சே சே அதிரா எவ்ளோ பெரிய ஆள் [சமையலில், உருவத்தில் அல்ல கர்ர்:)] என்பதை முழுமையாக இங்கின காட்டவே முடியல்லியே:)).. வெள்ளிக்கிழமையிலிருந்து போஸ்ட் ஒன்று எழுத நினைக்கிறேன், இன்னும் ஆரம்பிக்கவே இல்லை, சரி... தோஓஓஒ எழுதிக்கொண்டிருக்கிறேன்:)..
ஓவரா அலட்டினால் உங்களுக்கும் பிடிக்காது.. எனக்கும்தேன்:)... அதனால நான் செய்து, வீட்டில பாராட்டுப்பெற்று, 5 நிமிடத்திலேயே முடிஞ்சு போன:), ரெண்டுவகைக் கேக்கை இங்கு சொல்லப்போறேன்...
முதலாவது வகை.
சொக்கலேட் மாபிள் கேக்
சீனி - 1 கப்[1 1/2 கப் போட்டால் நல்ல இனிப்பாக இருக்கும், இது இனிப்பு குறைவாக இருந்தது]
எண்ணெய்[refined oil]/வெண்ணெய் - 1/4 கப்
பால் - 1 கப் [கொஞ்சம் கூடத் தேவைப்படலாம்]
plain flour - 1 1/2 கப்
கொக்கோ பவுடர் - 4 தே.கரண்டி
பேக்கிங் பவுடர் - 1 தே.கரண்டி
பேக்கிங் சோடா - 1/2 தே.கரண்டி
இந்த வகைக் கேக்குகள் எல்லாம் மிக மிக ஈசியானவை, ரெடி பண்ண கொஞ்ச நேரம் போதும்..
முதலில் மாவுடன் பே.பவுடர், சோடாவைக் கலந்து ஒரு தரம் அரித்து ஒன்றாக்கி எடுத்து வைக்கவும்.
பேக்கிங் ட்ரேயை எடுத்து, நன்கு பட்டர் தடவி வைத்துக் கொள்ளவும்..
பின்பு சீனியை[சுகர்] மிக்ஸியில் போட்டு மாவாக்கி எடுத்து, அதனுள் எண்ணெயை ஊற்றிக் கலந்து, அதனுடன் ஒரு கப் பாலை ஊற்றி நன்கு கலக்கவும்.
பின்பு ரெடியாக்கி வைத்துள்ள மாவை அதனுள் போட்டு, கட்டி இல்லாமல் நன்கு கலக்கவும்.. இப்படிக் கலந்து முடிந்ததும், மாவின் தன்மை, தோசை மாப் பதம்போல வர வேண்டும், ஆகவும் தண்ணி ஆகிடாமலும், கட்டியாக இல்லாமலும் இருக்க வேண்டும்.
அதற்காககத்தான், தேவைப்பட்டால், கொஞ்சம் இன்னும் பால் ஊற்றிக் கலக்கவும். பால் குளிராக இல்லாமல், கொஞ்சம் அறை வெப்பநிலைக்கு சூடாக்கிப் பாவிக்கவும்.. இவ்ளோதான் மற்றர் ஓவர்:)!!!
அடுத்து, கலக்கி வைத்திருக்கும் மாக்கலவையை, இரண்டாகப் பிரித்து, ஒன்றினுள் மட்டும் கொக்கோ பவுடரை சேர்த்து மிக்ஸ்ட் பண்ணிப்போட்டு,
வேறு வேறு கரண்டிகள் பாவித்து, முதலில் ஒரு குட்டிக்கரண்டி மாவை நடுவில் ஊற்றி, பின்பு கொக்கோவில் ஒரு குட்டிக் கரண்டியை அதன் நடுவில் ஊற்ற வேண்டும்.. இப்படி மாத்தி மாத்தி ஊத்தும் போது, இங்கு படத்தில் ஊத்தியதைப்போல பரந்து விரிந்து வட்டமாகும்.
அனைத்தும் ஊத்தி முடிஞ்சதும், ஒரு பாபகியூ ஸ்ரிக் அல்லது ஏதும் கூரிய ஆயுதம்:) எடுத்து, இங்கு கடசிப் படத்தில் உள்ளதைப்போல கோடுகள் போட்டு பற்றன் மேக் பண்ணவும்...
அவணை 3-4 காஸ் மார்க்கில் விட்டு, 25-30 நிமிடங்கள் அவித்து எடுக்கவும். அடுப்பிலும் செய்யலாம்.. அந்த முறையைக் கீழே சொல்கிறேன். பட்டர் நைவ் ஆல் குத்திப் பார்த்தால், ஒட்டாமல் இருக்கவேண்டும் அதில் மா, அப்போ ரெடி ஆகிவிட்டது என அர்த்தம்... மற்றர் ஓவர்:)!!!!
ஆவ்வ்வ்வ் இதோ அதிராவின் அழகிய கேக் ரெடீஈஈஈஈஈ:))
=================🜋இடைவேளை🜋===============
சே சே இதென்ன இது, கேக் செய்த இடைவேளையில், அபச்சாரம் அபச்சாரம் ஹா ஹா ஹா:)
================🝝🝝🝝===============
இது ரெண்டாவது கேக்கூஊஊஊ:)...
கேக் எனும்போது, எனக்கு எப்பவுமே ஒரு நினைவு வரும். ஊரில் ஒரு பையன், அவர் கொஞ்சம் விவேகம் குறைவானவர், வீடுகளுக்கு வந்து, சொல்லும் வேலை எல்லாம் செய்துபோட்டு பணம் வாங்குவார்.
அவருக்கு பணத்தோடு சாப்பாடும் குடுப்போம். அப்போ ஒருநாள் காலையில், அம்மா கேட்டிருக்கிறா, சாப்பிட்டுப்போட்டு வேலை செய், என, அப்போ சொன்னாராம், இல்லை இப்போ வேண்டாம், நான் கேக் சாப்பிட்டு விட்டேன் என, இந்தக் காலையில கேக் ஆ? எங்கு சாப்பிட்டாய் என, அவர் சொன்னாராம் அது வெள்ளைக் கேக், பக்கத்து வீட்டில் என்று. பின்புதான் பக்கத்து வீட்டு ஆன்ரியிடம் விசாரித்தபோது, அவ சொன்னா அது கேக் அல்ல இட்லி என்று ஹா ஹா ஹா.
நம் நாட்டில் புட்டு இடியப்பம்தானே நம் தேசிய உணவு:), எங்கும் செய்வார்கள், கடைகளிலும் கிடைக்கும், இட்லி தோசை குறைவான கடைகளில்தான் கிடைக்கும், வீடுகளிலும் கிழமையில் ஒருதடவை.. இப்படித்தான் செய்வது வழக்கம், அதனால இப்படி வறிய குடும்பத்தில் இருப்போருக்கு இவை தெரிய நியாயமில்லை. இப்போ எல்லாக் கடைகளிலும் எல்லாம் கிடைக்கிறதாம்.
ஓகே ஓகே மெய் மறந்து கதை கேட்டது போதும் வாங்கோ வகுப்பறைக்குள் நுழைவோம்:)
ஈசி சொவ்ட் கேக்
பிளேன் ஃபிளவர்/ஓல் பேப்பஸ் ஃபிளவர் - 1 கப்
பட்டர்/எண்ணெய் - 1/4 கப்
தயிர் -1/2 கப்
சீனி[சுகர்] - 1/2 கப்
பேக்கிங் பவுடர் - 3/4 தே கரண்டி, பே.சோடா - 1/4 தே.க.
வழமைபோல மாவுடன், பேக்கிங் சோடா, பவுடர் சேர்த்து அரித்து எடுத்து வைக்கவும்.
கேக் பேக் பண்ணப்போகும் பாத்திரத்தில் எண்ணெய் அல்லது வெண்ணெய் நன்கு தடவி, மேலே பிளேன் ஃபிளவர் கொஞ்சம் போட்டு நன்கு பிரட்டி எடுத்து வைக்கவும், அப்போதான் கேக் ஒட்டாமல் வரும்.
பின்பு சீனியை கொஞ்சம் பவுடராக்கி, எண்ணெயும் தயிரும் சேர்த்து நன்கு கலக்கவும்.. விரும்பினால் வனிலா எசன்ஸ் கொஞ்சம் சேர்க்கலாம்[இது அனைத்துக் கேக்குக்கும் சேர்க்கலாம்]
அதனுள் ரெடியாக்கி வைத்திருக்கும் மாவையும் சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கலக்கவும்.. ரெடியாக்கிய கேக் பாத்திரத்தில் ஊத்தவும்.
இங்கும் அதேபோல, கொஞ்சம் பால் சூடில்லாத பதமாக வைத்திருக்கவும், மாவின் பதம், தோசைப்பதம்போல வரும் வரை பால் சேர்த்துக் கலக்கவும்..
இது நான் அடுப்பில் செய்த முறையைக் காட்டுகிறேன்..
அடுப்பில் செய்வதற்கு, ஒரு அடிகனமான பாத்திரத்தை எடுத்து, அடியில் கொஞ்சம் உப்பு போட்டு,
அடுப்பில் வைத்து கொஞ்சம் ஹீட் பண்ணி, உப்பு சூடானதும், இந்த கேக் பாத்திரத்தை வைத்து மூடி, மிடியம் ஹீட்டில் அவிய விடவும்... படம் எடுக்க தவறிவிட்டேன், உப்பின் மேல் ஒரு கம்பித்தட்டு ஏதும் வைத்து அதன்மேல் பாத்திரத்தை வைக்கவும், நேரடியாக உப்பில் வைத்தால், அடிப்பகுதி கருகிவிடும்.
அரை மணித்தியாலம் எடுக்கும்.
நல்ல கலர் வந்ததும், அதேபோல கத்தியால குத்திப் பார்த்து ஒட்டாமல் வந்தால் உடனே இறக்கி ஆறவிட்டு எடுக்கவும்
மேலே செய்ததைப்போல அவணிலும் வைத்து எடுக்கலாம், இரண்டிலும் முடிவு ஒன்றுதான்:)
அதிரா செய்த டபிள் கலர் ஜெலியையும் சேர்த்துச் சாப்பிடலாமே.. லாமே:))
இன்று ஒரு திருக்குறள் குறிப்பு:)
சமையலுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை:)
ஊசிக் குறிப்பு
இதை எனக்கு அனுப்பினவர் என் அன்பான எதிரி எனச் சொல்ல மாட்டேனே:))
ஊசி இணைப்பு
∰∰∰🙏🙏🙏∰∰∰