Monday, 2 June 2014

மெய்யழகி

எல்லோருக்கும் அதிராவின் அன்பான வணக்கம்.... ஒரு குட்டி இடைவேளையின் பின், ஜஸ்ட் 6 மாதங்கள்தான்:) மீண்டும் புளொக் பக்கம் வந்தே தீரவேண்டும் எனும் வெறியோடு வந்திருக்கிறேன்.  

கோல்ட் ஃபிஸ்ஸ்ஸும் இன்னொருவரும்:) அடிக்கடி என்னை மிரட்டியபடி.. புளொக் எழுதுங்கோ என... நானும் நாளை நாளை என நாட்களை நகர்த்திக் கொண்டே வந்தேன்.. இன்று களம் இறங்கிட்டேன்.

நான் முன்பும் அடிக்கடி சொல்லுவேன், என்னதான் ஆனாலும் புளொக் எழுதுவதை நிறுத்தமாட்டேன், பின்னூட்டங்கள் வராவிட்டாலும், ஆரும் படிக்காவிட்டாலும் நான் எழுதுவதை நிறுத்தமாட்டேன் என. அதுக்கு காரணம், இதை நான் ஒரு பொக்கிஷமாக, என் டைரியாகவே நினைத்து உருவாக்கினேன்...

ஒரு காலத்தில வயசாகி:) உடல் தளர்ந்து:) நடக்க முடியாமல் ஓரிடத்தில் இருக்கும்போது, இதை புரட்டி பார்க்கையில் என்ன ஒரு, பலதும் கலந்த கலவையான உணர்வு கிடைக்கும். ஒரு ஆல்பம் பார்ப்பதைப்போல ஞாபகங்கள் வரும்...  அதுக்காகவேனும் இதை நான் தொடராமல் விடமாட்டேன்.

ஆனா நீண்ட நாட்கள் வராமல் விட்டமையால் நீங்களில்:) பலர் என்னை மறந்திருக்க மாட்டீங்க, ஆனால் அதிரா வந்தவுடன் ஓடிப்போகோணுமே .. அவ என்ன எம்மிடம் ஒழுங்கா வந்தாவா:) என எண்ணக்கூடும்:) அதில் தப்பில்லை, நான் என்ன வச்சுக்கொண்டா வஞ்சகம் செய்தேன்:).. பல சோலிகளால் இங்கு வர முடியவில்லை.

புளொக்கை மெயிண்டைன் பண்ணுவது ரொம்ப கஸ்டம், நிறைய ரைம் ஒதுக்கி ஒழுங்காக நடத்தோணும்... பின்னூட்டங்களுக்கு மதிப்புக் கொடுத்து பதில் போடவேணும், என்னிடம் வருவோர் வீட்டுக்கெல்லாம் நிட்சயம் போகோணும் என எனக்கு நிறைய கோட்பாடுகள் இருக்கு, அதுக்கு போதுமான நேரம் கிடைக்காமையால்... இடையில் மூடிக் கூட விட்டிருந்தேன்.

ஆனா வதனபுத்தகம் எனில் லைக் மட்டும் அதுவும் மொபைலில் இருந்தே.. போட்டிடலாம் அப்போ அது ஈசி என்பதால், கிடைக்கும் நேரம் அங்கு எட்டிப் பார்த்த வண்ணம் இருந்தேன்.

சரி இப்போ எதுக்கு இந்த “அலட்டல்” எல்லாம், விஷயத்து வாங்க எனத்தானே சொல்றீங்க.. சரி வந்திட்டேன்.... நீண்டகால இடைவெளிக்கும், உங்கள் வீடுகளுக்கு வராமல் இருந்தமைக்கும் “பெரியமனசு” பண்ணி இந்த அதிராவின் குட்டி மனசை:) மன்னிச்சிடுங்கோ.

---------------------------------------டொட்டட்டாங்ங்ங்----------------------------------------
என்ன போட்டு ஆரம்பிக்கலாம் ஓபினிங் செரிமனியை:) என.. மேலபார்த்து கீழ பார்த்து, சரிஞ்சு பார்த்தெல்லாம் யோசிச்சு:) சரி ஒரு பட விமர்சனத்தைப் போடுவமே, நேற்று அங்கின போட்டிட்டேன் இதை, அப்போ இங்கு போடுவது ஈசியெல்லோ:) [எப்பூடி என் கிட்னியா?:)] என ஓசிச்சு இப்போ... போடுறேன்..
படிங்கோ....
மெய்யழகி...
”மெய்யழகி”.. மெய்யாலுமே அழகுதான்.. பார்த்தால் தெரிஞ்சுகொள்ளுவீங்க ..சரி.. இப்போ அதிரா என்ன சொல்ல வாறேன்ன் ஏதும் புரியுதோ??  இல்லையெல்லோ?. சரி.. சரி விடுங்க விஷயத்துக்குப் போவம்.. :).

எனக்கு படம் பிடிச்சிருந்தா விமர்சனம் எழுத மனம் விரும்புது ... அதுதான் சொல்ல வாறேன்.. படப்பெயர் “மெய்யழகி”.

ஒரு கிராமத்துக் கதை, அதில வரும் நடிகர்கள் எல்லோருமே புதுசு என்னைப் பொறுத்து, அதனால பெயர் சொல்லமாட்டேன்(எனக்கு தெரியாது). ஹீரோயின் பெயர் மெய்யழகி.

இது கிட்டத்தட்ட ஒரு சீரியல் பார்ப்பதுபோல இருந்துது. பாட்டுக்களும் பெரிதா இல்லை, ஆனா பார்க்க ஆரம்பிச்சா இடையில் நிறுத்தவே மனம் வரவில்லை.

மெய்யழகி ஒரு கிராமத்து, வறிய குடும்பப் பெண், சின்ன வயதிலிருந்தே தாயில்லை, தந்தை குடிகாரர், எப்பவுமே குடித்துவிட்டு மயங்குவார், மெய்யழகிதான் கூட்டி வந்து சாப்பிட வைப்பார், தந்தை வீட்டைக் கவனிப்பதில்லை.

மெய்யழகிக்கு ஒரு தம்பி, கொஞ்சம் உடல் ஊனமான பிள்ளை, ஆனா அறிவு, மூளை நல்ல தெளிவாக இருக்கிறான். அவனைப் பொறுத்து அப்பா, அம்மா எல்லாமே மெய்யழகிதான் அவனுக்கு.

மெய்யழகியும் தம்பியில் மிக பாசமாக ஒரு தாயைப் போலவே பார்த்து வருகிறா. அதனால திருமணம் பேசி வருமிடமெல்லாம், தன் தம்பியையும் தன்னுடனேயே கூட்டிவர அனுமதித்தால் மட்டுமே, திருமணம் முடிப்பேன் என்கிறார், அதனால திருமணம் தடைப்பட்டுக் கொண்டே வருகிறது.

எங்கயுமே கிராமத்துக்கு ஒரு பெரியவர் இருப்பது வழமைதானே. அக்கிராமத்திலும் ஒருவர், பெயர் “பணம்”.. அவர் திருமணமாகி மனைவி குழந்தை என வாழ்கிறார், ஊர்மக்களை கவனிப்பார், மக்களுக்கும் அவரில் நல்ல விருப்பம், அவரின் மனைவி ஒரு அப்பாவி, வெகுளி.. வெளுத்ததெல்லாம் பால் என... கணவனை முழுமையாக நம்பி வாழ்கிறார். கணவனின் நலனுக்காக, சாத்திரம் பார்ப்பது கோயில் கும்பிடுவது இவரது வழக்கம்.

இந்த பணத்துக்கு மெய்யழகியில் விருப்பம் வருகிறது. அதனால் தன் மனைவி தன்னை நம்புகிறார்தானே, சுலபமாக ஏமாற்றிடலாம் என, மனைவியின் நல்ல குணத்தை வைத்தே தன் ஆசையை நிறைவேற்ற நினைத்து, அவர்களின் குடும்ப சாத்திரகாரருக்கு பணம் கொடுத்து, மனைவியிடம் சொல்ல வைக்கிறார்....

என்னவெனில்... “உங்கள் கணவருக்கு உயிராபத்து வருகிறது, அதனால உடனடியாக இரண்டாவது திருமணம் செய்து வையுங்க” என. மனைவி இதை நம்பி, தன் கணவனின் உயிர்தான் தனக்கு முக்கியம் என யாரை செய்து வைக்கலாம் என யோசித்து, மெய்யழகி மிகவும் கஸ்டப்படுகிறார், நல்ல பிள்ளை, அவளின் தம்பியையும் சேர்த்தே நாம் பார்ப்போம்... என யோசித்து மெய்யழகி வீட்டுக்கு ஓடுகிறார், திருமணம் முடிக்கும்படி கையைப் பிடித்து கெஞ்சிக் கேட்கிறார்.

மெய்யழகிக்கு பணத்தைப் பிடிக்காது, அதனால் மறுக்கிறார். இதை அறிந்து பணம் கோபம் கொள்கிறார்.. தன் மனைவி போய் கேட்டும் மெய்யழகி சம்மதிக்கவில்லையே என ஊரில் கதைக்கிறார்கள் எனக் கேட்டு அவமானமாகி விட்டதே... இதை எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டும் என... பாடுபடுகிறார்ர்....

----------.............--------------------இடைவேளை-------------.............------------------


இடைவேளையின் பின் இங்கு தொடராது 

கதை இப்படியே மிக இன்றெஸ்ட்டாக தொடர்கிறது... அனைத்தையும் எழுத மாட்டேன் இங்கு. அதனால ஆர்வம் இருப்போர் தேடிப் பாருங்கோ.. பெரும்பாலும் அமைதியான கதையை விரும்புவோருக்கும், கிராமச் சாயலை விரும்புவோருக்கும் இது பிடிக்கும்.
===============================================================================
மனித உள்ளமும் ஒரு புத்தகத்தைப் போல
அதனைப் புரட்டினால் பல பாடங்களைப் படிக்கலாம்
இந்த அரிய தத்துவத்தை உங்களுக்காக தருபவர்.. உங்கள் அன்புக்கும், பண்புக்கும், பாசத்துக்கும் உரிய “புலாலியூர்ப் பூஸானந்தா” அவர்கள்:) (< _>)
===============================================================================

38 comments :

 1. விமரிசனம் அருமை மியாவ் ..இனிக்கு பார்க்கணும் கண்டிப்பா

  ReplyDelete
 2. mee the firsttttu...... vadai enakkeee...

  ReplyDelete
 3. மெய்யழகி மெய்யாலுமே அழகுதான்..

  ReplyDelete
 4. மெய்யழகி எடுத்த முடிவு மெய்யாலும் அழகாக உள்ளது.

  மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி ! ;)

  ReplyDelete
 5. குருவே அப்ப்ரூவல் ஆஆ அவ்வ்வ்வ்

  ReplyDelete
 6. குருவே இப்போ தான் தூசி துடசீன்களா ....பருவாயில்லை ....அப்புறம் மெய்யழகி விமர்சம் சூப்பர் ...முக நூலிலும் படிச்சிட்டேன்

  ReplyDelete
 7. வாங்கோ.. வாங்கோ.. அஞ்சூ.. ஆகா அஞ்சுவைப் பார்த்து எவ்ளோ நாளாச்சூ:).. மியாவும் நன்றி.

  ReplyDelete
 8. ஆஹா வாங்கோ புதுமாப்பிள்ளை சிவா.. நலம்தானே.. முந்தி சிங்கிளா இருந்தபோதே நீங்க பிசி.. குடும்பமாகிட்டீங்க.. மியாவும் நன்றி சிவா.

  ReplyDelete
 9. வாங்கோ ராஜேஸ்வரி அக்கா.. நலம்தானே.. இனி நானும் எல்லோர் வீட்டுக்கும் வரோணும்.. வருவேன்ன்.. மியாவும் நன்றி.

  ReplyDelete
 10. வாங்கோ கோபு அண்ணன்.. நலம்தானே.. பேரன் பிறந்ததாக கேள்விப்பட்டேன் மிக்க மகிழ்ச்சி...மியாவும் நன்றி.

  ReplyDelete
 11. ஆஹா.. சிஷ்யையே.. நலமோ?.. எங்கட கிரேட் குரு நலமோ? :)... இன்று தூசு தட்டினதால எனக்கு வீஸ் பண்ணுது.. ஆச்சூஊஊஊஉம்ம்.. தும்மல் வேறு:) எச்சூச்ச்மீஈஈ:)...

  சிஷ்யை தூசி தட்டியதைக் கண்டு:) மியும் தட்டினேன்.. தூசைத்தான்.. இது எப்பூஊடி இருக்கு??:) மியாவும் நன்றி கலை.

  ReplyDelete
 12. மெய்யழகின்னு ஒரு படம் வந்திருக்கா? நீங்க சொல்லித்தான் தெரியுது அதிரா. அழகா விமர்சனம் பண்ணியிருக்கீங்க. இடைவேளைக்கப்புறம் சொல்லமாட்டேன்னு சொல்லி ஆர்வத்தை தூண்டிவிட்டிருக்கீங்க. மறுபடி ப்ளாக் பக்கம் வந்ததற்கு வாழ்த்துக்கள் அதிரா. தொடர்ந்து எழுதுங்க.

  ReplyDelete
 13. ஆ..ஆஹா அதிரா வந்திட்டா. ஒருமாதிரி தூசியெல்லாம் தட்டி முடிச்சாச்சா.நீங்க மறுபடியும் வந்ததற்கு (புளொக் ல் எழுத)நன்றிகள்.
  உங்கட ஸ்டைல் ல பட விமர்சனத்தோட அட்டகாசமான வருகை.நானும் நிச்சயம் பார்க்கிறேன்.

  ReplyDelete
 14. மெய்யழகின்னு ஒரு படம் வந்திருக்கா? அழகா விமர்சனம் பண்ணியிருக்கீங்க. இடைவேளைக்கப்புறம் சொல்லமாட்டேன்னு சொல்லி நல்ல சஸ்பென்ஸோட நிறுத்திட்டீங்களே!. மறுபடி ப்ளாக் பக்கம் வந்ததற்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்க.

  ReplyDelete
 15. //நீண்டகால இடைவெளிக்கும், உங்கள் வீடுகளுக்கு வராமல் இருந்தமைக்கும்// என்னதிது அதிரா? இதெல்லாம் எங்களுக்குப் பழகிப்போய்ப் பலகாலமாச்சே? இதுக்குப் போய் மன்னிப்பு கின்னிப்பு;)ந்னு பெரிய வார்த்தையெல்லாம் பேசிட்டு! :)

  ப்ளாகில பதிவு வந்தா, வந்து ஆசுவாசமா கதிரையில இருந்து தேத்தண்ணி குடிச்சுட்டு, கதைச்சிட்டுப் போவம். வரலைன்னா நாங்க பாட்டுக்கு எங்க வேலையப் பாத்துகிட்டு இருப்போம். (இங்கே நாங்க என்பது நான், நான் நான் மட்டுமே!) நாங்கள்லாம் வதனபுத்தகமெல்லாம் இன்னும் வரலையல்லோ? ;) :) பூஸார் என்ன ஆனாரோ..எப்படியோ, நல்லா இருந்தாச் சரி எண்டு அப்பப்ப நினைக்கிறதுக்கு மறக்கிறதில்லை.

  மெய்யழகி படம் வந்திருப்பதை தெரிந்துகொண்டேன், நேரம் கிடைக்கையில் பார்த்துடுவோம்! ;)

  ReplyDelete
 16. //Your comment has been saved and will be visible after blog owner approval.// ஒஹ்...அதுவும் அப்படியா? வெல் டன் அதிராவ்..மேல வைங்கோ! :)

  ReplyDelete
 17. வணக்கம் அதிரா!..

  நலமாக இருக்குறீங்களோ?.. என்ன நீங்களுமா இந்தப்பக்கம் வந்து இத்தனை நாட்களாச்சு..
  எனக்குத்தான் இருண்டதும் விடிஞ்சதும் தெரியாமல் போயிருக்கு... பரவாயில்லை.

  மெய்யழகி விமர்சனம் நன்றாக இருக்கிறது. படங்கள் பார்ப்பது மிகக் குறைவு. பார்ப்போம் பெயரைக் குறித்து வைத்திருக்கின்றேன்...
  பின்னர் எப்பவாவது தோணும்போது பார்க்கின்றேன்.

  வாழ்த்துக்கள் அதிரா!

  ReplyDelete
 18. வந்ததும் தந்ததும் வம்புக்கு பாடியதும்
  சிந்தைக்கு வைக்கின்ற செக்கு !

  அதிராவா கொக்கா யார்கிட்ட அப்டின்னுதானே நெனைக்கிறீங்க
  ம்ம் நல்லது, படம் பார்த்தேன் பறவை இல்லை .....!

  நான் உங்கள் வலைக்கு வந்ததும் வரமுடியல்ல உடனே மனசில் பட்டது இந்த மியாவ் கிறுக்கு பயபுள்ள என்னை ப்ளாக் பண்ணிட்டுதோ என்று !
  தப்புத்தான் தப்புத்தான் ......!

  வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  ReplyDelete
 19. வாங்கோ கீத மஞ்சரி வாங்கோ.. நான் வந்திட்டென் எனத்தான் நினைக்கிறேன்ன்.. ஐ மீன் புளொக்குக்குள் :) ஆனா முழுசா வந்திட்டேனா எனத் தெரியல்ல... விக்கிரமாதித்தன் போல விடாப்பிடியாக இருக்கிறேன் நான்:).

  படம் பாருங்கோ .. மியாவும் நன்றி.

  ReplyDelete
 20. வாங்கோ அம்முலு வாங்கோ... தூசு தட்டி பாதியில தும்மல் வந்து வோட்ல அட்மிட்டாகி :).. இடையில காணாமல் போயி... இப்போ வந்திருக்கிறேன் மீண்டும்.. அதிராவோ கொக்கோ.. மியாவும் நன்றி அம்முலு.

  ReplyDelete
 21. ஆஹா வான்ஸ் வந்திருக்கிறாகா.. ஆனா பிறகு வருவாகளாம்ம்ம்ம்... வாங்கோ வான்ஸ்ஸ்.. படம் பார்த்திட்டீங்களோ? :)

  மியாவும் நன்றி.

  ReplyDelete
 22. வாங்கோ வியபதி வாங்கோ நலமாக இருக்கிறீங்களோ.. நீண்ட காலத்துக்கப்புறம் சந்திக்கிறோம்ம்.. ஓம் சூப்பர் படம்.. பாருங்கோ பிடிக்கும்... முடிவுபற்றி எனக்கு கருத்து சொல்ல தெரியல்ல.. முடிவு சரியென என் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்குது.

  ReplyDelete
 23. ஹா..ஹா..ஹா.. வாங்க மகி வாங்கோ...

  என்னாது மன்னிப்பு கேட்க வாணாமோ?:) ஸ்ஸ்ஸ் எவ்ளோ பெரிய மனசு உங்களுக்கு.. சரி வாணாம் விடுங்கோ:)

  ரீ குடியுங்கோ.. இப்போதான் சுட்டேன் முக்கூட்டுக் கடலை வடை சாப்பிடுங்கோ...

  //ஒஹ்...அதுவும் அப்படியா? வெல் டன் அதிராவ்..மேல வைங்கோ! :)/// ஹா..ஹா..ஹா.. வாழ்க்கையில் முதேல் தடவையா போட்டிருகிறேன்ன் வாழ்த்துங்கோ :))..

  மியாவும் நன்றி மகி.

  ReplyDelete
 24. ஆவ்வ்வ்வ் இளமதி வந்திருக்கிறாக.. வாங்கோ வாங்கோ.. தேடி வந்து பின்னூட்டம் போட்டமைக்கு மியாவும் நன்றி.

  இல்ல இளமதி.. கொஞ்ச நேரம் ஒதுக்கி ஏதும் பிடித்த படம் அல்லது நிகழ்ச்சி பார்க்கோணும்.. மனதுக்கு றிலாக்ஸ் ஆக இருக்கும்.

  மியாவும் நன்றி.

  ReplyDelete
 25. ஆஹா வாங்கோ சீராளன் வாங்கோ.. கவிதையைக் கையிலயே கொண்டு திரியிறீங்க:)

  என்னது படம் பார்த்தீங்க பறவை இல்லையோ?:) ஹா..ஹா..ஹா.. அதில் பறவை ஏதும் இல்லை.. பப்பிதான் வருது:).

  நீங்களுமா? எனக்கு இமா நல்ல சண்டை போட்டு:) மெயிலே அனுப்பியிருந்தா என்னை புளொக் பண்ணிட்டீங்க.. பறவாயில்லை விடுங்கோ என.. ஹா..ஹா..ஹா.. பின்பு நான் என் நிலைமையைப் புரிய வைக்கப் பட்ட பாடு:)

  அது கொஞ்சக் காலம் புளொக்கை ஹைட் பண்ணியிருந்தேன்.. அதனால பலர் நினைச்சிட்டினம் தம்மை புளொக் பண்ணிட்டேன் என.. ஹையோ முருகா... இதுக்குத்தான்.. முச்சந்தி சாத்திரியார் சொன்னவர்.. பிள்ள நீ கதவை இறுக்கிப் பூட்டிப் போட்டிருந்தாலும்.. பிரச்சனை வீட்டுக்குள் வந்து தட்டும் என:).

  மியாவும் நன்றி சிராளன்.

  ReplyDelete
 26. வாங்க பூசாரே வாங்க நலம்தானே மீண்டும் பார்க்கத்தூண்டும் படம் மெய்யழகி!

  ReplyDelete
 27. தூடு தட்டிய நாட்குறிப்பிள் நானும் பால்க்கோப்பி கேட்டு வந்தேன் என்ற ஞாபகம் இருக்கும் பின் ஒரு காலத்தில்:)))

  ReplyDelete
 28. தத்துவம் சூப்பர்ர்ர்:)) நிஜமாகத்தான் சினேஹா மீது சத்தியம்:))

  ReplyDelete
 29. இனிய வணக்கம் அதிரா!

  உங்களைத் தொடர் பதிவு ஒன்றிற்கு அழைத்துள்ளேன்!

  வருகை தாருங்கள்! மிக்க நன்றி!

  ReplyDelete
 30. பெயரைக் குறிச்சு வைச்சிருக்கிறன். படம் கிடைக்குமா என்று தேடிப் பார்க்கிறன் அதீஸ்.

  ReplyDelete
 31. வாங்கோ நேசன்... ஓ பால் கோப்பி நான் தராட்டிலும்.. நீங்க உங்கள் வீட்டில் வைத்துக் கொடுத்ததை எல்லாம் மறக்க மாட்டேன்ன்ன்:) வயசானாலும் மீ ஸ்ரெடியாயிருப்பேனாம் என முச்சந்திச் சாத்திரியார் சொல்லியிருக்கிறார்:).

  மிக்க நன்றி நேசன்.

  ReplyDelete
 32. வாங்கோ இளமதி.. நல்லவேளை எப்போ எனச் சொல்லாமல் விட்டிட்டீங்க:).. தொடர்வேன்ன்ன்.. அழைத்தமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 33. வாங்கோ இமா.. இதோ இருக்கே பாருங்கோ.. மிக்க நன்றி.

  https://www.youtube.com/watch?v=VTdjl9gC9-U

  ReplyDelete
 34. நன்றி அதிரா. நாளை பார்க்க நேரம் கிடைக்கும். சரியான நேரம் பார்த்து அனுப்பியிருக்கிறீர்கள்.

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.