நல்வரவு_()_


Monday, 18 September 2017

பகுதி ரெண்டு:) [இப்படியும்...:)]

த் தொடரின் முதல் பகுதியைக் காண.... இங்கின கையை வையுங்கோ..

இது உங்கள் யாருக்கும் தெரியாத கதை:)..  “ஆஹா அதிரா மிக அருமையாக கதை எழுதுறீங்க:).. தொடருங்கோ முடிவு அறிய ஆவலாக இருக்கிறோம்:)” இப்பூடித்தான் சொல்லோணும் ஓக்கே?:). ஹா ஹா ஹா. தொடர்கிறது...

“அகல்யா சொல்? யார் நீ? எதுக்காக நமக்குப் பிறக்கும் அத்தனை குழந்தைகளையும் கொல்கிறாய்?.. இக்குழந்தை எனக்கு வேணும்..” என்கிறார்... 
கொடுத்த வாக்கை மீறி விட்டாரெல்லோ? ... முடிவு என்னாகுமோ எனப் பயமிருந்தாலும் பொறுமை இழந்து கேட்டு விட்டார். உடனே அகல்யா சொன்னா..  “என் கண்டிஷன்சை  மீறி விட்டீங்கள், அதனால் நான் இனி உங்களோடு இருக்க மாட்டேன், நான் போவதற்கு முன் காரணத்தைச் சொல்லி விட்டுச் செல்கிறேன்” என்று சொல்லத் தொடங்கினா.

அனைத்தையும் சொல்லி, இங்கு உங்களுக்கு கொட்டாவியை வரவைக்க எனக்கு[அதிராக்கு] விருப்பமில்லை:).. அதனால சோட் அண்ட் சொக்கலேட்:) ஆக சொல்கிறேன்... ஏதோ சாபத்தால் அவ மானிடப்பிறவி எடுத்தாவாம், இங்கே மானிடர் ஒருவரைத் திருமணம் செய்து, பிறக்கும் குழந்தைகளை கங்கை ஆற்றில் விட்டால் சாபம் நீங்கும் என்பதால் வந்தாவாம்.. இப்போ வல்லபன் கேட்ட கேள்வியால், “என் சாபம் நீங்கி விட்டது.. இனி நான் போகிறேன், இக்குழந்தையை உங்களுக்கே தந்துவிடுகிறேன்” என்றா.

வல்லபன் எதுவும் சொல்ல முடியாமல் விளித்தபோது , தொடர்ந்து அகல்யா சொன்னா..  “பாவம் உங்களுக்கு என்ன தெரியும், தனியே எப்படிக் குழந்தையை வளர்ப்பீங்கள்... அதனால், இக்குழந்தையை நான் என்னோடு எடுத்துச் செல்கிறேன், சென்று அவனுக்கு அத்தனை வில் வித்தைகளையும் கற்றுக் கொடுத்து, ஒரு தந்தையோடு இருந்து கற்பதை விடப் பல மடங்கு அவனை நன்கு வளர்த்து, அவனது 16 வயது நிறைவடைந்ததும், உங்களிடம் கொண்டு வந்து ஒப்படைக்கிறேன்” என்றா.

வல்லபன் யோசித்தார், பிறந்த குழந்தையை எப்படித் தனியே வளர்ப்பது, அதனால தாயுடன் இருப்பது நல்லதே என முடிவெடுத்து..  “அப்படியே ஆகட்டும்” எனச் சொன்னார்.

குதிரை பூட்டிய தேரிலே எல்லோரும் ஏறி அமர்ந்து, கங்கைக் கரைக்குப் போனார்கள்.. கரையில் இறங்கி, படகிலே அகல்யாவையும் குழந்தையையும் ஏற்றி அனுப்பினார் வல்லபன்.  “இதே இடத்திலே, மகனின் 16 வயது முடிந்த அடுத்த நாளே கொண்டு வந்து உங்களிடம் ஒப்படைப்பேன்” எனக் கூறி விடை பெற்றுச் சென்றா அகல்யா.

ஏழு வருடத்திலேயே திருமண வாழ்க்கை முடிந்து போனது:(.. வல்லபன் உண்மையிலேயே அகல்யாவை விரும்பித்தானே மணம் முடித்தார், அதனால்தானே இத்தனை வருடமும் அனைத்தையும் பொறுத்து வந்தார். இப்போ அகல்யாவையும் மகனையும் பிரிந்த துயர், அவரை மிகவும் வாட்டியது. மிகவும் மனமொடிந்து  அரண்மனைக்குத் திரும்பினார்.

இருப்பினும் மனதின் மூலையில் ஒரு சிறிய சந்தோசம், 16 வருடங்கள் முடிய மகன் வருவான், மகனோடு அகல்யாவும் வருவா, மகனை ஒப்படைக்க, அப்போ ஒருதடவை திரும்பவும் அகல்யாவை சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என எண்ணி ஏங்கி மனதை சமாதானப் படுத்தினார்.

அதனால், அன்றிலிருந்து ஒவ்வொரு மாலையும், அந்தக் கங்கைக்கரைக்குப் போவதும், அவர்களை வழி அனுப்பிய அவ்விடத்தில் நின்று பார்ப்பதும், மனம் ஏங்குவதும், நெஞ்சு கனமாவதும், திரும்பி வருவதுமாக அவரது காலம் உருண்டோடியது. பதினாறு வருடங்கள் வந்தன, அவருக்கு சரியான கணக்குத் தெரியாமையால்... இனி எந்நேரமும் அகல்யா, மகனைக் கொண்டு வருவா என எண்ணி எதிர்பார்த்து காத்திருந்தார்.

திடீரென ஒருநாள், கங்கைக் கரையிலே படகொன்று வந்து நின்றது, சுமார் 16 வயது மதிக்கத்தக்க வாலிபன், மிகவும் கம்பீரமாகவும்.. அரசனுக்கே உரிய கோலங்களோடும் படகிலிருந்து இறங்கினான்.. அவனோடு கூடவே அகல்யாவும் வந்தா. வல்லபன் வாய் திறந்து பேச முடியாமல் திகைத்து நின்றார். வந்த வாலிபன், வல்லபன் கால்களில் விழுந்து வணங்கினான்.

அகல்யா, பேசினா.. “ இவன் தான் உங்கள் மகன், பெயர் விஸ்ணு:), சகல வித்தைகளையும் அவனது 16 வயதுக்குள் கற்றுக் கொடுத்து விட்டேன், அவன் இனி உங்களோடுதான் இருப்பான், உங்கள் மகனை நல்லபடி, நான் கொடுத்த வாக்கின்படி ஒப்படைத்து விட்டேன், இனி நான் வரமாட்டேன்” எனச் சொல்லி விட்டு அகல்யா மறைந்து விட்டா.
{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}------{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}------{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}
இம்முறை இடைவேளையில் உங்களுக்கு ஒரு குட்டிப் போட்டி)...இது ஒரு பாடலுக்கான ஆரம்பம்.. பாடல் என்ன என்பதைக் கண்டு பிடியுங்கோ:)
 “மனசுக்குள் காயமேற்படும் போதெல்லாம், ஒரு மாயக்கரம் வந்து, மருந்து போட்டுப் போகிறது, நான் கலங்கி அழும்போதெல்லாம், கண்ணுக்குத் தெரியாத சுட்டு விரலொன்று, தொட்டுத் துடைத்துப் போகிறது.., அடி பெண்ணே!!! நீ மட்டும் ஆறுதல் சொல்வதாயிருந்தால், நான் அழுது கொண்டே இருப்பேன்”..
{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}------{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}------{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}
கல்யாவின் பிரிவால் மிகுந்த வேதனையாக இருப்பினும், மகன் வந்துவிட்ட மகிழ்ச்சியால் மனம் குதூகலித்து, ஊரே கோலாகலமாக விஸ்ணு வின் வரவைக் கொண்டாடியது. விஸ்ணுவும் மிகவும் நல்ல வளர்ப்புடையவனாக இருந்தான், அனைவருக்கும் அவனைப் பிடித்திருந்தது, தந்தையை நன்கு கவனித்தான், மிக நல்ல ஒரு இளவரசனாக இருந்தான்.

இன்னும் சில வருடங்கள் உருண்டோடியது, இனி அகல்யா வரப்போவதில்லை , என்னதான் மாட மாளிகைகள், வசதிகள் என அத்தனையும் இருப்பினும், தனக்கென ஒரு துணை, மனம் திறந்து பேச ஒரு உறவு இல்லையே எனும் கவலை வல்லபனை வாட்டத் தொடங்கியது,  அவருடைய மனதுக்கு ஆறுதல் கொடுப்பது அகல்யாவை இறுதியாகச் சந்தித்த அந்த கங்கைக் கரைதான், சில நாட்கள் அங்கு போவதை நிறுத்தி இருந்த அவர், மீண்டும் அங்கு போகத் தொடங்கினார்.

இப்படிப் போய் வந்து கொண்டிருந்தவேளை, ஒருநாள், தூரத்திலே ஒரு படகு வருவது தெரிந்தது, அப்படகை ஒரு பெண் ஓட்டி வருவது தெரிந்தது... அப்பெண்ணிலிருந்து ஒரு வித மல்லிகை நறுமணம், வல்லபனின் மூக்கை வந்தடைந்தது.. இவ்வளவு வாசனை மிக்க திரவியத்தை அணிந்து, ஒரு ஆணுக்குரிய கம்பீரத்தோடு படகைச் செலுத்தி வரும் அப்பெண் யாராக இருக்கும் என எண்ணிக் கொண்டே கரையிலே, அப்படகு அவர் நிற்கும் கரையை நோக்கி வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்....

டொடரும்.. டொட்டடொயிங்ங்ங்ங்ங்:).__()__

ஊசி இணைப்பு:
கதைக்குக் கொஞ்சமாவது பொருத்தமாக இருக்கட்டுமே எனத் தேடி எடுத்து.. என் கலெக்‌ஷன்ஸ் Diary இலிருந்து போடுகிறேன்: இன்னுமொன்று, தொடர்கதையாக இருப்பதால், டக்கு டக்கெனப் போட்டால்தான் நல்லது என முடிவெடுத்திருக்கிறேன்:) அதனால மின்னல் வேகத்தில் என் பதிவுகள் வெளிவர இருக்கின்றன:) அஜீஸ் பண்ணிக்கொள்ளுங்கோ:)..
==========================================================================================
டமில் மனத்தில்:) வோட் போட்டு.. சொப்பன சுந்தரியை, என் கைப்பற்ற வைக்க இதோ லிங்:)
{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}------{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}------{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}
======================================================

120 comments :

  1. இந்த கதை நடந்த இடம் தேம்ஸ் நதி கரையோராமாக இருந்திருந்தால் அகல்யாவிற்கு பதிலாக அதிராவிற்க்காக அந்த அரசர் காத்து இருப்பார்.. அதிராவும் அரசி ஆக ஆகியிருப்பார் ஹும்ம்

    ReplyDelete
    Replies
    1. மதுரை மாட்டிக்கிட்டீங்களே! அதிரா சொல்லுவாங்க...."அரசன் எதற்கு ராணி ஆவதற்கு நான் தான் ஏற்கனவே எங்கட நாட்டின் அரசி...இது கூட இந்த ட்ரூத்துக்குத் தெரியலையே ஹையகோ அதனால இந்த ட்ரூத்தை நான் தேம்ஸ்ல தள்ளிவிடப் போறேன் யாரும் என்னைத் தடுக்காதீங்கோ" நு கூவப் போறாங்க பாருங்க.....ஹாஹாஹாஹா

      கீதா

      Delete
    2. ////Avargal UnmaigalMonday, S அதிராவும் அரசி ஆக ஆகியிருப்பார் ஹும்ம்/////

      ///Thulasidharan V ThillaiakathuTuesday, September 19, 2017 8:23:00 am
      மதுரை மாட்டிக்கிட்டீங்களே! அதிரா சொல்லுவாங்க...."அரசன் எதற்கு ராணி ஆவதற்கு நான் தான் ஏற்கனவே எங்கட நாட்டின் அரசி...இது கூட இந்த ட்ரூத்துக்குத் தெரியலையே ஹையகோ அதனால இந்த ட்ரூத்தை நான் தேம்ஸ்ல தள்ளிவிடப் போறேன் யாரும் என்னைத் தடுக்காதீங்கோ"///

      ஹா ஹாஅ ஹா நான் சொல்ல நினைச்சதை 200 வீதம் கரெக்ட்டாச் சொன்ன கீதாவுக்கு.. வல்லபை சபைக்குச் செல்ல ஒரு வி ஐ பி ரிக்கெட் வழங்கப்படுது:)...

      குயின் அம்மம்மாவின் பேத்தி நான் என பல வருடங்களாகக் கூவித் திரிகிறேன்ன்ன்:).. ட்றுத்துக்கு இன்னும் புரியல்லியே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

      ஹா ஹா ஹா மிக்க நன்றி ட்றுத், கீதா.

      Delete
    3. அதிரா ரிக்கெட்டு எல்லாம் சரி அந்த வல்லபன் கில்லர்ஜி மாதிரி மீசை எல்லாம் வைச்சிருந்தா நான் போகமாட்டேனாக்கும்....இல்லைனு கன்ஃபர்ம் பண்ணுங்க!!! ;ஹிஹிஹிஹிஹி....

      ஒருவேளை அவர் இத்தனைகாலம் சோகத்தில் வளர்த்திருந்த மீசை எல்லாம் இப்போ புதுசா பொண்ணு வரதுநால மீசை எல்லாம் எடுத்திருப்பாரோ...??!!!!

      கீதா

      Delete
    4. ///அந்த வல்லபன் கில்லர்ஜி மாதிரி மீசை எல்லாம் வைச்சிருந்தா நான் போகமாட்டேனாக்கும். ஒருவேளை அவர் இத்தனைகாலம் சோகத்தில் வளர்த்திருந்த மீசை எல்லாம் இப்போ புதுசா பொண்ணு வரதுநால மீசை எல்லாம் எடுத்திருப்பாரோ.///


      ஹா ஹா ஹா கீதா.. நான் இவ்ளோ காலமும் கில்லர்ஜி யின் அந்த மீசை வீரத்துக்கு அடையாளம் எண்டெல்லோ நினைச்சிருந்தேன்:) அப்போ அது சோகத்துக்கு அடையாளமோ?:).... என்ன கீதா இப்பூடிச் சொல்லிட்டீங்க:) இதைப் படிச்சால் கில்லர்ஜி உகண்டாவிலயே செட்டில் ஆகிடப்போறாரே.. ஹா ஹா ஹா:))

      Delete
  2. இந்தமுறை படகில் வந்தது தமன்னாவாக இருக்குமோ ?

    ReplyDelete
    Replies
    1. போங்க கில்லர்ஜி! தமனா எல்லாம் ஜுஜுபி!

      கீதா

      Delete
    2. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ:)..
      //இந்தமுறை படகில் வந்தது தமன்னாவாக இருக்குமோ ?//

      ஸ்ஸ்ஸ்ஸ் இதைப் படிச்சால் நெல்லைத்தமிழனுக்கு ஹார்ட் அட்டாக் வந்திடப்போகுதூஊஊஊஊ:)..

      ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
    3. ///Thulasidharan V ThillaiakathuTuesday, September 19, 2017 8:19:00 am
      போங்க கில்லர்ஜி! தமனா எல்லாம் ஜுஜுபி! //

      ஹா ஹா ஹா அப்படிச் சொல்லுங்கோ கீதா.. தமனா என்னதான் விலை உயர்ந்த பேர்ஃபியூம் அடிச்ச்சாலும்.. அந்தப் படகிலிருந்து வந்த வாசத்துக்கு ஈடாகுமோ?:).. அந்த வாசம் பற்றியே ஒரு பதிவு போடும் அளவுக்கு அதைப்பற்றிச் சொன்னார்களே... வீண் அலட்டல் எதுக்கு என, நான் சோட் அண்ட் சுவீட் ஆக்கிக்கொண்டு போகிறேன் கதையை... ஏனெனில் நான் சொல்ல விரும்புவது இக்கதைமூலம்.. இப்படியும் ஒரு பிள்ளை இருக்க முடியுமோ என்பதை மட்டுமே:).

      Delete
    4. அதே அதேஅதிரா.....நெல்லைக்கு மட்டுமா ஹார்ட் அட்டாக்....அதெப்படி அனுஷ்கா இருக்க தமனா என்று ஸ்ரீராம் வரும்!!!ஹாஅஹாஹாஹாஹாஹா

      கீதா

      Delete
    5. ஹா ஹா ஹா இல்ல கீதா.. யாருமே படகில் வருவது அனுஸ்கா எனச் சொல்லாத காரணத்தால் அப்பாடாஆஆஆஆஆ என நிம்மதியாக இருக்கிறார் ஸ்ரீராம்ம்ம்:).. தன் ஆள் சேவ் ஆம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)) ஹையோ ஹையோ:)..

      Delete
    6. ஐயோ எல்லோரும் இப்படி ஜொள்ளியே என்னை சினிமாவுல ஹீரோவாக நடிக்க வச்சுருவீங்களோன்னு பயமா இருக்கு..

      Delete
    7. ஹா ஹா ஹா கில்லர்ஜி பயப்பூடாதீங்க... ஆர் வேணுமெண்டு கூச்சப்படாமல் ஜொல்லுங்கோ:) தமனாவா?.. அனுஷ்காவா?:)... உங்களுக்கு ஜோடியா ஜீரோயினாகப் போடத்தான்:)...

      Delete
    8. அதிரா- பயணத்தில். இப்போ இந்த ஊர் லவுஞ்சில் நெட் நல்லா இருக்கு. நேற்று எங்க ஊர் ஏர்போர்ட் லவுஞ்சில் உங்கள் தளம் முழுமையாகத் திறக்கவில்லை. பாட்டை நேற்றே கண்டுபிடித்துவிட்டேன். குணா, கண்மணி அன்போடு.

      கில்லர்ஜி தமன்னாவைப் பற்றி எழுதியிருப்பதைப் பார்த்தேன். கர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
    9. ///நெல்லைத் தமிழன்Wednesday, September 20, 2017 1:26:00 pm
      அதிரா- பயணத்தில்//
      நீங்க எங்கோ ”பாலைவனச்:) சோலை” யில் மாட்டி விட்டீங்க என நினைச்சேன் ஹா ஹா ஹா..

      யேஸ் நீங்க சொன்னதும்தான் நினைவு வந்தது பாட்டு தாங்ஸ். ஹா ஹா ஹா இந்தக் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஐ உடனேயே சொல்ல விடாமல் நெட் தடைபோட்டு விட்டதே என நினைச்சு நித்திரை கொண்டிருக்க மாட்டீங்களே.. ஹா ஹா ஹா:)).. பாருங்கோ எத்தனையோ பேர் இருக்க கில்லர்ஜிக்கும்.. உங்கட தமனா:) தான் தேவையாக்கிடக்கூஊஊஊ ஹா ஹா ஹா:).

      நெட் கிடைச்சதும் திரும்ப வந்தமைக்கு மிக்க நன்றி.. மிக்க மகிழ்ச்சி.

      Delete
  3. அடுத்த பதிவிற்காகக் காத்திருக்கிறேன்
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ மிக்க நன்றி... அடுத்த பதிவுக்கு வோட் போட மறந்திடாதீங்கோ:).

      Delete
  4. "கண்ணணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே" - குணா படப் பாடல்.

    த ம பிறகு.

    கேனடாவுக்கு பிக் பாஸ் பார்க்கச் சென்றவரை, தினமும் மஹாபாரதம் படி என்று நல்வழிப்படுத்தியவரைப் பாராட்டுகிறேன். போற போக்கைப் பார்த்தால் அம்பிகை, அம்பாலிகை என்று கதை இழுத்துக்கொண்டே செல்லுமே. எத்தனை முறை படித்தாலும் அலுக்காது

    ReplyDelete
    Replies
    1. ஆம் நெல்லை பீஷ்மர் சபதம் தானே வித்து!!! மஹாபாரதம்!! அதில் தான் எத்தனை பாடங்கள்...எத்தனை கருத்துகள் இல்லையா...

      கீதா

      Delete
    2. நெல்லை "கண்மணி" என்று வந்திருக்கணும் மொபைலில் தட்டும் போது வரும் தான் இப்படி....ஆனா பாருங்க அதிரா கண்ணுல விளக்கெண்ணை போட்டு பார்க்கப் போறாங்க..

      கீதா

      Delete
    3. ///நெல்லைத் தமிழன்Tuesday, September 19, 2017 4:36:00 am
      "கண்ணணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே" - குணா படப் பாடல்.//

      வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ.. ஹா ஹா ஹா இதில ஒரு உண்மை சொல்லியாகோணும்:).. எனக்கு இந்த முன்னுரை மட்டுமே தெரிஞ்சிருந்தது.. பாட்டு என்ன எனத் தெரிந்திருக்கவில்லை:).. அதனாலேயே இங்கு கேட்டேன்ன்:).. மிக்க நன்றி.. எனக்குப் பாடல் தெரியாமல் இருந்த காரணத்தால் எழுத்துப் பிழைக்கு காக்கா போயிடுறேன்ன்ன்:)..

      //த ம பிறகு. /// கிடைத்து விட்ட்து நன்றி.

      Delete
    4. //கேனடாவுக்கு பிக் பாஸ் பார்க்கச் சென்றவரை, தினமும் மஹாபாரதம் படி என்று நல்வழிப்படுத்தியவரைப் பாராட்டுகிறேன். போற போக்கைப் பார்த்தால் அம்பிகை, அம்பாலிகை என்று கதை இழுத்துக்கொண்டே செல்லுமே. எத்தனை முறை படித்தாலும் அலுக்காது//

      நெல்லைத்தமிழன் நித்திரைத் தூக்கத்தில் இருக்கிறீங்களோ? எழுத்துப் பிழைகள் வருதே..

      ஹா ஹா ஹா நான் இது அது என்று கேட்பதில்லை... பெரும்பாலும் ரேடியோ கேட்பேன்ன்.. அதில் இப்படி ஏதும் குட்டிப் பகுதிகள்.. கொமெடி, மகாபாரதம், ராமாயணம்.. போடுவார்கள்.. அதில் பிடிச்சதை தேடிக் கேட்பேன் முழுவதையும்.

      அப்படி இது கேட்ட மாத்திரத்திலேயே எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போயிட்டுது.. இதுக்கு முன் இக்கதை அறிந்ததில்லை.. உடனேயே இங்கு எழுதோணும் என நினைச்சேன்ன்... அதனால அன்று கேட்டதை அப்படியே மனதில் வாங்கிக் கொண்டேன்ன்.. இப்போ மனதில் ரிவைண்ட் பண்ணிப் பண்ணி எழுதுகிறேன்.. அதனால ஏதும் குட்டித் தவறுகள் வரலாம்..

      இல்லை எனக்கு இப்படிக் கதைகளை எழுதுவது பிடிக்காது.. நான் எப்பவும் போஸ்ட் போடும்போது பலதடவைகள் யோசிப்பேன்ன்.. படிப்பவருக்கு போரிங் ஆகிடக்கூடாதே என்பதில் எப்பவும் என் கவனம் இருக்கும்..

      இக்கதையை போரிங் இல்லாமல் விசயத்தை மட்டும் சொல்லி முடிச்சிடோணும் என நினைக்கிறேன்.. அதனால தேவையில்லாதவற்றை அலட்ட மாட்டேன்ன்ன்.. கொஞ்சம் மானே தேனே போட்டு.. கதையை முடிச்சிடுவேன்.. ஹா ஹா ஹா.. மிக்க நன்றி.

      Delete
    5. //Thulasidharan V ThillaiakathuTuesday, September 19, 2017 8:14:00 am
      ஆம் நெல்லை பீஷ்மர் சபதம் தானே வித்து!!//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கீதா.. கு..கு வாக இருக்கக்குடா ஜொள்ளிட்டேன்ன்ன்:)).. இப்பூடி முந்துவீங்க யாராவது எனும் பயத்திலதான்.. மேலேயே முகவுரையில் சொன்னேன்.. இது உங்களுக்கு தெரியாத கதை என நினைச்சே படிக்கோணும் என.. ஹா ஹா ஹா.. சே..சே.. கீழிருந்து மேலே படிப்பவர்களால பாருங்கோ இப்போ அதிராவுக்குப் பிரச்சனை:)..

      Delete
    6. //Thulasidharan V ThillaiakathuTuesday, September 19, 2017 8:15:00 am
      நெல்லை "கண்மணி" என்று வந்திருக்கணும்//

      ஹா ஹா ஹா கீதா.. எனக்கு உண்மையில் இதற்கான பாட்டுத்தெரியாமையால.. நெல்லைத்தமிழனை மன்னிச்சு விட்டுட்டேன்ன்ன்:).. பார்த்தீங்களோ அதிராவுக்கு எந்தாப்ப்ப்ப்ப்ப்ப்பெரிய மனசூஊஊஊஊஊஊ:)..

      Delete
    7. //போற போக்கைப் பார்த்தால் அம்பிகை, அம்பாலிகை என்று கதை இழுத்துக்கொண்டே செல்லுமே. எத்தனை முறை படித்தாலும் அலுக்காது//

      அதிரா-கண்டிப்பாக இந்தப் பகுதியை, (மஹாபாரதத்தில்) படியுங்கள், கேளுங்கள். பீஷ்மர் செய்த மிகப் பெரிய தவறு இது. அதுதான் அவருடைய அழிவுக்கும் இட்டுச் செல்கிறது. மிகவும் ரசிக்கக்கூடிய பகுதி.

      Delete
    8. ஓகே நிட்சயம் தேடித் தொடர்ந்து கேட்கிறேன்... எனக்கு இதுவரை பீஷ்மர் பற்றி எதுவுமே தெரியாது... மிக்க நன்றி.

      Delete
  5. அதிரா தம 6 எங்களோடதுனு நினைக்கிறோம்....ஓட்டு போட்டாச்சு இதோ கதைக்கு

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா, துளசி அண்ணன் வாங்கோ.. மிக்க சந்தோசம். மிக்க நன்றி.

      Delete
  6. கதையைத் தொடர்கிறோம்...என்னது யாருக்கும் தெரியாத கதையா!!ஹாஹாஹா...கவிதைகள் பகிர்வு நன்றாக இருக்கிறது..

    கீதா: சரிசரி சத்யவதி என்ட்ரி!!! அந்தக் கேரக்டருக்கு நீங்கள் வைத்திருக்கும் பெயர் என்னவோ..அடுத்த பகுதியில்தான் தெரியும்!!! இனிதான் இருக்கு கதையில் சீரியஸ் குழப்பமே!!! திருப்பமே! வரேன் இன்னும் கமென்ட்ஸ் நீங்க பப்ளிஸ் பண்ணலியே...அப்பதான் களை கட்டும்....சரி உங்க கதையிலாவது சபதம் இல்லாமல் ஏதேனும் டிவிஸ்ட் இருக்குமா!!?? ஹிஹிஹிஹி..

    ReplyDelete
    Replies
    1. ///கதையைத் தொடர்கிறோம்...என்னது யாருக்கும் தெரியாத கதையா!!ஹாஹாஹா...கவிதைகள் பகிர்வு நன்றாக இருக்கிறது..///

      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் துளசி அண்ணன் இது யாருக்கும் தெரியாத கதை:).. அதிரா சொன்னால் தலையை மட்டும்.. அதுவும் மேலே கீழே ஆட்டோணும்:)) ஹா ஹா ஹா:)..

      ///கீதா: சரிசரி சத்யவதி என்ட்ரி!!! ///
      ஹா ஹா ஹா அப்போ அது தமனா இல்லயோ?:) கில்லர்ஜி தப்பாச் சொல்லிட்டாரோ?:).. ஹா ஹா ஹா..

      //சரி உங்க கதையிலாவது சபதம் இல்லாமல் ஏதேனும் டிவிஸ்ட் இருக்குமா!!?? ///

      இல்ல இல்ல கதையின் கருவை மாற்ற மாட்டேன்ன்ன்.. நான் சொல்ல விரும்புவது அந்த சபதத்தை பற்றித்தான்.. எப்படி ஒரு மகனால் அப்படி ஒரு சபதம் எடுக்க முடிந்தது.. எனக்கு மெய்சிலிர்த்துப் போயிட்டேன்ன் கேட்டபோது... இப்படியெல்லாம் பிள்ளைகள் இருந்திருக்கிறார்களே..

      இக்காலத்துப் பிள்ளைகள் எனில் இப்படி தந்தையின் இடத்திலிருந்து அவரின் மனநிலையை நினைத்துப் பார்ப்பார்களோ... உனக்கு வயதாகிவிட்டது.. என்னைப்பற்றி மட்டுமே நினை எனத்தானே பிள்ளைகள் சொல்வார்கள்.

      Delete
    2. ஆம் அதிரா பீஷ்மரின் சபதம் மிகவும் உயர்வாகப் பேசப்படும் ஒன்று. ஆனால் மகாபாரதமே அங்கிருந்துதான் தொடங்குகிறது! அவரது சபதம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதனைச் சொல்லும் அருமையான ஒரு இதிகாசம். அதாவது சபதம் எடுக்கும் போது கூட நாம் சிலவற்றை யோசிக்க வேண்டும் என்பது..உணர்ச்சிவசப்படும் போது அந்த சபதம் எப்படிப் பிழையாகிப் போகிறது என்பது....ஆனாலும் பீஷ்மர் பீஷமர்தான் பிதாமகர்தான்!!! தன் சபதத்தைக் காப்பாற்றவே இறுதிவரை அதர்மத்தின் பக்கம் நிற்க வேண்டிய நிலை....அவர் மனம் வருந்தும் வேளைகள் பல....நீங்கள் மகாபாரதம் படித்ததில்லை எனில் தயவு செய்து வாசியுங்கள்...அதில் எனக்குப் பிடித்த கதாபாத்திரங்கள்...பீஷ்மர், விதுரர் - விதுரர் நீதி என்றே இருக்கும்....கர்ணன்.....அப்புறம் யட்சனின் கேள்விகள் அதற்கு தர்மரின் விடைகள்....அருமையா இருக்கும்...பெற்றோர் பிள்ளைகளின் மீது பாசம் வைக்கலாம்...ஆனால் கண்மூடித்தனமாக வைக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் திருதாஷ்டிரன் என்று ஒவ்வொரு கேரக்கடரும் ஒரு பாடம் சொல்லும்....இவ்வுலகில் இப்போது நடப்பவையே..வாசியுங்கள் நேரம் வாய்க்கும் போது

      கீதா

      Delete
    3. உண்மைதான் கீதா. எங்களுக்கு சிலபஸ் ல “பாரதச் சுருக்கம்”, கம்பராமாயணம் என இரு புத்தகங்கள் இருந்தன.. அவை மிகக் குறுகிய விசயத்தையே கொண்டிருந்தன.. அவ்வளவையும் சப்போ சப்பெனச் சப்பி பாடமாக்கி வச்சிருக்கோணும்.. ஒரு வசனத்தைச் சொல்லி கேட்பினம்.. இது யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்ஹில் கூறப்பட்டது என ஹா ஹா ஹா...

      அதன் பின்பு கம்பன் கழகம் ஜெயராஜ் அவர்களின் சொற்பொழிவுகளாலேயே எனக்கு இவற்றில் ஆர்வம் அதிகமானது.. அவர் கதைபோல சொல்லாமல்.. நகைச்சுவையாக்கி இடைக்கிடை சிரித்து உருளவச்சுச் சொல்லுவார் அதனால இன்னும் பிடித்து விட்டது...

      புத்தகம் படிப்பதுக்கு நேரம் போதுவதில்லை கீதா, புத்தகம் எனில் எல்லா வேலைகளையும் விட்டுப்போட்டு ஓரிடத்தில் இருந்து வாசிக்கோணும்... என் பொன்னியின் செல்வன் புத்தகங்கள்.. பார்த்திபன் கனவு.. இப்பட்வும் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கு..

      எனக்கு இப்போ கேட்பதுதான் விருப்பம்.. சும்மா இருக்காமல் எந்த வேலையாயினும் செய்து கொண்டே இவற்றைக் கேட்பேன்ன்.. மிக்க நன்றி.

      Delete
    4. அதிரா- கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் என்று குறிப்பிடுங்கோ. அவர் பேச்சை நான் மிக மிக ரசிப்பவன். எனக்கு மிகவும் பிடித்த பேச்சாளர், இதுவரை நேரில் கேட்டிராவிட்டாலும்.

      Delete
    5. //நெல்லைத் தமிழன்Wednesday, September 20, 2017 1:30:00 pm
      அதிரா- கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் என்று குறிப்பிடுங்கோ//

      ஓ ஓகே .. அது ஊரிலே அவர் இருந்தைடம் .. கம்பன் கழகம்.. என்பதாலும், அதன் தலைவர் அவர் என்பதாஅலும்.. கம்பன்கழகம் ஜெயராஜ் என்றே ஊரில் பேசுவது வழக்கம்.. அதனால் பழக்கதோசம்...:).

      ஓ நீங்களும் அவரின் பேச்சுக்கு அடிமையோ.. நம் நாட்டிலும் பெரும்பாலும் எல்லொருக்குமே அவரைப் பிடிக்கும்.. எப்பவும் புன்னகையோடும், நகைச்சுவையோடும் பேசுவார்... நேரில் பார்க்கும்போது... மேடையில் அடிக்கடி செம்பைத்தூக்கித் தூக்கி தண்ணி குடித்துக் குடித்துப் பேசுவார் ஹா ஹா ஹா:).

      Delete
    6. கம்பவாரிதியின் வாழ்க்கைச் சம்பவங்கள் சுவாரசியமானவை. அவர் அவரது அம்மாவை (மன'நிலை பிறழ்ந்தவர்) கடைசி காலத்தில் கண்ணேபோல் பார்த்துக்கொண்டிருந்தார் (இன்னும்?) என்று படித்திருக்கிறேன்.

      அவர் உடல் ஆகிரிதிக்கு (கொஞ்சம் பூசின உடம்பு) சொம்பு இல்லை, வாளியில் தண்ணீர் குடிக்கவேண்டும். எனக்கு அவரைப் பார்த்தாலே நிறைய மதிப்பும் அன்பும் தோன்றும் ('நேரில் பார்த்ததில்லை)

      Delete
    7. ஓ அவரின் அம்மா பற்றித் தெரியாது... அவர் பற்றியும் பெரிதாக தெரியாது ஆனால் இவரின் கம்பன் கழக உறுப்பினர்களாக இவரோடு கூட இருந்தோரில் சிலர் எங்கள் உறவினர்கள்.

      இருங்கோ போட்டுக் குடுக்கிறேன் வாளியில் தண்ணீர்க் கதையை:).

      Delete
  7. சிந்தனைப் பித்தனின் சிந்தனை காதல்வயம் போலும்!!! கவிதைகள் நல்லாருக்கு...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இப்படி ஒவ்வொருவரும் பேப்பரில் எழுதும் கவிதைகளை வெட்டி எடுத்து ஒட்டிச் சேர்த்து வைத்திருக்கிறேன் கீதா... இக்காலத்தில் இப்படிக் குறைவு.. இருப்பினும் வருகிறது.. புத்தகங்களில் எல்லாம் ஆனா நாம் இண்டநெட் உலகில் மூழ்கிவிட்டமையால் இப்போ அவற்றில் மினக்கெடுவதில்லையே:(.

      Delete
    2. //இப்படி ஒவ்வொருவரும் பேப்பரில் எழுதும் கவிதைகளை வெட்டி எடுத்து ஒட்டிச் சேர்த்து வைத்திருக்கிறேன் கீதா//

      இதில் "கவிஞர் ஸ்ரீராமி"ன் கவிதைகளும் உண்டா?!!!!!! (கர்ர்ர்ர்ர் சொல்லாமல் பதில் சொல்லவும்!)

      Delete
    3. ///இதில் "கவிஞர் ஸ்ரீராமி"ன் கவிதைகளும் உண்டா?!!!!!///

      ஹா ஹா ஹா இதைப் பார்த்து வைரமுத்து அங்கிள் சூஊஊஊஊஉ சைட் பண்ணிட்டாராம்ம்ம்:)).. இல்ல நீங்களும் கவிஞர்தான்.. ஆனா நீங்க மேட் இன் இந்தியா ஆச்சே:)... இலங்கைப்பேப்பரில் வராதெல்லோ:)).. கஸ்டப்பட்டுக் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லாமல் பதில் சொல்லிட்டேன்ன்:))..

      Delete
  8. பூஸாரும் அந்தக் குட்டிப்பையனும் அயகோ அயகு!! அதிரா சில வருடங்களுக்கு முன்பு வரை நான் என் தங்கைகள் குழந்தைகள் எல்லாரிடமும் நீங்கள் எப்படிப் பேசுகிறீர்களோ அப்படித்தான் பேசிக் கொண்டிருந்தேன். இப்போதும் கஸின் மற்றும் அவர்களின் யங்க் குழந்தைகளிடம் இப்படித்தான்...ரீ யைத் தவிர....மற்ற பல வார்த்தைகள்...அயகு உட்பட..இப்போது கொஞ்சம் குறைந்துவிட்டது....ஹிஹிஹி

    சரி இந்த ந்யூ என்ட்ரிக்கு ஏன்ஞ்சலுக்கும் எனக்கும் இருப்பது போல சங்கு போல கழுத்தா?!!! நிலவு போல முகமா நு கொஞ்சம் வர்ணிச்சு சொல்லோணும் அடுத்த பகுதியில இல்லைனா ஏஞ்சல் ரெடியாகுங்க பூசரை விரட்ட....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹாய் கீதா :) எப்படி இருக்கீங்க நலமா ரொம்ப நாளாச்சு உங்ககிட்ட பேசி :)
      //நிலவு போல முகமா//

      yes yes its us :)

      Delete
    2. ஹை ஏஞ்சல் ஆம் நலம்! ரொம்ப நாளாச்சுதான்...நாம பேசி..கும்மி அடிச்சும் ரொம்ப நாளாச்சுல!!..கொஞ்சம் உடல் நலம் சரியில்லாம இருந்துச்சு....இப்ப ஓகே..தொண்டை.இன்னும் கொஞ்சம் சரியாகணும்......மத்தபடி மலர்ச்சிதான்!!!

      கீதா

      Delete
    3. //பூஸாரும் அந்தக் குட்டிப்பையனும் அயகோ அயகு!!// உண்மைதான் நன்றி.

      குழந்தைகளின் மழலைப் பேச்சை நான் எப்பவும் திருத்திவிட விரும்புவதில்லை கீதா.. எங்கள் பிள்ளைகள் தப்புத்தப்பாகப் பேசும்போது அப்படியே ரசிப்பேனே தவிர திருத்த மாட்டேன்ன்.. ஏனெனில் மழலைப் பேச்சு எப்பவும் , திரும்பக் கேட்கக் கிடைக்காது என்பதால்...

      நீங்கட... நீங்களுக்கு... நானுக்கு வேணும்:)... நாண்ட கண் ..(என்னுடைய கண்)... இப்படிப் பல சொற்கள்....

      ///சரி இந்த ந்யூ என்ட்ரிக்கு ஏன்ஞ்சலுக்கும் எனக்கும் இருப்பது போல சங்கு போல கழுத்தா?!!! நிலவு போல முகமா நு கொஞ்சம் வர்ணிச்சு சொல்லோணும் ///
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இப்போ நான் கதையைத் தொடர்வதா வாணாமோ?:).. இனி அந்தப் படகில் வரும் அயகியை:) வர்ணிக்கும்போது கீதாவும் அஞ்சுவும் மனக் கண்ணில் வரப்போகினமே:) ஆண்டவா என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்ங்:))..

      Delete
    4. //AngelinTuesday, September 19, 2017 8:44:00 am

      //நிலவு போல முகமா//

      yes yes its us :)//

      ஹா ஹா ஹா அதூஊஊஊஊஉ அமாவாசை நிலவா இல்ல பெளர்ணமி நிலவா என்பதை அடிரா.. சே..சே.. நாக்குப் பிரழுதே:)).. அதிராதான் டெல்லுவேனாக்கும்:)..

      Delete
    5. ///Thulasidharan V ThillaiakathuTuesday, September 19, 2017 10:31:00 am
      ஹை ஏஞ்சல் ஆம் நலம்! ரொம்ப நாளாச்சுதான்...நாம பேசி..கும்மி அடிச்சும் ரொம்ப நாளாச்சுல!!.///

      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் .. இங்கின கொயந்தைகள் வந்துபோகும் இடம்:).. கட்டிப்புரண்டு நலம் விசாரிப்பது இருக்கட்டும்:).. முதல்ல படகில் வருவது ஆராயிருக்கும் எனக் கண்டு பிடிங்கோ:) ஹையோ இது வேற கண்டு பிடிப்பிங்:).. ஹா ஹா ஹா விடமாட்ட்மில்ல:)

      மிக்க நன்றி கீதா.

      Delete
    6. குழந்தைகளின் மழலைப் பேச்சை நான் எப்பவும் திருத்திவிட விரும்புவதில்லை கீதா.. எங்கள் பிள்ளைகள் தப்புத்தப்பாகப் பேசும்போது அப்படியே ரசிப்பேனே தவிர திருத்த மாட்டேன்ன்.. ஏனெனில் மழலைப் பேச்சு எப்பவும் , திரும்பக் கேட்கக் கிடைக்காது என்பதால்// யெஸ் யெஸ் அதிரா மீ டூ...ஹைஃபைவ்!!! நானும் அப்படியே பேசுவேன் ஹாஹாஹா

      முதல்ல படகில் வருவது ஆராயிருக்கும் எனக் கண்டு பிடிங்கோ:)// அதான் சொல்லிட்டேனே சத்தியவதி...ஸாரி ஸாரி அனுஷ்கா!!நு சொல்லலாம் என்றால்...அனுஷ்காவை விட..... சத்தியவதி ராஜமாதா ஸோ ரம்யாகிருஷ்னன் தான் சரியாக இருப்பாரோ...

      கீதா

      Delete
    7. ஒருவேளை அனுஷ்காவாக இருக்குமோ?:) எனக்கும் இப்போ கொஞ்சம் டவுட்டு வருதூஊஊஊஊஊ:)).. ஹா ஹா ஹா எதுக்கும் வெயிட் பண்ணுவோம்ம்:)..

      Delete
  9. ஆண்களால் குழந்தைகளை வளர்க்க முடியாதுன்னு சொல்லுகிறீர்களா?!

    நம்மை விட நல்லாவே வளர்ப்பாங்க.

    கதை அருமை.. தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அப்படி போடுங்க ராஜி!!! எனக்கும் இந்தக் கருத்துண்டு...

      கீதா

      Delete
    2. //ராஜிTuesday, September 19, 2017 6:49:00 am
      ஆண்களால் குழந்தைகளை வளர்க்க முடியாதுன்னு சொல்லுகிறீர்களா?!

      நம்மை விட நல்லாவே வளர்ப்பாங்க.///

      வாங்கோ ராஜி வாங்கோ.. நீண்ட நாட்களின் பின்பு இங்கு பார்ப்பதில் மகிழ்ச்சி..

      //ஆண்களால் குழந்தைகளை வளர்க்க முடியாதுன்னு சொல்லுகிறீர்களா?!

      நம்மை விட நல்லாவே வளர்ப்பாங்க.///
      //

      இதுபற்றி ஒரு போஸ்ட்டே போடலாம்.. நீங்கள் சொல்வது 100 வீதமும் உண்மை ராஜி... ஆனா இது இப்போ கடந்த 2,3 ஜெனரேசனில் இருந்துதான் ஆரம்பம்.. இப்போதைய தலைமுறையை நான் பேசவில்லை.. எப்போ பெண்கள் பூரிக்கட்டையைக் கையில எடுக்கத் தொடங்கினார்களோ:) அன்றிலிருந்து ஆண்கள் குடும்பப் பொறுப்பை ஏற்கத் தொடங்கி விட்டார்கள்.[ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்கோ.. இல்லாட்டில் என்மீது பொயிங்கப் போகினம்].

      ஆனா ஆதி காலத்தை ஆராய்ந்து பார்த்தால்ல்.. ஆண்களின் வேலை என்ன?.. வேட்டைக்குச் செல்வதும் மனைவியை மகிழ்விப்பதும்.. மட்டுமே அவர்கள் வேலையாக இருந்திருக்கிறது.. அதுதான் ஆணுக்கு அழகு எனவும் சொல்லப்பட்டிருக்கு... பழைய காலத்து மியூசியங்களில் இவற்றை அழகாக சிலை வடித்திருப்பதைப் பார்த்து வியந்துபோனேன்...

      இதனால்தானே முந்தைய காலத்தில் வீரத்தைச் சோதித்தே பெண் கொடுத்தார்கள். பெண்கள் குழந்தை பெறுவது வளர்ப்பது... இப்படித்தானே காலம் ஓடியது.

      ஏன் என் அம்மம்மாவிடம் அவவின் அம்மம்மா காலத்துக் கதைகளைச் சொல்லச் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.. அப்போதெல்லாம்.. ஒரு கோயிலுக்குச் செல்லும்போதுகூட.. கணவர் 10 அடி முன்னே செல்வாராம்.. மனைவிதான் கஸ்டப்பட்டுக் குழந்தையைக் காவிச் செல்லுவாவாம்.. இது எல்லாம் இப்போ தலைகீழாக எல்லோ மாறியிருக்கு.. அதனால் மகிழ்ச்சியே.

      என் கிரேட் குருவாகிய:)).. மங்கியாரைப் பார்த்தாலே புரியுமே.. குட்டியை எப்பவும் காவித்திரிவது பெண்குரங்குதானே:))..

      அதனால்தான் பெட்டர் சொயிஸ் இருக்கும்போது.. அதையே தேர்ந்தெடுத்தார் என் கதை நாயகன் வல்லபன்:).. ஹா ஹா ஹா.. மிக்க நன்றி ராஜி.

      Delete
    3. //அப்படி போடுங்க ராஜி!!! எனக்கும் இந்தக் கருத்துண்டு...

      கீதா//

      ஹா ஹா ஹா... இன்று கீதாதான் என் பக்கத்தில வீரவாகுதேவர்:).. குடுகுடுவென அங்கும் இங்கும் ஓடி ஓடிக் கதைகள் சொல்வதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கு:).. ராஜிக்கு கொடுத்த பதிலைப் படிச்சுப்போட்டு இப்போ சொல்லுங்கோ கீதா.. ஆதிகாலத்திலும் ஆண்களா குழந்தைகளை நன்கு வளர்த்தார்கள்?..

      வளர்த்திருக்க முடியாதென்றில்லை.. ஆண் எனில் வீரம்... உழைப்பு இவற்றுக்கே முன்னுரிமை கொடுத்து வளர்க்கப்பட்டவர்கள் அதனால வீட்டைக் கவனிக்க நேரம் இருக்கவில்லை அப்போ... இப்போ பெண்களும் உழைத்து ஆண்களின் பொறுப்புக்கு கை கொடுப்பதனால்... எல்லாமே மாறி விட்டது.

      எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம்.. மனைவி டொக்டர்.. கணவர் எஞ்ஞினியர்... மனைவியை முழுவதும் வேலை செய்ய விட்டு, கணவர் தன் வேலையை றிசைன் பண்ணி விட்டு, குடும்பப்பொறுப்பையும், மனைவியின் கிளினிக்கை நடத்தும் பொறுப்பையும் கணவன் ஏற்றுக் கொண்டு நல்லபடி குடும்பம் நடத்துகிறார்கள்... அதனால் இக்காலம் முழுக்க முழுக்க வேறு என்றாகி விட்டது...

      Delete
    4. ஓகே ஓகே....படிச்சுட்டேன் ரைட்டோ...//எப்போ பெண்கள் பூரிக்கட்டையைக் கையில எடுக்கத் தொடங்கினார்களோ:) அன்றிலிருந்து ஆண்கள் குடும்பப் பொறுப்பை ஏற்கத் தொடங்கி விட்டார்கள்.[ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்கோ.. இல்லாட்டில் என்மீது பொயிங்கப் போகினம்].// இதுக்கு இருக்கு உங்களுக்கு மதுரை வரப் போறார்....ஹாஹாஹாஹா..

      கீதா ஓடி ஓடி பதில் தருவது மகிழ்ச்சி// ஆம் அதிரா ரொம்ப நாளாச்சு இல்ல..கும்மி அடிச்சு சரி சரி உங்களுக்கும் பதில் அரிச்சு அரிச்சு ஸாரி உங்களைப் போல ரி வந்துபோட்டது....அடிச்சு அடிச்ச்சு உங்க விரல் எல்லாம் தேஞ்சு ஸ்பாஆஅ...அப்புறம் வாரேன்...

      கீதா

      Delete
    5. ஹலோ எனக்கும் இப்படி ஒரு கருத்துண்டு என்று ஆள் ஆளுக்கு ராஜி சொன்னதை ஆமோதிக்கிறீங்க ஆனால் ஒருத்தர் கூட் உதாரணமாக் இந்த மதுரைத்தமிழனை பாருங்க் அவர் குழந்தையை வளர்ப்பதை என்று சொல்லவே இல்லை... உங்களை எல்லாம் மோடிகிட்ட பிடிச்சு கொடுக்குறேன்

      Delete
    6. ஹா ஹா ஹா நன்றி கீதா.. பாருங்கோ மாய்ஞ்சு மாஞ்சு ரைப் பண்ணி களைச்சுப் போனது நான்:).. ஆனா இதைப் படிச்சதிலேயே அங்கொரு ஆள்.. ஆடமுடியாமல் மயக்கத்தில் இருக்கிறா உறக்கமாம்:) கர்ர்ர்ர்ர்:) தேம்ஸ்லே தள்ளிடுவேன் எனப் போகும்போது சொல்லிடுங்கோ கீதா:)..

      Delete
    7. ட்றுத்.... நீங்க அநியாயத்துக்கெல்லாம் ஆசைப்படுறீங்க கர்ர்ர்ர்ர்ர்:)... பூரிக்கட்டை என்றால் மட்டும்தான் உங்கள் நினைவு வரும்:)...
      கீதாவை பிடிச்சுக் குடுங்கோ மோடியிடம் ஹா ஹா ஹா :)

      Delete
    8. உதாரணம் சரியில்லை. குரங்கு குட்டிதான் தாயைப் பிடித்துக்கொள்ளும். பூனைதான் தன் குட்டியைக் காவிச்செல்லும்.

      Delete
    9. //நெல்லைத் தமிழன்Wednesday, September 20, 2017 1:35:00 pm
      உதாரணம் சரியில்லை.//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எங்க விடிஞ்சு இவ்ளோ நேரமாச்சே இன்னும் அஞ்சுவும் ஒண்ணும் சொல்லல்ல நெல்லைத்தமிழனும் சொல்லலியே ஏதும் நம்மளைப்பற்றி என நினைச்சுக்கொண்டே இருந்தேன்:)...

      பிடித்திருப்பது யாராக இருப்பினும், பாரம் சுமப்பது தாய் தானே?:).

      Delete
  10. தங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது நன்றி

    மீண்டும் வருகிறேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சீராளன் வாங்கோ... ஓடிவந்து வோட் போட்டமைக்கு மிக்க நன்றிகள்.. இருப்பினும் உங்கள் கவிதைக்கு இங்கு பலர் அடிமையாகிட்டினம் என்பதால நேரமுள்ளபோது வந்து கவிதையில் கொமெண்ட் போட்டிடோணும் இல்லையெனில் நுளம்பு மூக்கில் நுழையும் சொல்லிட்டேன்ன்ன்ன்:).. ஹா ஹா ஹா..

      Delete
  11. வரப் போறது சுகன்யாவோ :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பகவான் ஜீ... இதென்ன இது சுகன்யா இங்கின எங்கு வருகிறா?:) ராதா, அமலா, அனுஸ்கா இப்பூடிச் சொன்னால் சந்தோசப்பட இங்கின சிலர்:) இருக்கிறார்கள்..இது சுகன்யாவில என்ன இருக்கு?:) ஹையோ ஹையோ:)).. கடவுளே சுகன்யா ரசிகர்கள் அடிக்கப்போயினம் என்னை:).. ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
  12. /இது உங்கள் யாருக்கும் தெரியாத கதை:).. //

    கர்ர்ர் எனக்கு தெரியாது என்பதை தாழ்மையுடன் ஒப்புக்கொள்கிறேன் :)

    ஆனா அதுக்காக //ஆஹா அதிரா மிக அருமையாக கதை எழுதுறீங்க:).. தொடருங்கோ முடிவு அறிய ஆவலாக இருக்கிறோம்:)” //


    கிக்கிக்கீ இதெல்லாம் சொல்ல மாட்டேன் :)

    நேரே என் டவுட்டை --- கிட்ட கேட்டா உடனே பதில் கிடைக்கும் :)

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சல் அல்லாருக்கும் தெரிஞ்ச கதை!!! தான்....என்ன அதிரா இப்பத்தான் மஹாபாரதம் வாசிக்கறாங்க போல..நம்ம மணிரத்னம் தளபதி எடுத்தாப்புல, இராமாயணத்துலருந்து ராவண் எடுத்தாபுல பூஸார் ஏதேனும் படம் எடுக்கப் போறாங்களோ? ஹாஹாஹாஹா.....பீஷ்மர் சபதத்துல ட்விஸ்ட் வைச்சு....கதைய மாத்தி....பாருங்க ஏஞ்சல் மணிரத்னம் மாதிரி நான் மணிரத்னாவாக்கும்னு வரப் போறாங்க....நாம ரெடியாவோம்!! ஹாஹாஹாஹா

      கீதா

      Delete
    2. //AngelinTuesday, September 19, 2017 8:33:00 am
      /இது உங்கள் யாருக்கும் தெரியாத கதை:).. //

      கர்ர்ர் எனக்கு தெரியாது என்பதை தாழ்மையுடன் ஒப்புக்கொள்கிறேன் :)//

      வாங்கோ அஞ்சு வாங்கோ... அப்பாடா என் கதை படிக்க ஒரு ரசிகையையாவது கண்டு பிடிச்சுட்டேன் என்பதில் பேரானந்தம்:)..

      ///நேரே என் டவுட்டை --- கிட்ட கேட்டா உடனே பதில் கிடைக்கும் :)//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மூன்றெழுத்தில் இங்கு இருவர் உலா வருகினம்:).. கவிஞரோ?:) இல்லை அரசியல்வாதியோ?:) யாராக இருக்கும்?:) ஹா ஹா ஹா:))

      Delete
    3. ///ஏஞ்சல் அல்லாருக்கும் தெரிஞ்ச கதை!!!//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் திரும்படியும் பாருங்கோ தெரிஞ்சகதை எனச் சொல்லிக்கொண்டு.. தேம்ஸ்ல தள்ளிடுவேன்ன்:).. இது யாருக்கும் தெரியாத புயுக்:) கதை அப்பூடித்தான் சொல்லோணும்... இப்போ அஞ்சுதான் .. பிக்பொஸ் பிந்து:).. ஆவி இருக்கெனச் சொல்லி நம்ப வைக்கோணும் என்பதுபோல....:)

      இது அதிராவின் கதைதான் என அஞ்சுவை நம்ப வைக்கோணும்:) இது கீதாவுக்கான ராஸ்க்:).. ஹா ஹா ஹா:).

      Delete
  13. கர்ர்ர்ர் :) தல பாட்டு பார்த்திட்டு கதையை மறந்திடுவாங்க எல்லாரும் :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா.. எல்லோரும் பார்த்திட்டும் பார்க்காதமாதிரிப் போகினம்:).. எதையாவது சொல்லி எதுக்கு வம்பை விலைக்கு வாங்கோணும் எனும் நல்லெண்ணம்:) ஹா ஹா ஹா:).

      Delete
  14. மகா ஜனங்களே :) இதை கொஞ்சம் கவனிக்கவும்

    //பெயர் விஸ்ணு:)// அதென்ன ஸ்ஸ்ஸ் விஷ்ணு தானே கரெக்ட் :)

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சல் நானும் யோசித்தேன்....ஆனா பாருங்க நம்ம பூஸார் பெயரை கொஞ்சம் உல்டா பண்ணி போடறதா சொல்லிக்கிறாங்கல்லா அதான் விட்டேன் ஹாஹாஹா

      கீதா

      Delete
    2. இடையில் கீழிருந்து கொடுக்கும் பழக்கத்தை மாத்திர்யிருந்தேன்...இப்பமீண்டும் கீழிருந்து...

      கீதா

      Delete
    3. அப்படின்னா :)ணுஷ் வி என்றுதானே வரணும் :))))))))))))

      Delete
    4. ஹாஹாஹா அதுவும் சரிதான்!! பூசார் வருவார் பாருங்க....

      கீதா

      Delete
    5. ////பெயர் விஸ்ணு:)// அதென்ன ஸ்ஸ்ஸ் விஷ்ணு தானே கரெக்ட் ://

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) பெயரிலும் எழுத்துப் பிழை கண்டுபிடிக்கினமாம்:).. அது நியூமெறலொஜிக் படி பெயர் வச்சிருக்கிறேனாக்கும்:)) ஹா ஹா ஹா..

      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் எப்பூடியெல்லாம் கிட்னியை ஊஸ் பண்ணித் தப்ப வேண்டிக்கிடக்கூஊஊஊ:)... பாரதச் சுருக்கத்துக்குள்ளேயே இன்னொரு பாரதம் நடக்குதே இங்கின:)..

      Delete
  15. சினிமா பாட்டு ஆரம்ப வரி மட்டுமே காற்று வாக்கில் வந்தா அதுவும் கொஞ்சம் பழைய பாட்டுன்னா கண்டுபிடிப்பேன் :) இப்படி நாடு வரலாம் மீக்கு நோ ஐடியா :)
    ஆனா நெல்லை தமிழன் சொன்னதில் கண்டுபிடிச்சேன் எனக்கு அந்த பாட்டில் வரும் பொண்ணு ரொம்ப பிடிக்கும் ..ஏன் பிடிக்கும்னு அடிச்சி கேட்டாலும் சொல்ல மாட்டேனே

    ReplyDelete
    Replies
    1. //நாடு வரலாம் //
      நடு வரியெல்லாம்

      Delete
    2. அது நடு வரியில்லை அஞ்சு.. பாடலுக்கான முகவுரை.. பாடலில் இது வராது... இது எங்கு வருகுதோ தெரியவில்லை.. ரேடியோவில் போடுவார்கள்.. அப்போ டக்குப் பக்கென எழுதி வச்சுவிடுவேன்ன்.. பின்னர் மனதில் பாடமாகிவிடும்..

      /// எனக்கு அந்த பாட்டில் வரும் பொண்ணு ரொம்ப பிடிக்கும் ..ஏன் பிடிக்கும்னு அடிச்சி கேட்டாலும் சொல்ல மாட்டேனே///

      அடிக்காமல் கேட்கிறேன்ன் சொல்லிடுங்கோ:))

      Delete
  16. அந்த கவிதை தொகுப்பில் குற்றம் இருக்கு களி //என்றால் கேப்பை களி உளுந்து களி கோதுமை களி
    அப்படினா அதெல்லாம் சுட்டா பாத்திரமாகுமா ????
    அங்கே களிமண் என்றுதானே வரும் ..நாட்டாமை தீர்ப்பை மாத்தி அந்த கவிதையை திருப்பி அனுப்புங்க :)

    ReplyDelete
    Replies
    1. புரியல்ல அஞ்சு..

      //அங்கே களிமண் என்றுதானே வரும் //

      களி எனத்தானே இருக்கு கவிதையில்:) ஹையோ எனக்கு கிடைக்கும் கவிதை எல்லாம் ழி /ளி ல பிரச்சனைப்படுதே:).. இலங்கையில் பலருக்கும் இந்த ழி/ளி பிரச்சனை இருக்குமோ என சந்தேகமாக் கிடக்கெனக்கூ:)) ஹா ஹாஅ ஹா:).

      Delete
    2. ஹையா ஜாலி ஜாலி :)
      அது களியை சுட்டா எப்படி பாத்திரமாகும்னு கேட்டேன்
      களிமண்ணை பாண்டமாக்கி சுட்டாத்தானே மண் பாண்டமாகும்

      Delete
    3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் களிமண்ணைக் குழைச்சால் களி வரும் அதைத்தான் விரும்பியவடிவில் செய்து சுடுவது..:) அது கவிதை எல்லோ அப்படித்தான் வரிகள் வரும்:).. புரியாட்டில் கவிஞர் ஸ்ரீராமைக் கேட்டுத் தெரிஞ்சு கொள்ளுங்கோ:)..

      Delete
  17. ஆஹா அதிரா... கதை அருமையா எழுதிரீங்க..தொடருங்க ...

    முடிவு அறிய ஆவலா இருக்கோம்...

    கரெக்டா சொல்லிட்டேன் ...ஹி ஹி..

    அப்பா இந்த போன் வழியா டைப் பண்றது
    கொஞ்சம் கடினமே ....இன்னும் பயற்சி எடுக்கணும்..


    முதல் படம் சூப்பரா இருக்கு..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ... முடிவு வந்திடும்.. வந்திடும்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ:)..

      ஆஹா ஃபோனில் ரைப் பண்ணுவது எவ்ளோ கஸ்டம் ஆனாலும் நான் சளைப்பதில்லை.. பல சமயம் ஃபோனில்தான் கொமெண்ட்ஸ் போடுவேன் வேறு வழி?:)..

      மிக்க நன்றி அனு.

      Delete
  18. விளித்தல் என்றால்
    அழைத்தல்! "விழித்தபோது"

    //அதனால் தாயுடன் இருப்பதே சிறந்தது என்று முடிவெடுத்து//

    'ஆளை விடுடா சாமி... நான் அடுத்த பொண்ணப் பார்க்கிறேன்' என்று...!

    விஸ்ணுவா விஷ்ணுவா?

    இடைவேளை பாடல் புதிர் என்னவென்று தெரியவில்லையே..

    ஊசி இணைப்பு : சென்னை பித்தன் ஸாரைத் தெரியும். சிந்தனைப்பித்தனை இன்றுதான் தெரியும்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..
      ஹையோ நான் முன்பு விழித்துப் பார்த்தல் எனத் தான் எழுதி வந்தேன்ன்.. இடையில் ஆரோ என்னைக் குழப்பினார்கள்.. அது தப்பு என அதனால விளித்துப் பார்த்தல் என மாத்தினேன்ன்:).. ஹையோ ஹையோ.. வரவர என் நிலைமை இருந்ததையும் இழந்தாய் போற்றி ஆகுதே:)) ஹா ஹா ஹா.. முதல்ல அஞ்சுவைத் தள்ளுறேனோ இல்லயோ:) இந்த ளி/ழி யை தேம்ஸ்ல தள்ளோனும்.. தமிழ் அகராதியில் இருந்தே ஒழிக்கோணும்:)).. ஹா ஹா ஹா:))..

      ///ஆளை விடுடா சாமி... நான் அடுத்த பொண்ணப் பார்க்கிறேன்' என்று...!///
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) சே..சே..சே.. வல்லபன் அப்படியானவரா தெரியல்ல.. பலவருடப் பொறுமையின் பின்புதான்:).. சரி இப்போ எதுக்கு:)..

      ///விஸ்ணுவா விஷ்ணுவா?//

      ஹா ஹா ஹா அதுதான் மேலே அஞ்சுவுக்குப் பதில் சொல்லிட்டேன்ன் அது நியூமெறலொகிகல்படி பெயர் வச்சேனாக்கும் ஹையோ ஹையோ:))..

      //சிந்தனைப்பித்தனை இன்றுதான் தெரியும்!//
      ஹா ஹா ஹா:)

      மிக்க நன்றி ஸ்ரீராம்.

      Delete
  19. /thiraMonday, September 18, 2017 8:34:00 pm
    வாங்கோ ஜி எம் பி ஐயா.. வாங்கோ.. அச்சச்சோ அப்பூடியெல்லாம் நினைச்சு போஸ்ட் போட வெளிக்கிட்டிடாதீங்கோ.. இது எத்தனையோ கதைகளுக்குள் என் மனம் கவர்ந்த கதை.. அதனால என்னைப்போல் தெரியாமல் இருப்போர் தெரிஞ்சு கொள்ளட்டுமே எனத்தான் ஆரம்பித்திருக்கிறேன்ன்.. முழுவதும் சொல்ல மாட்டேன்.. அந்த மகன் பற்றி மட்டும் சொல்ல விருப்பம்.. இப்படியும் ஒரு பிள்ளையா?:)).. மிக்க நன்றி./ மூலக்கதையில் இருந்து நானே மூன்ற் நான்கு பதிவுகள் எழுதி இருக்கிறேன் சாந்தனுவின் சந்ததிகள் அவற்றில் ஒன்று சுட்டி தருகிறேன்
    Reply

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜி எம்பி ஐயா.. சுட்டி தருகிறேன் எனச் சொல்லிப்போட்டு தர மறந்திட்டீங்கள்.. தாங்கோ.

      மிக்க நன்றி.

      Delete
    2. தனி பின்னூட்டத்தில் http://gmbat1649.blogspot.com/2012/12/blog-post_16.htmlசுட்டி கொடுத்திருந்தேனே எங்கே போச் பரவாயில்லை மீண்டும் இதோ தருகிறேன் மஹாபாரத மாந்தர்கள் பற்றி சிலபதிவுகளு ம் எழுதி இருக்கிறேன் இதுஇப்போதைக்கு /http://gmbat1649.blogspot.com/2012/12/blog-post_16.html

      Delete
  20. விஸ்ணுவா விஷ்ணுவா?//ஹா ஹா ஹை 5 ..இது ஸ்ரீராமுக்கு

    ReplyDelete
    Replies
    1. >(..)< :)))))))))))))))))))))))))))))

      Delete
    2. ஆஹா ஆஹா.. கூட்டமாச் சேர்ந்து சிரிக்கினமாமே கர்ர்ர்:)).. இருங்கோ சூனியக் கெயவியை:) ரெடி பண்ணுறேன்ன்ன்:).. ஹா ஹா ஹா:).

      Delete
  21. ஹாய் அதிரா :)இதை நான் சொல்லியே ஆகணும் :)இப்போ புது பிளாஸ்டிக் 10 பவுண்ட் நோட் எனக்கு இப்போ கிடைச்சிச்சே :) லாலாலா

    ReplyDelete
    Replies
    1. அதை இங்கே அனுப்பினால் நானும் லாலாலலா என்று பாடுவேனே

      Delete
    2. புது பிளாஸ்ரிக் ஆ?.. எனக்கின்னும் கிடைக்கல்லியே:).. கொஞ்சம் அதை எடுத்துக் கொண்டு பின்னேரம் ஒரு 7 மணியளவில்.. அதாவது மம்மல் இருட்டில்.. தேம்ஸ் கரைக்கு கொஞ்சம் வாங்கோ அஞ்சு:).. ச்ச்ச்சும்மா பார்க்கத்தான்ன்ன்ன்:)..

      Delete
    3. கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கோ ட்றுத்... இன்று நைட் அது என் கைக்கு வந்திடும்:).. ட்றம்ப் அங்கிளின் மீட்டிங்க்கு வரும்போது கொண்டு வந்து தந்திடுறேன்:).

      Delete
    4. ஹாஹா :) 100 $ அனுப்புங்க அதுக்கு மாத்தி பவுண்ட்ஸாக்கி அனுப்பிடறேன் :)

      Delete
  22. வணக்கம் பூஸ் !

    வேலைக்குக் கெளம்பிட்டு இருந்தேன் மின்னஞ்சலில் உங்கள் பதிவு அதனால் (மொபைல் அலெட் வச்சிருக்கிறமல்லோ ) உடனே ஓடிவந்து வோட்டுப்போட்டேன் ( இந்த முறை கிரீடம் மிஸ் ஆகிடக் கூடாதல்லோ )ஆனாலும் கருத்திட முடியவில்லை .........

    எண்ணிய படிதான் வாழ்க்கை
    ..இருந்திடு மென்ப தைப்போல்
    நண்ணிய மனையாள் விட்டு
    ..நகர்ந்ததும் மன்னன் நாளும்
    கண்ணிய மெல்லாம் காத்துக்
    ..கற்பிலே ஒழுகி நின்றான்
    திண்ணிய மனத்தில் அந்தத்
    ..தேவதை நினைவு காத்தான் !

    எட்டிரெண் டாண்டு போனால்
    ..எழிலவள் வருவாள் என்றே
    கட்டினான் காதல் கோட்டை
    ..கனவிலும் வளர்த்தான் நாட்டை
    முட்டிடும் விழிநீர் தன்னை
    ..முகாரியாய் மறைத்த போதும்
    கட்டளை இட்டாள் தன்னைக்
    ..காணவே வாழ்ந்தி ருந்தான் !

    வந்திடும் அவளைத் தன்பால்
    ..வைத்திட நினைத்தான் மீண்டும்
    தந்திடும் மகனைப் பார்த்துத்
    ..தயங்கியே அவளைக் கேட்டான்
    வெந்திடும் வார்த்தை இன்றி
    ..விளக்கியே மறைந்து போனாள்
    அந்திடும் இருளைப் போலே
    ..அடிமனம் கறுத்தான் மன்னன் !


    அருங்கலை யாவும் ஊட்டி
    ..அன்புடன் மகனைத் தந்தே
    பெரும்பணி முடிந்ததென்று
    ..பிரிந்தவள் எண்ணி வாழ்ந்தால்
    அரண்மனை செழிக்கா தென்றே
    ..அடிமனம் சொன்ன போதில்
    விரும்பிய மனையாள் தேடி
    ..விரைந்தவன் கதையைக் கேளீர் !

    உற்றவள் போன பாதை
    ..உயிர்ப்புடன் இருந்தும்! ஆங்கே
    அற்பமாய் வந்து போனான்
    ..அதனையும் மறந்தான்! பின்னே
    கற்புளாள் காதல் தேடிக்
    ..கரையினில் வந்தான் ! ஐயோ
    இற்றவன் மனத்தை மீண்டும்
    ..எழுப்பிட வருவாள் யாரோ....?


    தொடரும்......................

    ஊசிக்குறிப்பு அருமை பூசாரே
    மீண்டும் தொடரை விரைவாய் எதிர்பார்க்கிறேன் .....

    ReplyDelete
    Replies
    1. ஆஹா வாங்கோ.. மீள் வருகை வித் கவிதை... மிக்க நன்றி....

      அச்சச்சோ ஹையோ அந்த ஜொந்தக்கதை ஜோகக் கதையை ஏன் கேட்கிறீங்க:)... இம்முறை மகுடத்தைப் பறிக்கவே முடியாமல் போச்ச்ச்ச்ச்ச்ச்ச்:(.. ஸ்ரீராம் இறுக்கிப் பிடிச்சுக்கொண்டிருக்கிறார்:) அதனால ஒண்ணும் பண்ண முடியல்லே:)....

      வாவ்வ்வ்வ்வ் நான் முக்கி முக்கி மூன்று பக்கத்தில் எழுதிய கதையை, ஒரு கவிதையில் வடிச்சிருக்கும் விதம் மிக அழகு... மிக்க நன்றி மேஜரே..

      த்தோஓஒ... அடுத்தது வருது:)... ஹா ஹா ஹா.

      Delete
    2. சீராளன்... இந்தப் பதிலைப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஒருவன் நல்ல திறமையைப் பெற்றிருக்கும்போது அதை வைத்து அவன் காலத்துக்குப் பிறகும் அவன் பெயர் சொல்வதுபோல் ஏதேனும் செய்யவேண்டும்.

      மேலே எழுதிய கவிதையை ரசித்தேன். இவ்வளவு திறமையை வெறும் காதல், சோகக் கவிதைகளில் வீணாக்காதீர்கள். மஹாபாரத்த்தை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு chapterஐயும் இதைப்போன்ற கவிதையாக்குங்கள். ஆரம்பத்தில் மலைப்பாகத் தெரியும், இது சாத்தியமில்லை என்று தோன்றும், காலம் எடுக்கும் அதனால் வேண்டாம் எனத் தோன்றும். நல்ல நாளில் ஆரம்பித்தீர்களானால் காவியம் தங்கள் மூலமாகத் தன்னை எழுதிச் செல்லும். காலம் காலமாக நினைவுகூறப்படுவீர்கள். தொடங்குங்கள். வெற்றி உண்டாவதாக.

      Delete
    3. //நெல்லைத் தமிழன்Thursday, September 21, 2017 2:40:00 am
      சீராளன்... இந்தப் பதிலைப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறதா எனத் தெரியவில்லை//

      பார்க்கவில்லையாயின்.. பகுதி மூன்றில் வைத்து, தேம்ஸ்லே தள்ளி விட்டிடுவேன்:) எங்கிட்டயேவா?:))

      Delete
    4. வணக்கம் நெல்லைத் தமிழன் & பூசாரே

      நேரம் கிடைக்கும் போதெல்லாம் பதிவுகள் மட்டும் இன்றி கருத்துகளும் வாசிப்பேன் ( காரணம் கேட்கக் கூடாது ஏன்னா நான் தேடுவது நல்ல விமர்சனங்களை )

      நெல்லைத் தமிழன் தங்கள் அன்பின் வேண்டுகைக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் ...காலம் என் பேர் சொல்ல வேண்டும் என்று நான் எதிர்பார்க்காத தால்தான் எதனையும் எழுதவில்லை இருந்தும் திருக்குறளின் பொருளினை விருத்தப் பாவில் வடிக்க ஆசைப்பட்டேன் ஆனால் முடியவில்லை ஆனால் இது பாரதம் மகா பாரதம் இப்பவே நீங்க சொன்னதுபோல் தலை சுற்றுகிறது
      கண்டிப்பாக காலம் நேரம் அமையும் போது எழுதுவேன் ,,,உங்கள் ஆசீர்வாதம் அங்கே ஆரம்பமாய் இருக்கும் இப்போதைக்கு உழைப்பைத் தவிர வேறு சிந்தனைகள் இல்லை...

      மீண்டும் நன்றிகள் வாழ்க நலம் !

      Delete
    5. //சீராளன்... இந்தப் பதிலைப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறதா எனத் தெரியவில்லை//

      பார்க்கவில்லையாயின்.. பகுதி மூன்றில் வைத்து, தேம்ஸ்லே தள்ளி விட்டிடுவேன்:) எங்கிட்டயேவா?:))??

      ஹா ஹா ஹா தள்ளி விடுங்கோ நமக்கு நீச்சல் ஜுஜுப்பி .............

      Delete
    6. இதற்கு எங்கு பதில் எழுத என்று யோசித்தேன் (பழைய பதிவுகளை நீங்கள் மீண்டும் பார்க்க வாய்ப்பு குறைவு அல்லவா?)

      "திருக்குறளின் பொருளினை விருத்தப் பாவில் வடிக்க ஆசைப்பட்டேன்"

      இதுவும் நல்ல யோசனைதான். இதுல ஒரே ஒரு பிரச்சனை என்னன்னா, குறளுக்கு அர்த்தம் தேங்காய் உடைத்ததுபோல் ரெண்டு வரில சொல்லிடலாம். அதற்கு ஒருவேளை சரியான உதாரணம் கொடுத்தால் (சில குறள்களுக்கு, ஆனால் இது சுலபமல்ல) விருத்தப்பாவாக ஆக்கலாம். சில சமயம் இது, ரப்பர் மாதிரி நீட்டுவதாக ஆகிவிடும். உங்கள் தளத்தில் ஓரிரு குறள்களுக்கோ அல்லது ஒரு அதிகாரத்துக்கோ (அப்போதான் எப்படி வித்தியாசமா எழுதமுடியுதுன்னு தெரியும். ஏன்னா, ஒரு அதிகாரத்துல, எல்லாக் குறளும் அனேகமா ஒரே பொருளை வெவ்வேறு வழியில் சொல்லும்) எழுதுங்கள். படித்து விமரிசிக்கிறேன்.

      ஆனால், அறத்துப்பால், பொருட்பாலோடு நிறுத்திக்கொள்ளுங்கள். இவை இரண்டும்தான் வாழ்க்கைக்கான அத்தியாவசிய தேவைகளைச் சொல்லுகின்றன.

      'உழைப்பைத் தவிர வேறு சிந்தனை'-அந்த அந்த வயதில் அந்த அந்த வேலையை முனைப்புடன் செய்யவேண்டியதுதான். ஆனால் கவிதை ஒரு ரிலாக்சேஷன் கொடுக்கும். வாழ்த்துக்கள்.

      Delete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. இன்னொரு டொடருமா...
      ஆஹா அதிரா மிக அருமையாக கதை எழுதுறீங்க:) தொடருங்கோ முடிவு அறிய ஆவலாக இருக்கிறோம் (நான் இப்படி சொல்லல்ல)

      Delete
    2. வாங்கோ மொகமட் வாங்கோ....
      ////இன்னொரு டொடருமா...
      ஆஹா அதிரா மிக அருமையாக கதை எழுதுறீங்க:) தொடருங்கோ முடிவு அறிய ஆவலாக இருக்கிறோம்/////

      ஆஹா நீங்களெல்லாம் இப்பூடி ஆவலாக இருப்பதால்தானே... நான் நித்திரைகூடக் கொள்ளாமல் தொடர்ந்து எழுதுறேன்ன்ன்ன்.... த்தோஓஒ புறப்பட்டிட்டேன்ன்ன்... அடுத்த தொடர் படிக்க ரெடியாகுங்கோ:)...

      //// (நான் இப்படி சொல்லல்ல)////
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) யூ 2 மொகமட்:)..... விடுங்கோ நான் தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்:)...
      ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
    3. ////// (நான் இப்படி சொல்லல்ல)//// ஹஆஹாஆ :) அதிராவ் ஒரு அமைதி புறாவாயிருந்த மொகமத் தம்பியையே கொந்தளிக்க வைச்சிட்டீங்களே ஹாஹா :)

      Delete
    4. அஞ்சூஊஊஊஊஊ பகவான் ஜீ அங்கின சொன்னது இப்போ எனக்கு நினைவுக்கு வருது:) எதிர்ப்புக்கள் கூடும்போதுதான்.. அதிகம் உசாராகி போஸ்ட் போடோணும் எனும் ஒரு வெறி:) ஹையோ இது வேற வெறி:) வருது:).. ஹா ஹா ஹா.. இதோஓஓஓஓஓஒ புறப்படுறேன்ன்ன்.. இப்பவே முடிவைப்போட்டு என் சபதத்தை.. வெரி சோரி:) பேனாவை உடைக்கிறேன்ன்ன்ன்... பூஸ் ஒன்று புறப்படுதேஏஏஏஏஏ:))

      Delete
  24. படகில் வருவது சினேஹா போல)))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன்... ஹா ஹா ஹா இப்படி சொல்லியிருக்கலாமோ?:) யாரும் சொல்லல்ல:))

      Delete
  25. ஏப்ரல்மாதத்தில் என்ற படத்தில் வரும் ஏய் நெஞ்சே என் நெஞ்சே என்னைக்கேளாமல் என்ற பாடல் தான் நீங்கள் கேட்டது ஊசிக்குறிப்பில்))

    ReplyDelete
    Replies
    1. ஓ இப்பாட்டும் பொருந்துவதுபோலத்தான் இருக்கு நேசன்.. ஆனா அதுக்கு பதில் நெல்லைத்தமிழன் சொன்னார்ர்... கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே.. எனும் பாடல்... கமல் நடிச்ச குணா படம்.. அது பாட்டோடு ஆரம்பம் இப்படி கவிதைபோல எழுதுவார்கள்போல தெரியுது... ஆனா வெளிவருவதில்லை அவ் வசனங்கள்.

      மிக்க நன்றி முயற்சிக்கு

      Delete
  26. தொடர் தொடரட்டும் வருகின்றேன் கங்கையில் ஒரு செடி போல)))

    ReplyDelete
  27. அடுத்த தொடர் தேம்ஸ்நதியில் ஒரு தேவதை போல )))

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ஐடியா தந்திட்டீங்க எழுதினால் போச்சு:) படிப்பதற்கு இப்பூடி ஆர்வமாய்:) நீங்கள் எல்லாம் இருக்கும்போது எனக்கென்ன கவலை:).. ஹா ஹா ஹா மிக்க நன்றி நேசன்.

      Delete
  28. “ஆஹா அதிரா மிக அருமையாக கதை எழுதுறீங்க:).. தொடருங்கோ முடிவு அறிய ஆவலாக இருக்கிறோம்:)” ;D

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ இமா வாங்கோ.. அத்தி பூத்தாற்போல வந்திட்டு ஓடிடுறீங்க.. மறக்காமல் அப்பப்ப வருவது சந்தோசமே... பழையவர்கள் பெரும்பாலும் எல்லோருமே புளொக்கை விட்டு வெளியே போய் விட்டினம்... நான் போய் வந்திட்டேன்:)..

      //தொடருங்கோ முடிவு அறிய ஆவலாக இருக்கிறோம்:)” ;D//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) முடிவு வெளிவந்து 3 மாதமாகி புல்லும் முளைச்சிட்டுது இப்பபோய் அதிராவோடு தனகிக்கொண்டு:).. ஹா ஹா ஹா மிக்க நன்றி டீச்சர்ர்ர்:).. அடிக்கடி வாங்கோ..:)

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.