நல்வரவு_()_


Wednesday 25 October 2017

ஒரு கிடாயின் கருணை மனு:)


து என்ன தலைப்பே புதுசா இருக்கே எனத்தானே ஓசிக்கிறீங்க:).. இப்போ சமீபத்தில, இந்தமாதம் தானாக்கும் வெளி வந்த கிடாய்:)...

Thursday 19 October 2017

அன்புள்ள ஜெபா ஆன்ரிக்கு:(

உங்கள் ஆத்மா அமைதியடையவும், நிம்மதியான உறக்கம் கொள்ளவும் ...நாம் பிரார்த்திக்கிறோம்.

இமாவின் அம்மா , ஜெபா ஆன்ரி நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் எனக் கேட்டதிலிருந்து பல பழைய நினைவுகள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது..

2008 ஆம் ஆண்டென நினைக்கிறேன், அறுசுவைத் தளத்தில், ஜெபா எனும் பெயரோடு ஒருவர் வந்து, இடைக்கிடை ஒரு வரிக் கொமென்ட்ஸ் போடுவார், என் எழுத்துக்களை ரசிப்பார், அப்போ நான் நினைச்சேன் குட்டிப் பெண்ணாக இருப்பா என, ஜெபா ஜெபா என அழைத்தேன்... பின்னர் சில காலங்களின் பின்புதான் தெரிந்தது அவ இமாவின் அம்மா என...
அன்றிலிருந்து மனம் சங்கடமாகி விட்டது இவ்வளவு பெரிய ஒருவரையா பெயர் சொல்லி அழைத்தேன் என, பின்பு ஜெபா ஆன்ரி எனக் கூப்பிடத் தொடங்கினேன்.

அவவும் ஒரு புளொக் வைத்திருந்தா, அங்கும் நாம் போய் அவ போடுவதை எல்லம் ஊக்கப்படுத்துவோம்,  2010,11 இலிருந்து அவவுக்கு முடியாமல் போய் விட்டது எழுதுவதை நிறுத்தி விட்டா என நினைக்கிறேன்...

இப்போ இந்த மாதம் இமா புதுப் போஸ்ட் போட்டபோது, முதலாவதாக ஜெபா ஆன்ரி நலமோ எனத்தான் கேட்டேன், இல்லை அதிரா:(, இனி அவ நலமாவா எனச் சொல்ல முடியாது என்றா, சொல்லி ஒரு மாதம் கூட முடியவில்லை, ஜெபா ஆன்ரி மறைந்திட்டா...

ஜனனம் என்ற ஒன்று இருப்பின் மரணம் என்பதும் இருக்கும் தானே, அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனத்தைரியத்தை அனைவரும் வளர்த்துக் கொள்வோம்..

ஜெபா ஆன்ரி கெவினில் நிம்மதியான உறக்கம் கொள்ளவும், அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் மன அமைதி பெறவும், இமாவின் மனம் ஆறுதல் பெறவும் வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறோம்...

"ஆண்டாண்டு தோறும், அழுது புரண்டாலும், மாண்டார் வருவரோ?"

எனக்கு என்ன எழுதுவது எப்படி எழுதுவது என தெரியவில்லை, மனதில் தோன்றியதை எழுதியுள்ளேன், என் கொம்பியூட்டர் வேறு மூட் ஓவ் ஆகி இருக்கு , அதனால எழுதுவதும் கஸ்டமாக இருக்கு, இப்பதிவை தமிழ் மணத்தில் இணைக்கிறேன், ஆனால் யாரும் இம்முறை இப்போஸ்ட்டுக்கு வோட் போட வேண்டாம்...
நன்றி,
அதிரா.

Thursday 5 October 2017

ஓவி... என்னை மன்னித்து விடு..:(

இம்முறை நம்ம ஏரியாவில்... நெல்லைத் தமிழனால் கொடுக்கப்பட்ட கருவுக்கு, கதை எனும் பெயரில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்:), நன்றாக இல்லை எனில் மன்னிச்சுக்கோங்கோ.. இது ஒரு உண்மைச் சம்பவத்தைக் கருவாகக் கொண்டு.. சிலபொய்களை சேர்த்து, பூசி மெழுகி எழுதியிருக்கிறேன்.- _()_

Tuesday 3 October 2017

திருமணமான புதுமணத் தம்பதிகள் இதைப் பார்க்க வேண்டாம்:)

சரி சரி வாங்கோ வாங்கோ... பத்து வசனம் சொல்வதை, ஒரு படம் விளக்கிடும்:).. அதனால படம் படமாப் போடுவதில் ஒண்ணும் தப்பில்லையே:) [ஸ்ஸ்ஸ்ஸ் எப்பூடி எல்லாம் ஜொள்ளிச் சமாளிச்சுப் படம் காட்ட வேண்டிக்கிடக்கு:)].. ஓகே கடலில் குதிக்கலாம் வாங்கோ:)..