நான் வந்துட்டேன்.. திரும்ப வந்திட்டேன் ஹா ஹா ஹா துக்கம்!!!..
ஹொலிடே முடிச்சு வந்தாலும் மனம் என்னமோ ஹொலிடே மூட்லயே இருக்குது:).. அதுவும் ட்றம்ப் அங்கிளை மீட் பண்ணியதிலிருந்து:).. நிறையப் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைச்சாலும்:).. புதுப் பிரச்சனைகளும் ஆரம்பமாச்ச்ச்ச்:)...
இப்போ எதைச் சொல்லுவேன் எதை விடுவேன் எனத் தெரியல்ல.. அதனால முதலில் வானத்தில் பறந்ததை மட்டும் போட்டுக் காட்டிடுறேன்(ட்றெயிலர்).. பின்பு விரிவாப் பார்க்கலாம். இம்முறை ஹொலிடே, கனடா போய் இடையில் ஒரு கிழமை நியூயோர்க் போய்(ட்ரம்ப் அங்கிளை மீட் பண்ணத்தான்:)).. திரும்ப கனடா போய் ஊர் திரும்பினோம்...
இது நியூயோர்க்கிலிருந்து ரொரொன்றோ நோக்கிப் பயணித்தபோது.. நியூயோர்க் வானத்திலிருந்து..[ஒரு மணிநேரப் பயணம்தான்).
அப்போ காலநிலை சரியில்லை அதனால படங்கள் எடுக்க முடியவில்லை.. இது ரொரொன்ரோவில் லாண்ட் ஆகும்போது என நினைக்கிறேன்..
========================================================================
இது ஊருக்குத் திரும்பியபோது, வெதர் சூப்பராக இருந்துது அதனால படங்கள் அழகா எடுக்க முடிஞ்சுது.. ரொரண்டோ எயார்போர்ட் ரன்வேயில் மெதுவாக ஓடத் தொடங்கியபோது..
ஆஆ இப்போ காலைத் தூக்கி விட்டார் “எயார்கனடா”:)... ஐ மீன் வீலை:)
Toronto வின் அழகு தெரியுதோ... நேராக வளைந்து போவது ஹைவே ரோட். மாலை 7 மணிக்கு take off என்பதால்.. எதிரே சூரியன் கமெராவை துலக்கமாக எடுக்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்தார் கர்ர்ர்ர்ர்:).
சூரியன் எதிரே மறையும் காட்சி.. மேகத்துக்கு மேலே ஏறியாச்சு....
==================================INTERVAL================================
ட்ரம்ப் அங்கிள் என்னோடு கோபிச்சிட்டார்:), நான் அவரின் கையைப் பிடிச்சுச் சமாதானம் செய்கிறேன் பாருங்கோ:).. ஒரு கிழமைதானே அங்கு நின்றோம்.. அது போதாதெனக் கோபிச்சார்ர்:)
==========================================================================
பிளேன் எப்பவும் ரொரண்டோவில் இருந்து புறப்பட்டு.. montreal - கியூபெக் பக்கமாக வந்து பின்பு கிரீன்லாண்ட்... ஐஸ்லாண்டின் கரையாக வந்துதான் பிரித்தானியாவை அடையும், ஏனெனில் முழுக்க முழுக்க சமுத்திரத்தை குறுக்கே கடப்பது அந்தர அவசரத்துக்கு லாண்ட் பண்ண முடியாது எனும் பாதுகாப்பு எண்ணத்தினால்:)..இது என் ஃபோனிலே காட்டிக் கொண்டிருந்துது பிளேன் பறப்பதை.. நீல வட்டம் பிளேன் இருக்கும் இடம்.. கனடா எல்லையைக் ஐ கடந்து கொண்டிருக்கிறது...
கனடாவின் எல்லையை விட்டு வெளியேறியாச்ச்ச்ச்ச்:)..
எப்பவும்... கனடா இருந்து திரும்பும்போது ஒரு பிரச்சனை என்னவெனில்.. இரவாகி, சாப்பாடு முடித்து இனி நித்திரை கொள்ளலாமே என எண்ணும்போது கனடிய நேரம் இரவு 11 ஆகிடும், ஆனா அப்போ பிளேன் ஐஸ்லாண்டைக் கடந்து கொண்டிருக்கும் பிரித்தானியாவில் விடிந்து கொண்டிருக்கும்... திடீரென, இரவு மாறி சூரியன் கண்களில் பளாச் என அடிக்கும்.. கீழே இருக்கும் படம்.. காலை விடியலைக் காட்டுது. பஞ்சு பரப்பி விட்டதுபோல முகில் கூட்டம்..
ஆவ்வ்வ்வ் பொயிண்ட்டுக்கு வந்தாச்சூஊஊ:).. ஸ்கொட்லாண்ட் க்குள் வந்திட்டோம்ம்.. இதில ஒரு உண்மை சொல்லியாகோணும்.. ஒவ்வொரு நாட்டிலும் போய் பிளேன் லாண்ட் ஆகியவுடன், பைலட் எனவுன்ஸ் பண்ணுவார்தானே.. வெல்கம் ரு.. கனடா, .. நியூயோர்க் எனச் சொல்லி லோகல் ரைம் என்ன என்பதையும் சொல்வார்கள்.... ஸ்கொட்லாண்ட்டில் வந்து இறங்கிய போது “வெல்கம் ரூ பியூட்டிஃபுல் ஸ்கொட்லாண்ட்” என எனவுன்ஸ் பண்ணினார் தெரியுமோ:).. இதிலிருந்து புரிஞ்சுக்கோங்க.. நாடு மட்டுமில்லை.. நாட்டிலிருக்கும் .......... :) அழகுதேன்:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:).
ஊசிக்குறிப்பு:
எடுத்த உடனேயே வோட்டுக்கள் குவியாது எனத் தெரியும்:) இருப்பினும்,படம் பார்த்த களைப்பில வோட் பண்ண மறந்திடாதீங்கோ:), ஹையோ மாறிக் கீறி மைனஸ் குத்திடாதீங்கோ பகவான் ஜீ க்கு குத்தியதைப்போல:)...
மகுடம் கிடைச்சிட்டுதூஊஊ.. வோட் போட்ட அனைவருக்கும் நன்றீஈஈஈஈ
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஊசி இணைப்பு:
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
|
Tweet |
|
|||
தம 2 போட்டுட்டேன்.....திருப்பி மொய் எல்லாம் வைக்க வேண்டாம்
ReplyDeleteவாங்கோ “தயிர்ச்சாதம்” வாங்கோ:) ஹையோ டங்கு ஸ்லிப் ஆச்சூ[விழுவதை எல்லாம் பொறுக்குவதுதானே என் வேலை:)] வாங்கோ ட்றுத் வாங்கோ..
Deleteமுதலாவதாக வந்த உங்களுக்கு எப்பாடு பட்டாவது ட்றம்ப் அங்கிளின் கையைக் காலா நினைச்சுப் பிடிச்சாவது அவரிடம் இருக்கும் நாலில:) ஒன்றை கேட்டு வாங்கி சட்டப்படி:) தாறேன்ன்:).. எது வேணும் எனச் சொல்லிடுங்கோ?:).. வையாபுரி போல ஒருமையில சொல்லிட்டேன்ன்:)).
உங்களுக்கு மொய் தேவையில்லை என எனக்கு தெரியும் அதனால்தான் .. இந்த உதவியைச் செய்ய உள்ளேன்ன்:).
அஞ்சூஊஊஊஊஊஊஊ பீஸ் கமோன்:) இங்கின தனியா நிக்கப் பயம்மாக் கிடக்கூஊஊஊஊஉ:).. சே..சே.. எப்பூடிக் கூப்பிட்டாலும் வரமாட்டேன் என அடம் புய்க்கிறா:)
ஹலோ ட்ரூத் :) எப்படியிருக்கிங்க நண்பா ..என்னை எங்கியோ தேடினதா பார்த்த நினைவு ..
Deleteஇங்கே ஒரு ஹாய் சொல்லிக்கறேன் ..
வந்தாச்சு வந்தாச்சு மீண்டும் பிளாக்ஸ் பக்கம் வந்தாச்சு நான்
///AngelinTuesday, August 29, 2017 7:04:00 pm
Deleteஹலோ ட்ரூத் :) எப்படியிருக்கிங்க நண்பா ..என்னை எங்கியோ தேடினதா பார்த்த நினைவு ..///
இல்லயே அப்பூடி ஆருமேஏஏஏஏஏஏஏ உங்களைத் தேடல்லியே:)).. ஒருவேளை பொக்பொஸ் பக்கம் தேடியிருப்பாங்க...:) ஹா ஹா ஹா... எல்லோரும் தேடினோம் அஞ்சு வாங்க...
என்னது எங்க ஊர் பக்கம் வந்துட்டு ஹாய் சொல்லாமல் போய்விட்டீங்க
ReplyDeleteஅதானே நான் கேட்கணும்னு நினைச்சேன் நீங்களும் கேட்டுருப்பீங்கனு நினைச்சேன்!! கேட்டுட்டீங்க மதுரை...
Deleteசரி சரி அவங்க போட்ட போட்டோவுல பறவை வியூவுல நீங்க எறும்பு மாதிரி இருந்து அதிரா ப்ளேன்ல பறக்கறத பார்த்டதிருப்பீங்க ஹிஹிஹி ஆனா அதிரா அதுல இருக்காங்கனு தெரியாமலேயே..ஹிஹி
நான் தேடினேன் அந்த ஃபோட்டோவுல நீங்க எங்கியாச்சும் இருக்கீங்களானு ஹாஹாஹா
கீதா
எனக்கு முதலே நீங்க காணாமல் போயிட்டீங்களே ட்றுத்:).. மதுரையைப் பார்த்துக் ஹாய் சொல்லப் போயிருப்பீங்க என நினைச்ச்ச்ச்... சோம்ம்:))..
Deleteஸ்ஸ்ஸ்ஸ்ஸ் எப்பூடி எல்லாம் ஜமாளிக்க வேண்டிக்கிடக்கூஊஊஊஊ:)..
வாங்கோ கீதா வாங்கோ..
Delete//சரி சரி அவங்க போட்ட போட்டோவுல பறவை வியூவுல நீங்க எறும்பு மாதிரி இருந்து அதிரா ப்ளேன்ல பறக்கறத பார்த்டதிருப்பீங்க///
என்னாதூஊஊஊஊஊஊ எறுப்பு மாதிரியா? ட்றுத் ஆஆஆஆஆஆ?:) ஹையோ விடுங்கோ மீ தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்ன்:).. அஞ்சூஊஊ அந்த மரக்கட்டிலைக் கொஞ்சம் தேம்ஸ் கரையில போட்டு விடுங்கோ பீஸ்ஸ்ஸ்:)..
கீதா அந்தப்படத்தில பெரீஈஈஈஈய வட்டமாத்தெரிவதில தான் நேக்கு சந்தேகம்... ஒருவேளை ட்றுத் ஆக:).. சரி வேணாம் விட்டிடுங்கோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:).. மீ ரொம்ப நல்ல பொண்ணு:).
கீதா நீயூயார்க்கில் ஒரு நாள் நில நடுக்கம் ஏற்ப்பட்டது போல இருந்தது நானும் ஒரு வேளை அதிராதான் வந்திருப்பாங்களோ என்று நினைத்து கடைசியாக அவங்க ஏன் இங்க வரப் போறாங்க இதெல்லாம் மனப்பிரம்மை என்று நினைத்துவிட்டேன் ஆனால் இப்போதான் அது உண்மை என்று புரிந்தது
Deleteமதுரைத் தமிழன் - உங்களைப் போன்றவர்கள் இந்த மாதிரி எக்குத் தப்பா எதுவும் கேட்கக்கூடாது, கமென்ட் சொல்லக்கூடாது என்பதற்காகத்தானே, 'பூனை எவ்வளவு மெதுவாக லேண்ட்' ஆகிறது என்பதைக் காட்ட ஒரு பூனைப் படத்தை இடுகையின் மேலே போட்டிருக்கிறாரே... பார்க்காமல் இந்தப் பெண்ணைக் குற்றம் சொல்கிறீர்களே.. நியாயமா?
Delete//Avargal UnmaigalMonday, August 28, 2017 1:55:00 pm
Deleteகீதா நீயூயார்க்கில் ஒரு நாள் நில நடுக்கம் ஏற்ப்பட்டது போல இருந்தது நானும் ஒரு வேளை அதிராதான் வந்திருப்பாங்களோ என்று நினைத்து//
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. அது நிலநடுக்கம் ஏற்பட்டது உண்மைதான் ட்றுத்:) அது ஏனெனில்.. அதிராவை வரவேற்க ட்றம்ப் அங்கிள் மரியாதை வேட்டுக்களை பூமியைப் பார்த்து வைக்கச் சொன்னார்:) அதனால நிலம் நடுகியது உண்மையேதான்:).. ஹா ஹா ஹா ஜூலி மாதிரியே பேசுகிறேனா.. என்னால முடியல்ல:)..
//நெல்லைத் தமிழன்Tuesday, August 29,
Deleteஒரு பூனைப் படத்தை இடுகையின் மேலே போட்டிருக்கிறாரே... பார்க்காமல் இந்தப் பெண்ணைக் குற்றம் சொல்கிறீர்களே.. நியாயமா?///
எச்சூச்ச்மி நெல்லைத்தமிழன்.. குறுக்கீட்டுக்கு மன்னிக்கவும்:) ஒரு சின்னத் திருத்தம்.. “இந்த சுவீட் 16 பெண்ணை”.. என வரோணும்:)).. ஓகே கீப் இட் மேலே:)..
ஹா ஹா ஹா.. பாருங்க ட்றுத் எனக்காகவும் கிளவி.. ஹையோ கேள்வி கேட்க ஆய்க்கள் சே செ ஆட்கள் இருக்கினம் புரிஞ்சுக்கோங்க:).. நன்றி நெ.தமிழன் நன்றி:)..
ஹையோ திரும்ப ஏதும் எழுதிக் கவிட்டுப்போடுவீங்களோ எனப் பயம்ம்ம்ம்மாக்கிடக்கூஊஊஊஊ:).
கடந்த 2 மாதங்களும் நானும் ரொம்ப பிஸியாகத்தான் இருந்தேன் பிஸியாக இருந்தாலும் பதிவர் விசு எங்க வீட்டிற்கு வந்தார். அவர் வரும் போது நமது ரமணி சார் அவருக்கு கால் பண்ணினேண் ஆனால் இன்னும் அவர் பதிலளிக்கவில்லை பதில் அளித்தி இருந்தால் அவரையும் சேர்த்து சந்தித்து இருக்கலாம்
ReplyDeleteஓ பிஸியிலும் இப்படிச் சந்திப்புக்களும் நடக்குதோ.. மகிழ்ச்சி.
Deleteசரி சரி ட்ரம்பை சந்தித்த நீங்கள் அவர் பெண்ணை பார்த்து நீயூஜெர்ஸியில் 16 வயது வாலிபன் அவருக்காக காத்திருப்பதாக சொல்லி இருக்கலாம் ஹும்ம்ம்ம்
ReplyDeleteஎனக்குத்தான் நான் படித்தது நினைவில் இல்லையா? டிரம்பின் மனைவிக்கே உங்கள் வயது இருக்கும்போல் தோன்றவில்லை.
Delete///சரி சரி ட்ரம்பை சந்தித்த நீங்கள் அவர் பெண்ணை பார்த்து//
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஓவர் ஆசை உடம்புக்கு ஆகாது சொல்லிட்டேன்ன்:).. ட்றம்ப் அங்கிளுக்கு கண்ணே கண்ணு நாலே நாலென இருப்பதில் ஒன்றை உங்களுக்கு தர ஏற்பாடு செய்கிறேனே ட்றுத்:) ஏதோ உங்களுக்காக றிஸ்க் எடுத்து இதைச் செய்யலாம் என காலை முன்னே வைக்கிறேன்:)..
//நீயூஜெர்ஸியில் 16 வயது வாலிபன் ///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஒரு 15 ஐச் சொல்லுங்கோ ஓகே... 17 ஐச் சொல்லுங்கோ அதுவும் ஓகே:).. அதெதுக்கு என் மடியிலேயே மண் அள்ளிப்போடுவதுபோல:) என் 16 இலேயே எல்லோரும் கண்ணு போடுறீங்க?:)... அது மீ மட்டும்தேன் சுவீட் 16 ஆக்கும்:) இது ட்றம்ப் அங்கிளுக்குக்கூடத் தெரியுமே:)...
ஹா ஹா ஹா அனைத்துக்கும் மிக்க நன்றி ட்றுத்..
ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் விடாதீங்கோ இப்பூடித்தான் குறுக்க குறுக்க கிளவி கேய்க்கோணும்:) ஹையோ டங்கு ஸ்லிப் ஆகுதே:) கேய்வி:) கேட்கோணும்:)..
Delete///டிரம்பின் மனைவிக்கே உங்கள் வயது இருக்கும்போல் தோன்றவில்லை.//
எனக்கொரு டவுட்டூஊஊஊஊஉ:) நீங்க எந்த மனிவியின் வயதை.. ட்றுத் ட வயதோடு ஒப்பிட்டுக் கேய்க்கிறீங்க?:) ஹா ஹா ஹா என்னால முடியல்ல.. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்:).
என்னது நெல்லைத்தமிழன் என்னது ட்ரெம்பின் மனைவிக்கு என் வயது கூட ஆகவில்லையா அது எப்படி எனக்கே 16 வயசுதான் அப்படி இருக்க ட்ரெம்பின் மனைவிக்கு 16 ஆகவில்லை என்றால் எங்கோ கணக்குதப்புதே.......
Delete///Avargal UnmaigalMonday, /// எனக்கே 16 வயசுதான்///
Deleteஹையோ வைரவா ட்றுத்துக்கு அந்த மீன் குழம்பில மறதிக் குளிசையைக் கலந்து கொடுத்தாவது உந்தப் 16 ஐ மறக்கப்பண்ணிடப்பாஆஆஆஆஆஆ:)).. விடவே மாட்டாராமே:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).
படங்கள் அருமை
ReplyDeleteதம +1
வாங்கோ வாங்கோ மிக்க நன்றி.. வோட்டுப் போட்டமைக்கும் நன்றி.
Deleteவாங்க, வாங்க... விடுமுறை முடிஞ்சு கலக்கலா, உற்சாகமா வந்திருக்கீங்க.... படங்கள் எல்லாம் கொள்ளை அழகு....
ReplyDeleteவாங்கோ சரவணன் வாங்கோ.. ஹா ஹா ஹா விடுமுறை எடுத்ததோடு இன்னும் முழு உசார் வருகுதேயில்லை...
Deleteமிக்க நன்றி சரவணன் அனைத்துக்கும்.
அதென்ன புதுசா விளம்பரம் எல்லாம் வருது?
ReplyDeleteவிளம்பரமா? ..ங்ங்ங்ங்ங்ங்கேஏஏஏஏஏ??.. எதைச் சொல்றீங்க? சீரியஸ் ஆ கேட்கிறீங்களோ இல்ல ட்றம்ப் அங்கிளைப் பார்த்துக் கேட்கிறீங்களோ புரியல்லியே...
Delete'PLEASE UPDATE YOUR ACCOUNT TO ENABLE..... " என்று ஒரு விளம்பரம் திரையின் வலது கீழே வருகிறது (photobucket.com). ஒருவேளை அவர்களுக்குத் தெரியாமல் நீங்கள் களவாண்ட ஒரு போட்டோவின் காரணமாக, எங்களுக்கு அந்தத் தண்டனையோ தெரியாது.
Delete///நெல்லைத் தமிழன்Tuesday, August 29, 2017 6:54:00 am
Delete'PLEASE UPDATE YOUR ACCOUNT TO ENABLE..... "//
ஹா ஹா ஹா ஓ அதுவா? நாங்க கனடாவில் இருந்து வந்தகாலம் தொடங்கி எனக்கது காட்டுது.. நான் ஏதும் எங்கட கொம்பியூட்டர் எரர் ஆக்கும் எனக்கு மட்டும்தான் தெரியுது என நினைச்சிருந்தேனே.. ஊருக்கே தெரியுதோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)..
வீட்டில் கொம்பியூட்டர் பாவிப்பது நான் மட்டும்தேன் அதனால பெரிசா கவனிக்கவில்லை அதை.. ஓகே இன்று இதனை சபைக்கு[வீட்டு] கொண்டு வந்து ஏதும் வழிபண்ணி நீக்க முயற்சிக்கிறேன்:)..
/// ஒருவேளை அவர்களுக்குத் தெரியாமல் நீங்கள் களவாண்ட ஒரு போட்டோவின் காரணமாக,//
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. கையும் களவுமா பிடிச்சால்.. ஓ இந்தப் படம்தான் காரணம் என நீக்கிடலாம்.. இது 2 மாதத்துக்குப் பின்பு வந்து கேட்டால்ல் நான் எந்தப் படத்தை நினைப்பேன்ன்:).. ஏனெனில் என் பக்கம் போடும் பூஸ்கள் எல்லாமே களவுதானே:).. ஹா ஹா ஹா:).
படங்கள் மிகவும் அழகாக வந்து இருக்கிறது.
ReplyDeleteப்ளைட் பாதுகாப்புக்கு வேண்டி சமுத்திரத்தில் இறங்காமல் பறந்து வந்து ஐஸ்லாண்டில் லேண்ட் ஆனது என்ற உண்மை அறிந்து மெய் சிலிர்த்து விட்டது
உங்கள் டிரெம்செட் அங்கிள் அழகாகவே இருக்கிறார்
வாங்கோ கில்லர்ஜி வாங்கோ.. முதலில் உங்களை கீழே தள்ளி விழுத்தி[மீசையில் மண் பட்டிடாமல்தான் பகவான் ஜீ தள்ளினார்.. மீ ஐ விட்னெஸ்ஸ்ஸ்ச்:)] மகுடத்தைப் பறிச்சமைக்கு மன்னிச்சுக்கோங்ங்ங்ங்:).. உகண்டா போயிடாமல் புயுப் போஸ்ட் போடுங்கோ.
Delete//ப்ளைட் பாதுகாப்புக்கு வேண்டி சமுத்திரத்தில் இறங்காமல் பறந்து வந்து ஐஸ்லாண்டில் லேண்ட் ஆனது என்ற உண்மை அறிந்து மெய் சிலிர்த்து விட்டது//
ஹையோ நீங்க தப்பா புரிஞ்சிட்டீங்க அல்லது நான் உங்களைக் குழப்பி விட்டிட்டேன் போல.... நான் சொன்னது... கனடாவில் இருந்து நேரே சமுத்திரத்தைக் குறுக்கே கடந்து பிரித்தானியா வருவதெனில் 5 மணித்தியாலத்தில் வந்திடலாம் என நினைக்கிறேன்.. ஆனா இது.. அப்படி எனில் ஏதும் ஆபத்து ஏற்பட்டால், தப்பவே முடியாது என்பதால்.. குறுக்கே கடக்காமல்.. கிரீன்லாண்ட் கரையோரம் போய்.. அப்படியே ஐஸ்லாண்ட் கரையோரமாக வந்துதான் பிரித்தானியாவை வந்தடையும்... இதுதான் நொர்மல் றூட்.. அதைத்தான் சொன்னேன்.
இதனால 6.5 - 7 மணித்தியாலம் எடுக்கும் பயணம்.
//உங்கள் டிரெம்செட் அங்கிள் அழகாகவே இருக்கிறார்//
Deleteஹா ஹா ஹா அவர் என்னா உயரம் தெரியுமோ? நானே உயரம்.. அவரைப் பாருங்கோ என்னைவிட ஒரு அடி மேலே நிற்கிறார்...
கொஞ்சம் சிரிச்சா அயகாத்தான் இருப்பார்ர் ஆனா மனைசன் சிரிக்கவே மாட்டாராமே... அவர் வந்தபின் செக்குறிட்டி சிஸ்டம் எல்லாம் கடுமையாக இருக்குமென்றார்கள் ஆனா அப்படி எதுவுமே இல்லை..
மிக்க நன்றி கில்லர்ஜி..
படங்கள் அழகு.
ReplyDelete//பஞ்சு பரப்பி விட்டதுபோல முகில் கூட்டம்..//
அழகு.
//ஒரு கிழமைதானே அங்கு நின்றோம்.. அது போதாதெனக் கோபிச்சார்ர்://
கல கலப்பாய் மகிழ்ச்சி அலையை பரப்பும் மருமகளை பிரிய கஷ்டமாய்தான் இருக்கும்.
ஊசி இணைப்பு மிக அருமை.
வாங்கோ கோமதி அக்கா வாங்கோ...
Delete///கல கலப்பாய் மகிழ்ச்சி அலையை பரப்பும் மருமகளை பிரிய கஷ்டமாய்தான் இருக்கும்.///
ஹா ஹா ஹா கரீட்டாக் கண்டுபிடிச்சுச் சொல்லிட்டீங்க:) ஆனாலும் மெதுவாப் பேசுங்கோ ஊரெல்லாம் புகைவரப்போகுதூஊஊஊஊ:)...
அனைத்துக்கும் மியாவும் நன்றி கோமதி அக்கா.
அனைய்து படங்களும் அருமை
ReplyDeleteகனகாலத்துக்கு போரவ்
ஆவ்வ்வ் வாங்கோ தம்பி மொகமட் வாங்கோ.. போஸ்ட் பார்த்ததும் மறக்காமல் வந்து கொமெண்ட் போட்டு வோட்டும் போட்டமைக்கு நன்றி நன்றி.
Deleteஅட அட அட....வார்த்தையே வரமாட்டேங்கிது....
ReplyDeleteஒவ்வொரு படமும் அம்புட்டு அழகு...
எடுக்கிறப்ப விட அப்பறம் அதை ரசிக்கும் போது தான் இன்னும் அழகா தெரியும்...
அதுவும் அந்த மேக பொதிகளுக்கு நடுவே ஆகாய ஊர்தி அழகு..
நானும் ஓட் போட்டேன்....
அட அட வாங்கோ அனு வாங்கோ..
Delete//வார்த்தையே வரமாட்டேங்கிது....// ஹா ஹா ஹா நேக்கும்தேன்ன்:).
//எடுக்கிறப்ப விட அப்பறம் அதை ரசிக்கும் போது தான் இன்னும் அழகா தெரியும்...//
உண்மைதான் ஆனா இதில் இருப்பதை விடவும் கண்ணால் பார்க்கும்போது இன்னும் அழகாக இருந்துது.. இன்னொரு காரணம் நாம் இருந்த பக்கம் சூரியன் மறையும் திசையாக அமைந்துவிட்டமையால்.. படம் துலக்கமாக எடுக்க சூரியனார் விடவில்லை கர்:)..
///அதுவும் அந்த மேக பொதிகளுக்கு நடுவே ஆகாய ஊர்தி அழகு..//
மிக்க நன்றி. இங்கு ஊர்தி என்றால் ஹெலிகொப்டர் ஆம்ம்ம்.. இது ஆகாய விமானம் என்றே சொல்லோணும்.
அனைத்துக்கும் மிக்க நன்றி அனு.
படங்கள் அழகு. குறிப்பாக சூரியன் மறையும் காட்சி.
ReplyDeleteஅழகை அழகென்று சொல்ல அவசியமில்லை. பார்த்தாலே தெரிந்து விடும். அழகு அழகு என்று சொல்லிப் புரிய வைக்க வேண்டுமென்றால்.....
ஊசிக்குறிப்பும் ஸூப்பர்.
வாங்கோ சகோ ஸ்ரீராம் வாங்கோ..
Delete//படங்கள் அழகு. குறிப்பாக சூரியன் மறையும் காட்சி.//
மியாவும் நன்றி.. நீங்க அடிக்கடி வானத்தையும் மேகத்தையும் படமெடுத்துப் போடுவதனால்தான் எனக்கும் இம்முறை இப்பூடி எடுத்துப் போடும் “எசப்பாட்டு”:)ஹா ஹா ஹா நினைவு வந்து எடுத்தேன்:).. இதுக்கு முன் பலதடவை பறந்திருக்கிறோம்.. அப்பப்ப அழகில் மயங்கி படமும் எடுத்ததுண்டு.. ஆனா இங்கின போட்டதா நினைவில்லை.. யாரும் ரசிப்பார்களோ தெரியாதே எனும் நினைவில் விட்டிருந்தேன்ன்.. ஆனா எங்கள் புளொக்கில்.. மேகப் படங்கள் பார்த்து நானே ரசிப்பதைப் பார்த்து.. இப்படங்களைப் போட்டேன்:)..
//அழகை அழகென்று சொல்ல அவசியமில்லை. பார்த்தாலே தெரிந்து விடும்.//
இது உண்மையேதான்... ஆனா இக்காலத்தில் நம்மளை நாமளே புகழ்ந்தால்தான் உண்டு:) மற்றவங்க வந்து புகழுவினம் என எதிர்பார்த்து ஏமாந்திடக்கூடாதெல்லோ நான்:).. ஹா ஹா ஹா.. ச்ச்ச்ச்சும்மா சொன்னேன்.. அழகானதைப் பார்த்தாலே மனம் சந்தோசமாகிவிடுதே...
அனைத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
எசப்பாட்டு, முருங்கிக்காய், தக்கினிக்கி...
Deleteமறக்காமல் அங்கங்கு அவற்றைத் தெளித்து விடுகிறீர்கள்! (புன்னகை)
//ஆனா எங்கள் புளொக்கில்.. மேகப் படங்கள் பார்த்து நானே ரசிப்பதைப் பார்த்து//
ஆஹா... நாங்கள் முன்னோடிகளாகி விட்டோம்! முன்னே ஒடிக்கொண்டெ இருக்கிறோம்!!!!!!
//மறக்காமல் அங்கங்கு அவற்றைத் தெளித்து விடுகிறீர்கள்! (புன்னகை)///
Deleteவிழுவதை எல்லாம் பொறுக்குவதுதானே என் வேலை:) ஹா ஹா ஹா.
///ஆஹா... நாங்கள் முன்னோடிகளாகி விட்டோம்! முன்னே ஒடிக்கொண்டெ இருக்கிறோம்!!!!!!///
அதனால்தான் இப்போ நான் “ஒரு இடத்தை” ப் பிடிக்க முயற்சிக்கிறேன்ன்ன்:).. அது என்ன என்பதை என் அடுத்த போஸ்ட்டில் பார்த்து நீங்க அப்பூடியே ஷொக்ட் ஆகிடுவீங்க:) ஹா ஹா ஹா பயந்திடாதீங்க:)..
வாங்க அதிரா!!! வாங்க!!! அத்தனைப் படங்களும் ரொம்ப அழகு!! அதுவும் ஃப்ளைட்டிலிருந்து எடுத்தப் படங்கள் அனைத்தும் செம! வர்ணணைகளும் அழகு
ReplyDeleteஸ்காட்லான்ட் அழகான பச்சைப் பசேல் நாடு! பல ஃபோட்டோஸ் பார்த்திருக்கோம்!! அழகு...கலகலப்பாய் உற்சாகமாய் வந்தாச்சு!!
அதிரா அந்த நியூயார்க் ஃபோட்டோவுல மதுரைத் தமிழன் எறும்புமாதிர்யாவது தெரியறாரானு பார்த்தேன்...ஹிஹிஹி..அங்கிட்டு வரை போயிட்டு பார்க்காமல்யே வந்துட்டீங்களே!! நாங்க மை வைச்சாச்சு!!
கீதா
வாங்கோ துளசி அண்ணன் கீதா வாங்கோ.. என் வீட்டிலயே வந்து என்னை வரவேற்பது மிக்க மகிழ்ச்சி..:).
Deleteஎறும்புக்குப் பதில் மேலேயே சொல்லியிருக்கிறேன்:)...
யேஸ் ஆறும்... மலையும் ... + அதிராவும்..இருக்குமிடங்கள் எப்பவும் அயகுதேன்ன்:).. ஹையோ ஒரு ஃபுளோல சொல்லிட்டேன்ன்.. படிச்சதும் கிழிச்சு காவிரி ல கரைச்சிடுங்கோ கீதா:)... ஹா ஹா ஹா மிக்க நன்றி அனைத்துக்கும்.
காலைலயே கமென்ட் போட்டேன், த ம போட்டேன். எங்க போச்சு? 6 வாரங்கள் கனடால இருந்தீங்களா? படங்கள் நல்லா வந்திருக்கு. ஃப்ளைட்ல சொல்றதை நீங்க ஃபாலோ பண்ணலைனு தெரியுது. கிளம்பறதுக்கு முன்னால, Please switch off all electronic itemsனு சொல்லுவாங்களே. அதுல மொபைலும் கேமராவும் உண்டே.
ReplyDeleteவாங்கோ நெல்லைத்தமிழன்... வாங்கோ..
Deleteநேற்று இக்கொமெண்ட் பார்த்ததும் கவனிச்சேன்ன் அப்படி எக்கொமெண்ட்ஸ் உம் இதுக்கு முன் வரவில்லையே...
// ஃப்ளைட்ல சொல்றதை நீங்க ஃபாலோ பண்ணலைனு தெரியுது.///
ஹா ஹா ஹா ”பிரபல பதிவர்களுக்கு”[இதை நான் சொல்லல்லே:) ஸ்ரீராம்தான் சொன்னார்] எக்செப்ஷன் உண்டு என ஃபைலட் எனவுண்ஸ் பண்ணினார்...தெரியுமோ.... நம்புங்கோ:)
ஹா ஹா ஹா மிக்க நன்றி நெல்லைத் தமிழன்..
//கிளம்பறதுக்கு முன்னால, Please switch off all electronic itemsனு சொல்லுவாங்களே. அதுல மொபைலும் கேமராவும் உண்டே.//
Deleteநல்லா கேளுங்க நெல்லைத்தமிழன் :)
நான் இல்லாத தைரியத்தில் பூனை ரொம்பதான் அட்டூழியம் :)
///நல்லா கேளுங்க நெல்லைத்தமிழன் :)
Deleteநான் இல்லாத தைரியத்தில் பூனை ரொம்பதான் அட்டூழியம் :)//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கூட்டுச் சேர்ந்திட்டாங்கையா... கூட்டுச் சேர்ந்திட்டாங்க:).. இனிமேல் நான் கொஞ்சம் ஜாக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்தையாத்தான் இருக்கோணும் ஜாமி:)..
படங்கள் அருமை!த ம 13
ReplyDeleteவாங்கோ புலவர் ஐயா வாங்கோ.. நான் எதிர்பார்கவில்லை.. எதிர்பாராமல் இன்ப அதிர்ச்சி.. கொடுத்து வோட்டும் போட்டமைக்கு மிக்க நன்றி.
Deleteநானும் முதலில் விமானத்தில் பறந்த போது ,ஏகப்பட்ட படங்கள் ,வீடியோ எடுத்தேன் ,தன்னடக்கம் காரணமா வெளியிடவில்லை :)
ReplyDeleteகில்லர்ஜி என்னைக் கோபித்துக் கொள்ளப் போகிறார் ,அவரிடம் இருந்த மகுடத்தை உங்க தலையில் வைத்துவிட்டேனே ,ஸ்வீட் 16 வாக்கால் :)
Delete///Bagawanjee KAMonday, August 28, 2017 1:52:00 pm
Deleteகில்லர்ஜி என்னைக் கோபித்துக் கொள்ளப் போகிறார் ,அவரிடம் இருந்த மகுடத்தை உங்க தலையில் வைத்துவிட்டேனே ,ஸ்வீட் 16 வாக்கால் :)//
ஆவ்வ்வ்வ்வ் கிடைச்சிடுச்சா.. கிடைச்சிடுச்சா நேக்கு மகுடம் கிடைச்சிடுச்சோ?:).. ஹையோ நான் இன்று இதை எதிர்பார்க்கவே இல்லை.. இப்போ பிளேனில இருந்தே குதிச்சிடுவேன் போல இருக்கே:)...
கில்லர்ஜி யை கீழே தள்ளிட்டு மகுடத்தைப் பறிச்சாச்சே:) இப்போ அவர் உகண்டா பிளேனில முன்னங்காலைத்தூக்கி வச்சிருப்பாரே:)
மகுடம் சூட்டிக்கொண்டமைக்கு வாழ்த்துகள்.
Deleteஉகாண்டாவிலிருந்து... கில்லர்ஜி
ஹா ஹா ஹா ஹையோ கில்லர்ஜி உகண்டா போயிட்டாரே....
Deleteபகவான் ஜீ பிளீஸ்ஸ்... உடனே உகண்டா போய், அவரின் மீசையில காலில.. ஹையோ அந்தர அவசரத்துக்கு என் டங்கு வேற ஸ்லிப் ஆகுதே:).. கையில கால்ல விழுந்தாவது கூட்டி வந்திடுங்கோ:) இல்லை எனில் நாளைக்கு உங்களுக்கு எனக்கு எல்லாம் ஒரு வோட்டுக் குறைஞ்சிடப்போகுதே:)
வாழ்த்துக்கள் அதிரா.
Delete//Bagawanjee KAMonday, August 28, 2017 9:53:00 am
Deleteநானும் முதலில் விமானத்தில் பறந்த போது ,ஏகப்பட்ட படங்கள் ,வீடியோ எடுத்தேன் ,தன்னடக்கம் காரணமா வெளியிடவில்லை :)//
வாங்கோ பகவான் ஜீ வாங்கோ.. நேற்று ஆர்வக்கோளாறில்.. மகுடத்துக்கு மட்டும் பதில் போட்டேன்ன்:)..
உங்கள் தன்னடக்கம் பற்றி எனக்கு எப்பவோ தெரியுமே:).. யூகே வந்து எயார்போர்ட்டால வீட்டுக்கு வாறதுக்கு.. பி எம் டபிள்யூ கார் அனுப்புறேன் எனச் சொன்னதுக்கு.. அதெல்லாம் வாணாம் நான் நடந்தே வாறேன் எனச் சொன்னீங்களே... ஹா ஹா ஹா அதனால நீங்க இப்படிப் படம் எடுத்தாலும் போடமாட்டீங்க மீ நம்பிட்டேன் என்பதை நீங்களும் நம்போணும் சொல்லிட்டேன்ன்ன்:).. ஹா ஹா ஹா அனைத்துக்கும் மிக்க நன்றி பகவான் ஜீ.
ஆஆஅவ்வ்வ்வ் மிக்க நன்றி அம்முலு...
Deleteநான் ஜப்பானுக்குப் போயிருந்தபோது விமானம் டேக் ஆஃப் செய்வதையும் லாண்ட் ஆவதையும் விமானத்தில் இருந்தே காண் முடிந்தது அது ஆயிற்று முப்பது வருடங்கள்
ReplyDeleteவாங்கோ ஜி எம் பி ஐயா வாங்கோ.. உங்கள் வருகை பார்த்து மகிழ்ச்சி.
Deleteஓ ஜப்பானில் எப்பவும் காலநிலை நன்றாகவே இருக்கும்தானே.. அப்போ இன்னும் அழகாக இடங்கள் தெரியும் .. 30 வருடங்களின் முன்பு எனும்போது.. இப்போதுபோல் படங்கள் எடுக்கும் வசதி எல்லாம் இருந்திருக்காது...
மிக்க நன்றி.
WELCOME BACK ATHIRA::
ReplyDeleteஆஹா..வந்துட்டாங்க. என்னது ட் ரம்ப் அங்கிளை சந்திச்சனீங்களோ. சொல்லவேயில்லை. .. அப்ப ஒபாமா அங்கிள் ஐ மறந்துட்டீங்களே.
படங்கள் எல்லாமே சூப்பர்.. பகல் நேரமெனில் சொல்லிவேலையில்லை. அவ்வளவு அழகு. எல்லா படங்களுமே அழகா இருக்கு அதிரா.
அடுத்த ஆள் எப்பவருவாங்களோஓஓ..... கெதியா வாங்கோ பிஷ்..
வாங்கோ அம்முலு வாங்கோ..
Deleteட்றம்ப் அங்கிளின் பேசனல் செக்கரட்டறி எல்லோ நான்.. அவர்தான் ரிக்கெட் போட்டுக் கூப்பிட்டார்ர்:) மறுக்க முடியேல்லை:).. இல்ல ஒபாமா அங்கிளை மறக்கவில்லை.. அவரோடும் மிசால் ஆன்ரியோடும் படமெடுத்தனான் எல்லோ ஹா ஹா ஹா முடிஞ்சால் அதனை இன்னொரு போஸ்ட்டில் வெளியிடுறேன்ன்:)..
நான் போட்ட அட்டகாசத்திலும்:) விட்ட ஸ்பெல்லிங்கு மிசுரேக்கிலும்.. பொறுக்க முடியாமல் ஃபிஸ்ஸு களமிங்கிட்டுதூஊஊஊஊஊஊ:)).. அதனால நான் இப்போ கட்டிலுக்குக் கீழ இருந்தே இதனை எழுதுகிறேன்ன்... ஹா ஹா ஹா மியாவும் நன்றி அம்முலு.. அனைத்துக்கும்.
படங்களும் அருமை. வர்ணனைகளும் அருமை
ReplyDeleteவாங்கோ வாங்கோ மிக்க நன்றி.
Deleteநீங்கதான் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட எழுதுவீங்கன்னு பார்த்தால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஊசி இணைப்பும் அப்படியே இருக்கே. யாருமே இதைப் பார்த்தமாதிரி தெரியலையே. (இழப்பதெல்லாம் நீ இன்னொருவருக்குத் தரும் வாய்ப்பு. ஆனால் நீங்கள் போட்டுள்ளதில் 'இன்னொருவக்குத்' 'ரு' மிஸ்ஸிங்)
ReplyDeleteடிரம்ப் அங்கிள் கோபிக்கும்போதே சொல்லிடவேண்டியதுதானே.. ஒரு கிழமை உங்களோடு இருந்தாலே 'தலை சுத்தும்' இதுல கூட ரெண்டு நாள் இருந்தா, ஊருக்குத் திரும்பிப் போய்ச் சேர்ந்த மாதிரிதான்னு.
'நாடு மட்டுமில்லை.. நாட்டிலிருக்கும் .......... :) அழகுதேன்:) " - நல்லவேளை, 'நாட்டிலிருக்கும் ஏர் ஹோஸ்டஸ்களும் :) அழகுதேன்:)'னு போட்டிருக்கீங்க. நான், என்னடா இந்த 'ஸ்காட்லந்துக்கு வந்த சோதனை', 'அதிரா' என்றா போட்டிருக்கிறார்கள் என்று பார்த்தேன். இல்லை 10 எழுத்துள்ள வார்த்தைக்குத்தான் இடம் விட்டிருக்கிறீர்கள்.
நெல்லைதமிழன் பதிவுல ஒரு மிஸ்டேக் இருந்தால் கண்டு பிடித்து சொல்லாம் ஆனால் பதிவில் ஒரு சில வார்த்தைகள் மட்டும் சரியாக இருக்கிறது அதனால் எப்படி சுட்டிக்காட்ட முடியும்...ஹும் எனக்கு எதுக்கு வம்பு அதிரா வந்து பூரிக்கட்டையை தூக்குவதற்கு முன் இந்த இடத்தை காலி பண்ணிடுறேன் நெல்லைதமிழன் நான் இங்க சொன்னதை அதிராவிடம் சொல்லிவிடாதீங்க இது நம்ம இரண்டு பேருக்குள்ள மட்டும் ரகசியமாக இருக்கட்டும்
Delete//நெல்லைத் தமிழன்Monday, August 28, 2017 1:31:00 pm
Deleteநீங்கதான் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட எழுதுவீங்கன்னு பார்த்தால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஊசி இணைப்பும் அப்படியே இருக்கே.//
ஹா ஹா ஹா நீங்க சொன்ன பின்பே நானும் கவனிச்சேன்:) எப்பவும் ஜாடிக்கு ஏத்த மூடிதானே பொருந்தும்:) அதுதான் போல எனக்கு வந்திருக்கு:).
//டிரம்ப் அங்கிள் கோபிக்கும்போதே சொல்லிடவேண்டியதுதானே.. ஒரு கிழமை உங்களோடு இருந்தாலே 'தலை சுத்தும்' இதுல கூட ரெண்டு நாள் இருந்தா, ஊருக்குத் திரும்பிப் போய்ச் சேர்ந்த மாதிரிதான்னு.///
ஹா ஹா ஹா அவர் தன் சொந்தக் காரில ஏத்தி நியூ யோர்க்கைச் சுத்திக் காட்டினார்:) அதனால குறை சொல்ல மனம் வரேல்லை:)..
/// நான், என்னடா இந்த 'ஸ்காட்லந்துக்கு வந்த சோதனை', 'அதிரா' என்றா போட்டிருக்கிறார்கள் என்று பார்த்தேன். இல்லை 10 எழுத்துள்ள வார்த்தைக்குத்தான் இடம் விட்டிருக்கிறீர்கள்.///
ஆவ்வ்வ்வ்வ்வ் அது அதிராவுக்காக விடவில்லை:) நான் அப்படி என்னையே நினைப்பேனோ?:) ஹா ஹா ஹா:)[நம்புங்கோ:)].. அது வரப்புயர போல அமையட்டும் எனப் போட்டேன்ன்ன்:).. அப்போதானே.. பாட்டின் முடிவில் அதிராவும் அழகுதேன் என வரும்:)..
ஹா ஹா ஹா மிக்க மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன்.
///Avargal UnmaigalMonday, August 28, 2017 2:08:00 pm
Deleteநெல்லைதமிழன் பதிவுல ஒரு மிஸ்டேக் இருந்தால் கண்டு பிடித்து சொல்லாம் ஆனால் பதிவில் ஒரு சில வார்த்தைகள் மட்டும் சரியாக இருக்கிறது அதனால் எப்படி சுட்டிக்காட்ட முடியும்...ஹும்///
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் ட்றம்ப் அங்கிளிடம் உங்கள் இந்த புரொஃபைல் படம் காட்டிச் சொல்லிட்டுத்தான் வந்தேன்ன்.. அங்கிள் உங்கள் மகள் பத்திரம் என:)).. எதுக்கும் நிங்க கொஞ்சக் காலம் வெள்ளை மாளிகைப் பக்கம் போயிடாதீங்க ட்றுத்:)...
திரும்ப திரும்ப வருகை தந்தமைக்கு மிக்க நன்றிகள்.
யுகே வரும்பொழுதெல்லாம் இதே சிக்கல் தான். தூங்குற நேரத்தில் விடியல். பைலட் ஸ்காட்லான்ட் காரரோ?
ReplyDeleteவாங்கோ சகோ அப்பாத்துரை வாங்கோ.. 2ம் தடவையாக வந்திருக்கிறீங்க மிக்க நன்றி..
Deleteஓம் கனடாவில் இருந்து வரும்போது.. அங்கு இரவாக இங்கு விடிந்திடும்..
///பைலட் ஸ்காட்லான்ட் காரரோ?/// இருக்காதென நினைக்கிறேன்ன் ஏனெனில் இது எயார்கனடா ஃபிளைட்... பிளேனால இறங்கி வரும்போது பைலட் எழும்பி வாசலில் நின்றார்.. தங்கியூ.. பாய் என்றேன்.... ஹாவ் எ நைஸ் டே என்றார்ர்.. சந்தோசமாக இருந்தது.. பார்க்க கனேடியன் லுக்தேன்:).. கோ பைலட் ஒரு லேடி.
மிக்க நன்றிகள்.
மதுரைதமிழன் மைண்ட் வாய்ஸ் : அதிரா அவங்க படத்தை மட்டும் போட்டு இருந்தால் இப்படிஎல்லோரும் படம் ரொம்ப அழகுன்னு தைரியாமாக சொல்லி இருப்பாங்களா????????
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஏதோ ஒரு முடிவோடதான் இம்முறை களமிறங்கியிருக்கிறீங்க:) ... அனைத்துக்கும் காரணம் அஞ்சு இங்கின இல்லாததுதான் என நினைக்கிறேன்ன்ன்.. அஞ்சூஊஊஊஊஊ கமோன்ன்ன்:) தனியே நிக்கப் பயம்ம்ம்மாக்கிடக்கூஊஊஊஊஊ:). ஹா ஹா ஹா நன்றி ட்றுத்.
Deleteபடங்கள் அழகு. Welcome back.
ReplyDeleteவாங்கோ வெங்கட்.. வாங்கோ.. மிக்க நன்றி.
Deleteungaloda holiday trip experience thodarnthu vaasikka aavaludan irukkiren akkaa.
ReplyDeletenanraaka aarampiththirukkurirkal. thodarungal:)
mudinthaal pathivil payana kurippukal pathivukku thodarpudaiyathu niraiya
eluthinal theriyaatha thakavalkalai therintha maathiriyum vaasikkumpothu svaarasyamaakavum irukkum akka.
வாங்கோ தம்பி மகேஷ் வாங்கோ.. சிங்கப்பூரைக் கலக்கிக் கொண்டிருப்பீங்கள் என நினைக்கிறேன்ன்.. சந்தோசமாக ஊற்சுற்றி.. மறக்காமல் முஸ்தபா முட்டை ரொட்டியும் வாங்கிச் சாப்பிட்டிட்டு வாங்கோ[நீங்க சைவம் இல்லைத்தானே?]..
Deleteபயணப் படங்கள் முந்தையதுகூட நிறைய இருக்குது மகேஷ்.. இப்படித்தான் ஆரம்பிப்பேன்.. பின்பு வேறு விஷயங்களில் மனம் வேறு போஸ்ட்டுக்கள் போடச் சொல்லும்.
இருப்பினும் போடுவேன்.
மிக்க நன்றி மகேஷ்.. பயண நடுவிலும் கொமெண்ட்டும் வோட்டும் போட்டமைக்கு.
ஹலோ மேடம் மியாவ் நான் வந்திட்டேன் :)
ReplyDeleteஆவ்வ்வ்வ்வ் வாங்கஞ்சு வாங்கோ... ஆஆஆஆஆஆஆஆஅங் அஞ்சு வந்திட்டா.. இனி ஆரும் என்னைத் தேம்ஸ்ல தள்ளிட முடியாது:)..
Delete"இனி ஆரும் என்னைத் தேம்ஸ்ல தள்ளிட முடியாது:).." - ஏன்னா அவங்களே (ஏஞ்சலின்) அதைச் செய்யணும்னு கன காலம் காத்திருக்காங்க. அதுனால அதன் பிரிவிலேஜை வேற யாருக்கும் விட்டுக்கொடுக்கமாட்டாங்க.
Deleteஹா ஹா ஹா நெல்லைத்தமிழன்.. பஞ்சு போன்ற ஒரு சுவீட் 16 இன் [[என்னைச் சொன்னேன்:) தெளிவாச் சொல்லிடோணும் இதை எல்லாம்]] பிஞ்சு மனத்திலே:))[ஸ்ஸ்ஸ்ஸ் பொறுமை பிளீஸ்ஸ்ச்:)].. இப்படி நஞ்சை விதைக்கலாமோ?:)..
Deleteஅஞ்சு நல்லவ.. வல்லவ.. அதிராமேலே முக்கால்வாசிக்கும் மேல:) உசிரையே வச்சிருக்கிறா.. அவ போய் என்னைத் தள்ளுவாவோ?:).. சே..சேஎ.. அஞ்சுவை அப்படி கனவில்கூட நினைக்க மாட்டேன் நான்:)..
நெல்லைத்தமிழன் காதைக் கொண்டு வாங்கோ:) ரகசியம் சொல்றேன்ன்ன்... பொதுவாவே புகழ்ச்சிக்கு மயங்குவோர் பெண்கள்:) அதிலயும் அஞ்சு கொஞ்சம் ஓவரா மயங்கிடுவா என்பதால.. இப்பூடியான வசனங்களை அப்பப்ப அள்ளித் தெளிச்சே:).. நான் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறேன் தெரியுமோ:).. ஹையோ இது நமக்குள் இருக்கட்டும்.. ஹா ஹா ஹா:).
ஸ்கொட்லாண்ட்டில் வந்து இறங்கிய போது “வெல்கம் ரூ பியூட்டிஃபுல் ஸ்கொட்லாண்ட்”//
ReplyDeleteஹையோ ஹையோ ..நாங்க ஹீத்ரூவில் இறங்கும்போது வெல்கம் டு மோஸ்ட் பியூட்டிபுல் யுனைடெட் கிங்டம்னு சொன்னாங்க :)
அது யுனைரெட் கிங்டொம் எனத்தானே சொன்னாங்கோ.. லண்டன் எனச் சொல்லல்ல பார்த்தீங்களோ.. பிக்கோஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யுனைரெட் கிங்டொம் லதானே ஸ்கொட்லாண்ட் இருக்குதூஊஊஊஊஊ.. எப்பூடி சூப்பர் மாட்டியா பிஸ்ஸூ:).. நான் சொன்னனே வர வர ஜூலி மாதிரியே பேசப் பழகிட்டீங்க:).. ஹா ஹா ஹா ஹையோ ஆண்டவா பீஸ்ஸ்ஸ்ஸ் சேஃப் மீஈஈஈஈ:)
Deleteஅதிரா படங்கள் உயரத்தில் இருந்து எடுத்திருக்கிங்க :) தைரியசாலி பூனை நான் எப்பவும் மிடில் ரோ கேட்டு அதில்தான் உக்காருவேன் அதனால் போட்டோ எடுக்க முடியாதே
ReplyDelete///அதிரா படங்கள் உயரத்தில் இருந்து எடுத்திருக்கிங்க :)//
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா அது பிளேனில இருந்து எடுத்திருக்கிறீங்க எனத்தான் வரோணுமாக்கும்:) ஹையோ ஹையோ:)... நான் எங்கு இருந்தாலும்.. தவண்டு.. படுத்தாவது எட்டி வெளில பார்ப்பேன்ன்:).. இப்படியான பயமெல்லாம் எனக்கு இல்லை அஞ்சு..
வரமாட்டேன் என அடம் புடிச்ச உங்களை கூட்டி வந்தாச்சு:) இனி களத்தில் குதிச்சால்ல் நீந்தத்தான் வேணும்...
மிக்க நன்றி அஞ்சு.. வோட் போட்ட ஜெஷிக்கும் டாங்ஸ் சொல்லிடுங்கோ:).
மிகவும் நல்ல படங்கள்.
ReplyDeleteவாங்கோ வாங்கோ முதன் முதலா வந்திருக்கிறீங்க நல்வரவு.. மிக்க மகிழ்ச்சி.. நன்றி.
Deleteப்ளேன் படங்களைப் பார்க்க ம.பொ.ர காலம் நினைவுக்கு வருது. :-)
ReplyDelete