... இனிமையோ இனிமை.. கடையில் எனில் ஒரு 15 பழங்களுக்கு மட்டும் 2 பவுண்டுகள் கொடுக்க வேண்டும்.. இது போதுமானவரை சாப்பிட்டோம். அங்கிருந்த ஸ்ரோபெரியின் இனிப்போ சொல்லி வேலையில்லை அப்படி ஒரு இனிப்பு.
 இது மரோ.. பச்சையாக இருக்கும்... கியூகம்பர் போல.. நாம் இதுக்குள் போகவில்லை.. எல்லாமே பெரிய பெரிய வயல்போலத்தான்.
 இவைதான் சூரிய காந்தி.. பெரிதாக்கிப் பாருங்கோ மரூண் கலரிலும் இருக்கிறது.
ஏனைய படங்கள் எடுக்கவில்லை. கபேஜ்/கோவா/முட்டைக்கோஸ்.. எல்லாம்  அப்படியே பிடுங்கி விரிந்திருக்கும் இலைகளை.. அது நல்ல பிஞ்சு இலைகள்தான்.. ஆனா ஓசியில கிடைக்கும்போது அப்படித்தானே...:) உள்ளே இருக்கும் முட்டைபோன்றதை மட்டுமே எடுக்கினம்...

உருளைக்கிழங்கு ஏரியா, ஒரு மெஷின் நிக்குது, அது கொஞ்ச இடத்தைக் கிளறி விடும்... அதில் விருப்பமான கிழங்கை மக்கள் பார்த்து பொறுக்கியபின்.. இன்னும் கொஞ்ச ஏறியாவைக் கிளறி விடும்...

இப்படித்தான் சோளக்காடும்:).. பொத்தியை முறித்து உரிச்சுப் பார்க்கினம் சின்னனெனில் வீசிவிட்டு மற்றதை முறிக்கினம்...

அதைப்பற்றிக் கேட்பார் பார்ப்பாரே இல்லாமல் விட்டிருக்கு... ஆனா இப்படிக் கார்டின் நடத்தி ஆசைக்கு எம்மை எல்லாம் அனுபவிக்க வைக்கும் அவர்கள் வாழ்க...

ஊசிக்குறிப்பு:
புறுணம் என்னவெனில்... நண்பி குடும்பமும் வந்திருந்தார்கள்.. அதுதாங்க நான் ஏற்கனவே இங்கு சொல்லியிருக்கும், என் ஸ்கூல் நண்பி. அப்போ அங்கு இடையிடையே “மணத்தக்காழி” பார்த்தனே.. ச்சும்மா ச்சும்மா ஆங்காங்கு முழைத்திருந்தது.. குட்டிக் குட்டிப் பழங்களோடு... சந்தோசம் தாங்க முடியவில்லை.. உடனே நண்பியைக் கேட்டேன்.. இதுதானே “மணத்தக்காழி” என... உடனே என்னைப் பார்த்துக் கேட்டா... அப்படீன்னா?????????... இதுக்கு மேல என் நிலைமை எப்பூடி இருந்திருக்கும்:) என் வாய்க்கு சட்டர் போட்டிட்டேன்ன்ன்ன்ன்:).. படங்கள் எடுக்காமல் விட்டிட்டேன்ன், இப்போதான் ஃபீல் பண்ணுறேன்.
======================================================================
 “நம்மை மீறி நடக்கும் விஷயங்களை நினைத்துப் ஃபீல் பண்ணி, நம் கொன்றோலில் இருக்கும் விஷயங்களைக் கோட்டை விட்டிடக் கூடாது”
இந்த அளப்பெரிய தத்துவத்தைக் கண்டு பிடித்துக் காவி வந்தவர்: பெருமதிப்புக்குரிய:) புலாலியூர்ப் பூஸானந்தா:)
======================================================================

Wednesday 5 November 2014

ங்ளுக்கும் தெரியுமாக்கும்:)

னைவரும் நலம்தானே?. எல்லோருக்கும் ஆசைதான் +  விருப்பம்தான் பழைய காலம்போல, புளொக் உலகம் கலக்க வேண்டும் எல்லோரும் போட்டிபோட்டு பதிவுகள் இட்டு கலகலப்பாக இருக்கோணும் என.

அஞ்சுவும் என்னை விட்ட பாடில்லை, பழையபடி வாங்கோ அதிரா எழுதுங்கோ அதிரா என.. முக்கால்வாசியும் அஞ்சுவின் ஊக்கத்தாலும்+எனக்கும் எழுத ஆசைதான்.. எப்படியும் தொடரோணும் என... ஆனாலும் என்னமோ பழைய துடிப்பு இல்லாமல் இருக்கு. எல்லாம் ஒரு காலம்தான். ஒவ்வொரு காலத்துக்கு எமக்கு சந்தோசங்கள் ஒவ்வொரு விதமாக கிடைக்குது அவ்வளவே. கிடைத்தது போலவே கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. ஆனா வேறு விதமாகக் கிடைக்கும்.

ஒரு காலத்தில் தமிழ்த் தோட்டம், பின்பு அறுசுவையில் கலக்கினோம், பின்னர் புளொக்.. இனி என்னாகுமோ?? சரி அதை விடுவோம்.

இமாவின்  கை வண்ணம் பார்த்தே, எனக்கு இதைச் செய்யும் ஆர்வமும் ஐடியாவும் எழுந்துது. அதனால இப்பதிவுக்கு றீச்சர்ர்ர் வந்து, கடசி 15 பின்னூட்டமாவது போடோணும்:).. குறைவாகப் போட்டால் அவ கணக்கில ரொம்ப வீக்கு:) என கதை கட்டி விடப்படும்:)[சூப்பரா மாட்டி விட்டிட்டேன்].

என்னிடம் நிறைய இப்படி கழுத்துக்கு, காதுக்கு, கைக்கு என இருக்கு. ஒழுங்கா வச்செடுக்க ஓரிடம் இல்லாமையால் போட்டதையே திரும்ப திரும்ப போட்டுக் கொண்டு போவேன்.

அதனால நெக்லெஸ் ஹங்கர் தேடினேன் நெட்டில்.. அது விலையாகவும் இருந்துது + கொஞ்சம்தான் அதில் கொழுவலாம். ச்சோஒ நானே ஐடியாப் போட்டு இப்படிச் செய்தேன் எங்கட வோல் கபேர்ட்டில்:).

இப்படி முதலில் சுவரில் அடித்தேன்..

இந்த ஆணிகளைப் பாவித்து...

இப்படி அடித்தேன்

எப்பூடி என் கிட்னியா?:) பூஸோ கொக்கோ?:)

இவை சில மேக்கப் பொருட்கள்...

இவை மணிக்கூடுகள்..

இவை மோதிரங்கள்.. ஒன்றில் இருப்பது தோடுகள்..


இவைக்கும் ஒரு ஐடியா வச்சிருக்கிறன் இன்னும் செய்து முடிக்கவில்லை.. இப்போதைக்கு இங்கின இருக்க விட்டிருக்கிறன் இவையை:)
அடாது மழை பெய்தாலும்.. விடாது பதிவு போடப்படும்..:) போட்டிட்டனெல்லோ?:) எங்கிட்டயேவா:).. நாளைக்கும் பதிவு வரும்:)

ஊசிக் குறிப்பு:
--()---------------------()----------------------()----------------------()-----------------------()------------------()--

Friday 29 August 2014

குயின் அம்மம்மாவும் அதிராவும்:)


த்தனை தடவைதான் நான் ஆர் என்பதையும், என்னை நினைவிருக்கோ என்பதனையும் கேட்பது :).. அதனால ஸ்ரெயிட்டா விஷயத்துக்குப் போய்விடுவது நல்லதென முடிவெடுத்திட்டன்:) இது நல்ல முடிவுதானே?:).

ந்த முறை எங்கட குயின் அம்மம்மா என்னை விடவேயில்லை, அவட பூட்டனின்[(இப்பூடி விபரமா எழுதாட்டில் பிறகு அதிராவின் பூட்டனோ என சனம் கதை கட்டிடும்:) நாங்க இதில எல்லாம் வலு உஷார் ஆக்கும்:))]பிறந்தநாள் வந்ததெல்லோ யூலையில அதுக்கு வா வா என ஒற்றைக் கால்ல நிண்டா..:) அதனாலதான் ஒருக்கால் பக்கிங்காம் பலஸ் பக்கம் போய் ... குட்டியின் கையைப் பிடிச்சு நான் தான் கேக் கட் பண்ணி தீத்தியும் விட்டனான்:.. தொட்டிலில் போட்டதும் நான் தானே:).. அப்போ எப்பூடி இதுக்குப் போகாமல் விடுவது?? :).

பக்கிங்காம் பலஸ் முன் பக்கம்...


இதில பாருங்கோ, 1ம் மாடியில இருக்கிற 4 வது கண்ணாடி தெரியுதெல்லோ? அந்த அறைதான் குயின் அம்மம்மான்ர அறை:)

இது பலஸ் க்கு எதிர்ப்பக்கமா இருக்கும் பூந்தோட்டம்:) இதில இருந்துதான் நானும் குயின் அம்மம்மாவும் கேக்கும் சாப்பிட்டு இங்கிலீஸு ரீயும் குடிச்சம்:)

இதில எனக்கு பிடிக்காத விஷயம் ஒண்டிருக்கு.. என்னண்டால்ல்.. சிவப்பு கோட்டும் கறுப்பு ஜீன்ஸ்ஸும்.. கண்ணை மறைக்கும் தொப்பியும் போட்டு ஒருவர் நிற்பது தெரியுதெல்லோ? ஒவ்வொரு வாசலுக்கும் ஒருவராக நிற்கினம்.. கார்ட்.. கொடுமை என்னண்டால்ல்ல் சிலைபோல, கையில் துவக்கை ஏந்தியபடி நிற்கவேண்டும்... கைவலித்தால், ஆமிக்காரர் , போலீஸ் ச்லூட் போடுவதுபோல , காலை தூக்கி அடித்து கையில் இருக்கும் துவக்கை மாற்ற வேண்டும்... 24 மணி நேரமும் இதுதான்... இது மட்டும் எனக்கு பிடிக்கவேயில்லை, அவர்களுக்கு காவல் காக்க இப்படி மனிதர் கஸ்டப்பட வேண்டுமோ???



ஆவ்வ்வ்வ் கிட்ட வந்தாச்சூஊஊஊ... இதுதான் லண்டன் ஐ:).. எதுக்கு கிட்டவோ? வெயிட் சொல்லுவன்தானே? :)

இது ஒரு கண்:).. கிட்ட வந்தாச்சூஉ.. அதாவது தேம்ஸ்ஸ் தெரியுதெல்லோ.. இதுதான் தேம்ஸ்ஸ்ஸ் :)

இது லண்டன் ஐ இலிருந்து தேம்ஸ் நதி.. Big Ben - UK Parliament தெரியுது





இது தேம்ஸ் நதியில், குரூஸில் போனபோது, மேல் தட்டில் இருந்து எடுத்த London Bridge...

========================================================================

ஊசிக் குறிப்பு:
இனிமேல் தினமும் காலை ஆறு மணிக்கு, பிரித்தானிய நேரப்படி:) அதிராவின் புளொக்கில் புதுப் பதிவு வெளிவரும் என்பதனையும்:) அதனை படிக்காமல் மிஸ் பண்ணி, உங்கள் வாழ்க்கையின்.. அதாவது நீங்க பிறந்ததன் பயனை அடையாமல் விட்டிடாதையுங்கோ என்பதனையும், அதுக்கு முன் “சிக்னல்” பல்பசை கொண்டு பல் துலக்கி, குளிர் நீரில் முகம் கழுவி, உங்கள் உங்கள் தெய்வங்களையும் வணங்கிக் கொண்டு.. ஓடிவந்து படிக்கும்படியும் சொல்லிக் கொள்கிறேன்....
இப்படிக்குப் புலாலியூர்ப் பூஸானந்தா:).

=========================================================================
உங்களிடம் இருக்கும் உண்மைகள் எல்லாவற்றையும் நீங்கள் சொல்லவேண்டும் என்றில்லை - ஆனால் நீங்கள் சொல்பவை எல்லாம் உண்மையாக இருக்கட்டும்..
=========================================================================