ஹா ஹா ஹா பாகுபலி ரேஞ்சுக்கு:) சிலர் ஊர்ப்பெயரைத் தோளில சுமக்கின்றனர்:), ஒருவர் சென்னையில இருக்கிறார் ஊர்ப் பெயரோடு:)), இன்னொருவர் அம்பேரிக்காவில இருக்கிறார்:) ஹா ஹா ஹா, பெயரில மட்டும்தேன் ஊர் இருக்குதாம்:)) ஆனா ஆட்களும் ஊரில் இல்லை:), அந்த ஊர்ச் சமயல்களும் போடுவதில்லையாக்கும்:)).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:))..
குண்டூசிக்குறிப்பு:- எங்கட யாழ்ப்பாணத்திலும் திருநெல்வேலி உண்டு:)), ஆனா நாங்கள் அதைச் செல்லமாக:).. “தின்னவேலி” என்போம்:)..
எனக்கு நெடுநாள் ஆசையாக இருந்தது, இவை இரண்டும் செய்யோணும் என, ஆனால், உளுந்து சேர்த்தால் வீட்டில சாப்பிடுவினமோ எனும் பயம் இருந்து வந்தது, அதனால இவ்ளோ காலம் செய்யாமல் இருந்தேன், இப்போ போனால் போகுதென கொஞ்சமாகச் செய்தேன்... சூப்பராக முடிஞ்சு போச்ச்ச்:))..
நான் எடுத்த பொருட்கள்...
தஞ்சாவூர்ப் பொன்னிப் புழுங்கல் அரிசி - ஒரு கப்
அதே கப்பால உளுந்து கால் கப்
[கோதுடன் தான் போட வேணுமாம், ஆனா இருப்பதை விட்டுப்போட்டுப் பறப்பதற்கு ஆசைப்படக்கூடாது பாருங்கோ:)] இங்கு அருகில் இருப்பது வெள்ளை உளுந்து மட்டுமே:)) அதனால மீ வைட்ட்ட்ட்ட் உலு:)ந்து:)) சேர்த்தேனாக்கூம்:))]
தேங்காய்ப்பூ அரைக் கப்
உள்ளி/பூண்டு ஒரு பெரியது
அரிசியை அரை மணி நேரமாவது கழுவி ஊற வைக்கோணும்.
உளுந்தை, நன்கு வாசம் வரும்வரை பொன்னிறமாக வறுத்தெடுத்துக் கழுவி, அரிசியுடன் சேர்த்து.. உள்ளியையும் போட்டு... 4 கப் தண்ணி சேர்த்து குக்கரில் மீடியம் ஹீட்டில் இரு விசில் சத்தம் வரை அவிக்கவும்.
இந்த பட்டர்ஃபிளை பிராண்ட், 2 லீற்றர் பிரஷர் குக்கர் அஞ்சுவிடமோ, அம்முலுவிடமோ இல்லையாக்கும்:)) ஹா ஹா ஹா.. “உண்மையைச் சொல்லுவது டப்பா நெல்லைத்தமிழன்?:)”.. ஆவ்வ்வ்வ் இப்பூடி ஆரையாவது அப்பப்ப கோர்த்து விட்டால்தான் மீ தப்பலாம்:))
பின்பு மூடியைத் திறந்து, தேங்காய்ப்பூவைச் சேர்த்து நன்கு அவித்து, தண்ணி இல்லாமல் சாதமாக்கி எடுக்கவும்.
இப்படி எதுக்காகச் சொல்கிறேன் எனில், தேங்காய்ப்பூவையும் சேர்த்து ஒரேயடியாக வைத்தால், தேங்காய்ப்பால் எல்லாம் விசில் வழியாக வெளியே பொங்கி வழிகிறது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அதனாலதான் உங்களை அலேர்ட் பண்ணுகிறேன்:)..
இப்படியே சாப்பிடலாம், ஆனால் நான் எனக்குப் பிடித்த விதத்தில் நல்லெண்ணெயில் வெங்காயம் மிளகாய் கறிவேப்பிலை தாளித்துக் கொட்டினேன்[கொஞ்சம் முறுகல்.. பொரியலாக்கி]..
உளுந்து சாதத்தோடு, வேப்பம்பூ வடகம், எள்ளுத் துவையல்..
இதுக்கு எதுவுமே தேவையில்லை, சும்மாவே சாப்பிடலாம், சூப்பராக இருந்தது. ஆனா சோறு எனில் எங்கட வீட்டில் கறி இருக்கோணும், இப்படி துவையலுடனோ இல்லை ரசத்துடனோ சாப்பிடுவதென்பது நடக்காது என்பதனால் பருப்புக்கறியும், பீன்ஸ் + கிழங்குப் பிரட்டலும் செய்தேன்.. என் மானே தேனே வடகங்கள், பப்படம் எல்லாமே பொரிச்சேன்...
இதில் இருப்பது என் வெங்காய வடகம், இதுவும் கறுப்பாகத்தான் வருதூஊ.. கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரூஊஊஊஊஉ:) ஹா ஹா ஹா.. வெள்ளிக்கிழமை எனில் ஸ்பெஷல் வாணாமோ?:) அதனாலதான் பருப்புவடை.. கீரை போட்டேனாக்கும்:)
இதில் இருப்பது என் வெங்காய வடகம், இதுவும் கறுப்பாகத்தான் வருதூஊ.. கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரூஊஊஊஊஉ:) ஹா ஹா ஹா.. வெள்ளிக்கிழமை எனில் ஸ்பெஷல் வாணாமோ?:) அதனாலதான் பருப்புவடை.. கீரை போட்டேனாக்கும்:)
===========================================
இடைவேளையில் ஒருவரை அறிமுகம் செய்கிறேன், இது கமலாக்காவின் ரெசிப்பி பார்த்துச் செய்தேன், குறிப்புக்கு இங்கின கையை வையுங்கோ... நான் இதில் மஸ்ரூம் உம் சேர்த்தேன்[3 கலர்க் குடை மிளகாய்], சூப்பராக இருந்தது.
***********************
அடுத்து எள்ளுத் துவையல்..
இதற்கு எள்ளு ஒரு கப், தேங்காய்ப்பூ 2 கப், செத்தல் மிளகாய் புளி உப்பு.. இவ்வளவும்தான்.
எள்ளை நன்கு வறுத்து எடுத்துப் போட்டு, மிளகாயை கொஞ்சம் எண்ணெயில் நன்கு வாட்டி எடுத்து, அனைத்தையும் சேர்த்து அரைத்தேன்.. இதுவும் சூப்பர்.. தோசைக்கும் நன்றாக இருந்தது.
(((((((((((((((((((((_()_)))))))))))))))))))
அடுத்து ஒரு முக்கிய விஷேச நியூஸ்:), முதலில் எல்லோருக்கும் வெரி சோரி:)), இப்போ “19 கோவைக்காய்” என்பதால:), நிகழ்வுக்கு உங்களை எல்லாம் அழைக்க முடியவில்லை:), சமீபத்தில் எங்கட டெய்சிப்பிள்ளைக்கு சிம்பிள் அண்ட் சுவீட்டாக நிட்சயார்த்தம்[ரெஜிஸ்ரேசன்] முடிச்சுப் போட்டம்:)).. கையில் மோதிரம் போட்டதும் அவவின் முகத்தில ஒரு தேஜஸ் [தேஜஸ் என்றவுடன் நினைவுக்கு வருபவர் ஸ்ரீராம்:)], தெரியுதெல்லோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.
மாப்பிள்ளை ஜிஞ்சர் கலர், பூஸ்களுக்கு மட்டுமேயான மருத்துவராம், இவ அடிக்கடி கை நோகுது, கால் வலிக்குது எனச் சொல்லிச் சொல்லி அவரிடம் போகும்போதே சந்தேகப் பட்டோம் அது செரியாப்போச்ச்ச்ச்:)).. மாப்பிள்ளைப்பூஸ் நல்ல குணம் என்பதால, சிம்பிளாக முடிச்சிட்டோம்:)[[சின்னவர் தன் மோதிரத்தை அடிக்கடி கழட்டி, இப்படி டெய்ஷிக்குப் போட்டு, அழகு பார்ப்பார்:)]]
ஊசிக்குறிப்பு
ஊசி இணைப்பு
🙏🙏🙏🙏🙏🙏🙈🙏🙏🙏🙏🙏🙏
|
Tweet |
|
|||
ஹலோ :) தமிழ்நாட்டு மக்களும் தின்னவேலின்னு தான் செல்லமா சொல்வாங்க .நாங்க நாகர்கோயிலை நாரோல் மதுரையை மருத இப்படித்தான் சொல்றது :)
ReplyDeleteஅதே அதே ஏஞ்சல்! ஹைஃபைவ்!
Deleteகீதா
வாங்கோ அஞ்சு வாங்கோ. நீங்கதான் 1ஸ்ட்டு தெரியுமோ?:) ஹா ஹா ஹா..
Deleteச்சும்மா அடிச்சு விடகூடாதாக்கும்.. நீங்கள் அப்பூடி எங்கும் பேசி நான் பார்க்கவில்லையாக்கும்:)).. நான் கண்ணால் பார்த்தால்தான் நம்புவேனாக்கும்:)..
ஆஆஅ கீதா எப்போ வந்தா இங்கின அவ்வ்வ்வ்வ்வ்:)).. நல்லாக் கிட்டப்போய்க் ஹைஃபைவ் பண்ணுங்கோ கீதா.. நா ஒண்ணும் வாணாம் ஜொள்ள மாட்டேன்:))..ஹா ஹா ஹா..
Deleteஸ்ஸ்ஸ்ஸ் எனக்கும் பிரியாவுக்கும் பட்டாம்பூச்சிக்கு தொல்லை குடுப்பது பிடிக்காது அதனால் நாங்க வைத்திருப்பது பிரெஸ்டிஜ் ப்ரெஷர் குக்கார்ர்ர்ர்ர் :)
ReplyDeleteயெஸ்ஸு .....நாங்க பட்டாம்பூச்சிக்கு தொல்லை கொடுக்கமாட்டோம்... பிரஸ்டீஜ் யோட sowbaghya மா வாழவேண்டுமென்று sowbaghya வும் வைத்திருக்கிறேன்.. ஹா..ஹா..ஹா
Deleteம்ஹூம் இவிங்க பட்டாம்பூச்சிக்கு டொல்லை குடுக்க மாட்டினமாம், ஆனா சைபாக்கியவதியை அடுப்பில வச்சு எரிப்பினமாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. என்னா பேச்சுப் பேசுறாங்க இருவரும்:)).. என்னிடமும் முந்தினது இருக்கே.. அது 6 லீட்டராக்கும் அம்மாடீஈஈ.. அதைத்தூக்கி வச்சு சில அவியல் எல்லாம் செய்தேன்.. அப்போ எனக்குத்தெரியாது.. இப்படி 2 லீட்டர் ஒரு லீட்டரில் எல்லாம் பிரஷர் குக்கர் இருக்குதென:)).. இதிலிருந்து என்னா புரியுது உங்களுக்கு?:))..அ தா....வ.... து அதிரா ஒரு அப்ப்பாஆஆஆஆஆவி:))
Deleteசமைத்த பதார்த்தங்களில் உளுந்து சாதம் டாப் :)அதெப்படி பிஞ்சு உங்களுக்கு மட்டும் வடகம் இப்படி நெகட்டிவ் இமேஜ் மாதிரி வந்திருக்கு :) இதை வடகம்னா அந்த வடகம் என்னை கொன்டே போடும் :) அநேகமா ஜவ்வரிசி அரிசி இதை 1/4 கப் போட்டு 4 கப் வெங்காயம் போட்டிருப்பீங்க :) பாவம் வடகம் ..இருங்க நாளைக்கு என்னோட கேரட் வடகம்லாம் போடறேன் :)
ReplyDeleteஆங்ங்ங் பொயிண்ட்டுக்கு வந்தாச்சூஊஊஊஊ.. அஞ்சு இப்போ எனக்கு எல்லாமே பிரிஞ்சு போச்ச்:))..அதாவது வந்து நீங்கள் வெங்காய வடகம் எனச் சொல்லிப்போட்டு.. ச்ச்சும்மா வெங்காயத்தைக் கண்ணில காட்டிட்டு, அரிசியைத்தான் மெயினாகப் போடுறீங்க, அதேபோல கரட் வடாம் எனில்.. ச்சும்மா கலருக்காகத்தான் கரட் சேர்க்கிறீங்க மற்றும்படி பார்க்கப் போனால்.. பெயர்தான் சூட்டுறீங்களே தவிர பேஸ் வந்து அரிசி வடாம் தான்.. அதனாலதான் கலர் மாறுவதில்லை.
Deleteஇப்போ நான் செய்வது எப்படி எனில்.. சத்தைத்தான் மெயினாகப் பார்ப்பேன்.. வெங்காய வடகத்துக்கு ஒரு கிலோ வெங்காயம் அதுக்கு ஒரு குட்டிக் கப் தான் அரிசி சேர்த்தேன்.. அப்படித்தான் மரக்கறி வடகமும்.
இப்போ மேலே போட்டிருக்கும் வேப்பம் பூ வடகம் பாருங்கோ.. அதில் இருப்பது வேப்பம் பூ மட்டும்தான், அதை உருண்டை பிடிப்பதற்காகவே கொஞ்சம் உளுந்து சேர்ப்போம்.. அதனால எங்கள் வேப்பம்பூ வடகம் எனில், அப்படியே சத்து மட்டுமே அதிலிருக்கும்... இதேபோலத்தான் வாழைப்பூ வடகமும், அதனை உருண்டை பிடிப்பதற்காக கொஞ்சம் உளுந்து சேர்ப்போம்... அதனாலதான் கறுப்பாகிறது, மற்றும்படி சாப்பிடும்போது சுவையில் மாற்றமிருக்காது...
Deleteஎங்களுக்குப் பழகி விட்டது, சோறு கறி எனில் கூட, சோறைக் குறைச்சு 2,3 கறிகள் சேர்த்து சாப்பிடுவோம்... நம்ப மாட்டீங்க நான் ஃபிரைட் றைஸ், பிரியாணி எல்லாம் செய்யும்போது, ரைஸ் மிகவும் குறைவாகவும் மரக்கறிகள்தான் அதிகமாகவும் சேர்ப்பேன்... உடம்புக்கு சத்து சேரட்டுமே எனத்தான் நினைப்பது..
அப்பாடா.. வியக்கம் சொல்லியே மீ ரொம்ப ரிரயேட் சே சே ரயேட் ஆகிட்டேனாக்கும்:)
//வெங்காய வடகத்துக்கு ஒரு கிலோ வெங்காயம் அதுக்கு ஒரு குட்டிக் கப் தான் அரிசி சேர்த்தேன்.. அப்படித்தான் மரக்கறி வடகமும்.//
Delete[im]https://gifimage.net/wp-content/uploads/2018/06/surprised-baby-gif-2.gif[/im]
உங்க வியக்கத்தை கேட்டு இப்போ பாரமெடிக்ஸ் கூப்பிடற நிலையாகிப்போச்சு மீக்கு ..சாமீ இனிமே வடகத்தை பத்தி மூச்சே விட மாட்டேன்
Delete[im]https://www.tamilphotocomments.com/cache/tamil-photo-comment/whatsapp-comments/hello...group-la-yaravathu-irukeengala_595.jpg[/im]
Deleteஹா ஹா ஹா சரி சரி சமாதானமாகிப் போயிடலாம்:)) இப்போ வடகமோ முக்கியம்:))
Deletehttps://i.pinimg.com/564x/39/78/f3/3978f37ae3cab5d2211c62a338e05766.jpg
//மாப்பிள்ளை ஜிஞ்சர் கலர், பூஸ்களுக்கு மட்டுமேயான மருத்துவராம்,//
ReplyDeleteஹாஆஅஹா :) தாங்க முடில :) நல்லவேளை என் மகன் குண்டூ னு உங்க பொண்ணை வேணாம்னுட்டான் :) எவ்ளோ சொன்னேன் ஒழுங்கா அவளை ஜிம்முக்கு அனுப்புங்கன்னு கேட்டிங்களா :) இப்போ அந்த ஜிஞ்சர் வேற என்ன செய்வாரோ :))
ம்mஹூம் உங்கட மகனுக்கு, பக்கத்து வீடுகளுக்குள் போய் ஓசிச்சாப்பாடு சாப்பிடத்தானே தெரியும்.. ஒரு எலி பிடிச்சிருப்பாரோ?:) அதனாலதான் டெய்சியே வாணாம் என்றிட்டாவாக்கும்:).. எங்கட பிள்ள இந்த கோல் வேல்ட்டிலேயே நம்பர் வன் வேட்டைக்காரியாக்கும் ஹா ஹா ஹா...
Deleteஹையோ எங்க ஜெசிக்கு செயின் போட்டு படம் எடுத்தேன் ப்லாகில் இருக்கு :) ஆகா மொத்தம் பூனைகளுக்கும் நகை ஆசை உண்டுபண்ணிட்டோம்
ReplyDeleteஹா ஹா ஹா மைனிசருக்கு நகையில ஆசை குறையும்போது, பூஸ்களுக்குக் கூடுது:)
Delete//நான் இதில் மஸ்ரூம் உம் சேர்த்தேன்[3 கலர்க் குடை மிளகாய்], சூப்பராக இருந்தது.//
ReplyDeleteகர்ர்ர் குடை மிளகாய் மஷ்ரூம் ரேஷியோ வேறுபடுது .கமலாக்காவின் ரெசிப்பியில் மிளகாய் நிறையமாதிரி இருக்கு :) ஆனாலும் இதுவும் நல்லா இருக்கு .நான் இப்படித்தான் வெஜ் FRIED ரைஸ் மிக்சிங்குக்கு செய்வேன்
//கர்ர்ர் குடை மிளகாய் மஷ்ரூம் ரேஷியோ வேறுபடுது .கமலாக்காவின் ரெசிப்பியில் மிளகாய் நிறையமாதிரி இருக்கு :)//
Deleteஹா ஹா ஹா இல்ல தப்பு தப்பு:).. கமலாக்கா மஸ்ரூம் சேர்க்கவில்லை, அவ தனி பச்சைக் குடமிளகாய் போட்டிருக்கிறா... ஆனா அந்த முடிவில் மா தெளிச்சு செய்யும்பொது சூப்பராக வருது அஞ்சு கறி, பொரியல் போல.
அந்த 25 பழமொழில 19 கோவைக்காவுக்கு ஒன்னும் இல்லையே :))))))))அப்புறம் எள்ளுத்துவையலும் சூப்பர் :)
ReplyDelete//அந்த 25 பழமொழில 19 கோவைக்காவுக்கு ஒன்னும் இல்லையே//
Deleteஆஆஆ என்னா ஒரு கண்டுபிடிப்பு ஹா ஹா ஹா.. கோவைக்காய் சாப்பிட்டாலே கோவிட் அங்கிள் ஓடிடுவாராம்:)..
//அப்புறம் எள்ளுத்துவையலும் சூப்பர் :)//
ஆஆஆஆஆஅ தங்கூ தங்கூ.. என் கன்னி ரெசிப்பி:) முன்பு எள்ளுப்பொடி செய்திருக்கிறேன்.
நானும்தான் வடிவேல் மாதிரி நேர கேட்கிறேன் :) எனக்கு மெயிலில் சரியா 2020 க்கு ஹாப்பி நியூ இயற் சொன்னது நீங்கதானே :) இந்த வரேன் கிஃப்ட் குடுக்க உங்களுக்கு
ReplyDelete//எனக்கு மெயிலில் சரியா 2020 க்கு ஹாப்பி நியூ இயற் சொன்னது நீங்கதானே :)//
Deleteஇது என்ன இது புயு வம்பாக்கிடக்கூஊஊஊஊ:))
[im] https://tse4.mm.bing.net/th?id=OIP.3CSxu2yNdylHjd2UcFRrogHaEI&pid=Api&P=0&w=286&h=160[/im]
ஓகே குட்நைட் மியாவ் அப்புறம் அடுத்து வர இருப்பது லண்டன் ரெசிப்பியாகும் :) என் பக்கம்
ReplyDelete//அடுத்து வர இருப்பது லண்டன் ரெசிப்பியாகும் :)//
Deleteஆஆஆவ்வ்வ்வ் இப்போ புளொக் எழுதுவதை விட ரெசிப்பிதான் ஈசியாக இருக்குது:) பேசாமல் யூ ரியூப் ஆரம்பிச்சிடலாம்போல இருக்கு:) ஹா ஹா ஹா..
ஓகே நன்றி அஞ்சு, நைட்டானாலும் வந்து கொமெண்ட்ஸ் போட்டிட்டீங்க... நேற்று சொன்னதுக்கு இப்போ சொல்கிறென் நல்லிரவு:)).. இப்போவும் நைட்தானே ஆனா இன்று வேறிரவு:))
பொன்னி புழுங்கல் தஞ்சாவூர் என்றீர்கள். உளுந்து எந்த ஊர் என்று சொல்லவில்லை..்். கர்ர்ர்ர்ர்...
ReplyDeleteUlundhu from ulundhurpettai😸😸
Deleteவாங்கோ ஸ்ரீராம் வாங்கோ... உளுந்து ஃபுரொம் அப்புறிக்கா:)) ஹா ஹா ஹா அங்கிருந்துதான் எங்களுக்கு வருகிறது என நினைக்கிறேன்:)..
Deleteஇல்லாட்டில் அஞ்சு சொன்னதைப்போல உளுந்தூர்ப்பேட்டை ஆகவும் இருக்கலாம்:))
உளுந்து வறுத்தபிறகு கழுவணுமா? சரியா? முறையாக? இந்த சாதம் நாங்கள் ஒரே ஒருமுறை கூட செய்ததில்லை... உள்ளூர் துவையல் பக்கமும் போனதில்லை! அதெல்லாம் உடம்புக்கு நல்லதல்லோ... அதான்!
ReplyDeleteமறந்தும்கூட எள்ளுத் துவையல் செய்திடாதீங்க ஸ்ரீராம். கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு என்பது பழமொழி. பாவம் நீங்க. தினமும் அதிகாலைல நடைப்பயிற்சி செய்து அடிக்கடி எடையை செக் பண்ணிக்கறீங்க. எள்ளுத் துவையல் சாப்பிட்டீங்களோ, ஓவர் நைட்டில் ஒரு கிலோ எடை அதிகரிக்கும்.
Deleteஆமாமாமாமாம்... கேள்விப்பட்டிருக்கேன். உஷாரா இருந்துக்கறேன்.
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெல்லை இப்பூடியா அட்வைஸ் செய்வது நண்பருக்கு!!! கர்ர்ர்ர்ர்..ஹா ஹா ஹா ஹா
Deleteஒரு நாள் சாப்பிட்டால் ஒன்னும் குண்டாகிட மாட்டோமாக்கும். எள்ளு எலும்புக்கு எவ்வளவு நல்லது தெரியுமா? கால்சியம்!.
அப்புறம் பாஸ் மிளகாய்ப்பொடில எள்ளு பொடாம செஞ்சுடப் போறாங்க...
ஸ்ரீராம் இந்த் நெல்லை சொல்றதெல்லாம் கேக்காதீங்க.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கீதா
//உளுந்து வறுத்தபிறகு கழுவணுமா? சரியா? முறையாக?//
Deleteஅது எல்லோரும் வறுத்தபின்பே கழுவுகின்றனர், நான் இது ஏன் என என் கிட்னியை ஊஸ் பண்ணிக் கண்டு பிடிச்சேன்:)).. கழுவிய பின் வறுப்பதென்றால், 2 நாஅள் வெயிலில் காய விடோணுமெல்லோ:).. அதனாலதான் வறுத்தபின் கழுவுகின்றனர் எப்பூடி:))..
//அதெல்லாம் உடம்புக்கு நல்லதல்லோ... அதான்!//
ஹா ஹா ஹா இது கரீட்டூஊஊஊஊ:))
//
Deleteநெல்லைத் தமிழன்Monday, May 18, 2020 9:30:00 am
மறந்தும்கூட எள்ளுத் துவையல் செய்திடாதீங்க ஸ்ரீராம். கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு என்பது பழமொழி. பாவம் நீங்க. தினமும் அதிகாலைல நடைப்பயிற்சி செய்து அடிக்கடி எடையை செக் பண்ணிக்கறீங்க.//
ஆஆஆஆஆஆ அவ்ளோ.. குண்....டாஆஆஆஆவா இருக்கிறார் ஸ்ரீராம்:)).. ஹா ஹா ஹா எனகொரு பழமொழி வாய் நுனிவரை வந்திட்டுது:)) ஆனாலும் சொல்ல மாட்டேன் ஹா ஹா ஹா:))
அப்பூடிச் சொல்லுங்கோ கீதா:))..
Delete//அப்புறம் பாஸ் மிளகாய்ப்பொடில எள்ளு பொடாம செஞ்சுடப் போறாங்க..//
ஆஆஆ அப்போ கீதாவும் சொல்லுறா ஸ்ரீராம் குண்டுதான் என:)) ஹா ஹா ஹா எனக்கெதுகு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:))
தேஜஸ்... ஸ்ரீராம்...
ReplyDeleteதொடர்பு அபுரி! ஸீ.. நான் அஞ்சு இல்லையாக்கும்.. ஞாபகங்களில் சிறந்து விளங்க..்
//தொடர்பு அபுரி//
Deleteஹா ஹா ஹா இதில ஒண்ணுமே இல்லை, இந்த தேஜஸ் எனும் சொல்லை முதன் முதலில் எங்கள்புளொக்கில் அறிமுகப்படுத்திய பெருமை உங்களையே சேரும்... அப்போ நான் அது என்ன எனக் கேட்டுத் தெரிஞ்சு கொண்டேன், அதனாலதான் :)))
அடடே.. டெய்ஸி தாயாகப் போகுதா..்். கொண்டாட்டம்தான் வீட்டில்!
ReplyDelete//அடடே.. டெய்ஸி தாயாகப் போகுதா//
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ரெஜிஸ்ரேஷன் முடிஞ்சு எண்டவுடனேயே தாயாக்கிடப் பார்க்கிறீங்களே இது நியாயமோ?:)).. அவங்க கொரொனா முடிய, தேன்மூன் போகும் ஐடியாவில இருக்கினமாக்கும் ஹா ஹா ஹா..
ஊசிக்குறிப்பு படித்துச் சிரித்து விட்டு அதே கையோடு (கண்ணோடு) ஊசி இணைப்பைப் படித்து சிந்தித்தேன்!
ReplyDeleteசிரிப்பதும் ஜிந்திப்பதும்:) உடம்புக்கு நல்லது ஸ்ரீராம்:).
Deleteகமலா அக்கா ரெஸிப்பி செய்துட்டீங்க போல.. ரிஸல்ட் பற்றி ஏன் ஒன்றும் மூச்சு விடலை?!!
ReplyDeleteநல்லா இருந்ததுன்னு சொன்னா, அது சரி.. கமலா ஹரிஹரன் செய்முறைலாம் எப்போவும் டாப்தானே....அதை கத்துக்குட்டிகள் செய்தாலும் நல்லா இருக்கத்தானே செய்யும் என்று சொல்லிடுவோம்.
Deleteநல்லா இல்லைன்னு வச்சுக்கோங்க... அந்த தாஜ் ஹோட்டல் தலைமை செஃப் வந்து சொல்லிக்கொடுத்தாலும் அதிரா சொதப்பிடுவாங்கன்னு சொல்லிடுவோம்.
அதுனாலத்தான் அதைப்பற்றி மூச்சு விடலையாக்கும்.
அதில்லை நெல்லை. இவர்களுக்கு து சரியா வந்ததா என்ற சந்தேகம்!
Delete//கமலா அக்கா ரெஸிப்பி செய்துட்டீங்க போல.. ரிஸல்ட் பற்றி ஏன் ஒன்றும் மூச்சு விடலை?!!//
Deleteநீங்கள் வசனத்தின் முடிவைப் படிக்கவில்லை ஸ்ரீராம், சூப்பராக வந்தது எனப் போட்டிருக்கிறேனே.. வீட்டில் விரும்பிச் சாப்பிட்டார்கள்... பொரிக்கறிபோல வந்திருந்தது, கடலை மாச் சேர்த்தபோது....
//ஸ்ரீராம்.Monday, May 18, 2020 12:10:00 pm
அதில்லை நெல்லை. இவர்களுக்கு து சரியா வந்ததா என்ற சந்தேகம்!//
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நன்றாகவே வந்தது ஸ்ரீராம், நான் இப்படிச் செய்து, கமலாக்கா.. “மா” சேர்க்கும் இடத்தில், கொஞ்சம் சோயா சோஸ் சேர்ப்பேன் வழக்கமாக.. இது வித்தியாசமாக இருந்தது நன்றாக.
@நெ தமிழன்/
Delete//நல்லா இல்லைன்னு வச்சுக்கோங்க... அந்த தாஜ் ஹோட்டல் தலைமை செஃப் வந்து சொல்லிக்கொடுத்தாலும் அதிரா சொதப்பிடுவாங்கன்னு சொல்லிடுவோம்.
அதுனாலத்தான் அதைப்பற்றி மூச்சு விடலையாக்கும்.//
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்னா ஒரு வில்லத்தனம்:)).. மொத்தத்தில அதிரா எது செய்தாலும் நீங்க அடிப்பதற்கே ரெடியாக இருக்கிறீங்க:)) நானும் நழுவிக்கொண்டு ஓடப் பழகிட்டேன் ஹா ஹா ஹா:))
மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.
Deleteஆஹா, டெய்சிக்கு ஒருத்தரிடமும் சொல்லாமல் யாரையும் கூப்பிடாமல் நிச்சயதார்த்தமா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! போனால் போகட்டும், நன்றாக வாழ்க்கை நடந்து ஏராளமான குழந்தை, குட்டிகளைப் பெறட்டும்.
ReplyDeleteவாங்கோ கீசாக்கா வாங்கோ.. வாழ்த்துக்கு நன்றி நன்றி.. குழந்தை குட்டிகளோ ..ஙேஙேஙே:)) ஹா ஹா ஹா..
Deleteஉளுந்து ஒத்துக்கறதில்லை. அதனால் இது சாப்பிட முடியாது. எள்ளுத் துவையல்னு நீங்க சொல்வதை நான் பொடியாகப் பண்ணி வைத்துக்கொண்டு அதிலும் நல்லெண்ணெய் சேர்த்து சாதமாகப் பண்ணிடுவேன். நன்றாக இருக்கும். ஊசிக் குறிப்பும், இணைப்பும் வழக்கம் போல் அருமை. இன்னிக்கு என்ன இன்னும் அஞ்சுவோ மதுரைத்தமிழனோ வரலையா? வெறிச்சோடிக் கிடக்கே! அல்லது நீங்க வெளியிடலையா?
ReplyDeleteஉளுந்தில் வாய்வு அதிகம்தான், ஆனா நான் இப்போ அனைத்துக்கும் பெருங்காயத்தூளை வஞ்சகமில்லாமல் சேர்க்கிறேன். அதனால கொஞ்சம் நன்றாக இருக்குது...
Deleteஉளுந்து சேர்த்தால் விழுவிழுப்பாக இருக்குமோ எனத்தான் பயந்தேன், ஆனால் நன்கு வறுத்துச் சேர்ப்பதால் பாசிப்பயறைப்போல இருந்தது.
எள்ளுப்பொடி நானும் முன்பு செய்தேன் கீசாக்கா.. ஆனா எங்கட வீட்டில் பொடிகள் எடுபடாது... சட்னி வகை எனில் உடனே முடிஞ்சுபோகும்.
அது நான் போஸ்ட் போட்டுவிட்டுப் படுத்துவிட்டேன் கீசாக்கா.. மிக்க நன்றி.
பட்டர்ஃபிளை பிரஷர் குக்கர் சமீபத்தில் வாங்கியதா...?
ReplyDeleteஉளுந்து சாதம்
வேப்பம்பூ வடகம்
எள்ளுத் துவையல்
என அனைத்தும் அசத்தல்...
இப்படியெல்லாம் செய்து விட்டு...
4. அவசர சோறு ஆபத்து...
க்கும்...!
வாங்கோ டிடி வாங்கோ
Delete//பட்டர்ஃபிளை பிரஷர் குக்கர் சமீபத்தில் வாங்கியதா...?//
அதனாலதானே இவ்ளோ சவுண்டு:).. இங்கு போஸ்ட் போட்டுச் சொல்லிட்டேனே இப்போ போன நொவெம்பரில், ஊருக்குப் போயிருந்தபோது அண்ணன் வாங்கி அனுப்பியிருந்தார்...
//4. அவசர சோறு ஆபத்து...//
அது உண்மைதான், எங்களுக்கு எங்கள் நாட்டில் இந்தப் பிரெஷர் குக்கர் பழக்கமில்லை, இப்போ கொஞ்சக்காலமாகத்தான் பிரசர் குக்கரில் சமைப்பது ஈசி என எல்லோரும் வாங்கி இருக்கினம், நானும் ஓடுப்பட்டுக் கலைபட்டு வாங்கினேன், வாங்கிய உடன் தான் ஒரு வீடியோக் கண்ணில பட்டுது, பிரசர் குக்கர் உணவு உடம்புக்கு நல்லதல்ல என்பது ஹா அஹ ஹா கர்:))..
ஆனால் நான் பாவிப்பதில்லை, எப்பவாஅவது இபடிப் பொங்கல், சாதம் செய்ய மட்டுமே பாவிக்கிறேன், மற்றும்படி எல்லாம் அடுப்பில் தான்[எனக்கு அதுதான் ஈசி, இதில் பழக்கமில்லை, கரைய விட்டுவிடுவேன் அனைத்தையும் ஹா ஹா ஹா].
மிக்க நன்றி டிடி.
ஹை ஹை ஞானி!! வாசிச்சுப்பூட்டேன். திங்க க்குப் போட்டியா ஆஆஆ எங்கூர் ரெசிப்பி...கணினி காலேஜ் போயிருக்கு....வந்த பிறகு மதியம் மேல் வாரேன்.
ReplyDeleteகீதா
வாங்கோ கீதா வாங்கோ..
Delete//கணினி காலேஜ் போயிருக்கு....//
ஹா ஹா ஹா அப்போதானே கீதாவுக்குப் படிப்பிக்க முடியும்:))
//ஹா ஹா ஹா பாகுபலி ரேஞ்சுக்கு:) சிலர் ஊர்ப் பெயரைத் தோளில சுமக்கின்றனர்//
ReplyDeleteஹா.. ஹா.. நல்லவேளை என்னைச் சொல்லவில்லை பாவம் நெல்லைத்தமிழர்
உணவுப்படங்கள் ஆசையை தூண்டுகிறது நீண்ட இடைவெளிக்குப்பிறது இன்றுதான் தங்களது தளம் கணினியில் திறந்தேன்.
பழமொழிகள் அனைத்தும் உண்மை...
பகிர்வுக்கு நன்றி கில்லர்ஜி தி கிரேட் தேவகோட்டையிலிருந்து.....
கில்லர்ஜி... அவங்க உங்களைத்தான், தேவகோட்டையை மனசுல வச்சிக்கிட்டு எழுதியிருக்காங்கன்னு நினைத்தேன்.
Deleteநீங்கதான் எதுக்கெடுத்தாலும் எங்க ஊர் தேவகோட்டைம்பீங்க (கொரோனா விஷயத்தைத் தவிர...ஹா ஹா)
வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..
Delete//ஹா.. ஹா.. நல்லவேளை என்னைச் சொல்லவில்லை பாவம் நெல்லைத்தமிழர்//
//நெல்லைத் தமிழன்Monday, May 18, 2020 9:33:00 am
கில்லர்ஜி... அவங்க உங்களைத்தான், தேவகோட்டையை மனசுல வச்சிக்கிட்டு எழுதியிருக்காங்கன்னு நினைத்தேன்.//
ஹா ஹா ஹா.. நான் இதில் கில்லர்ஜியையும் நினைச்சேன், ஆனால் அவர் பெயர் மாற்றியதைக் கவனிக்கவில்லை, முன்பு கில்லர்ஜி எனத்தானே வைத்திருந்தார், அதனால விட்டு விட்டேன்.. நெ.டமிலன் அண்ட் மதுர டமிலனைத்தான் சொன்னேன் ஹா ஹா ஹா:)..
ஆனாலும் கில்லர்ஜி இருப்பது தேவகோட்டையிலதான் என்பதால, சொல்ல முடியாதெல்லோ:))..
//நீண்ட இடைவெளிக்குப்பிறது இன்றுதான் தங்களது தளம் கணினியில் திறந்தேன்.//
ஏன் கில்லர்ஜி, இவ்ளோ காலமும் கணனியில் திறக்க முடியாமல் இருந்ததோ?...
//கில்லர்ஜி தி கிரேட் தேவகோட்டையிலிருந்து.....//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா நன்றி கில்லர்ஜி.
நான் கணினி திறந்து பல மாதங்களாகிறது.
Deleteஎல்லாமே அலைபேசியில்தான்.
ஓ.... நன்றி கில்லர்ஜி, கவனிச்சுப் பதில் தந்தமைக்கு.
Deleteஸ்ரீராம், கணினியைத்திறக்க இன்னும் எத்தனை ........ளோ?:))..
சுவையான குறிப்புகள். உளுந்து சாதம், எள்ளுத் துவையல் - நல்ல காம்பினேஷன். செய்து பார்க்கிறேன்.
ReplyDeleteமற்ற குறிப்புகளும் சிறப்பு.
பூசார் - மோதிரம் போட்டுக் கொண்ட பூசார் கவர்கிறார்.
குறிப்புகள் அனைத்தும் சிறப்பு.
நன்றி அதிரா.
வாங்கோ வெங்கட் வாங்கோ..
Deleteநானும் இதுதான் முதல் தடவை செய்தேன் சூப்பராக இருந்தது.. இதே அளவில் செய்தால் நன்றாக இருக்கும்..
மிக்க நன்றி வெங்கட்.
https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=34911&cat=1360
ReplyDeleteசங்க காலத்தில் உளுந்து சோறு விருந்தினருக்கு படைக்கப்பட்டது. அந்த பாடல்.
'உளுந்து தலைப் பெய்த கொழுங்களி மிதவை
பெருஞ்சோற்றமலை நிற்ப நிரைகால்
மனைவிளக்குறுத்து, மாலைத் தொடரிக்'
என்ற அகநானூற்றுப் பாடலில், உளுந்து சேர்த்து செய்த பொங்கலை, விருந்தினர் சாப்பிடுவதும், மணமாலைகள் தொங்கியபடி இருந்ததும் குறிப்பிடப்பட்டு உள்ளன.
ஆனாலும் தோல் உளுந்து தான் சுவை கொடுக்கும். தேங்காய்ப்பாலில் அரிசி உளுந்து, பூண்டு, சேர்த்து புலாவ் போலவோ, பிரியாணி போலவோ செய்ய வேண்டும். இதற்கு மே சுக்கா நல்ல தொடு கறி.
வாங்கோ ஜேகே ஐயா வாங்கோ..
Deleteதினமலர் சென்று பார்த்தேன், பல நல்ல பண்டைய தகவல்கள் சொல்லியிருக்கினம்.
கறுப்புளுந்துதான் நல்லதாம், தமிழ்க்கடைக்குப் போனால் கிடைக்கும், வாங்கியபின் செய்யோணும்.
ஆனால் திருநெல்வேலிப்பக்கம் தேங்காய்ப்பூத்தான் சேர்ப்பினமாம், பால் சேர்ப்போர் ஒரு சிலராமே...
//இதற்கு மே சுக்கா நல்ல தொடு கறி//
ஹா ஹா ஹா.. இப்படிச் சாத வகைகள் விரத நாட்களில் சாப்பிடுவதுதான் பிடிக்கும்.
மிக்க நன்றி ஜே கே ஐயா.
உளுந்துசாதம், எள்ளுத்துவையல் பார்க்க நல்லாஇருக்கு. இரண்டும் சேர்த்து சாப்பிட நல்லாயிருக்கும் என நினைக்கிறேன்.. நாங்க எள்ளுப்பொடிக்கு நல்லெண்ணைய் விட்டு சாதத்தோடு சாப்பிடுவது. ஊரில் அம்மா இதெல்லாம் ஒரு காலம் உடம்புக்கு நல்லது என செய்து தந்தது. இங்கு எள்ளுபொடி மாமி அனுப்புவா. அதில் கொஞ்சம் தேங்காபூ போட்டு அரைச்செடுப்பது. அப்படிதான் மிளகாய்பொடிக்கும் இன்ஸ்டண்ட் சம்பல் என சொல்லி தேங்காபூ போட்டு அரைச்செடுத்து கொடுப்பேன். உங்க துவையல் நல்லாயிருக்கே பார்க்க. உளுந்து சாதம் செய்தது இல்லை. வடகம் செய்து கலக்கிறீங்க. பீன்ஸ் ப்ரட்டலில் கரண்டியை எடுத்துவிட்டிருக்கலாம். என்ன்வோ ஏதோ என்று நினைத்தேன். மஷ்ரூம் போட்டு சமைப்பது கணவர்தான். எனக்கு அது சரிவராது. செய்தா சாப்பிடுவதுதான்.
ReplyDelete/இந்த பட்டர்ஃபிளை பிராண்ட், 2 லீற்றர் பிரஷர் குக்கர் அஞ்சுவிடமோ, அம்முலுவிடமோ இல்லையாக்கும்:))/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உங்களுக்கு தெரியுமோ எங்களிடம் இல்லையென..அஞ்சு உங்ககிட்ட இருக்கும் பிரஷர்குக்கர் படம் போடுங்கோ. நானும் போடுறேன். நீங்க இப்ப வாங்கீட்டு இந்த அலப்பறை.கர்ர்ர்ர்ர்
ஆ....டெய்சிக்கு நிச்சயம் முடிஞ்சுதோ. எங்களுக்கு சொல்லாமல் எப்படி செய்வீங்க. அஞ்சுவுக்கும் சொல்லேல்லையோ.. செலவை மிச்சப்ப்டுத்தி கொடுக்குது இந்த கோவைகாய் 19. பல திருமணங்கள் இப்படி நடக்குது.
அழகூஊஊ டெய்சி. மோதிரம்போட்டபின் வடிவா இருக்கிறா.
இப்ப நீங்க வெளியில வராமலே நிற்கிறீயள். ஆவ்வ்வ்வ்.
பாட்டு கேட்காத பாட்டு. யாரும் கேட்டிருப்பாங்களோ தெரியாது.
வாங்கோ அம்முலு வாங்கோ..
Deleteநீங்களும் கமலா அககவைப்போல வேறு எங்கோ ரைப் பண்ணி எடுத்து வந்து போஸ்ட் பண்ணி விடுறீங்களோ கொமெண்ட்டை:)) ஹா ஹ ஹா ... பிரிச்சுப் பிரிச்சுப் போட்டால் நன்றாக இருக்கும்...
//அப்படிதான் மிளகாய்பொடிக்கும் இன்ஸ்டண்ட் சம்பல் என சொல்லி தேங்காபூ போட்டு அரைச்செடுத்து கொடுப்பேன்//
ஹா ஹா ஹா இந்த விளையாட்டு நானும் செய்வேன், ஆனா அரைப்பதில்லை, புளி உப்பு வெங்காயம் தேங்காய் எல்லாம் போட்டு நன்கு குழைத்து எடுப்பேன்.. நன்றாக இருக்கும்.
// பீன்ஸ் ப்ரட்டலில் கரண்டியை எடுத்துவிட்டிருக்கலாம். //
அது அம்முலு தனிப்படமாகப் போட்டால் முழுக்கறியும் சட்டியோடு தெரிந்திருக்கும் அப்போ அகப்பை சின்னதாகியிருக்கும், இது கொலாஜ் இல் போட்டதும் இப்பூடி ஆச்சு:))
//மஷ்ரூம் போட்டு சமைப்பது கணவர்தான். எனக்கு அது சரிவராது. செய்தா சாப்பிடுவதுதான்.//
Deleteஎனக்கும் ஆரம்பம் சரி வரவே இல்லை, அம்மாதான் கிழங்கு சேர்த்து சூப்பர் பிரட்டல் செய்வா.. ஆனா இப்போ சமீபத்தில் நான் ஒரு சூப்பரான பொரிக்கறி போன்று, நானே செய்தேன், என் ஐடியாவில், அது நல்லா இருக்குது.. ரெசிப்பி பின்பு போடுகிறேன் பாருங்கோ.
//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உங்களுக்கு தெரியுமோ எங்களிடம் இல்லையென..//
ஹா ஹா ஹா உங்களிடம் இருந்தாலும், நீங்கள் ஆதாரத்தோடு நிரூபிக்கும்வரை நான் நம்ப மாட்டேன்:).. ஆரையும் நம்பவும் விட மாட்டனே:)) ஹா ஹா ஹா..
//அஞ்சு உங்ககிட்ட இருக்கும் பிரஷர்குக்கர் படம் போடுங்கோ.//
ம்ஹூம்ம்.. இப்போதான் எனக்கு எல்லாமே பிரியுது:)).. அஞ்சு இன்று முழுக்க போர்த்துக்கொண்டு படுத்திருக்கிறா எனக்கு ஹே ஃபீவர் எனச் சொல்லிக்கொண்டு:)) கர்ர்ர்:)) அம்முலுவின் இந்த ஸ்ரேட்மெண்ட் படிச்சதும்தான் ஒடிப்போய்ப் படுத்திட்டா ஹா ஹா ஹா எங்கிட்டயேவா?:)).. எனக்கு ஞானக்கண்ணில எல்லாமே தெரியுதாக்கும்:))..
//எங்களுக்கு சொல்லாமல் எப்படி செய்வீங்க. அஞ்சுவுக்கும் சொல்லேல்லையோ..///
முறைப்படி சொல்லவில்லை எனக் குறை எடுக்காமல் தங்கம் வைரம் வைடூரியமாக கிஃப்ட் ஐ எல்லாம் அனுப்பி வைக்கவும் பிளீஸ்ஸ்.. அவற்றில் கொரொனா ஒட்டாதாம்:)) இருப்பிலதான் ஒட்டுமாம்:)..
//பாட்டு கேட்காத பாட்டு. யாரும் கேட்டிருப்பாங்களோ தெரியாது.//
நானும்தேன் கேட்டிருக்கவில்லை, எனக்கு சரத்பாபு அங்கிளை ரொம்பப்ப்ப்ப்ப் பிடிக்கும், அப்பூடியே ஷோபாவையும்..அதனால அவரும் ஷோபாவும் நடிச்ச பொன்னகரம் படம் பார்த்தேன்.. அதில் இருந்துதான் இது..
மிக்க நன்றிகள் அம்முலு.
உளுந்து சாதம்
ReplyDeleteவேப்பம்பூ வடகம்
எள்ளுத் துவையல்
அனைத்தும் அருமை
வாங்கோ கரந்தை அண்ணன் வாங்கோ..
Deleteஹா ஹா ஹா .. அனைத்தும் சத்துணவு!.. மிக்க நன்றி.
உளுந்து சாதம்... ரொம்பவும் பிடித்த சாதம் இது. நாங்க டூர் போகும்போதும் டூர் நடத்தறவங்க இதனைச் செய்வார்கள்.
ReplyDeleteநான் சாப்பிட்டபோதெல்லாம் தொலி நீக்கிய உளுந்து உபயோகித்துத்தான் பார்த்திருக்கிறேன்.
Of course பூண்டு சேர்க்கமாட்டோம்.
நல்ல பகிர்வு. பாராட்டுகள்
வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ
Delete//நாங்க டூர் போகும்போதும் டூர் நடத்தறவங்க இதனைச் செய்வார்கள்.//
ஓ... நான் இப்படி எங்கும் சாப்பிட்டதில்லை, கடைகளிலும் இல்லையே.. ஆனா இது அப்படியே தைப்பொங்கலுக்கு நாம் செய்யும் வெண்பொங்கலேதானே, அங்கு பயறு பொடுகிறோம் இங்கு அதற்குப் பதில் உளுந்து..
//நான் சாப்பிட்டபோதெல்லாம் தொலி நீக்கிய உளுந்து உபயோகித்துத்தான் பார்த்திருக்கிறேன்.
//
ஓ அப்படியோ? நான் பார்த்த வீடியோவிலெல்லாம் தோலுடன் தான் போடுகிறார்கள், அப்போ நான் செய்ததில் தப்பில்லை ஹா ஹா ஹா..
//Of course பூண்டு சேர்க்கமாட்டோம்.//
ஐ நோ தட்:))..
ஹலோ மேடம்... வெண்பொங்கல் கொஞ்சம் மசித்த சாதம்போல் பிசுபிசுப்புடன் இருக்கும். ஆனால் உளுந்து சாதம், தேங்காய் சாதம்போல பொல பொலவென இருக்கும்.
Deleteபாசிப்பருப்பு - உளுந்து - அதனால் வெண்பொங்கல் - தேங்காய்சாதம்.
ஹையோ கடவுளே.. ஹா ஹா
தொட்டுக்க வேப்பம்பூ வடகம், எள்ளுத் துவையல் - என்னைப் பொருத்தவரையில் உ.சாதத்திற்கு எதுவும் தொட்டுக்க வேண்டாம். எந்த கலந்த சாதத்திற்கும் (எள் சாதம், தே.சாதம், எலுமி சாதம் போன்று) பொரித்த அப்பளாம், இல்லைனா அவியல் போதும்.
ReplyDeleteஅது உண்மைதான் சாத வகைகளுக்கு எதுவும் தேவையில்லை, ஆனா வீட்டில் சாதம் பெரிதாகப் பிடிக்காதென்பதால வழமைபோல சோறுபோல இருக்கட்டுமே எனக் கறிகள் வைத்தேன்..
Deleteஅத்துடன் இன்னொன்று நெல்லைத்தமிழன், நம் குடும்பத்தில் நாம் சாதம்/சோறைக் குறைத்து கறி வகைகள் அதிகம் சேர்த்துப் பழகிவிட்டோம்ம்.. அது சின்னனில் தொடங்கி.. அதனால கறிகள் தேவை.
எனக்கென்னவோ, சரியா வராத வடகத்தை எல்லாம் (திராவிடீயன் வடகங்கள்) இதான் சாக்குன்னு வீட்டுல உள்ளவர்கள் தலைல கட்டிடறீங்களோ?
ReplyDeleteஹா ஹா ஹா வடகம் ஒரிஜினலா இப்பூடித்தான் வருமாக்கும் கர்:)). மேலே முதல்க் கொமெண்ட்டில் அஞ்சுவுக்கு விளக்கமான பதில் குடுத்திருக்கிறேன் படியுங்கோ பிளீஸ்ஸ்..
Delete2020ல் வெளியே வர முடியுமா முடியாதா? - கண்டிப்பா இதற்கு 2021 ஜனவரில பதில் சொல்றேன்.
ReplyDeleteமிகுதிக்கு அப்புறம் வருகிறேன்.
//கண்டிப்பா இதற்கு 2021 ஜனவரில பதில் சொல்றேன்.//
Deleteஹா ஹா ஹா கர்ர்ர்ர்:))
///மிகுதிக்கு அப்புறம் வருகிறேன்.//
எப்போ 2021 இலயோ?:))
பாடல் முதல்முறை கேட்கிறேன். நல்லா ஒளிந்து விளையாடுகிறார்கள்.
ReplyDeleteநாங்களும் தின்னவேலிதான். உளுந்து சாதம் செய்தால் எள்ளுதுவையல் மாமியார் வீட்டில். என் அம்மா செய்வது வரக்கொத்துமல்லி, மிளகாய் இரண்டையும் நல்ல கருப்பாய் வறுத்து
அதனுடன் புளி உப்பு வைத்து அரைத்து சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடுவோம்.
அடுத்து வரக் கொத்தமல்லி, மிளகாய், தேங்காய் பூ வருத்து அதனுடன் புளி உப்பு வைத்து அரைத்த துவையலும் செய்வார்கள். இரண்டுமே நன்றாக இருக்கும். எள்ளு துவையலும் நன்றாக இருக்கும், வெள்ளை எள் இல்லாமல் கருப்பு எள்ளில் செய்வார்கள்.
தோல் உளுந்தம் பருப்புக்கு சத்து அதிகம். கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது கிடைப்பதை வைத்து செய்ய வேண்டியதுதான்.
வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..
Deleteஹா ஹா ஹா பார்த்ததும் நன்றாக இருக்கே, ஊரில் விளையாடியதைப்போல என எடுட்த்ஹுப் போட்டேன், அது பொன்னகரம் படப் பாட்டு கோமதி அக்கா.
//நாங்களும் தின்னவேலிதான்.//
அவ்வ்வ்வ்
//தோல் உளுந்தம் பருப்புக்கு சத்து அதிகம்//
உண்மைதான் முன்பு ஒரு தடவைதானே முழு உளுந்து ஒருகிலோ வாங்கி, முடிக்க முடியாமல் வடை எல்லாம் சுட்டு அவதிப்பட்டேன்ன் ஹா ஹா ஹா.. இப்போ கிடைக்கவில்லை.
உளுந்து சாதம் செய்யும் போது கொஞ்சம் சீரகம்,வெந்தயம் , பூண்டு, தேங்காய்பூ உண்டு.
ReplyDeleteஉணவு பழக்கம் பழமொழி நன்றாக இருக்கிறது.
//கொஞ்சம் சீரகம்,வெந்தயம் , பூண்டு, தேங்காய்பூ உண்டு.//
Deleteஓ இது நான் பார்த்த ரெசிப்பியில், அந்த ஆன்ரி சொல்லவில்லை ஹா ஹா ஹா..
பருப்பு வடை கறி வகைகள் எல்லாம் அருமை.
ReplyDelete//டெய்சிப்பிள்ளைக்கு சிம்பிள் அண்ட் சுவீட்டாக நிட்சயார்த்தம்[ரெஜிஸ்ரேசன்] முடிச்சுப் போட்டம்:)).. கையில் மோதிரம் போட்டதும் அவவின் முகத்தில ஒரு தேஜஸ்//
தேஜஸ் தெரிகிறது. சின்னவரின் மோதிரம் சூப்பர்.
அப்படி என்றால் டெய்சி பாடுவது போல் "மோதிரம் போட்டது போல்" அந்த பாடலை பகிர்ந்து இருந்தால் பொருத்தமாக இருந்து இருக்கும்.
ஊசிக்குறிப்பு, ஊசி இணைப்பு எல்லாம் நன்றாக இருக்கிறது.
//"மோதிரம் போட்டது போல்"//
Deleteஆஆஆ அப்பூடி ஒரு பாடலோ ...
மிக்க நன்றிகள்.
டெய்சிப்பிள்ளைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஹா ஹா ஹா மிக்க நன்றி கோமதி அக்கா, இப்போ வெளியே விசிட் போயிருக்கிறா, வந்ததும் சொல்லிடுறேன்:))
Deleteஅட! உங்கள் செல்ல டெய்சி குடும்பஸ்தி ஆகப் போகிறாரா! வாழ்த்துகள்.
ReplyDeleteஊசிக்குறிப்பு, ஊசி இணைப்பு எல்லாமே ரசித்தேன். உணவு பற்றி எதுவும் சொல்லத் தெரிவதில்லை அதனால் அதைப் பற்றிச் சொல்லவில்லை.
துளசிதரன்
வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ..
Delete//அட! உங்கள் செல்ல டெய்சி குடும்பஸ்தி ஆகப் போகிறாரா! வாழ்த்துகள்.//
ஹா ஹா ஹா பின்ன கொரோனாவைச் சாட்டிக் கல்யாணம் முடிச்சுக் குடுக்காமல் வச்சிருப்பது தப்பெல்லோ :))..
ஓ உளுந்து சாதம் அங்கு உங்களுக்கு புழக்கத்தில் இல்லையோ?.. கேரளா என்பதும் இலங்கையைப்போலத்தானே உணவு முறைகள்.. மிக்க நன்றி துளசி அண்ணன்.
ஆஹா ஆஹா டெய்சி குட்டி!!!! நிச்சயதார்த்தமா! வீடே கொண்டாட்டம் தான் போங்க. இதைச் சாக்கு இனி ஒரே ரெசிப்பியா இருக்கும்னு சொல்லுங்க. கீதாக்கா வேற பாயாச வகைகள் போட்டிருக்காங்க...
ReplyDeleteடெய்சிப் பிள்ளை க்யூட்டா இருக்கா!! எப்ப கல்யாணம்?!!! நலமுடன் வாழ வாழ்த்துகள் பிரார்த்தனைகள். இவளே குட்டியாக இருக்கா இவளுக்கு குட்ட்டியா சரி சரி நீங்க ஏற்கனவே கொள்ளுப்பாட்டிதானே!!! ஏஞ்சல் வாட் டு யு ஸே
கீதா
வாங்கோ கீதா வாங்கோ..
Delete//இதைச் சாக்கு இனி ஒரே ரெசிப்பியா இருக்கும்னு சொல்லுங்க//
ஹா ஹா ஹா கொரோனா வந்ததுதான் வந்துது, வீட்டில சமைக்காதோர் எல்லாரும் சமைக்கினம்:)) நான் அஞ்சுவைச் சொல்லல்லே:))..
//கீதாக்கா வேற பாயாச வகைகள் போட்டிருக்காங்க...//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதில வகைகள் எங்கிருந்து வந்துது, ஒரு பாயாசம்தான் அதுவும் படத்தைக்கூடக் கண்ணில காட்டவில்லை அவ, எப்பூடி நான் நம்புவேன்:)) ஹா ஹா ஹா..
//எப்ப கல்யாணம்?!!! நலமுடன் வாழ வாழ்த்துகள் பிரார்த்தனைகள். //
அது மாப்பிள்ளை இப்போதான் 3 மாடி வீடு கட்டிக் கொண்டிருக்கிறாராம், முடிஞ்சதும் டும் டும் தான் ஹா ஹா ஹா...
//இவளே குட்டியாக இருக்கா இவளுக்கு குட்ட்டியா////
ஆஆ எண்டாலும் ஊ எண்டாலும் குட்டி நினைப்பிலேயே இருக்கிறீங்கள் எல்லோரும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா அவவுக்கு குட்டி வாணாமாம் மம்மிதான் வேணுமாம் விளையாட ஹா ஹா ஹா..
//ஏஞ்சல் வாட் டு யு ஸே///
ஏஞ்சலுக்கு இப்போ கொஞ்ச நாளாக காது கேய்ப்பதில்லையாக்கும்:)) ஹா ஹா ஹா
உளுந்து சாதம் நல்லா வந்திருக்கே..எங்க தின்னவேலி ரெசிப்பியாச்சே...நீங்க சொன்ன அள்வேதான் கறுப்பு உளுந்தேதான் (ஊடைத்தது) , வெந்தயம், ஜூரகமும் சேர்ப்பதுண்டு.
ReplyDeleteதொட்டுக் கொள்ள இதே எள்ளுத் துவையல்தால் அல்லது தேங்காய்துவையல். நல்ல கோம்போ...இதே எள்ளுத் துவையலைப் பொடியாகவும் செய்து வைத்துக் கொண்டுவிடுவதுண்டு.
கீதா
//வெந்தயம், ஜூரகமும் சேர்ப்பதுண்டு//
Deleteஓம் கீதா கோமதி அக்காவும் சொன்னா, நான் பார்த்த ரெசிப்பியில் இவற்றைச் சொல்லவில்லை.
நீங்கள் விதம் விதமான பொடிகள் செய்து வைத்திருப்பீங்கள் எப்பவும்.
எள்ளுப் பொடியாகச் செய்யும் போது தேங்காய் சேர்க்காமல் மற்றதெல்லாம் இதே போன்று செய்து வைத்துக் கொள்வதுண்டு. தேங்காய் சேர்த்தால் வறுத்துச் சேர்த்துப் பொடிசெய்வதுண்டு. தோசை இட்லி க்கு எல்லாம் நல்ல கோம்போ.
ReplyDeleteமற்றொரு ரெசிப்பியும் தரேன். செம டேஸ்டியா இருக்கும் ஒரு கப் எள்ளு என்றால் ஒரு கப் உளுத்தம் பருப்பு. இதில் பாதி வெள்ளையும், பாதி கப் கறுப்பு உளுந்தும் (தொலியோடுஉடியத்தது) வறுத்து காரத்திற்குச் செத்தல் மிளகாயும் வறுத்துப் உப்பு போட்டுப் பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இது தோசை இட்லிக்கும் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். எள்ளுச்சாதமும் செய்யலாம். திடீரென்று இப்ப செய்தது போல் புளி, தேங்காய் துருவல் செர்த்து துவையலாகவும் செய்துவிடலாம். ரெடிமேடாகப் பொடி வைத்துக் கொண்டால்.
கீதா
எள்ளுப்பொடி முன்பு நான் செய்திருக்கிறேன் கீதா,
Deleteஓ நோட் பண்ணி வைக்கிறேன் கீதா, செய்து வைத்திருந்தால், டக்டிக் டோஸ் என துவையல் செய்தால் சாப்பிடுவினம், பொடியாக எனில் உள்ளே இறங்காது.. நன்றி கீதா.
ஊகு ஹா ஹா ஹா 2020 ஆஆஆஅ 2021 ல கூட வெளிய வரமுடியுமான்னு ஹா ஹா ஹா ஹா
ReplyDeleteஊஇ அருமை
எல்லாம் ரசித்தேன் டெய்சி யை ரொம்பவே ரசித்தேன். உளுந்து சாதத்தையும்
கீதா
மிக்க நன்றிகள் கீதா.. இனிமேல் கொம்பியூட்டர் கொலீஜ் ஐ முடிச்சு வந்ததும், நான் கொலீஜ் போகிறேன் என வெளிக்கிட்டு விடாதீங்கோ ஹா ஹா ஹா.
Deleteஇனி இழப்பதுக்கு தலையில் ஒன்றும்மில்லை! தின்னவேலி வடகம் அழகாய் இருக்கு![[
ReplyDeleteவாங்கோ நேசன் வாங்கோ.. ஹா ஹா ஹா தலைக்கு வெளியிலதானே ஒன்றுமில்லை:) உள்ளுக்கு இருக்கெல்லோ:)).. அதில ஸ்நேகாவுமெல்லோ உள்ளே இருக்கிறா:)..
Deleteகாளான் கூட்டு அழகாய் இருக்கு காளான் சூப்பும் நல்லது! மஸ்ரூம் என்ற சொல்லைவிட காளான் சட்டென்று நினைவில் வருகுது சமையலில்![[
ReplyDeleteஅது நேசன் காளாஅன் என்றால், ஊரில மழைக்கு குப்பை கூழமெல்லாம் முளைக்கும் காளான் நினைவுக்கு வந்திடுது ஹா ஹா ஹா..
Deleteஒரு பெட்டி எள்ளித்துவையல் அனுப்பி விடுங்கோ வேலைக்கு போனபின் காசு அனுப்பிவிடுகின்றேன்![[
ReplyDelete///வேலைக்கு போனபின் காசு அனுப்பிவிடுகின்றேன்![[//
Deleteஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
மிக்க நன்றி நேசன்.
நாங்க எள்ளுத்துவையல் செய்ததே இல்லை. ஆனால் எள்ளுஞ்சாதம் செய்வோம். எங்க வீட்டில் (அம்மா வீட்டில்) எள் சாதம் என்றால் அது கொஞ்சம் இனிப்பா இருக்கும். பச்சை மிளகாய்லாம் போடமாட்டாங்க. ஆனா மனைவி செய்வது கார எள்ளு சாதம்.
ReplyDeleteஎனக்கு இனிப்பு எள்ளு சாதம்தான் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். (அதே ப்ரிபரேஷன். காரம் ரொம்பக் கம்மியா ஆனா சிறிது இனிப்பு சேர்த்துச் செய்வது)
நீங்க அதெல்லாம் சாப்பிட்டிருக்கீங்களா?
//நாங்க எள்ளுத்துவையல் செய்ததே இல்லை.//
Deleteஆஆஆஆஆஆ அப்போ நீங்கள் தின்னவேலி இல்லை:))..
//(அதே ப்ரிபரேஷன். காரம் ரொம்பக் கம்மியா ஆனா சிறிது இனிப்பு சேர்த்துச் செய்வது)
//
ஓஓ இப்படி எங்கும் ரெசிப்பி என் கண்ணில் படவில்லையே...
//நீங்க அதெல்லாம் சாப்பிட்டிருக்கீங்களா?//
இல்லை நெல்லைட்த்ஹமிழன், ஆனா எப்பவோ 2008/9 இல் ஒருதடவை இப்படி எள்ளுச்சாதம் ரெசிப்பி பார்த்து ஒரு தடவை செய்த நினைவு.. அது பவுடராக்கிச் சேர்த்த நினைவு..
மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன். உங்களுக்காக ஒரு லிங் இணைக்கிறேன் பாருங்கோ...
https://www.youtube.com/watch?v=mlB5_qZrAwE&t=5s
Deleteஇதைப் பார்த்தது இரவு தூங்கப் போவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பு.
Deleteஇந்த ஜோசியர்களே, டக்குனு விஷயத்தைச் சொல்லமாட்டாங்க. மாத்தி மாத்தி ஏதாவது பேசி பொறுமையைச் சோதிச்சுடறாங்க. ஹா ஹா.
வணக்கம் அதிரா சகோதரி
ReplyDeleteவண்ணத்துப்பூச்சியின் அழகை எப்படி ரசிப்பது என யோசிக்கிறதோ பூசார்.. படம் அருமையாக உள்ளது
திருநெல்வேலி யாழ்ப்பாணத்திலும் உண்டென்று கொஞ்சம் அரசல் புரசலாக அறிவேன். (திருமங்கலம் சென்னையிலும் இருப்பதைப்போல) நாங்களும், திருநெல்வேலி பாஷையில் தின்னவேலி என்போம்.(தின்பதற்கு வேலி ஏதுமில்லா ஊர்.)
உளுந்து சாதம் நன்றாக உள்ளது. உளுந்து இடுப்பெலுப்புகளுக்கு உகந்தது. (குறிப்பாக பெண்களுக்கு) இதை உளுந்து மசாலா பொங்கல் என்றும் சொல்லலாம்.இந்த சாதத்திற்கு எள்ளு துவையல்.. வடாம் என பொருத்தமான காம்பினேஷனாக தயாரித்து இருக்கிறீர்கள். தங்கள் ரசனைக்கு பாராட்டுக்கள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்கோ கமலாக்கா வாங்கோ.. இம்முறை கார்ட் பெட்டிக்கு முதல் பெட்டியில வந்து ஏறிட்டீங்கள்:)..
Delete//வண்ணத்துப்பூச்சியின் அழகை எப்படி ரசிப்பது என யோசிக்கிறதோ பூசார்..//
ஹா ஹா ஹா வண்ணத்துப்பூச்சியைச் சுமக்கிறாராம்ம்:))
//(தின்பதற்கு வேலி ஏதுமில்லா ஊர்.)//
ஹா ஹா ஹா ... தின்னும் வேலிதானே தின்னவேலி:)..
உண்மைதான் உளுந்து இடைக்கிடை ஆவது சேர்க்க வேண்டும், நாங்கள் தோசை இட்லி செய்வதும் குறைவே ஆனால் வடை செய்வேன் அடிக்கடி. மிக்க நன்றிகள்.
வணக்கம் அதிரா சகோதரி
ReplyDeleteஎள்ளு துவையலுக்கு நீங்கள் சேர்த்த பொருட்கள் நன்றாக உள்ளது. (உங்கள் சொல்படி இப்போ விட்டு விட்டு கருத்துரை..ஓ.கேவா..ஹா ஹா ஹா. ) நான் எள்ளு சாதம், எள்ளு கொழுக்கட்டை செய்வேன். எள்ளு, மற்றும் கொள்ளுத் துவையலும் எப்போதோ செய்திருக்கிறேன்.
வடாகங்கள் நன்றாகத்தான் இருக்கின்றன. ஏன் கறுத்துப் போகிறது?
என்னையும் குறிப்பிட்டு, என் பதிவுக்கு வழி வகுத்து, பதிந்து அந்த செய்முறையான குடைமிளகாய் பொரியலை தாங்களும் செய்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. மிகவும் நன்றிகள். நானும் உங்களின் டல்கோனாவை நேற்று செய்து சுவைத்து பார்த்த்தோம். நன்றாக இருந்தது.
காளான் என் குழந்தைகள் அவ்வப்போது, இப்போது சாப்பிடுகிறார்கள். எனக்குப் பிடிக்காது. எனக்கு என்றுமே அது அந்த காலத்திலிருந்து நாய்க்குடைதான்.( ஓ.. ஓ அதனால்தான் குடை மிளகாயுடன் அதை ஜோடி சேர்க்கும் ஐடியா தங்களுக்கு வந்ததோ? ஹா.ஹா.ஹா.)
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//(உங்கள் சொல்படி இப்போ விட்டு விட்டு கருத்துரை..ஓ.கேவா..ஹா ஹா ஹா. ) //
Deleteஹா ஹா ஹா இப்போ நன்றாக இருக்கு, நன்றி.
//எள்ளு கொழுக்கட்டை செய்வேன்.//
ஓ... பயறுக்குப் பதில் எள்ளு சேர்ப்பீங்களோ....
//தாங்களும் செய்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.//
ஆ நன்றி நன்றி... உங்கள் குறிப்புப் பார்த்ததுமே செய்ய வேண்டும் எனும் ஆசை வந்தது.. அந்த கத்தரிக்காய் கலப்புத் திருமணமும் செய்யப்போறேன்:))..ஆனால் கலப்பில்லாமல்:)) என்னிடம் கலக்க இங்கு கலர் இல்லை:)).. இருப்பது ஒரு கலர்தான். ஹா ஹா ஹா.
காளானிலும் அதிக சத்துக்கள் உண்டு, நல்ல விதமாக சமைச்சால் சாப்பிட ஆசையாக இருக்கும். இதுக்கு ஒரு ரெசிப்பி பின்பு போடுகிறேன்..
வணக்கம் அதிரா சகோதரி
ReplyDeleteஉங்கள் இரண்டு லிட்டர் குக்கர் அழகு என்றால், வரிசையான சிற்றுண்டி படங்கள் அதை விட அழகு.
உங்கள் டெய்ஸி பிள்ளையும் அழகோ அழகு. ஒருவேளை நிச்சயதார்த்த சந்தோஷத்தில் முகம் முன்பை விட பூரிப்பாக ஆகியுள்ளதோ. மோதிரம் கிடைத்துள்ள மகிழ்வும் சேர்ந்துள்ளது. டெயிஸிக்கு வாழ்த்துகள்.
ஊசிகுறிப்பை ரசித்து படித்தேன். ஊசி இணைப்பில் புத்தரின் பொன் மொழிகள் அருமை. அனைத்துப் பகிர்வுக்கும் நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
///உங்கள் இரண்டு லிட்டர் குக்கர் அழகு என்றால்//
Deleteஆஆஆ நன்றி நன்றி.. இது அஞ்சுவிடமோ அம்முலுவிடமோ இல்லையாக்கும் ஹா ஹா ஹா..
//மோதிரம் கிடைத்துள்ள மகிழ்வும் சேர்ந்துள்ளது. //
ஹா ஹா ஹா நன்றி நன்றி
மிக்க நன்றிகள் கமலாக்கா.
ஊசி இணைப்பு அருமை.
ReplyDelete//குண்டூசிக்குறிப்பு:- எங்கட யாழ்ப்பாணத்திலும் திருநெல்வேலி உண்டு:)), ஆனா நாங்கள் அதைச் செல்லமாக:).. “தின்னவேலி” என்போம்:).//
’தின்னவேலி’ பெயர் ஜோராக்கீது. அங்கும் தின்ன அல்வா உண்டா?
ஆஆஆ வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ... நீங்கள் ஈசல் போல:)).. ஒருதடவை வெளியே வந்துபோட்டு பின்னர் இடம் தெரியாமல் மறைஞ்சிருக்கிறீங்களே இது ஞாயமோ?:))..
Deleteதின்னவேலி என நீங்கள் சொல்வதில்லையோ கோபு அண்ணன், நாங்கள் திருநெல்வேலி எனத்தான் சொல்வதில்லை, இங்கு தின்னவேலி என்றால் புரியாதொ எனும் கூச்சத்தால நானும் திருநெல்வேலி எனச் சொல்லி வந்தேன், ஆனா இங்கு நாமும் அப்படிச் சொல்வோம் என அஞ்சு கீதா எல்லோரும் சொன்னதால எனக்கு இப்போ கூச்சம் போயிந்தி ஹா ஹா ஹா...
எங்கட தின்னவேலியிலும் அல்வா உண்டு.. கச்சான் அல்வா ஹா ஹா ஹா..
மிக்க நன்றி கோபு அண்ணன்.. இடைக்கிடை இப்படித் தலையை மட்டுமாவது காட்டுங்கோ:))
//நீங்கள் ஈசல் போல:)).. ஒருதடவை வெளியே வந்துபோட்டு// ஹா ஹா ஹா.
Deleteநான் 'பருந்துக்குப் பயந்த முயல் போல' பதுங்கு குழிக்குள்ளேயே அடைந்துகிடக்கிறார் என்றும் சொல்லலாம் இல்லையா?
நாங்கள் எதைச் சொன்னாலும் பிரச்சனை இல்லை நெ தமிழன்:)).. அவருக்கு என்ன கேட்கவோ போகுது, அந்த முறுக்குக் கடிக்கும் சத்தத்துக்கிடையில் ஹா ஹா ஹா..
Deleteஉணவு வகைகள் எல்லாம் நன்று.
ReplyDeleteசாதம் வகைகள் செய்வேன் நீங்கள் சொன்னதுபோல துவையல் இருந்தாலும் கறியும் வேண்டும்.
வாங்கோ மாதேவி வாங்கோ.. மிக்க நன்றி.
Delete