நல்வரவு_()_


Friday 13 August 2010

சும்மா!! சும்மா:)).

எதிர்பாராதவேளை திடீரெனக் கிடைத்தது..... ஆசியா விடமிருந்து. மிக்க நன்றி ஆசியா. கொஞ்சம் பாரம்தான், பெரிய பிளேன் என்றதால அஜீஸ் பண்ணிக்கொண்டுவந்திட்டேன். மியாவும் நன்றி ஆசியா.


எங்கள் வீட்டிலிருந்து, எங்கட:) ஆற்றங்கரைக்கு செல்லும் ஒரு குறுக்குப் பாதை:


ஆற்றங்கரை ஓரத்திலே.... யாருமற்ற நேரத்திலே.... பூஸ் இருந்த கற்பாறைகள்:)


 ஆற்றங்கரைக்கு போனபோது வந்துகொண்டிருந்தது இந்த கொன்ரெயினர் ஷிப்.



ஆற்றோரமா அந்தப்பக்கமா.... வீடுகள்...




ஆற்றோரத்திலே தானாகப்பூத்திருக்கும் ரோஜா....


ஆற்றோரத்தில் தேடுவாரில்லாமல் பழுத்திருக்கும் ராஸ்பெரிப் பழங்கள்.




இது எங்கள் பக்கத்து,பக்கத்துவீட்டு ரோட்டுக்கரையில் இருக்கும் ஆப்பிள் மரம்... இப்போதான் காய்கள் வந்திருக்கு.




தம்பி கதையளக்கிறார்:




உஸ், பேபி பூஸ் நித்திரை, வாயால கதைக்காமல் எல்லோரும் கையால கதையுங்கோ..... இப்போ எழும்பினால், குடுக்க  வீட்டில புட்டிப்பால் முடிஞ்சுபோச்சு:))


VVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVV
பின் இணைப்பு:
படித்ததில் ரசித்தது:

தினமும் தோற்றுப்போகிறேன்
பேசாமலிருக்க நினைத்து
பேசிக்கொண்டிருப்பதால்
VVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVV

Thursday 5 August 2010

“பூவுலகில் பூ(னை/வை):))”

இப் பூவுலகப் பிரவேஷம் பற்றிய தொடரை, தொடரச் சொல்லி பகிரங்க அழைப்புவிட்ட பூவை “கவிசிவா” வுக்கு(என்னா தைரியம்.... பூஸையே மாட்டிவிட்டுவிட்டீங்களே..:)) மியாவும் நன்றி.

///வழக்கம் போல இதுவும் மொக்கையாத்தான் இருக்கும். எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்கள் மட்டுமே தொடர்ந்து படிக்கவும் :-).//// இது கவி சொன்னது,

/// இது மொக்கையே இல்லை, விலைமதிப்பற்றது:), வீக்கான(இது வேற வீக்:)) இதயவறை உள்ளவர்கள் மட்டுமே தொடர்ந்து படிக்கவும்.....// இது, சொன்னது நான்..தேன்.:).



--------------------------------------------------------------------------------

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

சே... சே... சே... எதுக்கெடுத்தாலும் சந்தேகமாகவே கேள்வி கேட்கினம்... வலையுலகில் ரொம்ப பிசியாகி, மிகவும் பிரபல்யமாகிவிட்ட:))), என்னைப் பார்த்து... “உங்கள் பெயரென்ன?” எனக் கேட்டால்.... கண்ணால ரத்தக் கண்ணீர் ஆறாஆஆஆ ஓடுது:), டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்... (பெயர் சொல்லிக் கேய்க்கப்பூடாதாம்:).... சொல்லிப்போட்டினம்..... ).


கொஞ்சம் இருங்கோ வடிவாத் துடைச்சிட்டு வாறேன்.


 



--------------------------------------------------------------------------------

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?.

என்ன கேள்வியெல்லாம் கேய்க்கிறாங்கப்பா.... பெயரில உண்மைப்பெயர் பொய்ப்பெயரோ? இப்பத்தான் பிறந்து நடக்கத்தொடங்கினதுக்கு:), முதன் முதலாக கேள்விப்படுறேன்...., ஆரையாவது பொய்க்காகக் கூப்பிடுவினமோ?? வேணுமெண்டால், பாஸ்போட் ஸ்கான் பண்ணி அட்டாச் பண்ணுறேன் விரைவில்:).


அங்க பாருங்கோ... மேலே வானத்தில கோடுமாதிரி என்னவோ தெரியுதே...... திரும்பாமல் பாருங்கோ... வடிவாப் பாருங்கோ....


பூஸ் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... உஸ் அப்பா.. முடியேல்லை:), கூட்டத்தோடு வந்து கும்மி எடுக்கினம்:)... இப்பூடி ஓடினால்தான் தப்பலாம்
இவிங்களிடமிருந்து:).



--------------------------------------------------------------------------------

 
3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

இது பெரீஈஈஈய கதைங்கோ..., முடிந்தவரை சோட் அண்ட் சுவீட்டாச் சொல்கிறேன், அதனால, பொறுமையுள்ளவர்கள் மட்டும்:), ஒருகப் ரீயோடு வந்திருந்து படியுங்கோ....


ஆரம்பகாலம் தொடங்கிச் சொல்கிறேனே.
சின்ன வயதிலிருந்தே என்னில் ஒரு பழக்கம், எனக்குப் பிடித்த பொன் மொழிகள், பழமொழிகள், கவிதைகள், காதில் கேட்கும் பாட்டுக்களில் வரும் பிடித்த வசனங்கள் இவற்றையெல்லாம், எழுதும் நோட் கொப்பியின் பின்னாலே எழுதி வைப்பேன், நேரம் கிடைக்கும்போது, அதுக்கென ஒரு கொப்பி வைத்து எழுதிவிடுவேன். இப்பகூட நிறையப் புத்தகங்கள் வாசிப்பேன், அதில் வரும் பிடித்த வசனங்களை அடையாளப்படுத்திவிட்டு, பின்பு கொப்பியில் எழுதி வைப்பேன், அவற்றை மீண்டும் மீண்டும் மீண்டும் பல தடவைகள் வாசிப்பேன்....

இப்படிச் சேகரித்தவற்றை, எதை மறந்தாலும், தவறாமல் என்னோடு எடுத்துச் செல்வேன். இலங்கை ராணுவப் பிரச்சனைகளின்போது, செக்கிங் பொயிண்ட்டுகளில், ஒரு பேப்பர் துண்டு bag இல் கிடைத்தாலும் அதை துருவித் துருவி செக் பண்ணுவார்கள். அப்படியான நேரம்கூட, “உதையெல்லாம் காவாதே” என அம்மாவின் ஏச்சுக்கு மத்தியிலும் கொண்டு சென்று பாதுகாத்து, இங்கும் கொண்டுவந்துவிட்டேன். நெற்றில் உலாவினாலும் அந்நேரம் புளொக் பற்றித் தெரியாது, அத்தோடு பப்ளிக்கில் மற்றவர்களோடு கதைக்கவும் பயம்.

இப்படியிருந்தபோது ஒரு தளத்தில் இணைந்து கதைத்து வந்தேன், பின்பு அறுசுவை தொடர்பு கிடைத்தது. அறுசுவைக்குள் சங்கமமானேன். கொஞ்சம் தைரியம் வந்தது. ஜலீலாக்கா புளொக் வைத்திருக்கிறேன் வந்து பாருங்கோ என்றா, போய்ப் பார்த்தேன், தெரியாதோரெல்லாம் இருந்தார்கள், அதனால் கதைக்கப் பயமாக இருந்தது, போய்க் கதைக்கவில்லை. அப்போதுதான் நினைத்தேன், என்னிடம் இருக்கும் பொக்கிசங்களை ஒரு புளொக்கில் போட்டு, யாருக்கும் தெரியாமல் ஒரு புத்தகமாக வைத்திருப்போம், அப்படியாயின் இனிமேல் காலங்களில் எனக்கு கொப்பிகள் காவும் வேலை இருக்காதே என. அப்படியே இந்த புளொக் உருவாக்கினேன். ஆனால் எனக்கு ஒரு நிமிட நேரம் கிடைத்தாலும் அதை அப்படியே அறுசுவைக்கே அர்ப்பணித்தேன், அதனால் என் புளொக்கை தூசுகூடத் தட்டாமல் விட்டிருந்தேன்.. பல மாதங்களாக..

(இதன் தொடரை வினா இலக்கம் (9) இல் தொடரவும்).


--------------------------------------------------------------------------------

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

என் புளொக் பிரபல்யமாக வரவேண்டுமென்பது என் நோக்கமல்ல. மேலே சொன்ன காரணங்களோடு, பொழுதுபோக்குக்காகவும் சந்தோசத்துக்காகவுமே உருவாக்கியிருக்கிறேன். அதனால் எதுவும் செய்யவில்லை. என்னிடம் வருவோரிடம் நானும் போய்க் கதைத்து வருகிறேன். பத்துப்பேர் வந்தாலும், சிரித்து கதைத்து சண்டையிட்டு, மகிழ்ந்து போவதையே விரும்புகிறேன்.

--------------------------------------------------------------------------------


5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?


சொந்தவிஷயம் பற்றி சொல்ல பெரிதாக ஏதுமில்லை(எல்லாமே அங்கு சொல்லிவிட்டேன்:)). ஆனால் பழைய மறக்கமுடியாத நினைவுகளை அப்பப்ப பகிர்ந்துகொள்கிறேன். துக்கமோ, சந்தோசமோ எதுவாயினும் பகிர்ந்துகொள்ள, இங்கே எனக்கு நல்ல உடன்பிறந்தோர்போல.... உறவுகள் கிடைத்திருக்கிறார்கள், அதனால் பெருமையாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது.

--------------------------------------------------------------------------------

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?


இதன் பதிலும் 3வது பதிலிலேயே சொல்லிவிட்டேன். முக்கியமாக என்னிடம் இருக்கும் சேகரிப்புக்களை போட்டுவைக்கவே இந்த புளொக். ஆனால் பலர் வந்து கதைத்துப்போகும்போது, சந்தோசத்தால், புதுசு புதுசாக பதிவிடுகிறேன். பொக்கிசங்கள் இப்பவும் அதே கொப்பிகளிலேயே பொக்கிசமாகவே இருக்கு:))).


எனக்கு மனதைத்தொடும் கவிதைகள் நிறையவே பிடிக்கும். அதனால் முன்பு நெற்றிலே தேடி, கை வலிக்க வலிக்க கொப்பியில் எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் அந்நேரம் புளொக் இல்லாமையாலும் புளொக் பற்றித் தெரியாமையாலும், ஆருடைய கவிதை, எந்த புளொக்கிலிருந்து எடுத்தேன் என்னும் விபரமெல்லாம் எடுத்து வைக்கவில்லை, அதனால் அவற்றை இங்கே இன்னும் எழுதாமல், கொப்பியிலேயே வைத்திருக்கிறேன்
:)).

--------------------------------------------------------------------------------


7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?


நான் எப்பவுமே பலதோணியில் கால் வைக்க விரும்புவதில்லை. ஒன்றென்றாலும் ஒழுங்காகச் செய்யவேண்டும் என்றே நினைக்கிறேன்... இதை வைத்திருப்பதே குருவித் தலையில் பனங்காய்போல இருக்கே:)))(நேரத்தைச் சொல்கிறேன்:)).

--------------------------------------------------------------------------------


8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?.


ஆ.... மை வந்திருக்கிறது வீட்டுக்கு:), ஆனால் பொறா......மை எல்லாம் எப்பவும் வந்ததாக நினைவில்லை. எல்லோரையும் ஊக்குவிக்க வேண்டும் என நினைத்தே, முடிந்தவரை பெரிய பின்னூட்டங்கள்:) போடுவேன்.

ஆனால் கோபம் நிறையவே இருக்கு..., கெட்டகோபமல்ல அன்பானகோபம்:), முதலாவதாக ஹைஷ் அண்ணனில், எவ்வளவு பிரயோசனமான புளொக்குகளை உருவாக்கிவிட்டு, இடையில் அப்படியே விட்டுவிட்டு ஓடப்பார்க்கிறார்.. அடுத்து இலா.... எவ்வளவு சொன்னாலும் ஊகூம் அசையமாட்டேன் என்கிறார்.... அந்த வரிசையில் இப்போ ஜீனோ வந்துகொண்டிருக்கிறார்...... இவற்றையெல்லாம் பார்க்க எனக்கு எந்தளவு கோபம் வரும்....


இந்தளவு கோபம் வருது:))))


 



--------------------------------------------------------------------------------

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

மேலே வினா (3)இன் விடையிலிருந்து தொடர்கிறது.

பல மாதங்களாக அப்படியே விட்டிருந்தேன். பின்பு நான், என் ஜொப்பில் அதிகம் பிசியாகினேன்... அப்பொழுது................
....................... ............................... ................................. ............................ ............................... ................................. .............................. ............................ ............................. ........................ ................. ஆ... பாருங்கோ மக்கள்ஸ்ஸ்... பொறுத்த நேரத்தில பேனாவுக்கு மை இல்லாமல் போச்சே.... இட்ஸ் ஓக்கை... விடுபட்டதுபோக மிகுதியைத் தொடர்கிறேன்:). அப்போ நேரமின்மையால் “அங்கே”யும் போகமுடியவில்லை, அப்பொழுதுதான் ஹைஷ் அண்ணன், மபொர புளொக் உருவாக்கி எனக்குச் சொன்னார். அரட்டைப் பகுதி தேவை எனக் கேட்ட இடத்திலே “நட்புப் பகுதியை” உருவாக்கிவிட்டார்.

கொஞ்சம் தைரியம் வரவே, என்னிடம் புளொக் இருக்கு, வெளியே காட்டிட வேண்டாம் என சொல்லி, என் புளொக் நேம் கொடுத்தேன். பின்னொரு நாள் திடீரெனப் பார்க்கிறேன், முதல் முதல் பின்னூட்டமும் போட்டு ஃபலோவராகவும் தான் இணைந்து, என் புளொக்கை, நட்பிலே பப்ளிக்கிலே தூக்கிப் போட்டுவிட்டார், எனக்கும் சொன்னார்... ஏன் தொடராமல் இருக்கிறீங்கள் புளொக்கில் எழுதுங்கோ என. முதன் முதலில் கிடைத்த முதல் பின்னூட்டம், என் சந்தோசத்துக்கு எல்லையே இருக்கவில்லை, நான் பின்னூட்டங்களை எதிர்பார்த்திருக்கவில்லை, என்னைத் தேடி பலர் வருவார்கள் எனவும் எண்ணியிருக்கவில்லை. அப்போ எனக்கு அந்த ஒரு பின்னூட்டமே, ஆயிரம் பின்னூட்டம் கிடைத்ததுபோல மகிழ்ச்சியாக இருந்தது, என் கணவருக்கும் சொன்னேன், அவரும் சொன்னார்... புளொக்கில் எழுதத் தொடங்குங்கோ என்று.

அப்பவும் நான் பேசாமல் நட்பிலேயே கதைத்துக்கொண்டிருந்தேன், 2வது பின்னூட்டம் ஹூசைனம்மா போட்டார்.... அப்போ எனக்குத் தெரியாது அவர்தான் திருமதி ஹூசைன் என்று. 3வது பின்னூட்டம் சுவையானசுவையிடமிருந்து கிடைத்தது(சுஸ்ரீ), அடுத்து இளமதி....

பின்னரும் எனக்கு புளொக்கினுள் போகும் எண்ணமில்லை. மீண்டும் ஹைஷ் அண்ணனே ஏசினார்,  பின்னூட்டங்களும் வரத்தொடங்கிவிட்டதே, அவற்றுக்குப் பதிலாவது போடுங்கோ என்று. அதன் பின்புதான் ஓடுப்பட்டேன்.  “புறுணம்” என்னவென்றால் புளொக் ஈமெயில் ஐடியையும் மறந்துபோனேன், பிறகெப்படி? பாஸ்வேட்டும் தெரியாதே.... ஓடுப்பட்டுக் கலைபட்டு, பழைய மெயில் எல்லாம் செக் பண்ணி ஒருமாதிரிக் கண்டுபிடித்து... ஆரம்பித்தேன்(நோட் புக்கில் எழுதி வையுங்கோ மக்கள்ஸ்ஸ், நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்:)).... மிகுதியை அடுத்த வினாவில் விடையாக்குகிறேன்.


--------------------------------------------------------------------------------



10. கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

“இந்த பேபி பூஸை யாரும் நம்பிட வாணாம், பெரியவர்களை அனுபவசாலிகளை நம்புங்கோ”


பின்பு புளொக்கில் எழுத ஆரம்பித்ததும்.... பழைய பறவைகள்.... பெயர்கள் எழுதப் பயமாக இருக்கு, இடையில் ஆரையாவது தவறவிட்டுவிட்டாலும் என.... அறுசுவை உறவுகள் ஒவ்வொருவராகத் தேடித் தேடி வந்து “அதிரா இங்கயோ இருக்கிறீங்க” எனக் கேட்டபோது..... என் மரத்தைத் தேடி பழைய பறவைகள் வருகின்றனவே என சந்தோசம் தாங்கமுடியவில்லை. உண்மை அன்பு வைத்து அங்கு எல்லோரோடும் பழகியது வீண்போகவில்லை என நினைத்துப் பெருமைப்படுகிறேன்.

சில நேரங்களில், சிலரோடு இனிப் பேசுவதே இல்லை எனக் “கங்கணம்”:) கட்டியிருக்கிறேன்... மனதில்தான்:), ஆனால் பூஸின் கோபமெல்லாம் ஒரு நொடியிலேயே, புஸ் என்றாகிவிடும்(இதையும் யாரோ சொன்னார்கள்:)).... மீண்டும் பழையபடி கலகலப்பாகிவிடுவேன். அடிமனதில் அனைவரோடும் அன்பு ஆழமாகப் பதிந்துவிட்டமையால், எவ்வளவு பிரச்சனை வந்தாலும், அவையெல்லாம் தூசாகி, அன்புதான் எப்பவும் பலமடைந்துவிடுகிறது எனக்கு.

டொட்ட டொயிங்.... டொட்ட டொயிங்..... டொட்ட டொயிங்.... நன்றி ... வயக்கம் _()_.


அடுத்து இதனைத் தொடரும்படி, மிகவும் தாழ்மையாக கேட்டு, மேடைக்கு வரும்படி அழைப்பது----


1. தம்பி ஜீனோ
( நோ ஷொயிஸ்ஸ்ஸ்.. எழுதியே ஆகவேண்டும்...).

2. இம்மா இமா....(நான் சொன்னா, இமா எழுதுவா என எனக்குத் தெரியுமே:)), or ஏற்கனவே இதுபற்றி எழுதிவிட்டீங்களோ??)

3. இலா... (இலா.... ஐடி, பாஸ்வேர்ட் எல்லாம் மறந்திடப்போறீங்கள், இதையாவது எழுதுங்கோ பிளீஸ்ஸ்ஸ்) ( பி.கு: ஜெய்லானி!! மயில், ஆறாவது குஞ்சுபொரிக்கப்போகுது:), பின்னூட்டத்துக்கு ரெடிஆஆஆஆஆஆஆஆஆ இருங்கோ:)).

==========================================================

பின் இணைப்பு:
(இது படித்ததில் ரசித்தது).

என் அம்மா ஊருக்கே சொல்கிறா
என் மகனுக்கு கணனியில்
எல்லாம் தெரியும் என்று,
அவவுக்கு எப்படித் தெரியும்
எனக்கு உன் கூட சாட் பண்ண
மட்டும்தான் தெரியும் என்று



(உஸ் அப்பா... முடியல்ல..... கவிஸ்ஸ்ஸ்.... கூலாஆஆஆஆ ஒரு கப் கோப்பி பிளீஸ்ஸ்ஸ்)

Saturday 31 July 2010

எங்கட ஊர் “இயற்கை ராணி”

நான் பூவைச் சொல்கிறேன்:)


முதலில் எல்லோரும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேணும், படம் பார்த்து ஆரும் அடிக்க வரக்கூடாது:).... ரோஜாவைப் பிடிப்பவர்கள் எல்லோரும் வந்து ரசியுங்கோ....

இமாவின் உலகில், இமாவுக்கு இதன் மேல் சந்தேகம்:), பெயர் தெரியவில்லை என்றார், அப்போ தொடங்கியது என் ஆராய்ச்சி, அந் நேரம் இவை மொட்டும் மலருமாக இருந்தன. அப்போ தொடக்கம் தினமும் வோக் போகும்போது ஒவ்வொரு இடமாகத் தேடித்தேடி, பழமாகும் வரை படமெடுத்தேன். இப்போ கிட்டத்தட்ட, பூக்கள் முடிந்துபோய், பழங்களாகிவிட்டன.

இங்கு எல்லா இடங்களிலும் இதனைக் காணலாம். வருடத்தில் ஒருமுறைதான் பூக்கிறது. கண்ணில் காண்போரிடமெல்லாம் கேட்டேன் இதன் பெயர் என்னவென, யாருக்கும் சரியான பதில் தெரியவில்லை, ஆனால் இது “a kind of rose” என்று மட்டும் சொன்னார்கள். இது இந்நாட்டின் இயற்கை ரோஜாக்களில் ஒன்று. ஒருவர் சொன்னார், மணந்து பார்த்தால் நல்ல ஸ்மெல் வரும் என்று. (இலா அங்கு சொன்னது நினைவுக்கு வந்தது.. பன்னீர் ரோஜா), நான் ஏனோ மணந்து பார்க்கவில்லை(என் மூக்கில், நான் வலு கவனம், பூச்சி கீச்சி உள்ளே போய்விட்டால்?:))).

இனிப் படம் பார்த்துக் கதைப்போம்.

 

பூக்களின் கீழே, குட்டிக்குட்டியாக காய்கள் உருவாவது தெரியுதோ?


இது ரோட்டின் ஓரமாக அழகுக்காக வெட்டி வைத்திருக்கிறார்கள்.


இதில் வெள்ளைப் பூக்களும் உண்டு.

இங்கு, வெட்டாமல் விட்டிருக்கிறார்கள், அதனால் பெரிய பற்றைபோல வளர்ந்திருக்கு.


இந்த வீட்டுக்குப் போனபோது பார்த்தேன், மதில் கரையெல்லாம் இவர்தான்... வளர்கிறார்.


காய்கள் பெரிதாகின்றன.



காய், பழமாகிறது... தண்டைப் பாருங்கள், குட்டிக் குட்டி முட்கள் தெரிகின்றன.



ஆ..... பழுத்துவிட்டன....



இது “லபக் டபக்” ஒலி அல்ல:)),  “புஸுக் பூஸ், புஸுக் பூஸ்”, என பூஸின் இதய ஒலி, கேட்குதோ?:)))).


பழங்களை வெட்டினால், உள்ளே வெண்டிக்காய் விதைபோல இருக்கு.


உஸ் அப்பா இதுக்கு மேல என்னாலும் முடியவில்லை:), நான் எடுத்த படங்களின் சுருக்கம்தான்(டோண்ட் சே கர்ர்ர்ர்ர்ர்ர்:))) இது, விரிவாக்கம் என் பிகாசா ஆல்பத்தில் விரைவில் வரும்:).
இப்போ திருப்தியோ இமா?.


பின் இணைப்பு:
நான் இத் தலைப்பு முடியும்வரை இங்குதான் இருப்பேன்:), பயமில்லை, எல்லாம் ஒரு தற்காப்புக்காகத்தான்:).


பயமோ எனக்கோ?? தம்பியிருக்கப் பயமேது?:)).


££££££££££££££££££££££££££££££££££££££££££££££££££££££
KNOWN DEVIL IS BETTER THAN UNKNOWN FRIEND
... from(மபொர) haish 126.
££££££££££££££££££££££££££££££££££££££££££££££££££££££

Monday 26 July 2010

லைபிரறி அண்ணன்!!!

இதுவும் ஒரு உண்மைச் சம்பவம்.






படிக்கிற காலத்தில் இரண்டு வருடங்கள்,  நானும் என் நண்பியும்(என் அதே பெஸ்ட் ஃபிரண்ட்தான்)  ஒரு பேகர்(பறங்கியர்) இன ஆன்ரி அங்கிளின் வீட்டில் இருந்தோம். அவர்களுக்கு எம் வயதை ஒத்த இரு ஆண் பிள்ளைகள், பெண் குழந்தைகள் இல்லை. அதனாலோ என்னவோ எம்மீது அதிக பாசம். நாங்களும், வீட்டுக்குப் போனபின், அம்மாவிடம் சொல்வதுபோல, வெளியில் நடந்த கதைகளையெல்லாம் ஆன்ரிக்குச் சொல்லுவோம், அவவும் எம்மோடு சேர்ந்து கேட்டு, ரசித்து புத்திமதியும் சொல்லுவா.

அங்கே ஒரு லைபிரறி இருந்தது, அது ஆகப் பெரியதும் இல்லை, சிறியதும் இல்லை. அதனால் அது எப்பவும் மிக அமைதியாக இருக்கும். எம் வீட்டுக்கும் கிட்ட. அதனால் நானும் நண்பியும் அங்குபோயிருந்துதான் அதிகம் படிப்போம். அங்கே பொறுப்பாக இருந்தவர் ஒரு அண்ணன். அந்நேரம் அவருக்கு கிட்டத்தட்ட 28, 30 வயதாவது இருக்கலாம். சரியான கறுப்பு, உயரமானவர். மிக மிக அமைதியானவர். எப்பவுமே எதுவுமே பேசமாட்டார். எம்மிருவருக்கும், இப்படியான அமைதியானவர்களைக் கண்டால், எம்மையறியாமலே அவர்களை எமக்குப் பிடித்துக்கொள்ளும். அதேபோல இவரையும் எமக்குப் பிடிக்கும். “லைபிரறி அண்ணன்” என பெயரும் சூட்டிவிட்டோம்.

முதல் நாள் மட்டுமே, எம்மிடம் பெயர் விபரம் கேட்டு, காட் பதிவு செய்தார், பின்பு வாயே திறப்பதில்லை. ஆனால் நாம் உள்ளே போய், மாடிப்படியேறி முடியும்வரை பார்ப்பார். அதுபோலவே மீண்டும் வெளியே வரும்வரை தவறாமல் பார்ப்பார், தப்பித்தவறிக்கூடச் சிரித்திட மாட்டார். அவரது முகத்தில் எப்பவுமே ஒரு சோகம் இருப்பதுபோல தெரியும். அவரின் இப்படியான போக்காலயே எமக்கும் அவரோடு கொஞ்சம் தனகவேண்டும்போல இருக்கும்:). ஆனால் நாங்களிருவரும் அவரைவிட அமைதி. எமக்கும் கண் மட்டுமேதான் வேலை செய்யும். நேரடியாகப் பார்க்கவும் மாட்டோம். அப்போ இதெல்லாம் எப்படித் தெரியும் எனக் கேட்கிறீங்களோ?. அம்மாவுக்குப் பேன் பார்த்தபடியே, பார்க்காமல் சொல்வேன், வேலியின் போகும் ஓணான் என்ன கலர் என்பதை:)). சரி இது போகட்டும்.

இக்கதைகளை வீட்டுக்கு வந்து ஆன்ரிக்குச் சொல்வோம்,  நல்லவராக இருக்கிறார் ஆன்ரி, ஆனால் எப்பவுமே சோகமாக இருக்கிறார் என்று. இதனால் எம்மோடு சேர்ந்து ஆன்ரியும் கவலைப்படுவா.

அந்த ஏரியாவில் இருந்த எல்லோருமே பேகர் இனத்தவர்கள்தான். ஆங்கிலேயர்போலதான் உடையணிவார்கள், அதிகம் ஆங்கிலம்தான் பேசுவார்கள். வயதானோர் மட்டுமே பறங்கிப்பாஷையும் கதைப்பார்கள். சாதாரண நிறமாகவும் இருப்பார்கள், நல்ல வெள்ளை, சிவப்பு உதட்டோடு வெள்ளைக்காரர் போலவும் இருப்பார்கள்.

எமது வீட்டுக்கு இரு வீடுகள் தள்ளி, அப்படித்தான் ஒரு குடும்பம் இருந்தார்கள். அங்கொரு அக்கா இருந்தா(ஃபுளோரா என்று பெயர்), அவவும் இப்படித்தான், வெள்ளைக்காரர்போல இருப்பா. 25,26 வயதிருக்கும், இடைக்கிடை எமது இந்த ஆன்ரி வீட்டுக்கும் வந்து, எம்மோடும் கதைத்துப்போவா.


ஒருநாள் நாங்கள் வீட்டுக்குப்போக, ஆன்ரி ஓடிவந்து சொன்னா, அதிரா நியூஸ் தெரியுமோ? ஃபுளோராவுக்குத் திருமணமாமே, மாப்பிள்ளை ஆரெனத் தெரியுமோ? உங்கள் லைபிரறி அண்ணன் தான், எனச் சொன்னா. எமக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை, எமக்குத் தெரிந்த அக்காவுக்கு அவரை நிட்சயித்துவிட்டமையால், ஏதோ எமக்கு சொந்தமாகிவிட்டதுபோல நினைத்து சந்தோசப்பட்டோம். ஃபுளோராவுக்கென்று அழகான வீடும் கொடுத்தார்கள்.


அப்பொழுதான் ஆன்ரி, அவரின் கதை சொன்னா. அந்த லைபிரறி அண்ணனும் பேகர் இனத்தவராம், பிறந்தவுடனேயே தாய் இறந்துவிட்டாவாம், பின்பு தந்தையும் காலமாகிவிட்டாராம், இவர் ஒரு பிள்ளைதானாம், அவரின் அங்கிள் ஒருவர்தான் இவரை வளர்த்தாராம். இப்போ பெரிய குடும்பத்தில் திருமணம் நிட்சயம் என்றதும் அவருக்கும் மகிழ்ச்சியாம் என.


பளீரென்ற பால் வெள்ளை நிற அக்காவுக்கும், கோப்பி நிற அண்ணனுக்கும் திருமணம் இனிதே முடிந்தது. கிறிஸ்தவர்கள், அதே முறைப்படியே திருமணமும் நடந்தது. ஆல்பம் பார்த்தோம் அழகாக இருந்தார்கள்.


அதன் பின்பு, நாமும் அங்கிருந்து வெளிக்கிட்டு விட்டோம். பின்பு ஒரு தடவை ஆன்ரியோடு கதத்தபோது சொன்னா, ஃபுளோரா கர்ப்பமாக இருக்கிறா என்று. பின்னர் சில காலங்களின் பின் போன் பண்ணியபோது, ஆன்ரி அழுவதுபோல கதைத்தா. என்ன ஆன்ரி எனக் கேட்டதற்கு. ஃபுளோராவுக்கு, நல்ல பால்போல ஆண்குழந்தை நோமல் டெலிவறியாகியது, நன்றாகத்தான் இருந்தா, அடுத்தநாள் திடீரென உடம்பெல்லாம் நீலமாகி, ஃபுளோரா இறந்துவிட்டார் என்று.

அதன்பின்பு நான் லைபிரறி அண்ணனின் நிலைமை பற்றி எதுவும் அறியவில்லை. விதி எப்படியெல்லாம் விளையாடுகிறது. அவருக்கு வாழ்க்கையில், நல்ல ஒரு குடும்பத்தைக் கொடுத்து, பத்து மாதத்திலேயே பறித்துக்கொண்டது. இப்படி எத்தனையோ கதைகள் கேள்விப்பட்டதுண்டு, இது எனக்கு தெரிந்தவர்கள் என்பதால், மியாப் பெட்டியில் இடங் கிடைத்துள்ளது.


பின் இணைப்பு:
இவரைக் காணவில்லை:)..., விரைவில் கண்டு பிடித்துக் கொடுப்போருக்கு ..................... வழங்கப்படும்.



இதைப் பொறுமையுடன் படித்த அனைவருக்கும் நன்னி! நன்னி!! நன்னி!!!.(இவர் எங்க வீட்டுப் பிள்ளை...).



===========================
உங்கள் உருவத்தை உங்களுக்கே காட்டிக்கொடுப்பது கண்ணாடி,
உங்கள் உள்ளத்தை மற்றவர்களுக்கு காட்டிக்கொடுப்பது உங்கள் பேச்சு
===========================

Sunday 18 July 2010

என் பரிசுப்பொருள் நீதான்..

நான், என் நண்பியைப் பிரிந்து வந்தபின்னர், முதன்முதலாக அவவுக்குப் போட்ட கடிதத்தோடு, இக் கவிதையையும் எழுதியிருந்தேன்.

இதை, உண்மைகளோடு, சில கற்பனைகளையும் சேர்த்து எழுதியுள்ளேன்.


என் நண்பியே!!!
ஏனோ தெரியவில்லை
இன்று உன் ஞாபகம்
அடிக்கடி வருகிறது
இதயமெல்லாம் வலிக்கிறது..

ஓ.. இப்போதுதான் தெரிகிறது
இன்று திகதி ஆகஸ்ட் 4
நாம் பல்கலைக்கழகத்திலிருந்து
பிரிந்து வந்த இறுதி நாள்,
நாம் நண்பராய்ப் பிரிந்த
அந்தக் கொடிய நாள்
எமது 15 வருட பள்ளி,
கழக நட்பின் கடைசி நாள்..

நான் பிரியாவிடை பெற்று
பிரிந்தபோது - நீ
என் முகம் பார்த்து
வழியனுப்ப முடியாமல்
நிலம் பார்த்து நின்றாயே..

நான் என் அப்பாவுடன்
வண்டியில் ஏறிச்
சென்றபோது நம் வாகனத்தின்
சிகப்பு விளக்குகள்
பத்திப் பத்திச் சென்று
எம் ரீ கடைச் சந்தியில்
மறைந்திருக்குமே..

இல்லை
நீ அதை நிட்சயம்
பார்த்திருக்க மாட்டாய்
ஏனெனில் உன் கண்ணீர்
அவற்றை மறைத்திருக்கும்


நண்பியே - நீ
அடிக்கடி சொல்வாயே
பிரிந்தபின் சந்திக்க நேர்ந்தால்
பரிவுடன் ஓடிவந்து
பழைய நண்பர்களாகவே
கதைக்க வேண்டும்
இவைதான் என்
எதிர்பார்ப்புகள் என்று
என்னுடையதும் அதே...


“நெஞ்சிருக்கும் வரை
நினைவிருக்கும்
அந்த நினைவினில்
உன் முகம் நிறைந்திருக்கும்”
நண்பியே!!!
என் கல்விக்கால
வாழ்க்கையின்
பரிசுப்பொருள் நீதான்!!!!.


இதை இப்போது படிக்கும்போது, பெரிதாக ஏதும் தோன்றவில்லை, ஆனால் அப்போதிருந்த பிரிவின் வேதனை, நெஞ்செல்லாம் கனத்ததுபோல, சாப்பிடமுடியாமல்... எதைப் பார்த்தாலும் நண்பியின் நினைவாக... அந்த வயது.... எல்லாம் சேர்ந்து, இக்கவிதை கிடைத்ததும், நண்பியிடமிருந்து பதில் வந்தது, அன்று முழுவதும் தான் சாப்பிடவுமில்லை, அழுத அழுகை யாருக்குமே தெரியாதென.

அதுக்கு முக்கியமாக இன்னொரு காரணம் நம் நாட்டுப் பிரச்சனை. நினைத்தவுடன் போக முடியாது, இனிமேல் நாம் சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்குமா என்ற ஏக்கம். நாம் இருவரும் பக்கத்துக்கட்டிலிலேயே, நித்திரையாகும் வரை கதைப்போம், ஒன்றாக உடையணிந்து, சாப்பிட்டு, கதைத்து.... இருவருமாகவே இருந்துவிட்டமையால்... திடீரெனப் பிரிந்ததும் சொல்ல முடியாத ஒரு துன்பம்.

பின்னர் அவவின் திருமணம் முடிந்து கணவரோடு எயார்போட்டுக்கு போனபோது, சொன்னார், ஒரு வீட்டிலே நிற்பேன் எப்படியாவது வந்துவிடுங்கோ, இதை விட்டால் இனி எப்போ சந்திப்போமோ தெரியாதென, நான் அப்பாவுடன் ஓடிச் சென்றேன், அவவைப் பார்த்ததும், கணவரைக்கூடக் கவனிக்காமல், ஓடிச்சென்று பாய்ந்து கட்டிப்பிடித்து அழுதது.... (பூனை என்றால் பாயும்தானே என நினைத்திடாதீங்கோ... அது அந்நேரத்து பீலிங்ஸ்ஸ்ஸ்..:)) இப்பவும் கண்ணில் நிற்கிறது.


நேற்று, அந்த நண்பி போன் பண்ணிச் சொன்னார், அதிரா வாற கிழமை உங்களிடம் வருவதாக இருக்கிறோம் என, அதுதான் அந்த நாள் ஞாபகம் வந்துவிட்டது.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நண்பன் நல்லவன் என்றால் நம்பிவிடு
தீயவன் என்றால் விலக்கிவிடு,
நம்பியவனை விலக்காதே
விலக்கியவனை நம்பத் தொடங்காதே
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Tuesday 13 July 2010

மறை பொருள் ரகசியங்கள் - 2

இதன் முதல் பகுதியைக் காண “மியாவை” த் தட்டுங்கள்.


நான் இங்கு போடும் தத்துவங்கள் அனைத்துமே, ஹைஷ் அண்ணனின் “மறைபொருள் ரகசியங்களில்” இருந்து தொகுத்தவைதான்... மேலும் அவரின் புளொக்கைக் காண இங்கே தட்டுங்கள்.

அகத்தவத்தால் இல்லறத்தை அன்பகமாய் மாற்றிடலாம்

எண்ணம் தானாக எழுந்து அலையாமல், எண்ணத்தில் எண்ணமாய் இருப்பதே யோகம்.

விட வேண்டியதை விட்டுவிட்டால், பெற வேண்டியது அனைத்தும் அங்கேயே இருப்பது தெரியவரும்.

அமைதியைப் பெற
பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுதல் இம்மூன்றும் எல்லையின்றித் தேவையாகும்.

நினைவை அடக்க
நினைத்தால் நிலையாது. நினைவையறிய நினைத்தால் நிலைக்கும்.

வருங்காலத்தை கடந்த காலமாக மாற்றுகின்ற இயந்திரம் நிகழ்காலம்.

குழந்தைகளை நாள்தோறும் இரண்டு முறையாவது வாழ்த்தி வர, நல்ல எதிர்காலம் குழந்தைகளுக்கு உண்டு.பூமியைப் போல் பொறுமை வேண்டும்...

நல்ல குழந்தை வேண்டுமானால் பெற்றோர்கள், உடலை, உயிரை, அறிவை செம்மையாகப் பேணிக் காக்க வேண்டும். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்...

பெற்றோர்களுடைய வினை தொடரே குழந்தை. தன் வினை தன்னைச் சுடும்...

பிள்ளைகள் முன்னால் பெற்றோர் சண்டையிட்டால், பிள்ளைகளின் மனநிலை பாதிக்கும். தன்னை காக்கிற கோபத்தை நீங்க வேண்டும்...

கற்பு, அன்பு, பொறுமை, சகிப்புத்தன்மை,தியாகம், தூய்மை, ஒற்றுமை, ஆகிய உயர்ந்தகுணங்கள் யாவும் அடங்கியவை தான் பெண்.ஆயிரம் களம் நெல்லை அழிக்கஒரு அந்து பூச்சி போதும்...

சுயமரியாதை என்பது ஒழுக்கத்தின் பழுத்த கனி.

மௌனம் புரியாதவருக்கு பேசவும் தெரியாது :...

உடலில் இரசாயன மாற்றம் ஏற்படுவதில், நமது எண்ணம் பெரும் பங்கு வகிக்கிறது.

ஆதவன் உதிப்பதற்கு ஆருடம் பார்ப்பது இல்லை...

உறக்கம், மனத்திற்கு மட்டுமின்றி, உடல்செல்கள் அனைத்துக்கும் ஓய்வளிக்க வல்லது.

மறப்பதற்கு சிரிக்க வேண்டும், சிரிப்பதற்கு மறக்க வேண்டாம்...

தம் குழந்தைகளுக்கு உயர் கல்வி, நல் ஒழுக்கம், நற்பண்பு, பக்தி, பிறரை மதிப்பதை கற்றுக் கொடுத்து ஆளாக்குவதே உண்மையான செல்வமாகும்.

ஒரேயடியாக எல்லாவற்றையும் போட்டால் புரியாது, எனவே அடுத்த பகுதியிலும் தொடரும்..

ஒரு வருடமாகக் ஹைஷ் அண்ணன் மறைபொருள் சொல்லித்தந்தார், அது போதாதென, இப்போ நானும் ரிப்பீட் பண்ணுகிறேன்..... இவ்வளவுக்குப் பிறகும் புரியவில்லையே எனக் கண்களை இப்பூடி உருட்டினால், நான் என்ன செய்வது.... தண்ணிக்குள் எதையோ தொலைத்துவிட்டவர்போல்.


இன்று இதுக்கு, முதலாவது கொமெண்ட் போடுபவருக்கு... பரிசாக ஒரு ஆப்பிள் கூடை வழங்கப்படும்... பூனையுடன் அல்ல...

இரண்டாவது கொமெண்ட் போடுபவருக்கு அழகிய கிற்றின் பாஸ்கற் வழங்கப்படும்... பூஸ் குட்டியோடல்ல....



மூன்றாவது கொமெண்ட் போடுபவருக்கு:) 90 வயது ஆயா... இலவசம்... :)
படத்தைப் பின்பு இணைக்கிறேனே...:)

நான்காவது கொமெண்ட் போடுபவருக்கு... உருண்டை மீன் கட்லட்.. நானே என் கையால் செய்தது... நம்புங்கோ...:)




பின் இணைப்பு:
நாங்கள் எப்பவும் அரட்டையடிப்பதில்:) நேரத்தைச் செலவிடுவதில்லை.... எப்பவுமே... உடற்பயிற்சி, யோகா, தியானம் என.. ஆரோக்கியமாகத்தான்...சுறு சுறுப்பு... தேனியைப்போல:).


Friday 9 July 2010

“மியாவ் பெட்டி”

மியாவ் பெட்டி
ஒவ்வொருவரும் அஞ்சறைப்பெட்டி, ரங்குப்பெட்டி, பிய்ந்த பெட்டி.... இப்பூடி எழுதீனமே , நானும் ஏதாவது எழுதலாமே என பலமாக சிந்தித்த இடத்தில் கிடைத்ததே இந்த “மியாவ் பெட்டி” அதுக்குத்தான் கிட்னியை யூஸ் பண்ணோனும் என்று சொல்றது:).


சரி சரி இப்போ விஷயத்துக்கு வருவோம்.... கிட்னிக்கு வேலை கொடுத்த இடத்தில், முன்பு நடந்த சில சம்பவங்கள் நினைவுக்கு வந்தன.

இங்கே பெரும்பாலான ஷொப்ஸ் எல்லாம் ஒரு செயினாகவே இருக்கும்... அதாவது இவை பிரித்தானியா முளுவதும் இருக்கும்.


BOOTS


இது இங்குள்ள பல பார்மஸிகளில் ஒன்று. இங்கே மருந்துப்பொருட்களோடு, அழகுசாதனப்பொருட்கள், குழந்தைகளின் ஆடையிலிருந்து, தேவையான அத்தனை பொருட்களும், மற்றும் பேர்பியூம், ரொயிலறீஸ், இப்படி பொருட்கள் எல்லாம் வாங்கலாம்.

நாங்கள் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் வீட்டில் நிற்பதில்லை, காலையில் வெளிக்கிட்டால் மாலைதான் வீட்டுக்கு வருவோம், சாப்பாடெல்லாம் வெளியிலேயே வைத்துக்கொள்வோம்.

அப்படித்தான் ஒருநாள் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு முன்பு, ஒரு மோலுக்குப் போனோம். அங்கு சுத்தித்திரிந்தோம், சின்னமகன் பிராமில்(pram) இருந்தார். வாங்கும் பொருட்களையெல்லாம், பிராமின் கீழே இருக்கும் பாதுகாப்பு ஏரியாவில் வைத்தோம்(காவும் வேலை இல்லை:)). இப்படியே இந்த பூட்ஸ் பார்மஸிக்கும் போனோம். அங்கு நான் எனக்குத்தேவைப்பட்ட, கண்ணுக்கு, சொண்டுக்கு, நகத்துக்கு..... இப்படியான பொருட்களையெல்லாம் வாங்கினேன்.... கிட்டத்தட்ட 40 பவுண்டுகள் வந்ததாக ஞாபகம். அவர்களது bag இல் போட்டுத் தந்தார்கள்.

பின்பும் வேறு கடைகளுக்குச் சென்று சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டோம். வீட்டுக்கு வந்தால், உடனே ஆராவது ரீ ஊத்துவோம், குடிப்போம்.... பின்னர் படம் பார்ப்பது/ரெஸ்ட் பண்ணுவதுதான் வேலை, வேறெதுவும் அன்று செய்வதில்லை. அப்படியே அன்றைய பொழுதும் முடிந்துவிட்டது, கணவர்தான் bags எல்லாம் எடுத்துவிட்டு பிராமை மடித்து வைத்தார். நான் வாங்கிய பொருட்கள் எதையும் செக்பண்ணவில்லை. அடுத்த நாள் பின்னேரம்தான் பிரீயாக இருக்கும்போது, கியூரெக்ஸ் வாங்கினேனே, அடிக்கலாமே என நினைத்துத் தேடினேன். அந்த bag ஐக் காணவில்லை.

எல்லா இடமும் தேடினேன் கிடைக்கவில்லை, ஏனைய bags எல்லாம் இருந்தது. அப்போ கணவரைக் கேட்டேன், “பூட்ஸ்” இல் தந்த பாக்கை நீங்களோ பிராமில் வைத்தீங்களென?, நினைவில்லையே என்றார், எனக்கும் நினைவில் இருக்கவில்லை. ஷொப்பிலேயே தவறவிட்டோம் என்ற முடிவுக்கு வந்தாச்சு. எதுவும் புரியவில்லை, கார் பூட்டிலும் இல்லை.

ஓக்கே, அடுத்தமுறை கேட்போம் என விட்டுவிட்டோம். நாங்கள் எப்பவுமே பில்லையோ/ மிகுதிக் காசையோ கவனிப்பதில்லை, வாங்கி அப்படியே பாக்கில்/பொக்கட்டில் போடுவது பின்பு ஸ்ரெட் பண்ணிவிடுவோம். இது உடனே என்பதால், பில்லை எடுத்துக் கவனமாக வைத்துவிட்டேன்.

அடுத்த கிழமை போனோம், அங்கே இதற்கெனப் பொறுப்பாக ஒருவர் இருக்கிறார், அவரிடம் சொன்னோம், பில்லைக் காட்டி, அவர் உடனே, தவறவிட்ட bags க்கு என ஒரு ரூம் இருக்கு, அங்கே போய் செக் பண்ணிவிட்டு வந்து சொன்னார், இங்கு இல்லையே, உங்கள் வீட்டில் நன்கு தேடினீங்களோ என்று. நாங்களும் தேடிவிட்டோம் இல்லை என்றோம். சற்று யோசித்தார், உடனே சொன்னார் ஓக்கே... மீண்டும் தருகிறேன் என.... பில்லைப் பார்த்துப் பார்த்து அத்தனை பொருட்களையும் எடுத்துப் போட்டு தந்தார் புன்னகையோடு. நாங்கள் இப்படி எதிர்பார்க்கவில்லை.... புன்னகையோடு வந்துவிட்டோம்.

இரண்டு நாட்கள் போனபின், நான் வக்கியூம் பண்ணும் போது, ஸ்ரெப்சின்(steps) கீழே, மகனின் சைக்கிளோடு ஒரு பாக் தெரிந்தது, எடுத்துப் பார்த்தேன், காணாமல் போன அதே பூட்ஸ் பாக். எனக்கு உடம்பெல்லாம் என்னவோ போலாகிவிட்டது..... எவ்வளவு தவறாகிவிட்டதே என நினைத்தேன். உடனே கணவருக்கு போன் பண்ணினேன், அவர் சொன்னார், அப்படியே வையுங்கோ, கொண்டுபோய்க் கொடுத்திடலாம் என்று.

அதேபோல் அடுத்த கிழமை கொண்டு சென்று, காரிலே மறைவாக இருந்துவிட்டது நாங்கள் கவனிக்கவில்லை என ஒரு குட்டிப்பொய் சொல்லி ஒப்படைத்தோம். அவர்கள் எம்மை நம்பி உடனேயே அனைத்துப் பொருட்களையும் திரும்பத் தந்தார்களே.... அந்த நல்லெண்ணம், எப்பவுமே.. ~Boots~ ஐ நினைக்கும்போது வந்துவிடுகிறது. வாழ்க, வளர்க அவர்கள் சேவை.



TESCO

இது இங்குள்ள பல சுப்பமார்கட்டுகளில், ஒரு ஷெயின் சுப்பமார்கட் ரெஸ்கோ. இதுவும் பிரித்தானியாவில் எல்லா இடங்களிலும் உண்டு. 90 வீதமானவை 24 மணித்தியாலமும் திறந்தே இருக்கும். பெயர்தான் சுப்பமார்கட், ஆனால் இது ஒரு மோல்போல இருக்கும்... இங்கு உடுப்பிலிருந்து, அலங்காரம், சூஸ் வகைகள். எலக்ரிக், மருந்து, சமையல்...., கார்டின் பொருட்கள் அத்தனையும் கிடைக்கும். கிட்டத்தட்ட அனைத்துமே வாங்கலாம். எங்கள் வீட்டுக்கு கிட்டவும் 2 இருக்கு. ஒன்று 10 நிமிடம் ஓட வேண்டும், இன்னொன்று 15 நிமிடம் ஓடவேண்டும். 24 மணிநேரமும் திறந்திருக்கும்.


ஒருநாள் போனபோது, ஒரு அழகான ஷோட்ஸ்(மகனுக்கு), அதன் விலை £15 பவுண்டுகள், ஆனால் சேல் பிறைஸ் £7.50 பவுண்டுகள் என இருந்தது. சரியென எடுத்துவிட்டேன். வீட்டுக்கு வந்துவிட்டேன்.

எப்பவுமே பில் செக்பண்ணும் பழக்கமில்லாத நான், அன்று, இதன் விலையைப் பார்ப்போமே என செக் பண்ணினேன். £15 பவுண்டுகள் என்றே போடப்பட்டிருந்தது. எனக்கு கோபமாக வந்தது, காசு பெரிசில்லை, ஆனால் சேல் எனப்போட்டு ஏமாற்றிவிட்டார்களே என. சேல் என்பதால்தான் எடுத்தேன், இல்லாவிட்டால் எடுத்திருக்கமாட்டேனே என நினைத்துவிட்டு. அடுத்தநாள் போனேன், கஸ்ரொமர் சேர்விசில் போய் காட்டிக் கதைத்தேன், உடனே அந்த லேடி போய்ச் செக் பண்ணினார், பண்ணிவிட்டு வந்து சொன்னார், இது சேல்தான், ஆனால் கசியர் மெசினுக்கு(Till), சேல் பிறைஸ் வந்திருக்கவில்லை. இது எங்கள் தப்புத்தான் எனக்கூறி, மொத்தப்பணத்தையும் திரும்பத் தந்து, ஷோட்ஸ் ஐயும் இலவசமாகத் தந்தார். இப்படித்தப்பு நடந்தால், அவர்கள் ரூல்ஸ் இதுதானாம். இது அடுத்த இன்ப அதிர்ச்சி எனக்கு.

ஆனால் ரூல்ஸ் இப்படி இருந்தாலும், அங்கு சேவீசில் நிற்பவர்களையும் பொறுத்து இருக்கிறது எல்லாம். சிலர் சுவாமி கொடுத்தாலும் ஐயர் கொடுக்கமாட்டார் என்பதுபோலவும் இருப்பார்கள்.

என்ன இருந்தாலும், இந்த இரண்டு நல்ல விஷயங்களையும் “மியாப் பெட்டி” மூலம் வெளியே தெரியப்படுத்துவதையிட்டு... பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

பின் இணைப்பு:
ஸாதிகா அக்கா!!! அதி....ராவைத் தெரியுதோ?


இது எந்த இடம், எவடம்? என்றெல்லாம் கேட்கப்பூடாது, சும்மா ஒரு இடம், கைபோன போக்கில் எடுத்தேன் அவ்ளோதான்:).

எமது நாடுகளில் கிரிக்கெட் மச் போல, இங்கத்தைய நாடுகளில் சொக்கர் மச்சுக்குத்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். ஸ்கூல் எல்லாம் இதே கதைதான். இந்த T-Shirt, மச் ஆரம்பமான அன்றே,எங்கள் மகன் பிளேன் ரீசேட்டுக்கு, தானே எழுதி, கொடியும் கீறி போட்டிருக்கிறார்.



ஓகே, நித்திரை வருகிறதே.... குட்நைட்...