நல்வரவு_()_


Sunday, 15 July 2018

"விவசாயி அதிராவின்" முதல் பாகம்:)

நெல்லைத்தமிழனுக்கு வாக்குக் குடுத்து.. 26 மணி நேரம் முடிய இன்னும் ரெண்டு விநாடிகளே இருக்கு:) ச்சோ அதுக்குள் புயுப் போஸ்ட் எழுதிடோணும் எனக் களம் இறங்கிட்டேன்.

எவ்ளோதான் பிசியாக இருந்தாலும்.. நான் செய்த தோட்டத்தையும் பயிர்களையும் படமெடுத்துப் போடாது விட்டால்.. அதிரா ஒரு நல்ல விவசாயி என நீங்கள் நம்ப மாட்டீங்களெல்லோ:)..

எங்கட பின் கார்டினிலே...

வேலிக்கரை ஓரமாக ஒரு குட்டி இடம் எடுத்து அதில் உரமண் போட்டு, உருளைக்கிழங்கும் வெங்காயமும் ஒரு பக்கமாகவும்... மற்றப் பக்கம் கபேஜ் புரோகொலியும் நட்டேன். பாருங்கோ வரிசையாக வெங்காயமும் உருளைக்கிழங்கும் முளைத்து விட்டது... 

என்ன அழகாக, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பெருக்கிறது..



இது மற்றப் பக்கத்திலும் ஒரு இடம் எடுத்து இப்படி நட்டேன்..

ஆஆஆஆ பூக்கள் பூக்கும் தருணம்.. அதைப் பார்த்தது அதிராவெல்லோ.. உருளைக்குப் பூக்கள் வந்ததும் பிடுங்கிடலாம் என அர்த்தமாம்...  அதனால அறுவடை செய்தாச்சு ஆனா அந்தப் படங்கள் அடுத்த தொடரில் வரும்:)

ஆஹா இது பாதி வெங்காயம் பிடிங்கிட்டேன், நான் முக்கியமாக இங்கு வெங்காயம் நடுவது, அந்த வெங்காயப்பூ, தாளில் சுண்டல் செய்வதற்காகவே... இம்முறை இங்கத்தைய பெரிய வெங்காயமே நட்டேன்.. ஏனோ பூக்கள் வரவில்லை.. நல்ல பெரிய தாள்கள் மட்டுமே வந்தன..

********************************INTERVAL********************************
*************************************************************************
சரி இப்போது இந்த வெங்காயத் தாளில் எப்படி சுண்டல் செய்வது எனப் பார்ப்போமா?:)..

இப்படி துப்பரவாக்கி எடுத்திடோணும்..

பின்பு நன்கு கழுவிப்போட்டு, இப்படி குட்டிக் குட்டியாக வெட்டி எடுக்கோணும், வெங்காயத்தைப் புறிம்பாக எடுத்துக் கொள்ளோணும்.

1)பின்பு அந்த வெங்காயத் தாளினுள்[தண்ணி இருக்கக்கூடாது], உப்பு மஞ்சள், கறிப்பவுடர், தேங்காய்ப்பூ சேர்த்து நன்கு பிசைந்து எடுத்து வைத்துக் கொள்ளோணும். 

2)அந்த வெங்காயத்தோடு செத்தல் மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

3)வதங்கியதும், இந்த பிசைந்து வைத்திருக்கும் வெங்காயத் தாளைக் கொட்டிப் பிரட்டவும்.. ஸ்லோ ஃபயரில்.. மெதுவாக வதக்கினால் போதும், அதிக நேரம் எடுக்க தேவையில்லை, மூடியும் வதக்க வேண்டாம்.

இதோ வெங்காயத்தாள் சுண்டல் ரெடி:)
நன்றியுடன் விடை பெறுபவர் “விவசாயி அதிரா”

ஊசி இணைப்பு:)
 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஊசிக்குறிப்பு:
வாழ்க்கையில் பலரும் பல விதமாகக் கற்பனை செய்வதுண்டு, ஆனால் கற்பனை வேறு வாழ்க்கை வேறு.. வாழ்க்கை யதார்த்தமானது.. கற்பனை நினைவுடனேயே நின்று விடுகின்றது:(..

இவ்வரிய தத்துவத்தை, பல பிஸியான நேரத்தின் மத்தியிலும்:), உங்களுக்காகக் காவி வந்திருப்பவர்: உங்கள் பேரன்புக்கும் பெரு மதிப்புக்கும் உரிய புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்:)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அறிவுப்பசிஜி இம்முறை, “விவசாயி அதிராவுக்கு” என்ன பட்டம் வழங்கப் போறாரோ?:)
-----------------------------------------------------------------------------------------
....

144 comments :

  1. வெங்காயத்தாள் சுண்டல்.. கேள்விப்பட்டதில்லை. ஆனால் பார்க்க அழகாக இருக்கு. இதுல பச்சப்பட்டாணியோ இல்லை கொண்டைக்கடலையோ சேர்த்தால் இன்னும் அட்டஹாசமா இருக்குமோ ?

    படங்கள் அருமையாக வந்திருக்கு. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. ,///பச்சப்பட்டாணியோ இல்லை கொண்டைக்கடலையோ சேர்த்தால் இன்னும் அட்டஹாசமா இருக்குமோ ?///

      Ayyyaaaaangggg aaaaaaangggggnoooooii

      Delete
    2. நெல்லை அது இங்கு பொரியல் நு சொல்றதை சுண்டல்ன்றாங்க....நல்லாருக்கும் நெல்லை....சாப்பிட.

      கீதா

      Delete
    3. ஆவ்வ்வ்வ்வ் வாங்கோ நெ.தமிழன் வாங்கோ முதலாவதா வந்திருக்கிறீங்க.. உங்களுக்கு ஒரு டிஷ் சுண்டல் தருகிறேன்ன்.. அண்ணியிடம்[அண்ணிதான் தண்ணி அல்ல ஹா ஹா ஹா] குடுங்கோ...:)...

      ஆவ்வ்வ்வ் அஞ்சுவும் கீதாவும் பதில் சொல்லிட்டாங்க கரெக்ட்டா:) இப்போதாவது புரிஞ்சுக்கோங்க:) ஆண்கள் என்னதான் நளபாகம் எனப் பெயரெடுத்தாலும் சமையலில் பெண்கள்தான் நளபாகி யாக்கும்:)) ஹா ஹா ஹா... இதில அதெல்லாம் போடக்கூடாது... இது மெயினா ரைஸ் உடன் தான் சாப்பிடோணும்.. புட்டுக்கும் சூப்பரா இருக்கும்.

      ஆவ்வ்வ்வ்வ் என் தோட்டம் பார்க்க வந்திருக்கும் எல்லோரும் வாங்கோ வாங்கோ இந்த கார்பெட்டில கார்டினில இருங்கோ.. மங்கோ லஸி அடிச்ச்சுக் கொண்டு வாறேன்ன்ன் சதுப் பொறுத்துக் கொள்ளுங்கோ:))

      Delete
    4. நான் எனக்கு ரைம் கிடைக்கும்போதெல்லாம் என் கொமெண்ட் மொடரேஷன் பொக்ஸ் ஐத்திறந்து பார்ப்பேன்ன் ஏதும் கொமெண்ட்ஸ் வந்திருக்குதோ என:)) ஒவ்வொரு தடவையும் எனக்கு கொமெண்ட்ஸ் வெயிட்டிங்கில இருக்கோணும் ஜொள்ளிட்டேன்ன் அப்போதானே ஆவ்வ்வ்வ்வ்வ் கொமெண்ட்ஸ் இருக்கு என பபுளிஸ்ஸு பண்ணுவேன் யான் ஹா ஹா ஹா:) சரி சரி இதுக்கெல்லாம் ரைம் வேஸ்ட் பண்ணி முறைக்கக்கூடாதாக்கும்ம்:))

      Delete
  2. Believe in yourself படத்தையும் ரசித்தேன். அது ஓவர் கான்பிடன்ஸ் இல்லையோ?

    ReplyDelete
    Replies
    1. இல்ல நெ.தமிழன் இல்ல:)) ஓவர் கொன்ஃபிடன்ஸ் இருப்பின் மட்டுமே கொஞ்சமாவது இலக்கை அடையலாம்:).. நான் படிச்சது ஏ லெவல் மட்ஸ்... அப்போ யூனிவசிட்டி போனாலே போதுமென வகுப்பில் ஒரு பிள்ளை சொன்னா.. அதுக்கு இன்னொரு நண்பி சொன்னா.. அப்படி நினைக்காதே.. எஞ்சினியர் ஆகோணும் என்றே நினைச்சுப் படி.. அப்போதான் பிஎஸ்சி ஆவது கிடைக்கும் என்றார்... அந்த வசனம் எப்பவும் என் மனதில் வேத வாக்காக நிக்கும்.. அது உண்மைதானே..

      Delete
    2. சரி... திண்டுக்கல் தனபாலன் பதிவுக்கும் போய் வந்திருக்கீங்க. பிடிங்க ஒரு குறளை.

      உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்றது
      தள்ளினும் தள்ளாமை நீர்த்து

      Delete
    3. ஹா ஹா ஹா ஹையோ இப்பூடி மாட்டி விடுறீங்களே:) அதுதானே அங்கேயே நழுவிட்டு வந்தேன்:))..

      சொல்லுவாங்க.. வாயத்திறந்து நான் முட்டாளேதான்ன்ன்ன் எனச் சொல்லுவதை விட, வாயை மூடிக்கொண்டிருந்து.. இவர் முட்டாள்போல இருக்கே என நினைக்க விடுவது எவ்ளோ மேலாம்:)) ஹா ஹா ஹா இதனாலதான் சில விசயங்களில் மீ தப்பி ஓடிடுவேனே:))..

      சத்தியமா இந்தக் குறளுக்கு எனக்கு அர்த்தம் தெரியாது.. ஓஓஓஓ இப்போதான் நினைவு வருது என்னிடம் ஒரு இல்ல ரெண்டு திருக்குறள் புத்தகம் இருக்கு.. அதில இது இருக்கோ என நைட் தேடிப் பார்க்கிறேன்.. அதில இல்லை எனில் பின்பு நீங்க ஜொள்ளுங்கோ ஓகே?:))..

      Delete
    4. ஆஆஆஆவ்வ் நெ.தமிழன்... என்னிடம் இருக்கும் 271 பக்கம் உடைய திருக்குறளில் தேடித் தேடிப் போனேன்.. பொருட்பால் 596 ஆவது திருக்குறள்.. கண்டு பிடிச்சிட்டேன்ன் ஹா ஹா ஹா...

      உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்றுஅது
      தள்ளினும் தள்ளாமை நீர்த்து...

      “அதாவது வந்து..எண்ணுவதெல்லாம் தம் உயர்வு பற்றியே எண்ண வேண்டும், பின்பு அவ்வுயர்வு விதி வசத்தால் தவறினாலும், தவறாத தன்மை உடையதாகும்”.. எனப் பொருளாம் ஹா ஹா ஹா.

      அப்போ உள்ளுவது எனில்.. எண்ணுவதோ? எதுக்கு திருவள்ளுவர்த் தாத்தா கனி இருப்பக் காய் கவர்ந்தார்?:) அதாவது எண்ணுவது எனும் இலகுச் சொல்லிருக்க.. உள்ளுவதை ஏன் சொன்னார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

      Delete
    5. ஹா ஹா ஹா கண்ணதாசன் அங்கிள் என்னைப் பேய்க்காட்டிப் போட்டார்ர் கர்:) ஏன் தெரியுமோ?:).. அவர் சொல்லியிருக்கிறார்.. “நீங்கள் எண்ணுவது எல்லாம் உயர்வானதாவே இருக்கட்டும், அவ் நினைவு கைகூடாவிட்டாலும் கூட” என.. இது அவர் சொன்னதாக நினைத்து வந்தேன், இப்போதான் தெரியுது இக்குறளைத்தான் சொல்லியிருக்கிறார் ..:).

      இருப்பினும் திருக்குறள் எனில் எனக்குப் புரியாது, அவர் இப்படி ஈசியாகச் சொன்னமையால எனக்கு மனதில் பதிஞ்சு போச்ச்ச்ச்ச்ச் ஹா ஹா ஹா:).

      Delete
  3. அருமையா பாத்தி கட்டி உருளை, வெங்காயம் வளர்த்திருக்கீங்க. நம்ம ஊர் வெங்காயம் அங்க வளராதா?

    ReplyDelete
    Replies
    1. ஹையோ சூப்பரா வரும் .. இங்கு குளிர்ப்பிரதேசம் என்பதால் கரட் உருளை வெங்காயம் சூப்பரா வரும்.. ஆனா நம்மூர் வெங்காயத்துக்கு எங்கு போவேன்ன்? தமிழ்க்கடையிற்குப் போனபோது அம்முறை நம்மூர் சின்ன வெங்காயம் வந்திருக்கவில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. முன்பு நட்டிருக்கிறேன் அது நிறைய பூக்கும்.. சுவையும் அதிகம்.. இது சுவை கொஞ்சம் குறைவாக இருந்துது.. கிட்டத்தட்ட ஸ்பிறிங் ஒனியன் போல... ஸ்பிறிங் ஒனியனில் சுண்டல் செய்ய முடியாது.. அது வழுவழுப்புத்தன்மை அதிகம்.

      நமூர் வெங்காயத்தாள் சுண்டல்தான் சூப்பரோ சூப்பர். இங்கு அதெல்லாம் கிடைக்காது என்பதாலதான், இப்படி விபசாயம் செய்தே சமைக்கிறேன்ன் பூஸோ கொக்கோ ஹா ஹா ஹா:).

      Delete
  4. பூ வந்தாச்சுன்னா உருளைக்கிழங்கை அறுவடை செய்யலாம் என்பது புதுச் செய்தி. பெரிய வெங்காயமாக வளர்ந்தது எப்படித் தெரியும்? அனைத்துப் படங்களும் அருமை. பாம்புகள் வராதா?

    ReplyDelete
    Replies
    1. அது நெல்லைத்தமிழன் விதை வாங்கித்தான் வெங்காயம் உருளை நடுவோம். சமையல் உருளை நடுவதில்லை நான். அப்போ பக்கெட்டில் விபரம் எழுதியிருப்பார்கள்.. எப்போ நடவேணும் எப்போ பிடுங்கோணும் என்றெல்லாம்.. அதில்தான் பூ வந்தபின்பு நீண்ட நாட்கள் விட்டால் கிழங்கு பழுதாகி விடும் என இருந்தது.

      வெங்காயம், ஊர் வெங்காயம் எனில் பூ வந்து.. மொட்டு விரிந்ததும் பிடுங்கிடோணும் மொத்தமா. அல்லது முதலில் பூக்களைப் பிடுங்கி பின்பு சில நாட்களில் வெங்காய அறுவடை:) செய்யலாம்:)..

      இது பூ வராமையால், தாள்கள் ருனியில் கருகுவதுபோல ஆரம்பித்ததும் பிடுங்கினேன்.. ஏன்னெஇல் எனக்கு வெங்காயம் தேவையில்லையே அது கிலோ 39--49 பென்ஸ்களுக்கு கிடைக்குது:).. எனக்கு சுண்டல் செய்ய தாள் தேவை அதனால்தான். ஆனா தாள் நன்கு கருகும்வரை விட்டிருந்தால் வெங்காயம் இன்னும் நன்கு பெருத்து முழுமை பெற்றிருக்கும். ஒன்றை விட்டிருக்கலாம்.. மிகுதியையும் பிடுங்கிப் போட்டு இப்போ கீரை விதைச்சிருக்கிறேன்ன் அஞ்சுவின் ஐடியாவில் பார்ப்போம்:)

      Delete
    2. //பாம்புகள் வராதா?//

      ஸ்கொட்லாந்தில் விசப்பூச்சிகளே இல்லை என ஆராச்சிகள் சொல்கின்றன.. முக்கியமா பாம்புகள் இல்லவே இல்லை. தேனி மட்டும்தான் விஷம் எனும் சொல்லில் இருக்கு... மற்றும்படி எதுவுமில்லை இங்கு.. அது பெரிய நிம்மதி:).

      Delete
  5. அதிராவுக்கு வெங்காய விவசாயி என்ற பட்டம் கொடுக்கலாம் போலயே....

    வாழ்த்துகள் அதிரா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..

      //வெங்காய விவசாயி //
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வெங்காயம் எனில் ஒன்றுக்கும் உபயோகமில்லாததுக்கும் வெங்காயம் என நம்மூரில் திட்டுவினம்.. அது ஒரு வெங்காயம் அதுக்கு ஒண்ணுமே புரியாது எனச் சொல்வார்கள்:).. அதனால இப்பட்டத்தை இச்சபியில் வைத்து நிராகரிப்புச் செய்கிறேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா

      இருப்பினும் ஒரு பட்டம் வழங்கியமைக்கு நன்றி கில்லர்ஜி.

      Delete
  6. அதிரா விவசாயி, விவசாயி விவசாயி என்று பாட தோன்றுகிறது.
    அருமையாக விவசாயம் செய்து இருக்கிறீர்கள். வீட்டுத்தோட்டத்தில் நாம்பயிரிட்ட பயிரில் சமைப்பது ருசியாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ... ஹா ஹா ஹா என்னை நானே விவசாயி ஆக்கிட்டேன்ன் இல்லை எனில் ஆரும் இப்பெயரை ஊஸ் பண்ணியிருக்க மாட்டினமெல்லோ:).

      உண்மைதான் கோமதி அக்கா.. அப்படியே ஃபிரெஸ்சா பிடுங்கி வந்து சமைப்பதில் ஒரு ருசியும் மனதுக்கும் இதமாக இருக்கும்.. பிள்ளைகளும் ஏதும் வேண்டாம் எனச் சொல்லுவார்கள்.. இது எங்கட கார்டின் வெஜ் எனச் சொன்னால் டக்கெனச் சாப்பிடுவினம் ஹா ஹா ஹா.

      Delete
  7. படங்கள் எல்லாம் அழகு.
    வெங்காய தாள் சுண்டல் நன்றாக இருக்கிறது.காலிபிளவர் வைத்து அழகு படுத்திய சுண்டல் அருமை.

    ReplyDelete
    Replies
    1. //காலிபிளவர் வைத்து//

      ஹா ஹா ஹா கண்டு பிடிச்சிட்டீங்க.. எனக்கு எதையாவது வைத்துப் படமெடுத்தால்தான் ஒரு திருப்தி.. அவசரத்துக்கு அருகில் கொலிஃபிளவர் இருந்துது ஒரு பூவை உடைத்து வைத்தேன்:).. நன்றி நன்றி.

      Delete
  8. இடைவேளையில் பகிர்ந்த தத்துவம் நன்றாக இருக்கிறதே!

    ReplyDelete
  9. ஊசி இணைப்பு, ஊசிக்குறிப்பு எல்லாம் சிந்திக்க வைக்கிறது.

    புலாலியூர்ப் பூஸானந்தா அவர்களுக்கு நன்றி.
    அருமையான குறிப்புகள் , இணைப்புகள் கொடுத்தமைக்கு.

    ReplyDelete
  10. 'ஆண்டவனின் தோட்டத்திலே' பாடல் அருமை.
    அழகின் சிரிப்பு அருமை.
    இயற்கை அழகு, இயற்கையின் சிரிப்பு எல்லாம் என்றும் அழகுதான்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் ஸ்ரீராமுக்குமாகத்தான் பழைய பாட்டுக்கள்.. புதுப் பாடல்போட்டால் அவர் காக்கா போயிடுறார் கர்ர்:)) வயசாயிடுச்சோ என்னமோ:) ஹையோ கோமதி அக்கா படிச்சதும் கிழிச்சு வைகையில வீசிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:).
      மிக்க நன்றிகள் அனைத்துக்கும்.

      Delete
    2. // புதுப் பாடல்போட்டால் அவர் காக்கா போயிடுறார் கர்ர்:)) வயசாயிடுச்சோ என்னமோ:)/

      புதுப்பாடல்கள் என்று சொல்லாதீர்கள். புதுக் கத்தல்கள் என்று சொல்லுங்கள்!

      Delete
    3. ஹா ஹா ஹா ஹையோ இவர் எங்கே ஒளிச்சிருந்து ஜம்ப் ஆனார்ர்:)).

      உண்மையில் ஸ்ரீராம்.. புதுப்பாடல்களில் வெறும் மியூசிக் தான் வருது.. குரலோ வசனமோ கேட்பதில்லை.. மிக மிகக் குறைவான சில பாடல்களே மனதுக்கு இதமாக, கத்தல் இல்லாமல் நல்ல வசனங்களோடு இருக்கு.

      நான் அதிகம் வசனங்களுக்கே மதிப்புக் கொடுப்பதனால்.. பழைய பாடல்களே எனக்கும் பிடிக்கும்.. புதுப்பாடல்கள் அவ்றிக்கன் கத்தல் போல இருக்கும்.

      இங்கு ஒரு குருப் சேர்ஜ் க்கு கூப்பிட்டிருந்தார்கள், அங்கு போனால் முக்கால்வாசியும் பிளக்ஸ்தான், ட்றம் செட் ஐ வைத்து சும்மா அடி எனில் சொர்க்கத்துக்கே கேட்குமளவுக்கு ஓங்கி அடி அதனோடு மிகச் சத்தமாகப் பாடினார்கள் எல்லோரும்.. எனக்கு அப்படியே டொயிங்ங் என தலை இடி ஆரம்பமாகி.. பாதியிலேயே வீட்டுக்கு வந்திட்டோம்ம்.. ஐயா சாமி வாழ்க்கையில் அந்த சம்பவத்தை என்னால மறக்கவே முடியாது... ஹா ஹா ஹா..

      Delete
  11. நீங்க ரிசிப்பி போடுவதை கிண்டலாக எங்கள் ப்ளாக்கில் சொல்லிவிட்டு வந்தால் என்ன அதிசியம் நீங்களும் ரிசிப்பியை மிக தெளிவாக போட்டு அசித்தீட்டீங்க ஆமாம் இந்த ரிசிப்பியை எழுதியது நீங்களா அல்லது மண்டபத்தில் யாரவது எழுதி கொடுத்ததை வாங்கி போட்டு இருக்கீங்களா

    ReplyDelete
    Replies
    1. அதிரா போன இடுகைல, வெங்காயத்தாள் சுண்டல் என்றதும், முதலில் என் மனதில் வந்தது, வெங்காயத்தின் மேல் தோலை உரிப்போமே.. அந்தத் தாளை வைத்து எப்படி சுண்டல் செய்வாங்க என்றுதான் தோன்றியது. இந்த இடுகையைப் பாராட்டும்படித்தான் எழுதியிருக்காங்க மதுரைத் தமிழன்.

      Delete
    2. வாங்கோ ட்றுத் வாங்கோ..
      //ஆமாம் இந்த ரிசிப்பியை எழுதியது நீங்களா அல்லது மண்டபத்தில் யாரவது எழுதி கொடுத்ததை வாங்கி போட்டு இருக்கீங்களா//

      ம்ஹூம்ம்ம் இப்பூடி உசுப்பேத்தினால் உடனே அதிரா வீடியோவாக எடுத்துப் போடுவா எனத்தானே உசுப்பேத்துறீங்க:)) மீ வெரி ஷார்ப்பாக்கும்:)) ஹா ஹா ஹா ..

      //என்ன அதிசியம் நீங்களும் ரிசிப்பியை மிக தெளிவாக போட்டு அசித்தீட்டீங்க//

      ஆஆஆஆ இருப்பினும் ட்றுத்தின் வாயால இப்படி ஒரு வசனம் பார்த்து ஃபுல்லாஆஆஆஆஅரிச்சுட்டேன்ன்ன் தங்கூ தங்கூ:))

      Delete
    3. //வெங்காயத்தின் மேல் தோலை உரிப்போமே.. அந்தத் தாளை வைத்து எப்படி சுண்டல் செய்வாங்க என்றுதான் தோன்றியது. //

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெ.தமிழன்:)).. அது தோல் எனத்தானே சொல்லுவோம்.. தாள் எனில் வெங்காயத்தின் இலைகள் தானே:)) நேக்கு டமில்ல டி ஆக்கும்:)) ஹா ஹா ஹா.

      இருப்பினும் இம்முறை ஆருமே என்னை ஓட்டவில்லை:)) எல்லோரும் நல்லபடியே பதில் தந்திருக்கினம்:)) இப்படியான சந்தர்ப்பம் வாழ்க்கையில் இடைக்கிடைதான் என்பக்கம் அமையுது:)) அதனால எல்லோரும் நல்ல மூட் ல இருக்கோணும் இன்று முழுக்க:)) இடையில மாறிடாமல்:) என வைரவருக்கு நேர்த்தி வச்சிட்டேன்ன் ஹா ஹா ஹா:)..

      Delete
  12. விவசாயி அதிராவிற்கு டாக்டர் பட்டம் கொடுக்க ஆலோசித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
    எந்த துறையானலும் இப்படி அடித்து தூள் செய்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. ஹையோ கோமதி அக்கா.. நேக்கு ஒரே ஷை ஷையா வருதூஊஊஊஊ:)).. ஹா ஹா ஹா நன்றி நன்றி:).
      [im] http://static.hdw.eweb4.com/media/wp_400/1/2/19829.jpg [/im]

      Delete

  13. நான் சாமியாராக போய்விடுதென்று முடிவு செய்து இருக்கிறேன் ஆனால் சிஸ்யை யாரவது கிடைத்தால்தான் போவது என்று முடிவு செய்து இருக்கிறேன்... எனி ரெகமண்டேஷன்???

    ReplyDelete
    Replies
    1. ட்ரூத் உங்களுக்கு ஹெல்ப் செஞ்சே ஆகணும்னு மனசு துடிக்குது :)
      என் மனசில் ரெண்டு சிஷ்யை இருக்காங்க :)
      எதுக்கும் இங்கி பிங்கி பாந்கி போட்டு சொல்றேன் :)

      Delete
    2. //எனி ரெகமண்டேஷன்???//

      YDDER EERS :))))))))))

      Delete
    3. //நான் சாமியாராக போய்விடுதென்று முடிவு செய்து இருக்கிறேன் ஆனால் சிஸ்யை யாரவது கிடைத்தால்தான் போவது என்று முடிவு செய்து இருக்கிறேன்//

      ஹையோ ட்றுத்.. வரம் கேட்கும்போது தெளிவாக் கேட்கோணும்:)) இப்போ பாருங்கோ சிஷ்யை தானே வேணும் என கோவை சரளாவை உங்களுக்கு சிஷ்யை ஆக்கி அனுப்பிடப் போகினமே:)).. ஹா ஹா ஹா இதுக்கு மேலும் ரெகமெண்டேஷன்?????????

      ஹா ஹா ஹா..

      Delete
    4. ///AngelMonday, July 16, 2018 11:29:00 am
      ட்ரூத் உங்களுக்கு ஹெல்ப் செஞ்சே ஆகணும்னு மனசு துடிக்குது :)
      என் மனசில் ரெண்டு சிஷ்யை இருக்காங்க :) //

      கமான் அஞ்சு கமான்... சங்கவை குந்தவையைச் சொல்லிடாதீங்க.. ட்றுட்த்ஹுக்கு கலர் முக்கியமில்லை வயசுதான் முக்கியம் ஹா ஹா ஹா எதுக்கும் ஒரு 90 பிளஸ் ஆ பாருங்கோ ஹா ஹா ஹா:).

      Delete
  14. குரோசியா அதிபர் எனது சிஷ்யை ஆனால் சந்தோஷமாக இருக்கும்....ஹும்ம் அதற்கு எல்லாம் மச்சம் இருக்கணும்

    ReplyDelete
    Replies
    1. ///எனது சிஷ்யை ஆனால் சந்தோஷமாக//

      ஹா ஹா ஹா கடவுளுக்குக்கூடப் பொறுக்கவில்லைப்போலும்.. வசனத்தில் தப்பாக்கிட்டார்ர்... அதில் ஆனால் எனபதை பிரிச்சு எழுதிட்டீங்க.. பொருள்பிழை உருவாகிவிட்டதே.. சிஷ்யையானால்.. என வந்திருக்கோணும்.. இது சிஷ்யை but ...என்பதுபோல மீனிங் ஆச்சு ஹா ஹா ஹா.. இனி மச்சம் இருந்தென்ன இல்லாட்டில் என்ன:))

      Delete

  15. மிக்ஸியை பார்த்து வாழ்க்கையை கத்துக்கலாம் என்று நினைத்து மிக்ஸியை பயன்படுத்தினேன் அது முடிகிட்டு அழகாகவேலை பார்த்தாலும் எங்க வீட்டு மாமியை போல ரொம் சத்தம் போடுதே..

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா எவ்ளோதான் பூரிக்கட்டையால அடி வாங்கி கிட்னி கலங்கினாலும் அடங்குறாரோ பாருங்கோ:)) பாவம் மாமி இதுக்கு மேல இனி என்னதான் பண்ணுவா அவ:).. நயகரா என ஒன்று இருப்பதை அவவுக்கு சொல்லிக் குடுக்கோணும்:)))

      Delete


  16. வாழ்க்கை ஸுமுத்தா போகும் என்று கற்பனை பண்ணி வைத்து இருந்தேன் ஆனால் திருமணம் ஆன பின் மேடு பள்ளம் அதுதானுங்க மாமி பூரிக்கட்டையால் அடித்து உடம்பில் மேடு பள்ள்ங்கள் ஏற்பட்டு கரடு முரடாக போயிருச்சுங்க

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அப்போ மேடு பள்ளங்களைச் சரி செய்ய.. சாமியாராகி விடுவதுதான் ஒரே வழி.. ஹையோ என்னால முடியல்ல ஜாமீஈஈஈ ஹா ஹா ஹா:))

      Delete
  17. தமிழகத்தில் விவசாய நிலங்களை அழித்து ரோடு போடுறாங்களாம் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்களாம் ஒருவேளை உங்களின் இந்த பதிவை பார்த்தால் அவரவர் அவர்களின் வீட்டிலே இப்படி விவசாயம் பண்ணி வாழ்க்கையில் வெற்றி பெறலாம்

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ்வ்வ் முடிவில அருமையாகச் சொல்லிட்டீங்க மிக்க நன்றி ட்றுத்.. உண்மையில் வீட்டுத்தோட்டம் என்பது மனதுக்கு புத்துணர்ச்சி... பப்பி பூஸ் வளர்ப்பதைப்போலவேதான் இதுவும்.

      அனைத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  18. கடவுள் என்னும் முதலாளி
    கண்டெடுத்த தொழிலாளி
    விவசாயி.... விவசாயி....

    வாழ்க... வளர்(க்)க...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ டிடி வாங்கோ..

      பாடல் நானும் கேட்டதுண்டு.. மிக்க நன்றி.

      Delete
  19. 'வேளாண்மை விஞ்ஞானி' என்னும் பட்டம் ஏற்கனவே நம்மாழ்வாருக்கு வழங்கப்பட்டுவிட்டது. 'வேளாண்மைச் செம்மல்' மதுரை குலமங்கலத்தை சேர்ந்த விவசாயி வி.கிருஷ்ணன் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆகையினால் அதிராவுக்கு.....

    'வேளாண்மை முது முனைவர்' என்னும் அரிய பட்டத்தை வழங்கிட அனைத்துப் பதிவுலக நண்பர்களிடமும் பரிந்துரை செய்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அறிவுப்பசிஜி வாங்கோ..

      //ஆகையினால் அதிராவுக்கு.....

      'வேளாண்மை முது முனைவர்' என்னும் அரிய பட்டத்தை///

      ஆஆஆஆவ்வ்வ்வ் நன்றி நன்றி ஆனா இடையில அந்த “முது”:) என்பது எங்கயோ இடிக்குதே:))... ஹையோ முதிய முனைவர் எனச் சொல்லிடப்போகினமே.. இப்போ இதுக்கு எப்பூடிப் பிராயச்சித்தம் எடுப்பேன்ன்ன்ன்ன்:))..

      //அரிய பட்டத்தை வழங்கிட அனைத்துப் பதிவுலக நண்பர்களிடமும் பரிந்துரை செய்கிறேன்///

      ஹையோ ஆண்டவா.. இதுதானே வேண்டாமென்கிறது.. டக்குப்பக்கென பட்டத்தைச் சூட்டி விட்டு மேடையால இறங்கிடோணும்:)) இப்பூடி பதிவுலகை அழைச்சால் அவ்ளோதான்ன்ன்.. கடவுள் குடுத்தாலும் ஐயர் குடுக்க விட மாட்டாராம் எனும் கதையாவெல்லோ முடிஞ்சிடப்போகுது.. இப்போ மீ என்ன பண்ணுவேன்ன் ஜாமீஈஈஈஈஈஈஈஈ:))..

      ஹா ஹா ஹா மிக்க நன்றிகள்.

      Delete
  20. Wow.... விவசாயி அதிரா ......

    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட் வாங்கோ...

      மிக்க நன்றி மிக்க நன்றி.... பாருங்கோ எதுக்குமில்லாத மகிழ்ச்சி விவசாயத்துக்கு இருக்கிறதே...

      Delete
  21. விவசாயி அதிரா வின்...

    பயிர் படங்கள் எல்லாம் மனத்தையும் கண்களையும் கவர்கின்றன...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ..

      //விவசாயி அதிரா வின்...
      // ஹா ஹா ஹா..

      Delete
  22. வெங்காயத் தாள சுண்டல்..இது இங்க நண்பர் வீட்டில் செய்வாங்க ..சாப்பிட்டு இருக்கேன் ஆன சமைச்சது இல்ல...

    ReplyDelete
    Replies
    1. வெங்காயப் பூவில் இப்படி செய்யும்போது இன்னும் சுவை அதிகம், இலங்கைத்தமிழ்க் கடைகளில் ஒரு சீசனுக்கு கட்டுக் கட்டாக விற்பார்கள் வெங்காயப்பூ..

      Delete
  23. எங்க வீட்டில் இப்போ தான் வெந்தய கீரை போட்டு இருக்கேன்....வரட்டும் நானும் படம் போடுறேன்...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா போடுங்கோ போடுங்கோ.. நான் கடுகு விதைச்சு அறுவடை முடிச்சிட்டேன், மீண்டும் கீரையுடன் கடுகும் ஒரு பக்கமாகப் போட்டிட்டேன். வெந்தயம் போட நினைக்கிறேன் ஆனா இனிக் குளிர் வந்திடுமே எனப் பயமாக இருக்கு. இங்கு ஓகஸ்ட் தொடங்கினால் மெதுவா குளிர் ஆரம்பமாகும்.. பயிர்கள் எல்லாம் கறுக்கத் தொடங்கிடும் குளிருக்கு.
      மிக்க நன்றிகள் அனு.

      Delete
  24. அரங்கேற்றம் படத்தில் சுசீலாம்மாவுக்கு இரண்டு நல்ல பாடல்கள். இது இரண்டாவது. முதல் (தரத்தில்) இருப்பது "மூத்தவள் நீ கொடுத்தாய்.." கேபி இந்தப் படத்திலும் கதாநாயகிக்கு நல்லது நடக்காமல் பார்த்துக் கொண்டிருப்பார்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..

      ஓ உங்களுக்கு இந்தப் பாடல் படம் எல்லாம் அத்துப்படிபோல. இதுக்குப் பின்னால இருக்கும் கதையை சொல்கிறேன் கேளுங்கோ.

      எனக்கு இப்பாடல் அடிக்கடி இலங்கை வானொலியில் ஒலிச்சு.. நல்லாக் கேட்ட பழக்கம் உண்டு. ஆனா படம் பற்றி எதுவும் தெரியாது.

      இப்போ பிக்பொஸ்:) பார்க்கிறேன் எல்லோ.. அப்போ கமல் அங்கிள் ஒருநாள் பாலாஜிக்கு என நினைக்கிறேன் சொன்னார்.. தோல்வியால துவண்டு போயிடக்கூடாது... எனச் சொல்லி “அரங்கேற்றம்” எனக்கு பெரிதாக எந்தப் பெயரும் வாங்கித் தரவில்லை ஆரம்பத்தில் என.

      அப்போ எனக்கு அந்தப் பெயர் பிடிச்சிருந்தது, நான் எப்பவும் தலைப்புக்கு அடிமையாகிடுவேன்.. ஒரு கதைப்புத்தகமோ, படமோ தலைப்பு மனதுக்கு பிடிச்சால் உடனே தேடிப்பார்ப்பேன்ன்..

      அந்த வகையில் தேடினேன் படம் சூப்பராகப் போகுது.. அதுவும் அவ்ளோ பிள்ளைகள் ஒரு குடும்பத்தில்.. பார்த்துக் கொண்டிருக்கையில் இப்பாடல் போச்சுதா.. அப்படியே வானொலியில் கேட்டு ரசிச்சது நினைவுக்கு வந்து இங்கு காவி வந்து போட்டு விட்டேன்.. படம் அலரிவிதை அரைச்சு சாப்பிடப்போகும் கட்டத்தோடு நிக்குது:) மிகுதி பார்க்கோணும்.

      Delete
    2. பிக்பொஸ் பற்றி சொன்னேன் எல்லோ இன்னொன்றும் சொல்கிறேன்.. நேற்றைய எபிசோட்.... ஒரே பீலிங்சாப் போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்:)).. என் கண்ணால வழிந்த கண்ணீருக்கு அளவே இல்லை.. அப்படி ஒரு தருணம்.. பாலாஜி அவர்கள் 8 மாதத்தின் பின் தன் மகளை நேரில் பார்த்தது... அங்கிருந்த எல்ல்லோருமே அழுதார்கள்.. என்னாலும் அடக்கவே முடியவில்லை... படம் எனில் படம்தானே என நினைப்போம் இது ரியல் எல்லோ.. கஸ்டமாப் போச்சு.. பிள்ளைப்பாசம் என்பது எவ்வளவு கொடுமையானது என்பதை உணர்த்தியது நேற்றைய எபிசோட்..

      Delete
    3. பிக்பாஸ் பார்த்து நானும்தான். கமல் அங்கிள் உட்பட எல்லாருமே கண்கலங்கினார்கள்.
      முன்பு அடிக்கடி கேட்ட பாடல்தான். இப்ப நீண்டகாலமாச்சு கேட்டு.

      Delete
    4. உங்களுக்காக திரைப்படச் செய்தி. பிரகாஷ்ராஜ், அவர் மனைவியைக் காதலித்துத் திருமணம் செய்தவர். மூத்த பையன் கவனக்குறைவால் (10+ வயசு) இறந்துவிட்டான். அது அவரது மனைவியைப் பிரியுமளவு கொண்டுவந்துவிட்டது. பிரபுதேவா காதலித்த மனைவியைக் கைவிட்டுவிட்டு நயனதாராவைத் திருமணம் செய்தார். ஆனாலும் தன் பசங்களோடு தொடர்பில் இருந்தார். நயன், நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உனக்காக வந்தேன், நீ இன்னும் ஏன் உன் பசங்களோடு தொடர்பில் இருக்காய் என்ற கேள்வி கேட்டு, அது பிரபுதேவா, நயனைப் பிரியும் நிலையில் கொண்டுவந்துவிட்டது. இதில் நீதி என்னன்னா, மனைவியையோ கணவனையோ பிரிவது பெரிய விஷயமில்லை (இரத்த சம்பந்தம் இல்லை). ஆனால் பசங்களைப் பிரிய முடியாது, பிரிந்தாலும், அன்பு மனதில் இருந்துகொண்டே இருக்கும்.

      எனக்கென்னவோ நித்யா, பாலாஜி எபிசோட் டிராமாபோல் தோன்றியது. ஆனாலும் குழந்தை பேசும்போதும் வருத்தப்படும்போதும் நிஜமாகவே நெகிழ்ச்சியாக இருந்தது.

      Delete
    5. @ miyaaw

      நேத்தே நீங்க ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு ஃ பீலிங்சில் இருந்ததால் இந்த லிங்க்கை இன்னிக்கு தரேன் :)
      பிக்பாஸ் பாக்கறதை நிறுத்தி உங்க பின்னூட்டம் பார்த்தபின் அந்த லாஸ்ட் பார்ட் மட்டும் பார்த்தேன் எனக்கும் கண் கலங்கி உணர்ச்சி பிழம்பானேன் பிறகு நித்யாவின் இன்டெர்வியூ படிச்சி அட ச்சே எங்க கமல் அங்கிளையும் இந்த விஜய் டிவிகாரங்க ஏமாத்திட்டாங்களேன் இருந்தது

      Delete
    6. https://cinema.vikatan.com/bigg-boss-tamil/130995-i-am-not-gonna-live-with-balaji-now-says-nithya-balaji.html

      Delete
    7. வாங்கோ அம்முலு வாங்கோ..

      //முன்பு அடிக்கடி கேட்ட பாடல்தான். இப்ப நீண்டகாலமாச்சு கேட்டு///
      ஹா ஹா ஹா நான் மிகுதிப் படமும் பார்த்து முடிச்சிட்டேன் ஒரு வித்தியாசமான கதை.. நல்ல படம்.

      Delete
    8. ஓ நெல்லைத்தமிழன், பிரகாஸ்ராஜ் பிரிவுக்கு அதுதான் காரணமோ? எங்கோ ஒரு பேட்டியில் சொன்னார், தன் மகனுக்கு தன் வளவிலேயே கல்லறை கட்டியிருக்கிறேன், அடிக்கடி அதில் போயிருந்து பேசுவேன் என.. அத்தோடு அவரின் இப்போதைய மனைவியும் தன் முன்னாள்மனைவியும் நல்ல தோழிகளாக இருப்பதாகவும் அறிஞ்சேன்.

      மிகச் சரியாக சொல்லிட்டீங்க, நீங்க சொன்ன பின்புதான் பல பேரின் வாழ்க்கையை நினைச்சுப் பார்த்தேன் உண்மைதான், கணவன் மனைவி பிரிவு ஈசியாகிடுது ஆனா குழந்தைகளை ஆரும் விட்டுக் குடுப்பதில்லை.

      பாலாஜி நித்தியா கதையில், எனக்கு பாலாஜி நடிக்கிறார் நித்தியா நடிக்கவில்லை உண்மையாக இருக்கிறார் என எண்ணினேன்.. ஆனா கொஞ்சம் இருங்கோ கீழே அஞ்சு என்னமோ ஜொள்றா:) நேக்கு லெக்ஸ்சும் ஓடல்லே காண்ட்ஸும் ஆடல்லேஎ:))) ஹா ஹா ஹா.. மிகுதியை கீழே படியுங்கோ அஞ்சு பதிலில்..

      Delete
    9. //AngelTuesday, July 17, 2018 10:48:00 am
      @ miyaaw

      நேத்தே நீங்க ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு ஃ பீலிங்சில் இருந்ததால் இந்த லிங்க்கை இன்னிக்கு தரேன் :)///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் ரொம்ப ஃபீலிங்காயிட்டேன், ஆனால் அதில எந்த மாற்றமும் இல்லை, ஏனெனில் என் ஃபீலிங்ஸ்க்குக் காரணம் முழுக்க முழுக்க அந்தக் குழ்ந்தை மட்டுமே.. நித்தியா-பாலாஜி யால் எனக்கு எந்த ஃபீலிங்ஸும் வள்ளே:)..

      உண்மையைச் சொல்லப் போனால் அஞ்சு, இவர்களின் பிரச்சனை பற்றி ஒரு போஸ்ட்டே போடலாமோ என எண்ணி, பின்பு நமக்கெதுக்கு ஊர் வம்பு என விட்டு விட்டேன்.. இப்போ சோட் அண்ட் சுவீட்டாக சொல்ல நினைட்ததை சொல்லி முடிச்சிடுறேன்.

      உங்கள் லிங் பார்த்தேன், அது வீடியோவாக இல்லை, எழுத்திலதானே தந்திருக்கினம், சோ அதையும் 100 வீதம் நம்ப முடியாது, இனிமேல் நித்தியாவின் நேரடிப் பேட்டி வந்தால்தான் தெரியும்.

      அதில் குழந்தைக்க்கு சொல்லிக் கொடுத்து பேச வைத்தார்கள் எனச் சொல்லப்பட்டிருக்கு.. அது பொய்தானே.. ஏனெனில் அங்கு குழந்தை தானாக எதுவுமே பேசவில்லையே... பாலாஜி அழும்போது அழாதீங்கோ டடி என்றா, தானும் விம்மினா, பின்பு பாலாஜி மிஸ் யூ சொனபோது நானும் மிஸ் யூ என்றா, இதில் என்ன இருக்கு சொல்லிப் பேச? இது தானாக வந்த வார்த்தைகள்.. அதுவும் பாலாஜி சொன்னதற்குப் பதில் அவ்வளவெ.

      அடுத்து, ஆரம்பம் முதல் இருவரும் போட்டி போட்டு ஒருவரை ஒருவர் தாக்கினார்கள் . ஆனா இப்போ பிக் பொஸ் இனும் போனமைக்கு காரணமே, தான் நித்தியாவுடன் சேர்வதற்கே என பாலாஜி சொன்னார்... ஆனா உண்மையில் மனைவியோடு நேர்ந்து வாழ விரும்பும் ஒருவரின் நடத்தை எப்படி இருந்திருக்கோணும்?.. ஆரம்பம் முதலே அன்பாக பேசி அரவணைச்சுப் போயிருக்கோணும்.. ஆனா பாலாஜி அப்படி இருக்கவில்லையே.. படு மோசமாகத்தானே நடந்தார் முதல் இரண்டு கிழமையும். பின்பு கமல் அங்கு ஏசியதும் டக்கென மாறிட்டாராம்... இப்போ மிக நல்ல பிள்ளையாக இருக்கிறார்.. அப்போ இப்போ இருக்கும் பாலாஜி நடிக்கிறார் என்னைப் பொறுத்து. ஆரம்பம் இருந்த பாலாஜிதான் உண்மை முகம், நித்தியா அடிக்கடி சொன்னா, இப்போ இருப்பதை விட வீட்டில் அதிகம் ரெரர் ஆக இருப்பார் என்று.. அதை நான் நம்புகிறேன். ஏனெனில் இவ்ளோ பப்ளிக்கில் இத்தனை பேர் பார்பார்கள் எனத் தெரிந்தும் போய்ச் சா.. என்றெல்லாம் மிக மோசமாகத் திட்டுறார் அப்போ வீட்டில் தனியே எவ்ளோ திட்டியிருப்பார்.... அதுக்காக நித்தியா ரொம்ப நல்லவ எனவும் சொல்ல வரவில்லை, ஆனா நித்தியா நடிப்பதாக எனக்குத் தெரியவில்லை...

      நான் பாலாஜி திருந்திட்டார் என நம்ப மாட்டேன்.. காலம்தான் பதில் சொல்லும் என்கிறா அடிக்கடி.. அதையேதான் நான் அவவின் இடத்தில் இருப்பினும் சொல்லுவேன்.. ..

      பெண்கள் ஃபீலிங்ஸ்க்கு அடிமையானவர்கள் என்பது நித்தியாவிலும் தெரியுது, ஆரம்பம் பாலாஜி திட்டியபோது அவவும் ஏட்டிக்குப் போட்டிபோல இருந்தா பின்பு பாலாஜி நல்லவராக மாறியதும் அவவும் கொஞ்சம் ஒத்துப் போகிறா..

      பாலாஜி இப்படியே உண்மையில் திருந்தினால் அவ நிட்சயம் சேரும் வாய்ப்பு அதிகம் .. வாழ்த்துக்கள்.. ஹா ஹா ஹா .. இதை வந்து நித்தியாவைப் படிக்கச் சொல்லுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ் ஹா ஹா ஹா.

      Delete
    10. ஹலோ :) இப்போ நான் என்ன சொன்னேன் :) எங்க கமல் அங்கிளையே trp க்காக பொய் சொல்ல வச்சிட்டாங்களே :) அதைத்தானே சொன்னேன்

      எனக்கு நித்யாவுக்கு மகள் தந்தையுடன் சேர்வதில் விருப்பமில்லைனு தோணுது .இவ்ளோ வெளிப்படையா இன்டெர்வியூ குடுத்தார்னா கமல் ஹோஸ்ட் செய்ததையும் தாண்டி அப்போ அந்த டிவிகாரங்க வேலைதானே ? குழந்தையை எதோ சொல்லி சமாதானப்படுத்தினார்கள்னு சொல்றார் .அதோட இது விகடன் இன்டெர்வியூ அதனால் நம்பலாம் .
      ஒரு குழந்தையை அதன் தந்தை /தாயிடம் இருந்து பிரிப்பது கொடுமை :(
      இங்கே வெளிநாட்டினர் பிரிந்தாலும் பிள்ளைகளை தாயோ தந்தையோ சந்திக்க அனுமதிப்பாங்க அதுதான் நியாயம் .
      ஆளாளுக்கு பாலாஜி /நித்யா , கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறிவதால் என்ன லாபம் :(

      Delete
    11. இவங்க சேரட்டும் சேராம போகட்டும் ஆனா அந்த குழந்தை நிலை பரிதாபத்துக்குரியதே :(

      நானும் ஒரு போஸ்ட் இப்படி தந்தையை விட்டு பிரிக்கப்பட்ட ஒரு குடும்பம் பற்றி எழுத நினைத்தேன் ஆனா நேரமில்லை அதன் ஒரு பெரும்பகுதி முகப்புத்தகத்தில் இருக்கு அங்கிருந்து எடுக்க கடினம் ..இல்லைன்னா நானும் எழுதத்தான் நினைத்தேன்
      இதில் தற்போது பாலாஜியா /நித்யாவா narcissist யார் என்பது புரியாத புதிர் .பெரும்பாலான ஆண்கள் chauvinist தான் அதில் பாலாஜியும் விதிவிலக்கில்லை .அதோட மியாவ் எனக்கு எப்பவும் முரட்டுத்தனமா புன்னகையற்ற கடின முகங்களை பிடிப்பதில்லை :) பிரிதல் கூட புன்னகையுடன் பிரியனும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து .

      Delete
    12. /இவர்களின் பிரச்சனை பற்றி ஒரு போஸ்ட்டே போடலாமோ என எண்ணி, பின்பு நமக்கெதுக்கு ஊர் வம்பு என விட்டு விட்டேன்.. //
      தயங்காம போடுங்க வீட்டுக்குள் நாலுசுவருக்குள் நடந்தா நாம் பேசக்கூடாது அதான் பொதுவெளியில் வந்தபின் நாம் நம் கருத்தை சொல்வதில் தவறில்லை

      Delete
    13. //ஒரு குழந்தையை அதன் தந்தை /தாயிடம் இருந்து பிரிப்பது கொடுமை :( //

      இது முழுக்க முழுக்க நித்தியாவின் தவறுதான், அத்தோடு இவ தந்தை மகள் பற்றியும் தப்பாக ஒரு இண்டவியூ குடுத்திருந்தா யூ ரியூப்பில்.. அதுவும் வேணுமென்றே குடுத்தா என்றே எனக்குப் படுது... தந்தையைப் பார்க்க விடாமல் தடுத்தது மிகப் பெரிய தப்பு, ஆனா அதை ஏன் முறியடிச்சு குழந்தையைப் பார்க்க அவர் முயற்சிக்கவில்லை எனவும் எண்ணுகிறேன்.

      //இவங்க சேரட்டும் சேராம போகட்டும் ஆனா அந்த குழந்தை நிலை பரிதாபத்துக்குரியதே :(//

      இது நிஜம்தான், ஆனா அவர்களுக்குள்ளும் மனம் முறிந்து விட்ட்டது எனில் ஒட்ட வைப்பது மிகக் கஸ்டம்தான்... குழந்தையை வெளிநாட்டுக் குழந்தைகள்போல இருவரும் பங்கு போட்டு கவனிக்க வேணும்..

      Delete
    14. //அதோட மியாவ் எனக்கு எப்பவும் முரட்டுத்தனமா புன்னகையற்ற கடின முகங்களை பிடிப்பதில்லை :) பிரிதல் கூட புன்னகையுடன் பிரியனும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து .//

      இது உண்மைதான் அஞ்சு, ஆனா சூடாக இருக்கும்போது புன்னகை வராதுதானே, பிரிந்து கொஞ்சக் காலம் போனதும் நிறைய விசயங்கள் மறக்கப்பட்டுவிடும், அப்போது பார்க்கும்போது கோபமின்றிப் புன்னகைப்பார்கள் என நினைக்கிறேன்.

      இங்கு மகனின் அவோர்ட் செரிமனியில் பார்த்தேன், பிரிந்து பல வருடங்களாக, தமக்கு தமக்கென கேள்பிரண்ட்டோடும் போய் ஃபிரெண்ட்டோடும் வாழும் ஒரு - பழைய தம்பதி, தம் மகனின் அவொர்ட் செரிமனிக்கு, இருவரும் கணவன் மனைவிபோல பேசிச் சிரிச்சுக் கொண்டு ஒன்றாக வந்து ஒன்றாக இருந்து பார்த்து விட்டுப் போனார்கள்.. இதுதான் வெள்ளைகளின் மனம், நம் நாட்டவர்கள் இப்படிப் போக்குக்கு விட்டிடுவோமா?.. சிரிச்சால்கூட பழைய மனைவியைப் பார்த்துச் சிரிச்சாயா என சண்டைக்கு வந்திடுவினமே ஹா ஹா ஹா.

      //தயங்காம போடுங்க வீட்டுக்குள் நாலுசுவருக்குள் நடந்தா நாம் பேசக்கூடாது அதான் பொதுவெளியில் வந்தபின் நாம் நம் கருத்தை சொல்வதில் தவறில்லை//

      ஹா ஹா ஹா அது உண்மைதான், மக்கள் இதுபற்றி என்ன நினைக்கிறார்கள் என கேட்கும் ஆர்வம் இருந்துது ஆனா இப்போ பேசியாச்சு இனி என்ன இருக்கு.. விட்டிடலாம்:).. நன்றி அஞ்சு..

      Delete
  25. விளையாட்டுக்குச் சொன்னாலும் (இல்லை, சீரியஸாகத்தான் சொல்லி இருக்கிறீர்களோ!) தோட்டத்தை மெயின்டெயின் செய்வது எல்லாம் பெரிய வேலை. ரொம்பப் பொறுமை வேண்டும். அதே சமயம் ஆரோக்கியத்துக்கு(ம்) நல்லது.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா விளையாட்டாகத்தான் நான் எந்த வேலையையும் எடுத்துச் செய்வேன்... பயிர்கள் முளைத்தபின் பராமரிப்பதென்பது கஸ்டம்தான். தண்ணி அடிக்க வேணும், இடையே வளரும் புல்லு பூண்டைப் பிடுங்கோணும்.. நத்தைக் குட்டிகள் ஸ்லக் பிள்ளைகளிடமிருந்து பாதுகாக்கோணும்.. ஒரு வித பூச்சியும் பறந்து வந்து கோவா இலைகளைக் கடிச்சிடுதே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா. இடைக்கிடை மழை வருகின்றமையால் நன்றாகவே போகுது விவசாயம்:))..

      உண்மைதான், ஜிம் க்குப் போகத் தேவையில்லை.. இதிலேயே குனிஞ்சு நிமிந்து வேலை செய்தால் போதும்.. முக்கியமா மனதுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும்... அதைப் பார்த்துப் பார்த்து ஒரு 100 படங்களாவது எடுட்த்ஹிருப்பேன், பின்பு கஸ்டப்பட்டு எடிட் பண்ணி சிலதை இங்கு பகிர்கிறேன்ன் ஹா ஹா ஹா.

      Delete
  26. அங்கெல்லாம் மண்வாகு நல்லா முளைக்கும் போலிருக்கு. எங்க தோட்டம் பாறை மண். ரொம்பக் கஷ்டம்.

    வளர வளர படிப்படியாய் அழகாய் படம் எடுத்திருக்கிறீர்கள். உருளைக்கிழங்கு இலைகளை சமைக்க மாட்டார்களோ...

    ReplyDelete
    Replies
    1. இல்லை ஸ்ரீராம் உருளை இலை யில் நச்சு இருக்கு சாப்பிடக்கூடாது சொலானின் பாய்சனிங் ஆகிடும்

      Delete
    2. ஸ்ரீராம், நாம் இந்த மண்ணை நம்புவதில்லை, உரமண் பெரிய பெரிய பாக் குகளில் கிடைக்குது... லீட்டர் கணக்கில் போட்டிருக்கும்.. 20 லீட்டர் 3..4 பவுண்டுகள் அப்படி வரும்.. அதில் நிறைய வாங்கி கொட்டித்தான் அதில் நடோணும்.. நீங்களும் அப்படித்தான் செய்யோணும்.. பலகையால் பெட்டிபோல அடித்து ரெடிமேட் பெட்டிகள் விக்குது, அதில் வெங்காயம் நட்டிருக்கிறேன் பாருங்கோ மேலே.

      அப்படி பெட்டி நாமும் செய்யலாம், அதில் பசளை மண் நிரப்பி அதுக்குள் நட்டால், புழு பூச்சியும் குறைவாக இருக்கும், பயிரும் நன்கு வரும், மற்றும்படி சாதாரண மண்ணில் இப்படி எதிர்பார்க்க முடியாது, ஆனாலும் இங்கத்தைய மண் கறுப்பு நிற பசளை மண்போலவேதான் இருக்கு.

      Delete
    3. //வளர வளர படிப்படியாய் அழகாய் படம் எடுத்திருக்கிறீர்கள்//
      என் தொழிலே அதுதானே ஹா ஹா ஹா. எங்கள் அப்பா அம்மா விவசாயிகள் இல்லை:) ஹா ஹா ஹா ஆனா அவர்களின் மூன்று பிள்ளைகளும் இப்படி விவசாயம் செய்வதில் பிரியர்கள். நமக்கு இங்கு காலநிலை சரியில்லை, ஆனா அண்ணன் அக்கா வீட்டில் பாவக்காய் கத்தரி கீரை மணத்தக்காளி பிசுக்கு வெண்டி.. இவை எல்லாம் அளவு கணக்கில்லாமல் காய்க்கும்... ஒரு கத்தரியிலயே 25, 30 காய்கள் வந்திருக்குமாம்.. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:)).. எனக்கு இங்கு மிளகாய் பிஞ் வந்திருக்குது பார்த்தால் சிரிப்பீங்க ஒரு செண்டிமீட்டரில் இருக்கு:)..

      அஞ்சு சொன்னதைப்போல உருளை இலை நஞ்சாம். ஆரம்பம் நானும் இலையைச் சுண்டலாமே என விசாரிச்ச இடத்தில் அறிஞ்சேன் அது நஞ்சென.. ஆனா பூசணி இலைகள் சுண்டலாமாம் நல்ல சுவையாம் அக்கா வீட்டில் சுண்டினார்களம்.. கேள்விப்பட்டதும் விடுவேனோ நான், வாங்கி நட்டிருக்கிறேன் இபோதானே 5 குட்டி இலைகள் வந்திருக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
  27. இடைவேளையில் சொல்லி இருக்கும் தகவல் உபயோகமானது. மிக உபயோகமானது. சிறிதும், பெரிதுமாக பிரச்சனைகள் மாறி மாறி வந்தால் என்ன செய்ய...

    ReplyDelete
    Replies
    1. //சிறிதும், பெரிதுமாக பிரச்சனைகள் மாறி மாறி வந்தால் என்ன செய்ய..//

      ஹா ஹா ஹா ஹையோ ஸ்ரீராமுக்கு மட்டும் ஏன் இப்பூடி ஆகுதூஊஊஊஊ?:))... அடிக்கடி கெட்டப்பை மாத்திட வேண்டியதுதேன்ன்ன் ஹா ஹா ஹா:)

      Delete
  28. வெங்காயத்தாள் போட்டு எங்கள் வீட்டில் எந்தச் சமையலும் செய்ததே இல்லை. வெங்காயம் பூண்டே அசைவம் என்று கருதி வந்த பாஸை மிரட்டி, உருட்டி இப்போதுதான் சில வருடங்களாக அவற்றுக்குப் பழக்கி வருகிறேன். இதில் தாள் வேறா? ஊ... ஹூம்... சான்ஸே இல்லை!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராம் ....சிரித்துவிட்டேன்....

      கீதா

      Delete
    2. ///வெங்காயம் பூண்டே அசைவம் என்று கருதி வந்த பாஸை மிரட்டி, உருட்டி இப்போதுதான் சில வருடங்களாக அவற்றுக்குப் பழக்கி வருகிறேன்///

      ஹா ஹா ஹா அப்போ நீங்களும் பொஸ் ஐ மிரட்டுவீங்க என மறைமுகமாகச் சொல்லுறீங்க ஹா ஹா ஹா... வெங்காயப் பூ வாங்கிக் குடுங்கோ.. அது பூத்தானே ஜமாளிச்சிடலாம் ஹா ஹா ஹா கீதாவும் சிரிக்கிறா..

      Delete
  29. மிக்சியின் தத்துவம் சிரிக்க வைத்து விட்டது.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் எப்படி எல்லாம் சிந்திக்கிறார்கள்.. ஒரு சாதாரண விசயத்தை நகைச்சுவையாக்கி கருத்தோடு சொல்கின்றனர்:))

      Delete
  30. ஊசிக்குறிப்பு ஒரு பழைய ஜோக்கை நினைவுபடுத்துகிறது. ஒரு நேர்காணலில் கஷ்டம் மேல் கஷ்டமாகச் சொல்லி இப்படிக்கு கற்பனை செய்து கொள்ளுங்கள், இவற்றிலிருந்து எப்படி மீள்வீர்கள்? என்று கேட்டபோது ஒருகட்டத்தில் கற்பனையை நிறுத்தி விடுவேன் என்று சொன்ன ஜோக்!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நல்ல ஜோக் அப்போ வேலை கிடைச்சிருக்காதே ஹா ஹா ஹா...

      மிக்க நன்றிகள் ஸ்ரீராம் அனைத்துக்கும்.

      Delete
  31. அதிரா... இரண்டாவது படத்தில் இடது புறம் இருப்பது, ட்ராம்போலினா? (உடனே நீங்கள், ஒரு நண்பி வீட்டில் பர்த்டே பார்ட்டியில் நடந்ததைச் சொன்னது நினைவுக்கு வந்தது... விருந்துக்கு வந்த குழந்தையின் பெற்றோர் வழக்குப் போட்டு பணம் வாங்கினது)

    ReplyDelete
    Replies
    1. அது ட்ராம்போலின் மாதிரியா இருக்கு நெல்லை? ம்ம்ம் இருக்கலாம்...நாம் சின்ன வயசுல நார்கட்டில் இருக்குமே அதுல துள்ளி விளையாடினது நினைவுக்கு வருது. நல்ல ஸ்ட்ராங்க் போர்வையை ரெண்டு மரத்துக்கு இடைல கட்டி அதுல ஊஞ்சல் துள்ளல், விழுந்து அடி என்று... இப்ப அதுவே இப்படி வர ஆரம்பிச்சுருக்கு...சென்னைல நுங்கம்பாக்கத்துல இண்டொர் ட்ராம்பொலின் பார்க் வந்துருச்சே...

      கீதா

      Delete
    2. ஹா ஹா ஹா ட்றம்பொலின் தான் நெ.தமிழன்.. அதுபற்றி அன்று நிறையப் பேசினோமே.. நீங்க கூட எங்கட வீட்டின் பெறுமதி கேட்டீங்க நஷ்டைஇடு கேட்கும் ஐடியாவில் ஹா ஹா ஹா.

      அது பல வருடங்களுக்கு முன் வாங்கியது, இப்போ கவர் கழண்டு கறள்பிடிச்சிருக்கு.. பிள்ளைகள் வளர்ந்திட்டினம் துள்ளுவதில்லை, டெய்சிதான் துள்ளுவா.. ஸ்லீப் பண்ணுவா, நாமும் நிழல் வரும்போது அதில் படுத்திருந்து வானம் பார்ப்போம்... காலைத்தொங்க விட்டு இருக்க முடியாது, நடுவில் கொஞ்சம் பள்ளம்போல இருக்கும் அதனால விழுத்தும்..

      Delete
  32. உங்கள் உருளைக்கிழங்கு செடிகளைப் பார்த்ததும், எனக்கு கொடைக்கானலில், உருளைச் செடிகளைப் பார்ப்பதற்காக வண்டியை நிறுத்தச் சொன்னதும், அங்கேயே இன்னொரு இடத்துக்குச் சென்று புத்தம் புதிய உருளைக்கிழங்குகளைத் தோண்டி எடுப்பதைப் பார்த்ததும் நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
    Replies
    1. உருளைக் கிழங்குகளை தோண்டி எடுத்தவையோ? மரத்தை அப்படியே பிடுங்கி எல்லோ எடுப்பார்கள். பெரிய ஃபாம் களில் மெசின் அப்படியே கிளறிக்கொண்டு போகும், கிழங்குகள் மேலே வந்திருக்கும்...

      அப்படி ஒரு ஃபாம் க்கு நாஅமும் போனோம், மெசின் கிளறக் கிளற.. பார்த்டு செலக்ட் பண்ணிப் பெறுக்கி எடுத்தோம் ஹா ஹா ஹா..

      மிக்க நன்றிகள்.

      Delete
    2. //பார்த்டு செலக்ட் பண்ணிப் பெறுக்கி எடுத்தோம் // - சொல்லாதீங்க. எனக்கு பச்சைக் காய்கறி, ஃப்ரெஷ் காய்களில் ஒரு கிரேஸ். உருளையை எடுக்க எடுக்க, அப்படியே வாணலியில் போட்டு காரமா ரோஸ்ட் செய்து, தயிர் சாதத்துடன் சாப்பிட்டால்.... ஆஹா. வேறு எதுவும், அதாவது, ஒடியல் கூழ், குழை சாதம், வறை/பிறை, சுண்டல் என்று எதுவும் வேண்டாம் ஹா ஹா ஹா.

      Delete
    3. அது உண்மையேதான் நெல்லைத்தமிழன், உடனே பிடுங்கி வந்து சமைப்பதில் இருக்கும் சுவையே தனிதான். அதுவும் நம் கார்டினில்.. இரசாயன உரமேதுமில்லாமல் விளைவது இன்னும் சுவையாக இருக்கு.

      இங்கு யூகேயில் சரே என்னும் இடத்தில் பென்னாம் பெரிய வெஜ் கார்டின் இருக்கு.. அங்கு 2,3 தடவைகள் போயிருக்கிறோம்.. காரிலேயே ட்றைவ் பண்ணிப் பண்ணி உள்ளே போகோணும்.. போகப் போக எல்லா மரக்கறிகள் பழங்கள் பெரிய ஏரியாவில் போடப்பட்டிருக்கும்.. நாம் விரும்பும் தோட்டத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கிப் போய், அங்கு பாக் இருக்கும், அதில் நமக்குத் தேவையானதை பறித்து எடுத்து வந்தால், முடிவில் வெளியே வரும் இடத்தில் சும்மா சும்மா செக் பண்ணி விட்டு பில் போட்டு விடுவார்கள் பயங்கர மலிவு, எதுவும் செக் பண்ண மாட்டார்கள் அவ்ளோ நம்பிக்கை, நாம் குடுக்கும் பாக் களையே நெறுத்து பில் போடுவினம்.

      அங்கு உள்ளே வயிறு நிரம்பும்வரை எவ்ளோ பழங்கள் வேண்டுமெண்டாலும் பறிச்சு உண்ணலாம், கேட்க பார்க்க ஆட்கள் இல்லை. அனைத்து பெரீஸ் உம் பழுத்துக் குலுங்கும்...

      இந்த லிங்கில் இருக்கு கொஞ்சப் படங்கள் பாருங்கோ.

      http://gokisha.blogspot.com/2014/11/blog-post_10.html

      Delete
    4. அந்தப் பக்கத்தில் இந்தப் பின்னூட்டம் இட முடியலை.

      இதை ஏற்கனவே படித்திருக்கிறேன். உங்க படங்களை (அல்லது உறவின் படங்களை) அழித்திருக்கிறீர்கள்.

      எனக்கு இந்த மாதிரி கார்டனுக்குப் போகணும் என்று ரொம்ப ஆசை (கனடாவில் ஸ்டிராபெர்ரி, ஆப்பிள், ஆரஞ்சுத் தோட்டங்களிலும் இதுபோல் வாசலில் பை வாங்கிவிட்டு, பறித்து எடுத்துக்கொண்டு வரலாம், உள்ளே எவ்வளவுனாலும் இலவசமா சாப்பிடலாம் என்பது போல் படித்திருக்கிறேன், சென்றவர்கள் அவர்கள் அனுபவத்தைச் சொல்லியிருக்கிறார்கள்).

      நம்ம ஊரில் (இந்தியாவில்) இதனைச் செய்தால், மக்கள், '100 ரூபாய் கொடுத்திருக்கிறோமே' என்று 1000 ரூபாய்க்கு தோட்டத்திலேயே வீணாக்கிவிடுவார்கள்.

      வாழ்க்கைல இந்த மாதிரி தோட்டங்களுக்குச் செல்லும் வாய்ப்பு வருமா என்று பார்ப்போம்.

      Delete
    5. இந்தியாவிலும் காஷ்மீர் ஆப்பிள் தோட்டங்களில் எவ்வளவு வேண்டுமானாலும் பறித்து அங்கேயே உண்ணலாம். நாங்க குஜராத்தில் இருக்கையில் ஒரு முறை அலுவலக நண்பர்கள் குடுமபங்களோடு பிக்னிக் சென்றோம். அங்கே ஒரு கிராமத்தில் இம்மாதிரிக் காய்கள் போடும் வயல். கத்திரியும், வெண்டையும், பச்சை மிளகாயும், பீன்ஸும் காய்த்துக் குலுங்கின. வயல் சொந்தக்காரர் வயலைச் சுத்திக் காட்டிட்டு வேணும் என்பதைப் பறிச்சுக்கச் சொன்னார். நாங்க பறிச்சால் சரியா வராதுனு அவங்களையே பறிச்சுத் தரச் சொல்லி வாங்கி வந்தோம். சிலர் அவங்களே பறிச்சும் எடுத்துக் கொண்டாங்க! இது சுமார் 20 வருடங்கள் முன்னர்.

      Delete
    6. //நம்ம ஊரில் (இந்தியாவில்) இதனைச் செய்தால், மக்கள், '100 ரூபாய் கொடுத்திருக்கிறோமே' என்று 1000 ரூபாய்க்கு தோட்டத்திலேயே வீணாக்கிவிடுவார்கள்.//

      இங்கும் சிலர் அப்படிச் செய்கிறார்கள் நெ.தமிழன், கீரைத்தோட்டத்தில் அப்படியே நடுவில் உளக்கிச் சென்று நல்ல குருத்தாக பார்த்து எடுக்கிறார்கள். கண்டபடி பிடுங்கி எறிகிறார்கள் சரியில்லை என.

      பீன்ஸ் கன்றுகளை எல்லாம் உளக்கி உளக்கி நடுவே சென்று பிடுங்குகிறார்கள். சோளனை உடைச்சு பாதியை பச்ச்ச்சையாக் கடிச்சுப் போட்டு வீசியிருந்தார்கள்.. இந்த வேலை செய்வது வெள்ளைகள் இல்லை... வெளிநாட்டவரே...

      Delete
    7. இப்பவும் அங்கு இருக்கும் கீசாக்கா, தேடிப் பார்த்தால் கிடைக்கும்.

      Delete
  33. படங்கள் எல்லாம் சூப்பர் அதிரா. உங்க ஊரில் நன்றாக வளர்கின்றதே. கேரளத்தில் எங்க வீட்டிலும் நன்றாக வளரும். (கீதா...இங்கெல்லாம் பெரும்பாடு அதிரா. செடிகள் வளர்ப்பது. அதுவும் ஃப்ளாட்டில் பால்கனியில் சிறிய இடத்தில் சிறிய தொட்டிகள் என்று....எதுவும் சரியாக வருவதில்லை. பெரண்டை நல்லா வருது. மத்தபடி ஒரே ஒரு முறை கீரை நன்றாக வந்தது அப்புறம் வருவதில்லை...இப்போது மீண்டும் முயற்சி செய்யறேன். பார்ப்போம்...)

    துளசி: வெங்காயத்தாள் இப்படித் தனியாகச் செய்ததில்லை வீட்டில்.

    கீதா: செய்ததுண்டு. பொரியல் என்போம் நீங்கள் சுண்டல் என்பீர்கள்....நல்ல டேஸ்டியாக இருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா, துளசி அண்ணன் வாங்கோ..

      பால்கனியில் வருமே கீதா. அங்குள்ள வெதருக்கு.. எங்களுக்கு இங்கு பிரசனையே குளிர்தானே, போதிய வெயில் எனில் நன்றாக வரும் எல்லாம். கீரை வகைகள், மிளகாய், தக்காளி, கத்தரி எல்லாம் சாடியில் வளரும் அழகா.. முயற்சி பண்ணுங்கோ.

      மிக்க நன்றிகள் துளசி அண்ணன்.

      Delete
  34. படங்கள் எல்லாம் செமையா இருக்கு. தள தளனு செடிகள் நல்லாருக்கு அதிரா...உருளை எல்லாம் நன்றாக வந்திருக்குது.

    மண்ணும் சூப்பரா இருக்கே. தண்ணீரும் நன்றாக இருக்கிறது இல்லையா. இங்கு தண்ணீரும் பிரச்சனைதான்...மண்ணும் பிரச்சனைதான். சூப்பர் தோட்டம் சூப்பர் விவசாயி...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மேலே ஸ்ரீராமுக்கு சொல்லியிருக்கிறேன் கீதா, பசளை மண் வாங்கிப் போடுவோம். மழை இடைக்கிடை எட்டிப் பார்த்து ஆகவும் சூடாக விடாமல் குள்ர்வித்து விட்டுப் போகிறது இம்முறை:)..

      தண்ணிப் பிரச்சனை இல்லை, கையில் எடுத்து தண்ணி ஊத்துவதற்கும் ஹோஸ் பைப்பால் அடிப்பதற்கும் நிறைய வித்தியாசம் தெரியுது. ஹோஸ் பைப்பால் அடிச்சால் ஒரு இஞ்சி கூட வளருது பயிர்கள்.. ஹா ஹா ஹா.

      Delete
  35. அந்தக் குட்டி ஞானி சொல்லியிருப்பது அருமை...பின்ன பிரச்சனைகள் அதிகமானால் என்ன செய்வதாம் மனதை ஞானியாக்கிக் கொள்ள வேண்டியதுதான் ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அதனாலதானே மீ ஞானியாகவே இருக்கிறேன்:)

      Delete
  36. உங்கட வீட்டு வெங்காயத்தாள் அறுவடை சூப்பரா இருக்கு அதிரா...நானும் இங்கு போட்டுருக்கேன் வருதானு பார்ப்போம். இப்ப கறிவேப்பிலை நன்றாக வருகிறது. ஆனால் பெரிய மரமாகுமா இந்தச் சிறிய தொட்டி அதைத் தாங்குமா தெரியலை...அதுவும் பார்க்கணும்...இப்பவே தொட்டி கொஞ்சம் பிளந்திருக்கு சைடில்...ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வெங்காயம் பிரச்சனை இல்லை கீதா, நன்றாக வரும்.

      கறிவேப்பிலை இங்கு சிலர் சாடியில் வளர்க்கிறார்கள், அது சாடியின் அளவைப் பொறுத்தே வளரும், சாடியை எல்லாம் உடைக்காது கர்ர்ர்ர்ர்ர்:) அது நீங்க ஏதும் தட்டியிருப்பீங்க அதனால சாடி உடைஞ்சிருக்கும். மாற்றி இன்னொரு சாடியில் வையுங்கோ வளரும்.

      Delete
  37. முதல் படத்தில் பூஸார் தண்ணீரில் குப்பி புலி cub ஆகத் தெரிகிறாரே....ஹா ஹா ஹா ஹா ஹா

    ஆண்டவனின் தோட்டத்தில் பாடல் அருமை....ரொம்ப நாளாச்சு கேட்டு

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //ரொம்ப நாளாச்சு கேட்டு//

      நானும்தான் கிட்டத்தட்ட மறந்தே போயிருந்தேன்ன்..

      மிக்க நன்றிகள் கீதா.

      Delete
  38. /believe in yourself//

    மிக அருமையான தத்துவம் கென்னடி தாத்தா கூட அடிக்கடி சொல்வார்னு படிச்சிருக்கேன் .

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ..

      ஆவ்வ்வ் அப்போ நீங்களும் அக்றீ வித் மீஈஈஈஈ:))

      Delete
  39. அதிரா இந்த வெங்காயத் தாளை மிக்ஸட் வெஜிடபிளாகவும் செய்யலாம் (ஃப்ரைட் ரைஸ்ல கூடப் போடுவோமே..அது போல...) வெறும் உருளைக் கிழங்கு வதக்கிச் செய்வோமில்லையா அதோடும் போடலாம்....சாம்பாரில் போடலாம் நல்லாருக்கும். அந்த அடி வெங்காயமும் சேர்த்துத்தான்...சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள க்ரேவியும் செய்யலாம்....எங்கள் வீட்டில் அது முளைத்தால்...சரி சொல்லலை...சொல்லிட்டுச் செய்ய முடியாமல் போனால்..ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஸ்பிறிங் ஒனியன் எனக் கிடைக்குதே கீதா, அதைத்தான் இங்கு அனைத்துக்கும் தூவுவார்கள்.. எனக்கது பிடிப்பதில்லை.. எனக்கு இப்படி வெங்காயத்திலிருந்து வரும் தாளை பூவை சுண்டல் செய்யவே விருப்பம். ஓ நீங்க சொன்னதுபோல கிரேவியாகவும் செய்யலாம்தான்..

      //வீட்டில் அது முளைத்தால்...சரி சொல்லலை...சொல்லிட்டுச் செய்ய முடியாமல் போனால்.//

      இல்ல அது நன்கு வரும் நீங்க செய்து போஸ்ட்டாகவே போடுங்கோ.

      Delete
  40. பூ வந்து காய்ந்து வீழ்த்திம்போதும் அறுவடை துவங்கலாம் இலைகள் காய்ந்து விழும்போதும் உருளை அறுவடைக்கு தயார்னு அர்த்தம் .
    நான் கன்டெய்னரில் நாலு கிழங்கு நட்டு அறுவடை செஞ்சிட்டேன் பேபி பொடேடோஸ் மற்றும் நார்மல் வெரைட்டி .ஏற்கனவே ரெண்டு முறை படம் போட்டதால் டைரக்டா சமைச்சிட்டேன் .

    உங்க தோட்டத்துக்கு ஸ்லக்ஸ் ஸ்நெயில்ஸ் வராதா ?இங்கே அவங்க உலாவறத்தால் நான் தோட்டம் போடறதை நிறுத்திட்டேன் .

    ReplyDelete
    Replies
    1. //இலைகள் காய்ந்து விழும்போதும் உருளை அறுவடைக்கு தயார்னு அர்த்தம் .//

      எனக்கு என்னமோ பயமாக இருந்தது அஞ்சு, அதனால பூக்கள் வந்ததும் பிடுங்கிட்டேன். ஏனெனில் போனதடவை இலைகள் பழுக்கும்வரை விட்டுவிட்டு இழுத்தால் பாதிக் கிழங்கு, மாத்தன்மை வற்றி தண்ணியாகி விட்டது.

      ///உங்க தோட்டத்துக்கு ஸ்லக்ஸ் ஸ்நெயில்ஸ் வராதா ?இங்கே அவங்க உலாவறத்தால் நான் தோட்டம் போடறதை நிறுத்திட்டேன் .//
      நிலவுக்குப் பயந்து பரதேசம் போன கதையாவெல்லோ இருக்குது இது ஹா ஹா ஹா.. இந்நாட்டில் பேமஸ் ஸ்லக்ஸ்ஸ் அண்ணாசும்.. நத்தைக் குட்டீசும்தானே.. ஆனா அதுக்காகவே பயிரின் இடத்தை சுற்றியுள்ள பலகை முழுவதும் ஸ்னோ உப்பைத் தூவி விட்டுவிடுவேன்.. அவர்கள் கிட்ட வரமாட்டினம், முட்டைக்கோதைப் போட்டாலும் வர மாட்டினம், அதை மீறி வந்தால் அப்படியே கெஞ்சி கூத்தாடி ஆரையாவது கூப்பிட்டு லபக்கெனத் தூக்கி புல்லோடு புல்லாக கிரீன் பின்னில் போட்டு அனுப்பி விடுவேன்.. ஆனா இம்முறை சரியான வெயில் எல்லோ அதனால அவர்களைக் காணவே இல்லை... சரியான ஆச்சரியமாகவே இருக்கு.

      Delete
  41. மிக்ஸியின் தத்துவம் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா.....செம....அதிரா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா வீட்டில் இருக்கும் மிக்‌ஷிக்குள்ளேயே ஒரு தத்துவத்தைக் கண்டுபிடிச்சிருக்கினம்... அதிராவுக்குள் ஞானியைக் கண்டு பிடிச்சதைப்போல:)) ஹா ஹா ஹா ஓகே ஓகே ஏதோ ஒரு ஃபுளோல வந்திட்டுது அமைதி... அமைதி:)))

      Delete
  42. ஒரு வெங்காயச்செடியை அப்படியே விட்டு வைங்க அது பூ பூக்கும் பெரிசா வந்தது நான் வைச்சப்போ அதிலிருந்து விதையும் காய்ந்து வந்ததே

    ReplyDelete
    Replies
    1. ஓம் அஞ்சு தப்பு பண்ணிட்டேன்.. கீதை விதைக்கும் அவாவில் டக்கென மிகுதியையும் பிடுங்கி விட்டேன்.. இனி அடுத்தமுறைதான். ஓ வெங்காய விதை நான் இதுவரை கண்டதில்லையே... பூ வந்தவுடன் சுண்டல் செய்திடுவேனெல்லோ ஹா ஹா ஹா.

      Delete
  43. நான் இதுவரைக்கும் வெங்கயத்தாளில் இப்படி செஞ்சதில்லை ஆனா லீக்ஸ் செஞ்சிருக்கேன் வித் பொட்டேடோஸ் .
    எங்க வீட்ல FRIED ரைஸுக்கு கட்டாயம் வெங்காயத்தாள் சேர்ப்பேன்

    ReplyDelete
    Replies
    1. லீக்ஸ் மற்றும் அனைத்து இலைகளிலும் செய்யலாம்.. ஆனா அதென்ன அது பொட்டாட்டோவுடன் செய்வது? புதுசா இருக்கே.. நீங்க சொலுவது ஸ்பிறிங் அனியன்ஸ் தானெ.. இது அதுவல்ல அஞ்சு இது வெங்காயம் கிடைப்பதன் இலைகள் எல்லோ.. இலைகள் காயமுன் நான் பிடுங்கி விட்டேன், உண்மையான வெங்காய அறுவடை எனில், இலைகள் எல்லாம் காய்ஞ்சு வைக்கோல் போல ஆனதும்தான் பிடுங்குவார்கள்.

      Delete
  44. //வாழ்க்கை யதார்த்தமானது.. கற்பனை நினைவுடனேயே நின்று விடுகின்றது:(//

    முதல் பட QUOTE க்கும் இந்த ஊசிகுறிப்புக்கும் பொருந்தலையே :)
    பிலீவ் இந்த யுவர் ஸெல்ப் :)

    ReplyDelete
    Replies
    1. பிலீவ் இn யுவர் ஸெல்ப் :)

      Delete
    2. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நோ குரொச் குவெஷன்ஸ் பிளீஸ்ஸ்ஸ்:)) ஹா ஹா ஹா இல்ல முதலாவதை முயற்சி என எடுத்துக் கொள்ளலாம்.. இரண்டாவதாக சொன்னது வெறும் கன்னாபின்னாக் கற்பனைகள்:).. அதாவது நடக்கவே நடக்காது என்பதனைக்கூட மனம் கற்பனை பண்ணித் தொலைக்குமெல்லோ அதைத்தான் குறிப்பிட்டேன்.

      Delete
  45. /வாழ்க்கை யதார்த்தமானது.. கற்பனை நினைவுடனேயே நின்று விடுகின்றது:(//

    நினைவுடன் நிற்பதும் நல்லதே .எதார்த்தத்தை சிலநேரம் மனசு ஏற்றுக்கொள்ள கஷ்டப்படும் .

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான், இப்போ நமக்கு மரணம் எப்போ எனத் தெரியாது, அது நாளைக்காகக் கூட இருக்கலாம், ஆனா அதைத்தெரியாமல் நாம் வருகிற மாதம் என்ன பண்ணுவோம் என்றெல்லாம் கற்பனையை வளர்க்கும்போது கடவுள் சிரிப்பார் ஹாஅக் ஹாக் ஹாஅக்க்க்க் என:).. ஆனா கற்பனை என்ற ஒன்று இருப்பதினாலதான் பல சமயம் நம்மால் உயிர்வாழவும் முடிகிறது என்பதும் உண்மையே:))..

      மிக்க நன்றிகள் அஞ்சு.

      Delete
  46. இந்தத் தோட்டங்கள் எல்லாம் எழுபதுகளில் இருந்து ஆரம்பித்து தொண்ணூறுகள் வரை ராஜஸ்தான் , குஜராத், அம்பத்தூர் வீடு ஆகிய இடங்களில் போட்டாச்சு. வெங்காயத் தாள் நான் ஃப்ரைட் ரைஸ் செய்யவே அதிகம் பயன்படுத்துவேன். இம்மாதிரி வதக்குவதோடு கூட ஏதேனும் காய்கள் சேர்த்துச் சப்பாத்திக்குத் தொட்டுக்க சைட் டிஷாகவும் பயன்படுத்துவேன். உருளைக்கிழங்கெல்லாம் கிலோ கணக்கில் அறுவடை செய்திருக்கோம். வெண்டை, கத்திரி,பச்சை மிளகாய், பீர்க்கை, பூஷணி, பறங்கி, முள்ளங்கி என எல்லாமும் போட்டிருக்கோம். அது ஒரு கனாக்காலம்! :))))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ..

      ஓ அப்போ கீசாக்கா முன்னாள் விவசாயி ஹா ஹா ஹா... உண்மைதான் எப்பவுமே கடந்த காலம் இனிமையானதாக இருக்கும்.. ஆனா இன்று என்பதும் நாளைக்கு யோசிக்கும்போது கடந்தகாலம்தான்.. இருப்பினும் இன்று இருப்பதை ஹப்பியாக எண்ணாமல் பழையதைத்தான் எப்பவும் மனம் ஹப்பியாக நினைக்கும்.

      நம் போட்டோக்கள்கூட அப்படித்தானே.. பழைய படத்தைப் பார்த்தே அதிகம் மகிழ்வோம்ம்.. ஆவ்வ்வ் அந்நாளில் எப்படி அழகாக இருக்கிறேன் என, ஆனா இன்னும் இரு வருடத்தால் இன்றைய படத்தைப் பார்த்தும் அப்படித்தான் நினைப்போம்.. பட் இன்று அப்படி எண்ண வராது.. இதுதான் மனித மனம் ஹா ஹா ஹா.

      Delete
  47. ஹூஸ்டனில் மருமகள் போட்டிருந்தாள். அங்கேயும் சில காய்கள், மிளகாய், குடமிளகாய் , தக்காளி போன்றவை வந்தன. மெம்பிஸில் பொண்ணு வீட்டில் புடலங்காயும், பாகல்காயும் போட்டுக் காய்த்துத் தள்ளியதில் அக்கம்பக்கம் தெரிந்தவர்களுக்குக் கொடுத்தும் மிஞ்சிப் போய் இந்தியன் ஸ்டோர்ஸில் கொடுத்து வேறு இல்லாத காய்களை வாங்கிக் கொண்டோம்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கேட்கவே ஆசையாக இருக்கு.. வெதர் நல்லதெனில் அப்படித்தான் கீசாக்கா. எங்கள் அக்காக்களும் அப்படித்தான், கோயிலுக்கு அன்னதானத்துக்குக்கூட இவர்கள் மரக்கறிகள் குடுப்பினம் கனடாவில் ஹா ஹா ஹா. அண்ணன் தூதுவளை வளர்த்து நமக்கு நிறைய இலைகள் தந்தவர் எனச் சொன்னேனெல்லோ...

      Delete
  48. புலியூரார் சொன்னதும் இடைவேளைத் தத்துவமும் நன்றாகவே இருக்கு! :)))) மிக்சி பத்திச் சொன்னது சிரிக்க வைத்தது.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா எனக்குக் கிடைப்பதில் பிடித்தவற்றை சேமித்து வைத்து இங்கு பொட்டு விடுவேன். மிக்க நன்றிகள்.

      Delete
  49. அடடா அதிராவும் விவசாயிதான் பாருங்கோ !

    அவங்களே விளைவித்து அவங்களே உண்கிறார்கள்
    அஞ்சு கீதா சகோவுக்கெல்லாம் ஒரு பார்சல் அனுப்பி இருந்தால் நல்லா இருந்திருக்குமே
    !

    என்னடா கவிதையில் சொல்லாமல் இப்படிச் சொல்லிட்டுக் கிளம்புகிறான் என்று நினைக்காதீங்க உங்கள் தத்துவம் பார்த்ததும் சாமிக்கிட்ட போக மனமில்லா சாமியாராகவே போகப்போறேன் ஹா ஹா ஹா !

    ஆமா நீங்க மிக்ஸ்சி தானே ? ஏன்னா சத்தமே வராமல் இருக்கீங்க அதை சொன்னேன் ஆங் ...........

    அத்தனையும் அருமை மியாவ் வாழ்க நலம் !

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மேஜரே வாங்கோ.. என் போஸ்ட் இல்லை எனில் உங்களையும் எங்கேயும் காணக் கிடைக்குதில்லை, இப்படி ஒழுங்காக வந்து கவிதை தருவதற்கு மிக்க நன்றிகள்.

      //அடடா அதிராவும் விவசாயிதான் பாருங்கோ !//

      ஆஆஆங்ங்ங் பின்ன ஆதாரத்தோடு நிரூபிச்சிருக்கிறேன்.. இதுக்காகவே கவிதை சொல்லோணும்:)..

      //அவங்களே விளைவித்து அவங்களே உண்கிறார்கள்//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் கொடுத்தேன் ஸ்கொட்டிஸ் க்கு.. அடுத்த நாள் கூப்பிட்டு புகழோ புகழெனப் புகந்தா என் உருளைக்கிழங்கின் சுவையை. அவர்கள் பிறந்ததிலிருந்தே இருக்கிறார்கள் ஆனா ஒரு தடவைகூடப் பயிர் செய்ததில்லை, நாம் செய்யும்போது ஒவ்வொரு தடவையும் சொல்லுவா.. அடுத்த முறை நானும் ஸ்ராட் பண்ணப் போகிறேன் என .. அவ்ளோதான். இம்முறையும் சொல்லியிருக்கிறா.. நெக்ஸ்ட் இயர் ட்ரை பண்ணப் போகிறாவாம் ஹா ஹா ஹா.

      Delete
    2. ///என்னடா கவிதையில் சொல்லாமல் இப்படிச் சொல்லிட்டுக் கிளம்புகிறான் என்று நினைக்காதீங்க///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கவிதை சொல்லாமல் போகும் கவிஞரைக் கவிதையிலேயே திட்டப்போகிறேன்:))..

      //உங்கள் தத்துவம் பார்த்ததும் சாமிக்கிட்ட போக மனமில்லா சாமியாராகவே போகப்போறேன் ஹா ஹா ஹா !//

      ஹா ஹா ஹா அதுதானே எனக்குத்தேவை:) என் ஆச்சிரமத்துக்கு ஆட்கள் சேர்க்கிறேனெல்லோ:)).. நன்கொடைகள் கூச்சமின்றி வரவேற்கப்படுகின்றன:) ஹா ஹா ஹா...

      //ஆமா நீங்க மிக்ஸ்சி தானே ? ஏன்னா சத்தமே வராமல் இருக்கீங்க///

      ஒரு ஹைக்கூவை நினைக்க வச்சிட்டீங்க...

      எப்பவுமே அமைதியாக இரு
      எல்லாம் இருந்தும்
      அமைதியாகவே இருக்கும்
      நூலகம் போல:))..

      சூப்பரா இருக்குதெல்லோ. மிக்க நன்றிகள் மேஜரே.. பறவாயில்லை எப்பவும் போஸ்ட் பார்த்தவுடன் மனதுக்கு தானாகத் தோன்றும்போது டக்கெனச் சொல்லிடுங்கோ கவிதையை..

      Delete
  50. ஒரு விவசாயி சமையல் கலைஞராகப் பரிணமிப்பது இங்கே பார்க்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜி எம் பி ஐயா வாங்கோ..

      ஹா ஹா ஹா அருமையாகச் சொல்லிட்டீங்க .. மிக்க நன்றி.

      Delete
  51. Believe in yourself இதற்கு நீங்க சொன்ன விளக்கத்தை பார்த்தபோது எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம்வந்தது. ஊரில ஒருத்தர் அடிக்கடி லொத்தர் வாங்குவார். வாங்கி கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டுவிட்டு போவார். 10 லட்சம் விழவேணுமென கேட்பார். பேராசையெல்லோ என்றால். பத்து கேட்டால் தான் 1 ஆவது விழும் என சொல்வார். உங்க நண்பி சொன்னது உண்மைதான்.
    ஊரில இருக்கும்போது அடிக்கடி சாப்பிடுவது. அனேக வீட்டில இந்த சுண்டல் இருக்கும். நல்ல டேஸ்ட். நாமே பயிரிட்டு, அதை சாப்பிடும் போது சந்தோஷமாக இருக்கும். படங்கள்,ரெசிப்பி,ஊசி இணைப்பு,குறிப்பு எல்லாமே அருமை.
    விவசாயி அதிரா..வரவர பட்டங்கள் பட்டத்தின் வால் மாதிரி நீண்ண்டுகொண்டே போகுது.

    ReplyDelete
    Replies
    1. //10 லட்சம் விழவேணுமென கேட்பார். பேராசையெல்லோ என்றால். பத்து கேட்டால் தான் 1 ஆவது விழும் என சொல்வார்.///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:)).

      //வரவர பட்டங்கள் பட்டத்தின் வால் மாதிரி நீண்ண்டுகொண்டே போகுது.///

      ஆமா இல்ல?:) இது இதுவரை கிடைக்காத புதுப்பட்டம் எல்லோ?:) நீங்க சொன்ன பின்புதான் ஜிந்திக்கிறேன் ஹா ஹா ஹா:)..

      அனைத்துக்கும் மிக்க நன்றி அம்முலு.

      Delete
  52. வணக்கம் சகோதரி

    விவயாசத் துறையிலேயும் ரொம்பவே முன்னேறி, பல பட்டங்களும் வாங்கிடீங்க சகோதரி.. என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். தாங்கள் வளர்த்த செடிகளின் பசுமை தங்கள் உழைப்பை பறை சாற்றுகிறது.

    வெங்காய தாளில் சுவையான சுண்டல் செய்து சிறந்த சமையல் நிபுணராகவும் ஆகி விட்டீர்கள். என்ன இருந்தாலும், தான் வளர்த்த பயிர்களில், காய் கனிகளை கண்டு, தன் கையாலேயே சமைக்கும் ஒரு சுகம், அதை அனுபவித்தால் மட்டுமே புரியும். நான் மானசீகமாக தங்களுடைய மகிழ்வை புரிந்து கொண்டேன். வாழ்த்துக்கள்.

    ஊசிக்குறிப்பும், இணைப்பும் அருமை.
    மிக்ஸியில் வாழ்க்கைத் தத்துவத்தை அருமையாய் சுழல வைத்து விட்டீர்கள். அனைத்தும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    தாமதமாக பார்த்து படித்து தாமதமாக கருத்திடுவதற்கு மன்னிக்கவும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலா சிஸ்டர், தாமதமாக எனினும் வந்து கருத்திட்டமை மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றிகள்.

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.