நல்வரவு_()_


Showing posts with label நகைச்சுவை.. Show all posts
Showing posts with label நகைச்சுவை.. Show all posts

Thursday, 21 May 2020

பிஞ்சுப் பூஸானந்தாவின்🙇 சொற்பொழிவுகள்:)

காந்தித்தாத்தா என்ன சொன்னார்?  “கண்டது கற்கப் பண்டிதராவாய்” எனச் சொன்னாரெல்லோ?:)).. சரி காந்தியா சொன்னார் என ஜண்டைக்கு வரக்குடா கர்ர்ர்ர்:)).. அதனாலதான்  “அதிராவின் ஆச்சிரமம் வந்தால் ஞானியாவீர்கள்”:).. நான் கண்டது கேட்டதெல்லாம் இங்கு எழுதியிருக்கிறேனாக்கும்:)).. எப்பூடியாவது உங்களில் பாதிப் பேரையாவது ஞானி ஆக்கினால்தான், இந்த உசிறூஊஊஉ இந்த உடம்பை விட்டு வெளியேறுமாக்கும்:)) ஹா ஹா ஹா:)..
))))))))))))))))))))))))))))))))))))))))))_()_(((((((((((((((((((((((((((((((((((((((((((

சிலர் புலம்புவார்கள் “என்னடா வாழ்க்கை இது” எதைச் செஞ்சாலும் தோல்வியாகவே வருதே என.., அப்பூடி எல்லாம் சொல்லப்பிடாதாக்கும்.... வாழ்க்கையில் வெற்றி கிடைக்க வேண்டுமெனில்..

1. நம் உறவுகளை, நட்புக்களை மேன்படுத்தியும், நல்ல விதமாகவும் பேண வேண்டும்... இவை இருந்தால்தான் வெற்றி சாத்தியம்

2. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், கை விடாமல், பயப்படாமல், றிஸ்க் எடுக்கப் பழகுங்கள்.. றிஸ்க் எடுத்தால் தான், வெற்றி அல்லது தோல்வியாவது கிடைக்கும்.

3.தோல்வி கிடைத்தால் துவண்டிடக்கூடாது, ஏனெனில் வெற்றி கிடைப்பதே தோல்வியின் மூலம்தான்:)..

“தோற்றவர் புன்னகைத்தால், வெற்றி பெற்றவர், வெற்றியின் சுவையை இழந்து விடுகிறார்”... பு.பூஸானந்தா:)
))))))))))))))))))))))))))))))))))))))))))_()_(((((((((((((((((((((((((((((((((((((((((((

வாழ்க்கையில் எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை, அதனால என்னிடம் என்ன இல்லை, அடுத்தவர்களிடம் அது இருக்கிறதே என எண்ணி ஏங்காமல், என்னிடம் என்னவெல்லாம் இருக்கிறது என்பதைப் பட்டியல் போட்டுப் பாருங்கள், மனம் நிறைவடையும்.
))))))))))))))))))))))))))))))))))))))))))_()_(((((((((((((((((((((((((((((((((((((((((((

மழையின் வீழ்ச்சி என்பது முடிவு அல்லவே, அந்த முடிவில இருந்து மீண்டும் தண்ணி ஆவியாகி மேலே போய், மீண்டும் மழையாகிறது, இலைகள் உதிர்வது மீண்டும் மரம் தளைக்கவே..

அருவியின் முடிவில்தானே ஆறு ஆரம்பமாகிறது, எனவே நமக்குத் தேவை தன்னம்பிக்கை, எப்பவும் தன்னம்பிக்கையைக் கைவிட்டிடக்கூடாது.
))))))))))))))))))))))))))))))))))))))))))_()_(((((((((((((((((((((((((((((((((((((((((((
இப்படங்களுக்கு, இன்ஸ்டண்ட் ஆகக் கவித.. கவித..:) சொல்ல முடியுமோ?:).. அல்லது ஆறுதலாகக் கூட உங்கள் போஸ்ட்டில் போடலாம்..

================================
இந்த ஆட்டுக் குட்டியையும், குழந்தையையும் பார்த்ததும் எனக்கு பழைய நினைவு வந்தது, எங்கள் வீட்டில் சில ஆடுகள் இருந்தன, அதில் ஒன்றுக்கு கண் சரியாகத் தெரியாது, ஆனால் வெளியே போய்ப் புல் மேய்ந்து வரும், அது ஒரு குட்டி போட்டது, அக்குட்டியை வளர்த்தது நான் தான்:)).. எந்நேரமும் ஒரு பக்கத் தோளில், குழந்தையைத்தூக்குவது போல தூக்கித் திரிவேன்:)).
))))))))))))))))))))))))))))))))))))))))))_()_(((((((((((((((((((((((((((((((((((((((((((

இது நல்லாயிருக்கில்ல?:))

மனிதா
விலங்கை வணங்கு
குறிப்பாகக் குரங்கைக் கும்பிடு
உன் மூதாதையர்க்கு
முதல் வணக்கம் போடு

ஒவ்வொரு விலங்கும் உன் ஆசான்
கற்க கற்றபின் நிற்க 
அதற்குத் தக

விலங்குகள் நம்மினும்
மானமுள்ளவை
யானையின் காலில்
யானை விழுந்ததாய்த்
தகவல் இல்லை

பூனைக்கு எலிகள்
பல்லக்குச் சுமந்ததில்லை:)

கரடிக்கு மான்கள்
கால் பிடித்து விட்டதில்லை
ஒன்று சுதந்திரத்தின் வானம்,
இல்லை மரணத்தின் பள்ளம்
இடைப்பட்ட வாழ்க்கை
விலங்குக்கில்லை
(வைரமுத்து அங்கிளின் பெரிய கவிதையில் ஒரு பகுதியை இங்கு பார்த்து எழுதினேன்)
))))))))))))))))))))))))))))))))))))))))))_()_(((((((((((((((((((((((((((((((((((((((((((

ஒரு கணவன் மனைவிக்குக் குழந்தைகள் இல்லை, அந்த வீட்டுக்கு புலாலியூர்ப் பூஸானந்தாபோல ஒரு சாமியார் போனார், அவரை அந்தம்மா நன்கு கவனிச்சு உணவளிச்சா, மனம் மகிழ்ந்த சாமியார் கேட்டார்.. குழந்தாய் உனக்கு குறை ஏதும் உள்ளதோ?.. அதற்கு அப்பெண் சொன்னா,  “சாமி எங்களுக்கு இன்னும் குழந்தைகள் கிடைக்கவில்லை, செய்யாத வைத்தியமில்லை, போகாத இடமில்லை”..

சாமியார் சொன்னார்,  “ஒரு தடவை உன் கணவரை எருசலேம் போய், அங்கு இருக்கும் மாதாவின் முன்னால் ஒரு விளக்கை ஏற்றி விட்டு வரச்சொல், உனக்குக் குழந்தைகள் கிடைக்கும்”...
எனச் சொல்லிப்போட்டு சாமியார் போய் விட்டார்.

அதேபோல, கணவரிடம் மனைவி சொன்னா, கணவரும் சம்மதிச்சு, எருசலேம் போய், விளக்கேற்றி விட்டு வந்தார்...

சுமார் 10, 11 வருடங்கள் கழிச்சு, இந்தச் சாமியார் திரும்ப வந்தார், வீட்டில் குழந்தைகள் இருப்பதைப் பார்த்து, உன் கணவர் எங்கே எனக் கேட்டார்..
அதுக்கு அப் பெண் சொன்னார் “சாமி, நீங்கள் சொல்லியதைக் கேட்டு, என் கணவர் சென்று விளக்கேற்றி விட்டு வந்தார், அதிலிருந்து ஒவ்வொரு வருடமும் குழந்தை பிறந்து கொண்டே இருக்கிறது, தடைப்பண்ண முடியவில்லை, அதனால அந்த விளக்கை அணைத்துவிட்டு வரப் போயிருக்கிறார் மீண்டும்” என:)). ஹா ஹா ஹா .. படிச்சிட்டு ஏதோ சோகப் படம் பார்த்த பீலிங்ஸில இருக்காமல் சிரிக்கோணும் ஜொள்ளிட்டேன் கர்ர்ர்ர்ர்:))
))))))))))))))))))))))))))))))))))))))))))_()_(((((((((((((((((((((((((((((((((((((((((((

 “மீன் போன அடிச்சுவட்டையும் அறிய முடியாது
பறவை பறந்த சுவட்டையும் அறிய முடியாது,
அதேபோல, ஞானிகள் சென்ற வழியையும் 
அறிய முடியாது”

“வெறும் புத்தகங்களைப் படிப்பதன் மூலம்,ஞானம் பெற்றுவிட முடியாது,
யாராவது ஒருவர் ஆறுதல் சொன்னால்தான்,அழுகை அடங்குகிறது
அதேபோல, யாராவது ஒரு ஞானி ஆசிரியரிடம்[அதிராவைப்போல:)]
 உபதேசம் கேட்டுக் கொண்ட பின்னாலேதான்,
 ஏற்கனவே இருந்த மனோபாவம் மாறி, ஞானி ஆக முடியும்”
இவ்வரிய தத்துவங்களை உங்களுக்கு அள்ளித் தெளித்தவர்.. உங்கள் அன்புக்கும் பண்புக்கும் நேசத்துக்கும் பாசத்துக்கும் பாத்திரமான:) புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்:))
=====================================
ஊசி இணைப்பு

 ஊசிக் குறிப்பு

)))))))))))))_()_((((((((((((

Wednesday, 3 October 2018

சொர்க்கத்துக்கு போறதை நினைச்சாலே பயம்மாக்கிடக்கூஊஊ:)

ஹா ஹா ஹா இப்போ எதுக்கு திடீரென அதிரா சொர்க்கம் பற்றிப் பேசுறா எனத்தானே ஓசிக்கிறீங்க:).. அது மீ ஞானியாகிட்டேனெல்லோ.. ஞானி ஆனாலே இப்படியான அலசல்கள் எல்லாம் தானா வந்திடுது:).

இப்போ நாம் சொர்க்கத்தைக் காணுவதென்பது பரலோகம் போய்த்தான் என்றில்லை:).. சொர்க்கம் என்றால் என்ன எனில் ஒரு மட்டட்ட மகிழ்வைத் தரக்கூடிய சூழலே சொர்க்கம். அதுக்கு நாம் என்ன பண்ணோனும், நம்மைப்போன்ற ஒத்த அலைவரிசையுடையோரோடு நட்பை ஏற்படுத்திக் கொள்ளோனும், நம் ரசனை விருப்பு வெறுப்புக்கேற்றபடி இன்னொருவரும் இருக்கும் போது, அவரோடு நாம் பேசும்போது நம் மனம் மகிழ்ச்சியை உணருது. இன்னும் கொஞ்ச நேரம் பேசலாமே என மனம் எண்ணுது.. அதுதான் சொர்க்கம்.
சிலர் எப்பவும், நம் கருத்துக்கு முரணாகவே கருத்துச் சொல்வர்.. அதுக்காக நம் கருத்துத்தான் சரி என அர்த்தம் இல்லை..  ஆனா அவருக்கும் நமக்குமான அலைவரிசை பொருந்தவில்லை என அர்த்தம், அதனால அப்படியானோரோடு எப்பவும் கூடியிருந்தால் அது நம் மனதுக்கு எப்பவும் துன்பத்தையே கொடுக்கும். அதனாலதான் நம் மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுப்பது நம் கையிலேயே இருக்கிறது.

வேலியில் போகும் ஓணானைப் பிடிச்சுத் தோளில் போட்டு விட்டுக் குத்துதே குடையுதே என்றால் என்ன அர்த்தம்:) ஹா ஹா ஹா.

இதேபோல, சந்தோசம் என்பதும் ஒரு தொற்று நோய்போலத்தான்:), நாம் சந்தோசமாகப் பேசுவோரோடு சேர்ந்து இருப்பின், அவர்களின் மகிழ்ச்சி நம்மைத் தொற்றிக் கொள்ளும்..

=======================இடைவேளை======================
நம் மூத்தவருக்கு இங்கு யுனிக்காக வொலன்ரியர் வேர்க் செய்யோணும் எனச் சொல்லியிருந்தேன் தானே. அதுக்காக இவர் கடந்த ரெண்டு வருடங்களாக ஒரு பிறைவேட் சீனியர் ஹோமுக்குப் போய்க் கொண்டிருந்தார். அதனை சிஸ்டேர்ஸ்தான் நடத்துகிறார்கள்.. மிக அழகிய இடம்.. பூங்கா போல இருக்கும். அங்கு உள்ளே ஒரு குட்டிச் சேர்ஜ் உம் உண்டு, சென் ஜோசப் சேர்ஜ்.. நாமும் அங்கு போனதுண்டு, எனக்கு அதில் நம்பிக்கையும் அதிகம். அந்த சேர்ஜ் ன் வெளியே.. ஃபிரான்ஸ் லூர்த்து மேரி மாதா சிலையும் உண்டு.. மிக அழகாக இருக்கும்.

அப்போ மெடிசின் கிடைச்சதும், கேக் சொக்லேட் எல்லாம் வாங்கி தாங்கியூ கார்ட்டும் எடுத்துப் போய்க் குடுத்தோம்,  அப்போ அங்கு ஒரு வயதானவரை சந்தித்தோம்... பார்த்தால் சின்னப் பெடியன்போல இருந்தார்.. குடுகுடுவென தொப்பியும் போட்டு வெளியே வோக் போயிட்டு வந்தார், கண்ணில கண்ணாடி கூட இல்லை. வயசு போனதன் அடையாளமாக முகத்தில சுருக்கங்கள் இருந்தது... அது மட்டும்தான்..

அவருக்கு 92 வயசென அறிஞ்சிருந்தோம்... கேட்டபோது சொன்னார், இல்லை எனக்கு இப்போ 94 என... உங்கள் இளமையின் ரகசியம் என்ன எனக் கேட்டதுக்கு[வழமையான கேள்விதானே:)]...

அவர் சொன்ன பதில்...

நான் எப்பவும் சிரிச்சுக் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பேன், மற்றது, அடுத்தவர்களோடு எப்பவும் நல்ல வார்த்தையில் மகிழ்வான வார்த்தையில் மட்டுமே பேசுவேன் என்றார்... அப்போ அதிலும் உண்மை இருக்கிறதுதானே பார்த்தீங்களோ?
===================================================
உலகத்திலே உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் துக்கம் இருக்கத்தான் செய்யும்.. ஒவ்வொரு வடிவில்.. ஆனா அதுக்காக அதையே நினைச்சிருந்தால், இப்போ நமக்கிருக்கும் மகிழ்ச்சியை நாம் இழந்து விடுவோம்.. அதனால எப்பவும் கடந்த காலத்தையும் நினைக்கக்கூடாது எதிர்காலத்தையும் நினைக்கக்கூடாது... இப்போ இருக்கும் மகிழ்ச்சியை கைவிட்டிடவும் கூடாது... இதுவும் உண்மைதானே? போன வருடம் நடந்ததை நினைச்சு.. கவலைப்பட்டு:), இப்போ அதிராவுக்கு கொமெண்ட் போடாமல் விட்டிடாதீங்கோ எனச் சொல்ல வந்தேனாக்கும்:)..

%%%%%$$$$$%%%%%$$$$$%%%%%$$$$$%%%%%$$$$$%%%%%
சே..சே ட்றம்ப் அங்கிளுக்கு பேசனல் செக்கரட்டறியாக இருந்தும் அவரின் பெயரைக் காப்பாற்ற முடியாமல் போச்சே என்னால:) ஹா ஹா ஹா:).
%%%%%$$$$$%%%%%$$$$$%%%%%$$$$$%%%%%$$$$$%%%%%
ஒரு நல்ல குடும்பம், நல்ல வீடு என்பதற்கு அடையாளம் என்ன தெரியுமோ? சண்டை கூச்சல் இல்லாத, மகிழ்ச்சி சிரிப்பொலியுடன் கூடிய அமைதியான வீடே நல்ல வீடாகும். “ஒலிக்குறைவான வாழ்க்கை முறை.. உயர்ந்த வாழ்க்கை முறை” என்கின்றனர்.. இதில் சொல்லப்படும் ஒலிக்குறைவு என்பது சண்டை சச்சரவைக் குறிக்கும்.

ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்வதுதான் வாழ்க்கை முறை என்கிறார்கள். இதில் புரிதல் என்றால் என்ன?.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும், அதை அப்படியே ஏற்றுக் கொண்டு வாழப் பழக வேண்டும். அதுக்காக ஒருவருக்கு தப்பான நடவடிக்கைகள் இருப்பின், அதை அப்படியே ஏற்று வாழ வேண்டும் எனச் சொல்லவில்லை.. ஒருவரின் குணாதிசயங்கள் எனப்படும்போது... நகைச்சுவைப்பேச்சு, சிரிப்பு, கோபம், அமைதியாக இருத்தல்.. இப்படியான குணங்கள்...

அவற்றை மாற்ற வெளிக்கிடக்கூடாது... 
அவர் அப்படித்தான்.., சொன்னாலும் கேட்க மாட்டார்.. ஓன் லைனில் தான் எல்லாம் வாங்குவார்.. என மனைவியும்... அவ அப்படித்தான் இருப்பா, எனக்கு இப்போ அக்குணம் பிடித்து விட்டது, பழக்கமாகியும் விட்டது என கணவனும்[ஒரு உதாரணத்துக்குச் சொன்னேன்].. புரிந்து கொண்டு அதன்படி விட்டுக் கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை.... அதை விட்டுப்போட்டு அடிச்சுப் பிடிச்சுத்.. திருத்துறேன் பேர்வழி எனத் திருத்த வெளிக்கிட்டால் வாழ்வு நரகமாகிவிடும்.

அதேபோல குடும்பத்தில் ஒரு தவறு நிகழ்ந்துவிட்டால், சரி ஏதோ கோளாறு.. தவறாகி விட்டது, இனிமேல் அப்படி நடந்திடக்கூடாது என்பது பற்றித்தான் சிந்திச்சு செயல் பட வேண்டுமே தவிர, அத்தவறை அடிக்கடி சுட்டிக் காட்டி, குடும்ப மகிழ்ச்சியை நாசம் பண்ணிக்கொண்டிருக்கக் கூடாது.

ஊசி இணைப்பு:

ஊசிக் குறிப்பு:
==============நன்றி_()_=============
ஒரு குட்டி வேண்டுகோள்:
கடவுளை நாம் வணங்குவதற்குக் காரணம் “பக்தி” தான், என்பதற்குக் கொஞ்சம் பொயிண்ட்ஸ் சொல்லுங்கோவன் பிளீஸ்ஸ்.. ஒவ்வொருவர் ஒவ்வொரு பொயிண்ட் சொன்னாலே நிறைய வந்துவிடும்.. நன்றி.
==============================================

Sunday, 18 March 2018

ஹா ஹா ஹா என்னா முசுப்பாத்தி:) ஒரே பகிடிதான் ஹா ஹா ஹா:)

ஆராவது இண்டைக்குச் சிரிக்காமல் போய் விட முடியுமோ?:)
வாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகுமாமே:) ஆனா சிலபேர் சிரிக்கவே பயப்பிடுவினம் கர்ர்ர்ர்:)).. சிரிப்போரையும் முறைச்சுப் பார்த்து சிரிக்க விடாமல் பண்ணுவோரும் உண்டு ஹா ஹா ஹா பன்னி:) பீப்பிள்:))[ஹையோ இது ஃபனி funny:) என்பதை  ஜொன்னேன்:)].

Monday, 6 November 2017

சிரிச்சுக் கன நாள் ஆச்சு:)..  சிரிக்கலாம் வாங்கோ:)

சிரிக்கலாம் வாங்கோ என அம்பாக்:) கூப்பிட்டால், சிரிச்சுக்கொண்டே வரோணும்:) சொல்லிட்டேன்:)..

Saturday, 7 May 2011

கிச்சு..கிச்சு..கிச்சு.. வருதோ?:))))

வருதோ? வருதோ? நான் சிரிப்பைக் கேட்டேன்:)...


வீட்டில... எல்லோரையும் உருட்டி உருட்டி கிச்சு கிச்சு.. காட்டிச் சிரிக்க வைப்பதென்றால் எனக்கு ரொம்ப புய்க்கும்:)..., ஆனா நான் தப்பி விடுவேன்.. சரி சரி ஆவலா கதை கேட்டது போதும்:)), இங்கே அதுக்குப் பதிலா எழுத்தில “பகிடிகளாம்” படிச்சிட்டு முடிஞ்சால் சிரிங்க மக்ஸ்ஸ்ஸ்ஸ்:)).





உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே உங்களுக்குத் தெரியுமா?

இல்ல சார் எனக்கு சிகரெட்டெல்லாம் பிடிக்கும் பழக்கமில்லை.




நாம நினைப்பதெல்லாம் நடக்க வெளிக்கிட்டால் என்ன ஆகும்?

தெரியல்லியே... ராஃபிக் ஜாம் ஆகிடும்:).

oo

உங்க சொந்த ஊர் எது?

அந்தளவுக்கெல்லாம் வசதி இல்ல சார், சொந்த வீடுதான் இருக்கு.

oo
Cat Funny Drives Car Driving Kitty Cats LOL Laughs Laughing icon icons emoticon emoticons animated animation animations gif gifs kitten kittens animal animals

உன்னைப் பார்த்து ஒரு அழகான பொண்ணு சிரிக்கிறாண்ணா என்ன அர்த்தம்?

என்ன அர்த்தம்? உன் பின்னால நான் நிற்கிறேன் என்று அர்த்தம்.

oo

கடவுள் நம்ம பாவங்களையெல்லாம் மன்னிகணும் என்றால் நாம என்ன பண்ணணும் சாமி?

பாவம் பண்ணனும்.

oo

என்னால வாயே திறக்க முடியல்ல டாக்டர்..

சரி சரி இருங்க, உங்க மனைவியை வெளியே போகச் சொல்றேன்.

oo

உலகம் உருண்டைன்னு எதனால சொல்றோம்?

வாயாலதான்.

oo

கடைக்காரர்:
"அம்மா உங்க நாய், என் கடைப் பழங்களைத் தின்னுது பாருங்க...!"

அந்தப் பெண் நாயிடம் திரும்பி:
"ஜிம்மி... பழத்தை கழுவாம சாப்பிடக் கூடாதுன்னு உனக்கு எத்தன வாட்டி சொல்லறது...?"

oo

தாத்தா!! ஏன் உங்க தலை மட்டும் வெள்ளையாவும் தாடி கருப்பாகவும் இருக்கு?

...அதுவா…அது வந்து என்னோட தாடி என் தலைமுடியை விட 20 வருஷம் இளையது.

oo

ஆசிரியர்:`காளையும் பசுவும் புல் மேய்ந்தன`, இதனைச் சரியா சொல்லு.

மாணவன்: `பசுவும் காளையும் புல் மேய்ந்தன`.

ஆசிரியர்: எப்படி?

மாணவன்: லேடீஸ் ஃபர்ஸ்ட் இல்லியா சார்?

oo

சர்தார் Electric கடையில்: "ஒரு ஆம்பளை Fan-ம், ஒரு பொம்பளை Fan-ம் கொடுங்க..."

கடைக்காரர்: "என்னய்யா உளர்ற? Fan-ல ஏது Ladies, Gents...?"

சர்தார்:  "அட.. Bajaj-ல ஒன்னும், Usha-ல ஒன்னும் கொடுப்பா..."

==========================================================
இடைவேளை

பேபி அதிராவும்...ம்ம்ம்..
இதுக்கு மேல ஆரும் குறுக்க கேள்வி கேய்க்கப்பிடா..:(((
==========================================================

முளைச்சு மூணு இலை விடலை.... அதுக்குள்ள என் பையன் இப்படி பண்ணிட்டானே..."

"அடடா...அப்படி என்னங்க பண்ணிட்டான்?"

"அந்த செடியை பிடுங்கிட்டான்...."

oooooooooooooooooooooooooooooooooo




இது ரொம்ப ஓவரா இல்ல????.....

கணவன் : என்னை ஒரு முட்டாள்னு எல்லார் கிட்டேயும் சொல்றதா கேள்வி பட்டேன் .

மனைவி : சாரிங்க . எனக்கு அது ஒரு ரகசியம்ன்னு தெரியாது .

கணவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு!

மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க? அது மூளைக் காய்ச்சல்தான் பரவுதாம்!, அது எப்பிடி உங்களுக்கு வரும்?

oo

தாத்தாவும் பேரனும் TV பார்க்கிறார்கள்....

தாத்தா:
கரண்டைக் கண்டுபிடிச்சவன் நல்லா இருக்கோணும்.

பேரன்: ஏன் தாத்தா?

தாத்தா: கண்டுபிடிச்சிருக்காட்டில் நாங்க இப்போ இருட்டில இருந்தெல்லோ TV பார்க்கோணும்.

()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()
பின் இணைப்பு:
வாழ்க்கை ஒண்ணும் எம்.பி.3 பிளேயர் இல்லை,  
நமக்குப் பிடிச்சபாட்டைக் போட்டுக் கேட்கிறதுக்கு....-



அது பூஸ் ரேடியோ மாதிரி, 
வாற பாட்டை நாம்தான் ரசிச்சுப்பழகோணும்..! ஓக்கை?!!!
()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()
 

நாங்கெல்லாம் ஆரு???
சைக்கிள் ஹப்பிலயே பிளேன் ஓட்டின ஆட்களாச்சே....
ஆர் துரத்தினாலும் ஓடித் தப்பிடுவோம்:))...


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இது தத்துவம்
காரணம் இல்லாமல் யார்மீதும் அன்பு வருவதில்லை.
ஆனால், அந்தக் காரணம்தான் யாருக்கும் புரிவதில்லை...!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Sunday, 13 March 2011

பூஸ் "ஆர் ஏ டீ ஐயோ....."

என்ன தலைப்பைப் பார்த்ததும் தலை சுத்துதோ?:) அதுதான் ரேடியோவிற்கு ஸ்பெலிங்...(RADIO).. சின்ன வயதில் இப்பூடித்தான் பாடமாக்கினேன்:).


பூஸ் ரேடியோ.... இது பூஸ் வானொலி நிலையம், 24 மணிநேர சேவை, நேரடி ஒலிபரப்பு...

ஒரு தலைப்பு போட நினைக்க இன்னொன்று இடையில் வந்துவிடுகிறது... சரி இதைப் போட்டுவிட்டு, அதைப்போடலாமே என ஆரம்பிக்கிறேன்.


இன்று அதிகாலை 5 மணிபோல ஒரு ஃபோன் வந்து தட்டி எழுப்பியது.. கண்விழித்துவிட்டேன்.. பின் நித்திரை வரவில்லை,  அடுத்தவரை டிஷ்ரேப்புப் பண்ணக்கூடாதே அதனால், ரேடியோ கேட்டுக்கொண்டு
படுக்கலாமே என, ஐ போனுக்கு இயர்போனைப்போட்டுக் காதில போட்டபடி படுத்திருந்தேன்.....



ரேடியோவிலே, கீழே நான் சொல்லியுள்ளவை ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாகப் போனது, மனதில் போட்டுக்கொண்டு, என் பாஷையில் எழுதியிருக்கிறேன், நிறையச் சொன்னார்கள் ஆனால் அனைத்தையும் பதிக்க முடியவில்லை. 

இரு எறும்புகள் ஒரு ஸ்கூட்டரிலே போய் ஒரு பெண்டிலே திரும்பியது, அங்கு ஒரு யானை போய்க்கொண்டிருந்ததாம், யானையிலே மோதப்பார்த்து, எறும்புகள் காலை ஊன்றி பிரேக் பிடித்துவிட்டு, யானையைப் பார்த்துத் திட்டியதாம் “நீ சாவதற்கு என் ஸ்கூட்டரோ கிடைத்தது” என, எறும்பு யானையில் மோதினால் யானையோ சாகும்? எறும்புக்கு அப்படி ஒரு நினைப்பு:). என்ன கொடுமை இது?:)).

=========================================================

ஒரு கல்லூரியிலே படிப்பித்துக்கொண்டிருந்த பிரம்மச்சாரியான(யாருமற்ற) ஆசிரியர் காலமாகிவிட்டாராம். உடனே பொதுமக்கள் அக்கல்லூரி மாணவர்களிடம் கேட்டார்கள் “அடக்கம் செய்ய 4000 ரூபா தேவை,  பணம் திரட்டித் தர முடியுமா?” என்று. அதற்கு மாணவர்கள் அவசராவசரமாக 12,000 ரூபா பணம் திரட்டிக் கொடுத்தார்கள்.

மக்கள் சொன்னார்கள் “4000 ரூபா தானே தேவை, எதுக்கு மும்மடங்காக தருகிறீர்கள்” என்று. மாணவர்கள் சொன்னார்களாம் “பறவாயில்லை இன்னும் இரு ஆசிரியர்களைச் சேர்த்து அடக்கம் செய்துவிடுங்கள்”..


==========================================================
மன்னிக்கவும் அலைவரிசையில் சிறு குழப்பம்:)... சற்று நேரத்தில் தொடரும்..

அது வேறொன்றுமில்லை, தம்பிக்கு நகைச்சுவை பிடிக்கும்,
அதுதான் ஆ.கோ றினால் ரேடியோவின் மேலே ஏறிவிட்டார்.....:)

தடங்கலுக்கு வருந்துகிறோம்...:)
==========================================================

நாசாவிலிருந்து சில விண்வெளி ஆராட்சியாளர்கள் விண்வெளிக்குப் போயிருந்தார்கள், அங்கு போனதும் பேனையை எடுத்தார்கள் எழுத, ஆனால் அவர்களால் எழுத முடியவில்லை, அங்கு புவியீர்ப்பு விசை இல்லாத காரணத்தால், பேனையின் இங்(ink) பேனை முனைக்கு வரவில்லை. அதனை நாசாவுக்கு அறிவித்தார்கள்.

இதைக் கேட்டதும் நாசாவில் சொன்னார்கள், முதலில் இதற்கொரு வழியைக் கண்டுபிடித்த பின்பே, ஆராட்சியைத் தொடர்வோம் என. அதன்படி பத்துவருடங்களாக குப்புறக்கிடந்து, கிட்னியை யூஸ் பண்ணி, 1 1/2 கோடி டொலர்கள் செலவுபண்ணி கண்டுபிடித்தார்களாம்.

இதைக் கேட்ட பிரித்தானிய:)  நாட்டவர் கேட்டாராம்.. “அப்போ ரஷ்யாக் காரர், அப்போதே எல்லாம் எழுதி அனுப்பினார்களே விண்வெளியிலிருந்து, அது எப்பூடி?” என. அதுக்கு நாசா விஞ்ஞானி சொன்ன பதில்... “ரஷ்யாக்காரர் பென்சிலை உபயோகித்தார்கள்”. இதில் முடிவு என்னவென்றால்..... எதிலும் எளிமையாக இருக்கப் பழக வேண்டும்:).

==========================================================

ஒரு ஊரிலே ஒரு பெண் இருந்தவாம், அவ எப்பவுமே அடுத்தவருக்கு சேவை செய்து, அடுத்தவரை மகிழ்விப்பதே தன் தொழிலாகக் கொண்டிருந்தா. அவவிடம் ஒருநாள் ஒரு தேவதை வந்ததாம்.

அது சொன்னதாம் “என்னிடம் ஒரு புத்தகம் இருக்கு, அதில் அடுத்தவருக்கு சேவை செய்து அடுத்தவர்களை மகிழ்விப்போரின் பெயரெல்லாம் இருக்கும், பார்க்கலாம் உன் பெயரிருக்கா என”, சொல்லியபடியே புத்தகத்தில் தேடியதாம், அதில் அப்பெண்ணின் பெயர் இல்லை. அதற்கு அப்பெண் சொன்னாவாம், பறவாயில்லை, பெயரில்லாவிட்டால் என்ன, அடுத்தவருக்கு சேவை செய்வதில் எனக்கு மகிழ்ச்சியே என்று.

தேவதை மீண்டும் இன்னொரு புத்தகத்தைக் காட்டிச் சொன்னதாம், இது கடவுளின் புத்தகம், இதில் கடவுளுக்கு யாரை பிடித்திருக்கோ அவர்களின் பெயர்கள் இருக்கும், இதில் உன் பெயர் இருக்கா பார்ப்போம் எனக்கூறிக் கொண்டே புத்தகத்தைத் திறந்ததாம், முதலாவதாக அப்பெண்ணின் பெயர் இருந்ததாம். இதில முடிவு என்னெண்ணா.... நாம் அடுத்தவருக்கு சேவை செய்து, அடுத்தவரை மகிழ்வித்தால், கடவுளுக்கு நம்மைப் புய்க்கும்ம்ம்ம்ம்.
========================================================

இத்தனை நேரமும் மிகவும் பொறுமையாக, அடக்கமாக இருந்து கேட்டு ரசித்தமைக்கு மியாவும் நன்றி.... இத்துடன் இன்றைய நிகழ்ச்சி நிறைவடைகிறது, மீண்டும் நாளை காலை வழமைபோல் தொடரும்.. அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுபவர்... உங்கள் அன்பு அறிவிப்பாளர்.. மியாவ் பூஸ்:)


=========================================================
ஃபோன் இணைப்பு:

I remember the time, I was kidnapped and they sent a piece of my finger to my father. He said he wanted more proof.
=======================================================

பின் ஊசி இணைப்பு:


ஹா..ஹா....ஹா... கஸ்டப்பட்டுப் படிச்சு எக்ஸாம் எழுதினது..(தெரியும்தானே ஆரென?? பீஈஈஈஈகொக்:))..., ஆனா தொப்பி கிடைச்சதென்னமோ எங்களுக்குத்தான்...(உதென்ன தொப்பி என ஆரும் கேட்டிடப்பூடா...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

=======================================================
இது எங்கட சொந்த பந்தம்தான்...  “அங்கின” (ஆசனம் செய்வோர் பக்கம்:))
படத்தில இருந்தவங்களும் இவிங்களும் சொந்தபந்தம்தானாம்.....


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~