காந்தித்தாத்தா என்ன சொன்னார்? “கண்டது கற்கப் பண்டிதராவாய்” எனச் சொன்னாரெல்லோ?:)).. சரி காந்தியா சொன்னார் என ஜண்டைக்கு வரக்குடா கர்ர்ர்ர்:)).. அதனாலதான் “அதிராவின் ஆச்சிரமம் வந்தால் ஞானியாவீர்கள்”:).. நான் கண்டது கேட்டதெல்லாம் இங்கு எழுதியிருக்கிறேனாக்கும்:)).. எப்பூடியாவது உங்களில் பாதிப் பேரையாவது ஞானி ஆக்கினால்தான், இந்த உசிறூஊஊஉ இந்த உடம்பை விட்டு வெளியேறுமாக்கும்:)) ஹா ஹா ஹா:)..
))))))))))))))))))))))))))))))))))))))))))_()_(((((((((((((((((((((((((((((((((((((((((((
சிலர் புலம்புவார்கள் “என்னடா வாழ்க்கை இது” எதைச் செஞ்சாலும் தோல்வியாகவே வருதே என.., அப்பூடி எல்லாம் சொல்லப்பிடாதாக்கும்.... வாழ்க்கையில் வெற்றி கிடைக்க வேண்டுமெனில்..
1. நம் உறவுகளை, நட்புக்களை மேன்படுத்தியும், நல்ல விதமாகவும் பேண வேண்டும்... இவை இருந்தால்தான் வெற்றி சாத்தியம்
2. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், கை விடாமல், பயப்படாமல், றிஸ்க் எடுக்கப் பழகுங்கள்.. றிஸ்க் எடுத்தால் தான், வெற்றி அல்லது தோல்வியாவது கிடைக்கும்.
3.தோல்வி கிடைத்தால் துவண்டிடக்கூடாது, ஏனெனில் வெற்றி கிடைப்பதே தோல்வியின் மூலம்தான்:)..
“தோற்றவர் புன்னகைத்தால், வெற்றி பெற்றவர், வெற்றியின் சுவையை இழந்து விடுகிறார்”... பு.பூஸானந்தா:)
))))))))))))))))))))))))))))))))))))))))))_()_(((((((((((((((((((((((((((((((((((((((((((
வாழ்க்கையில் எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை, அதனால என்னிடம் என்ன இல்லை, அடுத்தவர்களிடம் அது இருக்கிறதே என எண்ணி ஏங்காமல், என்னிடம் என்னவெல்லாம் இருக்கிறது என்பதைப் பட்டியல் போட்டுப் பாருங்கள், மனம் நிறைவடையும்.
))))))))))))))))))))))))))))))))))))))))))_()_(((((((((((((((((((((((((((((((((((((((((((
மழையின் வீழ்ச்சி என்பது முடிவு அல்லவே, அந்த முடிவில இருந்து மீண்டும் தண்ணி ஆவியாகி மேலே போய், மீண்டும் மழையாகிறது, இலைகள் உதிர்வது மீண்டும் மரம் தளைக்கவே..
அருவியின் முடிவில்தானே ஆறு ஆரம்பமாகிறது, எனவே நமக்குத் தேவை தன்னம்பிக்கை, எப்பவும் தன்னம்பிக்கையைக் கைவிட்டிடக்கூடாது.
))))))))))))))))))))))))))))))))))))))))))_()_(((((((((((((((((((((((((((((((((((((((((((
இப்படங்களுக்கு, இன்ஸ்டண்ட் ஆகக் கவித.. கவித..:) சொல்ல முடியுமோ?:).. அல்லது ஆறுதலாகக் கூட உங்கள் போஸ்ட்டில் போடலாம்..
================================
இந்த ஆட்டுக் குட்டியையும், குழந்தையையும் பார்த்ததும் எனக்கு பழைய நினைவு வந்தது, எங்கள் வீட்டில் சில ஆடுகள் இருந்தன, அதில் ஒன்றுக்கு கண் சரியாகத் தெரியாது, ஆனால் வெளியே போய்ப் புல் மேய்ந்து வரும், அது ஒரு குட்டி போட்டது, அக்குட்டியை வளர்த்தது நான் தான்:)).. எந்நேரமும் ஒரு பக்கத் தோளில், குழந்தையைத்தூக்குவது போல தூக்கித் திரிவேன்:)).
))))))))))))))))))))))))))))))))))))))))))_()_(((((((((((((((((((((((((((((((((((((((((((
இது நல்லாயிருக்கில்ல?:))
மனிதா
விலங்கை வணங்கு
குறிப்பாகக் குரங்கைக் கும்பிடு
உன் மூதாதையர்க்கு
முதல் வணக்கம் போடு
ஒவ்வொரு விலங்கும் உன் ஆசான்
கற்க கற்றபின் நிற்க
அதற்குத் தக
விலங்குகள் நம்மினும்
மானமுள்ளவை
யானையின் காலில்
யானை விழுந்ததாய்த்
தகவல் இல்லை
பூனைக்கு எலிகள்
பல்லக்குச் சுமந்ததில்லை:)
கரடிக்கு மான்கள்
கால் பிடித்து விட்டதில்லை
ஒன்று சுதந்திரத்தின் வானம்,
இல்லை மரணத்தின் பள்ளம்
இடைப்பட்ட வாழ்க்கை
விலங்குக்கில்லை
(வைரமுத்து அங்கிளின் பெரிய கவிதையில் ஒரு பகுதியை இங்கு பார்த்து எழுதினேன்)
))))))))))))))))))))))))))))))))))))))))))_()_(((((((((((((((((((((((((((((((((((((((((((
ஒரு கணவன் மனைவிக்குக் குழந்தைகள் இல்லை, அந்த வீட்டுக்கு புலாலியூர்ப் பூஸானந்தாபோல ஒரு சாமியார் போனார், அவரை அந்தம்மா நன்கு கவனிச்சு உணவளிச்சா, மனம் மகிழ்ந்த சாமியார் கேட்டார்.. குழந்தாய் உனக்கு குறை ஏதும் உள்ளதோ?.. அதற்கு அப்பெண் சொன்னா, “சாமி எங்களுக்கு இன்னும் குழந்தைகள் கிடைக்கவில்லை, செய்யாத வைத்தியமில்லை, போகாத இடமில்லை”..
சாமியார் சொன்னார், “ஒரு தடவை உன் கணவரை எருசலேம் போய், அங்கு இருக்கும் மாதாவின் முன்னால் ஒரு விளக்கை ஏற்றி விட்டு வரச்சொல், உனக்குக் குழந்தைகள் கிடைக்கும்”...
எனச் சொல்லிப்போட்டு சாமியார் போய் விட்டார்.
அதேபோல, கணவரிடம் மனைவி சொன்னா, கணவரும் சம்மதிச்சு, எருசலேம் போய், விளக்கேற்றி விட்டு வந்தார்...
சுமார் 10, 11 வருடங்கள் கழிச்சு, இந்தச் சாமியார் திரும்ப வந்தார், வீட்டில் குழந்தைகள் இருப்பதைப் பார்த்து, உன் கணவர் எங்கே எனக் கேட்டார்..
அதுக்கு அப் பெண் சொன்னார் “சாமி, நீங்கள் சொல்லியதைக் கேட்டு, என் கணவர் சென்று விளக்கேற்றி விட்டு வந்தார், அதிலிருந்து ஒவ்வொரு வருடமும் குழந்தை பிறந்து கொண்டே இருக்கிறது, தடைப்பண்ண முடியவில்லை, அதனால அந்த விளக்கை அணைத்துவிட்டு வரப் போயிருக்கிறார் மீண்டும்” என:)). ஹா ஹா ஹா .. படிச்சிட்டு ஏதோ சோகப் படம் பார்த்த பீலிங்ஸில இருக்காமல் சிரிக்கோணும் ஜொள்ளிட்டேன் கர்ர்ர்ர்ர்:))
))))))))))))))))))))))))))))))))))))))))))_()_(((((((((((((((((((((((((((((((((((((((((((
“மீன் போன அடிச்சுவட்டையும் அறிய முடியாது
பறவை பறந்த சுவட்டையும் அறிய முடியாது,
அதேபோல, ஞானிகள் சென்ற வழியையும்
அறிய முடியாது”
“வெறும் புத்தகங்களைப் படிப்பதன் மூலம்,ஞானம் பெற்றுவிட முடியாது,
யாராவது ஒருவர் ஆறுதல் சொன்னால்தான்,அழுகை அடங்குகிறது
அதேபோல, யாராவது ஒரு ஞானி ஆசிரியரிடம்[அதிராவைப்போல:)]
உபதேசம் கேட்டுக் கொண்ட பின்னாலேதான்,
ஏற்கனவே இருந்த மனோபாவம் மாறி, ஞானி ஆக முடியும்”
இவ்வரிய தத்துவங்களை உங்களுக்கு அள்ளித் தெளித்தவர்.. உங்கள் அன்புக்கும் பண்புக்கும் நேசத்துக்கும் பாசத்துக்கும் பாத்திரமான:) புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்:))
=====================================
ஊசி இணைப்பு
ஊசிக் குறிப்பு
)))))))))))))_()_((((((((((((
|
Tweet |
|
|||
//1. நம் உறவுகளை, நட்புக்களை மேன்படுத்தியும், நல்ல விதமாகவும் பேண வேண்டும்... இவை இருந்தால்தான் வெற்றி சாத்தியம்//
ReplyDeleteஆங் சரி என்னிக்காச்சும் நட்புக்களை அதிலும் என்னை பாராட்டி பேணியிருக்கிங்களா ??
ஒழுங்கா பேன் எடுங்க சேசே பேணி எடுங்க என்னை அப்போதான் வெற்றி கிட்டும்
ஆஆ வாங்கோ அஞ்சு வாங்கோ.. ஹா ஹா ஹா டவுட்டுடனேயே வந்திருப்பீங்க:) அதனாலதான் மீ தான் 1ச்ட்டூஊ எனச் சவுண்டு விடவில்லைப்போலும் :))..
Deleteபாருங்கோ, சிலர் நினைக்கலாம் சொல்லிவச்சு போஸ்ட் போட்டோம் என, ஆனா நான் என் போஸ்ட் போட்டுவிட்டு , போஸ்ட் மேலே வந்திருக்குதோ என செக் பண்ண ரிஃபிரெஸ் பண்ணினால் உங்கள் போஸ்ட் வந்திருக்க்குது.. ஒரே ஓட்டமாக அங்கு வந்து கொமெண்ட் போட்டுவிட்டு, உங்களுக்கு எதுவும் சொல்லாமல், நித்திரை ஆகிட்டேன், ஆனா அதனை வச்சு நீங்களும் ஏதோ மணந்து பிடிச்சு இங்கு வந்திருக்கிறீங்க 1ஸ்ட்டாக ஹா ஹா ஹா..
//ஆங் சரி என்னிக்காச்சும் நட்புக்களை அதிலும் என்னை பாராட்டி பேணியிருக்கிங்களா ??//
Deleteஎன்ன இப்பூடிச் சொல்லிட்டீங்கள்?:), ஸ்ரீராம் அந்த மூன்று நத்தைகளைக் காப்பாற்றினாரே.. அப்போ நான் பாராட்ட இல்ல?:))..
நீங்களும் இன்றே ஒரு நத்தை யூப்ப்ப் செய்து குடுத்திட்டுச் சொல்லுங்கோ.. மீ எப்பூடிப் பாராட்டுறேன் எனப் பாருங்கோ:)))..
ஏதும் ஜாதனை செய்யாமல், ச்ச்ச்சும்மா எப்பூடி மீ பாராட்டுறதாம் கர்ர்ர்ர்ர்:))
உங்க பின்னூட்டம் பார்த்ததுமே டவுட் வந்தே ஓடிவந்தேன் :) நாம் சேராம சொல்லாம செய்றதும் பேசுறதுக்கு பலநேரம் ஒரேமாதிரி அமையுது :)))
Delete//உங்க பின்னூட்டம் பார்த்ததுமே டவுட் வந்தே ஓடிவந்தேன் :)//
Deleteஆஆஆஆஆஆஅ கர்ர்ர்:)) முந்தைய பழைய போஸ்ட்டின் கொமெண்ட்ஸ் எனத் தெளிவாச் சொல்லோணும் ஹா ஹா ஹா.. நியூ போஸ்ட் போடமுன் பழைய மிகுதியை எல்லாம் முடிப்பது வழக்கம் நான்.
அஞ்சூஊஊஉ இந்தக் குளிர் மழையிலும் எங்கட குட்டி வேட்டைக்காரி வெளியே போய் ஸ்பரோ பிடிச்சு வந்து தந்தா, பத்திரமாக் காப்பாத்திப் பறக்க விட்டு விட்டேன்..வெள்ளிக்கிழமையும் அதுவுமே இது என்னடா சோதனை என வேண்டாத தெய்வமில்லை... ஆனா அது அழகாக கொஞ்சம் சரிஞ்சு சரிஞ்சு பறந்து போனது...
ஆமா லேபிள்ஸில் இருக்கே ..த .மு .தொகுப்புகள் அப்படினா தவளை முட்டை தொகுப்புகளா ஹாங் ஹூ :)
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது தத்துவம் நிறைந்த, முத்தான தொகுப்புக்கள்.. அதிராவைப்போல ஹா ஹா ஹா:))
Deletehttps://tamil.boldsky.com/img/2018/10/2-1540285554.png
ஊசி இணைப்பும் குறிப்பும் சூப்பர் :))))))இப்போ life is short னு பூனை பட்டாம்பூச்சிக்கு சொல்றாப்ல இருக்கு :)
ReplyDeleteஹா ஹா ஹா அதுவும் சரிதான்..
Delete/யாராவது ஒரு ஞானி ஆசிரியரிடம்[அதிராவைப்போல:)]
ReplyDeleteஉபதேசம் கேட்டுக் கொண்ட பின்னாலேதான்,//
வேணாம் வேணவே வேணாம் எனக்கு ஞானமே வேணாம் :))
//வேணாம் வேணவே வேணாம் எனக்கு ஞானமே வேணாம் :))//
Deleteஏன் அஞ்சு ஏன்ன்ன்ன்ன்ன்?:).. இப்பூடி எல்லாம் பயப்பூடக்கூடாதாக்கும்.. அது போகப் போகப் பழகிடும்.. கொரோனாவைப்போல:))
அவ்வ் ஒரேயொரு விளக்குக்கா 11 குழந்தைங்க ஹாஹா ..இதுவரை எங்கும் படிக்காத குட்டி கதை ரசித்தேன்
ReplyDeleteஹா ஹா ஹா அது பூஸ் ரேடியோவில் போன கதை..
Delete//யானையின் காலில்
ReplyDeleteயானை விழுந்ததாய்த்
தகவல் இல்லை//
சூப்பரா இருக்கே வை அங்கிளின் கவிதை ..
பூனைக்கு எலிகள்
பல்லக்குச் சுமந்ததில்லை:)//
இது தெரியுமே என்னிக்கும் ஜெரி மவுஸ் பூனைக்கு அடங்கினதா சரித்திரமில்ல :)
//என்னிக்கும் ஜெரி மவுஸ் பூனைக்கு அடங்கினதா சரித்திரமில்ல :)//
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா... உடம்பில பலம் இருந்தால்தானே பல்லக்கை சுமக்க முடியும்.. இது புல்லுக்கே தடக்க்கி டமால் எனக் கீழே விழுந்தால் ஹா ஹா ஹா ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:))
haa haa haa...இந்த ஹன், பூஸ் இன் ஒரு விரல் நகத்தின் சைஸ் ஆக்கும்:))
[im]https://i.ytimg.com/vi/EjgX1LVfc5g/hqdefault.jpg [/im]
///அக்குட்டியை வளர்த்தது நான் தான்:)).. எந்நேரமும் ஒரு பக்கத் தோளில், குழந்தையைத்தூக்குவது போல தூக்கித் திரிவேன்:)).// சேம் பிஞ் நானும் ஒரு ஆட்டுக்குட்டி வளர்த்தேன் அதன் பெயர் கிங் :) 12 வருஷம் இருந்தான் என் கூட
ReplyDeleteஆவ்வ்வ்வ்வ்வ்.. நான் பெயரேதும் வைத்தேனோ நினைவிலில்லை, அப்போ எனக்கொரு 5,6 வயசிருக்கலாம்... பக்கத்து வீட்டில் ஒரு அங்கிள் இருந்தார், அவர் ஒரு கெமிஸ்ட்ரி புரொபிசர், அவரை எல்லோரும் மாஸ்டர் என அழைப்பார்கள், அவரிடம் இந்த குட்டியைத்தூக்கிக்கொண்டு போவேன், அவரை “மாஸ்ரேள்” எனக் கூப்பிடுவேனாம்... அவர் குட்டியை வாங்கி தன் மடியில் வைத்துக் கொண்டு என்னிடம் பேசிக்கொண்டிருப்பார்... சிலது சிலது நினைவில் இருக்குது..
Deleteஇப்போல்லாம் பின்னோக்கி பார்ப்பதில்லை பிஞ்சு ..அதனால் அவனின் அழகிய நினைவுகளை கிளறி எடுக்கவும் விருப்பமில்லை .வெளிநாட்டு வாழ்க்கையில் பணத்துக்கு பஞ்சமில்லை ஆனா அந்த ஊர்மணம் எனக்கு இப்போ நினைக்க நினைக்க என் வயதில் பபாதியை வெளிநாட்டில் கழிச்சிகிட்டேன் என்பதே வருத்தமா இருக்கு :(
Delete//ஆனா அந்த ஊர்மணம் எனக்கு இப்போ நினைக்க நினைக்க என் வயதில் பபாதியை வெளிநாட்டில் கழிச்சிகிட்டேன் என்பதே வருத்தமா இருக்கு :( //
Deleteஅப்படி என்றில்லை அஞ்சு, இது தெரிஞ்ச விசயம்தானே.. இன்றிருப்பது நாளை இருக்கப்போவதில்லையே அப்படித்தான் அனைத்தும்... இன்னும் பத்து வருடத்தால் இன்றைய நாளை நினைக்கையில் ஒரு விதக் கவலைதான் வரும்... என்ன செய்வது இதுதான் மனித வாழ்க்கை, நேற்று ஒரு வட்சப் வீடியோ வந்தது, ஒரு வயதான பாட்டி, தன் இளமைக் கால நினைவுகளை அசை போடுவதைப்போல, இளமையில் தன் 3 குழந்தைகள்., காலை நேர ஸ்கூல் பரபரப்பு, வீடு மெஸ்ஸாகி இருக்கும்... நேரமே கிடைக்காது...
இன்றோ, வீடும் அப்படியே கலையாமல் கிடக்கிறது, வீட்டில் எந்தச் சத்தமும் இல்லை, பிள்ளைகள் ஒவ்வொரு நாட்டில், பாட்டியோ தனிமையில்.. பார்த்ததும் கண் கலங்கிப் போச்சு...
அனைத்தையும் மகிழ்வோடு அனுபவிப்போம், இன்று போனால், திரும்பி இதே நாள் வராதுதானே..
//இன்றோ, வீடும் அப்படியே கலையாமல் கிடக்கிறது, வீட்டில் எந்தச் சத்தமும் இல்லை, பிள்ளைகள் ஒவ்வொரு நாட்டில்,// - என்ன என்னவோ நினைவுகளை இது எழுப்புகிறது.
Deleteஎதை எடுத்தாலும் அதை அந்த இடத்தில் வைக்கணும் என்று சின்ன வயதிலிருந்தே நான் சொல்லிக்கொண்டே இருப்பேன். பையன் இது என்ன மியூசியமா என்பான். என்ன என்னவோ நினைவுகள்.
பிற்காலத்தில் இவை என்ன எண்ணங்களை எழுப்புமோ?
உண்மை நெல்லைத்தமிழன், அது கொஞ்சம் பெரிய வீடியோ அதனால இங்கு இணைப்பது கஸ்டம், ஆனால் அதைப் பார்த்ததும் கொஞ்ச நேரம், மனம் மிகவும் கஸ்டமாகிப் போச்சு...
Deleteஅதனால ஆகவும் இறுக்கிப் பிடிக்காமல், இருக்கும் காலத்தில் நல மகிழ்வாக அன்பாக பாசமாக இருக்கோணும் அனைவருடனும்.... திரும்பிப் பார்க்க முன் காலம் உருண்டு விடும்... வயசும் ஏறிவிடும் ஹா ஹா ஹா...
//
ReplyDelete“தோற்றவர் புன்னகைத்தால், வெற்றி பெற்றவர், வெற்றியின் சுவையை இழந்து விடுகிறார்”... பு.பூஸானந்தா:)//
ஹாஹா சூப்பர்
//என்னிடம் என்னவெல்லாம் இருக்கிறது என்பதைப் பட்டியல் போட்டுப் பாருங்கள், மனம் நிறைவடையும்.//உங்களிடம் பச்சை கல் நெக்லஸ் மோதிரம் செயின் கம்மல் இருக்கு ..உங்ககிட்ட இருக்கிறதை பட்டியல் போட்டா எப்படி என் மனம் நிறைவடையும் ??? வியக்கம் ப்ளீச்
///உங்களிடம் பச்சை கல் நெக்லஸ் மோதிரம் செயின் கம்மல் இருக்கு ..உங்ககிட்ட இருக்கிறதை பட்டியல் போட்டா எப்படி என் மனம் நிறைவடையும் ??? வியக்கம் ப்ளீச்//
Deleteஇப்போ என் மனம் நிறைவடைஞ்சிருக்கே:)) ஹா ஹா ஹா நான் என்ன ஜொன்னேன்?:))..
“என்னிடம் இருப்பதைப் பட்டியல் போட்டால், “என் மனம்” நிறைவடையும்”:).. ஹா ஹா ஹா..
2. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், கை விடாமல், பயப்படாமல், றிஸ்க் எடுக்கப் பழகுங்கள்.. றிஸ்க் எடுத்தால் தான், வெற்றி அல்லது தோல்வியாவது கிடைக்கும்.//
ReplyDeleteஆ,ஆம் ஆம் இதற்க்கு நீங்களே சாட்சி ..உங்கள் சமையல் ரெசிப்பிலாம் ரிஸ்க்தானே பிஞ்சு :) எங்களுக்கு ரிஸ்க் னு சொன்னேன்
okay goodnight :)))))))
//உங்கள் சமையல் ரெசிப்பிலாம் ரிஸ்க்தானே பிஞ்சு :) எங்களுக்கு ரிஸ்க் னு சொன்னேன் //
Deleteம்ஹூம்ம்.. அந்த அச்சப்பத்தை இலகுவில் மறக்க மாட்டோம்:)) ஹா ஹா ஹா ..
மிக்க நன்றிகள் அஞ்சு.. இனிய காலை வணக்கம். இன்று பெருங்காத்துடன் மழை பொழிகிறது, என் பீன்ஸ் கொடி எல்லாம் சரிகிறது, கிட்டப்போய்ப் பார்க்க முடியவில்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
எருசலேம் கதை படித்து மனம் விட்டு சிரித்தேன் ஸூப்பர்.
ReplyDeleteஇத்தப்பதிவு நிறைய அறிவாளிகளை உண்டாக்கும் போலயே அருமை.
ஆட்டுக்குட்டி, குட்டி படம் ஸூப்பர்.
வாங்கோ கில்லர்ஜி வாங்கோ.. ஆவ்வ்வ்வ் கில்லர்ஜி சிரித்ததை இன்றுதான் பார்க்கிறேன் நன்றி.
Delete//இத்தப்பதிவு நிறைய அறிவாளிகளை உண்டாக்கும் போலயே///
ஹா ஹா ஹா இது வஞ்சகப்புகழ்ச்சியோ நெல்லைத்தமிழன்?:))[அவருக்குத்தான் இது புரியுமாக்கும்:)]
//ஆட்டுக்குட்டி, குட்டி படம் ஸூப்பர்.//
கில்லர்ஜி, பார்த்ததும் கவிதை வரேல்லையோ.. சரி சரி வரும்போது சொல்லுங்கோ..
மிக்க நன்றிகள்.
கலவையாய் நிறைய விஷயங்கள் இருப்பது போல தெரிகிறது. ஒவ்வொன்றாய்ப் படிக்கவேண்டும்.
ReplyDeleteவாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..
Deleteஓம்.. இது குட்டிக் குட்டியாய்க் காதில் விழுவதைப் பொறுக்கி வச்சேன், இப்போ ஒன்றாக்கி விட்டேன்:)..
எழுத்துப்பிழைகளை திருத்தினாலே ஞானியாகிவிடலாம்! ஆனாலும் எழுத்துப்பிழையுடன் வருவதும் அழகுதான்.. (அவ்வ்வ்வ்வ்....)
ReplyDelete//எழுத்துப்பிழைகளை திருத்தினாலே ஞானியாகிவிடலாம்!//
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உப்பூடி எல்லாம் சொல்லி ஒரு ஞானியை மடக்கக்கூடாது:)).. எழுத்துப் பிழைகளோடும் ஞானி ஆகலாம்:)) ஹா ஹா ஹா..
இன்று என் போஸ்ட்டில் எழுத்துப் பிழைகள் உள்ளனவோ?:)) இருக்காதே:))..
மாஸ்க் போட்ட பூனாச்சு அதைக் கழற்றி எறியாமல் இருப்பது ஆச்சர்யம்.
ReplyDeleteஅதையேதான் நானும் நினைச்சேன், எங்கட டெய்சிப்பிள்ளை, உடனேயே ஜம்ப் பண்ணி ஓடிக் கழட்டிப்போட்டுத்தான் அடுத்த வேலை, ஆசைக்கு அலங்கரிச்சு ஒரு படம் எடுக்க விட மாட்டா கர்ர்ர்ர்:))
Deleteரிஸ்க் என்கிற வார்த்தையே தில்லுமுல்லு தேங்காயை நினைவுபடுத்துகிறது! எதிரில் ஒரு கண்ணாடி போட்ட மனிதர் இருப்பார்!
ReplyDeleteஓ... எனக்கது தெரியவில்லை ..
Deleteபடங்களுக்கு கவிதை... எங்கே இப்போ எழுதுவது? பின்னர் யோசித்து எதுவும் தோன்றினால் எழுதவேண்டும்!
ReplyDeleteநீங்கள், கில்லர்ஜி எல்லாரும் எழுதுவீங்கள் என நினைச்சேன், கில்லர்ஜியும் சொன்னார் படம் போடுங்கோ முயற்சிக்கிறேன் என, ஆனா இன்று தப்பி ஓடிவிட்டார்:)))
Deleteசாமியார் ஜோக் சிரிக்க வைத்தது. ஊசி இணைப்பு நேற்றுதான் எனக்கும் வந்தது.
ReplyDelete// ஊசி இணைப்பு நேற்றுதான் எனக்கும் வந்தது.//
Deleteஆஆஆஆஆஆ அப்போ போஸ்ட்டை 2 நாள் முன்னாடி போட்டிருகோணுமோ:)) ஹா ஹா ஹா..
எனக்கும் 3,4 நாட்களுக்குள்தான் வந்தது.
நன்றிகள் ஸ்ரீராம்.
அதிராவைப் பாராட்ட ஒரு சில சொற்கள் போதா. பின்னர் ஒரு பட்டியலுடன் வருகிறேன்.
ReplyDeleteவாங்கோ அறிவுப்பசிஜி வாங்கோ...
Deleteநீங்கள்தான் கதை எழுதி 5000 ரூபாய்ப் பரிசை வென்றிருக்கிறீங்களே.. அங்கு பாராட்ட இடமில்லை, இங்கு பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள்..
அந்த அஞ்சாயிரத்தையும் ஒரு என்வலப்பினுள் வச்சு, என் கையில குடுத்துப் பாராட்டலாமே:)) நான் என்ன வாணாம் எண்டோ ஜொள்ளப்போறேன் ஹா ஹா ஹா..
மிக்க நன்றி அபஜி.
அந்தப் பரிசு வாங்கி மிகப் பல வருசம் ஆச்சு.இனிப் பரிசு கிடைச்சாக் குடுத்துப் பாராட்டுவேன்.
Deleteபாராட்டு நன்றி அதிரா.
பாராட்டு___பாராட்டுக்கு
Deleteஎப்போ கிடைச்சால் என்ன் அபஜி, வெற்றி வெற்றிதானே, மகிழ்ச்சி மகிழ்ச்சிதானே.. நன்றி மீள் வருகைக்கு.. ஆஆஆஆஆஅ கவித கொண்டு வந்திருக்கிறீங்கள்.. வருகிறேன்...
Deleteவணக்கம் அதிரா சகோதரி
ReplyDeleteஅற்புதமான பதிவு. நிறைய ஆழமான கருத்துக்கள் தன்னம்பிக்கை வார்த்தைகளுடன் பிரகாசிக்கிறது.
"ஆறு பிறந்தது போதுமென்று நான் ஆறு குளமெல்லாம் மூழ்கி வந்தேன்" பாடலை நினைவூட்டியது குழந்தைகள் கதை. எதுவுமே தேவைக்கு அதிகமானால் கஸ்டமாகத்தான் இருக்கும்.
ஊசி இணைப்பு எங்கேயோ போயிட்டீங்க..! நல்ல சிந்தனைக்கு விருந்து. ஆகா.. உண்மையிலேயே இப்படியெல்லாம் பார்த்ததை எடுத்துப் போட உங்களால் மட்டுமே முடியும்.மிகவும் ஆழமான வரிகள். ரசித்தேன்.
பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்கோ கமலாக்கா வாங்கோ..
Delete//அற்புதமான பதிவு. நிறைய ஆழமான கருத்துக்கள் தன்னம்பிக்கை வார்த்தைகளுடன் பிரகாசிக்கிறது.//
ஹா ஹா ஹா நிஜமாவோ?:) நன்றி நன்றி...
//"ஆறு பிறந்தது போதுமென்று நான் ஆறு குளமெல்லாம் மூழ்கி வந்தேன்"///
ஹா ஹா ஹா எனக்கும் அப்பாடல் பிடிக்கும், பல தடவைகள் கேட்டிருப்பேன், நல்ல நகைச்சுவையான பாட்டு.
மிக்க நன்றிகள் கமலாக்கா.. முடியும்போது வாங்கோ.. இந்த ரெயின் 2 நாட்களுக்கு இங்குதான் நிற்கப்போகுது:))
தத்துப்பித்துவம் எல்லாம் நல்லாத் தான் இருக்கு. அது போல் ஊசி இணைப்பு, ஊசிக்குறிப்பு எல்லாமும் நல்லா இருக்கு! என்ன திடீர்னு உபதேசம் எல்லாம் ஆரம்பிச்சுட்டீங்க? வைரமுத்து அங்கிளோட கவிதையின் காப்பியா அது? போனால் போகுது! சுமாரா இருக்கு.
ReplyDeleteவாங்கோ கீசாக்கா வாங்கோ..
Delete//என்ன திடீர்னு உபதேசம் எல்லாம் ஆரம்பிச்சுட்டீங்க? //
கொரோனா இன்னும் முடியுதில்லை எல்லோ அதுதான்:)) ஆச்சிரமத்துக்கு மக்கள் வருவதில்லை:)) அதனால கை கடிக்கப் பார்க்குது:)) ஹா ஹா ஹா.
//வைரமுத்து அங்கிளோட கவிதையின் காப்பியா அது?//
ஓம் கீசாக்கா என்னிடம், அவரின் ஒரு புத்தகம் இருக்கு, அதிலிருந்து சில வரிகளைப் பார்த்து எழுதினேன்.. சுமாராத்தான் இருக்குது...
இஃகி,இஃகி,இஃகி,இஃகி, அந்தப் பெரியவரை அந்தப் பெண் அடிக்காமல் போனாளே! அதுக்கே நன்றி சொல்லணும். :))))))))
ReplyDeleteசே சே.. என்ன இது, அப்பெரியவராலதானே இன்று வீடு முழுக்க குழந்தை ஹா ஹா ஹா... இதுதான் வளர்த்தால் குடும்பி, அடிச்சால் மொட்டை என்பதோ:))
Deleteமிக்க நன்றிகள் கீசாக்கா.
தேன் குடித்து மயங்கிப் போகும்
ReplyDeleteவண்ணத்து பூச்சிகள் உண்டு
ஆனால் உன் பார்வைக்கும்
மயங்கி போன பட்டாம் பூச்சியை
இப்போதுதான் பார்க்கிறேன்
இதை கருத்தாவாகவும் எடுத்துக்கலாம் ஒரு வரியை உடைத்து உடைத்து போட்டதால் கவிதையாகவு எடுத்துக்கலாம் இல்லை கொரோனா ஞாய் எழுதியதாகவும் எடுத்துக்லாம்
வாங்கோ ட்றுத் வாங்கோ..
Deleteஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் சூப்பர், மிக அழகிய கற்பனை ட்றுத்... உங்களிடமிருந்து கவிதை வரும் என நான் எதிர்பார்க்கவில்லை... நன்றி... எனக்கும் அப்படம் பார்த்ததும் ஏதும் கவிதை எழுதோணும் என ஆசை, ஆனா இன்னமும் முயற்சி செய்யவில்லை, நானும் ஒரு கவிதை சொல்லிப் படம் போடலாம் எனத்தான் கொஞ்ச நாளாக வெயிட் பண்ணினேன்.
ஆஆஆஆஆஆ இப்போ ட்றுத்து ஏதும் கிஃப்ட் குடுக்கோணுமே.... அஞ்சூஊஊஊஊஉ காரவடையில ஒரு பார்சல் அனுப்புங்கோ பிளீஸ்ஸ்:))
// கொரோனா ஞாய் எழுதியதாகவும் எடுத்துக்லாம்//
என்னாது கொரோனா ஞானியோ கர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா அம்பேரிக்காவில இப்போ கொரோனா ஞானிகள்தான் அதிகம்:))
மிக்க நன்றி ட்றுத்.
இதோ இன்னொரு கவிதை.....
Deleteபெண்ணின் கண்ணிமைகள்
பட்டாம்பூச்சிபோல் படபடக்குமாமே!
அதைப் பார்த்துப் பார்த்து
ரசிக்க வந்ததோ
இந்தப்
பலவண்ணப் பட்டாம்பூச்சி?!
///பசி'பரமசிவம்Friday, May 22, 2020 11:03:00 am
Deleteஇதோ இன்னொரு கவிதை.....//
ஆவ்வ்வ்வ்வ் என்னா அழகிய குட்டிக் கவிதைகள் எல்லோருக்கும் வருதே... மிக அழகு நன்றி அறிவுப்பசி ஜி நன்றி..
மதுரை!!! சூப்பர் ஞானியாகி, இப்ப கவிஞராகி!!
Deleteசெமையா இருக்கு மதுரை...
கீதா
பசி பரமசிவம் அவர்களின் கவிதை வாவ்!!
Deleteஎத்தனை கவிஞர்களை பிறக்க வைச்சுட்டீங்க அதிரா
கீதா
ஹா ஹா ஹா அதானே கீதா, பாருங்கோ.. ஒரு கண்ணைப் பார்த்ததும் கவிதை அருவியாக் கொட்டுதே:))
Deleteஇப்போது தான் கொஞ்சூண்டு ஞானம் வருகிற மாதிரி தெரிகிறது... புலாலியூர்ப் பூஸானந்தா அவர்களின் பதிவுகளைப் படித்து மனோபாவம் மாறுவது மாதிரியும் சற்றே தெரிகிறது...
ReplyDeleteவாங்கோ டிடி வாங்கோ..
Deleteஹா ஹா ஹா வெற்றி வெற்றி.. அப்பூடியே அப்பூடியே கொண்டினியூ பண்ணுங்கோ.. முதலில் சொத்தை எல்லாம் வித்து, தேம்ஸ்கரை ஆச்சிரமத்துக்கு அனுப்பி வைக்கவும்:).. ஹா ஹா ஹா..
மிக்க நன்றி சகோ டிடி..
“தோற்றவர் புன்னகைத்தால், வெற்றி பெற்றவர், வெற்றியின் சுவையை இழந்து விடுகிறார்”... பு.பூஸானந்தா:)
ReplyDeleteஅப்போ தோற்றவர் அழவேண்டுமா? என்னுடைய பேரனிடம் நான் தோற்று அவன் புன்னகையில் நான் பெறும் மகிழ்ச்சி சுவையானது இல்லையா?
தோற்பதும் வெற்றி எனப்படும்
அது தன உற்றோரிடம் என்றால்.
1. கண்களோ குவளை என்றனர் சங்கப்புலவர்
வந்தது வண்ணத்து பூச்சி தேன் அருந்த
கண்களில் தேன் இல்லை
உப்புக் கண்ணீரே
இலங்கைப் பெண்.
2. அம்முவிண்ட ஆட்டுக்குட்டி
அழகான ஆட்டுக்குட்டி
அம்முவிண்ட தோளில் இருந்து
அம்மே அம்மே என்று பாடுதே
Jayakumar
வாங்கோ ஜேகே ஐயா வாங்கோ..
Delete//அப்போ தோற்றவர் அழவேண்டுமா? என்னுடைய பேரனிடம் நான் தோற்று அவன் புன்னகையில் நான் பெறும் மகிழ்ச்சி சுவையானது இல்லையா?//
தோற்பதிலும் பலவகை உண்டெல்லோ ஜேகே ஐயா, அதாவது நல்லவிதமாகத் தோற்பது, போட்டியில் தோற்பது என்பதெல்லாம் வேறு..
இதில் வரும் தோற்பதென்பது, நம்மை ஒருவர் வேண்டுமென்றே நோகடிச்சு வெற்றி பெறுவதுக்கு வரும்...
ஹா ஹா ஹா அழகான முயற்சி, கற்பனை அபராதம்... அதில் ஏன் இலங்கை வந்தது, பொதுவாக பெண் என வந்தால் நன்றாக இருகும்.
//அம்மே அம்மே என்று பாடுதே //
ஹா ஹா ஹா அது சிங்கள ஆட்டுக்குட்டியோ? அம்மே எண்டு சொல்லுதே ஹா ஹா ஹா...நன்றி நன்றி.
//எப்பூடியாவது உங்களில் பாதிப் பேரையாவது ஞானி ஆக்கினால்தான், இந்த உசிறூஊஊஉ இந்த உடம்பை விட்டு வெளியேறுமாக்கும்//
ReplyDeleteஐயோ நாங்கள் ஞானி ஆக மாட்டோம். அதிராவோட உசிரு தான் எங்களுக்கு முக்கியம். வேண்டுமென்றால் முட்டாள் ஆகிறோம்.
Jayakumar
//ஐயோ நாங்கள் ஞானி ஆக மாட்டோம். அதிராவோட உசிரு தான் எங்களுக்கு முக்கியம்//
Deleteஹா ஹா ஹா ஆனாலும் ஜேகே ஐயா, காதைக் கொண்டு வாங்கோ ஒரு ரகஜியம்:) ஜொள்றேன்:)).. “நாலு பேரை ஞானி ஆக்கினால், உனக்கு 40 ஆண்டுகள் ஆயுள் கூடும் பிள்ளாய்”.. என என் தேம்ஸ்கரை ஆச்சிரம மூலஸ்தானத்திலிருந்து அசரீரி ஒன்று அடிக்கடி ஒலிக்குது:)) அதனாலதான் இந்த முயற்சியாக்கும்:)).. சரி சரி படிச்சதும் கிழிச்சு காவேரியில.. இல்ல இல்ல அங்கின வாணாம் கீசாக்கா அடிப்பா:)).. நீங்கள் ஜமுனை ஆற்றில விட்டிடுங்கோ பிளீஸ்ஸ்:)) ஹா ஹா ஹா.
//வேண்டுமென்றால் முட்டாள் ஆகிறோம். ///
அப்போ இங்கின எல்லோரும் புத்திஜாலிகளோ:)) ஹையோ எல்லோரும் கல்லெடுக்கினம் , நான் என் ஆச்சிரமத்துக்கே ஓடிடுறேன் ஹா ஹா ஹா..
நன்றி ஜேகே ஐயா.
அருமை
ReplyDeleteஅருமை
வாங்கோ கரந்தை அண்ணன்.. நன்றி.
Deleteஆஹா இம்முறை கதம்பமா போட்டிருக்கிறீங்க. எல்லாமே நன்றாக இருக்கு பிஞ்சு. முதலில் அதை சொல்லிவிடுகிறேன். எல்லாமே வாசித்து ரசித்து சிரித்தேன்.
ReplyDeleteஎருசேலம் சூப்பர். சிரித்து முடியல. வாசித்து சிரிக்காமல் எப்படி சோகமா இருக்கிறது.கர்ர்ர்ர்ர்ர்..
வாங்கோ அம்முலு வாங்கோ..
Deleteஉங்கள் “திருநெல்வேலிக் காரவடை”[நீங்களாவது பயப்பூடாமல் ஒரிஜினல் நேம் குடுங்கோ:)] ரெசிப்பி எப்போ வரப்பொகுது?:))..
//வாசித்து சிரிக்காமல் எப்படி சோகமா இருக்கிறது.//
ஹா ஹா ஹா அதானே.. இருப்பினும் எனக்கொரு டவுட், அது ரேடியோவில் கேட்கும்போது குபீரெனச் சிரிப்பு வந்தது, அதை என் மொழியில் எழுதும்போது சிரிப்பு வருதோ தெரியல்லியே என:))
/ “மீன் போன அடிச்சுவட்டையும் அறிய முடியாது
ReplyDeleteபறவை பறந்த சுவட்டையும் அறிய முடியாது,// சூப்பர். 👍 👍
பொன்னகர பாடலோ திரும்பவும்... கேட்காத பாடல்தான்.
இப்போதான் “பொன்னகரம்” படம் பார்த்து முடிச்சேன், சூப்பராக இருந்தது, சரத்குமார் அங்கிளும் ஷோபாவும்.. என்பேவரிட்டான ஆட்கள் எல்லோ..
Deleteஇன்னொன்று அஞ்சுவுக்கும் சொல்ல நினைச்சு மறந்திட்டேன்.. “ஓ பேபி” படம் பாருங்கோ.. நல்லா இருக்குது.. இதுவும் நெட்பிளிக்ஸ் இல்.. எனைப்பார் பார் என்றது:)).. அதனால பார்க்கத் தொடங்கினால்.. சூப்பர் என்றே சொல்லலாம்.. சமந்தா என்னா அழகாக இருக்கிறா..
நான் நெல்லைத்தமிழனிடம் சொல்லப்போறேன், பேசாமல் சமந்தா கட்சிக்கு மாறச் சொல்லி ஹா ஹா ஹா..
ஹாஹாஹா நான் சொல்லணும்னு இருந்தேன் எல்லாரையும் சோனம் கபூர் கட்சிக்கு மாறச்சொல்லி :) masakaali பாட்டு பார்த்ததில் இருந்து :)
Deletehttps://www.youtube.com/watch?v=SS3lIQdKP-A
Deleteவாவ்வ்வ்வ்வ்வ் என்னா ஒரு அழகான பாட்டு அஞ்சு...
Deleteஅதிலும் அந்த 7 ஆவது வரிகள்.. என்ன ஒரு ஆழமான வரிகள்:)) ஹா அஹ ஹா..
உண்மையில் சூப்பர் பாட்டு... ரசிச்சேன்..
சொல்ல மறந்திட்டேன் அம்முலு, இந்த வாழுகின்ற மக்களுக்கு.. ஜேசுதாஸ் அங்கிள் பாட்டுக் கேட்டதில்லையோ?.. ஹையோ எனக்கு ரத்தக் கண்ணீரா வரப்போகுதே:))
///அந்த 7 ஆவது வரிகள்.. என்ன ஒரு ஆழமான வரிகள்:)) ஹா அஹ ஹா..////
Delete🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️
நான் இந்த படம் ஓ பேபி பார்த்திட்டம். நான் திருப்பியும் பார்த்தேன். நல்ல படம். எனக்கு பிடித்தது.
Delete///அந்த 7 ஆவது வரிகள்.. என்ன ஒரு ஆழமான வரிகள்:)) //
Deleteஆ......7வது வரி. 😳 😳 நானும் ஓடிறேன். 🏃🏿♀️ 🏃🏿♀️ 🏃🏿♀️
//சரத்குமார் அங்கிளும் ஷோபாவும்.. என்பேவரிட்டான ஆட்கள் எல்லோ..//
Deleteஅச்சச்சோ நானும் மாறி எழுதிட்டேன், அது சரத்பாபு அங்கிளும் என வந்திருக்கோணும்:)
ஹா ஹா ஹா ஏன் அஞ்சு, அம்முலு ஏன் ஓடுறீங்கள்?:) அந்த 7 ஆவது வரி சூப்பராகவே இருக்குதாக்கும் ஹா ஹா ஹா:))
Deleteஆட்டுக்குட்டி படம் பார்த்தாலே ப்ழைய நினைவு எல்லாம் வருகிறது. ஊரில் இவங்களை வளர்க்காமல் கூடுதலா யாரும் இல்லை. அம்பாவை வளர்க்காட்டிலும் ஆட்டினை வளர்த்திருப்பாங்க. நானும் தூக்கினது, வளர்த்ததும் பின் பிரச்சனையில் அவைகளை லொறியில் கொண்டுபோனதும் என நினைவுகள் நெஞ்சவிட்டகலாது.
ReplyDeleteடைமண்ட் அங்கிள் கவித அருமை. ஊசி இணைப்பு, ஊசிகுறிப்பு நல்லாயிருக்கு.
//ஊரில் இவங்களை வளர்க்காமல் கூடுதலா யாரும் இல்லை.//
Deleteஉணமை.
ஹா ஹா ஹா நான் கோழிக்குஞ்சும் வளர்த்திருக்கிறேன்.. அதன் கதையை பின்பு போஸ்ட்டாகப் போடுகிறேன்:))..
மிக்க நன்றிகள் அம்முலு.
முதல் படம் :
ReplyDeleteமலரென்று நினைத்து
நான்
ஏமாந்தது போதும்..
இமையை மூடு
மற்றவர்களாவது
பிழைத்துப் போகட்டும்.
ஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ் ஸ்ரீராம் கண்ண்ணை மூடி, அனுக்காவை நினைச்சார் அதுவும் பாகுபலி 2 இல் வரும் அனுக்காவை:)) அப்பூடியே கவிதையாகக் கொட்டுகிறது ஹா ஹா ஹா..
Deleteஉண்மையில் சூப்பர் ஸ்ரீராம்.. ஹா ஹா ஹா என்னா கற்பனை... நன்றி நன்றி.
ஸ்ரீராம் அட்டகாசம்....
Deleteபொறுக்கி வைத்துக் கொண்டேன்
கீதா
மூன்று கவிதையுமே நன்றாக இருக்கிறது ஸ்ரீராம்.
Deleteஇப்போ தெரியுது...கவிதைகள் சொல்லி மயக்கிவிட்டீர்கள் என்று. இது புரிந்தவர்களுக்குத்தான் காதல் திருமணம் கைகூடுமோ? ஹா ஹா
//இது புரிந்தவர்களுக்குத்தான் காதல் திருமணம் கைகூடுமோ? ஹா ஹா//
Deleteஹா ஹா ஹா.... ஆனால் அனைத்துப் பெண்களுக்கும் கவிதை பிடிக்கும், ரசிப்பினம் எனச் சொல்ல முடியாதே:)) நெல்லைத்தமிழன்..
ஆடுற மாட்டை ஆடிக் கறக்கோணும் , பாடுற மாட்டைப் பாடிக் கறக்கோணும்.. இந்த தக்கினிக்கி தெரிஞ்சிருந்தால் போதும்:)) ஹா ஹா ஹா:)..
தூது வந்தேன் கண்ணே...
ReplyDeleteஉன்னைக் கண்டதும்
அவன்
வயிற்றில் படபடத்த
பட்டாம்பூச்சிகளில்
நானும் ஒன்று!
ஹா ஹா ஹா இது காதல் தூதாக வந்த பட்டாம் பூச்சியோ ஸ்ரீராம்?.. அழகு அழகு.. ஆனா இதை விட என்னைக் கவர்ந்தது, உங்கள் மேலுள்ள கவிதை.. நன்றி ஸ்ரீராம்.
Deleteஇன்னும் கில்லர்ஜிக்குக் கவிதை வரவில்லைப்போலும்:)) ஹா ஹா ஹா....
இப்போ பாருங்கோ, கண்மூடித்தமனாக்காவை நினைச்சுக், கவிதைக் கூடையுடன் வருவார் ஒருவர் ஹா ஹா ஹா:))
ஹையோ ஹையோ ஸ்ரீராம் என்னம்மா கவிதை கொட்டுது!!!
Deleteஉனை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுதுன்னு ஸ்ரீராம் அள்ளித் தெளிக்கிறார் வாவ்!!
கீதா
இந்தக் கவிதைக்கான கரு, ஐடியா என் பெரிய மகன் தந்தது! வரியமைத்தது நான்.
Delete//இந்தக் கவிதைக்கான கரு, ஐடியா என் பெரிய மகன் தந்தது!//
Deleteஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அவரும் நன்றாகச் சிந்திக்கிறார்ர்... அருமை, வாழ்த்துக்கள் மகனுக்கும் ஸ்ரீராம்.
குட்டிகளுக்கான கவிதை.....
ReplyDeleteகுட்டியைச் சுமக்கும்
பால் மணம் மாறாத இளங்குட்டி
கொட்டிக் கொடுத்தாலும்
கிட்டாத அற்புதக் காட்சி!
//
Delete'பசி'பரமசிவம்Friday, May 22, 2020 11:18:00 am
குட்டிகளுக்கான கவிதை....//
ஆவ்வ்வ்வ்வ் அழகிய கற்பனை, அப்படியே நிஜத்தை வடித்திருக்கிறீங்கள் நன்றி நன்றி.
செம செம!!! கவிதை
Deleteகீதா
இமைகளைப் பற்றிக் கொண்டு
ReplyDeleteவிழாதிருக்கப்
போராடுகிறது
விழியின் அழகில்
விழுந்த
பட்டாம்பூச்சி ஒன்று.
ஆவ்வ்வ்வ்வ் இதுவும் சூப்பர் ஸ்ரீராம், உங்கள் மூன்று கவிதைகளுள்.. இதுக்கு 2ம் இடம் தருகிறேன்... ஆஹா எப்பூடி அருவியாகக் கொட்டுது கவிதை, உண்மையில் நான் யோசிச்சுப் பார்த்தேன் ஒண்ணும் எனக்கு எழுத வரவில்லை ஹா ஹா ஹா... நன்றி ஸ்ரீராம் நன்றி, ஆட்டுக்குட்டிக்கு ஒன்றையும் காணமே:))..
Deleteபரிசுகள் தேம்ஸ்கரை ஆச்சிரமத்தில் வழங்கப்படும்:))..
ஸ்ரீராம் வாவ்!! அட்டகாசமான கவிதை!! ச்சே என்னமா எழுதறீங்க ஸ்ரீராம்
Deleteநானுந்தேன் இருக்கேனே ஏதோ முயற்சி என்று கிறுக்கி!! ஹா ஹா ஹா ஹா
கீதா
கவிதை நன்றாக இருக்கிறது ஸ்ரீராம்
Delete//“அதிராவின் ஆச்சிரமம் வந்தால் ஞானியாவீர்கள்”:).. நான் கண்டது கேட்டதெல்லாம் இங்கு எழுதியிருக்கிறேனாக்கும்:)).. எப்பூடியாவது உங்களில் பாதிப் பேரையாவது ஞானி ஆக்கினால்தான், இந்த உசிறூஊஊஉ இந்த உடம்பை விட்டு வெளியேறுமாக்கும்:)) ஹா ஹா ஹா:)..//
ReplyDeleteஞானி ஆகி விடுகிறேன். உங்கள் உசிர் உங்க கிட்டயே இருக்கட்டும் என்று சொல்லலாம் என்று பார்த்தேன், ஆனால் தனபாலன் அவர்களை சொத்தை எல்லாம் தேமஸ்கரை ஆசிரமத்துக்கு அனுப்ப சொன்னதை படித்தவுடன் வீராவேசமாக பேசிய வசனம் எல்லாம் இதற்குத்தானா?
பேராசை ஞானியாக இருக்காரே என்ற எண்ணம் வந்து விட்டது.
ஆனாலும் வாழ்க்கையில் வெற்றி கிடைக்க வேண்டுமெனில் நீங்கள் சொன்ன வழி முறைகள்
எல்லாம் அருமை.
//வாழ்க்கையில் எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை, அதனால என்னிடம் என்ன இல்லை, அடுத்தவர்களிடம் அது இருக்கிறதே என எண்ணி ஏங்காமல், என்னிடம் என்னவெல்லாம் இருக்கிறது என்பதைப் பட்டியல் போட்டுப் பாருங்கள், மனம் நிறைவடையும்.//
நம்மிடம் இருப்பவையை நினைத்து மனம் நிறைவடைய வேணும் அருமை.
//மழையின் வீழ்ச்சி என்பது முடிவு அல்லவே, அந்த முடிவில இருந்து மீண்டும் தண்ணி ஆவியாகி மேலே போய், மீண்டும் மழையாகிறது, இலைகள் உதிர்வது மீண்டும் மரம் தளைக்கவே..
அருவியின் முடிவில்தானே ஆறு ஆரம்பமாகிறது, எனவே நமக்குத் தேவை தன்னம்பிக்கை, எப்பவும் தன்னம்பிக்கையைக் கைவிட்டிடக்கூடாது.//
அருமையாக சொன்னீர்கள் ஞானி
தன்னம்பிக்கை வேண்டும் எல்லோருக்கும்.
/
வாங்கோ கோமதி அக்கா வாங்கோ....
Delete//ஞானி ஆகி விடுகிறேன், ஆனால் தனபாலன் அவர்களை சொத்தை எல்லாம் தேமஸ்கரை ஆசிரமத்துக்கு அனுப்ப சொன்னதை படித்தவுடன் வீராவேசமாக பேசிய வசனம் எல்லாம் இதற்குத்தானா?//
ஹா ஹா ஹா அது கோமதி அக்கா, அதிகம் பேர் ஞானி ஆனால், ஜமாளிக்கப் பணம் வேணுமெல்லோ.. ஆச்சிரமத்தைக் கொஞ்சம் பெரிசாக்கோணும், ஏசி பூட்டோணும், ஹீட்டர் பூட்டோணும்.. இப்படிப் பல வேலைகள் இருக்குதெல்லோ:)).. நான் என்ன எனக்கோ சொத்தைக் கேட்கிறேன்:)), எல்லாம் வரப்போகும் புது ஞானிகளுக்காகவே தானே ஹா ஹா ஹா:))..
முன்னே வச்ச காலைப் பின்னே எடுத்திடாதீங்கோ கோமதி அக்கா:), சொத்தை நான் மாமாவிடம் கேட்டு வாங்கிக்கொள்கிறேன்:)) நீங்கள் ஞானி ஆகுங்கோ:)) ஹா ஹா ஹா..
//பேராசை ஞானியாக இருக்காரே என்ற எண்ணம் வந்து விட்டது.//
Deleteஹா ஹா ஹா கோமதி அக்கா, பேராசை ஞானிதான்.. அதாவது வந்து அதிகம் பேரை ஞானிகளாக்கோணும், குறிப்பா அஞ்சுவை ஞானி ஆக்கி, ஆச்சிரம செக்கரட்டறி ஆக்கோணும் எனும் பேராசைகள்:)))..
மிக்க நன்றி கோமதி அக்கா, உங்கள் வீட்டுக்கு வரும் ரெண்டுகாலும் ரெண்டு இறகும் உள்ளவைகளையும் அவற்றின் விடாமுயற்சியையும் பார்த்தாலே நமக்கும் தன்னம்பிக்கை வந்துவிடுகிறதே...
//நாலு பேரை ஞானி ஆக்கினால், உனக்கு 40 ஆண்டுகள் ஆயுள் கூடும் பிள்ளாய்”//
ReplyDeleteஆஹா! நீண்ட நீண்ட ஆயுளோடு நிறைவாய் வாழுங்கள் அதிரா.
நன்றி கோமதி அக்கா நன்றி.. வாழ்க வளமோடு!!!
ReplyDelete[im] http://www.johnlund.com/ImagesCp/zen-cat-yoga.jpg[/im]
நீங்கள் கொடுத்த சுட்டியில்
Deleteபூஸார் கண்மூடி தியானத்திற்கு போய்விட்ட படம் பாரத்தேன்.
சுற்றிவர மெழுகுவர்த்திகள் அழகாய் எரிய பூஸார் தியானம் செய்யும் காட்சி அழகு .
ஹா ஹா ஹா நன்றி கோமதி அக்கா, சிலசமயம், இங்கும் படம் வரும்...
Deleteகருவண்டு கண்கள் என்பதை கேள்வி பட்டு இருக்கிறேன் அதை செக் பண்ண வந்தேன் என்கிறதோ வண்னத்துப்பூச்சி?
ReplyDeleteஆட்டுக்குட்டி அதிராவின் தோளில் அமர்ந்து மகிழ்ந்து பாடுகிறதோ!
ஹா ஹா ஹா கோமதி அக்காவுக்கும் கவிதை எட்டிப் பார்க்குது, நெல்லைத்தமிழன் சொன்னதைப்போல, உங்கட வசனத்தைப் பிரிச்சுப் பிரிச்சுப் போட்டால் அது கவிதை:))
Delete//கருவண்டு கண்கள் என்பதை
கேள்வி பட்டு இருக்கிறேன்
அதை செக் பண்ண
வந்தேன் என்கிறதோ
வண்னத்துப்பூச்சி?///
ஹா ஹா ஹா...
ஆட்டுக்குட்டியைச் சுமப்பது பேபி அதிரா என நினைச்சீங்களோ கோமதி அக்கா ஹா ஹா ஹா...
ஆட்டுக்குட்டியை சுமந்து இருக்கிறேன் என்று சொன்னீர்கள் அல்லவா அதனால் பேபியை அதிராவாக கற்பனை செய்து எழுதினேன்.
Deleteகவிதை, கதை எல்லாம் நன்றாக இருக்கிறது. கமலா ஹரிஹரனுக்கு நினைவுக்கு வந்த பாடல் எனக்கும் நினைவுக்கு வந்தது.
ReplyDeleteஓ ஹா ஹா ஹா நன்றி கோமதி அக்கா.
Delete
ReplyDeleteஊசிக்குறிப்பு, ஊசி இணைப்பு அருமை.
//இவ்வரிய தத்துவங்களை உங்களுக்கு அள்ளித் தெளித்தவர்.. உங்கள் அன்புக்கும் பண்புக்கும் நேசத்துக்கும் பாசத்துக்கும் பாத்திரமான:)
புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்:))//
தத்துவங்களை அள்ளி தந்த புலாலியூர்ப் பூஸானந்தா அவர்களுக்கு நன்றி நன்றி.
மிக்க நன்றிகள் கோமதி அக்கா, பு பூஸானந்த இன்னும் பல தகவல்களை உங்களுக்காக அள்ளி வழங்கத்தான் காத்துக் கொண்டிருக்கிறார்.. ஆச்சிரமத்தில்:))
Deleteஉங்கள் பொன்மொழிகள் எல்லாம் அருமை.
ReplyDeleteபடங்கள் அழகு ஆனால் எனக்கும் கவிதைக்கும் உங்கள் ஊர் வரும் தூரத்தை விட தூரம்.
கவிதை நன்றாக இருக்கிறது. ஜோக்கான கதையும்..
ஊசிக்குறிப்பு, ஊசி இணைப்பு ரெண்டுமே நல்லாருக்கு
துளசிதரன்
வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ..
Delete//ஆனால் எனக்கும் கவிதைக்கும் உங்கள் ஊர் வரும் தூரத்தை விட தூரம்//
ஹா ஹா ஹா இதே ஒரு கவிதை போலத்தான் இருக்குது....
மிக்க நன்றி துளசி அண்ணன்.
அதிரா பொன்மொழிகள் பிஞ்ச் ஞானியின் பொன் மொழிகள் எல்லாம் சூப்பர்\
ReplyDeleteஎனக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல!!!! எடுப்பது உண்டே!!! சமையலில்!!!! ஹா ஹா ஹா ஹா (உங்கள் பதில் என்ன வரும் என்று தெரியுமே!! நானும் ஞானியல்லோ!!!)
இன்றுதான் உங்க தளம் ஒழுங்கா வந்திச்சு....ஹையோ கண்ணு படப்ப் போகுதே!!!
கீதா
வாங்கோ கீதா வாங்கோ..
Delete//எனக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல!!!! எடுப்பது உண்டே!!! சமையலில்!!!//
ஹா ஹா ஹா உண்மை கீதா கரெக்ட்டாச் சொன்னீங்கள், நானும் சமையலில் பயங்கர ரிஸ்க் எடுப்பேன், அதுவும் இந்த லொக்டவுனில் சொல்லி வேலையில்லை ஹா ஹா ஹா:))
//இன்றுதான் உங்க தளம் ஒழுங்கா வந்திச்சு//
ஒருவேளை எங்கள்புளொக் திருத்தியதால இருக்குமோ?:)) ஹா ஹா ஹா..
கவித கவித...ஹிஹி நமக்கு எழுத வராது இருந்தாலும் ஒரு முயற்சி!!
ReplyDeleteஉன் கண் இமைகள்
பட்டாம் பூச்சி போல்
அடித்துக் கொண்டதில்
கிறங்கித்தான் போனேன்
என்ன ஆச்சரியம்!
நான் எழுதியது
சரியோ என்று
செக் செய்ய
உன் கண்ணருகில்
வந்ததோ பட்டாம்பூச்சு!
கீதா
ஆவ்வ்வ்வ் கீதா அருமை... உண்மையில் அழகிய சிந்தனை... இப்பூடித்தான் கலக்குங்கோ.. பெண்கள் ஆரும் கவிதை சொல்லவில்லையே என யோசிச்சேன், நீங்களும் கோமதி அககாவும் களம் இறங்கிட்டீங்கள்.. நன்றி நன்றி..
Deleteயாரோ எழுதுகிறார்
ReplyDeleteஉன் கண் இமைகள்
என்னைப் போல்
சிறகு விரித்து மூடி
இமைக்குதென
எனக்குப் போட்டியாய் யாரது
என்று பார்க்கவே
உன் கண்ணருகில்
எங்கே இமை மூடித் திற
பார்க்கிறேன்!
கீதா
ஹா ஹா ஹா சூப்பர் கீதா, உடனடியாக ஆச்சிரமம் வரவும்:)).. பரிசு தரப்போறேன்ன்...
Deleteகவிஞர்களுக்கு வேலையில்லை
ReplyDeleteமீன் போல் கண்கள்
வண்ணத்துப் பூச்சி போல்
படபடக்கும் இமைகள்
கருவண்டுக் கண்கள்
கோவைப்பழச் செவாய்
என்று எங்களை எல்லாம்
எதற்கு ஒப்பிடுகிறார்கள்
எங்கள் இயற்கை அழகிற்கு
மனிதர்கள் ஈடுகொடுக்க இயலுமோ!
கீதா
மீன் போல் கண்கள்
Deleteவண்ணத்துப் பூச்சி போல்
படபடக்கும் இமைகள்
கருவண்டுக் கண்கள்
கோவைப்பழச் செவாய்
என்று எங்களை எல்லாம்
எதற்கு ஒப்பிடுகிறார்கள்
இந்தக் காலத்துப் பெண்கள்
யாருக்குத்தான் இயற்கை அழகு உண்டு?
முகத்துக்கு வெள்ளையடிப்பது
புருவத்துக்கு, கண்ணுக்கு கருப்பு மை தீட்டுவது
உதட்டுக்கு செஞ்சாயம் பூசுவது
இன்னும் பலவற்றையும் சொல்லலாம்
பெண் பாவம் பொல்லாததுன்னு விட்டுவிடுகிறேன்.
எங்கள் இயற்கை அழகிற்கு
பெண்களால் ஈடுகொடுக்க இயலுமோ!
ஹா ஹா ஹா கீதா கலக்குறீங்க போங்கோ:)), ஸ்ரீராம் எல்லம் இனி ஓடி ஒளிக்கப் போகிறார்.. ஹா ஹா ஹா
Delete//நெல்லைத் தமிழன்Friday, May 22, 2020 3:16:00 pm
Deleteஇந்தக் காலத்துப் பெண்கள்
யாருக்குத்தான் இயற்கை அழகு உண்டு?///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதுக்காகத்தான், நேற்று தேடும்போது வைரமுத்து அங்கிளின் ஒரு கவிதை கண்ணில பட்டுது, போட நினைச்சு, சே சே ஆண்கள் பாவமே எதுக்கு கவலைப்பட வைப்பானேன்:).. என விட்டேன், ஆனா இப்போ விடமாட்டேன் கர்:)) இப்பவே தேடிப் போடுகிறேன் அந்த வரிகளை.. பூஸோ கொக்கோ:)) ஹா ஹா ஹா..
//இன்னும் பலவற்றையும் சொல்லலாம்
Deleteபெண் பாவம் பொல்லாததுன்னு விட்டுவிடுகிறேன்.
//
ஆஆஆஆஆஆ இவரு ரொம்ப நல்லவராம் கர்ர்ர்ர்ர்ர்:)) சொல்றதையும் சொல்லிப்போட்டு, முடிவில எழுத்தைப் பாருங்கோ:).. ஹையோ என் ஞானி வேடம் கலைஞ்சிடுமே எனப் பயந்து, ஆழ்ந்த ஆழ்நிலைத் தியானத்துக்குள் நுழைகிறேன் இல்லை எனில்:)) இப்போ நடக்க்கிறதே வேற:)) ஹா ஹா ஹா...
////
எங்கள் இயற்கை அழகிற்கு
பெண்களால் ஈடுகொடுக்க இயலுமோ!//
ஆஆஆஆஆஆஆஆ என்னால முடியல்ல... ஞானியாவது ஞானமாவது.. முதல்ல இதுக்கொரு முடிவு கட்டாமல் மீ ஓய மாட்டேன்ன்ன்ன் கர்ர்ர்ர்ர்ர்:)).. ஹையோ வைரவா என்னைக் கொஞ்சம் கொன்றோல் பண்ணுங்கோ:)) இல்லை எனில்.. மதுரை.. சே.சே டங்கு ஸ்லிபாகுதே.... தேம்ஸ் கரை எல்லாம் எரிஞ்சிடப்போகுதூஊஊஊஊஉ:)) ஹா ஹா ஹா...
நெல்லைத்தமிழனுக்கு சனிமாற்றம் நல்லது போலும்:), தேடத்தேட கண்ணில் படவில்லை அந்தக் கவிதை, பெரிய புத்தகம் தேடுவது கஸ்டம், சரி போகட்டும் விட்டிடுறேன்ன்ன்:)) ஹா ஹா ஹா..
Deleteஊகு ஊ இ நல்லாருக்கு அதையும் விட கடைசிப் பூசார் சொல்லும் வரிகள் செம..
ReplyDeleteபூஸானந்தாவின் அருள் மொழிகள்??!!! எல்லம் நல்லாருக்கு. வைரமுத்துவின் கவிதை? ஓகே..
பாட்டு முழுவதும் கேட்க முடியலை அதிரா நெட் பிரச்சனையால் கட் ஆகி ஆகி வருது...
கீதா
மிக்க நன்றிகள் கீதா, முக்கியமாகக் கவிதைகளுக்கு...
Deleteபாட்டு அது எப்பவும் கேட்கலாம்தானே கீதா, சரத்பாபு அங்கிள் ஆட்டுக்குட்டியைத் தூக்கிக்கொண்டு பாடுகிறார்....
மிக்க நன்றி கீதா.
//உங்களில் பாதிப் பேரையாவது ஞானி ஆக்கினால்தான்// - இது நடக்கப் போவதில்லை. நீங்களும் தேம்ஸில் விழப்போவதில்லை. நீடூழி வாழணும்னு ஆசை வரலாம். அதுக்காக இவ்வளவு பேராசையா?
ReplyDeleteவாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ...
Delete//இது நடக்கப் போவதில்லை//
அதெப்பூடிச் சொல்றீங்கள் கர்ர்ர்ர்ர்:)) இப்போ கொரோனாவாலயே பலர் ஞானியாகிட்டினம் தெரியுமோ:)..
//நீடூழி வாழணும்னு ஆசை வரலாம். அதுக்காக இவ்வளவு பேராசையா?//
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:)).. எதிலையும் ஆசை வைப்பதைக் காட்டிலும் பேராசை வைப்பதுதான் நல்லதாமே:))
//றிஸ்க் எடுக்கப் பழகுங்கள்.. றிஸ்க் எடுத்தால் தான், வெற்றி அல்லது தோல்வியாவது கிடைக்கும்// - நீங்க சொல்றதைப் பார்த்தால் முகக்கவசம் இல்லாமல் கொரோனா காலத்தில் வெளியே செல்லச் சொல்ற மாதிரி இருக்கே. சோஷியல் டிஸ்டன்ஸும் கடைபிடிக்கவேண்டாம்னும் சொல்றீங்களே.... இந்த ரிஸ்க் எடுக்கவா?
ReplyDeleteசே சே சே பொஸிடிவ்வாகவே நினைக்கமாட்டாரமே:)).. நல்ல விசயங்களில் றிஸ்க் எடுக்கோணும் நெல்லைத்தமிழன்:), பயப்பிடக்கூடாது:)),..... சே சே எனக்கிருக்கிற மீதி ஞானமும் போயிடும்போல இருக்கே வைரவா:))
Delete//அருவியின் முடிவில்தானே ஆறு ஆரம்பமாகிறது, // - அறிவியல் டீச்சர் அதிரா வாழ்க.
ReplyDeleteஅதெல்லாம் சரி... நீங்க ஏதோ நவீன அவ்வைப்பாட்டி மாதிரி எங்கெளுக்கெல்லாம் நீதிக் கதைகள் சொல்ல ஆரம்பித்துவிட்டீர்களே... 100வது பிறந்த நாளை எங்களிடம் பகிர்ந்திருந்தால் நாங்களும் வாழ்த்தியிருப்போமே
///அறிவியல் டீச்சர் அதிரா வாழ்க///
Deleteநன்றி நன்றி.. ஹா ஹா ஹா இது ஒரு விஜயின் படப்பாடலில் வருகிறதாக்கும் ஹா ஹா ஹா..
அதேதான் எனக்கு 16 வயசிலேயே ஞானம் வந்துவிட்டது என்பதை உங்களால நம்ப முடியவில்லை:)), ஏதோ வயசானால் மட்டும்தான் துறவி, ஞானி ஆகலாம் என நினைக்கிறீங்க இது ஞாயமோ..:), பாருங்கோ பலருக்கு 61 இலும் வராத ஞானம்:) அதிராவுக்குப் 16 இலேயே வந்துவிட்டதே:).... வாஆஆஆஆஆஆழ்க வளமுடன்!!! வாஆஆஆஆஆஆழ்க வளமுடன்!!!!! ஹா ஹா ஹா வாழ்த்துகிறேனாம்:))
என் இறக்கையின் அழகை ரசிக்கலாம்.
ReplyDeleteஆபத்தில்லை. ஆனால்,
பெண்ணின் கண் அழகாக இருக்கிறது
என்று ரசிக்காதீர்கள்.
அது கண் அல்ல... நீர்ச்சுழல்
உங்களை சுருட்டி வாரிக்கொண்டுவிடும்
வெளியேற வழியில்லை
என்று சொல்கிறதோ அந்தப் படம்?
ஆஆஆஆஆஆஆஆஆஆஆ எல்லோரும் ஓடி வாங்கோஓஓஓ நெல்லைத்தமிழனுக்கும் அந்தக் கண்களைப் பார்த்ததும் கவித கவித வந்திட்டுதூஊஊஊஊ ஹா ஹா ஹா...
Delete///அது கண் அல்ல... நீர்ச்சுழல்
உங்களை சுருட்டி வாரிக்கொண்டுவிடும்
வெளியேற வழியில்லை///
ஹா ஹா ஹா எப்பூடித்தான் திட்டினாலும்:), விழுந்திட்டால் வெளியேற முடியாது:))..
ஹா ஹா ஹா திட்டியதுபோல சொன்னாலும் கற்பனை அழகு நெல்லைத்தமிழன்.. நன்றி நன்றி..
ஆனாலும் பாருங்கோ.. இங்கு எல்லோருக்கும் பெண்ணும் கண்ணும் மட்டுமேதான் தெரிஞ்சிருக்குது ஹா ஹா ஹா, அந்தக் குழந்தையையும் ஆட்டுக்குட்டியையும் ஆரும் கவனிக்கவே இல்லை[அபஜி தவிர்த்து:)].. இப்போ நெல்லைத்தமிழன் கூட, பெண்களைத்திட்டித்திட்டியும்:)[அழகை:)], அந்தப் பெண்ணின் கண்ணிற்குத்தானே கவி வடிச்சிருக்கிறார்.. ஹா ஹா ஹா எப்பூடீஈஈ அதிரா கண்ணுக்கு எல்லாம் தெரியுமெல்லோ ஹா ஹா ஹா:)).. ஒரு பெண்ணின் கண்ணே எல்லோரையும் மயக்கிப் போட்டு விட்டதே:)) இனி என்னத்தைச் சொல்லி என்ன ஆகப்போகுது:)) ஹா ஹா ஹா:))
//இடைப்பட்ட வாழ்க்கை விலங்குக்கில்லை
ReplyDelete(வைரமுத்து அங்கிளின்//
ஊருக்கெல்லாம் சொல்லுமாம் பல்லி, பிறகு தான் விழுமாம் கழனிப்பானையில் துள்ளி
வைரமுத்து எழுதியதில் தப்பில்லை... ஆனால் அதையெல்லாம் (காலில் விழுவது, கால் பிடிப்பது, அடுத்தவன் குடியைக் கெடுப்பது) செய்வது இந்த வைரமுத்துதானே.
///செய்வது இந்த வைரமுத்துதானே///
Deleteஆஆஆஆஆஅ அப்படியும் ஒன்றிருக்குதோ?.. எனக்கு அந்த மனிசன் பேசுவது பிடிக்கும், அவரின் கவிதைகளும் பிடிக்கும்... மற்றும்படி அன்னம்போல இருந்திட்டால் பிரச்சனை இல்லை... பார்க்கப்போனால் இந்த உலகில் மனிதர்கள் ஆருமே நல்லவர்கள் எனச் சொல்ல முடியாது...
அனைத்துக்கும் ஆசைப்படு என்று ஞானிலாம் சொல்றாங்க. நீங்க என்னன்னா, அதிகம் ஆசைப்பட்டால் அவன் ஏழை என்று சொல்றீங்க. நான் எந்த ஞானியைப் பின்பற்றுவது?
ReplyDeleteநீங்கள், “ஞானி புலாலியூர்ப் பூஸானந்தா” வைப் பின்பற்றுங்கோ நெல்லைத்தமிழன்:))..ஹா ஹா ஹா
Deleteஅது இருக்கட்டும்...கடந்த இரண்டு இடுகைகளும் கொஞ்சம் சுமாராத்தான் இருக்கு. நல்லா யோசித்து புது ஐடியாவோட வாங்க. (அதாவது எங்க ஏஜ் குரூப்புக்கு ஏற்றமாதிரி. இப்போல்லாம் நீங்க 70+ ஏஜ் குரூப்புக்கு ஏற்ற அட்வைஸ் இடுகைகளாகப் போடறீங்க. ஹா ஹா
ReplyDeleteமருமகளைக் கொடுமைப்படுத்தும் சரத்குமார் பாடல்தான் உங்களுக்குக் கிடைத்ததா?
//அது இருக்கட்டும்...கடந்த இரண்டு இடுகைகளும் கொஞ்சம் சுமாராத்தான் இருக்கு.///
Deleteஆஆஆஆஆஆஆஆஆ அடிப்பெட்டியில கை வைக்கிறாரே ஹா ஹா ஹா:)) சொல்றது சுலபம், ஒரு போஸ்ட் எழுதுவது எவ்ளோ கஸ்டம் தெரியுமோ?:)) ஹா ஹா ஹா...
//(அதாவது எங்க ஏஜ் குரூப்புக்கு ஏற்றமாதிரி//
அதுசரி உங்கட குரூப்பில ஆரெல்லாம் இருக்கினம் என கொஞ்சம் ஜொள்ளுங்கோ:)) ..
நான் ஏதோ சுவீட் 16 ஐத்தாண்டி ஒரு 40..49..50.. 59..60.. இந்த ரேஞ்சில போஸ்ட் போட்டால்:)) அது வாணாமாமே:)) ஹ ஹா ஹா ...சரி சரி பார்ப்போம் அடுத்து என்ன மனதில உதிக்கபோகுது எனக்கென:))..
//சரத்குமார் பாடல்தான்//
ஹையோ பெயரைப் பார்த்து நான் குழம்பிட்டேன், நல்லவேளை எங்கள் புளொக்கில் உங்கள் கொமெண்ட் பார்த்ததால் குழப்பம் தீர்ந்துபோச்ச்ச்:)).. அது சரத்பாபு அங்கிள்.... எனக்கு எந்த நியூஸ் உம் தெரியாது நெல்லைத்தமிழன்..
இப்படித்தான் பானுப்பிரியாவையும் எனக்குப் பிடிக்கும், ஆனா சமீபகாலத்தில் அவ ஒரு வேலைக்காரப்பிள்ளையைக் கொடுமைப்படுத்திய கதை அறிஞ்சு.. இப்போ வெறுத்துப் போய் விட்டது....
அதிரா... ஒரு ஆம்பிளைக் கண்ணை எடுத்துப் போட்டிருந்தீங்கன்னா,
ReplyDeleteயாருக்கும் கவிதை பொங்கியிருக்காது. பயம்தான் வந்திருக்கும்.
பெண்ணின் கண் என்றது கவிதை எழுதியிருக்காதவர்களுக்கும் கவிதை ஊறுது
அதற்கும் மாத்தி யோசிச்சு எழுதலாம் நெல்லை!
Delete//அதிரா... ஒரு ஆம்பிளைக் கண்ணை எடுத்துப் போட்டிருந்தீங்கன்னா,
Deleteயாருக்கும் கவிதை பொங்கியிருக்காது.//
அதை இங்கின போட எனக்கே மனம் வந்திருக்குமோ என்னமோ ஹா ஹா ஹா:)).. சரி சரி முறைக்கக்கூடாது:)), அழகான படம் என்றதாலதானே இங்கு போடும் எண்ணம் வருது என்றேன்:)..
அதுசரி எந்த நடிகரின் கண்ணையாவது இதுவரை ஆரும் புகழ்ந்து எழுதியதுண்டொ?:)) நான் கேள்விப்படவில்லை:))..
//பெண்ணின் கண் என்றது கவிதை எழுதியிருக்காதவர்களுக்கும் கவிதை ஊறுது//
ஹா ஹா ஹா இது நீங்கள் இல்லைத்தானே:)) ஹையோ ஹையோ...
மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன்.. உங்கள் “கன்னிக் கவிதைக்கும்”:)..
///ஸ்ரீராம்.Friday, May 22, 2020 4:08:00 pm
Deleteஅதற்கும் மாத்தி யோசிச்சு எழுதலாம் நெல்லை!//
நீங்கள் கவிஞர் ஸ்ரீராம்:)).. உங்களுக்குக் கவிதை ஞானம் உண்டு அதனால எதற்கும் கவிதை சொல்ல வரும்... மற்றும்படி என்போன்றோருக்கு, ஏதும் மனம் கவர்ந்தவை எனில் மடுமே கவிதை வருது ஹா ஹா ஹா:)) நன்றி ஸ்ரீராம் மீள் வருகைகளுக்கும் கவிதைகளுக்கும்.
நிறைய கவிஞர்களை உண்டாக்கி விட்டீர்கள் அதிரா! எல்லோரும் கவிஞர்களாகி அசத்துகிறார்கள்!!
ReplyDeleteஊசிக்குறிப்பு, ஊசி இணைப்பு எல்லாமே அருமை! நீங்களும் அசத்துகிறீர்கள்!
பாடல் பகிர்வு அருமை.போன பதிவு படம் தான் போல இதுவும்.
ReplyDeleteபாடல் சொல்லும் உண்மை.
பதிபக்தி படத்தில் இதில் வரி போல் வரும். "இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே! "என்று வரும்.
இதிலும் வளர்ப்பார்கள் வெள்ளாடை விருந்து வந்தால் அதை அடித்து உண்ணுவார்கள் என்று வருகிறது.
எருசலேம் சூப்பர் ஹா..ஹா.
ReplyDeleteஅழகுக் குட்டியின் கழுத்தில் அழகுராணிக்குட்டி. படம் செம அழகு .
வாங்கோ மாதேவி வாங்கோ.. ரொம்ப அழகெல்லோ.. மிக்க நன்றி.
Deleteஜெருசலம் கதை அருமை!
ReplyDeleteவாங்கோ நேசன் வாங்கோ.. நன்றி.
Deleteஅந்த ஆட்டுக்குட்டி இருந்தால் பிரியாணி போட்டிருக்கலாம்! ஊசிக்குறிப்பு அருமை! பேசாமல் ஆச்சிரமம் தொடங்கிவிடுங்கோ வசூல் நல்லாக இருக்கும்![[[
ReplyDelete//பிரியாணி போட்டிருக்கலாம்!//
Deleteஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:))..
ஆச்சிரமம் தொடங்கி வருடமும் உடிஞ்சு போச்சுது நேசன், ஆட்கள் இன்னும் சேரோணும்:)) அதுதான் இந்த விளம்பரம்.. மிக்க நன்றி.
அனைத்தும் நன்று.
ReplyDeleteஊசிக்குறிப்பு - :)