நல்வரவு_()_


Sunday, 17 November 2019

என் மூன்றாவது அப்பிள்💖

தென்னது மூணாவது அப்பிள் எனத்தானே ஓசிக்கிறீங்க:)).. அது வந்து பாருங்கோ முதலாவது அப்பிளை ஆதாமும் ஏவாளும் சேர்ந்து சாப்பிட்டுவிட்டினம்:).. ரெண்டாவது அப்பிளைத்தான் அதிரா இங்கு போஸ்ட் போட்டுக் காட்டினனே:)).. உங்களுக்கெங்கே இதெல்லாம் நினைவிருக்கப் போகுது.. இதை எல்லாம் மறந்திடுங்கோ அதிராவிடும் பிழைகளை மட்டும் வல்லாரை ஊஸ் குடிச்சுக் குடிச்சே நினைவில வச்சிருங்கோ கர்ர்ர்ர்ர்:)).

இதை நான் எங்கிருந்தும், நெஞ்சு படபடக்க, வேர்க்க விறுவிறுக்க களவெடுத்து வரவில்லை எனவும்:), இதை  “எங்கள்”:) அதாவது எங்கள் பெட்டிக்குள்:) இருந்தே எடுத்து இங்கின போட்டிருக்கிறேன் என்றும், அஞ்சுவின் அருமை அண்ணா ஹரியின் முன்னங்கால் நடுவிரல் நகத்தின் மேல் அடிச்சுச் சத்தியம் செய்கிறேனாக்கும்:))
ரி அது போகட்டும்:)).. இது என் இந்த வருடத்தின் மூணாவது அப்பிள்:).. வருடம் முடியமுன் சொல்லிடோணும் என பாடுபட்டு இன்றுதான் போட முடிஞ்சுது:).. இதுதான் என் அப்பிள் வோச்[apple watch]. இது ஒரு ஃபோன் போலவே இருக்குது, கையில் இருந்தே அனைத்து வேலைகளும் செய்யலாம், ஆனா இது பாவிக்க அப்பிள் ஃபோன் இருக்கோணும். அப்பிள் ஃபோன் இருந்தால் மட்டுமே இது வேர்க் பண்ணும்.

ஃபோனில் இருக்கும் சகல அப்ஸ் உம் இதில் வந்திடும், ஃபோனைக் கையில் வச்சிருக்கோணும் எனும் கட்டாயமில்லை. ஃபோன் இருக்கும் இடத்திலிருந்து ஒரு 300, 400 மீட்டர் தூரத்துக்கு இயங்கும்.

இப்படித்தான் சார்ச் பண்ணோனும். வலது பக்கம் ஒரு பட்டின் இருக்குது பாருங்கோ, அதை அமத்தியே அனைத்தையும் ஒபரேட் பண்ணோனும். ஃபோன் போலவே இதுக்கும் பாஸ்வேர்ட் இருக்கு. கையில் கட்டியவுடன் ஒருக்கால் கேட்கும், பின்பு கழட்டும் வரை கேட்காது, ஆனா கட்டாமல் இருந்தால் ஒவ்வொருக்காலும் கேட்டுக்கொண்டே இருக்கும் பாஸ்வேர்ட்.

நான் ஃபோனுடன் வோச் ஐக் கனெக்ட் பண்ணியதும், ஃபோனில் வோச் என ஒரு அப் வந்திடும், அதனுள் போய்த்தான் வோச்சின் சகல செட்டிங்கும் செய்யோணும். இது watch இன் டயலுக்கான ஸ்டைல்கள் ஃபோனில் காட்டுது, இதில் கொஞ்சம் தான் போட்டிருக்கிறேன் அது ஒரு தொகை இருக்குது, அதை விட நம் போட்டோக்களையும் டயலில் போடலாம், கடசிப்படத்தில் கீழே பாருங்கோ, என் garden, castle படங்களைத், தானே போட்டு வச்சிருக்குது:).

இந்த டயலில் தெரியும் படம் நினைவிருக்கோ?:)

இப்படி டயலிலேயே நமக்கு என்ன தேவையோ அதனை போட்டு வைக்கலாம், நான் ஸ்ரெப்ஸ் கவுண்டிங் மற்றும் வெதர் எல்லாம் போட்டால், நேரம் காட்டும்போது எத்தனை ஸ்ரெப்ஸ்steps நடந்திட்டேன் எனவும் காட்டும், அப்படியே ஃபோனுக்கு அனுப்பி சேஃப் பண்ணும்.

இதில் முக்கிய இன்னொரு நன்மை, ட்றைவ் பண்ணும்போது கோல் வந்தால், இதிலேயே ஓன் பண்ணிப்போட்டுப் பேசிக்கொண்டே போகலாம்.. 

கீழே முதல் படத்தை பாருங்கோ, சைட் பட்டினை தட்டினால் ஃபோனில் இருக்கும் அத்தனை அப்ஸ் உம் இங்கு வரும், பின்பு இதனுள் ஒவ்வொன்றையும் தட்டித்தட்டி உள்ளே போய்ப் பார்கலாம், அப்படித்தான் வெதர் பார்ப்பதைப் போட்டிருக்கிறேன் 2 வது படத்தில்.


மற்றும் வேர்க்கின் போதுகூட, எனக்கு மெசேஜ் ஏதாவது ஃபோன் மெசேஜ் வைபர் வட்ஸப் எது வந்தாலும் இதிலேயே டக்கென ரிப்ளையை தட்டி உடனடி மெசேஜ் ஏதும் அனுப்பலாம்,[மேல் படத்தில் கடசிப் படத்தைக் கவனியுங்கோ தெரியும்] ஸ்ரிக்கர் அல்லது ஓட்டோ மெசேஜ் அல்லது ரைப் பண்ணலாம் அல்லது வொயிஸ் மெசேஜ் போடலாம், ஆனா வொயிஸ் மெசேச் போடும்போது அதை அது ரைப் பண்ணி அனுப்புது.. அப்போ எங்கட டெய்சியின் ரைப்பிங் மாதிரி என்னென்னமோ எல்லாம் ரைப் பண்ணுது ஹா ஹா ஹா..

அதேபோல மெயில் எல்லாம் உடனுக்குடன் செக் பண்ணிடலாம், ஆனா மெயிலுக்கு பதில் போட முடியாமல் இருக்கு அல்லது இன்னும் நான் அதை ஆராட்சி பண்ணவில்லை:)).. இதில் எவ்வளவோ விசயங்கள் இருக்கு, மினக்கெட்டால் நிறைய செய்யலாம் ஆனா நான் பேசிக் விசயத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இதில் ஏன் சிலரின் பெயர்கள் மட்டும் இருக்கென நினைப்பீங்க, எல்லோரையும் எடுக்க ஆசை ஆனா முடியவில்லை, ஏனெனில் ஒரு 30 செகண்ட்டுகள்தான் நோட்டிபிகேசன் காட்டுது, உடனே உள்ளே போய்விடும், அப்போ அந்நேரம் டக்கென ஃபோனை எடுத்து ஃபோட்டோ எடுப்பது கஸ்டமாக இருக்குது. அதற்கும் செட்டிங் இருக்கும், நான் மினக்கெடவில்லை, பாருங்கோ இந்த வருட பிறந்தநாள் பரிசு இது, ஆனா இன்னும் சரியாக பழகி முடியவில்லை:)).. இவை எல்லாம் புளொக் நோட்டிபிகேசன்ஸ் மெயில்கள்:)).

வோச் பாரமில்லை, இன்னொன்று, ஏன் எப்பவும் கையில் கட்டிக்கொண்டே படமெடுத்திருக்கிறேன் என நினைப்பீங்க, கையில் இருக்கும்போதுதான் நோட்டிபிகேசன் காட்டும். ஒகே இத்துடன் இப்புராணத்தை நிறுத்திக் கொள்கிறேன்:))._()_.

=================================================
இன்று ஒரு தகவல்:)
எங்கட சின்னவர் ஆள்தான் வளர்த்தி, ஆனா இப்பவும் குழந்தைதான், நான் சனிக்கிழமை காலை, பேகர் செய்தேன், அப்போ வந்து பார்த்துவிட்டுப் போனார், பின்னர், அதை எடுத்து வைத்துப்போட்டு, வெங்காயம் வதக்கினேன்- கறிக்காக, அப்போ திரும்ப வந்து பார்த்திட்டுச் சொன்னார், ஆ யூ கோயிங் 2 அட் அனியன்ஸ் என.. வேணுமோ விருப்பமோ என்றேன், யேஸ் என்றிட்டுப் போய் விட்டார்.

அப்போ நான் அதுக்காக வெங்காயம் வதக்கி, பேகருள் வைத்துவிட்டுக் கூப்பிட்டேன், வந்து சாப்பிடுங்கோ என, வந்தார், [பேகர் எனில் திறந்தால்தானே உள்ளே என்ன இருக்குதென தெரியும்], அப்போ சொன்னேன், வெங்காயம் போட்டிருக்கிறேன் என, உடனே.. “I doooooooooon't waaaaaaaaaaant வெண்டாயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் “ என்றார் ஹா ஹா ஹா, , நீங்கதானே கேட்டீங்கள் என்றேன், நோ ஐ டிடிண்ட் என்றார்...ஹையோ அப்பன்... அனியன் கேட்டீங்களே என்றேன்.. ஓ... ஓகே என்கிறார்:))[அவர் நினைச்சிட்டார் வெங்காயம் எனில் அது ஒருவகை மரக்கறி ஆக்கும் என:))].. பாருங்கோ என் நிலைமையை:)).. இதனால எப்பவும் எண்டரைன்மெண்ட் க்குக் குறைச்சல் இல்லை வீட்டில:))
==================================

££££££££££££££££கொஞ்சம் பிந்திய இடைவேளை:)££££££££££££££££
எங்கள் இலையுதிர்காலத்தையும் கிடைக்கும் சைக்கிள் ஹப் இல் காட்டோணும் எல்லோ:)).. இப்போ முளு இலையும் கொட்டி மொட்டையாகிவிட்டது மரம்:).
££££££££££££££££££££££££££££££££££££££££££££££££££££££

எங்கள் றூமில், டெய்சிப்பிள்ளையின் அட்டகாசம்..
இது உள்ளே போகும் அழகு:)

இது வெளியே வரும் அழகு:)

ஊசி இணைப்பு

ஊசிக்குறிப்பு:
()()()()()()()()()()()()()()()()()()()()
”உபதேசத்தை விட, உதவுவது மேல்”
இவ்வரிய தத்துவத்தை உங்களுக்காக வழங்கியிருப்பவர்..
உங்கள் அன்புக்கும் பண்புக்கும் பாசத்துக்கும் பாத்திரமான 
புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்..
()()()()()()()()()()_()_()()()()()()()()()

79 comments :

  1. [im]https://media1.tenor.com/images/776b689dda55bfbce206a7957c0a9b6f/tenor.gif?itemid=14875308[/im]

    ReplyDelete
  2. shhhhhh :) ஷ்ஹ் :) பாட்டை ரசிச்சு வாட்ச்சிங் 

    [im]https://media.tenor.com/images/875ae736a5f80d07ea48fd2011f5ee19/tenor.gif[/im]

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ரசிக்கும் விதம் அழகு நன்றி..

      வாங்கோ அஞ்சு வாங்கோ... இந்த வோச்சை உங்களுக்கு எப்போதாவது 70 ஆவது பிறந்தநாள் வரும்போது பரிசளிக்கலாம் என பொக்ஸ் ல போட்டு மூடி வச்சிருக்கிறேனாக்கும்:))

      Delete
    2. அதாவது உங்களோட 90 வது பெர்த்டே வரைக்கும் நான் வெய்ட் பண்ணனும்னு சொல்லுங்க :)

      Delete
    3. சபாஷ்...    சரியான போட்டி! ஹா...ஹ்ஹா......ஹ்ஹா.....

      Delete
  3. மொதமொதக்கா ஒரு ரொமான்டிக் பாட்டு போட்டிருக்கீங்க :) நல்லா இருக்கு வயதானாலும் வருவதே காதல் !!!  அடிக்கடி  வலைப்பக்கம் ஒருவர் சொல்வார் :))))))))))))) 

    ReplyDelete
    Replies
    1. சூப்பரா இருக்குதெல்லோ... எந்த வயதிலும் லவ்/அன்பு எனில் அழகுதானே..

      Delete
    2. நான் இன்னும் கேட்கவில்லை.

      Delete
    3. கேட்டிட்டீங்களோ ஸ்ரீராம்.. இந்தப் படத்தின் மூலம்தான் எனக்கு விஜய் சேதுபதியை பிடிக்க ஆரம்பிச்சது....

      Delete
  4. //இப்போ (முளு) இலையும் //

    garrrr spelling mistake

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆஆஆஆஆஅ அச்சச்சோ.. இதில எப்பவும் குழம்புறேன்ன்.. ழு போட்டு பின்பு மாத்தினேனே கர்ர்ர் 4 மீ.. ஸ்ரீராம் சொல்லியும் கூகிள் செக்கிங் செய்யும் எண்ணம் வரவில்லைப்பாருங்கோ...

      Delete
    2. ஹா....ஹா...  ஹா...    அதெல்லாம் ரைப்பிங் செய்யும்போதே செக் செய்திடோணும்! (ஊருக்கு உபதேசம்!!)

      Delete
  5. /அஞ்சுவின் அருமை அண்ணா ஹரியின் முன்னங்கால் நடுவிரல் நகத்தின் மேல் அடிச்சுச் சத்தியம் செய்கிறேனாக்கும்:))//
    கர்ர்ர்ர்ர் எங்கண்ணா கால் நகத்தை தொட்டு பாருங்க அவ்ளோதான் ஊசி வச்சி குத்துவேன் உங்களை 

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஜத்தியம் பண்ணிட்டேனே, ஹரி அங்கிள் நகத்தைக் கழுவி நீட்டாக இருப்பாரோ.. தொட முடியுமோ எண்டெல்லாம் நினைச்சுக்கவலைப்படுறேன் மீ:).. இது என்ன பொல்லாத ஜிஸ்டர்:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

      Delete
  6. /”உபதேசத்தை விட, உதவுவது மேல்”//

    உண்மைதானே ..
    ஸீ நியர் ஜூ நியர் :))) ROFL 

    //உங்கள் அன்புக்கும் பண்புக்கும் பாசத்துக்கும் பாத்திரமான //
    எச்சூஸ்மீ அந்த பாத்திரம் களிமண்ணா இல்ல ஹிண்டலுமினியமா :) இல்லை ஓங்கி உடைக்கலாமா இல்லை ஹாமெர் வச்சி தட்டலாமான்னு யோஜிக்கிறேன் :)

    ReplyDelete
    Replies
    1. இதுக்குத்தான் இதுக்குத்தான்.. அதிராவைப்போல டமில்ல டி எடுத்திருந்தா ஒத்த கருத்தெல்லாம் தெரியவரும் கர்ர்ர்ர்ர்:)).. அது டயமண்ட் ஆக்கும்:)) டச்சு பண்ணினாக் கை உடைஞ்சிடும்:)).
      ஜாக்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்தை:)) ...ஹையோ இது எனக்குச் சொன்னேன்:))..

      Delete
  7. ஹாஹாஆ :) டெய்சி அப்டியே அவங்கம்மா மாதிரி ஐயோ ஹையோ குண்டூஸ் கேட்ஸ் 

    ReplyDelete
  8. //பேகர் செய்தேன்//
    BURGER


    என்பொண்ணுக்கும் அனியன்ஸ்  பிடிக்காது நான் அரைச்சி சேர்த்துடுவேன் :)முந்தி கணவருக்கு தலைமுடி கொட்டுதுன்னு சின்ன வெங்காயம் வெட்டி தேய்ப்பேன் அப்போ அவளுக்கு 3 வயசிருக்கும் தமிழ் கடைல பார்த்துட்டு //அம்மா அப்பாவுக்கு போடுவீங்களே அது இங்கிருக்குனு சொல்லிட்டா :) நல்லவேளை கடைக்காரருக்கு விளங்கலை :) அப்பப்ப தமிழ் நெம்ஸும் இங்கிலிஷ் நேம்ஸும் கேட்டுப்பா :) எதோ கொஞ்சம் பழக்கு விட்டிருக்கேன் :) அன்னிக்கு கூண்டு கூண்டு னு சொல்றா அது பூண்டு :)

    பொங்கல் மட்டும் நல்லா தெரியும் :) பிடிக்காத உணவு ஆச்சே ..எங்க வீட்லயும் எண்டர்டெய்னமண்டுக்கு குறைவில்லை :)இங்கிலீஷில் சென்னை தோசை மென்யூ 
    //VATHA KUZHAMBU // வாத்து குசம்பு , IDLI MILAKAAI PODI = ஐட்லி மிளகாய் போடி :)))))))))))))))

    ReplyDelete
    Replies
    1. இவருக்கு அனியன்ஸ் விருப்பம் அஞ்சு, ஆனா வெங்காயம் என்றதும் பயந்திட்டார் ஹா ஹா ஹா...

      Delete
    2. ஓ...   பர்கரா?   அஞ்சு சொல்லி இருப்பதும் ரசனை!

      Delete
    3. //ஸ்ரீராம்.Monday, November 18, 2019 12:40:00 am
      ஓ... பர்கரா? //
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா.

      Delete
    4. ஆஹா அது பர்கர் ரா ...

      Delete
  9. //இந்த டயலில் தெரியும் படம் நினைவிருக்கோ?:)//

    ஓ யெஸ்ஸ்ஸ் :) மைக்கேல் ஜாக்சன் தானே அது :)))))))))))))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அவ்ளோ ஜொத்தெல்லாம் எங்கிட்ட இல்லிங்கோ:))

      Delete
    2. அஞ்சூஊஊஊ 🤣 🤣 🤣 🤣 🤣 🤣

      Delete
    3. //priyasakiMonday, November 18, 2019 6:20:00 am
      அஞ்சூஊஊஊ 🤣 🤣 🤣 🤣 🤣 🤣//

      [im] https://i2.wp.com/www.jillbeck.net/wp-content/uploads/2016/01/angry-cat.jpg [/im]

      Delete
  10. ஆங் இந்த APPLE வச்சிதானே ன்னை உளவு பாக்கறீங்க :)) எனக்கு வாட்ச் கட்ட ஆசையேயில்லை .அதனால் எனக்கு கிஃப்டா இதை அனுப்பாதீங்க உங்க பச்சை கல் நெக்லஸ் மட்டும் போதும் :)///இதில் முக்கிய இன்னொரு நன்மை, ட்றைவ் பண்ணும்போது கோல் வந்தால், இதிலேயே ஓன் பண்ணிப்போட்டுப் பேசிக்கொண்டே போகலாம்..//
    இருங்க ஸ்கொட்லான்ட் போலீசுக்கு இதை அனுப்பறேன் கர்ர்ர்ர்ர் .கார் ஓட்டும்போது என்ன போன் ???? கேர்லெஸ் கேட் :)

    ReplyDelete
    Replies
    1. எவ்ளோ ஈசி தெரியுமோ.. கை எடுக்காமல் கண்ணால பார்க்காமல் மைக்கில் சவுண்ட் வரும்...:)).. வோஷிங்டனில் ஒருநாள் ரோட்டால நடந்து போகும்போது சன நெரிசலில், கோல் ஒன்று வந்துதா... நான் கையை தூக்கிப் பிடிச்சுக்கொண்டு கதைச்சுக் கொண்டு போனேன், எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள் தெரியுமோ:)).. சரி சரி ஓடிப்போய்த் தேம்ச்ல குதிச்சிடாதீங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)).. இப்பூடி இன்னும் நியூஸ் சொல்ல இருக்குதெல்லோ:)) ஹா ஹா ஹா.

      Delete
  11. இலக்கிய கம்மல் :) இலக்கிய தும்மல் ,துலக்கிய செம்மல் ஹையோ என்ன செஞ்சாலும் டங் ஜில்லிப்பிங் :) 

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா நான் இப்பெயரைப்போடும்போது நினைச்சேன்.. இதை எப்பூடிக் கூப்பிடுவீங்களென:)) ஆனா இந்த கம்மல் வரல்லியே எனக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      ஓகே மிக்க நன்றிகள் அஞ்சு... மீண்டும் ஜந்திப்போம்.

      Delete
  12. முதற்கண் பாடல் பற்றி இயம்புகிறேன்!  அதை நான் கேட்டதில்லை.  கேட்காத பாடல்.  இனிதான் கேட்டுப்பார்க்க வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. கேளுங்கோ.. படமும் நேரம் கிடைச்சால் நிட்சயம் பாருங்கோ.

      Delete
  13. 1960 ம் வருடத்து மியாவ் அது!  எலியாரும்தான்!   என்ன உயிர்ப்புடன் இருக்கிறார்கள் இல்லை?    அதென்ன முன்னங்கால் நடுவிரல் நகம்?   அதை தலைப்பக்க வைத்தே ஏதாவது எழுதலாம் போலிருக்கே!

    ReplyDelete
    Replies
    1. //1960 ம் வருடத்து மியாவ் அது! எலியாரும்தான்! //
      ஓ உண்மையாவோ.. ஹா ஹா ஹா.. சூப்பராக கீறி, எழுதியிருக்கினம்.

      //அதென்ன முன்னங்கால் நடுவிரல் நகம்? அதை தலைப்பக்க வைத்தே ஏதாவது எழுதலாம் போலிருக்கே!//
      எழுதுங்கோ எழுதுங்கோ கவித கவித:))

      Delete
  14. வாட்ச் பற்றி ஏகப்பட்ட விஷயம் சொல்லி இருக்கீங்க.  ஆனால் என்னைப்பொறுத்தவரை அத்தனூண்டு திரையில் இவளவு வேலைகள் செய்ய எனக்குப் பொறுமைஇருக்காது!  

    ReplyDelete
    Replies
    1. அதில எல்லாம் செய்யத் தேவையில்லை ஸ்ரீராம், எமேஜென்சிக்கு நல்லாயிருக்கு.. மற்றும்படி கண் கூராக இருந்தால்தான் ஒபரேட் பண்ண முடியும், ஆனா மொபைல் போல பெரிசாக்கலாம் எழுத்துக்களை, படங்களை.. அந்த வசதியும் இருக்கு.

      Delete
  15. அந்த டயலில் தெரியும் படம் நினைவில்லையே...    கோவிலுக்குச் செல்லும்போது எடுக்கபப்ட்டதோ...

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வோஷிங்டனில்.. அந்த கறுப்பு இனத்துக்காகப் போராடியவரின் சிலைக்கு அருகில் எடுத்தது என படம் போட்டேனெல்லோ இங்கின:)) ஹா ஹா ஹா..

      Delete
  16. எங்கள் பிளாக் உங்கள் கைக்குள் அடங்கி விட்டது!  இன்று பாருங்கள் வித்தியாசமான பெயரில் கீதாவின் ரெசிப்பி...   ஆனால் அவரால் பதில் சொல்ல முடியாது.   அவர் கணினி ஹார்ட் டிஸ்க் வீணாய்போய் அவர் அது சரியாகும் நாளுக்காய்க் காத்திருக்கிறார்!

    ReplyDelete
    Replies
    1. //எங்கள் பிளாக் உங்கள் கைக்குள் அடங்கி விட்டது!//

      அது இப்போதான் உங்களுக்குத் தெரியுமோ?:).. அது அஞ்சுவின் முதல் கதைக்கு என்னை வரும்படி கட்டாயப்படுத்திக் கூட்டி வந்தா.. அன்றுதான் முன்னமுன்னம் எங்கள் புளொக் என ஒன்று இருக்கு.. அதை ஸ்ரீராம் என்பவர் நடத்துகிறார் என மட்டுமே தெரிஞ்சு காலெடுத்து வச்சேன்:)).. அன்று தொடங்கி.. எங்கள் புளொக் எங்கள் கைக்குள்:)) ஹா ஹா ஹா ஓடாதீங்கோ.. சும்மா சொல்லிப் பார்த்தேன்ன் ஹா ஹா ஹா.

      //இன்று பாருங்கள் வித்தியாசமான பெயரில் கீதாவின் ரெசிப்பி//

      ஹா ஹா ஹா பார்த்தேன், இடைவேளை, ஊசிக்குறிப்பெல்லாம் வருது ஹா ஹா ஹா.

      Delete
  17. வெங்காயம் ஜோக் சிரிப்பு வந்தது. காணொளி ரசிக்க வைத்தது.   யாராவது கவனிக்காமல் டிராயர் கதவை மூடினாலென்ன ஆவது?  இதை எல்லாம் யோசிக்காதோ டெய்ஸி?!!

    ReplyDelete
    Replies
    1. அதுதான் ஸ்ரீராம், ஒரு குழந்தையை எப்படிக் கண்காணிப்போமோ அப்படித்தான் இவவையும் பார்ப்போம். எப்பவுமே அவவின் மட்றசில் அல்லது எங்கள் பெட்டில்தான் படுப்பா, சமரில மட்டும் சோபாவிலும் படுப்பா. இந்த இடங்களில் அவ இல்லை எனில் தேடிக் கண்டுபிடிப்போம். பொதுவாக அனைத்தையும் கவனமாக மூடியே வைத்திருப்போம்.

      இது ஏதும் எடுக்கவென லாச்சியைத் திறந்தால் போதும்.. ஓடி வந்து ஏறுவா கர்ர்:)) ஹா ஹா ஹா.

      Delete
  18. ஊசி இணைப்பு, ஊசிக்குறிப்பு  ஆகியவற்றை மறுபடியும் ரசித்தேன்.  தத்துவம் நல்ல தத்துவம்.

    ReplyDelete
  19. இலக்கியத் தும்மல், இந்தப் பெயரே நல்லா இருக்கு. ஆப்பிள் வாட்ச் ரொம்ப அருமை. ஆனால் இது எல்லாம் பழகிக்கும் அளவுக்குப் பொறுமை எல்லாம் இல்லை. அது என்ன வெங்காயம்னு சொன்னதும் உங்க சின்னப் பையர் காத தூரம் ஓடுறார்! அவ்வளவுக்குப் பயமுறுத்தியா வைச்சு இருக்கீங்க?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ.. என்ன இவ்ளோ லேட்டூ:)) அம்பேரிக்கா போனதில இருந்து நீங்க லேசியா வந்துகொண்டிருக்கிறீங்க கர்ர்ர்:)).. ஒருக்கால் அம்மா மண்டபம் நடந்து போய் வந்தால்தான் உசாராவீங்க:)..

      //இலக்கியத் தும்மல், இந்தப் பெயரே நல்லா இருக்கு.//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இதுக்கெல்லாம் காரணம் அஞ்சுதான்:)) எய்தவர் இருக்க அம்பை நோகலாமோ:)) இருங்கோ ஓடிப்போய்த் தேம்ஸ்ல தள்ளாமல் இன்று பூரி சாப்பிடமாட்டேனாக்கும்:)) ஹா ஹ ஹா..:). சே..சே.. வாங்கின பட்டத்தைச்:) சூட விடமாட்டினமாமே:)).. இனிமேல் ரெண்டு சொல் வாறமாதிரியில்லாமல் பார்த்து வைக்கிறேன்:)).

      //ஆனால் இது எல்லாம் பழகிக்கும் அளவுக்குப் பொறுமை எல்லாம் இல்லை//
      இது உண்மை, உண்மையில் இதில நிறைய விசயங்கள் செய்யலாம், நானும் சில குறிப்பிட்டதோடு நிற்கிறேன்.

      //அவ்வளவுக்குப் பயமுறுத்தியா வைச்சு இருக்கீங்க?//

      ஹா ஹா ஹா இல்ல கீசாக்கா, வெள்ளி மற்றும் விரத நாட்களில் இருக்கும் மரக்கறி எலலாம் சமைச்சு தீத்திப் போடுவேன்.. வேறு வழியில்லாமல் சாப்பிடுவார், ஆனா இஞ்குள்ள பிள்ளைகளில் ஒரு பழக்கம், இது இது இப்படி இப்படித்தான் இருக்கோணும் என்பர்.. அதாவது பேகர் எனில், இன்ன இன்ன பொருட்கள் மட்டும்தான் போடோணும், ஸ்பகற்றி எனில் இப்படித்தான் செய்யோணும்.. இப்படி ஒரு கொள்கை வச்சிருக்கினம், அதை மீறி வேறேதும் கலந்தால் பிடிக்காது.. இதை வெண்டிக்காய் என நினைச்சாரோ என்னமோ:)) ஹா ஹா ஹா ஆனா வெண்டிக்காய் வெள்ளைக்கறி வச்சுக் குடுப்பேன் வழக்கமாக. பேகரில் போட்டால் தப்புத்தானே:))

      Delete
  20. உங்க டெய்சிப்பிள்ளையோட விஷமம் நல்லா இருக்கு! ஊசி இணைப்பு அருமை எனில் ஊசிக்குறிப்பின் தத்துவம் உண்மை, யதார்த்தம். இன்னிக்கு என்ன இரண்டு பேரும் சொல்லி வைச்சுட்டுப் பதிவு போட்டிருக்கீங்க போல? அஞ்சுவின் முதல் கமென்டும் அதற்கு உங்க பதிலும் இஃகி,இஃகி,இஃகினு சிரிப்பை வரவைச்சது.

    ReplyDelete
    Replies
    1. //இன்னிக்கு என்ன இரண்டு பேரும் சொல்லி வைச்சுட்டுப் பதிவு போட்டிருக்கீங்க போல? //

      இல்ல கீசாக்கா அஞ்சு போட்டது எனக்குத் தெரியாது... அது முன்பெனில் ஓரளவுக்கு இருவரும் ஃபிறீயாக இருக்கும் காலமாகப் பார்த்துப் போட நினைப்போம்., ஆனா இப்போ அஞ்சுவும் வேலை நாட்களைக் கூட்டி விட்டமையால், ஆருக்கு எப்போது முடியுமோ அப்போது போட்டு விடுகிறோம்:))...

      அஞ்சுவின் 70 ஆவது பேர்த்டேயை தேம்ஸ் கரையில கேக் வெட்டிக் கொண்டாட இருக்கிறோம்ம்.. அவட ஹரி அண்ணாவையும் கூப்பிட இருக்கிறேன் நீங்களும் வந்திடுங்கோ கீசாக்கா:))..

      மிக்க நன்றி.

      Delete
  21. நல்ல பயனுள்ள கட்டுரை / பதிவு. என்னுடைய பெண் இந்த வாட்ச் அணிந்திருந்ததைப் பார்த்து, நான் விவரங்கள் அவளைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். இப்போ உங்கள் பாஷையில் அந்த வாட்ச் பற்றி நீங்கள் எழுதியிருந்ததைப் படித்தவுடன், ஏற்கெனவே தெரிந்த தகவல்கள் கூட குழம்பிப்போயினம். ஞான் இப்போ என்ன செய்யினம் என் திகைத்து நிற்பினம்.
    அப்புறம் ஒன்று சொல்கிறேன் ....
    'ஆ'ப்பிளைக் கடித்தவர் ஆதாம். நீங்க சொன்ன
    'அ'ப்பிளை கடித்தவர் 'அ'தாம். இதைச் சொன்னவர் எவாள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கெள அண்ணன்.. வாங்கோ..

      //நல்ல பயனுள்ள கட்டுரை / பதிவு. //

      ஓ நன்றி.

      //நான் விவரங்கள் அவளைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். //
      ஓ அப்படியோ ஹா ஹா ஹா..

      //இப்போ உங்கள் பாஷையில் அந்த வாட்ச் பற்றி நீங்கள் எழுதியிருந்ததைப் படித்தவுடன், ஏற்கெனவே தெரிந்த தகவல்கள் கூட குழம்பிப்போயினம்.//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:))..

      //ஞான் இப்போ என்ன செய்யினம் என் திகைத்து நிற்பினம்.//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்போ மீ திகைச்சு நிக்கிறேனாக்கும் ஹா ஹா ஹா...

      //நீங்க சொன்ன
      'அ'ப்பிளை கடித்தவர் 'அ'தாம். இதைச் சொன்னவர் எவாள்.//

      ஹா ஹா ஹா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கெள அண்ணன் அப்படிப் பெயர்களைத் தப்புத் தப்பாச் சொல்லக்கூடாதாக்கும் ஹா ஹா ஹா..

      மிக்க நன்றிகள் கெள அண்ணன்...

      Delete
    2. ஹா ....ஓஒ ...ஹோ ...ஹி ..

      Delete
  22. பாட்டு மிகவும் ரசித்த பாடல்.
    காட்சி அமைப்பு அவ்வளவு அழகாய் இருக்கும். அரிவாள் மனையை எடுத்து வைப்பது எங்கள் வீட்டில் நடக்கும் முன்பு. இப்போது கீழே உடகார்ந்து வெட்டுவது இல்லை. மேஜை மேல் வைத்து நின்று கொண்டு வெட்டுகிறேன். அங்கும் அதை படுக்க வைப்பார்கள் இப்போது.


    படம் பார்த்தீர்களா? சூப்பராக இருக்கும். எங்ககு பிடித்தது.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..

      //மேஜை மேல் வைத்து நின்று கொண்டு வெட்டுகிறேன். அங்கும் அதை படுக்க வைப்பார்கள் இப்போது.//

      ஹா ஹா ஹா ஓ.. அது எங்களுக்கு கிச்சின் வேலைகள் ஜுஜுபி:) மாதிரி எல்லோ.. ஆனா அவர்களுக்கு அதைப்ப் பார்க்கப் பயமாக இருக்கும்:).

      படம் வெளிவந்தபோதே பார்த்திட்டேன் கோமதி அக்கா, நல்ல படம், அன்றிலிருந்துதான் விஜய்சேதுபதியின் படங்கள் பார்கத் தொடங்கினேன்.. ஆனா சமீபத்தில் அவரின் படங்கள் அவ்ளோ நல்லாயில்லை..

      Delete
  23. அதென்னது மூணாவது அப்பிள் எனத்தானே ஓசிக்கிறீங்க:)).. //

    விடை கிடைத்து விட்டது அருமையாக. வாட்சில் உங்கள் நல்ல படம் வையுங்கள் பயமுறுத்தும் படம் எதற்கு?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அது பயமுறுத்துகிறதோ? ஹா ஹா ஹா அதை நான் வைக்கவில்லை, தானாக பிடிச்சுத்தரும் அப்படி கர்:)).. நான் அநேகமாக மிக்கி மவுஸ் அல்லது பட்டர்பிளை அல்லது பிளவர்ஸ் இப்படித்தான் வைப்பேன், இவை எல்லாம் கையில் வீடியோப்போல ஓடிக்கொண்டிருக்கும், பட்டர்பிளை கலர் மாறி மாறிப் பறந்து கொண்டிருக்கும்... இந்த வோச்சில் இப்படி வசதி இருக்கு.

      Delete
  24. டெய்சி பூனையின் ஒளிந்து விளையாட்டை ரசித்தேன், வெளியே வரும் அழகையும் ரசித்தேன்.
    கவனம் தெரியாமல் டெய்சி உள்ளே இருக்கும் போது மூடிவிடாதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான், எங்காவது ஒட்டி ஒளிச்சிருப்பதே பிடிக்கும், கிச்சின் கபேர்ட் ஐத் திறந்தால் ஓடிப்போய் ஏறிடுவா, அப்படித்தான் ஏதும் லக்கேஜின், சிறு பகுதி ஸிப் திறந்திருப்பின் நுழைஞ்சு ஏறிப் படுத்திடுவா ஹா ஹா ஹா.

      Delete
  25. மரத்தின் இலைகள் கீழே விழும் போது நிறம் மாறி கண்ணுக்கு விருந்து அளித்து பின் விழுவது வியப்பு! நான் மகன் ஊரில் இந்த இலைகளை சேர்த்து அட்டையில் ஒட்டி பேரனுடன் விளையாடியதை முன்பு முகநூலில் போட்டேன். காற்றில் இலை உதிருவதை (மழையாக) காணொளி எடுத்தேன். நிறம் மாறிய மரங்களை பார்க்கவே வெகு தூரம் போய் வந்தோம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் கோமதி அக்கா.. இங்கு ஒவ்வொரு காலமும் ஒவ்வொரு அழகு. நீங்கள் சொன்னதைப்போல, ஒவ்வொரு சீஸனுக்கும் ஸ்கூலில் பிள்ளைகளைச் செய்ய வைப்போம். இப்படி இலை உதிர்காலத்தில் வெளியே கூட்டிச் சென்று இலைகள் பெறுக்கி வந்து, அழகழகாக ஒட்ட வச்சு.. ஓட்டம்autumn எனப் பெயரிட்டு சுவர்களில் ஒட்டுவது வழக்கம், இப்படியே ஸ்னோவுக்கு, மலைகள் கீற வச்சு, பஞ்சுகளால் ஸ்னோப்போல ஒட்ட வைப்பது வழக்கம்....

      Delete
  26. ஊசி இணைப்பு ஊசிக்குறிப்பு இரண்டும் அருமை.
    ஊசிக்குறிப்பில் உதிர்த்த தத்துவ முத்து அருமையோ! அருமை.

    ReplyDelete
  27. சூப்பர் பாட்டு. பிடித்தபாடல். அதுவும் வாசலில் இருந்து மழை,நிலவு ரசித்தல் அழகு. அழகான பாடல்.

    தலைப்பு பார்த்ததும் விளங்கீட்டுது எனக்கு. மகனுக்கு வாங்கி கொடுத்திருக்கோம். பிரயோசமானதுதான். ஆனால் விலை??? அப்பிள் என்றாலே அதற்கு ஒரு மார்கெட் இருக்கு. வருடா வருடம் ஏதாவது ஒன்றை புதிதா போனுடன் அறிமுகமாயிடும்.
    சின்னவரின் பொழுதும் இல்லைன்னா உங்களுக்கு போரடிக்கும். பிள்ளைகள் படிப்பு என வேறு இடத்துக்கு போய்விட்டால் போரிங் ஆ இருக்கும். எங்கள் மகனார் அடுத்த வருடம் போகவிருக்கார். அவர் தருவீங்களா என கேடகமாட்டார். கிடைக்குமா எனத்தான் கேட்பார். இன்னும் சரியான தமிழ் உச்சரிப்பு இல்லை. ஆனா கதைப்பார் தமிழ்.
    //இப்போ முளு இலையும்// ஹா...ஹா..ஹா.. அஞ்சு சொல்லீட்டா.நான் சிரிச்சுவைக்கிறன்.
    டெய்சி ன் பேரே சின்னது அதை வேற சுருக்கி...ஹா..ஹா... நானும் ஊரில் அக்கா வீட்டில் இருந்த செல்லத்தை இப்படிதான் சுருக்கி கூப்பிடுவேன். டிம்மி என கூப்பிடமாட்டேன். டிம் என கூப்பிடுவேன். அவரும் நான் முழுபெயர் சொல்லி கூப்பிட்டால் வரார்.
    ஊசி இணைப்பு யெல்லாம் ஜிந்திக்கிறாங்கோ..ஊசிகுறிப்பு அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ..

      முதுமையின் வாசல்படியில் நிற்கும் அனைவருக்கும்:) இப்பாட்டுப் பிடிக்காமல் போகாது:)) அதுதான் அஞ்சுவுக்கும் பிடிச்சிருக்காம்:)) மீ இன்னும் வாசலுக்கே வரவில்லையாக்கும்:)) ஹையோ எதுக்கு இப்போ கலைக்கிறீங்க ரோட் எல்லாம் ஒரே ஐஸ் வழுக்கி விழுந்திடப்போறீங்க ஹா ஹா ஹா...

      உண்மையில் நல்ல பாடல் அம்முலு.. படமும் நல்லது பாருங்கோ... ஸ்னேகாவுக்கு ஆசை அதிகமாகி இதில ஒரு இடத்தில வவும் நடிக்கிறா.. அவவுக்கு இது தேவையோ எனும் நினைப்பே வந்துது...

      //ஆனால் விலை??? அப்பிள் என்றாலே அதற்கு ஒரு மார்கெட் இருக்கு. வருடா வருடம் ஏதாவது ஒன்றை புதிதா போனுடன் அறிமுகமாயிடும்//

      ஓ மகனுக்கு வாங்கியிருக்கிறீங்களோ.. அது உண்மைதான், எனக்கு இதில் வாங்கும் ஆசை பெரிதாக இல்லை ஆனால் கிஃப்ட் எல்லோ:))..

      ஓ பிள்ளைகளின் சில உச்சரிப்புக்கள் சிரிப்பாக இருக்கும், அதனால அப்படியே இருக்கட்டும் என திருத்த விடுவதில்லை நான், ஆனா அம்மா வந்து நிற்கும்போது திருத்திக் குடுத்திடுவா .. நானுக்கு .. நாங்களுக்கு என்பினம் இருவரும்.. இப்போ மூத்தவர் நன்கு திருந்திவிட்டார், ஓரளவு நன்கு பேசுவார், சின்னவர்தான் பிரச்சனைப்படுகிறார், ஒருதடவை ஊருக்குக் கூட்டிப்போனால்தான் திருந்துவார் தமிழில்..:).

      அது முழு:)) ஹா ஹா ஹா இனி மறக்க மாட்டனே:))..

      யேஸ்ஸ் டெய்சிக்குப் பல பெயர்கள்.. டெய்சியை மட்டுமிலை வீட்டில் அனைவரையும் நான் இப்படித்தான் வாயில வரும் பெயர்களை எல்லாம் சொல்லிக் கூப்பிடுவேன் ஹா ஹா ஹா...

      மிக்க நன்றிகள் அம்முலு.

      Delete
  28. சீனியர், ஜூனியர் ஜோக் அருமை.

    உங்க ஆப்பிள் சாதனமும் ஓகேதான். இது இல்லாமலேயே ஐபோனில் ஆப்ஸ் மூலமாகவே நிறைய சாதிக்கலாம். இவ்வளவு விலைக்கு ஏற்ற பொருள் இல்லை என்று நான் நினைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ.. இப்போ கொஞ்சக் காலமாகவே பிஸியாக இருப்பதுபோல தெரியுது.. வடநாடு முடிஞ்சு இப்போ டெல்லியில் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து ஜெய்தி:)) வந்திருப்பதாகச் சொன்னால் நம்பவோ போறீங்க ஹா ஹா ஹா கர்ர்:)).. ஆனாலும் பிஸியிலயும் வந்தமைக்கு நன்றி.

      //இது இல்லாமலேயே ஐபோனில் ஆப்ஸ் மூலமாகவே நிறைய சாதிக்கலாம்.//
      இதில சாதிப்பது எனச் சொல்வதை விட, கையில் கட்டியிருக்கும்போது ஒரு கெத்தாக இருக்குது:), பார்த்தவுடன் கேட்கின்றனர் அப்பிள் வோச்சா என.. ஹா ஹா ஹா மற்றது முக்கியமாக, ஸ்கூல் ரைமில், ஜிம் இப்படியான நேரங்களில் நான் மொபைலை ஓவ் பண்ணி வச்சிடுவேன், ஆனா அந்நேரம் ஏதும் ஏஜெண்ட் கோல் அல்லது மெசேஜ் என்றாலும் தெரியாது, பிரேக்கின் போதுதான் பார்ப்பேன்..

      ஆனா இந்த வோச் வந்தபின், எனக்கு மிகவும் கெல்ப்பாக இருக்கு, டக்கு டக்கென மெசேஜ் போட்டுவிடுவேன்[பதில்], முக்கிய கோல் எனில் கவனிச்சு உடனே எடுக்க முடியுது... அத்துடன் முக்கியமாக ஸ்ரெப்ஸ் கவுண்ட் பண்ணுது ஹா ஹா ஹா... இப்படி சிலபல நன்மைகள் இருக்குது.[நான் நேரம் பார்ப்பதைபோல இருக்கும், ஆனா பதில் போட்டு விடுவேன், இல்லை எனில் மொபைலைக் கையில் எடுத்துச் செய்வது கஸ்டம்:)]..

      இதில நிறைய விசயம் இருக்குது, கொஞ்ச நேரம் ஓரிடத்தில் இருந்தால், அலேட் பண்ணுது நெடுகவும் இருக்கிறாய் எழும்பி நட என ஹா ஹா ஹா..

      மற்றும்படி இடைக்கிடை.. ரெடி ஸ்ராட்ட்.. மூச்செடு.. இன்ஹீஈஈஈஈஈஈஈல்ல்ல்ல்ல்ல் எக்ஸ்ஹீஈஈஈஈஈஈல்ல்ல்ல்ல்.. இப்படிச் சொல்லி வன் மினிட் செய்யச் சொல்லுது ஹா ஹா ஹா இது பெரிய முசுப்பாத்தி எல்லாம் இருக்குது ஹா ஹா ஹா.

      இன்னும் சொல்லப்போனால், சில குழப்படிக் குழந்தைகளின் குழப்படியை அடக்க:)).. என் வோச்சைக் காட்டுவேன், பட்டினை அமுக்கி விளையாடி அமைதியாகி விடுகிறார்கள் ஹா ஹா ஹா...

      //இவ்வளவு விலைக்கு ஏற்ற பொருள் இல்லை என்று நான் நினைக்கிறேன்//
      இது உண்மையேதான், மொபைல் போதுமே.. இதுவெல்லாம் முக்கியமில்லை...

      மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன்.

      Delete
    2. இன்னொன்று சொல்ல தவறிட்டேன் நெல்லைத்தமிழன், முக்கியமாக நோட்டிபிகேசன் போட்டு வச்சிடுவேனெல்லோ புளொக்ஸ் இல்:)).. அப்போ அதிரா வேர்க்கில நிக்கிறா:) இப்போ பிஸியா இருப்பா என நினைச்சு:) அஞ்சு கொமெண்ட்ஸ் இல் மின்னி முழக்கினால் உடனுக்குடன் எனக்குத் தெரிஞ்சிடும் ஹா ஹா ஹா:)).. எதுக்குப் பயன்படுதோ இல்லையோ:)) அஞ்சுவைப் பிடிக்க இது எனக்கு பேருதவி பண்ணுது ஹா ஹா ஹா:))

      Delete
  29. வணக்கம் அதிரா சகோதரி

    பதிவு அருமை. அதை விட முதல் பாடல் மிக அருமை. முதுமையில் வரும் அன்பு எதற்கும் நிகரற்றது. வாழ்ந்த காலத்திற்கு அது ஒரு அத்தாட்சி. ரசித்தேன்.

    தாங்கள் அறிமுகப்படுத்திய வாட்சைப் போல என் மகன் சின்னவரும் ஒன்று வைத்திருக்கிறார். அதில் பல சூட்சுமங்களை விளக்கினார். என்னை என் செல்லிலிருந்து ஃபோன் செய்ய சொல்லி அதில் வருவதை காண்பித்தார்.ஆனால் அதுவும் இந்த மாடலா எனத்தெரியவில்லை.
    தாங்கள் காண்பித்த வாட்ச் படங்கள் அழகாக இருக்கிறது. தாங்கள் தந்த விபரங்களும் சுவாரஸ்யமாக இருந்தது. இனிப் போகப் போக ரிங்கிலும் இந்த மாதிரி வந்து விடும் என நினைக்கிறேன். (ஆல்ரெடி வந்தாச்சோ என்னவோ?) அந்த காலத்தில் மாய மோதிரம், மாய தந்திரங்கள் (சினிமா படங்கள், இல்லை புத்தகத்தில் வரும் கதைகள் என படிக்கும் போது ஆச்சரியமாகவும் இருக்கும்.) என வந்த போது நம்ப முடியாமல் இருந்தது. இப்போது விஞ்ஞான வளர்ச்சியில் இவையெல்லாமே நேரிடையாக காண்கிறோம். அந்த அற்புத வாட்ச் தங்களுக்கு பிறந்த நாள் பரிசாக கிடைத்திருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    தங்கள் மகனுக்கு வெங்காயம் என்றால் புரியவில்லை போலும். தாங்கள் "காயத்தை" வென்று பல பட்டங்களைப் பெற்று புலாலியூர்ப் பூஸானந்தா ஆகி விட்டீர்கள். தாய் எட்டடி என்றால் பிள்ளை பதினாறு அடி என்ற பழமொழி உண்டே..! விரைவில் அவரும் வெங்"காயத்தை" உணர்வார். ஹா. ஹா. ஹா.

    ஊசி இணைப்பு, ஊசிக்குறிப்பு அனைத்தும் அருமை. பூஸானந்தாவின் தத்துவங்கள் மனதில் நிறைகின்றன. அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலாக்கா வாங்கோ..

      பாட்டை நீங்களும் ரசிச்சிருக்கிறீங்க, இப்போ நீங்களும் என் பாடலைப் பார்த்து ரசிக்கத் தவறுவதில்லை நன்றி..

      //அதில் பல சூட்சுமங்களை விளக்கினார். என்னை என் செல்லிலிருந்து ஃபோன் செய்ய சொல்லி அதில் வருவதை காண்பித்தார்//

      ஹா ஹா ஹா ஓ அப்படியோ...

      //இனிப் போகப் போக ரிங்கிலும் இந்த மாதிரி வந்து விடும் என நினைக்கிறேன்.//

      மோதிரத்தையோ சொல்றீங்க, ஏற்கனவே இப்படி எல்லாம் ரகசியக் கமெராக்கள் வந்துவிட்டது... இப்படி வோச் கள் முதலில் கார்ட்டூன் படங்களில் காட்டினார்கள் இப்போ நிஜத்தில் வந்துவிட்டது.. இனி என்னவெல்லாம் வருமோ.. அந்த பழனியாண்டி முருகனுக்கே வெளிச்சம் ஹா ஹா ஹா.

      //விரைவில் அவரும் வெங்"காயத்தை" உணர்வார். ஹா. ஹா. ஹா.//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:))

      மிக்க நன்றிகள் கமலாக்கா.

      Delete
  30. Replies
    1. வாங்கோ டிடி வாங்கோ...

      அது உண்மைதான், ஆனா இதில பெரிசா பார்த்துச் செய்ய ஏதுமில்லை, எமேஜென்சிக்கே உதவுது எனக்கு... மொபைல் எடுத்துப் பேசுவதை விட, இதில டக்குப் பக்கென பதில் போடவும் பேசவும் ஈசியாக இருக்கு.. எந்த நெருக்கடியான நேரத்திலும்... மற்றும்படி கண்ணுக்கு வேலை கொடுப்பது குறைவு:).

      Delete
  31. கண்ணாடி அதிரா... விரைவில்...!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஒரு கதை சொல்றேன் கேளுங்கோ:))..

      எனக்குக் கண்ணாடி போடுவது எனில் மிகவும் ஆசை:), உண்மையில், இங்கு 2 வருடத்துக்கொருதடவை ஐ ரெஸ்ட் அனைவருக்கும் உண்டு, அழைப்பார்கள்.

      போன தடவை போனபோது கண்ணாடி தாங்கோ என்றேன், உனக்கு கண் நல்லாயிருக்கு தரமாட்டேன் என்றிட்டார் ஒப்..ரீஷியன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. விட்டுவிட்டு வந்திட்டேன்.

      இம்முறை சமீபத்தில் போனேன், கண்னாடி வேணும் என்றேன்.. எதுக்கு இப்போ என்ன பிரச்சனை கண் நல்லாத்தானே இருக்குது என்றார்.. இல்லை கண் ரயேட் ஆகுது என்னவெனப் பாருங்கோ என்றேன், செக் பண்ணிப்போட்டு கண்ணை ஸ்ரெயின் பண்ணுகிறாய் போலும், ஓவரா கொம்பியூட்டர் மொபைல் பார்க்கிறாயோ என்றாய்.. சே..சே.. அப்படி எல்லாம் இல்லை ஆனாலும் கண் ரயேட்டாகுது என்றேன்:), அப்போ சரி ரீடிங் கிளாஸ் தருகிறேன் எனத் தந்தார்... கொண்டு வந்து போட்டால், போடாமல் இருக்கும்போதுதான் நல்லா இருக்குது, போட்டால் என்னமோ பண்ணுது கர்ர்:)).. கழட்டி வச்சிருக்கிறேன் ஹா ஹா ஹா.

      வோச் பார்ப்பதை விட, மொபைல் ஹேம்ஸ் ஓவராக விளையாடும் பழக்கம் இருக்கெனக்கு:)).. ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
  32. வாட்ச் பற்றி பல பல செய்திகள் .....எனக்கு இது எல்லாமே புதுசு ..

    புது விசயத்தை அறிந்துக் கொண்டேன் உங்களால் இன்று அதிரா ...

    நாளைக்கி யாராவது கேட்டா டக்கு டக்கு ன்னு சொல்லுவோம் ல ..

    சூப்பர் ...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ..

      ஹா ஹா ஹா அதேதான் தெரிஞ்சமாதிரியே பேசிடலாம்.. மிக்க நன்றி.

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.