கதவைத் தட்டாத காரணத்தினால் எத்தனையோ சந்தர்ப்பங்கள் இழக்கப் பட்டிருக்கின்றன... என நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது உண்மைதானே.
அதுபோலத்தான், கடவுளில் நம்பிக்கை வைத்து நன்கு கும்பிடுவோம், ஆனால் ஏதும் ஒரு பிரச்சனை ஏற்பட்டால் ..கடவுள் கூடக் கை விட்டு விட்டாரே எனப் புலம்புவதும் உண்டுதானே. ஆனால் பூஸ் ரேடியோவில் கேட்டேன், கடவுள், நம்பிக்கை வைத்திருக்கும் தம் பக்தர்களைக் கை விடுவதில்லையாம், அவர் நமக்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருவாராம், நாம் தான் அச் சந்தர்ப்பங்களை சரியாகப் பயன் படுத்தாமல் தவற விட்டு விட்டு, கடவுளைக் குறை கூறுகிறோமாம்.
ஒரு குட்டிக் கதை.
ஒருவர் மிக கடவுள் நம்பிக்கையானவர், அவருக்கு கடவுள் தன்னை எப்பவும், கை விட மாட்டார், காப்பாற்றுவார் எனும் நம்பிக்கை இருந்தது.
அப்போ ஒரு நாள், அவர்கள் ஊரில் வெள்ளம் பெருக்கெடுக்கத் தொடங்கி விட்டது. இவரின் வீட்டுக்குள்ளும் வெள்ளம், ஊரெல்லாம் வெள்ளம், அப்போ தோணிகளில் சென்று சென்று மக்களைக் காப்பாற்றினார்கள். அப்போ தோணிக்காரர் ஒருவர் இவரை வந்து ஏறும்படி அழைத்தார், அதுக்கு இவர்.. “இல்லை, எனக்கு யாரின் உதவியும் தேவையில்லை, என்னைக் கடவுள் வந்து காப்பாற்றுவார்” எனக் கூறி, வீட்டின் கூரையில் ஏறி அமர்ந்து கொண்டார்.
பின்பு கூரைகளில் இருப்போரைக் காப்பாற்றவென தீயணைக்கும் படையினர் வந்து அழைத்தனர்.. அதுக்கு இவர் அப்பவும்.. “இல்லை, எனக்கு யாரின் உதவியும் தேவையில்லை, என்னைக் கடவுள் வந்து காப்பாற்றுவார்”
எனக் கூறிக் கொண்டு , போக மறுத்து விட்டார். பின்னர் வெள்ளப் பெருக்கு இன்னும் அதிகமாகிவிட்டது, இவர் பக்கத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தில் தாவி ஏறிக் கொண்டார், உச்சிக் கொப்பிலே இருந்தார்..
அப்போ ஹெலி வந்து மக்களைக் காப்பாற்றியது, அப்பவும் இவர் ஹெலியில் ஏற மறுத்து.. “இல்லை, எனக்கு யாரின் உதவியும் தேவையில்லை, என்னைக் கடவுள் வந்து காப்பாற்றுவார்” எனக் கூறி போக மறுத்து விட்டார்.
மறுநாள் இன்னும் வெள்ளம் அதிகமாகி, மரத்தை மூடி விட்டது, இவர் வெள்ளத்தோடு அடிபட்டு, இறந்து போய்ச் சொர்க்கத்தில் சேர்ந்தார்...
அப்போ கடவுளைத் திட்டினார்ர்.. “உன்னை நான் எவ்வளவு நம்பினேன், நீ என்னைக் கை விட்டு விட்டாயே” என.
அதுக்கு கடவுள் சொன்னார்...
“நீ என் மீது வைத்த நம்பிக்கையை வீணடிக்காமல்தான், நான் உனக்கு ஒவ்வொரு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தந்தேன், ஆனால் அதைப் புரிந்து கொள்ளாமல் நீ, நானே நேரில் வருவேன் என தவறாக எதிர்பார்த்து, அத்தனை சந்தர்ப்பங்களையும் இழந்து விட்டாயே, இதுக்கு நான் என்ன செய்வேன்” என்றார்.
இப்படித்தான் நமக்கு அளிக்கப்படும் சந்தர்ப்பங்களை நாம் சரியாகப் பயன்படுத்திட வேண்டும். எதுவும் நேராகக் கிடைக்கும் என எதிர்பார்ப்பது தவறு.
========================================================================
ஸ்ஸ்ஸ்ஸ் மக்களுக்கு “அட்வைஸ்” :) பண்ணிப் பண்ணியே:) நான் நொந்து நூலாகிடுவன் போல இருக்கே வைரவா:)..
========================================================================
நன்றி காட்டுவது 3 வகைப்படும்:
1.இதயத்தால் உணர்தல்.
2.சொற்களால் தெரிவித்தல்.
3.பதிலுக்கு உதவி செய்தல்.
கரீட்டா?..: இப்படிக்குப் புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்..
===================================================================================================
|
Tweet |
|
|||
:))))) GOOD STORY LIKE ATHIRA :)))))
ReplyDeleteவாங்கோ கோபு அண்ணன் வாங்கோ.. என்னாது நான் நல்ல பிள்ளையா?:) ஆறு வயசில இருந்து.. எனவும் சேர்த்துச் சொல்லோணும் சொல்லிட்டேன்ன்:).
Deleteஒரு குட்டிக் கதை. BUT WITHOUT ANY குட்டி. ????? :)
ReplyDeleteமிக்க நன்றி..
Deleteசந்தர்ப்பம் தத்துவக்கதை உணர்த்தல் அருமை..எல்லா நேரத்திலும் கடவுள் வரமாட்டார் இன்னொரு வடிவில் வருவார் என்று நம்புவோம்.
ReplyDeleteவாங்கோ நேசன் வாங்கோ.. அப்போ நீங்க நம்புறீங்க?.. குட்..:).
Deleteநன்றி காட்டுதல் இவ்வளவும் தானா !!!!
ReplyDeleteஹா..ஹா.. அது கால்ரன் யூனிவசிட்டி (கனடா) எஞ்சினியறிங் படிக்கும் மாணவர்கள்.. நம் தமிழ்ப் பிள்ளைகள், கனடாவில் பிறந்து வளர்வோர்.. அழகாக, நிறைய விஷயங்களோடு, “தமிழில்” ஒரு புத்தகம் வெளியிட்டிருந்தினம்.. போன நேரம் எடுத்து வந்தேன்.. அதில் இருந்ததைத்தான் சும்மா போட்டேன்ன்..:)
Deleteஇதுக்கு நான் என்ன செய்வேன்” என்றார்.// நான் இன்னும் சிந்திக்க வேண்டும் பூசாரே மலைக்கு வழிகேட்டு.
ReplyDeleteநானே இன்னும் காசிக்கு வழி கண்டுபிடிக்கேல்லை:) இதென்ன புதுசா மலைக்கு வழி கேட்கப்போறீங்க நேசன்:).. ஹா..ஹா.. மிக்க நன்றி .
Deleteஇது அநியாயம் அக்கிரமம் ..நான் வெளிநடப்பு செய்கிறேன் ,,என்னால் டைஜஸ்ட் செய்ய முடியல்லை
ReplyDeleteஏனென்றால் ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் கூட என் கண்ணுக்கு தெரியலை why ????????
வாங்க அஞ்சு வாங்க... ஹா..ஹா.. கண்ணாடியைக் கழட்டி வச்சுப்போட்டு வாசிச்சால் எப்பூடித் தெரியும்:)).. ஏதோ என் நல்ல காலம்:) எல்லாம் சனி மாற்றம்தான்:).. வருகைக்கு மியாவும் நன்றி.
Deleteஊசிக்குறிப்பு :)
பிழை பிடிக்கிறதென வெளிக்கிட்டு கதையைக் கோட்டை விட்டிட்டீங்களே:)..
கரீட்டு...!
ReplyDeleteவாங்கோ தனபாலன் அண்ணன்.. ஓம் கரீட்டுத்தான்ன்:).. மிக்க நன்றி.
Deleteசந்தர்ப்பமும் நன்றியும் அருமை..!
ReplyDeleteவாங்கோ ராஜேஸ்வரி அக்கா.. மியாவும் நன்றி.
Deleteநல்ல கருத்துள்ள கதை.
ReplyDeleteவாங்கோ ஆசியா மிக்க நன்றி.
Deleteநல்ல அறிவுரை(அட்வைஸ்) கதை. நன்றிகள்.(2)
ReplyDeleteவாங்கோ அம்முலு.. என்னாது? அட்வைஸ் ஆஆஆஆஆஆஆஆ?:) [எனக்குப் பிடிக்காது கடவுளே இதை ஒராள்:) படிச்சுடப்பூடா]... அதென்னது ரெண்டு நன்றி நோஓஓஓஓஓஓஒ 4 நன்றி சொல்லுங்கோ:).. மியாவும் நன்றி.
Deleteசின்ன வயசுல கேள்விப்பட்டது. அப்போதிருந்தே சந்தர்ப்பம் விதி என்றெல்லாம் கதைக்கும் போது எப்போதுமே இந்தக் கதைதான் ஞாபகத்துக்கு வரும்...... மீண்டும் ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி பூஸ் :P
ReplyDeleteவாங்கோ ஆத்மா வாங்கோ.. எங்கே காணாமல் போயிட்டீங்களோ என நினைச்சேன்..
Deleteஎன்னாது சின்ன வயசில படிச்சதா??:) அப்போ இப்ப பெரியாளாகிட்டீங்கபோல... நான் இப்பத்தான் சுவீட் 16:)[ ஹையோ இதை எல்லோருக்கும் அடிக்கடி சொல்லி நினைவு படுத்தி வைக்க வேண்டிக்கிடக்கே:)]...
நன்றி காட்டுவது 3 வகைப்படும்://///////// கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ReplyDeleteநான்கு வகைப்படும்
கண்களாலும் நன்றி சொல்லலாம்
ஜெப்புடீஈஈஈ
என்னாது கண்களாலாஆஆஆஆஆஅ?? இது தேவையா???? ஏன் எபோலா பரப்பப் போறீங்களோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
Deleteதூர இருப்போர் எனில் எப்பூடிக் கண்களால் சொல்லுவீங்க??.. ஜெப்பூடி என் கிட்னி?:)...
ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி ஆத்மா.
அருமை! அருமை!
ReplyDeleteஅதிரா பதிந்த அருள்வரும் மார்க்கம்
மதியோடு காணுதல் மாண்பு!
தொடருங்கோ அதிரா!..:)
ஆவ்வ்வ்வ் வாங்கோ இளமதி வாங்கோ... இம்முறை கவிதையால் பதில்... ச்சுப்பர்ர்.. ஆனா சத்தியமா நேக்குப் புரியுதில்ல:)...
Deleteதொடர்றதா? அவ்வ்வ்வ் கடவுளையோ?:) அதுக்குத்தான் காசிக்குப் போக வெளிக்கிடுறேன்ன்ன்ன்:)..
மியாவும் நன்றி ...
குறள்ல ஒரு தவறு இருக்கறமாதிரி இருக்கு. 'மதியோடு காணுதல் மாண்பு' சரியா? 'மதியோடு காணல் மாண்பு'தானே தளை சரியா வரும்?
Deleteஆவ்வ்வ்வ்வ் கண்ணில விளக்கெண்ணெய் 2017 லயே விட்டாச்சோ நெ.தமிழனுக்கு ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:))
Deleteஅதாவது வாழைப்பழத்தை உரித்து நம் வாயிலும் போட்டுவிடுவார் கடவுள் என எதிர்பார்த்து சோம்பேறியாக இருக்கக்கூடாது என்று சொல்கின்றீங்க அதிரா, கரேஏஏஏஏஏக்ட்? ;)
ReplyDeleteநல்ல பதிவு!
வாங்கோ மகி வாங்கோ..
Deleteஹா..ஹா..ஹா.. மகியா? யெலோ ஃபிளவரா?:) கற்பூரம்ம்ம்ம்ம்:).. கரீட்டூஊஊஊஊ:).. மியாவும் நன்றி மகி.
she is my sister :)
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)
Deleteஅந்தக் கதை... இரண்டு தடவை ஸ்கூலில் நடித்துக் காட்டியிருக்கிறேன். ;) ஃப்ரெண்ட் தன் வகுப்புக்காக என்னை பெஞ்ச் மேலே ஏற்றிவிட்டார். ;)
ReplyDeleteஇன்று நான் நியூஸிலாந்தில் இருப்பதற்கு இந்தக் கதையும் ஒரு முக்கிய காரணம். முதலில் கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம், ஒவ்வொரு தடவை ஒரு காரணம் சொல்லித் தவிர்த்து வந்தேன். கடைசியாக, வெளிக்கிடலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டு இருந்த சமயம்... மறு நாள் காலை எசெம்ப்ளியில் அதிபர் இந்தக் கதையைச் சொல்லவும்... ஒரு வேளை இது எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற கடைசி சந்தர்ப்பமாக இருந்தால்! என்று தோன்றியது. கிளம்பி விட்டோம்.
ஆவ்வ்வ் வாங்கோ.. இ... வாவ்வ்வ் ஸ்பெல்லிங் மிசுரேக்கூஊஊஊஊஊஊ வாங்கோ புனிதா வாங்கோ...
Deleteபார்த்தீங்களோ.. உண்மைதான்.. ஆனா இன்னொன்றும் கூடவே இருக்கு.. இதோடு விதியும் நல்லதா அமையும்போதுதான் எல்லாம் நன்மையா நடக்கும்.. சிலது கவிட்டும் விட்டுவிடும்.. ஹையோ... ஒரே கொயப்பமா இருக்கும் சில நேரம்...
மியாவும் நன்றி புனிதா.
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !! கதை சூப்பர் நான் கோட்டை விடல்லை ..நம்மில் நிறைய பேர் இப்படிதான் அதிஸ் ஒரு முடிவை எடுக்க ஆயிரம் முறை யோசிப்பாங்க .. முடிவெடுப்பாங்க அதுக்குள்ளே ஒரு யுகம் முடிஞ்சிடும் .எல்லாம் நம்கிட்டதான் இருக்கு
ReplyDeleteதெரிந்த ஒரு பாட்டி இப்படி கடவுளைதான் நம்புவேன்னு அடம் பிடிச்சார் கடவுள் டாக்டர் உருவில் வருவார் என்பதை மறந்துவிட்டார் கடைசில :(
உண்மையே ஃபிஸ்ஸ்.. இந்த மூட நம்பிக்கை இன்னமும் மக்களிடையே இருக்கு... என்ன செய்வது பட்டுத்தான் திருந்துவாங்க..
Deleteஆமாம் பூசார் யாருக்கு கேக் காண்டில் எல்லாம் கஷ்டப்பட்டு தூக்கி நிக்கறாங்க :)
ReplyDeleteஆவ்வ்வ்வ் இங்கின எதுக்கு இப்போ புளொக் ஆடுதென ஓசிச்சேன்ன்:).. மணந்து பிடிச்சிட்டினம்:) மீ இங்கிருக்கிறேன் என:).. கேக் கண்டிலா? அது டிஷம்பர் முதல் கிழமை:) இங்கின ஒராளுக்கு வருகுதாம்ம்ம்ம்ம்:) என்ன வருகுதாம் எனக் கேட்கப்பூடா கர்ர்ர்ர்ர்:).
Deleteபல சந்தர்ப்பங்களை இப்படித்தான் நழுவவிடுகிறோம்... சூசூசூசூசூப்ப்ப்பர்ர்ர்ர்ர்ர் ஸ்டோரி
ReplyDeleteஅடடா வாங்கோ விச்சு மாஸ்டர்... ஸ்கூல்ல பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுங்கோ:)..
Deleteஊசிக்குறிப்பு:
மறக்காமல், அதிரா சொன்ன கதை எனவும் சொலிடுங்க:))
கண்டிப்பா சொல்றேன். இது என்னோட பிரெண்ட் ஆதிரா சொன்ன கதை என்று அழுத்தம் திருத்தமா சொல்லிட்டு கதை சொல்லிறேன். நன்றி ஆதிரா..
Deleteஸ்ஸ்ஸ் ஆதிரா இல்லை கர்ர்:) அதிரா வாக்கும்.. பிள்ளைகளுக்கு சொல்லும்போது உச்சரிப்பு முக்கியம்:)
Deleteஆமா..! நீங்கள் நலம்தானே. பேசி நீண்டநாள் ஆகிப்போச்சு.
ReplyDeleteஆமா அனைவரும் நலமேதான் விச்சு... ஓம்மோம் நீண்ட நாள் ஆகிப்போச்சு.. நீங்க வதனப் புத்தகத்தால வெளியேறிட்டீங்க பிறகு இங்குதானே பார்த்தேன் போன தடவை..
Deleteமியாவும் நன்றி விச்சு.
ஆமாம். சில வேலைப்பளுவின் காரணமாக அதிலிருந்து வெளியேறிவிட்டேன். உங்களை ரொம்பவும் மிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பண்றேன். எல்லோரும் நலம்.
Deleteஅருமையான பதிவு.
ReplyDeleteபல சந்தர்ப்பங்களை இழந்து விட்டு பின் வேதனை படுவோம்.
கதை, எடுத்துக் காட்டு எல்லாம் அருமை.
வாங்கோ கோமதி அக்கா.. மிக்க நன்றி.
Deleteஅன்புடையீர்! வணக்கம்!
ReplyDeleteஇந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (12/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
வலைச்சர இணைப்பு:
http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE
அன்புடையீர்! வணக்கம்!
ReplyDeleteஇந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (12/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
வலைச்சர இணைப்பு:
http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE
மிக்க நன்றி..
Deleteஅன்புடையீர்,
ReplyDeleteவணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://blogintamil.blogspot.in/2015/06/12.html
மிக்க நன்றி.
Deleteஇந்தக் கதைதான் முன்னமேயே படித்திருக்கிறேன். சமீப காலங்களில்கூட வாட்சப்பில் சுத்திக்கிட்டிருக்குது.
ReplyDeleteபாருங்க... இளமதி அவர்களுக்கு அப்போவே ஒரு பின்னூட்டம் போட்டிருக்கேன் (2017ல)
//பாருங்க... இளமதி அவர்களுக்கு அப்போவே ஒரு பின்னூட்டம் போட்டிருக்கேன் (2017ல)//
Deleteஸ்வாமீ...... நீர் சாதாரண ஆசாமியே அல்ல. ‘சந்திர மண்டலத்தில்’ மூன்றாம் பிறை போல ஜொலித்துக்கொண்டு இருக்க வேண்டியவர். :)
வாங்கோ நெ.தமிழன் வாங்கோ.. ஓ அப்போ நீங்க கதை படிச்சிட்டீங்க:) இருப்பினும் முதல்ல சொல்லோணும்.. வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அதிரா சூப்பர் கதை எங்கு கிடைச்சது உங்களுக்கு.... இப்பூடி:)) ஹா ஹா ஹா மியாவும் நன்றி.
Deleteகோபு அண்ணன் சந்திர மண்டலத்தில் நிலவு தேயாது தெரியுமோ?:) ஆவ்வ்வ்வ்வ்வ்வ் எப்பூடி அதிராவின் கிட்னி?:) ஹா ஹா ஹா... அப்போ முன்றாம் பிறை எப்பூடி ஜொலிக்கும்:))
//கோபு அண்ணன் சந்திர மண்டலத்தில் நிலவு தேயாது தெரியுமோ?:) //
Deleteஅது அங்கு தேய்ந்தால் என்ன .... தேயாட்டி என்ன; எனக்கு அதுபற்றிய விஷயம் முக்கியமல்ல. அவரை எப்படியாவது சந்திரமண்டலத்திற்கு அனுப்பி விடணும். நீல் ஆம்ஸ்ட்ராங் போல அவர் சரித்திரத்தில் இடம் பெறணும். அவர் அங்கு போனால் அதனை எப்படியும் நன்கு தேய்த்து விடுவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
//ஆவ்வ்வ்வ்வ்வ்வ் எப்பூடி அதிராவின் கிட்னி?:) ஹா ஹா ஹா... அப்போ முன்றாம் பிறை எப்பூடி ஜொலிக்கும்:))//
அதிராவின் கிட்னி சூப்பரோ சூப்பர். அதனைக் கொடுத்தால் பல லக்ஷங்கள் கிடைக்குமாம். ஸ்வாமீ சொல்வது போல எனக்குக் காதில் விழுகிறது. ஜாக்கிரதை அதிரா ! அது பத்திரமாக இருக்கட்டும். :))
//‘சந்திர மண்டலத்தில்’ மூன்றாம் பிறை போல ஜொலித்துக்கொண்டு// - கோபு சார்... இளமதி என்ற பெயருக்கு உங்க விளக்கம் நல்லாத்தான் இருக்கு. ஆனா அவங்களை இணையத்துலயே காணோமே....
Deleteநல்லவேளை என்னைச் சொல்லும்போது, 'மூன்றாம் பிறை' என்று சொன்னீங்க (நல்ல எண்ணத்துலன்னு நினைக்கறேன்) நல்லவேளை 'நாலாம் பிறை' என்று சொல்லலை. அப்புறம் என்னைப் பார்க்கிறவங்க 'நாய் படாத பாடு' படவேண்டியிருக்கும். ஹாஹா
கோபு சார்... நேற்று ரிஷபன் ஜி அவர்களின் கதைக்கு உங்க பின்னூட்டம் காணோமே.. நிச்சயம் நீங்களும் கடன் கொடுத்து 'அல்லோலகல்லோகப் பட்டிருப்பீங்களே'.
Deleteஜீவி சார் சொன்னதற்கு ஒரு கதையும் அங்க எழுதியிருந்தேனே... உங்களைக் காணலியே...
@கோபு அண்ணன்
Delete///அவரை எப்படியாவது சந்திரமண்டலத்திற்கு அனுப்பி விடணும்.//
நெ.தமிழன் பூமியில இருப்பதால இப்போ உங்களுக்கு என்ன இடைஞ்சல் எனக் கேட்கிறேன்:)).. உங்களுக்கு குண்டா:) சுவீட்ஸ் வாங்கித்தந்தவரெல்லோ பிறகென்ன பிரச்சனை?:) ஹா ஹா ஹா...
நான் தான் என் கிட்னியைக் கழட்டி ஐஸ் பெட்டியில வச்சு லொக்கரில பூட்டிப் போட்டேனே:) பிக்கோஸ்ஸ்ஸ் இந்த வலையுலகில ஆரையும் நம்ப முடியுதில்ல:)))... பேசிக்கொண்டிருக்கும்போதே களவெடுத்திட்டு ஓடிட்டால்ல்ல்ல்ல் மீ என்ன பண்ணுவேன்?:).. ஹா ஜ்ஹா ஹா மிக்க நன்றி கோபு அண்ணன்.. அப்பப்ப ஜம்ப் ஆவதற்கு:).
நெல்லைத்தமிழன்.. இளமதியை நான் “யங்மூன்” என்றும் அழைப்பேனாக்கும் ஹா ஹா ஹா:)..
Deleteநிலவைக்கூடத் தேய்க்கும் சக்தி உங்களிடம் இருக்காம் எனச் சொல்றார் கோபு அண்ணன்:). ஒருவேளை நேரில் பார்த்ததும் மிரட்டியிருப்பீங்களோ கோபு அண்ணனை ஹா ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:))
உண்மையிலேயே கதை நல்ல படிப்பினை.
ReplyDeleteசிறுவயதில் நற்கருணை வீரனில் இது போன்ற கதைகள் படித்திருக்கிறேன்!
வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. உண்மைதான் இக்கதையை நான் அடிக்கடி நினைச்சுக் கொள்வேன்.
Deleteஎனக்கு கிடைப்பது பெரும்பாலும் ரேடியோக்கள் ஸ்பீச் களில்தான். மிக்க நன்றி.