நல்வரவு_()_


Sunday 10 November 2013

GRAVITY ... 3D ஊடாகப் பார்த்ததில் தெரிந்தது..

இப்போ, 8ம் திகதி முதல்... இங்கின தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஆங்கிலப் படம். நேற்றுப் பார்த்தமா.. உடனேயே அதுபற்றி ஒரு விமர்சனம் எழுதோணும் எனும் ஆவல் தூண்டப்பட்டு விட்டது.

சரி படம் பற்றிய விமர்சனத்துக்கு முன்பு கொஞ்சம் என்னைப் பற்றிச் சொல்கிறேனே.. ஏனெனில், எனக்கு படம் ஏன் பிடித்தது என்பதை நீங்க அறிய இது உதவிபண்ணுமெல்லோ:)... “இந்த விருப்பம்” உங்களுக்கு இல்லாவிடில், படம் பிடிக்காமலும் போகலாம்.. அதனாலயே முன்னறிவித்தல்..

எனக்கு விண்வெளி.. ஸ்பேஸ் புரோகிராம் எனில் கிட்டத்தட்ட பைத்தியம் மாதிரி.[ இந்தத் தகவல் இங்கே பெரும்பாலும் உங்களுக்கு தெரிந்திருக்கும்:)] அங்கிருந்து சட்லைட்டில் படமெடுக்கும்போது, நம் உலகம் ஒரு புறம் தெரியும், சந்திரன் ஒருபக்கம் தெரியும்.. நட்சத்திரங்கள் கல்லுகள் என.. சுற்றிய வண்ணம் இருக்கும்.. அதை ரசிச்சே முடியாதெனக்கு. அவ்ளோ விருப்பம். அப்போ இப்படம் எனக்காகவே எடுக்கப் பட்டதுபோல:) என்னுள் ஒரு மகிழ்ச்சி:)..

சரி கதைக்கு வருகிறேன்ன்.. இதில் கதையே இல்லை:).. அதை விடுங்கோ.. தியேட்டருக்குள் போய் இருந்து பொப்கோனும் நச்சூஸ் சும்(nachos chips) வாங்கி சாப்பிட்டபடி, இருந்தமா.. அட்ஸ் ஓடிக்கொண்டிருந்துது. டக்கென ஸ்கிறீனை ஸ்ரொப் பண்ணி விட்டு.. தியேட்டரில் ஒருவர் வந்து எனவுன்ஸ் பண்ணினார்ர்.... அதாவது என்ன மெயினா சொன்னாரெனில்.. கொஞ்சம் பயமாக இருக்கும் காட்சிகள் எனில் கண்ணை மூடிடுங்கோ என. 3டி கண்ணாடி போட்டுப் பார்க்கும்போது, எல்லாமே நமக்கு கிட்ட வருவதுபோல இருக்குமெல்லோ..

அப்போ அப்படிச் சொன்னதும்.. கொஞ்சம் பயம் எனக்கு வந்திட்டுது என்றால் பாருங்கோவன்:).

சரி கண்ணாடி எல்லாம் போட்டுப் படம் பார்க்கத் தொடங்கியாச்சு...

ஸ்பேஸிலே ஒரு ஸ்பேஸ் ஷிப் நிற்கிறது.. அதில் சிலர் போயிருக்கிறார்கள்,ஒரு 6/7 பேர்தான். அவர்கள் அந்த ஷிப்பில் சில வேலைகள் செய்கிறார்கள், அதனை பூட்டி நேராக்குகிறார்கள். அந்த ஷிப் இருப்பது விண்வெளிதானே.. ஒரு பக்கம் உலகம் தெரிகிறது, சந்திரன் தெரிகிறது, கற்கள், உடைந்த சில துண்டுகள் பறந்த வண்ணமிருக்கின்றன. அதனுள் இவர்களும் பறந்து பறந்து பூட்டுகிறார்கள்.

அப்போ வெளியில் இருந்து பறந்து வந்த வேறு சில ஷிப்ஸ் இன் பகுதிகள் வந்து அடிக்கிறது, அதனால் இவர்களில் சிலர் அந்த ஷிப்பை கையால் பிடிக்க முடியாமலும், மற்றும் ஒட்ஷிசன் போதாமல் போயும் இறந்து விடுகிறார்கள். எல்லாமே பறந்து சுற்றிக் கொண்டிருக்கும், ஒன்றுமே கீழே விழாதுதானே.
=============================INTERVAL==============================
========================================================================
கடசியாக ஒரு பெண்ணும் ஒரு ஆணும் மட்டுமே எஞ்சுகிறார்கள். இருவரும் வெளியே பறந்து மீண்டும் பூட்ட முயலும் போது, பெண் தவறிப்போக.. அந்த ஆண்தான் காப்பாற்றுகிறார். இப்படி நடந்து பின்னர் ஒரு கட்டத்தில், அந்த ஆண் இந்த விண்வெளிக் கப்பலைப் பிடிக்க முடியாமல் தூரமாக எட்டித் தவிப்பார்.... அப்போ பெண் என்ன செய்வார், அவரைக் காப்பாற்ற, எட்டிப் பிடிப்பார்...

இந்த நிலை எப்படி இருக்குமெனில், இவர்களின் விண்வெளிக் கப்பலில் இருந்து சில நாடாக்கள் பெண்ணின் காலில் சுற்றப்பட்டிருக்கும், அதன் மூலம் பறந்த வண்ணமே அந்த ஆணை இழுத்துப் பிடிப்பார்...பலமான காற்றுப்போல பிச்சு அறுத்துக் கொண்டு போவது போல இருக்கும், அப்போ அந்த ஆண் சொல்வார், என்னை விடு, நான் போகிறேன், என்னை இழுத்தாயானால் அந்த நாடா அறுந்துவிடும், அப்போ இருவரும் இறந்திடுவோம், ஆருமே மிஞ்சமாட்டோம் என.

அப்போ அவ பெரிதாக கத்தி கூச்சல் எல்லாம் போட மாட்டா[வெள்ளைக்காரப் பெண்ணல்லவா:)].. ஆனா முகபாவனையில் கவலை தெரியும்... கையைப் பிடித்து இழுத்தபடி சொல்லுவா... பிளீஸ்ஸ் போயிடாதே வா.. என, ஆனா அவரோ இல்லை, நாடா அறுமுன் நான் கிளிப்பைக் கழட்டுகிறேன் என, அவ இழுக்கும் அந்த பட்டியில் இருக்கும் கிளிப்பைக் கழட்டுவார்ர்.. ஸ்லோ மோசனில்.. அவ அழுவா.. பிளீஸ்ஸ் பிளீஸ்ஸ் போகாதே என.. அவர் இல்லை நீ தப்பிப்போ என கிளிப்பைக் கழட்டுவார்ர்..

அப்படியே அவர் தூரப் பறந்து போவது தெரியும். இவவுக்கு ஒட்ஷிசன் போதாமல் வந்து விடும், பலமாக மூச்சு வாங்குவா, உடனே சிப்பின் டோரை இறுக்கித் திறப்பா, திறந்து உள்ளே வந்து கதவை மூடிவிட்டு, ரீவியின் முன்னால் வந்து இருப்பா. எல்லாமே பறந்துதான்.. நடப்பதில்லை. செயாரில் இருந்து பெல்ட்டைப் போட்டால்தான் எழும்பிப் பறக்காமல் இருக்கலாம்.

அப்போ அவவுக்கு தாங்க முடியாத கவலையாக இருக்கும்.. ஆருமே இல்லை.. ஒரு சுவிட்சைப் போடுவா... அதில் ஏதோ ஒரு ஷைனீஸ் ரேடியோ சனல் போகும்.. இவ அவரோடு கதைக்க வெளிக்கிடுவா.. அது ரேடியோத்தானே .. தன் பாட்டில் போகும்.. அதில் ஒரு குழந்தையின் மழலை மொழி எல்லாம் கேட்ட்கும்... இவ துக்கம் தாளாமல் வாய் மூடி அழுவா...

அப்போது ஒரு துளி கண்ணீர் வந்து கன்னத்தால் வழிந்து.. அது ஒரு உருண்டையாகி விழும்.. விழுந்து.. அந்த ஒரு துளியும்.. அப்படியே கீழே விழாமல்.. பறந்து சுற்றிப்போகும்... மிகவும் ஒரு கவலையான கட்டமாக இருக்குமது.

அந்நேரம் அவவுக்கு ஒட்ஷிசன் காணாமல் மூச்சு வாங்கும், ஆனா அவ கவலையால் செயலிழந்ததுபோல, மாஸ்க் கை எடுத்து மாட்டாமல் அப்படியே இருப்பா... அப்போ அந்த ஸ்பேஸ் சிப்பின் கதவை ஒருவர் தட்டுவார்ர்... தட்டி விட்டு திறந்து உள்ளே வருவார்ர்... பார்த்தால், கடசியில் என்னை விடு எனச் சொல்லி கிளிப்பைக் கழட்டிப் போன அவரேதான்... அவர் உள்ளே வந்து இவவின் பக்கத்துச் செயாரில் பெல்ட்டைப் போட்டு இருப்பார்..

உடனே அவவுக்கு ஒரு புத்துணர்வு வரும்.. டக்கென மாஸ்க்கைப் போட்டிடுவா, உடனே உஷாராகிடுவா.... பின்பு அவவை மட்டுமே காட்டுவார்கள்... அப்போ எமக்கு ஒரு குட்டி டவுட்.. வந்தவர் எங்கே????

அது அப்படி இருக்க.. மீண்டும் இவவின் ஸ்பேஸ் சிப்.. துண்டு துண்டாக வெடிக்கும்... முடிவில் அவவாவது உயிர் பிழைக்கிறாவா? இல்லை.. அவவும் இறந்து விடுவாவா????? முடிவை தியேட்டரில் பாருங்கோ... 

அந்த வந்தவர் எங்கே???? பின்புதான் நாம் உணர்வோம்ம்.. அது உண்மையல்ல... அவவை உஷார் பண்ண, ஒரு ட்ரீம் வந்தது அப்படி...

என்னைப் பொறுத்து படம் சூப்பர். நல்ல 3டி தியேட்டரில் பாருங்கோ.. அப்படியே நாமும் உள்ளே போவதுபோல, ஸ்பேஷில் சுற்றுவது போல இருக்கும்... படம் முடிந்த பின்னும்.. இன்னும் தொடராதா.. அதுக்குள் முடிந்து விட்டதா எனும் உணர்வை உருவாக்கிய படம்... தியேட்டரைக் கண்டாலே நித்திரையாகும் என்னையே.. சொக்க வைத்திருந்தது...

அதிகமான ஆங்கிலப் படங்கள்.. டொமார்ர்.. டும்.. எனச் சத்தமாக இருக்கும்.. பளீச் பளீச்ச் என வெளிச்சம் வரும்... இதனால் எனக்கு தலையிடி வந்திடும்.. ஆனா இதில் பெரிதாக அப்படி எதுவுமே இருக்கவில்லை.. எல்லாமே அளவாக இருந்துது. ஆரம்பம் ஒரு 20 நிமிடம் தவிர்த்து, படம் முழுவதும் இருவரே நடிக்கின்றனர்.. விண்வெளியல்லவா மருந்துக்கும் ஆட்கள் இல்லை.

சிறியவர்களையும்(குட்டீஸ்) கூட்டிப் போய்ப் பார்க்கலாம். திரும்பவும் சொல்கிறேன், ஸ்பேஸ் புரோகிராம் பிடித்தவர்களுகு இப்படம் 100 வீதமும் பிடிக்கும்.


=========================================================================
ஊசி இணைப்பு:

Friday 8 November 2013

பழகலாம் வாங்க!!.. வாங்க!!!:)

அட எதுக்கு இவ்ளோ கூச்சப் படுறீங்க... உள்ள வாங்க..:)..
அஞ்சு விதமாமே:))
இதை நான் எந்த “மீன்” வீட்டிலயும்:) களவெடுத்து வரவில்லை என்பதையும்:), இது அஞ்சுவின் செல்லம் “ஜெஷி”  [தான் என்பதையும்.. ஹையோ நானே பிடிச்சுக் கொடுத்திடுவன் போல இருக்கே வைரவா:))...] அல்ல என்பதையும்:) தேம்ஸ் கரைக் கல்லின் மீது அடித்துச் சத்தியம் செய்கிறேன்ன்:).. 
 பழகத்தானே கூப்பிடுறேன்:).. அதாவது சமைச்சுப் பழகலாம் வாங்க எனக் கூப்பிட்டேனாக்கும்:)... அதிரா வீட்டில தோசை சுடுகிறாவாம் எண்டால், ஆருமே வரமாட்டீங்க:).. அதனாலதான்..  பின்பாதியை மட்டும் சொன்னேன்ன் அது டப்பா?:).

சரி இப்போ விஷயத்துக்கு வருவம்... இது இன்று நேற்றுச் சமைத்தவை அல்ல:) ஒருகாலத்தில சமைச்சு, இங்கின போட்டு வச்சேன்ன்.. 

1.இது அதிராவின் ஸ்பெஷல் தோசை... இதில போட்டிருக்கும் இன்கிறீடியன்ஸ் எல்லாம்.. அதிரா கபேட்டைத் திறந்து தேடும்போது, என்ன என்ன அகப்படுதோ, அவை எல்லாம் இன்கிறீடியன்ஸ்தான்:). அதனால தோசை ஸ்பெஷலிஸ்ட் ஆரும் சண்டைக்கு வந்திடப்பூடா சொல்லிட்டேன்:)).. அதுக்குத்தான் பழகலாம் வாங்கன்னேன்ன்:)).

சரி இப்போ இங்கின இருப்பவை என்ன?
கொண்டைக் கடலை அரைகப்..
பச்சைப் பட்டாணிக் கடலை அரை கப்..
உழுந்து அரை கப்..
சமைத்த ரைஸ்(சோறு) அரைக் கப்..
வாழி அரிசி அதாவது.. பார்லி ரைஸ் - 3 மேசைக்கரண்டி.

சோறு தவிர்த்து அனைத்தையும் ஊறப்போட்டு அரைத்து, அதனோடு சோறும் சேர்த்து அரைச்சு... வழமைபோல அப்பச்ச்சோடா உப்பு சேர்த்து புளிக்க வச்சுச் சுட்டேனா... ஸ்ஸ்ஸ்ஸ் நல்லெண்ணெய் ஊத்தி ஊத்தி சுட... சூப்பரா வந்துதே.....


இந்தாங்க தேங்காய்ப் பூச் சட்னியோடு சாப்பிட்டுப் பாருங்கோ!!! உஸ்ஸ்ஸ் அப்பாடா அஞ்சில ஒண்டு சொல்லிட்டேன்ன்:)
=================================================
2.இது என்ன தெரியுதோ? உங்களுக்கு எங்க தெரியப்போகுது, நானே சொல்லிடறேன்ன்.. இது பயற்றங்காய் வித் பலாக்கொட்டைப் பிரட்டல் கறி( என் ஃபேவரிட் ஆக்கும்:)).

எப்பூடியெனில், வெங்காயம் செத்தல் மிளகாய் போட்டு எண்ணெயில் வதக்கி, அதனுள் பயத்தங்காய், பலாக்கொட்டை போட்டு உப்பும் போட்டு, உள்ளியும் போட்டு கொஞ்சம் வதக்கி, பின் கொஞ்சம் வெந்தயமும், கறித்தூளும் சேர்த்து நன்கு பிரட்டி, மூழ்கும் அளவு மட்டும், கொதி தண்ணி விட்டு, மூடி அவிய விடுங்க.. அவிந்து வந்ததும், மூடியை எடுத்துப்போட்டு, கறிவேப்பிலை சேருங்க, பக்கத்திலயே நின்று:).. பிரட்டிப் பிரட்டி நன்கு தண்ணீர் வத்தும் வரை, பிரட்டி... இறக்கி தேசிக்காய்/எலுமிச்சம் புளி பிளிந்து விடுங்க... கறிவேப்பிலையை கடசியாப் போட்டால்தான் அப்படியே பபபச்சையா இருக்கும், முன்னமே போட்டிட்டால் கலர் போயிந்தி:).

சைவக் காரர் எல்லாம் கண்ணை மூடுங்க:)
=========================இடைவேளை=======================
3.இடைவேளையில அசைவம் உண்ணலாம் வாங்க:).. இது sea bass [ uk kind:) ] மீனில் செய்த பிரட்டல் கறி.. தோசைக்கு சூப்பராம் என, வீட்டுக்கு வந்த விருந்தினர் புகழ்ந்தாங்கோ:)).. செய்முறை வேணுமெண்டால்ல்.. செக் -பவுன்டில அனுப்புங்க:) சொல்லித் தாறேன்:)

^._.^ ==== ^._.^ ==== முடிஞ்சு..^._.^ போச்ச்ச்ச்:)==== ^._.^ ==== ^._.^ 
சரி சரி இப்போ திறங்க.... கண்ணைத்தான்:)

4.இது உங்களுக்கு பழக்கப் பட்டுப் போய்விட்ட... அதே புதினா மேடைதான்ன்:)
இது புதினா சட்னி. இது நான் செய்வது, கொஞ்சூண்டு எண்ணெயில், செத்தல் மிளகாய், மிளகு, உள்ளி அதனோடு ஒரு கைப்பிடியளவு ஷனா டாலை ஊறப்போட்டு சேர்ப்பேன், அல்லது ரோஸ்டட் ஷனா டால் சேர்த்து வறுத்து, அதனுள் இவ்விலைகளைக் கொட்டி நன்கு வதக்கி இறக்கி ஆறியதும்... பழப்புளி உப்பு, தேங்காய் சேர்த்து நன்கு அரைத்தெடுப்பேன், அல்லது, அரைத்து பாதி தேசிக்காய்ப்புளி சேர்ப்பேன்...

எனக்கொரு டவுட்டு:).. நான் பல நேரங்களில் இலைவகை/கீரைவகை வாடியிருந்தால், அவற்றை துப்பரவு செய்து, வெட்டமுன் தண்ணியில் போட்டு விடுவேன். பின்பு பார்க்க அவை எல்லாம் புதுசா மரத்தில் இருப்பதுபோல துளிர்த்து நிற்கும். அதன்பின் சமைக்க ஆசையாக இருக்கும்.

அந்த நினைப்பில், நல்லாயிருந்த புதினாவை பிடுங்கி வந்து, நைட் தண்ணியில் போட்டு விட்டு, காலை எழுந்து பார்க்கிறேன், அத்தனை இலைகளும் கறுத்து விட்டது, அத்தோடு தண்ணியும் கறுப்பாகியிருந்தது... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... ஏன் புதினாவுக்கு மட்டும் இப்பூடி ஆகுது?:).
==================================================================
5. ஆவ்வ்வ்வ் தலைப்பிலே சொன்னபடி இது அஞ்சூஊஊஊஊ ஆவது குறிப்பாக்கும்:)).. 
இது என்னவெனத் தெரியுதோ? இதுதான் துவரம்பருப்பு வடைக்கறி:).. நான் ஆவியில் அவிக்காமல் நேரடியாகப் பொரித்தெடுத்தேன். இது பொதுவா எல்லோருக்கும் தெரியும் முறையில்தான் செய்தேன், அதனால குறிப்பெல்லாம் தேவையில்லை.. பேசாமல் சாப்பிடுங்கோ:).

^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ 
ஊசிக்குறிப்பு:
வாங்க!! வாங்க... கையைக் கழுவுங்கோ:), வெயிட்..வெயிட்ட்.. உடனேயே சாப்பிடுவதா?:) சாப்பிட முன்.. “மொய்ய்ய்ய்” எழுதுங்க:)).. ஆங்ங்ங்ங்.. வெயிட் வெயிட்.. இன்னும் இருக்கில்ல:)) ச்சும்மா அவதிப்படப்பூடா:).. எங்க உங்கட சின்னி விரலைக் காட்டுங்க.. ஆஆஆஆஆ.. வோட் பண்ணிட்டீங்களா?:)).. ஆவ்வ்வ்வ்வ் இப்போ சாப்பிடுங்கோ... “பொன்ன பித்தி”.. இது ஃபிரெஞ்சாக்கும்:)
^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ 
இந்தத் தொப்பியும் கண்ணாடியும், போனமுறை நீங்கள் எல்லோரும் கொடுத்த, மொய்ப் பணத்தில் வாங்கியதென்பதை மிகவும் தாழ்மையுடன் கூறிக்கொள்கிறார்.. பு.பூ:)
^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ 

Friday 1 November 2013

கண்டு பிடிக்க முடியுமா உங்களால்?:)

நாம் பரிஷிலே(Paris) போயிருந்தபோது, பலதடவைகள் ஈபிள் டவருக்குப் போயிருக்கிறோம், பிள்ளைகளுக்கு அதிகம் பிடித்த இடமாக அது இருந்தது, அதனால் பெரும்பாலான பின்னேரங்கள், அங்கு போனோம்.

அங்கு அதிகமாக சைனீஸ்தான் இப்படியான தொழில் செய்கிறார்கள்.. அதாவது, எமது முகத்தை வரைகிறார்கள்.. முன்னாலே இருக்க விட்டு கடகடவென வரைவார்கள்.. அதுக்கு எடுத்துக் கொள்வது வெறும் 5, 6 நிமிடங்கள் மட்டுமே... அப்படம் இன்னொரு நாளில் வெளிவர இருக்கிறது:).

இப்போ இது என்ன தெரியுமோ? இதுவும் ஒருவர், இரண்டு நிமிடங்களுக்குள் வரைந்தவையே இவை. சும்மா பக்குப் பக்கென கீறித் தள்ளுகிறார். முன்னாலே பிரஷும் பெயிண்ட்டும் இருக்கும்.. அவரின் கை பின்னி பெடலெடுக்குது.

சரி, படம் போல பார்த்திட்டுப் போகாமால்.. படத்தில் இருப்பது என்ன? கண்டு பிடித்துச் சொல்லுங்கள்.. தீபாவளிக்கு இலவச இனிப்பு உங்கள் வீட்டு வாசல் கதவைத் தட்டும்:)

இது ஒன்று:)

இது ரெண்டு:)

இரண்டையும் கரீட்டாக் கண்டு பிடித்துச் சொல்லோணும்:)
_________________________(^-^)__________________________

குண்டூசி இணைப்பு:
கம்பன் வீட்டுத் தறியும் கவிபாடும் எனத் தெரியுமெல்லோ உங்களுக்கு? ஆனா அதை நேரில் பார்த்ததுண்டோ?:)) இதோ குயிலிங் செய்யுதே அஞ்சு வீட்டுச் செல்லம்:)).. என்ன அயகா:) கதிரையில் இருந்து.... ஸ்ஸ்ஸ் எல்லாம் அதிராட ட்ரெயினிங்தான்ன்ன்ன்:)))

ஊசி இணைப்பு:)
தேம்ஸ் கரைமீது அடித்துச் சத்தியம் பண்ணுறேன்ன்ன்:) இதை அதிரா செய்யவில்லையாக்கும்:)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
உஸ்ஸ்ஸ்ஸ் ஸப்ப்பாஆஆஆஆ.. இரவோடிராப் போய் ஒவ்வொரு வீடாய்த் தேடி:), இருட்டில சுட்டெடுத்து:) வருவதுக்குள் வாழ்க்கையே வெறுத்துப் போகுதே சாமீஈஈஈஈஈஈஈ:))
[[நான் முதலில் போட்டது அவசரமா சுட்டது, அதில் இருக்கும் எழுத்துக்கள் எனக்கே பிடிக்கல்ல, அதனால மாத்திட்டேன்ன்:))]]

என அலுக்காமல் சளைக்காமல், அடுத்த சூட்:) டுக்கு ஆயத்தமாபவர்... உங்கள் பேரன்புக்கும் + பெரு மதிப்புக்கும் உரிய : புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்..
==================================================================================