எப்பவுமே ஞானியாக இருக்காமல், ஞானியைத்தேடி வரும் பக்தகோடிகளுக்கு அடியேன் ஏதாவது வாய்க்கு இதமாக செய்து குடுக்கோணுமெல்லோ.. அதனால இம்முறை சமையல் குறிப்புப் போட்டிடலாம் என, ஆரியபவான் கிச்சினைத் திறக்கிறேன்:).
இப்போ எல்லாம் எனக்கு ஓவரா அலட்டுவது பிடிக்காது பாருங்கோ:) அதனால ஸ்ரெயிட்டா சமையலுக்குள் ஜம்ப் பண்ணிடுறேன்...
இம்முறை ரெண்டு வித ரெசிப்பீஸ்.. முதலாவது சீனிச் சம்பல். இது நீங்க தண்ணி படாமல் பத்திரமா உபயோகித்தால் ஒரு மாதத்துக்கும் மேல் வைத்துச் சாப்பிடலாம்.. எதுக்கும் ஃபிரிஜ் ல வையுங்கோ.
சீனிச் சம்பல்
தேவையானவை..
நல்ல புது வெண்டாயம் சே..சே ஆரம்பமே டங்கு ஸ்லிப்பாகுதே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வெங்காயம், உடைத்த செத்தல் மிளகாய்த் தூள்[chillie flakes], நல்லெண்ணெய், கொஞ்சம் நல்ல பழப்புளி, கொஞ்சம் சீனி, ஒரு துண்டு கறுவா.
வெங்காயத்தை வெட்டி எடுத்து...
மண்சட்டியில் அல்லது ஒரு நொன் ஸ்ரிக்கில் போட்டு, உப்பும் கொஞ்சம் சேர்த்து[உப்புப் போட்டால் வெங்காயத்திலிருக்கும் தண்ணி வெளியே வரும், பின்பு வெங்காயம் விரைவில் வதங்கும்].. அடுப்பில் வைத்து வதக்கவும்.. எண்ணெய் சேர்க்காமல்.
தண்ணி நன்கு வத்தி, நிறம்மாறும்வரை வதக்க வேணும் , அப்போது கறுவாவையும் சேர்த்து வதக்கவும்
நன்கு வதங்கி தண்ணித்தன்மை அற்று வரும்போது மிளகாய்த்தூளைப் போட்டு, உங்கள் வெங்காயத்தின் அளவுக்கு ஏற்ப[ஒரு கிலோவுக்கு 4,5 மே.கரண்டி சேர்த்தேன்] நல்லெண்ணெய் விட்டு நன்கு வதக்கவும்
மிளகாயுடன் சேர்த்து நன்கு வதக்கி, இப்போது கொஞ்சமா கட்டியாக புளிக்கரைசல் சேர்க்கோணும்... கறிக்கு சேர்க்கும் அளவு போதும்..
நல்லா கறுக்கும் வரை வதக்கோ வதக்கென பிளியோடு சேர்த்து வதக்கி, நன்கு கலர் மாறி வந்ததும், 2 மேசைக்கரண்டி சீனி சேர்த்து நன்கு வதக்கவும்..
அப்போது இன்னும் நன்கு கறுத்து கறுப்பாக வரும்... இப்போ அடிப்பிடிக்கப் பார்க்கும்.. அப்போது இறக்கி விட்டிடோணும்..
ஆவ்வ்வ்வ் என்னா சூப்பர் தெரியுமோ? எதனோடும் தொட்டுச் சாப்பிடலாம்.
=================================================
இது என்ன தெரியுமோ? நெல்லைத்தமிழனின் பழக் கேசரி .. அப்பவே செய்திட்டேன் வெளியிடத்தான் இவ்ளோ தாமதம், நான் இதில் பாவித்தது - Mango puree.. ரெசிப்பிக்கு இங்கு போகவும்
=====================================================
அடுத்து அதிராஸ் ஃபேவரிட் புடிங்:)
இதை மைக்குரோவேவ் லயும் செய்யலாம், ஆனா அனைவருக்காக ஒரு சேஞ் க்காக அடுப்பில் செய்தேன்.
தேவையான பொருட்கள்
முட்டை [3], கொண்டென்ஸ்ட் மில்க்[450கி], ஜாதிக்காய்.
[படத்தில் இருப்பது சீனி.. அது கொஞ்சம் மிசுரேக்கூஊஊ ஆகிட்டுது, அதனால அதை மறந்திடுங்கோ அது வாணாம் நமக்கு:)]
முட்டையை டிஷ் இல் ஊற்றி, கொஞ்சம் அடிக்க வேண்டும், அடித்த பின் இன்னொரு அளவான டிஸ் இல் முட்டையை வடித்து எடுக்கவும். பின்பு அதனுள் கொண்டென்ஸ்ட் மில்க் ஐ விட்டு கலக்கி விட்டு, ஒரு அளவான ஜாதிக்காய்ப் பவுடரை மேலே கொஞ்சமாகத் தூவவும். ஒரு ஃபொயிலிங் பேப்பரால் டிஷ் ஐ நன்கு சுத்தி மூடி விட வேண்டும்.
பின்பு அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து, அதில் கொஞ்சம் தண்ணீர் விட்டு, கொதித்ததும், இப்படி ஏதாவது ஒரு தட்டை வைத்துவிட்டு,
அந்தத் தட்டின் மேலே , அந்த மூடிய டிஷ் ஐ வைத்து..
மூடி அவிய விடவும்.. எப்படியும் ஒரு 30 நிமிடங்கள் எடுக்கும்..
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆஆஆ சுவையோ சுவை, எனக்கு இனிப்பு பிடிக்காது, ஆனா புடிங் வகைகள் ரொம்பப் பிடிக்குமாக்கும்..
உண்டகளை பூஸுக்கும் உண்டு:) நல்லிரவு:)-
ஊசி இணைப்பு:
__________________()__________________
|
Tweet |
|
|||
சீனிச் சம்பல் செய்முறை நன்றாக இருக்கிறது.
ReplyDeleteபழகேசரியில் பூஸார் சூப்பர்.
அடுத்து அதிராஸ் ஃபேவரிட் புடிங்:)
முட்டை சாப்பிடுவது இல்லை அது இல்லாமல் செய்யலாம் தானே
உண்டகளைப்பு பூஸார் சூப்பர்.
தலையெழுத்தை படிக்க முடியாது உண்மை.
பதிவு நன்றாக இருக்கிறது.
ஆஆஆஆஆவ்வ்வ் இம்முறை கோமதி அக்காதான் 1ஸ்ட்டூஊஊஊ:) வாங்கோ வாங்கோ.. இந்தாங்கோ இந்தாங்கோ முதலாவதா வந்த உங்களுக்கு ஒரு கிஃப்ட்:)).. பறிச்சிடப் போகினம் பத்திரமா ஒளிச்சு எடுத்துப் போய் ஒளிச்சு வையுங்கோ:)
Delete[im] https://tse4.mm.bing.net/th?id=OIP.9Yd9wztetjxy2kOFXcajogHaE6&pid=15.1&P=0&w=242&h=161 [/im]
முட்டை இல்லாத புடிங்.. அதுவும் போட இருக்கிறேன்.... உண்மைதான்.. தலை எழுத்தைப் படிக்க முடிஞ்சால் ஆரும் தலையோடு இருக்க முடியாது ஹா ஹா ஹா:).
Deleteபாட்டு கேட்டேன்.
ReplyDeleteபாட்டு கேட்டேன்.
யாருக்கு வெற்றி தலைஎழுத்தை எழுதியவனுக்கு வெற்றி.
அவன் விருப்பபடி எல்லாம் சரியாக நடக்குது.
//யாருக்கு வெற்றி தலைஎழுத்தை எழுதியவனுக்கு வெற்றி.//
Deleteஹா ஹா ஹா.. இருந்தாலும் இருவரும் நண்பர்கள்தானே? இருவரும் போட்டி போடுவது சரியோ?:) நான் எனில் விட்டுக் குடுத்திடுவேன்.. ஹா ஹா ஹா நான் பாட்டில தான் சொன்னேன்:)).
மிக்க நன்றி கோமதி அக்கா.
ஜெயச்சந்திரன் பாடல்களில், எம்மெஸ்வியின் பாடல்களில் அருமையான பாடல் வசந்தகால நதியினிலே.. அந்தாதி வகைப்பாடல்.
ReplyDeleteவாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. ரெண்டாவதா வந்திருக்கிறீங்க:) என் புளொக் வழக்கப்படி ரெண்டாவதாக வருவோருக்கு ஆயாவைக் கொடுத்தனுப்புவேன்ன் பட் வெரி சோரி:) இம்முறை ஆயா ரொம்ப யங்காக இருப்பதனால் அவவி அனுப்பும் ஐடியா எனக்கில்லை:))..
Deleteஎத்தனை தடவை கேட்டாலும் அலுக்காத பாடல். போன வருடம்தான் அப்படம் பார்த்தேன்.. நல்ல படம்...
அந்தாதி வகை?:)- எனக்கு இதொன்றும் தெரியாது:).
பழப்புளியா பழம்புளியா?!! அது வேறு கொஞ்ச வரிகள் தாண்டி பிளி ஆகிவிடுகிறது.
ReplyDeleteபழப்புளிதான் கரீட்டு என நினைக்கிறேன் .. பழம்புளி என்றால் பழைய புளி என அர்த்தம் தருதெல்லோ:)) எப்பூடி என் கண்டுபிடிப்பூஊஊஊ பிக்கோஸ் மீ இருப்பது ஸ்கொட்லாந்தில ஆக்கும்:)..
Deleteஹா ஹா ஹா பேச்சு வழக்கில் “பிளி எங்கே” எனக் கேட்பார்கள்.. அதனால எனக்கொரு டவுட்டூஊ எது கரெட்க் என:))
இது மாதிரி ஒன்று நாங்கள் செய்ததில்லை. சும்மா வெங்காயத்தொக்கு போல இருக்கிறது. பார்ப்போம். செய்துடுவோம்.
ReplyDeleteவெங்காயத் தொக்குப்போல செய்வது அதிகம் வதக்க மாட்டோம்.. அதனால அதை வைத்துப் பாவிக்க முடியாது.. இது இலங்கைக் கடைகளில் போத்தல்களில் விற்பனையாகிறது.. இனிமேல் லேபலைக் கவனியுங்கோ எங்காவது தயாரித்தவர்:- ஞானி அதிரா.. என இருந்தாலும் இருக்கலாம்:).
Deleteமுட்டை வெள்ளையாகத்தானே இருக்கும்? இந்த முட்டையை மேலே உள்ள வெங்காயத் தொக்கில் ஊற வைத்தீர்களோ!
ReplyDeleteஹா ஹா ஹா கவனிச்சிருக்கிறீங்க... ஸ்கொட்லாந்தில் வெள்ளை முட்டையைக் கண்ணால காணவே இல்லை நான்... கனடாவில்தான் பார்த்திருக்கிறேன். இங்கு எல்லாம் சோப்புக்கலர்தான்:)).. வெரி சோரி சிகப்பு:))..
Delete//இந்த முட்டையை மேலே உள்ள வெங்காயத் தொக்கில் ஊற வைத்தீர்களோ!//
[im] https://media.tenor.co/images/7e213103cc7490c7e347d758b48270ce/raw [/im]
தித்திப்பான முட்டை? நல்லா இருந்ததா? ஓகே, ரசியுங்கள்! பார்க்க நல்லா இருந்தது.
ReplyDeleteசூப்பர் புடிங் ஸ்ரீராம்.. மிக்க நன்றி.. சைவத்திலும் விரைவில் போட இருக்கிறேன்:) எதிர்பாருங்கள்:).
Deleteஊசி இணைப்பு : எங்க அப்பா கையெழுத்தைக் கூட யாராலும் படிக்க முடியாதாக்கும்! 'ஒரு' என்று எழுதினார் என்றால் 36 என்று படிப்பார்கள்!
ReplyDeleteஹா ஹா ஹா அதுவும் சரிதான்... மிக்க நன்றிகள் அனைத்துக்கும்.
Deleteமுட்டையில் செய்தது வட்டலப்பம்தானே ? நல்ல சுவையாகத்தான் இருக்கும்.
ReplyDeleteவாங்கோ கில்லர்ஜி.. ஆஹா வட்டிலப்பம் செய்முறை உங்களுக்கும் தெரிஞ்சிருக்கே:)... ஆனா வட்டிலப்பம் தேங்காய்ப்பாலில் செய்வார்கள்.. அது இதுவரை நான் முயற்சிக்கவில்லை ..
Deleteமிக்க நன்றி.
ஆகா, உண்ட களைப்பிலே தூங்கும் பூஸ் அருமை. புட்டிங்கைப் பார்த்தால் ஆசையாத் தான் இருக்கு. ஆனால் முட்டை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :)))))
ReplyDeleteவாங்கோ கீசாக்கா வாங்கோ.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊஉ:) உங்களுக்காக சைவப்புட்டிங்கூஊஊஉ செய்து போடுறேன்:).
Deleteசீனிச் சம்பலில் நீங்க வெங்காயத்தை அரைப்பதில்லை. நான் வதக்கி அரைத்துவிட்டுச் செய்வேன். கிட்டத்தட்ட இதே போல் தான். ஒரு மாதத்துக்கும் மேல் வைச்சுக்கலாம்.
ReplyDeleteஓ அப்படி ஒரு முறை இருக்கோ? இல்ல கீசாக்கா இது அரைத்துச் செய்வதில்லை நாங்க.. அரைத்தால் குழந்ததுபோலாகிவிடும் என்பதாலொ என்னமோ...
Deleteமிக்க நன்றி.
இந்த சமையலை உங்க வீட்டில் விரும்பி சாப்பிட்டாங்களா இல்லையா என்று சொல்லவே இல்லையே?
ReplyDeleteவாங்கோ ட்றுத் வாங்கோ.. கேட்டுக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டிச்சினம் தெரியுமோ?:)
Delete//முதலாவது சீனிச் சம்பல். இது நீங்க தண்ணி படாமல் பத்திரமா உபயோகித்தால் ஒரு மாதத்துக்கும் மேல் வைத்துச் சாப்பிடலாம்..////
ReplyDeleteஉங்களுக்கு எப்படி தெரியும் இது ஒரு மாதத்திற்கு வைத்து சாப்பிடலாம் என்று...ஒரு வேளை நீங்கள் பண்ணியதை யாரும் ஒரு மாதமாக சாப்பிடாமல் இருந்ததால் இதை கண்டு பிடித்தீர்களோ?
ஹையோ ஹையோ ட்றுத்துக்கு ஒண்ணுமே தெரியாது.. அங்க உங்களிடத்தில இருக்கும் ஏசியன் கடைகளில் கேட்டுப்பாருங்கோ.. உங்கள் சினிச்சம்பல் ஏஜண்ட் ஆரென?:).. அது அதிரா தான்:))
Deleteஹா ஹா ஹா மிக்க நன்றி.
//ஞானியைத்தேடி வரும் பக்தகோடிகளுக்கு அடியேன் ஏதாவது வாய்க்கு இதமாக செய்து குடுக்கோணுமெல்லோ./// எங்கட தலையெழுத்தை யாராலேயும் இல்ல்லை கடவுளாலும் மாத்தமுடியாது. (வாசிக்கமுடியாதது போல)
ReplyDelete//ஆரியபவான் கிச்சினைத் திறக்கிறேன்:).// நல்லா தூசி தட்டினீங்களோ..
வாங்கோ அம்முலு வாங்கோ..
Delete//எங்கட தலையெழுத்தை யாராலேயும் இல்ல்லை கடவுளாலும் மாத்தமுடியாது.//
இல்ல சிலசமயம் அதிரா போன்ற ஞானிகளால முடியுமோ என்னமோ:)) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:).
///நல்லா தூசி தட்டினீங்களோ.. //
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது அதிராட கிச்சின் எல்லோ.. ச்ச்சோஒ அதிராவைப்போலவேதேன்ன்ன்:)).. ஒரு கிழமையா முகம் கழுவாமல் இருந்தாலும் பளபளா எண்டிருக்கும்.. ஐ மீன் கிச்சின்:))
இம்முறை ஆரியபவானோ. இடையில இப்படியும் வந்தால் நல்லது. எனக்கும் பிடிக்கும் இப்பாட்டு. அதுவும் கடைசியில் வரும் 'மனவினைகள் யாருடனோ மாயவனின் விதிவகைகள் இந்த வரி ஏனோ பிடிக்கும்.
ReplyDeleteஆ..எனக்கு சீனிசம்பல் விருப்பம். வீட்டில அக்கா செஞ்சு தருவாங்க. உண்மையில நான் ஒருநாளும் செய்யேல்லை. உங்க ரெசிப்பியில செய்து பார்க்கப்போறேன். சந்நிதியானுக்கு நேர்த்தியை வைச்சு போட்டு செய்வம்.
அளவு எல்லாம் நீங்க போடமாட்டீங்க. கை அளவு,கால் அளவு எல்லாம் எனக்கு சரிவராது. அஞ்சுவை பாருங்கோ அவா எவ்வளவு நல்லப்பிள்ளை. அளவெல்லாம் போடுவா. ஏனென்றா அவாவுக்கு தெரியும் ஆத்துல போட்டாலும் அளந்துதான் போடோனுமென...
எவ்வளவு வெங்காயம் எடுத்தனீங்கள்.?
ஆ.. அஞ்சு சொல்றது சரிதான் போல. அவா அடிக்கடி ஒன்று சொல்லுவா. கண்டுபிடியுங்கோ பார்ப்பம். ஹா..ஹா..ஹா
பவுல் வைக்க வேற ஏதும் கிடைக்காமல் அப்ரிகோட் பழத்துக்கு மேலே வைச்சிருக்கீங்க. கர்ர்ர்ர்ர்ர்
mango கேசரியை விட கஜு டிசைன் நல்லாயிருக்கு.
பின்ன இப்படி புடிங், கேசரி என சாப்பிட்டால் குண்டு பூஸ். அஞ்சு வாங்கோஓஓஓ...
எப்பூடி என் புடிங்:)"// பார்க்க வடிவா இருக்கு
[im]https://media1.tenor.com/images/a1705a7e2e6ad09f8c6f801b0af080a8/tenor.gif?itemid=7525573[/im]
Delete// அஞ்சுவை பாருங்கோ அவா எவ்வளவு நல்லப்பிள்ளை. அளவெல்லாம் போடுவா.//
அஆவ் ப்ரியா தாங்க்ஸ் தாங்க்ஸ் :)
அந்தப் பாட்டு எனக்கு சின்ன வயசில இருந்தே பிடிக்கும் அம்முலு.. ஆனா படம் பார்த்தது என்னமோ 2017 இலதான் ஹா ஹா ஹா.
Delete//உங்க ரெசிப்பியில செய்து பார்க்கப்போறேன். சந்நிதியானுக்கு நேர்த்தியை வைச்சு போட்டு செய்வம்.///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) வெங்காயம் நல்ல ஃபிரெஸ்ஷா இருக்கோணும் அப்போதான் சம்பல் நல்லா வரும் ஜொள்ளிட்டேன்ன்ன்ன்:).
//அஞ்சுவை பாருங்கோ அவா எவ்வளவு நல்லப்பிள்ளை. //
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
//எவ்வளவு வெங்காயம் எடுத்தனீங்கள்.? //
ஒரு கிலோ.. இங்கே வருவோரெல்லாம் சமையல் வல்லுனர்களாச்சே.. அதனாலதான் கறி வகைகளுக்கு அளவு சொல்லத் தேவையில்லை.. செய்முறை சொன்னால்போதுமென விட்டிடுவேன்.
////பவுல் வைக்க வேற ஏதும் கிடைக்காமல் அப்ரிகோட் பழத்துக்கு மேலே வைச்சிருக்கீங்க. கர்ர்ர்ர்ர்ர்//
அல்ல்லோஓஒ அது அதிராஸ் ஸ்டைல்:)) அப்பப்ப மாறும்:)). அடுத்து ஸ்ரோபெரிக்கு மேல:))..
//பின்ன இப்படி புடிங், கேசரி என சாப்பிட்டால் குண்டு பூஸ்.////
அண்டைக்குச் செய்ததுதான் இப்போ 6 மாசமாகிட்டுது இன்னும் செய்யேல்லை.. செய்யோணும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
மிக்க நன்றி அம்முலு.
///அஆவ் ப்ரியா தாங்க்ஸ் தாங்க்ஸ் :)///
Deletehttp://www.maacindia.com/blog/wp-content/uploads/2016/08/70135.jpg
காலையில் படித்துவிட்டேன்.
ReplyDeleteகறுவா என்றால் இலவங்கப்பட்டை என்று எத்தனைபேருக்குத் தெரியும்?
Deleteநான் கருவாட்டைதான் அப்படி எழுதி இருக்காங்க என்று நினைத்தேன் அடக்கடவுளே
எனக்கு தெரியுமே :) எல்லாம் பூஸ் பதிவு பாத்தே நானா கண்டுபிடிச்சேன்
Deleteஎனக்குத் தெரியுமே கறுவா என்றால் லவங்கப்பட்டை என்று ஹா அஹ ஹா ஹா
Deleteஇலங்கைத் தமிழ் வொக்காபுலரி கொஞ்சம் கொஞ்சம் தெரியும்...
கீதா
ஹா ஹா ஹா தெரியாததை தெரியப்படுத்துவதே என் வேலையாக்கும்:))
Deleteபழக் கேசரி, பழைய கேசரி ஆனப்பறம் படம் போட்டிருக்கீங்களே
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஒரு சுவீட் 16 பிள்ளை கஸ்டப்பட்டு செய்து போட்டால்.. அதைப் பாராட்டி ஊக்கம் குடுக்காமல் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
Deleteஎதையும் டக்குப் பக்கென செய்திடுறேன்:) ஆனா போஸ்ட் போட நேரம் கிடைக்குதில்லையே:) என் ராசி அப்பூடி:)).
நானும் கீசாக்காவும் ஒரே ராசி ஆக்கும்:))) ஹா ஹா ஹா.
டாஸ்மாக் சைட் டிஷ் மாதிரி ஏதோ முயற்சித்திருக்கீங்க. இதெல்லாம் நான் எங்க பண்ணப்போறேன்.. ம்ம்ம்
ReplyDelete[im]http://rs68.pbsrc.com/albums/i14/AUBURN_MYSTIQUE/ROFL/Laughing%20Laugh/laughingmouse.jpg~c200[/im]
Delete//டாஸ்மாக் சைட் டிஷ் மாதிரி ஏதோ முயற்சித்திருக்கீங்க. இதெல்லாம் நான் எங்க பண்ணப்போறேன்.///
Deleteஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அந்த சைட் டிஸ் எல்லாம் உங்களுக்கு எப்பூடித் தெரியும்ம்ம்ம்ம்ம்?:) ஆஆஆவ்வ்வ்வ் நெல்லைத்தமிழனை கையும் களவுமாப் பிடிச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:) எனக்கு இப்போ உண்மை தெரிஞ்சாகோணும் ஜாமீஈஈஈஈஈ:)) ஹா ஹா ஹா.. நீங்கதான் வெங்காயம் சேர்ப்பதில்லை எல்ல்லோ... அதனால இம்முறை முயற்சிக்காதீங்க:) ஆனாலும் விட மாட்டேன் என் அடுத்த ரெசிப்பியை நீங்க செய்யோணும் :)))
// http://rs68.pbsrc.com/albums/i14/AUBURN_MYSTIQUE/ROFL/Laughing%20Laugh/laughingmouse.jpg~c200 ///
Deletehttp://www.writingsinrhyme.com/wp-content/uploads/2012/10/cat-looking-at-mouse-in-mouse-hole.jpeg
ரெசிப்பி பார்த்தால் ஒரு வருஷம்னாலும் ஃப்ரிட்ஜில் இருக்கும் போலிருக்கே (பெருமைப் பட்டுக்காதீங்க... யாரும் சாப்பிடலைனாத்தான் அவ்வளவு நாள் இருக்கும்) ஹா ஹா ஹா
ReplyDelete//ரெசிப்பி பார்த்தால் ஒரு வருஷம்னாலும் ஃப்ரிட்ஜில் இருக்கும் போலிருக்கே ///
Delete[im]http://www.webweaver.nu/clipart/img/cartoons/garfield-flower-boquet.gif[/im]
//(பெருமைப் பட்டுக்காதீங்க... யாரும் சாப்பிடலைனாத்தான் அவ்வளவு நாள் இருக்கும்) ஹா ஹா ஹா///
[im]http://nowmagazine.media.ipcdigital.co.uk/11140/000029fbc/54a9_orh480w360/Angry-Cat.jpg[/im]
ஒரு துண்டு கருவா(டு) என்று படித்து, இது வேலு மிலிட்டரி ஹோட்டலா, தளம் மாறி வந்துட்டேனோன்னு சந்தேகமாயிடுச்சு. காலையிலேயே பயமுறுத்துறீங்களே
ReplyDelete//ஒரு துண்டு கருவா(டு) என்று படித்து,//
Deleteஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:) கறுவா.. எண்டெல்லோ போட்டேன்ன்.. நீங்க கருவாட்டு நினைப்பிலயே வந்து புளொக்கை ஓபின் பண்ணினா:)) சரி சரி முறைக்காதீங்கோ:))) இன்னும் ரெசிப்பீஸ் கியூவரிசையில வரவுள்ளது.. ச்ச்சோஓ எதுக்கும் உங்கள் பலவீனமான இதயங்களைக் கொஞ்சம் ஸ்ரெடியா வச்சிருங்கோ ஹா ஹா ஹா:))
"பலவீனமான இதயங்களை"... இப்போதான் கன்சல்ட் செய்து இதயத்துக்கு இரும்பு முலாம் பூசப்போறேன். நீங்களும் இடுகை போட இரண்டு மூணு நாளாகும்னு (23 இல்லை) சொல்லியிருக்கீங்க.
Deleteதேவதை கிச்சனின் புதிய இடுகையான, "வெந்நீர் செய்முறைக்கு" போட்டியா நீங்க என்ன எழுதப்போறீங்க?
//இப்போதான் கன்சல்ட் செய்து இதயத்துக்கு இரும்பு முலாம் பூசப்போறேன்//
Deleteஹா ஹா ஹா பூசுறதுதான் பூசப்போறீங்க எதுக்கு இரும்பு?:) பொன், வைரம் வைடூரியம் இப்படி ஏதும் பூசலாமே:)..
ஹா ஹா ஹா அங்கு வெந்நீர் செய்முறை எனில்:))..
அதிரா முட்டை அவிப்பது எப்படி எனப் போடுவேன்:))
இப்போல்லாம் நீங்கள ஞானி ஆயிட்டதுனால புலாலியூர் பூசானந்தாவை ஆஸ்ரமத்தை விட்டு விரட்டிட்டீங்க ஓகே. நீங்க கவிப்பேர்ரசி ஆனதுனால கண்ணதாசனையும் விரட்டிட்டீங்களா?
ReplyDeleteநோ நோஓஓஓஒ.. புலாலியூர்ப் பூஸானந்தா.. கண்ணதாசன் அங்கிள் எல்லாம் என் முற்பிறவிகள் அவர்களை எப்படி நான் கைவிட முடியும்?:)).. ஹையோ எதுக்கு இப்போ கூட்டமாக் கலைக்கினம்:)) ஹையோ என் ஆச்சிரமத்துக்கு ஆர் கல்லெறியுறது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பொலீசைக் கூப்பிடுவேன்ன்:)) ஹா ஹா ஹா...
Deleteஏஞ்சலின்.. இந்த சாம்பல்... இல்லை இல்லை சம்பல், தோசைக் குழம்புக்கு போட்டியா?
ReplyDeleteஹாஹாஆ :) இருக்கலாம் :)
Delete//ஏஞ்சலின்.. இந்த சாம்பல்... இல்லை இல்லை சம்பல், தோசைக் குழம்புக்கு போட்டியா?//
Deleteஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...
//AngelThursday, July 05, 2018 8:58:00 am
ஹாஹாஆ :) இருக்கலாம் :)////
டபிள் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
நிறைய பேர் வந்து இருப்பா...
ReplyDeleteஆனா பூஸார் publish பண்ணாம இருக்கா...
இப்போ மீ first ஆ லாஸ்ட் ஆ..
வைரவா பதில் சொல்லவும்...
வாங்கோ அனு வாங்கோ...
Delete//வைரவா பதில் சொல்லவும்...//
ஸ்ஸ்ஸ்ஸ் எந்தக் கோயிலில் இருக்கும் வைரவர் எனச் சொன்னால்தானே அவரால தெளிவாப் பதில் சொல்ல முடியும்:)).. ஹா ஹா ஹா.
சீனிச் சம்பல்...
ReplyDeleteரொம்ப சூப்பரா இருக்கு..புது ரெசிப்பி எனக்கு ஈசி யாவும் இருக்கு..
செஞ்சுடலாம்...சீக்கிரம்...
இன்னும் அந்த புளிச்ச கீரை செய்ய தான் முடில இங்க அந்த கீரை கிடைக்கல ...கடமைக்கு வந்த சோதனை..
செய்யுங்க அனு செய்யுங்க... ரொம்ப பொறுமை வேணும் இது செய்ய.. நன்கு தண்ணி வத்தும்வரை, நெருப்பை அதிகம் கூட்டாமல் வைத்து வதக்கோணும்.
Deleteபுளிச்ச கீரை அ.. அதுவும் நிட்சயம் செய்யுங்கோ.. அதன் பின் எனகு இன்னும் கிடைக்கவில்லை அது.
புட்டிங்...வாவ்
ReplyDeleteஇதுவும் சாப்பிட்டது இல்ல
செய்து பாருங்கோ அனு... சூப்பரா இருக்கும்.பிள்ளைகள் விரும்புவார்கள். மிக்க நன்றி.
Delete//ஞானியைத்தேடி வரும் பக்தகோடிகளுக்கு அடியேன் ஏதாவது வாய்க்கு இதமாக செய்து குடுக்கோணுமெல்லோ//
ReplyDelete[im]https://thebuckeyemilkmaid.files.wordpress.com/2015/05/the-20-greatest-babies-in-internet-history1.jpg[/im]
வாங்கோ அஞ்சு வாங்கோ..
Delete[im]http://assets.nydailynews.com/polopoly_fs/1.3810777.1518205661!/img/httpImage/image.jpg_gen/derivatives/gallery_250/tom-jerry-tom-jerry.jpg[/im]
/ முதலாவது சீனிச் சம்பல். இது நீங்க தண்ணி படாமல் பத்திரமா உபயோகித்தால் //
ReplyDeleteஎந்த தண்ணி னு தெளிவா சொல்லணும்
பச்சை தண்ணியா ? சுடு தண்ணியா ?மினரல் வாட்டரா ? இல்லை இல்லை -----தண்ணியா ?
சே..சே.. ட்றுத் இப்போ வேறு எதிலயோ ரொம்ப பிஸியாகிட்டார்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்:) இல்லை எனில் இதுக்கு ஓடி வந்து பதில் சொல்லியிருப்பார்:)) ஹா ஹா ஹா.
Deleteசீனிச்சம்பல், புட்டிங், பழ கேசரி. ஒரே ஜொள்ஸ்ஸ். சீக்கிரம் அனுப்பி வைக்கவும். :)
ReplyDeleteஆஆ வாங்கோ தேனம்மை வாங்கோ.. அத்தி பூத்தாற்போல வந்திட்டு பின்பு ஓடிடுறீங்க:)).. மீயும் இப்படித்தால் ஸ்லோ மோஷனில காணாமல் போயிடப்போறேன் ஹா ஹா ஹா...
Deleteஅட்றஸ் சீக்கிரம் சொல்லுங்கோ:)).. தோஓஓஓஓஒ பிளேனில வருகுது பார்சல்:)).. ஹா ஹா ஹா மிக்க நன்றி.
வணக்கம் !
ReplyDeleteஞானி அவர்களே. தங்கள் சீனிச்சம்பல் நல்ல சுவை , K ✅ பார்க்க அழகா இருக்கு சுவைதான் சுப்பர் என்று சொல்லிட்டீங்களே பிறகென்ன
ஆமா பாடல் எங்கே ஒருவேளை கைப்பேசியில் காட்டதோ ?
வாங்கோ மேஜரே வாங்கோ.. வழமையா லேட்டா வருவீங்க.. இம்முறை உடனே வந்தீங்க பட் மீதான் காணாமல் போயிட்டேன் ஹா ஹா ஹா..
Delete//சுவைதான் சுப்பர் என்று சொல்லிட்டீங்களே பிறகென்ன ///
அப்பாடாஆஆஆ நீங்களாவது இந்த ஞானி பொய் சொல்ல மாட்டேன் என நம்புறீங்களே அது போதும்:)..
மொபைல் எனில்.. கீழே வெப் வேஷனைக் கிளிக் பண்ணினால்தான் காட்டுமாக்கும்.
மிக்க நன்றி சீராளன்.. அது வசந்த கால நதிகளிலே பாட்டு.
அதிரா இந்த வசந்த கால நதி பாட்டு பார்க்கும்போதெல்லாம் கீரி கிரிஜா நினைவுக்கு வருவாங்க
ReplyDeleteஓ கீரிக்கு இது பிடிக்குமாமோ?.. எங்கே போனா.. என்ன ஆச்சென்றே தெரியாதே... சிலர் இடைக்கிடையாவது டச்சில இருப்பாங்க இது ஆளே இல்லையே.
Deleteசீனிசம்பல் நல்லா இருக்கு மியாவ் நான் அனியன் சமோசாக்கு பில்லிங் இப்படித்தான் செய்வேன் சின்னமன் ஸ்டிக்ஸ்சா போடாம தூளா போடுவேன் .
ReplyDeleteஇதில பன் செய்வேன் சூப்பரா வரும். இனி செய்து பாருங்கோ அப்படி.. சீனிச்சமபன் பன் பேமஸ் இலங்கை பேக்கரிகளில்.
Deleteகே :) சரியும் பார்க்க நல்லவே இருக்கு ஆனால் ரவை என்பதால் பார்ப்பதோடு நிறுத்திக்கறேன்
ReplyDeleteமுன்பு கேசரி பிள்ளைகள் விரும்புவதில்லை.. இப்போ நான் செய்யச் செய்ய விரும்பிச் சாப்பிடுவார்கள்.. ஹையோ இதை நெ.தமிழன் பார்த்திடக்கூடா ஜாமீஈஈஈஈ:)
Deleteமுதல் தடவையா கஷ்டம் வரும்போது தாங்குவதற்கு ரொம்ப கடினமாக இருக்கும். ஆனால் தொடர்ந்து கஷ்டங்கள் வரும்போது மனது தாங்கும் பக்குவத்தைப் பெற்றுவிடும்... பிறகு "தலைக்குமேல் வெள்ளம் போயாச்சு, இனி சாண் என்ன முழம் என்ன" என்று மனது பக்குவப்பட்டுவிடும் - இப்படிக்கு புலாலியூர் பூசானந்தா சிஷ்யன்.
Delete(குறிப்பு: இதுக்கும் அதிராவிட் மறுமொழிக்கும் தொடர்பு இல்லை)
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
Delete[im]https://s-media-cache-ak0.pinimg.com/originals/bf/91/6d/bf916d1f2cc4b7ede7c6f8c81f9bba0b.jpg[/im]
புடிங் இவ்ளோ ஈஸியா ?? செய்து தாரேன் மகளுக்கும் கணவருக்கும் .நானா ரெடிமேட் பவுடர் யூஸ் பண்ணிதான் செய்வேன் .இது செம ஈஸி
ReplyDeleteபுட்டிங்க் ரொம்ப ஈஸி ஏஞ்சல். நான் முட்டை சேர்க்காமல் செய்வதுண்டு. முட்டைக்குப் பதில் ஃப்ளேவர்ட் கஸ்டர்ட் பௌடர் சேர்த்துச் செய்வதுண்டு
Deleteகீதா
இதேதான் அஞ்சு ரொம்ப ஈசி.. மைக்குரோவேவிலும் வைத்து எடுக்கலாம்.
Deleteஓம் கீதா கஸ்ரட் பவுடர் பாவித்தும் செய்யலாம்.
//நெல்லைத்தமிழனின் பழக் கேசரி .. அப்பவே செய்திட்டேன் வெளியிடத்தான் இவ்ளோ தாமதம்,// - அதிரா... என் மனதில் நிற்பது. நீங்கள் செய்த, துண்டுகளாக்கும் கேசரிதான். அதை ஒரு முறை முயற்சிப்பேன். ஹாஸ்டலில் அப்படித்தான் கேசரி துண்டுகள் எப்பவாச்சும் தருவார்கள்.
ReplyDeleteஹா ஹா ஹா என் அந்தக் கேசரி செய்வதாயின்.. அளவுகள் முக்கியம்... மிக்க நன்றி.
Deleteஏன் நீங்க ரெண்டுமுறை முயற்சிக்கக்கூடாது?:).. சரி சரி ஒண்ணு போதும்:)) ஹா ஹா ஹா.
அதிராவுக்குத் தத்துவம் தெரியும்[அதனால்தான் ஞானி]; தத்ரூபமா புகைப்படம் எடுக்கவரும்; சுற்றுப்புறங்களில் இறைஞ்சி கிடக்கிற இயற்கையழகை வர்ணிக்கத் தெரியும்; கதையும் கவிதையும் கைவந்த கலைகள்; எல்லார்த்துக்கும் மேலே வாய்க்கு ருசியாச் சமைக்கவும் தெரிஞ்சிருக்கு.
ReplyDelete'ஞானி' அதிராவை இனி 'பல்கலை ஞானி' என்றழைக்கலாம்.
'பல்கலை ஞானி' பட்டம் அதிராவுக்குப் பிடிக்கலையோ?![பதில் இல்லையே!]
Deleteஅச்சச்சோ அறிவுப்பசி ஜி .. அவசரப்பட்டு குடுத்த பட்டத்தை வாபஸ் வாங்கிடாதீங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)) அதை நான் உடனேயே லொக்கரில் வச்சுப் பூட்டிட்டனே:)).. ஹையோ வைரவா.. மேல்மருவத்தூர் பழனி வேலா இது என்ன பிரித்தானியாக் குயின் அம்மம்மாவின் பேத்திக்கு வந்திருக்கும் சோதனை:)).. ஹா ஹா ஹா இன்று எப்படியும் எல்லோருக்கும் பதில் போட்டிடோணும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு புறப்பட்டுவிட்டேன்ன்:))
Deleteவாங்கோ அறிவுப்பசிஜி வாங்கோ..
Delete//'ஞானி' அதிராவை இனி 'பல்கலை ஞானி' என்றழைக்கலாம்.//
ஆவ்வ்வ்வ்வ்வ்வ் மிக்க நன்றி மிக்க நன்றி.. ஆனா அடுத்து என் விவசாயம் வெளிவரப்போகுதே:) அதுக்கு இதுக்கும் மேலால நீங்க பட்டம் தரோணும் சொல்லிட்டேன்ன்ன்ன்:) ஹா ஹா ஹா.. மிக்க நன்றிகள்.
ஆஆஆஆவ்வ்வ்வ் அல்லோரும் கொஞ்சம் பொறுத்தருள வேண்டுகிறேன்ன்ன்.. விரைவில[அது எப்போ?:)] வந்து பதில் தருகிறேன்.. அதுக்குள் என் ரெசிப்பியைச் செய்திட்டு ரெடியா இருங்கோ:))..
ReplyDeleteநல்லவேளை... சாப்பிட்டுவிட்டு ரெடியாக இருங்கோன்னு சொல்லலை. எதுக்குச் சொல்றேன்னா, நீங்க 'தெய்வக் குத்தத்துக்கு' ஆளாகிவிடக்கூடாதில்லையா? உங்க நன்மைக்குத் தான் சொன்னேன். ஹா ஹா ஹா.
Delete///நல்லவேளை... சாப்பிட்டுவிட்டு ரெடியாக இருங்கோன்னு சொல்லலை. ///
Deleteஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என் கிரேட் குருவின் குருவிடம் குருகுலம் கற்றிருப்பாரோ?:).. என் கிட்டிக்கு மேலால கிட்னியை ஊஸ் பண்ணிப் பண்ணி அடிக்கிறாரே ஹா ஹா ஹா:)).. ஒளிச்சிருந்து யோசிப்போம் இனிமேல்:))
[im]http://static.boredpanda.com/blog/wp-content/uploads/2015/01/ninja-cat-hiding-funny-108__300.jpg[/im]
பாட்டு செமையான பாட்டு அதிரா...ரொம்பப் பிடித்த பாடல் முடிந்த வேர்டிலிருந்து அடுத்த வரி தொடங்கும். அந்தாதி டைப்....ஜெயசந்திரன் வாய்ஸ் செம...எம் எஸ் வி நல்ல மெட்டு ரசிக்கும் பாடல் மீண்டும் ரசித்தேன் இங்கு...
ReplyDeleteகீதா
வாங்கோ கீதா வாங்கொ.. இம்முறை ரொம்ப தாமதமாக்கிட்டேன் பதிலை.. நெல்லைத்தமிழன் விடாமல் துரத்தி துரத்தி அடிப்பதனாலெயே மீண்டும் உசாராகி ஓடி வந்தேன் எல்லோருக்கும் பதில் குடுக்க:) ஹா ஹா ஹா..
Deleteபாடலை ரசித்தமைக்கு மிக்க நன்றி.. மூவரும் பெரிய ஸ்டார் தானே.. பாடலும் சூப்பர்.. எலோருக்குமே பிடிக்கும் இது பெரும்பாலும்.
சீனிச் சம்பல் இலங்கையில் இருக்கும் போது சாப்பிட்டதுண்டு. வீட்டிலும் செய்வதுண்டு...
ReplyDeleteநல்ல குறிப்பு. புட்டிங்க் நான் கஸ்டர்ட் பௌடர் வைத்துச் செய்வேன். முட்டை சேர்ப்பதில்லை என்பதால். ரொம்ப ஈஸி டிஷ். நிறைய ஃபேளேவர்ட் புட்டிங்க் செய்யலாம். ஃப்ரூட்ஸ் சேர்த்தும் செய்யலாம். நல்லாருக்கும்.
என் மாமியாரும் கேட்டுக் கொண்டே இருக்கிறார். நீ ஏதோ ஈசியா ஸ்பூனால சாப்பிடுவது போல ப்ரெட் எல்லாம் போட்டுச் செய்வியே தித்திப்பா என்று...அவருக்குப் பெயர் சொல்லத் தெரியலை நானும் யோசித்துப் பார்த்தேன் என்னவாக இருக்கும் என்று. கேக்கா என்று கேட்டேன். இல்லை ஆனால் கேக் மாதிரி இருக்கும். அடுப்பில தான் செஞ்ச அப்ப ப்ரௌனாவும் இருக்கும் என்று நான் கேள்வி கேட்க கேட்க அவர் சொலல்வும் ஒருவழியா கண்டு பிடிச்சேன்.....காரமெல் ப்ரெட் புட்டிங்க் தான் கேட்கிறார்னு. ரொம்ப ஈசி செய்வது..அத்தனை பொருட்கள் வேண்டாம்....இதில் ப்ளெய்னாகவும் செய்யலாம்...ஃப்ரூட்ஸ் போட்டும் செய்யலாம். முடிந்தால் திங்க பதிவுக்குச் செய்து அனுப்ப முயற்சி செய்யறேன்....மாமியார் கேட்டிருப்பதால் செய்யலாம்னு இருக்கேன்...பார்ப்போம்...
கீதா
ஓம் கீதா இது இலங்கை மக்களிடம் பேமஸ்... அதிலும் இதுக்கு மோல்டீவ் ஃபிஸ் எனச் சொல்லப்படும் மாசிக்கருவாடு சேர்த்தும் செய்வார்கள் அதுவும் சூப்பர்.
Deleteஒம் புடிங் நிறைய வகைகள் உண்டுதானே. உண்மையில் நான் செய்ய வெளிக்கிட்டது கரமல் புடிங்தான், அதனாலதான் சீனியைப் படத்தில வச்சேன்.. பின்பு மாத்தி விட்டேன்.
ஹா ஹா ஹா கொழுக்கட்டைப் பெயர்மாதிரி, மாமி பெயரை மறந்திட்டாவோ செய்து குடுங்கோ.. யேஸ் பிரெட் புடிங்கும் செய்வேன் மைக்குரோவேவ் மூலம்.. ஆனா பிரச்சனை என்னவெனில் இனிப்பு எங்கள் வீட்டில் அதிகம் பிடிக்காது.. கேக் பிடிக்கும்.
எனக்கும் அடியோடு பிடிக்காது இனிப்பு, ஆனா புடிங் பிடிக்கும்..
பழ கேசரி நல்லா வந்துருக்கே. சூப்பரா இருக்கு.
ReplyDeleteநானும் மாம்பழம் போட்டுச் செய்துகொடுத்தேன் என் ஸிஸ்டர் இன் லா கேட்டார் என்று அவர் வீட்டில் செய்து கொடுத்தேன். அவங்க ஒரு வேலை ஃபேஸ்புக்கில் போட்டிருப்பாங்க படம் எல்லாம்...
ஊசிக் குறிப்பு செம...
கீதா
அனைத்துக்கும் நன்றிகள் கீதா.
Deleteசீனி சம்பல் நன்றாக இருக்கிறது. என்னுடைய ரெசிபிக்களை விட சுலபமாக இருக்கிறது ;))
ReplyDeleteஉங்களுடைய சென்ற பதிவில் பூக்கள் அழகோ அழகு!. நான் இப்போதுதான் பார்த்தேன். பின்னூட்டம் போடலாம் என்றால் 170 தாண்டி செல்ல வேண்டும். அதனால் சந்தடி சாக்கில் இங்கேயே நுழைத்து விடுகிறேன். ஓகே?
வாங்கோ பானுமதி அக்கா வாங்கோ..
Delete//என்னுடைய ரெசிபிக்களை விட சுலபமாக இருக்கிறது ;))//
ஹா ஹா ஹா.. இப்போ எல்லாம், ஏதும் ஈசி ரெசிப்பி என்றாலே உங்கள் நினைவு வந்திடுது:)..
//அதனால் சந்தடி சாக்கில் இங்கேயே நுழைத்து விடுகிறேன். ஓகே?//
ஹா ஹா ஹா கர்ர்:) இம்முறை மட்டும், பேர்த்டே மாதம் என்பதால் விட்டுக் குடுக்கிறேன்.. ஹா ஹா ஹா மிக்க நன்றி.
என்னைக்கு வந்து, என்னைக்கு பதில் எழுதி......ம்.ம்.ம். சீனிச் சம்பலும் ஸ்பெஷல் புட்டிங்கும் சாப்பிட்டால், தொடர்ந்து ஒரு வாரம் தூக்கம் வந்துவிடும், அத்துடன் சோம்பேறித்தனமும் அதிகமாகிடும்னு இப்போதான் தெரிஞ்சுக்கிட்டேன்.
ReplyDeleteநான் இவைகளைப் பண்ணப்போவதில்லை சாமி...
//நான் இவைகளைப் பண்ணப்போவதில்லை சாமி...///
Deletekarrrrrrrrrr:)
[im]https://media.giphy.com/media/KQwZNdsEtMecg/giphy.gif[/im]
யாரோ என் பக்கத்துக்கு சூனியக் கேள்வியை ஹையோ கிளவியை அனுப்பிப் போட்டினம்.. என்பக்கத்தை ஓபின் பண்ணிப் பார்க்கவே மனம் வருகுதில்லை கர்ர்:)) இருப்பினும் நான் தான் மணுண்ணிப் பாம்பாச்சே.. 24 மணி நேரத்துக்கு ஒரு போஸ்ட் போடப்போறேன்.. எல்லோரையும் என் போஸ்ட் பார்த்து தேம்ஸ்ல தானாகவே ஜம்ப் பண்ண வைக்கப் போறேன்ன்ன்ன்:))
Deleteநீங்க எங்க இருக்கீங்க? தேவர்களின் ஒரு நாள், பூமியில் உள்ளவங்களுக்கு ஒரு வருஷம் என்று சொல்வாங்க. நீங்க 24 மணி நேரத்துல என்று சொல்லி, 26+ மணி நேரம் ஆகிவிட்டதே....
Deleteபீஸ்ஸ் பீஸ்ஸ்ஸ் இன்னொரு ருவென்ரி ஆறு அவேர்ஸ்:) பொறுத்துங்கோங்க:)) தோஓஓஓஓஓஓஓஒ புதுப் போஸ்ட் ரெடியாக்கப்போறேன்ன்ன்ன்ன் எல்லோரும் என்னை வாழ்த்தி வழிஅனுப்புங்கோ:)
Deleteபிளீஸ்ஸ் நெ.தமிழன் ஒரு குட்டி ரிகுவெஸ்ட்:)) ஹா ஹா ஹா நான் மேலே சொன்னதோடு இன்னும் ஒரு ருவென்ரி ஆறு:)) மணி நேரத்தை சேர்த்துங்கோங்க:))... அது இன்னும் அதிகமாகலாமோ என்னமோ:)) ஹா ஹா ஹா.
Deleteஆஆஆஆவ்வ்வ் மீயேதான்ன்ன் நூறூஊஊஊஊஊஊஊஊஊஊஊ ஐசூஊஊஊஊ எனக்கே:) இது வேற ஐசூ:) பிக்பொஸ் ஐசூ அல்ல கர்ர்ர்ர்:))
ReplyDelete[im]http://2.bp.blogspot.com/_70rJ1ndenM0/SNlx2Ua5GKI/AAAAAAAAFQ0/Njd0c866bpo/s1600/Unbenannt-1.jpg[/im]
வணக்கம் சகோதரி
ReplyDeleteநல்ல சுவையான சமையலாக செய்து காண்பித்துள்ளீர்கள். வெங்காயம் வதக்கி நானும் செய்துள்ளேன். ஆனால் லவங்கமும். புளியும் சேர்த்ததில்லை. அதற்கு பதில் தக்காளி சேர்த்துள்ளேன் . தங்கள் பாணியும் மிக அருமையாக உள்ளது. கைபடாமல் வைத்திருந்தால் கெட்டு விடாமல் வைத்து சாப்பிடலாம்.
பழகேசரியும், நல்லாவே இருக்கு. ஆனால் முட்டை சேர்க்காமல் வராதோ? நாங்கள் சேர்ப்பதில்லை. அதனால்தான் கேட்கிறேன். மிகவும் அருமையாய் செய்துள்ளீர்கள்.
பூனைகளின் அழகு படங்கள் மிக அருமையாக உள்ளன.
ஊசிக்குறிப்பு வாசகம் நூற்றுக்கு நூறு உண்மை. தலையெழுத்தை யார்தான் அறிய முடியும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்கோ கமலா சிஸ்டர் வாங்கோ... எபடி குலதெய்வத்திடம் அதிராவையும் காப்பாத்துங்கோ ஜாமி என வேண்டினனீங்களோ?:)..
Deleteதக்காளி சேர்த்தால் நீண்டநாள் இருக்குமோ? பழுதாகிடுமெல்லோ...
அச்சச்சோ நீங்க ஒழுங்காகப் பார்க்கவில்லை, முட்டை சேர்த்திருப்பது கேசரிக்கு அல்ல, புடிங் க்க்கு ஹா ஹா ஹா..
மிக்க மிக்க நன்றிகள். ஊரால் வந்ததும் நினைவாக என் பக்கம் வந்தமைக்கும்.