நல்வரவு_()_


Sunday 24 June 2012

என் பொக்கிஷங்கள் ஏலத்துக்கு வருகின்றன:)



ச்சச்சோ ஒரு பேச்சுக்குத்தான் அப்பூடிக் கெடிங் போட்டேன்ன், என் உயிர் இருக்கும்வரை இவற்றை ஏலத்தில் விடவோ, கைதவறிப் போகவோ விடமாட்டேன்.


  
இவை இன்று நேற்று உருவாக்கியவை அல்ல, 15 வருடங்களுக்கு முன்பே, நானே தயாரித்த கொப்பிகள். ஒவ்வொன்றாக சேகரித்து, அழகுபடுத்தி, அதை நம் நாட்டுப் பிரச்சனைகளின் மத்தியில் பயந்து பயந்து, பூனை.. குட்டி காவுவதுபோல காவி.... கடல், சமுத்திரம் கடந்தும், கைவிடாமல் இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறேன்ன்ன்.




இப்பவும் கிடைக்கும் வசனங்கள், கவிதைகளை எழுதுவதுண்டுதான் ஆனால் குறைவு.





====================BREAK=====================
இது நான் முன்பு சொன்ன லேடி செய்த கார்ட்... 
அஞ்சு, இமாவுக்காக:))


இந்தப் பாட்டை எல்லோரும் கேட்கோணும், நான் சொல்லி இமா லிங் தேடித் தந்தவ 2009 இல். இப்பவும் வச்சு வச்சுக் கேட்கிறேன்ன்ன்.. நேற்றுக்கூட ரிப்பீட்டில் போட்டு 20,30 தடவைகள் கேட்டுவிட்டேன்ன்ன்..

அழகான ஒரு சோடி கண்கள்..
========================================================

இவை நான், அந்நாளில் சேகரித்த கவிதைகள்... சின்னனிலேயே ஒரு கெட்ட பழக்கம்.. சோகம் கலந்தவற்றைத்தான் எப்பவும் சேகரிப்பேன்ன்..




இப்படியான குட்டிக் கதைகள், தொடர் கதைகள் எல்லாம் சேகரித்தேன், சிலதை விட்டுவிட்டேன்ன்ன்..

வயசைச் சொல்ல எங்களுக்கு வெட்கமோ? கர்ர்ர்ர்ர்ர்:)) ஆர் சொன்னது?:) அதெல்லாம் ச்ச்சும்மா கதை:)) யூம் பண்ணுங்கோ புரியும்.. பெண்களுக்கு கிட்னி பெரிசென்பது:))).. ஹையோ மீ. இப்போ முருங்கை மர உச்சியில:).

இது என்னோடு படித்த இன்னொரு நண்பியின் பொக்கிஷம்... அவவுக்கு பாதுகாக்கும் எண்ணம் இருக்கவில்லை, நான் என்னுடையதோடு சேர்த்துப் பாதுகாத்தேன், இது அவவின் கை எழுத்து.

பின் இணைப்பு:
புளிய மர ஆட்களைப்போல எல்லோரும் இப்படங்களை யூம்ம்ம் பண்ணி வாசிச்சுப் பாருங்கோ:))... வாசிச்சுப்போட்டு... என்னா புரியுதென்பதை சொல்லிட்டுப் போங்கோ... உஸ்ஸ்ஸ் யப்பா எதையாவது சொல்லிக்கில்லித்தானே பின்னூட்டம் போட வைக்க வேண்டிக்கிடக்கு:)).

குட்டி இணைப்பு:
என் வாழ்க்கையில் நானே செய்து, முன்னம் முன்னம் எடுத்த பிரிண்ட் அவுட்.. இப்பவும் கையோடு வைத்திருக்கிறேன்ன்ன்ன்ன்.. எதைத்தான் மறக்க முடியும்? வாக்கையில் முதலாவதாக நடக்கும் நிகழ்வுகளில்.....

===================================================
ஒவ்வொரு கல்லிலும் எவ்ளோ அழகாக இருக்கிறார்கள் பாருங்கோ கடல் நாரைகள்(சீஹல்).. இன்றுகாலை வோக் போனபோது எடுத்தது.

இப்பூடித்தான் மீயைப்போல இயற்கையை ரசிக்கத் தெரியோணும்:))).. ஆஆஅ... ஏன் எல்லோரும் முறைக்கினம்:))... இப்ப அந்தர ஆபத்துக்குக் காப்பாத்தவும் மனிஷர் இல்லை:(((, ஒரு ரீ குடுப்பதுகூட கண் பட்டுப் போச்சே:)) அஞ்சூஊஊஊஉ டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்.. பிங் கலரிலதான் வேணும்:).

இண்டைக்கு என் கொப்பியில் எழுதியிருப்பதைப் படிக்கப் போறீங்களெல்லோ:) அதனாலதான் நான் எதுவும் எழுதவில்லை.. எனக்குப் பாருங்கோ தற்பெருமை பேசப் புடிக்காஆஆஆஆஆஆஆது:)))).
HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH

Tuesday 12 June 2012

வாழ்க்கை.!!!

முந்தின படம் தெரியவில்லை, அதனால படத்தை மாத்தி விட்டேன்ன்..
பூஸ் ரொம்ப நல்லது இல்லையா?:))) தங்க மீனைக்கூட ரசிக்குதே:)))
வாழ்க்கை என்பது ஒரு பயணம்..
எமது நினைவுகள் தான் வாழ்க்கை!!!...
படங்கள் போடப்பட்டிருக்கும் ஆல்பம்தான் வாழ்க்கை!!!...

கடவுளே!!! நீ, இதை எனக்குக் கொடுக்கவில்லையே, அதை எனக்குக் கொடுக்கவில்லையே, எனக் கடவுளிடம் சண்டையிட்டுப் பட்டியல் இடுவதை விட, கடவுளே நீ எதை எல்லாம் இன்று எனக்குத் தந்திருக்கிறாய் எனப் பட்டியல் போட்டுப் பாருங்கோ.. அப்போதான் வாழ்க்கை இனிக்கும்... அமைதியாகும்...

இல்லாததை நினைத்து, இழந்ததை நினைத்து வருந்துவதை விட, இருப்பதை நினைத்து, மனதை நிறைவடையச் செய்வதே வாழ்க்கை!!!!

வீட்டிலிருக்கும் ஒரு ஆல்பத்தைப் புரட்டும்போது, அதைப் பார்க்க எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். ஆல்பத்தைச் சுட்டிக்காட்டிச் சொல்வார்கள்.. ஐந்து வருடங்களின் முன் நான் எவ்வளவு அழகாக இருந்தேன், எவ்வளவு மகிழ்ச்சியான காலங்கள் அவை என..

அதேபோலத்தான் இன்றும் இருக்கிறோம், ஆனா “இன்றைய” நாளை நினைக்கத் தவறி விடுகிறோம், இன்னும் ஐந்து வருடங்கள் போனபின், இன்றைய ஆல்பத்தைப் புரட்டி.. அதே கதையை திரும்பவும் சொல்லி, அதெல்லாம் எவ்வளவு இனிமையான காலங்கள் எனச் சொல்வோம்ம்... இதுதான் வாழ்க்கை!!!.

இல்லாததை எண்ணி ஏங்காமல், கிடைக்காததை நினைத்தே கவலையில் காலத்தை ஓட்டாமல், இருப்பதைப் பெரிதாக நினைத்து திருப்தி அடைந்து, மகிழ்ந்திருப்பதே வாழ்க்கை!!!

உஸ்ஸ்ஸ் ஸப்பாஆஆஆ... பூஸ் ரேடியோவில் சொன்னதைக் கேட்டு அப்பூடியே எழுதிட்டேன், சிலதை விட்டுவிட்டேன் என நினைக்கிறேன்ன்ன்...

சரி பாட்டைக் கேளுங்கோ....


இந்தப் பாட்டை அதிரா ஏன் போட்டவ என நினைக்கிறீங்களோ? அது பூஸ் ரேடியோவில் இதைச் சொல்லிப்போட்டு இப்பாட்டைத்தான் போட்டிச்சினம்... அப்போ நான் விடுவனோ.. அப்பூடியே நானும் போட்டுவிட்டேன்ன்ன்ன்...

வாழ்க்கையைச் சொல்லி நிக்குதாக்கும் பாடல்...
=================================================
பின் இணைப்பு
சிவாவின் பிறந்த நாளிற்கு பொன்னியின் பரிசு
பொன்னியைத் தெரியாதோரெல்லாம் இப்போ பார்த்துக்கொள்ளுங்க....


=============================================

பசுவை வாங்கி வந்தால் பால் கறக்கலாம்
காளையை வாங்கி விட்டுக் 
கடவுள் மீது குறை சொல்வதில் என்ன அர்த்தம்?.... 
...............................எங்கட கண்ண..தாசன்.. சொன்னவர்...
=============================================

Monday 4 June 2012

அடாது திட்டு வாங்கினாலும்:)))


விடாது படங்கள் காட்டியே தீருவேன்:)))


இன்னும் எவ்ளோ படங்கள்:) இருக்கே... 2012 டிஷம்பருக்கு முன் போட்டுக் காட்டிடோணுமே:)) எனும் எனக்கிருக்கிற கவலை இங்கின ஆருக்குப் புரியப்போகுது:)))....

சரி டொரன்ரோ(ஸ்காபரோ) வில, ரோட்டால் போகும்போதே, பெரிய எழுத்துக்களில் தமிழ்க்கடை போர்ட்டுக்கள் தெரியும், ஊரில் இருப்பதுபோலவே பீலிங்ஸ்ஸ்ஸ் எல்லாம் வரும்....

அப்படித்தான் சில கடைகளை மட்டும் படமெடுத்தேன்ன்....

இது யாழ் சந்தை, தமிழ் சுப்ப மார்கட்..



இது நகைக்கடை:


இது புடவைக் கடை, சுப்ப மார்கட்..

இதிலும் சில கடைகள் தெரியுது...
இது ஸ்காபரோவில் இருக்கும் இன்னொரு சுப்ப மார்கட்... ஹைலண்ட் ஃபார்ம்.. அங்கு மரக்கறிகள்,  பழங்கள் அடுக்கியிருந்த அழகில மயங்கிட்டேன்:))..

இது தாய் - ரேக் எவே:) சாப்பாட்டுக் கடை.. எமக்குப் பிடித்த - மட்டின் ரோல்ஸ், மட்டின் கொத்து ரொட்டி, மிதிவெடி இங்கேயும் இருக்கு:)
=====================இடைவேளை====================
படம் எப்பூடி இருக்கு?:)) பிடிச்சிருக்கோ?:))).. கோபம் வருதா?:) கோபம் வருதா?:)) அப்போ வாங்கோ சண்டைப் பிடிக்கலாம்:)).. சே..சே.. இப்ப வாணாம்ம்:) முழுக்கப் பார்த்திட்டு வாங்கோ பேசியே தீர்த்திடலாம்:)) பூஸ் காரில எஸ்கேப்:))).. இதுவும் ஸ்காபரோ ரோட்தான்...


==========இடைவேளை முடிஞ்சு போச்ச்ச்ச்:))===========


இது காரைகுடி ரெஸ்ரோரண்ட்... இதைப் பார்த்ததும் ஸாதிகா அக்காவின் நினைவே வந்துது, சரி சாப்பிட்டுத்தான் பார்ப்போமே எனப் போனோம்... உள்ளே நல்ல அழகாகத்தான் இருந்துது.... ஆனா எனக்கென்னமோ சாப்பாடு பெரிதாகப் பிடிக்கவில்லை.

நாம் எடுத்தது... பாபகியூ சிக்கின். இறால் பிரியாணி, மட்டின் பிரியாணி, வெஜ் தால் ரைஸ், பிளேன் ரைஸ், சிக்கின் குருமா கறி.

இதில மட்டின் பிரியாணி சுவையே இல்லை... இதைவிட வீட்டில் செய்வது விஷேசமாக இருக்குமோ என எண்ண வைத்து விட்டது. இறால் பிரியாணி நன்றாக இருந்தது. ஆனா ஒரு விஷயம்:)) என்னன்னா:))) காதைக் கொண்டுவாங்கோ சொல்றேன்ன்ன்ன்:))) ஒவ்வொரு பிர்ராணிக்கு மேலயும் அவித்த கோழி முட்டை இருந்துதே...:)).. ஸ்ஸ்ஸ் ஆஆ:)) ஒருவரும் வாணாம் எண்டிட்டினம்:)... 4 பிர்ர்ர்ர்ராணி எடுத்த நினைவு:)) மொத்தம் 4 முட்டைகள்:))).. சத்தியமா நான் 2 தான் சாப்பிட்டேன்ன்ன்ன்:)) மற்றதை அங்கயே விட்டாச்சு:(((.

ஆனா இதில் ஒன்றை சொல்லியே தீரோணும்... முடிவில் கேட்டினம் “பீடா” இருக்கு வேணுமோ என... இதைக் காதால் கேட்டால் நான் விடுவனோ? கொண்டு வாங்கோ என்றால்.. ஒன்று 2 டொலர்களாம்... எனக்கு வேணும்ம்ம் என, 3 ஆசையா வாங்கி காண்ட் பாக்கில் வைத்தேன்... கொடுமை என்னன்னா... உள்ளே.. கொஞ்சம் தேங்காய்ப்பூ, அத்தோடு ஒரு பெரிய துண்டு தொதல்போல ஒரு இனிப்பு... வாயில் வைக்க முடியாத சுவை... பாக்கு இருந்ததாகத் தெரியவே இல்லை... அது பிரெஸ்ஸாகவும் இருக்கவில்லை நான் சாப்பிடவே இல்லை:(.. 


 ==================================================
இது ஸ்காபரோவில் உள்ள ஒரு ஸைனீஸ் புஃபே... இதுக்கு போவதெனில் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் டின்னருக்குப் போக வேண்டும்.... நண்டு, றாலில் இருந்து அனைத்துமே சூப்பர்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஊசி இணைப்பு:)
என் கையில் அக்கா வீட்டுச் செல்லம், மொப்பியின் ப்பிரதர்:) பெயர் குட்டி:).. இவர் வெல்வெட் முசலார்:)

பின் இணைப்பு:
சரி சரி படமெல்லாம் புடிச்சிருக்கோ?:) நான் ஸ்காபரோ ஸூ வில இருக்கிறனான்... ஆஆ... இருக்கட்டும்... இருக்கட்டும்:) மெர்ஷி எல்லாம் எதுக்கு?:)... ரிக்கெட் காசை இங்கின இந்த உண்டியலுக்குள்ள போடுங்கோ:))... கைல வாங்கினால் என் எல்டஸ்ட்:) சிஷ்யைக்குப் பிடிக்காது:)
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^