மாசமோ வைகாசி மாசம், குளிர் வேறு இருந்து கொண்டே இருந்தது, ஊஊஊஊ என மழை இலேசாகத் தூறிக் கொண்டிருந்தது. காற்றும் கொஞ்சம் நல்ல்ல்ல் என வீசிக்கொண்டிருக்க, ஏதோ நான் வணங்கும் தெய்வம், எனக்கு ஒரு உசார் தந்தது, வெளியே போய், செடிகளைப் பார்த்துப்போட்டு வா... பூச்சி புழுக்கள் ஏதும் இருக்கலாம், இரண்டு நாட்களாக எட்டிப் பார்க்காமல் இருக்கிறாய் என ஆரோ ஒருவர் என் உள்ளே இருந்து என்னை வெளியே உந்துவதுபோல ஒரு ஃபீலிங்ஸா இருந்திச்சா.. பூட்ஸ் ஐயும் போட்டு, ஜக்கெட்டையும் போட்டுக் கொண்டு, கிளவுஸ் ஐயும் போட்டபடி.. அந்த மெல்லிய ஊஊஊ மழையில இறங்கி, என் செடிகளைத் தடவிப் பார்க்கத் தொடங்கினேன்..
இங்கு, குட்டிக் குட்டி ஸ்லக்குகள், இலையின் உள்ளே மறைந்திருந்து குருத்தை அட்டாக் பண்ணும், இப்படித் தடவி, அவையுடன் கலந்து பேசித்தான் கண்டு பிடிப்பது.. வெயில் எனில் வரமாட்டினம் பிரச்சனை இல்லை, மழை எனில் தொல்லைதான்...
அப்படி நான் தடவிக் கொண்டிருந்தேனா.. பின்னாலே ஒரு மெல்லிய அன்பான, செல்லமான, என்னை வருடுவது போன்ற ஒரு குரல்.. ம்ம்மா.... ம்மாஆ.... எனக் கேட்டுதா, ஜக்கெட் தொப்பி என் கண்ணை மறைக்க, மெதுவாக விலத்திப் பார்க்கிறேன்ன்ன்... என்ர வைரவா என்னத்தைச் சொல்ல:))..
வாயிலே ஸ்பரோவை அழகாக கவ்வியபடி டெய்சிப்பிள்ளை, எனக்கு கிஃப்ட் கொண்டு வந்திருக்கிறாவாம்.... கை கால் எல்லாம் வெட வெடக்க, கத்தினாலோ, இல்லை பதட்டப் பட்டாலோ.. விசயம் கெட்டு விடும்..
உங்களுக்குத் தெரியாது பாருங்கோ.. பிள்ளைகளோ கணவரோ ஏதும் தப்புத்தண்டா பண்ணிட்டால், உடனே பதட்டப்பட்டுக் கத்திக் குழறிக் கோபிச்சு அலுவலைக் கெடுத்திடக்கூடாது ஹா ஹா ஹா.... மெல்லமாக, பதட்டமில்லாததுபோல அன்பாக, கேட்டு விசயத்தை முதலில வாங்கிடோணும் பாருங்கோ:))..
அப்பூடித்தான் இதுவும், என் உள்ளே நாடி நரம்பிலெல்லாம்.. 80 மைல் வேகத்தில் ஜம்ப் ஆன பிளட்டைக்[blood] கொன்றோல் பண்ணி, எந்தச் சலனமுமில்லாததுபோல..... ஆஆஆஆஆஆ டெய்சி... என்ன டெய்சி.... ஸ்பரோப் பிடிச்சனீங்களோ என்றேன், மிக மிகத் தங்கமான குரலில்...
உடனே அவவுக்குக் குஷி வந்து, ஆஹா மம்மிக்கும் இது பிடிச்சுப் போயிட்டுது, சூப் செய்யப்போறாவாக்கும்:), என நினைச்சு, மெதுவாக ஸ்பரோவைக் கீழே வச்சுப்போட்டு, நம்ப மாட்டீங்கள், என்ன அழகாக கதை சொல்லத் தொடங்கினா தெரியுமோ... தான் ஸ்பரோ பிடிச்ச வரலாற்றை, ஏதோ அஞ்சு, அச்சப்பம் செய்த ரேஞ்சுக்கு சொல்ல வெளிக்கிட்டா:)...
அந்த நேரம், பார்த்து, மீ .. பண்ணினேன் பாருங்கோ ஒரு ஜம்ப்.. நான் முன்பு லோங் ஜம்பில 3 வதாக வந்தேன் தெரியுமோ...:))[உங்களுக்கு இதெல்லாம் தெரிய ஞாயமில்லை, சரி அதை விடுங்கோ:)].. அதே ஜம்பை இங்கு பண்ணினேன் .. டெய்சி எடுத்தா ஓட்டம் 90 மைல் வேகத்தில, நான் பாய்ஞ்சு ஸ்பரோவைத் தூக்கிட்டேன்... கிழமையோ வெள்ளி..
அதனால எனக்கு ஹார்ட்டுக்குள்[heart] இருக்கும் கிளை நரம்பெல்லாம் அடிக்கத் தொடங்கிட்டுது, வெள்ளிக்கிழமையில என் கையால தண்ணி குடிச்சிட்டு, சொர்க்கம் போயிடுமோ இந்த உசிறு:) என ஒரே நடுக்கம், ஏனெனில் முன்பு இப்படிப் பல அனுபவங்கள் எனக்கு நிகழ்ந்ததெனச் சொல்லியிருக்கிறேனெல்லோ உங்களுக்கு.. உங்களுக்கெங்க அதெல்லாம் நினைவிருக்கப் போகுது என் குலஜாதம்:) தவிர்த்து கர்ர்ர்:)).. ஓகே சரி இங்கின வாங்கோ..
அபோதான் பார்க்கிறேன், செட்டையிலதான் கொஞ்சம் நோதல், ஆள் ஓகே.. பறக்க எத்தனிக்கிறது என் கைக்குள் இருந்து... உடனே விட்டால், திரும்ப பறக்க முடியாமல் டெய்சிக்கே விருந்தாகிடுமோ என, வீட்டுக்குள் எடுத்து வந்து, எங்காவது கொஞ்ச நேரம் பதுக்கி வச்சுப்போட்டு, களைப்பாறிய பின் விடலாமே என, உள்ளே வந்தால்..
கையில ஸ்பரோப் பிள்ளை... அந்நேரம் பார்த்துப் ஃபோன் அடிக்கிறது... நான் ஸ்பரோவைப் பார்க்கிறேன் ஃபோனைப் பார்க்கிறேன்.. ஸ்பரோவைப் பார்க்கிறேன் ஃபோனைப் பார்க்கிறேன்ன்....
“பசுவிடம் கன்று வந்து பால் அருந்தும்ம்ம்ம்ம்ம்.... கன்றூஊஊஊஊ.. பால் அருந்தும் போதாஆஆஆஆ காளை வரும்”.. இது பாருங்கோ பிபிசில சிட்டுவேசன் சோங் வேறு, கரெக்ட்டாச் சொல்லி வச்சதைப்போல போகுது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).... ஹா ஹா ஹா.. சரி அதையும் விடுங்கோ..
ஒரு மாதிரி ஒரு ஃபுரூட்ஸ் வரும் பொக்ஸ் இல, ஆளைக் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்க விட்டு, ரீ எல்லாம் போட்டுக் கொடுத்துப் பக்குவமாகப் பறக்க விட்டேன் தெரியுமோ:)).. ச்சும்ம்மா பார்த்துக்கொண்டிருக்காமல் கையைத் தட்டுங்கோ.. தட்டுங்கோ:))).. அதிராவுக்கெனில் தட்ட மாட்டினம் கர்ர்ர்:))
🌞🌞🌞🌞🌞🌞
இப்போ எங்கள் கார்டினில் பூத்திருகும் புசுப்பங்கள்:)) பாருங்கோ இவையும் பிங்கி பிங்கி மயம்:)) சிலதைக் காட்டட்டோ...
இவ அம்மாவும் மகளும்.. முற்றத்தில் பூத்திருக்கினம்...
ஆவ்வ்வ்வ் போன வருடம் ஒரு குட்டிக் கன்று நட்டேன் பின் பக்கம், பெரிசில இருந்து பிடுங்கி, அதுவும் புசுப்பமாகிட்டுது:)
எங்கட வீட்டுக்கும் தேனி வரும் அதுவும் கிங்:) தேனி அதிரா வீட்டுக்குத்தான் வந்திருக்குதாக்கும்:)), ஏதோ தங்களிடம் மட்டும்தான் வரும் என சிலருக்குப் பெருமை கர்ர்ர்ர்ர்ர்:))
ஆஆஆ இது பேப்பிள்:)
ஊசிக்குறிப்பு:)
ஊசி இணைப்பு
இப்படிக்கு அதிரா ஹா ஹா ஹா:)
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
|
Tweet |
|
|||
வணக்கம் அதிரா சகோதரி
ReplyDeleteமுகப்பு பாடல் அருமை. எனக்கு மிகவும் பிடித்த பாடல். அதை விட என் பேத்திக்கு (மகள் வயிற்று பேத்தி) ரொம்ப பிடித்த பாடல். பாட்டின் இசையும், எடுத்த விதமும், அதன் தேனினும் இனிய சித்ராவின் குரலும் யாருக்குத்தான் பிடிக்காது.இப்போது ஒரு தடவை நாங்கள் இருவரும் கேட்டு ரசித்தாகி விட்டது.
குருவியை காப்பாற்றிய உங்கள் நல்ல உள்ளத்திற்கு முதலில் பாராட்டுக்கள். அதன் மனம் உங்களை என்றும் வாழ்த்திக் கொண்டேயிருக்கும். அதை காப்பாற்ற எடுத்த படங்களும், முயற்சிகளும் அருமை. பாடலின் இனிமையோடு குருவியின் புத்துயிர் பெற்று மீண்ட உல்லாச பயணமும் இனித்தது. மற்ற மலர்களின் அழகை ரசிக்க வருகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்கோ கமலாக்கா வாங்கோ.. ஆஆஆஆஅ இம்முறை இவ்ளோ ஸ்பீட்டா ஓடிவந்து எஞ்சின் றைவருக்குப்[பயப்பூடாதீங்கோ அது நாந்தேன்ன்:))] பக்கத்துச் சீட்டைப் பிடிச்சிட்டீங்கள்... ஹா ஹா ஹா..
Deleteஓ பாட்டு பிடிச்ச பாட்டோ.. நன்றி நன்றி...
//குருவியை காப்பாற்றிய உங்கள் நல்ல உள்ளத்திற்கு முதலில் பாராட்டுக்கள்//
ஹா ஹா ஹா நன்றி நன்றி...
வணக்கம் அதிரா சகோதரி
Delete/இம்முறை இவ்ளோ ஸ்பீட்டா ஓடிவந்து எஞ்சின் றைவருக்குப்[பயப்பூடாதீங்கோ அது நாந்தேன்ன்:))] பக்கத்துச் சீட்டைப் பிடிச்சிட்டீங்கள்... ஹா ஹா ஹா./
ஆமாம்..இம்முறை சின்ன, சின்ன வண்ண குயில்களுடன்,ஓடி வந்தும், நடுவில் மாட்டு வண்டி ஏறி வந்தும், கீழிறங்கி ரேவதி மாதிரி ஆடிப் பாடியபடி ஓடி வந்தும் ரயிலின் டிரைவர் சீட்டில் உங்களைப் பார்த்தவுடன் அந்த சீட்டுக்கு பக்கத்து இருக்கையில் முதலில் வந்து ஏறியமர்ந்து விட்டேன். எனக்கு வெறும் பாராட்டுக்கள்தானா? அதைக்கூட தாராளமாக தரவில்லையே? பரிசாக ஒரு வைர மூக்குத்தி கூட கிடையாதா? ஹா ஹா ஹா. (எனக்கு மூக்குத்தி ரொம்பவும் இஸ்டமான ஆபரணம் என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.)
அது சரி..! பயணத்தில் உங்கள் அருகிலிருக்கும் என்னிடம் கூடச் சொல்லாமல் ரயிலின் பெயரையே மாற்றி விட்டீர்களே..! ஆனால் இதுவும் நன்றாகத்தான் உள்ளது. சிட்டாக பறக்கும் ரயிலில், ஜன்னல் ஒர பிரயாணமும் நன்றாகத்தான் இருக்கிறது.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆஆஆ மீண்டும் கமலாக்கா:)...
Deleteஉங்களுக்குப் பரிசே... ட்றைவருக்குப் பக்கத்தில் இருக்க விட்டிருக்கிறேனே:)... ஆனா ஒன்று சிங்கம் புலி எல்லாம் ஜிம்பிளா குறொஸ் பண்ணும் தெயின் ரோட்டில:)... பிறகு பயந்து கத்திப்போடாதையுங்கோ:).. நான் திடுக்கிட்டு ஸ்ரியரிங்கை வெட்டி விட்டனோ அவ்ளோதான் ... காவேரில ஞானஸ்தானம் பண்ணவேண்டி வந்திடும் ஜொள்ளிட்டேன்ன்ன்ன்....
மூக்குத்திதானே? இவ்ளோ சின்னனாக் கேட்கிறீங்களே:)... இந்தச் செவ்வாய் திருப்பரங்குன்றம் போகிறேன்:)... அங்கு வள்ளியினுடையதை வாங்கி வந்து தாறேன்:).. பயப்பூடாதையுங்கோ அது களவல்ல:) கர்ர்ர்ர்ர்:)... நான் கேட்டால் அவ கழட்டிக் குடுப்பா ஹா ஹா ஹா
பெயர் மாற்றம் ஹா ஹா ஹா அது 16 வயசுக்கான பெயராக்கும்:)..
மிக்க நன்றி கமலாக்கா...
ஆஹா! இம்முறை பதிவு போட்ட உடனே வந்துட்டேனே! நல்லவேளையாகக் குட்டிக் குஞ்சுக்குருவியைக் காப்பாத்தினீங்க! உங்களுக்கு எப்படி இருந்ததோ எனக்கு "திக், திக்" என்று இருந்தது. நல்லபடியாப் பறந்து போச்சு இல்லை? அது போதும்!
ReplyDeleteஆஆஆஆஆஅ வாங்கோ கீசாக்கா வாங்கோ.. இப்பூடி உடனேயே ஓடிவந்த உங்களுக்கு நான் என் கண்ணான, மூக்கான, காதான.... ஆயாவைத்தருகிறேன்ன்ன்ன்:).. அவவுக்கு அம்மா மண்டபமும் அந்த ஆனைப்பிள்ளையையும் பார்க்க விருப்பமாம்.. கவனமாகக் கூட்டிப்போய் 2 மீட்டர் இடைவெளியில வச்சுக் காட்டுங்கோ கீசாக்கா... ஆயா பத்திரம்:)... ஹா ஹா ஹா.
Deleteஉண்மை கீசாக்கா, இப்படிப் பல சிட்டுக்கள், பாதி உயிராக என் கைக்கு வந்து, சில மணி நேரத்தில் காலமாகி இருக்குது, இது டெய்சிப்பிள்ளை மிகப் பத்திரமாகக் கடிபட்டிடாமல் கொண்டு வந்ததனால் தப்பிச்சது.. நானும் நினைச்சேன் கதை முடிஞ்சுதாக்கும் என.. ஆனா தப்பி விட்டது.
இம்முறை இங்கு ஏனோ தெரியவில்லை, சிட்டுக்கள் அதிகமாக இருக்கு..
//அந்த ஆனைப்பிள்ளையையும் // - இது எந்த ஊர் தமிழ்?
Deleteஅணில் பிள்ளை, தென்னம் பிள்ளை, கிளிப் பிள்ளை, கீரிப் பிள்ளை.
ஆனைக்கு - ஆனைக்குட்டி (ஆட்டுக் குட்டி என்பது போல. பசுவின் கன்றுக்கு மட்டும் ஸ்பெஷலா, கன்றுக்குட்டி)
////இது எந்த ஊர் தமிழ்?///
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
இது... ச்ச்ச்ச்சும்மா ச்ச்ச்செல்லமா:)) க் கூப்பிடுறதாக்கும்... செல்லமா எனில் அனைத்தையும் பிள்ளை எனத்தான் சொல்லுவோமே..மே..மே:)) ஹா ஹா ஹா..
அதுக்குக் கூடவா "றீ" கொடுத்துக் கெடுக்கறீங்க? இங்கே இந்தியாவில் பாருங்க, நம்ம முன்னோர்கள் எல்லாம் மனுஷப் பயலுக கோயில்களுக்கு வராமல், உணவு கொடுக்காமல் உணவில்லாமல் திண்டாடறாங்கனு தினம் ஒரு வீடியோவில் சொல்லிட்டு இருக்காங்க. நாம அப்படிப் பழக்காமல் இருந்திருந்தால் அவங்களாவே உணவைத் தேடிப் போய்ப் பார்த்துச் சாப்பிட்டுப் பசியாறி இருப்பாங்க! நாம தான் எல்லாத்தையும் கெடுத்துடுவோமே!
ReplyDeleteஉண்மைதான்க்கா அதுக்கு காட்டை மரங்களை அழிக்காம விட்டிருந்தா முன்னோர்கள் அவங்களா தேடி சாப்பிட்டிருப்பாங்க
Delete//அதுக்குக் கூடவா "றீ" கொடுத்துக் கெடுக்கறீங்க?//
Deleteஹா ஹா ஹா நீங்கள் டி எண்டால்தான் எனக்குப் புரியுமாக்கும்.. இது கீசாக்கா என்ன ஜொள்றா என யோசிச்சதிலேயே பிடரியில் மயிர் கொஞ்சம் நரைச்சுப்போச்ச்ச்ச்:)) கர்ர்ர்ர்ர்ர்:))....
உண்மைதான், பட்டினிச் சா தான் அதிகமாகப்போகிறது எனப் பேசுகிறார்கள்..
எதுவாயினும் வெளியே போக முடியாதே கீசாக்கா இப்போ.. எங்கு போய் உணவு தேடுவது...
பாவம் சிட்டுக்குருவியை சிறைபிடிச்சு![[
ReplyDeleteவாங்கோ நேசன் வாங்கோ..
Deleteஹா ஹா ஹா சிலசமயம் கசப்பு மருந்தை உண்டால்தான் உயிர் பிழைக்கும் எனில், கசப்பையும் உண்பதைப்போலத்தான் இதுவும்:)).. கொஞ்ச நேரம் சிறை, பின்பு விடுதலையாகிப் பறந்துவிட்டுதெல்லோ..
கொர்னா எப்படி எல்லாம் சிந்திக்க வைக்கின்றத்து ஊதச்சொல்ல![[
ReplyDeleteஹா ஹா ஹா கொரோனா இப்படிச் சிலருக்கு நன்மையும் செய்கிறது... எயார்போர்ட்டிலும் பொடி செக்கிங் இனி இருக்காது என்கிறார்கள் ஹா ஹா ஹா..
Deleteபூக்கள் எல்லாம் அழகாய் இருக்கின்றன. பர்ப்பிள் நிறத்தைப் பேப்பிள் எனச் சொல்லி இருப்பதைப் பார்த்ததும் குட்டிக் குஞ்சுலு நினைவு வந்தது. அது அழகாய் உதட்டைச் சுருக்கிக் கொண்டு, "பர்ப்பிள்" என்று சொல்லும். தேனீக்களிடம் கவனமா இருக்கணும். அது பாட்டுக்குப் பூக்களிடம் இருந்தால் நீங்க அந்த இடத்துக்கே போகாதீங்க! தேனீ கொட்டினால் சமயங்களில் மருத்துவரிடம் போகும்படி ஆகிடும். வீக்கம், வலி, எரிச்சல் ஜாஸ்தியா இருக்கும். அப்புறமா வரேன்.
ReplyDeleteஎன்னவோ போங்க... இந்த கீசா மேடத்துக்கு கவிதையா எழுதத் தெரியலையே. சகோதரி பற்றி நானே எழுதறேன்.
Deleteதேனீக்களிடம் கவனமா இருங்க. நீங்க பாட்டுக்கு தோட்டத்துப் பக்கம் போனீங்கன்னா, உங்க முகத்தைப் பார்த்து இன்னொரு பூ போலிருக்கு என்று வந்து உட்கார்ந்துடும். ஜாக்கிரதை
அப்படீன்னு எழுதினா, அதிராவுக்கு முகமே லைட் போட்ட மாதிரி இருக்கும். உங்களுக்கு வரவேற்பே தனியா இருக்கும்.
குழந்தைகள் பேசும் அழகே ஒரு தனி அழகுதானே கீசாக்கா.
Delete//தேனீக்களிடம் கவனமா இருக்கணும். அது பாட்டுக்குப் பூக்களிடம் இருந்தால் நீங்க அந்த இடத்துக்கே போகாதீங்க!//
உண்மைதான் கீசாக்கா, ஆனா இங்கு கோடை வந்து பூக்கள் பூக்கும்போது, கொத்தாக தேனீக்கள் வந்துவிடும், இப்போ எங்கட பின்னுக்கு ஒரு செரி மரம் நிற்கிறது, அது நிறையப் பூக்கும்.. அந்தப் பூவுக்கு, கூட்டமாக தேனீக்கள் வந்திருக்கும், கிட்டப் போனாலே உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்ங்ங்ங்ங்ங் என ஒரே சத்தம், ஆனா இவை பெரிதாக கடிப்பதாகத் தெரியவில்லை, பயம்தான், பறந்து வந்தால் ஓடித்தப்பிடுவோம்:))..
அதிலயும் மீ வந்து 1500 மீற்றரில ஓடி, 2 ஆவதா வந்தேனெல்லோ:)).. தேனியிடமிருந்தும் ஓடிடுவேன் ஹா ஹா ஹா..
மிக்க நன்றி கீசாக்கா... நெ தமிழன் உங்களைக் கவித..கவித.. எழுதச் சொல்றார்:))
///நெல்லைத் தமிழன்Thursday, May 28, 2020 3:35:00 pm
Deleteஎன்னவோ போங்க... இந்த கீசா மேடத்துக்கு கவிதையா எழுதத் தெரியலையே. சகோதரி பற்றி நானே எழுதறேன்.///
ஹா ஹா ஹா குட்டித் தங்கச்சி எனக் கரெக்ட்டாச் சொல்லோணும்.. கீதா பெரியக்கா, அஞ்சு சின்னக்கா[நெ தமிழனின் முறையில:)] ஹா ஹா ஹா..
//தேனீக்களிடம்
கவனமா இருங்க..
நீங்க பாட்டுக்கு
தோட்டத்துப் பக்கம்
போனீங்கன்னா,
உங்க முகத்தைப் பார்த்து
இன்னொரு பூ போலிருக்கு
என்று வந்து
உட்கார்ந்துடும்... ஜாக்கிரதை//
ஹா ஹா ஹா..... இப்பவே இதை அண்ணிக்கு வட்சப் இல் அனுப்பப்போறேன்ன்ன்ன்:)) அஞ்சூஊஊஊஉ உங்களிடம் நம்பர் இருக்குதெல்லோ?:)) கொஞ்சம் தாங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)) ஹா ஹா ஹா...
///அப்படீன்னு எழுதினா,...உங்களுக்கு வரவேற்பே தனியா இருக்கும்..///
ஆவ்வ்வ்வ்வ்வ் இப்பூடியும் ஒன்றிருக்கோ ஹா ஹா ஹா:))
தேனீக்களே கவனம் ...
Deleteஒரு அழகான பூ நடந்து வருகிறது ..!
ஹா ஹா ஹா அனுவுக்கும் கவிதையாக் கொட்டுதே.. நன்றி நன்றி..
Deleteபாட்டித்தத்துவம் அருமை! மெளனராகம் பாடல் அதுவும் ரேவதி நடிப்பு இன்னும் மறக்கமுடியாது!
ReplyDeleteஉண்மைதான் நேசன், மோகனின் பல படங்கள் மனதை விட்டு நீங்காதவை..
Deleteமிக்க நன்றி நேசன்.
மெளனராகம் பாடல் பிடிக்கும் , கேட்டேன்.
ReplyDeleteஊஞ்சலாடும் பூஸார் அழகு. உள்ளுணர்வு உந்தி தள்ளியது குருவியை டெய்சி பிள்ளையிடம் இருந்து காப்பாற்ற இறைவன் கொடுத்தது.
அருமையாக அன்பாக பேசியது குருவியை விட்டு விட்டதே நல்ல பிள்ளைதான். நல்ல அம்மாவும் தான் நீங்க.
தோட்டம் அழகு.
பூக்கள் அழகு.
தேன் உண்ணும் வண்டு மாமலரை கண்டு பாட்டு போட்டு இருக்கலாம்.
சின்ன குருவி வந்ததால் இந்த பாட்டோ?
வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..
Deleteஓ பாட்டுக் கேட்டமைக்கு நன்றி..
//உள்ளுணர்வு உந்தி தள்ளியது குருவியை டெய்சி பிள்ளையிடம் இருந்து காப்பாற்ற இறைவன் கொடுத்தது.//
உண்மையில் அப்படித்தான் நானும் நினைத்தேன், இல்லை எனில் மழை தூறினாலே வெளியில் இறங்க மாட்டேன்...
//அருமையாக அன்பாக பேசியது குருவியை விட்டு விட்டதே நல்ல பிள்ளைதான். நல்ல அம்மாவும் தான் நீங்க///
ஹா ஹா ஹா நன்றி கோமதி அக்கா.. இங்கு ஒன்று சொல்லோணும்.. இங்கு என் ஸ்கொட்டிஸ் ஃபிரெண்ட் ஒருவர், என்னிடம் அடிக்கடி சொல்லும் ஒரு வசனம்.. “யூ ஆர் எ குட் மதெர்:))”.. ஹா ஹா ஹா ஹையோ ஏன் மேற்கால கிழக்கால எல்லாம் புகைப்போகுது:)) காடு ஏதும் எரியுதோ:))
///தேன் உண்ணும் வண்டு மாமலரை கண்டு பாட்டு போட்டு இருக்கலாம்.///
ஹா ஹா ஹா நல்ல சஜஸன்:)..
குருவிப் பாட்டுக்கள் கொஞ்சம் கிடைத்தன கோமதி அக்கா, ஆனா இது கொஞ்சம் துள்ளலும் ஆடலுமாக இருந்ததால், இதைப் போட்டேன்ன்..
சிட்டை காத்த மடந்தைக்கு கைதட்டுக்கள், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅக்கா தண்ணீர், சாதம் எல்லாம் கொடுத்தால் தங்கை சுறு சுறுப்பாய் பறக்க டீ தருகிறார்.
பத்திரமாய் பாதுகாத்து பறக்கவிட்டது அருமை. படம் அழகு.
ஆஆஆஆஆஆ கோமதி அக்கா அது பெதும்பை ஆக்கும்:)) ஹா ஹா ஹா.. விக்கி அங்கிளைப்பார்த்துப் பாடமாக்கி எடுத்து வந்து, இங்கின எழுதும்போது மடந்தை ஆகிப்போனதே.... ஹா ஹா ஹா.. நல்லவேளை நெல்லைத்தமிழனின் கொமெண்ட் பார்த்ததும், அவர் வேண்டுமென மாத்தி எழுதுகிறாரோ என செக் பண்ணினால் ஹையோ நான் தான் மாத்திப்போட்டிட்டேன் என, அவசரமாகப் பின்பு மாத்திட்டேன்ன்ன்:)) பூஸோ கொக்கோ:))..
Delete//அக்கா தண்ணீர், சாதம் எல்லாம் கொடுத்தால் தங்கை சுறு சுறுப்பாய் பறக்க டீ தருகிறார்.//
ஹா ஹா ஹா அதே அதே:)) அக்காவுக்குத் தங்கை தப்பாமல் பிறந்திருக்கிறா:))..
கொஞ்சம் சரிந்து சரிந்தே பறந்துபோனது கோமதி அக்கா.
ஊசிக்குறிப்பு சிரிக்க வைத்தது ஊசி இணைப்பு உண்மை என்றது.
ReplyDeleteதமிழர் பரம்பரை மரம், நம் பெருமை நாம் உண்ர வேண்டும் கண்டிப்பாய்
அதிரவின் பெருமை அதிராவிற்கு தெரியும் தான் சும்மா ந்மமிடம் கதைப்பார்.
///அதிரவின் பெருமை அதிராவிற்கு தெரியும் தான் சும்மா ந்மமிடம் கதைப்பார்.///
Deleteஹா ஹா ஹா அத்தத்துவத்தின் கீழே இருந்து தலையை ஆட்டுவதும் மீதான்:))
மிக்க நன்றிகள் கோமதி அக்கா.
புறாவுக்கு அடைக்கலம் கொடுத்தான் சிபி சக்ரவர்த்தி. ஆனால் பருந்துக்கு தொடை சதையை கொடுக்க வேண்டி இருந்தது. நல்ல வேளை டெய்சி பிள்ளை குருவிக்கு பதில் சதை கேட்கவில்லை.
ReplyDeleteகுருவியைக் காட்டுகிற கையைப் பார்த்து விட்டோம். அடுத்து முகமும் என்றாவது ஒரு நாள் காட்டப்படும்!.
சிட்டுக்குருவி இருந்ததால் "சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா" பாடல் போட்டிருக்கலாம்.
Jayakumar
Deleteமுகம் பார்க்க ஆசைப்பட்டால் லேப்டாப் பத்தாது பிக் ஸ்கிரின் தேவைப்படும்... அவரின் பழைய பதிவுகளை தேடிப்பார்த்தால் அவர்களின் புகைப்படம் கிடைக்கும்
வாங்கோ ஜே கே ஐயா வாங்கோ..
Deleteஹா ஹா ஹா. டெய்சிப்பிள்ளைக்கு பிடிப்பதில் மட்டும்தான் ஆர்வம், மற்றும்படி அப்படியே விட்டுவிடுகிறா... இதற்கு முதலும் ஒரு ஆளைப்பிடிச்சு... போனகிழமை.. அது விடிஞ்சபின் கண்டுபிடிச்சால்ல்ல்ல்... முடிஞ்சு போச்ச்ச்:(..
//குருவியைக் காட்டுகிற கையைப் பார்த்து விட்டோம். அடுத்து முகமும் என்றாவது ஒரு நாள் காட்டப்படும்!. ///
ஹா ஹா ஹா முகம் பல இடங்களில் காட்டியாச்சே:)).. ஆனா லிங் தர மாட்டேனே:)) ஹா ஹா ஹா..
ஏ குருவி. சிட்டுக்குருவி... எனும் பாடலைத்தான் போடக் கையைக் கிட்டக்கொண்டு போயிட்டு, பின்பு அது வீடியோ கிளாரிட்டி அவ்ளோ சரியில்லை என்பதால் மாத்திவிட்டேன்ன்..
மிக்க நன்றி ஜேகே ஐயா.
வாங்கோ ட்றுத் வாங்கோ.. மாஸ்க் போட்டிருக்கிறீங்கள்தானே?:))
Delete///Avargal UnmaigalThursday, May 28, 2020 3:29:00 pm
முகம் பார்க்க ஆசைப்பட்டால் லேப்டாப் பத்தாது பிக் ஸ்கிரின் தேவைப்படும்...///
https://i.pinimg.com/564x/15/28/c3/1528c3540d99073b34f10fc42b26d2cc.jpg
//அவரின் பழைய பதிவுகளை தேடிப்பார்த்தால் அவர்களின் புகைப்படம் கிடைக்கும்//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா...
பூக்கள் அழகு
ReplyDeleteகுருவிக்கு வாழ்த்துகள் சொல்லவும்.
வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..
Delete//குருவிக்கு வாழ்த்துகள் சொல்லவும்.//
குருவியின் ஃபோன் நம்பரை அனுப்பி வைக்கவும்:))..
ஹா ஹா ஹா நன்றி கில்லர்ஜி.
பூக்கள் மனதை கொள்ளை கொள்கின்றன... அட்டகாசம்...
ReplyDeleteபதிவு சரியாக புரியவில்லை என்பதால், முழுப்பதிவையும் வாணியில் (http://vaani.neechalkaran.com/) இட்டு, திருத்தி விட்டு படிக்கலாம் என்று முயற்சி செய்தேன்...
அது வேலை செய்வதை நிறுத்தி விட்டது...! ஐயனே ஏன் இந்த சோதனை...!
வாங்கோ டிடி வாங்கோ..
Delete///அது வேலை செய்வதை நிறுத்தி விட்டது...! ஐயனே ஏன் இந்த சோதனை...!//
ஒருவேளை இம்முறை நான் திருக்குறள் போடாமையால இருக்குமோ:) ஹா ஹா ஹா..
வாணி அக்கா, நீங்கள் லிங் போட்டநேரமே வேலை செய்யவில்லை, இது எனக்கு மட்டுமோ தெரியவில்லையே என பேசாமல் ஓடி வந்திட்டேன்:)) ஹா ஹா ஹா..
நன்றி டிடி.
ஒரு மாதிரி ஒரு ஃபுரூட்ஸ் வரும் பொக்ஸ் இல, ஆளைக் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்க விட்டு, ரீ எல்லாம் போட்டுக் கொடுத்துப் பக்குவமாகப் பறக்க விட்டேன் தெரியுமோ:)).. ச்சும்ம்மா பார்த்துக்கொண்டிருக்காமல் கையைத் தட்டுங்கோ.. தட்டுங்கோ:)))
ReplyDeleteவாழ்த்துகள்
வாழ்த்துகள்
வாங்கோ கரந்தை அண்ணன் வாங்கோ..
Deleteஹா ஹா ஹா நீங்கள் மட்டும்தான் கை தட்டியிருக்கிறீங்க நன்றி நன்றி.
அவர் பயம் அவருக்கு :) பின்னே குழாய் சாதத்தையும் அந்த கரு கரு வற்றலையும் நீங்க அனுப்பிடக்கூடாதுன்னு வாழ்த்தறார்
Delete///
DeleteAngelThursday, May 28, 2020 10:18:00 pm
அவர் பயம் அவருக்கு :) பின்னே குழாய் சாதத்தையும் அந்த கரு கரு வற்றலையும் நீங்க அனுப்பிடக்கூடாதுன்னு வாழ்த்தறார் ///
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நீங்க இன்னும் தட்டவில்லை என்பதை நினைவில் கொள்ளோணும் அஞ்சு:))
குட்டிச் சிட்டுக்குருவியைக் காப்பாற்றியது மனதைத் தொட்டது. நல்லாவும் எழுதியிருக்கீங்க.
ReplyDelete//பிள்ளைகளோ கணவரோ ஏதும் தப்புத்தண்டா பண்ணிட்டால், உடனே பதட்டப்பட்டுக் கத்திக் குழறிக் கோபிச்சு அலுவலைக் கெடுத்திடக்கூடாது ஹா ஹா ஹா.... மெல்லமாக, பதட்டமில்லாததுபோல அன்பாக, கேட்டு விசயத்தை முதலில வாங்கிடோணும் பாருங்கோ:// - ரசித்த வரிகள். நல்லா எழுதியிருக்கீங்க
வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ...
Delete//குட்டிச் சிட்டுக்குருவியைக் காப்பாற்றியது மனதைத் தொட்டது. நல்லாவும் எழுதியிருக்கீங்க.///
ஆவ்வ்வ் நன்றி நன்றி... இது உங்களுக்கு:)
[im] https://vegrecipesofkarnataka.com/assets/img/milk-peda-bakery/milk-peda-bakery-recipe-small.jpg [/im]
//- ரசித்த வரிகள். நல்லா எழுதியிருக்கீங்க//
ஆஆ நன்றி நன்றி.. இதுவும் உங்களுக்கு மட்டுமே:)) ஹா ஹா ஹா..
[im]https://tse1.mm.bing.net/th?id=OIP.cZIoqTnwqpDY9lsiZjBxOgHaHa&pid=Api&P=0&w=300&h=300 [/im]
ஒருவேளை அதிராவின் பதிவு என்பதால் வாணியும் செயலிலந்துவிட்டது போல ஹும்ம்
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
Deleteஹா ஹா ஹா இங்கின தனியே நிண்டு ஆரோடு பேசுறீங்கள் ட்றுத்?:).. ஹா ஹா ஹா ஹையோ டிடி போய் நீண்ட நேரமாச்சு:))
மிக்க நன்றி ட்றுத்.
0 - 12 வயதுப் பெண் - பேதை.
ReplyDelete12 - 24 வயதுப் பெண் - பெதும்பை.
24 - 36 வயதுப் பெண் - மங்கை.
36 - 48 வயதுப் பெண் - மடந்தை.
48 - 60 வயதுப் பெண் - அரிவை.
60 - 72 வயதுப் பெண் - தெரிவை.
72 வயதுக்கு மேல் பெண் - பேரிளம்பெண்
ஹா ஹா ஹா பூஸோ கொக்கோ.. நம்ப மாட்டீங்கள் விக்கிபீடியா பார்த்துப் பாடமாக்கிப்போட்டு, அதை மனதில காவி வந்து இங்கு எழுதும்போது மாறி விட்டது ஹையோ ஆண்டவா கடவுளுக்கே பொறுக்கவில்லைப்போலும்:)) ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்.. இப்போ பிடரியில பின்னங்கால் அடிக்க ஓடிப்போய் பார்த்து, மாத்திட்டனே:))..
Deleteஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கால் நடுக்கம் இன்னும் போகவில்லை ஹா ஹா ஹா.. பாருங்கோ.. கோட் இஸ்ஸ்ஸ் கிரேட்ட்ட்ட்ட்.. அஞ்சு இன்னும் வராததால்:))
கர்ர்ர்ர்ர்ர் நான் கொஞ்சம் பிசியா இருக்கேனாக்கும்
Delete@ நெல்லைத்தமிழன் உங்களுக்கு ஒரு குழாய் சாதம் பார்சல் அனுப்பி வைக்கப்படுகிறது :)
Delete@நெதமிழன்
Delete.. ஹா ஹா ஹா நீங்கள் என்னைப் புரிஞ்சுதான் வச்சிருக்கிறீங்க, அதனாலதான் உங்களுக்குத் தெரிஞ்சிருக்குது, அதிரா ஏதோ தப்பாக மடந்தை எனப் பெயரை வச்சிட்டா என்பது ஹா ஹா ஹா அதனாலதானே வயசு லிஸ்டைப் போட்டீங்க .. இல்லை எனில் நான் நினைச்சிருப்பேன்.. 16 ஐத்தானே காவிக்கொண்டு திரிகிறேன் பெயரில எண்டு ஹையோ ஹையோ:)) ஹா ஹா ஹா நன்றி நன்றி...
ஸ்ஸ்ஸ்ஸ் பாருங்கோ.. இன்று வியாழக்கிழமை விளக்கேற்றிக் கும்பிட்டதாலதானே.. அஞ்சுவை பிசியாக்கிட்டார் அந்த திருவாமருதூர் திருவேங்கட சாமியார் ஹா ஹா ஹா
அஞ்சூஊஊஊஊ அஞ்சூஊஊஊஊ நீங்கள் ஏன் உங்கள் பெயரை “பேர்ர்ர்ர்ர்ர்+இளம்பெண்” எனப் போடக்கூடாது:)) அதில “இளம்” பெண் என வருதெல்லோ:))... ஹா ஹா ஹா
Deleteநெல்லைத்தமிழனுக்கு நான் குண்டாக் கொம்பனி சுவீட்ஸ் அனுப்பிட்டேனாக்கும் பிக்கோஸ் .. பாராட்டிப்போட்டார் இன்று ஹா ஹா ஹா:))
//பேர்ர்ர்ர்ர்ர்+இளம்பெண்” எனப் போடக்கூடாது:)) அதில “இளம்” பெண் என வருதெல்லோ:)).//
Deleteஇந்த வம்பே வேணாம்னுதான் நான் பட்டத்தை துறந்திட்டேன் :)
நீங்கள் போடாட்டிலும் “பேர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இளம்பெண் தான்” அஞ்சு:).. நான் உங்களுக்குப் பட்டம் சூட்டிக் கெளரவிக்கிறேன்:)) ஹா ஹா ஹா..
Deleteஉண்மையைச் சொன்னா, பழங்காலத்தில் பெண்ணிற்கு (ஆணிற்கும்தான்) ஆயுள் குறைவு. (சும்மா வீட்டில் உள்ள நண்டு சிண்டு முதற்கொண்டு கூட்டுக்குடும்பத்தில் சாப்பாடு செய்வது, மற்ற வேலைகள், வருடத்திற்கு ஒன்று என்று பிள்ளை பெறுவது என ஓயாமல் வேலை செய்தால்). அதனால்
Delete1. பேதை : 5 முதல் 8 வயது
2. பெதும்பை : 9 முதல் 10 வயது
3. மங்கை : 11 முதல் 14 வயது
4. மடந்தை: 15 முதல் 18 வயது
5. அரிவை: 19 முதல் 24 வயது
6. தெரிவை: 25 முதல் 29 வயது
7. பேரிளம்பெண்: 30 முதல் 36 வயது
பேரிளம் பெண் என்பவளே கிழவி எனப்படுபவள். இப்போ ஆயுசு ஜாஸ்தி என்பதால் சராசரி வயது 72னு வச்சிருக்காங்க.
எனக்கு ஒரு சந்தேகம். சங்ககால முறைப்படி, ஏஞ்சலின் எந்த கேடகரில வருவாங்க?
நோஓஒ என்ன இது இப்படித் தமிழ்ச் சொற்கள், காலத்துக்கு ஏற்ப மாறுமோ? அதெப்படி?. அப்படி எனில் மடந்தை என நான் ஆரம்பம் வச்சது பொருந்துதே இங்கு:)..
Delete36 வயசோடு முடிகிறதே.. அதன் பின்பு வரும் பெண்களுக்கு என்ன பெயர்? அல்லது 36 உடன் ஆயுள் முடிஞ்சிடுமோ? இருக்கலாம் ஏனெனில் 8,9 வயசிலேயே திருமணம் எல்லோ அக்காலத்தில்... அதுசரி ஆண்களுக்கு இப்படிப் பெயர்கள் இல்லையோ...
//எனக்கு ஒரு சந்தேகம். சங்ககால முறைப்படி, ஏஞ்சலின் எந்த கேடகரில வருவாங்க?///
அது அஞ்சுவுக்கு அக்காலத்தில் பெயரே வைக்கேல்லை:)) ஏன் தெரியுமோ உந்த லிஸ்ட்டில அஞ்சுவின் வயசைக் காணம்:)) ஹா ஹா ஹா...
தமிழர் பரம்பரை - முன்னமே அறிந்திருக்கிறேன். ஆனால் முழுவதும் நினைவில் இல்லை.
ReplyDeleteஆனா இந்த மாதிரி முக்கியமானவைகளை வெளியிடறவங்களுக்கு தமிழறிவு இல்லை என்பது வருத்தமாத்தான் இருக்கும். நிறைய வாட்சப்பில் இந்த மாதிரி தமிழில் தவறா எழுதும்போது அதைத் தயாரித்தவர்கள் மீது 'தமிழே தெரியாதவன்' என்ற அலட்சியம்தான் வரும்.
தெரிந்துக் கொள்வோம் - னு எழுதியிருக்காங்க. அங்க எப்படி 'க்' வரும்?
அந்தப் பரம்பரையில் பாட்டன் பாட்டி எனும் இடத்தில் பேரன் பேர்த்தி எனவும் சொல்லுவோம் தானே.. அது இங்கில்லையே...
Deleteஅதுசரி, பேத்தியா பெயர்த்தியோ சரி எனவும் டவுட்டிருக்குது எனக்கு.
//நிறைய வாட்சப்பில் இந்த மாதிரி தமிழில் தவறா எழுதும்போது அதைத் தயாரித்தவர்கள் மீது 'தமிழே தெரியாதவன்' என்ற அலட்சியம்தான் வரும்.//
உண்மைதான், கொமெடியாக எழுதுகிறார்கள் எனப் படிச்சால் நிறைய எழுத்துப் பிழை...
ஹா ஹா ஹா க் வரவேண்டிய இடத்தில் போட்டிருக்க மாட்டினம்:))
தாத்தாவின் பெயர் பெரும்பாலும் பேரனுக்கு வைப்பதால், பெயரன். பெண்பால், பெயர்த்தி. அதுவே திரிந்து பேரன், பேத்தி என்று வந்தது.
Deleteஓ.. இதுவோ பொருள்.. நன்றி நெ த.
Deleteஊசி இணைப்பு - தகப்பனிடம்.... - அருமையான கருத்து. பாலகுமாரன் பெண்களைப் பற்றி நல்ல விதமாக எழுதுவதற்கு அவருடைய அம்மா காரணம் என்று எழுதியிருக்கிறார்.
ReplyDeleteஇந்த கமெண்டை படிச்சதும் ஒன்று துறுதுறுப்பா தோணுச்சு :) சரி வேணாம் விட்டுடுவோம்
Deleteஉண்மைதானே நெல்லைத்தமிழன், பெற்றோரைப்பார்த்துத்தானே பிள்ளைகள் வளருகின்றனர், ஒரு மனிதனின் அடிப்படைக் குணங்கள் 3,4 வயதுக்குள் வந்துவிடுமாம்.
Delete//
DeleteAngelThursday, May 28, 2020 4:12:00 pm
இந்த கமெண்டை படிச்சதும் ஒன்று துறுதுறுப்பா தோணுச்சு :) சரி வேணாம் விட்டுடுவோம் //
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எப்பவும் பொல்லுக்குடுத்தே அடிவாங்கத் துடிக்கிறீங்க:)) ஹா ஹா ஹா நல்லவேளை சொல்லாமல் விட்டீங்க:))
பூக்கள் படம் அழகு.
ReplyDeleteஎப்போதான் ஆப்பிள் (அப்பிள் இல்லை) மரம் படம், ஆப்பிள்கள் படம் போடுவீங்களோ... எப்போ அவற்றிர்க்கு சீசன்?
ஹா ஹா ஹா அப்பிள்[ஆப்பிள் இல்லை:)]...., மரம் நட்டபடியே நிற்குதே, இம்முறையும் பூக்கவில்லை.. பெயார்ஸ் தான் பூத்தது படம் போட்டேனெல்லோ.. இப்போ பிஞ்சுகள் வந்திருக்குது... அப்பிள் இன்னும் வளரோணும் போல, முதல் தடவை நிறைய உரம் போட்டுத்தந்திருக்கினம், அது வாங்கி வரும்போதே பூக்களோடு வந்தமையால 4 காய்கள் வந்துது பின்பு இன்னும் இல்லை, இங்கு ஏனைய வீடுகளில் ஆப்பிள் மரங்கள் பூத்துவிட்டன எங்கட மட்டும் பூக்கவில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
Deleteபரன், பரை - இரண்டும் சேர்ந்துதான் பரம்பரை (ன் என்பது ம் ஆகிவிடும்) என்று வந்திருக்குமோ?
ReplyDeleteஇந்தச் சந்தேகத்தை அதிரா கன்ஃபர்ம் செய்ய சிமியோன் டீச்சர் இன்னும் இருப்பாங்களா?
//பரன், பரை - இரண்டும் சேர்ந்துதான் பரம்பரை (ன் என்பது ம் ஆகிவிடும்) என்று வந்திருக்குமோ?//
Deleteஓ நீங்கள் சொன்ன பின்புதான் எனக்கும் இப்படி நினைக்கத் தோணுது..
//இந்தச் சந்தேகத்தை அதிரா கன்ஃபர்ம் செய்ய சிமியோன் டீச்சர் இன்னும் இருப்பாங்களா?///
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இனி நான் அங்கு:) போனால்தான் அவவைச் சந்திச்சுக் கேட்க முடியுமாக்கும்:))..
ஒருவேளை அதன் சரியான வார்த்தை “பரன்பரை” தானோ?:)) ஹா ஹா ஹா
மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன்.
நல்லதொரு இளையராஜா பாடல். ரேவதியின் நடனமும் கொஞ்சம் புதுமையாயிருக்கும் - அப்போது!
ReplyDeleteவாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. ஆஆஆ இம்முறை பாட்டுக் கேட்டுவிட்டீங்கள்... நன்றி.
Deleteஆஹா... டெய்ஸி பரிசு தருகிறேன் என்று பிற உயிர்களுக்கு வேட்டு வைக்கிறதா? பாவம் அந்த சின்ன ஜீவன். எப்படியோ உங்கள் அறிவுக்கு கூர்மையினால் பிழைத்து விட்டது. இதற்காகவே உங்களை பாராட்டி அஞ்சு ஒரு வைர நெக்லஸ் அனுப்புவார்கள் என்பதை அறிவிக்கிறேன்!
ReplyDeleteநோ நான் அனுப்பணும்னா பிஞ்சு மந்தை :) kfc மெக்டொனால்ட்ஸ் எல்லாம் மொத்தமா கைவிடனும் :) அப்போ ஒரு swarovski யில் செய்த கம்மல் நெக்லஸ் செட் அனுப்பி வைக்கப்படும் :) ..எப்படி இவ்ளோ தைரியமா சொல்ரேன்னு பாக்கறீங்களா நான் சொன்ன விஷயத்துக்கு பூனை ஒத்துக்கவே மாட்டாங்க ஹ்ஹஹ்ஹா
Delete//எப்படியோ உங்கள் அறிவுக்கு கூர்மையினால் பிழைத்து விட்டது. //
Deleteஇதை இன்னும் கொஞ்சம் ஜத்தமாகச் சொல்லோணும் ஸ்ரீராம்:)) ஏனெனில் சிலருக்கு இப்போ ஒழுங்காகக் காது கேய்ப்ப்ப்பதில்லையாமே:)), ஆனா வேறை ஏதும் ரகசியம் பேசினால் மட்டும் சட்டெனக் கேட்டுவிடும்:)) ஹா ஹா ஹா..
//இதற்காகவே உங்களை பாராட்டி அஞ்சு ஒரு வைர நெக்லஸ் அனுப்புவார்கள் என்பதை அறிவிக்கிறேன்!//
ம்ஹூம்ம்.. நீங்க வேறை:)) அவ ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி மகளே என.. என்னைப் பாராட்ட மாட்டாவாக்கும்:)) நான் சொன்னனே எனக்கு எடிரி:)) வெளியில இல்லை:)) ஹா ஹா ஹா...
///AngelThursday, May 28, 2020 4:22:00 pm
Deleteநோ நான் அனுப்பணும்னா பிஞ்சு மந்தை :) kfc மெக்டொனால்ட்ஸ் எல்லாம் மொத்தமா கைவிடனும் :)///
அல்ல்லோ நான் என்ன அவ்ளோ வெயிட்டாவா இருக்கிறேன் .. ஒரு கூட்டப் பெயரைச் சொல்லிக் கூப்பிடுறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... நான் இப்போ ரொம்ப வயக்கெட்டுப்போயிட்டேன் ஆக்கும்.. சமர் ஜக்கெட் எல்லாம் தொளதொள என ஆடுது ஹா ஹா ஹா...
டமில்ப்புரொபிசர் இதை எல்ல்லாம் கவனிக்க மாட்டாரோ:)).. அது பெதும்பை ஆக்கும்:)) ஹையோ எனக்கே இன்னும் வாயில நுழையுதில்லை இந்தப் பட்டம்:)).. பார்த்துப் பார்த்தே எழுதுகிறேன் ஹா ஹா ஹா....
உங்களுக்கு ஒரு நேர்ஸ் சே சே டங்கு ஸ்லிப்பாகுதே நூஊஊஉஸ்ஸ்ஸ் ஜொள்ளட்டோ?:)).. இன்று எங்கட கே எஃப் சி வாசல்ல பென்னாம் பெரிய போர்ட்... அது என்ன எழுதியிருக்குது தெரியுமோ?:)).... we wre open for DRIVE THRU:)) ஹா ஹா ஹா... ஜந்தோசம் பொயிங்குதே:))...
ஆனா நான் இண்டைக்கு திரும்பிக்கூடப் பார்க்கேல்லை அஞ்சு:)) ச்சோ ஸ்வாரோஸ்கி யை அனுப்பி வைக்கவும் பீச்ச்ச்ச்ச்ச்ச்:)).. இன்று என்ன கிழமை என செக் பண்ண வேண்டாம்:))
ஆமாம்... பறவை பத்திரமாக பறந்து சென்று விட்டது அல்லவா?!!
ReplyDeleteஉங்கள் தோட்டப்பூக்கள் அருமை.
கண்ணுக்கு எட்டிய தூரம் பறந்தது ஸ்ரீராம், மழை நாளும் எல்லோ.. அதனால பின்னர் என்ன ஆச்சோ தெரியவில்லை..
Deleteநன்றி நன்றி.
ஊசிக்குறிப்பு சிரிக்க வைத்தது. பணிக்குச் செல்லும் வேளையில் என்னை நிறுத்திய போலீஸ்காரருக்கு கொரோனா கவலை இல்லை போலும். நாந்தான் அவரை மாஸ்க் போட்டுக்கொண்டு என்னுடன் பேசச்சொன்னேன்!
ReplyDelete// நாந்தான் அவரை மாஸ்க் போட்டுக்கொண்டு என்னுடன் பேசச்சொன்னேன்!
Delete///
ஆஆஆஆ இது உண்மையாகச் சொன்னீங்களோ? நான் நம்ப மாட்டேன் ஸ்ரீராம் இப்படி எல்லாம் சொல்லுவார் என.. ஹா ஹா ஹா..
ஊசி இணைப்பு அருமை. தமிழர் பரம்பரை மனதில் நினைவில் நிற்காது! நாம் யாருமே நம் பெருமையை முழுவதும் உணர்வதே இல்லை என்பதே உண்மை!
ReplyDelete//நாம் யாருமே நம் பெருமையை முழுவதும் உணர்வதே இல்லை என்பதே உண்மை!
Delete///
நமக்கு எப்பவும் தெரியாதுதானே ஸ்ரீராம், அடுத்தவர் அதை நம்மிடம் சொல்லும்போதுதான்.. நமக்குப் பெருமையாக இருக்கும்...,
மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.
ஸ்ஸ்ஸ்ஸ் ஹப்பா இப்போதான் வர முடிஞ்சது .இன்னிக்கு நிறைய ஊறுகாய் வற்றல் வேலை :) உங்கூரில் வெயில் இல்லையா பஞ்சு கடந்தை :)
ReplyDeleteஊறுகாய் வற்றலா? தலை சுத்துதே எனக்கு. ஒரு வேளை போணியாகாமல் கிடந்த ஊறுகாயை, ஜவ்வரிசி கூழுடன் கலந்து வற்றலாக இட்டுவிட்டீர்களா?
Deleteஹையோ அவசரத்தில் , , கமா விட்டுப்போச்சு
Deleteஊறுகாய் வற்றலா...ஹா ஹா,.....
Deleteவாங்கோ அஞ்சு வாங்கோ..
Delete// உங்கூரில் வெயில் இல்லையா பஞ்சு கடந்தை :)//
நெல்லைத்தமிழன்.. அஞ்சுவைப்பாருங்கோ “கடந்தை” ஆம்ம்ம்ம் என்னைக் கூப்பிடுறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஒருவேளை கடந்தை எனில் அழகான அறிவான அன்பான பண்பான இப்பூடி இருக்குமோ?:)).. இதென்ன இது புலாலியூர்ப் பூஸானந்தா என விடை வருது ஹா ஹா ஹா...
"கடந்தை" என்பதற்கு பொருள் இல்லை. நீ ஐம்பதைக் கடந்தை - இதற்கு அர்த்தம் நீ ஐம்பது வயதைக் கடந்துவிட்டாய் என்பது. மற்றபடி தட்டச்சுப் பிழை என்றே நினைக்கிறேன்.
Delete@நெல்லைத்தமிழன்
Delete//நீ ஐம்பதைக் கடந்தை - இதற்கு அர்த்தம் நீ ஐம்பது வயதைக் கடந்துவிட்டாய் என்பது.///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கடப்பதில்கூட ஐம்பதைத்தான் உதாரணம் காட்டுறாராம்ம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஏன் 15 ஐக் கடந்த எனச் சொன்னால் பொருந்தாதோ:)).. விடுங்கோ நான் காசிக்குப் போறேன்ன்ன்:)) எனக்கு ஸ்பெசல் பிளேன் வேணும்ம்ம்ம்ம்ம்ம்:)).. சனரைஸர் அடிச்ச பிளேனா வேஎணும்:))..
//மற்றபடி தட்டச்சுப் பிழை என்றே நினைக்கிறேன்.//
ம்ஹூம்ம்.. அவ வேணுமென எதுகை மோனையில ஜொள்ளுறாவாம் கர்ர்ர்ர்ர்:))
ஹா ஹா ஹா நன்றி நெல்லைத்தமிழன்..
நம்ம எருமையை சேசே அருமையை பெருமையை என்னிக்கு நாம் உணர்ந்திருக்கோம் :)
ReplyDelete//
DeleteAngelThursday, May 28, 2020 3:47:00 pm
நம்ம எருமையை சேசே அருமையை பெருமையை என்னிக்கு நாம் உணர்ந்திருக்கோம் :) //
அதுதானே..:))
[im] https://3.bp.blogspot.com/-zClHaFheynk/VrJEGjQTaGI/AAAAAAAAC2E/3CXumdPagQo/s400/cat%2Bfighting%2Bgif.gif [/im]
கொரோனா ஊசிகுறிப்பு ஹாஹா :) நேத்து கடைக்கு போனப்போ ஒரு பெண்மணி என் மாஸ்க்கை பார்த்து // யூ ஷுடின்ட் பி wearing தீஸ் மாஸ்க்ஸ் என்று ஒரு மார்க்கமா சொல்லிட்டு நடந்த்துச்சு மேடம் செம மப்பில் இருந்தார் ஹையோ ஹையோ இந்த பெருங்குடிமகனார்களை மகளார்களை நினைச்சா அழுகையும் சிரிப்பும் சேர்ந்து வருது
ReplyDeleteஆஆ இது எந்த நாட்டுக்காரரோ... இங்கத்தையோராக இருக்க வாய்ப்பே இல்லையே அஞ்சு
Deleteஊசி இணைப்பு மிகவும் உண்மை ஒரு ஆண் எவ்வளவுக்கவ்வளவு ஒரு பெண்ணை தனது மனைவியை மதிக்கிறார் நேசிக்கிறார் மரியாதை தருகின்றார் என்பதை வைத்து அறியலாம் அவரது தாய் எப்படி சிறந்தவராக இருந்திருப்பார்னு .சிந்தனைகள் பேரழகாவதற்கு நல்ல வளர்ப்பு மிக முக்கியம் .
ReplyDeleteஒரு எக்ஸ்சாம்பில் சொல்றேன் உண்மை சம்பவம் ஒரு ஆண் வேலைமுடிந்து வீடு திரும்பும்போது வழியில் ஒரு இளம்பெண்ணின் கார் குழியில் மாட்டி எடுக்க கஷ்டப்பட்டிட்டுருந்தார் இவர் காரை நிறுத்தி உதவிக்கு போனார் பிறகு பின்னால் இன்னும் இரண்டு பேர் காரை நிறுத்தி உதவிக்கு போயிருக்காங்க .ஒரு வழியா காரை எடுத்து அப்பெண்ணை வழியனுப்பியிருக்காங்க .இதை கேள்விப்பட்ட மற்றொரு பெண்மணி //ஆஅ அப்படியெல்லாம் இரவு நேரங்களில் தனியா உதவ போகாதீங்க சிலவேளை கெட்டவரா /எஸ்கார்ட்ஸ் போல்/கொள்ளையடிக்கும் எண்ணமுடன் இருக்கலாம்ணு சொன்னார் ..பிறகு தான அறிந்தேன் அந்த பயம் காட்டிய பெண்மணியின் தந்தை அக்குடும்பத்தை சிறு வயதில் தவிக்க விட்டு சென்றவர் இப்பெண் சின்னத்தில் இருந்தே தாயுடன் மட்டும் வளர்ந்திருக்கார் தந்தை/ஆண்கள் பற்றிய நெகட்டிவ் எண்ணம் ஒரு ஆணையும் நம்பக்கூடாதுன்னு மனதில் ஏற்பட்டிருக்கு.
நீங்க சொல்வதும் சரி அஞ்சு, அருண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப்போல.
Deleteஆனா இந்த நாடுகளில், இப்படி டக்கென உதவுவது சரியென நானும் சொல்ல மாட்டேன் அஞ்சு, பேசாமல் பொலிஸ் க்குப் போன் பண்ணுவதே நல்லது, அவர்கள் காப்பாற்றுவார்கள்.
இப்போ நடந்திருக்குது கனடாவில்... கணவன் மனைவி எங்கோ போய் விட்டுத் திரும்பியிருக்கினம், வழியில ஒரு கார் எதிலோ மோதியபடி நின்றிருக்குது, உடனே இவர்கள் காரை நிறுத்திப்போட்டு, கீழே இறங்கி கணவர் அதிலேயே நிற்க, கொரோனா நேரமெல்லோ, அந்தக் காருக்குள் ஆரோ தெரியவில்லையே என, மனைவி காருள் பார்க்கப் போயிருக்கிறா அருகில்....
எங்கிருந்தோ ஸ்பீட்டாக வந்த இன்னொரு கார், கீழே இறங்கி நின்ற இந்தக் கணவரை அடிச்சு விட்டது.. மோட்ட வே என நினைக்கிறேன்.. அவர் அதிலேயே சரி.. 52 வயசாம், 5 குழந்தைகளாம்.. தமிழ் ஆட்கள். அப்போ பாருங்கோ உதவி செய்யும் நல்ல மனப்பாங்குடன், காரை நிறுத்தி இறங்கியதால வந்த பரிசு, இப்படியானதைக் கேட்டால் இனி ஆருக்குமே உதவி செய்யும் எண்ணம் வராதே...
//ஒரு இளம்பெண்ணின் கார் குழியில் மாட்டி எடுக்க கஷ்டப்பட்டிட்டுருந்தார் இவர் காரை நிறுத்தி// - ஹா ஹா ஹா.
Deleteஇளம்பெண் கஷ்டப்படுகிறா என்றால் 99 வயதுப் பெரியவரும் வேலையை விட்டுவிட்டு அவளுக்கு உதவி செய்ய முற்படுவாங்க. அதே சமயம் பேரிளம்பெண் கஷ்டப்படறான்னு சொல்லிப்பாருங்க, அவனவன் பிஸியாகிடுவான்.
எனக்கு பொதுவா இந்த மாதிரி வழியில் லிஃப்ட் கேட்பவர்கள், ஒரு கால் பண்ணணும் செல்ஃபோன் தாங்க என்பவர்கள் யாருக்கும் உதவ மாட்டேன். ஏன் குழந்தையை வைத்துக்கொண்டு பிச்சை எடுப்பவர்கள், ஓரளவு திடகாத்திரமாக இருந்துகொண்டு பிச்சை கேட்பவர்களையெல்லாம் ஒன்றும் சொல்லாமல் கடந்துபோய்விடுவேன்.
இதுக்கு ஜாக்கிரதை உணர்வுதான் காரணம்.
//இளம்பெண் கஷ்டப்படுகிறா என்றால் 99 வயதுப் பெரியவரும் வேலையை விட்டுவிட்டு அவளுக்கு உதவி செய்ய முற்படுவாங்க. அதே சமயம் பேரிளம்பெண் கஷ்டப்படறான்னு சொல்லிப்பாருங்க, அவனவன் பிஸியாகிடுவான்.//
Deleteஉண்மைகளை உண்மையாக புட்டுப்புட்டு வைக்கும் நெல்லைத்தமிழன் ஸ்வாமிக்கு இதிலெல்லாம் அனுபவம் ஜாஸ்தி போலிருக்குது. ஊர் ஊராக, நாடு நாடாகச் சுற்றி திரிந்தவர் + திரிபவர் ஆச்சே! ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !
நான் பல்லாண்டுகளாக வீட்டுக்குள்ளேயே லாக் டவுனில் அடைந்து கிடப்பினும், வலையுலக மகளிர் (அவர்கள் அதிரா போல எத்தனை வயதினர் ஆனாலும்கூட) அவர்களிடம் அன்பு செலுத்தி, அவர்களின் எழுத்து அழகினை மதித்து, நல்லதாக நாலு வார்த்தைகள் பின்னூட்டமாவது இடுவது உண்டு.
//அதே சமயம் பேரிளம்பெண் கஷ்டப்படறான்னு சொல்லிப்பாருங்க,//
Deleteஹா ஹா ஹா நெல்லைத்தமிழன், நீங்க அஞ்சுவைச் சொல்லல்லியே:)).. இல்ல பேரிளம்பெண் என்றீங்களே:)) அதனால ஆர்வம் அதிகமாகிக் கேட்டுப்புட்டேன்ன்:))..
//இதுக்கு ஜாக்கிரதை உணர்வுதான் காரணம்.//
உண்மைதான், இப்போதெல்லாம் எந்தப் புத்தில் எந்தப் பாம்பிருக்குமோ தெரியாதே.. என் கணவரும், தன் ப்பிளட்டைக் குடுத்து, தானே வைத்தியம் பார்த்துக்கூட பேசண்டைக் காப்பாத்தியிருக்கிறார், ஆனா இப்படியான விசயங்கள், மற்றும் ஆராவது பொது இடத்தில் மயக்கம் போட்டு விழுந்தாலோ கிட்ட நெருங்க மாட்டார், உதவப் பயப்பிடுவார்.. நான் தான் துடிப்பேன் ஐயோ பாவமே என:)... ஹா ஹா ஹா.
///உண்மைகளை உண்மையாக புட்டுப்புட்டு வைக்கும் நெல்லைத்தமிழன் ஸ்வாமிக்கு இதிலெல்லாம் அனுபவம் ஜாஸ்தி போலிருக்குது. ஊர் ஊராக, நாடு நாடாகச் சுற்றி திரிந்தவர் + திரிபவர் ஆச்சே!///
Deleteதன்..உஸ்ஸ்ஸ்ஸ்வாமிக்குப்:) பதில் குடுக்க:)) கோபு அண்ணன் ஓடி வந்திருக்கிறார்:)).. ஆனால் பாருங்கோ கோபு அண்ணன், நீங்கள் சொல்லியிருப்பது சரியேதான்:))... ஏன் தெரியுமோ.. இப்போ நீங்கள் கொமெண்ட் குடுத்தாலும் அவர்[நெ.த]
ஓடிவந்து பதில் தருவதில்லை:)).. இதில இருந்து என்ன தெரியுது?:)) நீங்கள் ஒரு இளம்பெண் இல்லை:)) ஹா ஹா ஹா..
//வலையுலக மகளிர் (அவர்கள் அதிரா போல எத்தனை வயதினர் ஆனாலும்கூட)//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இங்கின பொருட்பிழை வந்துவிட்டது கோபு அண்ணன்:)).. அதாவது அவர்கள், அதிரா போல சுவீட் 16 இல்லாட்டிலும், பேரிளம் பெண் ஆனாலும்கூட:).. என வந்திருக்கோணும்.. எனக்குத் தமிழ்ல டி எல்லோ.. அதனால பொருட்பிழை எல்லாம் டக்கு டக்கெனக் கண்ணுக்குத் தெரிஞ்சிடுது:)) ஹா ஹா ஹா..
//நல்லதாக நாலு வார்த்தைகள் பின்னூட்டமாவது இடுவது உண்டு.///
இது உண்மை கோபு அண்ணன், வயதாகிட்டால் என்னிடம் தான் எல்லோரும் வந்து ஊக்குவித்துக் கொமெண்ட் போடோணும் என எண்ணாமல், நீங்கள் வந்து கொமெண்ட் போடும் உங்கள் நல்ல மனதை, நாங்களும்:)) அப்பப்ப கதைப்பதுண்டு:))..
மீள் வருகைக்கு நன்றி கோபு அண்ணன்.
கர்ர்ர்ர் @ நெல்லைத்தமிழன் அவர் ஒரு காரில் யாரோ குழில மாட்டி ஸ்ட்ரக்கில் செய்றதைப்பார்த்துதான் ஹெல்ப்புக்கு போனார் :) இறங்கி விசாரிச்சப்போதான் அது இளம்பெண் தண்ணி பாட்டிலைலை கரோட்டும்போதே எடுக்க குனியவும் தடுமாறி கார் சரிவில் விழுந்நு னு சொன்னாராம் .என் கணவர் வேறெமாதிரி யோசிக்கவே மாட்டார் மனம்போன போக்கில் உதவி செஞ்சிட்டு போயிடுவார் கேட்டா நம்ம மகள் ஆபத்தில் கஷ்டத்தில் இருந்தா இப்படி யாராவது கண்டுக்காம போனா எப்படி feel பண்ணுவீங்கன்னு சொல்றார் :)
Deleteஹலோவ் சிட்டைக்🐈 காத்த மடந்தை:)) அந்த hammock அறுந்து விழப்போகுது பாவம்ல :)
ReplyDeleteஅந்த சிட்டை பத்திரமா காப்பாத்திட்டீங்க :)
//இரண்டு நாட்களாக எட்டிப் பார்க்காமல் இருக்கிறாய் என ஆரோ// அந்த ஆரோ ஒரு ஸ்பெரோ :))
ஹையோ கோடை காலம் வந்திட்டாலே எங்கட டெய்சியோடு நாம் படும்பாடு சொல்லி வேலையில்லை... இன்று ஒரு குட்டி எலியைக் கொண்டு வந்து விளையாடுறா, நல்லவேளை எலிக்கு எந்தச் சேதமுமில்லை, துள்ளித் துள்ளி ஓடுது, இவ கவ்வுறா பின்னர் விடுறா, அன்றைப்போல நான் தான் ஓடிப்போய்க் கதை சொல்லி, இம்முறை இவவைத்தூக்கிக் கொண்டு உள்ளே வந்து லொக் பண்ணிட்டேன், எலி ஓடியிருக்கும்...
Delete////தான் ஸ்பரோ பிடிச்ச வரலாற்றை, ஏதோ அஞ்சு, அச்சப்பம் செய்த ரேஞ்சுக்கு சொல்ல வெளிக்கிட்டா:)..//
ReplyDeleteகர்ர்ர்ர் :) ஹாஹாஆ ..சிட்டு இப்போதான் முதலில் கூட்டைவிட்டு பறக்க துவங்கியிருக்கும் முதல் அட்டெம்ப்டில் உங்க டெய்சிகிட்ட மாட்டியிருக்கு
இந்த பூனைகுட்டீஸ் கிட்டருந்து பறவைங்களையும் எலியையும் காப்பாத்தறதே பெரிய வேலை நமக்கு :) நல்லவேளை பறவை பறந்தது நீங்க போட்ட டீயையும் குடிச்சு பறந்தது மெடிக்கல் மிரக்கிள் :)
அதேதான் அஞ்சு குழந்தைச் சிட்டுப்போலவே இல்ல இல்ல பிஞ்சுச் சிட்டுப்போலவே இருந்துது:), கால்கள்தான் நல்ல நீளம்.. இது ஒருவகை இனம் போலும்..
Delete//நல்லவேளை பறவை பறந்தது நீங்க போட்ட டீயையும் குடிச்சு பறந்தது மெடிக்கல் மிரக்கிள் :)//
https://media1.tenor.com/images/7fbf91cf106d2ed8f29adf770d95a57c/tenor.gif?itemid=11493316
பிஞ்சு ஒரு விஷயம் கவனிச்சீங்களா உங்களுக்கு பிடிச்ச நிறம் purple அன்ட் பிங்க் அதில் உங்களை சுற்றி வளருபவை அதே நிறம் எனக்கு மஞ்சள் வெள்ளை பிடிக்கும் அதே நிறத்தில் எங்கள் தோட்டம் முழுக்க மலர்கள் ..
ReplyDelete// ஏதோ தங்களிடம் மட்டும்தான் வரும் என சிலருக்குப் பெருமை கர்ர்ர்ர்ர்ர்:))//ஹலோ தைரியமிருந்தா அந்த தேனிகிட்ட கிட்டக்கப்போய் வணக்கம் சொல்லி உம்மா குடுங்க பார்க்கலாம்
///உங்களுக்கு பிடிச்ச நிறம் purple அன்ட் பிங்க் அதில் உங்களை சுற்றி வளருபவை அதே நிறம் எனக்கு மஞ்சள் வெள்ளை பிடிக்கும் அதே நிறத்தில் எங்கள் தோட்டம் முழுக்க மலர்கள் ..///
Deleteஆஆஆஆஆஆஆஆஆஅ இது என்ன இது பிரித்தானியாவுக்கே வந்த ஓதனை.. இன்னும் பூக்கள் வருது அஞ்சு... அவையும் பிங்கிதான்.. படம் போடுவேன் பாருங்கோ மீண்டும்.. அத்தோடு இன்னொரு பேப்பிளும் வருது ஹா ஹா ஹா..
//ஹலோ தைரியமிருந்தா அந்த தேனிகிட்ட கிட்டக்கப்போய் வணக்கம் சொல்லி உம்மா குடுங்க பார்க்கலாம் ///
ம்ஹூம்.. நாம ஆரூஊஊஊ?:)) வருமுன் காப்போனாக்கும்:)).. நீங்க முதலில் ஸ்ரீராம் சொன்ன அந்த நெக்லெஸ் ஐ அனுப்ப்புங்கோ அதைக் கழுத்தில கட்டிக்கொண்டு கொடுக்கிறேன்.. உம்மாவைத்தான்.. ஹா ஹா ஹா..
மிக்க நன்றிகள் அஞ்சு... மீண்டும் எப்போ உங்களைச் சந்திக்கலாம்?:))..
கானூயிர் தலைவி :) காப்பாற்றிய சிட்டு .
ReplyDeleteமனதை நிறைக்கும் மலர் தோட்டம் எனக் கவர்கிறது.
வாங்கோ மாதேவி வாங்கோ....
Delete//கானூயிர் தலைவி :) காப்பாற்றிய சிட்டு .//
ஹா ஹா ஹா டகெனப் பார்க்க காமதேனு எனத் தெரிஞ்சுதா:)) அவ்ளோ பெரிய ஆளாகிட்டனோ என ஷை ஷையா ஆகிப்போயிட்டேன்:))
மிக்க நன்றி மாதேவி..
அதிராவுக்கெனில் தட்ட மாட்டினம் கர்ர்ர்:))...யார் சொன்னா நான் பலமா தட்டுறது கேக்குதா அதிரா..
ReplyDeleteநல்ல செயல் வாழ்த்துக்கள் ..குருவியை காத்த குமரி
பிங்கி பிங்கி மயம்:...வாவ் ரொம்ப அழகு
ஊசி இணைப்பு..உண்மை உண்மை
பாட்டு ,...எனக்கும் ரொம்ப பிடிக்கும் ...
வாங்கோ அனு வாங்கோ..
Delete//யார் சொன்னா நான் பலமா தட்டுறது கேக்குதா அதிரா..//
கேக்குது கேக்குது.. அது அஞ்சுவீட்டுக் கூரையிலதானே தட்டுறீங்க.. இன்னும் இறுக்கித் தட்டுங்கோ ஹா ஹா ஹா நன்றி அனு:))..
//குருவியை காத்த குமரி
//
ஆஆஆஆ என் போன போஸ்ட்டில் எல்லோருக்கும் கவித கவித ஆ வந்துது:)) இம்முறை பட்டம் பட்டமா சூட்டுறீங்களே... இந்தப் பட்டத்துடன் கைக்குள் என்வலப்பும்தானே தருவீங்க எல்லோரும், இப்போ சுவிஸ் பாங்கிலயும் போட முடியாதே... ஹையோ யான் என்ன பண்ணுவேன்ன்:))
ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் அனு.
//வாங்கோ கரந்தை அண்ணன் வாங்கோ..
ReplyDeleteஹா ஹா ஹா நீங்கள் மட்டும்தான் கை தட்டியிருக்கிறீங்க நன்றி நன்றி//
நானும் தட்ட நினைத்தேன். அதிராவின் இளகிய மனம் பற்றிய நீண்டநேர நினைப்பில் அது மறந்துபோனது.
வாங்கோ அறிவுப்பசிஜி வாங்கோ...
Delete//நானும் தட்ட நினைத்தேன். அதிராவின் இளகிய மனம் பற்றிய நீண்டநேர நினைப்பில் அது மறந்துபோனது.///
ஹா ஹா ஹா ஹையோ ஹையோ.. :))
இன்று ஒரு எலியைக் கொண்டு வந்து விளையாடினா, அதையும் காப்பாற்றிப்போட்டேன்ன்ன் ஹா ஹா ஹா ... எலிகாத்த ஏகாம்பரம்:)).. சே சே எலிகாத்த எலிசபெத்[இது அஞ்சு சொன்னா:)] ஹா ஹா ஹா..
மிக்க நன்றி அபஜி.
இந்தப் பதிவின் தலைப்புக்கு ஏற்ற மிகப்பொருத்தமானதொரு வீடியோ, என் கைவசம், வாட்ஸ்-அப்பில் உள்ளது. முடிந்தால் மெயில் மூலம் அனுப்ப முயற்சிக்கிறேன். பார்த்தால் அசந்து போவீர்கள், அதிரா.
ReplyDeleteவாங்கோ கோபு அண்ணன் வாங்கோ...
Deleteஹா ஹா ஹா ஹையோ சூப்பர் வீடியோ, பார்த்திட்டேன், ஏற்கனவே கிடைச்சிருந்தால் போஸ்ட்டில் இணைத்து விட்டிருப்பேன்...
மிக்க நன்றி கோபு அண்ணன்.
சிட்டுக் குருவியைக் காப்பாற்றிய உங்கள் நல்ல எண்ணத்துக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
ReplyDeleteமற்ற விஷயங்களும் சிறப்பு.
வாங்கோ வெங்கட் வாங்கோ..
Deleteஹா ஹா ஹா மிக்க நன்றி வெங்கட்..
ஆ வந்து உங்க கார்டனில் ஜம்பிட்டேன் வரேன். நல்ல காலம் கதவு திறந்திருச்சு...ஏதேதோ நற்செயல் எல்லாம் செஞ்சுருக்கீங்க போல!! பொக்கே!! மாலை போட்டு மேடை போட்டுருவமா!! யாரங்கஏ மைக் எல்லாம் கொண்டுவாங்க இங்கு ஒரு பாராட்டுக் கூட்டம்!!!
ReplyDeleteகீதா
கீதா
வாங்கோ கீதா வாங்கோ.. பாருங்கோ இன்று சிட்டுப்பற்றிய போஸ்ட் என்றதனால உங்களுக்கும் நெட் கஸ்டம் கொடுக்கவில்லை!..
Delete//ஏதேதோ நற்செயல் எல்லாம் செஞ்சுருக்கீங்க போல!! பொக்கே!! மாலை போட்டு மேடை போட்டுருவமா!! யாரங்கஏ மைக் எல்லாம் கொண்டுவாங்க இங்கு ஒரு பாராட்டுக் கூட்டம்!!!///
ஹா ஹா ஹா இதுக்கேயா? இவ்ளோ கஸ்டமெல்லாம் எதுக்கு, நீங்கள் என்வலப்பைப் போஸ்ட்டில அனுப்பினால்கூட, நான் என்ன வாணாம் என்றோ சொல்லப்போறேன்ன்:))ஹா ஹா ஹா..
இன்று எலியையும் காப்பாத்திட்டேன்:)), பரிசைக்கூட்டுவீங்கதானே?:)).. அது விசயம் என்ன எனில், அவவுக்கு விளையாட மட்டுமே பிடிக்குது, சாப்பிட அல்ல.. டெய்ஷியும் இப்போ வெஜிட்டேரியன் போல:))
வாயிலே ஸ்பரோவை அழகாக கவ்வியபடி டெய்சிப்பிள்ளை,//
ReplyDeleteஆஅ ஆஅ இதை எதிர்ப்பார்த்தேன்!!! நீங்கள் காப்பாற்றியது என்றதை அறிந்ததும் நம்ம டெய்சிப்பிள்ளை ஏதோ செய்திருக்கிறா என்று...
கீதா
ஹா ஹா ஹா:)
Deleteமெதுவாக ஸ்பரோவைக் கீழே வச்சுப்போட்டு, நம்ப மாட்டீங்கள், என்ன அழகாக கதை சொல்லத் தொடங்கினா தெரியுமோ... தான் ஸ்பரோ பிடிச்ச வரலாற்றை, ஏதோ அஞ்சு, அச்சப்பம் செய்த ரேஞ்சுக்கு சொல்ல வெளிக்கிட்டா:)...//
ReplyDeleteஆஹா ஆஹா என்ன அழகு!! க்யூட் கொஞ்சனும் போல இருக்கு...
அதானே பார்த்தேன் கூடவே ஏஞ்சலை உள்ள இழுக்கலைனா தூக்கம்வ் வராதெ!!! ஹா ஹா ஹா
ஹையோ எனக்கு என் கண்ணழகி ஒரு பெரிய எலியைப் பிடித்துக் கொண்டு ராத்திரி வேட்டையாம்..ஹா ஹா வைத்துக் கொண்டு யாரையும் அருகே கூட விடாமல்....என்னைக் கண்டதும் ஒரு கதை சொன்னா பாருங்க...ஹையோ...வேறு யாரேனும் இருந்தால் வீடியோ எடுத்திருக்கலாம். நாம் உள்ளே போய் எடுத்து வருவதற்குள் அந்த மொமென்ட் போயிடும்...
அவள் பிடித்தாளாம் ராத்திரி ஓடி ஓடி பிடித்தாளாம் அவள் அதைக் காவல் காக்கிறாளாம் ஆனா அதை மத்தவங்க டிஸ்டர்ப் செய்யறாங்களாம்...ஹையோ என்ன கதை...என் மச்சினர் வீட்டில் அவளை எலி பிடிக்க வென்றே கொண்டு போனாங்க. அவங்க காரின் வயர் எல்லாம் கட் ஆனா எனக்குக் கஷ்டமாக இருந்தது. எலியும் பாவம்.
கீதா
///ஆஹா ஆஹா என்ன அழகு!! க்யூட் கொஞ்சனும் போல இருக்கு...//
Deleteஹா ஹா ஹா உண்மை கீதா, அவ சிலசமய்ம் கதை சொல்லும் அழகை ரசிச்சு முடியாது, ஆனா என்ன எனில் கையில ஃபோனை எடுத்தாலோ, இல்லை இன்னொருவர் கிட்ட வந்தாலோ[படமெடுக்க] ஓடிடுவா... அதுவும் கார்டினில் எனில், கிட்ட வருவா, ஓடுவா...
//ஹையோ...வேறு யாரேனும் இருந்தால் வீடியோ எடுத்திருக்கலாம். நாம் உள்ளே போய் எடுத்து வருவதற்குள் அந்த மொமென்ட் போயிடும்...
//
ஹா ஹா ஹா அதேதான்..
//அவள் பிடித்தாளாம் ராத்திரி ஓடி ஓடி பிடித்தாளாம் அவள் அதைக் காவல் காக்கிறாளாம் ஆனா அதை மத்தவங்க டிஸ்டர்ப் செய்யறாங்களாம்.//
ஹா ஹா ஹா பப்பிகளும், இப்படிச் சிலதை மற்றும் சில உணவுகளை உண்ணாமல், அழகாக காவல் காப்பினமெல்லோ அதுவும் ஒரு அழகுதான்... ஒரு சவுண்டும் கேட்கும் ர்ர்ர்ர்ர்ர்ர்..ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என ஹா ஹா ஹா..
//.என் மச்சினர் வீட்டில் அவளை எலி பிடிக்க வென்றே கொண்டு போனாங்க. //
ஆஆஆ இதென்ன இது புதுசா இருக்குது, பூனையைத்தான் கொண்டு போவினம் எலி பிடிக்க ஹா ஹா ஹா..
//அதானே பார்த்தேன் கூடவே ஏஞ்சலை உள்ள இழுக்கலைனா தூக்கம்வ் வராதெ!!! ஹா ஹா ஹா//
Deleteபின்ன என்ன கீதா, நான் செடிகள் நட்டுப்போட்டு, மழை குளிரில் எல்லாம் பாதுகாக்கிறேன்:), அவ, தான் எதுவும் நடவில்லையாம், குல்ட்டுக்குள் போர்த்துக்க்கொண்டு படுக்கிறா கர்ர்ர்ர்ர்:))
நான் முன்பு லோங் ஜம்பில 3 வதாக வந்தேன் தெரியுமோ...:))[உங்களுக்கு இதெல்லாம் தெரிய ஞாயமில்லை, சரி அதை விடுங்கோ:)].. //
ReplyDeleteஹப்பா ஹப்பா ஹப்பா...ஸ்பாஆஆஆஆஅ சைக்கிள் கேப்ல இப்பூடி சொல்லிக் கொள்ளவில்லைனா....ஹா ஹா ஹா ஹா ஹா
ஓ அதுக்குத்தான் அந்த கடைசி வெள்ளைக் குட்டி படமோ!!! புரிஞ்சு போச்சு!!!
கீதா
///ஓ அதுக்குத்தான் அந்த கடைசி வெள்ளைக் குட்டி படமோ!!! புரிஞ்சு போச்சு!!!///
Deleteஅது ஆரு கடசியில? பிக்குக்குட்டியைத்தானே சொல்றீங்க? ஹா ஹா ஹா அவர் அதிராவின் பெருமை பேசுறார்ர்ர்ர் ஹா ஹா ஹா
ஹையோ ஹையோ....முடிலப்பாஅ!!!! //ச்சும்ம்மா பார்த்துக்கொண்டிருக்காமல் கையைத் தட்டுங்கோ.. தட்டுங்கோ:))).. அதிராவுக்கெனில் தட்ட மாட்டினம் கர்ர்ர்:))//
ReplyDeleteஹா ஹா ஹா...கை தட்டாம இருப்போமா!! நம்ம அதிராவுக்கு!! கேட்டுச்சோ நான் தட்டினது?!!!!!!! கேட்கலைனா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...
கார்டன் பிங்கி பிங்கி மயமா பூக்களோடு பூத்துக் குலுங்கி செம அழகா இருக்கு!!
ஊகு ஹா ஹா ஹா லொள்ளு
ஊஇ நல்லாருக்கு ஆனா நல்ல பெற்றோரிடம்னு இருந்திருக்கலாமோ?! இது பிரித்துப் பேசுவது போல இருக்கோ?!!
தமிழர் பரம்பரை சார்ட் கூட என் ரிப்பெரான கம்ப்யூட்டரில் இருக்கு...
கீதா
//ஹா ஹா ஹா...கை தட்டாம இருப்போமா!! நம்ம அதிராவுக்கு!! கேட்டுச்சோ நான் தட்டினது?!!!!!!! கேட்கலைனா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..//
Deleteஹா ஹா ஹா நன்றி நன்றி..
//ஊஇ நல்லாருக்கு ஆனா நல்ல பெற்றோரிடம்னு இருந்திருக்கலாமோ?! இது பிரித்துப் பேசுவது போல இருக்கோ?!!//
அது பெண் பிள்ளையையும் ஆண் பிள்ளையையும் புறிம்பாகச் சொல்வதனால இப்படி.. அப்பா, அம்மா எனப் புறிச்சுச் சொல்லியிருக்கு கீதா.
குருவியைக் காப்பாற்றிய அதிரா வாழ்க!! சரியான சமயத்தில் டெய்சிப் பிள்ளையிடம் இருந்து காப்பாற்றி வழி அனுப்பி வைத்ததற்குப் பாராட்டுகள் அதிரா!!
ReplyDeleteகீதா
டங்கு கீதா டங்கூ அது குருவிக்கு நல்ல விதி இருந்திருக்குது அதனாலதான்.. மற்றும்படி நான் ஒரு தூதுவர்போலத்தான்:)) ஹா ஹா ஹா
Deleteகுருவியை உங்கள் பூனை பிடித்ததா? சாதாரணமாகப் பூனை பறவையைப் பிடித்தால் இறந்து போகும் வாய்ப்பு அதிகம். உங்கள் டெய்சிப் பிள்ளை நல்ல காலம் மெதுவாகத்தான் பிடித்திருந்திருக்கிறாள். உங்களிடம் வந்து காட்டியிருக்கிறாள். நல்ல காலம் நீங்கள் புத்தி கூர்மையுடன் அதை விடுவித்து காப்பாற்றி பறக்க விட்டிருக்கிறீர்கள். குருவி டீ எல்லாம் குடிக்குமோ? (ரீ என்றால் டீ இப்படி உங்கள் டிக்ஷ்னரி ஒன்று நோட் செய்து வைத்துள்ளேன்)
ReplyDeleteபூக்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன. நல்ல தோட்டம்.
எங்கள் வீட்டிலும் சேம்பு நட்டோம். ரப்பர் மரங்கள் பால் விடத் தொடங்கிருக்கின்றன. தேங்காய் பறித்து உரித்து பலவற்றைக் காய வைத்து எண்ணை ஆட்டினோம்.
ஊசிக் குறிப்பு,ஊசி இணைப்பு எல்லாம் ரசித்தேன்.
துளசிதரன்
வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ..
Delete//சாதாரணமாகப் பூனை பறவையைப் பிடித்தால் இறந்து போகும் வாய்ப்பு அதிகம்.//
அது பிடிக்கும்போது இறப்பதில்லை துளசி அண்ணன், பின்பு வைத்து காலால் அமத்தி விளையாடும்போதுதான் தப்பு நடக்கும்.. இன்னொன்று இங்கத்தைய பூனைகள் பசிக்காக பிடிப்பதில்லை, விளையாட்டிற்கே பிடிக்கின்றன, நம் ஊர்களில் பசிக்காக வேட்டையாடுவர் என நினைக்கிறேன் ஹா ஹா ஹா..
//குருவி டீ எல்லாம் குடிக்குமோ? (ரீ என்றால் டீ இப்படி உங்கள் டிக்ஷ்னரி ஒன்று நோட் செய்து வைத்துள்ளேன்)//
ஹா ஹா ஹா உங்களிடமும் டிக்ஷனறி இருக்கோ?:)) இங்கே நிறையப்பேர் வச்சிருக்கினம், இப்போ எல்லாம் ஆருக்கும் என் எழுத்தில் டவுட்டே வருவதில்லை:)) புரிஞ்சிடுது போலும்:)) ஹா ஹா ஹா..
முன்பு எனில் என் செக்:) விளக்கம் குடுப்பா:) ஹா ஹா ஹா
//எங்கள் வீட்டிலும் சேம்பு நட்டோம். ரப்பர் மரங்கள் பால் விடத் தொடங்கிருக்கின்றன. தேங்காய் பறித்து உரித்து பலவற்றைக் காய வைத்து எண்ணை ஆட்டினோம்.//
ஆஆஆஆஆ ரப்பர் மரங்களோ.. படமெடுட்த்ஹுப் போஸ்ட் போடுங்கோ எல்லாத்தையும் பிளீஸ்ஸ்...
மிக்க நன்றிகள் துளசி அண்ணன்.
மிக்க நன்றிகள் கீதா.
ஸ்பாரோவைக் காத்து அருளிய அதிரான்னு இன்னோரு பட்டம்
ReplyDeleteகொடுத்துட்டேன்.
டெய்சி ரொம்ப நல்ல பொண்ணுப்பா,.
பூக்களுக்கும் தேனீயும் மிக அழகு. வண்ணக் குவியல்
உங்கள் தோட்டம்.
ரேவதியின் பாடல் மிக மென்மை. அந்த நடனம் அப்போது கல்லூரிகளில் பிரபலம்.
அம்மா,அப்பாவும் நல்லவர்களாக இருந்தால் பிள்ளைகளும் நன்றே வளர்வார்கள்.
உங்களூர்க் குடிமகள்கள் தைரியமானவர்கள் தான்.
கொரொனா தராமல் போனால் சரி.
வாங்கோ வல்லிம்மா வாங்கோ.
Deleteஹா ஹா ஹா நீங்கள் என் பக்கம் வரும்போதெல்லாம் ஒரு பட்டம் அளித்துவிடுகிறீங்கள்.. நன்றி நன்றி.
நன்றி வல்லிம்மா.
//ஊஊஊஊ என மழை இலேசாகத் தூறிக் கொண்டிருந்தது. காற்றும் கொஞ்சம் நல்ல்ல்ல் என வீசிக்கொண்டிருக்க,//
ReplyDeleteஇப்படி எங்க மழையும் காற்றும் சத்தம் போடும். நான் நினைக்கிறன் உங்க ஊரில மட்டும் இப்படியாக்கும்.
//உங்களுக்கு தெரியாது பாருங்கோ....// இதை வாசிக்க வாசிக்க எனக்கு பாலச்சந்திரனின் நாடகம் அண்ணை ரைற்) தான் ஞாபகம் வருது. அதையெல்லாம் கேட்டு சிரிக்காத நாட்களில்லை.
அப்பாடா ஒருவழியா காப்பாத்திவிட்டீங்க. கெட்டிக்காரி. அவா அந்த பெட்டிக்குள்ளே இருந்து பார்க்கும் பார்வை..பர்ருங்கோ மனதை என்னவோ செய்யுது.பாவம்.
வாங்கோ அம்முலு வாங்கோ..
Delete//இப்படி எங்க மழையும் காற்றும் சத்தம் போடும். நான் நினைக்கிறன் உங்க ஊரில மட்டும் இப்படியாக்கும்.//
ஹா ஹா ஹா அதூஊஊஊ அதிரா மட்டுமில்லை:), அதிராட ஊரில எல்லாமே கொஞ்சம் டிபரெண்ட் தேன்ன்ன்:))..
//பாலச்சந்திரனின் நாடகம் அண்ணை ரைற்) தான் ஞாபகம் வருது//
ஹா ஹா ஹா நாங்களும் முந்தி வெள்ளிக்கிழமை 7 மணிக்காக்கும்.. அண்ணரைட் ரேடியோவில் கேட்போம்... அவர் போன வருடம்?? காலமாகிவிட்டதாக அறிஞ்ச நினைவு அம்முலு.
பெட்டிக்குள்ளே இருந்து உன்னி உன்னிப் பறக்கத் தொடங்கிட்டா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. என்னில நம்பிக்கை இல்லையாம்:)) ஹா ஹா ஹா..
எனக்கு இந்த பாட்டும்,படமும் பிடித்தமானது. நல்ல பாட்டு.
ReplyDeleteஅழகா இருக்கு பூக்கள் எல்லாம்.இப்ப எல்லாம் அழகான சூழ்நிலை, குருவிகள் சத்தம், வண்டுகள்,தேனீங்கள் ரீங்காரம் என வெதரும் நல்லாயிருக்கு.
ஊசி இணைப்பு,ஊசிகுறிப்பு அருமை. சொறி இம்முறை லேட்
மிக்க நன்றிகள் அம்முலு.. அதனாலென்ன எல்லா நேரமும் நாம் ஃபிறீயாக இருப்பதில்லைத்தானே.. சில நாட்களில் என் கண்ணுக்குப் புதுப்போஸ்ட்டுகள் வந்தாலும் அகப்படாமல் போயிடும் ஹா ஹா ஹா..
Deleteமிக்க நன்றி அம்முலு.
உள்ளத்தைக் கவரும் பதிவு
ReplyDeleteஅருமையான தகவல் திரட்டு
மொத்தத்தில்
சிறப்பான பதிவு