நல்வரவு_()_


Thursday 28 May 2020

சிட்டைக்🐈 காத்பெதும்பை:))

மாசமோ வைகாசி மாசம், குளிர் வேறு இருந்து கொண்டே இருந்தது, ஊஊஊஊ என மழை இலேசாகத் தூறிக் கொண்டிருந்தது. காற்றும் கொஞ்சம் நல்ல்ல்ல் என வீசிக்கொண்டிருக்க, ஏதோ நான் வணங்கும் தெய்வம், எனக்கு ஒரு உசார் தந்தது, வெளியே போய், செடிகளைப் பார்த்துப்போட்டு வா... பூச்சி புழுக்கள் ஏதும் இருக்கலாம், இரண்டு நாட்களாக எட்டிப் பார்க்காமல் இருக்கிறாய் என ஆரோ ஒருவர் என் உள்ளே இருந்து என்னை வெளியே உந்துவதுபோல ஒரு ஃபீலிங்ஸா இருந்திச்சா.. பூட்ஸ் ஐயும் போட்டு, ஜக்கெட்டையும் போட்டுக் கொண்டு, கிளவுஸ் ஐயும் போட்டபடி.. அந்த மெல்லிய ஊஊஊ மழையில இறங்கி, என் செடிகளைத் தடவிப் பார்க்கத் தொடங்கினேன்..

Tuesday 26 May 2020

கேக்கில் நூறு வகை🜓
 அதில நான் செய்தது இரண்டு வகை❁❀

சே சே அதிரா எவ்ளோ பெரிய ஆள் [சமையலில், உருவத்தில் அல்ல கர்ர்:)] என்பதை முழுமையாக இங்கின காட்டவே முடியல்லியே:)).. வெள்ளிக்கிழமையிலிருந்து போஸ்ட் ஒன்று எழுத நினைக்கிறேன், இன்னும் ஆரம்பிக்கவே இல்லை, சரி... தோஓஓஒ எழுதிக்கொண்டிருக்கிறேன்:)..

ஓவரா அலட்டினால் உங்களுக்கும் பிடிக்காது.. எனக்கும்தேன்:)... அதனால நான் செய்து, வீட்டில பாராட்டுப்பெற்று, 5 நிமிடத்திலேயே முடிஞ்சு போன:), ரெண்டுவகைக் கேக்கை இங்கு சொல்லப்போறேன்...

முதலாவது வகை.

சொக்கலேட் மாபிள் கேக்
சீனி - 1 கப்[1 1/2 கப் போட்டால் நல்ல இனிப்பாக இருக்கும், இது இனிப்பு குறைவாக இருந்தது]
எண்ணெய்[refined oil]/வெண்ணெய் - 1/4 கப் 
பால் - 1 கப் [கொஞ்சம் கூடத் தேவைப்படலாம்]
plain flour - 1 1/2 கப்
கொக்கோ பவுடர் - 4 தே.கரண்டி
பேக்கிங் பவுடர் - 1 தே.கரண்டி
பேக்கிங் சோடா - 1/2 தே.கரண்டி

இந்த வகைக் கேக்குகள் எல்லாம் மிக மிக ஈசியானவை, ரெடி பண்ண கொஞ்ச நேரம் போதும்..

முதலில் மாவுடன் பே.பவுடர், சோடாவைக் கலந்து ஒரு தரம் அரித்து ஒன்றாக்கி எடுத்து வைக்கவும்.

பேக்கிங் ட்ரேயை எடுத்து, நன்கு பட்டர் தடவி வைத்துக் கொள்ளவும்..

பின்பு சீனியை[சுகர்] மிக்ஸியில் போட்டு மாவாக்கி எடுத்து, அதனுள் எண்ணெயை ஊற்றிக் கலந்து, அதனுடன் ஒரு கப் பாலை ஊற்றி நன்கு கலக்கவும்.

பின்பு ரெடியாக்கி வைத்துள்ள மாவை அதனுள் போட்டு, கட்டி இல்லாமல் நன்கு கலக்கவும்.. இப்படிக் கலந்து முடிந்ததும், மாவின் தன்மை, தோசை மாப் பதம்போல வர வேண்டும், ஆகவும் தண்ணி ஆகிடாமலும், கட்டியாக இல்லாமலும் இருக்க வேண்டும்.

அதற்காககத்தான், தேவைப்பட்டால், கொஞ்சம் இன்னும் பால் ஊற்றிக் கலக்கவும். பால் குளிராக இல்லாமல், கொஞ்சம் அறை வெப்பநிலைக்கு சூடாக்கிப் பாவிக்கவும்.. இவ்ளோதான் மற்றர் ஓவர்:)!!!

அடுத்து, கலக்கி வைத்திருக்கும் மாக்கலவையை, இரண்டாகப் பிரித்து, ஒன்றினுள் மட்டும் கொக்கோ பவுடரை சேர்த்து மிக்ஸ்ட் பண்ணிப்போட்டு, 

வேறு வேறு கரண்டிகள் பாவித்து, முதலில் ஒரு குட்டிக்கரண்டி மாவை நடுவில் ஊற்றி, பின்பு கொக்கோவில் ஒரு குட்டிக் கரண்டியை அதன் நடுவில் ஊற்ற வேண்டும்.. இப்படி மாத்தி மாத்தி ஊத்தும் போது, இங்கு படத்தில் ஊத்தியதைப்போல பரந்து விரிந்து வட்டமாகும்.

அனைத்தும் ஊத்தி முடிஞ்சதும், ஒரு பாபகியூ ஸ்ரிக் அல்லது ஏதும் கூரிய ஆயுதம்:) எடுத்து, இங்கு கடசிப் படத்தில் உள்ளதைப்போல கோடுகள் போட்டு பற்றன் மேக் பண்ணவும்...

அவணை 3-4 காஸ் மார்க்கில் விட்டு, 25-30 நிமிடங்கள் அவித்து எடுக்கவும். அடுப்பிலும் செய்யலாம்.. அந்த முறையைக் கீழே சொல்கிறேன். பட்டர் நைவ் ஆல் குத்திப் பார்த்தால், ஒட்டாமல் இருக்கவேண்டும் அதில் மா, அப்போ ரெடி ஆகிவிட்டது என அர்த்தம்... மற்றர் ஓவர்:)!!!!


ஆவ்வ்வ்வ் இதோ அதிராவின் அழகிய கேக் ரெடீஈஈஈஈஈ:))

=================🜋இடைவேளை🜋===============
சே சே இதென்ன இது, கேக் செய்த இடைவேளையில், அபச்சாரம் அபச்சாரம் ஹா ஹா ஹா:)
================🝝🝝🝝===============
இது ரெண்டாவது கேக்கூஊஊஊ:)...

கேக் எனும்போது, எனக்கு எப்பவுமே ஒரு நினைவு வரும். ஊரில் ஒரு பையன், அவர் கொஞ்சம் விவேகம் குறைவானவர், வீடுகளுக்கு வந்து, சொல்லும் வேலை எல்லாம் செய்துபோட்டு பணம் வாங்குவார்.

அவருக்கு பணத்தோடு சாப்பாடும் குடுப்போம். அப்போ ஒருநாள் காலையில், அம்மா கேட்டிருக்கிறா, சாப்பிட்டுப்போட்டு வேலை செய், என, அப்போ சொன்னாராம், இல்லை இப்போ வேண்டாம், நான் கேக் சாப்பிட்டு விட்டேன் என, இந்தக் காலையில கேக் ஆ? எங்கு சாப்பிட்டாய் என, அவர் சொன்னாராம் அது வெள்ளைக் கேக், பக்கத்து வீட்டில் என்று. பின்புதான் பக்கத்து வீட்டு ஆன்ரியிடம் விசாரித்தபோது, அவ சொன்னா அது கேக் அல்ல இட்லி என்று ஹா ஹா ஹா.

நம் நாட்டில் புட்டு இடியப்பம்தானே நம் தேசிய உணவு:), எங்கும் செய்வார்கள், கடைகளிலும் கிடைக்கும், இட்லி தோசை குறைவான கடைகளில்தான் கிடைக்கும், வீடுகளிலும் கிழமையில் ஒருதடவை.. இப்படித்தான் செய்வது வழக்கம், அதனால இப்படி வறிய குடும்பத்தில் இருப்போருக்கு இவை தெரிய நியாயமில்லை. இப்போ எல்லாக் கடைகளிலும் எல்லாம் கிடைக்கிறதாம். 

ஓகே ஓகே மெய் மறந்து கதை கேட்டது போதும் வாங்கோ வகுப்பறைக்குள் நுழைவோம்:)

ஈசி சொவ்ட் கேக்
பிளேன் ஃபிளவர்/ஓல் பேப்பஸ் ஃபிளவர் - 1 கப்
பட்டர்/எண்ணெய் - 1/4 கப்
தயிர் -1/2 கப்
சீனி[சுகர்] - 1/2 கப்
பேக்கிங் பவுடர் - 3/4 தே கரண்டி, பே.சோடா - 1/4 தே.க.

வழமைபோல மாவுடன், பேக்கிங் சோடா, பவுடர் சேர்த்து அரித்து எடுத்து வைக்கவும்.

கேக் பேக் பண்ணப்போகும் பாத்திரத்தில் எண்ணெய் அல்லது வெண்ணெய் நன்கு தடவி, மேலே பிளேன் ஃபிளவர் கொஞ்சம் போட்டு நன்கு பிரட்டி எடுத்து வைக்கவும், அப்போதான் கேக் ஒட்டாமல் வரும்.

பின்பு சீனியை கொஞ்சம் பவுடராக்கி, எண்ணெயும் தயிரும் சேர்த்து நன்கு கலக்கவும்.. விரும்பினால் வனிலா எசன்ஸ் கொஞ்சம் சேர்க்கலாம்[இது அனைத்துக் கேக்குக்கும் சேர்க்கலாம்]

அதனுள் ரெடியாக்கி வைத்திருக்கும் மாவையும் சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கலக்கவும்.. ரெடியாக்கிய கேக் பாத்திரத்தில் ஊத்தவும்.

இங்கும் அதேபோல, கொஞ்சம் பால் சூடில்லாத பதமாக வைத்திருக்கவும், மாவின் பதம், தோசைப்பதம்போல வரும் வரை பால் சேர்த்துக் கலக்கவும்.. 

இது நான் அடுப்பில் செய்த முறையைக் காட்டுகிறேன்..
அடுப்பில் செய்வதற்கு, ஒரு அடிகனமான பாத்திரத்தை எடுத்து, அடியில் கொஞ்சம் உப்பு போட்டு,

அடுப்பில் வைத்து கொஞ்சம் ஹீட் பண்ணி, உப்பு சூடானதும், இந்த கேக் பாத்திரத்தை வைத்து மூடி, மிடியம் ஹீட்டில் அவிய விடவும்... படம் எடுக்க தவறிவிட்டேன், உப்பின் மேல் ஒரு கம்பித்தட்டு ஏதும் வைத்து அதன்மேல் பாத்திரத்தை வைக்கவும், நேரடியாக உப்பில் வைத்தால், அடிப்பகுதி கருகிவிடும்.

 அரை மணித்தியாலம் எடுக்கும்

நல்ல கலர் வந்ததும், அதேபோல கத்தியால குத்திப் பார்த்து ஒட்டாமல் வந்தால் உடனே இறக்கி ஆறவிட்டு எடுக்கவும்
 மேலே செய்ததைப்போல அவணிலும் வைத்து எடுக்கலாம், இரண்டிலும் முடிவு ஒன்றுதான்:)

அதிரா செய்த டபிள் கலர் ஜெலியையும் சேர்த்துச் சாப்பிடலாமே.. லாமே:))


இன்று ஒரு திருக்குறள் குறிப்பு:)

சமையலுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை:)

ஊசிக் குறிப்பு
இதை எனக்கு அனுப்பினவர் என் அன்பான எதிரி  எனச் சொல்ல மாட்டேனே:))

ஊசி இணைப்பு
∰∰∰🙏🙏🙏∰∰∰

Thursday 21 May 2020

பிஞ்சுப் பூஸானந்தாவின்🙇 சொற்பொழிவுகள்:)

காந்தித்தாத்தா என்ன சொன்னார்?  “கண்டது கற்கப் பண்டிதராவாய்” எனச் சொன்னாரெல்லோ?:)).. சரி காந்தியா சொன்னார் என ஜண்டைக்கு வரக்குடா கர்ர்ர்ர்:)).. அதனாலதான்  “அதிராவின் ஆச்சிரமம் வந்தால் ஞானியாவீர்கள்”:).. நான் கண்டது கேட்டதெல்லாம் இங்கு எழுதியிருக்கிறேனாக்கும்:)).. எப்பூடியாவது உங்களில் பாதிப் பேரையாவது ஞானி ஆக்கினால்தான், இந்த உசிறூஊஊஉ இந்த உடம்பை விட்டு வெளியேறுமாக்கும்:)) ஹா ஹா ஹா:)..
))))))))))))))))))))))))))))))))))))))))))_()_(((((((((((((((((((((((((((((((((((((((((((

சிலர் புலம்புவார்கள் “என்னடா வாழ்க்கை இது” எதைச் செஞ்சாலும் தோல்வியாகவே வருதே என.., அப்பூடி எல்லாம் சொல்லப்பிடாதாக்கும்.... வாழ்க்கையில் வெற்றி கிடைக்க வேண்டுமெனில்..

1. நம் உறவுகளை, நட்புக்களை மேன்படுத்தியும், நல்ல விதமாகவும் பேண வேண்டும்... இவை இருந்தால்தான் வெற்றி சாத்தியம்

2. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், கை விடாமல், பயப்படாமல், றிஸ்க் எடுக்கப் பழகுங்கள்.. றிஸ்க் எடுத்தால் தான், வெற்றி அல்லது தோல்வியாவது கிடைக்கும்.

3.தோல்வி கிடைத்தால் துவண்டிடக்கூடாது, ஏனெனில் வெற்றி கிடைப்பதே தோல்வியின் மூலம்தான்:)..

“தோற்றவர் புன்னகைத்தால், வெற்றி பெற்றவர், வெற்றியின் சுவையை இழந்து விடுகிறார்”... பு.பூஸானந்தா:)
))))))))))))))))))))))))))))))))))))))))))_()_(((((((((((((((((((((((((((((((((((((((((((

வாழ்க்கையில் எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை, அதனால என்னிடம் என்ன இல்லை, அடுத்தவர்களிடம் அது இருக்கிறதே என எண்ணி ஏங்காமல், என்னிடம் என்னவெல்லாம் இருக்கிறது என்பதைப் பட்டியல் போட்டுப் பாருங்கள், மனம் நிறைவடையும்.
))))))))))))))))))))))))))))))))))))))))))_()_(((((((((((((((((((((((((((((((((((((((((((

மழையின் வீழ்ச்சி என்பது முடிவு அல்லவே, அந்த முடிவில இருந்து மீண்டும் தண்ணி ஆவியாகி மேலே போய், மீண்டும் மழையாகிறது, இலைகள் உதிர்வது மீண்டும் மரம் தளைக்கவே..

அருவியின் முடிவில்தானே ஆறு ஆரம்பமாகிறது, எனவே நமக்குத் தேவை தன்னம்பிக்கை, எப்பவும் தன்னம்பிக்கையைக் கைவிட்டிடக்கூடாது.
))))))))))))))))))))))))))))))))))))))))))_()_(((((((((((((((((((((((((((((((((((((((((((
இப்படங்களுக்கு, இன்ஸ்டண்ட் ஆகக் கவித.. கவித..:) சொல்ல முடியுமோ?:).. அல்லது ஆறுதலாகக் கூட உங்கள் போஸ்ட்டில் போடலாம்..

================================
இந்த ஆட்டுக் குட்டியையும், குழந்தையையும் பார்த்ததும் எனக்கு பழைய நினைவு வந்தது, எங்கள் வீட்டில் சில ஆடுகள் இருந்தன, அதில் ஒன்றுக்கு கண் சரியாகத் தெரியாது, ஆனால் வெளியே போய்ப் புல் மேய்ந்து வரும், அது ஒரு குட்டி போட்டது, அக்குட்டியை வளர்த்தது நான் தான்:)).. எந்நேரமும் ஒரு பக்கத் தோளில், குழந்தையைத்தூக்குவது போல தூக்கித் திரிவேன்:)).
))))))))))))))))))))))))))))))))))))))))))_()_(((((((((((((((((((((((((((((((((((((((((((

இது நல்லாயிருக்கில்ல?:))

மனிதா
விலங்கை வணங்கு
குறிப்பாகக் குரங்கைக் கும்பிடு
உன் மூதாதையர்க்கு
முதல் வணக்கம் போடு

ஒவ்வொரு விலங்கும் உன் ஆசான்
கற்க கற்றபின் நிற்க 
அதற்குத் தக

விலங்குகள் நம்மினும்
மானமுள்ளவை
யானையின் காலில்
யானை விழுந்ததாய்த்
தகவல் இல்லை

பூனைக்கு எலிகள்
பல்லக்குச் சுமந்ததில்லை:)

கரடிக்கு மான்கள்
கால் பிடித்து விட்டதில்லை
ஒன்று சுதந்திரத்தின் வானம்,
இல்லை மரணத்தின் பள்ளம்
இடைப்பட்ட வாழ்க்கை
விலங்குக்கில்லை
(வைரமுத்து அங்கிளின் பெரிய கவிதையில் ஒரு பகுதியை இங்கு பார்த்து எழுதினேன்)
))))))))))))))))))))))))))))))))))))))))))_()_(((((((((((((((((((((((((((((((((((((((((((

ஒரு கணவன் மனைவிக்குக் குழந்தைகள் இல்லை, அந்த வீட்டுக்கு புலாலியூர்ப் பூஸானந்தாபோல ஒரு சாமியார் போனார், அவரை அந்தம்மா நன்கு கவனிச்சு உணவளிச்சா, மனம் மகிழ்ந்த சாமியார் கேட்டார்.. குழந்தாய் உனக்கு குறை ஏதும் உள்ளதோ?.. அதற்கு அப்பெண் சொன்னா,  “சாமி எங்களுக்கு இன்னும் குழந்தைகள் கிடைக்கவில்லை, செய்யாத வைத்தியமில்லை, போகாத இடமில்லை”..

சாமியார் சொன்னார்,  “ஒரு தடவை உன் கணவரை எருசலேம் போய், அங்கு இருக்கும் மாதாவின் முன்னால் ஒரு விளக்கை ஏற்றி விட்டு வரச்சொல், உனக்குக் குழந்தைகள் கிடைக்கும்”...
எனச் சொல்லிப்போட்டு சாமியார் போய் விட்டார்.

அதேபோல, கணவரிடம் மனைவி சொன்னா, கணவரும் சம்மதிச்சு, எருசலேம் போய், விளக்கேற்றி விட்டு வந்தார்...

சுமார் 10, 11 வருடங்கள் கழிச்சு, இந்தச் சாமியார் திரும்ப வந்தார், வீட்டில் குழந்தைகள் இருப்பதைப் பார்த்து, உன் கணவர் எங்கே எனக் கேட்டார்..
அதுக்கு அப் பெண் சொன்னார் “சாமி, நீங்கள் சொல்லியதைக் கேட்டு, என் கணவர் சென்று விளக்கேற்றி விட்டு வந்தார், அதிலிருந்து ஒவ்வொரு வருடமும் குழந்தை பிறந்து கொண்டே இருக்கிறது, தடைப்பண்ண முடியவில்லை, அதனால அந்த விளக்கை அணைத்துவிட்டு வரப் போயிருக்கிறார் மீண்டும்” என:)). ஹா ஹா ஹா .. படிச்சிட்டு ஏதோ சோகப் படம் பார்த்த பீலிங்ஸில இருக்காமல் சிரிக்கோணும் ஜொள்ளிட்டேன் கர்ர்ர்ர்ர்:))
))))))))))))))))))))))))))))))))))))))))))_()_(((((((((((((((((((((((((((((((((((((((((((

 “மீன் போன அடிச்சுவட்டையும் அறிய முடியாது
பறவை பறந்த சுவட்டையும் அறிய முடியாது,
அதேபோல, ஞானிகள் சென்ற வழியையும் 
அறிய முடியாது”

“வெறும் புத்தகங்களைப் படிப்பதன் மூலம்,ஞானம் பெற்றுவிட முடியாது,
யாராவது ஒருவர் ஆறுதல் சொன்னால்தான்,அழுகை அடங்குகிறது
அதேபோல, யாராவது ஒரு ஞானி ஆசிரியரிடம்[அதிராவைப்போல:)]
 உபதேசம் கேட்டுக் கொண்ட பின்னாலேதான்,
 ஏற்கனவே இருந்த மனோபாவம் மாறி, ஞானி ஆக முடியும்”
இவ்வரிய தத்துவங்களை உங்களுக்கு அள்ளித் தெளித்தவர்.. உங்கள் அன்புக்கும் பண்புக்கும் நேசத்துக்கும் பாசத்துக்கும் பாத்திரமான:) புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்:))
=====================================
ஊசி இணைப்பு

 ஊசிக் குறிப்பு

)))))))))))))_()_((((((((((((

Sunday 17 May 2020

இது திருநெல்வேலி ஸ்பெஷல்:) 
உளுந்து சாதம், எள்ளுத் துவையல்

ஹா ஹா ஹா பாகுபலி ரேஞ்சுக்கு:) சிலர் ஊர்ப்பெயரைத் தோளில சுமக்கின்றனர்:), ஒருவர் சென்னையில இருக்கிறார் ஊர்ப் பெயரோடு:)), இன்னொருவர் அம்பேரிக்காவில இருக்கிறார்:) ஹா ஹா ஹா, பெயரில மட்டும்தேன் ஊர் இருக்குதாம்:)) ஆனா ஆட்களும் ஊரில் இல்லை:), அந்த ஊர்ச் சமயல்களும் போடுவதில்லையாக்கும்:)).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:))..

குண்டூசிக்குறிப்பு:- எங்கட யாழ்ப்பாணத்திலும் திருநெல்வேலி உண்டு:)), ஆனா நாங்கள் அதைச் செல்லமாக:).. “தின்னவேலி” என்போம்:).. 

எனக்கு நெடுநாள் ஆசையாக இருந்தது, இவை இரண்டும் செய்யோணும் என, ஆனால், உளுந்து சேர்த்தால் வீட்டில சாப்பிடுவினமோ எனும் பயம் இருந்து வந்தது, அதனால இவ்ளோ காலம் செய்யாமல் இருந்தேன், இப்போ போனால் போகுதென கொஞ்சமாகச் செய்தேன்... சூப்பராக முடிஞ்சு போச்ச்ச்:))..

நான் எடுத்த பொருட்கள்...
தஞ்சாவூர்ப் பொன்னிப் புழுங்கல் அரிசி - ஒரு கப்
அதே கப்பால உளுந்து கால் கப்
[கோதுடன் தான் போட வேணுமாம், ஆனா இருப்பதை விட்டுப்போட்டுப் பறப்பதற்கு ஆசைப்படக்கூடாது பாருங்கோ:)] இங்கு அருகில் இருப்பது வெள்ளை உளுந்து மட்டுமே:)) அதனால மீ வைட்ட்ட்ட்ட் உலு:)ந்து:)) சேர்த்தேனாக்கூம்:))]
தேங்காய்ப்பூ அரைக் கப்
உள்ளி/பூண்டு ஒரு பெரியது

அரிசியை அரை மணி நேரமாவது கழுவி ஊற வைக்கோணும்.

உளுந்தை, நன்கு வாசம் வரும்வரை பொன்னிறமாக வறுத்தெடுத்துக் கழுவி, அரிசியுடன் சேர்த்து.. உள்ளியையும் போட்டு... 4 கப் தண்ணி சேர்த்து குக்கரில் மீடியம் ஹீட்டில் இரு விசில் சத்தம் வரை அவிக்கவும்.

இந்த பட்டர்ஃபிளை பிராண்ட், 2 லீற்றர் பிரஷர் குக்கர் அஞ்சுவிடமோ, அம்முலுவிடமோ இல்லையாக்கும்:)) ஹா ஹா ஹா..  “உண்மையைச் சொல்லுவது டப்பா நெல்லைத்தமிழன்?:)”.. ஆவ்வ்வ்வ் இப்பூடி ஆரையாவது அப்பப்ப கோர்த்து விட்டால்தான் மீ தப்பலாம்:))
பின்பு மூடியைத் திறந்து, தேங்காய்ப்பூவைச் சேர்த்து நன்கு அவித்து, தண்ணி இல்லாமல் சாதமாக்கி எடுக்கவும்.

ப்படி எதுக்காகச் சொல்கிறேன் எனில், தேங்காய்ப்பூவையும் சேர்த்து ஒரேயடியாக வைத்தால், தேங்காய்ப்பால் எல்லாம் விசில் வழியாக வெளியே பொங்கி வழிகிறது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அதனாலதான் உங்களை அலேர்ட் பண்ணுகிறேன்:)..

ப்படியே சாப்பிடலாம், ஆனால் நான் எனக்குப் பிடித்த விதத்தில் நல்லெண்ணெயில் வெங்காயம் மிளகாய் கறிவேப்பிலை தாளித்துக் கொட்டினேன்[கொஞ்சம் முறுகல்.. பொரியலாக்கி]..

உளுந்து சாதத்தோடு, வேப்பம்பூ வடகம், எள்ளுத் துவையல்..

துக்கு எதுவுமே தேவையில்லை, சும்மாவே சாப்பிடலாம், சூப்பராக இருந்தது. ஆனா சோறு எனில் எங்கட வீட்டில் கறி இருக்கோணும், இப்படி துவையலுடனோ இல்லை ரசத்துடனோ சாப்பிடுவதென்பது நடக்காது என்பதனால் பருப்புக்கறியும், பீன்ஸ் + கிழங்குப் பிரட்டலும் செய்தேன்.. என் மானே தேனே வடகங்கள், பப்படம் எல்லாமே பொரிச்சேன்...

தில் இருப்பது என் வெங்காய வடகம், இதுவும் கறுப்பாகத்தான் வருதூஊ.. கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரூஊஊஊஊஉ:) ஹா ஹா ஹா.. வெள்ளிக்கிழமை எனில் ஸ்பெஷல் வாணாமோ?:) அதனாலதான் பருப்புவடை.. கீரை போட்டேனாக்கும்:)
 ===========================================
இடைவேளையில் ஒருவரை அறிமுகம் செய்கிறேன், இது கமலாக்காவின் ரெசிப்பி பார்த்துச் செய்தேன், குறிப்புக்கு இங்கின கையை வையுங்கோ... நான் இதில் மஸ்ரூம் உம் சேர்த்தேன்[3 கலர்க் குடை மிளகாய்], சூப்பராக இருந்தது.
***********************

அடுத்து எள்ளுத் துவையல்..
இதற்கு எள்ளு ஒரு கப், தேங்காய்ப்பூ 2 கப், செத்தல் மிளகாய் புளி உப்பு.. இவ்வளவும்தான்.

எள்ளை நன்கு வறுத்து எடுத்துப் போட்டு, மிளகாயை கொஞ்சம் எண்ணெயில் நன்கு வாட்டி எடுத்து, அனைத்தையும் சேர்த்து அரைத்தேன்.. இதுவும் சூப்பர்.. தோசைக்கும் நன்றாக இருந்தது.

(((((((((((((((((((((_()_)))))))))))))))))))

அடுத்து ஒரு முக்கிய விஷேச நியூஸ்:), முதலில் எல்லோருக்கும் வெரி சோரி:)), இப்போ “19 கோவைக்காய்” என்பதால:), நிகழ்வுக்கு உங்களை எல்லாம் அழைக்க முடியவில்லை:), சமீபத்தில் எங்கட டெய்சிப்பிள்ளைக்கு சிம்பிள் அண்ட் சுவீட்டாக நிட்சயார்த்தம்[ரெஜிஸ்ரேசன்] முடிச்சுப் போட்டம்:)).. கையில் மோதிரம் போட்டதும் அவவின் முகத்தில ஒரு தேஜஸ் [தேஜஸ் என்றவுடன் நினைவுக்கு வருபவர் ஸ்ரீராம்:)],  தெரியுதெல்லோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.

மாப்பிள்ளை ஜிஞ்சர் கலர், பூஸ்களுக்கு மட்டுமேயான மருத்துவராம், இவ அடிக்கடி கை நோகுது, கால் வலிக்குது எனச் சொல்லிச் சொல்லி அவரிடம் போகும்போதே சந்தேகப் பட்டோம் அது செரியாப்போச்ச்ச்ச்:)).. மாப்பிள்ளைப்பூஸ் நல்ல குணம் என்பதால, சிம்பிளாக முடிச்சிட்டோம்:)[[சின்னவர் தன் மோதிரத்தை அடிக்கடி கழட்டி, இப்படி டெய்ஷிக்குப் போட்டு, அழகு பார்ப்பார்:)]]

ஊசிக்குறிப்பு

ஊசி இணைப்பு
🙏🙏🙏🙏🙏🙏🙈🙏🙏🙏🙏🙏🙏

Thursday 14 May 2020

யோகா என்பது உங்கள் உடல்🙇
 ஜிம் என்பது உங்கள் வருங்காலம்🙌:))

என்ன நான் சொல்றது புரியுதோ?:)

இந்தப் போஸ்ட்டில் புதுசாப் பெரிசா ஒன்றுமில்லை.. எல்லாம் ஒரு கவலை, இழப்பின் வெளிப்பாடுதான் இப்போஸ்ட்:)) ஹா ஹா ஹா பயந்திடாதையுங்கோ.. நான் சொல்ல வருவது இப்போ ஜிம் போக முடியவில்லை, யோகா ரீச்சரையும் பார்க்க முடியவில்லை.. என்பதனால கவலையாகவும் இருக்குது:).. “yoga is your body".. இது எங்கட ரீச்சர் அடிக்கடி சொல்லும் வசனம்:)

எனக்கு அனைத்திலும் பிடிச்சது இப்போ யோகா தான்... இங்கு அனைத்திலும் போகக்கூடியவாறே மெம்பஷிப் எடுத்து வச்சிருந்தேன், நேரம் தான் போதாமல் இருந்தது, மற்றும்படி, ஜிம் களில் எந்த வகுப்புக்கள் நடந்தாலும் போகலாம், எங்கள் மாவட்டத்தில் இருக்கும் அத்தனை ஜிம்களுக்கும் போகலாம், மற்றும் யோகா, சுவிம்மிங், வோட்டர் ஏரோபிக் கிளாஸ், சோனா இப்படி அனைத்துக்கும் போகலாம்.. நேரம் இல்லாமையால ஜிம் ஐயும் யோகாவையும் மட்டுமே ஒழுங்காகப் போனேன், ஏனையவற்றுக்கு, நேரம் கிடைத்தபோது மட்டும் போனேன்..

இப்போ வீட்டில் யோகா செய்வது பிடிச்சுப் போச்சு:), நேரமும் தாராளமாகக் கிடைக்குதெல்லோ...

நான் யோகாக் கிளாஸ் க்கு முன்னர் ஒருபோதும் போனதில்லை, ஆனால் சின்ன வயசிலிருந்தே டான்ஸ் ஒரு பாடமாக எடுத்தமையால, வீட்டில் யோகா போல செய்வேன்.. 

இப்போ வகுப்புக்குப் போனதும் பயத்தில, கடசி வரிசையில போய் இருந்தேன் 2,3 வகுப்புக்கள், இதை அவதானிச்ச யோகா ரீச்சர், ஒருநாள் வழியில என்னை மடக்கிச் சொன்னா “நீ எப்பவும் என் கண்ணுக்கு தெரியாமல் ஒளிச்சிருக்கிறாய், இனி முன் வரிசையில் வந்திருக்கோணும்” என ஹா ஹா ஹா அதிலிருந்து, ஒளிப்பதை விட்டு விட்டேன்...

ஆனாப் பாருங்கோ இங்கு அதுவும் முழுக்க முழுக்க ஸ்கொட்டிஸ் மக்களே இருக்கும் நம் ஏரியாவில், யோகா வகுப்பில்... ஓம் சாந்தி... ஓம் சாந்தி..., ஒம் நம ஸ்....வா...ய.... இப்படி எல்லாம் ரெக்கோர்டில் போடுவார்கள், எனக்கோ மெய் சிலிர்க்கும்....

😹😹😹😹++++++++++இடைவேளை+++++++😹😹😹😹

வட்ஸப் யோகா,ஜிம் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன, சொல்லித்தருபவர் பிஞ்சு  ரீச்சர் அதிரா:).. இடம் முடிஞ்சிடும் எனவே உடன் பதிவுக்கு முந்துங்கள்:))
¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬

சரி அதை விடுங்கோ.. ஜிம் க்கு வருவோம்.. இப்போ ஜிம் இல் அனைத்தும் டிஜிட்டல் மயம், நமக்கென ஒரு பென் ட்றைவ் தந்திருக்கினம், அதில் நாம் என்ன என்ன செய்ய விரும்புகிறோம் என்பதை சேஃப் பண்ணி வைத்தால், அந்த மெசினில் அப் பெண்ட்றைவ் ஐப் போட்டதும், நம் பெயர் விபரத்தோடு, என்ன ஸ்பீட், எவ்வளவு நேரம் என்பதெல்லாம் சொல்லி, ஓட்டமெட்டிக்கா ஸ்ராட் ஆகும், பின்பு ரைம் வர நிற்கும்[தேவை எனில் கூட்டிக் குறைக்கலாம்]... இதில் மேலே வலது மூலையில் போட்டிருக்கிறேன் மஞ்சள் நிறத்தில்.. அதுதான் அந்தப் பென் ட்றைவ்.. அதை நாம் எப்பவும் வைத்திருப்ப்போம்.. அதில் நாம் செய்வதெல்லாம் சேஃப் ஆகிக் கொண்டிருக்கும்.

ட்ரெட்மில், சைக்கிள் போன்ற மெசின்களில் இப்படி அதனோடு ரிவியும் உண்டு, நம் விருப்பத்துக்கு ஷனல் ஐ மாத்திப் படம்  பார்த்துக் கொண்டே செய்யலாம்..

இது யும்மா:), எங்கள் ஜிம் அமைந்திருப்பதும் ஒரு ஆத்தங்கரைதான், அப்போ ஜிம் செய்யும்போது வெளியே தெரியும் காட்சிகளைப் படமெடுத்தேன்.. இதுவும் ஒரு அழகும், மனதுக்கு இதமுமாக இருக்கும்.. பாருங்கோ.. ஆற்றங்கரை தெரிவதற்காக, ஒரு பக்கம் முழுவதும் கண்ணாடிச் சுவர்களே அங்குண்டு...
(1)

(2)

 (3)

 (4)

 (5)

 (6)

 (7)

இது என்ன  கப்பல் தெரியுமோ?, பென்னாம் பெரிசு,
 இது கப்பல்களைத் திருத்தும் கப்பல் ...


ஊசிக் குறிப்பு
ஹா ஹா ஹா இது உண்மையோ? திகிலாக இருக்காது?:)

ஊசி இணைப்பு 

அதிரா இணைப்பு..........:) 
🙏🙏🙏😷🙏🙏🙏

Tuesday 12 May 2020

வடகங்கள் 16 உம் உருவான வரலாறு🙈

பொன்னியின் செல்வன் படிக்கும்போது அறிஞ்சேனம்மா!!!