அதை “ஆஷா போஸ்லே அதிரா” விடம் காண வாருங்கள்!!!...
சரி சரி ஆரும் முறைக்காதீங்க:)... பதிவிட நிறைய விஷயங்கள் இருக்கு, ஆனா நேரம்தான் இடம் கொடுக்குதில்லை(இதை எத்தனை தரம் தான் நானும் சொல்லுவதாம்?:))..இம்முறை நான் அதிகம் பேசப் போவதில்லை:) என் கை வண்ணம்தான் பேசப்போகிறது(அதாரது முறைக்கிறதூஊஊஊ?:).
இது முன்பு அஞ்சு செய்து போட்டிருந்தா,அதேபோல செய்தேன்.., அதே கடையில்:) ஃபிரேம் வாங்கிப் போட்டிருக்கிறேன்:).ஆனா, முகம் கொஞ்சம் கஸ்டமாகிவிட்டது செய்ய.
இதனை செய்து என்னோடு வேலை பார்க்கும், இங்கத்தைய ஒரு நண்பிக்கு கொடுத்தேன், அவவுக்கு சந்தோசம் எனில் சொல்ல முடியாது, அதுக்காக ஒரு தங்கியூ கார்ட்டும், சொக்லேட்டும் வாங்கித் தந்தா..
=================================================================
இடைவேளை:)
அடுத்த வாரம் முதல், நாங்க “அந்தாட்டிக்கா” ஹொலிடே போகிறோம்... அதனால, எங்கே பாடலும் கேட்கவில்லை..:) ஆஷா போஸ்லே அதிராவையும் காணல்லியே:) என ஆரும் யோசிச்சிடாதீங்க:).. புதுவருடப் பொங்கலோடு சந்திப்போம்ம்ம்:)
===================இடைவேளை முடிஞ்..போச்ச்ச்:)====================
இது என்னாது?:) உங்களுக்கு ஏதும் புரியுதா?.. இது இங்கிருக்கும் ஒருவர்(வலையுலகில்:)) அவவுக்கு சமீபத்தில் சுவீட் 18:) பேர்த்டே வந்தது[ அதிராவுக்கு சுவீட் 16 ஆக்கும்:)) சொன்னாத்தானே எல்லோருக்கும் புரியுது:) ]அவவுக்காக செய்தேன்.. ஆராக இருக்கும் என்பதனை கடல்ல:) தேடிக் கண்டு பிடிங்கோ:).
========================================================================
இந்தப் படத்தை நன்கு உற்றுப் பாருங்க:) இதில எங்காவது மஞ்சள் பூ மலர்ந்திருக்கா? இல்லையில்ல?:) ஆனாலும் இதுக்கும் மஞ்சள் பூவுக்கும் ஒரு தொடர்பிருக்குது. என்னவெனில் நான் புதுசா ஒரு குயிலிங் ஸ்ரூல் வாங்கினேன், புதுசா வாங்கிய உஷாரில:) இதனை மளமளவென செய்தேன்.. செய்து முடிக்கும் தறுவாயில், மெசேஜ் கிடைச்சுது.. மகிக்கு ஒரு குட்டித் தேவதை பிறந்திருப்பதாக. உடனேனே இப்படம் அக்குட்டிக்கே என மனதில் நினைத்தேன். ஏற்கனவே யோசித்திருந்தால், மஞ்சள் பூவைக் கலந்திருப்பேன்.. யோசிக்கவில்லை.
இந்தப் படத்தை நன்கு உற்றுப் பாருங்க:) இதில எங்காவது மஞ்சள் பூ மலர்ந்திருக்கா? இல்லையில்ல?:) ஆனாலும் இதுக்கும் மஞ்சள் பூவுக்கும் ஒரு தொடர்பிருக்குது. என்னவெனில் நான் புதுசா ஒரு குயிலிங் ஸ்ரூல் வாங்கினேன், புதுசா வாங்கிய உஷாரில:) இதனை மளமளவென செய்தேன்.. செய்து முடிக்கும் தறுவாயில், மெசேஜ் கிடைச்சுது.. மகிக்கு ஒரு குட்டித் தேவதை பிறந்திருப்பதாக. உடனேனே இப்படம் அக்குட்டிக்கே என மனதில் நினைத்தேன். ஏற்கனவே யோசித்திருந்தால், மஞ்சள் பூவைக் கலந்திருப்பேன்.. யோசிக்கவில்லை.
சரி, இதில இன்னொரு கதையும் இருக்குது:) கவனமாப் படிங்கோ. நான் அஞ்சுவோடு ஒரு போட்டி வச்சேன்... அது என்னான்னா.. மகிக்கு என்ன பேபி கிடைக்கும் எனச் சொல்லுங்க.. அதிராவோ அஞ்சுவோ கரெக்ட்டா சொல்கிறோம் எனப் பார்ப்போம் என:)
சரி இனி எமது:) கொசுமெயில்:) உரையாடலைப் பார்ப்போமே:)
[இது அதிரா]
அஞ்சூஊஊஊஊஊஊ ஒரு போட்டி வைப்போமா?
மகிக்கு குழந்தை கிடைக்கவிருப்பது உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும். அதுபோல வளைகாப்பு படம் உங்களுக்கும் கிடைச்சிருக்கும்:).
இப்போ போட்டி என்னவெனில், வளைகாப்புப் படத்தின் மூலம் மகிக்கு என்ன குழந்தையாக இருக்கும் என படம் பார்த்துச் சொல்லுங்கோ.. மீ மனதில நினைத்திட்டேன்ன்.. நீங்க சொன்னதும் சொல்கிறேன். அடுத்த மாதம் குழந்தை கிடைக்கட்டும்.. ஆர் சொன்னது சரியென பிறைஸ் கொடுப்போம் நமக்கு நாமே:)).. உஸ்ஸ்ஸ்ஸ் எல்லாமே நமக்குள் இருக்கட்டும் இப்போ..
[இது அஞ்சு]
BOYYYYYYYYYYYYYYYYYY:))))
How did u know that I knew :))
KARRRRRRRRRRRRRRRRRRRRRRRRRR:))) NAAN GOOD GIRL EVLO NAAL MAINTAIN PANNEN PAARUNGA :))
[இது அதிரா]
//How did u know that I knew :))//
நாம் யாவும் அறிவோம்:) அதுதான் புலாலியூர்ப் பூஸானந்தா:) ஹா..ஹா..ஹா....
ஹா..ஹா..ஹா.. நல்லாவே மெயிண்டைன் பண்ணுறீங்க:)... கீப் இட் மேல:).. நா மட்டும் என்னவாம்ம்ம்?:)
சரி சரி எனக்கென்னமோ கேர்ள் எண்டுதான் மனதில தோணுது... மகி உடம்பு வச்சிருப்பதுபோலவும், கணவர் மெலிஞ்சிருப்பது போலவும் தெரியுது, அப்படியெனில் பொம்பிளைப்பிள்ளை என அம்மம்மா:) சொல்லுவா:)).. ஓகே வெயிட் அண்ட் சீயா:))
[இது அஞ்சு]
ஆமாம் அதிஸ் :)) ..தெய்வமே பூசானந்தா ...:) அடுத்த பிரித்தானிய பிரதமர் யாருன்னு சொல்லுங்களேன் :)) உங்க கணிப்பு பார்ப்போம்
ஆனா நான் யோசிச்சேன் ..உடம்பு வச்சா ஆண் குழந்தைன்னு ..ஆனா மகி வகை வகையா கலர்ஃபுல்லா வெஜ் உணவு சாப்டரா ..அது ஒன்று confirms ..இட்ஸ் எ கேர்ள் :))
..லெட்ஸ் வெயிட் அண்ட் seeee :)))///////////
முடிவில இருவருமே girl baby என முடித்தோம்ம்:).. இப்போ பரிசை எப்படிப் பங்கு போடுவது?:)).
ஊசிக்குறிப்பு:
முடிவு என்னான்னா.. நாங்க, ஆரும் அடிச்சாலும்:) உதைச்சாலும்:) எந்தக் கதைகளையும் வெளில சொல்ல மாட்டமாக்கும்:).. ஏனெண்டால் நாங்க “4ம் நம்பராக்கும்” :)... சரி சரி இதுவும் நமக்குள்ள இருக்கட்டும்:).
=============================================================================================
================================================================================
அனைவருக்கும் இனிய கிரிஸ்மஸ் - புதுவருட வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்
இனி உங்கள் அனைவரையும் புதுவருடப் பொங்கலோடு சந்திக்கும் வரை, உங்களிடமிருந்து விடை பெறுபவர்.. உங்கள் பேரன்புக்கும்:) பெருமதிப்புக்கும் உரிய:) புலாலியூர்ப் பூஸானந்தா:).
^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ =^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^
|
Tweet |
|
|||
Me the first! :)
ReplyDeleteGot up to feed the baby! :) thx Athirav! :D & thx angel akka!
ReplyDeleteShall come in my morning time..until then u guys enjoy!
Thx to all my friends!! See yaa!!
அதிராஆஆஆஆஆஆஆ.....:)
ReplyDeleteஆச்சரியத்தால் துரந்த வாயை மூட முடியேலை..:)))
இருந்திருந்து அசத்திட்டீங்களே!.. சூப்பர் கார்ட் எல்லாம்!
இனியென்ன இப்பிடியே தொடர்ந்து செய்து
சாதியுங்கோ.. மிக மிக அருமை!
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
த ம3
My Vote No. 3
ReplyDeleteஇந்த பதிவு பூராவும் ஜாலியா சூப்பராக்கீதூஊஊஊஊ.
ReplyDeleteபகிர்வுக்கு பாராட்டுக்கள். நன்றிகள்.
பப்பி நீங்க சொல்லுறதுபோல இல்லையே. இதுவும் முகம் நல்லாத்தானே இருக்கு!
ReplyDeleteமனிசருக்கும் பல்வேறு பாவனை முகம் போல பப்பிக்கும் வரும்தானே..:)
மகியின் பேபிக்கு செய்த கார்ட்டும் சூப்பர்தான்!
மஞ்சள் பூவை கற்பனையில் செருகி வைத்துப் பார்த்திட்டேன்!..:)
நத்தார்க் கார்ட்டுகளும் சிம்பிள் ஆனால் சிறப்பு!
நல்ல நீற் வேர்க்! கலர் கொம்பினேஷனும் அற்புதம்!
அத்தனையும் நல்லா இருக்கு அதிரா...
மனமுவந்த நல் வாழ்த்துக்கள்!
ஹாஆ.. அந்தாட்டிக்கா பயணமோ.. ஓ.. சரி சரி!
பத்திரமாபோய் கிறிஸ்மஸ், வருடப்பிறப்பையும்
அசத்தீட்டு வாங்கோ!
பொங்கலுக்குத்தான் இங்கை மீண்டுமோ..:(
சரி! சரி! நேரங்கிடக்கும்போது எங்களையும் எட்டிப்பாருங்கோ!
இனிய நத்தார், புதுவருட வாழ்த்துக்கள் அதிரா!
//இது என்னாது?:) உங்களுக்கு ஏதும் புரியுதா?.. இது இங்கிருக்கும் ஒருவர்(வலையுலகில்:))//
ReplyDeleteபுரியுது, புரியுது, நல்லாவே புரியுது. ;)
அஞ்சு மகியின் பேபிக்காக செய்த கார்ட்டும் ரொம்ப அழகு!
ReplyDeleteவாழ்த்துக்கள் அஞ்சு!
பிறந்த நாளைக்கண்ட அஞ்சுவுக்கும் இங்கும் என் அன்பான நல் வாழ்த்துக்கள்!
//அனுபவம் புதுமை!!!
ReplyDeleteஅதை “ஆஷா போஸ்லே அதிரா” விடம் காண வாருங்கள்!!!... //
புதிய அனுபவத்திலேயே குயில்லிங் வேலைகளில் சக்கை போடு போட்டுட்டீங்கோ [நிஜமாவே நீங்க செய்தது தான் என நான் நிச்சயமாக நம்புகிறேன், ஏனெனில் எங்கள் அதிராவுக்கு, வேறெங்கும் போய் களவாடத்தெரியாதூஊஊ]
அது என்ன ஆஷா போஸ்லே ?
வாங்கிய விருதோ?
வெறும் அதிராவே நல்லா இருந்துச்சு.
//அடுத்த வாரம் முதல், நாங்க “அந்தாட்டிக்கா” ஹொலிடே போகிறோம்... அதனால, எங்கே பாடலும் கேட்கவில்லை..:) ஆஷா போஸ்லே அதிராவையும் காணல்லியே:) என ஆரும் யோசிச்சிடாதீங்க:).. புதுவருடப் பொங்கலோடு சந்திப்போம்ம்ம்:)//
ReplyDeleteஅடடா, நல்லபடியா ஜாக்கிரதையாப் போயிட்டு, ஜாக்கிரதையா சீக்கரமா வந்து சேருங்கோ.
பயணம் இனிமையாக அமைய வாழ்த்துகள்.
மேலிருந்து கீழ் மூன்றாவது படத்தில் உள்ள ஒட்டகம் பொம்மை சூப்பராக உள்ளது.
ReplyDeleteஎனகு மிகவும் பிடித்துள்ளது.
அன்பளிப்பா அனுப்பி வையுங்கோ.
அதுபோல அந்தாண்டை உள்ள பூனைக்குட்டி பொம்மைகள் இரண்டும் நல்லாயிருக்கு.
அவற்றையெல்லாம் ஒப்பிடும்போது நடுவே உள்ள அதிராமியாவ் [தாடி] படம் சுமார் தானாக்கும். ;)
Awwwwww:) good morning friends....:) l woke up at 5 AM !!! Came to say hi. Shall be back in a while :)
ReplyDeleteகலகலப்பாய் கண்களுக்கு விருந்தளித்த பரிசுகள்..பாராட்டுக்கள்..!
ReplyDeleteரசிக்க வைக்கும் கைவண்ணம்... எழுத்துநடை அசத்தல்... பாராட்டுக்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
Poosar, everything looks so beautiful. Mahi already told me she is having a girl. So I did not guess anything.
ReplyDeleteபூனை நடை ,,தப்பு தப்பு ..எழுத்து நடையும் ,பூனையின் நக கீறலும்...அதாங்க ,கைவண்ணமும் அருமை !
ReplyDeleteத .ம 7
பூனை நடை ,,தப்பு தப்பு ..எழுத்து நடையும் ,பூனையின் நக கீறலும்...அதாங்க ,கைவண்ணமும் அருமை !
ReplyDeleteத .ம 7
வாழ்த்துக்கள் மீஈஈஈஈஈஈ யாஆஆஆ .கைவண்ணம் மனத்தைக் கிள்ள
ReplyDeleteகதை பேசிச் செல்லும் மீஈஈஈஈயா .....உன் எண்ணம் எதுவோ அது போல்
உதிக்கட்டும் திருநாளிங்கே .
ஹப்பா ஒரு வழியா இப்போ தான் வரகிடச்சுது :)
ReplyDeleteஅதிஸ் பப்பி ரொம்ப அழகா வந்திருக்கு :)) எல்லா கார்ட்ஸ் மற்றும் அந்த ஊதா நிற மலர்கள் ரொம்ப அழகு ..எனக்கு கிராப்ட் எக்சிபிஷனில் நுழஞ்சார்போல இருக்கு எல்லாமே perfect அண்ட் fantastic !!!!
அவவுக்கு சமீபத்தில் சுவீட் 18:) பேர்த்டே வந்தது[ அதிராவுக்கு சுவீட் 16 ஆக்கும்:)) //
ReplyDeleteyes yes :)i am 18 yrs young and athiraaaaav is 16 years OLD :)
அதுக்காக ஒரு தங்கியூ கார்ட்டும், சொக்லேட்டும் வாங்கித் தந்தா..//
ReplyDeleteகார்ட் இருக்கு சரி :)ஆனா சொக்லேட் எங்கே கர்ர்ர் ?????
ReplyDeleteஅட்வான்ஸ் விஷஸ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் :) சந்தோஷமா ஹோலிடேயை என்ஜாய் செய்து வாங்க :)
கார்டுகள் செம அழகு.அதிலும் முதலில் உள்ள அதிரா மியாவ்..வாவ்..கண்களை பயங்கரமாக விழித்துக்கொண்டு சூப்பர் கலர் காம்பினேஷனுடன்..சூப்பர் சூப்பர்.
ReplyDeleteஉங்களுக்கும் இனிய கிருஸ்துமஸ் புத்தாண்டு,பொங்கல் வாழ்த்துக்கள்.
வாங்கோ மகி வாங்கோ... ஹா..ஹா..ஹா.. உங்களுக்கு நன்றி சொல்ல மாட்டேன்ன் பேபிக்குத்தான் தாங்ஸ்ஸ்.. இல்லாட்டில் நீங்க இந்த 4ம் சாமத்தில:) எழும்பி அதிராவுக்கு பின்னூட்டம் போடுவீங்களோ?:))..
ReplyDeleteஎப்பூடி நாங்க கரெக்ட்டா பேபியைக் கண்டு பிடிச்சிட்டமெல்லோ:))..
மியாவும் நன்றி மகி.
வாங்கோ இளமதி வாங்கோ... மேலே பப்பி செய்யும்வரை என்னிடம் எந்த ஸ்ரூலும் இருக்கவில்லை, கையாலேயே, அஞ்சுவைக் கேட்டு பென் ரீஃபிள் பயன்படுத்தி சுத்தி எடுத்தேன், அது மிகவும் நேரம் மினக்கேடு.
ReplyDeleteபின்புதான் ஒரு ஸ்ரூல் கிடைச்சுது.. அதன்பின்னர் நீற்றாகவும் இருக்கு ரைமும் பெரிதா எடுக்கவில்லை.... அந்த ஊதாகலரு ரிப்பன்.. சே..சே.. பூ எல்லாம் அப்படிச் செய்தவையே...
பப்பியின் முகத்தை அழகாக நிரப்பி எடுக்க முடியாமல் போச்சு இளமதி, அதைத்தான் சொன்னேன்... நேராக பேப்பர் அடுக்கி வைக்க முடியவில்லை. அதுக்கு இன்னொரு காரணம் எனக்கு எல்லாமே பெரிசு பெரிசா ஆரம்பித்து விடுகிறேன்.
ReplyDeleteஇப்போதான் ஸ்ரூல் இருப்பதால், நோர்மல் கார்ட் சைஸ்ஸுக்கு செய்யப் பழகி வருகிறேன், அது இலகுவாகவும் இருக்கு.
நிறையப் பிளான் பண்ணி இருந்தேன், ஆனா பயணம் என்பதால்... அனைத்தையும் குறுக்கி விட்டேன். இப்போகூட என் தங்கைக்கு 21 ஆவது கீ பேர்த்டே, நாங்க போனதும் கொண்டாட இருக்கினம், அதுக்கொரு கார்ட் செய்ய ஆசையாக இருக்கு ஆனா இனி முடியாதே..
அதிலயும் பதிவு போட்டிட்டால்ல்.. அதை எட்டிப் பார்க்கச் சொல்லும் மனம்:).. இன்றோடு கொம்பியூட்டரை மூடினால்தான் ஆயத்த வேலைகளைப் பார்க்கலாம் என இருக்கிறேன்.
பொங்கலுக்கு முன் வந்திடுவோம்ம்.. ஆனா நேர மாற்றம், களை என நோர்மலாக நாளாகுமெல்லோ:)
மியாவும் நன்றி இளமதி அனைத்துக்கும்.
வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ.... என்ன உங்களுக்கும் புரிஞ்சுபோச்சாஆஆஆஆ?:)..
ReplyDeleteஅது வந்து கோபு அண்ணன்.. நான் ஆஷா போஸ்லே அவங்க மாதிரி நல்லாப் பாடுறேன் என:)) என் பாட்டைக் கேட்டவங்க சொன்னாங்க:)) அதனாலதான் என் பெயரை மாத்திட்டேன்ன்ன்.. பூசோ கொக்கோ?:) ..
எல்லாம் ஆல் இன் ஆல் அழகுராஜா படம் பார்த்ததால் வந்த எபெக்ட்டூ:)
வாவ் ஆஷாபோஸ்லே அதிரா(எனக்கு இப்பெயர் பிடித்துவிட்டது)சூப்பரா செய்திருக்கிறீங்க. எந்தகார்டை அழகு என்று சொல்வது.எல்லாமே ஒன்றையொன்று மிஞ்சி நிற்கிது.பப்பி அஞ்சு செய்தமாதிரி இருக்கு. மிகமிகமிகமிக அழகு எனக்கு பிடித்துவிட்டது.
ReplyDeleteஉறுமீன் வரும் வரை காத்திருக்குமாம் பூஸார்.நான் அஞ்சுவின் கார்டை சொன்னேன். சூப்பர்.ஊதா கலர் பூ அவ்வளவு அழகு.கிறிஸ்மஸ் கார்ட் மிகமிக அழகு.
நடுவில் படுத்திருக்கும் குட்டி முதலை யாரும் அழகாஆஆ இருக்கிறார்.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteமேலிருந்து கீழ் மூன்றாவது படத்தில் உள்ள ஒட்டகம் பொம்மை சூப்பராக உள்ளது.
எனகு மிகவும் பிடித்துள்ளது.
அன்பளிப்பா அனுப்பி வையுங்கோ. ஹா..ஹா..ஹா.. நான் ஒட்டகம் ஏதும் செய்யவில்லையே.. எங்கிருக்கு என தேடினேன்ன்.. :))
அது Onzi டைனோஷர் நைட் வெயார்... குளிருக்கு இங்கு இப்படிப் போடுவினம்.
மியாவும் நன்றி கோபு அண்ணன்.
உங்களுக்கும்,குடும்பத்தவர்களுக்கும் இனிய நத்தார்,புதுவருட வாழ்த்துக்கள் ஆஷாபோஸ்லே அதிரா.
ReplyDeleteநல்லபடியா உங்க குளிர்கால விடுமுறையை சந்தோஷமாக அனுபவித்துவிட்டு வாருங்கள்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோபு அண்ணன்.. நோய் நொடியின்றி, நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் மகிழ்வாக வாழ வாழ்த்துகிறோம்ம்..
ReplyDeleteCherub Crafts said...
ReplyDeleteAwwwwww:) good morning friends....:) l woke up at 5 AM !!!//
வாங்க அஞ்சு வாங்கோ.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இங்கிலீசில சொன்னால் மட்டும் உடனேயே நம்பிடுவமாக்கும்:)) 5 மணி வந்தது உங்களுக்கு தெரியுமோ?:))
வாங்கோ ராஜேஸ்வரி அக்கா வாங்கோ மியாவும் நன்றி.
ReplyDeleteவாங்கோ தனபாலன் வாங்கோ.. மியாவும் நன்றி.
ReplyDeleteவாங்கோ அமெரிக்கா ரொனாடோ:).. வாங்க:)) வான்ஸ்ஸ்:))..
ReplyDeleteஎன்னாது எல்லாரும் மெல்ல மெல்ல மூச்சை அடக்கி:), வாயை மூடி:) கஸ்டப்பட்டு கட்டிக் காத்த ரகசியத்தை எல்லாம் அவிழ்த்து விடுறீங்க இப்போ:)) எல்லாத்துக்கும் காரணம் அதிராதான்போல:)).. இருந்தாலும் மகிக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
அஞ்சு பார்த்தீங்களோ மகியை,,, நாட்டு(அமெரிக்கா-பிரித்தானியா) வஞ்சனை:)) செய்திட்டா:)).. உஸ்ஸ் அப்பாடா கோர்த்து விட்டாச்சு:)) என் வேலை முடிஞ்சுது:) என்கிட்டயேவா:))..
மியாவும் நன்றி வான்ஸ்ஸ்:))
Bagawanjee KA said...
ReplyDeleteபூனை நடை ,,தப்பு தப்பு ..எழுத்து நடையும் ,பூனையின் நக கீறலும்...அதாங்க ,கைவண்ணமும் அருமை !
த .ம 7
வாங்கோ பகவஞ்சி வாங்கோ.. முதன்முதலா வந்திருக்கிறீங்க நல்வரவு மிக்க மகிழ்ச்சி.. வந்த வேகத்திலயே.. நகைச்சுவையாக கதைக்கிறீங்க... அத்தோடு தமிழ்மண வோட்டும் போட்டு விட்டீங்க... அனைத்துக்கும் மியாவும் நன்றி.
வாங்கோ அம்பாளடியாள் வாங்கோ.. வரவுக்கும் கருத்துக்கும் மியாவும் நன்றி.
ReplyDeleteCherub Crafts said...

ReplyDeleteஅதுக்காக ஒரு தங்கியூ கார்ட்டும், சொக்லேட்டும் வாங்கித் தந்தா..//
கார்ட் இருக்கு சரி :)ஆனா சொக்லேட் எங்கே கர்ர்ர் ?????///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) தேடித் தேடிப் புடிக்கிறாங்கப்பா:)) இதுதான் அது இரு பிள்ளைகளுக்கும் என இரு பொக்ஸ் தந்தவ.. ஆனா அஞ்சுவுக்கு குடுக்கச் சொல்லல்ல :))சொல்லிட்டேன்ன்:)..
வாங்கோ ஸாதிகா அக்கா வாங்கோ.. நீண்ட இடைவெளியின் பின் வந்திருக்கிறீங்க மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteமியாவும் நன்றி.
வாங்கோ அம்முலு வாங்கோ... ஆவ்வ்வ் உங்களுக்கு பெயர் பிடிச்சுவிட்டதோ?:)) அப்போ நான் நல்லாப் பாடுறேன் என்றுதானே அர்த்தம்??:))
ReplyDeleteஅனைத்துக்கும் மியாவும் நன்றி அம்முலு.
இம்முறை பதிவு போட்ட உடனேயே எல்லோரும் வந்து, வோட் பண்ணியும் இருக்கிறீங்க மிக்க மகிழ்ச்சியாக இருக்கு.. வோட் பண்ணிய அனைவருக்கும் ஆஷா போஸ்லே அதிராவின்(பெயர் எழுதவே ரயேட் ஆகிடுறேன் நானே:)) ஸ்பெஷல் நன்றிகள்.

ReplyDeleteஒரே மூச்சில் அனைத்துப் பின்னூட்டங்களுக்கும் பதிலளித்து விட்டேன்.
இம்முறை முடிந்தால் அங்கிருந்து எட்டிப் பார்த்து பின்னூட்டுவேன்(போனமுறை சொல்லிட்டு போனது நினைவிருக்குமே:)).. பார்ப்போம்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ஆஹா பட வேலைப்பாடுகள் அருமை .:)))
ReplyDeleteஇனிய புது வருடத்தில் இணையத்தில் சந்திப்போம் அதுவரை ஓய்வாக பாட்டுக்கேளுங்கோ துப்பாக்கியை வைத்துவிட்டு பூசாரே!:))
ReplyDeleteஅதிரா, இனிய நத்தார் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! அண்டாட்டிக்கா:) பயணத்தை நல்லா குளுகுளுகுளுன்னு என்ஸாய் பண்ணிட்டு வாங்க!
ReplyDeleteஎன் பொண்ணுக்காக ஸ்பெஷலா செய்த கார்டுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி! பூக்கள் வெகு அழகாக இருக்கு. :)
பப்பி கார்ட் சூப்பர்..அதுக்கு ஜீனோ-ந்னு ஒரு பேரையும் வைச்சிருந்தீங்கன்னா எங்க பையன் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பான். கர்ர்ர்ர்ர்ர்ர்!
மற்ற கார்டுகள் எல்லாம் அழகா இருக்கு..எல்லாரும் கைவினையில் கலக்கறேள்!! கீப் இட் மேலே! ;)
//மகிக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..அஞ்சு பார்த்தீங்களோ மகியை,,, நாட்டு(அமெரிக்கா-பிரித்தானியா) வஞ்சனை:)) செய்திட்டா:))..// கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! நான் ஹிண்ட் ஹிண்ட்-டா குடுத்தேன், நீங்க 2 பேருமே கண்டுக்கலை. அதான் சஸ்பென்ஸா இருக்கட்டுமேன்னு விட்டுட்டேன். வான்ஸும் நானும் பேசிக்கொள்ள இன்னுமொரு காமன் விஷயம் இருந்ததால் ரகசியம் எல்லாம் இல்லாமல் கேஷுவலா பேசிட்டோம். ஹிஹிஹி.... :)
//என்னாது எல்லாரும் மெல்ல மெல்ல மூச்சை அடக்கி:), வாயை மூடி:) கஸ்டப்பட்டு கட்டிக் காத்த ரகசியத்தை// மெய்யாலுமே ஐ யம் க்ரேட்ஃபுல் டு ஆல் ஆஃப் யூ!! தேங்க் யூ, தேங்க் யூ!! :) :D
ookie..time up! have fun at Andaatticcaa!!! have a safe trip! bye!
அன்புள்ள அதிரா,
ReplyDeleteஎன் கணக்குப்பிள்ளை கிளியின் அன்பான அவசர அழைப்பு:
ஓடியாங்கோ!
ஓடியாங்கோ !!
உடனே ஓடியாங்கோ !!!
http://gopu1949.blogspot.in/2013/11/86.html
இது ஒன்று மட்டுமே பாக்கி உள்ளது. இதுவரை கிளி கொடுத்துள்ள மார்க்: 91/92
அதனால் .....
ஓடியாங்கோ!
ஓடியாங்கோ !!
உடனே ஓடியாங்கோ !!!
அன்புடன் கோபு அண்ணா
ஆனா, முகம் கொஞ்சம் கஸ்டமாகிவிட்டது செய்ய. /////
ReplyDelete:)))) எதுக்கு இந்த சிரிப்பு தெரியுமா பூஸார்.. அப்பிடியே முகம் என்னோட சாயல்ல இருக்குது :))))
ஓK ஓK....
ReplyDeleteஉங்களுக்கும் டிசம்பர் மாத இறுதி வார மற்றும் ஜனவரி மாத ஆரம்ப வார வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
இனிய வணக்கம் சகோதரி..
ReplyDeleteநலமா?
அழகிய கைவண்ணங்கள் நெஞ்சம் நிறைக்கின்றன.
விடுமுறைப் பயணம் சிறப்பாக மகிழ்வாக அமையட்டும்.
வாழ்த்துக்கள்.
wow anaiththum arumai, rompa super aaka irukku
ReplyDeleteஆஷா போஸ்லே லீவுக்கு போகிறாரா/ ஒரே ஜாலி கொண்டாட்டம் ,மைக்க பிடிச்சி பாடும் பாட்டில் தெரியுது... குவில்லின்ங் கார்ட், எல்லா கை வண்ணங்களும் ரொம்ப ஜூப்பரு
ReplyDeleteகலர் காம்பினேஷன் எல்லாம் மிக அழகு கண்ணை பறிக்கின்றன.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteசகோதரி
தங்களின் வலைப்பக்கம் வந்தால் எப்போதும் ஒரு கலட்டா காத்திருக்கும்... கைவேலை படங்கள் மிக அருமையாக உள்ளது கலர் மிக்சிங் எல்லம் நன்றாக உள்ளது... ஒட்டுமொத்தமாக சொன்னால் பதிவு மிக அருமை மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்.
-----------------------------
நான் எழுதுவது wordpressஇல் அதனால் கருத்து இடுவது சிரமம் என்று பலர் என்னிடம் சொல்லியும் உள்ளார்கள்... அதனால் google.இல் புதிய வலைப்பூ ஒன்று திறந்துள்ளேன் வாருங்கள்.. அதன் வழி கருத்து இடுகிறேன்.
இனிய புத்தாண்டு வாழ்த்தும் நத்தார் வாழ்த்து
உங்களுக்கு உதித்தாகட்டும்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆஷா போஸ்லே அதிரா பாட ஒரு லிங்க்..
ReplyDeleteஅதிராவும் அருமையாகப் பாடி கச்சேரி செய்ய ...!
janani janani ஜனனி ஜனனி
http://aanmikam.blogspot.in/2013/12/janani-janani.html
அதிராவின் கைவேலைப்பாடு வாய்பிளக்கவைக்கிறது. அனைத்தும் அற்புதம். மனமார்ந்த பாராட்டுகள் அதிரா.
ReplyDeleteசகோதரிக்கு வணக்கம்
ReplyDeleteநல்லதொரு பதிவை கலகலப்பாக தந்துள்ள விதம் மிக அருமை. தங்கள் கைவேலைபாடு அனைத்தும் ரசிக்கும்படி இருந்தது. மகி சகோதரி அவர்களுக்கும் வாழ்த்துகள். தங்கள் பயணம் இனிமையாய் மகிழ்ச்சியாய் அமைய வாழ்த்துகள். தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் இனிய நத்தார் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள் சகோதரி..
வழக்கம் போலவே பதிவு அருமை. மிகவும் ரசித்துப் படித்தேன். ஸ்வீட் 16 க்கு வாழ்த்துக்கள். கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவியபதி/ அவைநாயகன்/ நா.சபாபதி
ஓட்டுப் போடாமல் மறந்துபோனேன். துப்பாக்கியைப் பார்த்ததும் ஓடிவந்து ஓட்டுப் போட்டுவிட்டேனாக்கும்
ReplyDeleteமீயாஆஆஆஆஆ உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
ReplyDeleteஎன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
mee the first...
ReplyDeletemeyaaaavu....
wish u happy new year baby athira..
annakkal nalam aria ava..
Anaivarukkum vaalthukkal.
ReplyDeleteவணக்கம்!
புத்தாண்டு வாழ்த்துக்கள்
பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
01.01.2014
ReplyDeleteவணக்கம்!
இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்!
தங்கத் தமிழ்போல் தழைத்து!
பொங்கல் திருநாள் புகுத்தட்டும் பன்னலங்கள்
திங்கள் ஒளிபோல் திகழ்ந்து!
பொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்னழகாய்
உங்கள் இதயம் ஒளிர்ந்து!
பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
எங்கும் இனிமை இசைத்து!
பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
சங்கத் தமிழைச் சமைத்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
இனிய தைப் பொங்கல் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தோழி !
ReplyDeleteஆஷா போஸ்லே அதிரா வந்திட்டாவாம்.அங்கின அறிஞ்சன். கச்சேரி களைகட்டப்போகுது.
ReplyDeleteஅதிரா உங்களுக்கும்,உங்க குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
நன்றி..!
ReplyDeleteதித்திக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..!
வணக்கம் சகோதரி. தொடர் வேலை காரணமாக வலைப்பக்கம் வரமுடியவில்லை. இனி தொடர்கிறேன்.
ReplyDelete-------
தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
வணக்கம் அதிரா!..
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிக்க இனிக்க இனிய பொங்கல் புதுவருட நல் வாழ்த்துக்கள்!
வந்தாச்சோ.. :) மிக்க சந்தோஷம்!
அங்கை வாழ்த்தினதுக்கும் ரொம்ப நன்றி!
வந்தகளைப்பு ஆறி வாங்கோ.. பிறகும் சந்திப்போம்!
Me the last ,இந்த அழகான பகிர்வை மிஸ் செய்திட்டேன்,நீங்க போஸ்டிங் போடலைன்னு உங்க பக்கம் வரலை..புது வருடம் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeletePongalodu sandhikkiREnnu sollittu poningalE . Enga innamum kanome? Edhipaarthu kaathirukkiROm
ReplyDelete//எல்லாரும் மெல்ல மெல்ல மூச்சை அடக்கி:), வாயை மூடி:) கஸ்டப்பட்டு கட்டிக் காத்த ரகசியத்தை// oreyadiyaa ippidi pottu udaikkiRatho!! AVV!!!! ;)
ReplyDeleteEnjoyed ur post Athees. loved reading all the comments. Missed u all. ;(
Will miSS u again for a short while.
தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ReplyDeleteஅன்பு வாழ்த்துகள்.
மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள இணைப்பைச் சொடுக்கவும் நன்றி.
வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_15.html
வணக்கம்
ReplyDeleteஇன்று தங்களின் தளம் வலைசரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
ReplyDeleteஇன்று தங்களின் தளம் வலைசரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வலைச்சர அறிமுகமு பார்த்து தப்பி தவறி இந்த பக்கம் வந்திட்டேன் அம்மாடி ஆத்தாடி ஒன்னுமே புரியலியே.............. வாழ்துகள்
ReplyDelete