Sunday, 23 April 2017

கோபு அண்ணனும்.. கரண்ட் நூலும்:)

ப்போ சந்திரமண்டலம் போய் முடிஞ்சு செய்வாய்க்கிரகத்துக்கு ஆட்கள் போகத் தொடங்கியிருப்பதாக அரசல் புரசலாக அறிந்தேன்.. அப்பூடித்தான் புளொக் எழுதுவதிலிருந்து கொஞ்சம் மூவ் ஆகி... மின்னூல் வெளியீட்டில் நம்மவர்கள் சிலர் எழுத ஆரம்பித்திருப்பது.. ஆச்சரியமான, மகிழ்ச்சியான செய்தி.
னக்கு கொம்பியூட்டரில் இருந்து கதை படிப்பது, படம் பார்ப்பது எதுவும் பிடிக்காது, இருப்பினும் என் பக்கம் வருவோர் , மின்னூல் வெளியிடும்போது, அதில் ஒன்றாவது வாங்கிப் படிக்கோணும் என மனதில் எண்ணியிருந்தேன், ஆனா அதை முந்தி, கோபு அண்ணனிடமிருந்து இலவசமாக மின்ன்னூல்களை பரிசாகப் பெற்றோர் வரிசையில் என் பெயரும் இடம் பிடித்தமையால்... எனக்கும் இரண்டு மின்னூல்களை பரிசாக அனுப்பியிருந்தார். மிக்க நன்றி கோபு அண்ணன்.

னா அவர் அனுப்பியதை போய் ஓபின் பண்ணிப் பார்க்கவே ஓராண்டு ஓடி... பின்னர் முதல் கதை படிக்க ஈராண்டு ஓடி.. படிச்சு முடிக்க...  செவ்வாய்க் கிரகத்துக்குப் போகும் காலத்தைக் காட்டிலும் அதிக காலம் எடுத்து விட்டது.. ஏன் தான் அதிராவுக்கு அனுப்பினமோ எனத் திட்டிக்கூட இருப்பார்:) கர்:)... சரி சரி ஓவரா அலட்டாமல் விசயத்துக்கு வாறேன்ன்.. சோட் அண்ட் சுவீட்டா என் வர்ணனையை முடிச்சுக் கொள்கிறேன்.
துக்கு முதல், புஸ்தகா நிறுவனத்தினர்தான், இப்படி மின்னூல்களை வெளியிடுகின்றனர், அப்போ நாம் அங்கு போய் நமக்கான ஒரு மெயில் + பாஸ்வேர்ட் கொடுத்து உள் நுழைந்தால், இலவசமாக நமக்கு தந்திருக்கும் புத்தகங்கள் அங்கே நம் bookshelf இல்அடுக்கியிருக்கும்.. இப்படி..

சின்னச் சின்னக் கதைகள்
மின்னூல் எனும் பெயருக்கேற்ப மின்னல் வேகத்தில் எல்லாம் ஓபின் ஆகிறது. எனக்கு கோபு அண்ணன் அனுப்பிய முதலாவது புத்தகம்.. சின்னச் சின்னக் கதைகள். இதில் மொத்தம் 20 கதைகள் உள்ளன..
முதலாம் பக்கத்தைத் திறந்தால் .. பொருளடக்கம் இப்படி இருக்கிறது..

வ்வொன்றும் மிகவும் குட்டிக் குட்டிக் கதைகள் என்பதனால், போரிங் இல்லாமல் படிக்க முடிஞ்சுது..

ம் விருப்பத்துக்கேற்ப எழுத்தை பெரிசாக்கியோ சின்னனாக்கியோ படிக்கும் வசதியும் உள்ளது.. இதில் பொருளடக்கத்தைப் பெரிசாக்கிக் காட்டியிருக்கிறேன்...

இங்கு ஒரு சிறுகுறிப்பு:
///ஜும் வசதி ஒன்று ஒரேயடியாக வருகிறது.  இல்லாவிட்டால் பழைய நிலைக்குச் செல்கிறது.  தேவையான அளவு கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக்கிக் கொள்ளும் வசதி இருந்தால் நலம்./// இது சகோ ஸ்ரீராம் தன் புத்தக விமர்சனத்தில் கொடுத்திருந்தார்.  அதனால எனக்கு ஃபிரீ புக் கிடைச்சதும் முதல் வேலையா அதையே செக் பண்ணினேன், இருக்கிறது..ஸ்ரீராம் அதைக் கவனிக்கவில்லைப் போலும்.

இங்கே மேலெ இருக்கும் படத்தில், ஸூம் பண்ணிய எழுத்துக்களின் மேல்(முதலில் ஸூம் பண்ண வேண்டும்), உற்றுப் பாருங்கோ... ஒரு பக்கம் மைனஸ் மற்றைய பக்கம் பிளஸ் அடையாளம் இருக்கிறது.. நடுவில் நீள் வட்டம் போல இருக்கு.. நீள் வட்டத்துள்ளே ஒரு குட்டி வட்டம் இருக்கு... அந்த வட்டத்தை, கேசர் மூலம் மூஃப் பண்ணி நமக்கு ஏற்ற சைஸில் எழுத்துக்களை வைத்துப் படிக்கலாம். 

இதில் கதையை விமர்சிக்க நான் விரும்பவில்லை, விரும்புவோர் போய்ப் படித்துப் பாருங்கோ, அத்தனை கதைகளும்... ஒவ்வொரு வித உற்சாகமும் நகைச்சுவையும் கலந்தவையாக இருக்கு.. அவற்றுள் என்னைக் கவர்ந்த சில கதைகள்...
4. பகற்கொள்ளை.. வித்தியாசமான சிந்தனை..
6. IQ Tablets  .. தலைப்பே வித்தியாசமாக இருக்கே என படித்தால், இட்லிக்குப் பெயர் வைத்திருக்கிறார் இப்படி.
10. புத்திசாலியான மனைவி.. சோகம் ததும்ப படிக்க வைத்து முடிவில் அட இவ்ளோ கெட்டிக்காரியா? அப்போ அழுததெல்லாம் நடிப்போ என எண்ண வைத்திட்டார்... தலைப்பை கொஞ்சம் நகைச்சுவையாக வைத்திருக்கலாமோ என எண்ண தோன்றியது.
18. கனி கிடைக்கும்வரை காத்திருப்போம்... இது ஒரு ஆப்பிளை வைத்து, பெரிய படிப்பினையையே உணர்த்தியிருக்கிறார்.. ஆனா ஒன்று அடிக்கடி “கியூ வரிசை” எனப் பாவித்திட்டார் கதையில்:).. கியூ என்றாலே வரிசைதானே?:) ஹா ஹா ஹா.
சுபம் _()_
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

 குட்டியூண்டுக் கதைகள்..
இது அடுத்த புத்தகம், இதில் மொத்தம் பத்துக் கதைகள் உள்ளன
தில் பத்துக் கதைகளும், நகைச்சுவையும் கிண்டலும் கலந்தவையே.. தலைப்பை “குட்டியூண்டுக் கதைகள்” என வைத்தமைக்குப் பதில் “சிரிக்க சிரிக்கப் படிக்கலாம் வாங்கோ” என ஏதாவது தலைப்புக் கொடுத்திருக்கலாமோ என எண்ணுகிறேன்.. அதிலும்  4 வது கதை.. திருமண மலைகளும்... மாலைகளும்... வாய் விட்டுச் சிரித்திட்டேன்

5 வது கதை.. பெயர் சூட்டல்...    இண்டவியூ அழைப்பிதள் வரும் முன்பே, வேலை கிடைத்துவிட்டது போல எண்ணி, வேர்க் போக உடுப்பு வாங்குவோர் போல இருக்கிறது கதை.

னக்கு இப்படி இலவசமாகக் கிடைத்த புத்தகத்தை மட்டுமே படிக்காமல், ஒன்றாவது விலை கொடுத்து வாங்கிப் படிச்சு, இத்தோடு விமர்சனமும் செய்யோணும் என எண்ணியிருந்தேன், ஆனா முடியல்ல.. இதைப் படிச்சு விமர்சனம் எழுதவே இவ்ளோ நாட்கள் ஆச்சு.. அதனால இன்னொன்று வாங்கும் எண்ணத்தை இப்போதைக்கு விட்டு விட்டேன்... பின்னாளில் நேரம் கிடைக்கையில் முயற்சிக்கிறேன். மீண்டும் நன்றி கோபு அண்ணன்.
======================================_()_======================================
ந்த புஸ்தகா நிறுவனத்தினர், புத்தகத்தின் பெயரை மட்டும் போடுவதோடில்லாமல், உள்ளே என்ன என்ன இருக்கிறது எனும் பொருளடக்கத்தையும் வெளியே காட்டினால், வாங்கிப் படிப்போருக்கு இலகுவாக இருக்கும் என நினைக்கிறேன்.. இது உள்ளே என்ன இருக்கும் / எத்தனை கதைகள் இருக்கு... என்றே தெரியாமல் இருக்கு.

ஊசி இணைப்பு:-

Friday, 21 April 2017

எவ்ளோ நாளைக்குத்தான் ரொம்ப நல்லவரா/வல்லவரா நடிக்கிறது சொல்லுங்கோ?:)

நானும் எவ்ளோ காலத்துக்குத்தான் ரொம்ப நல்ல பிள்ளையா +  வல்ல பிள்ளையா நடிச்சுக்கொண்டிருப்பதாம்? இருப்பினும் அதிராவோ கொக்கோ?:) உள்ளே நடுங்கினாலும் வெளியே காட்டிடாமலேயே காலத்தை.. இன்னும்.. ஓட்டிக்கொண்டிருக்கிறேன்:).

Monday, 17 April 2017

ழகலாம் வாங்கோ...  புதிசு புதிசாய் தெரிஞ்சு கொள்வதற்கு வயதும் இல்லை கால நேரமும் இல்லை, அதனால பயப்பூடாமல் வலது காலை எடுத்து வச்சு வாங்கோ:)..
== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==

Friday, 14 April 2017

K சரியும்.. அம்மாவும் மீயும்:)

நாமிருவர் நமக்கிருவர் போதும் என நிம்மதியாக இருந்த குடும்பத்தில:), 5 வருட இடைவெளியின் பின்னர்.. அதிரடியாக வந்து பிறந்த கொயந்தை நான்:). அதனால வீட்டில் அனைவரும் பயங்கர செல்லம் தருவார்கள் . நான் மட்டும் அப்பாவிடம், ஒரு அடிகூட வாங்கியதில்லை. எப்பவும் அம்மாவோடயே ஒட்டி இருப்பேன்.. ஒரு குட்டி இடத்தில் அம்மா இருந்தால்கூட, ஓடிப்போய் ஒட்டி உரசி கஸ்டப்பட்டு அதில் நானும் இருப்பேன்... இப்போ இந்தப் பழக்கம் எங்கள் டெய்சிப்பிள்ளையிலும், சின்னவரிலும் இருக்குது.

Saturday, 8 April 2017

நான் ஒரு அரை லூஸு:), எச்சரிக்கை!!!

து நடந்து இப்போ ஒரு மாதமாகுது, சொல்ல நினைச்சு காலம்தான் ஓடிவிட்டது.. இந்தச் சம்பவத்தைச் சொல்ல முன்னர், கொஞ்சம் என்னைப் பற்றிச் சொல்லிடுறேன். நான் ஒரு அரை லூஸு:).. அதாவது முழு லூஸு அல்ல(நோட் திஸ் பொயிண்ட்:)).

Wednesday, 5 April 2017


வாழைத் தண்டு போல உடம்பு+ மாங்காய்ப் பச்சடி..:)

அதிரா சமையல் என்றதும் எதுக்கு இப்பூடிப் பிதுங்குது விழிகள் எல்லாம் கர்ர்ர்ர்ர்:)
லைப்பைப் பார்த்ததும் பழைய பாட்டெல்லாம் நினைவுக்கு வருமே... எப்பவும் என் போஸ்ட்டுக்கும் தலைப்புக்கும், அத்தோடு எனக்கும் சம்பந்தம் இருப்பது மிக மிகக் குறைவே:). சரி சமைப்பதற்கு முன் அதிராவின் கிச்சினைப் இங்கே பார்த்திட்டு வாங்கோ... ஹொட்டேலுக்குப் போய் சாப்பிடமுன் கிச்சினை செக் பண்ணுவது நல்லதாமே:)..

Sunday, 2 April 2017

னிர்தாங்முக்கிம்:)

மனிசர் தாங்க முக்கியம், அதுக்குப் பின்னர்தான் அனைத்தும். சில நேரங்களில் மனிதர்களுக்கு கொடுக்கும் முக்கியத்தை விட ஏனையவற்றுக்கு முக்கியம் கொடுத்து விடுகிறோம்.

Thursday, 30 March 2017

நான் ஒரு முட்டாளுங்க:)

சின்ன வயதிலிருந்தே, இந்த ஏப்ரல் fool என்பது எங்களிடத்தில்/ நம்மவர்களில் ஒரு கொண்டாட்டமான நிகழ்ச்சிதான், எப்படிக் கவனமாக இருந்தாலும் ஃபோன் க்குள்ளாலே என்றாலும் ஏமாத்திப் போடுவார்கள், நாமும் ஏமாத்தியிருக்கிறோம். இப்போகூட இம்முறை யாரும் ஏமாத்த விட்டிடக்கூடாதென்றே நினைச்சுக்கொண்டிருக்கிறோம், எங்கள் அக்கா இதை நன்றாக செய்வா கர்:).

Sunday, 26 March 2017

நானும் விவசாயிதான்:)

நானும் படு பயங்கர உழைப்பாளிதான்:).. இங்கே என் வலது பக்கத்தில் இருக்கும் லேபல்களில்...  “என்னுள்ளே புதைந்து கிடப்பவை”, எனும் லேபலை கொஞ்சம் ஓபின் பண்ணிப் பாருங்கோ தெரியும் என் கை வேலைப்பாடெல்லாம்:)..

Friday, 24 March 2017

பெண்களைப்பற்றி, எங்களைப்பற்றி என்ன தெரியும் ..
_(-^_^-)_

 நீண்ட நாட்களாக நினைப்பதுண்டு, நம்மைப்பற்றி நாங்களே கொஞ்சம் புகழோணும் என... “தன்னைப் புகழாத தனையன் உண்டோ?”, என ஒரு பழமொழிகூட இருக்கே:).  மார்ச் மாதத்தில் வரும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில், பிரித்தானியாவில் மதேர்ஸ்டே கொண்டாடப்படுகிறது, இதனையொட்டி என் மனதில் உதித்த எம்மைப்பற்றிய சில விசயங்களைப் பகிரலாம் என நினைச்சேன். நான் பெண்களைப்பற்றி மட்டுமே இதில் பேசப்போகிறேன்:)..

Thursday, 16 March 2017

பாவற்காயும், றீட் மோர் உம்:)

வாங்கோ வாங்கோ... பாவற்காய் தெரியும் அதென்ன மோர்? றீட் மோர் எனப் புதிசா இருக்கே என நினைச்சு வந்திருக்கிறீங்க... தயங்காமல்  வாங்கோ.. நான் இம்முறை இரண்டு மெயின் டிப்பாட்மென்ட்களைப்:) பற்றிப் பேசப்போகிறேன்...
தில் முதலாவது கிச்சின் டிப்பார்ட்மெண்ட்:)... ஹையோ எதுக்கு இப்போ , கிச்சின் என்றதும்..மருந்தடிச்ச பூச்சிபோல எல்லோரும் பொத்துப் பொத்தென மயங்கி விழுறீங்க?:).. அப்பூடி நான் என்ன சொல்லிட்டேன்ன்:).. ஆராவது ஐஸ் வோட்டர் அடிச்சு எழுப்பிவிடுங்கோ எல்லோரையும்:).. இல்லையெனில் என் கைக்கு சங்கிலி வந்திடப்போகுதே வைரவா...:).

Sunday, 12 March 2017

நானும் என் செல்ல மகளும்..

ங்கள் டெய்சி பற்றிச் சொல்வதானால், ஒரு புத்தகமே எழுதலாம், ஊரில் பல வளர்த்தோம் ஆனா வெளிநாடு வந்து பலகாலத்தின் பின்பு, முதன் முதலில் பூனை வளர்க்கவே ஆசையாக இருந்துது, பெட் ஷொப் போனோம் அங்கு பூஸ் இருக்கவில்லை, அழகழகான முயல்குட்டிகள் புசுபுசுவென இருந்திச்சா... பார்த்தவுடன் எனக்கு ஆசை அதிகமாகி:) இந்த முயல் இப்பவே எனக்கு வேணும் எனக் கேட்டு உடனேயே வாங்கி வந்தோம், மொப்பி எனப் பெயரிட்டு வளர்த்தோம்... இந்த   ஆல்பத்தில் பாருங்கோ எங்கள் மொப்பிப் பிள்ளையை...

Thursday, 9 March 2017

இதுக்கு என்ன சொல்வது???...


யாரைக் குறை சொல்வது? அடுத்தவரைக் குறை சொல்வது என்பது சுலபம், ஆனா   “தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தால் மட்டுமே புரியும்”.. என்பதுபோல யாரையும்குறை கூறுவதை நிறுத்திவிட்டு,

Sunday, 5 March 2017

Walk போக வாங்கோ....

சே ..சே... கையை எல்லாம் பிடிக்கக்கூடாது விடுங்கோ... ஆஆஆ பொக்கட்டுக்குள்ளும் கை வச்சு நடக்கக்கூடாது... கையை வெளில எடுங்கோ, குளிர்ந்தால் கிளவுஸ் போடுங்கோ..

Wednesday, 1 March 2017

ந்தித்வேளை!!!

லைப்பே நன்றாக இருக்கிறதெல்லோ?.. உண்மையில் சில சமயம், உள்ளே இருக்கும் பொருட்கள் நல்லா இல்லாவிட்டாலும், வெளிப் பக்கட்டில் இருக்கும் டிசைனும் எழுத்தின் அழகும்.. ஒரு தடவை வாங்கித்தான் பார்ப்போமே என மனதை தூண்டும்....

Friday, 24 February 2017

நானும் என் அழகிய பற்களும்:)

ன் பல்லைப் பற்றிய  “அவர்கள் ட்ருத்”  இன், கொமெண்ட் படிச்சதும், ஓடினேன்ன்.. ஓடினேன்ன்ன்.. தேம்ஸ் இன் ஆரம்பம் வரை ஓடினேன்... ஆனா அங்கு சடின் பிரேக் போட்டு நின்று விட்டேன்ன்...:)

Sunday, 19 February 2017

நான் ரைந்விமே...

நான் வரைந்த ஓவியமே..
நல்ல இங்கிலீசுக் காவியமே:)..
நான் சாப்பிடும்போது
நீ பட்டினி எனில்
நீ பட்டினி இருக்கும்போதும்
நான் சாப்பிடுவேன்ன்:))

எழுத்தோட்டம்:-
இந்தப் புத்தம் புதிய புத்தாண்டில் நான் எடுத்த சத்தியம்... அவித்த முட்டை சாப்பிடுவதில்லை என்பதே:).. எனக்கு எந்த விதமான முட்டை ஐட்டமும் பிடிக்காது, சாப்பிடுவேன் ஆனா பெரிதாக ஆசை எல்லாம் இல்லை, ஆனா இந்த அவித்த முட்டை மட்டும்.. சாமத்தில் எழுப்பி தந்தாலும், யாராவது வேண்டாமெனக் கொட்டப் போனால்கூட பறிச்சு சாப்பிடுவேன் அவ்ளோ ஆசை:)..

Tuesday, 14 February 2017

மூட் அவுட் ஆ??? அப்போ கொஞ்சம் இக்கரைச் சூடு:)

ஹா ஹா ஹா அதென்ன அது மூட் அவுட் என்றால்??.. இப்போ பலபேர் அடிக்கடி சொல்றார்கள், ஒரு சின்னப் பிரச்சனை மூடவுட் ஆகிட்டேன் அதனால வெளியே வரவில்லை, கொமெண்ட்ஸ் ஏதும் போடவில்லை:), பேசாமல் இருந்திட்டேன்..

Friday, 10 February 2017

கிரில் உம் பரிசும்:)மீயும்:)


ன்னுடைய புரொப்ளம் என்னன்னா... நினைக்கும்போது நிறைய எழுத வருது, ஆனா எழுதும்போது நினைவுக்கு நிறைய வருகுதில்ல:)).. [ஆனா மீ சுவீட் 16 என்பதனை இங்கே நினைவுகூர விரும்புறேன்[ஸ்ஸ்ஸ் இதை இங்கின கரெக்ட்டாச் சொல்லாட்டில்... 61 தான் என ஸ்ராம்ப் ஒட்டிடுவாங்க கர்ர்ர்ர்ர்ர்:))].

ங்கு நாம் நண்பர்கள் குடும்பங்கள் மாத்தி மாத்தி ஒவ்வொரு வீட்டுக்கும் கூப்பிட்டு ஹெட்டுகெதர் போல லஞ் அல்லது டின்னர் கொடுப்பதுண்டு.  அப்போ போகும்போது பிஸ்கட், சொக்கலேட் , கேக், இப்படிக் கொண்டு போவது பிடிக்காதெனக்கு.. அதனால தேடித் தேடி ஏதும் பிரயோசனமான பொருட்களாக கொடுக்க விரும்புவேன். குழந்தைகளுக்கு அவர்களுக்குப் பிடித்ததை வாங்கிவிட்டு,

பெரியாட்களுக்காக, நல்ல அழகான நொன் ஸ்ரிக் சமையல் பாத்திரங்கள், அழகழகான டிசைன்களில் மின்னும் மின் விளக்குகள்(Table lamps), Flower vase, Perfume, விதம் விதமான வாசனை மெழுகுவர்த்திகள் இப்படியானவற்றை தேடி வாங்கிக் கொடுத்திருக்கிறேன்,

ந்த வகையில் இம்முறை கிரிஸ்மஸ் க்கு என்ன கொடுக்கலாம் என தேடிய இடத்தில், நல்ல ஒரு பொருளாக இந்த கிரில் தெரிஞ்சுது, 4 குடும்பங்களுக்கு இதை பிரசண்ட் பண்ணினோம்.. கிரிஸ்மஸ் க்காக.

னைவரும் சந்தோசப்பட்டார்கள், மிகவும் பிரயோசனமாக இருக்கிறது என்கிறார்கள், கேட்க எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்குது. இதில் நாங்கள் சாம்பிளுக்காக முதலில் குட்டிக் கிரில் வாங்கினோம், எங்களுக்கு பிரயோசனமாக இருந்ததனால், இதில் பெரிய சைஸ் வாங்கி பிரசண்ட் பண்ணினோம், நாமும் பெரிதாகவே வாங்கியிருக்கலாம் என எண்ணுகிறோம் இப்போ..., ஆனா பிள்ளைகளுக்கு அவசரமா ஒரு சான்விச் செய்து கொடுக்க, குட்டிக் கிரில்தான் வசதி.

இதில் செய்த சீஸ் சான்விச், ஹாம் சான்விச்.. அவரவர் விருப்பத்துக்கேற்ப நன்கு முறுகவிட்டும் எடுக்கலாம்.

நீங்களும் வாங்குங்கோ அல்லது அட்ரஸ் தாங்கோ அடுத்த கிரிஸ்மஸ் க்கு பிரசண்ட் பண்ணுறேன்:).

இது என்ன தெரியுமோ?:) இதையும் இதில்தான் கிரில் பண்ணி எடுத்தேன்:)..வாழைத்தண்டு:)

நாம் கிரில் பண்ணும் பொருட்களில் கொழுப்பு இருப்பின், கீழே இருக்கும் தட்டில் முழுவதும் வடிந்துவிடும், அதனால்தான் இதை அனைவரும் விரும்புகின்றனர்.

Breaded chicken, Asparagus. இதில் அஸ்பரகஸ் ஐ எதுவும் பண்ணத் தேவையில்லை, சும்மா கழுவிப்போட்டு அப்படியே கிரில் பண்ணிட்டால் சரி பின்பு சோல்ட் அண்ட் பெப்பர் போட்டு அப்படியே சாப்பிடலாம்.

ங்கு எல்லோரிடமும் சமைக்கும் குக்கரோடும் கிரில் இருக்கு ஆனா அது பெரிசு, நிறைய செய்யும்போது அதைப் பாவிக்கலாம், இது பிரெட் சான்விச் செய்ய இன்னும் சூப்பராக இருக்கு...

முன்பு இந்த சான்விச் ரோஸ்டர்தான் டிமாண்ட்டாக இருந்துது வீட்டில், இப்போ கிரில் க்குத்தான் முதலிடம், ரோஸ்ட்டர் உள்ளே ஒளிச்சிட்டார்ர்:).


சில சமையல் ரிப்ஸ்:)...
கவனமாக் கேட்டு:) கிட்னியில் சேஃப் பண்ணிடுங்கோ.. எப்பவாவது பிரயோசனமாகும்:)..

ரெடிமேட் பூக்களாக வாங்கி வைப்பதை விட, தேங்காய் வாங்கி வந்து இப்படி உடைச்சு உடனேயே திருவி, பிரீஸர் பாக்குகளில் போட்டு பிரீஸ் பண்ணிடுங்கோ.. தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளலாம்.நம் வீட்டு பிரிஜ் இல், அப்பப்ப கறி வாசனைகள் அல்லது மரக்கறி வேறு ஏதாவது வாசமோ வராமல் இருக்க, பிரிஜ்ஜில் ஒவ்வொரு தட்டிலும் அங்கங்கு பிளிந்து விட்ட தேசிக்காய் கோதுகளை ச்ச்சும்மா ச்சும்மா வச்சு விடுங்கோ.. எந்த விதமான மணமும் இருக்காது, சுத்தமான நல்ல மணம் மட்டுமே இருக்கும். ஸ்ஸ்ஸ்ஸ் அதிரா பிரிஜ்ல என்ன என்ன வச்சிருக்கிறா எனப் பார்க்காமல்:) தேசிக்காய் கோதுகள் எங்கெங்க இருக்கு எனப் பாருங்கோ:) கர்ர்:))


ஊசிக்குறிப்பு:-
இம்முறை ஊசிக்குறிப்பேதும் இல்லை:)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அதிரா எழுதும் டயரியிலிருந்து:)..

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Tuesday, 7 February 2017

நான் பெத்த மகனே!!!  

ப்பவுமே, நகைச்சுவை, நகைச்சுவையான சினிமாக்கள் தான் அதிகமா தேடிப் பார்ப்போம். அந்த வகையில் போனகிழமை தேடிய இடத்தில்.. “நான் பெத்த மகனே” படம் கைக்குக் கிடைத்தது.

டிகர்கள் யாரென பார்த்தபோது, அத்தனை நகைச்சுவையாளர்களும் இருந்தார்கள்... மனோரமா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, வடிவேல்... இவர்களோடு ஊர்வசி.. மற்றும் ராதிகா, நிழல்கள் ரவி.

ப்போ என் சந்தோசத்துக்கு எல்லையே இல்லை, இதனை இப்பவே பார்த்து முடிக்க வேண்டும் என ஆரம்பித்தால்... முடிவு வரை நிறுத்தவே மனம் வரவில்லை எண்டால் பாருங்கோவன்... அவ்ளோ ஆர்வமா நகர்த்தியிருக்கிறார்கள் கதையை.

==========================இடைவேளை===========================
அப்போ எங்கட டொக்டர்- பிரின்சிபல்- செஃப் ... தாமோதரம்பிள்ளை அங்கிளைப் பார்த்தால் திருமணம் முடிச்சவர்போலவா தெரியுது:)).. ஹா ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:))

=========== சரி சரி லைட் ஓவ் பண்ணியாச்சு, தடக்குப் படாமல் உங்கள் உங்கள் seat  களில் எல்லோரும் வந்து இருந்திடுங்கோ.. மாறிக்கீறி இருந்திடாதையுங்கோ....... இடைவேளை முடிஞ்சுது===_()_

ல்ல விடுப்ஸ் கதை:).. நல்ல நகைச்சுவையான காட்சிகள். ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்ட படம், இடங்கள் பார்க்க பார்க்க ஆசையாக இருக்கு.

மாமிமார்கள் எல்லோரும் ஒரு கட்சியாகவும், மருமகள்மார் எல்லோரும் ஒரு கட்சியாகவும் கூடி இருந்து பேசுவது, சந்தைக்குப் போய் வருவது எல்லாம் பார்க்க, அவ்விடத்தில் நாமும் இருந்தால் நன்றாக இருக்குமே எனும் ஆசை வருது..(மருமகளாக..,மாமியாராக இல்லை:)).. இதையெல்லாம் ஒழுங்காச் சொல்லிடோணும்)).

லோயராக கவுண்டமணியும், அவரிடம் கஸ்டமராக செந்திலும், செந்திலுக்கு மகனாக வடிவேல் வருகிறார். வடிவேலுக்குத் திருமணம் முடிந்து விட்டது, ஆனால் முதலிரவு நடப்பதற்குள்.. சம்பந்திமாருக்குள் பிரச்சனை ஏற்பட்டு வழக்கு தொடர்கிறது... தனக்கு எப்போ முதலிரவு நடக்கும் என பகல் கனவில் மிதக்கிறார் வடிவேல்ல்ல்.. நடந்ததா என்பதை அறியப் படம் பாருங்கோ:)).

னா நகைச்சுவைக்கு மத்தியில் நல்ல ஒரு படிப்பினையையும் ஒளித்து நகர்த்துகிறார்கள்.. ஒரே ஒரு மகனாக நிழல்கள் ரவி .. தன் மகனே உலகம் என வாழும் அம்மாவாக மனோரமா வருகிறார்.

தானாகவே விரும்பி மருமகளை செலக்ட் பண்ணுகிறார்..  ஒரு, தாய் தந்தை இல்லாத பெண்ணை, அப்போதான் மருமகள் தனக்குள் அடங்கி நடப்பார் என தப்புக் கணக்குப் போடுகிறார்... அம்மாவுக்காக  தன் காதலை விட்டுக் கொடுத்து, இப்பெண்ணை மணம் முடிக்கிறார் மகன்..

னா கொஞ்சம் ஓவராக, மனைவி கணவனுக்கு ஆசையாகச் செய்யும் பணி விடைகளை, மனைவியைச் செய்ய விடாமல் தானே செய்கிறார்.. மனோரமா., இதனால் மகனுக்கு எரிச்சல் வருகிறது... பின்பு மருமகளும் கொஞ்சம் மாமியை எதிர்க்க தொடங்குகிறார்.

வீட்டுக்குள் பூகம்பம் ஆரம்பம்... முடிவு கவலையான முடிவுதான்.. லோயர் ஆக ராதிகா வந்து நன்கு வாதாடுகிறார்.... விரும்பினால்.. பொழுது போகாதுவிட்டால் நிட்சயம் இப்படம் பாருங்கோ...  முடிவு கவலை எனினும் பார்க்கக்கூடிய படம், முடிவை சற்று மாற்றி அமைத்திருக்கலாம். மற்றும்படி படம் எனக்கு மிகவும் பிடித்து விட்டது.

சில கிராமங்களில் நடக்கும் உண்மைச் சம்பவத்தின் தழுவலாக இருக்கலாம் கதை.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அதிராவும் சினிமா விமர்சனம் எழுதிட்டேன்ன்ன்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஊசிக்குறிப்பு:
போனதடவை சிலபேர் வோட் பண்ணவில்லை என கறுப்புப் பூஸ் படைத்தலைவர் அறிவிச்சார்ர்:)) அதனாலதான் இம்முறை கண்காணிப்புப் படைத் தலைவரை:) இங்கின காவலுக்குப் போட்டிட்டேன்ன்:)).. சே சே சே எப்பூடி மிரட்டினாலும், சிலபேர் வோட் பண்ண மாட்டினமாமே:))
 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Saturday, 4 February 2017

மண் சட்டியும் மீன் குழம்பும்.. பக்குப் பக்கூஊ:)

ன்ன? என் தலைப்புப் பார்த்துப் பக்குப் பக்கெண்ணுதோ உங்களுக்கெல்லாம். முந்தின காலத்தில மண் பாத்திரங்கள், பித்தளை, கல்வெள்ளி, இரும்பு என வகை வகையாக சமைச்சார்கள். அதனால் அக்காலத்தவர்கள்  நலமாக இருந்தமைக்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள். இதுபற்றி விரிவாக நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை உங்களுக்கெல்லாம் தெரியும்தானே?:).

Sunday, 29 January 2017

சகிப்புத் தன்மை...

ளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதானே வளர்த்தி என்று சொல்லிப்போட்டினம்.... ஆனா அத்தோடு சகிப்புத் தன்மையையும் வளர்க்க வேண்டி இருக்கே.

முக்கியமா இங்கு வெளிநாட்டுக்கு வந்ததில் இருந்து என் சகிப்புத் தன்மையை நாளுக்கு நாள் பல்லைக் கடிச்சு, நாக்கைக் கடிச்சு கூட்டிக்கொண்டே வாறேன்.. ஏனெனில் நாம் இருக்கும் ஊரும் அப்படிப்பட்டது. கலப்படமில்லாத வெள்ளையர்கள் இருக்கும் இடம், வெளிநாட்டவர்கள் எனில் நாமும் இன்னொரு குடும்பமும்தான், மற்றும்படி 2 சைனீஸ் குடும்பமும் உண்டு, எங்கு போனாலும் மிக ஒழுங்காக இருப்பார்கள்.

ரோட்டில் என்னதான் மெதுவா போனாலும், இடையே அவசரமா காரை நிறுத்தி யாருடன் பேசினாலும், பின்னாலே வரும் கார்கள் எல்லாம் பொறுமை காப்பார்கள், கோன் அடிக்க மாட்டார்கள். கோன் சத்தமே காதில் கேட்காது.

இரண்டே இரண்டு விசயத்துக்கு மட்டுமே கோன் அடிப்பார்கள்... 
1. சிக்னலில் முதலாவது ஆளாக காரை நிறுத்திவிட்டு கனவில மிதந்து கொண்டே இருந்து, கிரீன் லைட் மாறியபின்பும் அப்படியே கனவு காணும்போது:) கோன் பண்ணுவார்கள்... எடு காரை என:).

2. டக்கென ஏதும் றூல்ஸ் ஐ மீறி, காரைக் கண்டபடி திருப்பினாலோ, வெட்டினாலோ மட்டும் கோன் அடிப்பார்கள்(அதாவது, எதிர்பாராமல் பின்னே வரும் காரை திடுக்கிடப் பண்ணினால் மட்டும்).

ப்படியான மென்மையான ஊரில் இருப்பதனால் மிகவும் கவனமாக நாம் நடப்பது வழக்கம். தப்பித் தவறியும், ஏசியன்ஸ் என்றாலே இப்படித்தான் என இவர்கள் எண்ணிடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருப்பதனால்.. அதிகமா சகிப்புத் தன்மை தேவைப்படுது.

டுத்து Learners car முன்னாலே போகும்போது, பின்னாலே ஊர்ந்து ஊர்ந்து போவதுக்கு எவ்வளவு சகிப்புத் தன்மை தேவை தெரியுமோ? Dual carriageway எனில் (டபிள் ரோட்) முந்திக்கொண்டு போயிடலாம், ஒரு ரோட் எனில் முந்தவும் முடியாது... அந் நேரம் ஸ்கூலுக்கு நேரமாச்சே என காருக்குள் இருந்து பதறத்தான் முடியுமே தவிர ஒண்ணும் பண்ண முடியாது:).

னா நான் நினைப்பேன் முன்பு ஒருகாலத்தில் கார் பழகும்போது, என் பின்னாலேயும் இப்படி சகிப்புத் தன்மையோடுதானே ஏனையோர் இருந்திருப்பார்கள்.... இனி நம் பிள்ளைகள் பழகும்போதும் யாரும் திட்டாமல் சகிச்சுக் கொண்டு பின்னாலே ஊர்ந்து செல்லத்தானே போகிறார்கள் அதனால.. இது நான் கடந்து வந்த பாதை.. என நினைச்சு மிகவும் சகிப்புத் தன்மையோடு..  "நீ ஓடு ராசா!! பத்திரமா ஓடு" என நினைச்சு, பொறுமை காப்பேன்.

ன்னொரு இடம், சில இடங்களில் வயதானோரின் பின்னால் நடப்பது. முந்தவும் முடியாத இடமாகவும் சன நெருசலான இடமாகவும் இருக்கும் இடங்களில், வயதானோர் மிக மெதுவாக நடப்பார்கள்.. ஒரு காலை எடுத்து வைத்து பின் மெதுவா அடுத்த காலை எடுத்து வைப்பார்கள், இவ்விடத்தில் பயங்கர சகிப்புத் தன்மை வேணும் - பின்னாலே மெதுவா ஊர:).. அப்போ நினைப்பேன்.. இது நான் பின்னாளில் சந்திக்கப் போகும் பாதைதானே- அதாவது கடக்க இருக்கும் பாதை, என. அதை நினைச்சே மிகவும் சகிச்சுக்கொண்டு பின்னாலே போவேன்.

னக்கு என்னமோ வயதானோரிலும், குழந்தைகளிலும் அதிக பாசம் உண்டு. எங்கு போனாலும் நான் அதிகம் ஒட்டியிருப்பது இந்த இருவரோடும்தான். அதிலும் நான் நினைப்பதுண்டு, நம் வயதை ஒத்தோரை எல்லோரும் கவனிப்பார்கள் நோர்மலா, ஆனா வயதானோரைத்தான் தேடுவது குறைவு, அதனால நான் நம் வீட்டுக்கு விருந்தினர் வரும்போது பெற்றோரை அழைச்சு வந்தால், பெற்றோரோடுதான் அதிகம் பேசுவேன்.

ம் வீட்டுக்கு எதிர் வீட்டில் ஒரு தம்பதியினர் இருக்கிறார்கள் (65/70) வயசுக்காரர்(ஸ்கொட்டிஸ்) அவர்கள் என்னைக் கண்டால் நொன் ஸ்ரொப்பாக பேசுவார்கள், நானும் தப்பி ஓடாமல் பொறுமையா நின்று பேசுவேன், வீட்டுக்கும் போய்ப் பேசிவிட்டு வருவேன், நம் சமையல் பிடிக்கும் அவர்களுக்கு, ஏதும் செய்தால் கொண்டு போய்க் கொடுப்பேன்.  இந்த விசயத்தில் நிறையப் பேசலாம், ஆனா அது தற்பெருமை பேசுவது போலாகிடும் என்பதனால என்னைக் கொன்றோல் பண்ணிக் கொண்டு...

ப்போகூடப் பாருங்கோ உங்களுக்கும் சகிப்புத் தன்மை வந்திருக்குமே?:) என் போஸ்ட்டை ஒருவரிகூட விடாமல்:) முழுவதையும் சகிச்சுக்கொண்டு படிச்சு முடிச்சிட்டீங்கதானே?:)).

ச்ச்சோஓ நான் சொல்ல வருவது யாதெனில் சில நேரங்களில் கெட்ட கெட்ட கோபமா வரும், கோபத்தை அடக்க அடக்க உடம்பும் நடுங்கப் பார்க்கும்.. ஆனா இப்பூடியான நேரங்களில்.. மேலே நான் யோசிச்சதைப்போல “மாத்தியோசிச்சு” சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கோ...

இதிலிருந்து முடிவா நான் என்ன சொல்கிறேன் எனில்... பார்த்தீங்களோ? அதிரா ரொம்ப நல்ல பொண்ணு:)).. இதைச் சொல்லத்தான் சுத்தீஈஈஈ வளைச்சு இவ்வளவும் சொல்லி முடிச்சேன்ன்ன்.. ஸ்ஸ்ஸ் இனி யாரும் என்னைத் திட்டிடக்கூடாது:) சகிச்சுக் கொள்ளோனும்:))... ஹா ஹா ஹா..

ஊசிக்குறிப்பு:
புளொக் ஆரம்பித்து இத்தோடு ஒன்பது வருடங்கள்... ஆனா இதுதான் என் 200 ஆவது பதிவு:) எல்லோரும் ஓடி வந்து, அதிரா கையில தாம்பூலம் எடுத்து, வாழ்த்துங்கோ அதிராவை:).
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
வாழ்க்கையில் எந்த விசயத்தில் தோற்றாலும், 
ஒன்று மனசை மாத்தத் தெரியோணும், 
இல்லையெனில் தேற்றவாவது தெரியோணும்
இவ்வரிய தத்துவத்தை, இந் நன்னாளில் உங்களுக்காக காவி வந்து தந்திருப்பவர்.. 
உங்கள் பெருமதிப்பிற்கும்:), பேரன்புக்கும் உரிய புலாலியூர்ப் பூஸானந்தா:)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Tuesday, 24 January 2017

ன்கொடுமைது :(


து ஒரு வேதனைக்குரிய உண்மைச் சம்பவம்.. கதை கேட்டதும் என்னமோ போலாகிட்டேன், என்ன செய்வது வாழ்க்கை மிகக் குறுகியது, ஒவ்வொருவரின் தலை எழுத்து ஒவ்வொரு விதமானது, இதில் பூஸ், பப்பி கூட விதி விலக்கல்ல.

எங்கள் அண்ணன் குடும்பம் ரோட்டில் போய்க் கொண்டிருந்தார்களாம், கனடா ரோட்டுக்கள் பற்றி நான் ஏற்கனவே “அதிரா தியேட்டர் - கனடா” எனும் லேபலில் நிறைய சொல்லிட்டேன்... பெரிய பெரிய ரோட்டுக்கள் அதுவும்.. பெரும்பாலும் எங்கேயும் குறைந்தது 4 இருக்கும். அப்போ இவர்கள் போய்க் கொண்டிருந்தபோது, ஒரு குட்...ட்ட்டிப் பூஸ் ரோட்டைக் கடக்கிறதாம்..

அவ்ளோ வாகனத்துள் அந்தப் பெரிய ரோட்டை, ஒரு பெரிய எலியளவு சைஸில், ஒரு பூஸ் குட்டி கடக்கிறதாம், இதைப் பார்த்ததும், உடனே நடு ரோட்டிலேயே காரை நிறுத்திப்போட்டு, அண்ணன் இறங்கி ஓடிப்போய், ட்ரபிக் போலீஸ் போல ஏனைய கார்களுக்கு சைகை காட்டி நிறுத்தச் சொல்லி, அவசரமாக அப் பூஸ் குட்டியை பிடிச்சுக் கொண்டு பக்கத்திலே ஒரு இரும்பு வேலியாம் உள்ளே ஒரு பில்டிங்,

அப்போ இவர் உள்ளே போய் அந்த பில்டிங் கோனரில் விட்டு விட்டு ஓடி வந்து காரை எடுத்திட்டார். டென்சன்தானே... நடு ரோட்டில் கார் நிற்கும்போது அவரால் எதையும் யோசிக்க முடியவில்லை, அப் பூஸ் குட்டியை காப்பாற்றினால் போதும் என மட்டும்தான் எண்ண முடிஞ்சிருக்கு.

அப்போ மீண்டும் காரை எடுத்துக் கொண்டு போகப்போக, காருக்குள்ளிருந்து அண்ணியும் பிள்ளைகளும் சத்தம் போடத் தொடங்கிட்டினமாம், எதுக்கு அங்கு கொண்டு போய் விட்டீங்க அதை, வீட்டுக்கு எடுத்துப் போயிருக்கலாம், அல்லது ஒரு பெட்ஷொப் ல குடுத்திருக்கலாம் எனப் பெரிய அட்டகாசமாம்.

அப்போதான் அண்ணனுக்கும் மனதில் தட்டியதாம், சரி எடுத்துப் போய் பெட்ஷொப்ல குடுக்கலாமே என, [இவ்ளவுக்கும் நிறையத் தூரம் ஓடியிருப்பார்கள்தானே] உடனே காரை திருப்பிக் கொண்டு அவ்விடத்துக்கு வந்திருக்கிறார்கள்...

அங்கு கண்ட காட்சி, அந்தப் பூஸ்குட்டி திரும்ப வெளிக்கிட்டு அதே ரோட்டை திரும்பவும் குரொஸ் பண்ணிய இடத்தில், வேறு ஏதோ வாகனம் அடித்துப் போட்டுப் போயிருக்கு.. இவர்களுக்கு மனமே கலங்கிப் போச்சாம்... விதி வலியது:(.

ஊசிக்குறிப்பு:)
இணுவில் மாம்பழத்தை..
கோண்டாவில் கொய்யாவை...
கொக்குவில் அணில் பார்த்துக்...
கொட்டாவி விட்ட கதை...
இனி இருக்கவே இருக்காதூஊஊ.... [ மேலே பாடல் கேளுங்கோ]

என்ன தலை சுத்துதோ என் பாட்டுக் கேட்டு?:).. கிட்டத்தட்டப் 15 வருசமா எங்கள் இந்த ஊரில ஒரு தமிழ்க் கடை இல்லையே என நான் ஏங்காத ஏக்கம் இல்லை:), அழாத நாளில்லை:).. ஒவ்வொருவரும் தமிழ்க்கடையில் அது வாங்கினேன் இது வாங்கினேன் எனக் கேட்டுக் கேட்டுக் கொட்டாவி விட்டுக்கொண்டிருந்த காலம் 2016 உடன் மலையேறிப்போச்ச்ச்:)) எங்களுக்கும் இலங்கைத் தமிழ்க் கடை வந்திட்டுதூஊஊஊஊஊஉ... அங்கு இல்லாத சாமான் இல்லை.. மண் சட்டியில் இருந்து அனைத்து இலைவகைகள், நெக்டோ சோடா, விழா/ளாம்பழம்:), றம்புட்டான் அனைத்துமே உண்டு.. இனி பனங்கிழங்கும் வருமென எதிர்பார்க்கிறேன்ன்.. சந்தோசம் பொயிங்குதே:).
===========================================================================
இனிமேல் ஈமெயிலில் பெற விரும்புவோர் மெயில் ஐடியை போட்டு வையுங்கோ பிளீஸ்.. இணைப்பு குடுத்திருக்கிறேன் வலது பக்கத்தில்...
===========================================================================

Friday, 20 January 2017

து ப்போ?:)மேடைப் பேச்சு முடித்து
மிகுந்த களைப்போடு
வீடு வந்தேன்..

மெத்தையில் பொத்தென விழுந்தேன்
ஒருத்தி ஓடிவந்து
கொஞ்சம்கூடக் கூச்சமே இல்லாமல் 
என்மீது புரண்டு தழுவினாள்..

நான் திரும்பத் 
தழுவ விரும்பவில்லை எனினும்
தள்ளிவிட விரும்பாமல், தழுவட்டும்
என விட்டிருந்தேன்

கொஞ்ச நேரத்தில்
இன்னொருத்தி வந்தாள்..
இதென்ன ஒரு கட்டிலில்
இருவரா என்பீர்கள்..

நான் சொன்னது...
முன்னே வந்தவள் தூக்கம்!
பின்னே வந்தவள் கனவு!!

ஹா ஹா ஹா நான் எப்பவும் பூஸ் ரேடியோ கேட்பது வழக்கம் என என் பக்கம் வரும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும், அதனாலேயே இங்கு  “பூஸ் ரேடியோ” என லேபல் கொடுத்தே பல போஸ்ட்கள் போட்டிருக்கிறேன்.

இந்தக் கவிதை கலைஞர் அவர்கள் நேரடியாகச் சொன்னது, ஒரு தடவைதான் கேட்டேன்.. ரேடியோ எல்லோ.. திரும்ப  கேட்க முடியாது:), ஒரு தடவை கேட்டாலும் மனதில் பதித்துக் கொண்டேன்... கேட்டபொழுது விழுந்து விழுந்து சிரித்ததில் புரையேறிவிட்டதெனக்கு, என்ன ஒரு கற்பனை..

அதனால் என் மனதில் நினைவில் உள்ளதை அப்படியே என் பாஷையில் இங்கு பதித்திருக்கிறேன், வசனங்கள் தவறியுமிருக்கலாம் அஜீஸ் பண்ணுங்கோ.

இன்னொரு ஹைக்கூபோன்றது .. இது பர்வீன் சுல்தானா சொன்ன கவிதை..
இது நட்பு, காதல், தம்பதியினர் அனைவருக்குமே பொருந்தும்...

நீயும் நானும்
பிரிவதென்று
முடிவெடுத்தபின்
உனக்கும் எனக்கும்
பகைமை என்ற
புது உறவு எதற்கு..

இரண்டு கவியும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, அதனால் இங்கே காவி வந்தேன்...  
“யான் பெற்ற இன்பம் பெற வேண்டும் நீங்களும்” எனும் நல்லெண்ணத்தில்:).

ஊசிக்குறிப்பு:
இங்கு வரும் நீங்கள் எல்லாம் தமிழ்மணம் வோட் பண்ணாமல் போயிடுறீங்க:( .. இனியும் பண்ணாமல் போனீங்க.. வச்சிடுவேன் :) ஹையோ எனக்குச் சொன்னேனாக்கும்..க்கும்..க்கும்..(இது எக்கோ)..
======================================================================