நல்வரவு_()_


Sunday, 24 November 2019

முதலாளி-தொழிலாளி

இந்த முதலாளிகள் பற்றி, சகோ டிடி ஒரு போஸ்ட் போட்டார் அப்பவே நானும் என்னிடம் இருப்பதைப் போடோணும் என நினைச்சேன், பின்னர் கரந்தை அண்ணனும் இதுபற்றிய தலைப்பில் ஒரு போஸ்ட் போட்டார்..[ஆனா என்னுடையது சற்று வேறுபட்ட போஸ்ட், தலைப்புத்தான் ஒன்று:)]  அதனால நானும் விரைவாக இதனைப் போட்டுவிட ஆசைப்பட்டு இங்கு, எழுதுகிறேன், இக்கதை படிக்க நன்றாக இருக்குது, யார் எழுதியது என்பது தெரியாது. 


எதற்கும் ஒரு அளவு வேண்டும், சிலர் தாம் நல்லபிள்ளை எனப் பேர் எடுக்க வேண்டும், அப்படி எனில் சம்பளமும் கூட்டித்தரப்படலாம் என்றெல்லாம் நினைத்து, ஓவராக, குடும்பத்தைக்கூடக் கவனிக்காமல் வேலையே கதி என உழைப்போரும் உண்டு, ஆனா பலன் கிடைக்காதபோது, ஹையோ அநியாயமாக நம் நேரத்தை ஒதுக்கினோமே, குடும்பத்தைக் கூடச் சரியாக கவனிக்காமல் தொழிலே கெதி என வாழ்ந்தும் என்னத்தைக் கண்டோம் என வருந்துவதும் உண்டு.

நாம் வாங்கும் சம்பளத்துக்கும், நம் மனட்சாட்சிக்கு விரோதமில்லாமலும் நடந்தாலே போதும். ஒன்றை நினைவில வைத்துக் கொள்ள வேண்டும்..
“நாம் எவ்வளவுதான் உடம்பில் எண்ணெயைப் பூசிவிட்டு, மண்ணிலே உருண்டாலும், நமக்கு ஒட்டுவதுதான் ஒட்டும்”..  நமக்காக அளந்ததுதான் அளவு. அதனால நம் உடல் நிலையையும், குடும்பத்தையும் கவனிக்கத் தவறிடக்கூடாது.  சரி சரி எனக்குப் பாருங்கோ ஓவரா அலட்டுவது பிடிக்காது:), அதனால கதைக்குள் போவோமா, இது ஒவ்வொரு எழுத்தாக ரைப் பண்ணிப்போடும் கதையாக்கும்.. கொப்பி பேஸ்ட் அல்ல.

 
வியாபாரி ஒருவர், தன் ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளை, தன் மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்று, பக்கத்து ஊரில் விற்பது வழக்கம். ஒருநாள் அந்த வண்டில் மாடு, வியாபாரியிடம் வந்து கேட்டது “எஜமான் இரண்டு ஆண்டுகளாக நான் உங்களுக்கு வேலை செய்கிறேன், நான் செய்யும் வேலைக்கு, நீங்கள் எனக்குக் கொடுக்கும் புல்லின் அழவோ மிகக் குறைவு.., தயவுசெய்து என் புல்லின் அளவைக் கூட்டுங்கோ” என்றது.

அதைக் கவனமாகக் கேட்ட வியாபாரி “மாடே, நீ கடினமாக உளைப்பது உண்மையே, ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் மாடு, ஒரு நாளைக்கு 25 மூட்டைகளை வண்டியில் சுமக்கிறது, நீயோ 20 மூட்டைகளை மட்டுமே சுமக்கிறாய், நீ அதிக மூட்டைகளைச் சுமந்தால், நானும் புல்லின் அளவை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கிறேன் என்றார்.

பக்கத்து வீட்டு மாடு, பஞ்சு மூட்டைகளை மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாத இந்த மாடு, தானும் அதிக மூட்டைகளைச் சுமக்க ஒத்துக் கொண்டது. இப்படியே ஓராண்டு சென்றதும், மாடு மறுபடியும் வந்து, தன் புல்லின் அளவை அதிகரிக்கச் சொல்லிக் கேட்டது.

அதற்கு வியாபாரி “மாடே, அதிக பாரம் ஏற்றியதால், நம் பழைய வண்டி பாதிப்படைந்து விட்டது, எனவே இப்பொழுது ஒரு புதுவண்டி செய்யச் சொல்லியுள்ளேன், அதற்கு ஆகும் செலவையும் நான் பார்க்க வேண்டும், இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுத்துக் கொள், புல்லின் அளவை நிட்சயம் அதிகரிக்கிறேன்” என்றார்.

வேறு வழியின்றி, மாடும் ஒத்துக் கொண்டது. புது வண்டியும் வந்து ஆறு மாதங்களும் ஆன பின்பு, மாடு திரும்பவும் சென்று புல்லின் அளவைக் கூட்டச் சொல்லிக் கேட்டது.. அதற்கு வியாபாரி..

“மாடே, இப்போதெல்லாம் உனது வேகம் மிகக் குறைந்துவிட்டது, பக்கத்து ஊருக்குச் செல்ல, முன்பை விட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறாய், இதனால என் வியாபார நேரம் குறைந்துவிட்டது, எனவே உனக்கு அதிக புல் தருவது, இப்போதைக்கு சாத்தியமில்லை” என்றார்.

கோபமடைந்த மாடு[ஆஆவ்வ் மாட்டுப்பிள்ளைக்கு ரோஷம் வந்திட்டுதாம் ஹா ஹா ஹா:)] “எஜமான், இப்புது வண்டியின் பாரம், பழைய வண்டியை விட அதிகம், இந்தக் கனத்தையும் சேர்த்து இழுக்க வேண்டியிருப்பதாலேயே என்னால முன்பு போல விரைவாகச் செல்ல முடியவில்லை” என்றது... அதற்கு வியாபாரி..

“மாடே!.. நீ என்ன காரணம் சொன்னாலும், உன்னால் எனக்கு அதிக லாபத்தைப் பெற்றுத்தர முடியவில்லை, நான் வேண்டுமானால் உன்மேல் ஏற்றும் மூட்டைகளின் எண்ணிக்கையை வேண்டுமானால் குறைத்து விடுகிறேன், ஆனால் நீ அதிக புல் கேட்காதே” என்றார்.

தன் இத்தனை வருட உழைப்பும் வீணாகிவிடும் எனப் பயந்த மாடு “வேண்டாம் எஜமான், நான் எப்படியாவது வேகமாகச் சென்று, உங்களுக்கு அதிக லாபம் பெற்றுத் தந்து விடுகிறேன்”.. என்றது.

மறுநாள் தொடங்கி, மாடு தன் சக்தியெல்லாம் திரட்டி, வேகமாக ஓட ஆரம்பித்தது. மீண்டும், முன்பு தான் எடுத்துக் கொண்ட நேரத்திலேயே வியாபாரியைக் கொண்டுபோய்ச் சேர்த்தது. ஆனால், மிகக் கடின உழைப்பால், ஒரு மாதத்திலேயே நோயுற்று, படுத்த படுக்கையானது. வழமையாகச் சாப்பிடும் புல்லைக்கூட, அதனால் உண்ண முடியவில்லை.

சில நாட்கள் அதற்கு மருந்து கொடுத்த வியாபாரி, ஒருநாள் அதனிடம் “மாடே, உன்னை நல்ல விலைக்கு ஒருவர் கேட்கிறார், அவரிடம் உன்னை விற்று விடப் போகிறேன்” என்றார்.

“எஜமான், நான் இப்போதிருக்கும் நிலையில், என்னால் எந்த வேலையையும் செய்ய முடியாதே, இப்போ எதுக்கு என்னை விலைக்குக் கேட்கிறார்கள்” என்றது.

“உன்னை அவர்கள் வேலை செய்ய வாங்கவில்லை, உன்னைக் கொன்று, தோலை எடுக்கவே கேட்கிறார்கள்” என்றார் வியாபாரி. வியாபாரியின் பேச்சைக் கேட்ட மாட்டுக்கு அழுகை வந்தது, அழுதழுது மாடு சொன்னது..

“எஜமான், நிங்கள் செய்வது ரொம்ப அநியாயம், உங்கள் பேச்சை நம்பி, மாடாய் உழைத்ததாலேயே நோயுற்றேன், இல்லை எனில் நீண்டகாலம் ஆரோக்கியமாக இருந்திருப்பேன், நீங்கள் செய்வதெல்லாம் துரோகம்” என்றது. அதைக் கேட்ட வியாபாரி..

“நான் செய்வது துரோகம் இல்லை, ஒரு  முதலாளியின் லட்சியம், தன் தொளிலாளியிடம், முடிந்த அளவு வேலை வாங்கி அதிக லாபம் பெறுவது, அதையே நானும் செய்தேன், உன்மூலம் 5 ஆண்டுகளில் சம்பாதிக்க வேண்டியதை மூன்று ஆண்டுகளிலேயே சம்பாதித்து விட்டேன், இப்போ உன்னை விற்பதன் மூலமும் பணம் ஈட்டப்போகிறேன், என்னுடைய அதிக லாபம் பெறும் நோக்கம் நிறைவேற, உன்னுடைய ஆசையை என் மூலதனமாக்கிக் கொண்டேன், நீ ஆரம்பித்திலேயே சுதாகரித்துக் கொண்டிருந்தால், தப்பித்திருக்கலாம்” என்றார்.

தன் முட்டாள்தனத்தை எண்ணி, மாடு நொந்து அழுதது.

இப்படித்தான் சில நிர்வாகங்களின் நோக்கமும், ஊழியர்களிடமிருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ, அவ்வளவு வாங்கிக்கொள்வார்கள். எனவே ஊழியர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.
😆😆😆😆😆😆

ஊசி இணைப்பு
ஆஆஆ மொம்மி:) பிடிச்சிட்டேன், விரதம் முடிஞ்சுபோச்செல்லோ மசாலா ரெடி பண்ணுங்கோ பிர்ராஆஆஆணிக்கு:))

ஊசிக்குறிப்பு:
💓💓💓💓💓💓

115 comments :

  1. [im]https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSGK-DH_kClU4nHlABNUGWIF8ovXm_LlAujEYcwhOIdzFxPgYz-&s[/im]

    ReplyDelete
  2. இப்போ கார்த்திகை பிறையை கேலி பண்றதா வேணாமா ஒன்னும் புரியலை :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ.. இம்முறை ட்றுத்தும் ஓடி வந்தார்ர் ஆனா அவருக்கு நீ பெயினாம் அதனால ஓட முடியேல்லை:)) ஹா ஹா ஹா.

      //இப்போ கார்த்திகை பிறையை கேலி பண்றதா வேணாமா ஒன்னும் புரியலை :)//

      ஹா ஹா ஹா...எப்பூடி என் பட்டம் இம்ம்முறை உஞ்கட வாயை எல்லாம் அடைச்சுப் போட்டுதே:)).. ஹா ஹா ஹா நான் சிம்பிளாத்தான் நினைச்சு வச்ச்சேன்:), நீங்க பெரிய அளவில நினைச்சுப் பயந்திட்டீங்க... அதனால மீ தப்பிட்டேன்ன்:)

      Delete
  3. யாராச்சும் கார்த்திகை பிறையின் முக்கியத்துவத்தை சொல்லுங்க ப்ளீஎச் 

    ReplyDelete
    Replies
    1. ப்ளீஸ்....   ப்ளீஸ்....

      Delete
    2. மூன்றாம் பிறையை வணங்குவார்கள் ஏஞ்சல், சிவபெருமான் திருமுடிமேல் அணிந்து கொண்டார் அதனால்.

      Delete
    3. சந்திரன் மனகவலைகளை போக்குவார், கார்த்திகைப் பிறையை பட்டமாக சூடி கொண்ட அதிராவும் எல்லோருக்கும் மகிழ்ச்சியை தரட்டும். தந்து கொண்டு இருக்கிறார் தானே!

      Delete
    4. கார்த்திகை பிறையை பார்ப்பது கஷ்டம், மழை மேகம், பனிபுகையால் பார்க்க முடியாது. "கார்த்திகை பிறை பார்ப்பது போல் இருக்கே!" என்பார்கள் எப்போதாவது வீட்டுக்கு வரும் விருந்தாளியை.

      Delete
    5. ஹா ஹா ஹா நன்றி கோமதி அக்கா:)... கார்த்திகைப் பிறை எனில் சோட்டாகச் சொல்லப்போனால் மிக அரிதான ஒன்று எனப் பொருள்... அப்படி அரிதான கார்த்திகைப் பிறையை நாம் பார்க்க நேர்ந்தால் மகிழ்ச்சி பொங்குமெல்லோ:).... எல்லோருக்கும் சொல்லுவோம் நான் பார்த்தனே என:)...
      ஹா ஹா ஹா இனி அஞ்சுவால பொயிங்க முடியாதே:)
      ஸ்ஸ்ஸ் இதுக்குத்தான் அதிராவைப்போல டமில்ல டி எடுக்கோணும் என்பது:)....
      ஹா ஹா ஹா வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.... இன்று நான் லீவு போட்டிட்டென் தெரியுமோ ஆனா வெளி வேலை ஒன்றிருக்கு, அது முடிஞ்சபின் வாறேன் பதில்களுக்கு அதுவரை மன்னிச்சு... பிளீச்ச்ச்ச்ச்:)

      Delete
    6. மிக்க நன்றி அக்கா .விளக்கமாக கூறியமைக்கு ..திடீர்னு மாதம் அப்புறம் பிறைன்னா நிலா என்று தெரியும் ஆனா எதோ முக்கியத்துவம் இருப்பதா தோணினதால் அடிவாங்கி கொடிதாங்கி இம்முறை பட்டப்பெயர் கலாய்ப்பிலிருந்து எஸ்கிப்ட் :)))

      Delete
    7. இந்த மூன்றாம் பிறையைப் பத்தி இவ்வளவு சொல்றீங்களே....

      நாலாம் பிறையைப் பார்க்கிறவங்க நாய் படாத பாடுபடுவாங்கன்னு ஒரு பழமொழி இருக்கே.

      இது யாருக்கேனும் தெரியுமா?

      Delete
    8. அதான் அதிரடி, இடிதாங்கி, கார்த்திகைப்பிறையே சொல்லி இருக்காங்களே! என்ன படிக்கிறீங்க நீங்க? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! கிருஷ்ணர் நாலாம் பிறைச் சந்திரனைப் பார்த்துட்டுப் பட்ட கஷ்டம் எல்லாம் தெரியுமா, தெரியாதா? வீண் பழி சுமந்தாரே!

      Delete
    9. கார்த்திகை பிறை...மிக சிறப்பு ..

      Delete
    10. //நாலாம் பிறையைப் பார்க்கிறவங்க நாய் படாத பாடுபடுவாங்கன்னு ஒரு பழமொழி இருக்கே.

      இது யாருக்கேனும் தெரியுமா?//

      நெ.தமிழன், கீழே கீசாவுக்கான பதிலில் ஏற்கனவே சொல்லிவிட்டேன், நீங்க நோட்டிபிகேசன் வைக்காமல் என்ன பண்ணுறீங்க அங்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா:).

      Delete
  4. எச்சூஸ்மீ ..நீங்கள் வேலை செய்ய ஆரம்பிச்சி இப்போ பெரும்பகுதி நிரப்பி முடிஞ்சா ?

    ReplyDelete
    Replies
    1. எனக்குப் புரியுதில்லையே இது என்ன அஞ்சு ?

      Delete
    2. [im]https://1.bp.blogspot.com/-uVcTJHWO0LQ/XdrnvIV3zFI/AAAAAAAARaA/l7_hVUB6BIc4MX2sKpEXSmFqV-4o8Jy1gCLcBGAsYHQ/s400/70273436_448303082555353_8337831719805648896_n.jpg[/im]

      Delete
  5. /ஆனா பலன் கிடைக்காதபோது, ஹையோ அநியாயமாக நம் நேரத்தை ஒதுக்கினோமே, குடும்பத்தைக் கூடச் சரியாக கவனிக்காமல் தொழிலே கெதி என வாழ்ந்தும் என்னத்தைக் கண்டோம் என வருந்துவதும் உண்டு.//
    உண்மைதான் நானே பலமுறை நோய்வாய்ப்பட்டபோதும் சொந்த பணத்தை போட்டு கார்ட் மேக்கிங் ஸெஸ்ஸனுக்கு போவேன் பிறகு வெறுத்து கிராப்ட் டீச்சிங்கை விட்டுட்டேன் 

    ReplyDelete
    Replies
    1. உண்மைதானே, அடுத்தவர்களுக்கு உதவி செய்வதென்பது வேறு ஆனா முதலாளி பாவம் என நினைச்சு நம்மை வருத்துவதில் முக்கால்வாசி இடங்களிலும் என்ன நன்மையும் இல்லை, அலுவல் முடிஞ்சால் மறந்திடுவினம்.

      Delete
  6. /நாம் வாங்கும் சம்பளத்துக்கும், நம் மனட்சாட்சிக்கு விரோதமில்லாமலும் நடந்தாலே போதும். ஒன்றை நினைவில வைத்துக் கொள்ள வேண்டும்..
    “நாம் எவ்வளவுதான் உடம்பில் எண்ணெயைப் பூசிவிட்டு, மண்ணிலே உருண்டாலும், நமக்கு ஒட்டுவதுதான் ஒட்டும்”..  நமக்காக அளந்தது//
    ஸ்ஸ்ஸ்ஸ் தெய்வமே இன்னிக்கு பிறை முழு நிலவா ஜொலிக்குதே :)))

    ReplyDelete
    Replies
    1. //ஸ்ஸ்ஸ்ஸ் தெய்வமே இன்னிக்கு பிறை முழு நிலவா ஜொலிக்குதே :)))//

      ஹா ஹா ஹா கார்த்திகைப்பிறை என்பது வளர்பிறையாக்கும்:) இது வளர்ந்து ஜொலிச்சுக்கொண்டே இருக்கும்:))[நம்மளை நாமளேதான் புகழோணும் பின்ன அடுத்தவர்களோ வந்து புகழப்போகினம் கர்:))]

      Delete
    2. பிறை முழு நிலவா ஜொலிக்குதே :)...உண்மை உண்மை அஞ்சு ...

      நானும் வழி மொழிகிறேன்

      Delete
  7. [IM]https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQ3UbOpvrw3siW6V9pHOHm4tndTgXyuFAAOJGMfj7AX6uuNLW2mtg&s[/IM]

    கதை படித்தேன் இம்ம்புட்டு கஷ்டப்பட்டு டைப்பினதுக்கு இந்தாங்க ஒரு மேங்கோ ஜூஸ் :)

    ReplyDelete
    Replies
    1. ஆஆஅவ்வ்வ் எப்படி அடிஅடி என அடிப்பீங்க:)) இம்முறை நான் கேட்காமலேயே அதுவும் யூஸ் இல்லை ஸ்மூத்தி தாறீங்க.. வாணாம் நேக்குப் பயம்மாக்கிடக்கூ:)) ஹா ஹா ஹா.

      Delete
  8. /சில நிர்வாகங்களின் நோக்கமும், ஊழியர்களிடமிருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ, அவ்வளவு வாங்கிக்கொள்வார்கள். எனவே ஊழியர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.//
    சிறந்த தெளிவு தரும் பதிவு என்னைப்போல் புதிதாய் வேலை சேர்ந்தவர்களுக்கு முக்கியமா யூஸ் ஆகும் .

    ReplyDelete
  9. என்னது டீம் லீடரா இருப்பது கஷ்டமா ??? கர் எங்க டீம் லீடர் நைசா தம்மடிக்க ஓடுது :) தெரியுமோ 

    ReplyDelete
    Replies
    1. உங்களிடமிருந்து தப்பி ஓடுவதென்பது லேசுப்பட்ட விசயமோ?:))

      Delete

  10. //நாம் எவ்வளவுதான் உடம்பில் எண்ணெயைப் பூசிவிட்டு, மண்ணிலே உருண்டாலும், நமக்கு ஒட்டுவதுதான் ஒட்டும்”///

    ஆள் சைஸுக்கு தகுந்தாப்பல ஒட்டும் எனக்கு மிகவும் கொஞ்சமாகவும் உங்களுக்கு மிக அதிகககககககககக்ககககக்கககககககககககககககககமாகவும் ஒட்டும்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ட்றுத் வாங்கோ..

      ஓம் ஓம் நீங்க அடி வாங்கி வாங்கியே இப்போ ஓமக்குச்சியை விட மெலிஞ்சிட்டீங்களென.. பேர்த்டே கொண்டாட தன் போய்ஃபிர்ண்ட்டுடன் அம்பேரிக்கா வந்த நயன் சிஸ்டர்[ட்றுத்தின் முறையில சொன்னேன்:)] சொன்னா:)) ஹா ஹா ஹா.. அப்பூடியெனில் குறையத்தானே ஒட்டும்:)).. ஆனா அஞ்சுவுக்கு என்னைவிடக் கூட ஒட்டும் ட்றுத்:))

      Delete

  11. //பெரும் செல்வம் படைத்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது தவறு//

    பெரும் செல்வம் படைத்த நீங்கள் சொல்லும் போது அது உண்மையாக கூட இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. நீங்க என்ன சொல்ல வர்றீங்க மதுரைத் தமிழன்? அதிரா பெரும் செல்வம் படைத்தவர் என்றா? அப்படி இருந்துமா, கோவிலுக்குச் சென்ற இடத்தில் அவங்க காணில இருந்த ஆப்பிள்களை (யாருக்கும் தெரியாமல்) பறித்துச் சாப்பிட்டாங்க? அதைப் பெருமையா படம் எடுத்தும் போட்டிருந்தாங்களே

      Delete
    2. ஹா ஹா ஹா இப்பூடிக் கொமெண்ட் எல்லாம் டக்குப் பக்கென நெ.தமிழன் கண்ணில பட்டிடும்:)) ஓவரா ஆரும் பாராட்டினா மட்டும் படாதே:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      ட்றுத் சொல்லியிருப்பது பணச் செல்வத்தை அல்ல:) அதையும் தாண்டி எவ்வளவோ செல்வம் இருக்கெல்லோ:)) அதைத்தான் சொன்னவராம் நெ.தமிழன் ஹா ஹா ஹா.

      மிக்க நன்றி ட்றுத்.

      Delete
  12. கதை நல்லாருக்கு ..ஆனா மனுஷங்களோட வேலை செய்யும்போது என்ன செய்றது சொல்லுங்க ? என் பிரேக் டைமை கூட விட்டுட்டு அழுதிட்டிருந்த ஒரு பெண்மணியுடன் பேசி ஆசுவாசப்படுத்தினேன் சாட்டர்டே ..யாருமே அருகில் இல்லை அது என் வேலை நேரமில்லைன்னு பாராமுகமா இருக்க முடியலை :(

    ReplyDelete
    Replies
    1. நமக்குப் பிடிச்சிருந்தா, அல்லது நம்மை வருத்தாத எதையும் நாமாக விரும்பிச் செய்வதில் தப்பில்லையே...

      மிக்க நன்றி அஞ்சு.

      Delete
  13. //அதிகமாக வளைபவன் ஆபத்தனாவன்/// இப்படிக்கு அதிக உடம்பை வளைக்க முடியாத அதிரான்னு முடிச்சுருக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. [im]https://media1.tenor.com/images/fcef9ebb8090ed1e66beb4decfeec2d3/tenor.gif?itemid=13828708[/im]

      Delete
    2. //இப்படிக்கு அதிக உடம்பை வளைக்க முடியாத அதிரான்னு முடிச்சுருக்கலாம்//

      ஆராவது கொஞ்சம் ட்றுத்தைப் பிடிச்சு வச்சிருங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)) நான் அடுத்த ஹொலிடேயில வந்து நயகராவில தள்ளோணும்:)) ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
    3. @
      Angel
      [im] https://tse3.mm.bing.net/th?id=OIP.hqmkTJ5H22KoAhvDTV8kgQAAAA&pid=Api&P=0&w=266&h=167[/im]

      Delete
  14. கார்த்திக் அங்கிள் இந்த  பாட்டும்  நல்லா இருக்கும் :) பச்சை மலைபூவு 

    ReplyDelete
    Replies
    1. முத்துமாமாவின் மகனின் பாட்டுக்கள் எல்லாமே சூப்பர்தானே அஞ்சு:)) ஹா ஹா ஹா..

      Delete
  15. கார்த்திகை மாதம் இம்போர்ட்டண்ட் மாசமென்பதால் தப்பிச்சீங்க :) இல்லேனா அரை /அறை முறை சிறை/தரை திரைன்னு  பொறைன்னு கலாய்ச்சிருப்பேன் :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நான் கார்த்திகை மாதம் என்பதை நினைச்சுச் சொல்லவில்லை, அந்த நினைப்பும் இருக்கவில்லை, ஏதோ தன் பாட்டில் டக்கென வந்துது வாயில, உடனே வச்சிட்டேன் :))

      நன்றி அஞ்சு அனைத்துக்கும்.

      Delete
  16. பாடல் இளையராஜாவின் ஹிட்களில் ஒன்று.  இந்தப் பாடல் இடம்பெற்ற படத்தில் இருக்கும் பாடல்கள் எல்லாமே கேட்கும் ரகம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..

      ஓம் அவரின் குரலில் வந்த பாட்டுக்கள் பெரும்பாலும் அனைத்துமே எனக்குப் பிடிச்சவையே...

      Delete
  17. முதலாளி- தொழிலாளி பற்றி நீங்களும் எழுதி விட்டீர்கள் சரி,   டிடி, கரந்தையார் எல்லாம் எழுதி இருப்பது ஜோதிஜி அவர்களின் 5 முதலாளிகளின் கதையை  கிண்டிலில் வாங்கிப் படித்து விட்டு பகிர்ந்திருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா முன்னால பின்னால எல்லாம் கட் பண்ணினால்.. “முதலாளி” என வருமெல்லோ:)) அது மட்டுமே என் கண்ணில பட்டதாக்கும்:)

      Delete
  18. எனக்கு அந்த மாட்டைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது!  இது கூடத் தெரியாத அளவிலேயே இருந்து கொலைக்களத்துக்குச் செல்கிறதே!  ஆனால் எங்கள் பணிகளில் நாங்கள் கொலைக்களத்துக்கு அனுப்பப்படுவோம் என்பது தெரிந்தே வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை.

    ReplyDelete
    Replies
    1. கல்ஃப் தேசங்களில் 'காலாவதிக்கு' மிகுந்த முக்கியத்துவம் உண்டு. பொருள் எக்ஸ்பையர் தேதி ஆகிவிட்டால் கடைகளில் டிஸ்ப்ளேயில் வைத்திருப்பது பெரும் குற்றம்.

      நாம பொதுவா அரிசி வாங்கினோம்னா அதுக்கு காலாவதி கிடையாது என்றே நினைப்போம். ஆனா இந்திய ரீடெயில் கம்பெனிகளில் சில, பாதாம், ஜீனி, அரிசி போன்ற பல பொருட்களை காலாவதி நாட்கள் முடியுமுன் (அல்லது முடிந்த பிறகு) ரீ பேக் பண்ணிடுவாங்க.இதனை பெரும்பாலும் வேர்ஹவுஸ்லதான் செய்வாங்க.

      ஒரு தடவை காபிப்பொடியை அப்படி ரீ பேக் பண்ணியபோது மினிஸ்டரில இருந்து செக் பண்ண வந்தவங்க பார்த்துட்டாங்க. கம்பெனி, எங்கள் அனுமதி இல்லாமல் வேர்ஹவுஸ் மேனேஜர் இதனைச் செய்துட்டார் என்று கம்பெனியை விட்டுத் தூக்கிட்டாங்க. ஆனா கம்பெனி இந்த மாதிரிச் செய்யச் சொல்லாமல் ஒருவரும் செய்யமாட்டாங்க. மாட்டிக்கிட்டா, தாங்கள்தான் பலியாடு என்பது அவங்களுக்குத் தெரியும்.

      Delete
    2. //எனக்கு அந்த மாட்டைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது! இது கூடத் தெரியாத அளவிலேயே இருந்து கொலைக்களத்துக்குச் செல்கிறதே!//

      உண்மைதான், அதுவும் ஏதோ ஒரு நம்பிக்கையில் முதலாளியை நம்பி நம்பியே கெட்டுவிட்டது போலும்.. இதனாலதான் பலசமயம் எண்ணத்தோணும், நல்லவர்களுக்கு ஏன் காலமில்லை என்பது..

      //ஆனால் எங்கள் பணிகளில் நாங்கள் கொலைக்களத்துக்கு அனுப்பப்படுவோம் என்பது தெரிந்தே வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை.//
      ஹா ஹா ஹா சில சமயங்களில் தவிர்க்க முடியாமல் சந்தர்ப்பம் சூழ்நிலை அமைந்திட்டால் என்ன செய்வது, சில செளகரியங்களுக்காக, இப்படிச் சிலதை பொறுத்துக் கொண்டு வேலை செய்வோர் பலர் இருக்கிறார்கள்.

      Delete
    3. //போன்ற பல பொருட்களை காலாவதி நாட்கள் முடியுமுன் (அல்லது முடிந்த பிறகு) ரீ பேக் பண்ணிடுவாங்க//


      ஹா ஹா ஹா 100 வீதம் உண்மை, முதலில் 2 வருடம் கொடுத்து பின்பு திரும்ப புது ஸ்ரிக்கர் ஒட்டுவார்கள் நானும் பார்த்திருக்கிறேன். முதலாளி சொல்கிறாரே என தொழிலாளி செய்வதும், பின்னர் மாட்டுப்பட்டால் முதலாளியைக் காட்டிக் கொடுக்காமல் நடப்பதும் நம் நாட்டில் சகஜம்...

      ஒரு தடவை இங்கு பருப்பு/ரவை ஏதோ ஒன்று, சேல் எனப் போட்டிருந்தது, ஆனா விலை ஒட்டியிருக்கவில்லை, நான் திகதியைக் கவனிக்கவில்லை, அதை எடுத்து அங்கு வேர்க் பண்ணுபவரிடம், விலை என்ன என செக் பண்ணும்படி கேட்டேன், அவர் செக் பண்ணிவிட்டு சொன்னார்.. சொறி இது நேற்றுடன் டேட் முடிஞ்சுபோச்சுது என உடனேயே என் முன்னாலேயே காபேஜ் பின்னுள் போட்டு பத்துத்தரம் சொறி சொறி எனச் சொன்னார்.

      அது பழுதாகவே இல்லை, பார்க்க நன்றாகவே இருந்தது.. இங்குதான் வண்டோ புளுவோ எதுவும் வராதே, அப்படி வந்தால் அது பெரிய இஸூவாகிடும்.

      Delete
  19. செய்யும் வேலை குடும்பத்தை நிரப்புவதும், அதற்காக குடும்பத்தைப் புறக்கணிக்கக் கூடாது என்பதெல்லாம் சரிதான்.  நான் அப்படிச் செய்வதில்லை!

    ReplyDelete
    Replies
    1. //நான் அப்படிச் செய்வதில்லை!//
      மிக நல்ல விசயம்...அப்படிச் செய்யக் கூடாதுதான், அத்துடன் வேலையின் எரிச்சலை வீட்டில் காட்டுவதும் தப்பு..

      Delete
  20. அதிகமாக வளைபவன் ஆபத்தானவன் என்பதை எங்கள் அனுபவத்திலேயே நாங்கள் நிறைய கண்டு எங்களுக்குள் பேசிக்கொள்வோம்.  (இங்கு எங்கள் என்பது எங்கள் அலுவலகம்!)

    ReplyDelete
    Replies
    1. உண்மைதானே, சிலர் ஓவராக எல்லோருக்கும் நல்லபிள்ளையாகப் பேசுவார்கள், அப்படி எனில் நம்ப முடியாது, தனக்கென ஒரு கருத்தோடு இருக்கோணும், அனைவருக்கும் ஆமாம் சாமிபோட்டால்.. பயப்படவேண்டிய பேர்வழி அவர்கள் ஹா ஹா ஹா.

      Delete
  21. கடைசிப் பட விளக்கம் எனக்குதானே?  நான் கீதா அக்கா தளத்தில் கொடுத்த கமெண்ட்டுக்கு பதில்!!

    ReplyDelete
  22. பாவம் அந்த கோழிக்குஞ்சு.   எவ்வளவு நம்பிக்கையுடன் அந்தக் குட்டிப்பூனையிடம் அடைக்கலமாகி இருக்கிறது....   பிரியாணி வேண்டுமோ பிரியாணி...

    ReplyDelete
    Replies
    1. //பாவம் அந்த கோழிக்குஞ்சு.//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது கோ.ழி..க்க்க்க்க்க் குஞ்சுபோலவா தெரியுதூஊஊஊஊஊஉ?:))..

      //பிரியாணி வேண்டுமோ பிரியாணி.//

      ஹா ஹா ஹா

      மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

      Delete
  23. வணக்கம் அதிரா சகோதரி

    முதலாளி தொழிலாளி கதை நன்றாக உள்ளது. இடையிடையே வந்த வாக்கியங்கள் சிறப்பு. ஊசிக்குறிப்பின் தத்துவ முத்துக்கள் மிக அருமை.

    ஓ.. பட்டம் மாறினதால் கார்த்திக் பட பாட்டா? . இல்லை கார்த்திக் பாட்டை பார்த்ததும் கார்த்திகைக்கே திகைப்பூட்டும்படி பட்டம் மாறி விட்டதா? பாட்டு நன்றாக உள்ளது. சகோதரி ஏஞ்சல் கூறுவது போல் "பச்சை மலை பூவு" பாட்டும் நன்றாக இருக்கும். பதிவு அருமையாக உள்ளது. ரசித்தேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலாக்கா வாங்கோ..

      //ஓ.. பட்டம் மாறினதால் கார்த்திக் பட பாட்டா?//

      ஓ இப்பூடி ஒன்றிருக்கோ.. ஹா ஹா ஹா அது தானாக அமைந்துவிட்டது...

      மிக்க நன்றிகள் கமலாக்கா.

      Delete
  24. நல்ல அதே சமயம் அடிக்கடி படித்த கதை. நாம் எல்லோருமே ஒரு வகையில் இப்படித்தானே இருக்கோம். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வேலை செய்வது, அப்புறமாக்கவனிக்க ஆள் இல்லையேனு அழுவது! முதலாளிக்கும், தொழிலாளிக்கும் உள்ள வித்தியாசம் நல்லாவே புரிந்தது தானே! இந்தக்கதை சொல்லி வேறே விளக்கணுமா!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ..

      ஓ இக்கதை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமோ? அப்போ எழுதியது ஆரெனத் தெரியுமோ கீசாக்கா?..

      //முதலாளிக்கும், தொழிலாளிக்கும் உள்ள வித்தியாசம் நல்லாவே புரிந்தது தானே! இந்தக்கதை சொல்லி வேறே விளக்கணுமா!//

      ஹா ஹா ஹா அப்படிச் சொல்ல முடியாது, சிலருக்கு தெரிஞ்சிருந்தாலும் விழிப்பு வராது, இப்படி எங்காவது படிக்கும்போது கொஞ்சம் உசார் ஆவார்கள்.. இக்கதையை நான் சிலருக்கு அனுப்பினேன், மிகவும் மகிழ்ச்சிப் பட்டார்கள், உண்மையில் நல்லதொரு கதை, நாம்தான் உசாராக இருக்கோணும் என, அப்படி, ஒருவர் என் கதை படிச்சு உசாரானாலும் மகிழ்ச்சிதானே:))..

      Delete
  25. அது சரி, கார்த்திகைப் பிறை கண்ணுக்கே தெரியாதே! நீங்களும் என்ன மந்திரவாதி போல மறைஞ்சு இருந்து பார்க்கிறீங்களா? கார்த்திகைப் பிறையைக் கண்ட கண்ணால் கைப்பிடி நாற்றைப் போட்டுக் கரை ஏறு. என்பார்கள். ஏனெனில் கார்த்திகைக்குப் பின் மழை இருக்காது. அதுக்கும் ஒரு பழமொழி உண்டு. கார்த்திகைக்குப் பின் மழையும் இல்லை ; கர்ணனுக்குப் பின் கொடையும் இல்லை என்பதே அது. மூன்றாம் பிறைதரிசனம் என்பது அமாவாசைக்குப் பின் வரும் 3 ஆம் நாள் சந்திரனை தரிசனம் செய்வது விசேஷம் என்பார்கள். பொதுவாகச் சித்திரை, வைகாசி மாதங்களிலே கூட 3 ஆம் பிறையை மாலை சீக்கிரமே வானத்தைப் பார்த்துக்கொண்டு காத்திருந்தால் மேற்கே மறையும் போது சந்திரன் தரிசனம் தருவான். கோடை நாளான அப்போதே இப்படி எனில் கடும் மழைக்காலமான கார்த்திகையில் எப்படிப் பிறை பார்ப்பது! மழை மேகங்கள் சூழ்ந்து இருந்தால் பிறையே கண்ணுக்குத் தெரியாது. அதையும் மீறிப் பார்க்க நேர்ந்து விட்டால் சந்தோஷம் எல்லை மீறும். இதைத் தான் "கார்த்திகைப் பிறையைக் கண்டாற்போல்!" என்பார்கள். அதிரடியும் இனிமேல் கார்த்திகைப் பிறையா? :))))))

    ReplyDelete
    Replies
    1. ///அது சரி, கார்த்திகைப் பிறை கண்ணுக்கே தெரியாதே!//

      ஹா ஹா ஹா அதே அதே.. அதைக் காண்பது அவ்வளவு ஈசியல்லவே:)) அப்பூடித்தான் அதிராவுமாக்கும் ஹா ஹா ஹா ஹையொ முறைக்காதீங்கோ:))..

      //ஏனெனில் கார்த்திகைக்குப் பின் மழை இருக்காது.//
      ஓ..

      ஓ இதுபற்றி நிறையத் தகவல்கள்.. நான் என் வாழ்நாளில் ஊரில் ஓரிரு தடவைகள் கார்த்திகைப்பிறை பார்த்ததுண்டு, மற்றும்படி ஒவ்வொரு மாதமும் வளர்பிறை.. 3ம் பிறை பார்த்தால் நல்லதென்பினம், ஆனா 4ம் பிறைதான் கண் முன்னே வலிய வந்து நிக்கும்.. என்னைப் பார் என் அழகைப்பார் என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. 4ம் பிறை பார்த்தால் “நாய் அலைச்சல்” என்பினம் அம்மாதம் முழுக்க ஹா ஹா ஹா:))..

      //அதிரடியும் இனிமேல் கார்த்திகைப் பிறையா? :))))))//
      யேஸ்.. வளர்பிறையாக்கும்:)) சொன்ன வார்த்தை மீறக்கூடாதெல்லோ ஹா ஹா ஹா மிக்க நன்றி கீசாக்கா.

      Delete
  26. மாட்டின் நிலைதான் பெரும்பாலான இடங்களில் நடக்கிறது.

    ReplyDelete
  27. எனக்கு கார்த்திகை சோமவார விரதம் இன்று காலை ஆரம்பித்து விட்டது. இரவுதான் சாப்பிடுவேன். மாவிளக்கு வைத்து சாமி கும்பிட்டு விட்டு.
    மசாலா எல்லாம் கிடையாது இன்று.

    ReplyDelete
    Replies
    1. ஓ கோமதி அக்கா வாங்கோ வாங்கோ.

      ஓ நீங்கள் சோமவாரம் பிடிப்பதுண்டோ? நான் பிடிப்பதில்லை, எங்கட அம்மா, தான் படிக்கும் காலத்தில் உங்களைப்போல பிடிப்பாவாம், முதல்நாள் ஒரு நேரச் சாப்பாடாக இருந்தோ என்னமோ எனச் சொல்லுவா, ஆனா இப்போ அவ விரதமில்லை ஆனா சைவமாக இருப்பா.

      ஓ ஒவ்வொரு திங்களும் மாவிளக்குப் போடுவீங்களோ? நான் கந்த சஷ்டிக்குப் போட இருந்தேன் ஆனா முடியவிலை, பாதிக் காலம் மயக்க நிலைபோல இருந்தேன் பால் பழத்தால் ஹா ஹா ஹா.

      Delete
    2. ஒவ்வொரு சோமாவாரத்திற்கும் மாவிளக்கு செய்வோம்.
      காலை , மதியம் சாப்பிடாமல், பச்சரிசி சாதம் பொங்கி, மாவிளக்கு பார்த்து சாப்பிடுவார்கள் சிவன் தரிசனம் செய்து வந்த பின்.

      இங்கு சிவன் கோவில்களில் சங்காபிஷேகம் நடை பெறும் அதை பார்த்த வந்த பின் சாப்பிடுவோம்.

      நான் இருந்த ஊர்களில் திருவெண்காடு, மாயவரத்தில் சிறப்பாக நடைபெறும்
      இங்கும் நடக்கும் பார்க்க முடியாது கூட்டமாய் இருக்கும். வீட்டுக்கு பக்கத்தில் உள்ள சின்ன சிவன் கோவிலில் 108 சங்காபிஷேகம் செய்தார்கள் நன்றாக பார்க்க முடிந்தது கூட்டம் இல்லாமல் இடிபடாமல் பார்த்து வந்தேன் நேற்று.

      Delete
    3. நன்றி கோமதி அக்கா, விபரமாக சொன்னதுக்கு.

      Delete
  28. ஆ..இந்த பூஸோட அலப்பறை (பட்டங்களை) தாங்கமுடியல. கார்த்திகைபிறையிடம் வலதுகொப்பி எடுத்தனீங்களோஓஓ. 27ந்திகதி
    பாட்டு நல்லாயிருக்கு. இடையிடையே போட்டிருக்கும் கருத்துகள் நன்றாகயிருக்கு. .
    நல்லதொரு சிந்திக்க வைக்கும் ஒரு கதை.
    இதேமாதிரி ஆட்கள் இருக்கிறார்களே. கண் கெட்டபின் சூரியநமஸ்காரம் செய்வதில் பலனில்லை.
    ஓடிஓடி உழைத்து தேகநலனை,,குடும்பத்தை,குழந்தைகளை கவனிக்காது பின் நோய்வாய்பட்டபின் வருந்துகிறவர்கள் இங்குண்டு. இதனால் அவர்கள் குடும்பத்தினர்தான் பாதிக்கபடுகிறார்கள் கண்கூடாக பார்க்கிறோம்.
    ஊசிகுறிப்பும் அருமை. பாவம் மவுஸ்

    ReplyDelete
    Replies
    1. இம்மாதம் 28திகதிதான் வருகிறது. திகதி மாறி எழுதி ,முடிக்கவும் இல்லை வசனத்தை. 🤔 🤔

      Delete
    2. வாங்கோ அம்முலு வாங்கோ..

      //ஆ..இந்த பூஸோட அலப்பறை (பட்டங்களை) தாங்கமுடியல.//

      ஹா ஹா ஹா இதுக்கே இப்பூடிப் பதறினால் எப்பூடி?:))..

      //கார்த்திகைபிறையிடம் வலதுகொப்பி எடுத்தனீங்களோஓஓ. 27ந்திகதி//

      ஹையோ இதைப்பார்த்து என்னமோ ஏதோ சொல்றீங்களெனப் பதறிப்போயிட்டேன் கர்:)) 3ம் பிறையைச் சொன்னீங்களோ.. அப்போ நானும் நினைவாகப் பார்க்கிறேன்..

      இங்கு எல்லோரும் இம்மாதம் 28 ஆம் திகதி.. அதாவது வியாழக்கிழமை மறக்காமல் பிறை பாருங்கோ.. தெரிஞ்சால் சொல்லுங்கோ.

      இங்கு இப்பவே பகலெல்லாம் இருக்கு.. ஒரே இருட்டு.. இந்த அழகில் எப்படிப் பிறை தெரியும்.

      // பாவம் மவுஸ்//

      நீங்க எந்த மவுஸ்ஸ்ஸ்:) ஐச் சொல்றீங்க?:) ஹா ஹா ஹா..

      மிக்க நன்றிகள் அம்முலு.

      Delete
    3. //இங்கு இப்பவே பகலெல்லாம் இருக்கு.//
      பகலில்லாமல் எனச் சொல்ல வந்தேனாக்கும்:))

      Delete
    4. 3ம் பிறையை...நானும் பார்க்க முடியுதா ன்னு பார்கிறேன் ...

      Delete
    5. அனு பிறை தெரிஞ்சதோ? நான் பார்த்தேன் வானம் கிளீனாகத்தான் இருந்தது, ஆனா அடிக்கடி பார்க்க மறந்திட்டேன், தெரியவில்லை.

      Delete
  29. முதலாளி, தொழிலாளி இருவருமே விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் தான்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் கோமதி அககா, சில இடங்களில் முதலாளி நல்லவராக இருப்பின், தொழிலாளி ஏமாற்றுவதும் உண்டுதானே.

      Delete
  30. //நாம் எவ்வளவுதான் உடம்பில் எண்ணெயைப் பூசிவிட்டு, மண்ணிலே உருண்டாலும், நமக்கு ஒட்டுவதுதான் ஒட்டும்”///
    என் கணவர் சொல்வது "நமக்கு என்ன உண்டோ அது உண்டு"

    ReplyDelete
    Replies
    1. என் கணவர் தான் நான் சொன்னதைச் சொன்னார், தனக்கு படிக்கும் காலத்தில் ஒருவர் சொன்னதாக ஹா ஹா ஹா..

      எங்களுக்கு கிடைக்க இருப்பதை ஆராலும் தடுக்க முடியாது, அது போல எங்களுக்கு கிடைக்காது என இருப்பின், அதை ஆராலும் பெற்றுத்தரவும் முடியாது.. ப.கீதை நினைவுக்கு வருமெல்லோ:))

      Delete
    2. //எங்களுக்கு கிடைக்க இருப்பதை ஆராலும் தடுக்க முடியாது, அது போல எங்களுக்கு கிடைக்காது என இருப்பின், அதை ஆராலும் பெற்றுத்தரவும் முடியாது.. ப.கீதை நினைவுக்கு வருமெல்லோ:)) // எனக்கு "கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கறது கிடைக்காது" என்று முத்து படத்தில் சூப்பர் ஸ்டார் பேசிய டயலாக்தன நினைவுக்கு வருகிறது.

      Delete
    3. பானுமதி அக்கா, இந்த வசனத்தின் சாராம்சம் ஒன்றுதான், ஆனா பலரும் தம் மொழியில் பலவிதமாக வெளிப்படுத்தி வருகிறார்கள், அதில் நமக்குப் பிடிச்ச வசனம் பேமஸ் ஆகிடுது:).

      Delete
  31. //குடும்பத்தைக் கூடச் சரியாக கவனிக்காமல் தொழிலே கெதி என வாழ்ந்தும் என்னத்தைக் கண்டோம் என வருந்துவதும் உண்டு.//

    குடும்பத்துக்கு உழைக்கிறேன், குடும்பத்திற்கு உழைக்கிறேன் என்று குழந்தைகள் தூங்கிய பின் வருவார்கள். அவர்கள் குழந்தைகளின் மழலை சொற்களை கேட்க முடியாமல் பின்னர் வருந்தியவர்கள் உண்டு. இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது எங்க்கிருந்த போதும் அதை நாடி ஓடு பாடல் நினைவுக்கு வருது. அந்த பாடலில் நிறைவில் வரும் வரியை கேட்டு பாருங்கள்.

    https://www.youtube.com/watch?v=dyLhW-ehTgQ

    ReplyDelete
    Replies
    1. உண்மை கோமதி அக்கா, காலம் கடந்தபின் வருந்தி என்ன பலன்..

      பலதடவைகள் காதில் விழுந்த பாட்டுத்தான், இப்பவும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.. நடிப்பது ஏ எம் ராஜாவும் தேவிகாவுமோ... அழகிய அர்த்தம் நிறைந்த வரிகள்.

      மிக்க நன்றிகள் கோமதி அக்கா.

      Delete
    2. நடிப்பது பாலாஜி நடிகை யார் என்று தெரியவில்லை. அவர் சிறிது நேரம் தான் வருவார், அப்புறம் சரோஜாதேவி நடிப்பார்.

      Delete
    3. //குடும்பத்தைக் கூடச் சரியாக கவனிக்காமல் தொழிலே கெதி என வாழ்ந்தும் என்னத்தைக் கண்டோம் என வருந்துவதும் உண்டு.//
      திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் குடும்பத்திற்காக நேரம் ஒதுக்கியதே இல்லையாம். சினிமாவிலிருந்து ஒய்வு பெற்று இனிமேல் மனிவியி விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்த பொழுது அவர் மனைவி இறந்து விட்டாராம். இதைக் கூறிய அவர் நீங்கள் என்ன வேலை பார்த்தாலும் உங்கள் குடும்பத்திற்காக நேரம் செலவிடுங்கள் என்றார்.

      Delete
    4. ஓம் பானுமதி அக்கா இப்படிப் பல கதைகள் உண்டுதான். அதிலும் சினிமாக்காரர்களைக் கேட்டால் அனைவரும் சொல்லும் பதில், குடும்பத்தைக் கவனிக்காமல் உழைத்தேன், மனைவிதான் கவனித்து வளர்த்தார் என.. சிவகுமார் அவர்கள் எங்கோ சொன்னார், தன் பிள்ளைகள் என்ன துறையில் படிக்கிறார்கள் என்றுகூட தனக்கு அப்போ தெரியாதாம், இதெல்லாம் ரொம்ப ஓவர்தானே. அப்போ எதுக்கு திருமணம்? தனியே வாழ்ந்திருக்கலாமே..

      Delete
  32. தங்களது விரிவுரை அருமை ரசிக்க வைத்தது.

    ReplyDelete
  33. காலையிலேயே இடுகையைப் படித்துவிட்டேன்.

    நீங்கள் எழுதிய 'வியாபாரி' கதை என் மனதை மிகவும் பாதித்துவிட்டது. இதைப் பற்றி பின்னொரு நாளில் சொல்கிறேன்.

    அலுவலகம் என்பது பொதுவாக 'உபயோகப்படுத்திக்கொள்ளக்கூடியது'.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெ.தமிழன் வாங்கோ..

      நீங்கள் உடனேயே மொபைலில் படிச்சுவிடுவீங்கள் என எனக்குத் தெரியும்.. அதனாலதான் போஸ்ட் பார்த்தீங்களோ இல்லையோ இன்னும் காணவில்லையே என நினைப்பதில்லை:), நேரம் கிடைக்கையில் வந்துடுவீங்களெனத் தெரியும்..
      இருப்பினும் நீங்க பாறைனுக்கே வந்திடுங்கோ:)).. சென்னையில உங்களுக்கு கிச்சினும் கிடைக்குதில்ல:)) கொமெண்ட்ஸ் போட நேரமும் ஒழுங்காக் கிடைக்குதில்ல ஹா ஹா ஹா:)).

      //நீங்கள் எழுதிய 'வியாபாரி' கதை என் மனதை மிகவும் பாதித்துவிட்டது. இதைப் பற்றி பின்னொரு நாளில் சொல்கிறேன்.//

      ஓ நன்றி நன்றி... நேரம் கிடைக்கையில் சொல்லுங்கோ.

      //அலுவலகம் என்பது பொதுவாக 'உபயோகப்படுத்திக்கொள்ளக்கூடியது'.//

      புரியவில்லையே...

      Delete
    2. //உபயோகப்படுத்திக்கொள்ளக்கூடியது// - நம்ம மேனேஜர் நல்லவனா இருக்கானே என்று நினைத்து ரொம்ப லாயலா இருப்போம். ஆனா மேனேஜர் அவன் வேலைக்காக நம்மை உபயோகப்படுத்திக்கொள்வான். பிரச்சனை வரும்போது கழட்டிவிடத் தயங்கமாட்டான். நம்மை வைத்து, அவனுக்கு என்ன லாபம் கம்பெனியிலிருந்து கிடைக்கும் (டார்கெட் அச்சீவ் பண்ணுவது, டிபார்ட்மெண்ட் குறைந்த மேன்பவர்ல நடத்துவது, டிபார்மெண்ட் ஆட்களுக்கு குறைவான இன்கிரிமெண்ட் போடுவதற்கு உபயோகித்துக்கொள்வது என்பது போல்)

      என் தம்பி ரொம்ப வருடங்களுக்கு முன்னால் என்னிடம் சொல்லியிருக்கான். ஆபீஸில் 'நண்பர்கள்' என்பது கிடையாது, 'எதிரிகள்' என்பதும் கிடையாது. எல்லாரையும் ஒரு டிஸ்டன்ஸ்ல வைக்கணும் என்று.

      Delete
    3. சொந்த வேலை ஒன்றில் (வீடு சம்பந்தப்பட்டது) கொஞ்சம் பிஸியா இருக்கேன் அதிரா. சில பதிவுகளுக்கு வர முடியுது. பின்னூட்டம் போட அதற்கான மனநிலை வருவதில்லை. ரொம்ப குறைவான இடுகைகளையே படிக்கிறேன்.

      2021 middle வரைல நேரம் சரியில்லை என்று தோன்றுகிறது.

      எங்க பின்னூட்டம் போட்டால் கொஞ்சம் மனதுக்கு ரிலாக்ஸா இருக்குமோ, அங்குதான் பின்னூட்டம் போடுகிறேன், தற்போது. அப்புறம் ரெகுலராக படிக்கின்ற தளங்கள். அவ்ளோதான்.

      Delete
    4. //என் தம்பி ரொம்ப வருடங்களுக்கு முன்னால் என்னிடம் சொல்லியிருக்கான். ஆபீஸில் 'நண்பர்கள்' என்பது கிடையாது, 'எதிரிகள்' என்பதும் கிடையாது. எல்லாரையும் ஒரு டிஸ்டன்ஸ்ல வைக்கணும் என்று.//

      இது 100 வீதம் உண்மை நெ.தமிழன், நான் வீட்டில் சொல்லுவதும் என் கொள்கையும்.. “நம்ப நட, நம்பி நடவாதே” என்பதே.

      //சொந்த வேலை ஒன்றில் (வீடு சம்பந்தப்பட்டது) கொஞ்சம் பிஸியா இருக்கேன் அதிரா. //

      ஓ நல்ல விசயத்தில் பிஸியாக இருப்பதில் மகிழ்ச்சி, நல்லபடி அனைத்தும் நடந்துமுடிய வாழ்த்துக்கள்.. நீங்கள் தனுராசிக்காரரோ?:) ஹா ஹா ஹா.

      அது உண்மைதான், மனதுக்கு ரென்ஷன் குழப்பம் இருக்கும்போது, சந்தோசமாக பேசிச் சிரிச்சு கொமெண்ட்ஸ் போடும்போதுதான் ரிலாக்ஸ் ஆகும், சீரியசாகப் பேசினால் இன்னும் மனம் இறுகிவிடும்.

      நன்றி நெல்லைத்தமிழன்.

      Delete
  34. //பெரும் செல்வம் படைத்தவர்// - இந்த உலகில் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தவர்கள், இருக்கிறவர்கள் கிடையாது. எல்லோருக்கும் அவரவர் அளவில் கஷ்டங்கள், வருத்தங்கள் இருக்கும். ஆனால் வெளியிலிருந்து பார்க்கும்போது நமக்கு அவங்க சந்தோஷமாக இருக்காங்க என்று நினைத்துக்கொள்வோம். இதுக்கு விதிவிலக்கு மிக அரிது.

    ReplyDelete
    Replies
    1. அது உண்மைதான், மனிதர்கள் எனில் எல்லோருக்கும் எல்லாமும் வந்து போகும்.. தனிய ஒன்றை மட்டும்[இன்பம்/துன்பம்] கடவுள் கொடுப்பதில்லை ஒருவருக்கு.

      Delete
  35. //குடும்பத்தைக் கூடச் சரியாக கவனிக்காமல் தொழிலே கெதி என வாழ்ந்தும் என்னத்தைக் கண்டோம் //

    இது நம்ம குடும்பத்துக்கும் பொருந்தும். பசங்களுக்காக ஓவர் தியாகம் செய்து, உருகி உருகி வளர்ப்பாங்க (அப்போ அவன் தன்னைக் காப்பாத்துவான் என்பதற்கோ இல்லை பொதுவான பாசத்தினாலோ). பிறகு 'நம்ம உடம்பைக் கவனிக்காம இப்படிச் செய்து இப்போ அல்லல் படுகிறோமே' என்று வருந்துவாங்க.

    ஓரளவு இந்த விஷயங்களில் சுயநலமாத்தான் இருக்கணூம்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா உண்மைதான், இவ்வியசத்தில் வெள்ளையர்கள் கரெக்ட்டாக நடக்கின்றனர், சாகும்வரை மகிழ்ச்சியை அனுபவிக்கோணும் என்றே நினைக்கின்றனர்... யாரிலும் சார்ந்து வாழ்வதில்லை.. ஒரு விதத்தில் ஓரளவுக்காயினும் அப்படி இருப்பதும் நல்லதே.. மிக்க நன்றிகள் நெ.தமிழன்.

      Delete
  36. //“நாம் எவ்வளவுதான் உடம்பில் எண்ணெயைப் பூசிவிட்டு, மண்ணிலே உருண்டாலும், நமக்கு ஒட்டுவதுதான் ஒட்டும்”.// - இது உண்மைதான். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் நமக்கு எது வாய்க்குமோ அல்லது கொடுப்பினை இருக்கோ அதைத் தவிர வேறு எதுவும் நமக்கு வாய்ப்பதில்லை.

    உதாரணமா இந்த இந்த ஊர்களைத்தான் நாம பார்க்கணும், இந்த இந்த உணவு மட்டும்தான் நாம் எடுத்துக்கொள்ளணும் என்பதே முன்னமே தீர்மானிக்கப்பட்டது போல நாம புரிந்துகொள்ளலாம்.

    பொதுவா, ஆசை இருக்கும்போது காசு இருக்காது. காசு இருக்கும்போது சாப்பிட நேரம் இருக்காது. நேரம் இருக்கும்போது நம் உடலுக்கு எதுவும் ஒத்துக்கொள்ளாது அல்லது சாப்பிடும் ஆசை போய்விட்டிருக்கும்.

    அடடா... உங்க தத்துவங்களையெல்லாம் படித்துவிட்டு, நானும் நல்லூர் நாலானந்தா என்று போர்டு போட்டுக்கொள்ள ஆரம்பித்துவிடுவேன் போலிருக்கே, புலாலியூர் பூசானந்தாவுக்கு எதிரா.

    ReplyDelete
    Replies
    1. இதுக்குத்தான் கோடு போட்டு வாழ்பவர்களைப் பார்க்க எனக்குப் பாவமாக இருக்கும், ஏனெனில் நாம் நினைப்பதைப்போலவேதான் அனைத்தும் நடக்குமோ? நம் கையில் என்ன இருக்குது?.. இதோ முடிச்சாச்சு இன்னும் ஒன்று மட்டும்தான் முடிச்சிடலாம் என எண்ணும்போது, ஒட்டு மொத்தமாக குழம்பி விடுவதும் உண்டு. அதனால எது நடந்தாலும் நன்மைக்கே என எண்ணிக்கொண்டே ஒரு செயலில் இறங்க வேண்டும் என நினைப்பேன், இப்படித்தான் நடக்கோணும் என கங்கணம் கட்டிக்கொண்டு ஒரு செயலில் இறங்கினால், அது நடக்காதுவிட்டால் மிகவும் உடைஞ்சு போயிடுவோம்.. அனுபவம்தானே அனைத்தையும் கற்றுத்தருகிறது.

      //அடடா... உங்க தத்துவங்களையெல்லாம் படித்துவிட்டு, நானும் நல்லூர் நாலானந்தா என்று போர்டு போட்டுக்கொள்ள ஆரம்பித்துவிடுவேன் போலிருக்கே, புலாலியூர் பூசானந்தாவுக்கு எதிரா.//

      ஹா ஹா ஹா நீங்க நாலானந்தாவா? அது ஆரு அந்த நால்வரும் எனக்கு எனக்கு இப்போ தெரியோணும்:)) ஹா ஹா ஹா.

      Delete
  37. >>> ஒரு முதலாளியின் லட்சியம், தன் தொளிலாளியிடம், முடிந்த அளவு வேலை வாங்கி அதிக லாபம் பெறுவது, அதையே நானும் செய்தேன், உன்மூலம் 5 ஆண்டுகளில் சம்பாதிக்க வேண்டியதை மூன்று ஆண்டுகளிலேயே சம்பாதித்து விட்டேன், இப்போ உன்னை விற்பதன் மூலமும் பணம் ஈட்டப்போகிறேன், என்னுடைய அதிக லாபம் பெறும் நோக்கம் நிறைவேற, உன்னுடைய ஆசையை என் மூலதனமாக்கிக் கொண்டேன், நீ ஆரம்பித்திலேயே சுதாகரித்துக் கொண்டிருந்தால், தப்பித்திருக்கலாம்… <<<

    உண்மை.. உண்மை..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துரை அண்ணன் வாங்கோ.. இப்போ என் புளொக் திறக்க முடிகிறதோ ஈசியாக?
      மிக்க நன்றி.

      Delete

  38. கார்த்திகை பிறை...அழகான பெயர் ...


    கார்த்திக்ன் இந்த பாடல் மிக பிடிக்கும் ...


    ...இப்படித்தான் சில நிர்வாகங்களின் நோக்கமும், ஊழியர்களிடமிருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ, அவ்வளவு வாங்கிக்கொள்வார்கள். எனவே ஊழியர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்......


    உண்மை உண்மை மிக உண்மை ...அதிரா

    நிதர்சனமான கதை அதிரா ...அருமை

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ..

      //கார்த்திகை பிறை...அழகான பெயர் ...//
      நன்றி நன்றி.
      அழகானவர்களுக்கு மட்டுமே இப்பட்டம் வழங்குவார்களாம் என நான் ஜொள்ளல்ல:) பிபிசியில சொல்லிச்சினம்:)).

      கதையை ரசிச்சமைக்கு நன்றி அனு.

      Delete
  39. பிடித்த நடிகர் நடித்த, பிடித்த பாடல். ஏற்கனவே கேள்விப்பட்ட கதைதான் இருந்தாலும், இப்போது அரசியல் நெடி அடிக்கிறது. உங்களுக்கு இந்திய அரசியல் தெரியாது என்கிறார் அஞ்சு என்னும் ஏஞ்சல். 

    ReplyDelete
    Replies
    1. பானுக்கா :)) இந்த கார்த்திகை பிறைக்கு அவங்க நாட்டு அரசியல் கூட தெரியாது இவ்ளோ எதுக்கு இங்கிலாந்து அரசியலும் தெரியாது :)) சும்மா தேம்ஸ் பக்கம் வாக்கிங் போக மட்டுமே தெரியும் 

      Delete
    2. வாங்கோ பானுமதி அக்கா வாங்கோ... ஹா ஹா ஹா என் செக்” பதில் சொல்லிட்டா:)).. தெரியும் தெரியாதென்பது ஒரு பக்கமிருக்க எனக்கு அரசியல் என்றாலே அலர்ஜி பொல இருக்கும்:)) ஹா ஹா ஹா பிடிக்கவே பிடிக்காது, அதனால அரசியல் சம்பந்தப்பட்ட எதையும் அபர்த்தாலோ கேட்டாலோ.. அப்படியே மற்றக் காதால் வெளியே விட்டு விடுவேன் ஹா ஹா ஹா.. மனதில் பதியாது.

      நன்றி பானுமதி அக்கா.

      Delete
  40. சகோதரி நன்றிகள் பல...

    மன்னிக்கவும்... பதிவு முழுவதுமே தவறான புரிதல்...

    வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ டிடி வாங்கோ...

      கீழே நீங்கள் தந்திருக்கும் லிங்குக்கு நானும் முன்பு கொமெண்ட் போட்டிருக்கிறேன். நீங்கதான் என் போஸ்ட்டை முழுவதும் உணரவில்லை என நினைக்கிறேன்.

      //https://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Secret-of-Failure-Success.html//

      நீங்கள் இதில் சொல்லியிருப்பது, நாம் எல்லோரும் முயற்சி செய்யோணும், முன்னுக்கு வரோணும், சோர்ந்திடக்கூடாது, தோல்வியை நினைக்கக்கூடாது என்பதை, அது முற்றிலும் உண்மை. அது ஒருவரின் சுயமான உழைப்பு பற்றியது.

      ஆனா இந்த என் போஸ்ட் கதையில் வருவது, இன்னொருவரின் கீழ் அடிமைபோல வேலை பண்ணும்போது, நான் எவ்வளாவு உசாராக இருக்கோணும் என்பதைச் சொல்கிறது.

      நன்றி டிடி.

      Delete
  41. https://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Secret-of-Failure-Success.html

    ReplyDelete
    Replies
    1. லிங் பார்த்தேன் டிடி, மேலே பதிலும் போட்டிருக்கிறேன், மிக்க நன்றி.

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.