Tuesday, 24 January 2012

ஈ.... தான்:))

ஈஈஈஈஈ மெயிலால, எல்லோருக்கும் “ஈ” காட்டிச் சிரிச்சுச் சமாளிக்க வேண்டிய நிலைமையாக்கிடக்கே.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) முடியல்ல மக்கள்ஸ்ஸ்ஸ்:)).


என்னுடைய இன்னொரு ஹொட்மெயிலில்தான் உறவினர், மற்றும் வலைத் தொடர்பிலில்லாத நண்பர்கள், மற்றும் சில அறுசுவை நண்பர்களும் இருக்கிறார்கள்.

ஒரு நாள் ஒரு மெயில், எம் உறவினர் ஒருவரிடமிருந்து வந்திருந்துது, கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு முன்பு, நான் அதை ஓபின் பண்ணினேன், அது சில, நமக்கு தேவையற்ற மாத்திரைகளின் அட்.... லிஸ்ட். எனக்குப் பார்த்ததும் சரியான கோபமாகிட்டுது, எனக்கெதுக்கு இதை அனுப்பியிருக்கிறார் என. நல்ல நெருக்கம் எனில் ஃபோனில் கேட்டிருப்பேன், இது இப்படியானவற்றை கேட்கக்கூடியளவுக்கு பழக்கமில்லை அவரோடு. இருப்பினும், அது ஏதும் தவறுதலாக நிகழ்ந்திருக்கலாம், எதுக்கும் காக்கா போவதே மேல் என, பெரியமனது பண்ணி டிலீட் பண்ணிட்டு விட்டிட்டேன்.

ஒரு மாதத்தால திரும்பவும் அதே மெயில், அவரிடமிருந்தே. அப்போ எமக்குப் புரிந்துபோச்சு, இது ஏதோ அவருக்கும் தெரியாமல் நிகழுது என விட்டாச்சு.

அதன்பின்பு, இன்னொரு கதை. அறுசுவையின் ஆரம்ப காலத்தில்(கிட்டத்தட்ட 3 வருடங்கள்) அங்கு ஒரு நண்பி, பெரிதாகப் பழக்கமில்லை, அவ, நான் ஆருக்கோ ஐடி கொடுக்க, அதை எடுத்து எனக்கு மெயில் அனுப்பினா. எனக்கு அவவை பெரிதாக பழக்கமில்லை, ஆனா என்னோடு ஓரிரு முறை கதைத்திருக்கிறா. நான் எல்லா இடத்திலும் ஓடி ஓடிக் கதைக்கும்போது, சைலண்ட்டாக இருந்து படிப்போருக்கு, என்னை நன்கு பழக்கமானவர்போல் ஆகிவிடுகிறது, ஆனா, அவர்களை எனக்குத் தெரிய வாய்ப்பில்லைத்தானே.

அதேபோல்தான், ஆனா மெயில் வந்தால் சுடச்சுட/தாமதமாகியும் பதில் போடுவது என் வழக்கம். அது யாராக இருப்பினும், என்னைத்தேடி, வேலைமினக்கெட்டு ஒருவர் மெயில் அனுப்புறாரே, அவருக்குப் பதில் போடாமல் எப்படிக் காக்கா போயிட முடியும், என்பது என் கொள்கை.

அப்போ இந்த நண்பியோடும் 5,6 மெயில்கள்வரை கதைத்திருப்பேன், ஏனோ மனம் பெரிதாக ஒட்டவில்லை... அதனால அப்படியே அது கழண்டு போயிட்டுது. அவவும் “அங்கும்” இல்லாமல் காணாமல் போயிட்டா.

ஆனா அவவிடம் என் மெயில் ஐடி இருப்பதால், இடைக்கிடை ஏதும் சம்பந்தமே இல்லாத ஃபோவேர்ட் மெயில்கள், பலரோடு சேர்த்து கும்பலில் கோவிந்தாவாக எனக்கும் வரும், உடனே டிலீட்தான்.(இது வலையுலக நண்பர்களின் அதிரா மெயில்:)).

போனமாதம், அதே நண்பியிடமிருந்து மெயில் வந்திருந்துது, please open my album" என, உடனே ஆ.கோ றினால் ஓப்பின் பண்ணினேன், அதே மற்ற ஐடிக்கு ஒரு வருடத்துக்கு முன் வந்திருந்த, மாத்திரைகள் பற்றிய மெயில்.

குளோஸ் பண்ணிட்டேன். ஆனா இப்போதான் எனக்கு டவுட் வருகிறது, அதை நான் ஓபின் பண்ணினமையால், அதிலுள்ள என் Contacts அத்தனைக்கும் அது அனுப்பப்படலாம். அதனால இப்படி ஏதும் மெயில் வந்தால் தயவு செய்து ஓபின் பண்ணிடாதீங்க. இது ஃபோவேர்ட் மெயிலாக வராது, தனித்தனி மெயிலாகத்தான் வரும்.

நான் வாழ்க்கையில் ஆருக்கும் தேவையிலாத எதுவும் ஃபோவேர்ட் பண்ணியதில்லை, பண்ணவும் மாட்டேன். அதனால இப்படி மெயிலேதும் வந்தால், அது ஏதோ வைரஸின் விளையாட்டுத்தான்.

சரி இது இப்படி இருக்க. நான் சொன்ன அந்த உறவினருக்கான என் மெயில் ஐடிக்கு, அண்ணனிடமிருந்து முந்தநாள் ஒரு மெயில் வந்திருந்துது, Please open and view my album" என.

அண்ணன்தானே அனுப்பினார், ச்ச்ச்ச்ஷோஓஒ..... நோ டவுட்:)... உடனே message ஐக் கிளிக் பண்ணினேன், அவ்ளோதான்.. என்னமோ bank டீடைல் சொல்லு, அப்பத்தான் படம் பார்க்கலாம் என இருந்துது. எனக்குப் புரிஞ்சுபோச்சு, இது ஏதோ விளையாட்டென, சட்டென டிலீட் பண்ணிட்டேன். மெயிலையும் குளோஸ் பண்ணிட்டுப் போயிட்டேன்.

ஒரு 2 மணித்தியாலத்தால, என் இங்கத்தைய நண்பி ஃபோன் பண்ணினா, அதிரா எனக்கேதும் மெயில் அனுப்பினனீங்களோ என? ....ஙேஙேஙேஙேஙே..... இல்லையே,  நான் யாருக்கும் மெயில் அனுப்பவில்லை என்றேன்.  அவ சொன்னா, அதுதானே நானும் நினைத்தேன், எதுவாயினும் ஃபோனிலதானே சொல்லுவீங்களென, ஆனா உங்கட ஐடியிலதான் வந்திருக்கு... திறந்தேன் ஏதோ பாங் டீடைல் கேட்குது, அதுதான் என்னவென கன்போம் பண்ணக் கேட்டேன் என்றா.

நான் சொன்னேன், இல்லை நான் அனுப்பவில்லை, நீங்க அதை டிலீட் பண்ணிடுங்க எனச் சொல்லிப்போட்டு. ஒரு டவுட் வரவே, என் மெயிலைத் திறந்து SENT  மெயிலைச் செக் பண்ணினேன், அதிலுள்ள CONTACTS அத்தனைக்கும் அது அனுப்பப்பட்டிருக்கு.

நேற்று சித்தப்பா,  ஆன்ரியிடமிருந்தெல்லாம் பதில் வந்திருக்கு...

Thank you, but i am unable to open your album  என....நான் ....ஙேஙேஙேஙேஙே தான்:)).

இதில் நிறையப்பேருக்கு நான் மெயில் அனுப்பியே பல வருஷமாகுது.. அப்படியிருக்க திடீரென இப்படி மெயில் அனுப்பினால் என்னைப்பற்றி என்ன நினைப்பார்களோ அவர்களெல்லாம்.

இதைவிட, என் கணவரின் நண்பர், இக்கதையைக் கேட்டுவிட்டு பீதியைக் கிளப்பிவிட்டார், இப்படியான மெயில் ஒருமுறை மட்டும் போகாதாம், விட்டு விட்டு அடிக்கடி, அத்தனை கொன்ரக்ட்ஸ் க்கும் போகுமாம். முடிந்தால் உங்களிடமுள்ள கொன்ரக்ஸ்ட் அத்தனையையும் டிலீட் பண்ணிடுங்க என. நான் இன்னும் அப்படிச் செய்யவில்லை, எல்லாம் நோட் பண்ணி வைக்க நேரமில்லாமல் அவதிப்படுகிறேன்.

இதுக்கு ஏதும் மாற்று ஐடியா உண்டோ? இல்லாவிட்டால் “இதுவும் கடந்து போகும்” என இருக்கட்டோ?:)). ஆராவது பதில் சொன்னால் சந்தோசம்.


!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 “குட்டி” இணைப்பு:
இது அம்முலு எனக்கனுப்பினவ, குடை பிடிச்சுக்கொண்டு பத்திரமாக இருக்கட்டாம்:))

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எவர் ஒருவர் தன்னைத் தாழ்த்திக்கொள்கிறாரோ - அவர்
மற்றவர்களால் உயர்த்தப்படுவார்...
.............................................................பைபிள் வாக்கியம்..................
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

127 comments :

 1. இப்படியான மெயில்களை ஓப்பின் பண்ணாமல் விடுவதே சிறந்தது.காரணம் நிச்சயம் வைரஸ் இல்லை எமது கணக்கை ஹக் பண்ண அனுப்பும் லிங்காக இருக்கும் எனவே இப்படியான மெயில்களை ஓப்பின் பண்ணாமல் அழித்துவிடுங்கள்.

  ReplyDelete
 2. அதிரா இந்தமெயில் படுத்தும்பாட்டை அழகா சொல்லி இருக்கீங்க. எனக்கும் இப்படி சம்மந்தமே இல்லாம மெயில் வந்துகிட்டுதான் இருக்கு. ஓபன் பண்ணவே பயம்மாதான் இருக்கு. நெட் ல எவ்வளவு வசதி இருக்கோ அவ்வளவு சங்கடங்களும் இருக்கு நாம கேர் ஃபுலா இருக்கவேண்டிதான் இருக்கு.

  ReplyDelete
 3. வாங்க ராஜ் வாங்க.. இம்முறை முதலாவதாக வந்திருக்கிறீங்க... சோ ... உங்களுக்கு ஆரியபவான் மட்டின் பிரியாணி சுடச்சுட சூப்பராக இருக்கும்.. எடுங்கோ..

  அது தெரியாதோரின் மெயில் எனில் விட்டிடலாம், ஆனா நமக்கு நன்கு தெரிந்தோரிடமிருந்து வரும்போது, மனம் அடடடங்கவே மாட்டுதாமே.... ஆர்வக் கோளாறுதான் காரணம்:).

  மிக்க நன்றி ராஜ்.

  ReplyDelete
 4. வாங்கோ லக்ஸ்மி அக்கா..

  உண்மைதான்... எவ்வளவுக்கு அன்பு அதிகமிருக்கோ, அந்தளவுக்கு உபத்திரவமும் அதிகமாக இருக்கும் என்பார்களே.... அதுபோலத்தான்.

  ஆனா நாங்க கெயாஃபுலாக இருந்தாலும், எங்கட பெயரில, மற்றவருக்கு தொந்தரவு கொடுப்பதை எப்படித் தடை செய்யலாம் என்பதே என் பிரச்சனை...

  மிக்க நன்றி லக்ஸ்மி அக்கா.

  ReplyDelete
 5. அடடா கிரிஜா...கிரிஜா.. வாங்க...

  இந்தாங்க உங்களுக்கு சுடச்சுட பால் அப்பம்:).. அஞ்சுவுக்குக் காட்டிடாதீங்க:)).

  ReplyDelete
 6. இந்தாங்க உங்களுக்கு சுடச்சுட பால் அப்பம்:).. அஞ்சுவுக்குக் காட்டிடாதீங்க// தாங்க்ஸ் தாங்க்ஸ் பூஸ் லஞ்ச் பிரேக் இல் பால் அப்பமா? யம் யம்! அஞ்சுவுக்கு மகிக்கு பச்சை பூவுக்கு எல்லாருக்கும் கெடையாதூஊ

  ReplyDelete
 7. நான் யாருக்கும் forward mails அனுப்பினது கிடையாது .
  இப்ப இந்த மெயில் இல் உள்ள முக்கியமான கான்டாக்ட்ஸ் எல்லார் அட்றேசையும் நோட் செய்துக்கிட்டு இந்த ஐடிய டிலீட் செய்யுங்க
  கூகிள் மெயில் பரவாயில்லை தேவையற்ற மைல்ஸ் ஸ்பாமுக்கு போய் விடும்,
  அதை விட முக்கியம் பூஸ் துரு துருப்பா ஆற்வக் கோளாறில் வர்ற மெயில் எல்லாத்தையும் திறந்து பாக்க கூடாது

  ஆங்கிலத்தில் ஒரு பழமொழி பூஸ் மொழி

  Curiosity killed the cat


  its a proverb used to warn of the dangers of unnecessary investigation or experimentation.


  okay dont forget that ROFL:):)..

  ReplyDelete
 8. ஜாக்கிரதையா இருங்க பூஸ். எங்களுக்கும் கொஞ்ச நாளைக்கு முன் Scotland Yard Police இல் இருந்து ஒரு மெயில் வந்தது. எங்க கம்ப்யூட்டர் லாக் பண்ணி விட்டாங்க அப்படின்னு அதை அன்ன்லோக் பண்ண காசு கட்டும் படி ஒரு அக்கௌன்ட் நம்பர் கொடுத்து இருந்தாங்க. நெஜமாவே கம்ப்யூட்டர் லாக் ஆயிட்டுது. கொஞ்ச நேரம் டென்ஷன் ஆயிட்டு நான் எதுவும் பண்ணலே. என் கணவர் வந்து பார்த்திட்டு கம்ப்யூட்டர் recover to previous day பண்ணி கொடுத்தாங்க. அத்தோட அந்த மெசேஜ் வரலே.

  ReplyDelete
 9. //இந்தாங்க உங்களுக்கு சுடச்சுட பால் அப்பம்:).. அஞ்சுவுக்குக் காட்டிடாதீங்க:)).//

  கர்ர்ர்ரர்ர்ர்ர்

  ReplyDelete
 10. Curiosity killed the cat// பால் அப்பம் அப்புடின்ன ஒடனே ஏஞ்செல் க்கு மூக்கு வேர்த்திடுச்சோ. போனா போவுது இந்தாங்க உங்களுக்கு பாதி எனக்கு பாதி
  பூச எதுக்கு பயமொழி எல்லாம் சொல்லி பயமுறுத்துறீங்க:))

  ReplyDelete
 11. //இந்தாங்க உங்களுக்கு சுடச்சுட பால் அப்பம்:).. அஞ்சுவுக்குக் காட்டிடாதீங்க:)).//

  கர்ர்ர்ரர்ர்ர்ர்// நோ கர்ர் நான்தான் ஷார் பண்ணி இருக்கேன் இல்லே. பேசாம சாப்பிடுங்கோ பார்க்கலாம். இன்னிக்கு என்ன சமையல் ஏஞ்செல் ?

  ReplyDelete
 12. இப்பத்திக்கு அமெரிக்கா எல்லாம் தூங்கி எழுந்து இருக்க மாட்டாங்க. பூசும் வேலைய பார்க்க போய்ட்டாங்க போல இருக்கு. ஓகே லஞ்ச் டைம் ஓவர் சீ யா

  ReplyDelete
 13. கோஸ் கூட்டு /பாவக்காய் பொரியல்/கத்திரிக்கா சாம்பார் / பிந்து அப்பளம்
  மாங்கா தொக்கு அண்ட் சாலட்

  ReplyDelete
 14. எனக்கும் இப்படி லின்க் மாதிரி மெயில் வருவதுண்டு,நான் உடனே டெலீட்டோ டெலீட் தான்,யாரும் உங்களை தப்பாக நினைக்கமாட்டாங்க,இது ஈ மெயில் காமெடின்னு எல்லாருக்கும் தெரியும்.

  ReplyDelete
 15. // En Samaiyal said...
  இந்தாங்க உங்களுக்கு சுடச்சுட பால் அப்பம்:).. அஞ்சுவுக்குக் காட்டிடாதீங்க// தாங்க்ஸ் தாங்க்ஸ் பூஸ் லஞ்ச் பிரேக் இல் பால் அப்பமா? யம் யம்! அஞ்சுவுக்கு மகிக்கு பச்சை பூவுக்கு எல்லாருக்கும் கெடையாதூ//

  ஹா..ஹா..ஹா.. ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ இருந்து சாப்பிடுங்கோ:). லஞ் பிரேக் முடிஞ்சிட்டுதில்ல?:)).

  ReplyDelete
 16. பூசுக்கு ஏதாவது ஈ ஈ ஈ ஈ ஈ ஈ மெயில் வந்திருக்கும் ஆர்வக்கோளாரில்
  திறந்துட்டு ..........நான் ஒண்ணுமே சொல்லல எங்கம்மா பொறக்கறதுக்கு முன்னே அவங்க நல்லா பொண்ணாம்

  ReplyDelete
 17. அதிரா இப்படிப்பட்ட மெயில்களை ஒப்பன் செய்யாமல் டெலீட் செய்வதே நல்லது...

  ReplyDelete
 18. வாங்க அஞ்சு வாங்க...

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வாணாம் அஞ்சுவுக்கு கிழங்கு போண்டா... முன் வீட்டு ஆன்ரி அங்கிளுக்குக் குடுக்கச் செய்தேன்.. நல்ல ஹொட்டாக இருக்கு... ஒளிச்சு வச்சுச் சாப்பிடுங்க....

  //இந்நேரம் “யூமிங் “ நடந்துகொண்டிருக்கும்.. அங்கின உயரத்தில இருந்து:)).

  ReplyDelete
 19. //முக்கியமான கான்டாக்ட்ஸ் எல்லார் அட்றேசையும் நோட் செய்துக்கிட்டு இந்த ஐடிய டிலீட் செய்யுங்க///

  அவ்வ்வ்வ்வ் அப்போ நீங்களும் என் வேலையைக் கூட்டுறீங்க, ஆராவது ஈசி மெதேட்.. அதாவது நான் ஒண்ணுமே பண்ணாமலே:)) அதை புளொக் பண்றமாதிரி சொல்ல மாட்டாங்களோ என்ற ஒரு எதிர்பார்ப்பில இருக்கிறேன்:).

  ---------------------
  கூகிள் மெயில் பரவாயில்லை தேவையற்ற மைல்ஸ் ஸ்பாமுக்கு போய் விடும்,
  அதை விட முக்கியம் பூஸ் துரு துருப்பா ஆற்வக் கோளாறில் வர்ற மெயில் எல்லாத்தையும் திறந்து பாக்க கூடாது ///

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் சொல்லிட்டீங்க இல்லை, இனி முக்கியமான மெயில் வந்தாலும் திறக்கவே மாட்டேன் okay?:)))). எதுக்கு முறைக்கிறா ஒரு அப்பாவிப் பூஸைப் பார்த்து அவ்வ்வ்வ்வ்:))).

  ---------------------------

  ஆங்கிலத்தில் ஒரு பழமொழி பூஸ் மொழி

  Curiosity killed the cat

  ////
  பூஸுக்கெல்லாம் ஆங்கிலத்திலும் பயமொழி இயற்றி வைச்சிருக்கினமே... பூஸ் எங்கேயோ போயிட்டுது:)))).


  its a proverb used to warn of the dangers of unnecessary investigation or experimentation.


  okay dont forget that ROFL:):)..

  /// ok...ok....i never forget that ROFL:):):):):):).

  இல்ல அஞ்சு உண்மையிலயே நீங்க சொன்னது கரெக்ட்தான், மனதுக்குத் தெரியுது, இதயம் கேட்காதாமே.

  மியாவும் நன்றி அஞ்சு.

  ReplyDelete
 20. //En Samaiyal said...
  Curiosity killed the cat// பால் அப்பம் அப்புடின்ன ஒடனே ஏஞ்செல் க்கு மூக்கு வேர்த்திடுச்சோ. போனா போவுது இந்தாங்க உங்களுக்கு பாதி எனக்கு பாதி
  பூச எதுக்கு பயமொழி எல்லாம் சொல்லி பயமுறுத்துறீங்க:)//

  அப்பூடிக் கேழுங்க கிரிஜா.. அதானே எதுக்கு ஒரு பேபி பூஸைப் பயமுறுத்துறீங்க...:))..

  அமெரிக்கா இப்பத்தான் கண் முழிச்சுக் கொட்டாவி விடுது, நீங்க ரீ டைமுக்கு வாங்க கிரிஜா மிச்சத்தையும் கதைப்பம் என்ன?))).

  மியாவும் நன்றி கிரிஜா.

  ReplyDelete
 21. //angelin said...
  கோஸ் கூட்டு /பாவக்காய் பொரியல்/கத்திரிக்கா சாம்பார் / பிந்து அப்பளம்
  மாங்கா தொக்கு அண்ட் சால//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. கொலிபிளவர் கூட்டு(உங்கட பாஷையிலயே), எங்கட பாஷையில பிரட்டல்:)).

  பருப்பு(சைவம் எனில் இவருக்குத்தான் முதலிடம்)... ஒரு வெள்ளரிக்காய் இனம், அதில வெள்ளைக்கறி( ஆரும் பெயர் கேட்டிடப்பூடா கர்ர்ர்:)).. சோயா அண்ட் பப்படம் பொரியல்...

  ரின்ல அவிச்சமிளகாய் பொரிச்சு ஸ்ரொக் வைத்திருக்கிறேன்... அது எனக்கு மட்டும்:)).

  ReplyDelete
 22. வாங்க ஆசியா..

  //Asiya Omar said...
  எனக்கும் இப்படி லின்க் மாதிரி மெயில் வருவதுண்டு,நான் உடனே டெலீட்டோ டெலீட் தான்,யாரும் உங்களை தப்பாக நினைக்கமாட்டாங்க,இது ஈ மெயில் காமெடின்னு எல்லாருக்கும் தெரியும்//

  அப்பூடித்தான் நானும் நம்பிக்கொண்டிருக்கிறேன்.. ஆனா வயதான அங்கிள், மாமா, சித்தப்பா எனவும் பலர், என் கொன்ரக்ட்டில இருக்கினம், அவைக்கு புரியுமோன்னோ... அவ்வ்வ்வ்வ்வ்:)).

  பதில் போட்டோருக்கு பதில் அனுப்பிட்டேன், அதை நான் அனுப்பவில்லை, ஓபின் பண்ணாதீங்க என.. ஏனெனில் திரும்பவும் போக வாய்ப்பிருக்காமே.

  மியாவும் நன்றி ஆசியா.

  ReplyDelete
 23. //angelin said...
  பூசுக்கு ஏதாவது ஈ ஈ ஈ ஈ ஈ ஈ மெயில் வந்திருக்கும் ஆர்வக்கோளாரில்
  திறந்துட்டு ..........நான் ஒண்ணுமே சொல்லல எங்கம்மா பொறக்கறதுக்கு முன்னே அவங்க நல்லா பொண்ணாம்//

  ஆரைச் சொல்றீக? அஞ்சுவையோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... நான் ஒண்ணுமே சொல்லமாட்டேன் சாமீஈஈஈ... ஏனெனில் நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:))... சே...சே.. அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டிக்கிடக்கே:))).

  ReplyDelete
 24. வாங்கோ மேனகா உண்மைதான், இனி சாஆஆக்கிர்ர்ர்தையாத்தான் இருக்கோணும்... மிக்க நன்றி.

  ReplyDelete
 25. //ற்//
  //ஆர்வக்கோளாறு //
  அப்பாடி பூசுக்கு கண்ணு தெரியாதது நல்லது நானே ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை கரெக்ட் செஞ்சுட்டேன்
  //

  ReplyDelete
 26. அதீஸ், இம்பூட்டு கஷ்டப்பட்டீங்களா?? பாவம் நீங்க. எனக்கு மெயில்கள் வருவது குறைவு. ஒரு சில நண்பிகளிடம் இருந்து மட்டுமே வரும். யாரும் ஏதாவது இணைத்து அனுப்பி, இதைக் கொஞ்சம் பாருங்கள் என்று சொன்னால் கட்டாயம் பார்க்கவே மாட்டேன். என் கணவருக்கும் இது தெரியும். அவர் எதுவும் இணைத்து அனுப்புவதில்லை. இதில் எச்சரிக்கை உணர்வு என்பதை விட என் சோம்பேறித்தனத்துக்கு தான் நான் நன்றி சொல்லணும்.

  என் சகோதரர்களிடம் இருந்து வரும் படங்கள் மட்டுமே ஒப்பன் பண்ணுவேன். அது வேறு ஈமெயில் என்பதால் ( யாருக்கும் கொடுப்பதில்லை ) பயம் கொஞ்சம் குறைவு.

  ReplyDelete
 27. நான் எப்பவும் வடை எடுத்துவிடுகிறேன் என்று பூஸார் சதி செய்து என் அதிகாலை 3 மணிக்கு போஸ்ட்டை பப்ளிஷ் செய்து எல்ல்ல்ல்ல்ல்ல்லாருக்கும் பாலாப்பம் குடுப்பதாகத் தகவல் வந்தது,உண்மையா???????? ஆஆஆஆஆஆ??
  :))))))))))

  அதிரா,இந்த ஈஈஈமெய்ல் தொந்தரவு ஜிமெய்லிலே அவ்வளவாக இல்லை,யாஹூல இருக்குது.

  எங்கக்கா(அதிராக்கா இல்லை,என்ர ஓன் ஸிஷ்டேர்!;))வுக்கும் இதே பிரச்சனை வந்ததாம்.அவர் எதேச்சையாக ஓபன் செய்து பார்க்க, அது எல்லாருக்கும் பார்வர்ட் ஆகி, அதிலே ஒருவர், காட்டமாக பதிலும் அனுப்பியிருக்கார். ஏனென்றால் அவர் அந்த மெயிலை ஓபீஸிலிருந்து திறந்து பார்க்க, ஓபீஸ் அக்கவுன்ட் லொக் ஆகிப் போனதாம்!!;) அப்புறம் சமீபத்தில் அக்கா பாஸ்வர்டை எனக்குத் தந்து, மெய்ல் பாக்ஸ் திறந்து இந்த அன்வான்டட் மெய்ல்ஸை டெலிட் செய்யும் வேலையை எனக்கு அஸைன் பண்ணினா..நானும் அந்த Spam மெய்லை எல்லாம் டெலிட் செய்து, அங்கங்கே போய் அன்ஸப்ஸ்க்ரைப் செய்துன்னு ஒரு நாள் முழுக்க வேலைபாத்தேன்! :)))))

  பூஸக்கா,உங்களுக்கும் வேணா ஜெல்ப்..கெல்ப்..ச்சீ,ச்சீ ஹெல்ப் பண்ணவா? ;))))))

  ReplyDelete
 28. குடை பிடிச்சு குளிர் காயும் பூஸ்..ஃபீடிங் பாட்டிலிலே மில்க் குடிக்கும் பூஸ்!!ம்ம்..கலக்கறேள் போங்கோ!!

  ஆனா...."ஈஈஈஈஈஈஈஈஈஈ" என்று பல்லைக்காட்டும் பூஸ் படம் போட்டிருந்தா இன்னும் பொருத்தமா இருந்திருக்கும் அல்லோ???!

  http://3.bp.blogspot.com/--ZlHnc-bau4/TbcH5Om1TaI/AAAAAAAAC0Y/PSd5-41X6Fk/s400/funny+animal+pictures+cheese.jpg
  இந்தப்படம் o.k.வான்னு பாருங்கோ!

  ReplyDelete
 29. how about this?

  http://www.vectorstock.com/i/composite/96,83/219683/laughing-kitten-vector.jpg

  ReplyDelete
 30. கோஸ் கூட்டு /பாவக்காய் பொரியல்/கத்திரிக்கா சாம்பார் / பிந்து அப்பளம்
  மாங்கா தொக்கு அண்ட் சாலட்
  ************
  பருப்பு(சைவம் எனில் இவருக்குத்தான் முதலிடம்)... ஒரு வெள்ளரிக்காய் இனம், அதில வெள்ளைக்கறி( ஆரும் பெயர் கேட்டிடப்பூடா கர்ர்ர்:)).. சோயா அண்ட் பப்படம் பொரியல்...

  ரின்ல அவிச்சமிளகாய் பொரிச்சு ஸ்ரொக் வைத்திருக்கிறேன்... அது எனக்கு மட்டும்:)).
  **********************
  ஒரு அக்கா வீட்டில லன்ச்,ஒரு அக்கா வீட்டில டின்னர்! ஆஹா..நினைக்கவே நல்லா இருக்குதேஏஏஏஏஏ!:P:P

  கீரிஷாக்கா,உங்கட வீட்டில் என்ன சமையல்?? சொன்னீங்கன்னா, பூஸ் வீட்டிலயே ஒரு நாள் தங்கி உங்க வீட்டில fasting-ஐ ப்ரேக் பண்ணிட்டு(ஹிஹி,ப்ரேக்ஃபாஸ்ட்) வந்துருவேன்.
  :))))))))))

  ReplyDelete
 31. ஹா...ஹா..ஹா.. என் பக்கத்தில ரைப் பண்ண எனக்கே பயமாயிருக்கே.. ஆரும் கையும் களவுமா என் ஸ்பெல்லிங் மிஸ்ரேக்கைப் பிடிச்சிட்டா அவ்வ்வ்வ்வ்:))..

  அஞ்சு பயப்பூடாதீங்க, நான் அவசரத்தில அதைப் பார்க்கவில்லை.

  ReplyDelete
 32. இணையத்தில் hack பண்ண பயன்படுத்தபடும் முறைகளில் ஒன்றுதான் Fake Login PageS... இதை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்... தேவையில்லாமல் ஒரு மெயில் வரும். அந்த மெயிலை கிளிக் செய்தால் ஓபன் ஆகும் பக்கம் உங்கள் வங்கியின் internet-banking Login பக்கம் போன்ற தோற்றத்திலோ, அல்லது வங்கி கணக்கின் விவரங்களை கேட்கும் பக்கமாகவோ இருக்கும். இதில் உங்கள் கணக்கு விவரங்களை அளித்து LOgin பண்ண முயற்சித்தால் அடுத்த நொடியே உங்கள் வங்கி கணக்கு எண், பாஸ்வேர்ட் எல்லாம் குறிப்பிட்ட நபரின் மெயிலுக்கு சென்று விடும். உடனே அவர் உங்கள் கணக்கு எண் பாஸ்வேர்ட் பயன்படுத்தி உங்கள் பணத்தை அப்படியே மொத்தமாக "சுட்டிடுவார்" :)

  உங்களுக்கு இதுபோன்ற மெயில்கள் குறிப்பிட்ட ஒரு ஐடியில் இருந்து வருகிறது எனில், அந்த மெயில்கள் வந்த உடன், அந்த மெயிலை தானாகவே delete செய்யும் வசதி gmail-ல் உள்ளது. hotmail அந்த வசதி இருக்கலாம். இந்த வசதியை பயன்படுத்தினால் அப்படி ஒரு மெயில் வந்ததே நமக்கு தெரியாமல் அழிந்துவிடும். இதை பயன்படுத்தவும்...! :)

  ReplyDelete
 33. வாங்கோ வான்ஸ்ஸ்ஸ்...
  எனக்கு கொஞ்சம் ஆ.கோ அதிகம்:))... அப்பூடி என்னதான் இருக்கப்போகுது பார்ப்பமே என ஓபின் பண்ணிடுவேன்.

  இனிக் கொஞ்சம் ஜாக்ரதையாத்தான் இருக்கோணும்.

  மிக்க நன்றி வான்ஸ்.

  ReplyDelete
 34. வாங்க மகி...

  //அதிகாலை 3 மணிக்கு போஸ்ட்டை பப்ளிஷ் செய்து எல்ல்ல்ல்ல்ல்ல்லாருக்கும் பாலாப்பம் குடுப்பதாகத் தகவல் வந்தது,உண்மையா???????? ஆஆஆஆஆஆ??
  :))))))))))
  ///

  சே..சே..சே.. இது “ஆ” கதையில்லை:), “ஈ” கதையாக்கும்:).

  --------------
  //அதிரா,இந்த ஈஈஈமெய்ல் தொந்தரவு ஜிமெய்லிலே அவ்வளவாக இல்லை,யாஹூல இருக்குது.//

  அது என்னமோ தெரியவில்லை, எனக்கு விரைவில எதுவும் பிடிக்காது, ஆனா நல்லாப் பிடிச்சுக்கொண்டால் அதை விட்டு விலத்துவதும் கடினம்.

  அப்படித்தான் ஹொட்மெயிலும்.... உடன்பிறப்புபோல நன்கு பழகிட்டேன், அதால ஈசியாக இருக்கு, ஜி மெயில் ஐடிகள் இருக்கு, ஆனா மெயில் அனுப்ப மனம் விரும்புவதில்லை.. முயற்சிக்கிறேன் மாற.

  உங்களுக்குத்தரவென்றுதான், கீரிசா:) அப்பத்தைப் பிச்சுக்கொண்டிருந்ததைப் பார்த்தனே:))... ஹையோ ஹையோ.. அ.கோ.முட்டைக்கே நாங்க இப்பூடி சவுண்ட் விடமாட்டம்:))).

  ReplyDelete
 35. i am here only...on a call! இருங்க வந்துட்டேஏஏஏஏஏஏஏன்!!! :))))))))

  ReplyDelete
 36. //பூஸக்கா,உங்களுக்கும் வேணா ஜெல்ப்..கெல்ப்..ச்சீ,ச்சீ ஹெல்ப் பண்ணவா? ;))))))//

  அதாரது பூஸக்கா என அழைப்பது, அதுதான் முன்னெச்சரிக்கையாகப் பலதடவை சொல்லிட்டனே எனக்கு தங்கைகள் இங்கில்லை, நான் தான் தங்கை என:)).. அதுக்குப் பிறகும்... இப்பூடிப் பப்ளிக்கில இமேஜை டமேஜ் பண்ணினால்... தேம்ஸ்ல தள்ளிவிட்டிடுவேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

  எனாது மெயில் பாஸ்வேர்ட்டைத் தரோணுமோ?:)) சாமீஈஈஈஈஈஈஈ ஆட்டைக் கடிச்சூஊஊஊஊஉ மாட்டைக் கடிச்சூஊஊஊஊஊஊஊஊ இப்போ அதிராவைக் கடிக்கப்போகினமாம்.... பூஸ் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))

  ReplyDelete
 37. ஈ... காட்டுற பூஸ் படம் போடலாம் என நினைத்தேன், ஆனா முடியல்ல சாமிக்கு... bottle இல் மோர் குடிப்பதுதன் சூப்பர் எனப் பட்டுது:))).

  மகிட சூப்பராய்த்தான் இருக்கு, ஆனா கிண்டலடிக்கும்பூஸ்போல இருக்கே... இந்தப் பூஸ் கிண்டல் பண்ணாதாம், பகிடி மட்டும்தான்... என்னாது புல்லா அரிக்குதோ? அவ்வ்வ்வ்வ்:)).

  2வது பேபி பூஸ் சூப்பர், எடுத்து வச்சிட்டேன்... வருங்காலத்துக்கு உதவும்..

  மியாவும் நன்றி மகி.

  ReplyDelete
 38. ஆஆஆ... மஞ்சள்பூ இங்கினதானோ? மகி நான் கொஞ்சம் போகோணும், இடையில ஓடிவந்தனான்... முடிஞ்சால் லேட்டா வாறேன்... குறை நினைச்சிடாதீங்கோ... அஞ்சுவைக் காணல்லியே...

  ஹையோ றீச்சரும் இண்டைக்கு 2 குளிசை போட்டிட்டாபோல:))...

  தலைகீழ் ஆசானையும் காணேல்லை யூம் பண்ணுறாரோ என்னவோ அவ்வ்வ் எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:)).

  ReplyDelete
 39. /நான் கொஞ்சம் போகோணும்,/ LOL!!அதெப்படி கொஞ்சம் போவேள்?? 2 கால் இங்கை,2 கால் அங்கையா??;)))))))
  நான் குறையெல்லாம் எதுவும் நினைக்கல..முழுக்க:) போயிட்டு மெதுவா வாங்கோ அதிரா! ;))))

  ஜல்..ஜல்..ஜல்..பாட்டு கேட்க ஆரம்பிச்சு யுட்யூப்ல எங்கினயோ;) போயிட்டேன்..இப்ப விருமாண்டி-ல "உன்ன விட உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்ல.." பாட்டு பாடுது..சீ யா..மீ யா!

  ReplyDelete
 40. 4 கமெண்ட் போட்டேன் எதையும் கானோல்ல .. மீன் சாப்பிடுச்சா..???? :-))))))))))))))

  ReplyDelete
 41. //தாங்க்ஸ் தாங்க்ஸ் பூஸ் லஞ்ச் பிரேக் இல் பால் அப்பமா? யம் யம்! அஞ்சுவுக்கு மகிக்கு பச்சை பூவுக்கு எல்லாருக்கும் கெடையாதூஊ//

  இப்பவெல்லாம் எமெர்ஜென்ஸி லேண்டட் கிடையாது ..ஹி..ஹி... :-))))

  ReplyDelete
 42. மெயில் என்ன இன்னும் சில பிளாக் திறக்கவே பயமா இருக்கு :-))))))))))))))))))

  ReplyDelete
 43. வணக்கம் அக்கா,
  நல்லா இருக்கிறீங்களா?

  பதிவு போட்டு எட்டு மணி நேரம் ஆச்சா...

  இருங்க படிச்சிட்டு வாரேன்

  ReplyDelete
 44. அக்காச்சி
  யோகா ஐயாவின் ப்ளாக் கேட்டிருந்தீங்க.

  அவர் இப்போ தான் ப்ளாக் எழுதவே ஆரம்பிச்சிருக்காரு!
  கத்துக்குட்டி!

  http://athitasam.blogspot.com/
  இங்கே நீங்க கமெண்ட் எல்லாம் போட முடியாதுங்க.

  ReplyDelete
 45. எனக்கு இப்பிடி வந்துரும் என்கிற பயத்திலதான் நான் அப்ப நச்சுமரம் பதிவே போட்டன். இப்ப கொஞ்சம் கூட்டு மெய்ல் வாறது குறைஞ்சு இருக்கு அதீஸ்.

  வந்தாலும் என்ன நினைச்சாலும் நினைக்கட்டும் எண்டு நானும் நிறைய வாசிக்கிறது இல்ல.

  ஆனாலும் இன்னும் சில நெருங்கின ஆட்கள் ஆ.கோ வில என்ட ஐடீயை கூட்டாளிகளுக்கு அனுப்பி வைக்கினம். மெல்லவும் முடியேல்ல விழுங்கவும் முடியேல்ல. ஹும்! சிலது.... தனக்குத் தனக்கெண்டால் மட்டும்தான் படக்குப் படக்கெண்டும் போல. ;)

  ReplyDelete
 46. லேட் அட்டனன்ஸ்..படிச்சுட்டு அப்புறம் அவ்வ்ர்ரெ,

  ReplyDelete
 47. என்ன பண்ணுவது ஆ கோ வில் ஓபன் பண்ணி அவஸ்தை படவேண்டி உள்ளது.

  ReplyDelete
 48. //கீரிஷாக்கா,உங்கட வீட்டில் என்ன சமையல்?? //

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ரொம்ப முக்கியம்:)) ரெண்டு வீட்டுச் சமையல் போதாதென கிரிசா வீட்ட்லிலயும் சாப்பிடுற பிளானோ மகிக்கு அவ்வ்வ்வ்வ்:))..

  சரி சரி நீங்க ஜல் ஜல் பாட்டுக் கேட்டு தூங்குங்க..

  என்னவோ தெரியேல்லை, மனம் சோர்வாக இருக்கு எதுக்கும் பதில் போடவும் மனம் வருகுதில்லை, அதனால்தான் பேசாமல் விட்டேன்.

  அப்பப்ப இப்படி ஆகிடுது...

  ReplyDelete
 49. வாங்க கவிக்கா வாங்க..

  அழகாகச் சொல்லிட்டீங்க..

  //உங்களுக்கு இதுபோன்ற மெயில்கள் குறிப்பிட்ட ஒரு ஐடியில் இருந்து வருகிறது எனில், அந்த மெயில்கள் வந்த உடன், அந்த மெயிலை தானாகவே delete செய்யும் வசதி gmail-ல் உள்ளது. //

  இந்த வசதி ஹொட்மெயிலிலும் இருக்கு..junk mail என , தெரியாத, தேவையில்லாததெல்லாம் அதுக்குள் போய்விடும், அத்தோடு ஆரும் புதியவர் என் கொன்ரக்ட் இல் இல்லாதவர் புதிதாக மெயில் அனுப்பினாலும் இந்த “யங்” இனுள் போய் விடும், கவனிக்காதுவிட்டால் கண்டு பிடிக்க முடியாது.

  மிக்க நன்றி கவிக்கா... உலகம் அழியப்போகுதாமே...நீங்க ரெடியா?:))

  ReplyDelete
 50. ஆஆஆ கிரீன் பூ:)))... வாங்கோ ஜெய்..

  //ஜெய்லானி said...
  4 கமெண்ட் போட்டேன் எதையும் கானோல்ல .. மீன் சாப்பிடுச்சா..???? :-)))))//

  ஆஆஆஆஆ எ.கொ.சாமி? அதெதுக்கு ஜெய்க்கு மட்டும் இப்பூடி ஆகுது?:)), அது கனவில போட்டதாக்கும், கனவிலதான் படிக்கோணும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

  ReplyDelete
 51. //இப்பவெல்லாம் எமெர்ஜென்ஸி லேண்டட் கிடையாது ..ஹி..ஹி... :-))//

  பந்திக்கு முந்தோணுமாம் ஜெய்... பெரியவங்க சொல்லியிருக்கிறாங்க:)).

  மிக்க நன்றி.

  எனக்கு பொப்பப் விண்டோ தான் ஓரளவுக்கு சரியாக இருக்கு, ஏனெனில் அது புறிம்பாக ஓபின் ஆகுது, அதனால முழுக் கதையைப் பார்த்துப் பார்த்து பின்னூட்டம் போடலாம், இது பின்னூட்டம் மட்டும்தான் தெரியும், பின்னூட்டம் போடுவோருக்கு இது இடைஞ்சல்.

  ஸாதிகா அக்காவுடையதும் அப்படித்தான், ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும், மீண்டும் மெயின் பேஜ்ஜுக்குப் போய் படித்து, திரும்ப வந்து பின்னூட்டம் போடுவேன், அல்லது இரு விண்டோஸ் திறந்துதான் பின்னூட்டம் போடுறேன், இப்பூடியெல்லாம் கஸ்டப்படுறேன் தெரியுமோ:))).

  ReplyDelete
 52. வாங்கோ நிரூபன்..

  //இருங்க படிச்சிட்டு வாரேன்//

  நான் தண்ணிகுடிக்காமல் சாப்பிடாமல், கதிரையிலயே இருக்கிறேன் நிரூபன்:)).

  //நிரூபன் said...
  அக்காச்சி
  யோகா ஐயாவின் ப்ளாக் கேட்டிருந்தீங்க.

  அவர் இப்போ தான் ப்ளாக் எழுதவே ஆரம்பிச்சிருக்காரு!
  கத்துக்குட்டி//

  மிக்க நன்றி லிங் தந்தமைக்கு, ஆனா நான் முன்பு அவரின் புளொக் போய் பின்னூட்டம் போட்டது எனக்கு நன்கு நினைவிருக்கே... அதை மூடிட்டாரோ?

  எனக்கு குழப்பமாக இருக்கு.

  மிக்க நன்றி நிரூபன்.

  ReplyDelete
 53. மீண்டும் வணக்கம் அக்கா,
  என்ன அடிக்கடி பின்னூட்டப் பெட்டியை மாத்துறீங்க?
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 54. ஈஈஈஈஈ மெயிலால, எல்லோருக்கும் “ஈ” காட்டிச் சிரிச்சுச் சமாளிக்க வேண்டிய நிலைமையாக்கிடக்கே.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) முடியல்ல மக்கள்ஸ்ஸ்ஸ்:)).//

  ஆகா.....
  தூக்கத்திலும் ஈமெயில் அனுப்பி கொல்லுறாங்களா?

  ReplyDelete
 55. என்னுடைய இன்னொரு ஹொட்மெயிலில்தான் உறவினர், மற்றும் வலைத் தொடர்பிலில்லாத நண்பர்கள், மற்றும் சில அறுசுவை நண்பர்களும் இருக்கிறார்கள்.
  //

  ஆகா...இது வேறையா..
  அக்கா தன்னிடம் ரெண்டு மெயில் இருப்பதாக சொல்றாங்க.

  ஹொட்மெயில் வேண்டும் என்றால் ஹொட்மெயிலையும்
  ஜீ மெயில் வேணும் என்றால் ஜீமெயிலையும் கேட்டு வாங்குங்க என்று சொல்லுறாங்களோ;-))))

  ReplyDelete
 56. ஆனா என்னோடு ஓரிரு முறை கதைத்திருக்கிறா. நான் எல்லா இடத்திலும் ஓடி ஓடிக் கதைக்கும்போது, சைலண்ட்டாக இருந்து படிப்போருக்கு, என்னை நன்கு பழக்கமானவர்போல் ஆகிவிடுகிறது, ஆனா, அவர்களை எனக்குத் தெரிய வாய்ப்பில்லைத்தானே//

  அடட..
  அதிரா அக்கா ரொம்ப பேமசில்லே..
  ரொம்ப ஜாக்கிரதையாக இருங்க.

  இனிமே ரசிகர்களின் தொல்லை கூடிடப் போகிறது.

  ReplyDelete
 57. இமா வாங்கோ...

  ஒருசிலர் கும்பலில் கோவிந்தாவாக all அடிச்சு எல்லோருக்கும் அனுப்பிவிடுகிறார்கள்தான், ஆனா எனக்கு, மேலே நான் குறிப்பிட்ட அந்த ஒரு நண்பியைத் தவிர வேறு ஆருமே அப்படி கும்பலாக அனுப்பியதே இல்லை.

  எனக்கு ஆரிலும் கோபமில்லை இமா, ஏனெனில் இப்பிரச்சனைக்கு கோபிக்க முடியாது, எமக்குத் தெரியாமல் போகும் மின்னஞ்சலை என்ன செய்வது.

  அதுவும் தெரியாதோரெனின் திறக்காமல் விடலாம், இது உதாரணத்துக்கு, இமாவிடம் இருந்து எனக்கு மட்டும் தனிமெயில் வந்திருக்கு, please open and view this எனில், எனக்கு மனம் கேட்காதுதானே... திறப்பேன் தானே? ஆனா அது வந்திருப்பது இமாவுக்கே தெரியாது.

  ஆனா அதைத்திறந்த காரணத்தால், என்னிடம் தொடர்பிலுள்ள அத்தனை பேருக்கும் என்னைக் கேட்காமல் அந்த மெயில் போய்விடுகிறது... இதெல்லாம், புதுவிதக் கண்டு பிடிப்புத்தான்.

  ஏனெனில் அவர்களுக்கு தெரியும் எங்கட மக்கள்ஸ் உஷார் என, அதனால தெரியாத மெயிலில் அனுப்பினால் திறக்க மாட்டார்கள் என, தெரிந்தோரூடாக அனுப்புகிறார்கள்.

  junk mail லும் தெரிந்தோரின் ஐடி என எம்மிடம் விட்டு விடுகிறது மெயிலை, இதுதான் நடக்கிறது இப்போ.

  மிக்க நன்றி இமா.

  ReplyDelete
 58. அதேபோல்தான், ஆனா மெயில் வந்தால் சுடச்சுட/தாமதமாகியும் பதில் போடுவது என் வழக்கம். அது யாராக இருப்பினும், என்னைத்தேடி, வேலைமினக்கெட்டு ஒருவர் மெயில் அனுப்புறாரே, அவருக்குப் பதில் போடாமல் எப்படிக் காக்கா போயிட முடியும், என்பது என் கொள்கை.
  //

  அப்படீன்னா அதிரா அக்காவிற்கு பதில் போட்டா
  ஐஞ்சு வருசம் கழிச்சும் பதில் கிடைக்கும் என்று சொல்ல
  வாறீங்க ;-)))

  ReplyDelete
 59. நான் வாழ்க்கையில் ஆருக்கும் தேவையிலாத எதுவும் ஃபோவேர்ட் பண்ணியதில்லை, பண்ணவும் மாட்டேன். அதனால இப்படி மெயிலேதும் வந்தால், அது ஏதோ வைரஸின் விளையாட்டுத்தான்.//

  என்னது வைரஸின் விளையாட்டோ?

  முடிஞ்சா பனடோல் இல்லே பரசிட்டமோல் கொடுத்துப் பாருங்கோ!
  அதுக்கும் சரிவரலைன்னா டாக்க்டரிடம் காட்டுங்கோ;-)))

  ReplyDelete
 60. உடனே message ஐக் கிளிக் பண்ணினேன், அவ்ளோதான்.. என்னமோ bank டீடைல் சொல்லு, அப்பத்தான் படம் பார்க்கலாம் என இருந்துது. எனக்குப் புரிஞ்சுபோச்சு, இது ஏதோ //

  ஹே...ஹே..

  ஆகா..மெயிலுக்கும் தெரிஞ்சு போச்சா.
  டொக்டர் வீட்டில கையை வைச்சா நிறைய கறக்கலாம் அப்படீன்னு!
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 61. அடடா நிரூபன் இங்கினயோ இருக்கிறீங்க... புளொக் இன்று மெதுவாகத்தானே அசைந்துது:)) அதனால கண்டுபிடிக்க முடியேல்லை என்னால:)).

  ReplyDelete
 62. இதுக்கு ஏதும் மாற்று ஐடியா உண்டோ? இல்லாவிட்டால் “இதுவும் கடந்து போகும்” என இருக்கட்டோ?:)). ஆராவது பதில் சொன்னால் சந்தோசம்.
  //

  அக்கா. இதுக்கு மாற்று ஐடியா இருக்கு!

  இப்படியான முகவரிகளில் இருந்து மெயில் வரும் போது பில்டர் பண்ணிடுங்க.

  மறுபடியும் அதே மெயில் உங்க மெயிலுக்கு வராதுங்க.

  இருங்க பில்டர் பண்ணுவது எப்படீன்னு கூகிளில் தேடி லிங் கொடுக்கிறேன்.

  ReplyDelete
 63. வாங்கோ ஸாதிகா அக்கா..

  நீங்களும் லேட்டோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

  மிக்க நன்றி ஸாதிகா அக்கா.

  ReplyDelete
 64. http://www.filecluster.com/reviews/122008/how-to-block-incoming-emails-from-your-gmail-account/

  இந்த இணைப்பில் போனா ஜீமெயிலுக்கு வரும் வேண்டாத மெயில்களை filter பண்ணுவது எப்படீன்னு சொல்லியிருக்காங்க.

  ReplyDelete
 65. இப்ப என்ன சோதனை மேல் சோதனை போதுமடா சாமி!

  அந்தப் பாட்டைத் தான் இந்த மெயில் தொல்லையால் பாடுறீங்க போல இருக்கே..

  ReplyDelete
 66. எவர் ஒருவர் தன்னைத் தாழ்த்திக்கொள்கிறாரோ - அவர்
  மற்றவர்களால் உயர்த்தப்படுவார்...
  //

  சுவாமி பூஸானந்தா வாழ்க! வாழ்க!

  எல்லோரும் கோரஸ்ஸில சொல்லுங்கோ!

  ReplyDelete
 67. athira said...
  வாங்கோ நிரூபன்..

  //இருங்க படிச்சிட்டு வாரேன்//

  நான் தண்ணிகுடிக்காமல் சாப்பிடாமல், கதிரையிலயே இருக்கிறேன் நிரூபன்:)).

  //நிரூபன் said...
  அக்காச்சி
  யோகா ஐயாவின் ப்ளாக் கேட்டிருந்தீங்க.

  அவர் இப்போ தான் ப்ளாக் எழுதவே ஆரம்பிச்சிருக்காரு!
  கத்துக்குட்டி//

  மிக்க நன்றி லிங் தந்தமைக்கு, ஆனா நான் முன்பு அவரின் புளொக் போய் பின்னூட்டம் போட்டது எனக்கு நன்கு நினைவிருக்கே... அதை மூடிட்டாரோ?

  எனக்கு குழப்பமாக இருக்கு.

  மிக்க நன்றி நிரூபன்.//

  ஹே...ஹே..
  நீங்க காட்டான் அண்ணர் ப்ளாக்கில தான் பின்னூட்டம் போட்டிருப்பீங்க.
  யோகா ஐயா இப்போது தான் ப்ளாக் தொடங்கியிருக்காரு.


  என்னது என் வருகைக்காக சாப்பிடமல், தண்ணி குடிக்காம இருக்கிறீங்களோ!

  சும்மா சொல்லாதீங்கோ! ஒரு நீத்துப் பெட்டி புட்டாச்சும் சாப்பிட்டிருப்பீங்க தானே..
  அவ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 68. எனக்கு உங்களுடையது மாதிரி comment box தான் வேணும் நிரூபன், நான் முன்பு வைத்திருந்தது, ஆனா அதுக்கு புளொக் ஸ்டைலை மாத்தினால் மட்டும்தான் சாத்தியம், நேரம் கிடைக்கும்போது முயற்சிக்கப்போகிறேன்.

  //ஹொட்மெயில் வேண்டும் என்றால் ஹொட்மெயிலையும்
  ஜீ மெயில் வேணும் என்றால் ஜீமெயிலையும் கேட்டு வாங்குங்க என்று சொல்லுறாங்களோ;-))))//

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் எப்போ சொன்னேன்... கேட்டாலும் தரமாட்டேன், 2012 டிஷம்பருக்குப் பின் ஒரு வேளை தந்தாலும் தருவேன்:))))

  ReplyDelete
 69. athira said...
  அடடா நிரூபன் இங்கினயோ இருக்கிறீங்க... புளொக் இன்று மெதுவாகத்தானே அசைந்துது:)) அதனால கண்டுபிடிக்க முடியேல்லை என்னால:)).//

  போங்க...என்னைக் கண்டு இப்ப காற்றுக் கூட வீசப் பயப்படுதுங்க.

  நான் ரொம்பவே ஸ்லிம் ஆகிட்டேனுங்க அக்கா.

  ReplyDelete
 70. நிரூபன் said..
  //அடட..
  அதிரா அக்கா ரொம்ப பேமசில்லே..
  ரொம்ப ஜாக்கிரதையாக இருங்க.

  இனிமே ரசிகர்களின் தொல்லை கூடிடப் போகிறது.//

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இந்த நக்கலுக்கொன்றும் குறைச்சலில்லை:)) பனையால விழுந்தவனை மாறேறி மிதிச்ச கதையாயெல்லோ இருக்கு.

  இங்கத்தைய கதையை நான் சொல்லவில்லை, இங்கு நான் குறிப்பிட்ட சில புளொக்குகளுக்கு மட்டும்தான் போகிறேன், அதுவும் என்னிடம் ஒழுங்காக வருவோரிடம் மட்டும், மற்றும்படி போய்ப் படிப்பதுகூட இல்லை, நேரமும் போதாதே.

  நான் சொன்னது முன்பு “அங்கின” இருந்த காலத்தில, அத்தளத்தின் எல்லாத் தலைப்புக்களுக்கும் போய்க் கதைப்பேன்.... அதைத்தான் சொன்னேன்.. அது அங்கிருந்தோருக்கு மட்டுமே தெரியும்..
  உஸ்ஸ் அப்பா.... எ.கொ.சாமீஈஈஈஈ:)))

  ReplyDelete
 71. இப்போ உள்ள கொமெண்ட் பொக்ஸ் தான் ஈஸி..
  இலகுவாக பின்னூட்டம் அடிக்கலாம்.

  முன்பு வைத்திருந்த கமெண்ட் பெட்டியில் பின்னூட்டம் போட டைம் எடுக்கும்.

  ஒவ்வோர் தடவையும் முழுப் பேஜ் உம் லோட் ஆகி வர ரைம் எடுக்கும்.

  ReplyDelete
 72. நிரூபன் said..//

  அப்படீன்னா அதிரா அக்காவிற்கு பதில் போட்டா
  ஐஞ்சு வருசம் கழிச்சும் பதில் கிடைக்கும் என்று சொல்ல
  வாறீங்க ;-)))//

  ஹா..ஹா..ஹா.. இது கரீட்டு... தம்பி நிரூபன் எங்கட புஸ்பா அங்கிள் கடைக் கற்பூரம்மாதிரி:))
  ----------------------------

  //ஆகா..மெயிலுக்கும் தெரிஞ்சு போச்சா.
  டொக்டர் வீட்டில கையை வைச்சா நிறைய கறக்கலாம் அப்படீன்னு!
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
  ------------------------

  //இப்படியான முகவரிகளில் இருந்து மெயில் வரும் போது பில்டர் பண்ணிடுங்க.//

  இல்ல நிரூபன், அண்ணனிடமிருந்துதானே வந்தது, தெரியாதோரிடமிருந்தெனில் நான் திறக்காமல் விட்டிடுவனே... இது தெரிந்தோரிடமிருந்தெல்லோ வருது, இமாவுக்கு நான் போட்ட பதிலைப் படியுங்கோ.

  ReplyDelete
 73. நிரூபன் said...

  //இந்த இணைப்பில் போனா ஜீமெயிலுக்கு வரும் வேண்டாத மெயில்களை filter பண்ணுவது எப்படீன்னு சொல்லியிருக்காங்க//

  மியாவும் நன்றி.

  //இப்ப என்ன சோதனை மேல் சோதனை போதுமடா சாமி!

  அந்தப் பாட்டைத் தான் இந்த மெயில் தொல்லையால் பாடுறீங்க போல இருக்கே..//

  இல்ல, ஆண்டவன் படைச்சான் எங்கிட்டக் கொடுத்தான் அனுபவி பூஸுன்னு அனுப்பிவச்சான் வைரஸை:)))
  ---------------------------

  சுவாமி பூஸானந்தா வாழ்க! வாழ்க!

  எல்லோரும் கோரஸ்ஸில சொல்லுங்கோ!//
  தங்கூஊஊஊ தங்கூஊஊஊஊஉ கடவுளே இந்தப் பாராட்டை இமாவும் அஞ்சுவும் பார்த்திடப்பூடா:)).

  ReplyDelete
 74. //சும்மா சொல்லாதீங்கோ! ஒரு நீத்துப் பெட்டி புட்டாச்சும் சாப்பிட்டிருப்பீங்க தானே..
  அவ்வ்வ்வ்வ்வ்வ்//

  சே..சே.. ஒரு பக்கட் கே எவ் சி மட்டும்தேன் சாப்பிட்டேன்:))) ரொம்ப வயக்கெட்டிட்டேன்:))).
  ---------------------------

  //போங்க...என்னைக் கண்டு இப்ப காற்றுக் கூட வீசப் பயப்படுதுங்க.

  நான் ரொம்பவே ஸ்லிம் ஆகிட்டேனுங்க அக்கா.
  10:30 AM //

  அப்பூடியோ சங்கதி... அப்ப உடனேயே ஒரு படம் எடுத்து அனுப்பிடுங்க, மறுபடியும் குண்டாகமுன் சட்டுப் புட்டென பொம்பிளையைப் பார்த்து முடிச்சிடலாம்:))), அந்த ஃபெயார் அண்ட் லவ்லியையும் ஒழுங்காப் பூசுங்கோ என்ன?:)))).

  ReplyDelete
 75. //நிரூபன் said...
  இப்போ உள்ள கொமெண்ட் பொக்ஸ் தான் ஈஸி..
  இலகுவாக பின்னூட்டம் அடிக்கலாம்.//

  ஓ அப்படியா எனக்கும் இதுதான் பிடிச்சிருக்கு... புது ஸ்டைலுக்கு போகும்வரை இப்படியே இருக்கட்டும்.

  மிக்க நன்றி நிரூபன்... இருந்தாலும் அணிலை மரமேற விட்டிட்டீங்களே எனக்கு அழுகை அழுகையா வருது:)) நான் அந்த மச்சாள்மாருக்குச் சொன்னேன் .... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).

  ReplyDelete
 76. என்ன நடந்ததோ தெரியேல்லை திடீரென ஒரு நினைவு வந்து, 2,3 நாளா வீட்டில ஒரே ஆக்கினை ஃபிஸ் கட்லட் செய்யும்படி.

  அதுதான் கிழங்கார் அவிகிறார்... இனிப்போய் வேலையைத் தொடங்கப்போறேன்.. சீயா மீயா.

  ReplyDelete
 77. // திடீரென ஒரு நினைவு வந்து, 2,3 நாளா வீட்டில ஒரே ஆக்கினை ஃபிஸ் கட்லட் செய்யும்படி.//
  no no no
  escape...........

  ReplyDelete
 78. //கீரிஷாக்கா,உங்கட வீட்டில் என்ன சமையல்?? சொன்னீங்கன்னா, பூஸ் வீட்டிலயே ஒரு நாள் தங்கி உங்க வீட்டில fasting-ஐ ப்ரேக் பண்ணிட்டு(ஹிஹி,ப்ரேக்ஃபாஸ்ட்) வந்துருவேன்.
  :))))))))))//

  நாங்க ஒரு தினுசான குடும்பம் (பூஸ் எங்களுக்கு தெரியுமே ன்னு நோ கிராஸ் சவுண்ட் ) காலையில சீரியல், ஓட்ஸ் இல்லே டோஸ்ட் . வீக் எண்டு மத்தியானம் டிபன் நைட்டுக்கு சாப்பாடு. ஸோ நீங்க உங்க fasting தாராளமா ப்ரேக் பண்ணிட்டு வாங்கோ. ஒரு பவுல் நெறைய ஓட்ஸ் கஞ்சி தரேன் :))

  ReplyDelete
 79. //என் அதிகாலை 3 மணிக்கு போஸ்ட்டை பப்ளிஷ் செய்து எல்ல்ல்ல்ல்ல்ல்லாருக்கும் பாலாப்பம் குடுப்பதாகத் தகவல் வந்தது,உண்மையா??//


  க்கும் இந்த மாதிரி என் லஞ்ச் ப்ரேக் ல போட்டாதான் நான் எப்பவாச்சும் ஒரு பாலப்பமோ இல்லே ஒரு வடையோ சாப்பிட முடியும். இதுக்கே மஞ்சள் பூவின் சத்தம் இங்கே வரைக்கும் கேக்குதே ?? நான் எத்தன பேரோட தான் என் பாலப்பத்த ஷேர் பண்ணுவேன் ??

  ReplyDelete
 80. //// திடீரென ஒரு நினைவு வந்து, 2,3 நாளா வீட்டில ஒரே ஆக்கினை ஃபிஸ் கட்லட் செய்யும்படி.//
  no no no
  escape...........//


  ஏஞ்செல் எழுந்திருங்கோ பூஸ் உங்களுக்கு கட்லெட் தரலயாம் இதுக்கே ஏன் எஸ்கேப் ஆவுறீங்க? எங்கே போய் ஒளிஞ்சி இருக்காங்களோ? பூஸ் ஒய் திஸ் கொல வெறி ?? ஹீ ஹீ :))

  ReplyDelete
 81. //
  அதாரது பூஸக்கா என அழைப்பது, அதுதான் முன்னெச்சரிக்கையாகப் பலதடவை சொல்லிட்டனே எனக்கு தங்கைகள் இங்கில்லை, நான் தான் தங்கை //

  நல்லா மஞ்சள் பூவுக்கு எடுத்து ஜொள்ளுங்கோ. நானும் எனக்கு வாழ்த்த வயதில்லை ன்னு சொல்லி பார்த்தேன் அடம்ம்ம்மா என்னையும் அக்கா நோக்கான்னிட்டு இருக்காங்க :))

  ReplyDelete
 82. // உங்களுக்கும் வேணா ஜெல்ப்// பூசக்காவுக்கு ஜெல்ப் ஜல்ப்பு எல்லாம் வேணாமாம் ஆனா ஆஸ்யூஷுவல் எனக்கு உங்க ஜெல்ப் தேவை படும்ம்ம்ம் டும் டும்

  ReplyDelete
 83. //என்னவோ தெரியேல்லை, மனம் சோர்வாக இருக்கு எதுக்கும் பதில் போடவும் மனம் வருகுதில்லை, அதனால்தான் பேசாமல் விட்டேன்.//


  ஐயோ ஏன் பூஸ்? வாட் இஸ் ராங். நான் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் இளையராஜா அவங்க பாடின

  " மரத்த வெச்சவன் தண்ணி ஊத்துவான் மனச பார்த்துதான் வாழ்வ மாத்துவான் ஏ மனமே கலங்காதே வீணாக வருந்தாதே பாரங்கள் எல்லாமே படைத்தவன் எவனோ அவனே சுமப்பான் ஓம் ஷாந்தி ஓம் "


  நம்ம கையில எதுவும் இல்லே. யாருக்கும் மனசால கூட நம்ம தீங்கு நெனைக்கலேன்னா நமக்கு எந்த தீங்கும் நேராது. இத மட்டும் தான் நான் நம்புறது. சகுனம், ஜோசியம் எதுலயும் நம்பிக்கை இல்லை.


  Cheer Up Athira

  ReplyDelete
 84. குட்டி இணைப்பு படன் அழகு

  ReplyDelete
 85. பூஸ் .பூஸ் cheer up .என்ன ஆச்சு ???????
  ஒரு கப் பால் குடிச்சிட்டு ஓடி வாங்க பாக்கலாம்

  ReplyDelete
 86. விலங்குக் காட்சிச் சாலையில் புலியொன்று ஒரு மனிதனைக் கொன்றுவிட்டது.
  புலியிடம் சென்று குரங்கு...

  ஏன் அந்த அப்பாவி மனிதனைக் கொன்றாய் ? என்று கேட்டது.

  அதற்குப் புலி சொன்னது...

  3 மணி நேரம் என்னைப் பார்த்துவிட்டு அந்த மனிதன் சொன்னான்.....

  “எவ்வளவு பெரிய பூனை“ என்று …

  அதனால் தான் எனக்குக் கோபம் வந்துவிட்டது

  ReplyDelete
 87. ஏங்க.. ஒருநாள் ஓட்டு போட்டுட்டு அஞ்சு வருஷம் கஷ்டப் படறாங்களே.. இந்த வாக்காளர் எல்லாம் பாவம்தானே..?
  அடப் போம்மா.. அஞ்சு நிமிஷத்துல தாலியக் கட்டிட்டு ஆயுசு பூரா அவதிப் படற ஆளுக தாம்மா ரொம்ப பாவம்..!

  ReplyDelete
 88. எல்.கே.ஜி : மச்சான், யார்டா அந்த திருவள்ளுவர் ?

  யூ.கே.ஜி : அவரா, அவரு ஒரு மிமிக்ரி மேன் டா மாமு

  எல்.கே.ஜி : நிஜாமாவா ?

  யூ.கே.ஜி : ஆமா மாமு , அவருக்கு 1330 குரல் தெரியுமாம்

  ReplyDelete
 89. அப்பா: ஏன்டா அழுதுட்டு இருக்கே?மகன்: அம்மா அடிசிட்டாங்கப்பா...

  அப்பா: அதுக்கு போய்யா அழுவற...
  மகன்: போய்யா, உன்னை மாதிரிலாம் என்னால வலி தாங்க முடியாது..
  அப்பா: ????????????

  ReplyDelete
 90. வாத்தியார்: ABCD எத்தனை எழுத்து..சொல்லு..
  மாணவன்: 4
  வாத்தியார்: Total?
  மாணவன்: 5
  வாத்தியார்: Stupid
  மாணவன்: 6
  வாத்தியார்: What
  மாணவன்: 4
  வாத்தியார்: Nonsense
  மாணவன்: 8
  வாத்தியார்: ஒத்துக்குறேன்..நீ புத்திசாலி தான்.. ஒத்துகிறேன்.. உக்காரு..
  மாணவன்: அது..!!! :)

  ReplyDelete
 91. நியுட்டன் தன்னோட மூன்று விதிகளை எப்படி கண்டுபிடிச்சி இருப்பார்?

  ஒரு மாடு நடந்து போயிட்டு இருந்துச்சி, நியுட்டன் அதை நிறுத்தினார். மாடும் நின்றது..
  உடனே தன்னோட முதல் விதியை கண்டுபிடித்தார்..
  "An object continue to moves, unless it's stopped"

  நியுட்டன் மாட்டுக்கு தன் கையால் முழுபலத்தையும் சேர்த்து ஒரு கிக் கொடுத்தார். மாடு "ma" என்று கத்தியது...உடனே நியுட்டன் தன் இரண்டாவது விதியை கண்டுபிடித்தார்..

  "F = M A"

  சில நிமிடம் கழித்து மாடு நியுட்டனை ஒரு உதை உதைத்தது. உடனே நியுட்டன் தன் மூன்றாவது விதியை கண்டு பிடித்தார்..

  "Every action has equal and opposite reaction"

  ReplyDelete
 92. தயாரிப்பாளர்: "நம்ம எடுக்கப்போற ஹாலிவுட் படத்தோட பேரை கேட்டாலே ஸ்கூல், காலேஜ் மாணவர்கள், தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் சும்மா அதிரணும். அப்படி ஒரு டைட்டில் சொல்லுங்க சார்"

  இயக்குனர்: "Sunday - Working Day."

  ReplyDelete
 93. ஆசிரியர்:கையெழுத்து கிறுக்கினமாதிரி இருந்ததே! அது உன்னோடது தானே!
  மாணவன்:ஆமாங்க சார்...நான் டாக்டர் ஆகணும்ன்னு எழுதினேன்

  ஆசிரியர்:டாகடர் ஆகணும்ன்னு நினைச்சா... ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தான் தூங்கணும்
  மாணவன்:பள்ளிக்கூடத்திலா, வீட்டிலேயா சார்

  ஆசிரியர்:எல்லாரும் டாக்டரு ஆக.. நல்லா பாடம் படிக்க என்ன செய்யணும்?
  மாணவன்:நீங்க ஒழுங்கா பாடம் நடத்தணும் சார்...

  ஆசிரியர்:நீ ஏண்டா,கழுத்தை அறுக்கிற? உனக்கு இருக்கிற அழகான முகத்திற்கு தேவதைகள் பொறாமைப்படும்.ஆனால்,உன் அறிவுக்கு கழுதை கூட வெட்கப்படும்
  மாணவன்:ஆமாங்க சார்... அழகு ஆண்டவன் கொடுத்த பரிசு! அறிவு நீங்க கொடுத்த பரிசு.

  ReplyDelete
 94. ‌நீ‌‌திப‌தி : ‌நீ‌ங்க‌ள் யாரை‌த் திருமணம் செய்து கொண்டிருக்‌கி‌றீ‌ர்க‌ள்?
  ஆ‌ண் : ஒரு பெண்ணை.

  ‌நீ‌திப‌தி : பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து
  கொள்வார்கள்?
  ஆ‌ண்: ஏ‌ன் செ‌ய்து கொ‌ள்ள மா‌ட்டா‌ர்க‌ள். என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!.

  ReplyDelete
 95. ஜோசியர் அ‌ப்பவே சொ‌ன்னாரு.. யோகம் அடிக்கப் போகுதுன்னு.. நா‌ன் தா‌ன் ச‌ரியா பு‌ரி‌ஞ்‌சி‌க்கல..
  ஏ‌ன் லாட்டரி ஏதாவது விழுந்ததா?
  நீ வேற ! நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியான சண்டை. ச‌ண்டைல செம அடி அடி‌ச்‌சி‌ட்டா எ‌ன்ன..

  ReplyDelete
 96. காதலி: நாளைக்கு என் பிறந்த நாள்!
  காதலன்: உனக்கு என்ன வேண்டும்?
  காதலி: எனக்கு ஒரு ரிங் தருவியா?
  காதலன்: ஒ! லேண்ட் லைன்ல இருந்தா..? மொபைல்ல இருந்தா..? :)

  ReplyDelete
 97. ,"டியர் இன்று என்னுடைய பிறந்த நாள் !நான் இதுவரை பார்க்காத இடத்துக்கு என்னை அழைத்துச்செல்லுங்கள் "

  கணவர்:வா டியர் நாம கிச்சனுக்கு போகலாம்.

  ReplyDelete
 98. காந்தி 13 வயசுல கல்யாணம் பண்ணுனாரு
  நேரு 14 வயசுல கல்யாணம் பண்ணுனாரு
  பாரதி 7 வயசுல கல்யாணம் பண்ணுனாரு
  இப்பத்தான் தெரியுது நம்ம ஏன் வரலாற்றுல இடம் பெறலன்னு. :(

  ReplyDelete
 99. avvvvvvvvvvvvvvvv பச்சைப்பூவுக்கு 100 ஆஆஆஆஆஆ.. அஞ்சு ஓடுங்க தேம்ஸ்க்கு, ஆனாக் குதிச்சிடாதீங்க... “இதுவும் கடந்து போகும்” என நினைச்சுத் திரும்பி வாங்க... அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))

  ReplyDelete
 100. //angelin said...
  // திடீரென ஒரு நினைவு வந்து, 2,3 நாளா வீட்டில ஒரே ஆக்கினை ஃபிஸ் கட்லட் செய்யும்படி.//
  no no no
  escape..........//

  நோ..நோ... ஓடாதீங்க அஞ்சு “தங்கமீனை”(goldfish) எல்லாம் பிடிக்க மாட்டோம் அழகுபார்க்க மட்டும்தான்:))

  ReplyDelete
 101. எங்கட கிரிஜா, லஞ் அவரில சும்மா விளாசிட்டுப் போயிருக்கிறா:) நாந்தான் தாமதமாகிட்டேன்..

  //நல்லா மஞ்சள் பூவுக்கு எடுத்து ஜொள்ளுங்கோ. நானும் எனக்கு வாழ்த்த வயதில்லை ன்னு சொல்லி பார்த்தேன் அடம்ம்ம்மா என்னையும் அக்கா நோக்கான்னிட்டு இருக்காங்க :))///

  ஹா..ஹா..ஹா... எப்பூடியாவது தங்கை ஆகிடலாம் என முயற்சி நடக்குது விடமாட்டமில்ல.... காசுபோனாலும் பறவாயில்லை, பியூட்டி பாலர் போய் “யங்” ஆகிடுவமில்ல:))) அவ்வ்வ்வ் எங்கிட்டயேவா.

  Okay நானும் இளையராஜ அங்கிளின் பாட்டைப் பாடுறேன் கீரி.. மியாவும் நன்றி.

  ReplyDelete
 102. பச்சைரோஜாவுக்கு என்ன ஆச்சு இண்டைக்கு.... படிச்சுச் சிரிச்சதில் வாயில இருந்த கட்லட் கீழ விழுந்திட்டுதூஊஊஊஉ.. கஸ்டப்பட்டுச் செய்ததில ஒன்று வேஸ்டாப்போச்ச்ச்ச்:)).

  //3 மணி நேரம் என்னைப் பார்த்துவிட்டு அந்த மனிதன் சொன்னான்.....

  “எவ்வளவு பெரிய பூனை“ என்று …

  அதனால் தான் எனக்குக் கோபம் வந்துவிட்டது///

  ஹா..ஹா..ஹா... சூப்பர்.
  -------------------------

  //அஞ்சு நிமிஷத்துல தாலியக் கட்டிட்டு ஆயுசு பூரா அவதிப் படற ஆளுக தாம்மா ரொம்ப பாவம்..!//

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))))))).

  //------------------

  //அப்படி ஒரு டைட்டில் சொல்லுங்க சார்"

  இயக்குனர்: "Sunday - Working Day."//

  ஹா..ஹா...ஹா....

  அனைத்தும் அருமை..

  ReplyDelete
 103. //காதலன்: ஒ! லேண்ட் லைன்ல இருந்தா..? மொபைல்ல இருந்தா..? :)//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))

  ReplyDelete
 104. வாங்கோ சினேகிதி வாங்கோ.. மிக்க நன்றி.

  ReplyDelete
 105. ஒரு சிறு பெண் அதிரா மாதிரின்னு வச்சுக்கங்களேன்
  அம்மாவுடன் ஒரு திருமணத்துக்கு போனாள்

  குட்டி பொண்ணு அம்மாகிட்டே கேட்டாளாம்
  //அம்மா ஏன் மணப்பெண் வெள்ளைநிற ஆடை அணிந்திருக்காங்க ???
  அம்மா சொன்னாங்க ..இன்னிக்கு அவளுக்கு வாழ்க்கையிலேயே ரொம்ப சந்தோஷமான நாள்
  அடுத்த கேள்வி கேட்டாள் //ஏன் மாப்பிள்ளை கருப்பு கோட் சூட் போட்டிருக்கார் ???

  அதற்க்கு அம்மா
  அம்மா ...................ஞே ஞே

  ReplyDelete
 106. //அதற்க்கு அம்மா
  அம்மா ...................ஞே ஞே //

  அவ்வ்வ்வ்வ்வ்வ் :-)))

  ReplyDelete
 107. மியாவ் மியாவ்
  மீ ஆவ்
  kidhar ho tum ????????

  ReplyDelete
 108. //மியாவ் மியாவ்
  மீ ஆவ்
  kidhar ho tum ????????// பூஸ் உங்கள காணோம் ன்னு அஞ்சு எல்லா பாஷையிலும் கூப்பிடுறாங்க பாருங்கோ?


  அஞ்சு வேற என்ன language தெரியும் ? பூஸ் நெறைய மொழி தெரியுமுன்னு சொல்லி இருக்காங்களே ஒரு வேளை எல்லா மொழியிலயும் கூப்பிட்டு பாருங்க

  ReplyDelete
 109. miyaav poos hope every thing is fine over there.take care .

  ReplyDelete
 110. மியாவ்..மியாவ்... என்னமோ தெரியேல்லை, சோர்ர்ர்ர்ர்ர்ந்து போயிட்டேன்... இதுக்காகத்தான் நான் விடுவதில்லை,விடாமல் தொடர்ந்து வலைப்பக்கம் வருவதுண்டு, எதையும் விட்டனோ அப்படியே விட்டிடுவேன்....

  நேற்று முழுவதும் நெற் பார்க்கவில்லை, அப்படி ஒரு வெறுப்பு.

  அதிலயும் மகியின் சேப்பங் கிழங்கு குறிப்புப் பார்த்து, என் கிழங்கையும் படமெடுத்து, அந்த வறுவலையும் படமெடுத்த கையோடு, என் மொபைலைத் தண்ணிக்குள் போட்டுவிட்டேன்... அது வேர்க் பண்ணுதில்லை, புதுசா வாங்கி 3 மாதம்தான், ஏற்கனவே வாங்கியவுடன் ஒரு பிரச்சனை என்று, இன்னொரு புதுசு தந்தார்கள், இது திரும்பவும் எனில் தருவார்களோ... மகியின் படமும் அதோடு போயிட்டுது, மீண்டும் கொன்ரக்ட் நம்பர் எல்லாம் ..ஙேஙேஙேஙே தான்:(.

  அனுப்புங்கோ திருத்தப் பார்க்கிறோம் என்றார்கள் திருத்தினால் சரி, இல்லாவிட்டால்.. ????.

  இந்த வருஷம் பிறந்ததிலிருந்தே சரியில்லாமல் இருக்கே அவ்வ்வ்வ்வ்..

  ReplyDelete
 111. //என் மொபைலைத் தண்ணிக்குள் போட்டுவிட்டேன்... அது வேர்க் பண்ணுதில்லை, புதுசா வாங்கி 3 மாதம்தான், ஏற்கனவே வாங்கியவுடன் ஒரு பிரச்சனை என்று, இன்னொரு புதுசு தந்தார்கள், இது திரும்பவும் எனில் தருவார்களோ... மகியின் படமும் அதோடு போயிட்டுது, மீண்டும் கொன்ரக்ட் நம்பர் எல்லாம் ..ஙேஙேஙேஙே தான்:(.//

  என்னோட மொபைல் கிளீனிங் பதிவை சரியா நீங்க படிக்கலப்போலிருக்கு ...!!

  ReplyDelete
 112. மொபைல் ஃபைல்களை ஒரு பேக்கப் எடுத்து வைத்திதால் திரும்ப ரீஸ்டோர் செய்ய வசதியா இருக்கும் :-)

  ReplyDelete
 113. //இந்த வருஷம் பிறந்ததிலிருந்தே சரியில்லாமல் இருக்கே அவ்வ்வ்வ்வ்..//

  நிறைய புது ஐட்டம் வாங்குவீங்கன்னுதானே போட்டிருக்கு ஹி..ஹி... :-)))

  ReplyDelete
 114. //இன்னொரு புதுசு தந்தார்கள், இது திரும்பவும் எனில் தருவார்களோ...//

  தண்ணீரில விழுந்தா நோ.... கியாரண்டி , வாரண்டி ..ஒன்லி இஞ்சி டீ மட்டும்தான் :-)))

  ReplyDelete
 115. go to works store .you will find loads of craft accessories and quilling papers .

  ReplyDelete
 116. //ஜெய்லானி said...
  //இன்னொரு புதுசு தந்தார்கள், இது திரும்பவும் எனில் தருவார்களோ...//

  தண்ணீரில விழுந்தா நோ.... கியாரண்டி , வாரண்டி ..ஒன்லி இஞ்சி டீ மட்டும்தான் :-))//

  அவ்வ்வ்வ்வ்வ்... அழுகிற பிள்ளையை இப்பூடியா மிரட்டுறது. 2 வருட கொன்ரக்ட் ஃபோன்... இல்லாவிடில், போனாப்போகுதென சீப்பா ஒன்று வாங்கிப் பாவிக்கலாம், இது உரலுக்குள் தலையைக் கொடுத்தாச்சு...:).

  அது கிளீன் பண்ண கஸ்டம் ஜெய், ஏனெனில் டச் ஸ்கிறீன், ஐ ஃபோன் மாதிரி. இப்போ ஓன் ஆகுது ஆனா டச் பண்ணினால் ஓபின் பண்ணுதில்லை.

  என்னிடம் ஐ ஃபோன் இருக்கு, ஆனா அதை ரேடியோக் கேட்க மட்டுமே பாவிக்கிறனான், அது வேற நெட்வேர். லொக் உடைத்தால் இந்த சிம்மைப் போடலாம், இதில் இன்ரநெட்டும் ஃபிரீ.

  இப்போதைக்கு, ஒரு முந்தின ஃபோன் Sony Ericsson P1i இருந்துது, சேம் நெட்வேர்க், அதைப் பாவிக்கிறேன், அது ஏனோ எனக்குப் பிடிப்பதில்லை... சரி அற நனைஞ்சவனுக்கு கூதலென்ன குளிரென்ன...:)).

  ReplyDelete
 117. //angelin said...
  go to works store .you will find loads of craft accessories and quilling papers .//

  What is the works store? is it a shop anju? i didnt see a shop like that here.

  vidamaddamilla... poosh onru purappaduthee:)))...

  ReplyDelete
 118. வாழ்க்கை வெறுத்துப்போச்சு சாமீஈஈஈஈஈஈஈ.. இது என் அடுத்த தலைப்பு:))

  ReplyDelete
 119. அக்கா எனக்கும் உங்களிடமிருந்து இதுபோல ஒரு மின்னஞ்சல் வந்தது ஆனால் இது போல பலரிடமிருந்து மின்னஞ்சல் வருவதால் திறக்கவே இலல் அப்படியே டெலிட் பண்ணிவிட்டேன் அக்கா... விழிப்புணர்வு பகிர்வுக்கு மகிழ்வு அக்கா

  என்றும் அன்புடன்
  தம்பி

  தமிழ்த்தோட்டம்
  www.tamilthottam.in

  ReplyDelete
 120. http://www.theworks.co.uk/Arts--Craft/Craft--DIY/

  இந்த shop எல்லா பெரிய கார்டன் சென்டரிலும் இருக்கு அதீஸ்
  எங்க ஏரியால இருக்கும் கடையில் hand made papers க்வில்லிங் பேப்பர்ஸ் எல்லாம் இருக்கு இதுதான் ஷாப் லிங்க்

  ReplyDelete
 121. அப்புறம் RANGE SUPER STORE இங்கும் நிறைய CRAFT ACCESSORIES இருக்கு

  ReplyDelete
 122. http://www.therange.co.uk/arts_and_crafts_craft_materials/dept/fcp-category/list?page=5&productsPerPage=16

  ReplyDelete
 123. வாங்கோ யூஜின்... நினைத்தேன் உங்களுக்கும் வந்திருக்குமென.

  மிக்க நன்றி யூஜின்.

  ReplyDelete
 124. அஞ்சு... நான் முன்னே வைத்த காலை பின்னே எடுக்க மாட்டேன், எப்படியாவது கடை கண்டுபிடித்து கார்ட் செய்து போடுவேன்... மார்ச் முடிய முன்பு:). மிக்க நன்றி.

  ஜெய்க்குச் சொல்ல மறந்திட்டேன், அக்கறையான உடன் பதிலுக்கு மொபைல் பற்றிய.. மிக்க நன்றி ஜெய்.

  ReplyDelete
 125. மொபைல் தண்ணில விழுந்தது பார்த்தேன் அதிரா..ஆழ்ந்த அனுதாபங்கள்! [கர்ச்சிக்கவேணாம், என்ன சொல்ரதுன்னு தெரில,அவ்வ்வ்வ்வ்.....]

  சேப்பங்கிழங்கை கண்டுபுடிச்சிட்டீங்களா அப்போ? :)

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.