நயகரா நீர் வீழ்ச்சிக்குப் போனதும், அங்கிருந்த ஷொப்பில், இவர் என் கண்ணில் பட்டார்ர்... சந்தோஷம் பொயிங்கிட்டுது எனக்கு:))
வழமைபோல அனைத்துப் படங்களையும் லெஃப்ட் கிளிக் அண்ட் பெரிசூஊஊஉ ஆக்கிப் பாருங்கோ....
சரி இனி ரொரன்ரோவிலிருந்து நயகராவுக்குப் போகலாம் வாங்கோ:)).. விடுமுறை நாள், அத்தோடு காலை நேரம் என்பதால் வாகன நெரிசல் இருக்கவில்லை.
இது Niagara Water Falls Area வுக்குள் நுழையும் காட்சி...
ஆஹா இந்தத் தண்ணீரைப் பாருங்கோ... எங்கிருந்து வருகிறதென்றே தெரியாது, ஆனா இப்படியேதான், நாம் முன்பெல்லாம் பார்த்தபோது எப்படி இருந்ததோ, அதே அளவில், கொஞ்சமும் குறைவில்லாமல் எங்கிருந்தோ ஓடிவந்து அந்தாப்பெரிய பாதாளத்தில் விழுகிறது... இதுதான் அதிசயம்...
இப்போ தண்ணி விழும் பாதாளம்(நீர் வீழ்ச்சி) தெரியுதோ? படத்தில் ஆளம் தெரியவில்லை, ஆனால் நேரில் பார்த்தால்... தலை சுத்தும்... அந்தளவு பாதாளம்...
குளிர் நேரம் என்பதால், தண்ணி விழும் வேகத்தில் ஒரே புகையாக(ஆவி) இருக்கிறது.. இடது பக்கம் மக்கள்ஸ்ஸ்ஸ் நிற்பது தெரியுதெல்லோ....
இந்த நிலைமையிலும் ஒரு சீகல்(Seagull) பிள்ளை பறக்கிறார்:)) என்னா தைரியம்:))
எங்கேயோ இருந்து தண்ணி வந்து குதிக்கிறது...
இதில் தெரியும் பாலம்தான் கனடாவையும் அமெரிக்காவையும்( Buffalo) இணைக்கும் பாலம். இடது பக்கம் இருப்பது கனடிய இமிகிரேஷன், வலது பக்கம் இருப்பது அமெரிக்க இமிகிரேஷன். வலது பக்கத்தில் குட்டியாகத் தெரியுதே... அதுதான் அமெரிக்காவின் “நயகரா”:))
இதுதான் அமெரிக்கப் பக்கம் இருக்கும் நயகரா... இதில் பெரிதாக்கிப் பாருங்கோ.. சிவப்பு ஏணிப்படிகள் இருக்கு, மக்கள் ரெயின்கோட் போட்டுக்கொண்டு நீர் வீழ்ச்சிக்கு அருகில் போய் வரக்கூடியவாறு செய்திருக்கிறார்கள், பார்க்கவே பயங்கரம், பேரிரைச்சல், அதில் கிட்டப் போவதோ? நோ சான்ஸ்ஸ்ஸ்:)))
பின்னேரம் மழை தூறியது, அப்போ வானவில்லும் தோன்றிச்சுதே:))
அங்கு குதிரை வண்டில் சவாரியும் இருந்தது...
இது அங்குள்ள ஒரு கிட்டத்தட்ட குட்டி டிஷ்னி வேர்ட் போல.. சின்னவர்களுக்கு, ஏன் நமக்கும் ஏற்ற இடம்:))
இது அங்கிருந்த ஒரு ஷொக்கலேட் ஷொப், ஷொக்கலேட் செய்கிறார் உந்த அண்ணா:))
இதில் தெரிவது Lights, அதாவது “ஆரோ” சொல்லிச்சினம், ஈஃபிள் ரவர் இரவில் ஓர் அழகாக இருக்குமென்று:), அப்படித்தான், நயகராவின் நீர் வீழ்ச்சியும், இரவில், இந்த லைஸ்ட் ஐப் போட்டுவிடுவார்கள், நிறம் மாறிக் கொண்டிருக்கும் லைட், அந்த வெளிச்சம் , இந்த நீர்வீழ்ச்சியில் போய் அடிக்கும்போது, நீர் வீழ்ச்சியும் கலர் மாறிக் கொண்டிருக்கும், இருட்டிய பின்பே லைட்ஸ் போடுவார்கள். அதுவும் ஒருவித கொள்ளை அழகே... நாம் அதுக்கு நிற்கவில்லை..
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
ஊசி இணைப்பு:
இந்த லிங் பாருங்கோ.. இது வெப்கமெராமூலம் எடுக்கப்படுது, 24 மணிநேரமும் நேரடி ஒளிபரப்பு... இந்திய நெரம் காலையில் இதைப் பார்த்தால், நான் கூறிய லைட்டுகளின் அழகை நேரடியாக ரசிக்கலாம்.
இதனையும் full screen ஆக்கிப் பாருங்கோ ஆட்கள் நடந்து கொண்டிருப்பதெல்லாம் தெரியும்.
http://www.niagarafallslive.com/niagara_falls_webcam.htm
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
பின் - ஊசி இணைப்பு:))
========================================================
அன்பற்ற இடத்திலிருந்து வரும், மலையளவு எதிர்ப்பையும் தாங்குகிற இதயம், அன்புள்ள இடத்திலிருந்து வரும் கடுகளவு எதிர்ப்பைக்கூட ஏற்க மறுக்கிறதே..... எங்கட கண்ண..தாசன் சொன்னவர்
========================================================
முதலாவது பின்னூட்டம் போடுபவருக்கு, வடை சுடும் ஆயாவும்:), 2வது பின்னூட்டமிடுபவருக்கு மட்டின் பிர்ராணி செய்யும் ஆயாவும் ஒப்படைக்கப்படும்:)) பத்திரமாக ஏசிக் காரில் ஏற்றிச் செல்லும்படி வேண்டப்படுகிறீர்கள்.. மியாவும் நன்றி.