Friday, 26 April 2013

அதிராவும்.. அண்டாட் ..டிக்காவும்:)

அதிரா அண்டாட்டிக்கா போட்டா என்பது மட்டும் தெரிஞ்சு எல்லோரும் நல்ல ஹப்பியா இருந்திருப்பீங்கள்:), ஆனா அவ சேஃப் ஆ திரும்பி வந்திட்டா என்பது தெரியாமல் இருப்பீங்களென நினைக்கிறன்:).. அது ஒரு பெரிய கதை பாருங்கோ:). இனி அதிராவின் தொல்லை ஆரம்பம்:)..பம்..பம்:).

நாங்கள் எல்லோரும் பெல்ட் எல்லாம் போட்டுக்கொண்டு பிளேனில ஏறி இருந்தம்:)... ஒரு மணித்தியாலத்தில பைலட் அங்கிள் எனவுன்ஸ் பண்ணினார், பிளேன் சில்லுக்கு காத்துப் போயிட்டுது:) அதனால அவசரமா ஃபிரான்ஸ்ல இறங்கோணும் என:).

அதுவும் நல்லதுதான் என எண்ணி பரிஷில இறங்கினம். இறங்கினதுதான் இறங்கினம்.. பிறகு சென் நதியையும், ஈபிள் டவரையும் பார்க்காமல் விடுவமோ?:)...

அதுக்கு முன்பு வாங்கோ லா ஷபேல் அம்மனைத் தரிசிக்கலாம்ம்... அங்கு உள்ளே போனதும் என் கண்ணில முதலில் தெரிந்தது இந்தக் குண்டுப் பூஸார்தான்:). இதில இருந்து நான் சொல்ல வரும் உண்மை என்னன்னா:) படத்தைப் பார்த்து உருவத்தைக் கணிச்சிடாதீங்க:) நேரில் பார்த்த பின்பே முடிவுக்கு வாங்க:) சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:).


படத்தில் உருவத்தின் அளவு தெரியவில்லை... ஆனா நேரில நல்ல குண்டர் இவர்:). கோயிலின் உள் புறத்தில என்னமோ தெரியவில்லை எல்லாம் படத்திலும் நாங்கள் நிற்கிறோம்:) அதனால இங்கு போட முடியாமல் போச்ச்ச்ச்:)..

இது ஈபிள் டவருக்கு போகும் பாதை ஸ்டேஷனிலிருந்து. அது என்னமோ தெரியவில்லை, ஸ்டேஷனால் இறங்கினால்.. உயரத்தில் நின்றோம்.. கீழே இறங்கிப் போய்த்தான் கிட்டக் கிட்டப் போனோம்.

இது ஈபிள் டவருக்கு முன்னால் இருக்கும் வெளியில், தண்ணியால் அலங்கரிச்சிருக்கினம். ரொக்கட் லோஞ்சர்போல வைத்து இடையிடை மேலெழும்பி பறக்கும் அளவுக்கு தண்ணி அடிக்கினம்.இங்கே தேம்ஸ் ஐப்போல, பரிஷில் “சென்நதி” ஓடுது. இங்கின ஒருவர்:) அடிக்கடி போட்டிபோட்டுச் சொல்வாரெல்லோ சென்நதியில் குதிக்கிறேன் என:) அதையும் பார்த்திட்டேன்:), ஐ மீன் அந்த நதியை எனச் சொன்னேனாக்கும்:).

இதுதான் ரிக்கெட்.. இதுக்கு ஒருமணித்தியாலம் குளிரில நடுங்கி நடுங்கி கியூவில நின்றுதான் எடுத்தோம்... ஸ்ஸ்ஸ் ரிக்கெட்டைப் பார்க்கச் சொன்னேனாக்கும்:).. 


இது ஈபிள் டவரின் நடுப்பகுதியில் இருந்து எடுத்ததென நினைக்கிறேன். மேல் உச்சி மாடியில் சுற்றிவர கண்ணாடிகள் போட்டு அறுக்கை செய்யப்பட்டிருக்கு... அங்கிருந்தபோது மழையும் குளிருமாக இருந்தது.

இது பரிஷில் இருக்கும் ஒரு மிக உயர்ந்த கட்டிடம், “மொம்பர்நாத் பில்டிங்”... இதுக்கும் ரிக்கெட் எடுத்தால் உச்சியி்ல் ஏறிப் பார்க்கலாம்.. விடமாட்டமில்ல, மட்டின் ரோல்ஸ் உம் வாங்கிச் சாப்பிட்டபடி ஏறிட்டோம்ம்... அங்கிருந்து பார்க்க சூப்பராக இருந்துது சிற்றி. ஈபிள் டவரும் தூரத்தில தெரிஞ்சுது.


அந்த பில்டிங் அமைந்திருக்கும் சுற்றாடல்..


இது மொம்பர்நாத் பில்டிங்கின் உச்சியில் இருந்தபோது எடுத்த காட்சி...

இதுவும் பரிஷின் ஒரு பகுதிதான்.. இடம் சரியாகச் சொல்ல முடியவில்லை...


பின் இணைப்பு:
நல்ல அழகான இடமாக இருக்கு ஃபிரான்ஸ், சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் இருக்கு.. இது ஆரம்பம்தானே:).. இன்னும் நிறைய இடங்கள் என்னோடு சுத்தப் போறீங்க எல்லோரும்:).. தெம்பா இருங்கோ:).

===============================================
 “ ‘முடியாது’ என்று நீங்கள் சொல்வதை எல்லாம், 
யாரோ ஒருவர் எங்கோ செய்து கொண்டிருக்கிறார்” 
இதைச் சொன்னவர்  டாக்டர் அப்துல் கலாம் அல்ல:)) 
மேன்மைதங்கிய புலாலியூர் பூஸானந்தா அவர்கள்:)..
===============================================