ஆவ்வ்வ் மை முத்துராமன் மாமா:), பாடுபவர் மை பேவரிட் ஜேசுதாஸ் அங்கிள்:)

Tuesday, 13 July 2010

மறை பொருள் ரகசியங்கள் - 2

இதன் முதல் பகுதியைக் காண “மியாவை” த் தட்டுங்கள்.


நான் இங்கு போடும் தத்துவங்கள் அனைத்துமே, ஹைஷ் அண்ணனின் “மறைபொருள் ரகசியங்களில்” இருந்து தொகுத்தவைதான்... மேலும் அவரின் புளொக்கைக் காண இங்கே தட்டுங்கள்.

அகத்தவத்தால் இல்லறத்தை அன்பகமாய் மாற்றிடலாம்

எண்ணம் தானாக எழுந்து அலையாமல், எண்ணத்தில் எண்ணமாய் இருப்பதே யோகம்.

விட வேண்டியதை விட்டுவிட்டால், பெற வேண்டியது அனைத்தும் அங்கேயே இருப்பது தெரியவரும்.

அமைதியைப் பெற
பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுதல் இம்மூன்றும் எல்லையின்றித் தேவையாகும்.

நினைவை அடக்க
நினைத்தால் நிலையாது. நினைவையறிய நினைத்தால் நிலைக்கும்.

வருங்காலத்தை கடந்த காலமாக மாற்றுகின்ற இயந்திரம் நிகழ்காலம்.

குழந்தைகளை நாள்தோறும் இரண்டு முறையாவது வாழ்த்தி வர, நல்ல எதிர்காலம் குழந்தைகளுக்கு உண்டு.பூமியைப் போல் பொறுமை வேண்டும்...

நல்ல குழந்தை வேண்டுமானால் பெற்றோர்கள், உடலை, உயிரை, அறிவை செம்மையாகப் பேணிக் காக்க வேண்டும். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்...

பெற்றோர்களுடைய வினை தொடரே குழந்தை. தன் வினை தன்னைச் சுடும்...

பிள்ளைகள் முன்னால் பெற்றோர் சண்டையிட்டால், பிள்ளைகளின் மனநிலை பாதிக்கும். தன்னை காக்கிற கோபத்தை நீங்க வேண்டும்...

கற்பு, அன்பு, பொறுமை, சகிப்புத்தன்மை,தியாகம், தூய்மை, ஒற்றுமை, ஆகிய உயர்ந்தகுணங்கள் யாவும் அடங்கியவை தான் பெண்.ஆயிரம் களம் நெல்லை அழிக்கஒரு அந்து பூச்சி போதும்...

சுயமரியாதை என்பது ஒழுக்கத்தின் பழுத்த கனி.

மௌனம் புரியாதவருக்கு பேசவும் தெரியாது :...

உடலில் இரசாயன மாற்றம் ஏற்படுவதில், நமது எண்ணம் பெரும் பங்கு வகிக்கிறது.

ஆதவன் உதிப்பதற்கு ஆருடம் பார்ப்பது இல்லை...

உறக்கம், மனத்திற்கு மட்டுமின்றி, உடல்செல்கள் அனைத்துக்கும் ஓய்வளிக்க வல்லது.

மறப்பதற்கு சிரிக்க வேண்டும், சிரிப்பதற்கு மறக்க வேண்டாம்...

தம் குழந்தைகளுக்கு உயர் கல்வி, நல் ஒழுக்கம், நற்பண்பு, பக்தி, பிறரை மதிப்பதை கற்றுக் கொடுத்து ஆளாக்குவதே உண்மையான செல்வமாகும்.

ஒரேயடியாக எல்லாவற்றையும் போட்டால் புரியாது, எனவே அடுத்த பகுதியிலும் தொடரும்..

ஒரு வருடமாகக் ஹைஷ் அண்ணன் மறைபொருள் சொல்லித்தந்தார், அது போதாதென, இப்போ நானும் ரிப்பீட் பண்ணுகிறேன்..... இவ்வளவுக்குப் பிறகும் புரியவில்லையே எனக் கண்களை இப்பூடி உருட்டினால், நான் என்ன செய்வது.... தண்ணிக்குள் எதையோ தொலைத்துவிட்டவர்போல்.


இன்று இதுக்கு, முதலாவது கொமெண்ட் போடுபவருக்கு... பரிசாக ஒரு ஆப்பிள் கூடை வழங்கப்படும்... பூனையுடன் அல்ல...

இரண்டாவது கொமெண்ட் போடுபவருக்கு அழகிய கிற்றின் பாஸ்கற் வழங்கப்படும்... பூஸ் குட்டியோடல்ல....மூன்றாவது கொமெண்ட் போடுபவருக்கு:) 90 வயது ஆயா... இலவசம்... :)
படத்தைப் பின்பு இணைக்கிறேனே...:)

நான்காவது கொமெண்ட் போடுபவருக்கு... உருண்டை மீன் கட்லட்.. நானே என் கையால் செய்தது... நம்புங்கோ...:)
பின் இணைப்பு:
நாங்கள் எப்பவும் அரட்டையடிப்பதில்:) நேரத்தைச் செலவிடுவதில்லை.... எப்பவுமே... உடற்பயிற்சி, யோகா, தியானம் என.. ஆரோக்கியமாகத்தான்...சுறு சுறுப்பு... தேனியைப்போல:).


28 comments :

 1. அதீஸ், மெதுவா படிச்சுட்டு கமன்ட் போடுறேன். உந்த கட்லட் இமாவின் பக்கம் தூக்கிட்டு வந்தது போல இருக்கே. இல்லை சும்மா தான் கேட்டேன்.

  ReplyDelete
 2. நானு..நானு ரெண்டாவது கொமெண்ட்..எனக்கு பூஸ் வேண்டாம்(பூஸ் என்றால் குடித்துக்கொண்டிருக்கும் தண்ணீர் டம்ளரைக்கூட தவற விட்டுவிடுவேன்.அத்தனை பயமாக்கும்.நீங்களே..நீங்களே செய்ததா மீன்கட்லட்..ரெசிப்பி போடலாம்தானே?

  ReplyDelete
 3. அதானே..இமா வுடையது போலத்தான் உள்ளது.அதீஸ் வேண்டாம்..அப்புறம் இமா கேஸ் போட்டு உள்ளே தள்ளிடுவாங்க.

  ReplyDelete
 4. தத்துவங்கள் எல்லாமே சூப்பர்..

  ReplyDelete
 5. அ.கோ.மு.இல்லையா அதிராக்கா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

  தத்துவம் படிக்க வயசு போதாது ஜீனோக்கு. அப்றமா வரன். கிக்,கிக்!

  ReplyDelete
 6. வானதி, தத்துவம் என்றாலே புளிக்குதுபோல எல்லோருக்கும்.. இருந்தாலும், அடிக்கடி எழுதி, எல்லோருக்கும் பிடிக்க வைத்திடுவேன்:).

  //உந்த கட்லட் இமாவின் பக்கம் தூக்கிட்டு வந்தது போல இருக்கே/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), எப்ப பார்த்தாலும் அதிராவில சந்தேகம்தான்... ஜீனோ சாப்பிட்டுப் பார்த்து நல்லாயிருக்கென்றும் சொல்லிட்டுப்போறார்:))

  மிக்க நன்றி வான்ஸ்ஸ்ஸ். உங்களுக்கு ஆப்பிள் கூடை மட்டும்தேன்...

  ReplyDelete
 7. தத்துவங்களை ரசித்தமைக்கு மிக்க நன்றி மேனகா.

  ReplyDelete
 8. அ.கோ.மு.இல்லையா அதிராக்கா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!/// சே...சே...சே... நான் இதை மறந்திட்டேனே ஜீனோ.... அது.. மச்சுக்கு அவிச்சனான் எல்லோ, அடிக்கடி சாப்பிட்டால் உடம்புக்கு கேடு, அதனால்தான். ஐ வில் டூ நெக்ஸ்ட் ரைம் ஓக்கை???... நோ கர்ர்ர்ர்ர்:).

  தத்துவம் படிக்க வயசு போதாது ஜீனோக்கு. அப்றமா வரன். கிக்,கிக்! /// நெடுகவும் உப்பூடிச் சொல்லிக்கொண்டு பப்பியாக இருந்தால் எப்பூடி ஜீனோ? தத்துவங்களும் படித்தால்தான், அக்காவைப்போல பெரீஈஈஈஈஈஈஈஈயாளாக வரலாம்:), ஓக்கை முறைக்க வாணாம். மிக்க நன்றி ஜீனோ.

  ReplyDelete
 9. அதீஸ், வெள்ளைச் சீலை உடுத்த ஆயா உங்களுக்குச் சரிவர மாட்டா. தன்னால ஹைலைட் ஆகிறா. பின்னணி நிறத்தில சீலை உடுத்த வேணும். ;)

  ஆனால் அப்பிடிப் போட்டுட்டுச் சொல்லாட்டியும் உங்களையும் ஹைஷையும் தவிர ஒருவரும் பார்க்க மாட்டினம். நீங்கள் தான் ம.பொ.ர விளங்கிற ஆக்கள். ;))

  ReplyDelete
 10. //என்னிடம் சங்கிலி இருக்கு:)// ம். அன்புச் சங்கிலி. ;)

  ReplyDelete
 11. மூன்றாவது கொமென்ட் போடுபவர்க்கு... ஜீனோ பார்த்திருச்சீ!!
  மீ தி க்ரேட் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்-யா!

  அதிராக்கா..அப்பூடியேதான்! சஸ்பென்ஸ் மெயின்டெய்ண் பண்ணுங்கோ.கிகிக்கிக்!!

  ReplyDelete
 12. என்னாஆஆஅ இது நான் நேற்று பூரி ஜெகன்நாத் தேர் திருவிழா போய் வருவதற்குள் என்னை வைச்சு இப்படி காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க. கிக் கிக்

  பி.கு: நேரம் கிடைக்கும் போது பின்னூட்டம் எல்லாம் படிச்சுக்கிட்டுதான் இருந்தேன். மொனிட்டர் மாதிரி 30 குயர் நோட் புக்கில எழுதி வைச்சு இருக்கேன் பின்னாலே (இது வேற பின்னாலே) பிளேன் ஓட்டும் போது ”அசக் -பசக் -மொசக்”னு கல்லு தூக்கி போட வசதியா இருக்கும் :)))

  ***மீண்டும் மேலே போய் இப்போ வடிவேலு மாதிரி நினைச்சு படிக்கவும்***

  ReplyDelete
 13. இமா said...
  அதீஸ், வெள்ளைச் சீலை உடுத்த ஆயா உங்களுக்குச் சரிவர மாட்டா. தன்னால ஹைலைட் ஆகிறா. ////
  இமா, எனக்கவ சரிப்பட்டுவரமாட்டா என்றுதானே, இப்பூடியெல்லாம் கூத்துப்போட்டு, ஆளைக் கழட்டிவிட்டிட்டேன் சென்னைக்கு:))).

  பின்னணி நிறத்தில சீலை உடுத்த வேணும். ;)/// பின்னணி நிறத்தில உடுத்தினால்....... பிறகு நான் தான் ஏமாறவேண்டிவரும். இது முழுசாப் படிக்காமல்... வட போடுற எங்கட சகோஸ்க்காகச் செய்தது, ஆனால் கடவுள் அவர்கள் பக்கம் இம்முறை கிக்..கிக்...கிக்...

  //:)// ம். அன்புச் சங்கிலி. ;) /// யெச்ச்ச்ச்ச்ச்.

  மிக்க நன்றி இமா.

  ReplyDelete
 14. ஜீனோ said...
  மூன்றாவது கொமென்ட் போடுபவர்க்கு... ஜீனோ பார்த்திருச்சீ!!////
  ஜீனோ.... எனக்குத் தெரியும், நான் சொன்னதாலதானே பிறகு பார்த்தீங்கள்:)))), இதுக்குத்தான் சொல்றது மபொர ஒயுங்காப்படிக்கோணுமெண்டு கிக்..கிக்..கிக்..

  அதிராக்கா..அப்பூடியேதான்! சஸ்பென்ஸ் மெயின்டெய்ண் பண்ணுங்கோ.கிகிக்கிக்!! /// மியாவும் நன்றி ஜீனோ.

  ReplyDelete
 15. This comment has been removed by the author.

  ReplyDelete
 16. ஹைஷ் அண்ணன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... வாணாம் விட்டிடுவோம்:))).

  30 குயர் எண்டால் அது “குட்டி புக்”, ஒரு 60 குயர் வாங்கியிருக்கலாமே:)).

  ///பின்னாலே) பிளேன் ஓட்டும் போது /// கடவுளே இது எப்ப தொடக்கம்?, சரிஞ்சு ஓட்டி முடிஞ்சு இப்போ பின்னாலேயோ? கின்னசில இடம் பிடிக்கிற ஐடியாவாக்கும்:))... எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்ஸ்.

  //பின்னாலே) பிளேன் ஓட்டும் போது ”அசக் -பசக் -மொசக்”னு/// என்ன ஆயா, பின்னால இருந்து வெத்தலை போடுறாவோ?:))).

  மிக்க நன்றி ஹைஷ் அண்ணன்.

  பி.கு:
  என் பதிவைப்படித்துப் பதில் போடாமல், தாங்க தாங்க மனதில என்னவோ, ஏதோ நினைச்சுக்கொண்டுவந்து எழுதிட்டுப்போறாங்கப்பா... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

  ReplyDelete
 17. youtube ரெம்பவே ரசிச்சேன் அதிரா.எ.தே.எ.

  ரோசாபூ அழகாக இருக்குது.அதன் மொட்டு வயலட் நிறமா? நான் இப்படிக்காணவில்லை.

  //விட வேண்டியதை விட்டுவிட்டால், பெற வேண்டியது அனைத்தும் அங்கேயே இருப்பது தெரியவரும்.//மிகவும் பிடித்தமான வரிகள்.

  எல்லா பூசாரும் அழகு.

  சுட்ட ப(ட)ழம் டேஸ்ட் அதிரா.

  ஆச்சியை எல்லாரும் விடுகிறீங்கள் இல்லை.
  நீங்கள் ஏதோ நினைச்சு போட்டீங்கள்.மிஸ்ஸாகிவிட்டது.
  எல்லாமே சூப்பர்ர்ர்ர்ர்.

  ReplyDelete
 18. youtube ரெம்பவே ரசிச்சேன் அதிரா/// மிக்க நன்றி அம்முலு.
  எ.தே.எ.//// அப்பிள் ஐ போனுக்கு புதுசா இது வந்திருக்கு. நாங்கள் சொல்வதை அப்படியே திருப்பிச் சொல்லும். வீட்டில இதுதான் இப்போ எங்கட பொழுது போக்கு, நான் ஹீ..ஹீ...ஹீ... எனச் சிரித்தால் உடனே அதேபோல அவரும் சிரிக்கிறார்.... , சீ.... மூடு வாயை என்றால், அப்படியே திருப்பி எனக்குச் சொல்வார்:)...

  அதை யூ ரியூப்பில் தேடினேன், இதுதான் கிடைத்துது.

  //ரோசாபூ அழகாக இருக்குது.அதன் மொட்டு வயலட் நிறமா? நான் இப்படிக்காணவில்லை// உண்மைதான் அம்முலு, நேரில் பார்த்தபோது நல்ல அழக்கான ஒரு நிறமாக இருந்தது, உடனேயே படமெடுத்து

  வந்தேன். இங்கு இப்போ சொல்ல முடியாத அழகில், என்னென்னவோ கலரிலெல்லாம் ரோசா பூத்துக் குலுங்குகிறது..... இந்த மாதத்தோடு அது முடிந்துவிடும்.

  //ஆச்சியை எல்லாரும் விடுகிறீங்கள் இல்லை.
  நீங்கள் ஏதோ நினைச்சு போட்டீங்கள்.மிஸ்ஸாகிவிட்டது.// யெச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்:). ஆச்சி பாவமெல்லோ:)).

  மிக்க நன்றி அம்முலு.

  ReplyDelete
 19. உருண்டை மீன் கட்லட் பிரமாதம் அதிரா! புகைப்படம் சாப்பிடத் தூண்டுகிறது!

  ReplyDelete
 20. அக்கா, அதிராவை நம்பாதீங்க. அது என் உலகத்தில் இருந்து சுட்டுக் கொண்டு வந்து இருக்கிறாங்க. ;)) போட்டோவை வேற கொஞ்சம் தீய விட்டு இருக்கிறாங்க. இல்லாவிட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.

  பாராட்டுக்கு நன்றி அக்கா.

  ReplyDelete
 21. பூஸ் பாலில் பப்பி தூக்க மாத்திரை கலந்து கொடுத்ததோ அதிஸ்?

  மூன்றாம் பரிசு.. இமா கண்ணில பட்டதால எங்கண்ணிலும் பட்டது..

  எனக்கு அந்த நாலாவது பரிசு மட்டும் வேனும். ந்யூ ஆன்ரி கிட்ட இருந்து தூக்கி வர காக்கா அனுப்பியிருக்கேன்.. பார்க்கலாம்..

  ம பொ ர - நல்லாயிருந்தது அதீஸ்.. நன்றி..

  ஆனாலும், ம பொ ர எண்டு தலைப்பிட்டாலே எட்டிப் பாக்க பயமாத் தான் இருக்குது.. உங்க அண்ணாத்தை கிட்ட சொல்லீடாதையுங்கோ..

  ReplyDelete
 22. யூட்யூப் வீடியோ சூப்பர்.நான் உங்க பூஸ் கலெக்ஷனின் ரசிகை அதிரா! கடைசில இருக்க யோகாகேட் க்யூட்!

  தத்துவங்கள் அனைத்தும் அருமை!

  ReplyDelete
 23. மனோ அக்கா வாங்கோ, மிக்க நன்றி. அது இமாவினுடையது, நான் களவெடுத்து வந்து போட்டிருக்கிறேன்:), எனக்கு கட்லட் என்றால் மிகவும் பிடிக்கும்.

  உங்கள் வாழ்த்தை இமாவிடம் கொடுத்துவிடுகிறேன். இல்லாதுவிட்டால், இமா எனக்கு கர்ர்ர்ர்ர் சொல்லுவா:).

  ReplyDelete
 24. இமா said...
  அக்கா, அதிராவை நம்பாதீங்க. அது என் உலகத்தில் இருந்து சுட்டுக் கொண்டு வந்து இருக்கிறாங்க. ;)) போட்டோவை வேற கொஞ்சம் தீய விட்டு இருக்கிறாங்க. இல்லாவிட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.

  பாராட்டுக்கு நன்றி அக்கா.///

  அட கடவுளே!!! இதைவிட நேசறிப் பிள்ளைகள் எவ்ளோ பெட்டர்:))))).

  அதிரா, தான் தான் செய்தேன் எனச் சொல்லிடுவாவோ என்ற பயத்தில:), ஓடிவந்து, நன்றியும் சொல்லிட்டா:).

  என்ன இருந்தாலும் இமா, கட்லட் செய்த உங்களையும், களவெடுத்துப்போட்ட என்னையும்விட:), இது பேமஸாகியதற்கு முக்கிய காரணம்... “இது உருண்டை மீனிலயோ செய்தது?”:), எனக் கேட்டவரையே சேரும்:), உருண்டை மீனால தான் இக் கட்லட்டுக்கு அவ்ளோ எழுப்பம்:).

  பின் குறிப்பு:
  இந்தக் கட்லட்டை இமாதான் செய்தவ....
  இமாதான் செய்தவ... நானில்லை... நானில்லை...
  நான் எண்டால் இப்பூடிக் கருகப் பொரிக்காமல் நல்ல அயகா:) செய்திருப்பேனெல்லோ... என்னை நம்புங்கோ:).

  கட்லட்டுக்கு நன்றி இமா.

  ReplyDelete
 25. ஆங்..சந்து வாங்கோ... சந்துவைக் கண்டாலே, ஒரு அ.கோ.மு சாப்பிட்டுவிட்டுத்தான் நான் பதிலுக்கு ரெடியாவேன்:).

  பப்பி தூக்கமருந்து போடவில்லை, அவர் பாட்டுப்பாடினவர்...:)).

  ந்யூ ஆன்ரி கிட்ட இருந்து தூக்கி வர காக்கா அனுப்பியிருக்கேன்.. பார்க்கலாம்.. // நான் தான் மொத்தமா தூக்கிக்கொண்டு வந்திட்டனே, இனிக் காக்கா என்ன பண்ணும்?:))). வேணுமெண்டால் அந்த நெப்போலியன் ட்ரேயைத் தூக்கிவரச் சொல்லுங்கோ:).

  ம பொ ர - நல்லாயிருந்தது அதீஸ்.. நன்றி../// இந்த நன்றி, சேரவேண்டியவருக்குப் போய்ச் சேரும் சந்து.

  ஆனாலும், ம பொ ர எண்டு தலைப்பிட்டாலே எட்டிப் பாக்க பயமாத் தான் இருக்குது.. உங்க அண்ணாத்தை கிட்ட சொல்லீடாதையுங்கோ.. /// எனக்குத் தெரியும் சந்து, நிறையப்பேருக்கு எட்டிப்பார்க்கப் பயமாகத்தான் இருக்கு, ஆனால் என்ன மறைபொருள் இருக்கு என வந்து பார்த்தவர்கள் அதிகம். நான் செக் பண்ணிய இடத்தில், இத்தலைப்புக்குதான் அதிகம் பேர் வந்து பார்வையிட்டிருக்கிறார்கள்.

  இங்கு ஒரு White Lady, என்னோடு கதைப்பா. அவ , தியானம், ஹீலிங் எல்லாத்திலும் பங்குபற்றியிருக்கிறாவாம், இங்கே பல வருடங்களாக யோகா ஆசிரியராக இருந்திருக்கிறா, இது முன்பு எனக்குத் தெரியாது, போனகிழமை சந்தித்தபோதுதான், இதுபற்றிக் கேட்டேன்... இப்போ தான் இடம் மாறியிருப்பதால் போவதில்லை எனச் சொன்னா.

  நான் சொன்னேன் I am doing some breathing exercises என்று, உடனே சொன்னா thats why, your face looks very bright and fresh என்று. என்னை விடுங்கள், நான் இதை ஏன் சொல்ல வந்தேன் என்றால், இப்படி மூச்சுப்பயிற்சி செய்வதால், இப்படியான மாற்றங்கள் முகத்தில் உருவாகும் என, அவ மனதில் இருந்தமையாலேயே, வார்த்தையில் அப்படி வந்திருக்கிறது. அப்போ நாம், மூச்சுப்பயிற்சி, தியானம் எல்லாம் செய்வது மிகவும் நல்லதுதான். பணம் கொடுத்தல்லவோ பழகுகிறார்கள்....

  என் முந்தைய மபொர தலைப்பிலே போட்டிருக்கும், அறுசுவையிலுள்ள, மபொர பகுதிகளில்....., சில மூச்சுப்பயிற்சிகள், விளக்கமாக ஹைஷ் அண்ணன் எழுதியிருக்கிறார், விரும்புபவர்கள் பார்த்துப் பயனடையட்டும்.

  ///உங்க அண்ணாத்தை கிட்ட சொல்லீடாதையுங்கோ./// சே... சே.. சே... படிச்சதும் கிளிச்சிட்டேன்(ஆங்.... கரெக்ட் “ளி” போட்டிட்டேனோ??? அல்லது அது வேற இது வேறயோ? கடவுளே... நான் உண்மையிலயே கொயம்பிட்டேன்...

  மிக்க நன்றி சந்து.

  ReplyDelete
 26. மஹி வாங்கோ மிக்க நன்றி.

  நான் உங்க பூஸ் கலெக்ஷனின் ரசிகை அதிரா/// எனக்கும் ரொம்ப பிடிக்கும்:).

  இன்று நான் வெளியே ஒரு அமைதியான சோலையான பாதைவழியே வந்துகொண்டிருந்தேன், ஒரு பூஸார், புஸ் என ஓடியதைக் கண்டேன், அது வன்வே என்பதால், பின்னாலே ஏதும் வாகனமும் வரவில்லை, அப்போ என்னுடையதை நடுரோட்டில் நிறுத்திவிட்டு, அப்படியே ஒவ்வொருமரமாக லுக்கு விட்டேன், ஒரு மரக் கிளையில் அழகாக இருந்து என்னைப் பார்ப்பது தெரிந்தது, ரோட் என்பதால் நீண்ட நேரம் மினக்கெட்டுப் படமெடுக்க முடியாமல் வந்துவிட்டேன்:(((.

  ReplyDelete
 27. //thats why, your face looks very bright and fresh//

  இதுக்காகவே செய்யனும் அதீஸ் :))

  ReplyDelete
 28. Santhu, Don't delay, Start today.
  All the best.

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.