நல்வரவு_()_


Monday 23 July 2018

 “அதிரா வளவுக்குள்ளே திருவிழா”

ஹா ஹா ஹா தலைப்புப் பார்த்து பொத்துப் பொத்தென மயங்கி விழுந்திடாதீங்கோ:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஆருக்காவது தெரியுமோ “வீட்டுகுள்ளே திருவிளா”.. என்ற ஒரு தலைப்பு?:).. உங்களுக்கெங்கே தெரிஞ்சிருக்கப் போகுது:).. அதுபற்றி ஒரு மட்டர் வச்சிருக்கிறேன், விரைவில போடுவேன் வெயிட்:)).. இது எங்கட வளவுக்குள்ளே அழகு மலர் ஆடுவதைப் பார்க்கலாம் வாங்கோ..

Wednesday 18 July 2018

தானாடவில்லையம்மா தசையாடுது:)

ன்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க?:).. அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு எரியுமாமே:).. அப்படியும் இருக்குமோ?:) ஹா ஹா ஹா சரி சரி எனக்கெதுக்கு அதிரா வம்பு:)).. விசயத்துக்கு வருவோம்.

உங்கள் எல்லோருக்கும்தான் தெரியுமே, இங்கு நாம் இருக்கும் ஏரியாவில் நம்மவர்கள்,[நம் நாட்டவர் என்றில்லை, சைனீஸ், பிளக்ஸ் ஆருமே இல்லை, எண்ணி இரு சைனீஸ் குடும்பங்கள் மட்டுமே] ஏசியன்களே இல்லை. ஒரே ஒரு பாகிஸ்தான் உணவுக் கடை மட்டும் இருந்தது ஆரம்பம் முதல், அதுகூட கடைதான் இங்கிருக்கும், ஆட்கள் தூர இருந்து வந்து நடத்தி விட்டுப் போய் விடுவினம். இதனால இங்கு நம் நிறத்தவரைக் கண்டாலே  ஒரு ஆசை வந்து விடுகிறது. இப்போ கொஞ்சம் சைனீஸ், கொஞ்சம் பாகிஸ்தானிகள் இப்படி வந்திருக்கினம், அதுவும் காண்பது மிக அரிது.

நம் நாட்டில் நம்மவர்களை நாம் பெரிதாக நினைப்பதில்லைத்தானே, ஆனா இங்கு நம்மவரைப் பார்த்தால் அப்படியே பாசம் பொத்துக்கொண்டு வரும் ஹா ஹா ஹா.. இப்படி நிலைமை இருக்கையில் ஒருநாள்.

பாகிஸ்தான் கடைக்கு ஃபிஸ் அண்ட் சிப்ஸ் வாங்க, நாம் எல்லோரும் போயிருந்தோம். அப்போ கிச்சினில் இருந்து ஒருவர் வந்து நம்மைக் கதை கேட்டு, எந்த நாடு எண்டெல்லாம் கேட்டார். பின்பு நாம் வெளியே வர வெளிக்கிடும்போது ஓடிவந்து ஆளுக்கு ஒரு யூஸ் ரின்கள் தந்து விட்டு உள்ளே போய் விட்டார். இது எதுக்காக சும்மா தருகிறார் என நாம் திகைக்க முன், கவுண்டரில் நின்றவர் சொன்னார், அது ஒன்றுமில்லை, அவரின் கேள் ஃபிரெண்ட் சிறீலங்கன்.. அதனால நீங்களும் சிறீலங்கா என்றதும் அவருக்கு பாசம் வந்து விட்டது அதனால ஃபிரீ கிவ்ட் ஆம் என்றார் ஹா ஹா ஹா..
============================================ 

இடைவேளையிலே ஒரு வீடியோப் பார்க்கலாம் வாங்கோ.. இவற்றுக்கா 5 அறிவு என்கிறோம், அந்த வெள்ளைப் பப்பியாரின் கண்ணைப் பாருங்கோ ச்ச்ச்சோ சுவீட் இல்ல ஹா ஹா ஹா..

ஹா ஹா ஹா...
============================================
கே அடுத்த மட்டருக்கு வருவோமா?.. நாம் எப்பவும் subway  இல் வெஜ் பற்றி எனப்படும் சான்விச்தான் அதிகமா வாங்குவோம், அங்கு அதுதான் நமக்கு பிடிக்கும். அப்போ நமக்கொரு கூப்பன் வந்திருந்தது, அதில் நிறைய டிஸ்கவுண்டுகள் இருந்தன, இந்த யூலை 31 ஆம் திகதியுடன் முடிந்துவிடும் அந்த டீல். 

அப்போ அந்த சப்வேயில் ஒரு தம்பி வேர்க் பண்ணுகிறார், அவர் கறுப்பு மிக்ஸ்ட்.. அதாவது கறுப்பு இனத்தவருக்கும் வெள்ளைக்கும் பிறந்த பிள்ளை. அவரின் தலைமயிர் நல்ல கறுத்த சுருட்டை, உடல்வாகும் அப்படி, ஆனா நல்ல வெள்ளையாக இருப்பார். அவர் நம்மை நோட் பண்ணியிருக்கிறார். அவர் ஆரென்றே நமக்கு தெரியாது. சிரிப்பதோ கதைப்பதோ ஏதும் இல்லை.

அப்போ நாம் அங்கு போனபோது இந்த கூப்பனைக் கொடுத்தேன், அவர் அதைப் பார்த்துவிட்டு, அதைக் கிழிக்காமல், தொட்டு தொட்டுக் காட்டினர்.. இதுக்கு இதுக்கு டிஸ்கவுண்ட் தருகிறேன் என- திருப்பி நம்மிடமே தந்தார்.

நான் ஒருவித ஷாக்ட்:) ஆகிட்டேன்.. என்ன இது கிழித்து எடுக்கவில்லையே என, ஒருவேளை யூலை எண்ட் வரை கிழிக்காமல் திரும்ப திரும்ப வாங்கலாமோ என எண்ணிக்கொண்டு 2ம் தடவை போனேன், அதே தம்பி அதேபோல தொட்டுக் காட்டிவிட்டு, டிஸ்கவுண்ட் போட்டு விட்டு திரும்ப என்னிடமே தந்திட்டார்.

எனக்கு விளக்கம் கேட்கவும் விருப்பமில்லை, ஏனெனில் நிறையப்பேர் வேலை செய்கிறார்கள் அங்கு, அப்போ கேட்கப்போய் அவரைக் காட்டிக் கொடுத்தது போலாகிட்டால் எனவும் பயம்.

சரி இது என்ன என பார்க்கலாம் என 3ம் தடவை போனபோது அன்று அந்த தம்பி இல்லை, ஸ்கொட்டிஸ் லேடி நின்றா, கூப்பனைக் காட்டினேன், லபக்கெனக் கிழிச்சு எடுத்துப் போட்டு மிகுதியைத் தந்தா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.. அப்போதான் புரிந்தது அந்த தம்பிக்கு ஏசியன்ஸ் என்றதும் ஒரு பாசத்தால் அப்படிப் பண்ணியிருக்கிறார் என... இதுதான் அவ கிழிச்ச அந்த கூப்பன்.. இன்னும் இருக்கு வாங்கி முடிக்கோணும்:)

அப்பாடா நீண்ட காலத்தின் பின்பு என் “மியாவ்பெட்டி” எழுதியிருக்கிறேன், கவனிச்சால் தெரியும் என் போஸ்ட் லேபலில், மியாவ்பெட்டி என இருப்பதில் என் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறேன்.

ஊசி இணைப்பு

ஊசிக் குறிப்பு:)
==============_()_============

Sunday 15 July 2018

"விவசாயி அதிராவின்" முதல் பாகம்:)

நெல்லைத்தமிழனுக்கு வாக்குக் குடுத்து.. 26 மணி நேரம் முடிய இன்னும் ரெண்டு விநாடிகளே இருக்கு:) ச்சோ அதுக்குள் புயுப் போஸ்ட் எழுதிடோணும் எனக் களம் இறங்கிட்டேன்.

எவ்ளோதான் பிசியாக இருந்தாலும்.. நான் செய்த தோட்டத்தையும் பயிர்களையும் படமெடுத்துப் போடாது விட்டால்.. அதிரா ஒரு நல்ல விவசாயி என நீங்கள் நம்ப மாட்டீங்களெல்லோ:)..

எங்கட பின் கார்டினிலே...

வேலிக்கரை ஓரமாக ஒரு குட்டி இடம் எடுத்து அதில் உரமண் போட்டு, உருளைக்கிழங்கும் வெங்காயமும் ஒரு பக்கமாகவும்... மற்றப் பக்கம் கபேஜ் புரோகொலியும் நட்டேன். பாருங்கோ வரிசையாக வெங்காயமும் உருளைக்கிழங்கும் முளைத்து விட்டது... 

என்ன அழகாக, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பெருக்கிறது..



இது மற்றப் பக்கத்திலும் ஒரு இடம் எடுத்து இப்படி நட்டேன்..

ஆஆஆஆ பூக்கள் பூக்கும் தருணம்.. அதைப் பார்த்தது அதிராவெல்லோ.. உருளைக்குப் பூக்கள் வந்ததும் பிடுங்கிடலாம் என அர்த்தமாம்...  அதனால அறுவடை செய்தாச்சு ஆனா அந்தப் படங்கள் அடுத்த தொடரில் வரும்:)

ஆஹா இது பாதி வெங்காயம் பிடிங்கிட்டேன், நான் முக்கியமாக இங்கு வெங்காயம் நடுவது, அந்த வெங்காயப்பூ, தாளில் சுண்டல் செய்வதற்காகவே... இம்முறை இங்கத்தைய பெரிய வெங்காயமே நட்டேன்.. ஏனோ பூக்கள் வரவில்லை.. நல்ல பெரிய தாள்கள் மட்டுமே வந்தன..

********************************INTERVAL********************************
*************************************************************************
சரி இப்போது இந்த வெங்காயத் தாளில் எப்படி சுண்டல் செய்வது எனப் பார்ப்போமா?:)..

இப்படி துப்பரவாக்கி எடுத்திடோணும்..

பின்பு நன்கு கழுவிப்போட்டு, இப்படி குட்டிக் குட்டியாக வெட்டி எடுக்கோணும், வெங்காயத்தைப் புறிம்பாக எடுத்துக் கொள்ளோணும்.

1)பின்பு அந்த வெங்காயத் தாளினுள்[தண்ணி இருக்கக்கூடாது], உப்பு மஞ்சள், கறிப்பவுடர், தேங்காய்ப்பூ சேர்த்து நன்கு பிசைந்து எடுத்து வைத்துக் கொள்ளோணும். 

2)அந்த வெங்காயத்தோடு செத்தல் மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

3)வதங்கியதும், இந்த பிசைந்து வைத்திருக்கும் வெங்காயத் தாளைக் கொட்டிப் பிரட்டவும்.. ஸ்லோ ஃபயரில்.. மெதுவாக வதக்கினால் போதும், அதிக நேரம் எடுக்க தேவையில்லை, மூடியும் வதக்க வேண்டாம்.

இதோ வெங்காயத்தாள் சுண்டல் ரெடி:)
நன்றியுடன் விடை பெறுபவர் “விவசாயி அதிரா”

ஊசி இணைப்பு:)
 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஊசிக்குறிப்பு:
வாழ்க்கையில் பலரும் பல விதமாகக் கற்பனை செய்வதுண்டு, ஆனால் கற்பனை வேறு வாழ்க்கை வேறு.. வாழ்க்கை யதார்த்தமானது.. கற்பனை நினைவுடனேயே நின்று விடுகின்றது:(..

இவ்வரிய தத்துவத்தை, பல பிஸியான நேரத்தின் மத்தியிலும்:), உங்களுக்காகக் காவி வந்திருப்பவர்: உங்கள் பேரன்புக்கும் பெரு மதிப்புக்கும் உரிய புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்:)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அறிவுப்பசிஜி இம்முறை, “விவசாயி அதிராவுக்கு” என்ன பட்டம் வழங்கப் போறாரோ?:)
-----------------------------------------------------------------------------------------
....

Wednesday 4 July 2018

சீனிச் சம்பல், ஸ்பெஷல் புடிங்:)

ப்பவுமே ஞானியாக இருக்காமல், ஞானியைத்தேடி வரும் பக்தகோடிகளுக்கு அடியேன் ஏதாவது வாய்க்கு இதமாக செய்து குடுக்கோணுமெல்லோ.. அதனால இம்முறை சமையல் குறிப்புப் போட்டிடலாம் என, ஆரியபவான் கிச்சினைத் திறக்கிறேன்:).

Sunday 1 July 2018

ஆற்றோரக் கவிதைகள்:)

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இந்த இடம்தான் இப்போ நமக்கு சேஃப்:)..  கூண்டுக்குள் இருந்திட்டால், கல்லெறிகளில் இருந்து தப்பிடலாம்:)).. வரும் கல்லெல்லாம் கிளியார் மேல படட்டும்..பின்பு பிரியாணி ரெடி ஆக்கிடலாம்ம்.. அவ்வ்வ்வ் ஒரு கல்லில ரெண்டு மாங்காய் என்பது இதுவாத்தான் இருக்கும்போல:))

நீங்களும் எல்லோரும் பாவம்தான்:), ஆனாலும் என்ன பண்ண முடியும்? நட்பாகிட்டால் ஒண்ணும் பண்ண முடியாதே:).. நான் போடும் படங்களை எல்லாம் பார்த்து ரசிப்பதோடு நிறுத்திட முடியாதே:) பிக்கோஸ் நட்பாகிட்டீங்க:) அப்போ கொமெண்ட்ஸ்சும் போட்டுத்தானே ஆகோணும்:)).. அது காலைச் சுத்திய பாம்பு[என்னைச் சொன்னேன்:)] கடிக்கும்வரை விடாதாமே:)).. ச்சோஓஒ அதிராவின் தொல்லைகள் இன்னும் டொரரும்:)).. எதுக்கும் நீங்க தியானம், யோகா, இப்படிப்பண்ணிக் கோபத்தை, எரிச்சலை எப்படி அடக்குவதெனப் பயிற்சி எடுத்துக் கொண்டு வாங்கோ பிளீஸ்ஸ்:)).. இல்லை எனில் என் போஸ்ட் பார்த்து பிபி ஏறி மயக்கம் கூட வரலாம்:) அதுக்கெல்லாம் ஜத்தியமா மீ பொறுப்பல்ல:).

வழமையை விட இம்முறை சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஈடு கொடுக்க முடியல்ல, அதனாலேயே நடக்க நடக்க படங்கள் எடுத்து உங்களுக்குத் தொல்லை தருகிறேன்:), இருப்பினும் இது எங்கும் பார்க், பூங்காவில் எடுக்கப்படவில்லை.. எல்லாம் நம் ஊர்ப் பூக்கள் அதனால எனக்கும் பெருமைதானே?:).

நடக்கலாம் வாங்கோ, இம்முறை மற்றப்பக்க ஆற்றங்கரை:).. இந்த பெஞ்சில இருந்து கொண்டே, அதிரா வீட்டு அல்பம் பார்ப்போமா? நல்லவேளை இந்த பெஞ்சில் மட்டும் பூக்கள் இல்லை:).

ஆற்றருகே பற்றைக்குள் ரோஜா:).. பார்த்ததும் கவிதை வருதோ?:).. 
“முட்கள் பற்றைகளின் நடுவேதான்
அழகான ரோஜா மலர்கிறது..
அதுபோலவேதான் வாழ்க்கையிலும் 
பல துன்பங்களுக்கு மத்தியில்தான் இன்பம் மலரும்”


இது காட்டு ராஜா.. சே..சே டங்கு ஸ்லிப்பாகுதே:) ரோஜா.. நடுவில் இருக்கும் பூவில் தேனிப்பிள்ளை தேன் குடிக்கிறாராராம்”..உற்றுப் பாருங்கோ தெரியும்.. தேனியைச் சொன்னேன்.. இதைப்பற்றி மட்டுமே ஆராட்சி பண்ணி ஒரு பதிவு போட்டிருக்கிறேன் முன்பு.. நீங்கள் எல்லாம் கட்டாயம் பார்க்கோணும் இல்லை எனில் மூக்கிலும் காதிலும் நுளம்பு கடிக்கும் ஜொள்ளிட்டேன்.. அந்நேரம் அஞ்சுவை எனக்குத் தெரியாது ஹா ஹா ஹா:))


கீழே.. பாருங்கோ பாருங்கோ, இம்முறை நிறையப்பேர் நம்மை விட்டுப் போயிருக்கிறார்கள் எனப் புரியுதோ?... நிறைய வைக்கப்பட்டிருந்தன.. இவை ஒரு நாளில் எடுத்த படங்கள்.. ஒரு மைல் நீளத்துக்கு நடக்க நடக்க எடுத்தவை.. இதில கவனிச்சேன், சிலர் பூச்சாடிகள் கொண்டு வந்து அருகில் வைத்திருக்கிறார்கள்.. சிலர் பிளாஸ்டிக் பூக்கள் வச்சிருக்கினம்.. நாம் நடக்கும்போதே ஒருவர், ஆணி சுட்டியல் கொண்டு வந்து அழகாகக் கொழுவி  [ஹங்] வச்சிட்டுப்  போனார்...

இப்போ இந்த பெஞ் ஐயும் பூக்களையும் கண்டால், நெல்லைத்தமிழன் அண்ணாவின்[ஹா ஹா ஹா இருங்கோ சிரிச்சுப்போட்டுத் தொடர்கிறேன்:)] நினைவு வந்திடுது.. அவருக்குத்தான் இதை அறிவதில் ஆர்வம் அதிகம் என்பதால்:).


ஆவ்வ்வ்வ் இம்முறையும் பாதிதான் தெரியுதே:), மற்றப்பாதியைத்தேடப் போகினம்:) நான் Car இன் Sunroof ஐச் சொன்னேனாக்கும்:)) ஹா ஹா ஹா:)

இது ஒருவகைப் பூத்தான் நிலத்திலே படர்ந்திருக்கு, ஆனா பூப்போல மென்மை இல்லை, இலைபோல சரியான ஸ்ரோங்.. நீண்ட நாட்கள் உயிர் வாழுது... நம் ஊர் வாடாமல்லிகையைப்போல எனவும் சொல்லலாம், ஆனா ரோஜாவைப்போல இருக்கு.

இதைப் பார்த்தால் எள்ளுப்பூக்கள் போலவெல்லோ இருக்குது, இங்கு காடு கரம்பை எல்லாம் பூத்துக் குலுங்குது.. வெள்ளையிலும் உண்டு.

வெள்ளைப்பூக்களும் கொள்ளை அழகு... ஒட்டு ரோஜா எனக் கேள்விப்பட்டதுண்டோ?.. ஒரு ரோஜாவில் இன்னொரு கலரை ஒட்டிப் பூக்கப் பண்ணுவினம், அப்படித்தான் போலும், மஞ்சளில் வெள்ளை ரோஜா.. அதிராவின் மனம் போலவேதேன்ன்ன்ன்:) ஹையோ இப்போ எதுக்கு கலைக்கிறீங்க?:) இன்னும் படங்கள் இருக்கு வெயிட்.. பிளீஸ்ஸ் உங்கட அங்கிறியைக் கொஞ்சம் கொன்றோல் பண்ணுங்கோ:))

இதுவும் ஆற்றங் கரையில்தான் பார்த்தேன், கூட்டமாக மைனாக்களோ இல்லை புலுனி என ஒரு இனம் உண்டெல்லோ.. அவர்களா தெரியவில்லை, பார்க்க ஆசையாக இருந்துது, சன் பாத் எடுத்தார்கள், நான் அவர்களை நோக்கி நடக்க நடக்க, அவர்களும் நகர்ந்து நகர்ந்து வேலி வரை போயிட்டினம்.. இனியும் அருகில் போனால் பறந்திடுவினம் என, யூம் பண்ணி எடுத்தேன் அதனால படம் தெளிவில்லை... இப்படிப் பறவைகள் பார்த்தால் கோமதி அக்காவின் நினைவு வந்திடுது, அவவாலதான் இப்படிப் பறவைக் கூட்டத்தைப் படமெடுக்கோணும் எனும் ஆவல் வந்துது...

=======================இண்டவல்ல்ல்ல்=====================
ஹையோ இப்போ முழுசாத் தெரியுதே:) நான் கண்ணாடியைச் சொன்னேன்:)).. ஆனா ஏன் எல்லோரும் சரியான குண்டாகத் தெரிகிறார்கள்?:).. ஒருவேளை பூதக் கண்ணாடியாக இருக்குமோ அவ்வ்வ்வ்வ்வ்:))
சரி சரி கூலா ஒரு மங்கோ ஊஸ் குடிச்சிட்டு வாங்கோ தென்பாத் தொடரலாம், இன்னும் படங்கள் இருக்குதெல்லோ:))
=======================================================
இவை வெவ்வேறு மலர்கள், ஆனா இரண்டுமே ஃபியூஸியாவா தெரியல்ல, ஸ்ரீராம் ஒருதடவை இப்படம் போட்டிருந்தார் ஞாயிறு ஒளி மழையில்:))

 ஆங்ங் இவை கொடியிலே மல்லிகைப்பூ.... நான்கு இதழில் மட்டுமே ஒரு பூ.. பார்த்திருக்கிறீங்களோ?

இது என்ன தெரியுதோ? இங்கு பல இடங்களில் மதில்கள் கிட்டத்தட்ட 1000 வருடம் பழைமையானவைகூட இருக்கு, அவற்றில் வெடிப்புக்கள் இருக்கும், வெடிப்பில்  “தானா முளைச்ச மரம்.. தனியாக நின்ற மரம்... ஏன் பூத்ததென்கிறீங்களோ?”:)

இது யும்மா:)) காட்டுப் பகுதிலும் ஒரே மலர்கள்தான்.. எனக்கே பார்த்து அலுத்துப் போச்சு.. உங்களுக்கு எப்படியோ?:)) ஸ்ஸ்ஸ் ரெம்ம்ம்ப ரயேட் ஆகிட்டேன் வில:)க்கம் ஜொல்லி:))

ஊசி இணைப்பு:-

நிஜத்தைச் சொல்லும் இணைப்பு:
===========================__()__=========================