நல்வரவு_()_


Monday 23 July 2018

 “அதிரா வளவுக்குள்ளே திருவிழா”

ஹா ஹா ஹா தலைப்புப் பார்த்து பொத்துப் பொத்தென மயங்கி விழுந்திடாதீங்கோ:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஆருக்காவது தெரியுமோ “வீட்டுகுள்ளே திருவிளா”.. என்ற ஒரு தலைப்பு?:).. உங்களுக்கெங்கே தெரிஞ்சிருக்கப் போகுது:).. அதுபற்றி ஒரு மட்டர் வச்சிருக்கிறேன், விரைவில போடுவேன் வெயிட்:)).. இது எங்கட வளவுக்குள்ளே அழகு மலர் ஆடுவதைப் பார்க்கலாம் வாங்கோ..
இவை இம்முறை எங்கள் வீட்டுக் கார்டினில் பூத்த புய்ப்பங்கள்:).. மெதுவா உளக்கிப்போடாமல் நடந்து வாங்கோ காட்டுறேன்ன்:)..

பாருங்கோ நான் எங்கட வீட்டில் பொம்பிளைப் பிள்ளைகளாகத்தான் வளர்க்கிறேன் பூவிலும்:)) ஏன் தெரியுமோ.. இவற்றின் பெயர் ஃபியூஸியா:))..

இந்த ஃபியூஸியாவில் எத்தனை கலர் , எத்தனை விதம் இருக்குது தெரியுமோ.. என்னிடம் இப்போ மூன்று வகைதான் இருக்கு..

இது கொஞ்சம் பொஸ்:) வகை, பூவும் பெரிதா இருக்கும், வளர்த்தெடுப்பதும் கஸ்டம், போன வருடம் வாங்கினோம், இப்போ பூத்திருக்கிறா அழகா... என் அடுக்குச் செவ்வந்தி தெரியுதோ?:)

கீழ்ப்படத்தில் இரு வகை இருக்குது உற்றுப் பாருங்கோ... நிறையப் பூக்கள் இருப்பதுக்கு நாக்குகள் அதிகம் தொங்குது:)).. அதே நேரம் கீழே தொங்கும் மணி வெள்ளை நிறம், இலையும் டார்க் கிரீன்.. இது கன்னா பின்னா என எங்கும் வளரும்.. கஸ்டப்பட்டு வளர்க்கத் தேவை இல்லை.

ஆனா வலது பகம் இருப்பது இலையின் கலர் கொஞ்சம் லைட், உற்றுப் பாருங்கோ ஒரு நாக்கு மட்டுமே[அதிராவைப்போல:)] மணியின் கலர் சிவப்பு, பூவும் கொஞ்சம் பெரிதாக இருக்கும்... இவை முற்றத்தில் வைச்சிருக்கிறோம்.

இதுவும் சாடியில் வைத்திருக்கிறேன், ஒருவித ரோஜா இனம், பூத்தது கிட்டத்தட்ட 2 மாதம் வரை அப்படியே இருக்குது... இப்பவும் 3 வது மாதமா இருக்குது கொஞ்சமா காயத்தொடங்கியிருக்குது..


==========இடைவேளை ஹா ஹா ஹா===========
=============================================

 “பூப் பறிக்கச் சொல்லி.. பூவா கேட்டுக் கொள்ளும்:).. 
அதிரா பறித்துச் சென்றால்.. வேண்டாம் என்றா ஜொள்ளும்:))”
 ஹா ஹா ஹா இவை காடினில் தானா முளைக்கும் பூண்டு வகை, வெள்ளை மலருக்குப் பெயர் டெய்சி:), மஞ்சளின் பெயர் தெரியாது, கார்டின் புல்லு வெட்டாது விட்டால் ஒரே மஞ்சள் வெள்ளைப் பூ மயமாக இருக்கும்...


 ஒரு வகை மல்லிகை வாசம் வீசுவா இவ, அப்படியே மரம் முழுவதும் பூவாக இருக்கும், இதில ஒரு விஷேஷம் என்னவெனில், உற்றுப் பாருங்கோ பிங் அன்ட் வெள்ளை கலந்து பூக்கும் ஒரு கொத்தில்... பெரிய பற்றையாக வளரும், வெட்டி வெட்டி அளவா வைத்திருக்கிறோம்...

ஆஆ இதில் பல கலர்கள் உண்டு, நம்மிடம் இருப்பது மூன்று கலர்கள்..  இப்போதான் பூக்க ஆரம்பிச்சிருக்கினம், நிறைய கொத்தாக மலரும் இனி.., அழகா இருக்கினமோ.. ஆறு தெரியுதோ?:)

இவவின் படம் ஏற்கனவே போட்டேனோ தெரியல்ல, அம்மாவுக்குப் பக்கத்திலே குட்டி மகள், மகளோடு டெய்ஸி இருக்கிறா:).

இவை சாடியில் வைத்திருக்கிறேன், ரியூலிப்ஸ்[பூத்து முடிஞ்சுவிட்டது ஏப்ரலில்] அருகிலே இருப்பது ஒருவகை குரோட்டன்...


இவ பின் கார்டினில் ஒரு மர அடியில் இருக்கிறா, கலரைப் பாருங்கோ அப்படியே பளபள எனக் கண்ணைப் பறிக்கும், வெயிலில் எடுத்த படம், இன்னும் ஒளிர்கிறா...

ஆங்ங்ங் இவ ஆரெனத் தெரியுதோ? என் “ஊசி மல்லிகை”... இவவை நட்டு 4 வருடமாகிறது, இம்முறைதானே நல்ல வெதர், கடகடவெனப் பூத்திருக்கிறா, முதல் பூப்பறிச்சு படத்துக்கு வச்சேன். என் பள்ளிக்காலத்தோழி, இங்கிருக்கிறா எனச் சொன்னேனெ அவர்கள் வீட்டில் பெரிய பற்றைபோல இருந்தது, கன்று பிடிங்கி வந்து நட்டேன்.
 இதைவிட இன்னும் ஓரிரு மலர்கள், முக்கியமாக பேப்பிளில் ஒரு மலர், மஞ்சளில் ஒரு மலரும் இருக்கு, அது இம்முறை மிஸ்சாகி விட்டது, ஆனா ஓல்ரெடி இங்கு போட்டிருக்கிறேன், உங்களுக்கும் ஓவராப் படம் போட்டுத் தொல்லை கொடுக்கக்கூடாதெல்லோ:))..
=========== ஹா ஹா ஹா முடிவில் ஒரு தகவல்:)===========

[[[[எங்கள் கல்யாண வீட்டு வீடியோ  கிட்டத்தட்ட 4 மணித்தியாலங்கள் எடுக்கும், அல்பத்தில் அளவு கணக்கில்லாப் படங்கள் இருக்கு... என் கணவர் சொல்லிச் சிரிப்பார், அதிரா பெஸ்ட் திங் என்ன தெரியுமோ?  ஆரையாவது லஞ்க்குக் கூப்பிடோணும், நல்ல சூப்பர் ஐட்டமாக சமைச்சு நல்லா சாப்பிடப் பண்ணிப்போட்டு[அப்போதானே நித்திரை தூக்கி அடிக்கும்:)], எங்கட அல்பத்தை எடுத்து வச்சு.. காட்டிக் கொண்டே இருக்கோணும்:).. அதிலும் விட்டிடக்கூடாது.. ஒவ்வொருவரையும்.. இது எங்கட பெரியப்பாவின் மூத்த மகனின் பிள்ளை, ஆஆ இது எங்கட சின்னம்மாவின் மருமகளின்.. இப்படி உறவு முறை வேறு விளக்கப்படுத்தோணும் எப்படி இருக்கும் அவர்களுக்கு என ஹா ஹா ஹா..]]]]

ஊசி இணைப்பு:
ஹா ஹா ஹா இது வல்லாரை வாரம்:))


ஊசிக்குறிப்பு:)
=============_()_============

137 comments :

  1. ஹை :) fuchsia எங்க வீட்ல பிங்க் வெள்ளை காம்போவில் இருக்கு .
    ரெட் கலரில் இருப்பது பியோனிஸ் ?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ.. ரெட் கலரில இருப்பது, பெயரைக் கவனிக்கவில்லை வாங்கி வைக்கும்போது:))

      Delete
  2. அவ்வ் :) ரிவர்ஸில் பார்த்திட்டேன் கியூரியாசிட்டியில் :)
    அது நாலுமணிநேரம் கூட வீடியோ நான் பார்ப்பேன் ஆனா எனக்கு பக்கத்தில் கருப்பு காப்பியும் பனானா நேந்திரசிப்ஸும் வைக்கணும் நான் பார்ப்பேன் .
    எங்க கல்யாண வீடியோவில் நிறைய அசட்டு வேலை செஞ்சி மாட்டியிருக்கோம் :) அதெல்லாம் பொண்ணு பார்த்திடக்கூடாதேன்னு ஒளிச்சி வச்சிருக்கேன்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நீங்க படிச்சிட்டீங்க ஆனா இங்கு ஆருமே எதுக்கு கறுப்பு மை பூசியிருக்கு எனக் கேட்கவுமில்லை, அதைத்தொட்டுப் பார்க்கவுமில்லை ஹா ஹா ஹா அவ்ளோ பயம்:)).. அதனாலேயே கறுப்பு மை பூசி விட்டேன் பார்ப்போம் ஆருக்காவது ஏதாவது புரியுதோ என:)) ஹா ஹா ஹா.

      Delete
    2. பெண்களுக்குத்தான் கியூரியாசிட்டி ஜாஸ்தி. அதுவும் ஏதேனும் மறைத்தால், அதைத் தெரிந்துகொள்ளவில்லைனா அவங்களுக்கு தலை வெடித்துவிடும். அதுவும்தவிர பெண்கள்தானே 'வம்பு'களை ஆரம்பிப்பது (என்பதை பிக் பாஸில் பார்த்திருப்பீங்களே).

      அதனால்தான் நாங்க யாரும் அந்த 'சென்சார்' செய்யப்பட்ட பகுதிகளைப் படிக்கலை.... (அதுக்காக ஏஞ்சலின் வம்புக்கு அலையறாங்கன்னு நான் சொல்வதா நீங்க நினைச்சுடக்கூடாது)

      Delete
    3. கர்ர்ர்ர் :) நெல்லைத்தமிழன் ..ஒன்றை அக்செப்ட் செய்வேன் அது கியூரியாசிட்டி :) அந்த கியூரியாசிட்டிதான் என்னோட பெரிய பலவீனம் ப்ளஸ் பலம் ..இது பெரும்பாலான பெண்களுக்கு இயல்பான குணம் .இன்னொன்று என்னன்னா எப்பவும் ஆராய்ந்தே யோசித்தே கன்க்ளுஷனுக்கு வருவோம் அதுக்கு . முக்கியம் ஆராய்ச்சி :)
      பிக்பாஸில் வம்பு ஆரம்பிச்சு ஏற்றி விடறது அந்த குள்ளநரி டேனி /மகத் /பாலாஜி தான் :)
      அதோட இது சென்சார் இல்லை :)) ட்ரெஷர் மேப் மாதிரி கண்டுபிடிக்கத்தான் பெயிண்ட் அடிச்சாங்க மியாவ்

      Delete
    4. @நெ.தமிழன்//அதனால்தான் நாங்க யாரும் அந்த 'சென்சார்' செய்யப்பட்ட பகுதிகளைப் படிக்கலை....///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என்ன ஒரு சாட்டு:) கீழே விழுந்தாலும்... மண் ஒட்டாத கதையாவெல்லோ இருக்குது:))..

      ஆனா உண்மையில், நிங்க சொன்னதுபோல அதிகமாக வம்பளப்பது, அடுத்தவர்பற்றி ஆராய்வது என்பதெல்லாம் பெண்களுக்குத்தான் அதிகம் உண்டு.. எங்காவது விதிவிலக்கான ஆண்களும் உண்டு.. அவர்களைத்தான் பொம்பிளைகள்போல இருக்கிறாரே எனப் பகிடி பண்ணுவோம்:))..

      அதேபோல பெண்களிலும் எல்லோரும் அப்படி என்றும் இல்லை, சத்தியமா எனக்கு ஊர் வம்பு பிடிப்பதில்லை, ஆராவது சொன்னால் கேட்பேன் மற்றும்படி துருவி ஆராய்ந்து கேட்கும் ஆர்வம் இல்லை, நமக்கெதுக்கு எனத்தான் நினைப்பேன்.. எனைப்போல பலர் இருக்கலாம்:).. இதிலயும் ஒரு பானை சோற்றுப்பதம் எடுத்திடக்கூடாது:))[ “தன்னைப் புகழாத தனையன் உண்டோ?:)”... சிட்டுவேஷன் குரல் ரிவியில போகுதோ?:)) ஹா ஹா ஹா]

      ஏனெனில் ஒரு பெண்ணை வச்சே... உலகப் பெண்கள் எல்லோருமே அப்படித்தான் என முடிவுக்கு வந்து விடுகின்றனர் அது டப்பூஊஊஊ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      Delete
    5. ///.இன்னொன்று என்னன்னா எப்பவும் ஆராய்ந்தே யோசித்தே கன்க்ளுஷனுக்கு வருவோம் அதுக்கு . முக்கியம் ஆராய்ச்சி :)//

      அஞ்சு இந்தக் குணம்தான் என்ன்னில இல்ல.. அதுதான் பலசமயம் பிரச்சனைகளில் மாட்டி விட்டிடும்.. நான் முகத்தைப் பார்த்து அல்லது பேச்சில மயங்கி செண்டிமெண்ட்டுக்கு அடிமையாகிவிடுவேன் எப்பவுமே:).. ஆராய்வது கிடையவே கிடையாது... டக்கென நம்பிடுவேன்.

      //அதோட இது சென்சார் இல்லை :)) ட்ரெஷர் மேப் மாதிரி கண்டுபிடிக்கத்தான் பெயிண்ட் அடிச்சாங்க மியாவ்//

      ஹா ஹா ஹா அதேதான், ஆராருக்கு அறிவு ஜாஸ்தி என அறிய நினைச்சேன்ன்:)) புரிஞ்சிடுச்சீஈஈஈஈஈஈ:)) ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்:))..

      ஹா ஹா ஹா மிக்க நன்றி நெ.தமிழன் .., அஞ்சு மீள் வருகைகளுக்கு.

      Delete
  3. வல்லாரையை இன்சல்ட் செஞ்சிட்டீங்க :) நான் போராடுவேன்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஹலோ மிஸ்டர் வாங்கோ ரெண்டு பேரும் போராடுவோம் பிக்கோஸ்ஸ்ஸ்ஸ் மீயும் வல்லாரைக் கட்சியெல்லோ:)).. இருப்பினும் வடிவேல் அங்கிள் சொல்வது உண்மையா இருக்குமோ?:)), எதுக்கும் வெயிட் பண்ணுவோம் ஏனெனில் நெ.தமிழன் இப்போதான் முதன் முதலில் சாப்பிட்டிருக்கிறார்.. ஒருவேளை போனபிறவிகூட நினைவுக்கு வந்திட்டாலும் வரலாம்:)) ஹா ஹா ஹா.

      Delete
  4. /=========== ஹா ஹா ஹா முடிவில் ஒரு தகவல்:)===========//

    ஹையோ ஹையோ பாவப்பட்ட கணவன்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஹையோ சில பெண்கள் இப்படித்தானே அஞ்சு வாய் திறக்கவே முடியாது நம்மால... ஒரு நிகழ்வு:) என் கணவரின் ஒரு உறவுக்கார நண்பி... வலவலவலவல.. வளவள எண்டால் ஸ்பீட் இருக்காது என்பதனால் வலவல என்றேன்... ஹா ஹா ஹா அப்படி பேசிட்டே போவா ஃபோனில... அவவுக்கு இடைக்கிடை யேஸ்..யேஸ் யேஸ்.. இப்படி சொன்னால் போதும், பாதி நேரம் ஃபோனை என் காதில பிடிப்பார் கணவர், பின்பு எடுத்து யேஸ் யேஸ் என்பார் ஹையோ அது சொல்லி வேலையில்லை அப்படி ஒரு பேச்சு:)).. உண்மையில பாவம் அவ, அதனாலேயே இன்னும் திருமணமும் ஆகவில்லை அஞ்சு.. நல்ல அழகு, நல்ல ஜொப், நல்ல வசதி, பொருத்தம் பார்த்து சரிவரும் ஆனா மாப்பிள்ளையுடன் நேரே பேசோணும் என்பா.. இங்குதான் இருக்கிறா.. மாப்பிள்ளையுடன் பேச விட்டால் குழம்பிடும் கல்யாணம்... இதுதான் 90 வீதமும் காரணம்...

      இப்போ பிக் பொஸ் வைஸ்ணவியும் அப்படி ஒரு கேசாகவே இருக்கு.. எரிச்சல் வருது.. வாயைத்திறந்தால் மூடுறாவே இல்லை, ஆனா பாவமாக இருக்கு...

      Delete
    2. இல்லை அதிரா .இதில் ஒரு சைக்கலாஜிக்கல் உண்மை அடங்கியிருக்கு .பெரும்பாலும் வீட்டில் பேசாதே /செய்யாதே என அடக்கி வைக்கப்பட்ட பிள்ளைங்களுக்கு சான்ஸ் கிடைச்சதும் இடைவிடாம இப்படி பேசறாங்களோன்னு தோணுது .இங்கே ஒரு ஆசியரின் மகன் அவனை அடக்கியே வளர்த்தாங்க பெற்றோர் அறிவாளி பிள்ளை யூனிவர்சிட்டி போனதும் தன்னிச்சையா போய்ட்டான் .நிறையபேர் சான்ஸ் பார்த்திட்டிருக்காங்க .அப்படிதான் போலும் அந்த பெண்ணும் .சில ஆண்கள் சும்மாவே fussy டைப் :)
      இந்த பெண் போல் ஒரு உறவினர் இருக்கார் நான் பேசும்போது மைக்கில் போட்டுட்டு இப்படித்தான் எஸ் யெஸ் சொல்வேன் :) சில நேரம் தூக்கமும் வரும் .

      என்ன சமைசீங்கன்னு கேட்டா ..கடைக்கு காரெடுத்திட்டு போனது முதல் atm இல் பணம் எடுத்தது இப்படி ட்ரெயின் ஓட்டி கடைசியா அடுப்பை அனைச்சது வரைக்கும் சொல்வார் !!!
      வைஷ்ணவி பாவம் .அந்த பெண்ணுக்கு எதோ குறை ஆனா அதை மறந்து நார்மலா இருக்க பார்க்கிறா அந்த ஜெயில் உள்ள இருக்கே அவன பார்த்தாலே அடிக்கணும் போலிருக்கும் .பொதுவாவே நக்கல் பார்வை நையாண்டி பேச்சு குறிப்பா உருவத்தை வச்சி செஞ்சா எனக்கு பிடிக்காது

      Delete
    3. ஹா ஹா ஹா உண்மைதான், பொதுவாகவே பெண்பிள்ளைகளுக்கு பேசும் சக்தி அதிகம், அதைப் பேச விடோணுமாம், அப்போ அடக்கி வச்ச்சால் என்ன ஆகும்.. இப்படி அடக்கி வச்சுப் போட்டு டக்கெனத் திருமணம் முடிச்சுக் குடுத்தால் கணவரின் கதி:)) ஹா ஹா ஹா..

      இம்முறை பிக்பொஸ் இல் எல்லோருமே ஒரு மாதிரியானவர்களா இருக்கிறாங்க.. யாருமே யாரையும் மதிப்பதில்லை மதிப்புக் குடுப்பதுமில்லை.. வளர்ப்பு தப்போ எனத்தான் எண்ண வருது.. மகத், ஜஷிக்கா, ஐஸ்வரியா மூவரும் சின்னப் பிள்ளைகள் ஆனா ஆரையுமே பெரிதா மதிப்பதாகத் தெரியவிலை.. கோபம் மட்டும் மூட்டைக் கணக்கில வருது... ஓவர் செல்லம் கொடுத்துப் பெற்றோர் ஸ்பொயில் பண்ணி வச்சிருக்கினமோ என எண்ணத் தோணுது...

      Delete
    4. ஐஸ்வர்யாவும்,வைஷ்ணவியும் எப்படா நிறுத்துவாங்கன்னு இருந்தது. அதான் கமல் அங்கிளே வைஷ்ணவியை சொல்லிட்டாரே புல்ஸ்டாப் வைக்கமாட்டீங்கன்னு..
      கணவரின் ஒன்றுவிட்ட தங்கையும் பேச ஆரம்பித்தா விடமாட்டாங்க. கேட்டிட்டே எல்லாவேலையும் நான் செய்திடுவேன்..ஹா..ஹா...

      Delete
    5. ஆவவ் :) ப்ரியா உங்களுக்கு ஆனாலும் பொறுமை அதிகம் :) எனக்கு காது கிழியறாப்ல இருக்கும்

      Delete
    6. @அதிரா அதில் யாஷிகா மட்டுமே 18 வயதாம்
      என் பொண்ணு வயது தான் ..ஆனா இப்போ எதையாவது நானா சொன்னா என்னை சிலர் திட்டலாம் :)
      ஆனாலும் சொல்லணும் ..இவர்களின் செய்கைகள் கொஞ்சமும் சரியில்லை.இது .இதைப்பற்றி ஒரு பதிவு போட இருக்கேன் :)
      இன்னொன்று சொல்வாங்க அரைகுறைகள்தான் இப்படி ஆடும் .எல்லா பிள்ளைகளும் இப்படி கிடையாது அதிரா .பெரியவங்களுக்கு ரெஸ்பெக்ட் குடுக்க பெற்றோர் சொல்லித்தரணும்

      Delete
    7. //
      priyasakiWednesday, July 25, 2018 5:40:00 am
      ஐஸ்வர்யாவும்,வைஷ்ணவியும் எப்படா நிறுத்துவாங்கன்னு இருந்தது//

      நேற்றுப் பார்த்தீங்களோ ஐஸ்வர்யாவை.. ஹையோ ஆண்டவா.. அந்த வயசில எனக்கு வாய் திறக்கவே பயம், இவர்கள் எப்படி பாய்ந்து சண்டை பிடிக்கிறார்கள்.. அதுவும் உப்புச் சப்பில்லாமல்... முதல்ல ஐஸ்வர்யாவை வெளியில விடோணும்... . அதுக்கு மேலுக்கு குறைவு... தப்புத்தப்பா எடுத்து, தான் சொல்வதே சரி என வாதிடுறா கர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
    8. //@அதிரா அதில் யாஷிகா மட்டுமே 18 வயதாம் //

      அதேதான் அஞ்சு, ஏனையோருக்கு 23 க்கு மேலே. யாஷிகா கொஞ்சம் ஓகே, ஆனா அவ சரியான திமிர், லெவல் குணமாக இருக்கிறா, இந்த வயசில ஓடி ஓடி கலகலப்பா எல்லோரோடும் பேசோணும், இது முகத்தில சிரிப்பே இல்லை,

      எனக்கு அங்கு போய்.. கொஞ்சம் சிரி பிள்ள எனச் சொல்லோணும் என ஆசை ஹா ஹா ஹா.

      //ஆனா இப்போ எதையாவது நானா சொன்னா என்னை சிலர் திட்டலாம் :)
      ஆனாலும் சொல்லணும் ..இவர்களின் செய்கைகள் கொஞ்சமும் சரியில்லை.இது .இதைப்பற்றி ஒரு பதிவு போட இருக்கேன் :)//

      திட்டுவது அவரவர் சுகந்திரம் அஞ்சு, அதனால அதைப் பெரிசு படுத்தாமல் நீங்க எழுதுங்கோ.. நான் ஏற்கனவே சொன்னதைப்போல வளர்ப்பு முறையிலும் நிறைய இருக்குது அஞ்சு.. குழந்தைகளுக்கு என்ன தெரியும், அவர்களுக்கு பிடிக்குதோ இல்லையோ, சொல்ல வேண்டியதைச் சொல்லிக் குடுக்கோணும் பிள்ளைகளுக்கு.. முக்கியமா மற்றோருக்கு மரியாதை குடுப்பது பற்றி..

      ஆனா மரியாதை குடுப்பதில் அங்கு எல்லோரும் ஓகே, இந்த ஐஸ்வர்யாவும் யஷிக்கா, டானியல் மற்றும் மகத்தான் சரியில்லை, ஆனாலும் ஏதோ ஞானம் பிறந்து இப்போ மகத் கொஞ்சம் நல்லபிள்ளையாக நடிக்கிறார்:))

      ஹா ஹா ஹா.

      Delete
    9. ஹையோ அந்த குரல் செம இரிடேட்டிங் எனக்கு சும்மாவே பட்லர் ஆங்கிலம் இப்படி பேசினாலும் பிடிக்காது
      ஐ --------டோன்ட் ....................வாவ்ன்ட்.......... தீஸ் :))) அப்படியே ஒரு ஊசி கிடைச்சா வாயை தச்சு விட்டுருவேன்

      Delete
    10. இந்த பொண்ணுக்கு இவளின் முட்டாள் செய்கைகளுக்கு கூஜா தூக்கவே சில கூட்டம் இருக்கு

      Delete
    11. ஹா ஹா ஹா பொயிங்காதீங்க அஞ்சு:).. அடுத்த பிக்பொஸ் 3 க்கு நீங்களும் நானும் போவோம் டீல்?:)

      Delete
  5. ஊசி மல்லி எனக்கும் கிடைச்சே இப்போதான் ஒரு பாகிஸ்தான் பாட்டி கொடுத்தாங்க :) எப்போ பூக்குமோ :)

    ReplyDelete
    Replies
    1. ஓ, அது வந்திடும், நமக்கு கடந்த மூன்று வருடத்தில் இம்முறைதானே நல்ல வெயில், அதனாலேயே இம்முறை நிறையப் பூத்திருக்கிறா.

      அஞ்சு பி அண்ட் எம் இல், ஒரு குட்டிப் போத்தல் லிகுயிட் ஃபூட் விக்குது £1.99 க்கு.. அதை வாங்கி கொஞ்சம் விட்டுப் பாருங்கோ மர அடியில் வித்தியாசம் தெரியும் என்கிறார்கள்.. நானும் இப்போதான் சில பூக்கன்றுகளுக்கு விட்டிருக்கிறேன்.

      Delete
  6. பல கலர் மலர்கள் hydrangea .
    எங்க வீட்டு முன்னாடி ஒரு செடி இருந்தது சோலார் பேனல் போடும்போது இரும்பு SCAFFOLDING செட் பண்ணாங்க அதில் நாசமாகி வளரவேயில்லை

    ReplyDelete
    Replies
    1. ஓ எனகுப் பெயர் தெரியவில்லை அஞ்சு, ஆனா இது இலகுவில் படும் மரம்போல தெரியவில்லை, வேர் இருந்தாலே முளைச்சு எழும்பிடுது. பெரிய ஒரு மரம் இருந்தது வீடு வாங்கும்போது, அதனை தறிச்ச்சோம், அதன் வேரில் வளர்ந்தது இது, பிடுங்கி நட்டோம் இப்போ சூப்பரா பூக்கும்.. அப்படியேஎ இலை இல்லாமல் பூத்துக் குலுங்கும்.

      Delete
  7. இவவின் படம் ஏற்கனவே போட்டேனோ தெரியல்ல, அம்மாவுக்குப் பக்கத்திலே குட்டி மகள், மகளோடு டெய்ஸி இருக்கிறா:).//
    எனக்கும் பார்த்த நினைவு டெய்சியை :) அவ இடத்தில அவ இருக்கா

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு வருடமும் போடுவேன் அந்த மஜந்தா மலர்களை:))..

      டெய்சிப்பிள்ளையை வேறு எங்காவது பார்த்திருப்பீங்க:)

      Delete
  8. /அந்த வெள்ளை மலர் டெய்சி :) யெல்லோ மலர் பட்டர் கப்ஸ்

    ReplyDelete
    Replies
    1. ஓ யேஸ்ஸ் பட்டர் கப்ஸ்.. ஞாபகம் வந்திடுச்சூஊஊஊஊஊ:))

      Delete
  9. சார்லி ,ஓம்சாந்தி ஓசான்னா பாருங்க பிடிக்கும் உங்களுக்கு .வெள்ளைமனம் பளிங்கு என்ற பேரில் வந்தரது ரிவ்யூ படிச்சேன் பார்க்கலை

    ReplyDelete
    Replies
    1. ஓ நீங்க முன்பும் சொல்லியிருக்கிறீங்க அஞ்சு.. ஓம்சாந்தி கொஞ்சம் பார்த்தேன் பின்பு மறந்திட்டேன் தொடர.. மிக்க நன்றிகள் அஞ்சு.

      Delete
  10. இந்தப் பாடல் கேட்டதில்லை. இபபவும் கேட்கவில்லை என்பதும் விஷயம். காதிலேயே விழவில்லை. சத்தமாக வைத்துக் கேட்டதில் ஒன்றும் பெரிய நஷ்டமில்லை என்று தெரிந்தது! நஸ்ரியா என்றால் ஆவியின் ஆவி!!!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ...

      இப்பாடல் தனியாக எங்கும் கிடைக்கவில்லை, தேடிக் களைச்சுப்போய், நானே மொபைல் வீடியோ பண்ணிப்போட்டிருக்கிறேன், ஆனா எனக்கு சவுண்ட் நல்லாவே வருதே.. இருங்கோ லிங் தருகிறேன்.. படத்தின்..

      // நஸ்ரியா என்றால் ஆவியின் ஆவி!!! // ஹா ஹா ஹா என்ன சொல்றீங்க எனக்கு புரியவில்லையே.. இப்படியான இடத்தில அபுரி:) எண்டுதானே சொல்லோணும்:) ஹா ஹா ஹா அபுரி:)..

      இந்தாங்கோ லிங், இதில சரியா 40 நிமிடம்வரை இழுத்து விட்டுக் கேளுங்கோ 40 நிமிடத்திலிருந்து பாட்டு வரும்... நல்லாயிருக்கு.. காட்சிகள் பார்க்க ஆசையா இருக்கு..

      https://www.youtube.com/watch?v=Y3fXZFcDNNs&t=2649s

      Delete
  11. பூப்பறிக்கற நோம்பிக்கெல்லாம் வாங்க என்றொரு பாடல் கேட்டிருக்கிறீர்களா? எனக்குப் பிடிக்கும் என்று நினைக்கவேண்டாம்! இந்தப் பதிவுக்கு அந்தப் பாடல், பூக்களைத்தான் பறிக்காதீங்க போன்ற பாடல்கள் நினைவுக்கு வருகின்றன.

    ReplyDelete
    Replies
    1. ஓ இல்ல இம்முறை பூப்பற்றியதை விட, சந்தோசமான, மகிழ்ச்சியான பாட்டுப் போட்டால் நல்லா இருக்கும் என நினைச்சே இப்பாடல் போட்டேன்..

      //பூப்பறிக்கற நோம்பிக்கெல்லாம்/// கிடைக்குதில்லையே பாட்டு,

      Delete
  12. எத்தனை நிறங்களில், எத்தனை விதமான மலர்கள்... வெங்காயத்தின் வகை போல மொட்டு. பார்த்தல் வித்தியாசமான பூ...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான், உலகில் எத்தனை விதமான மலர்கள் நினைச்சுப் பார்க்க வியப்பாக இருக்கும் சில சமயம்.. ஒவ்வொரு பூவையும் எடுட்து விரிச்சு ஆராய்ந்தால், குட்டிக் குட்டியாக எவ்ளோ டிஷைன்ஸ் எவ்ளோ நிறம் ஒரு குட்டிப் பூவில் இருக்கும் .. எல்லாமே வியப்புத்தான்...

      Delete
  13. நிறைய நாக்குகள் கொண்ட பூ ஆச்சர்யப்படுத்துகிறது... நிறமான குட்டி ஆலமரம் போல விழுதுகள்!

    ReplyDelete
    Replies
    1. அதேதான், ஆனா அவை மெல்லிசாக இருக்கும், ஆனா அந்த சாடியில் நிற்கும் பிங்கலர்.. நல்ல குண்டு குண்டாப் பூக்கும், நல்ல உரம் போட்டால் இன்னும் பெரிய பூக்கள் கிடைக்கலாம்..

      Delete
  14. இடைவேளைக் கருத்து மனதைத் தொட்டது. பாஸை பின்னால் வரவிட்டு இவர் முன்னால் நடந்துவர என்ன காரணமாம்? அதைக் கேட்டீங்களா அவர்ட்ட?

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம்... பாஸுக்கு, கணவன் மேல் நம்பிக்கை இல்லாமல், இவன் யார் யாரை நோட்டம் விடறான் என்று பார்ப்பதற்காக அவனை முன்னால் நடக்கச் சொல்லி இவள் பின்னால் வருகிறாளோ? இல்லை, கூட நடந்தால் ஏதாகிலும் பேசி, அட்வைஸ் செய்து கொல்கிறாளே என்பதற்காக, விரைந்து நடப்பதுபோல் கணவன் முன்னால் சென்றுவிடுகிறானோ?

      Delete
    2. //பாஸை பின்னால் வரவிட்டு இவர் முன்னால் நடந்துவர என்ன காரணமாம்? அதைக் கேட்டீங்களா அவர்ட்ட?///

      ஹா ஹா ஹா போரில முன்னால் போவது தூசுப்படையாமே:)).. பின்னால போவதுதான் பலம் வாய்ந்த படைகளாமே:) அப்பூடி இருக்குமே?:) ஹா ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:))

      Delete
    3. ஹா ஹா ஹா நெல்லைத்தமிழனுக்கு என்ன ஐடியாவெல்லாம் வருகிறது:)).. அது முன்னால ரோட்டில இருக்கும் முள்ளு, கம்பி, கல்லைக் கிளீன் பண்ணி மகாராணியைக் கூட்டிப் போகிறாரோ என்னமோ:))

      Delete
  15. இந்தவகைப் பூக்களில் வாசமும் வீசுமோ என்று தோன்றும்போதே ஒருவகைப்பூவில் மளிகை போல வாசம் என்று சொல்லி விட்டீர்கள்.. (இந்த இடத்தில் (நாலு வகைப்பூக்கள் பாடலை டெடிகேட் பண்றேன்!)

    ReplyDelete
    Replies
    1. இருக்கு ஸ்ரீராம் ஃபியூஷியாவில வாசம் இல்லை, ஆனா சிலதில இருக்கு.. பாடலுக்கு டாங்ஸ்:)

      Delete
  16. படத்தை எவ்வளவு உற்றுப்பார்த்தும் டெய்சி மகளைக் காணோம்!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) டெய்சிக்கு மகள் இல்லை, அந்த வலதுபுறம் இருக்கும் பெரிய மரத்தின் மகள் அருகில்தான் டெய்சி இருக்கிறா எனச் சொன்னேன்:).. மகள் என்றது, அந்த பெரிய பூமரத்தின் குட்டி மகளை:)) ஹையோ விளக்கம் கொடுத்தே விடிஞ்சுபோயிடும்போல இருக்கே ஊஞ்சல் பிள்ளையாரே:))

      Delete
  17. இவை எல்லாம் நீங்கள் நட்டுவைத்துப் பராமரித்து வளரும் செடிகளா? சில தானாய் வந்ததுமா?

    ReplyDelete
    Replies
    1. இல்ல இவை எல்லாம் நட்டு பராமரிப்பவைதான், தானா வந்ததென்றில்லை, முன்பு இந்த வீட்டில் இருந்தோர் வைத்தமரம்தான், முன்னுக்கு நிற்கும் மஜந்தா மரம், அத்தோடு பின் மரத்தடியில் இருக்கும் பிங்கலர் மலர்களும் ஏற்கனவே இருந்தவை.

      ஆனா ஒன்று என்னன்னா ஸ்ரீராம், இங்கு இருக்கும் எல்லா மரங்களுமே பூக்கிறது.. வேலியில், பற்றையில், காட்டில் எங்கும் பூக்கிறது மரங்கள். அதுதான் பார்க்க மகிழ்ச்சி. பெரிய மரங்கள்கூட பூக்கிறது.

      Delete
  18. முடிவில் ஒரு தகவல் என் பாஸை நினைவு படுத்தறாங்களே...! வல்லாரை ஜோக் மிகவும் ரசிக்க வைத்தது! ஊசிக்குறிப்பை குறித்து வைத்துக்கொண்டேன். (ஆல்ரெடி நடைமுறையிலும் வைத்திருக்கிறேன்)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா உங்களுக்கும் பேசுவதற்கு ரைம் கிடைக்காதோ?:).. இதில இன்னுமொன்று இருக்கு, அதிகமாக பேசிக்கொண்டிருக்கும் மனைவிமார் கிடைப்பதற்கும் மாதவம் செய்திருக்கோணுமாம்:), ஏனெனில் சிலர் கணவரோடு பேசுவதே இல்லையாம்... :(.. கேள்விக்குப் பதில் கிடைப்பதே அரிதாம் ஹையோ ஆண்டவா.

      //ஊசிக்குறிப்பை குறித்து வைத்துக்கொண்டேன். (ஆல்ரெடி நடைமுறையிலும் வைத்திருக்கிறேன்)//

      ஹா ஹா ஹா உண்மைதானே. இன்னொன்று நீங்க உங்களுக்கு தெரியாமல் ஒருநாள் ஒரு வசனம் சொன்னீங்க.. அதில் ஒரு தத்துவத்தையே கண்டேன்.. நான் அப்படித்தான் நடப்பதுண்டு, ஆனா நீங்க சொன்னபின்னர்தான் அது உண்மையில் ஒரு தத்துவமாகவே பட்டுது.

      என்னவெனில், “ஒருவரின் ஒவ்வொரு கருத்துக்கும் பதில் சொல்ல வேண்டுமென்ற தேவை இல்லை” என சொன்னீங்க:).. அது 100 வீதம் உண்மை.

      என் அனுபவத்தில்..,
      சிலர் சொல்வார்கள்.. அங்கே பார் ஒரு மைனா இருக்குது என... அதற்கு அடுத்தவர் சொல்லுவார்.. உற்றுப்பார் அது மைனா அல்ல ஒருவகைக்கிளி என.. இப்படியே வாதம் ஸ்ராட் ஆகும்.. இப்படியான சந்தர்ப்பத்தில் நான் நினைப்பது அதனாலென்ன அது மைனாவாகவே இருந்திட்டுப் போகட்டுமே.. நமக்கு தெரியும் அது என்ன பறவை என, தெரியாட்டிலும் ஓகே, இதுக்காக விவாதம் வேண்டாமே என பல சந்தர்ப்பங்களில் மெளனமாகிடுவேன், சொன்னவருக்கும் மகிழ்ச்சி.. தன்னை எதிர்க்கவில்லை என்று... இதில் சண்டையிட்டு நிரூபிப்பதால் என்ன லாபம்?.. இப்படி நான் இருப்பேன்..

      ஆனா நீங்க சொன்ன வசனம் இதிலிருகும் ஒரு தத்துவம் போல தெரிஞ்சுது, உண்மைதானே அப்போ நான் கரெக்ட்தான் என நினைச்சேன்:).. ஹா ஹா ஹா.

      மிக்க நன்றிகள் ஸ்ரீராம் அனைத்துக்கும்.

      Delete
  19. அழகான மலர்த்தோட்டம். இங்கே நாங்க ராஜஸ்தானில் இருந்தப்போ இவற்றில் சில வகைகள்(?) வைச்சிருக்கோம்னு நினைக்கிறேன். நடுவில் பெரிய லான்! சுற்றி வரப்பு போல் கட்டி நாலாபக்கமும் பூச்செடிகள் விதம் விதமாக! நாங்க மாலை நேரம் அங்கே உட்காருவோம். காலை நேரம் விடுமுறை நாட்களில் மட்டுமே உட்கார முடியும். எதிரே மயில் ஆட, குயில் கூவனு ஒரு வழக்கு உண்டு. அதை அங்கே நிஜம்மாகவே அனுபவிச்சோம். தினம் தினம் மயில்கள் வந்து ஆடும். அவற்றுக்கு உணவு போடுவோம். முயல்கள் அங்கும் இங்கும் ஓடும். பையர் துரத்துவார். மலர்ச்செடிகளில் வாடாமல்லி எப்போதும் இருக்கும். ஜவந்தி, கேந்தி எல்லாம் பருவ காலங்களில். முல்லை, மல்லியும் அப்படியே! நித்யமல்லி மட்டும் தினம் பூக்கும். பறித்துத் தொடுப்பேன். அது தாண்டி கொல்லைப்பக்கம் சமையலறையை ஒட்டிக் கிச்சன் கார்டன். வாழை, முருங்கை, பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கினு போட்டோம். தோட்டத்தைக் கவனிக்க ஆள் உண்டு! பச்சை மிளகாய் காய்த்துக் குலுங்கும். மிக அருமையான நாட்கள். வாழ்க்கையின் வசந்த காலம். மஞ்சளும், முருங்கையும் நாங்க போய்த் தான் அறிமுகம் செய்தோம். அங்குள்ள தமிழ்க்கார நண்பர்களுக்கு சங்கராந்திக்கு எங்க வீட்டு மஞ்சள் கொத்துத் தான் போகும். இப்போ எல்லாம் வெறும் நினைவுகள் தான். :))))

    ReplyDelete
    Replies
    1. ஐயோ... இவ்வளவு அட்டஹாசமான இடமா? படிக்கவே ரொம்ப நல்லா இருக்கு.

      Delete
    2. வாங்கோ கீசாக்கா வாங்கோ.. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்திட்டுதோ?:).. ஆவ்வ்வ் நீங்களும் எல்லா விதமான இடங்களிலும் இருந்திருக்கிறீங்க.. பா......பூஊஊஊஉ இருக்கும் இடம் உட்பட:) குடுத்த வச்சனீங்க:)) ஹா ஹா ஹா..

      Delete
  20. 'திருவிழா' இல்லையா ?
    பூக்கள் அழகு ரசிக்க வைத்தன...

    குடைக்குள் வராதவன் மனைவிக்கு பயந்தவன் போலயே...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..

      ஹா ஹா ஹா நீங்க கேட்டதும்தான் டவுட்டே வந்துது, பின்பு நெ.தமிழனின் கொமெண்ட் பார்த்து ஓடிப்போய் ஹெடிங்கை மாத்திட்டேன், தலைப்பில் எழுத்துப் பிழை எனில் படிப்போருக்கு ஒருவித சங்கடமாக இருக்குமெல்லோ.. எனக்கு அப்படித்தான்:))...

      ஹா ஹா ஹா மனைவிக்குப் பயப்பிடாத ஒருவரைக் காட்ட முடியுமோ இக்காலத்தில:)) ஆவ்வ்வ்வ்வ்:)..

      மிக்க நன்றி கில்லர்ஜி.

      Delete
  21. வல்லாரைகீரை மட்டுமல்ல பூரிக்கட்டையால் அடிவாங்கினாலும் ஞாபகசதி நன்றாகவே இருக்கும்..அனுபசாலி சொன்ன கேட்டுகிடனும்..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ட்றுத் வாங்கோ...

      அம்பேரிக்கா போயும் பூரிக்கட்ட்டையால அடி வாங்கிக் கொண்டிருக்கிறீங்க:) ரொம்பப் பாவம் நீங்க:))..

      [im] http://www.roflphotos.com/tamilcomedymemes/images/roflphotos-dot-com-photo-comments-20180704185101.jpg[/im]

      Delete

  22. ஒரு காமடி பதிவு போட்டு இருக்கிறேன் வந்து படிச்சிட்டு அழுதுட்டு போங்க

    ReplyDelete
    Replies
    1. டன்:) ஆனா அழாமல் வந்திட்டனே:) அழுதிருக்கோணுமோ?:) ஹா ஹா ஹா..

      Delete
  23. இங்கே ம்ழை பெய்யும் போது நான் நனைந்து கொண்டிருந்தேன் அப்போது குடையைபிடித்தவாறு ஒரு பெண் நடந்து (அதிரா அல்ல)வந்தாள் நான் நனைவதை பார்த்து குடைக்குள் வருமாறு சொன்னாள் நான் மறுத்துவிட்டேன் எனக்கு பின்னால மாமியெல்லாம் வரலை.. நான் மறுத்ததற்கு காரணம் அந்த பெண்ணின் இடை ரொம்ப பெரிதாகவும் குடை சின்னதாகவும் இருந்தது

    ReplyDelete
    Replies
    1. //ஒரு பெண் நடந்து (அதிரா அல்ல//

      அதுதான் எனக்குத் தெரியுமே:) ஒரு சுவீட் 16 ஐ ஆரும் பெண் என்பதில்லை:) கேள் ஆகும்:) க்கும்:) க்கும்:))..

      //நான் மறுத்ததற்கு காரணம் அந்த பெண்ணின் இடை ரொம்ப பெரிதாகவும் குடை சின்னதாகவும் இருந்தது//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நல்லவேளை தப்பிட்டீங்க:), ஒரு இடி வாங்கியிருந்தால் பூரிக்கட்டையை விட மோசமான நிலைமைக்கு ஆளாகியிருப்பீங்க:)..

      மிக்க நன்றிகள் ட்றுத்.

      Delete
  24. மலர்கள் அழகா பூத்திருக்கு...! ரசித்தேன்...

    வல்லாரை ஹா... ஹா... ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ டிடி வாங்கோ..

      வல்லாரை சிலசமயம் சிலருக்கு உண்மையாகவும் இருக்கலாமோ?:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
  25. எதுக்கு உங்க தமிழ் தவறுகளை சுட்டிக் காட்டணும்? நாங்களும் உங்க டி லெவல் தமிழுக்கே மாறிடறோம். இனிமே திருவிழா இல்லை திருவிளாளாளாளாளா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெ.தமிழன் வாங்கோ..

      // நாங்களும் உங்க டி லெவல் தமிழுக்கே மாறிடறோம். இனிமே திருவிழா இல்லை திருவிளாளாளாளாளா////
      ஹா ஹா ஹா ஹையோ ஆண்டவா:))

      [im] https://creamcoffee22.files.wordpress.com/2014/04/catkittyrunningsillystampedesweet-a8d8fd9aa1070b608302c897ad9af4c2_h2.jpg[/im]

      அஞ்சுவுக்கும் இது தெரியாது போல ஹா ஹா ஹா.. நான் போனதடவைதான் கொஞ்சம் டவுட்டோடு போட்டேன், விவசாயி/விபசாயி என நினைச்சு, ஆனா இம்முறை டவுட்டே இல்லாமல் போட்டனே ஹா ஹா ஹா:) எனக்கு அம்முலுதான் ளா.. வரும் எனச் சொல்லித்தந்ததா நினைவு:) ஹையோ தப்பெனில் கல்லெடுத்து அடிக்கப் போறாவே:))..

      நான் ஆரம்பம் ழ தான் போட்டிருந்தேன், இடையிலதான் ள வுக்கு மாறினேன்:)).. ஹா ஹா ஹா.. சுட்டிக் காட்டாமல் விட்டிருந்தால், இதுதான் கரீட்டு என பெருமையா இன்னும் எழுதியிருப்பேன்:) ஹா ஹா ஹா நன்றி நன்றி.._()_.

      Delete
    2. //அஞ்சுவுக்கும் இது தெரியாது போல ஹா ஹா ஹா.. //
      கர்ர்ர்ர் :) நான் நேத்தே பார்த்தேன் ..ஆனா கவனிச்சதில் யோசிச்சதில் சில மதுரைகாரங்க அப்புறம் திருநெல்வேலிக்காரங்கநாகர்கோவில்காரங்க உங்களை போல அளகு /வாள்க்கை / வாளைப்பளம் இப்படியே சொல்றாங்க என் பிரென்ட் ஒருத்தி அடி களுத :) இப்படித்தான் பேசுவா அவங்களை பொறுத்துக்கற நான் :) இவ்ளோ ஏன் என் கணவருக்கே ழ வரலை இதெல்லாம் யோசிச்சா சரி விடுவோம்னு விட்டேன் ..

      sudden mutations பூமி தாங்காது நீங்க இப்டியே எழுதுங்க :)

      Delete
    3. ///sudden mutations பூமி தாங்காது நீங்க இப்டியே எழுதுங்க :)///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கடந்த 8,9 வருடமாக நிறையப்பேர் என் ழ/ள திருத்தி விட்டே இப்போ இந்தளவுக்கு முன்னேறிட்ட்டேன் தெரியுமோ?:) சொல்லாட்டில் எனக்கெப்பூடித்தெரியுமாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

      இல்ல அஞ்சு எனக்கும்.. வால்க்கை, நண்றி.. கடவுல்.. இப்படி எழுதினால் சரியான கஸ்டமாக இருக்கும்.. படிக்கவே மனம் வராது ஆனா என்ன பண்ணுவது.. ள்/ழ் ல மட்டும் எனக்கு வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லை... இது பாடமாக்கி எடுக்க வேண்டும் என நினைக்கிறேன் ஸ்பெல்லிங் பாடமாக்கி எடுப்பதைப்போல:))))..

      ஆர் ஏ டி ஐயோஓஓஓஓஓஓஒ ரேடியோ:)) அப்படித்தான் இனிப் பாடமாக்கோணும்..:)

      RADIO = ரேடியோ:)) haa haa haa

      Delete
    4. எனக்கு அம்முலுதான் ளா.. வரும் எனச் சொல்லித்தந்ததா நினைவு:) ஹையோ தப்பெனில் கல்லெடுத்து அடிக்கப் போறாவே:)) /// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...... கல் இல்லை உருட்டு கட்டையால அடிக்கனும் உங்களை....
      நான்,அஞ்சு உங்களை திருத்தி களைத்துவிட்டோம். அதனால புதிதா வாறவங்க சொல்லியாவது திருந்தட்டும் என விட்டாச்சு. நான் உங்களுக்கு சரியாக சொல்லித் தந்திருக்கேன்.
      எப்படி தமிழில் டி எடுத்தீங்க....டவுட்டா வருதேஏஏ.

      Delete
    5. ஹா ஹா ஹா ஹையோ அம்முலு கலைக்கிறா:)) எப்பூடி அம்முலுவை டக்கென வர வச்சிட்டனே இங்கு:))

      //கல் இல்லை உருட்டு கட்டையால அடிக்கனும் உங்களை....///

      நோஓஓஓஓ அதைக் கீழே போட்டிடுங்கோ அது ட்றுத்துக்கு சொந்தமானது:)) ஹா ஹா ஹா பின்பு வரலாறு மாறிவிடும்:))/..

      //நான் உங்களுக்கு சரியாக சொல்லித் தந்திருக்கேன். //

      எனக்குத்தெரியும் அம்முலு நீங்க எப்பவும் தப்பா எழுத்துப் பிழை விட்டதில்லை எனைபோல... அதாவது என்னைப்போல, மற்றும்படி தட்டச்சின்போது தாறுமாறா சொற்கள் வருவது அது பிழை அல்லவே.

      ///எப்படி தமிழில் டி எடுத்தீங்க....டவுட்டா வருதேஏஏ.///

      ஓ மை வைரவாஆஆஆஆஆ:) ஒரு தமிழ்ப் பண்டிதரைப் பார்த்து இப்பூடி ஒரு கேள்வி.. இப்போ கம்பர் இருந்திருந்தால் ஓடிப்போய்த் தேம்ஸ்ல குதிச்சிருப்பார்ர்ர்ர்ர்ர்:))... வள்ளுவர் இருந்திருந்தால் பிளட்:) கண்ணீர் வடிச்சிருப்பார்ர்... இந்தக் கிளவியைப் பார்த்து ஹையோ கேள்வியைப் பார்த்து ஹா ஹா ஹா:))

      Delete
  26. சாடியில் வைத்திருக்கும் பூக்கள் மிக அழகு.

    தோட்டத்துப் பூக்களின் படங்களும் நல்லா எடுத்திருக்கீங்க.

    வீட்டுக்கு உபயோகமான நெல்லி, மா, கொய்யா இதெல்லாம் அங்க வளர்க்க முடியாதா?

    ReplyDelete
    Replies
    1. நன்றி.

      //வீட்டுக்கு உபயோகமான நெல்லி, மா, கொய்யா இதெல்லாம் அங்க வளர்க்க முடியாதா?//

      இல்லையே. அதுதானே கவலை, குளிர்ப்பிரதேசம் எல்லோ கோடை காலம் 5,6 மாதங்கள்தானே பின்பு குளிர் தாங்க மாட்டினமெல்லோ அப்படி மரங்கள்.. தேசிமரம் வீட்டுக்குள் வளர்க்கிறேன் கிட்டத்தட்ட்ட 9 வருடமாக:)) அந்த ஜொந்தக் கதை யோகக்கதையை ஒருநாளைக்குச் சொல்றேன்:))

      Delete
  27. நஸ்ரியாவின் அழகான பெயரை நஸ்றியா என்று பொறாமைலதானே எழுதியிருக்கீங்க. அவங்க போட்டோவைக் காணோமே. (அதுக்காக இப்போ உள்ள நஸ்ரியாவின் படத்தைப் போட்டு எல்லோரின் மனதை நோகடிக்காதீங்க)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா எனக்கென்னமோ உச்சரிக்கும்போது நஸ்.....றியா.. என்பதுதான் அழகா இருக்கு.
      நஸ்...ரியா.. இதைச் சொல்லிப் பாருங்கோ கவர்ச்சி குறையுதே:)) எப்பூடி என் கண்டு பிடிப்பு?:)..

      பாட்டில குழந்தையா வாறாவெல்லோ.. அது முதல் படமாம்.

      //அதுக்காக இப்போ உள்ள நஸ்ரியாவின் படத்தைப் போட்டு எல்லோரின் மனதை நோகடிக்காதீங்க)///
      ஹா ஹா ஹா... ஏன் இப்பொ குண்டாகிட்டாவோ ஹையோ...

      Delete
    2. அது நெல்லைத்தமிழன் முந்தி முகப்புத்தகத்தில் யாரோ எழுதியிருந்தாங்க ர /வந்து துக்கமான வார்த்தையை குறிப்பதுபோல் அதனால் தான் நிறைய ஸ்ரீலங்கன்ஸ் ற //என்று எழுதறாங்கன்னு .அதில் விளக்கமா சொன்னாங்க எழுதினவங்க நானா முழுமையா கவனிக்கல

      Delete
    3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அஞ்சு என்னமோ எல்லாம் சொல்றா.. அப்படி ஏதும் நான் கேள்விப்பட்டதில்லை அஞ்சு.... எனக்கு உச்சரிக்கும்போது றியா எனத்தான் காதில கேக்குது:)) அதனாலேயே நஸ்றியா:)).. மற்றும்படி ஆரம்ப எழுத்து ற வில வராது.. ர/ல விலயும் வராது எப்பவும் அதுக்கு முன்னால இ போடோணும்.. இரவி... (RAVI).. இராத்திரி, இலாம்பு, இலந்தை. .. இப்பூடி நான் படிச்சதனாலேயே நேக்கு டமில்ல டி ஆக்கும்:)).. ஹா ஹா ஹா கட்டுரையில எனக்கு எப்பவும் ஃபுல் மார்க்ஸ் போட்டிடுவினம்.. அதாவது 10 க்கு 9 என எடுப்பேனாக்கும்:)

      Delete
    4. ஹலோவ் மியாவ் !! அந்த ர /ற நானும் அரைகுறையாதான் படிச்சேன் யாரோ பிரென்டலிஸ்ட்டில் லைக் பண்ணினது எனக்கு காட்டுச்சி ஆனா அதில் எதோ இருக்கு எனக்கும் புரியல்ல சிமியன் டீச்சர் அடிக்கடி லீவ் போட்டதால் //இல்லைனா மீனாட்சி பழம் சாப்பிடற ஆசையில் க்ளாஸ் கட்டடிச்ச உங்களுக்கும் தெரியலை சரி விடுவோம் உங்களுக்கு ஒரு பதிவு வர இருக்கு :) ரொம்பா சந்தோஷப்படுவீங்க :)

      Delete
    5. /எப்பவும் அதுக்கு முன்னால இ போடோணும்.. இரவி... (RAVI).. இராத்திரி// - உங்களுக்கு இவ்வளவு தமிழ் தெரியும்னு நான் நினைச்சுக்கூடப் பார்த்ததில்லை... ஒரு மாறுதலுக்கு மிகச் சரியாச் சொல்லியிருக்கீங்க. ஹா ஹா

      Delete
    6. //சிமியன் டீச்சர் அடிக்கடி லீவ் போட்டதால் ///

      ஹையோ கடவுளே எங்கட சிமியோன் ரீச்சரை நீங்க மறக்கலியோ அஞ்சு.:))

      Delete
    7. //உங்களுக்கு இவ்வளவு தமிழ் தெரியும்னு நான் நினைச்சுக்கூடப் பார்த்ததில்லை... ஒரு மாறுதலுக்கு மிகச் சரியாச் சொல்லியிருக்கீங்க. ஹா ஹா//

      ஆவ்வ்வ் நெல்லைத்தமிழன்... எனக்கு டமில் நல்லாத் தெரியுமே:)) இந்த ழ/ள மட்டும் அகராதியிலயே இல்லை எனில் அதிராவை ஆரும் பிடிக்கவே முடியாது ஹா ஹா ஹா:)..

      இல்ல நெ.தமிழன் உண்மையில் என்னை விடுங்கோ, இலங்கையில் பெரும்பாலும் எல்லோருமே தமிழில் மிக உயர்ந்தவர்கள்... நீங்கள் எங்காவது இலங்கைத் தமிழரோடு பழக நினைச்சால் தமிழ்பற்றிப் பேசிப் பாருங்கோ மிக அருமையாக தமிழ் விளக்கங்கள் சொல்லுவினம். உச்சரிப்புக்களும் மிக அழகாக இருக்கும்... ஆங்கிலக் கலப்பில்லாமல்..

      மிக்க நன்றி.

      Delete
    8. ஏற்கனவே சொல்லியிருக்கேன்னு நினைக்கறேன்.

      தமிழகத்தில் பல தமிழ்ச் சொற்களை தொலைக்காட்சிகள் உபயோகப்படுத்த ஆரம்பித்தது, ஈழத்தமிழர்களிடமிருந்துதான் (பரப்புரை, அவதானிக்கின்றனர், கடவுச் சீட்டு போன்று). அதற்கு முன்பாக சரியான தமிழ்ச்சொற்களை தொலைக்காட்சிகள் உபயோகப்படுத்தாது. (அதிலும் இதனை 'மக்கள் தொலைக்காட்சி'-பாட்டாளி மக்கள் கட்சியால் நிறுவப்பட்ட தொலைக்காட்சி, கடைபிடிக்க ஆரம்பித்தபின்புதான் மற்ற செய்தித் தொலைக்காட்சிகள் கடைபிடிக்கின்றன)

      Delete
  28. உங்க ஊசிக்குறிப்மைப் படிச்சுட்டேன். இனிமே உங்கள்ட வாதம் செய்யப்போறதில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஹையோ என்ன இப்பூடிச் சொல்லிட்டீங்க:)) நேக்குத்தான் வார்த்தைகளின் மதிப்பு நல்லாத் தெரியுமே:)).. டவுட்டெனில் கேழுங்கோ டக்கு டக்கெனப் பதில் சொல்றேன்ன்:).. பிக்கோஸ் நேக்கு டமில்ல டி ஆக்கும்:)) இதை அடிக்கடி சொல்லிச் சொல்லி ஞாபகப்படுத்த வேண்டிக் கிடக்கே:))

      ஆனா நீங்க வல்லாரை சாப்பிட்டு விட்டீங்க இனி மறக்கவே மாட்டீங்க:)) ஹா ஹா ஹா:))

      Delete
  29. வல்லாரையைச் சாப்பிட்டதுனாலதான், என்னவோ மறந்துபோச்சுன்னு அவருக்கு ஞாபகம் இருக்கு. இல்லைனா "வல்லாரை எடுத்தேன், வாய்ல போட்டுக்கிட்டேன், அப்புறம் மென்னு முழுங்கினேன்... அப்புறம் என்ன ஆச்சு" என்று நடுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் கேசா ஆகியிருப்பாரு

    ReplyDelete
  30. "கொட்டும் மழையில் நடந்தபடி"- இதை வேறுமாதிரி யோசித்துப் பாருங்கள். "பெண்ணே... என் மனைவிக்கு முடியலை. மழையினால் இன்னும் காய்ச்சல் வந்துடப் போகுது. அவள்ட வேணும்னா குடையைக் குடுத்துட்டு நாம ரெண்டுபேரும் ஜாலியா நனைஞ்சுக்கிட்டே பேசிட்டுப் போகலாமா? இதுமாதரி யார் பின்னூட்டம் போடுவாங்க?

    ReplyDelete
    Replies
    1. ///மழையினால் இன்னும் காய்ச்சல் வந்துடப் போகுது. அவள்ட வேணும்னா குடையைக் குடுத்துட்டு நாம ரெண்டுபேரும் ஜாலியா நனைஞ்சுக்கிட்டே பேசிட்டுப் போகலாமா? ///

      ஹா ஹா ஹா என்னா ஒரு கற்பனை:)) இனிமேல் ரோட்டில எந்தப் பெண்ணும் குடை பிடிச்சுப் போக முடியாது:) இந்தச் சம்பவம்தான் நினைவுக்கு வரும் உங்களுக்கு:) வல்லாரை வேறு சாப்பிட்டிட்டீங்க:)) ஹா ஹா ஹா..

      //இதுமாதரி யார் பின்னூட்டம் போடுவாங்க?///

      ஹா ஹா ஹா மனதில நினைச்சாலும் போடமாட்டாங்க:)) மனைவிமார் படிச்சிட்டால் என்ன ஆவுறது நிலைமை?:) ஹா ஹா ஹா.

      மியாவும் நன்றிகள் நெ.தமிழன்.

      Delete
  31. பூ பூக்கும் ஓசை அதை கேக்க தான் ஆசை ...


    பராவில்லை.. அதிரா தோட்டத்து பூக்களை பார்த்தே மனம் மகிழ்ந்தாச்சு...


    ஒவ்வொன்னும் ஒவ்வொரு வண்ணத்தில் மனதை பறிக்குது...

    ஃபியூஸியா மாதுளை மொக்கு மாதரி இருக்கு..

    நானும் போன வாரம் இதே மாதரி பூக்கள் படமா எடுத்து வச்சிருக்கேன்...



    வல்லாரை ஜோக் ..செம்ம

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ..

      உண்மைதான் மாதுளம் மொட்டுப்போலவேதான் இருக்கு...

      பூக்கள் படமோ.. போடுங்கோ போடுங்கோ.. ஒரு அ/ஆல்பமாக இருக்குமே போட்டு வைத்தால்..

      சிரிச்சிட்டே இருங்கோ ஹா ஹா ஹா.

      மிக்க நன்றி அனு.

      Delete
  32. உங்கள் வளவுக்குள்ளே அழகு மலர் ஆடுவதைப் பார்த்தேன் ரசித்தேன்.
    டெய்ஸியை கண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா.. வாங்கோ.. டெய்சிப்பிள்ளை, நான் காடினில் எங்கு நடந்தாலும் என்னோடயே சேர்ந்து நடப்பா.. நாய்க்குட்டி போல.., பாருங்கோ ஊசிமல்லிப் படத்திலும் இருக்கிறா.. பாதி தெரியுது... நான் கார்டினில் ஒரு இடத்தில இருந்து புல்லுப் பிடிங்கினா, அருகில் படுத்திருப்பா.. எழுந்து கொஞ்சம் தள்ளிப் போனால் கூடவே எழும்பி வந்து அருகில இருப்பா.. நம்பவே மாட்டீங்க அவவின் கதைகள் சொன்னால்:)..

      Delete
  33. “ஊசி மல்லிகை”. இங்குள்ள சாதிமுல்லை, (சாதி மல்லி) போல் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஊரில் பவளமல்லிகை தெரியும்தானே? அதேதான் ஆனா அது காம்பு ஒரேஞ் கலரில இருக்கும் இது வெள்ளை/பச்சை நிறம். ஒருவேளை அங்கு சாதிமல்லி என்பினமோ? எனக்கு சரியாத்தெரியவிலை, என் நண்பிதான் சொன்னா.

      Delete
  34. முடிவில் ஒரு தகவல் சிரிக்க வைத்து விட்டது.

    ReplyDelete
  35. வல்லாரைக்கு வந்த நிலமையைப் பார்த்து இளக்காரமாய் சிரிப்பது போல் இருக்கு வடிவேல் முகம்

    ReplyDelete
  36. ஊசிக்குறிப்பு நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  37. பாடல் கேட்க பிறகு வருகிறேன். சவுண்ட் மிக குறைச்சலா இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஓ ஸ்ரீராமுக்கு குடுத்த லிங்கை உங்களுக்கும் தர நினைச்சேன் அதுக்குள் அடுத்த கொமெண்ட்டில் சொல்லிட்டீங்க...

      Delete
  38. இந்த படம் பார்த்து இருக்கிறேன் பாட்டு கேட்ட நினைவே இல்லை.

    பாட்டு நன்றாக இருக்கிறது. குடும்பம் சேர்ந்து தோட்டத்தில் பாடி, மகிழ்வது பார்க்க நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. இந்தப் படத்தில இந்த ஒரு பாட்டு மட்டும்தான் இருக்குதென நினைக்கிறேன் கோமதி அக்கா.. இது என் மனதில பதிந்திருந்தது, அதனால தேடிப்போட்டேன்..

      ஓ நீங்க படம் பார்த்திட்டீங்க.. மகிழ்ச்சி. நான் நினைச்சேன் ஆருமே பார்த்திருக்க மாட்டினம் என...

      மிக்க நன்றிகள் கோமதி அக்கா அனைத்துக்கும்.

      Delete
  39. எங்கள் வீட்டு சின்ன தோட்டத்தில் செடிகளும்பூக்களும் தானே வளர்கின்றன நாங்கள் வளர்ப்பதில்லை ஹஹஹ

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜி எம் பி ஐயா வாங்கோ... ஆஆஆஆவ்வ் தானாக முளைக்குதோ.. ஊரில் பூவின் விதைகள் கொட்டி, தானே திரும்ப முளைக்கும்...

      மிக்க நன்றி.

      Delete
  40. மூணாவது படத்துல உள்ள பூ, எனக்கு மாதுளம் பூவை ஞாபகப்படுத்தியது. அதுவும் இப்படித்தான் பூக்க ஆரம்பித்து மாதுளை வர ஆரம்பிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அதைத்தான் மேலே அனுவும் சொல்லியிருக்கிறா நெ.தமிழன்.. சரியா மாதுளம் பூப்போல பிஞ்சுபோலவே இருக்குது...

      மிக்க நன்றி மீள் வருகைக்கு.. அதுசரி இடையில ஏதோ கறுப்பா ஹைலைட் பண்ணியிருக்கே.. ஏதும் தெரியுதோ?:) ஹா ஹா ஹா.

      Delete
  41. வாய் பேசாத அழகழகான குட்டிக்குட்டிப் பூனைகளையும்['மகளோடு டெய்ஸி இருக்கிறா:)], பூப்பூவாய்ப் பூத்து மலர்ந்து சிரித்து மணம் பரப்பும் மலர்ச் செடிகளையும் ரத்த உறவாக்கி['இப்போ பூத்திருக்கிறா அழகா'....., 'இவ பின் கார்டினில் ஒரு மர அடியில் இருக்கிறா'....., 'ஆங்ங்ங் இவ ஆரெனத் தெரியுதோ? என் “ஊசி மல்லிகை”...] மகிழ்ந்து, காண்போரையும் மகிழ்விக்கும் பாச நெஞ்சம், நான் அறிந்தவகையில் அதிராவுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது. மகிழ்ச்சி...மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அறிவுப்பசிஜி வாங்கோ..

      ஹா ஹா ஹா நீங்க எனக்காகப் போடும் பின்னூட்டம் பார்த்து எப்பவுமே உச்சி குளிர்ந்து போயிடுறேன்ன்ன் மிக்க நன்றி மிக்க நன்றி..

      ஹையோ வடக்கால புகைப்புகையா வருதே:)) மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்.. கடவுளே முருங்கிக் கொப்பும் வழுக்குதே:))

      [im] http://www.catbehaviourist.com/wp-content/uploads/2015/11/cat-in-tree-1.jpg
      [/im]

      Delete
  42. ,அழகான பூக்கள் 💐. தோட்டம் பராமரிப்பு நல்லதோர் பொழுதுபோக்கு. Stress buster.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட் வாங்கோ.. உண்மைதான் செல்லப்பிராணிகள்போல இவையும் மனதுக்கு அமைதியை/மகிழ்ச்சியைக் கொடுப்பவை.

      மிக்க நன்றி.

      Delete
  43. கருத்தும் இல்லை, குருத்தும் இல்லை என்றாலும் கருத்து இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ.. ஹா ஹா ஹா யேஸ்.. மிக்க நன்றி.

      Delete
  44. 2வது பட பியூசியா எங்கிட்ட இருக்கு. எனக்கு அதை பார்த்தா ஜிமிக்கி ஞாபகம் வரும். 1வது பியூசியா அழகு.
    Hydrangea இது ஒருத்தரம் வைத்தாலே போதும். திரும்ப வரும். என்னிடம் பிங்க் கலர்ல இருக்கு. பேப்பிள் கலர் மாறும் என்பாங்க. எனக்கு தெரியல. அடுத்த முறை வாங்கி வைக்கபோறேன்.

    டெய்சி பக்கத்தில் இருக்கும் பூவைபார்த்தால் ஊரில வைத்திருப்பாங்க போகன்வில்லா மாதிரி இருக்கு.
    // கலரைப் பாருங்கோ அப்படியே பளபள எனக் கண்ணைப் பறிக்கும்,// இது Cepe myrtle flower. எங்க வீட்டில இருந்தது. பட்டுவிட்டது. திரும்ப வாங்கி வைத்திருக்கோம்.

    மல்லிகைக்கு பொதுவா வெயில் தேவை. நிறைய பூக்கும். இம்முறை கடும் வெயில். பூச்செடிகளுக்கு தண்ணீர் 2தரம் விட்டாலும் காணாமல் இருக்கு.இலையெல்லாம் வாடி போகுது. . உங்களுக்கு பரவாயில்லை ஆத்துல தண்ணீர் எடுக்கலாம். ஹா..ஹா...

    ஹா..ஹா.. ஆரம்பத்தில் வீட்டுக்கு வாறவையை இப்படித்தான் வீடியோ,படங்கள் காட்டி வெறுப்பேத்துவாங்க. கணவருக்கு நல்ல ஹியூமன்சென்ஸ்தான். நான் பார்த்துட்டேன்..ஹா..ஹா..ஹா..//ஆருக்காவது ஏதாவது புரியுதோ என:)) ஹா ஹா ஹா.
    இல்லை.
    பிங்க் அண்ட் வைட் பூக்கள் அழகா இருக்கு. பூக்களை பார்த்தால் மனதுக்கு இதம்.
    இடைவேளை கருத்து,ஊசி இணைப்பு, ஊசிகுறிப்பு எல்லாமே அருமை அதிரா.
    பாட்டு,படம் நான் பார்க்கலை. நீங்க கொடுத்த லிங்க் ல போய் பார்க்கிறேன்.



    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ..

      //எனக்கு அதை பார்த்தா ஜிமிக்கி ஞாபகம் வரும்//

      அதுக்கு சிமிக்கிப் பூக்கள் எனத்தான் அழைப்பினம் என கோமதி அக்கா முன்பே சொன்னதாக நினைவு அம்முலு.

      //அடுத்த முறை வாங்கி வைக்கபோறேன்.//

      வையுங்கோ வையுங்கோ.. இப்போ இனி வைக்க முடியாது.

      //டெய்சி பக்கத்தில் இருக்கும் பூவைபார்த்தால் ஊரில வைத்திருப்பாங்க போகன்வில்லா மாதிரி இருக்கு//

      அப்படித்தான் அம்முலு பார்க்க இருக்கு, ஆனா இது சொஃப்ட் அதிகம்.

      Delete
    2. //பூச்செடிகளுக்கு தண்ணீர் 2தரம் விட்டாலும் காணாமல் இருக்கு.இலையெல்லாம் வாடி போகுது. . உங்களுக்கு பரவாயில்லை ஆத்துல தண்ணீர் எடுக்கலாம். ஹா..ஹா...//

      ஹா ஹா ஹா இங்கு தண்ணிப் பஞ்சம் இல்லை, நல்ல சுவையானதும்கூட... நானும் ஹோர்ஸ் பைப் பிடிச்சு வீட்டுச் சுவர் முற்றம் எல்லாம் சுழட்டி சுழட்டி அடிச்சு விட்டேன் கொஞ்சக் காலம், இல்லை எனில் நித்திரை கொள்ள முடியாத நிலைமையாகிட்டுது. இங்கு ஃபான் கூட வாங்கவில்லை.. இதுவரை தேவைப்பட்டதில்லை..

      அதிலும் சின்னவர் சொல்றார், ஏன் எங்கட வீட்டுக்கு ஏசி பூட்டாமல் விட்டீங்க . கனடாவில எல்லோரும் பூட்டியிருக்கினம் என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்படி வெக்கை வரும் என ஆருக்கு தெரியும்:) எல்லாம் கலியுகம்:)) ஹா ஹா ஹா.

      //நான் பார்த்துட்டேன்..ஹா..ஹா..ஹா..//ஆருக்காவது ஏதாவது புரியுதோ என:)) ஹா ஹா ஹா.//

      ஹா ஹா ஹா இந்த விளையாட்டு ஹைலைட் பண்ணி விளையாடுவது ஆரம்பிச்சு வச்சதே இமா றீச்சர்தான்... ஆரம்பக் காலம்:).

      படம் பாருங்கோ அஞ்சு, நல்ல கருத்துள்ள படம், நல்ல ஒருவர் ஆசையினால் எப்படி அழிந்துபோகிறார் என்பதைக் காட்டுது, ஆனா முக்கால்வாசிக் கட்டமும் சூப்பர் லொக்கேஷன்ல எடுத்திருக்கினம்... ஆசையா இருக்கு. முடிவு தான் கஸ்டமாகிடுது, ஆனா முடிவில படம்தானே இது என நினைச்சிடோணும்:)..

      மிக்க நன்றிகள் அம்முலு...

      Delete
  45. சாப்பிடாமலேயே ஆல்பத்தில் உறவு முறைகளை யாரானும் விளக்கினால் புரிந்துகொள்ள முடியாது. நல்லா சாப்பிட்டப்பறம்... சான்சே இல்லை. ஆல்பத்தில் உங்கள் படத்தையே காண்பித்து, இது யாரு என்று கேட்டாலும் ஆச்சர்யம் இல்லை.

    ஆனால் இது நடக்காது. ஏன்னா, 'சூப்பரா சாப்பாடு' என்று சொல்லியிருக்கீங்களே.. உங்கள் கணவரைத் தவிர உங்க வீட்டில் சூப்பரா யாரு சமைப்பா? அவரும் பிஸி இல்லையோ. ஹா ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா படிச்சிட்டீங்க ... இதில பொயிண்ட் எண்ணன்னா.. சிலரை வெறுப்பேத்த நினைச்சால் இது ஒரு நல்ல வழி:))..

      நான் தான் சூப்பரா சமைப்பேன்ன்.. யூப்பரா ரீ போடுவேன்ன்ன்ன்..

      ஒரு தடவை எங்களுக்கு புல்லு வெட்ட இருவர் வந்திருந்தனர், அப்போ ரீ கேட்டு, ஓம் என்றதும் போட்டுக் குடுத்தேன், கணவரிடம் சொன்னார்களாம், சூப்பர் ரீ.. இப்படி நாம் குடிச்சதில்லை என:)).. ஓடாதீங்கோ பிளீஸ் இன்னொரு சம்பவம்..கேட்டிட்டு ஓடுங்கோ:).

      கணவரின் நண்பர் குடும்பம், அந்த நண்பருக்கும் என் ரீ சூப்பரா பிடிக்கும்.. அப்போ ஒருநாள் நண்பரின் மனைவி ஃபோன் பண்ணி எனக்குச் சொன்னா..

      அதிரா இன்று காலை ரீ போட்டுக் கொடுத்தேன், என் கணவர் சொல்றார்ர் என்னதான் இருந்தாலும் அதிரா போடும் ரீக்கு வராது என என்று.. ஹா ஹா ஹா ஹையோ என்னால எத்தனை குடும்பத்தில குழப்பமோ முருகா எல்லோரையும் காப்பாத்துங்ங்ங்ங்ங்:))

      Delete
  46. Red color flower is Canation flowers..the yellow one with the daisy is butter cup flowers, blue-purple-pink color flowers are Hydrangea flowers!! I also have the flower with pink and white mixed. :)
    Nice collection Athira!!

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ் மஞ்சள்பூ மகி வாங்கோ வாங்கோ.. மிக நீஈஈஈஈஈஈஈண்ட இடைவேளையின் பின்பு தூசு தட்டியிருக்கிறீங்க உங்கள் புளொக்கை.. முடியும்போது தொடருங்கோ மகிழ்ச்சி.

      //Red color flower is Canation flowers.//
      அப்படியா சொல்றீங்க? இல்ல மகி.. ஓ இப்போ தேடிப் பார்த்தேன் கூகிள் அங்கிள் படம் காட்டுறார்.. ஆனா ஊரில் இருக்கும் கானேசன் பெரிதாக இருக்குமென்பதால் நன் இதை அப்படி நினைக்கவே இல்லை..

      மிக்க நன்றி மகி. .. தொடர்ந்து வாங்கோ ..

      Delete
  47. Replies
    1. வாங்கோ வாங்கோ.. ஆவ்வ்வ்வ் இம்முறை மூன்று சொல்லில் பதில்.. முன்னேறியிருக்கிறீங்க.. மிக்க நன்றி.

      Delete
  48. பூக்கள் அருமை. அழகாக பராமரிக்கும் உங்களுக்கு ஒரு பொக்கே தரலாம்.
    நெ.த.வின் வல்லாரை துகையால் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது வடிவேலுவின் மீம்ஸ் போடுகிறீர்களே..?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பானுமதி அக்கா வாங்கோ..

      //நெ.த.வின் வல்லாரை துகையால் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது வடிவேலுவின் மீம்ஸ் போடுகிறீர்களே..?//

      ஹா ஹா ஹா ஹையோ இதைப் படிச்சால் இப்போ நெ.தமிழன் என்னை அடிச்சுக் கலைக்கப் போறாரே ஹா ஹா ஹா:)..

      மிக்க நன்றிகள்.

      Delete
    2. வணக்கம் சகோதரி

      நான்தான் எப்பவும் கடைசி கமெண்ட்.. அதனாலென்ன.. முதலும் கடைசியுந்தான் எப்பவும் மனசில் நிற்கும்.

      வாவ் என்ன ஒரு அழகான பதிவு... ஒவ்வொரு வண்ணமயமான பூக்களும் மனதை நிறைக்கிறது. எத்தனை அழகான மரங்கள் செடி கொடிகள். பூக்கள், அதன் பெயர்கள் என தங்கள் பதிவு மனதை ரம்மியமாக்கி விட்டன.
      பூக்களின் நிறங்கள் கண்ணைப் பறிக்கின்றன.

      மனைவிக்கு உண்மையிலேயே பயந்த அந்த கணவன் அவளுக்கு பின்னாடியன்றோ வர வேண்டும். ஹா ஹா ஹா ஹா

      ஊசி இணைப்பும், ஊசிக்குறிப்பும் சிரிக்க சிந்திக்க வைத்தன. மிக அருமை.

      முதலில் அந்த கொழுக் மொழுக் பூசலாரும், தங்கள் டெய்சியும் மிக அழகு.
      அனைத்து பகிர்வினுக்கும் மனமுவந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. வாங்கோ வாங்கோ..

      கடைசியாக வந்தால் கடசியாகப் பதில் கிடைக்கும்:) முதலாவதாக வந்தால் முதலாவதா பதில் கிடைக்குமாக்கும்:) எப்பூடி என் கண்டுபிடிப்பூ?:))..

      மிக்க நன்றிகள்.

      Delete
  49. பேசாமல் நானும் தோட்டத்தில் பூ வளர்க்கப்போறன்)))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன் வாங்கோ.. வளருங்கோ வளருங்கோ..:)

      Delete
  50. ஆமா நானும் பேச வரும் போதெல்லாம் இணையம் சதி செய்கின்றது!)))ஊசிக்குறிப்பு போல))

    ReplyDelete
    Replies
    1. என் புளொக்கிலும் ஏதோ கோளாறு நேசன், திறக்க மாட்டேன் என அடம்பிடிச்சது இப்போ கொஞ்ச நாளாய்.

      Delete
  51. வல்லாரை இப்ப விலை ஏறிப்போச்சு!))) அது மட்டும் ஞாபகத்தில் இருக்கு!))

    ReplyDelete
  52. நாகரிகம் என்பது குஸ்டம்))) சினேஹாவுக்கு நாகரிகம் படிப்பிப்போம் )))

    ReplyDelete
    Replies
    1. என்ன இருந்தாப்போல ஸ்நேகாவுக்கு நாகரீகம் தெரியாதோ?.. ஹா ஹா ஹா மிக்க நன்றிகள்.

      Delete
  53. Why you did not post for a long time

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.