நல்வரவு_()_

நமக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)

Sunday, 10 November 2019

என் நெ.ஆ பகுதி 2 👸

போன பதிவிலிருந்து மிகுதிக் கதை தொடர்கிறது... இப்போ கோயிலுக்குள் போவோமா?:)..

Thursday, 7 November 2019

என் நெடுநாள் ஆசை:)

அம்சவல்லி:)
நான் பாருங்கோ இப்போ ரொம்ப உஷாராகிட்டேன்:), அதனால பூஸோ கொக்கோ?:), இனி எந்தக் கோயில் எனச் சொல்ல மாட்டேனாக்கும், ஆராவது போக விரும்பினால் வட்சப்பில கேளுங்கோ அட்ரஸ் தருவேன்:))... ஹா ஹா ஹா.

இந்த அம்மன் கோயிலுக்கு ஒரு க்குளூ மட்டும் தருவேன், இது நியூயோர்க்கில், கனடாப் பக்கமாக இருக்கு. கனடாவிலிருந்து போகும் போது போர்டரைத்தாண்டியே போகோணும், அதில் பாஸ்போர்ட் காட்டோணும்.

இக்கோயில் ஆரம்பிச்சு சில வருடங்கள்தான் என நினைக்கிறேன், அப்போ எனக்குப் போகோணும் என சரியான ஆசை, எனக்கு அம்மன் மற்றும் சிவன் கோயில் எனில் ஏனோ ஒரு தனிப்பட்ட லவ்:). ஒவ்வொரு தடவையும் போகக்கிடைக்கவில்லை, இம்முறைதான் தரிசனம் கிடைத்தது.மேலிருக்கும் வீடியோக்கள், கனடாவில் இருந்து கோயிலை நோக்கிப் போனபோது, எங்கள் குடும்பம் எல்லோரும் போனோம், பிள்ளைகள் எல்லாம் ஒன்றாக ஒரு வாகனத்தில் ஏறினார்கள், நாங்கள்[லேடீஸ்] ஏறியது அண்ணனின் வாகனத்தில்:)).. அப்போ வீடியோ எடுக்கும்போது அண்ணனிடம் சொன்னேன், அஞ்சுவுக்கு இந்த வீடியோக் காட்டுவேன் அவ 60+ இல் இருப்பதனால், பழையபாடல்கள்தான் பிடிக்குமாம் எனச் சொன்னா, அதனால ஏதும் பழைய பாட்டு இருந்தா போடுங்கோ என, உடனே அண்ணன் போட்டார் பாருங்கோ இந்தப் பாட்டை:)).. அஞ்சூஊஊஉ பாட்டுக் கேய்க்குதா?:).
இப்போ அமெரிக்க எல்லைக்குள் நுழையும் இடம் வந்திட்டுது..இதில் மெதுவாக போய்ப் போய், பாஸ்போர்ட்டைக் காட்டினால், விடுவார்கள் உள்ளே..


===குட்டி இடைவேளை===
என்னிடம் மேத்தாவின் கனவுக்குதிரைகள் கவிதைப் புத்தகம் இருகுதெனச் சொன்னபோது, அதில் சிலதை இடைக்கிடை இங்கு பகிரலாமே என ஸ்ரீராம் சொன்னது மனதில் நினைவாக இருந்தது, ஆனா அதில் பெரும்பாலும் இருப்பவை அரசியல் சம்பந்தமான கவிதைகளாக இருக்கு, இது மட்டும் கொஞ்சம் ஓகே என்பதனால் போடுகிறேன்...
* உன் பெயரைச் சொன்னேன் என்னைக் கவிஞன் என்றார்கள்
உன் ஊரைச் சொன்னேன் என்னைக் காதலன் என்றார்கள்
நம் உறவைச் சொன்னேன்! என்னை நாட்டு வைத்தியரிடம் காட்டச் சொன்னார்கள்!!!.

*என் இதயத்தின் விலாசம் நீ!
என் வீட்டு விலாசத்தையா விசாரித்துக் கொண்டிருக்கிறாய்?

*தீப்பெட்டியைத் தேடி எடுக்கிறாய்
வீட்டில் விளக்கேற்றவா?
என்னை வெளியேற்றவா?

*வெள்ளைத் தாளாய் இருந்தது என் இதயம்
எதை எதையோ நீதான் எழுதினாய்
ஒருநாள் எழுதியதை எல்லாம் நீயே அழித்துவிட்டாய்
அழித்தது சரி! எழுதியது நீ என்பதால் அழித்தது சரி!
இதயத்தைக் கிழித்தது சரியா?
==============================
ஆஆஆ... கோயிலுக்கு வந்தாச்சு, முகப்பிலே வரவேற்கும் பிள்ளையார் இவர், பாருங்கோ சிதறு தேங்காய் அடிச்சு தேடுவாரில்லாமல் இருக்கு, எனக்கு பொறுக்கிச் சாப்பிட விருப்பம், எனக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் சப்ளை செய்து சாப்பிடுவேனாக்கும்:)).. ஒளவையார் என்ன சொல்லியிருக்கிறா?:), ஒரு குட்டித் துண்டென்றாலும் அனைவருக்கும் குடுத்துச் சாப்பிடோணுமாம்:)).. ஓசித் தேங்காயைக் குடுத்துச் சாப்பிடுவதாகத்தானே நினைக்கிறீங்க:)) கர்ர்ர்ர்ர்:))இப்படித்தான் பாருங்கோ கனடாப் பிள்ளையார் கோயில் வாசல்லயும் தேங்காய் இருந்துது, ஓடிப்போய் எடுத்து வந்தேன், அங்கு நின்ற ஒரு வெள்ளையர், அவர் கோயிலில் தொண்டு செய்பவர்போல இருக்கு, கேட்டார் கான் ஐ காவ் சம் என ஹா ஹா ஹா நான் குடுக்கவில்லை.[அவர் வேணுமெண்டெல்லோ கேட்டவர்].

இக்கோயில் பற்றிச் சொல்லி முடியாது, இன்னும் கோயில் கட்டப்படவில்லை[வெளிப்பகுதி], ஆனால் விக்கிரகங்கள் எல்லாம் அழகழகாக எடுத்து வைத்திருக்கிறார்கள். இதன் காணியோ எத்தனையோ ஏக்கர் போல இருக்கு.. தோட்டம் முழுவதும் பச்சை அப்பிள் மரங்கள், காய்த்துக் குலுங்கின, ஆசைக்கு பிடுங்கி நல்லாச் சாப்பிட்டேன்ன்:))... 

இங்கு படங்கள் அதிகமாக இருப்பதனால் மிகுதி அடுத்த பகுதியில் விரைவில் வெளிவரும்:).
⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⤧⤧⤧⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯⇯

இது இங்கு இப்போ போன மாதம் எடுத்தது, காய்கள் காய்த்துக் குலுங்குது.. இக்காய்கள் வந்தபின்னர் இலையுதிர்காலம் ஆரம்பமாகும்.


ஊசி இணைப்பு

ஊசிக் குறிப்பு..

இதன் அடுத்த பகுதியைக் காண இங்கே
================_()_===============

Sunday, 3 November 2019

பாரணை, சீனி அரியதரம், வல்லாரைச் சம்பல்🙏

ஆஆஆ இதுதான் விரதம் பிடிச்சதன் பலனோ:))


ஆஆஆவ்வ்வ் டும் டும் டும்... இதுதானா.. இதுதானா.. எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா:)) என் கந்தசஷ்டி பாலும் பழமும் விரதம் இனிதே நிறைவேறி, பாரணையும் முடிச்சு விட்டேன். இன்று போஸ்ட் போடும் ஐடியாவே இருக்கவில்லை, ஆனா அது என்னமோ விரதம் முடிஞ்சுபோச்சு என்றதும் ஒரு சொல்ல முடியாத மகிழ்ச்சியும், அதே நேரம் கவலையுமாக இருக்கு... முடிஞ்சுபோச்சே என.. விரத காலங்கள் உண்மையில் மிக மகிழ்ச்சியானதாகவே இருக்கும் எமக்கு எப்பவும்.

இன்று சாப்பிடவே முடியவில்லை, வயிறு ஏற்றுக்கொள்ளவே இல்லை:), கொஞ்சம் சாஸ்திரப்படிக்கே சாப்பிட்டேன். மிகவும் பயந்தபடியேதான் பால் பழத்தை ஆரம்பித்தேன் ஆனா 6 நாட்களும் கொஞ்சம் ஸ்லோவாகவே, இருப்பினும் நல்லபடி நிறைவேறிவிட்டது.

வாங்கோ பாரணைச் சாப்பாடு சாப்பிடலாம்..
நடுவில் தேசிக்காய் ஊறுகாய், தயிர், கீழே நான் செய்த மோர் மிளகாய் மற்றும் பப்படம், பொட்டாடோப் பப்படம், மிகுதிக்குப் பெயர் எழுதப்பட்டிருக்கு. இன்னும் இரு கறிகள் செய்ய நினைச்சு[என் லிஸ்ட்டில் போட்டிருந்தேன்:)] விட்டுவிட்டேன்..
அது சேப்பங்கிழங்குதானோ தெரியாதெனக்கு:), அஞ்சுவுக்குப் படம் அனுப்பிக் கேட்டேன் அவதான் அப்படிச் சொன்னா:)[நான் ஒரு அப்பாவி என்பதனால நம்பிட்டேன்:)].. இஞ்சிக்கிழங்குபோல இருக்கும், வாழ்க்கையில் முதன்முதலாக சேப்பங்கிழங்கு வறுவல் செய்தேன், அவித்து தோலை உரிச்சுப்போட்டு ரோஸ்ட் பண்ணினேன்...தூள் சேர்த்து, ஆனா எனக்கு அந்த ரேஸ்ட் பிடிக்கவில்லை:(

இம்முறை சுவாமிக்குப் படைச்சதைப் படமெடுக்கவில்லை, நீங்கள் பார்த்துப் பார்த்து அலுத்திருக்கும் என்பதனால்:))

ஆஆஆஆஆ நெல்லைத்தமிழன் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் சீனி அரியதரம்.. இதோ மேடை ஏற இருக்கிறது:)) என்னா சுசி:) என்னா சுசி:))) ஹா ஹா ஹா... செய்து சாப்பிட்டவுடன் எங்கள் புளொக்கிற்கு அனுப்பி வைக்கவும்:).
சிவப்புப்பச்சை அரிசியைக் கழுவி எடுத்து, ஓவர் நைட் காயவிட்டேன், காலையில் அரைத்து, பெரிய கண்ணுள்ள அரிதட்டில், அதாவது மாவுடன் குருனலும் சேர்ந்து விழுவதுபோல அரித்தெடுத்து , நம் அளவுக்கு சீனி சேர்த்துக் குழைச்சேன், தண்ணி தேவைப்படாது, கொஞ்ச நேரம் ஊறவிடவும், அல்லது, சீனியை பிளெண்டரில் மாவாக்கியும் போடலாம்.  இல்லை எனில், சிறு துளி தண்ணி தெளிச்சுக் குழைக்கலாம், உடனேயே சுட்டு விட வேண்டும், பிந்தினால் எல்லாம் தண்ணி போலாகிடும்.


இன்று ஒரு தகவல்
வழங்குபவர், உங்கள் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய:) “புலாலியூர்ப் பூஸானந்தா”:).
என்னிடம் இருந்த றைஸ் குக்கர் கொஞ்சம் பழுதாகிவிட்டது, அப்போ மினக்கெடாமல் உடனேயே காபேஜ் அடிச்சு விட்டேன், பின்பு வாங்க தேடிக்கொண்டிருந்தேன், எனக்கு சாதாரண றைஸ் குக்கர் எதுவுமே பிடிக்கவில்லை, உங்களுக்குத்தான் தெரியுமே எனக்கு எப்பவும் வித்தியாசமானதே பிடிக்கும். அதனால வாங்காமலே இருந்தேன். சமீபத்தில் தான் என் கண்ணில் இது பட்டது, உடனேயே விழுந்து விழுந்து ஆராட்சி செய்து, வாங்கியாச்சு. என்னா சூப்பர் தெரியுமோ.

பிறஸர் குக்கர் சேர்ந்த றைஸ் குக்கர். பசுமதி அரிசி எனில் ஒரு கப்புக்கு 1.5 கப் தண்ணி சேர்த்து வெறும் 12 நிமிடங்களில் சோறு. boiled rice எனில் 2 கப் தண்ணி சேர்த்து, 15 நிமிடங்கள். எந்தப் புகையுமில்லை, ஒரு கபேர்ட்டில் வச்சு மூடிப்போட்டுக்கூட ஓன் பண்ணலாம், சத்தமில்லை, புகை இல்லை, எல்லாம் நேரக் கணக்கு மட்டுமே.

சைவம், அசைவம் எது வேணுமெண்டாலும் செய்யலாம், ஆனா நான் எப்பவும் சைவம் -அசைவம் கலப்பதில்லை, வேறு வேறு பாத்திரங்களே பாவிப்பேன் என்பதனால் சைவமாகவே வச்சிருக்க விருப்பம், ஆனால் இதன் உள் பேசின் மட்டும் 10 பவுண்டுகளுக்கு அமேசனில் கிடைக்குது, அப்போ அதில் ஒன்று வாங்கினால் அசைவத்துக்கு வச்சிருக்கலாம் எனும் ஐடியா இருக்குது.[PRESSURE KING PRO PRESSURE COOKER]


இதில் பாருங்கோ, சிவப்பு கலரில் இருப்பதுதான் அந்த பிரசர் பட்டின், இது உள்ளே போனால்தான் ஓபின் பண்ணலாம், அருகில் இருப்பதுதான் ஆவியை வெளியேற்றுபவர், ஆனா இவரின் கொன்றோல் நம் கையில்.. அதாவது இப்படி நேராக விட்டு விட வேண்டும், அப்போ எந்த ஆவியும், ஒரு துளிகூட வெளியே வராது, நமக்கு உடனடியாக மூடியைத் திறக்க வேண்டுமெனில், இந்த பட்டினை வலப்பக்கம் திருப்பி விட்டால் போதும்.. குபீரென ஆவி முழுதும் வெளியே வரும், 2 நிமிடத்தில் மூடியை திறந்திடலாம்
=============================

 ஸ்ரீலங்கன் வல்லாரை சம்பல்
இது செய்வதற்கு, வல்லாரையை நன்கு துப்பரவாக்கிப்போட்டு, கழுவி எடுக்க வேண்டும், எடுத்து இப்படி கட்டாகவே பிடித்துக் கொண்டு, முத்தலாக இருக்கும் பகுதியை மட்டும் வெட்டி எறிஞ்சால் போதும், மிகுதி அனைத்தையும் இப்படிக் குட்டியாக அரிந்து எடுக்க வேண்டும்.

பின்னர் இதனுள் உடன் திருவிய தேங்காய்ப்பூ, தேசிக்காய்ப்பிளி, உப்பு, சின்ன வெங்காயம், விரும்பினால் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கையால் பிசைந்து எடுக்க வேண்டும். நான் சுவையை கூட்டுவதற்காக 2,3 கரண்டி முதல்பால் அல்லது ஃபுல் கிரீம் மில்க் சேர்ப்பேன்.

ஆஹா என்ன சுவை தெரியுமோ:)) இப்பூடிச் சாப்பிட்டால் சத்து வீணாகாது, எதனையும் வாழ்க்கையில் மறக்கவே மாட்டீங்க:)

ஊசி இணைப்பு


ஊசிக்குறிப்பு
 ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சூஊஊஊ உண்டகளை புளொக் எழுதும் அதிராவுக்கும் உண்டெல்லோ:), மசக்கம் மசக்கமா:)) வருதூஊஊஊ கொஞ்சம் டோல் குடுங்கோ:)), இப்போ நான் ரொம்ம்ம்ம்ம்பவயக்கெட்டிட்டேன்ன்:))
💓💓💓💃💓💓💓


Sunday, 27 October 2019

பக்தி முத்தினால் என்ன ஆகும்?:)

லைப்புக்கான பதிலைச் சொல்வதாக இல்லை இப்போஸ்ட்:), நான் எப்போ போஸ்ட்டையும் தலைப்பையும் சம்பந்தப்படுத்தியிருக்கிறேன்?:).. சரி இருந்தாலும் பக்தி முத்தினால் பழமாகுமாமே:) அதாவது ஞானப்பழம்:).. சரி அதெல்லாம் இப்போ நமக்கெதுக்கு.. என் முடிக்கப்படாத கதை இன்னும் இருக்கெல்லோ:).. அதைத் தொடரலாம் வாங்கோ.
சே..சே.. ஒரு போஸ்ட் எழுதவே ஒரு மாதமாகிடுதே:))

ங்கின விட்டேன் ஜாமி.. ஆஆ ரிச்மன் ஹில் பிள்ளையாரில விட்டேன் நினைவிருக்கோ.. அப்படியே ஊருக்குள்ள வாங்கோ.. கடகடவெனப் படமெடுத்திட்டேன், இப்போ படத்தை கரெக்ட்டான பெயருடன் தான் சொல்கிறேன் என நினைக்கிறேன், அப்படி இல்லாமல் கோயிலையும் போட்டு பெயரை மாத்திச் சொன்னால்தான் உங்களுக்கு என்ன தெரியவோ போகுது எனும் தெகிறியம் எனக்கு:) ஹா ஹா ஹா. இன்று வரும் கோயில்கள் அனைத்தும் கனடா ரொரண்டோவில் அமைந்திருப்பவை.

======================================================
கீழே இருப்பது மிக மிக அழகிய கோயில், துர்க்கை அம்மன் கோயில், உள்ளே நுழைந்தாலே அப்படியே அனைத்தும் மேலே இருந்து கீழேவரை தகதகவென தங்கம்போல ஜொலிக்கிறது, இப்போ சமீபத்தில்தான் புனரமைச்சு முடிச்சிருக்கிறார்கள், இது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரின் சொந்தக் கோயிலாக இருக்கிறதாம். தனிநபர் கோயில் என்பதால் மிகவும் சட்டதிட்டமாக நடத்தப்படுகிறது, படம் எடுக்கப்படாது என கண்டிப்பான உத்தரவு என்பதனாலும், நாம் போனபோது திருவிழாக்காலம்.. வசந்தமண்டபப் பூஜையாகி சுவாமி உள்வீதி சுத்திய நேரம், படம் எடுக்கவே முடியவில்லை.. இருப்பினும் பின் வீதியில் மட்டும் சிலதை எடுத்தேன்.

இன்னும் கோபுர வேலைகள் முடியவில்லைப்போலும் அதனால மூடப்பட்டிருக்கிறது

இவர் மூலஸ்தானத்தின் இடப்பக்க மூலையில் இருப்பவர்..

உள்வீதி பின்புறம் முழுவதும் இப்படி அழகாக நாயன்மார்களின் சிலைகள் வைக்கப்பட்டிருக்கு.. அத்தனையும் தங்கக்கலரில் மின்னுது அதனால படம் எதிரொளியாகி கிளியராக வரவில்லை.. வெயில் வேறு மேல் கண்ணாடியூடாக அடிச்சுக்கொண்டிருந்தது, அதிலும் ஒளிச்சு ஒளிச்செல்லோ படமெடுத்தேன்:)
உள் வீதி மண்டபத்துள்ளேயே அமைந்திருப்பவை..

==================இடைவேளை====================
ஆஆஆஆஆஆஅ நான் கோயில் கோயிலாகப் போய்க் கும்பிட்ட பலன்:), கடவுள் என்னைக் கைவிடவில்லை:), என் டமில்:) டி பற்றி இங்கின பேச்சே அடிபடேல்லையே:)) ஹா ஹா ஹா..
==============😺==============

இது கந்தசாமி கோயில், இதுவும் இப்போ புனரமைக்கப்பட்டு திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது.

வசந்தமண்டபப் பூஜை நடைபெறுகிறது..


முருகன் அப்பப்ப அதிராவைக் காப்பாற்ற, இந்த வாகனத்தில் ஏறித்தான் ஸ்பீட்டாக வருவார்:))
================================================

இது அடுத்து வருவது சிவன் கோயில். இது இனித்தான் பெரிதாக்கப் பட இருக்கிறது, இன்னும் கோபுரம் எல்லாம் கட்டப்படவில்லை.. நோட்டீஸ் படிச்சால் புரியும்.

உள்ளே சிலைகள் எல்லாம் அற்புதம், இங்கு படமெடுக்க எந்தத் தடையும் இல்லை[எழுதப்பட்டிருக்கவில்லை, இருப்பவும் எடுக்கவேண்டாம் எனச் சொல்லுவினமோ எனப் பயமாக இருந்தது], கூப்பிட்டுத், தட்டில் குழைசாதம் பப்ப்டம் பொரிச்ச மிளகாய் எல்லாம் தந்தார்கள்.

அங்கு இப்படி தண்ணி வைக்கப் பட்டிருந்தது, எனக்கு மிகமிகப் பிடிச்ச சிவலிங்கத்துக்கு இப்படி நீர் ஊற்றிக் கும்பிடலாம்.. ஆசையாக இருந்தது..
=============================================

இவர் வரசித்திவிநாயகர்... அன்று சின்னவரின் பிறந்ததினம், அவசரமாக வெளிக்கிட்டு ஓடினோம் பூஜை எல்லாம் முடிஞ்சு திரைச் சீலை இழுத்து மூடமுன் போயிட்டோம், அதனால அழகாக அர்ச்சனை பண்ணியவுடன் திரைச்சீலை போட்டார் ஐயா. 

அப்போதான் தேர் தீர்த்தம் நிறைவுற்று, பூங்காவனம்/வைரவர் மடை  என நினைக்கிறேன், அதனால மூலஸ்தான பிள்ளையாரை இப்படி மரக்கறிகள் பழங்களால் அலங்கரிச்சிருந்தார்கள். கொஞ்சம் பிந்தியிருந்தால் பார்த்திருக்க முடியாது திரை போட்டிருப்பார்கள்.. 

===============🙏===============

ஊசிக்குறிப்பு:)

ஊசி இணைப்பு

அதிரா ரெடியாகிட்டேன்ன்ன்ன் நீங்களும் ரெடியாகுங்கோ.. எதுக்கோ?.. ராஜேஸ்வரி அம்மனைப் போய்ப் பார்க்கத்தான்:)... அடுத்த தொடரில்...
😹😺😻😺😹