நல்வரவு_()_


Showing posts with label காதலிக்கு ஒரு கடிதம்.... Show all posts
Showing posts with label காதலிக்கு ஒரு கடிதம்.... Show all posts

Tuesday, 2 March 2010

காதலியே கை விட்டாய்!!!!



காதலிக்கு ஒரு கடிதம்!!!
என் கனவுகளைக் கலைத்தவளே காதலியே கைவிட்டாய்
நினைவுகளைக் குலைத்தெனது நிம்மதியைப் போக்கிவிட்டாய்
ஆரம்ப நாட்களிலே அஞ்சினேன் உனைக்காண
எப்படி இருப்பாயோ? என்னென்ன கேட்பாயோ?
என்றெல்லாம் தயங்கினேன் இரவெல்லாம் விழித்திருந்தேன்!!

நாளும் குறித்தனர் நாம் சந்திக்க
நடுங்கினேன்.. உனைப்பற்றி நான் சிந்திக்க
ஆறுதல் தந்தான் அருமை நண்பன்
அறிமுகம் செய்தான் உன் சகோதரிகளை!!


அவர்களைப் போலவேதான் அன்பே நீ இருப்பாய் என்று
அச்சத்தை ஓட்டினான் ஆசைபல ஊட்டினான்
முத்தான முத்தே உன் மூத்த சகோதரிகளான
பத்துப் பேரையுமே பார்த்துக்கொண்டேன் நன்றாக!!



அந்த நாளும் வந்தது அறைக்குள்ளே காத்திருந்தேன்
கறுப்பு டிஷைன் போட்டிருந்த வெள்ளைநிற உடையினிலே
சிரிப்புமலர் போலசைந்து சித்திரமே நீ வந்தாய்
ஆவலோடு கரங்களிலே அள்ளியுனை நானெடுத்தேன்!!

அந்தோ என் செய்வேன்? அன்று நான் ஏமாந்தேன்..
சற்றேனும் உன்னிடத்தில் சகோதரிகள் சாயலில்லை..
முற்றிலும் புதியவளாய் மோசக்காரி நீயிருந்தாய்...
அன்று நீ - நீயாக இல்லாமல், உன் அக்காமார் போலிருந்தால்..


“இன்று நான் பட்டதாரி ஆயிருப்பேன் பரிதவித்து நிற்கமாட்டேன்”

((என்ன எல்லோருக்கும் பீலிங்ஷாக இருக்கோ?:):), பத்து வருட வினாத்தாள்களை மட்டுமே பார்த்துவிட்டு, தேர்வில் எதிர்பார்த்த கேள்விகள் வராததால், தோல்வி அடைந்த மாணவர், பின்னொரு நாளில், அந்தக் கேள்வித்தாளை, காதலியாக நினைத்து வடித்த கவிதை... பல பல வருடங்களுக்கு முற்பட்டது))

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

நாங்களெல்லாம் எதிரியைக் கூடக் காப்பாற்றி....



பாசமாய்!! அன்பைப் பொழியும் பரம்பரையாக்கும்....



பின் இணைப்பு:
கடவுளை மற எனச் சொல்லும் கருத்து சரிதானா.. தெரியவில்லை.. மனதுக்கு வாசகம் பிடித்திருந்தது...



~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
"எதையும் தாங்கும் இதயம் இருந்தால், இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்"... அண்ணா.
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~