இது எல்லோருக்கும் தெரிஞ்ச மாவிளக்குத்தான், இருப்பினும் அதிரா வீட்டுக் கன்னி மாவிளக்கு இது:).. இந்த மாவிளக்கை நினைச்சாலே பல சம்பவங்கள் கூடவே ஒட்டிக்கொண்டு வந்து விடுகிறது...
இது திங்கட்கிழமை:) அங்கே:) வர வேண்டிய ரெசிப்பி:) அங்கு ஞாயிறு, திங்கள் ஆனமையால் ...இம்முறை இங்கு வந்திருக்கு:).. ஹா ஹா ஹா:).
ஸ்ஸ்ஸ் இப்பூடிக் கண்ணாடியோடு இருந்திட்டால், ஆரும் திட்டினாலும்.. எந்த ரியாக்ஷனும் முகத்தில் காட்டிடாமல் புன்னகையோடு இருந்திடலாம்:)
நாங்கள் எப்பவும் மாவிளக்குப் போடுவது தினை/சாமி மாவில்தான். ஊரில் யாரும் அரிசிமாவில் போட்டு நான் பார்த்ததில்லை. சின்ன வயதிலிருந்தே நிறையச் சாப்பிட்டிருக்கிறேன், சூப்பராக இருக்கும், ஆனா செய்ததில்லை.
எங்கள் மூத்த மகன் பிறந்தபோது, அம்மா நேர்த்தி வச்சிட்டா, கதிர்காமம் போய் அங்குதான் முதல் மொட்டை போட்டு, கங்கையில் நீராடி, மாவிளக்கும் கோயிலில் போடுவோம் என. நாங்கள் எப்பவும் குழந்தை பிறந்து முதன்முதலில் மொட்டைதான் போடுவோம், பின்னர்தான் ஸ்டைல் ஸ்டைலா வெட்டுவதெல்லாம்.
அதனால, சரி நேர்த்தியை நிறைவேத்தலாம் என கதிர்காமம் போனோம் . மொட்டை போட்டாச்சு:)..
அங்குதான் அம்மா செய்துதர நான் மாவிளக்கு ஏற்றினேன்.. எப்பூடி அதிராவின் அந்த மாவிளக்கு அயகோ?:)..
பின்னர் எப்பவும் அதுக்கு சந்தர்ப்பம் அமையவில்லை. தினையும் கிடைக்கவில்லை. இம்முறை தமிழ்க்கடையில் தினை பார்த்தபோது, ஆஹா நவராத்திரியின் ஒரு நாளைக்கு, மாவிளக்குப் போடலாமே எனும் ஆசை மேலோங்கி பொருட்கள் வாங்கி வந்தோம்..
இத்தோடு இன்னொரு நினைவு.... எங்கள் அக்காவின் திருமணத்தின் போது, மணமகன்(அத்தான்)... மாப்பிள்ளை சூட்டோடு.. அலங்கரிக்கப்பட்ட காராலே இறங்கி, கழுத்தில் ரோஜாப்பூ மாலையுடன் மணவறையை நோக்கி வரும்போது.... “ராஜாத்தீஈஈஈஈஈஈ.. என்னைத்தேடி வருவாரே ராஜா.. ராஜா... ரோஜாப்பூஊஊஊ மாலை சூடி வருவாரே லேசா லேசா... எனும் பாடல் போட்டார்கள்.. என்ன ஒரு பொருத்தமாக இருந்தது.. இதில் இன்னொன்று அத்தானின் பெயரில் ராஜா இருக்கு:).
தேவையானவை..
தினை, சக்கரை, தேன், வாழைப்பழம், நெய்.
இதில் தினை அரிசியை 2 மணிநேரம் ஊறவிட்டு, வடித்து எடுத்து பேப்பரில் போட்டு உலர்த்தி எடுங்கள்.[காய வைக்கச் சொல்லவில்லை, ஈரத்தைப் போக்கச் சொன்னேன்]
உலர்த்திய தினையை அரைத்து, மாவை எடுக்க வேண்டும்.[ நான் செய்த தவறு மாவோடு சக்கரையையும் சேர்த்து அரைத்து எடுத்தேன்].. அப்படிச் செய்யக்கூடாது. மாவை எடுத்து அதில் சக்கரையைத் தூளாக்கிச் சேர்த்து, தேன் சேர்த்துக் குழைக்கவேணும். அப்போது பதம் சரியாக விளக்கு பிடிக்க வரவில்லை எனில் கொஞ்சம் கொஞ்சமாக வாழைப்பழம் சேர்த்துக் குழைக்க வேண்டும். தண்ணி சேர்ப்பதில்லை.
நான் செய்த இன்னொரு தவறு, மாவைக் குழைச்சு, ஊறட்டுமே என ஒருமணிநேரம் விட்டு விட்டேன்.. அது இன்னும் கசிந்து மா நன்கு குழைந்துவிட்டது.
மாக்குழைத்த உடனேயே சுட்டி விளக்குகள்போல பிடித்து உடனேயே எரிக்கத் தொடங்க வேண்டும்.
இதற்கு நிறைய நெய் தேவைப்படும், நிறையத் திரி அல்லது திரிச்சீலையை நெய்யில் தோய்த்து விளக்கின் எல்லாப் பக்கமும் எரிய விடவேணும்.
கிட்டத்தட்ட 2 மணித்தியாலங்கள் எரிய மட்டும் எடுத்தது. சுவை சூப்பர் சுவை... இங்கு வாழை இலை கிடைக்காத காரணத்தால் விளக்கின் அடிப்பகுதி ஒட்ட்டியிருந்தது.. வாழை இலையில்தான் இதனை எரிக்க வேண்டும்.
இது திங்கட்கிழமை:) அங்கே:) வர வேண்டிய ரெசிப்பி:) அங்கு ஞாயிறு, திங்கள் ஆனமையால் ...இம்முறை இங்கு வந்திருக்கு:).. ஹா ஹா ஹா:).
ஸ்ஸ்ஸ் இப்பூடிக் கண்ணாடியோடு இருந்திட்டால், ஆரும் திட்டினாலும்.. எந்த ரியாக்ஷனும் முகத்தில் காட்டிடாமல் புன்னகையோடு இருந்திடலாம்:)
எங்கள் மூத்த மகன் பிறந்தபோது, அம்மா நேர்த்தி வச்சிட்டா, கதிர்காமம் போய் அங்குதான் முதல் மொட்டை போட்டு, கங்கையில் நீராடி, மாவிளக்கும் கோயிலில் போடுவோம் என. நாங்கள் எப்பவும் குழந்தை பிறந்து முதன்முதலில் மொட்டைதான் போடுவோம், பின்னர்தான் ஸ்டைல் ஸ்டைலா வெட்டுவதெல்லாம்.
அதனால, சரி நேர்த்தியை நிறைவேத்தலாம் என கதிர்காமம் போனோம் . மொட்டை போட்டாச்சு:)..
அங்குதான் அம்மா செய்துதர நான் மாவிளக்கு ஏற்றினேன்.. எப்பூடி அதிராவின் அந்த மாவிளக்கு அயகோ?:)..
பின்னர் எப்பவும் அதுக்கு சந்தர்ப்பம் அமையவில்லை. தினையும் கிடைக்கவில்லை. இம்முறை தமிழ்க்கடையில் தினை பார்த்தபோது, ஆஹா நவராத்திரியின் ஒரு நாளைக்கு, மாவிளக்குப் போடலாமே எனும் ஆசை மேலோங்கி பொருட்கள் வாங்கி வந்தோம்..
^^^^^^^^^%%%%%%%^^^^^^^^^^^^இடைவேளை^^^^^^^^^%%%%%%%^^^^^^^^^^^^
இந்த விளக்கு எரிக்க எரிக்க பல பழைய பாடல்கள் மனதில் ஓடின... பல நினைவுகள் பரிமாறிக்கொண்டோம்:).. [ https://www.youtube.com/watch?v=_i8QMynY0qU] திருவிளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக... குலம் விளங்க எங்க வீட்டில் குடியிருக்க வருக... மணமகள்(அது நாந்தேன்:)), கையில் மாலையோடு மணவறையை நோக்கி ஷையோடு:) நடந்து வரும்போது இப்பாடல் ஒலித்ததே:) [சிடியில் இருக்கு].இத்தோடு இன்னொரு நினைவு.... எங்கள் அக்காவின் திருமணத்தின் போது, மணமகன்(அத்தான்)... மாப்பிள்ளை சூட்டோடு.. அலங்கரிக்கப்பட்ட காராலே இறங்கி, கழுத்தில் ரோஜாப்பூ மாலையுடன் மணவறையை நோக்கி வரும்போது.... “ராஜாத்தீஈஈஈஈஈஈ.. என்னைத்தேடி வருவாரே ராஜா.. ராஜா... ரோஜாப்பூஊஊஊ மாலை சூடி வருவாரே லேசா லேசா... எனும் பாடல் போட்டார்கள்.. என்ன ஒரு பொருத்தமாக இருந்தது.. இதில் இன்னொன்று அத்தானின் பெயரில் ராஜா இருக்கு:).
^^^^^^^^^%%%%%%%^^^^^^^^^^^^%%%%%%%^^^^^^^^^%%%%%%%^^^^^^^^^^^^
முக்கிய அறிவித்தல்:- முன்ன முன்னம் நான் செய்தமையால் மாவின் பதத்தில் கொஞ்சம் சொதப்பி விட்டது:).. அது என்னுடைய தப்பூஊ:).. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதாரது சிரிக்கிறது:).. என்ன தப்பாச்சு எனச் சொல்கிறேன், நீங்கள் செய்ய நினைச்சால் திருத்திக் கொள்ளுங்கோ:).தேவையானவை..
தினை, சக்கரை, தேன், வாழைப்பழம், நெய்.
இதில் தினை அரிசியை 2 மணிநேரம் ஊறவிட்டு, வடித்து எடுத்து பேப்பரில் போட்டு உலர்த்தி எடுங்கள்.[காய வைக்கச் சொல்லவில்லை, ஈரத்தைப் போக்கச் சொன்னேன்]
உலர்த்திய தினையை அரைத்து, மாவை எடுக்க வேண்டும்.[ நான் செய்த தவறு மாவோடு சக்கரையையும் சேர்த்து அரைத்து எடுத்தேன்].. அப்படிச் செய்யக்கூடாது. மாவை எடுத்து அதில் சக்கரையைத் தூளாக்கிச் சேர்த்து, தேன் சேர்த்துக் குழைக்கவேணும். அப்போது பதம் சரியாக விளக்கு பிடிக்க வரவில்லை எனில் கொஞ்சம் கொஞ்சமாக வாழைப்பழம் சேர்த்துக் குழைக்க வேண்டும். தண்ணி சேர்ப்பதில்லை.
நான் செய்த இன்னொரு தவறு, மாவைக் குழைச்சு, ஊறட்டுமே என ஒருமணிநேரம் விட்டு விட்டேன்.. அது இன்னும் கசிந்து மா நன்கு குழைந்துவிட்டது.
மாக்குழைத்த உடனேயே சுட்டி விளக்குகள்போல பிடித்து உடனேயே எரிக்கத் தொடங்க வேண்டும்.
விளக்கின் நடுவே இருக்கும் குழியில் நெய் ஊற்றி, எரிக்க வேண்டும்.
========================================================================
மா விளக்கு சாப்பிட்ட மயக்கத்தில் இருப்பீங்கள்.. இந்த மயக்கத்தோடு எங்கே விரலைக் காட்டுங்கோ.. ஆங்ங்ன் இங்கின.. தம் அப்:)[இப்போ தெளிவாச் சொல்லாட்டில் பயம்ம்மாக்கிடக்கே:)] இங்கின தமனா அக்காவை டச்சு பண்ணுங்கோ:) பீஸ்ஸ்ஸ்ஸ்:).))
ஆவ்வ்வ்வ் மகுடம் கிடைச்சிட்டுதூஊஊ:)
========================================================================
ஊசி இணைப்பு:
ZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZ
|
Tweet |
|
|||
//தினை/சாமி மாவில்தான்//
ReplyDeleteசாமை (Panicum sumatrense, Little Millet) ஒரு தானியம் ஆகும். இது ஒரு புன்செய் நிலப் பயிர். இது இந்தியாவிலும் விளைவிக்கப்படுகிறது
வாங்கோ அஞ்சு வாங்கோ.. முதலாவதா வந்திருக்கிறீங்க, ஒரு விளக்கு எடுத்துக்கோங்க:) யாருக்கும் காட்டாமல் சாப்பிடுங்கோ:)..
Deleteஓ அது சாமையைத்தான் பேச்சு வழக்கில் சாமி எனச் சொல்லிப் பழகிட்டோம் போல.
தினை மாவுல சூப்பரா செய்யலாம். அதிரா தினைமாவை லைட்டா வறுக்கணும் அப்பதான் டேஸ்ட் ரொம்ப நல்லா வரும். நாங்க கொஞ்சம் ஏலக்காய் பொடியும் சேர்த்துப்போம் விளக்கு ஏற்றலாம்..முருகனுக்குப் படைக்கபப்டும் பிரசாதம் இது....அரிசி மாவுலயும் செய்யறதுண்டு. தேன் கிடையாது வெல்லம் மட்டும் நாட்டுச் சர்க்கரை கலந்து...நெய் விட்டு ஏற்றுவது...அதுல தேங்காயும் கீறி வைப்பதுண்டு. அது போல தினை மாவிலும் வைக்கலாம் நல்லாருக்கும்...சூப்பரா இருக்கு அதிரா விளக்கு ஏற்றி அழகா படைச்சிருக்கீங்க...
Deleteகீதா
வாங்கோ கீதா வாங்கோ.. இல்ல கீதா மாவை வறுத்தால் விளக்குப் பிடிக்க வராதே.. ஒட்டாதெல்லோ உடையப்பார்க்கும்???.. அத்தோடு விளக்கு சுவாமிக்கு எரிக்கும்போது வறுத்திட்டால் அது சமைக்கப்பட்டதாகிடாதோ? டவுட்டு..
Delete//முருகனுக்குப் படைக்கபப்டும் பிரசாதம் இது//
ஓ தேனும் தினை மாவும் என பாட்டில வருதெல்லோ..
மிக்க நன்றி கீதா.. வீட்டுக்குள் அதுவும் சுவாமித் தட்டில் இப்பூடி விளக்கெரிப்பதென்பது எவ்ளோ கஸ்டம் தெரியுமோ?.. கொஞ்சம் புகை வந்தாலே ஃபயர் அலாம் அலறத் தொடங்கிடும்.. கர்ர்ர்ர்ர்ர்:))
அதிராவ் மியாவ் :) உண்மையா நிறைய கலாய்ச்சி ஓடஓட விரட்டணும்னு தன நினைச்சேன் ஆனா என்னமோ தெரிலசாமி படம் முன்னாடி ஜெகஜோதியா விளக்கு எரிகிறது பார்த்தா மனசே வரல :) கிண்டலடிக்க அதனால் தப்பிச்சி போங்க :)
ReplyDeleteகிரேட் எஸ்கேப்:).. உந்தப் பயம் எப்பவும் இருக்கட்டும்:).. மிக்க நன்றி அஞ்சு..
Deleteதினை மாவிளக்கு முதல்முறை கேள்விப்படுகிறேன். தினைமாவுல தேன் சேர்த்து சாப்பிடுவாங்க. மாவிளக்கு ஏற்றும் மாவிலயும் தேன் சார்ப்பீர்களா? நாங்க அரிசி மாவில் தேன் சேர்க்கமாட்டோம்.
ReplyDeleteவிளக்குகளோடு சன்னிதியைப் பார்க்க ரொம்ப அழகாகவும் சான்னியத்தோடும் இருக்கிறது. வாழ்த்துகள்.
வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ.. மாவிளக்குக்கு தேன் சேர்த்துத்தான் குழைப்போம். தண்ணி சேர்ப்பதில்லை.. அதுக்குப் பதிலாகத்தான் கொஞ்சம் வாழைப்பழமும் சேர்ப்போம்.. தினை/சாமி யில் செய்யும்போது சுவை அதிகம்... நான், இப்போதான் தேடிப்பார்த்தேன், இந்தியாவில் அரிசியில்தான் செய்கிறார்கள். இதுக்கு முன் எனக்கு தெரியாது, மாவிளக்கு எனில் தினை/சாமி தவிர செய்வதில்லை என நினைத்திருந்தேன், அதனால்தான் இடையில் இத்தனை காலமும் செய்ததில்லை.. தினை கிடைக்காமையால்:)..
Delete//விளக்குகளோடு சன்னிதியைப் பார்க்க ரொம்ப அழகாகவும் சான்னியத்தோடும் இருக்கிறது. வாழ்த்துகள்.//
மிக்க நன்றி. விரத காலங்களில்.. மஞ்சள் வீடெல்லாம் தெளிச்சு, சாம்பிராணிப்புகை போட்டு, விதம் விதமான பூக்களால் சுவாமியையும் அலங்கரிச்ச்சுப்போட்டுப் பார்த்து நானே கண்படுத்துவேன்.. கோயிலில் நிற்கும் பீலிங் வருதே என.. ஹா ஹா ஹா மிக்க நன்றி.
ஏன்சலின் - ஒரு சந்தேகம். 1960ல அவங்க ஊர்ல கலர் போட்டோ எடுக்கற வசதி இருந்ததா? அல்லது அப்போ எடுத்த போட்டோக்கு இப்போ கலர் கொடுக்கலாமா?
ReplyDeleteஅதிரா- இந்தக் கேள்விக்கும் இந்த இடுகைக்கும் சம்பந்தம் இல்லை.
//நெல்லைத் தமிழன் has left a new comment on the post " _()_அதிரா வீட்டில் மாவிளக்கு_()_ ":
Deleteஏன்சலின் - ஒரு சந்தேகம். 1960ல அவங்க ஊர்ல கலர் போட்டோ எடுக்கற வசதி இருந்ததா? அல்லது அப்போ எடுத்த போட்டோக்கு இப்போ கலர் கொடுக்கலாமா?//
haaaaஹாஆஆ :) சபாஷ் சரியான கேள்வி :)
1950 த்தில் எடுத்த படத்துக்கும் இங்கே இப்போ கலர் கொடுக்கலாமாம் பக்கத்துக்கு வீட்டு பாட்டி சொன்னாங்க
///நெல்லைத் தமிழன்Monday, September 25, 2017 3:42:00 pm
Deleteஏன்சலின் - ஒரு சந்தேகம். 1960ல//
ஸ்ஸ்ஸ்ஸ் இப்பூடிப் பப்புளிக்கில உங்கட பிறந்த ஆண்டை எல்லாம் சொல்லப்பூடா நெல்லைத்தமிழன்:).. இது ஒருநாளைக்கு குறைஞ்சது:) பத்தாயிரம் பேர் வந்து படிச்சு, ரசிச்சுப் போகும் ஒரு இடம்:)..
///அதிரா- இந்தக் கேள்விக்கும் இந்த இடுகைக்கும் சம்பந்தம் இல்லை.///
இல்ல இல்ல சம்பந்தமே இல்ல:) நீங்க எதுக்கு சந்தேகப்படுறீங்க?:) ஹா ஹா ஹா:) சம்பந்தம் இருக்க வாய்ப்பே இல்ல இல்லயா அஞ்சு?:).. ஹா ஹா ஹா:).
@AngelinMonday, September 25, 2017 4:14:00 pm
Delete// haaaaஹாஆஆ :) சபாஷ் சரியான கேள்வி :)
1950 த்தில் எடுத்த படத்துக்கும் இங்கே இப்போ கலர் கொடுக்கலாமாம் பக்கத்துக்கு வீட்டு பாட்டி சொன்னாங்க///
ஸ்ஸ்ஸ் இப்போதானே நெ.தமிழனுக்கு சொன்னேன் இது ஒரு பிரபல பதிவரின்:) பப்புளிக்குப் பிளேஸ் என:).. ஆளாளுக்கு வந்து அதை ஓசிக்காமல் உங்க உங்க பிறந்த ஆண்டைச் சொல்லிப் போகலாமோ:).. இதுக்கெல்லாம் அதிரா பொறுப்பெடுக்க மாட்டேன் சொல்லிட்டேன்ன்ன்:))..
பக்கத்து வீட்டுப் பாட்டிக்கும் வேற வேலை இல்லைப்போல :) ஊர் வம்பு பேசிக்கொண்டு கர்:)) ஹா ஹாஅ ஹா:).
நெல்லை அண்ட் ஏஞ்சல் தாங்க்ஸ்,....நான் கேட்க நினைத்ததை கேட்டு பதிலும் சொல்லிக் கலாய்சாச்சு ஹாஹாஹாஹா
Deleteகீதா
@நெல்லைத்தமிழன் அன்ட் கீதா அப்புறம் அந்த front cut ஹேர் ஸ்டைல் பத்தி நானா சொல்லியே :)
Deleteஅது எங்க சித்தி அம்மாவோட தங்கச்சி காலத்து ஸ்டைல் ஹாஆஹாஆ
//Thulasidharan V ThillaiakathuMonday, September 25, 2017 7:41:00 pm
Deleteநெல்லை அண்ட் ஏஞ்சல் தாங்க்ஸ்,....நான் கேட்க நினைத்ததை கேட்டு பதிலும் சொல்லிக் கலாய்சாச்சு//
வாங்க கீதா வாங்க... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) .. தெரியாம ஒரு போட்டோவைப் போட்டதால, என் புளொக்கில் என்னாலயே கால் வைக்க முடியவில்லை:).. ஒரே புகைப்புகையாப் போகுதே:))ஹா ஹா ஹா:).
///AngelinTuesday, September 26, 2017 8:36:00 am
Delete@நெல்லைத்தமிழன் அன்ட் கீதா அப்புறம் அந்த front cut ஹேர் ஸ்டைல் பத்தி நானா சொல்லியே :)
அது எங்க சித்தி அம்மாவோட தங்கச்சி காலத்து ஸ்டைல் ஹாஆஹாஆ///
வாவ்வ்வ்வ்வ் படம் போட்டு இவ்ள்ளோ நேரமாச்சுதே:).. புகை மட்டும்தானே வருது இன்னும் பத்தலியே என ஓசிச்சேன்ன்ன்ன்ன்:).. பத்திக்கிச்சு:) பத்திக்கிச்சு:).. வெற்றி..வெற்றி... ஹா ஹா ஹா.. நெல்லைத்தமிழன் இங்கின ஓடிவாங்க.. இங்குதான் ஒரிஜினல் சொக்கப்பனை எரியுது:) ஹா ஹா ஹா:))
நீங்கள் மின்சார விளக்கு போடாமல் தீபங்களோடு எடுத்த படங்கள் ரொம்ப நல்லா வந்திருக்கு.
ReplyDeleteமிக்க நன்றி நெல்லைத்தமிழன்... லைட் போட்டு எடுத்தால் சுவாமிப்பட ஃபிரேமில் பட்டு எதிரொளிக்குது..
Deleteமகான் சொன்னது ஸூப்பர்.
ReplyDelete//நாங்க குழந்தைக்கு முதலில் மொட்டை போடுவோம் பிறகுதான் ஸ்டைல், ஸ்டைலாக வெட்டுவோம்//
ஆஹா யாருக்குமே தெரியாத உண்மை மெய் சிலிர்த்து விட்டது.
படங்கள் ஸூப்பர்.
வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..
Delete//ஆஹா யாருக்குமே தெரியாத உண்மை மெய் சிலிர்த்து விட்டது.//
என்ன இது புரியல்லியே எனக்கு?:).. உண்மையாத் தெரியாதோ கில்லர்ஜி இல்ல, வேணுமென்று சும்மா சொல்றீங்களோ?:)..
நாங்கள் குழந்தைக்கு, முன்ன முன்னம் மொட்டைதான் வழிப்போம்... அதுவரை தலைமயிரில் தொட மாட்டோம்.. மொட்டை வழிப்பதையும் ஒரு சிறிய விழாப்போல செய்வதுண்டு.. அதிலும் பெரும்பாலும் கோயில்களில் வழிப்பதாக நேர்த்தி வச்சிடுவோம்.. அக்கோயிலுக்கு போக சில சமயம் காலம் ஆகிடும்.
எங்கள் அக்காக்கள் மகளுக்கும் கதிர்காமத்தில் வைத்தே முதல் மொட்டை வழிப்பதாக நேர்ந்திட்டினம்.. ஆனா போய் வழிக்கும்போது மகளுக்கு 2 வயதாகிட்டுது.. பெரிய குடும்பியாகிட்டுது மயிர்.. நீட்டுப் பின்னல்போல செய்து போய்த்தான் வழித்தது ஹா ஹா ஹா.
மிக்க நன்றி கில்லர்ஜி.
ஆமாம் கில்லர்ஜி!!! நாமல்லாம் குழந்தை பொறக்கறதுக்கு முன்னாடியே மொட்டை போட்டுருவோம் இல்ல??!!!!
Deleteஅதிரா அதே பழக்கம் தான் இங்கயும்..அதிரா விழா போலத்தான் முதல் மொட்டை சிலர் மூன்றுமொட்டை
என் மகனுக்கு முதல் மொட்டை கணவர் வீட்டு குலதெய்வத்தின் கோயிலில்
அடுத்து என் பிறந்த வீட்டு கோயிலில்
அப்புறம் எனக்கு முருகன் இஷ்ட தெய்வம் ஸோ திருச்செந்தூரில் மொட்டை போட்டோம்...அப்படி மூன்று வயதில் திருச்செந்தூர் மொட்டையுடன்...முடிந்தது,,,
கீதா
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்போ கில்லர்ஜி கிண்டலாகச் சொன்னாரோ?:) அவர் அப்படியெல்லாம் கிண்டல் பண்ண மாட்டாரே என நினைச்சுக் குழம்பிட்டேன்ன்.. கில்லர்ஜிக்கு ஒரு பெரிய கர்ர்ர் *34256777 :).
Deleteஓ அப்போ உங்கள் மொட்டை ரொம்ப நீளமாக இருக்கே கீதா:)).. காது குத்துதல் பற்றியும் ஒரு போஸ்ட் போடலாம் என இருக்கிறென்ன்:) ஹா ஹா ஹா:)
tm 5
ReplyDelete// நாங்கள் எப்பவும் குழந்தை பிறந்து முதன்முதலில் மொட்டைதான் போடுவோம், பின்னர்தான் ஸ்டைல் ஸ்டைலா வெட்டுவதெல்லாம்.//
சந்தேகம் மொட்டை போட்ட பின் எப்படி ஸ்டைல் ஸ்டைலா வெட்ட முடியும்
வாங்கோ ட்றுத் வாங்கோ:)..
Delete//சந்தேகம் மொட்டை போட்ட பின் எப்படி ஸ்டைல் ஸ்டைலா வெட்ட முடியும்//
நான் எதை வெட்டுவதெனச் சொல்லவே இல்லையே.. ஹா ஹா ஹா குண்டக்க மண்டக்கவா கேட்டால் குண்டக்க மண்டக்கப் பதில்தேன்ன்:)... ஹையோ ஒரு புளொக்கையும் ஒரு ட்றுத்தையும் வச்சுக்கொண்டு எப்பூடி எல்லாம் ஜமாளிக்க வேண்டிக்கிடக்கூஊஊஊஉ:)).. இனி வந்து குண்டக்க மண்டக்க என்றால் என்ன எனக் கேய்க்கப்பூடா:).. ஏதும் சந்தேகங்கள் இருப்பின்.. தேம்ஸ் கரையில எனக்கு 4 அடி தள்ளி அஞ்சு நிக்கிறா கேய்க்கவும்:)) ஹா ஹா ஹா:).
ReplyDelete/ நாங்கள் எப்பவும் குழந்தை பிறந்து முதன்முதலில் மொட்டைதான் போடுவோம், பின்னர்தான் ஸ்டைல் ஸ்டைலா வெட்டுவதெல்லாம்.//
பிறந்த குழந்தைக்கே மொட்டை போடுற ஆசாமியா நீங்க? உங்ககிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருக்கனும்
ஹா ஹா ஹா இந்தமுறையாவது எல்லோரும் அதிராவைப் பார்த்துப் பயப்பூடீனமே:) ரொம்ம்ம்ம்பப் பெருமையா இருக்கு...:)..
Deleteஹா ஹா ஹா பிறந்த உடன இல்ல ட்றுத்.. ஒரு மாதம் போனபின்பு எப்ப வேணுமெண்டாலும் போடுவோம்..
ஆனா இந்த முறை இலங்கையில் சிங்கள இன மக்களிடமும் இருக்கு... அவர்கள் சொன்னார்கள், குழந்தை பிறந்த உடனேயே, கத்திரிக்கோலால், ஒரு கொஞ்சம் மயிரைக் கட் பண்ணி எடுத்திடுவினமாம்.. அது நாளுக்காக.. பின்பு நாள் கோள் பார்க்கத்தேவையில்லை எனச் சொன்னா ஒரு சிங்கள நண்பி.
மிக்க நன்றி ட்றுத். இன்று உடனேயே வெயிட்டிங் கொமெண்ட்ஸ் புதையலுக்குள் போய், உங்கள் கொமெண்ட்டை வெளியே கொண்டு வந்திட்டேன்.
ஹாஹாஹாஹாஹா மதுரை செம செம!!!!
Deleteகீதா
///ஹாஹாஹாஹாஹா மதுரை செம செம!!!!//
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இப்பூடி எல்லோரையும் உசுப்பேத்தி உசுப்பேத்தியே என் புளொக்கை ரணகளமாக்கிடுவினம் ஹா ஹா ஹா:)..
ஹையோ என்னாச்சோ தெரில ..என் கண்ணுக்கு ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக்குமே தெரில :)
ReplyDeleteமியாவ் எதோ சதி செஞ்சிட்டாப்ல :) யாராச்சும் கண்டுபிடிச்சி சொல்லுங்க எனக்கு கண் கலங்கலா தெரியுது
ஹா ஹா ஹா அதுவா அது.. அதிரா மாவிளக்கு ஏத்தும் ஸ்டைலை:) ஹா ஹா ஹா உத்தூஊஊஊ உத்துப் பார்த்ததினால் கண்ணு கலங்கலாயிடுச்சூஊஊஊஉ ஹையோ ஹையோ:).. எப்பவும் பொல்லுக்கொடுத்தே அடி வாங்குவதுதான் இந்த பிஸ்க்கு வேலை:)..
Deleteமா விளக்கு சாப்பிட்ட மயக்கத்தில் நினைவுக்கு வந்த பாடல் ..வாங்கையா வாத்தியார் அய்யா பாட்டை போட்டாங்களே ஸ்கூல் பசங்க ...மாப்பிள்ளைக் கோலத்தில் என்னோட தாய்மாமா வந்தப்போ :)
ReplyDeleteவாங்கோ பகவான் ஜீ வாங்கோ.. மயக்கத்திலதான் நிறையப் பாடல்கள் நினைவுக்கே வருது.. ஹா ஹா ஹா ஏன் உங்கள் மாமா ரீச்சர் ஓ?... ஒரு நினைவு வந்தால் அதைத் தொடர்ந்து பல சம்பவங்கள் நினைவுக்கு வந்திடும்..
Deleteமிக்க நன்றி பகவான் ஜீ.
enjoy:)
Deleteதமனா அக்காவை டச்சு பண்ணுங்கோ:) கூச்சமா இருந்தாலும் உங்களுக்காக மறுபடியும் டச்சு பண்ணிட்டேன் :)
ஹா ஹா ஹா 4 அடி தள்ளி நிண்டு டச்சு பண்ணுங்கோ தமனாக்காவை:).. மீள் வருகைக்கும் தமனாக்காவை டச்சூஊஊஊஉ பண்ணியமைக்கும்.. மிக்க நன்றி பகவான் ஜீ... ஆனா என்னதான் போராடினாலும் உங்களுக்கு.. நைட்டுக்குள் 2,3 வோட்ஸ் விழுந்திடும்:).. அவிங்களுக்கெல்லாம் துவக்கு காட்டி மிரட்ட இன்று ரைம் இல்லை எனக்கு..:) அதனால மகுடம் உங்களுக்குத்தேன்ன்:)..ஹா ஹா ஹா.. பார்ப்போம் என்னாகுதென:)
Deleteவாவ்வ்வ்வ் சொல்லி வாய்மூடல்ல மகுடம் அதிரா தலையில் ஏறிட்டுது.. சட்டுப்பட்டெனப் படமெடுத்திடுவேனே ஹா ஹா ஹா:).. மிக்க நன்றி பகவான் ஜீ.
Delete'rajinikanth'வந்திருக்காக ,அதுவும் நல்ல மனசோட :)
Delete'கமலஹாசன்'என் பக்கம் வர ஏற்பாடு செய்யுங்கோ ,ரஜனியிடம் சொல்லி :)
Delete///Bagawanjee KAWednesday, September 27, 2017 8:40:00 am
Delete'rajinikanth'வந்திருக்காக ,அதுவும் நல்ல மனசோட :)///
ஆஆவ்வ்வ்வ்வ் ரஜனி அங்கிள் முதன்முதலில் வலது காலை எடுத்து வச்சு வந்து வோட் போட்டிருக்கிறார்ர்:)).. பகவான் ஜீ கொஞ்சம் தள்ளி நில்லுங்கோ ரஜனி அங்கிளுக்கு ஆராத்தி எடுக்கோணும்:).. ஹையோ ஒரு அந்தர அவசரத்தில வாயில வந்திட்டுது:) கோச்சுக்காதீங்கோ பகவான் ஜீ.. நீங்களும் சேர்ந்து நில்லுங்கோ[ஹா ஹா ஹா].. ... அஞ்சூஊஊஊஊஊஊ மசமசவெனப் பார்த்துக் கொண்டிருக்காமல்:)..ஆராத்தித் தட்டை எடுத்துட்டு ஓடிவாங்கோ:)).. ஹையோ மீக்கு லெக்ஸும் ஆடல்ல கையும் ஓடல்ல:)).. நன்றி ரஜனி அங்கிள்... இப்பூடியே தொடர்ந்து வாங்கோ.. நினைவிருக்கட்டும் தம் அப்:).. ஹையோ இதை அடிக்கடி ஞாபகப் படுத்தவேண்டிக்கிடக்கே முருகா:)
///Bagawanjee KAWednesday, September 27, 2017 8:42:00 am
Delete'கமலஹாசன்'என் பக்கம் வர ஏற்பாடு செய்யுங்கோ ,ரஜனியிடம் சொல்லி :)//
ஹா ஹா ஹா:) உங்களுக்கு என்னைப்போல வகுப்பெடுக்கத் தெரியல்ல பகவான் ஜீ:).. அடிக்கடி தம் அப் ஆக இருப்பதையே டச்சு பண்ணுங்கோ எனச் சொல்லிக்குடுக்கோணும்:) அப்போதான் பழக்கதோசத்தில கை மாறி மைனஸ் க்கு போனாலும் .. சட்டென தம் அப்:) நினைவு வரும்:).. கமல் அங்கிளைக் காணல்ல:) அதனால ரஜனி அங்கிளே உங்களுக்கு +வோட் போடுவார் வெயிட்:).
ஹலோ மியாவ் எங்க சித்தப்பாக்கு தங்க தாம்பூல தட்டில் தான் ஆலம் கரைச்சி சுத்தணும் சொல்லிட்டேன் :) ஆமா அதென்ன சைட் கேப்ல அங்கிள்னு சொல்லிட்டீங்க :) வேணும்னா அண்ணான்னு சொல்லிக்கோங்க :)
Deleteஎச்சூஸ்மீ :) பகவான்ஜி இங்கே வந்திருக்காரே அவர் கெளரவம் படத்தில் கருப்பு கோட் போட்டு வருவாரே அந்த ரஜினிகாந்த் அங்கிளா :)
Deleteஇல்லை 2.0 படத்தில் நடிக்கிறாரே அவரா :))
///ஆமா அதென்ன சைட் கேப்ல அங்கிள்னு சொல்லிட்டீங்க :) வேணும்னா அண்ணான்னு சொல்லிக்கோங்க :) ///
Deleteநோஓ அஞ்சு ரஜனி எண்டாலே சூப்பர் ஸ்டார் ரஜனி அங்கிள்தான் நினைவுக்கு வாறார்:)...
என்னாதூஊஊ கெளரவ படத்தில் வரும் ரஜனியா.... ஹையோ எனக்கு யாரும் ஆசையா ஒரு பிளஸ் வோட்டுப் போட்டால் பொறுக்காதே கர்ர்ர்ர்ர்ர்:)... உப்பூடி எல்லாம் சொன்னால் அவர் இனி வோட் போடாமல் போயிடப்போறாரே:)... ரஜனி அங்கிள் நீங்க இதை எல்லாம் கண்டுக்காதீங்க பிளீஸ்:).
ஒரு மாவு விளக்கு போட்டதுக்கு இவ்வளவு அலுப்பா? இன்னிக்கு நம்ம ஜோக்காளிப் பேட்டை பக்கமே வரலையே ?ஒருவேலையும் செய்யாம மாவு தின்ன அஞ்சுவுக்கு என்ன கொழுப்பு ...தப்பு தப்பு ..அலுப்பு ,வரலாமில்லே :)
Deleteஹா ஹா ஹா வாங்கோ பகவான் ஜீ.. என்பக்கம் ஓடி ஓடி வந்தே நீங்க மெலியப்போறீங்க:).. நாங்கதான் கடமையை ஒழுங்காச் செய்திட்டமே:).. 2ம் ஜாமத்திலயே மொய் வெரி சோரி மை வச்சிட்டமே:)..
Deleteஹா ஹா ஹா அஞ்சுவுக்கு கொழுப்பு ஜாஸ்திதான்:)..
//ஒருவேலையும் செய்யாம மாவு தின்ன அஞ்சுவுக்கு என்ன கொழுப்பு //
ஹா ஹா ஹா அந்த லைனை மட்டும், எக்கோ வரக்கூடியவாறு கொஞ்சம் சத்தமா சொல்லுங்கோ பிளீஸ்ஸ்ஸ் என் காதில தேனருவி பாயுது:)
பகவான்ஜி :) அந்த மாவிளக்கை கண்ணால் பார்த்துக்கே A அன்ட் E போயிட்டு வந்தேன் தெரியுமோ :)
DeleteA அன்ட் E மீன்ஸ் ?
DeleteAccident and emergency services
Deleteஅதிரா ,நீங்க மாவிளக்கு ஏற்றினது ஆக்சிடென்ட்டாம்...அவ்வ்வ்வ்வ்வ்:)
Delete///கண்ணால் பார்த்துக்கே A அன்ட் E போயிட்டு வந்தேன் தெரியுமோ :)///
Delete//A அன்ட் E மீன்ஸ் ?//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 அஞ்சு:) பிரித்தானிய சோட் கோர்ட்டை எல்லாம் பாவிச்சால் வெளியே இருப்போருக்கு எப்பூடிப் புரியும்:).. இனி நானும் என் பூஸ் சோட் கோர்ட் ஐப் பாவிக்கப்போகிறேன்ன்:)..
//Bagawanjee KAFriday, September 29, 2017 9:56:00 am
அதிரா ,நீங்க மாவிளக்கு ஏற்றினது ஆக்சிடென்ட்டாம்...அவ்வ்வ்வ்வ்வ்:)//
அது பகவான் ஜீ.. அதிராவின் மாவிளக்கையும்.. அதிரா மாவிளக்கை ஏத்தும் ஸ்டைலையும் பார்த்ததில அஞ்சுவுக்கு நித்திரை போயிந்தி:).. அதனால நித்திரைக் குளிசை கேட்டு எமேஜென்சிக்கு ஓடியிருக்கிறா:).. இப்போ வந்து இப்பூடி பில்டப்பூக் குடுக்கிறா கர்ர்ர்:) எங்கிட்டயேவா?:))..
அஞ்சுவிடம் தமனா வோட் இல்லை.. இருந்திருந்தால் கமல் அங்கிளிடம் சொல்லி மைனஸ் வோட் போட வச்சிடுவேன்ன்ன் ஜாக்ர்ர்ர்தை:)).. ரஜனி அங்கிள் நேக்கு பிளஸ் வோட் போடுவார்:) ஹா ஹா ஹா:)..
அதிரா பேப்பர் என்றால் ந்யூஸ் பேப்பரா? அப்படி என்றால் வேண்டாம் ந்யூஸ் பேப்பரில் போடாதீர்கள். எங்கள் வீட்டில் அதை மடி என்பார்கள் ஆனால் அதில் நான் சொல்லுவது அறிவியக் காரணம்...ந்யூஸ் பேப்பரில் உள்ள ப்ரின்ட் எழுத்துகள் லெட் உள்ளது அல்லவா....அது உடலுக்கு நல்லதல்ல...இல்லையா அதனால்...எனவே நல்ல வெள்ளைத் துணியை வேட்டி அல்லது டவல் சுத்தமானதை - நான் இதற்கென்று தனியாக வேறு எதற்கும் யூஸ் செய்யாதவை வைத்திருப்பேன். அதில் பரத்தி வைத்து உலர்த்துங்கள். எதுவாக இருந்தாலும் ந்யூஸ் பேப்பர் வேண்டாம்...
ReplyDeleteகீதா
கீதா ரங்கன்- மடி இல்லை. "பத்து" அல்லது "மடி இல்லை". பேப்பர், பிளாஸ்டிக், ஈரமில்லாத பழைய துணி எல்லாம் இந்த ரகம்.
Delete///அதிரா பேப்பர் என்றால் ந்யூஸ் பேப்பரா?//
Deleteஇல்லை கீதா, கிச்சினில் எப்பவும் நியூஸ் பேப்பர் வைத்திருப்பேன்.. அதில் வெங்காயம் காய்கறிகளை வெட்டும்போது மட்டும் பாவிப்பேன்.. அப்படியே கழிவுகளைச் சுருட்டி வீசிடுவேன், அதனால அடிக்கடி பிளேட் துப்பரவாக்கும் வேலை இருக்காது.
இப்படியான வேலைகளுக்கு எப்பவும் நான் பாவிப்பது பேப்பர் டவல்.. இங்கு கிச்சின் டவல் எனச் சொல்லுவோம்.. அவற்றைத்தான் அனைத்துக்கும் பாவிப்பேன்.
இன்னொன்று, இங்கு கொட்டினில், நெட் துணிபோல விற்கிறார்கள் கிச்சின் உபயோகத்துக்காகவே.. அதை வாங்கி, புட்டு அவிப்பதற்கு. டோஃபு செய்ய அப்படித் தேவைகளுக்குப் பாவிப்பேன். துணியில் இப்படியானவை போட விரும்புவதில்லை நான் ஏனெனில் துணியில் ஒட்டிடும் எல்லோ பின்பு அதை உதறும்போது நிலமெல்லாம் சிந்துமெனப் பயம்:):).. நன்றி கீதா.
நன்றி நெல்லைத்தமிழன். பத்து... மடி... எல்லாமே புதுச் சொற்கள் எனக்கு.
@ Geetha /, இங்கு கொட்டினில், // that's cotton :)
Delete///AngelinTuesday, September 26, 2017 10:43:00 am
Delete@ Geetha /, இங்கு கொட்டினில், // that's cotton :)///
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் விரதம் சிரிக்க மாட்டேன்ன்:) ஆரது சிரிப்புக்காட்டுவது.. :)
அதிரா தேனும் தினை மாவும் முருகனுக்குப் படைச்சீங்களா!! சூப்பர் அதெல்லாம் நான் தமிழ்நாட்டில் இருக்கும் போது நண்பர்கள் வீட்டில் சாப்பிட்டது. கேரளத்தில் பழக்கம் இல்லாததால் செய்வதில்லை....உங்கள் படம் அம்சமாக இருக்கு!! வாழ்த்துகள்! மகிழ்ச்சியுடன் நல்லது நடக்க இறைவனிடம் பிரார்த்தனைகள்!! தீபம் நன்றாக இருக்கிறது..
ReplyDeleteவாங்கோ துளசி அண்ணன் வாங்கோ.. ஓ கேரளாவில் இப்படிச் செய்வதில்லையோ.. உண்மைதான் இலங்கையில் எல்லா மாவட்டத்திலும் இது பழக்கப்பட்ட ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.
Deleteமிக்க மிக்க நன்றிகள்.
அதிராஆவ் எனக்கு ஒரு சந்தேகம் கேட்க்கட்டா :))))))))
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஜாமம் ஜாமமா சந்தேகம் வருதே இவவுக்கு:)).. வாணாம் எண்டால் விட்டிடவா போறீங்க:).. தேம்ஸ்ல உங்களைத் தள்ளுவது உறுதி ஆச்சு:).. அதை மாத்தவோ முடியும் கேளுங்கோ:).. ஹா ஹா ஹா:).
Deleteஅது கடைசி படத்துக்கு முந்தின படம் அதான் ஞானிக்கு நேர் மேலே இருக்கே அந்த விளக்கு கருப்பா இருக்கே வொய் ???
ReplyDeleteஏங்க... விளக்கு எரிஞ்சுமுடிச்சாச்சு. அதான் கருப்பா இருக்கு. அதுக்கு அப்புறம் எல்லா விளக்கையும் கலந்து சாப்பிடவேண்டியதுதான். ரொம்ப கருப்பா இருக்கற பகுதிகளை மட்டும் தேவைனா எடுத்துடலாம்.
Deleteஎங்க வீட்டுல, அரிசிமாவுல பண்ணும்போது (வெல்லம் சேர்த்துத்தான்), நெய்விட்டு, சிறிய திரி ஏற்றுவோம். இவங்க சொக்கப்பனை கணக்கா, அவங்க சொன்னமாதிரி திரிச்சீலையையே ஏத்தியிருக்காங்க. ஒருவேளை, அந்த வெளிச்சத்துலயே மஹாபாரதம் படிக்கணும்னு வேண்டியிருப்பாங்களோ? அந்த 'வைரவேல் இன்னும் கிடைக்காத' வைரவருக்குத்தான் வெளிச்சம்.
ஹாஹாஆ :) சொக்கப்பனை ஹாஆஹா ...
Deleteஇதுக்குதான் இதுக்கேத்தான் நான் டவுட் கேட்டேன் :)))))
அப்புறம் மஹாபாரதம் மட்டுமில்லை பொன்னியின் செல்வனையும் படிக்கிறதுக்கு கொளுத்தி வச்சிருப்பாய்ங்களோன்னு டவுட்டு :)
அந்த ஜெகஜோதி ஒளிக்காக விட்டுட்டுப்போறேன் :)
//AngelinMonday, September 25, 2017 9:32:00 pm
Deleteஅது கடைசி படத்துக்கு முந்தின படம் அதான் ஞானிக்கு நேர் மேலே இருக்கே அந்த விளக்கு கருப்பா இருக்கே வொய் ???///
///நெல்லைத் தமிழன்Tuesday, September 26, 2017 6:27:00 am
ஏங்க... விளக்கு எரிஞ்சுமுடிச்சாச்சு. அதான் கருப்பா இருக்கு. அதுக்கு அப்புறம் எல்லா விளக்கையும் கலந்து சாப்பிடவேண்டியதுதான். ரொம்ப கருப்பா இருக்கற பகுதிகளை மட்டும் தேவைனா எடுத்துடலாம்.///
ஹா ஹா ஹா.. முன்னப்பின்ன சமைச்சால்தானே அஞ்சுவுக்கு இதெல்லாம் புரியும்:) இனியும் “நான் சமையல் ராணீஈஈஈஈஈஈ” எனக் கூவிக்கொண்டு சமையல் குறிப்புப் போடட்டும் நான் பிறகு, ஜெயிலுக்குப் போகவும் தயங்க மாட்டேன்ன் ஜொள்ளிட்டேன்ன்ன்...:)) ஹா ஹா ஹா
///எங்க வீட்டுல, அரிசிமாவுல பண்ணும்போது (வெல்லம் சேர்த்துத்தான்), நெய்விட்டு, சிறிய திரி ஏற்றுவோம். இவங்க சொக்கப்பனை கணக்கா, அவங்க சொன்னமாதிரி திரிச்சீலையையே ஏத்தியிருக்காங்க.//
Deleteஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நன்கு எரிக்கும்போதுதான் விளக்கின் அடிப்பகுதி எல்லாம் அவிந்து வெந்து நல்லா வரும்:).. சூப்பர் சுசியா இருக்கும்:) இல்லாவிட்டால் மாச் சாப்பிட்டதுபோல இருக்காதோ?:)..
ஹா ஹா ஹா மறந்தே போய்விட்ட சொக்கப்பனை நினைவு படுத்திட்டீங்க.. நேரில் பார்த்து எவ்ளோ காலமாச்சு:).. வரும் மார்கழிப் பிள்ளையார் கதைக்கு.. வீட்டு வாசலிலேயே சொக்கபனை எரிச்சிட யோசிக்கிறேன்:).. இருங்கோ எதுக்கும் அஞ்சுவிடம் ஆலோசனை கேட்டிட்டு வாறேன்ன்:)..
///ஒருவேளை, அந்த வெளிச்சத்துலயே மஹாபாரதம் படிக்கணும்னு வேண்டியிருப்பாங்களோ? அந்த 'வைரவேல் இன்னும் கிடைக்காத' வைரவருக்குத்தான் வெளிச்சம்///
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:)).. என் மாவிளக்குப் பார்த்து வைரவரே பதறிப்போனார்ர்:)
//அப்புறம் மஹாபாரதம் மட்டுமில்லை பொன்னியின் செல்வனையும் படிக்கிறதுக்கு கொளுத்தி வச்சிருப்பாய்ங்களோன்னு டவுட்டு :)
Deleteஅந்த ஜெகஜோதி ஒளிக்காக விட்டுட்டுப்போறேன் :)//
ஹா ஹா ஹா போன்னியின் செல்வனை நான் படிச்சு முடிக்கும்வரை விடமாட்டீங்கபோலிருக்கே:) நானும் ஆரம்பிப்பேன்.. ஒரு பாகம் படிப்பேன்.. விட்டிடுவேன்ன்.. திரும்ப முதல்ல இருந்து தொடங்குவேன் விட்டிடுவேன்ன்.. இப்பூடியே திரும்படியும் அ நா விலயே நிக்க வேண்டிக்கிடக்கே:).. படிக்கோணும் எனும் ஆசை இருக்கு ஆனா ஏனோ அரசக் கதை என்பதால பெரிசா மனம் ஏவுதில்லை:).. இருப்பினும் விடமாட்டேன்ன் பூஸோ கொக்கோ:).. மீண்டும் வேதாளம் முருங்கில் ஏறுகிறது ஹா ஹா ஹா:).
/மா விளக்கு சாப்பிட்ட மயக்கத்தில் இருப்பீங்கள்.. இந்த மயக்கத்தோடு //
ReplyDeleteஎன்னது :) பார்த்ததுக்கே எனக்கு தலை சுத்தி விழுந்து இப்போ கை பாண்டேஜ் போட்டிருக்கு :)
அந்த பார்த்திபன் வடிவேலு காமெடி இங்கே நினைச்சுக்கோங்க :)
ஹா ஹா ஹா முந்தின காலங்கள் எனில் ஒரு உணவைச் செய்தால், நேரில் போய் சாப்பிடக்கொடுத்து, அவர்கள் சாப்பிட்ட பின்பே கொமெண்ட் கிடைக்கும்.
Deleteஆனா இப்போ செய்தவுடன் பட்டுப்பட்டென உலகமெல்லாம் அனுப்பிடுவேன்:) என் படம் பார்த்து மயங்கி.. ஆஹா ஓஹோ அதிரா கலக்குறீங்க எனும் பதிலும் வரும்:) அந்த வேகத்திலயே இன்னும் பத்துக் குறிப்புச் செய்திடுவேன் ஹா ஹா ஹா:)..
கெதியா மயக்கம் தெளிஞ்சு நோர்மலாகிடுங்கோ.. என் அடுத்த குறிப்புக்கு கொமெண்ட் போடோணுமெல்லோ:)..
வணக்கம் பூஸ் !
ReplyDeleteகாலத்தோடு வாக்கு இட்டு விட்டேன் இப்போதைக்கு கருத்து மட்டுமே பாக்கி
ஆமா மாவிளக்கு ஏற்றிய கதைக்குள்ள அதென்ன அக்கா கல்யாணப் பாடல்....
ம்ம் எல்லாம் நல்லா இருக்கு முயற்சிக்குப் பாராட்டுகள்
நேரம் கிடைப்பின் வருகிறேன்
வாழ்க நலம்
வாங்கோ மேஜரே வணக்கம்...
Delete//காலத்தோடு வாக்கு இட்டு விட்டேன் இப்போதைக்கு கருத்து மட்டுமே பாக்கி //
இப்போதெல்லாம் உங்கள் கடமை உணர்வு பார்த்து நான் வியக்கேன்:).. பல இடத்தில புகைகூட வருதூஊஊஊ:).. மிக்க நன்றி.. மிக்க நன்றி..
///ஆமா மாவிளக்கு ஏற்றிய கதைக்குள்ள அதென்ன அக்கா கல்யாணப் பாடல்....//
ஹா ஹா ஹா ஒரு சம்பவம் நினைவுக்கு வந்திட்டால்ல் போதுமே.. கற்பனைக் குதிரை தட்டுப்பட்டு விட்டால்.. அப்படியே தொடரா எல்லா நினைவுகளும் வந்திடுது.. கஸ்டப்பட்டு ரெண்டு பாடல்களோடு நிறுத்திட்டேன்ன்.. இனிமேல் அதை ஒரு தனிப்போஸ்ட்டாகப் போடலாமே என நினைச்சு:)..
//நேரம் கிடைப்பின் வருகிறேன் //
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உப்பூடிச் சொல்லி எஸ்கேப் ஆகிடக்கூடாது:).. நேரம் ஒதுக்கி வருகிறேன் எனச் சொல்லோணும்:)..
இன்னொன்று இதையும் படிச்சிடுங்கோ.. மறக்காமல் பகுதி 2, ஐ திரும்பப் பாருங்கோ... உங்கள் கவிதையின் புரூவ் ரீடர்.. நெல்லைத்தமிழனின் புதுக் கொமெண்ட் வந்திருக்கு:)
ஹா ஹா ஹா அனைத்துக்கும் மிக்க நன்றி சீராளன்.
மாவிளக்கு சூப்பரா இருக்கு. அடுத்த மாதம் கந்தஷஷ்டி வருகிறது. திரும்ப செய்து வைங்க அதிரா.(விட்ட பிழையை திருத்தி) எவ்வளவு காலமாச்சு சாப்பிட்டு. ஊரில அம்மா ஒவ்வொரு மாதம் வரும் கார்த்திகை விரதத்துக்கும், கந்தஷஷ்டிக்கும் செய்வா. எப்ப விளக்கு அணைந்து சாப்பிட காத்திருப்போம். நல்லாயிருக்கும். அழகா இருக்கு உங்க சாமிஅறை. பூமாலை எல்லாம் போட்டிருக்கிறீங்க. அழகாயிருக்கு. தட்டில் நெய் தடவிவிட்டு மாவிளக்கு போட்டால் ஒட்டாதே. நீங்க கொஞ்சம் நெருக்கி வைத்து விட்டீங்க. இன்னொரு தட்டில் வைத்திருக்கலாமோ என நான் நினைக்கிரேன். மா பதம் சரியாயிருந்தா இன்னும் அழகா பிடித்தமாதிரி அப்படியே விளக்கு போல் இருந்திருக்கும். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்...
ReplyDeleteஅந்தபுரத்தில் ஒரு மகராணி பாடல் கேட்டு நீண்டநாளாச்சு...எபெம் லயும் கேட்ட ஞாபகமில்லை. சில பாடல்கள் கேட்பது அரிது. சிலோன் ரேடியோவில் கேட்ட நிகழ்ச்சிகள் ஞாபகம் வருகிறது.
ஊசி இணைப்பு சூப்ப்ப்பர்...
வாங்கோ அம்முலு வாங்கோ.. இப்போ நலம்தானே...
Delete///அடுத்த மாதம் கந்தஷஷ்டி வருகிறது. திரும்ப செய்து வைங்க அதிரா.(விட்ட பிழையை திருத்தி)/// ஹா ஹா ஹா நல்ல ஐடியா, வாறகிழமை தமிழ்க்கடை போய் வரும்போது தினை வாங்கி வருகிறேன்.
///அழகா இருக்கு உங்க சாமிஅறை. பூமாலை எல்லாம் போட்டிருக்கிறீங்க. //
மிக்க நன்றி.. பூமாலை கனடாவில் வாங்கி வந்தேன், பூக்கள் மட்டும் பிரெஷ்சா வைப்பேன்.. என்ன பண்ணுவது குருவிக்கேற்ற ராமஸுரம்:).. இங்கு பூக் கிடைப்பதே பெரிய விசயம்:)..
// தட்டில் நெய் தடவிவிட்டு மாவிளக்கு போட்டால் ஒட்டாதே.//
உண்மைதான்.. நான் அதை நினைக்கவே இல்லை அம்முலு, ஏற்கனவே மா கொஞ்சம் நீர்ர்த்துவிட்டமையால், இன்னும் நெய் எல்லாம் போட்டால் ஓவர் தண்ணித்தன்மையாகி சேப் போய் விடும் .. ஒட்டாது எனத்தான் நினைச்சேன்.
//நீங்க கொஞ்சம் நெருக்கி வைத்து விட்டீங்க. இன்னொரு தட்டில் வைத்திருக்கலாமோ என நான் நினைக்கிரேன். மா பதம் சரியாயிருந்தா இன்னும் அழகா பிடித்தமாதிரி அப்படியே விளக்கு போல் இருந்திருக்கும். //
இதையேதான் அம்முலு படம் பார்த்து அம்மா சொன்னா. ஆனா பதம் பிழைச்சிட்டமையால்.. தனித்தட்டில் வைத்தால் சேப் வந்திருக்காது.. அத்தோடு அப்படி பரவி வைத்து எரிக்கவும் பயமெல்லோ வீட்டுக்குள்... இது நான் விலத்தவே இல்லை.... 2 மணி நேரமா அருகிலேயே நின்று எரிச்சு முடிச்சேன்ன்.. வெளிநாட்டு வீடுகள் பற்றித் தெரியும்தானே.. பிறகு இன்சூரன்ஸ்ஸும் தரமாட்டினம்.. நீ தானே கொழுத்தினாய் என ஹா ஹா ஹா:)..
//பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்...
Deleteஹா ஹா ஹா டாங்ஸூ:)
//அந்தபுரத்தில் ஒரு மகராணி பாடல் கேட்டு நீண்டநாளாச்சு...//
நான் தான் சொன்னேனே.. மாமியின் சிடியில் கேட்டுவிட்டு, பின்பு யூ ரியூப்பில் தேடி எடுத்து இங்கு போடுகிறேன், எவ்வளவு அருமையான பழைய பாடல்கள் இருக்கு.. நமக்குத்தான் தெரிவதில்லை.
மிக்க நன்றி அம்முலு.
பூஸ் உங்க அம்முலு வலையில் கடந்த ஓராண்டாக ஒன்றுமே பதிவாகவில்லையே......கொஞ்சம் கேட்கலாம்ல.....
Deleteஹா ஹா ஹா அடிக்கடி கேய்க்கிறேனே சீராளன்:).. நேற்றுக்கூடக் கேட்டேன் பதில் தரல்ல... கர்ர்:).. அவ வேறு எங்கினமோ:) பிசியா இருக்கிறாபோல:) இருங்கோ சி ஐ டி வச்சுக் கண்டு பிடிக்கிறேன்:).
Deleteஎனக்கும் டவ்ட் ஏன் இம்புட்டு கறுப்பாகிட்டீங்க மாவிளக்கை ஆனா எல்லாம் ஜெகஜோதியா காட்சி அளித்து உங்களை காப்பாத்திவிட்டது அருமையா (கடவுள்கள் தான் கொஞ்சம் பயந்திருப்பாங்க நம்மை இறக்காம விடமாட போலவே ஹீ ஹீ .... )கடைசியா வந்த இணைப்பு சூப்பர்
ReplyDeleteவாங்கோ பூவிழி வாங்கோ.. தொடர் வருகை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.. நான் தான் இன்னமும் உங்கள் பக்கம் வரவில்லை.. வருகிறேன்.
Delete//எனக்கும் டவ்ட் ஏன் இம்புட்டு கறுப்பாகிட்டீங்க//
ஹா ஹா ஹா செய்வன திருந்தச் செய்யோணும் எல்லோ:) அதனால நிறைய நெய் ஊத்தி ஊத்தி நீண்ட நேரம் எரிச்சேன்:)..
/// (கடவுள்கள் தான் கொஞ்சம் பயந்திருப்பாங்க நம்மை இறக்காம விடமாட போலவே //
ஹா ஹா ஹா என் நெய்விளக்கு எரிவதைப்பார்த்து பதறிப்போன வள்ளியே சொல்லிட்டா.. அதிரா நேர்த்திக்கடன் கான்சல்ட்:).. எனக்கு வைர நெக்லெஸ் வேண்டாம் என:).. ஹா ஹா ஹா மிக்க நன்றி பூவிழி.
இன்னொண்ணு. நீங்க ஊர்ல ஏத்தின மாவிளக்குல எல்லாமே ஈழத்துல கிடைக்கிற பொருட்கள். இங்க, நியூசிலாந்த்(?) நெய், தினை/வெல்லம்/திரி-இந்தியா, தேன்-ஆஸ்திரேலியா, வாழைப்பழம்-பிலிப்பைன்ஸ், செய்தவர் ஈழம் - செய்த இடம் பிரிட்டிஷ் கன்ட்ரோலில் உள்ள ஸ்காட்லாந்து :))
ReplyDelete///இன்னொண்ணு. நீங்க ஊர்ல ஏத்தின மாவிளக்குல எல்லாமே ஈழத்துல கிடைக்கிற பொருட்கள்//
Deleteஹா ஹா ஹா கரீட்டு:)
//இங்க, நியூசிலாந்த்(?)//
பழங்கள் வெஜிடபிள்கள் எல்லாமே ஃபுரொம் ஓக்லாண்ட்.. நியூஸிலாண்ட் தான்.
//செய்த இடம் பிரிட்டிஷ் கன்ட்ரோலில் உள்ள ஸ்காட்லாந்து :))///
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்பவே போறேன்ன் ட்றம்ப் அங்கிளை மீட் பண்ணி இதுக்கொரு முடிவு கட்ட...:)...
யுத்தம் ஆரம்பிச்சாலும் ஆரம்பிக்குமாம்.. அமெரிக்காவில இருந்து கொரியாவுக்கு குண்டுகள் வானத்தால பறக்கப்போகுதாம்:) அதில ஒண்டு ரெண்டை பை மிசுரேக்கு எனச் சொல்லி:) இங்கிலாந்தில வீசிடச் சொல்லப்போறேன்ன்:)) எங்கிட்டயேவா:)...
கடலட்டைபோல ஸ்கொட்லாந்து ரத்தத்தை எல்லாம் உறிஞ்சீஈஈஈஈஈ உறிஞ்சிக் குண்டாகிப் போய் நடக்க முடியாமல் இருக்கினம்.. இங்கிலாந்துக்காரர்:)..
அது பிரிட்டிஸ் அல்ல.. பிரிட்டிஸ்/பிரித்தானியா/ யூக்கே எனில் அதில் ஸ்கொட்லாந்தும் அடக்கம்.. இங்கிலாந்து எனத்தான் வரோணும்:)..
ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா இது சொக்கப்பனையை விட மோசமா இருக்கும்போல இருக்கே:).. இன்னமும் எங்கட பிரிட்டிஸ்காரம்மா:) இதைப் பார்க்கல்லப்போல:) இல்லாட்டில் இந்நேரம் எங்க உருண்டுகொண்டிருக்கிறாவோ:) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:))
ஹா ஹா ஹா மீள் கலக்கல்களுக்கு மிக்க நன்றி நெ.தமிழன்.
//அங்கு ஞாயிறு, திங்கள் ஆனமையால் ...இம்முறை இங்கு வந்திருக்கு:).//
ReplyDeleteஎதையாவது செய்துவிட்டு அடுத்தவர் மேல் பழி போடுவது என்பது இதுதான் போல....!! கர்ர்ர்ர்ர்...
ஹா ஹா ஹா வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ... இதுதான் டெலிபதி.. அங்கு தேடிய அதேநேரம் நீங்க இங்கு வலதுகாலை எடுத்து உள்ளே வச்சிருக்கிறீங்க:)..
Deleteஹா ஹா ஹா தப்பை தப்பென ஒத்துக்கொள்ளோணும்:).. ஞாயிறைத் திங்களாக்கியது தப்புத்தானே:)
மாவிளக்கு மாவு எப்பவோ கனகாலத்துக்கு முன்னாள் சாப்பிட்டது! தினைமாவிளக்கு சாப்பிட்டதேயில்லையாக்கும்!
ReplyDeleteஇந்தக் கந்த சஷ்டிக்கு தினையில் செய்து, ஸ்ரெப் பை ஸ்ரெப் ஆகப் படங்களும் போடும்படி மிகவும் ஏழ்மையுடன்.. சே..சே.. டங்கு ஸ்லிப் ஆகுதே:) தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்:)
Deleteராஜாத்தீ எனைத்தேடி வருவாரே ரோசாப்பூ என்றொரு பாடலா? கேட்டதில்லை. ராஜாத்தி ராஜாதி ரோஜாப்பூ ரோஜாப்பூ பன்னீரில் நீராட வந்தாள்.. என்று ஒரு பாடல் கேட்ட நினைவு இருக்கிறது.
ReplyDeleteஇல்ல எனக்கு அந்த வரிகள் அப்படியே மனதில் பதிந்திருக்கு.. ஒருவேளை பாட்டின் நடுவே வருகிறதோ.. ஏனெனில்.. பாட்டுப் பொருந்த வேண்டும் என்பதற்காக.. முழுப்பாடலையும் போட மாட்டினம்.. பொருத்தமான கட்டங்களை மட்டும் போடுவினம்..
Deleteதேடிப் பார்க்கிறேன் கிடைத்தால் வந்து தகவல் சொல்கிறேன்.
படங்கள் அழகு. பயங்கர 'பக்திமாள்' போல நீங்கள்.. மஞ்சள்பொடி, பூக்கள், விரதம்.. கலக்கறீங்க.
ReplyDelete//பயங்கர 'பக்திமாள்' போல//
Deleteஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:).. நவராத்திரி வந்தாலே எங்கள் குடும்பங்களில் எல்லோருக்கும் ஒரு உற்சாகம் பிறந்திடும், ஏனெனில் எல்லோருமே தொடர்ச்சியாக கெளரி விரதம், கந்தசஷ்டி எனப் பிடிப்போம்... அதனால வீடு ஒரு கல்யாணக் கொண்டாட்டம் போலாகிடும்..
எனக்கும் இப்படி அமளிப்பட்டு விதம் விதமா செய்து கடவுளுக்குப் படைத்து எல்லோரும் ரைம் ஒதுக்கி ஒன்றாக நின்று தேவாரம் எல்லாம் சொல்லிக் கும்பிடுவது ரொம்பப் பிடிக்கும்...
//பயங்கர 'பக்திமாள்'///
Deleteசத்து இருங்கோ:).. நான் ஏதோ நினைப்பில் இது நாகதங்காள் என்பதுபோல யாரோ ஒரு பக்திப்பெண்ணின் பெயராக்கும் என விட்டிட்டேன்ன்:).. இப்போதானே என் கிட்னியில் தட்டுப்பட்டுது:).. பக்திமான் க்கு எதிர்ப்பால் சொல்றாரோ கர்ர்ர்ர்:)... ஹா ஹா ஹா.
தரையில் அமர்பவன் எப்போதும் தவறி விழமாட்டான் - ஸூப்பர்.
ReplyDeleteஇதோ என் கட்டைவிரல்.. செக் செய்து கொள்ளுங்கள்!
புத்தரின் கருத்துக்கள் அத்தனையும் அருமைதான். ஹா ஹா ஹா மை இருக்கு.. மிக்க மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.
Deleteதரையில் அமர்ந்து இருப்பவன் தவறிவிழமாட்டான் ஆனால் அப்படி உட்கார்கிரவன் பக்த்தில் மதுரைத்தமிழன் இருந்தால் குழிபறித்து இருப்பான் அதனால உட்காரும் போது பார்த்து உட்காரவும்
Deleteஹா ஹா ஹா ட்றுத்... உங்களுக்கு பக்கத்தில ஆரும் நிக்கவே மாட்டினம் இதில இருக்கிறதோ:).. நீங்கதான் ரொம்ப நல்ல பிள்ளையா கையைக் கட்டிக்கொண்டு நிக்கிறீங்களே:).. மீள் குதிப்புக்கு:) மிக்க நன்றி ட்றுத்.
Deleteசமயபுரம் கோவிலில் மாவிளக்கு போட்டு வேண்டுதல் நிறைவேற்றுவதைப் பார்த்திருக்கிறேன் புகைபடத்தில் அதிராவா சும்மா சொல்லக் கூடாது அழகாகவே இருக்கிறீர்கள்
ReplyDeleteவாங்கோ ஜி எம் பி ஐயா வாங்கோ..
Delete//சமயபுரம் கோவிலில்///
எனக்கு ஏனோ தெரியவில்லை சமயபுரத்து மாரியம்மனை ரொம்பப் பிடிக்கும்.. போனதில்லை இன்னமும். கொழும்பு கொட்டாஞ்சேனையில் இருக்கும் அம்மன் கோயிலில் சுவரில் படம் கீறி.. பிரிண்ட் பண்ணி சமயபுர மாரியம்மன் என எழுதியிருக்கும்.. அதைப் பார்த்ததிலிருந்து ரொம்பப் பிடிச்சுப்போச்சு அவவை எனக்கு.
//புகைபடத்தில் அதிராவா சும்மா சொல்லக் கூடாது அழகாகவே இருக்கிறீர்கள்//
ஹா ஹா ஹா மிக்க நன்றி .. நீங்கதான் சப்டரை தைரியமா ஓபின் பண்ணியிருக்கிறீங்க.. ஹா ஹா ஹா..
நானும் இதே மாதிரி மங்களகரமான மஞ்சள் சல்வாரில் இடுப்பில் மகளோட இதே எங்க சித்தி ஸ்டைல் front cut உடன் ஹைடில்பேர்க் சர்ச்சில் ஒரு படத்தை எடுத்தேன் அதை attic மேலேறியாவது எடுத்து ப்லாகில் போடுவேன் என்று அந்த சொக்கப்பனைகள் மீது கைபடாம சத்தியம் செய்கிறேன் :)))))))))))
ReplyDeleteஹா ஹா ஹா.. போடுங்க அஞ்சு போடுங்க:)... ஆனா ஒண்ணு:).. ஆத்திர அவசரத்தில பாய்ந்து ஏறும்போது கால் கீல் உடைஞ்சால் அதுக்கு மீ பொறுப்பல்ல:)
Deleteநாங்களும் குழந்தைக்கு முதலில் குலதெய்வம் கோயிலில் மொட்டை போட்ட பின்னரே ஆண் குழந்தைன்னா விதவிதமான கிராப்புகள், பெண் குழந்தைன்னா நீளமாக வளர்த்தோ அல்லது பாப் கட் பண்ணுவதோ! :) அப்போ மாவிளக்கும் போடுவோம். ஆனால் அரிசி மாவில்! கிட்டத்தட்ட இப்படித் தான்! ஆனால் இரண்டு தான் வைப்போம். இப்போல்லாம் மாவிளக்குக்கு என்றே திரிகள் கிடைக்கின்றன. நெய்யை ஊற்றித் திரியை அதில் ஊற வைத்து விட்டுப் பின்னர் ஏற்றினால் நின்று நிதானமாக எரியும். லேட்டா வந்தாலும் தினைமாவு நன்றாகவே இருந்தது! போன வருஷம் கொடைக்கானல் போனப்போ குழந்தை வேலப்பர் கோயிலில் தினைமாவு சாப்பிட்டேன். ஆனால் வாழைப்பழம் போட்டதாகத் தெரியலை!
ReplyDeleteவாங்கோ கீதாக்கா வாங்கோ.. எதுக்கு ஒன்று இரண்டு என வைக்கிறீங்க?... ஊரில் வாழை இலை முட்ட வைப்பார்கள் நிறைய மாவிளக்குகள்.. அதுக்கு இன்னொரு காரணம்.. மாவிளக்குப் போட்டால்.. சொந்த பந்தம் அயலட்டைக்கெல்லாம் கொடுப்பது வழமை.. அதனால கூட நிறைய செய்து வைக்கிறார்களோ என்னமோ..
Deleteஓ மா விளக்குக்கு என்றே திரிகள் இருக்கோ..
//லேட்டா வந்தாலும் தினைமாவு நன்றாகவே இருந்தது!/// ஆவ்வ்வ் மிக்க நன்றி... அது கீதாக்கா.. சக்கரையில் மா நன்கு குழைக்க முடியாதெல்லோ அதனால தண்ணித்தன்மைக்காக கொஞ்சம் வாழைப்பபழம் சேர்ப்போம்.
மிக்க நன்றிகள்.
எங்க வீட்டில் ஒரே ஒரு உருண்டை வைப்போம். அம்மா வீட்டில் உருண்டை மாவிளக்கோடு ஒரு பிடி கொழுக்கட்டை போல மாவை பிடிச்சு வைப்பாங்க., வேக வைக்காம...
ReplyDeleteஇங்கு நிறைய இருக்கு
வாங்கோ ராஜி வாங்கோ.. ஓ ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு வழக்கம்போல இருக்கு. மேலே கீதாக்காவுக்கு கொடுத்த பதில் பாருங்கோ.
Deleteமாவிளக்கு மாவோடு தேங்காய் சேர்த்து சாப்பிட்டா....... யம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மி
ReplyDeleteஓ அப்படியா? நாங்க திரிபோசா[சிங்களப் பெயர்] என ஒரு மா இருக்கு.. முக்கூட்டு மா எனவும் சொல்வதுண்டு.. அது சக்கரையும் தேங்காய்ப்பூவும் சேர்த்துச் சாப்பிட்டால் சுவையோ சுவை...
Deleteஓ நீங்க சொன்னதுபோலவும் செய்து பார்க்கிறேன்.. மிக்க நன்றி ராஜி.
மாவிளக்கு ஏற்றுவதும் இப்போது அரிதாகிவரும் நேரத்தில் அருமையான விளக்கப்பகிர்வு!
ReplyDeleteவாங்கோ நேசன் வாங்கோ.. உண்மைதான் வெளிநாட்டில் யாரும் மாவிளக்கேத்திப் பார்க்கவில்லை.. ஒருவேளை என்னைப்போல வீட்டுக்குள் போடுகிறார்களோ என்னமோ.
Deleteஅட கதிர்காமத்தில் தான் மொட்டை போட்டீங்களா?))) கந்தனுக்கு அரோகரா)))
ReplyDeleteஅரோகரா!!!.. படி.. நடந்தே மலை ஏறிப்போனோமே:)).. ஜீப் எல்லாம் பாவிக்கவில்லை:)..
Deleteமிஞ்சின மாவினை இங்கே அனுப்புங்கோ சாப்பிட)))
ReplyDeleteஹா ஹா ஹா எதுக்கு மிஞ்சின மா.. உங்களுக்கு ஒரு விளக்கு அனுப்புறேன் நால்வரும் புறிச்சு எடுங்கோ:).. கோபாலன் கோ வில தினை கிடைக்குமே:).
Deleteமதுரமாணிக்கொழுந்து வாசம் பாடலிலும் மாவிளக்கு பற்றி குழுவினர் பாடுவார்கள்)) பசுநேசம்/ராமராஜன் நடித்த எங்க ஊர் பாட்டுக்காரான் படத்தில்)))
ReplyDeleteஓ பாட்டுக் கேட்டிருக்கிறேன் மாவிளக்கைக் கவனிக்கவில்லை இனிக் கவனிச்சுப் பார்க்கிறேன்.. மிக்க நன்றி நேசன்..
Deletehttp://media.istockphoto.com/vectors/cute-little-red-cat-character-champion-holding-golden-winner-cup-vector-id807291388
ReplyDeleteவாவ்வ்வ் மிக்க நன்றி அஞ்சு.. நேற்று 13 இல் மகுடம் கிடைச்சது இப்போ 15 ஆகி விட்டது, ஆனா இரவோரிடவாக கில்லர்ஜி பறிச்சிட்டார் என் மகுடத்தை கர்ர்:).
Deleteaaaaw !!! naan illai naan illai :))
Delete///aaaaw !!! naan illai naan illai :))//
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஜாமத்தில வீட்டுக்குள் இருப்பதை விட்டுப்போட்ட்டு, ஓடிப்போய்க் கில்லர்ஜிக்கு வோட் போட்டு என் மகுடத்தைப் பறிச்சுக் குடுத்திட்டு இப்போ நானில்ல என்றால் விட்டிடுவனோ:) கிர்ர்ர்ர்ர்ர்ர்:)
தமிழ் மணம் மகுடம் சூட்டியமைக்கு வாழ்த்துக்கள்
ReplyDelete# சூட்டியமைக்கு#
Deleteஇந்த பாராட்டு எனக்கே சேரும் :)
//கரந்தை ஜெயக்குமார்Wednesday, September 27, 2017 2:57:00 am
Deleteதமிழ் மணம் மகுடம் சூட்டியமைக்கு வாழ்த்துக்கள் //
வாங்கோ வாங்கோ மிக்க நன்றி.. நீங்க எனக்கு ஒவ்வொரு தடவையும் வோட் போட மறந்திடுறீங்களே:(..
//Bagawanjee KAW
Delete# சூட்டியமைக்கு#
இந்த பாராட்டு எனக்கே சேரும் :)//
ஹா ஹா ஹா ஒஃப் கோர்ஸ்.. பகவான் ஜீ மகுடம் எனக்கு.. அதனோடு சேர்த்து கைக்குள் திணிச்சிட்டுப் போகு என்வலப்புக்கள் எல்லாம் உங்களுக்கே:).. ஹா ஹா ஹா...
மிக்க நன்றி பகவான் ஜீ, ஆனா பாருங்கோ.. ஒளவை செண்ட்டிமெண்ட்டைப் போட்டு மகுடத்தைப் பறிச்சிட்டார் கில்லர்ஜி.. ஹா ஹா ஹா:)
ஊசி இணைப்பு..புத்தர் அமர்ந்த நிலை..மிகவும் அருமை.
ReplyDeleteவாங்கோ வாங்கோ முதன் முதலா வந்திருக்கிறீங்க.. நல் வரவு மிக்க மகிழ்ச்சி.. வந்த வேகத்தில் வோட்டும் போட்டு விட்டீங்கள் மிக்க நன்றி.
Deleteஅப்பா ஒருவழியா இறுதிக்கி மூச்சு வாங்க வந்தேன்! த ம 15
ReplyDeleteவாங்கோ புலவர் ஐயா வாங்கோ.. தவறாமல் வந்து என் ரெயின் புறப்படமுன் கார்ட் பெட்டியில்:) ஏறி வோட் போட்டமைக்கு மிக்க நன்றி..
Deleteஊசி இணைப்பு அருமை
ReplyDeleteத+ம=16
வாங்கோ மொகமட் வாங்கோ.. ஆவ்வ்வ்வ்வ் கில்லர்ஜி இடம் பறிகொடுத்திருந்த என் மகுடத்தை உங்கள் வோட் மூலம் திரும்பப் பறிச்சிட்டேன்ன்ன்ன் மிக்க நன்றி:)..
Deleteவணக்கம் பூஸ் !
ReplyDeleteமங்களமாய் இருக்குமுமைப் பாடுவதோ ? இல்லை - அந்த
....மாவிளக்கின் பெருமைதனைப் பாடுவதோ ? தாயைப் போல
பொங்குமெழில் புதல்வனையும் பாடுவதோ ? இல்லை புத்தன்
....பொறுமையினைப், புகழ்நெறியைப் பாடுவதோ ? அறியா மல்தான்
இங்கெதுவும் எழுதாமல் இருந்திட்டேன் நானே நானே
....இதுமுறையோ பொதுவிதியோ எனைக்கேட்டால் வீணே வீணே !
என்னது மகுடம் கிடைச்சிட்டுதாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ?????????????????????
ஹா ஹா ஹா மேஜரே உங்கட கவிதை படிச்சுச் ஷை ஆனதால பதில் தரத் தாமதமாகிட்டுது:).. உங்கள் கவிதை பார்த்து முக்கியமா தேம்ஸ் கரையில ஒரே புகை மூட்டம்:) என்னால இன்று வோக் போகவே முடியல்ல:)..
Delete//என்னது மகுடம் கிடைச்சிட்டுதாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ?????????????????????
/////
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. நீங்க கடமையைச் செய்கிறேன் பேர்வழி என ஓடிப்போய் பகவான் ஜீக்கு வோட் போட்டதால .. என் மகுடத்தை உடனேயே பறிச்சிட்டார் அவர்:) பூஸோ கொக்கோ திரும்ப பறிச்சேன்.. இடையில கில்லர்ஜி புகுந்து களவாடிட்டார் கர்ர்ர்:).. இம்முறைதான் வாழ்க்கையில் மகுடம்.. மூவர் கையிலும் 24 மணிக்கும் மாறி மாறி த் தாவியது:)..
மிக்க நன்றி சீராளன்.. அழகிய கவிதைக்கும் நன்றி.
அடடடா பூஸு....
Deleteஎன்னது ஒரே நாளில் மூவருக்கு கை மாறியதா இனி இதில கொஞ்சம் அலெட்டா இருக்கணும் போல உங்களுக்கு மகுடம் கிடச்சி மூணு நாளைக்கு யாருக்கும் தமன்னா மேல கையே வைக்கக் கூடாது என்று முடிவு எடுக்கிறேன் ஓகே வா
ஹா ஹா ஹா மீள் மீள் வருகைகள் மகிழ்ச்சி தருகிறது மேஜரே... அதேதான்.. அது மட்டுமில்லை எனக்கு மூன்று தரம் கிடைச்சுக் கிடைச்சுப் பறி போச்சுதே:).. முடிவில அஞ்சு இது தெரியாமல் ஓடிப்போய்க் கில்லர்ஜிக்குப் போட:).. மகுடம் அவரின் தலையில் ஏறிக்கொண்டது ஹையோ ஹையோ:)).
Delete/// உங்களுக்கு மகுடம் கிடச்சி மூணு நாளைக்கு யாருக்கும் தமன்னா மேல கையே வைக்கக் கூடாது என்று முடிவு எடுக்கிறேன் ஓகே வா///
ஹா ஹா ஹா டீல்:)).. நான் இதைப் படிச்சதும் உடனேயே கிழிச்சு தேம்ஸ்ல நடுப்பகுதில் வீசிட்டேன்:)).. மேசைக்குக் கீழ கலெக்ஷி சொக்கலேட் பார் இருக்கு ஆருக்கும் காட்டாமல் எடுங்கோ:).. ஆரு தந்தா? எதுக்குத் தந்தா? என பகவான் ஜீயும் அஞ்சுவும் மிரட்டிக் கேய்ப்பினம்.. வாய் திறந்திடாதீங்கோ:).. ஹா ஹா ஹா மிக்க நன்றி.
/ வாய் திறந்திடாதீங்கோ//
Deleteக்கும் :) வாய் திறக்காம இருக்க ஒரு துண்டு மாவிளக்கை அங்கிருந்தே உருட்டி விடுங்க மேஜர் ...மைனர் :) நோ நோ மைனஸ் :)
/// நோ நோ மைனஸ் :)///
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹையோ இப்போ இதைக் கமல் அங்கிளின் கண்ணிலிருந்து எப்பூடி நான் மறைப்பேன்ன்ன்ன்:)).. முருகாஆஆ இந்தக் கொமெண்ட்டை இன்விசிபிள் ஆக்கிடுங்கோ.. அடுத்த தடவை:) வள்ளிக்கு மாவிளக்குப் போடுவேன்ன்:)).
ஹா ஹா ஹா !
Deleteகலெக்ஷி சொக்கலேட் எல்லாம் காலி பண்ணிட்டேன் யாருக்கும் சொல்ல மாட்டேன் அடிச்சுக் கேட்டாலும் ம்ம்ஹூம் வாயே திறக்க மாட்டேன் ஆனா
அஞ்சு சகோ கேட்டால் சொல்லிடுவேன் நீங்க தெரியாமல் தந்தது என்று ஹா ஹா ஹா ......பூசாரே அடுத்த முறை கலெக்ஷி சொக்கலேட் வேண்டாம் எனக்கு ஹாஜென் டாஸ் சொக்கலேட் (haagen dazs ) ரொம்ப பிடிக்கும் அதை அங்கேயே ஒளிச்சு வையுங்கோ நான் வந்து மூச்சே விடாம முழுங்கிட்டு போறேன்ன்ன்ன்னன்ன்ன்ன்
க்கும் :) வாய் திறக்காம இருக்க ஒரு துண்டு மாவிளக்கை அங்கிருந்தே உருட்டி விடுங்க மேஜர் ...மைனர் :) நோ நோ மைனஸ் :)
Deleteவேண்டாமே சகோ நல்லவங்களை நாம் வஞ்சிக்கக் கூடாது இல்லையா
அதனால நான் ஆட்டைய போடும் சொக்கலேட் ல பூஸுக்கு தெரியாம உங்களுக்கும் அனுப்பி விடுறேன் சாப்பிட்டு விட்டு வாயே திறக்கக் கூடாது ஓகே வா
//எனக்கு ஹாஜென் டாஸ் சொக்கலேட் (haagen dazs ) ரொம்ப பிடிக்கும் அதை அங்கேயே ஒளிச்சு வையுங்கோ நான் வந்து மூச்சே விடாம முழுங்கிட்டு போறேன்ன்ன்ன்னன்ன்ன்ன்///
Deleteஸ்ஸ்ஸ் முதல்ல கையில மை இருக்கோ எனச் செக் பண்ணிப்போட்டுத்தான்.. ராஜன் டாஸ்க்.. ஹையோ ஏதோ ஒரு ஃபுளோல வந்திட்டுது அஜீஸ் பண்ணிக்கோங்கோ மேஜரே.. சொக்கலேட் கிடைக்கும்:).
///வேண்டாமே சகோ நல்லவங்களை நாம் வஞ்சிக்கக் கூடாது இல்லையா ///
ஆஆவ்வ்வ்வ் இதெல்லாம் அஞ்சுட கண்ணுக்குள் விளக்கெண்ணெய் போத்தலோட ஊத்தினாலும் தெரியாது:) ஆனா ஆராவது அதிராவை திட்டிட்டால் போதுமே:).. நித்திரையிலயும் அசரீரி ஒலிச்சு:) எழும்பி இருட்டுக்குள் ஓடி வருவா சப்போர்ட் பண்ண கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா:).
தங்கூ சீராளன்.. மீள் வருகைகளுக்கு..
மாவிளக்கு அருமை .... இப்படி கொண்டாடி நம்ம் ஊரில் தானே இயலும் என நான் சொல்லுகையில் , உங்கள் நகைச்சுவையான எழுத்தையும் பாராட்ட விழைகிறேன். தினை மாவின் தித்திப்பை நினைத்து பார்க்கையில் மனமெங்கும் மடை திறந்த வெள்ள மாக மகிழ்ச்சி , உங்கள் பதிவு சிறப்பு ....மிகச் சிறப்பு.
ReplyDeleteகில்லர்ஜி சேகர்
கில்லர் ரசிகர் பேரியக்கம், அபுதாபி.
நல்லவேளை அனோனிமஸ் ஆ வந்தாலும்.. முடிவில சங்கத்தின் பெயரையாவது தெகிரியமாப் போட்டீங்களே.. அதுக்கு என் நன்றிகள்...
Deleteஇந்தக் கொமெண்ட்டுக்கு கில்லர்ஜி.. எத்தனை சைபர்:) போட்ட செக்:) (ஹையோ இது வேற செக்:)].. கொடுத்தார்?:)
முருகனுக்கு தினை மாவில் மாவிளக்குதான் மிகவும் விசேஷம்.
ReplyDeleteபாடல் பகிர்வுகள் அருமை.
புத்தர் சொன்ன பொன்மொழி அருமை.
வாழ்த்துக்கள்.
குழந்தையின் படம் அழகு.
ReplyDeleteஅம்மாபடம் அதைவிட அழகு.(மாவிளக்கு ஏற்றும் அம்மா)
தமிழ்மணமகுடத்திற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஓவ்வொரு கார்த்திகை சோமவாரத்திற்கும் மாவிளக்கு செய்வேன். காலை முதல் விரதம் மாலை மாவிளக்கு செய்து வழிபட்டு பின் விரதம் முடித்து
ReplyDeleteசாப்பிடுவேன் .
பச்சரிசியில் செய்வோம். ஆடிவெள்ளி, இறைவனுக்கு வேண்டிக் கொண்டு செய்வது, ஆடிபெருக்கு இதற்கு எல்லாம் மாவிளக்கு செய்வோம்.
மாவிளக்கு கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு நாளும் கண்டதும் இல்லை, சாப்பிடக் கிடைக்கவும் இல்லை.
ReplyDeleteஆரியபவன் பக்கம்!! :-)