நல்வரவு_()_


Thursday 26 June 2014

இது பட்டிப் பொங்கல்


என்ன இது கேள்விக்குப் பதில் எழுதச் சொன்னால்ல்.. பட்டிப் பொங்கல் பொங்கப் போறாவாம் எனத்தானே அடிக்க வாறீங்க? :) வெயிட் வெயிட்... :)

தைப்பொங்கல் எல்லா வீட்டிலும் ஜனவரி 14 இல்தானே வரும் பொதுவா, அன்று எல்லோர் வீட்டிலும் பொங்குவார்கள்.. இனிப்பு சாப்பிட்டு அலுத்துவிடும்:).. உறைப்பா ஏதும் கிடைக்குமா என தேடுவோம்.. ஆனா பின்பு பட்டிப் பொங்கல் அருமையா சில வீடுகளில்தானே பொங்குவினம்.. அப்போ சாப்பிட ஆசையா இருக்குமெல்லோ.. உடனேயே பானை காலியாகிடும்:).. இப்போ புரிஞ்சிருக்குமே அதிரா ஏன் டிலே பண்ணினேன் போஸ்ட் போட என:))..(ஸ்ஸ்ஸ்ஸ் எப்பூடியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு:)) சரி இதுக்கு மேல வாணாம்ம் விஷயத்துக்கு வாறன்.

ஒவ்வொரு வீட்டுக்கும் போய் இந்தப் பத்துக் கேள்விக்குமான பதிலுக்கு.. எவ்வளவு வெடி வைக்க முடியுமோ அவ்வளவு வச்சிட்டேன்:)... இப்போ அவ்வளவும் திரும்பி வருமெல்லோ:) எறிஞ்ச பந்து திரும்பி வரும்தானே? அதனால உள்ளால உதறினாலும், காட்டிக்கொள்ளாமல்.. ஸ்ரெடியாகிக்கொண்டு தொடர்கிறேன்.

போனகிழமை இளமதி, வேலிக்கு மேலால கூப்பிட்டுச் சொன்னா.. “அதிரா இஞ்சபாருங்கோ.. இதைத்தொடருங்கோ” என:).. சரி இதென்ன எத்தனையோ கேள்விக்கு பட்டுப்பட்டென பதில் சொல்லுவன் இதெல்லாம் பெரிய விஷயமோ என நினைச்சு டக்கென ஓம் தொடர்றனே எனச் சொல்லிட்டேன்ன்:).

இப்போ என்ன பண்ணுவது? பதில் சொல்லித்தான் ஆகோணும். அதுக்குத்தான் அம்மம்மா சொல்றவ வாக்கு கொடுக்காதே, கொடுத்திட்டால் மீறாதே என.. சரி சரி எங்கிட்டயேவா?:).
==================================()()()()()===================================
1.உங்கள் 100 வது  பிறந்த நாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?

ஒவ்வொரு வருடமும் பிறந்தநாள் வீட்டோடு கொண்டாடுவதுண்டு. கொஞ்சம் பெரிதாகக் கொண்டாடியது கீ பேர்த்டே.   ஆனா என் பிறந்தநாளை நானே (எனக்கு நானே) கொண்டாட விரும்பமாட்டேன். அன்று இருந்தால் சுய அறிவோடும், மன மகிழ்ச்சியோடும், எந்த இழப்பும் இல்லாமல் இருக்கோணும்.. அப்போ குழந்தைகள் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுக்கு, ஏதும் பரிசு கொடுத்து மகிழ்விக்க விருப்பம்.
“நேற்று என்பது அனுபவம், நாளை என்பது நம்பிக்கை, இன்று என்பது ஒன்றிலிருந்து ஒன்றிற்கு மிகத் திறமையுடன் செல்வது”

 “நினைத்ததை எல்லாம் நடத்தி முடித்தவர் எவர்?,  நினைப்பவர்தான் நீ.. முடிப்பவர் அவர் (இறைவன்)”.

 2.என்ன கற்றுக்கொள்ள விரும்புறீர்கள்?

எதைப் பார்த்தாலும் கற்றுக்கொள்ள விருப்பம். எந்தக் கைவேலை ஆகட்டும், எந்த சமையல் குறிப்பாகட்டும், தையலாகட்டும்.. தோட்டச் செடி வளர்ப்பாகட்டும்... கண்ணில் படுவதெல்லாம் கற்க விருப்பம்.. பாஷை(வேற்று மொழி) படிக்க மட்டும் பிடிப்பதில்லை:).

கண்ணதாசன் சொல்லியிருக்கிறார், மனித மனம் பொதுவாக எதைப் பார்த்தாலும் அது நானாக இருக்கக்கூடாதா என எண்ணுமாம், அப்படித்தான் நானும் எதைப் பார்த்தாலும், நானும் அதைக் கற்றுக்கொண்டால் என்ன என எண்ணுவேன்.
“வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய விடயம், விரும்புகிறமாதிரி சிலவற்றை விட்டுக் கொடுக்கவும் வேண்டும் என்பது”

3. கடைசியாக சிரித்தது எப்போ? எதற்காக?

இதுக்கு எப்படி நான் பதில் சொல்வேன்? :), ஏனெனில் உர்ர்ர்ர் என்றால் அழுவேன்ன்:) உஸ்ஸ் என்றால் சிரிப்பேன் அதுதான் நான்:). பெரும்பாலும் சிரித்துக் கொண்டே இருப்பேன். சமீபத்தில் சிரி சிரி எனச் சிரித்து கண்ணால் நீர் வழிந்தோடியது... “நடுவில கொஞ்சம் டிஸ்ரேப் பண்ணுவோம்” நிகழ்ச்சி ஒன்று பார்த்து.

நாம் தான் மகிழ்ச்சியைத் தேடி, மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
“பல்லிதான் பூச்சியை நோக்கிப் போகும், பூச்சி எங்காவது பல்லியைத் தேடிச் செல்லுமோ?”:)

4. 24 மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?

இது வெளிநாட்டில் வாழ்வோருக்கு பொருத்தமான கேள்வியாக இருக்காது. ஏனெனில் இங்கு மின்சாரம் இல்லையெனில் நினைத்துப் பார்ப்பதே கஸ்டம்.. இருப்பினும் கற்பனையில் என் பதில், இரவெனில்  எல்லோரும் கையிலிருக்கும் கருவிகளை எல்லாம்:) வைத்து விட்டு, ஒன்றுகூடி கதைச்சு சிரிக்க நல்ல நேரம். மெழுகுவர்த்தி ஒளியைக் காட்டி, பிள்ளைகளுக்கும், ஊரில் இப்படியும் இருந்திருக்கிறோம் என புரிய வைக்கலாம். பகல் பொழுதாயின், அதுவும் கோடை காலமெனில் வெளியில் கார்டினில்.. அல்லது வோக் போகலாம். வின்ரர் எனில் மோல் போகலாம், அல்லது வீட்டில் கைவேலை, செய்ய பிடிக்கும்.. புத்தகம் படிக்க பிடிக்கும். மாத்தி மாத்தி உடுப்புப் போட்டுப் பார்ப்பது பிடிக்கும்.

“நித்தம் பட்டினி கிடந்தவருக்குப் பசி தெரியாது, ஆனா மூன்று வேளையும் தவறாமல் சாப்பிட்டுப் பழகியவர், ஒரு வேளைகூடப் பசி தாங்க மாட்டார்”

“மீனின்றி நீர் வாழும்.. ஆனா நீரின்றி மீன் வாழாது”

5.உங்களுடைய குழந்தையின் திருமணநாள் அன்று 
அவர்களிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

இனி இதுதான் உங்கள் குடும்பம், ஒருவரை ஒருவர் நம்பித்தான் மணவாழ்வில் இணைகிறீங்கள்.. இருவரும் ஒளிவுமறைவின்றி, விட்டுக்கொடுத்து சந்தோசமாக வாழுங்கோ.  [இதுக்குமேல என்ன சொல்வது, அதிகம் பேசினால், அட்வைஸ் என வெறுப்பு வந்துவிடுமெல்லோ அவர்களுக்கு:))]
“இல்லறம் ஒரு மகா சமுத்திரம், கணவன் அதில் கப்பல், மனைவி அதில் கலங்கரை விளக்கம், பிள்ளைகள் பயணிகள். நல்ல கலங்கரை விளக்கும், பழுதற்ற கப்பலும் இருந்தால், பயணம் சுகமானதே”

“ஒருவர் சுமையை இன்னொருவர் வாங்கிக் கொள்கிற மனப் பக்குவம்தான், மண வாழ்க்கையின் உயிர் நாடி”

6.உலகத்தில் நடக்கும் பிரச்சனைகளை உங்களால் தீர்க்க 
முடியுமென்றால் எந்த பிரச்சனையை நீங்கள் தீர்க்க விரும்புவீர்கள்.?

முதல்ல உலகில் இருக்கும் எலிகளை ஒழிக்கோணும்:)..
இல்ல உண்மையில் யாருக்குமே வாழ்வில் துன்பம் வராமல் எவ்வகையிலும் மகிழ்ச்சியாக இருக்க வைக்கலாம் என, மனிதருக்கு ஏற்படும் தேவையற்ற  துன்பங்களைப் போக்க வழிபண்ணுவேன். பிரசங்கங்கள் நடாத்துவேன்:).
“வாழ்க்கை வாழ்வதற்கே”.

7.உங்களுக்கு ஒரு பிரச்சனை அதை தீர்க்க யாரிடம் அட்வைஸ் 
கேட்க விரும்புவீர்கள்.?

இதுவரை என் கணவரிடம்தான் ஆலோசனை பெற்றிருக்கிறேன். எப்பவும் என்னால் முடிவெடுக்க முடியும், நான் எடுக்கும் முடிவு சரியானதே என எண்ண மாட்டேன். ஏதும் பொதுவான ஆலோசனை தேவை எனில் அடுத்து அப்பா, அம்மா வை கேட்டிருக்கிறேன்... அதையும் மீறினால் அண்ணன், அக்கா.. .

நான் சின்ன வயதிலிருந்தே அட்வைஸ் கேட்டு வளர்ந்தேன்ன். இது பற்றிய என் பதிவொன்று இங்கிருக்கு.. விரும்பினால் படியுங்கோ..

அப்பாவின் அட்வைஸ்

ஆனா மாறாக யார் அட்வைஸ் பண்ணினால் ஏற்றுக் கொள்வீர்கள் எனக் கேள்வி அமைந்திருந்தால்.. என் பதில்:-
ஒரு வயதுக் குழந்தையானால்கூட செவிமடுப்பேன். எனக்குத்தான் அனுபவம் அதிகம் என்றெல்லாம் எண்ண மாட்டேன், சில நேரங்களில் பிள்ளைகள் சின்னவர்கள் எனினும்.. நல்ல கருத்துக்கள் சொல்வார்கள்.

எல்லோரின் அட்வைசையும் செவி மடுப்பேன், முடிவு என் சொந்த புத்தி கலந்ததாக இருக்கும்.
“யாரிடம் வேண்டுமானாலும் ஆலோசனை கேள், ஆனா முடிவு உன்னுடையதாக இருக்கட்டும்”

8.உங்களைப் பற்றி ஒருவர் தவறான செய்தியைப் பரப்புகிறார்.  
அதைக் கேள்விப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
இல்லாத ஒரு கதையைப் பரப்பும்போது, மனம் வேதனைப் படும், கவலையாகத்தான் இருக்கும். சண்டைக்கெல்லாம் போகவே போக மாட்டேன்.. இக்னோர்தான்..

என் ஃபிரெண்டுக்குத்தான் அனைத்தையும் சொல்லி, நீயே கேட்டுக்கொள் என விட்டுவிடுவேன்ன்...  கடவுளைச் சொன்னேன்.

“பிறருடைய குறைகளிலே நாட்டம் கொண்டவராய் எப்போதும் அடுத்தவரைப் புறம் கூறிக்கொண்டே இருப்பவர், தன் குறைகளைத்தான் வளர விடுகிறார்”.

Successful people always carry two things:-
~smile to solve problems~
~silence to avoid problems~.

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்துவிட்டால்,அவரிடம் என்ன சொல்வீர்கள்?
இழப்பு என ஒருவருக்கு ஏற்படும்போது, முதலில் அவர்களுக்கு தேவைப்படுவது ஆறுதல்தான். அவரை நிறைய பேச, அழ விட்டுக் கேட்டுக் கொண்டிருப்பேன், அப்போ அவரது மனப்பாரம் கொஞ்சமாவது குறையும். நிறைய அலட்டாமல்.. கொஞ்சம் கொஞ்சம் ஆறுதல் கதைகள் சொல்வேன்.

யாருக்கும் வாழ்க்கை நிரந்தரமில்லை, நாம் எல்லோரும் ரெயினில் போகும் பயணிகளே.. , அவரவருக்கு எந்த ஸ்டேசனோ அதில் இறங்குகிறோம் அவ்வளவுதான். இன்று நீ., நாளை நாம் இதுதான் வாழ்க்கை. இன்று நித்திரையாகிறோம், நாளை எழும்புவோமா என்பது நம் கையில் இல்லை, இன்றைய நாள் என்பது ஆண்டவன் நமக்கு கொடுத்திருக்கும் ஒரு ஹிஃப்ட், அதனால் வருங்காலம் என பெரிதாக எல்லாம் எண்ணி வருந்தாமல், இன்று மட்டும் நடக்கப் போவதை நினைப்போம்.
“அழுவதன் மூலம் தடுக்கக் கூடியது ஏதுமில்லை, சிரிப்பதன் மூலம் அடையக்கூடியது ஏதுமில்லை, துடிப்பதன் மூலம் எந்தப் பரிகாரமும் கிடைப்பதில்லை”
 “விதி தவறாக இருக்குமேயானால், தெய்வம் கண்களை மூடிக் கொள்ளும், அதற்காக அழுது பலனில்லை”.

10.உங்கள் வீட்டில் நீங்கள் தனியாக இருந்தால் என்ன செய்வீங்க.?

எனக்கு இடைக்கிடை தனிமையும் பிடிக்கும். அப்போது நல்ல சத்தமாக பாட்டுப் போட்டுக் கேட்பேன். ஃபோனில் ஹேம் விளையாடுவேன். வீட்டில் ஏதும் வேலை இருப்பின் செய்வேன்.. அதாவது எல்லோரும் வீட்டில் இருக்கும்போது அவர்களோடு நேரம் செலவளிப்பதையே அதிகம் விரும்புவேன். அதனால் தனிமை கிடைக்கும்போது ஓடி ஆடிச் செய்யும் வேலைகளை முடிக்கப் பார்ப்பேன். 

சாறி உடுப்பேன், நீண்ட நாள் பாவிக்காமல் அடுக்கியிருக்கும் உடுப்புகளை மாற்றி மாற்றிப் போட்டு கண்ணாடியில் பார்ப்பேன்:). 
“எப்பவுமே அமைதியாய் இரு, எல்லாம் இருந்தும் அமைதியாய் இருக்கும் நூலகத்தைப்போல” :).


=============================================================================
போன தடவை நிறையப்பேர் வோட் பண்ணாமல் தப்பிப் போயிட்டினம்.. அதனால அதிராவோ கொக்கோ.. இம்முறை பெரிய கமெரா பூட்டியிருக்கிறேன்ன்.. வோட் பண்ணாமல் போவோரைப் பிடிச்சிடுவேன் எப்படியும், எங்கிட்டயேவா?:).. 
தொடருக்கு என்னை அழைத்த இளமதிக்கு நன்றி..
================================================================================

Monday 2 June 2014

மெய்யழகி

எல்லோருக்கும் அதிராவின் அன்பான வணக்கம்.... ஒரு குட்டி இடைவேளையின் பின், ஜஸ்ட் 6 மாதங்கள்தான்:) மீண்டும் புளொக் பக்கம் வந்தே தீரவேண்டும் எனும் வெறியோடு வந்திருக்கிறேன்.  

கோல்ட் ஃபிஸ்ஸ்ஸும் இன்னொருவரும்:) அடிக்கடி என்னை மிரட்டியபடி.. புளொக் எழுதுங்கோ என... நானும் நாளை நாளை என நாட்களை நகர்த்திக் கொண்டே வந்தேன்.. இன்று களம் இறங்கிட்டேன்.

நான் முன்பும் அடிக்கடி சொல்லுவேன், என்னதான் ஆனாலும் புளொக் எழுதுவதை நிறுத்தமாட்டேன், பின்னூட்டங்கள் வராவிட்டாலும், ஆரும் படிக்காவிட்டாலும் நான் எழுதுவதை நிறுத்தமாட்டேன் என. அதுக்கு காரணம், இதை நான் ஒரு பொக்கிஷமாக, என் டைரியாகவே நினைத்து உருவாக்கினேன்...

ஒரு காலத்தில வயசாகி:) உடல் தளர்ந்து:) நடக்க முடியாமல் ஓரிடத்தில் இருக்கும்போது, இதை புரட்டி பார்க்கையில் என்ன ஒரு, பலதும் கலந்த கலவையான உணர்வு கிடைக்கும். ஒரு ஆல்பம் பார்ப்பதைப்போல ஞாபகங்கள் வரும்...  அதுக்காகவேனும் இதை நான் தொடராமல் விடமாட்டேன்.

ஆனா நீண்ட நாட்கள் வராமல் விட்டமையால் நீங்களில்:) பலர் என்னை மறந்திருக்க மாட்டீங்க, ஆனால் அதிரா வந்தவுடன் ஓடிப்போகோணுமே .. அவ என்ன எம்மிடம் ஒழுங்கா வந்தாவா:) என எண்ணக்கூடும்:) அதில் தப்பில்லை, நான் என்ன வச்சுக்கொண்டா வஞ்சகம் செய்தேன்:).. பல சோலிகளால் இங்கு வர முடியவில்லை.

புளொக்கை மெயிண்டைன் பண்ணுவது ரொம்ப கஸ்டம், நிறைய ரைம் ஒதுக்கி ஒழுங்காக நடத்தோணும்... பின்னூட்டங்களுக்கு மதிப்புக் கொடுத்து பதில் போடவேணும், என்னிடம் வருவோர் வீட்டுக்கெல்லாம் நிட்சயம் போகோணும் என எனக்கு நிறைய கோட்பாடுகள் இருக்கு, அதுக்கு போதுமான நேரம் கிடைக்காமையால்... இடையில் மூடிக் கூட விட்டிருந்தேன்.

ஆனா வதனபுத்தகம் எனில் லைக் மட்டும் அதுவும் மொபைலில் இருந்தே.. போட்டிடலாம் அப்போ அது ஈசி என்பதால், கிடைக்கும் நேரம் அங்கு எட்டிப் பார்த்த வண்ணம் இருந்தேன்.

சரி இப்போ எதுக்கு இந்த “அலட்டல்” எல்லாம், விஷயத்து வாங்க எனத்தானே சொல்றீங்க.. சரி வந்திட்டேன்.... நீண்டகால இடைவெளிக்கும், உங்கள் வீடுகளுக்கு வராமல் இருந்தமைக்கும் “பெரியமனசு” பண்ணி இந்த அதிராவின் குட்டி மனசை:) மன்னிச்சிடுங்கோ.

---------------------------------------டொட்டட்டாங்ங்ங்----------------------------------------
என்ன போட்டு ஆரம்பிக்கலாம் ஓபினிங் செரிமனியை:) என.. மேலபார்த்து கீழ பார்த்து, சரிஞ்சு பார்த்தெல்லாம் யோசிச்சு:) சரி ஒரு பட விமர்சனத்தைப் போடுவமே, நேற்று அங்கின போட்டிட்டேன் இதை, அப்போ இங்கு போடுவது ஈசியெல்லோ:) [எப்பூடி என் கிட்னியா?:)] என ஓசிச்சு இப்போ... போடுறேன்..
படிங்கோ....
மெய்யழகி...
”மெய்யழகி”.. மெய்யாலுமே அழகுதான்.. பார்த்தால் தெரிஞ்சுகொள்ளுவீங்க ..சரி.. இப்போ அதிரா என்ன சொல்ல வாறேன்ன் ஏதும் புரியுதோ??  இல்லையெல்லோ?. சரி.. சரி விடுங்க விஷயத்துக்குப் போவம்.. :).

எனக்கு படம் பிடிச்சிருந்தா விமர்சனம் எழுத மனம் விரும்புது ... அதுதான் சொல்ல வாறேன்.. படப்பெயர் “மெய்யழகி”.

ஒரு கிராமத்துக் கதை, அதில வரும் நடிகர்கள் எல்லோருமே புதுசு என்னைப் பொறுத்து, அதனால பெயர் சொல்லமாட்டேன்(எனக்கு தெரியாது). ஹீரோயின் பெயர் மெய்யழகி.

இது கிட்டத்தட்ட ஒரு சீரியல் பார்ப்பதுபோல இருந்துது. பாட்டுக்களும் பெரிதா இல்லை, ஆனா பார்க்க ஆரம்பிச்சா இடையில் நிறுத்தவே மனம் வரவில்லை.

மெய்யழகி ஒரு கிராமத்து, வறிய குடும்பப் பெண், சின்ன வயதிலிருந்தே தாயில்லை, தந்தை குடிகாரர், எப்பவுமே குடித்துவிட்டு மயங்குவார், மெய்யழகிதான் கூட்டி வந்து சாப்பிட வைப்பார், தந்தை வீட்டைக் கவனிப்பதில்லை.

மெய்யழகிக்கு ஒரு தம்பி, கொஞ்சம் உடல் ஊனமான பிள்ளை, ஆனா அறிவு, மூளை நல்ல தெளிவாக இருக்கிறான். அவனைப் பொறுத்து அப்பா, அம்மா எல்லாமே மெய்யழகிதான் அவனுக்கு.

மெய்யழகியும் தம்பியில் மிக பாசமாக ஒரு தாயைப் போலவே பார்த்து வருகிறா. அதனால திருமணம் பேசி வருமிடமெல்லாம், தன் தம்பியையும் தன்னுடனேயே கூட்டிவர அனுமதித்தால் மட்டுமே, திருமணம் முடிப்பேன் என்கிறார், அதனால திருமணம் தடைப்பட்டுக் கொண்டே வருகிறது.

எங்கயுமே கிராமத்துக்கு ஒரு பெரியவர் இருப்பது வழமைதானே. அக்கிராமத்திலும் ஒருவர், பெயர் “பணம்”.. அவர் திருமணமாகி மனைவி குழந்தை என வாழ்கிறார், ஊர்மக்களை கவனிப்பார், மக்களுக்கும் அவரில் நல்ல விருப்பம், அவரின் மனைவி ஒரு அப்பாவி, வெகுளி.. வெளுத்ததெல்லாம் பால் என... கணவனை முழுமையாக நம்பி வாழ்கிறார். கணவனின் நலனுக்காக, சாத்திரம் பார்ப்பது கோயில் கும்பிடுவது இவரது வழக்கம்.

இந்த பணத்துக்கு மெய்யழகியில் விருப்பம் வருகிறது. அதனால் தன் மனைவி தன்னை நம்புகிறார்தானே, சுலபமாக ஏமாற்றிடலாம் என, மனைவியின் நல்ல குணத்தை வைத்தே தன் ஆசையை நிறைவேற்ற நினைத்து, அவர்களின் குடும்ப சாத்திரகாரருக்கு பணம் கொடுத்து, மனைவியிடம் சொல்ல வைக்கிறார்....

என்னவெனில்... “உங்கள் கணவருக்கு உயிராபத்து வருகிறது, அதனால உடனடியாக இரண்டாவது திருமணம் செய்து வையுங்க” என. மனைவி இதை நம்பி, தன் கணவனின் உயிர்தான் தனக்கு முக்கியம் என யாரை செய்து வைக்கலாம் என யோசித்து, மெய்யழகி மிகவும் கஸ்டப்படுகிறார், நல்ல பிள்ளை, அவளின் தம்பியையும் சேர்த்தே நாம் பார்ப்போம்... என யோசித்து மெய்யழகி வீட்டுக்கு ஓடுகிறார், திருமணம் முடிக்கும்படி கையைப் பிடித்து கெஞ்சிக் கேட்கிறார்.

மெய்யழகிக்கு பணத்தைப் பிடிக்காது, அதனால் மறுக்கிறார். இதை அறிந்து பணம் கோபம் கொள்கிறார்.. தன் மனைவி போய் கேட்டும் மெய்யழகி சம்மதிக்கவில்லையே என ஊரில் கதைக்கிறார்கள் எனக் கேட்டு அவமானமாகி விட்டதே... இதை எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டும் என... பாடுபடுகிறார்ர்....

----------.............--------------------இடைவேளை-------------.............------------------


இடைவேளையின் பின் இங்கு தொடராது 

கதை இப்படியே மிக இன்றெஸ்ட்டாக தொடர்கிறது... அனைத்தையும் எழுத மாட்டேன் இங்கு. அதனால ஆர்வம் இருப்போர் தேடிப் பாருங்கோ.. பெரும்பாலும் அமைதியான கதையை விரும்புவோருக்கும், கிராமச் சாயலை விரும்புவோருக்கும் இது பிடிக்கும்.
===============================================================================
மனித உள்ளமும் ஒரு புத்தகத்தைப் போல
அதனைப் புரட்டினால் பல பாடங்களைப் படிக்கலாம்
இந்த அரிய தத்துவத்தை உங்களுக்காக தருபவர்.. உங்கள் அன்புக்கும், பண்புக்கும், பாசத்துக்கும் உரிய “புலாலியூர்ப் பூஸானந்தா” அவர்கள்:) (< _>)
===============================================================================