நல்வரவு_()_


Showing posts with label Our Swan Family:). Show all posts
Showing posts with label Our Swan Family:). Show all posts

Monday, 19 August 2013

”கண்டு” புடிச்சிட்டேஏஏஏஏன்ன்ன்ன்:)!!

ஆவ்வ்வ்வ்.. வாங்கோ வாங்கோ.. காதைக் கொண்டு வாங்கோ.. அட..சே..சே.. நான் என்ன கதைக்கிறேன் என எனக்கே புரியுதில்லை.. ஓடிவாங்கோ!!! உங்கட உங்கட மூக்குக் கண்ணாடிகளைப் போட்டுக் கொண்டு... பூஸோ கொக்கோ.. லேட்டானாலும் லேட்டஸ்ட்டா... கண்டு பிடிச்சிட்டேன்ன்ன்ன்:))..

இதைப் பார்க்க முன்பு இங்கின  ( http://gokisha.blogspot.co.uk/2013/06/blog-post_12.html ) போய் வாங்கோ பிளீஸ்ஸ்ஸ்..

 நீண்ட விடுமுறைக்குப் பின்பு, இன்றுதான் வோக் போக ஆரம்பித்தேன், அப்போ மனதில எண்ணினேன்ன்.. அந்த சுவான் தம்பதிகள், குழந்தைகளோடு இருப்பார்களா.. சே..சே.. குழந்தை கிடைத்து, தொட்டிலில் போடும் வைபவம் பெயர் வைப்பு:) எல்லாம் முடிஞ்சு காணாமல் போயிருப்பினம், என எண்ணிக்கொண்டே.. அப்பக்கம் போனனா... அவர்கள் இருந்த அந்த அழகிய மெத்தை இப்படி வெறிச்சோடிக் கிடந்தது... அதைப் பார்க்க எனக்கும் சோகமாக இருந்துது...:(

நான் எதிர்பார்த்து மனக்கோட்டை எல்லாம் கட்டிப் போனால், அது ஏடாகூடமாய்த்தான் நடக்கும்:)).. ஆனா எதிர்பாராமல்... போனால் தலைகால் புரியாத, புதுப்புது நிகழ்வெல்லாம் நடக்கும்:))... இது எதிர்பார்த்ததே நடந்துபோச்ச்... அவர்கள் போயே விட்டினம் என எண்ணினேன்ன்...

“எதிர்பார்ப்பு இருந்தால்தானே ஏமாற்றம் இருக்கும்” எனும் அரிய தத்துவம் நன்கு தெரிந்தாலும், பாழாப்போன மனது பலதடவைகளில் எதிர்பார்த்து விடுகிறது... :)) இப்போ இதுவா முக்கியம்:)... ஹையோ பொயிண்ட்டுக்கு வாங்கோ எல்லாரும், கொஞ்சம் இங்கின திரும்புங்கோ..

நானும் திரும்பி மறுபக்கம் பார்த்தனா...
செந்ந்ந்ந்ந்ந்ந்ந்....தேனில் கலந்து....
பொன்வானில் மிதந்தூஊஊஊஊஊஊ...

ஹையோ கண்ட நிண்ட பாட்டெல்லாம் வாயில வருதே.. நேக்கு சந்தோஷத்தில தலையும் தெரியல்ல.. லெக்கும் ஆடல்ல... ஹார்ட் அட்டாக் வந்திடும்போல இருந்துது... அந்த “அஞ்சு” பேர் கொண்ட குடும்பத்தை, பார்த்ததும், கடவுள் சத்தியமா என் மனதில் எழுந்த நினைப்பு... “ஆண்டவா இக் குடும்பம் கண்பட்டுவிடக்கூடாது”.. என்பதாகும்.

அனைவரும் நல்ல உறக்கத்திலிருந்தினம் அப்போ..


நான் அருகே போனதும், இரு குழந்தைகள் முழித்து கீச்ச்ச்ச்...கீச்ச்ச்ச்.. என குரலெழுப்பிச்சினம்,  “ஆரோ வந்திருக்கினம் அப்பா அம்மா எழும்புங்கோ”.. என்பதுபோலவோ.. அல்லது  “ஆரோ உணவு கொண்டு வந்திருக்கினம்” எனச் சொல்வது போலவோ இருந்துது அது...


அவர்களின் குரல் கேட்டு, தாயாக இருக்கலாம், விழித்துக் கொண்டா. தந்தை.. கண்களைத் திறந்து பார்த்து விட்டு.. “அட இது அதிரா:) அவ ஒண்ணும் பண்ணமாட்டா.. பயப்பூடாதீங்கோ”:) என்பதுபோல சொல்லிவிட்டு மீண்டும் உறங்கிட்டார்ர்:)).[கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஏன் முறைக்கிறீங்க:))]



எனக்கு அவர்களைப் பார்த்ததும் உச்சியிருந்து உள்ளங்கால் வரை இனம் புரியாத மகிழ்ச்சி.. கிடைக்காது என நினைத்திருந்தது, இப்படி ஒரு அழகிய குடும்பமாகத் தென்பட்டதும்.. என் நடையின் ஸ்பீட்டும், ஸ்டைலும்:)) கூட மாறி விட்டதெனில் பாருங்கோவன்:)).. கடகடவென ஒரு ரவுண்ட் நடந்து விட்டு, திரும்பி வந்தேன்ன்..

இப்படி சன்பார்த் எடுக்கினம்ம்..

கண்படாமல் வாழ்க இந்த அழகிய சுவான் குடும்பம்... எனக்கு இவையை பார்க்கும்போது.. பறவை இனமாகத் தெரியவில்லை.. மனிதக் குடும்பமாகவே தெரிகினம்... உணவேதும் எடுத்துப் போகவில்லையே எனக் கவலையாக இருந்துது... நாளை போகும்போது பார்க்கலாம்ம்..

ஊசி இணைப்பு:
வை அங்கிருந்து பொறுக்கி வந்து கழுவி விட்டிருக்கிறேன்ன்.. ஏன் எதுக்கு என உங்களுக்கு ஏதும் புரியுதோ? இல்லல்ல? நேக்கும்தான்:)).. ஆனா குப்புறக் கிடந்து, கிட்னியை ஊஸ் பண்ணிக் கண்டுபிடிச்சு:).. எதாவது செய்திட்டு விரைவில் வருகிறேன்ன்ன்:)).
=============================================================

==============================================================

Wednesday, 12 June 2013

குடும்பம் ஒரு கதம்பம்.. பல வண்ணம்:)

பல எண்ணம்:)...

என்ன இது தலைப்பில் என்னவோ சொல்றா, ஆனா படத்தில என்னவோ தெரியுதே எண்டுதானே குழம்புறீங்க?:) அதுதான் இல்ல:))... ஒரு அழகிய கதை:)) காதல் கதை:).. குடும்பக் கதை:)) சொல்லப்போறேன்ன் வாங்கோ... என்னோடு சேர்ந்து நடவுங்கோ.. கூட்டிப்போறேன்ன்ன்:))... பயப்பூடாதீங்க.. ஒண்ணும் பண்ணமாட்டேன்ன்....தெகிரியமா வாங்கோ என் பின்னே:)..


இது என்ன தெரியுமோ?:) இது தான் பச்சை.. பச்சை.. ஹையோ இல்ல.. ப எண்டாலே வார்த்தை எல்லாம் தடுமாறுதே சாமீஈஈஈஈ:))).. பச்சைப் பசேலென வளர்ந்திருக்கும் மரங்கள் இதனூடேதான், அதிராவின் நடைப்பயிற்சி ஆரம்பமாகும்... இப்பூடியே நடந்து போனால்ல்ல்:))

இப்பூடி ஆத்தங்கரையூடாக போகும் அப்பாதை


போய் ஆத்தங்கரையோடு இருக்கும் அழகிய பென்னாம்பெரிய புல் வெளியில் கொண்டுபோய் விடும். இதில் பாருங்கள்.. அந்த ரோசாப்பழம் அழகாக இங்கும் பூத்திருக்கிறா. அவவைப் பார்க்க ஆசையிருப்பின் இங்கே வாங்கோ...



அப்பூடியே நடந்து வந்தால் இங்கு எண்டர் ஆவோம். இது ஆத்தங்கரையோரமாக இருக்கும் புல்வெளி. குட்டிக் குட்டி குழந்தைகள் பார்க்கும் அங்காங்கு இருக்கு. இது நடை பாதையும் சைக்கிளும் ஓட முடியும். நடப்பதற்கென்றே இப்படி புல் தரையைச் சுற்றிச் சுற்றிக் கட்டியிருக்கினம்.


நடக்கும் இடங்களில் இப்படி அங்காங்கு பூ மரங்களும், இருப்பதற்கு பெஞ்சுகளும் உண்டு.

இதுதான் அந்த ஆறு, பெயர்தான் ஆறு ஆனா சமுத்திரம்போலவேதான் இருக்கும். இது அக்காலத்து பாலம்போலும், இப்போ உடைந்திருக்கு.

இந்த பாதை வழியேதான் நான் நடப்பேன். அப்போது ஒரு சுவான் தம்பதியினர்.. கரையிலும், ஆறிலுமாக உலா வருவதையும், அங்கு நடப்போர் அவற்றுக்கு பிரெட், பிஸ்கெட் என கொண்டு வந்து கொடுப்பதையும் பல தடவை பார்ஹ்திருக்கிறேன், படமும் எடுத்திருந்தேன், ஆபத்துக்கு தேடினால் கிடைக்குதில்லை இப்போ:)) கர்ர்ர்ர்ர்:))..

வாரம் 4நாட்களாவது  பெரும்பாலும் இதனூடு நடப்பதுண்டு.. சமீபமாக ஒரு வாரத்துக்கு கிட்ட, முதலில் மழை, பின்பு கடும் வெயில் காரணமாக நடக்கவில்லை நான்.  நேற்று போனேன், இப்படி ஒரு போர்ட் போடப்பட்டிருந்தது அங்கு, கிட்டப் போய்ப் பார்த்தால்ல்ல்...

.

இங்கே பாருங்கள், ஆற்றில் கிடைக்கும் பாசி, அங்கிங்கு கிடக்கும் தும்பு, பேப்பர், சேலைத்துணி.. இப்படி எல்லாம் பொறுக்கி ஒரு பெரிய வட்ட மெத்தையாக கட்டி, அதிலே இவர் பேசாமல் படுத்திருக்கிறார். மக்கள் அருகிலே தண்ணியும், உணவும், இலைகளும் பிடுங்கி மெத்தையாக்கி அழகாக்கி விட்டிருக்கினம்.  அருகில் போனேன்ன்.. காலை மெதுவாக தூக்கி முதுகு சொறிந்தார், கீழே பார்த்தால் பெரிய ஒரு வெள்ளை முட்டை தெரிந்தது. படம் எடுத்தேன் அது அகப்படவில்லை.



இது ஆற்றில் படகில்/தோணியில் இறங்குவோரின் பாதை. தண்டவாளம்போல இருக்கும். இதில் காரிலே BOAT ஐக் கொண்டுவந்து இங்கு இறக்கி, தோணியைத் தள்ளிக்கொண்டு போய் ஆற்றில் இறக்கி, வெயில் காலத்தில் பொழுது போக்கும் இடம். அதில் வந்து இவர் மேடை போட்டு முட்டை இட்டிருக்கிறார். இதில் கண்கொள்ளாக் காட்சி என்னவெனில்...



....அவரின் பார்ட்னர்தான்:). மனைவிக்கு அருகாமையிலேயே, தான் நடந்து நடந்து தும்புகள் சேகரித்தார். அவவுக்கு மெத்தையை இன்னும் சொஃப்ட்டாக்க:). இந்த அழகிய காட்சியைப் பார்த்ததும் எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது... மனிதர்களை விட, மேலே போய்விட்டதோ இந்தத் தம்பதிகள் என...

 இன்று போனேன்ன்... இதோ பாருங்கள் அடுத்த கண்கொள்ளாக் காட்சியை. மனைவிக்கு அருகாமையில், தான் படுத்திருந்து கொண்டு பாதுகாக்கிறார். என்ன சொல்ல இதை???.

 படத்தில் பார்க்க தெரியவில்லை. அவ இருக்கும் மெத்தை கிட்டத்தட்ட அரை அடி உயரமானது. அவருக்கு மெத்தை இல்லை, சும்மா வெறும் தரையில் படுத்திருக்கிறார்.  அவ, அந்த முட்டையை விட்டு எழுந்திருக்கவே இல்லை. பொதுமக்கள்தான் உணவு கொடுக்கின்றனர் போலும்.  எப்போ குஞ்சு வருமோ தெரியாது. வந்ததும் என் கண்ணில் பட்டால் உடனே படம் எடுத்து வருகிறேன். சிலநேரம் குஞ்சு வந்தவுடன், ஆட்கள் எடுத்துப் போய் வளர்க்கும் இடமிருக்கு, அங்கு கொடுத்திடுவினமே தெரியாது பாதுகாப்புக்காக. எதுக்கும் பொறுத்திருப்போம்.

இதேபோல இன்னொரு சோடியின் (சோகக் கதைதான்) கதை படிக்க இங்கே வாங்கோ...

==============================================================
இது 2 நாட்களுக்கு முன்பு எங்கள் வீட்டடியால் போன உல்லாச கப்பல்.


நீங்க நம்ப மாட்டீங்க என:) எங்கட முற்றத்து ராணியையும்:)) சேர்த்துப் படமெடுத்தேன்:)) இப்போ நம்புவீங்களெல்லோ?:) இது அதிராவின் ஆறு:)தான் என:)).
ஊசி இணைப்பு:
முடிவு எண்ணண்ணா:)).. இயற்கையிலேயே அதிரா அழகுதான்:)) ஹையோ டங்கு ஸ்லிப்பாச்சே..:)) ஐ மீன் அதிரா இருக்குமிடம் அழகு என்றேன்ன்ன்:))).. அதாரது முறைக்கிறதூஊஊஊஊஊஊஊ:)). நம்மள நாமளே புகழ்ந்தால் தான் உண்டு ஆக்கும்..க்கும்..க்கும்..:).


=======================================================
”என்னதான் மாபெரும் போர் வரப்போவதை எதிர்வு கூறினாலும், இரு தரப்பும் அமைதியாக இருப்பின் அது பொய்த்து விடும்”

இங்கனம்: ”புலாலியூர்ப் பூஸானந்தா”
=======================================================