நல்வரவு_()_


Sunday 29 January 2012

வாழ்க்கை வெறுத்துப்போச்ச்ச்ச்:))

நிஜமாத்தான் சொல்றீங்களோ?:)
வாழ்க்கை வெறுத்துப் போச்சுது
எனச் சொல்லிக்கொண்டு
இன்னும் உயிரோடிருப்போரை
எனக்குப் பிடிக்காது


வாழ்க்கை வெறுத்தால்
சாக வேண்டியதுதானே
சொல்லிச் சொல்லி
ஏன் இருக்க வேண்டும்?:)

இதை நான் சொல்லவில்லை, முன்பு நான் 10 வயதாக இருந்தபோது, அப்பாவின் ஒபிஷில் வேலை பார்த்த ஒருவர் கவிதைகள் எழுதுவார், அதில் ஒன்றுதான் இக்கவிதை, வரிகள் மறந்திருப்பேன், ஆனா இப்படித்தான் ஆரம்பமாகியது அக்கவிதை, எழுதி எல்லாம் வைக்கவில்லை,  என் மனதில் அப்பவே பதிஞ்சு போச்சுது.

சரி இனி பூஸ் ரேடியோவில் கேட்ட ஒரு சங்கதிக்கு வருகிறேன்.

ஒரு பணக்காரன், ஒரு பசுவைக் கயிற்றால் கட்டி, கையில் பிடித்துக்கொண்டு போனார், அதைப் பார்த்த துறவி ஒருவர் சொன்னார்,
 “ஐயாவை மாடு கட்டியிழுத்துப் போகிறது” என.

இதைக் கேட்ட பணக்காரருக்கு கோபம் வந்துவிட்டது,
 “ஏய் துறவியே, நன்றாகப் பார், நான் தான் மாட்டைக் கட்டியிழுத்துப் போகிறேன்” என்றார்.

அதுக்கு துறவி கேட்டார்,
“ஏன் கட்டியிழுத்துப் போகிறீர்கள்” என்று.

“கையை விட்டால் பசு போய்விடும்” என்றார் பணக்காரன்.

 “அப்போ பசு, தனியே, தன் பாட்டில் போக ரெடி, ஆனால் உங்களால்தான் பசுவை விட முடியாமல் பின்னால் போகிறீர்கள், ஆனா ஏதோ பசுவுக்காகத்தான் நீங்கள் போகிறீர்கள் என்பதுபோல சொல்கிறீர்கள்” என்றார்.

இதன் கருத்து என்னவென்றால், ஒவ்வொருவரும் வாழ்க்கைக்கு ஒவ்வொரு சாட்டுச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம், யாரும் தனக்காக வாழ்கிறேன், தனக்காக உழைக்கிறேன் என்று சொல்ல மாட்டார்களாம், என் பிள்ளைகளுக்காகத்தான் வாழ்கிறேன், என் குடும்பத்துக்காகத்தான் உழைக்கிறேன். இப்பவே இறந்துவிடுவேன் ஆனா, பிள்ளைகள் வருந்துவார்களே என்றுதான் இன்னும் உயிரோடிருக்கிறேன் என எப்பவும் சாட்டை அடுத்தவர்மேல் போடுவதே நம் மனிதருக்கு பழகிப்போச்சாம்.

நாம் இல்லாமல் போனாலும், ஏனையோர் உயிர் வாழத்தான் போகிறார்கள், ஆனா நமக்கொரு நினைப்பு, அவர்களுக்காகத்தான் நாம் இருக்கிறோம் என.

ஏன், எனக்காகத்தான் நான் உழைக்கிறேன், வாழ ஆசையாக இருக்கு அதனால்தான் இருக்கிறேன் எனச் சொன்னால் என்ன?

எனக்கு வாழ்க்கை வெறுத்துப்போச்சு, ஆனா அவர்களுக்காகத்தான்- இவர்களுக்காகத்தான் இன்னும் உயிரோடிருக்கிறேன் எனச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும், எனக் கேட்டார் பூஸ் ரேடியோவில் பிரசங்கம் நடத்தியவர். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...



இனியும் ஆராவது வாழ்க்கை வெறுத்துப் போச்செனச் சொல்லுவினமோ?:))).

************************************************************************************
ஊசி இணைப்பு:
நான் முன்பு சொல்லியிருக்கிறேன் தானே மக் பை பறவைகள் பற்றி. சமீபத்தில் BRITISH BIRDS என்றொரு புத்தகம் பார்த்தேன், அதிலேயே மக் பையின் கீழே எழுதியிருக்கிறார்கள் ONE FOR SORROW, TWO FOR GLAD  என. அப்போ எனக்கு சந்தோசம் தாங்க முடியாமல் போச்சு, நம்மவர் மட்டுமில்லை, வெள்ளையர்களும் நம்புகிறார்கள் என்று.


பின்பு என் ஒரு வெள்ளை நண்பியை இதுபற்றிக் கேட்டேன், அவ 10 வரைக்கும் பாட்டுப் பாடிக் காட்டினா, நாங்க 4 வரையும்தானே பாடுவோம். 10 குருவிகள் கண்டால் "SURPRISE" எனச் சொன்னா.... எதிர்பாரா சந்தோசம் நிகழுமாம்.. அவ்வ்வ்வ்வ். 


ஆனா இது எனக்கு நிஜமாகவே நிகழுது. எங்கள் ஏரியாவில் எப்பவும் இவர்கள் இருப்பார்கள், ஒன்றைக் கண்டால், நான் கார் ஓடுவதையும் விட்டுவிட்டு மற்றது இருக்கோ எனத் தேடுவேன்:)).

இது பற்றிய பதிவுக்கு-----> எங்கட கார்டினும் மக்கு பையும்:).
************************************************************************************



Tuesday 24 January 2012

ஈ.... தான்:))

ஈஈஈஈஈ மெயிலால, எல்லோருக்கும் “ஈ” காட்டிச் சிரிச்சுச் சமாளிக்க வேண்டிய நிலைமையாக்கிடக்கே.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) முடியல்ல மக்கள்ஸ்ஸ்ஸ்:)).


என்னுடைய இன்னொரு ஹொட்மெயிலில்தான் உறவினர், மற்றும் வலைத் தொடர்பிலில்லாத நண்பர்கள், மற்றும் சில அறுசுவை நண்பர்களும் இருக்கிறார்கள்.

ஒரு நாள் ஒரு மெயில், எம் உறவினர் ஒருவரிடமிருந்து வந்திருந்துது, கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு முன்பு, நான் அதை ஓபின் பண்ணினேன், அது சில, நமக்கு தேவையற்ற மாத்திரைகளின் அட்.... லிஸ்ட். எனக்குப் பார்த்ததும் சரியான கோபமாகிட்டுது, எனக்கெதுக்கு இதை அனுப்பியிருக்கிறார் என. நல்ல நெருக்கம் எனில் ஃபோனில் கேட்டிருப்பேன், இது இப்படியானவற்றை கேட்கக்கூடியளவுக்கு பழக்கமில்லை அவரோடு. இருப்பினும், அது ஏதும் தவறுதலாக நிகழ்ந்திருக்கலாம், எதுக்கும் காக்கா போவதே மேல் என, பெரியமனது பண்ணி டிலீட் பண்ணிட்டு விட்டிட்டேன்.

ஒரு மாதத்தால திரும்பவும் அதே மெயில், அவரிடமிருந்தே. அப்போ எமக்குப் புரிந்துபோச்சு, இது ஏதோ அவருக்கும் தெரியாமல் நிகழுது என விட்டாச்சு.

அதன்பின்பு, இன்னொரு கதை. அறுசுவையின் ஆரம்ப காலத்தில்(கிட்டத்தட்ட 3 வருடங்கள்) அங்கு ஒரு நண்பி, பெரிதாகப் பழக்கமில்லை, அவ, நான் ஆருக்கோ ஐடி கொடுக்க, அதை எடுத்து எனக்கு மெயில் அனுப்பினா. எனக்கு அவவை பெரிதாக பழக்கமில்லை, ஆனா என்னோடு ஓரிரு முறை கதைத்திருக்கிறா. நான் எல்லா இடத்திலும் ஓடி ஓடிக் கதைக்கும்போது, சைலண்ட்டாக இருந்து படிப்போருக்கு, என்னை நன்கு பழக்கமானவர்போல் ஆகிவிடுகிறது, ஆனா, அவர்களை எனக்குத் தெரிய வாய்ப்பில்லைத்தானே.

அதேபோல்தான், ஆனா மெயில் வந்தால் சுடச்சுட/தாமதமாகியும் பதில் போடுவது என் வழக்கம். அது யாராக இருப்பினும், என்னைத்தேடி, வேலைமினக்கெட்டு ஒருவர் மெயில் அனுப்புறாரே, அவருக்குப் பதில் போடாமல் எப்படிக் காக்கா போயிட முடியும், என்பது என் கொள்கை.

அப்போ இந்த நண்பியோடும் 5,6 மெயில்கள்வரை கதைத்திருப்பேன், ஏனோ மனம் பெரிதாக ஒட்டவில்லை... அதனால அப்படியே அது கழண்டு போயிட்டுது. அவவும் “அங்கும்” இல்லாமல் காணாமல் போயிட்டா.

ஆனா அவவிடம் என் மெயில் ஐடி இருப்பதால், இடைக்கிடை ஏதும் சம்பந்தமே இல்லாத ஃபோவேர்ட் மெயில்கள், பலரோடு சேர்த்து கும்பலில் கோவிந்தாவாக எனக்கும் வரும், உடனே டிலீட்தான்.(இது வலையுலக நண்பர்களின் அதிரா மெயில்:)).

போனமாதம், அதே நண்பியிடமிருந்து மெயில் வந்திருந்துது, please open my album" என, உடனே ஆ.கோ றினால் ஓப்பின் பண்ணினேன், அதே மற்ற ஐடிக்கு ஒரு வருடத்துக்கு முன் வந்திருந்த, மாத்திரைகள் பற்றிய மெயில்.

குளோஸ் பண்ணிட்டேன். ஆனா இப்போதான் எனக்கு டவுட் வருகிறது, அதை நான் ஓபின் பண்ணினமையால், அதிலுள்ள என் Contacts அத்தனைக்கும் அது அனுப்பப்படலாம். அதனால இப்படி ஏதும் மெயில் வந்தால் தயவு செய்து ஓபின் பண்ணிடாதீங்க. இது ஃபோவேர்ட் மெயிலாக வராது, தனித்தனி மெயிலாகத்தான் வரும்.

நான் வாழ்க்கையில் ஆருக்கும் தேவையிலாத எதுவும் ஃபோவேர்ட் பண்ணியதில்லை, பண்ணவும் மாட்டேன். அதனால இப்படி மெயிலேதும் வந்தால், அது ஏதோ வைரஸின் விளையாட்டுத்தான்.

சரி இது இப்படி இருக்க. நான் சொன்ன அந்த உறவினருக்கான என் மெயில் ஐடிக்கு, அண்ணனிடமிருந்து முந்தநாள் ஒரு மெயில் வந்திருந்துது, Please open and view my album" என.

அண்ணன்தானே அனுப்பினார், ச்ச்ச்ச்ஷோஓஒ..... நோ டவுட்:)... உடனே message ஐக் கிளிக் பண்ணினேன், அவ்ளோதான்.. என்னமோ bank டீடைல் சொல்லு, அப்பத்தான் படம் பார்க்கலாம் என இருந்துது. எனக்குப் புரிஞ்சுபோச்சு, இது ஏதோ விளையாட்டென, சட்டென டிலீட் பண்ணிட்டேன். மெயிலையும் குளோஸ் பண்ணிட்டுப் போயிட்டேன்.

ஒரு 2 மணித்தியாலத்தால, என் இங்கத்தைய நண்பி ஃபோன் பண்ணினா, அதிரா எனக்கேதும் மெயில் அனுப்பினனீங்களோ என? ....ஙேஙேஙேஙேஙே..... இல்லையே,  நான் யாருக்கும் மெயில் அனுப்பவில்லை என்றேன்.  அவ சொன்னா, அதுதானே நானும் நினைத்தேன், எதுவாயினும் ஃபோனிலதானே சொல்லுவீங்களென, ஆனா உங்கட ஐடியிலதான் வந்திருக்கு... திறந்தேன் ஏதோ பாங் டீடைல் கேட்குது, அதுதான் என்னவென கன்போம் பண்ணக் கேட்டேன் என்றா.

நான் சொன்னேன், இல்லை நான் அனுப்பவில்லை, நீங்க அதை டிலீட் பண்ணிடுங்க எனச் சொல்லிப்போட்டு. ஒரு டவுட் வரவே, என் மெயிலைத் திறந்து SENT  மெயிலைச் செக் பண்ணினேன், அதிலுள்ள CONTACTS அத்தனைக்கும் அது அனுப்பப்பட்டிருக்கு.

நேற்று சித்தப்பா,  ஆன்ரியிடமிருந்தெல்லாம் பதில் வந்திருக்கு...

Thank you, but i am unable to open your album  என....நான் ....ஙேஙேஙேஙேஙே தான்:)).

இதில் நிறையப்பேருக்கு நான் மெயில் அனுப்பியே பல வருஷமாகுது.. அப்படியிருக்க திடீரென இப்படி மெயில் அனுப்பினால் என்னைப்பற்றி என்ன நினைப்பார்களோ அவர்களெல்லாம்.

இதைவிட, என் கணவரின் நண்பர், இக்கதையைக் கேட்டுவிட்டு பீதியைக் கிளப்பிவிட்டார், இப்படியான மெயில் ஒருமுறை மட்டும் போகாதாம், விட்டு விட்டு அடிக்கடி, அத்தனை கொன்ரக்ட்ஸ் க்கும் போகுமாம். முடிந்தால் உங்களிடமுள்ள கொன்ரக்ஸ்ட் அத்தனையையும் டிலீட் பண்ணிடுங்க என. நான் இன்னும் அப்படிச் செய்யவில்லை, எல்லாம் நோட் பண்ணி வைக்க நேரமில்லாமல் அவதிப்படுகிறேன்.

இதுக்கு ஏதும் மாற்று ஐடியா உண்டோ? இல்லாவிட்டால் “இதுவும் கடந்து போகும்” என இருக்கட்டோ?:)). ஆராவது பதில் சொன்னால் சந்தோசம்.


!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 “குட்டி” இணைப்பு:
இது அம்முலு எனக்கனுப்பினவ, குடை பிடிச்சுக்கொண்டு பத்திரமாக இருக்கட்டாம்:))

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எவர் ஒருவர் தன்னைத் தாழ்த்திக்கொள்கிறாரோ - அவர்
மற்றவர்களால் உயர்த்தப்படுவார்...
.............................................................பைபிள் வாக்கியம்..................
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Friday 20 January 2012

எங்கிட்டயேவா?:)



நாங்களும் செய்திட்டமில்ல...:)
எதுக்கும், ஒரு சேஃப்ரிக்கு இங்கின இருப்பம்:)
3 நாட்களில், முப்பது கார்ட்டுகள் செய்வது எப்படி? செய்முறையோடு விளக்குகிறார்,  "அதிரா மியா" அவர்கள்... இவை அத்தனையும் Handmade & 3D Style Cards.

பொறுமையோடு ஒவ்வொன்றாக உற்றுப் பாருங்கோ... விரும்பினால் கொஞ்சம் மோர்க் கப், கையில எடுத்துக்கொள்ளவும்:)).

ஆர்வமுள்ளவர்கள்,ஒவ்வொரு படத்துக்கு மேலும் கேர்ஸரை வைத்து கிளிக் பணிப் பெரிதாக்கிப் பாருங்கோ, அப்போதான் அதன் உண்மை அழகு தெரியும்.
சே..சே... பேபி அதிரா கையை எடுங்கோ, குழப்படி விடப்பூடாது:)
 ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(1)
 

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(2)
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
(3)

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(4) 

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(5)

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(6)
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(7)

 ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(8)

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(9)

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(10)
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
HAPPY BIRTHDAY FOR ALL  “எலீஸ்ஸ்ஸ்”:)
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நானேதான் கார்ட்ஸ் எல்லாம் செய்தேன் எப்பூடி? சூப்பராக இருக்கோ?:))..

சரி சரி இனித்தான் நீங்கள் கொஞ்சம் அதிகம் பொறுமையைக் கடைப்பிடிக்கோணும்... சொந்தக் கதை உண்மைக்கதையைப் பொறுமையாக் கேட்கோணும், முழுவதையும் படிச்சால், கோபமே வராது உங்களுக்கு OKAY?:).
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நான் முன்பும் சொல்லியிருக்கிறேன், இங்கு ஒரு வயதான லேடி இருக்கிறா, அவவின் பொழுது போக்கே, இப்படி கார்ட்ஸ் செய்து, Charity க்கு கொடுப்பா.. அப்போ அதை எல்லாம் ஒரு நாளைக்குப் படமெடுத்துப் போட வேண்டும் என நீண்ட நாள் ஆசை, நேற்றுத்தான் படமெடுக்க முடிஞ்சுது.. அஞ்சுவின் கார்ட்ஸ் பார்த்ததிலிருந்து, எப்படியாவது இவற்றையும் படம் எடுத்துப் போட வேண்டும் எனும் ஆவல் அதிகமாயிட்டுது.

இவற்றை எல்லாம் ஏன் போட்டுக் காட்டுகிறேன் எனில், நம் நாட்டில் வயதானோருக்கு, இப்படிப் பொழுதைப் போக்கும் ஆர்வம் குறைவு, இப்போ அனைத்துமே கடுகதியாகிவிட்ட காலத்தில், எம் நாட்டில் வயதானோர்..புலம்புகிறார்கள், பிள்ளைகள் தம்மோடிருந்து கதைப்பதில்லை, பேரப்பிள்ளைகள் வந்து கதைகள் கேட்பதில்லை, காவோலை ஆகிவிட்டமையால் யாரும் தேடுவதில்லை, வயசானால் ஒரு மரியாதையே இல்லை இப்படியெல்லாம். அதில் தப்பில்லை, ஆனா எந்நேரமும் எல்லோரும் சுற்றிவர இருந்து கதைத்துத்தான் பொழுதைப் போக்காட்ட வேண்டும் என நினைப்பது தவறுதானே.

வெளி நாடுகளில், வயதானோர் தனியேதான் இருக்கிறார்கள், அப்போ தமக்கு உடம்பு முடியும்வரை, இப்படியான கை வேலைகள், நிட்டிங், தையல்.. இப்படிச் செய்து, விற்க முடியாதுவிட்டாலும், இப்படி இலவசமாகக் கொடுத்து, புண்ணியமும் தேடுகிறார்கள், பொழுதும் இனிமையாகக் கழிகிறது.

அதனால, நான் சொல்ல வருவது என்னவென்றால்,  போன காலம் போகட்டும், நம் சந்ததியாவது, இப்படியானவற்றை தெரிந்து வைத்திருந்தால், வயதான காலத்தில் பொழுதைப் போக்கலாமெல்லொ?... இப்போ கோபம் தணிஞ்சிருக்குமே..
======================================================
குட்டி இணைப்பு:
உஸ்ஸ்ஸ் எல்லோரும் கூஊஊஊஊஊஊலாயிட்டினம்:)
========================================================

Monday 16 January 2012

பசுவோடு சேர்ந்தால், பூனையும் பசுவாகுமாம்:))..




என்ன அப்பூடிப் பார்க்கிறீங்க? இதுவும் பழமொழிதான், ஆனா அதிரா இயற்றியது:).

பிரித்தானியா மணி, பவுண்ட் தானே. ஏனைய பல நாடுகளோடு ஒப்பிடும்போது, பவர் அதிகமானதுதானே? அதனாலோ என்னவோ, இங்கு ஒரு சதத்துக்கும் மரியாதை உண்டு, புழக்கத்தில் இருக்கு.

ஒரு பவுண்ட் எனில் அது பெரிய காசுபோலதான் நினைக்கிறார்கள். எம்மைப்போல சிலர், ஊர் நினைவில் அங்கத்தைய ஒரு ரூபாய்போல நினைத்து செலவழிப்போரும் உண்டு, ஆனாலும் இங்குள்ள மக்கள் காசில் வலு கவனம். நான் இங்கு வந்த புதிதில், உடனே கொன்வேர்ட் பண்ணியே கணக்குப் பார்ப்பேன்.. ஒரு ரீ சேட், எம் நாட்டுப் பெறுமதிக்கு 1500 ரூபாய்க்கு மேல் வருகிறதே என, ஆனா கணவர் பேசுவார், அப்படி நினைக்காதீங்கோ, அது 20 ரூபாய் என நினையுங்கோ என, அதனால நானும் இப்போ அப்படியே பழகிட்டேன்.

ஒரு பவுண்ட்டுக்குள், சுவீட்ஸ், bun, bread,  இப்படி நிறையப் பொருட்கள் வாங்கலாம்.(எல்லாம் ஒரு பவுண்ட் அல்ல).


இப்படி நாட்டு நடப்பு இருக்க.  சுப்பமார்கட்டுகளில், TROLLEY  இருக்கிறதுதானே, அவை பெரும்பாலான சூப்பமார்க்கட்டுகளில், செயின் போட்டு லொக் பண்ணப்பட்டிருக்கும்,  அப்போ நாம் ஒரு பவுண்டை அதில் வைத்தால்தான் லொக் ஓபின் ஆகும், பின்பு எம் அலுவல் முடிய, மீண்டும் அதே இடத்தில் கொண்டுபோய் விட்டு லொக் பண்ணினால், எமது ஒரு பவுண்ட் வெளியே வரும். எல்லா நாடுகளிலுமே இப்படித்தானே.


ஏனெனில் மக்கள், கண்ட நிண்ட இடங்களில் எல்லாம் ரொலியை விட்டுவிட்டுப் போய் விடுவார்கள், அதைத்தவிர்க்கவே இப்படி. ஆனா TESCO சூப்பமார்கட்டில் மட்டும், இப்படி இல்லை, அதுக்கும் வேலைக்கு ஆள் வைத்திருக்கிறார்கள்.

அப்போ எல்லோருமே பத்திரமாக ரொலியை கொண்டுபோய் விட்டு, பணத்தை திரும்ப எடுத்திடுவோம், நாம் மட்டும் என்ன விதிவிலக்கா?:). சிலர் என்ன செய்வார்கள், நாம் லொக் பண்ண முன்பே, ஒரு பவுண்டைத் தந்துவிட்டு ரொலியைப் பெற்றுச் செல்வார்கள்.

இப்படி இருக்கும்போது ஒருநாள், நான், இன்னொரு தம்பதியினர் லொக் பண்ணப்போன ரொலியை, வாங்கிக்கொண்டு பணத்தை நீட்டினேன்.. அப்போ அவர்கள்,  பறவாயில்லை பணம் வேண்டாம், ரொலியைப் பிடியுங்கள் எனத் தந்தார்கள். எனக்கு என்னவோ தெரியவில்லை, இப்படியும் மனிதர்களோ என நம்ப முடியாமல் போச்சு. இது நடந்து கிட்டத்தட்ட 3 வருடங்கள் இருக்கும்.

பேபி அதிரா, கவனமா இருங்கோ, விழுந்திடப்போறீங்கள்:)
அப்போ என் கணவரிடம் சொன்னேன், இனி ஆராவது என்னிடம் ரொலி வாங்கினால், நானும் பணம் வேண்டாம் எனச் சொல்லப்போறேன் என. ஆனா இங்கு எல்லா வெள்ளையர்களுக்கும் பிடிக்காது, எதுக்கு வேண்டாம் என்கிறாய், எனவும் கோபிப்பார்கள், அதனால கவனம் பார்த்து நடவுங்க என்றார்.

சரி காலம் கடந்து போனது, பெரிதாக ஆரும் ரொலி கேட்கவில்லை. சிலர் லொக் போடும்வரை வெயிட் பண்ணி, பின் தம் பணத்தைப் போட்டு எடுப்பார்கள். அதிலும், நமக்கு பக்கத்தில் இருப்பது ரெஸ்கோ என்பதனால், அடிக்கடி போவது அங்குதான். அங்கு லொக் இல்லையெல்லோ.

ஆனால் என் மனமோ, ஆருக்காவது நானும், பணம் வாங்காமல் ரொலியைக் கொடுக்க வேண்டும் எனும் பேராவலில் இருந்தேன், ஆரும் அகப்படவில்லை. போன வருடத்தில் ஒருநாள், ஒரு லேடி, இப்படித்தான் ரொலியை பெற்றுக்கொண்டு பணத்தை நீட்டினா, நான் ஸ்டைலாக, இல்லை பறவாயில்லை இருக்கட்டும், வைத்திருங்கோ என்றேன், அவ விடவில்லை.. இல்லை பிடியுங்கோ எனத் தந்தா, ஏசிப்போடுவார்கள் என என்கணவர் வெருட்டிப்போட்டார் எல்லோ, அதனால பயம், டக்கென வாங்கிட்டேன்.அப்போ என் ஆசை நிறை வேறவில்லை.

சரி இன்னொரு சந்தர்ப்பம் அமையாமலோ போயிடும் என விட்டு விட்டேன். போன கிரிஸ்மஸ் அமளிக்குள் ஒருநாள் போயிருந்தேன், அதேபோல ஒரு லேடி பணத்தை நீட்டியபடி ரொலியை வாங்கினார், நான் அதேபோல, இருக்கட்டும் பறவாயில்லை என்றேன், உடனே அவ, ஓ தங்கியூ... எனச் சொல்லியபடி பணத்தை தராமல் போனா. எனக்கோ சந்தோசம் தாங்க முடியவில்லை... என் ஆசை நிறைவேறிவிட்டதே என... மிகவும் சந்தோசப்பட்டேன்... எப்பூடி இருக்கு... பசுவோடு சேர்ந்த “பண்டி”யின் நிலைமை?:))).


==================================================
முகத்தில் சுருக்கங்கள் விழலாம், 
ஆனால் இதயத்தில் விழ விடலாமோ? 
எங்கேயோ அடிக்கடி பார்த்த ஞாபகம் வருதோ? அதே..அதே:)..
==================================================

Thursday 12 January 2012

ஒரே வார்த்தை.... பல அர்த்தம்:)

மீண்டும் பழைய நினைவுகளே...


நாங்கள் ஹொஸ்டலில் இருந்த காலத்தில், ஒரு தடவை விடுமுறையின்போது, வகுப்புக்கள் இருந்தன. ஆனா விடுமுறை என்பதால் ஹொஸ்டல் மூடுவார்கள். அதனால இன்னொரு பெண்கள் கல்லூரி ஹொஸ்டல், அது எப்பவும் திறந்திருக்கும், அங்கு இடம் எடுத்தோம். அது ஒரு கோயிலின் முன்னால் இருந்தது, சைவக் ஹொஸ்டல், அசைவம் எடுக்க மாட்டார்கள் அங்கு.

அந்தக் கோயிலுக்கு நாம் அடிக்கடி போவதுண்டு. அங்கே ஒரு அண்ணன்... அவர் கிட்டத்தட்ட சாமியார்போல:)... ஆரையுமே, குறிப்பாக பெண்களை நிமிர்ந்தே பார்ப்பதில்லை, சரியான டோண்ட் கெயார் மாதிரி, சிலநேரம் விபூதி ஏதும் கொடுத்தாலும் நிலம் பார்த்தபடியே கொடுப்பார்.

ஐயருக்கு பூசையின்போது கெல்ப் பண்ணுவார். நல்ல ஸ்மார்ட் ஆக இருப்பார்... நல்ல தொழிலில் இருப்பதாகவும் அறிந்தோம்... அவர் இப்படி ரொம்ப அமைதியாக இருப்பதனால்.. ஹொஸ்டல் கேர்ள்ஸ் ஆகிய எமக்கு அவர் பற்றி அறிய ஒரு ஆர்வம் அவ்ளோதான். இது இப்படி இருக்க அந்தக் ஹொஸ்டலுக்குப் போயிட்டோம்.

நாமதான் எங்கின போனாலும் ஒட்டிவிடுவோமே... அங்கிருந்த கேர்ள்ஸ், மேட்ரன், வோச்சர்(செக்கியூரிட்டிகார்ட்:)) எல்லோருக்கும் எம்மைப் பிடித்துப் போயிட்டு. எப்பவும் கலகலப்பாக இருப்போம். அப்போ விடுமுறை என்பதால் அங்கு கொஞ்சம் வசதி அதிகம், ரிவி ரூமில் படம் போட்டுப் பார்க்க அனுமதி இருந்தது.

அங்கு இன்னொரு சம்பவம். அந்த ஹொஸ்டலில் அட்டாச் பார்த்ரூம் இல்லை. அது ஹொஸ்டலை விட்டு, அருகில்தான் மெயின் ரோட்டுப் பக்கமாக மதில் கரையிலேயே கட்டப்பட்டிருந்தது. அதனால மாலையாகிவிட்டால் வெளியே இறங்க எல்லோருக்கும் பயம். அந்த வயதான:) செக்கியூரிட்டி கார்ட்டை அழைத்துக்கொண்டுதான் போவார்கள். தூரமென நினைத்திடாதீங்கோ.. ஒரு பத்தடி தூரம்தான் இருக்கும், ஆனால் முன் வாசலால் இறங்கி பக்கத்தில் திரும்ப வேண்டும், அதனால பயம்.

அப்போ நாம் அங்கு போய் இரு நாட்களில், இரவு அந்த வோச்சரைக் கூப்பிட்டோம் வாங்கோ என, அவர் உடனே சொன்னார்.. “அதிரா.. என்று ஒரு துணிஞ்சபிள்ளை இருக்க, என்னை எதுக்குக் கூப்பிடுறீங்க, அதிராவைக் கூட்டிப் போங்கோ” என:))) அவ்வ்வ்வ்வ்... எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை, என் கதைகளைப் பார்த்து, நான் தைரியசாலி என நினைச்சிட்டார்போலும்...:)).

முன்பு எனக்கு ஏதும் பயமாக இருக்கு என்றால், அப்பம்மா சொல்லுவா “உந்தப் பயத்தைக் கழட்டி இங்க தா, நான் என் வெத்தலைப் பையில் போட்டிருக்கிறன், நீ பயமில்லாமல் போயிட்டு வா” என்று...

அது நினைவு வரவே... பயத்தைக் கழட்டி வைத்து விட்டு:) மனதில “வைரவா வைரவா” என வேண்டிக்கொண்டு.. அங்கிருந்த நாட்கள் முழுவதும்,  நான் தான் முன்னே நடப்பேன்:).. கடவுள் புண்ணியத்தில் பால்போல வெள்ளை:) நிலவாகவும் இருந்தது அப்போ:)). இமேஜ் டமேஜ் ஆகாமல் பாதுகாத்திட்டேன்.. என் பெஸ்ட் நண்பியும் என்னோடுதான் இருந்தா.

சரி இப்போ அந்த அண்ணனின் கதைக்கு வருவோம். நாங்கள் அங்கு போன அடுத்த நாள் காலையில் பார்க்கிறோம், அந்த அண்ணன் வந்து ஒபிஷில் மேட்ரனோடு கதைத்துவிட்டுப் போனார். எங்களுக்கு இன்னும் ஆர்வம் அதிகமாயிட்டுது.. அவர் எப்படி இங்கே வந்தார் என விசாரித்த இடத்தில், அங்கிருந்த பிள்ளைகள் சொன்னார்கள், அவர் ரொம்ப நல்லவர், அவர்தான் எங்கள் மேட்ரனுக்கு ஏதும் வெளி வேலைகள் செய்து கொடுப்பார்.. என.

அப்போ நாம் படம் பார்க்க வேண்டுமே... என் தலைமையில் படம் செலக்ட் பண்ணினோம்... நான் சொன்னேன் எனக்கு நீண்ட நாட்களாக ஒரு பெரிய ஆசை.. “அவள் ஒரு தொடர்கதை” படம் பார்க்க வேண்டும் என, நீங்களும் சரி என்றால் அதையே எடுப்போம் என்று. அனைவரும் ஒத்துக்கொண்டார்கள், மேட்ரனிடம் சொல்லியாச்சு, அவ சொன்னா “நாளைக்கு சிறி தம்பி வருவார், வந்ததும் சொல்லி வாங்கித்தாறேன்” என.

காவல் இருந்தோம், அடுத்த நாள் காலை.. அவர் வந்தார்.. நாமும் எல்லோரும் ஓடிப்போய் மேட்ரனைச் சுற்றி நின்றோம்... அப்படித்தான் அவர்கள் பழகியிருந்தார்கள், நாமும் இணைந்து கொண்டோம்... விடுமுறை என்பதால் மொத்தம் 10,12 கேர்ள்ஸ் போலதான் அங்கிருந்தோம்.

அப்போ எம்மைக் கண்டதும், அந்த அண்ணா, குனிந்த படியே நின்று கதைத்தார், யாரையுமே நிமிர்ந்து, தப்பித்தவறிக்கூட பார்க்கவில்லை, மேட்ரனை மட்டுமே இடைக்கிடை பார்த்தார்..  படத்தின் பெயர் சொல்லியாச்சு, ஒபீஷால் ஈவினிங் வரும்போது எடுத்து வாறேன், என்றிட்டுப் போயிட்டார்.

பின்னர் எப்ப வந்தாரோ தெரியாது, அடுத்த நாள் காலை நாம் மேட்ரன் ஒபீஷுக்குப் போனோம்... அவவுக்கும் ஒன்றும் புரியவில்லை, அதோ  தந்திட்டுப்போயிருக்கிறார் என்ன எனப் பாருங்கோ.... ஏதோ எல்லா இடமும் தேடி கஸ்டப்பட்டுத்தான் எடுத்தாராம் எனச் சொன்னா.

நாங்க எடுத்து பாக்கைத் திறந்து பார்த்தோம்.. அது “அவள் ஒரு தொடர்கதை” கதைப் புத்தகம்...  .....ஙேஙேஙேஙேஙேஙே.....!!.

=======================================================

சமீபத்தில் நடந்த இன்னொரு கதை. எமக்கு ஒரு அங்கிள் ஒருவர், சினிமாப் படங்கள் வாங்கி அனுப்புவார். ஃபோனில் கதைப்பதை விட, text  மூலம்தான் மெஷேஜ் அனுப்புவார், நாமும் அப்படியே. அடிக்கடி என்ன படம் வேண்டும் பெயரை அனுப்புங்கோ என்பார், நாம் பெரிதாக கேட்பதில்லை, அவர் தானாகவே வீடியோக் கடையில் கேட்டுக் கேட்டு வாங்கி அனுப்புவார்.

சமீபத்தில் நான் கேள்விப்பட்டேன், “தமிழ்ப்படம்” என ஒரு படம், கொஞ்சம் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கு என. அப்போ அவருக்கு text பண்ணினேன்..

 எனக்கு தமிழ்ப்படம் மூவி அனுப்ப முடியுமோ என...

அவரிடமிருந்து பதில் வந்துது, I bought "Thamizhan" movie, will send it 2moro.

நான் பதில் அனுப்பினேன்....

I asked "Thamizhpadam"  என.

அதுக்கு அவரிடமிருந்து வந்த பதில்.... All of them are Tamil movies....

நான் அப்போதான் புரிந்துகொண்டேன்... விழுந்து விழுந்து சிரித்து, ஃபோன் பண்ணி விளக்கம் சொன்னோம்.

பார்த்தீங்களோ... ஒரு சொல்லுக்கு எத்தனை அர்த்த்த்த்த்த்தம்ம்ம்:))).
========================================================

குட்டி இணைப்பு
========================================================
பாசங்களும் பந்தங்களும் , பிரித்தாலும் பிரியாதது
Baby Athira:) 5.45 years:)
========================================================



Monday 9 January 2012

மியாவ்வ்!!

ஒரே வார்த்தை, பல அர்த்தம்:))
ஹா..ஹா..ஹா... என்ன அப்பூடி லுக்கு விடுறீங்கள்:)... கோபிக்காமல் மேல படியுங்கோ.. இது ரியல் மியாவ்வ்வ்வ்வ்:)).. சூப்பரா இருக்குதில்ல?:).




தமிழில் இப்படி பல விஷயங்கள் நடந்திருக்கிறது, அதாவது சொல் ஒரேமாதிரி இருக்கும் ஆனால் அர்த்தம் மாறுபடும், அதனால் பல இடங்களில் பிரச்சனைக்குள்ளாகாமல் தப்பவும் முடிகிறது... “நான், அந்த அர்த்தத்தில சொல்லவில்லை, இந்த அர்த்தத்திலதானே சொன்னேன்”என:)).

அதேபோல் சில நேரம் நாம் நல்லதை நினைத்து ஒன்றைச் சொல்ல, அது தப்பான அர்த்தத்தை உருவாக்கி விடுவதும் உண்டு, இதுக்குத்தான் என்னவாயினும்  ஈகோ பார்க்காமல் நேரே கேட்டுத் தெளிவாகிட வேண்டும்:)). (மியாவ் சொன்னால் ஆர்தான் கேட்கினம் கர்ர்ர்ர்ர்:))).

சரி இனி பழைய நினைவுகளுக்குள் நுழைகிறேன்.

திருமணமாகும்வரை எம்மை எங்கேயும் தனியே போக, வீட்டில் அனுமதி கிடையாது, அதாவது கோயில், படம் பார்க்க இப்படியான இடங்களுக்கு. அப்போ நாம் ஊரில் இருந்த காலத்தில் கோயில்களில் இரவிரவாக நல்ல பிரசங்கங்கள், வில்லுப்பாட்டு நடக்கும்.. குறிப்பாக கம்பன் கழகத் தலைவர் திரு ஜெயராஜ் அவர்களின் பிரசங்கம், பட்டிமன்றம் என்றால் சொல்லவே தேவையில்லை, சனத்திரள் திரண்டு விடும்... அதுக்குப் போய் சிரிப்பதிலேயே வயிற்றுவலி வந்துவிடும்... கம்பராமாயணம், பாரதப் போரையெல்லாம்.... ஒவ்வொரு குட்டிக் குட்டிப் பகுதியையும் நகைச்சுவையை உள்ளே புகுத்தி... எம்மை சிரிக்க வைத்தபடியே கதையை நகர்த்துவார்.... அதனால் எந்த அலுப்புமில்லாமல் சிறியவர்கள்கூட நித்திரையாகாமல் கேட்போம்.

அப்போ இப்படியானவற்றுக்குப் போக நாம் எப்பவும் 4,5 கேர்ள்ஸ் ஒன்றாவோம், ஆனால் அதுக்கு ஒரு பெரியவர் துணை தேட வேண்டும், இன்னாரோடு போகிறோம் என்றால் மட்டுமே அனுமதி கிடைக்கும். பக்கத்து கோயிலெனில் அம்மா வருவா.. அல்லது மாமா வருவார். அப்பா அப்போ ஊரிலில்லை.

அடுத்த ஊர், அப்பாவின் ஊர்க்கோயிலெனில், அங்கொரு மாமி இருக்கிறா, அவவின் மகளுக்கும் எம் வயதுதான், எம்கூட்டத்தில் ஒருவர், அந்த மாமியும் எம்மைப்போலவே அனைத்துக்கும் துள்ளிக்கொண்டு வருவா. எம்மோடு எல்லா விளையாட்டும் போட்டிபோட்டு விளையாடுவா... அப்போ அவதான் எமக்கு வழிகாட்டி. அவவை எப்படியாவது கூத்துப்போட்டு, ஆயத்தமாக்கி, வீட்டில் பெமிஷன் எடுத்திடுவோம். அவவுக்கு இப்போ 60 வயதுதான் ஆனா கிட்னி பாதிப்பாகி கடந்தவருடம் காலமாகிவிட்டா.

இது போலவே இடம்பெயர்ந்திருந்திருந்தபோதும், எல்லோரும் ஒரு இடத்திலே இருந்தோம். அப்போவும் அந்த மாமியையே துணைக்கு அழைப்போம்.

ஒரு நாள் பகல் 1.30 மணியிருக்கும், அந்த மாமியின் மகள், பதறி அடித்துக்கொண்டு வருவதுபோல வந்தா, புதுப்படம் வந்திருக்காம் பெயர் “கர்ணன்”... அர்ஜூனுடையது, ஆனா சண்டையெல்லாம் பெரிதாக இல்லையாம், நல்ல பாட்டுக்களாம், இப்பவே போய்ப் பார்க்க வேண்டும், 2.30 க்கு ஷோ இருக்கு, ஆனா அம்மாவுக்கு இன்று ஏதோ அலுவல் இருக்காம், அதனால அவவால வர முடியாதாம், இப்போ என்ன செய்வது? மாமாவைத்தான் கேட்க வேண்டும் என்றா.(மாமா என்பது எங்கள் அப்பா, லீவில் வந்திருந்தார் அப்போ).

இங்கு இனொரு கதையையும் சொல்ல வேணும், எங்கட அம்மாவுக்கு அப்பாவுக்கு படம் பெரிதாக பிடிக்காது, அதுவும் தியேட்டர் எனில் பிடிக்கவே பிடிக்காது. அதிலயும் அப்பாவுக்கு பழைய படங்கள் அல்லது ரஜனி படங்கள் எனில் மட்டுமே பிடிக்கும். மற்றும்படி ஏசிக்கொண்டிருப்பார், வேலையில்லாமல் இருந்து சும்மா விசர்க்கூத்தெல்லாம் பார்க்கிறீங்கள் என:)).

அப்போ நாங்கள் 5 கேர்ள்ஸ்சும் ஒன்றாகி அப்பாவுக்கு முன்னால் ஆஜரானோம்... நேரம் போதாதெல்லோ ஒரு மணித்தியாலத்துக்குள் வெளிக்கிட்டுப் போயிட வேணுமே..

அப்பா உண்ட களைப்பில், ஈசிச்செயாரில படுத்திருந்தார். மாமியின் மகள் கேட்டா.. “மாமா, நல்ல படம் வந்திருக்கு, நாங்க பார்க்கப்போகோணும், நீங்கள் வாறீங்களோ எம்மோடு?”...

அப்பா கேட்டார்.. அப்படியா? என்ன படம்?

மாமியின் மகள் சொன்னா “கர்ணன்” மாமா. 2.30 க்கு தொடங்குது, உடனே போனால்தான் டிக்கெட் வாங்கலாம்.

பெயரைக் கேட்டதும், அப்பா ஏதோ சுடுதண்ணி பட்டவர்போல துடித்து எழுந்தார்... கர்ணனா? உடனே வெளிக்கிடுங்கோ வருகிறேன்:).

எல்லோரும் பறந்தோம் வெளிக்கிட:)... வெளிக்கிட்டாச்சு.. எமக்குள் புரிந்துவிட்டது... அப்பா நினைக்கும் கர்ணன்.. பாரதத்தில் வரும் கர்ணன் என... ஆனா ஆர் குத்தினாலும் அரிசி ஆவதுதானே எமக்கு வேணும்:)).. அப்பா எதுவும் விளக்கம் கேட்கவில்லையே.. நாமும் பொய் சொல்லவில்லையல்லவா... அவசராவசரமாக ஓடி டிக்கெட் எடுத்து, போய் இருந்து, படம் தொடங்கியதும், அர்ஜூனையும்... ஆட்டம் பாட்டத்தையும் பார்த்ததும்தான் அப்பாவுக்கு டவுட் வந்து கேட்டார்...

என்ன படம் . “அந்தக் கர்ணன்” மாதிரி இல்லையே?:)...

நாங்க சொன்னோம்... ஹா..ஹா..ஹா... நீங்க அதையோ நினைச்சீங்க... அதென்றால் நாங்க ஏன் வாறம்? இது புதுசு என்று...

சே..சே.. நான் அதை நினைத்தெல்லோ ஓடி வந்தேன் என்றார் அப்பா.

வீட்டுக்கு வரவரச் சிரிச்சு, வீட்டில வந்தும், சொல்லிச் சொல்லிச் சிரிச்சு... மறக்க முடியாததாகிவிட்டது....

இன்னும் கொஞ்சம் இருக்கு... அடுத்ததில் தொடரும்....:))

குட்டி இணைப்பூஊஊ:).(இது வேற குட்டி:))



இது இன்றைய ஸ்பெஷல்..  ஃபோ.. சுண்டெலி, குட்டி எலி, எலிக்குட்டி:)).. சண்டைப்பிடிக்காமல் ஒற்றுமையாகச் சாப்பிடோணும் ஓக்கை? அதிகம் சாப்பிட்டுக் குண்டானால், மியாவிடமிருந்து ஓடித்தப்பவும் முடியாது, சின்னச் சின்ன சந்து(இது வேற சந்து:)) க்களிலெல்லாம் நுழையவும் முடியாது.. சோ.. அளவாச் சாப்பிடோணும், இதையும் நானே சொல்லிக்கொடுக்க வேண்டிக்கிடக்கே அவ்வ்வ்வ்வ்:)))).
=====================================================

Wednesday 4 January 2012

ஐயா வாங்கோ!! அம்மா வாங்கோ!!



ஐயா வாங்கோ!! அம்மா வாங்கோ!! அக்கா வாங்கோ!! அண்ணா வாங்கோ!! தம்பி வாங்கோ!!!...(எனக்குத்தான் தங்கை இல்லையே.. நானேதான் தங்கை:)) மற்றும் பலோவராக இணைந்திருப்போர், இணையாமல் படிப்போர் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்... வாங்கோ வெத்தலை பாக்கு எடுங்கோ..... இது என் 100 ஆவது பதிவூஊஊஊஊஊஊஊ....


எங்கட அப்பம்மா(அப்பாவின் அம்மா) எப்பவுமே வெத்தலை, பாக்கு, சுண்ணாம்பு போடுவா... வெத்தலைப் பை இல்லாமல் அவவைக் காண முடியாது.  பாக்குகளில் நொங்குப்பாக்கு... அதாவது அரைப்பச்சையாக இருக்கும்போதே பிடுங்குவது, அது கொஞ்சம் வழுவழுப்பாக இருக்கும்.. புஸுக்குப் புஸுக்கெனச் சப்பிடலாம்:), அதைவிட பழுத்து விழுந்தது சப்ப ஈசியாக இருக்கும், மற்றது நன்கு காய்ந்து கடைகளில் இருப்பதுபோல இருக்கும். இத்தனை விதங்களும் அவவின் பையில் இருக்கும். எங்கள் ஊர் வீட்டில் பாக்கு மரம் இருந்தது குலை குலையாக காய்த்து விழும்... அதை ஆரும் கவனிப்பதில்லை, கோயில் காலங்களுக்கு பாவிப்போம்.

அப்பம்மாவுக்கு 2 மகள்களும் ஒரு மகனும்(எங்கள் அப்பா) , ஆனால் மகனின் பிள்ளைகள் மட்டுமே (நாங்கள்)வெத்தலை சாப்பிடுவோம்... மகளின் பிள்ளைகள் சாப்பிடுவதில்லை... பழகவில்லையாக்கும்:).

எங்கள் அப்பா அம்மாவும் எப்பவும் சாப்பிடமாட்டார்கள். ஆனால் நாங்கள் மட்டும் எங்கு வெத்தலை பாக்குக் கண்டாலும் விடமாட்டோம்... அப்பூடி ஒரு லவ்:).

சின்ன வயதில் அப்பா பேசுவார் அப்பம்மாவுக்கு, வெத்தலை கொடுக்கவேண்டாம், பிள்ளைகளுக்குப் பழக்குறீங்களோ என, அவ சிரித்துக்கொண்டே, மெல்லமா பாக்கை உள்ளே வைத்து வெத்தலையை மடித்து, அப்பாவுக்குத் தெரியாமல், என் கைக்குள் வைப்பா, நான் நைசா எடுத்துக்கொண்டு எங்காவது மறைவில் போய் சாப்பிடுவேன், சாப்பிட்ட உடன் தலை சுற்றுவதுபோல இருக்கும், கொஞ்ச நேரம் போய்ப் படுப்பேன், அப்பா கண்டால் கேட்பார், ஏன் இந்த நேரம் படுத்திருக்கிறாய் என:).... இப்பூடிப் பயந்து பயந்தே பழகியதுதான்.

ஆனால் திருமணத்தின் பின்பு என் கணவர்,  வெத்தலையை எங்கு கண்டாலும் உடனே வாங்கி வந்திடுவார்... இங்கு எங்களுக்கு கிடைப்பது கஸ்டம். நானும் அதை பிரிஜ்ஜில் பத்திரப்படுத்தி நீஈஈஈஈஈண்ட நாட்கள் பாவிப்பேன்.. அதே போலவே அக்காவின் கணவரும் எங்கு கண்டாலும் வாங்கிபோய்க் கொடுத்திடுவார்... இப்போ அப்பா பேசமாட்டார்.. என்ன வெத்தலையோ? என்று மட்டும் கேட்பார்:).

அதேபோல என் கணவரின் மைத்துனர் ஒருவர் அவரும் பாக்குப் பிரியர்... அவர் வெத்தலை போடுவதில்லை, ஆனா விதம் விதமான வாசனைப் பாக்குகள் தேடி வாங்கிப் போடுவார்... அவர்தான் கடந்த காலங்களில் எனக்கு பாக்கு சப்ளை பண்ணுவார்:)), பார்ஷல் பார்ஷலாக அனுப்புவார் (எங்கள் மாமாவின் இன்னொரு வடிவம் அவர் என நினைப்போம்).

அவரைப்பற்றி இன்னொரு ஞாபகமும் வருகிறது, அவர் ஒரு எஞ்ஜினியர், ஆனால் நல்லா சமைப்பார்.. சமைக்க நல்ல விருப்பம் அவருக்கு. அப்போ நான் அவருக்கு சொல்வேன் எனக்கென்னமோ சந்தேகமாகவே இருக்கு , நீங்கள் cooking  ..ல்தான் எஞ்ஜினியர்போல என:).. அதிலிருந்து எமக்கனுப்பும் பார்ஷலுக்கு.., ஃபுரொம் :  “குக்கிங் எஞ்ஜினியர்” எனப் போடுவார்:).

கொஞ்சக் காலத்துக்கு முன் அவருக்கு ஒரு ஒபரேஷன் நடந்தது, அப்போ கிட்டத்தட்ட 5,6 மாதங்கள் அவருடன் பேச முடியவில்லை.... திடீரென  ஒருநாள் ஃபோனில் கதைத்தார், என் கணவரோடு பேசிவிட்டு, என்னோடு பேசினார்... அப்போ “எப்படி இருக்கிறீங்க” என நான் கேட்டதுதான், “நான் இப்போ நலமாகிட்டேன்” என சொல்லி முடிக்க முன்.. “அதிரா உங்களுக்கு விருப்பமான அந்தப் பாக்குகள் வாங்கி வைத்திருக்கிறேன், நாளைக்கே போஸ்ட் பண்ணுகிறேன்” என்றார்... என்னையறியாமல் எங்கிருந்து வந்ததோ எனக்கே தெரியாது, கண்ணால் கண்ணீர் வழிந்துவிட்டதெனக்கு... நானே திடுக்கிட்டதுபோலாகி விட்டேன், இப்படியும் மனிதரா என.

இவ்வளவும் சொல்கிறேனே, நான் என்ன தினமும் சாப்பிடுவேன் என நினைக்கிறீங்களோ?:) ஒரு தடவை ஆசைக்கு சாப்பிட்ட உடனேயே வாய் எல்லாம் அவிந்ததுபோலாகி, சுவை இல்லாதமாதிரி வந்துவிடும், பின்பு 2,3 நாட்களால்தான் அடுத்த வெற்றிலை.. அதுக்குள் வெத்தலை அழுகிவிடும்:)).


என் பாக்குப் பெட்டி எப்பூடி இருக்கு?:).
============குட்டி பூஸ் ரேடியோ இணைப்பு============
சின்ன வயதிலிருந்தே வெற்றலை பாக்குப் போடப்படாது, நல்லதல்ல என வெருட்டி வெருட்டியே வளர்ந்தாச்சு:)), ஆனா சமீபத்தில் பூஸ் ரேடியோவில் வெற்றலையின் மகிமை பற்றிச் சொன்னார்கள், கேட்டுத் திகைத்து விட்டேன்...  வெத்தலையில் எத்தனையோ சத்துக்கள் உண்டாம்.. அதிலும் உணவை செமிபாடடையச் செய்யும் திறன் இருக்காம், அதனால்தான் உணவின் பின்பு தாம்பூலம் பரிமாறும் பழக்கம் ஆதிகாலம் தொடக்கம் இருந்ததாமே.... இனியும் ஆராவது வெத்தலை சாப்பிட வாணாம் எனச் சொல்லுவினமோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).
======================================================
இது என்ன தெரியுதோ? என் அடுத்த பேவரிட்டான முழு நெல்லிக்காய்... அம்லா(நொட் அமலா:)), கூஸ்பெரி:)
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
சரி சரி இதையெல்லாம் ஏன் இப்பூடி சொல்லுகிறேன் எனக் கேட்கிறீங்களோ? சோழியன் குடும்பி சும்மா ஆடாதாமே:))... அதாவது என்னிடம் ஆரும் வரப்போறீங்கள் என்றால், அதிராவுக்கு என்ன பிடிக்கும், என்ன வேணும் எனக் கேட்டால், நான் சே..சே.. எனக்கொண்டும் வேண்டாம் எண்டுதான் சொல்லுவன், நான் ரொம்ப ஷை ஆக்கும்:), அப்போ இப்பூடிச் சொல்லி வச்சால் உங்களுக்கு ஈசி எல்லோ? கேட்காமலே வாங்கி வரலாம்... சரி சரி நல்ல நாளதுவுமா கோபிக்கப்பூடா ஓக்கை?:)).
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

நான் வலைப்பூவை ஆரம்பித்தது 2009 பெப்ரவரி மாதம், ஆனா அதை யாரும் பார்த்திடக்கூடாதே என மிகவும் பாதுகாப்பாக ஒளித்து வைத்திருந்தேன், கிட்டத்தட்ட 10 மாதங்கள்... அதன் முழுக் கதையையும் படிக்க விரும்பினால் இங்கு பாருங்க..
 http://gokisha.blogspot.com/2010/08/blog-post.html


ஒரு மாதிரி விடுவதா... தொடர்வதா என... நினைத்து நினைத்தே 100 ஆவது பதிவுக்கு வந்திட்டேன்.... இதுக்கு, உங்கள் அனைவரதும் ஆதரவும், ஊக்குவிப்பும்தான் முக்கிய காரணம்.  பதிவு நல்லா இல்லாவிடினும், சூப்பராக இருக்கு, நல்லா இருக்கு எனச் சொல்லி, என்னை பப்பா மரமேற்றி, அந்த வேகத்தோடயே அடுத்த பதிவையும் எழுத வைக்கும் பெருமையும் நன்றியும் உங்களையே சாரும்... இத்தனை காலமும் பின்னூட்டங்கள் போட்டும், போடாமல் ஃபலோவராக இணைந்தும், எதுவுமில்லாமல் படித்தும் வரும்... உங்கள் அனைவருக்கும்... என் மனம் கனிந்த நன்றிகள்.. நன்றிகள்... நன்றிகள்... மனமும் மூடும்ம் நன்றாக இருக்கும்போது தொடர்வேன்... கொஞ்சம் லூசாக:) இருக்கும்போது அமைதிகாத்து மீண்டும் தொடர்வேன்:)...

88888888888888888888888888==========88888888888888888888888
அதிகம் கொக்கரிக்கும் கோழி, சிறிய முட்டை இடுமாம்
......................... நான் எனக்குச் சொல்லல்ல:))
88888888888888888888888888==========88888888888888888888888