நல்வரவு_()_


Sunday, 3 November 2019

பாரணை, சீனி அரியதரம், வல்லாரைச் சம்பல்🙏

ஆஆஆ இதுதான் விரதம் பிடிச்சதன் பலனோ:))


ஆஆஆவ்வ்வ் டும் டும் டும்... இதுதானா.. இதுதானா.. எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா:)) என் கந்தசஷ்டி பாலும் பழமும் விரதம் இனிதே நிறைவேறி, பாரணையும் முடிச்சு விட்டேன். இன்று போஸ்ட் போடும் ஐடியாவே இருக்கவில்லை, ஆனா அது என்னமோ விரதம் முடிஞ்சுபோச்சு என்றதும் ஒரு சொல்ல முடியாத மகிழ்ச்சியும், அதே நேரம் கவலையுமாக இருக்கு... முடிஞ்சுபோச்சே என.. விரத காலங்கள் உண்மையில் மிக மகிழ்ச்சியானதாகவே இருக்கும் எமக்கு எப்பவும்.

இன்று சாப்பிடவே முடியவில்லை, வயிறு ஏற்றுக்கொள்ளவே இல்லை:), கொஞ்சம் சாஸ்திரப்படிக்கே சாப்பிட்டேன். மிகவும் பயந்தபடியேதான் பால் பழத்தை ஆரம்பித்தேன் ஆனா 6 நாட்களும் கொஞ்சம் ஸ்லோவாகவே, இருப்பினும் நல்லபடி நிறைவேறிவிட்டது.

வாங்கோ பாரணைச் சாப்பாடு சாப்பிடலாம்..
நடுவில் தேசிக்காய் ஊறுகாய், தயிர், கீழே நான் செய்த மோர் மிளகாய் மற்றும் பப்படம், பொட்டாடோப் பப்படம், மிகுதிக்குப் பெயர் எழுதப்பட்டிருக்கு. இன்னும் இரு கறிகள் செய்ய நினைச்சு[என் லிஸ்ட்டில் போட்டிருந்தேன்:)] விட்டுவிட்டேன்..
அது சேப்பங்கிழங்குதானோ தெரியாதெனக்கு:), அஞ்சுவுக்குப் படம் அனுப்பிக் கேட்டேன் அவதான் அப்படிச் சொன்னா:)[நான் ஒரு அப்பாவி என்பதனால நம்பிட்டேன்:)].. இஞ்சிக்கிழங்குபோல இருக்கும், வாழ்க்கையில் முதன்முதலாக சேப்பங்கிழங்கு வறுவல் செய்தேன், அவித்து தோலை உரிச்சுப்போட்டு ரோஸ்ட் பண்ணினேன்...தூள் சேர்த்து, ஆனா எனக்கு அந்த ரேஸ்ட் பிடிக்கவில்லை:(

இம்முறை சுவாமிக்குப் படைச்சதைப் படமெடுக்கவில்லை, நீங்கள் பார்த்துப் பார்த்து அலுத்திருக்கும் என்பதனால்:))

ஆஆஆஆஆ நெல்லைத்தமிழன் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் சீனி அரியதரம்.. இதோ மேடை ஏற இருக்கிறது:)) என்னா சுசி:) என்னா சுசி:))) ஹா ஹா ஹா... செய்து சாப்பிட்டவுடன் எங்கள் புளொக்கிற்கு அனுப்பி வைக்கவும்:).
சிவப்புப்பச்சை அரிசியைக் கழுவி எடுத்து, ஓவர் நைட் காயவிட்டேன், காலையில் அரைத்து, பெரிய கண்ணுள்ள அரிதட்டில், அதாவது மாவுடன் குருனலும் சேர்ந்து விழுவதுபோல அரித்தெடுத்து , நம் அளவுக்கு சீனி சேர்த்துக் குழைச்சேன், தண்ணி தேவைப்படாது, கொஞ்ச நேரம் ஊறவிடவும், அல்லது, சீனியை பிளெண்டரில் மாவாக்கியும் போடலாம்.  இல்லை எனில், சிறு துளி தண்ணி தெளிச்சுக் குழைக்கலாம், உடனேயே சுட்டு விட வேண்டும், பிந்தினால் எல்லாம் தண்ணி போலாகிடும்.


இன்று ஒரு தகவல்
வழங்குபவர், உங்கள் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய:) “புலாலியூர்ப் பூஸானந்தா”:).
என்னிடம் இருந்த றைஸ் குக்கர் கொஞ்சம் பழுதாகிவிட்டது, அப்போ மினக்கெடாமல் உடனேயே காபேஜ் அடிச்சு விட்டேன், பின்பு வாங்க தேடிக்கொண்டிருந்தேன், எனக்கு சாதாரண றைஸ் குக்கர் எதுவுமே பிடிக்கவில்லை, உங்களுக்குத்தான் தெரியுமே எனக்கு எப்பவும் வித்தியாசமானதே பிடிக்கும். அதனால வாங்காமலே இருந்தேன். சமீபத்தில் தான் என் கண்ணில் இது பட்டது, உடனேயே விழுந்து விழுந்து ஆராட்சி செய்து, வாங்கியாச்சு. என்னா சூப்பர் தெரியுமோ.

பிறஸர் குக்கர் சேர்ந்த றைஸ் குக்கர். பசுமதி அரிசி எனில் ஒரு கப்புக்கு 1.5 கப் தண்ணி சேர்த்து வெறும் 12 நிமிடங்களில் சோறு. boiled rice எனில் 2 கப் தண்ணி சேர்த்து, 15 நிமிடங்கள். எந்தப் புகையுமில்லை, ஒரு கபேர்ட்டில் வச்சு மூடிப்போட்டுக்கூட ஓன் பண்ணலாம், சத்தமில்லை, புகை இல்லை, எல்லாம் நேரக் கணக்கு மட்டுமே.

சைவம், அசைவம் எது வேணுமெண்டாலும் செய்யலாம், ஆனா நான் எப்பவும் சைவம் -அசைவம் கலப்பதில்லை, வேறு வேறு பாத்திரங்களே பாவிப்பேன் என்பதனால் சைவமாகவே வச்சிருக்க விருப்பம், ஆனால் இதன் உள் பேசின் மட்டும் 10 பவுண்டுகளுக்கு அமேசனில் கிடைக்குது, அப்போ அதில் ஒன்று வாங்கினால் அசைவத்துக்கு வச்சிருக்கலாம் எனும் ஐடியா இருக்குது.[PRESSURE KING PRO PRESSURE COOKER]


இதில் பாருங்கோ, சிவப்பு கலரில் இருப்பதுதான் அந்த பிரசர் பட்டின், இது உள்ளே போனால்தான் ஓபின் பண்ணலாம், அருகில் இருப்பதுதான் ஆவியை வெளியேற்றுபவர், ஆனா இவரின் கொன்றோல் நம் கையில்.. அதாவது இப்படி நேராக விட்டு விட வேண்டும், அப்போ எந்த ஆவியும், ஒரு துளிகூட வெளியே வராது, நமக்கு உடனடியாக மூடியைத் திறக்க வேண்டுமெனில், இந்த பட்டினை வலப்பக்கம் திருப்பி விட்டால் போதும்.. குபீரென ஆவி முழுதும் வெளியே வரும், 2 நிமிடத்தில் மூடியை திறந்திடலாம்
=============================

 ஸ்ரீலங்கன் வல்லாரை சம்பல்
இது செய்வதற்கு, வல்லாரையை நன்கு துப்பரவாக்கிப்போட்டு, கழுவி எடுக்க வேண்டும், எடுத்து இப்படி கட்டாகவே பிடித்துக் கொண்டு, முத்தலாக இருக்கும் பகுதியை மட்டும் வெட்டி எறிஞ்சால் போதும், மிகுதி அனைத்தையும் இப்படிக் குட்டியாக அரிந்து எடுக்க வேண்டும்.

பின்னர் இதனுள் உடன் திருவிய தேங்காய்ப்பூ, தேசிக்காய்ப்பிளி, உப்பு, சின்ன வெங்காயம், விரும்பினால் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கையால் பிசைந்து எடுக்க வேண்டும். நான் சுவையை கூட்டுவதற்காக 2,3 கரண்டி முதல்பால் அல்லது ஃபுல் கிரீம் மில்க் சேர்ப்பேன்.

ஆஹா என்ன சுவை தெரியுமோ:)) இப்பூடிச் சாப்பிட்டால் சத்து வீணாகாது, எதனையும் வாழ்க்கையில் மறக்கவே மாட்டீங்க:)

ஊசி இணைப்பு


ஊசிக்குறிப்பு
 ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சூஊஊஊ உண்டகளை புளொக் எழுதும் அதிராவுக்கும் உண்டெல்லோ:), மசக்கம் மசக்கமா:)) வருதூஊஊஊ கொஞ்சம் டோல் குடுங்கோ:)), இப்போ நான் ரொம்ம்ம்ம்ம்பவயக்கெட்டிட்டேன்ன்:))
💓💓💓💃💓💓💓


96 comments :

  1. Replies
    1. ஆஆஆ அஞ்சூ எங்கிருந்து ஜம்ப் பண்ணினனீங்க ஹா ஹா ஹா வாங்கோ வாங்கோ.. முதலாவதா வந்திருக்கும் உங்களுக்கு என் வேப்பம்பூ வடகம் ஒரு பார்சல் அனுப்பி வைக்கிறேன்:)..

      Delete
  2. ஆஹா, விரதம் முடிச்சுப் பாரணையும் ஆயிடுச்சா? எல்லாச் சமையலும் பார்க்க நன்றாக இருப்பதால் செய்தது யார்னு சந்தேகம் வருதே!

    ReplyDelete
    Replies
    1. ஆஆங்ங்ங் கீசாக்கா இம்முறை 2ண்ட்டூஊஊ:)).. வாங்கோ வாங்கோ.. பாரணை எல்லாம் முடிஞ்சதால இம்முறை எங்கட 99.5 வயசு ஆயாவை கீசாக்காவோடு அம்பேரிக்கா அனுப்பி வைக்கிறேன்ன்:)).. ஆயாவுக்கு அடிச்ச லக்கைப் பாருங்கோ:) இங்கு குளிரில் அவவால நிண்டு பிடிக்க முடியல்லியாம் என கவலைப்பட்டா:)), நல்ல ரைம் க்கு கீசாக்கா வந்திருக்கிறா:)), பத்திரமாக கூட்டிப்போய் ஆயாவுக்கும் புதுக் ஹிந்திப் படங்கள் நெட்பிளிக்ஸ் ல போட்டுக் காட்டுங்கோ கீசாக்கா:)).. ஆயாவுக்கு ஹிந்தி புரியுமாக்கும்:))..

      இப்போ புரியுமே சமைச்சது எந்த ஆயா என்பது கர்ர்:)) ஹா ஹா ஹா.

      Delete
    2. ஆமா கீதாக்கா அந்த அதிரசம் 1000 சந்தேகம் கிளப்பிச்சி :) சரி உங்க  ரெசிபிஸ்லாம் பார்த்து சங்க மித்ரா ஒரு form க்கு வந்திட்டார்னு தோணுது :)

      Delete
  3. அரியதரம்/அதிரசம் சீனி என்றால் வெள்ளைச் சர்க்கரையைச் சிலர் சீனி என்பார்கள். அதிலா செய்தீர்கள்? நிறம் பார்த்தால் வெல்லம் மாதிரித் தெரிகிறது. நாங்க அரிசியை ஊற வைத்து மாவாக்கி அதில் வெல்லத்தைப் பாகு வைத்துச் சேர்த்துச் செய்வோம். இம்மாதிரிச் செய்யலாமா? ஒரு முறை செய்து பார்க்கணும்.

    ReplyDelete
    Replies
    1. சுகர் ஐத்தான் நாங்கள் சீனி என்போம் கீசாக்கா., அதில்தான் எப்பவும் செய்வோம். பாகுகாச்சி இதுவரை நம் வீட்டில் செய்ததில்லை.

      Delete
    2. வணக்கம் அதிரா சகோதரி

      நான் அவசரத்தில், ஒரு தூக்க கலக்கத்தில், "சுகர் ஐத்தான்"என்பதை "அ"போட்டு படித்து விட்டேன்.ஹா. ஹா. ஹா. நான் விரதமே இருக்கவில்லை. ஆனால் ஏனோ தூக்கம் கண்ணை சொருகிக் கொண்டு வருகிறது. உங்கள் தயாரிப்பான அதிரசங்களை கண்ணால் சுவைத்த இனிப்பினால் இருக்குமோ? ஹா. ஹா. ஹா.

      நாங்களும் வெல்லப்பாகு காய்ச்சித்தான் அதில் அரிசி மாவு கலந்து செய்வோம்.. நீங்கள் வெறும் சீனியிலேயே செய்தும் எப்படி அந்த கலர் வந்தது.? ஒரு தடவை தங்கள் முறைப்படி செய்து பார்க்க வேண்டும். உண்மையிலேயே தாங்கள் செய்த அதிரசங்கள் பார்க்கவே மிகவும் அழகாக இருக்கின்றன பாராட்டுக்கள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. //நான் விரதமே இருக்கவில்லை. ஆனால் ஏனோ தூக்கம் கண்ணை சொருகிக் கொண்டு வருகிறது.//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), அது என் சாப்பாட்டைப் பார்த்த மயக்கமாக இருக்கலாம்:)).

      //அதிரசங்களை கண்ணால் சுவைத்த இனிப்பினால் இருக்குமோ//
      அதே அதே..

      //நீங்கள் வெறும் சீனியிலேயே செய்தும் எப்படி அந்த கலர் வந்தது//
      சீனி சேர்த்துப் பொரிச்சால் எப்படியும் கறுப்பாகுமெல்லோ.

      மிக்க நன்றி கமலாக்கா.

      Delete
  4. கடைசியிலே நிற்கிற இரண்டு பொண்ணுங்களும் தான் நீங்களும், அஞ்சுவுமா? அஞ்சு உங்களை விட ரொம்பச் சின்னவங்க போல! இல்லையா அஞ்சு! அப்பாடா, பதிவுக்கு வந்த நோக்கம் நிறைவேறி விட்டது. நாராயணா! நாராயணா!

    ReplyDelete
    Replies
    1. //இரண்டு பொண்ணுங்களும் தான் நீங்களும், அஞ்சுவுமா?//

      ஆமா கீசாக்கா ஆமா:) வெள்ளையா மெல்லிசா இருப்பது நானு:)) ஹா ஹா ஹா.

      //உங்களை விட ரொம்பச் சின்னவங்க போல!//

      ஆமா ஆமா அவ குண்டாக இருப்பதால் என்னைவிட உயரத்தில சின்னதா தெரிவா:)) ஹா ஹா ஹா ஹையோ இப்போ அஞ்சு பிஸிபோல தெரியுது, மீ சொல்லிப்போட்டு ஓடிப்போய்க் குல்ட்டுக்குள் அனுங்கிக்கொண்டு படுக்கப் போறேன்ன் விரதக் களை என:)) ஹா ஹா ஹா..

      // பதிவுக்கு வந்த நோக்கம் நிறைவேறி விட்டது. //
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
    2. ஆமாம் கீதாக்கா :) பூனை என்னை விட 4 வயசு ஓல்ட் :) ஹாஹா 

      Delete
  5. ஊசி இணைப்பு, ஊசிக்குறிப்பு வழக்கம் போல் அருமை என்பதோடு எங்கே தேடி எடுக்கறீங்கனும் நினைச்சேன். இந்த மீம்ஸ் எல்லாம் உங்களுக்கே போட வருமோ? அப்புறமா வந்து பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நானே ஒரு மீம்ஸ் போலத்தான் கீசாக்கா:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி, பின்பு வாங்கோ. உங்கள் பக்கம் நான் நைட்தான் வருவேன் ஏனெனில் கொஞ்சம் சோகமாக தெரிஞ்சுது:(.

      Delete
  6. விரதம் முடித்து சாப்பிடுவதற்கான உணவு கொஞ்சமாக இருக்கிறதே...

    குறளையும், குறளின் பொருளையும் அறிந்தேன் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..

      பயப்பிடாதீங்கோ கில்லர்ஜி படத்துக்காக கொஞ்சமாக போட்டு வச்சிருக்கிறேனாக்கும்:)).

      நன்றி.

      Delete
    2. கில்லர்ஜி இங்கே இவங்க போட்ட ப்டம் எல்லாம் டேஸ்ட் செய்து பார்ப்பதற்காக எடுத்து வைத்துள்ள படங்கள்.... அதிரா சாப்பிடும் போது தட்டில் எடுத்து வைத்ததை நாமெல்லாம் பார்த்தால் அதிரா இவ்வளவா சாப்பிடுகிறார் என்று திருஷ்டி போட்டுவிட்வோம் என்பதால் அதை அதிரா போடவில்லை சரிதானே தேம்ஸ்நதிக்கரையோர ஆண்ட்டி

      Delete
  7. ஆகா
    படங்களைப் பார்த்ததுமே பசி வந்துவிட்டது

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ எனக்கும் பார்க்கும்போதெல்லாம் பசிக்குது ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
  8. படங்கள் ரொம்ப அழகா வந்திருக்கு.

    உணவுத் தட்டுப் படங்கள்லாம் நல்லா கோர்வையா எடுத்திருக்கீங்க.

    அதிரசம் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு. உண்மையிலேயே எங்க ஊர் அதிரசம் இப்படித்தான் இருக்கும். ஆனால் நாங்க, அரிசி அரைத்து அதில் வெல்லப்பாகு சேர்த்து கட்டியா மாவு ரெடி பண்ணி எண்ணெயில் பொரித்தெடுப்போம். நீங்க வெள்ளைச்சர்க்கரை சொல்லியிருக்கீங்க. சிவப்பு அரிசி என்பதால் அதிரசம் எங்க அதிரசம் மாதிரி தெரியுதோ?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

      //உணவுத் தட்டுப் படங்கள்லாம் நல்லா கோர்வையா எடுத்திருக்கீங்க.//
      எல்லாம் இங்கு போடுவதற்காக:)).

      //அதிரசம் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு. //
      நன்றி நன்றி, ஆனா உது இருக்கட்டும் எப்போ செய்யப்போறீங்க?:).ஹா ஹா ஹா..

      //எங்க ஊர் அதிரசம் இப்படித்தான் இருக்கும்//
      அதைத்தானே எங்கள் நாட்டில் சினிஅரியதரம் என்கிறோம்:).. சிலர் வெள்ளைப்பச்சை அரிசியில் செய்வார்கள் அது கொஞ்சம் வெள்ளையாக வரும், ஆனா நாங்கள் சீனி சேர்ப்பதால் எப்படியும் எண்ணெயில் பொரியும்போது கலர் இப்படி ஆகும். ஸ்லோ ஃபயரில கொஞ்சம் கொஞ்சமாக போட்டு எடுக்க வேண்டும், இல்லை எனில் வெளியே கறுக்கும், உள்ளே வெந்திருக்காது.

      Delete
  9. பாரணைச் சாப்பாடு (படம்) அழகா இருக்கு.

    பாரணை முடிந்து இதனைச் சாப்பிட்டீங்களா? இனிப்புக்கு அதிரசமா?

    ReplyDelete
    Replies
    1. பாரணைக்கு இப்படித்தான், ஒவ்வொருவரிடமும் கேட்டு, அனைவருகும் பிடிச்ச கறிகள் எல்லாம் சமைப்போம், ஆனா சாப்பிட்டு முடியாதே என்பதால குறைச்சிட்டேன். வழமையாக வடை பாயாசமும் செய்வொம், இன்று செய்யவில்லை.

      அதிரசம் செய்தது, கேதாரகெளரி விரதம் கடசி நாள் காப்புக் கட்டிலன்று[அமாவாசை அன்று] எதுவும் சாப்பிட மாட்டோம், காப்புக் கட்டிப்போட்டு இந்த சீனி அரியதரம் மட்டும் சாப்பிடுவோம், அடுத்த நாளே கந்தசஷ்டி பால் பழம் ஆரம்பமாகிவிட்டது:)..

      Delete
  10. //வேண்டாததை வாங்கிக்காதே...வேண்டியதை இழப்பாய்// - இதுக்கும், புது ரைஸ் குக்கர் வாங்கியதற்கும் ஏதேனும் லிங்க் இருக்கா?

    புது ரைஸ் குக்கர்/ப்ரஷர் குக்கர் அழகா இருக்கு. ரொம்ப சுலபமா இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. இது இங்கே அம்பேரிக்காவுக்கு வந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன. பெண்ணிடம் இருக்கு. அதில் சமைப்பாள். வேறொரு நாள் அதைப் படம் எடுத்துப் போடுகிறேன். Cooking Pot என்று சொல்கிறார்கள் இங்கே.

      Delete
    2. //இதுக்கும், புது ரைஸ் குக்கர் வாங்கியதற்கும் ஏதேனும் லிங்க் இருக்கா?//

      ஹா ஹா ஹா பொருத்தமாக இருகே எனப் போட்டேன்:)..

      //ரொம்ப சுலபமா இருக்கும்//
      அதேதான் நெ.தமிழன், எங்கள் வீட்டில் அதிகம் பாஸ்ரா, மற்றும் தானியங்கள் கச்சான் அவிப்போம், தானியம் கச்சான் எல்லாம் காஸ் குக்கர் எனில் 1.5 மணித்தியாலங்கள்கூட அவிச்சிருக்கிறேன் அப்படி அவிச்சாலும் பெரிதாக சிலசமயம் அவிஞ்சிருக்காது, ஆனா இதிலோ 15 நிமிடத்தில் சும்மா கரைச்சு தருகிறது.. எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சூ, இதனாலேயே வெயிட் பண்ணினேன் இவ்ளோ காலமும்:)..

      Delete
    3. அங்கென்றில்லை கீசாக்கா எங்கும் பல ஆண்டுகளாக இருக்குது இது.. இந்தியாவிலும். ஆனா இப்போ இப்போ கொஞ்சம் புதுசாக நிறைய ஃபசிலிட்டியுடன் வருது.. எனக்கு இப்போ குருமாறியதாலதான் வாங்கும் ஆசை வந்துது. எனக்கு நகை உடுப்பு வாங்கித்தந்தால்கூட பெரிசா சந்தோசப்பட மாட்டேன் ஆனா இப்படி கிச்சின் பொருட்கள் எனில் ஸ்கையில பறப்பேன்ன்:)) ஹா ஹா ஹா.

      Delete
    4. @ஏஞ்சலி - //எனக்கு நகை உடுப்பு வாங்கித்தந்தால்கூட பெரிசா சந்தோசப்பட மாட்டேன் ஆனா இப்படி கிச்சின் பொருட்கள் எனில் ஸ்கையில பறப்பேன்ன்:// - இதுக்கு அர்த்தம் என்ன? உங்களுக்குத்தான் இந்தத் தமிழ் புரியும். நான் புரிந்துகொள்வது, நகை உடுப்பு வாங்கித்தந்தால் நான் மட்டும்தான் போட்டு கண்ணாடியில் அழகு பார்த்துக்கொள்ள முடியும். ஆனால் நான் கிச்சன் பொருட்களை வைத்துச் சமைத்தால்... கணவர், பசங்க மேல உள்ள கோபத்தைத் தீர்த்துக்கொள்ள முடியும்...ஐயையோ... இந்த கூகிள் தப்புத் தப்பா தட்டச்சு பண்ணுது.... கணவர், பசங்களுக்கு நல்ல உணவு சமைத்து சந்தோஷப்படுத்த முடியும்னு சொல்ல வந்திருப்பார்.

      Delete
  11. //வயிறு ஏற்றுக்கொள்ளவே இல்லை:), கொஞ்சம் சாஸ்திரப்படிக்கே சாப்பிட்டேன்.// - என்னாது... ரெண்டு தட்டு முழுவதும் வித வித உணவை வச்சிச் சாப்பிட்டுட்டு, சாஸ்திரப்படிக்கு சாப்பிட்டீங்களா? ஒருவேளை நிஜமாகவே சாப்பிடணும்னு நினைத்திருந்தால், இன்னும் என்ன என்ன ஐட்டம் பண்ணியிருப்பீங்க?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நம்ப மாட்டீங்க 3-4 கிலோ எடை குறைஞ்சிட்டேன், வயிற்றுப்பகுதி உள்ளே போய் ஒட்டியிருக்குது உண்மையில், நேற்று எனக்குப் பயமாக இருந்துது கார்ட் அட்டாக் வருவதுபோல இருந்துது நெஞ்சுக்குள்:)), ஏன் தெரியுமோ சும்மா சொல்லுவதுதான், இப்படி பகல் முழுக்க காய்ஞ்சுபோட்டு எந்தப் பழமும் சாப்பிடவே முடியவில்லை, சும்மா சாட்டுக்கு கடிச்சு கடிச்சு வச்சேன்:)).. பாலே குடிக்கவில்லை ரீ போட்டுக் குடிச்சேன்[இங்கிலீசு ரீ:)].

      இன்னும் பண்ண நினைச்சது.. சோயாமீட் அண்ட் உருளைகிழங்கு பிரட்டல், கீரை கறி, வடை.

      Delete
  12. அதிரசம் செய்முறை எ.பி. ல எழுதியிருக்கலாம். படங்கள் நன்றாக இருக்கு (ஒருவேளை அதிரசம் படம் இணையத்திலிருந்தோ?)

    ReplyDelete
    Replies
    1. //அதிரசம் செய்முறை எ.பி. ல எழுதியிருக்கலாம்.//

      அது உங்களுக்காக விட்டுத்தந்திருக்கிறேன்:) இதைப் பார்த்து நீங்க செய்து எ.புளொக் அனுப்புவீங்களென ஹா ஹா ஹா:))..

      அங்கு அனுப்பினால் அடுத்த டீஈஈஈஈவாலிக்கெல்லோ வெளிவரும்:)).

      //அதிரசம் படம் இணையத்திலிருந்தோ?)//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கீசாக்கா உடனடியாக இன்னும் ரெண்டு ஹிந்திப்படம் பார்த்து ரிவியூ எழுதுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)) ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் நெ.தமிழன்.

      Delete
    2. //அங்கு அனுப்பினால் அடுத்த டீஈஈஈஈவாலிக்கெல்லோ வெளிவரும்:)).// - ஹா ஹா.. ஒண்ணு சொன்னாலும் சரியாச் சொல்லியிருக்கீங்கன்னு சொல்லலாம்.

      ஸ்ரீராம் இதனைப் பார்க்க விட்டுட்டாரே...

      Delete
    3. அதிரசம் பார்க்க அழகா இருக்கும். சுவையாவும் இருக்கும். ஆனா ரொம்ப எண்ணெய். நான் வீட்டில் செய்தால் குறைந்தது 10 ஆவது செய்யணும். இவ்வளவு எண்ணெய் சாப்பிட்டால் அவ்ளோதான்.

      யாராவது எனக்கு அனுப்புங்க, சாப்பிடறேன்னு சொல்லி, கொரியருக்கான செலவை உங்கள்ட கொடுத்துட்டாங்கன்னா சொல்லுங்க. நான் செய்து அவங்களுக்கு அனுப்பிடறேன் (ஸ்ரீராம் உட்பட ஹா ஹா)

      Delete
    4. நெ.தமிழன்
      ஸ்ரீராம் இதனைப் பார்க்க விட்டுட்டாரே...////

      ஹா ஹா ஹா அவர் பார்த்திருப்பார், ஆனா திரும்பத்திரும்ப எல்லாம் வரமாட்டாராம் பேச:))

      Delete
    5. சீனி அரியதரம் எண்ணெயோ? அப்படி பெரிய எண்ணெய்யாக இல்லை நெ.தமிழன், காய்ந்ததுபோல வரும், ஒருவேளை பாகு காச்சினால் எண்ணெயாகுமோ என்னமோ.. இது நம் முறையில் பெரிதாக எண்ணெய் இல்லை, ஆனா இனிப்பு என்பதால அதிகம் சாப்பிட முடியாது எங்களால.

      கொரியர்.. பணம் அனுப்புவது.. அனைத்துக்கும் முன்னர் அண்ணியிடம் கிச்சினுக்குப் பெமிஷன் வாங்கி வட்சப்பில் கை எழுத்துடன் அனுப்பவும்:)).. ஹா ஹா ஹா.

      Delete
  13. வணக்கம் அதிரா

    விரதம் நல்லபடியாக முடித்து, பாரணையும் எடுத்துக் கொண்டு சந்தோஷமடைந்தற்கு முதலில் வாழ்த்துக்கள். இறையருள் தங்களுக்கு எப்போதும் நிலைத்திருக்க என் பிரார்த்தனைகள்.

    சமையல் படங்கள் நன்றாக உள்ளன. எல்லாமே (காய்கள்) ரோஸ்டாக செய்துள்ளீர்கள். சீனி அரியதரம் (நாங்கள் அதிரசம் என்போம். ) என்றால் என்னவென்று புரிந்து கொண்டேன். அதுவும் வெகு நன்றாக வந்திருக்கிறது. ஒரே மாதிரி வந்திருப்பதால் அப்பங்காரத்தில் இட்டு செய்தீர்களோ? வல்லாரை பச்சையாக சாப்பிட்டால், நன்றாக இருக்குமா? ஒரு கொதி வர வேண்டாமா? ஆனால் எல்லாமே நன்றாக உள்ளது. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ரைஸ் குக்கர் நன்றாக உள்ளது.
    பயன்படுத்த சுலபமாக உள்ளதறிந்து மகிழ்ந்தேன்.

    ஊசிக்குறிப்பும் ஊசி இணைப்பும் அருமை. ஊசி குறிப்பில், உதடு ஒட்டாத குறளும், அதன் விளக்கமும் அறிந்து கொண்டேன்.

    தாங்களும், அஞ்சுவும் இருக்கும் போட்டோ அழகாக உள்ளது.இப்படி சின்னக் குழந்தைகளாக (எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் மனதும்) இருந்து விட்டால், எந்த பிரச்சனையும் நம்மை அண்டாது பயந்து விலகி ஓடியே விடும்... இல்லையா? ஹா. ஹா. ஹா.

    அனைத்தையும் வெகுவாக ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலாக்கா வாங்கோ..

      //இறையருள் தங்களுக்கு எப்போதும் நிலைத்திருக்க என் பிரார்த்தனைகள்.//
      மிக்க மிக்க நன்றி, நேற்று நைட் நித்திரையே வரவில்லை:)) இப்போ நித்திரை நித்திரையா வருது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

      //ஒரே மாதிரி வந்திருப்பதால் அப்பங்காரத்தில் இட்டு செய்தீர்களோ?//
      அப்பங்காரம் என்றால்???..

      நான் கையில் உருண்டை எடுத்து தட்டித் தட்டிச் செய்தேன்.

      //ஒரு கொதி வர வேண்டாமா?//
      நோஓஓஒ வல்லாரையை வெக்கை காட்டவே கூடாது, இப்படிச் செய்யோணும் இல்லை எனில் பச்சையாக போட்டு உப்பு மிளகாய் தேஎங்காய்ப்பூப் போட்டு அரைத்து எடுத்து தேசிக்காய் சேர்க்கோணும், பழப்புளி சேர்த்தால்கூட அதிலிருக்கும் சத்துக்கள் அழிஞ்சிடுமாம்.

      Delete
    2. ரைஸ் குக்கர் உண்மையில் சூப்பர், குத்தரிசிகூட 15 நிமிடத்தில் சூப்பராக வருது. நான் இன்று அனைத்து சமையலையும் முடிச்சுப் போட்டுத்தான் அரிசி போட்டேன், அவிந்து முடிவதற்குள் கிச்சினைக் கிளீன் பண்ணினேன்.. ரைம் சரியாக வந்துது படைக்க.

      //தாங்களும், அஞ்சுவும் இருக்கும் போட்டோ அழகாக உள்ளது//
      ஹா ஹா ஹா நன்றி நன்றி.. அதில வெள்ளையாக மெல்லிசாக இருப்பது அதிரா:)) ஹா ஹா ஹா:).

      //எந்த பிரச்சனையும் நம்மை அண்டாது பயந்து விலகி ஓடியே விடும்... இல்லையா? //

      ஹா ஹா ஹா உண்மைதான் நான் வீட்டில் ஒரு லூஸ் போலவே இருப்பேன்:)) வீட்டிலும் எல்லோருக்கும் பழகி விட்டது:) நான் இல்லை எனில் போறிங் அவர்களுக்கு ஹா ஹா ஹா.

      மிக்க நன்றிகள் கமலாக்கா.

      Delete
  14. //ஆஆஆவ்வ்வ் டும் டும் டும்... இதுதானா.. இதுதானா.. எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா:)) என் கந்தசஷ்டி பாலும் பழமும் விரதம் இனிதே நிறைவேறி, பாரணையும் முடிச்சு விட்டேன்.//

    விரதம் முடித்து குஸியான பாட்டு பகிர்ந்து விட்டீர்கள்.

    நானும் நேற்று மட்டும் விரதம் இருந்தேன். பழமுதிர் சோலை போய் அபிஷேகம், அலங்கார பூஜை பார்த்து பசியே மறந்து போச்சு. வந்து பொதிகையில் சூரசம்ஹாரம் பார்த்து விட்டு பதிவும் போட்டு விட்டேன்.

    விரதம் முடிந்தால் எளிமையாக சாப்பிட வேண்டும் என்பார்கள் அதனால் பொட்டுக்கடலை துவையல் அரைத்து சாதத்தில் போட்டு சாப்பிட்டேன் அப்புறம் தயிர் சாதம்.
    அடுத்த நாளிலிருந்து வழக்கம் போல் சாப்பிடலாம்.

    விரதம் இருந்து பூனைக்கு புலியாக தெரிகிறதா? என்ன அர்த்தம் அந்த படம்.

    நல்லபடியாக விரதம் முடித்து வித விதமாக சமைத்து சாப்பிட்டு விட்டீர்கள். சமைத்த உணவு படங்கள் எல்லாம் அழகு.

    ஊசி இணைப்பு, ஊசிக்குறிப்பு எல்லாம் மிக நன்றாக இருக்கிறது.

    சீனி அரியதரம் நன்றாக தரமாக இருக்கிறது.
    வல்லாரை உங்கள் தோட்டத்தில் இருக்கா பச்சை பசேல் என்று அழகாய் இருக்கே!

    என் மருமகள் இந்த குக்கர் வைத்து இருக்கிறாள் குளிர் காலத்தில் இதில் தயிர் உறைஊற்றுவாள். நன்றாக் ஐருக்கும். போகும் இடத்திற்கு எல்லாம் இந்த குக்கரை கொண்டு வந்து சமைத்து கொடுத்தாள்.(ஊர் சுற்றி பார்க்க போகும் போது தங்கும் ஓட்டலில் காலை உணவு அவர்கள் தருவார்கள் மதியத்திற்கு அவள் சமைத்து விடுவாள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..

      பாட்டு அது, சமைக்கும்போது ரேடியோவில் போச்சுதா:) லபக்கெனப் பிடிச்சுப் போட்டுவிட்டேன் இங்கு:).
      ஓ பழமுதிர்சோலை போனனீங்களோ நான் அன்று ஆரம்பம் போயிருப்பீங்களென நினைச்சேன், அன்று தம்பி வீட்டுக்குப் போய்விட்டதாக சொன்னீங்க.. சந்தோசம், ஓ சூரன்போரும் பார்த்தீங்களோ... இங்கு நடந்திருந்தாலும் நான் போயிருக்க மாட்டேன், அவ்ளோ களைப்பாக இருந்தது:).

      //வந்து பொதிகையில் சூரசம்ஹாரம் பார்த்து விட்டு பதிவும் போட்டு விட்டேன்.//
      தலைப்பு இப்போஸ்ட் எழுதும்போது பார்த்தேன், வருவேன்.

      //அடுத்த நாளிலிருந்து வழக்கம் போல் சாப்பிடலாம்.//
      உண்மைதான் வயிறும் பழகவேண்டும், இல்லை எனில் ஏதும் விபரீதமாகிவிடும்.

      Delete
    2. //விரதம் இருந்து பூனைக்கு புலியாக தெரிகிறதா? என்ன அர்த்தம் அந்த படம்.//
      ஹா ஹா ஹா அது கோமதி அக்கா, இனிப் பூஸ் ஐப்பார்த்து எல்லோரும் புலி எனப் பயந்தோடப்போகினம்:)) அவ்ளோ ஸ்றெந்தைக் கொடுத்திருக்கிறார் அந்த பழனி முருகன் ஹா ஹா ஹா:)).

      //வல்லாரை உங்கள் தோட்டத்தில் இருக்கா பச்சை பசேல் என்று அழகாய் இருக்கே!//
      சே..சே.. இங்கு வெளியே இறங்க முடியாது குளிர் குளிர்:).. இது நேற்று எங்கட தமிழ்க்கடை போனோம்.. அங்கு அனைத்துச் சாமானும் வந்திருந்துது உண்மையில் வாங்கினேன் வாங்கினேன் பில் வந்துது 97 பவுண்ட்ஸ் ஹா ஹா ஹா... அவ்ளோ பொருட்கள் வந்திருக்குது. அகத்தி இலை எல்லாம் அப்படியே மரத்தால பிடுங்கியதுபோல இருந்துது.
      சப்போட்டா, கொய்யா, பலா, கப்பல் வாழை, பப்பாளி, விளாம்பழம், அன்னமுன்னா.. இப்படி அனைத்தும் வந்திருந்துது, கொஞ்சம் லேட்டாகியிருந்தால் முடிஞ்சிருக்கும்.

      உண்மையில் இக்குக்கர் மிக வசதியாக இருக்குது... மிக்க நன்றிகள் கோமதி அக்கா.

      Delete
  15. //மசக்கம் மசக்கமா:)) வருதூஊஊஊ கொஞ்சம் டோல் குடுங்கோ:)), இப்போ நான் ரொம்ம்ம்ம்ம்பவயக்கெட்டிட்டேன்ன்:))//

    தோள் கொடுப்பாள் தோழி ! கொடுத்து விட்டாரே!(ஏஞ்சல்)

    ReplyDelete
    Replies
    1. இல்ல கோமதி அக்கா நான் நம்பமாட்டேன்:)) நம்பிச் சாய்ஞ்சால் தேம்ஸ்ல தள்ளி விட்டிடுவா:)) அதனால மீ நடிக்கிறேனாக்கும் சாய்வதைப்போல:)) பூஸோ கொக்கோ:)) ஹா ஹா ஹா.

      Delete
  16. பிரச்சனைகளை சமாளிக்க கற்றுக் கொள்வது நல்லதுதான்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஆனா அந்த மனத் திடத்தை உருவாக்குவதுதான் கஸ்டம். மிக்க நன்றிகள் கோமதி அக்கா.

      Delete
  17. இதுதானா இதுதானா...    சுமாரான பாடல்!  படம் வந்தபோது சுவாரஸ்யமாக பார்த்த படம்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..

      அது ஆரம்ப வரிகள்.. பாரணை எப்போ வரும் என எதிர்பார்த்துக் காத்திருந்த எனக்குப் பொருந்தியதால போட்டேன்:). கடந்த 2 நாட்களாக என்னால முடியாமல் போச்சு .. எப்போ பாரணை வரும் என கனவு கண்டு கொண்டிருந்தேன் ஹா ஹா ஹா.

      Delete
  18. ஆ...    கந்தசஷ்டி விரதம் முடிந்ததா?  விரதம் முடிக்கும்போது ஆரஞ் ஜூஸுடன் முடிக்க வேண்டுமே...!!!!  எப்படியோ நல்லபடியாய் முடித்ததற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. என்னாது ஆரஞ்சு யூஸ் உடனோ கர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா உண்மைதான் மீ பயந்திட்டேன் நேற்று, அப்பூடி நெஞ்செல்லாம் என்னமோ செய்யத் தொடங்கிட்டுது, விரதத்தை விட வேண்டி வந்திடுமோ எனும் பயமாக இருந்தது, ஆனா இன்று மீ ஹப்பி..

      அமுதா ஹப்பி.. மீ ஹப்பி:)) படம் பார்த்தனீங்களோ?:)

      Delete
  19. முன்பெல்லாம் சேப்பங்கிழங்கு ரோஸ்ட் ரொம்பப் பிடிக்கும்.   இப்போதெல்லாம் அப்படி இல்லை!  விரதம் முடித்து சாப்பிடும் பொருட்கள் மாதிரியே தெரியவில்லையே...  ஓ...  இதெல்லாம் சும்மா படம் போட்டிருக்கிறீர்கள்!  அதானே?

    ReplyDelete
    Replies
    1. சேப்பங்கிழங்கு எல்லோரும் சொல்கிறார்களே என வாங்கிச் செய்தேன், பிடிக்கவில்லை, இன்னும் கொஞ்சம் மீதிக் கிழங்கிருக்கு, அதைப் பொரிச்சுப் பார்க்க இருக்கிறேன்.

      ஏன் விரதம் முடிஞ்சு என்ன சாப்பிடோணும்:))...

      Delete
    2. சேப்பங்கிழங்கை அரை வேக்காடாக வேக வைத்து விட்டு அதை எண்ணெயில் போட்டு சிறு தீயில் பொரித்து எடுத்து , மிளகாய்த்தூள், அல்லது மிள்குத்தூள் போட்டால் நன்றாக இருக்கும். என் அப்பாவிற்கு மிகவும் பிடிக்கும் என் அம்மா அடிக்கடி செய்வார்கள்.
      இங்கு மாமாவுக்கு பிடிக்காது, அதனால் நான் செய்வது இல்லை. என் தங்கை நான் போனால் செய்து தருவாள்.

      Delete
    3. அதே..அதேதான் கோமதி அக்கா, இதே முறையிலேயே செய்தேன், ஆனா அந்தக் கிழங்கின் சுவை பிடிக்கவில்லை, வழுவழுப்பாக இருந்தது.

      Delete
  20. நாங்கள் உபயோகிக்கும் எலெக்ட்ரிக் ரைஸ் குக்கருக்கும் இதற்கும் என்ன வேறுபாடு என்று தெரியவில்லை;புரியவில்லை.  பார்க்க ஒரே மாதிரி இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. //எலெக்ட்ரிக் ரைஸ் குக்கருக்கும் இதற்கும் என்ன வேறுபாடு என்று தெரியவில்லை//

      ஹையோ ஆண்டவா விரதம் பிடிச்சு மயக்கத்தில் இருப்பது நானோ ஸ்ரீராமோ என எனக்குத் தெரியவில்லை.. புரியவில்லை ஹா ஹா ஹா.

      Delete
  21. வல்லாரை நான் சாப்பிடுவதே இல்லை.   ஒரே ஒருமுறை வல்லாரை சாக்லேட் மட்டும் சாப்பிட்டிருக்கிறேன்!  ஹிஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. இந்த வல்லாரை சொக்கலேட் கதை முன்பும் சொல்லியிருக்கிறீங்க, எனக்கு இன்னும் கிடைக்கவில்லை, கொய்யா, பழப்புளி சுவீட்ஸ் கிடைக்குது சைனீஸ் கடைகளில் அது சொக்கலேட்டாக அல்ல.

      Delete
  22. ஊசி இணைப்பு புன்னகைக்க வைக்கிறது.  ஊசிக்குறிப்பு ரசித்தேன்.  

    ReplyDelete
  23. அரியதரம் என்றால் அதிரசமா?  நான் நெல்லையில் கமெண்ட்ஸ் பார்த்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஸ்ரீராம் நம்ம ஊர் அதிரசம் தான் ஆனா அதுக்கும் இதுக்கும் குறைந்தது 15 வித்யாசம் :))

      [im]https://media.tenor.com/images/6b40464cdd878d207a7f3bee1404b0d7/tenor.gif[/im]

      Delete
    2. அப்பூடியே யோசிச்சுக் கொண்டிருங்கோ அதுக்குள் நெதமிழன் செய்து ரெசிப்பி அனுப்புவார் உங்களுக்கு ஹா ஹா ஹா நன்றிகள் ஸ்ரீராம்.

      Delete
    3. //ஆமாம் ஸ்ரீராம் நம்ம ஊர் அதிரசம் தான் ஆனா அதுக்கும் இதுக்கும் குறைந்தது 15 வித்யாசம் :))//

      [im] https://media.giphy.com/media/NbQgN8rgZornO/giphy.gif [/im]

      Delete
  24. பார்த்தால் பசி தீரும்...

    தீர்ந்து விட்டது சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ டிடி.. ஹா ஹா ஹா பார்த்தால் பசி கூடுமெல்லோ...

      Delete
  25. நோதல் என்று சொல்லும் போது உதட்டோரம் கொஞ்சம் ஒட்டுறமாதிரி இல்லே...? என்ன சொல்லலாம்...? ம்... இதோ மற்றும் ஒரு குறள் :

    எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
    செய்தற்கு அரிய செயல்

    ReplyDelete
    Replies
    1. நோதல் ஆரம்பிக்க முந்தான் ஒட்டுது.. ஆவ்வ் ஒட்டாத இன்னொரு குறளோ? அப்போ எப்படி ஒரு குறள் மட்டுமே என எழுதியிருக்கினம் ஆரோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). மிக்க நன்றி டிடி.

      Delete
  26. ///என் கந்தசஷ்டி பாலும் பழமும் விரதம் இனிதே நிறைவேறி, பாரணையும் முடிச்சு விட்டேன். ////

    இல்லை முடியாது இன்னும் 10 நாள் இருக்கு அதுக்குள்ளே முடிச்சா வெயிட் ஏறும் உங்களுக்கு சொல்லிட்டேன் :)

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் வயக்கெட்டிட்டேன் என உங்களுக்குப் பொறாமை:)).. அந்த பூஸ் படம் போட நினைச்சு, இன்றைய போஸ்ட்டில போட முடியாமல் விட்டிட்டேன்:)). இன்னும் ஒருநாள் விரதம் இருந்திருந்தால்கூட மீ மயங்கி இருப்பேன். இப்ப கூட கை எல்லாம் ரைப் பண்ணக் கஸ்டப்படுது கர்ர்ர்:)), நாளைக்கு வேர்க்... லீவு போட்டிருக்கலாமோ என இருக்கே:))

      Delete
  27. [im]https://watermarked.cutcaster.com/cutcaster-photo-100657717-Two-cute-girls-waving-hello-with-grass-in-background.jpg[/im]

    இந்தாங்க டோல் கொடுத்தாச்சு :) நான் ரெட் ஜம்ப்பர் 

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அந்த முசல்ப்பல்லுத்தான் நீங்களாக்கும்:)) ஹா ஹா ஹா..

      Delete
  28. //அது சேப்பங்கிழங்குதானோ தெரியாதெனக்கு:), அஞ்சுவுக்குப் படம் அனுப்பிக் கேட்டேன் அவதான் அப்படிச் சொன்னா:)[நான் ஒரு அப்பாவி என்பதனால நம்பிட்டேன்:)].. //


    கர்ர்ர்ர்ர் ..எனக்கு காய் நேம்ஸ் எல்லாம் தெரியும் :)நீங்க செஞ்ச வாழைக்காயும் சேப்பங் கிழங்கும் ஒரேமாதிரி இருக்கு கர்ர்ர் :) 

    ReplyDelete
    Replies
    1. அதிராவுக்கு என்ன தெரியப்போகுதென நீங்க டப்பு டப்பா சொல்லித்தாறீங்க:)).. அப்பூடித்தான் அண்டைக்கு மகிந்தாவின் சிஸ்டர்:) என மிரட்டி.. மீயும் நம்பிட்டேனாக்கும் கர்ர்:)) ஹா ஹா ஹா.

      Delete
    2. haaagarrr :)its true

      // (Saṅghamitrā in Sanskrit) was the eldest daughter of Emperor Ashoka (304 BC – 232 BC) and his first wife, Devi. Together with her brother Mahinda, she entered an order of Buddhist monks. The two siblings later went to Sri Lanka to spread the teachings of Buddha at the request of King Devanampiya Tissa (250 BC – 210 BC) //

      Delete
    3. அதிரா.... சாம்ராட் அசோக சக்ரவர்த்தியின் குமாரன் மஹிந்த (மகேந்திரன்..ஆனால் இலங்கையில் பெயர் திரிபு ஆகி, மஹிந்த என்று குறிப்பிடுகிறார்கள்). அசோகரின் பெண் சங்கமித்திரை. இந்த சங்கமித்திரைதான் இலங்கைக்கு யாத்திரையாக வந்து புத்த மதத்தைப் பரப்பியவர்.

      நீங்க, நம்ம (?) ராஜபக்‌ஷேவை நினைத்து நடுங்கறீங்க. இந்த மஹிந்த/மஹேந்திரன், அசோகரின் பையன்.

      Delete
    4. பாருங்கோ நெல்லைத்தமிழன் நீங்க எவ்ளோ நல்லவர் வல்லவர்:)) ஹா ஹா ஹா.. எவ்ளோ அழகா சொல்லியிருக்கிறீங்க, ஆனா பாருங்கோ அஞ்சுவை, ஓடிப்போய் மேலே எழுதியதைப் படிச்சுப்போட்டு வந்து, மஹிந்தவின் டகோடரி என்றிட்டா:)) நானும் அதை நெம்பி... நடுங்கி ஒடுங்கி:)) இதென்ன புது வம்பாக்கிடக்கே என முக்காடு போட்டுக்கொண்டெல்லோ கொஞ்சக்காலம் ஒளிச்சுத் திரிஞ்சேன்:)).. இப்போ புரியுதோ மீ ஒரு அப்பாஆஆஆஆஆஆஆவி:))

      Delete
  29. //உடனேயே காபேஜ் அடிச்சு விட்டேன்,//
    காபேஜ் = garbage 
    ஹலோ அதை முழுசா சொல்லணும் ..நீங்க அமேசானில் எடுக்க போய் பிறகு நான் சொன்னதால் currys போய் பார்த்து எடுத்ததை சொல்லலை நீங்க .   எனக்கு பேமண்ட் வரணும் சொல்லிட்டேன் 

    ReplyDelete
    Replies
    1. //காபேஜ் = garbage//
      ஹா ஹா ஹா..

      சரி சரி வன் வீக்குக்கு உங்களுக்கு தாறேன்ன் நீங்க இதிலேயே சமோசா செய்து சாப்பிடுங்கோ:).

      Delete
  30. //அருகில் இருப்பதுதான் ஆவியை வெளியேற்றுபவர், ஆனா இவரின் கொன்றோல் நம் கையில்.. அதாவது இப்படி நேராக விட்டு விட வேண்டும், அப்போ எந்த ஆவியும்,//
    ஒஹோஒ அந்த ஆவிதான் பேயாரா :)))))))))))))))

    ReplyDelete
  31. //ஆஹா என்ன சுவை தெரியுமோ:)) இப்பூடிச் சாப்பிட்டால் சத்து வீணாகாது, எதனையும் வாழ்க்கையில் மறக்கவே மாட்டீங்க:)//

    என்னோட சம்பள பாக்கியை மறக்கறீங்க எப்புடீ :)))

    ReplyDelete
    Replies
    1. நான் புது செக்:) தேடப்போறேன், நீங்க இப்போ ஒழுங்கா வேர்க் பண்ணாமல் கள்ளம் அடிக்கிறீங்க கர்ர்ர்ர்ர்:))

      Delete
  32. ஆஹா குறள் மொழி தேவி :) திருக்குறளெல்லாம் சொல்றாங்க சங்க மிட்டரா :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நல்ல நல்ல பெயரெல்லாம் சொல்றீங்க அஞ்சு:) எனக்கு இப்படி வாயில வரேல்லயே:)) வந்திருந்தால் வச்சிருப்பேனெல்லோ:).

      Delete
  33. ஹாஹா நம்மூரில் ருசி பார்த்தே சமையலை முடிக்கும் பெண்களுமுண்டு :)))))))))))

    பிரச்சினை தீர்க்க முடியலைன்னா :) நான் குழாய் சாதம் இதுக்குதான் செய்யவேயில்லை லை 

    ReplyDelete
    Replies
    1. நீங்க என் குழைஜாதம் செய்தால்தான் டேவடைக் கிச்சின் ஒழுங்கா நடக்குமாக்கும்:)) நான் மேரி மாதாவுக்கு ஒரு கட்டுப் பூ வாங்கித்தருவேன் என நேர்த்தி வச்சிருக்கிறேன்:)..

      Delete
  34. ஓ இதுதானா அந்த படம் போலீஸ் இல்லை னு சொல்லி ஒரே பிலிம் காட்டும் இந்த கீரோ :)
    நான் 10 நிமிஷம் பார்த்தேன் அவ்ளோதான் :)நம்ம பேவரிட் சித்தப்பா அங்கிள் படத்தையே நான் பார்த்ததில்லை :)

    ReplyDelete
    Replies
    1. படம் பார்த்தமாதிரித்தான் நினைவா இருக்கு எனக்கு, தெரியல்ல செக் பண்ணோனும், இல்ல அஞ்சு விக்ரம் படங்கள் பார்க்கலாம் நன்றாக இருக்கும். போன வருடமோ அதுக்கு முதலோ ஒன்று வந்துது அது சரியில்லை ஒரே சண்டை.

      நீங்களும் இப்போ பிசியாகிட்டீங்க அஞ்சு, ஏதோ முடியும்போது போஸ்ட்டும் போட்டு, முடியும்போது கொமெண்ட்ஸ் உம் போடுவோம். மிக்க நன்றிகள் அஞ்சு.

      Delete
  35. இம்முறை கந்தஷஷ்டி விரதம் ஆரம்பித்து முடித்தாயிற்று. நீங்க கெளரி விரதமும் இருந்து இதையும் இருந்ததால் களையா இருக்கும்.இது 6நாள் கெதியா போயிடும். ஆரம்பிக்க கஷ்டமா இருக்கும்.பின் 2நாளில் பழகிடும். பாரணை முடிந்து சாப்பிடமுடியாது. கொஞ்சம் கொஞ்சமாதான் சாப்பிடனும். நானும் ஊரில் பிடித்தபோது அனுபவம். இப்ப இங்கு பசிக்கும்.குளிருக்கு கொஞ்சம் அதிகமா பசிக்கும்.
    அழகாக இருக்கு சாப்பாடு எல்லாம். நல்ல பிரசண்டேஷன். கீரி சம்பா அரிசி சாப்பிட்டதுதான். இப்ப சோனாமசூரி அரிசி நல்லது என்றாங்க வாங்கி சமைத்தேன் நல்லாதானிருக்கு. கொத்தவரை,சிறகவரை, என ஊரில சாப்பிடாதது எல்லாம் இங்கு சாப்பிகிறேன்.
    ஆவ்வ்வ்... வல்லாரை சம்பல் நானும் இப்படித்தான் செய்வேன் அதிரா. இல்லையெனில் அரைப்பேன். எனக்கு இதுதான் பிடிக்கும். நல்ல டேஸ்ட். சீனி அரியத்ரம் செய்முறை முந்தி போட்டனீங்கல்லோ..நான் எழுதிவைத்துவ்ட்டு இன்னும் செய்யேலை.ஆவ்வ்..
    எல்லாமே படங்களில் பார்க்க அழகா செய்திருக்கிறீங்க.
    குக்கர் உங்களுக்கு வேலையை ஈசியாக்கிடுது. நல்லதுதான் வேலைக்கு போகிறவர்களுக்கு நல்ல ஹெல்ப்.ஆ இருக்கும்.
    திருக்குறள்,ஊசி இணைப்பு.,ஊசிகுறிப்பு அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ..
      களைப்புத்தான் இருப்பினும் களைப்பிலும் ஒரு சந்தோசம், அதிலும் இப்படி விரதமிருந்து பாரணை செய்யும்போது பயங்கர சந்தோசமாக ஏதோ கல்யாணக்கொண்டாட்டம் போல இருக்கும்.

      எனக்கு நவராத்திரி, கெளரிவிரதம் தான் விரைவாப் போனமாதிரியும், கந்தசஷ்டி 6 நாளும் பயங்கர ஸ்லோவாகப் போனதைப்போலவும் இருந்துதே ஹா ஹா ஹா.

      நான் கீரி சம்பா, முத்துசம்பா இரண்டும் அப்பப்ப சமைப்பேன். ஆனா இப்போ கண்டு பிடித்து நெடுகவும் சமைப்பது “தஞ்சாவூர்ப் பொன்னி புழுங்கல் அரிசி”.. சூப்பராக இருக்குது அம்முலு, வாங்கி சமைச்சுப் பாருங்கோ. பச்சை அரிசியை விடப் புழுங்கல் அரிசி நல்லதுதானே, இது பால் வெள்ளைப்புழுங்கல் என்பதால் பிள்ளைகளும் சாப்பிடுகிறார்கள் ,

      யேஸ் சீனி அரியதரம் போனமுறையும் போட்டேன், இம்முறை நெல்லைத்தமிழன் கேட்டமையால திரும்பப் போட்டேன்... அடுத்தமுறையும் ஒருவேளை போடுவேன் ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் அம்முலு.

      எங்கே அடுத்த போஸ்ட்டைக் காணம்?:).

      Delete
  36. சே சே திங்கள் வந்திட்டாலே என்னால ஒண்ணுமே பண்ண முடிவதில்லை, வேர்க் முடிஞ்சு வீட்டுக்கு வந்தால், மருந்தடிச்ச பூச்சி மாதிரி மயங்கிடுறேன்:)).. சரி சரி இன்று பதில்கள் போட்டு முடிச்சுப்போட்டுத்தான் மயங்கப் போறேன்ன்.. இது வேற மயக்கம் ஹா ஹா ஹா.

    ReplyDelete
  37. அரியதரமும்,பாரணை சாப்பாடும் சூப்பர்.

    ReplyDelete
  38. விரதம் நல்லபடியாக முடிந்தது மகிழ்ச்சி அதிரா.

    பாரணை சாப்பாடு பார்க்கவே நன்றாக இருக்கிறதே.

    குக்கரும் ரொம்பவே அடக்கமாக இருப்பதாகத் தெரிகிறது.

    ஊசிக்குறிப்பு, ஊசி இணைப்பு எல்லாமே ரசித்தேன்.

    துளசிதரன்


    ReplyDelete
  39. அதிரா நான் நாளை வந்து கமென்ட் போடுகிறேன். வாசித்துவிட்டேன். உறக்கம் வருகிறது. மதியம் எல்லாம் கரன்ட் இல்லவே இல்லை. அப்புறம் உங்கள் பதிவு இறங்க மறுத்து இப்ப ராத்திரிதான் ஒழுங்காக வந்தது. துளசியின் கமென்டைப் போட்டுவிட்டேன். நாளை வரேன்...

    கீதா

    ReplyDelete
  40. மிக தாமதம்..பரவாயில்லை ...


    தங்கள் விரதம் நன்முறையில் முடிந்ததற்கு மிக மகிழ்ச்சி அதிரா ...


    சாப்பாட்டு படம் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு ..

    எலேக்ரிக்கு குக்கர் வாவ் ..செம்மையா இருக்கு ...

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.