நல்வரவு_()_


Wednesday 29 February 2012

அஞ்சுவின் அம்மா, ஆண்டவரிடத்தில் போய்ச் சேர்ந்துவிட்டா:(


Angelin (kaagidha pookal) இன் அம்மா..
மீப சில காலமாக சுகயீனமாக இருந்த அஞ்சுவின் அம்மா, ஆண்டவர் அடியை இன்று நாடிவிட்டா... அவவின் மறைவை அறிவிக்கவும், அவவின் ஆத்ம சாந்திக்காக நாம் எல்லோரும் பிரார்த்திக்கவும், இப்பதிவை வெளியிடுகிறேன்.

எதுவும் நம் கையில் இல்லை, இன்றிருப்போர் எல்லோருமே நாளைக்கு இருக்கப்போவதில்லை... எனக்கு எப்படி சொல்வது, என்ன ஆறுதல் சொல்வதெனத் தெரியவில்லை.. அஞ்சுவுக்கும் அவரின் தங்கைக்கும்.. மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவன், மன அமைதியையும், ஆறுதலையும் தைரியத்தையும் கொடுக்க வேண்டுமென வேண்டுகிறோம்.

அஞ்சு!!! நலமே போய் வாங்கோ, தைரியமாக இருங்கோ.. உங்களுக்காக நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.


அஞ்சுவின் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவரை வேண்டுகிறோம்.

Friday 24 February 2012

பாரம்மா பறவைக்கும் பாசங்கள்..இருக்கின்றது..

து எனக்கு, சில மாதங்களின் முன்பு கொசு மெயிலுக்கு வந்திருந்தது, பார்த்ததும், மீண்டும் பார்க்க முடியாமல் அப்படியே விட்டுவிட்டேன்... இன்று போடலாமே, விலங்குகளின் பாசத்தை மனிதர்களும் உணர்வோமே, ஏதோ நாம் மட்டும்தான் அன்பில், பாசத்தில் ஓங்கி உயர்ந்து நிற்கிறோம் என எண்ணிக் கொண்டிருக்கிறோம், விலங்குகளின், பறவைகளின் பாசத்தை உணர்ந்தாலும், அதை நாம் பெரிது படுத்துவதில்லை, ஆனால் இதைப் பார்த்ததும், இதயம் கரைந்துவிடுகிறது... நீங்களும் பாருங்கோ....

காதல் ஜோடியாகப் பறந்தபோது, பெண் பறவையைக் கார் அடித்துவிட்டது..., நடக்க முடியாமல், கரையை நோக்கி தவழ முயற்சிக்கிறது.... 
விதி செய்த சதியோ அத்தான்...

அதைப் பார்த்த ஆண் பறவை, ஓடிச்சென்று, உணவெடுத்து வந்து ஊட்டுகின்றது..
பாரம்மா பறவைக்கும் பாசங்கள் இருக்கின்றது, பறந்தோடி இரைதேடி, துணைக்குக் கொடுக்கின்றது....



மீண்டும் ஓடிச்சென்று உணவெடுத்து வந்த வேளை, பெண்பறவை பிரிந்துவிட்டது... திகைத்து நிற்கிறது ஆண்பறவை..
கடவுளே இது கனவாகிடக்கூடாதா.... கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில்.....நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி.. அது நீதானம்மா....



அழுதழுது, பெண்ணைத் தட்டி எழுப்ப முயல்கின்றது....
தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவர் இல்லை.... என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்ன்..


சத்தமாக அழுது கூப்பிடுகின்றது...
ஆலம் விழுதுகள்போல் உறவு ஆயிரம் வந்தும் என்ன, வேரென நீயிருந்தாய், அதில்நான் வீழ்ந்து விடாதிருந்தேன்:(((


எதுவுமே பண்ண முடியாமல் உரக்க ஓலமிடுகின்றது தனித்துவிட்ட ஆண் பறவை:(((
இறைவா... உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு... எனக்கென இருந்தது ஒரு விளக்கு... இதனுடந்தானா உன் வழக்கு:(((( 




பின் இணைப்பு:
Millions of people cried after seeing these photos in  America,  Europe, Australia , and even India . The photographer sold these pictures for a nominal fee to the most famous newspaper in France .  All copies of that edition were sold out on the day these pictures were published.

Saturday 11 February 2012

வளர்ப்பு மகள்!

ஒரு நிஜத்தை, கதைபோல வடித்திருக்கிறேன்.

சுப்பையாவுக்கும் காமாட்சிக்கும் திருமணமாகி அடுத்த மாதமே, காமாட்சி கர்ப்பமானார். அனைவரும் சந்தோச எல்லையில் அலைபுரண்ட நேரம் அடுத்த மாதமே சிசுக் கலைந்துவிட்டது.

ஆழ்ந்த சோகத்துக்கு ஆளானார்கள். அதை சந்தோசப்படுத்த மீண்டும் காமாட்சி தாய்மை எய்தினா. ஆனா அதுவும் அப்படியே 2,3 மாதங்களில் கலைந்துவிட்டது.

இது இப்படியே நிகழ்ந்தது.. ஒன்றல்ல இரண்டல்ல 6 தடவைகள் காமாட்சி இந்த அவஸ்தைக்கு ஆளானார். 7ம் தடவையாக தாய்மை அடைந்தபோது... அச்சிசு நல்லபடி வளர்ந்து,  சரியான காலத்தில் பிறந்தது, ஆனால் கொடுமை என்னவெனில் பிறந்த உடனேயே அதுவும் கண்களை மூடிக்கொண்டது.

ஒரு குழந்தை ஆரம்பக் கருவிலேயே மறைவதைக் காட்டிலும், குழந்தையாகிப் பிறந்து மறையும்போது, ஒரு தாய் உடலாலும், மனதாலும் அனுபவிக்கும் வேதனையைச் சொல்லமுடியாதுதானே...  அப்படி ஒரு வேதனைக்கு காமாட்சி ஆளானார்.

இக்கொடுமையைப் பார்க்க முடியாமல், யாருக்கும் சொல்லாமல், சுப்பையா, ஆஸ்பத்திரிக்குப் போய், டாக்டரோடு கதைத்து, அன்று பிறந்த ஒரு பெண்குழந்தையைத் தத்தாக எடுத்து வந்துவிட்டார் வீட்டுக்கு.

வீட்டிலே காமாட்சியைத் தவிர ஏனையோர் எதிர்ப்புக் காட்டினர். அதை எல்லாம் சமாளித்து, குழந்தைக்கு “மீனா” எனப் பெயர்சூட்டி வளர்க்கத் தொடங்கினர்.

மீனா, வீட்டுக்கு வந்த ராசியோ என்னவோ... அடுத்தடுத்து 5 குழந்தைகளை, அழகாகப் பெற்றெடுத்தார் காமாட்சி. மீனா, தன் தம்பி தங்கைகளோடு மிகவும் அன்பாகப் பழகினார்... பெற்றோர் மீது அதிக பாசம் காட்டினார். ஓரளவு வயதில் மீனாவுக்கும், அவர் தத்தெடுத்த குழந்தை என்பது ஊரவர்களால் தெரிய வந்தது. ஆனால் தாய் தந்தையர் காட்டும் பாசத்தாலும் அரவணைப்பாலும், மீனாவுக்கு அதெல்லாம் பெரிய விசயமாகப் படவில்லை.

தம்பி தங்கையரும் மீனாவோ,டு அக்கா அக்கா என அதிக பாசம் காட்டினர். உண்மையின்படி சொல்லப்போனால், அக்குடும்பத்தில் அதிக பாசமும் அன்பும் இருந்தது, ஏனைய 5 பிள்ளைகளைவிட மீனாவிடம்தான் அதிகம்.

திருமண வயதை அடைந்ததும், மூத்த மகளான மீனாவுக்கு, மாப்பிள்ளை தேட நினைத்து, பிறத்தியிலே திருமணம் முடித்துக் கொடுத்தால், ஏதும் பிரச்சனை கொடுத்து, மீனாவுக்கு மனம் புண்படும்படி நடந்துவிடுவார்களோ எனும் பயத்தில், சொந்தத்திலேயே திருமணம் முடித்துக் கொடுத்தனர்.

மீனாவும் திருமணம் முடித்து அழகாக 5 குழந்தைகளைப் பெற்றெடுத்தா. மீனாவின் தம்பிமார் வெளிநாடு போனார்கள், குடும்பத்தோடு மீனாவையும் வெளிநாட்டுக்கு அழைத்தார்கள். வெளிநாட்டிலும் மீனா குடும்பத்துக்கு பக்கமாகவே பெற்றோரும் இருந்தனர். பெற்றோர் தம் குறைநிறைகளைச் சொல்லி மனம் ஆறுவது மீனாவிடம்தான்.

மீனாவின் தந்தை சுகயீனமுற்று, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவருக்கு டாக்டர்களால் சொல்லப்பட்டது, இன்றிலிருந்து சில நாட்களுக்குள் அவர் போய்விடலாம்.... எப்பவும் மரணம் சம்பவிக்கலாம் என. எல்லாப் பிள்ளைகளும் போய்ப் பார்த்து வந்தனர்.

மீனாவுக்கு அன்று என்னவோ மனம் சமாதானம் அடையவில்லை, இன்று நான் அப்பாவோடுதான் இங்கு தங்கியிருக்கப்போகிறேன், நீங்கள் போய் வாருங்கள் என அனைவரையும் அனுப்பிவிட்டா.

இரவு எல்லோரும் போய்விட்டனர். தந்தை மீனாவோடு கதைத்துக் கொண்டுதானிருந்தார். சில மணியில்.... திடீரென சத்தம் சந்தடி இல்லாமல் இறைவனடி சேர்ந்துவிட்டார்.

அப்போ கடசி நேரத்திலும் அவரோடு கூட இருந்தது , வளர்ப்பு மகளான மீனாதான். இதிலிருந்து என்ன தெரிகிறது, பெற்றால்தான் பிள்ளை என்றில்லை, குழந்தை குழந்தைதான், அதைத் தத்தெடுப்பதில் யாரும் தயங்கக்கூடாது.

குட்டி இணைப்பு:

“நல்லதே நடக்குமென நம்புங்கள் - ஆனால்
மிக மோசமான நிலைமையை எதிர்கொள்ளவும் தயாராக இருங்கள்”

“வாழ்க்கை நிலையில்லாதது, இன்ப துன்பங்கள் நிறைந்தது
எதையும் முழுமையாக அனுபவிக்க முடியாதது”..
=================^^^^^^^^^^^^^^=================

Monday 6 February 2012

எம் கண்ணீர் அஞ்சலிகள் மாயா!!!

கடந்த 31 ஜனவரி அன்று எம்மை விட்டுப் பிரிந்திட்ட மாயாவுக்காக , கண்ணீர் அஞ்சலியும் அவரின் ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனைகளும்...

முற்றத்தில் நிற்கும் முருக்க மரம் சாயாமல், வேலியில் நின்ற வேப்பமரம் சாய்ந்ததென்ன மாயா??????.. இளவயதில்.. இப்படி ஒரு எழுத்தோ உங்களுக்கு? 





மறக்க முடியவில்லை மாயா, எதனையுமே மறக்க முடியவில்லை, நீங்க வலைப்பூ ஆரம்பித்து பல மாதங்கள் ஆனாலும் என்பக்கம் வந்து கதைக்கத் தொடங்கியது சில மாதங்களே.. ஆனா அந்த சில மாதங்களுக்குள் நீங்க கதைத்தது என்னவோ பலவருடம் பழகியவர்போலவே..

சொல்வார்களே..  “அணையப்போகிற விளக்கு சுடர்விட்டு எரியும்” என, அப்படித்தான் இப்போ நினைக்க வைக்கிறது மாயா... நாம் எல்லோரும் சேர்ந்து உங்களோடு போட்டிபோட்டுப் பின்னூட்டம் போட்டதை மறக்க முடியாமல் இருக்கு மாயா...

நகைச்சுவையாகவும், எதுக்கும் கோபிக்காமலும் பதில் போடும் திறமை எல்லோருக்குமே வராது, அது மாயாவிடம் நிறைய இருந்தது.

எங்கட மகனின் ஸ்கூலில் ஒரு சுட்டியான குட்டிப்பிள்ளை படிக்கிறா.. அவவுக்கு “மாயா” எனப் பெயர்.... அவவைப் பார்க்கும்போதெல்லாம் மாயாவின் நினைவே எப்பவும் வரும், இப்போ கூடவே கவலையும் வருகிறது..

======================================================
என்னதான் கவலைகளை மனதில் புதைத்தாலும், இன்னொருவரிடம் சொல்லி அழும்போதுதான், 
அதன் பாரம் குறைகிறது... இது உண்மை
=======================================================

மாயாவுக்காக நான், நகைச்சுவைக்காகப் போட்ட பாடலும் தலைப்பும்.. அதில் மாயாவின் பின்னூட்டங்களும்..

  “மாயாவும் லேடி முதலையும்”


மாயா, மூவரின் தூக்குத் தண்டனையைக் காப்பாற்ற கண்டிப்பாகப் படியுங்கள்.. எனும் தலைப்புப் போட்டு அனைவரையும் அழைத்தார், இன்று மாயாவை எம்மால் காப்பாற்ற முடியாமல் போய் விட்டதே......

==============================================================

இவை மாயா என் பக்கத்தில் போட்ட, பல பின்னூட்டங்களில் சில(படங்களோடு), அப்போது சிரித்துச் சிரித்து ரசித்தோம், ஆனா இப்போ படிக்க அழுகைதான் வருகிறது...





     மாய உலகம் said...
    

என்பக்கம் விசித்திரம் நிறைந்த பல பல்புக்களை வாங்கியிருக்கிறது... புதுமையான பல நண்பர்களை கண்டிருக்கிறது... இந்த வலைத்தளம் ஒன்றும் விசித்திரமானவை அல்ல.. வழக்காட வந்திருக்கும் நானும் புதுமையானவன் அல்ல... பதிவுலகிலே சர்வ சாதாரணமாக நுழைந்த பதிவர்களில் நானும் ஒருவன்.. கமேண்டுகளை போட்டுக்குவித்தேன்..

பழைய பதிவர்களின் கமேண்ட்ஸ்களை மிந்தி... டாப் கமேண்டடேர்ஸில் முன்னிலையில் வந்தேன்.. உடான்ஸ் மியாவை மிரள வைத்தேன்.. குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்... ஆனால் நீங்கள் எதிர்பார்க்கபோகிறீர்கள் நான் இதையெல்லாம் மறுக்கபோகிறேன் என்று .. இல்லை .. நிச்சயமாக இல்லை... ஜிம்மி வேடம் போட்டேன்.. ஏன்? பதிவர்கள் கமேண்டே போட கூடாது என்பதற்காகவா.. இல்லை... 2009லிருந்தே பதிவு எழுதும் மியாவ்.. இன்னும் 100 பதிவுகள் எழுதி முடிக்கவில்லையே... அவர் சீக்கிரம் நிறைய பதிவுகளையும், பதிவுலகம் நண்பர்களையும் பெற வேண்டும் என்பதற்காக, காரசாரமாக எங்கும் பதிவுகள் நிறைந்த பதிவுலகில் எல்லாரும் இயல்பாக வீட்டிற்கு வந்து சந்தோசமாக பேசி ஜாலியாக ரிலாக்ஸ் செய்வதறகாக மியாவ் போடும் பூஸ்ஸ்ஸ்ஸ் பதிவுகளைப் பார்த்து சந்தோசப்படுவதற்காக..

 உனக்கேன் இவ்வளவு அக்கரை.. பதிவுலகில் யாருக்குமே இல்லாத அக்கரை என்று நீங்கள் கேட்பீர்கள்.. நானே பாதிக்கப்பட்டேன் நேரடியாக பாதிக்கப்பட்டேன்.. எனது சுயநலத்திலே பொது நலத்திலும் கலந்திருக்கிறது.. ஆம்... 60,80 கமேண்ட்ஸ்க்கு மேல் தாண்டாத எனது மாய உலகில் 100 க்கு மேல் தாண்ட வைத்த பூஸ்ஸார் என்பக்கத்திலும் கமேண்ட்ஸ்களை குவித்து.. அனைவரையும் ரிலாக்ஸ் பண்ண வேண்டும் என்ற காரணத்திற்காக.. நான் கூவம் நதியில் நீந்தி பார்த்ததில்லை.. ஆனால் தேம்ஸ் நதியில் குதித்து ரெஸ்ட் எடுத்திருக்கிறேன்....

கேளுங்கள் என் ஸ்டோரியை தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்...அவ்வ்வ்வ்.... என் பேரோ மாயா.. மாயா ஜால பெயர்... நான் மட்டும் நினைத்திருந்தால் இந்நேரம் பலபதிவுகளில் பல கமேண்ட்ஸ்களை போட்டு பலபேரிடம் டப்பா என்ற பெயரை வாங்கி குவித்திருக்கலாம்..செய்யவில்லை.. அதைத்தான் விரும்புகிறதா இந்த நீதிமன்றம்... மொக்கை பதிவர் என்ற பெயரால் ஓடினேன்.... ஆறுதலுக்காக சமூக விழிப்புணர்வு பதிவர் என்ற பெயரால் ஓடினேன்... காமெடி பதிவர் என்ற பெயரோடு ஓடினேன்.. லண்டனின் எல்லை வரை ஓடினேன்..அங்கு தேம்ஸ் நதி இருந்ததால் குதித்துவிட்டேன்ன்ன்ன்ன் தொபுக்கடீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

-----------------------------






  மாய உலகம் said...


என்றா கணக்குபுள்ள சொம்பு எங்கடா... ''அதான் காலையிலே முடிஞ்சுதே ஐயா'' அட.. வெத்தலை போட்ருக்கேன் புலிச்சுன்னு துப்பிட்டு.. தீர்ப்ப சொல்லவேணாமாக்கும்...
"நாட்டாமை தீர்ப்பா மாத்தி சொல்லு.." 

என்றாவன் இன்னும் தீர்ப்பே சொல்லுல.. அதுக்குள்ள முந்துறது... புடிச்சாலும் புளியங்கொம்பா புடிக்கனும்னு சொல்லுவாங்க... "யாருங்க?"... யார்றாவான் இடையிடையே கிராஸ் கொஷ்டின் கேட்டுக்கிட்டு.. அது சொன்னது அது அது...ம்ம்ம் பாரதியார்.. "என்னது?" இவன் வேற கொழப்பிக்கிட்டு... அது அது..பாரதியாரா... பாரதிராஜாவா... ம்ம்ம் சரி.. அதனால புளியமர நாயகன் ... டைரி எழுதுவதை சிறிது நேரம் நிறுத்திவைத்துவிட்டு.. தேள், பூரான், பாம்பு, நண்டு வாக்குலி எல்லாத்தையும் மொத்தமாக காண்ட்ராக்ட் கொடுத்துவிட்டு... என் பக்கத்தை நோக்கி வருமாறு அன்பு அண்ணன் அவர்களை அன்போடு அழைக்கிறோம்....

 பதிவுலக நாயகன் நாற்று நிரூபன் அவர்களையும் மற்றும் நண்பர் சிவா அவர்கள், ... டீச்சர் அவர்கள்... சமையல் மற்றும் கிராஃப்ட் செய்துகொண்டிருக்கும் மதிப்புமிக்க ஏஞ்சலின் ,மகி , ஸாதிகா அவர்கள்..ஜலீலா அக்கா அவர்கள் அனைவரையும் என்பக்கம் அன்போடு அழைக்கிறது... அனைவரும் வாரீர் வாரீர் வாரீர்... பூஸாரின் கண்ணீரால் தேம்ஸ் நதி வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுவதாலும்... முதலையை கொண்ணுபோட்டதாலும்.. மாயாவை சுவேத நதிக்கு ஒத்திவைக்கிறேன்... இது தாண்டா தீர்ப்பு .. "என்னது நாட்டாமை தெலுங்கு பட டைட்டிலா.." யார்ராவன் இடைஇடையே பல்ப குடுக்குறது.. சண்முகம் உடுரா போட்டும் வண்டிய... டேன் டேண்டேன் டேண்டேன்... ஆஆஆஆஆஆஆ நாட்டாமை பாதம் பட்டா தேம்ஸ் நதி குளிருமுங்...
------------------------------------------------------------

 மாய உலகம் said...


அப்பாடா ஜெய்யண்ணே... தவத்தை கலைக்க ரொம்ப பாடுபட்டுட்டேன்ன்ன்ன்ன்ன்.... யாராவது புளியமரத்துக்கு ஒரு ஏணிய சாத்துங்களேன்.... அண்ணேன் வந்து விட்டார்... தாரை தப்பட்டையள்ளாம் கிளியட்டும்... அடி தூள் கிளப்புங்கள்.... பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா.. மத்தாப்பு சேலைக்கட்டி ஆடட்டுமா....

ஜெய்யண்ணேன் அப்படி பாக்குறாரூஊஊஊஊ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

--------------------------------------------------------------

 மாய உலகம் said...


நண்பர்களுடைய அன்பை பார்க்கும்போது ஆனந்த கண்ணீர் வருது... அவ்வ்வ்வ்வ்வ் (இது அன்பு அவ்வ்வ்வ்).
-----------------------------------------------------------------------

இந்தப் பின்னூட்டம் படிக்கமுடியாமல் கண்ணீர் மறைக்கிறது கண்களை..
மாய உலகம் said...
athira said... 98
மாயாஆஆஆ.... 2012 டிஷம்பர் 23 எல்லோருக்கும் நல்லகாலம் பிறக்குதாம், இதை என் நண்பி ஒருவரிடம் சொன்னேன், அவ சொன்னா, இல்ல இல்ல 12.12.12 தானே உலகம் அழியப்போகுதெனக் கதைக்கிறாங்க என்று அவ்வ்வ்வ்வ்வ்:))))).//

என்ன....12.12.12 க்கு உலகம் அழிய போகுதா... நான் இன்னும்ம்ம்ம் உலகத்தையே சுத்தி பாக்கல.. முதலை ரெக்கைய கட்டு உலகம் அழியறதுக்கு முன்னால ஒரு ரவுண்டு பறந்துட்டு வந்துருவோம் ரெக்கை கட்டி பறக்கதடா.. தேம்ஸ்நதி முதலைஸ்ஸ்ஸ்... 12.12.12 உலகம் அழிஞ்சாலும் ஒரே ஒரு உலகம் மட்டும் நண்பர்களுக்காக காத்திருக்கும்.. அதிலெல்லாம் அல்லாரும் சுத்தி பாக்கலாம்.. அந்த உலகம் தான் மாய உலகம்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

******************************************************************************
மாயாவின் ஆத்ம சாந்திக்காகவும் அவரின் அம்மா, சகோதரர் ரமேஸ் மற்றும் குடும்பத்தோரின் மன அமைதிக்காகவும் நாம் எல்லோரும் கடவுளைப் பிரார்த்திக்கிறோம்.


எப்படிக் கூச்சல் போட்டாலும், போன மாயாவை திரும்ப அழைத்துவர முடியாது, ஆனா தனிப் பிரார்த்தனையைவிட, கூட்டுப் பிரார்த்தனைக்குப் பவர் அதிகம் என்பார்கள், எனவே எம் எல்லோரினதும் பிரார்த்தனையின்மூலம், அவரின் குடும்பத்துக்கு, மன அமைதியையும், எதையும் தாங்கும் மனப் பக்குவத்தையும் ஆண்டவன் கொடுத்து அருள் புரியட்டும்.
******************************************************************************

இறப்பின் பின்பு நடப்பதை, ஒவ்வொரு மதங்களும் ஒவ்வொரு விதமாகச் சொல்கின்றன, ஆனா எது எப்படியாயினும்...
கவிஞர் கண்ணதாசனின் வரிகளே நினைவுக்கு வருகின்றன...
“இறப்பின் பின் வருவது யாதெனக் கேட்டேன், இறந்து பாரென இறைவன் பணித்தான்”
******************************************************************************

 “மனித வாழ்வில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவெனில், அன்பு நிறைந்தவர்களை, எங்கே, எப்போ, எதுக்காகச் சந்திக்கப்போகிறோம் என்பதும், எங்கே, எப்போ, எதுக்காகப் பிரியப்போகிறோம் என்பதும், முன்கூட்டியே தெரியாமல் இருப்பதுதான்” .....கண்ண..தாசன்.

******************************************************************************
பெப்ரவரி மாதம் 7ம் திகதி(நாளை), மாயாவுக்காக பதிவுலக உறவுகள் அனைவரும் துக்கம் அனுஸ்டிப்போம்... விரும்பினால், எமக்குள்ளிருக்கும் மாயாவின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு, அஞ்சலி செலுத்துவோம்..
மேலதிக விபரங்களுக்கு... 
நிரூபனின் தளம்-----> வாருங்கள்
******************************************************************************

Friday 3 February 2012

என்னாச்சு மாயா?:(((


மாயாவுக்கு என்னாச்சு? என்னால் நம்ப முடியவில்லை, சிலகாலம் வந்து பலகாலம் பழகியவர்போல பழகிவிட்டு... திடீரென என்ன நடந்தது.

வலையுலகில் கிடைத்த உண்மையான நட்பு நீங்கள் மியாவ், கடசிவரை இதே நட்போடு இருக்கவேண்டும் என்றெல்லாம் பல மெயில்கள் அனுப்பினார், எனக்கு என் பக்கத்தில் இருக்கும் பூஸ் தந்தார், படம் போடும் வசதி, மற்றும் நான் கேட்காமலேயே எத்தனையோ வசதிகள், அதுவும் என் மெயில் ஐடிகூட இல்லாமல் அனுப்பிக்கொண்டிருந்தார், பின்புதான் நான் என் ஐடி கொடுத்தேன்...

என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை... எனக்கு என்னாச்சுதெனத் தெரியாது.. M.R  இன் பின்னூட்டத்தையும்..




M.R said...
அன்பு தோழி அதிரா ...

தாங்கள் மேலே சொல்லி உள்ள கவிதை வரிகள் உண்மை ஆகிவிட்டதே

மாய உலகம் ராஜேஷ் என்னை வருத்ததில் தள்ளி விட்டு என்னை விட்டு சென்று விட்டான் தோழி ,மன வருத்தமாக உள்ளது

இந்த தகவலை சொல்ல வந்தேன் மேலே உள்ள கவிதை வரிகள் படிக்கும் பொழுது அவன் மறைந்தது மனதில் பாரமாக .....

மேற்கொண்டு எழுத வரவில்லை கண்களில் கண்ணீர் ,பிறகு வருகிறேன் தோழி..

................................................................................................................
இதில் பாருங்கள்...

தகவல் சொன்னமைக்கு மிக்க நன்றி ரமேஸ், இல்லையெனில் நான் மெயிலில் மாயாவைத் தேடிக்கொண்டே இருந்திருப்பேன்:((.



ரமேஸின் தளத்தில் இருக்கும் தலைப்பையும் நம்பித்தான் இப்பதிவைப் போடுகிறேன்... மாயாவின் படமும் என் பக்கத்தில் பின்னூட்டத்தில் இருக்கு, ஆனா எடுத்து இதில் போடப் பயமாக இருக்கு... நடந்ததெதுவுமே எனக்கு தெரியவில்லை... எனக்கு மட்டுமில்லை, சில நாட்கள் பழகினாலும் அனைவர் மனதிலும் இடம்பிடித்த நல்ல உள்ளம் கொண்ட தம்பி மாயா. அவரின் பிறந்ததினம் இம்மாதம் 27ம் திகதி வருகிறது எனச் சொன்னார்.


அவரை சிலகாலமாகக் காணவில்லை, காணாமல் போனாலும்,  நெட்டுக்கு வந்தால் நிட்சயம் உங்கள் பக்கம் வருவேன் மெயில் அனுப்புவேன் என்றார்.


நான் அவர் பார்க்காதுபோனாலும் பறவாயில்லை 27ம் திகதி தலைப்புப் போட்டு வாழ்த்த இருந்தேன்.


2 நாட்களுக்கு முன்புகூட ஒரு மெயில் அனுப்பினேன்... மாயாவைக் காணவில்லை என்னாச்சு மாயா? என. எவ்வளவு பிசியாக இருப்பினும், தேடினால் பதில் போடுகிறவர்... இப்போ கிட்டத்தட்ட ஒரு மாதமாக மெயில் இல்லை.


வலை உலகில் பழகியோரோடு சேர்ந்து அழவேண்டும்போல இதயம் அடைக்கிறது.


நம்பமுடியவில்லை... மாயாவின் ஆத்மா எனச் சொல்லி சமாதானம் கேட்க முடியாமல் இருக்கு.... அதற்குள் மாயா மறைந்து ஆத்மாவா?.. முடியவில்லை நண்பர்களே... வாய் திறக்கக்கூட முடியவில்லை..