நல்வரவு_()_


Sunday 24 November 2019

முதலாளி-தொழிலாளி

இந்த முதலாளிகள் பற்றி, சகோ டிடி ஒரு போஸ்ட் போட்டார் அப்பவே நானும் என்னிடம் இருப்பதைப் போடோணும் என நினைச்சேன், பின்னர் கரந்தை அண்ணனும் இதுபற்றிய தலைப்பில் ஒரு போஸ்ட் போட்டார்..[ஆனா என்னுடையது சற்று வேறுபட்ட போஸ்ட், தலைப்புத்தான் ஒன்று:)]  அதனால நானும் விரைவாக இதனைப் போட்டுவிட ஆசைப்பட்டு இங்கு, எழுதுகிறேன், இக்கதை படிக்க நன்றாக இருக்குது, யார் எழுதியது என்பது தெரியாது. 


எதற்கும் ஒரு அளவு வேண்டும், சிலர் தாம் நல்லபிள்ளை எனப் பேர் எடுக்க வேண்டும், அப்படி எனில் சம்பளமும் கூட்டித்தரப்படலாம் என்றெல்லாம் நினைத்து, ஓவராக, குடும்பத்தைக்கூடக் கவனிக்காமல் வேலையே கதி என உழைப்போரும் உண்டு, ஆனா பலன் கிடைக்காதபோது, ஹையோ அநியாயமாக நம் நேரத்தை ஒதுக்கினோமே, குடும்பத்தைக் கூடச் சரியாக கவனிக்காமல் தொழிலே கெதி என வாழ்ந்தும் என்னத்தைக் கண்டோம் என வருந்துவதும் உண்டு.

நாம் வாங்கும் சம்பளத்துக்கும், நம் மனட்சாட்சிக்கு விரோதமில்லாமலும் நடந்தாலே போதும். ஒன்றை நினைவில வைத்துக் கொள்ள வேண்டும்..
“நாம் எவ்வளவுதான் உடம்பில் எண்ணெயைப் பூசிவிட்டு, மண்ணிலே உருண்டாலும், நமக்கு ஒட்டுவதுதான் ஒட்டும்”..  நமக்காக அளந்ததுதான் அளவு. அதனால நம் உடல் நிலையையும், குடும்பத்தையும் கவனிக்கத் தவறிடக்கூடாது.  சரி சரி எனக்குப் பாருங்கோ ஓவரா அலட்டுவது பிடிக்காது:), அதனால கதைக்குள் போவோமா, இது ஒவ்வொரு எழுத்தாக ரைப் பண்ணிப்போடும் கதையாக்கும்.. கொப்பி பேஸ்ட் அல்ல.

 
வியாபாரி ஒருவர், தன் ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளை, தன் மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்று, பக்கத்து ஊரில் விற்பது வழக்கம். ஒருநாள் அந்த வண்டில் மாடு, வியாபாரியிடம் வந்து கேட்டது “எஜமான் இரண்டு ஆண்டுகளாக நான் உங்களுக்கு வேலை செய்கிறேன், நான் செய்யும் வேலைக்கு, நீங்கள் எனக்குக் கொடுக்கும் புல்லின் அழவோ மிகக் குறைவு.., தயவுசெய்து என் புல்லின் அளவைக் கூட்டுங்கோ” என்றது.

அதைக் கவனமாகக் கேட்ட வியாபாரி “மாடே, நீ கடினமாக உளைப்பது உண்மையே, ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் மாடு, ஒரு நாளைக்கு 25 மூட்டைகளை வண்டியில் சுமக்கிறது, நீயோ 20 மூட்டைகளை மட்டுமே சுமக்கிறாய், நீ அதிக மூட்டைகளைச் சுமந்தால், நானும் புல்லின் அளவை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கிறேன் என்றார்.

பக்கத்து வீட்டு மாடு, பஞ்சு மூட்டைகளை மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாத இந்த மாடு, தானும் அதிக மூட்டைகளைச் சுமக்க ஒத்துக் கொண்டது. இப்படியே ஓராண்டு சென்றதும், மாடு மறுபடியும் வந்து, தன் புல்லின் அளவை அதிகரிக்கச் சொல்லிக் கேட்டது.

அதற்கு வியாபாரி “மாடே, அதிக பாரம் ஏற்றியதால், நம் பழைய வண்டி பாதிப்படைந்து விட்டது, எனவே இப்பொழுது ஒரு புதுவண்டி செய்யச் சொல்லியுள்ளேன், அதற்கு ஆகும் செலவையும் நான் பார்க்க வேண்டும், இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுத்துக் கொள், புல்லின் அளவை நிட்சயம் அதிகரிக்கிறேன்” என்றார்.

வேறு வழியின்றி, மாடும் ஒத்துக் கொண்டது. புது வண்டியும் வந்து ஆறு மாதங்களும் ஆன பின்பு, மாடு திரும்பவும் சென்று புல்லின் அளவைக் கூட்டச் சொல்லிக் கேட்டது.. அதற்கு வியாபாரி..

“மாடே, இப்போதெல்லாம் உனது வேகம் மிகக் குறைந்துவிட்டது, பக்கத்து ஊருக்குச் செல்ல, முன்பை விட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறாய், இதனால என் வியாபார நேரம் குறைந்துவிட்டது, எனவே உனக்கு அதிக புல் தருவது, இப்போதைக்கு சாத்தியமில்லை” என்றார்.

கோபமடைந்த மாடு[ஆஆவ்வ் மாட்டுப்பிள்ளைக்கு ரோஷம் வந்திட்டுதாம் ஹா ஹா ஹா:)] “எஜமான், இப்புது வண்டியின் பாரம், பழைய வண்டியை விட அதிகம், இந்தக் கனத்தையும் சேர்த்து இழுக்க வேண்டியிருப்பதாலேயே என்னால முன்பு போல விரைவாகச் செல்ல முடியவில்லை” என்றது... அதற்கு வியாபாரி..

“மாடே!.. நீ என்ன காரணம் சொன்னாலும், உன்னால் எனக்கு அதிக லாபத்தைப் பெற்றுத்தர முடியவில்லை, நான் வேண்டுமானால் உன்மேல் ஏற்றும் மூட்டைகளின் எண்ணிக்கையை வேண்டுமானால் குறைத்து விடுகிறேன், ஆனால் நீ அதிக புல் கேட்காதே” என்றார்.

தன் இத்தனை வருட உழைப்பும் வீணாகிவிடும் எனப் பயந்த மாடு “வேண்டாம் எஜமான், நான் எப்படியாவது வேகமாகச் சென்று, உங்களுக்கு அதிக லாபம் பெற்றுத் தந்து விடுகிறேன்”.. என்றது.

மறுநாள் தொடங்கி, மாடு தன் சக்தியெல்லாம் திரட்டி, வேகமாக ஓட ஆரம்பித்தது. மீண்டும், முன்பு தான் எடுத்துக் கொண்ட நேரத்திலேயே வியாபாரியைக் கொண்டுபோய்ச் சேர்த்தது. ஆனால், மிகக் கடின உழைப்பால், ஒரு மாதத்திலேயே நோயுற்று, படுத்த படுக்கையானது. வழமையாகச் சாப்பிடும் புல்லைக்கூட, அதனால் உண்ண முடியவில்லை.

சில நாட்கள் அதற்கு மருந்து கொடுத்த வியாபாரி, ஒருநாள் அதனிடம் “மாடே, உன்னை நல்ல விலைக்கு ஒருவர் கேட்கிறார், அவரிடம் உன்னை விற்று விடப் போகிறேன்” என்றார்.

“எஜமான், நான் இப்போதிருக்கும் நிலையில், என்னால் எந்த வேலையையும் செய்ய முடியாதே, இப்போ எதுக்கு என்னை விலைக்குக் கேட்கிறார்கள்” என்றது.

“உன்னை அவர்கள் வேலை செய்ய வாங்கவில்லை, உன்னைக் கொன்று, தோலை எடுக்கவே கேட்கிறார்கள்” என்றார் வியாபாரி. வியாபாரியின் பேச்சைக் கேட்ட மாட்டுக்கு அழுகை வந்தது, அழுதழுது மாடு சொன்னது..

“எஜமான், நிங்கள் செய்வது ரொம்ப அநியாயம், உங்கள் பேச்சை நம்பி, மாடாய் உழைத்ததாலேயே நோயுற்றேன், இல்லை எனில் நீண்டகாலம் ஆரோக்கியமாக இருந்திருப்பேன், நீங்கள் செய்வதெல்லாம் துரோகம்” என்றது. அதைக் கேட்ட வியாபாரி..

“நான் செய்வது துரோகம் இல்லை, ஒரு  முதலாளியின் லட்சியம், தன் தொளிலாளியிடம், முடிந்த அளவு வேலை வாங்கி அதிக லாபம் பெறுவது, அதையே நானும் செய்தேன், உன்மூலம் 5 ஆண்டுகளில் சம்பாதிக்க வேண்டியதை மூன்று ஆண்டுகளிலேயே சம்பாதித்து விட்டேன், இப்போ உன்னை விற்பதன் மூலமும் பணம் ஈட்டப்போகிறேன், என்னுடைய அதிக லாபம் பெறும் நோக்கம் நிறைவேற, உன்னுடைய ஆசையை என் மூலதனமாக்கிக் கொண்டேன், நீ ஆரம்பித்திலேயே சுதாகரித்துக் கொண்டிருந்தால், தப்பித்திருக்கலாம்” என்றார்.

தன் முட்டாள்தனத்தை எண்ணி, மாடு நொந்து அழுதது.

இப்படித்தான் சில நிர்வாகங்களின் நோக்கமும், ஊழியர்களிடமிருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ, அவ்வளவு வாங்கிக்கொள்வார்கள். எனவே ஊழியர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.
😆😆😆😆😆😆

ஊசி இணைப்பு
ஆஆஆ மொம்மி:) பிடிச்சிட்டேன், விரதம் முடிஞ்சுபோச்செல்லோ மசாலா ரெடி பண்ணுங்கோ பிர்ராஆஆஆணிக்கு:))

ஊசிக்குறிப்பு:
💓💓💓💓💓💓

Wednesday 20 November 2019

இராசவள்ளிக் களி

நான் இப்போ ஒரு முடிவு பண்ணிட்டேன், சமைச்சுச் சமைச்சுப் போட்டு:) பலபேரை  “புளொக்ஸும் வாணாம் ஒண்ணும் வாணாம் நிம்மதிதான் தேவை”?:) என, புளொக்ஸ் ஐ இழுத்து மூடிவிட்டு ஓடப்பண்ணப் போகிறேன்:).. ஹா ஹா ஹா.. முன்னே வச்ச காலைப் பின்னே வைக்க மாட்டேனாக்கும்:).
அடிதாங்கா உள்ளமிது இடி தாங்குமோ?:)

Sunday 17 November 2019

என் மூன்றாவது அப்பிள்💖

தென்னது மூணாவது அப்பிள் எனத்தானே ஓசிக்கிறீங்க:)).. அது வந்து பாருங்கோ முதலாவது அப்பிளை ஆதாமும் ஏவாளும் சேர்ந்து சாப்பிட்டுவிட்டினம்:).. ரெண்டாவது அப்பிளைத்தான் அதிரா இங்கு போஸ்ட் போட்டுக் காட்டினனே:)).. உங்களுக்கெங்கே இதெல்லாம் நினைவிருக்கப் போகுது.. இதை எல்லாம் மறந்திடுங்கோ அதிராவிடும் பிழைகளை மட்டும் வல்லாரை ஊஸ் குடிச்சுக் குடிச்சே நினைவில வச்சிருங்கோ கர்ர்ர்ர்ர்:)).

Sunday 10 November 2019

என் நெ.ஆ பகுதி 2 👸

போன பதிவிலிருந்து மிகுதிக் கதை தொடர்கிறது... இப்போ கோயிலுக்குள் போவோமா?:)..

Thursday 7 November 2019

என் நெடுநாள் ஆசை:)

அம்சவல்லி:)
நான் பாருங்கோ இப்போ ரொம்ப உஷாராகிட்டேன்:), அதனால பூஸோ கொக்கோ?:), இனி எந்தக் கோயில் எனச் சொல்ல மாட்டேனாக்கும், ஆராவது போக விரும்பினால் வட்சப்பில கேளுங்கோ அட்ரஸ் தருவேன்:))... ஹா ஹா ஹா.

இந்த அம்மன் கோயிலுக்கு ஒரு க்குளூ மட்டும் தருவேன், இது நியூயோர்க்கில், கனடாப் பக்கமாக இருக்கு. கனடாவிலிருந்து போகும் போது போர்டரைத்தாண்டியே போகோணும், அதில் பாஸ்போர்ட் காட்டோணும்.

இக்கோயில் ஆரம்பிச்சு சில வருடங்கள்தான் என நினைக்கிறேன், அப்போ எனக்குப் போகோணும் என சரியான ஆசை, எனக்கு அம்மன் மற்றும் சிவன் கோயில் எனில் ஏனோ ஒரு தனிப்பட்ட லவ்:). ஒவ்வொரு தடவையும் போகக்கிடைக்கவில்லை, இம்முறைதான் தரிசனம் கிடைத்தது.



மேலிருக்கும் வீடியோக்கள், கனடாவில் இருந்து கோயிலை நோக்கிப் போனபோது, எங்கள் குடும்பம் எல்லோரும் போனோம், பிள்ளைகள் எல்லாம் ஒன்றாக ஒரு வாகனத்தில் ஏறினார்கள், நாங்கள்[லேடீஸ்] ஏறியது அண்ணனின் வாகனத்தில்:)).. அப்போ வீடியோ எடுக்கும்போது அண்ணனிடம் சொன்னேன், அஞ்சுவுக்கு இந்த வீடியோக் காட்டுவேன் அவ 60+ இல் இருப்பதனால், பழையபாடல்கள்தான் பிடிக்குமாம் எனச் சொன்னா, அதனால ஏதும் பழைய பாட்டு இருந்தா போடுங்கோ என, உடனே அண்ணன் போட்டார் பாருங்கோ இந்தப் பாட்டை:)).. அஞ்சூஊஊஉ பாட்டுக் கேய்க்குதா?:).




இப்போ அமெரிக்க எல்லைக்குள் நுழையும் இடம் வந்திட்டுது..



இதில் மெதுவாக போய்ப் போய், பாஸ்போர்ட்டைக் காட்டினால், விடுவார்கள் உள்ளே..


===குட்டி இடைவேளை===
என்னிடம் மேத்தாவின் கனவுக்குதிரைகள் கவிதைப் புத்தகம் இருகுதெனச் சொன்னபோது, அதில் சிலதை இடைக்கிடை இங்கு பகிரலாமே என ஸ்ரீராம் சொன்னது மனதில் நினைவாக இருந்தது, ஆனா அதில் பெரும்பாலும் இருப்பவை அரசியல் சம்பந்தமான கவிதைகளாக இருக்கு, இது மட்டும் கொஞ்சம் ஓகே என்பதனால் போடுகிறேன்...
* உன் பெயரைச் சொன்னேன் என்னைக் கவிஞன் என்றார்கள்
உன் ஊரைச் சொன்னேன் என்னைக் காதலன் என்றார்கள்
நம் உறவைச் சொன்னேன்! என்னை நாட்டு வைத்தியரிடம் காட்டச் சொன்னார்கள்!!!.

*என் இதயத்தின் விலாசம் நீ!
என் வீட்டு விலாசத்தையா விசாரித்துக் கொண்டிருக்கிறாய்?

*தீப்பெட்டியைத் தேடி எடுக்கிறாய்
வீட்டில் விளக்கேற்றவா?
என்னை வெளியேற்றவா?

*வெள்ளைத் தாளாய் இருந்தது என் இதயம்
எதை எதையோ நீதான் எழுதினாய்
ஒருநாள் எழுதியதை எல்லாம் நீயே அழித்துவிட்டாய்
அழித்தது சரி! எழுதியது நீ என்பதால் அழித்தது சரி!
இதயத்தைக் கிழித்தது சரியா?
==============================
ஆஆஆ... கோயிலுக்கு வந்தாச்சு, முகப்பிலே வரவேற்கும் பிள்ளையார் இவர், பாருங்கோ சிதறு தேங்காய் அடிச்சு தேடுவாரில்லாமல் இருக்கு, எனக்கு பொறுக்கிச் சாப்பிட விருப்பம், எனக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் சப்ளை செய்து சாப்பிடுவேனாக்கும்:)).. ஒளவையார் என்ன சொல்லியிருக்கிறா?:), ஒரு குட்டித் துண்டென்றாலும் அனைவருக்கும் குடுத்துச் சாப்பிடோணுமாம்:)).. ஓசித் தேங்காயைக் குடுத்துச் சாப்பிடுவதாகத்தானே நினைக்கிறீங்க:)) கர்ர்ர்ர்ர்:))



இப்படித்தான் பாருங்கோ கனடாப் பிள்ளையார் கோயில் வாசல்லயும் தேங்காய் இருந்துது, ஓடிப்போய் எடுத்து வந்தேன், அங்கு நின்ற ஒரு வெள்ளையர், அவர் கோயிலில் தொண்டு செய்பவர்போல இருக்கு, கேட்டார் கான் ஐ காவ் சம் என ஹா ஹா ஹா நான் குடுக்கவில்லை.[அவர் வேணுமெண்டெல்லோ கேட்டவர்].

இக்கோயில் பற்றிச் சொல்லி முடியாது, இன்னும் கோயில் கட்டப்படவில்லை[வெளிப்பகுதி], ஆனால் விக்கிரகங்கள் எல்லாம் அழகழகாக எடுத்து வைத்திருக்கிறார்கள். இதன் காணியோ எத்தனையோ ஏக்கர் போல இருக்கு.. தோட்டம் முழுவதும் பச்சை அப்பிள் மரங்கள், காய்த்துக் குலுங்கின, ஆசைக்கு பிடுங்கி நல்லாச் சாப்பிட்டேன்ன்:))... 

இங்கு படங்கள் அதிகமாக இருப்பதனால் மிகுதி அடுத்த பகுதியில் விரைவில் வெளிவரும்:).
⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⤧⤧⤧⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯

இது இங்கு இப்போ போன மாதம் எடுத்தது, காய்கள் காய்த்துக் குலுங்குது.. இக்காய்கள் வந்தபின்னர் இலையுதிர்காலம் ஆரம்பமாகும்.


ஊசி இணைப்பு

ஊசிக் குறிப்பு..

இதன் அடுத்த பகுதியைக் காண இங்கே
================_()_===============

Sunday 3 November 2019

பாரணை, சீனி அரியதரம், வல்லாரைச் சம்பல்🙏

ஆஆஆ இதுதான் விரதம் பிடிச்சதன் பலனோ:))


ஆஆஆவ்வ்வ் டும் டும் டும்... இதுதானா.. இதுதானா.. எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா:)) என் கந்தசஷ்டி பாலும் பழமும் விரதம் இனிதே நிறைவேறி, பாரணையும் முடிச்சு விட்டேன். இன்று போஸ்ட் போடும் ஐடியாவே இருக்கவில்லை, ஆனா அது என்னமோ விரதம் முடிஞ்சுபோச்சு என்றதும் ஒரு சொல்ல முடியாத மகிழ்ச்சியும், அதே நேரம் கவலையுமாக இருக்கு... முடிஞ்சுபோச்சே என.. விரத காலங்கள் உண்மையில் மிக மகிழ்ச்சியானதாகவே இருக்கும் எமக்கு எப்பவும்.

இன்று சாப்பிடவே முடியவில்லை, வயிறு ஏற்றுக்கொள்ளவே இல்லை:), கொஞ்சம் சாஸ்திரப்படிக்கே சாப்பிட்டேன். மிகவும் பயந்தபடியேதான் பால் பழத்தை ஆரம்பித்தேன் ஆனா 6 நாட்களும் கொஞ்சம் ஸ்லோவாகவே, இருப்பினும் நல்லபடி நிறைவேறிவிட்டது.

வாங்கோ பாரணைச் சாப்பாடு சாப்பிடலாம்..
நடுவில் தேசிக்காய் ஊறுகாய், தயிர், கீழே நான் செய்த மோர் மிளகாய் மற்றும் பப்படம், பொட்டாடோப் பப்படம், மிகுதிக்குப் பெயர் எழுதப்பட்டிருக்கு. இன்னும் இரு கறிகள் செய்ய நினைச்சு[என் லிஸ்ட்டில் போட்டிருந்தேன்:)] விட்டுவிட்டேன்..
அது சேப்பங்கிழங்குதானோ தெரியாதெனக்கு:), அஞ்சுவுக்குப் படம் அனுப்பிக் கேட்டேன் அவதான் அப்படிச் சொன்னா:)[நான் ஒரு அப்பாவி என்பதனால நம்பிட்டேன்:)].. இஞ்சிக்கிழங்குபோல இருக்கும், வாழ்க்கையில் முதன்முதலாக சேப்பங்கிழங்கு வறுவல் செய்தேன், அவித்து தோலை உரிச்சுப்போட்டு ரோஸ்ட் பண்ணினேன்...தூள் சேர்த்து, ஆனா எனக்கு அந்த ரேஸ்ட் பிடிக்கவில்லை:(

இம்முறை சுவாமிக்குப் படைச்சதைப் படமெடுக்கவில்லை, நீங்கள் பார்த்துப் பார்த்து அலுத்திருக்கும் என்பதனால்:))

ஆஆஆஆஆ நெல்லைத்தமிழன் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் சீனி அரியதரம்.. இதோ மேடை ஏற இருக்கிறது:)) என்னா சுசி:) என்னா சுசி:))) ஹா ஹா ஹா... செய்து சாப்பிட்டவுடன் எங்கள் புளொக்கிற்கு அனுப்பி வைக்கவும்:).
சிவப்புப்பச்சை அரிசியைக் கழுவி எடுத்து, ஓவர் நைட் காயவிட்டேன், காலையில் அரைத்து, பெரிய கண்ணுள்ள அரிதட்டில், அதாவது மாவுடன் குருனலும் சேர்ந்து விழுவதுபோல அரித்தெடுத்து , நம் அளவுக்கு சீனி சேர்த்துக் குழைச்சேன், தண்ணி தேவைப்படாது, கொஞ்ச நேரம் ஊறவிடவும், அல்லது, சீனியை பிளெண்டரில் மாவாக்கியும் போடலாம்.  இல்லை எனில், சிறு துளி தண்ணி தெளிச்சுக் குழைக்கலாம், உடனேயே சுட்டு விட வேண்டும், பிந்தினால் எல்லாம் தண்ணி போலாகிடும்.


இன்று ஒரு தகவல்
வழங்குபவர், உங்கள் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய:) “புலாலியூர்ப் பூஸானந்தா”:).
என்னிடம் இருந்த றைஸ் குக்கர் கொஞ்சம் பழுதாகிவிட்டது, அப்போ மினக்கெடாமல் உடனேயே காபேஜ் அடிச்சு விட்டேன், பின்பு வாங்க தேடிக்கொண்டிருந்தேன், எனக்கு சாதாரண றைஸ் குக்கர் எதுவுமே பிடிக்கவில்லை, உங்களுக்குத்தான் தெரியுமே எனக்கு எப்பவும் வித்தியாசமானதே பிடிக்கும். அதனால வாங்காமலே இருந்தேன். சமீபத்தில் தான் என் கண்ணில் இது பட்டது, உடனேயே விழுந்து விழுந்து ஆராட்சி செய்து, வாங்கியாச்சு. என்னா சூப்பர் தெரியுமோ.

பிறஸர் குக்கர் சேர்ந்த றைஸ் குக்கர். பசுமதி அரிசி எனில் ஒரு கப்புக்கு 1.5 கப் தண்ணி சேர்த்து வெறும் 12 நிமிடங்களில் சோறு. boiled rice எனில் 2 கப் தண்ணி சேர்த்து, 15 நிமிடங்கள். எந்தப் புகையுமில்லை, ஒரு கபேர்ட்டில் வச்சு மூடிப்போட்டுக்கூட ஓன் பண்ணலாம், சத்தமில்லை, புகை இல்லை, எல்லாம் நேரக் கணக்கு மட்டுமே.

சைவம், அசைவம் எது வேணுமெண்டாலும் செய்யலாம், ஆனா நான் எப்பவும் சைவம் -அசைவம் கலப்பதில்லை, வேறு வேறு பாத்திரங்களே பாவிப்பேன் என்பதனால் சைவமாகவே வச்சிருக்க விருப்பம், ஆனால் இதன் உள் பேசின் மட்டும் 10 பவுண்டுகளுக்கு அமேசனில் கிடைக்குது, அப்போ அதில் ஒன்று வாங்கினால் அசைவத்துக்கு வச்சிருக்கலாம் எனும் ஐடியா இருக்குது.[PRESSURE KING PRO PRESSURE COOKER]


இதில் பாருங்கோ, சிவப்பு கலரில் இருப்பதுதான் அந்த பிரசர் பட்டின், இது உள்ளே போனால்தான் ஓபின் பண்ணலாம், அருகில் இருப்பதுதான் ஆவியை வெளியேற்றுபவர், ஆனா இவரின் கொன்றோல் நம் கையில்.. அதாவது இப்படி நேராக விட்டு விட வேண்டும், அப்போ எந்த ஆவியும், ஒரு துளிகூட வெளியே வராது, நமக்கு உடனடியாக மூடியைத் திறக்க வேண்டுமெனில், இந்த பட்டினை வலப்பக்கம் திருப்பி விட்டால் போதும்.. குபீரென ஆவி முழுதும் வெளியே வரும், 2 நிமிடத்தில் மூடியை திறந்திடலாம்
=============================

 ஸ்ரீலங்கன் வல்லாரை சம்பல்
இது செய்வதற்கு, வல்லாரையை நன்கு துப்பரவாக்கிப்போட்டு, கழுவி எடுக்க வேண்டும், எடுத்து இப்படி கட்டாகவே பிடித்துக் கொண்டு, முத்தலாக இருக்கும் பகுதியை மட்டும் வெட்டி எறிஞ்சால் போதும், மிகுதி அனைத்தையும் இப்படிக் குட்டியாக அரிந்து எடுக்க வேண்டும்.

பின்னர் இதனுள் உடன் திருவிய தேங்காய்ப்பூ, தேசிக்காய்ப்பிளி, உப்பு, சின்ன வெங்காயம், விரும்பினால் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கையால் பிசைந்து எடுக்க வேண்டும். நான் சுவையை கூட்டுவதற்காக 2,3 கரண்டி முதல்பால் அல்லது ஃபுல் கிரீம் மில்க் சேர்ப்பேன்.

ஆஹா என்ன சுவை தெரியுமோ:)) இப்பூடிச் சாப்பிட்டால் சத்து வீணாகாது, எதனையும் வாழ்க்கையில் மறக்கவே மாட்டீங்க:)

ஊசி இணைப்பு


ஊசிக்குறிப்பு
 ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சூஊஊஊ உண்டகளை புளொக் எழுதும் அதிராவுக்கும் உண்டெல்லோ:), மசக்கம் மசக்கமா:)) வருதூஊஊஊ கொஞ்சம் டோல் குடுங்கோ:)), இப்போ நான் ரொம்ம்ம்ம்ம்பவயக்கெட்டிட்டேன்ன்:))
💓💓💓💃💓💓💓