நல்வரவு_()_


Thursday 22 June 2023

எங்கட படுகையும் திரிவேணி அதிராவும்:)

 ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யோகாச் செய்யும்போது ஆரும் டிசுரேப்பு பண்ணக்குடா:))

நான் எவ்ளோ கவனமாக "க்" கன்னா வந்திடாமல் எழுதினேன் தெரியுமோ?.. ஏனெண்டால் "படுக்கை" எனப் போட்டிட்டால் அர்த்தமே மாறிடுமே கர்ர்ர்:). எங்கள் வழக்கப்படி படுக்கை எனில் ரெண்டு அர்த்தம் இருக்குது.

ஒன்று, நித்திரைக்காக பாய் விரித்து பெட்சீட் விரித்து போடுவதற்குப் பெயர் படுக்கை விரிப்பு என்போம். இப்போ குழந்தையை தோழில் தூக்கி நித்திரை எனில், ஒருக்கால் படுக்கையை விரிச்சு விடுறீங்களோ கிடத்தப் போகிறேன் என்போம்.

அடுத்த படுக்கை என்பது,
1. அவர் இப்போ ஒரு மாதமாகப் படுக்கையாகிட்டாராமே..
2. கவனமாக நடந்துவா வழுக்குது, விழுந்தால் படுக்கையில் போட்டிடும்
3. இந்தமுறை எனக்கு காச்சல் வந்து படுக்கையில எல்லோ இருந்தனான்..

இப்போ புரியுதோ, உடம்பு முடியாமல் எழும்ப முடியாமல் இருப்போரையும், வாதம், முறிவு வந்து படுத்திருப்போரையும்.. படுக்கையில் இருக்கினம் என்போம்.
                 அதனால அதிரா "க்" போட்டிட்டால், எனக்கும் கெட் வெல் சூன் அதிரா எனக் கார்ட் அனுப்பிப்போடுவினமாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

சரி சரி இப்போ மற்றருக்கு வாறேன்:)... இந்த "படுகை" என்பது, கீதாவின் போஸ்ட் மூலம்தான் அறிஞ்சேன், புதுச்சொல் இது எனக்கு. அதன் பின்னர்தான் தெரியும் எங்கள் வீட்டுக்கு அருகிலும் அழகான படுகை இருக்கே, அப்போ படமெடுத்துப் போடலாமே என.. இனிப் படங்கள் பார்க்க முன்...

==================::::::::::ஒரு குட்டி இடைவேளை:)::::::::===============
இது அஞ்சு..., அஞ்சு மாசக் கொயந்தையாக இருந்தபோது எடுத்தது... பாருங்கோ அஞ்சு அப்பவே இப்படி:).. அதிரா அப்போ பயத்தங்காய் போல இருப்பேனாக்கும்[இப்பவும்தேன்:)] ஹா ஹா ஹா..

=====================================================
இனிப் படுகைப் படங்கள் பார்ப்போமா... இஞ்ச பாருங்கோ எங்கடவீட்டு ஏரியா முழுவதும், நடக்க சைக்கிள் ஓட என ரோட்டோரமெல்லாம் அழகாக ரோட் போட்டிருக்கும், இதிலதான் அதிரா சைக்கிள் ஓடுறனான்...:).. இது மெயின் ரோட்...

இப்படியே சுற்றிச் சுற்றி பார்க்போல இருக்குது

இங்கு மக்கள்ஸ் பலரும் சாப்பாடு கொண்டுவந்து பறவைகளுக்குக் குடுப்பினம்.. நானும்தேன்.. வாத்து, புறாக்கள் இருப்பார்கள்..

இதில் ஒரு பெரீஈஈய பொண்ட் இருக்கு, இங்கு கூஸ்கள் நிறைய இருப்பினம், இன்று படமெடுத்தபோது காணவில்லை அதிகம், மரங்களுக்குள் இருந்து, ஆட்களைக் கண்டதும் பறந்து வருவினம் உணவுக்காக...

அந்த பொண்ட்டை அப்படியே பெரிய நீரோடையாக்கி விட்டிருக்கினம் சுற்றிக் கொண்டு வரும்...

அப்படியே இந்தப் படுகைக்கு வரும், இதிலும் ஒரு பொண்ட் இருக்குது, 

இவை நாணல்கள்தானே???

இங்கு காடைகள் இருக்கினம், கோமதி அக்காவின் போஸ்ட் மூலம் தான் கண்டுபிடிச்சேன் இவை ஸ்கொட்லாந்துக் காடைகள் என:))


அப்படியே தொடர்ந்து நடந்தால்....

இஞ்ச பாருங்கோ.. அதிரா 6 ஐ விட்டாலும்:), 6 அதிராவை விடாதாக்கும்... ஆறு ஓடுகிறது இங்கும்..


இதைப் பாருங்கோ, ஒருவித அடுக்குமல்லிகை போல இருக்கு, கடையில் வாங்குவதெனில் அதிக விலை, நடக்கும் இடத்தில் ரோட்டோரத்தில் அடர்த்தியாக இருந்தது, கொப்பு எடுத்துவந்து நட்டேன், வந்தால் சுவாமிக்குப் பூ:), இல்லை எனில் பூமிக்கு உரம்:)

இந்தப் புதினத்தைப் பாருங்கோ:), 4,5 வருடங்களுக்கு முன், கிரிஸ்மஸ் கிவ்ட்டாக இந்த குட்டி ஹவுஸ், டெய்சிக்கு குடுத்தோம், ஒருநாள் கூட அதில் இருந்ததில்லை, பழுதாகிடாமல் கராச்சில் பத்திரமாக இருந்தது. இப்போ எடுத்து இந்த டெக்கில் வச்சால், ஓடிப்போய் ஏறி இருந்து, வெளியே பார்க்காமல், உள்ளே மம்மி என்ன பண்ணுறா எனப் புதினம் பார்க்கிறா கர்ர்ர்ர்ர்ர்:))


இஞ்ச பாருங்கோ அதிசயம் ஆனால் உண்மை, 2 வருடமாகும் என்றார்கள் ஆனா வச்ச உடனேயே குருத்து வந்து பூவும் வந்திருக்குதே...பிளம் ட்றீ..

இது என் கார்டின் வீடியோவில் காட்டினேனே, பேப்பிள் பீன்ஸ் என, இஞ்ச பாருங்கோ அதன் அழகை, பூத்துப் பிஞ்சும் எவ்ளோ அழகா வந்திருக்குது...

இதுதான் நாங்கள் எடுத்துவந்த கங்கை தீர்த்தம், அடியில் பாருங்கோ மண் படிஞ்சிருக்குது...



இதைப் பாருங்கோ இப்போ சுடச்சுட எடுத்தேன், இரவு 10.40 மணி நேரம், எவ்ளோ வெளிச்சமாக இருக்கு. சூரியன் மறைவது 11 மணிக்குத்தான், பின் வீட்டுக்காரர் வெளி லைட்ஸ் எல்லாம் போட்டுவிட்டுப் படுத்து விட்டனர். யூன் யூலை மாதம் எல்லாம் இப்படித்தான் இங்கிருக்கும்.

இம்முறை படங்களாலேயே போஸ்ட் நிரம்பிவிட்டது.. இத்துடன் நிறைவு செய்கிறேன்...

ஊசிக்குறிப்பு:



ஊசி இணைப்பு: ஹா ஹா ஹா:)
==================_()__()__()_===============

108 comments :

  1. படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது அதிரா.

    விவரணங்கள் நன்று இடங்கள் தேவகோட்டை தேனம்மை ஊரணியை நினைவூட்டியது.

    உங்கள் அங்கிள் கவிஞர் கண்ணதாசன் தத்துவம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ... முதலாவதாக வந்திருக்கும் உங்கலுக்கு காசிக்குப்போக, அந்த எக்ஸ்பிரெஸ் ரெயினில ரைவருக்குப் பக்கத்து சீட்டுக்கான ரிக்கெட் இலவசமாக வழங்கப்படுகிறது.. போகும் வழியில் இலவச சாய் ரீயும் பிரெட் பக்கோடாவும் உண்டு:)...

      அதென்ன புதுசா தேனம்மையைச் சேர்த்திட்டீங்கள்:).. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது கண்ணகி அம்மன் ஊரணியாக்கும்...

      ஹா ஹா ஹா மிக்க நன்றி கில்லர்ஜி.

      Delete
  2. படுக்கை என்றால் பேயை விழித்து படுக்கிறது என்று நினைத்து கொண்டு இருந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. என்னாது பேயை விழித்துப் படுப்பதோ கர்ர்ர்:)).. விழித்துப் பார்ப்பது எனில் பொருந்தலாம் இதென்ன படுப்பது.. மீ கொயம்பிட்டேனே:)))

      Delete
    2. Sorry பாயை விரித்து

      Delete
    3. ஹா ஹா ஹா கர்ர் கில்லர்ஜி... எழுத்துப்பிழையால நான் மிரண்டு போயிருந்தேன் இப்படி ஒரு அர்த்தமோ என...:)

      Delete
  3. குழந்தையை தோழில், மற்றருக்கு, பொண்ட்டு..... தாங்கமுடியலைடா சாமீ

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ... ஹா ஹா ஹா பின்ன நீங்க மட்டும் துலா மாதம் எனச் சொல்லி ஒரு கொயந்தையை[என்னைச் சொன்னேன்:)] அலற விட்டீங்களே:).. இப்பூடி இன்னும் வருமாக்கும்:) ஆனா இனி அடுத்த போஸ்ட் சமர்[இது வேற சமர்] முடிஞ்சபின்புதான் போடலாம் என நினைக்கிறேன்... இந்த நேரத்தில தானே வெளியே சுற்றி, நடப்பது ஓடுவது மற்றும் கார்டின் வேர்க் என ஓவராக இருக்குது, அதனால முடியும்போது வருவேன்.

      Delete
  4. நீதியைப் பணம் முடிவு செய்கிறது.... உண்மைதான். பணத்தைக் கொடுத்து நீதி வாங்கறதுன்னும் வச்சுக்கலாம். பணத்தை வைத்து நல்ல வக்கீலைப் பிடித்து, மேல் கோர்ட், வாய்தா, உச்ச நீதி மன்றம்னு நாட்களைக் கடத்தி நீதியை (?) வாங்கிடறாங்க.

    ReplyDelete
    Replies
    1. அதேதான், தெரியாமல் தவறுதலாக நடப்பது வேறு, இது வேணுமெண்டே அநியாயக் கொலை நடக்குது, ஆனா 1,2 வருடத்தில் ஜாமீனில் வெளியே வந்து ஹாயாக சுற்றுகின்றனராம்...பணம்தானே காரணம். இதனாலதான் சமீபத்தில் ஒன்று பார்த்தேன்..

      திருமணமான ஒரு பெண்ணோடு ஒருவருக்குத் தொடர்பேற் பட்டுவிட்டதாம் [சந்தர்ப்பம் சூழ்நிலையால அப்படி ஆகிவிட்டது, இதில் லவ் ஒன்றுமில்லை‍அப்படித்தான் தெரிகிறது], ஆனா பின்பு அப்பெண்ணை தொடர்ந்து மிரட்டி, தன்னோடு வந்து வாழ வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார் ..பெண்ணிற்கு 10 வயசில ஒரு மகனாம்.

      அதனால அப்பெண் சொல்லியிருக்கிறா, ஏதோ தவறு நடந்துவிட்டது, இனி நீயும் உன் வேலையைப் பார் நானும் குடும்பத்துடன் இருக்கிறேன் எனக்கு என் மகன் தான் முக்கியம் என. அதற்கு, அவர் என்ன பண்ணினார் எனில், மகன் இல்லை எனில் என்னோடு வருவாய்தானே எனச் சொல்லி, ஸ்கூலில் போய் மகனைக் கடத்திச் சென்று, கண்டபடி வெட்டி எரித்திருக்கிறார்.
      பொலீசில் பிடிபட்டு, ஒரு வருடத்தில் ஜாமீனில் வெளிவந்திட்டாராம், ஆனால் அப்பெண் கொலை வெறியில் இருந்தாவாம், அதை அறிஞ்சு, வேறு மானிலத்துக்கு போய், வேறு பெயரில் ஒளிச்சிருந்து வேலை பார்த்தாராம் கடை ஒன்றில்.
      இப்பெண், ஆட்களை வைத்து, தேடோ தேடெனத் தேடிக் கண்டுபிடித்து, ஆட்களை வைத்து அவரைக் கொலை பண்ணிட்டாவாம்... சட்டம் ஒழுங்காக இருந்தால் இப்படி, மனிதர்களே கொலையாளியாக மாற வேண்டி வராதெல்லோ. இது அங்கு இந்தியாச் சம்பவம்தான்.

      Delete
  5. அட... உங்க வீட்டு கார்டனிலும் பெஞ்சு இருக்குது. நல்ல வேளை பூங்கொத்துக்குப் பதிலா ஜூஸ் பாட்டில் இருக்கு.

    யூஸ், கார்டின், போத்தல்னு எழுதணுமோ?

    ReplyDelete
    Replies
    1. //அட... உங்க வீட்டு கார்டனிலும் பெஞ்சு இருக்குது. நல்ல வேளை பூங்கொத்துக்குப் பதிலா ஜூஸ் பாட்டில் இருக்கு....////

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      பாட்டில் என்பது ஆங்கிலம்:) போத்தல் என்பதுதானே தமிழ்???.. அது கண்ணாடியில் செய்யப்பட்டிருந்தால் மட்டும்.

      என் தமிழ் பொன்ட்[ஹையோ இது வேற பொன்ட்] ஏதோ குழப்பம் காட்டுது, இங்கு நேரடியாக ரைப் பண்ண முடியவில்லை, கூகிளில் இருந்துதான் கொப்பி பேஸ்ட் பண்ணிக்கொண்டிருக்கிறேன், இப்படிச் செய்வது எனக்குப் பிடிக்கவே பிடிக்காது, அதனால பின்பு வாறேன், சட்டவுன் பண்ணி ஏதும் செய்து பார்க்கிறேன், விடிஞ்சதிலிருந்து ஏதோ குழப்பம் காட்டுது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
  6. நானும் கங்கை நீர், திரிவேணி நார் பாட்டில்களின் படங்கள் பகிர்கிறேன். மிகச் சுத்தமாக இருக்கும்.

    வெள்ளத்தின்னோது நீங்கள் தண்ணீர் சேகரித்ததால், மணல் கலந்து வந்திருக்கு.

    ReplyDelete
    Replies
    1. போடுங்கோ பார்க்கிறேன், உண்மைதான் மழைக்காலம் அப்போ தண்ணி அணைபுரண்டு வேகமாக ஓடியது. உடுப்பெல்லாம் ஒரே மண்ணாக இருந்தது.

      Delete
  7. ஆறு அதிராவை விடாது என்பது உண்மைதான். பதினாறு (ஏய் மனசாட்சி இல்லாமல் எழுதாதே... ஐம்பத்தாறுன்னு எழுது.... என் மனசு சொல்லுது) வயது அதிராவை ஆயிரம் ஆண்டு ஆறு விரும்புவது இயற்கைதான்.

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உங்களுக்கே பொறுக்க முடியவில்லையே நெ தமிழன்:) ஹா ஹா ஹா...உங்கட வயசைக் கீதா அங்கின அவிழ்த்துவிட்டுவிட்டா என்றதாலதானே இப்போ இப்பூடி எல்லாம் மனசு சொல்லுது ஹா ஹா ஹா:))

      Delete
  8. காலைல நடப்பதற்குக் கிளம்பணும் பிறகு வருகிறேன். படங்களெல்லாம் மிக அழகு. வாத்துக் குஞ்சுகளும்தான்.

    அங்கெல்லாம் ஆற்றில் குளிப்பதற்கு அனுமதி உண்டா? தண்ணீரை அப்படியே குடிக்கும்படி இருக்குமா?

    ReplyDelete
    Replies
    1. இங்கு அனுமதி உண்டு, குளிக்கலாம், ஆனால் மக்கள் நம்நாடுகள்போல கண்ட நிண்ட இடங்களில் இறங்கிக் குளிக்க மாட்டினம், லசில சில கரை அதிகமாக இருக்கும் இடங்களில், அதுவும் கோடை காலத்தில் மட்டும்தானே குளிக்கலாம் தண்ணி ஐஸ்போல இருக்குமே மற்றும்படி.

      பொதுவாக பளிங்குபோலத்தான் இருக்கும், முன்பு என் வீடியோவில் ஜெலி பிஸ் எடுத்துப் போட்டனே அதில் ஆற்றின் அடிவரை அழகாகத் தெரியும்..

      https://youtu.be/ziaKdru26Rw

      மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      Delete
  9. மிகச்சில சமயங்களில் படுக்கை என்பது வேறு அர்த்தத்தில் வரும்.  வியாபாரம் படுத்து விட்டது என்பது தோல்வி என்கிற அர்த்தத்தில்...  எங்கே படுக்கையைப் போட்டிருக்கே என்று கேட்டால் தங்கி இருக்கும் இடம் பற்றியும் வரும்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..
      ஓமோம், இதுவும் கேள்விப்பட்டேன், ஆனா இது வினைச்சொல்லாக எல்லோ வருகிறது என நினைக்கிறேன், படுக்கை என்பது பெயர்ச்சொல்தானே?...

      //எங்கே படுக்கையைப் போட்டிருக்கே என்று கேட்டால் தங்கி இருக்கும் இடம் பற்றியும் வரும்!//

      ஓ இப்படியும் பேச்சுவழக்கு இருக்கிறதோ? இது புதுசு எனக்கு... எங்கே தங்கப் போறீங்கள் என்பதற்குப் பதில். இப்படிக் கேட்பினம்போலும்..

      Delete
  10. தோட்டத்தின் படங்கள் சூப்பர்.  பூனாச்சு தனக்கு அளிக்கப்பட்ட வீடு பறி போகிறதே என்றதும் விட மனமில்லை போலும்.  உட்கார்ந்து சொந்தம் கொண்டாடுகிறது!  திரும்பி உங்களை பார்த்து சேதி சொல்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அதேதான் ஸ்ரீராம், சரியான விடுப்ஸ் பார்ப்பா[புதினம்], அதனால அவவுக்கு நாங்கள் வைத்திருக்கும் செல்லப் பெயர் "விடுப்ஸ்மாமி" ஹா ஹா ஹா.
      முந்தின வீட்டில் அவ மகாராணிபோல வலம் வருவா, அங்கு நிறைய மரங்கள், பெரீய பெரிய காணிகள்.

      இங்கு வெளியில் போகவே பயப்படுறா, காரின் கீழே இருந்து புதினம் பார்த்திட்டு உள்ளே வந்திடுவா, பாவமாக இருக்கு பார்க்க.

      Delete
  11. கங்கை நீரை பாட்டிலிலேயே வைத்திருக்கிறீர்களா?  வடிகட்டி சிறு சொம்புகளில் அடைத்து சீல் செய்து விடலாமே..  அதை யாராவது எடுத்து ஜூஸ் என்று நினைத்து குடித்துப் பார்க்கப் போகிறார்கள்!

    ReplyDelete
    Replies
    1. இல்லை ஸ்ரீராம்... சிறு சிறு சொம்புகளில்தான் கங்கை நீரை வைக்கும் வழக்கம் முன்பு இருந்தது. ஆனால் அதில் தண்ணீர் இரு வருடங்களுக்குள் ஆவியாவிடும் (இது வேறு ஆவி... நீராவி). பாட்டிலில் வைத்திருப்பது நல்லது. நானும் 4 பாட்டில்களில் வைத்திருக்கிறேன். மனதுக்குத் தோன்றும்போது குளித்துவிட்டு வரும்போது சில துளிகள் தலையில் ப்ரோட்சித்துக்கொள்வேன். ஞாயிறு படங்களின்போது பகிர்கிறேன்.

      சிறு சொம்புகளிலும் சில ஃப்ராடுகள் நடக்கின்றன. உள்ளே பிளாஸ்டிக் பையில் வைக்கும் வழக்கம் உண்டு (மேலே உள்ள காப்பர் போன்ற மெட்டல் போலி என்பதால்)

      Delete
    2. //அதை யாராவது எடுத்து ஜூஸ் என்று நினைத்து குடித்துப் பார்க்கப் போகிறார்கள்!//
      ஹா ஹா ஹா இல்ல ஸ்ரீராம், அதை சுவாமிப்படத்தட்டில்தான் வச்சிருப்பேன், அதனால எடுக்க மாட்டினம் தவறுதலாக.

      நெ தமிழன்///
      //ஆனால் அதில் தண்ணீர் இரு வருடங்களுக்குள் ஆவியாவிடும் (இது வேறு ஆவி... நீராவி). ///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). பிரயாணத்துக்கு இலகுவாக இப்படிக் கொண்டு வந்தோம், அப்படியே வச்சிருக்கிறோம். இதேபோல பிரான்ஸ் லூட்ஸ் மேரிமாதா கோயிலில் எடுத்த புனித நீரும், போத்தல்களில் இருக்குது பல வருடங்களாக.

      Delete
  12. இரவு பதினோரு மணி வரை சூரியனா? மொபைல்  பார்த்துக்கொண்டு தூங்காமல் உட்கார்ந்திருக்கும் போல...   சூரியன் காலைல எத்தனை மணிக்கு எழுந்திருக்கிறார்? 

    ReplyDelete
    Replies
    1. அதேதான் ஹா ஹா ஹா காலையில் 3.30 க்கெல்லாம் வந்திடுவார், அதனால இங்கு டபிள் கேட்டின் நல்ல தடிப்பாக போட்டு றூம் எல்லாம் படு இருட்டாக்கியே வச்சிருப்போம்.

      இதேபோல மாறிவிடும் விண்டர் காலத்தில், பகல் குறைவு, பின்னேரம் 3.30 க்கு லைட் போட்டிடுவோம், இருட்டி விடும்:).

      Delete
  13. ஊசி இணைப்பு சூப்பர்.  நல்ல நையாண்டி!  கவியரசர் கடவுளின் இடத்தை பணத்துக்கு கொடுத்து விட்டார்!  ஆனால் அதுதானே நடக்கிறது..  அரசாங்கமே பணம் கிடைக்குமிடத்தில்தான் விசுவாசம் காட்டுகிறது!

    ReplyDelete
    Replies
    1. அதேதான், கண்ணதாசன் அங்கிள் அப்போ சொன்னது இப்போ நடக்குதே:).

      மிக்க நன்றி ஸ்ரீராம்.

      Delete
  14. எப்படியோ பிலாக் உலகத்திற்கு மீண்டு வந்து ஒரு போஸ்ட் போட்டு விட்டார் அதிரா. படங்கள் பரவாயில்லை.

    வேறு ஒரு படுகை உண்டு தெரியுமா அதிரா?? சமணர் படுகை. கூகிள் ஆண்டவரிடம் அதைப்பற்றி விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜேகே ஐயா வாங்கோ..

      ஹா ஹா ஹா பதிவு போட்ட கையோடு கொஞ்சம் இடைவேளை எடுக்கப் போகிறேன், கோடைகாலம் என்பதால வெளியிலேயே காலநேரம் செலவாகுது, பார்ப்போம் முடியும்போது எட்டிப்பார்ப்பேன்.

      சமணர் படுகையோ? தெரியாதே, தேடிப்பார்க்கிறேன். மிக்க நன்றி வரவுக்கு.

      Delete
  15. காணும் இடமெல்லாம் கொள்ளை அழகு கொட்டிக் கிடக்குது. அங்கே வாழும் அதிரா கொடுத்துவைத்தவர்.

    அதிரா ‘பயத்தங்காய்’ போல இருப்பாராம். அதை எப்படி நம்புறது? ஒரு படம் போட்டிருக்கலாமே?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அறிவுப்பசிஜி வாங்கோ.. உண்மையில் ஸ்கொட்லாண்ட் அழகுதான் மிக்க நன்றி.

      என் பயத்தங்காய்ப் படமோ ஹா ஹா ஹா போட்டிட்டால் போச்சு... இஎன் இடைவேளை முடியட்டும் பார்க்கலாம்.

      மிக்க நன்றி தொடர் வருகைக்கு.

      Delete
  16. "க்" ஓரெழுத்தால் அர்த்தம் மாறிடுமாம், அதையே திருக்குறளில் சொன்னால் புரியாதாம்... க்கும்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ டிடி வாங்கோ..
      ஹா ஹா ஹா நீங்கள் இப்போ சொல்வது மட்டும் கரெக்ட்டாப் புரியுதே:).. திருக்குறளில் முதல் பத்துத்தவிர வேறேதும் படிச்சதில்லை நான்:), அப்போ அது எப்பூடிப் புரியும், அது என்னமோ தெரியவில்லை, ஆர்வம் வருகுதில்லையே அதில்.. வந்தால் படிக்க மாட்டேன் எனச் சொல்வேனா ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
  17. நீங்க பாட்டுக்கு இங்கத் திரும்பிப் பாக்காம யோகா செய்யுங்க பூசார்....உங்களை டிஸ்டர்ப் பண்ணாம வாலை மட்டும் இழுத்துப் போட்டு ஓடிடுவோமே!!!! ஹாஹாஹாஹாஹாஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா வாங்கோ.. வால் அவ்ளோ நீளமாவா ஈக்குதூஊஊஊஊ?:)

      Delete
  18. பாதி ஞானிக்கு வந்த தெளிவைப் பாருங்க...படுக்கைக்கு விளக்கம்!!!!! ஞானியாரே இதே விளக்கம்தானே!!! இங்கும்..

    படுகை - இதைப் பார்த்ததுமே ஞானியாகாத எனக்கு பூசாரின் போஸ்ட் புரிஞ்சு போச்சு.... இப்ப ஸ்காட்லான்ட் படுகை படங்கள் இருக்கும் என்று...ஹாஹாஹாஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அல்லோ கீத்ஸ்ஸ்.. அது போன போஸ்ட்டில்தான் மீ கால்வ்:) இங்கிலீசில ஜொன்னேன்:)) ஞானியாக்கும்:).. இப்போ புல் ஆகிட்டேன் தெரியுமோ?:) ஹா ஹா ஹா கீதா இப்போ கொயம்பியிருப்பா:))

      Delete
    2. ஹாஹாஹாஹா ஆமா கொயம்பிட்டேன் தான்.....ஃபுல் ஆகிட்டீங்களா ஹையோ ஞானி இந்த ஃபுல் என்பது இங்க வேற அர்த்தமாகிடுச்சே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      Delete
  19. யோகா செஞ்சு ஒரு நிமிடம் கூட ஆகலை அதுக்குள்ள இடைவேளையா!!!!!!! ஹாஹாஹாஹா அப்ப நீங்க இங்கதான் எட்டி எட்டிப் பார்த்துட்டுருக்கீங்க யாரு வாலை பிடிச்சு இழுக்கறாங்கன்னு!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. "யோகாச் செய்த களை, ஞானிக்கும் உண்டெல்லோ":))) அதனாலதான் இடைவேளையாக்கும்:) ஹா ஹா ஹா.

      Delete
  20. ஓ நீங்க யோகா செய்யறீங்க????????????? அதுக்கு ஏஞ்சல் ஃபோட்டோ போட்டு விளம்பரமா!!! ஹாஹாஹாஹா ஆனா நீங்க உங்க கார்டன்ல நடக்கறப்போ கொஞ்சம் அதிர்ந்து.......டெய்சிப் பிள்ளை பயந்து ஓடிட்டாளாமே!! காத்துவாக்குல செய்தி வந்துச்சு!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //அதுக்கு ஏஞ்சல் ஃபோட்டோ போட்டு விளம்பரமா!!//
      சே சே அதிரா ஞானிக்கு ஏன் விளம்பரம்[ ஹையோ எதுக்கு இப்போ கல்லைத்தேடுறீங்கள்?:)].. அது அஞ்சு கொயந்தையாக இருந்ததை நீங்கள் பார்க்க வேண்டாமோ:))..

      கொயந்தையைப் பார்த்துப் பயத்தில இங்கின ஆருமே வாய் திறக்கவில்லையாக்கும் ஹா ஹா ஹா..

      அது கீதா, ஒரு சுவீட் 16[என்னைச் சொன்னேன்:)] வெளியில வெய்யில் வெளிச்சத்தில, கார்டினில நடந்தால் அதிரத்தானே செய்யும்.. அக்கம் பக்கமெல்லாம் ஹா ஹா ஹா:).

      Delete
    2. ஹாஹாஹா பாருங்க நான் பயப்படாம வாய் திறந்திட்டேன்!!!!

      //அது கீதா, ஒரு சுவீட் 16[என்னைச் சொன்னேன்:)]கார்டினில நடந்தால் அதிரத்தானே செய்யும்.. அக்கம் பக்கமெல்லாம் ஹா ஹா ஹா:).//

      ஸ்வீட் 16க்கு 21? வயதில் மகன் இருக்கிறாராமே!

      கீதா

      Delete
  21. ம்ஹூக்கும் உங்க ஊர் போல இருந்தாயார்தான் அழகா சைக்கிள் ஓட்டமாட்டாங்களாம்?!!!! ..ஆனா பாருங்க எங்க ஊர்ல இந்த ட்ராஃபிக் இடையிலும் நாங்க ஓட்டுறோம்னா எங்க திறமைய பாருங்க!!!!!!!!!!!!!!!!!

    ரோட்டோரம், பார்க் படங்கள் எல்லாம் அழகு.......அது சரி இதுதான் படுகையா!!! !!!! ஹாஹாஹாஹாஹா சும்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆஆஆ பூஸாரை இழுத்தேன்...

    பார்க்கு குளம், அதை வெட்டி விட்டு சுற்றி வருவது போலச் செய்திருப்பது இந்தப் படுகையை அவங்க உருவாக்கியிருப்பாங்க அதிரா...இதுதான் செயற்கைப்படுகை. இதைப் பற்றித்தான் என் அடுத்த பதிவு இருக்கும்....இப்படிச் செய்வது ரொம்ப நல்லது. பறவைகளுக்கும் கூடவே பூமியின் ஈரப்பதம் இருப்பதற்கும் உதவும்...

    ரொம்ப அழகா இருக்கு, அதிரா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //ஆனா பாருங்க எங்க ஊர்ல இந்த ட்ராஃபிக் இடையிலும் நாங்க ஓட்டுறோம்னா எங்க திறமைய பாருங்க!!!!!!!!!!!!!!!!!//
      உண்மைதான் அங்கு சைக்கிளில் போவோரைப் பார்க்க நடுங்கும், கார் முட்டுவதுபோல அருகில் போகும்.

      இங்கெனில் சைக்கிளுக்கே முன்னுரிமை, சைக்கிள் முன்னால போனால், முந்த முடியாத ஒரு ரோட் எனில், பின்னால பெரிய வரிசையில் அமைதியாக கார்கள் வந்து கொண்டிருக்கும், கோன் அடிக்கக்கூடாது, பின்பு எங்காவது பெரிய இடம் கிடைச்சால் மட்டுமே சைக்கிளை முந்திப்போகலாம். ஆனால் நான் மெயில் ரோட்டில் ஓடுவதில்லை, இப்படி சைட் ரோட்டில்தான் ஓடுவேன்.

      //அது சரி இதுதான் படுகையா!!!//
      பின்ன இல்லையோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) விடுங்கோ மீ தேம்ஸ்க்குப் போயிடுறேன்:))

      Delete
    2. //படுகையை அவங்க உருவாக்கியிருப்பாங்க அதிரா.//

      நீங்க சொன்னபின்னர்தான் யோசிக்கிறேன், இது செயற்கைதான் போலும், ஆனா நல்ல பெரிசாக இருக்கு குளம்.

      Delete
    3. அட! நீங்க நீச்சல்லதான் பரிசு வென்றீர்கள்னு பார்த்தா இப்ப சைக்கிள்ல யும் ஓடுவீங்களா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      //நீங்க சொன்னபின்னர்தான் யோசிக்கிறேன், இது செயற்கைதான் போலும், ஆனா நல்ல பெரிசாக இருக்கு குளம்.//

      நீங்க அந்த குளத்தை வெட்டி சுற்றிலும் ஓட விட்டிருக்காங்கன்னு சொல்லிருக்கீங்க இல்லையா....அதனால் அப்படி நினைச்சேன். ஏனென்றால் உங்க ஊர், அதாவது பிரிட்டனில், யுரோப், மற்றும் மேலைநாடுகளில் இப்படியும் அப்புரம் கழிவு நீர் சுத்திகரிப்புக்கும் இப்படிச்செய்து சுத்தமான நீர் செடிகளுக்கு, வயலுக்குப் போவது போல் செய்கிறார்கள்.

      முடிஞ்சா அது உங்கள் ஊர் பார்க் மேனேஜ்மென்ட் அல்லது சுற்றுச்சூழலியல் மேனேஜ்மென்ட் அவங்க செஞ்சதான்னு கேட்டுப் பாருங்க...

      கீதா

      Delete
  22. ஆமாம் நாணல் வகை அதிரா....நாணல் என்பது பொதுப்பெயர். அதில் இது ஒரு வகை நாணல். phragmites or narrow leaf cattail என்று தோன்றுது. பொதுஆக phragmites தான் இப்படி வளர்க்கப் பயன்படுத்துகிறார்கள் . இவை ரீட் பெட் தான்...

    பாருங்க நடுவில கொஞ்சம் ப்ரௌன் நிறத்தில் இலைகள் தழைகள் இருக்கு இல்லையா இவை எல்லாம் செடியின் அடியோடு போய் பெட் உருவாகும்...அதுல வாத்துகள் நீர்ப்பறவைகள் கூடுகட்டும்...அதான் உங்க பான்ட்ல நிறைய வாத்துகள் இருக்கின்றன. நல்ல அமைப்பு....இயற்கை செமையா இருக்கு அதிரா.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //பாருங்க நடுவில கொஞ்சம் ப்ரௌன் நிறத்தில் இலைகள் தழைகள் இருக்கு இல்லையா இவை எல்லாம் செடியின் அடியோடு போய் பெட் உருவாகும்.///

      ஓ சரிதான் நீங்கள் சொல்வது, என்னிடம் விண்டரில் எடுத்த படம் இருக்கு, போட மறந்திட்டேன், அப்போ பச்சை நிறமே மாறி, முழுவதும் வைக்கோல் போல இருந்தது.. பின்னர் படம் போடுகிறேன்.
      குட்டிக் குஞ்சாக இருந்தவர்கள்தான் இப்போ நீந்திக்கொண்டிருக்கினம் வளர்ந்து.

      நிறைய வாத்துக்கள் விண்டர் நேரம் இருந்தது, இப்போ வெயில் என்பதால் எங்கோ உலாத்தப் போயிட்டினம் போலும், அருகில்தானே ஆறு இருக்கு, அங்கும் போய் நீந்துவார்கள். மிக்க நன்றி கீதா.

      என்னிட

      Delete
    2. அந்தப் படங்களும் போடுங்க அதிரா காய்ந்த நாணல்....ஆமாம் குளிர்காலத்தில் அதுவும் உங்கள் ஊரில் அப்படித்தான் இருக்கும் ப்ரௌன்....முன்ன நீங்க எப்பவோ போட்ட நினைவு இருக்கு...

      ஸாரி அதிரா மீண்டும் இப்பதான் வந்து கமென்ட் பார்க்க முடிஞ்சசு....நேரம் சரியா போகுது. எங்கள் வீடியோக்களை எடிட் செய்து போடுவதற்கு, என் தனிப்பட்ட வேலைகள், என் பதிவுகள் எழுத நேரம் கிடைப்பதே சரியா இருக்கு...

      கீதா

      Delete
  23. படங்கள் அனைத்தும் அழகு. மழைக்காலத்தில் எடுத்தால் கங்கை நீரில் மண் வரும். தெளியவைத்து எடுக்க வேண்டும். மற்ற நாட்களில் இப்படி மண் இருக்காது. எங்கள் வீட்டில் சமீபத்தில் எடுத்து வந்த கங்கை நீர் இருக்கிறது. முடிந்தால் படம் எடுத்து என் பக்கத்தில் போடுகிறேன் பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட் வாங்கோ...
      உண்மைதான் அது மழைக்காலம். மழை இல்லாத காலமும் ஒரு தடவை போகோணும் பார்ப்போம்.

      //முடிந்தால் படம் எடுத்து என் பக்கத்தில் போடுகிறேன் பாருங்கள்.//

      போடுங்கோ வருகிறேன் பார்க்க, மிக்க நன்றி.

      Delete
  24. தாழைக் கோழிகள் இருக்கு பாருங்க..அழகு...தாழைக்கோழிகளின் பின்பக்கம் இந்த வெள்ளையா இருக்கும் பகுதி பஞ்சு போல இருப்பது தெரியும்....அவை அசைந்து அசைந்து நீந்தும் போது அல்லது சிறகுகளை விரித்து அடித்துக் கொள்ளும் போது பின் பக்கம் விரித்து...

    தாழைக்கோழிகள் நிறைய வகைகள் உண்டு...இது க்ளோசப் தெரிந்தால் என்ன வகை என்று சொல்லலாம்....

    படங்கள் அழகோ அழகு. ரசித்து ரசித்துப் பார்க்கிறேன். கீதாவுக்கு இப்படியான இடம் இருந்தால் போதும் நடையோ நடை என்று நடந்து பூசாரின் பயத்தங்காய் உருவத்தையும் விட புல்லு போல் ஆகிடுவா!!!! கூடவே படமா எடுத்து தள்ளிடுவா!!! ஹாஹாஹாஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ///தாழைக் கோழிகள் இருக்கு பாருங்க//

      எது கீதா? தனியே இருப்பது ஒருவகை வாத்து எல்லோ, கழுத்துப்பகுதி பச்சை-நீலக்கலராக இருக்கும், இவை பறக்கும் குளத்துக்கு மேலே கொஞ்சத்தூரம்...
      பின்பு குளோசப்பில் எடுத்துப் போடுகிறேன், வீடியோக்கள் இருக்கு அங்கு போட்டாலும் பாருங்கோ.. அது எந்த ஆண்டு வெளிவருமோ ஆரு கண்டா ஹா ஹா ஹா..

      அஞ்சுவைக் கூப்பிட்டேன் நடக்க வரச் சொல்லி, நான் ஆத்தில தள்ளிடுவேனாம் வரமாட்டாவாம் கர்:)) , நீங்கள் வாங்கோ கீதா நடப்போம், நான் தள்ள மாட்டேன் ...மீ ஒரு அப்பாஆஆஆஆஆவீஈஈஈஈ:))

      Delete
    2. என் பகுதியில் படங்கள் இங்கு எடுத்த வாத்து/கோழிகளின் படங்கள் போடுகிறேன் அப்ப வித்தியாசம் பார்க்கலாம். தாழைக்கோழிகளும் கொஞ்சம் பறக்கும் அதிரா...கழுத்ஹு நீலம், பச்சை என்று இருந்தால் மல்லார்ட் (Mallard) வாத்தாக இருக்கும். உங்கள் ஊர் ஈரநிலங்களில் அவை நிறைய உண்டு. க்ளோசப்ல, அப்புறம் வீடியோவும் போடுங்க...பார்க்கிறேன். முன்பக்கம் தெரியும்படியா இருந்தா அல்லது சைட் போஸ்..

      சரி சரி தள்ளிவிடமாட்டிங்கன்னு அக்ரீமென்ட் போட்டு சொல்லிட்டீங்க...வந்துவிடுகிறேன் உங்க கூட நடக்க...!!!!!!!!!!

      கீதா

      Delete
  25. இது narrow leaf cattail அல்ல. ஃப்ரக்மைட் போல் இருக்கு

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆ இதுவும் குளோசப்பில் பின்பு எடுக்கிறேன் கீதா... நாணல் எனும் பெயரில எனக்கொரு லவ்.. சின்ன வயசிலிருந்தே, அதனாலதான் நீங்கள் உங்கட போஸ்ட்டில் நாணல் என்றதும், எனக்கும் இவற்றில் அதிக பாசம் வந்திட்டுது, அப்படியே நாணலாகவே கற்பனை பண்ணி வச்சிருக்கிறேன், ஆனா ஊரில் நாணல் எனில் சொல்வ்ட்டாக இருக்கும், இவை இலைகள் கொஞ்சம் நெல்ல்லு, சோள இலைகள்போல சொர சொர என இருக்குது.

      Delete
    2. எனக்கும் நாணல், இந்த நீர்த்தாவரங்கள் ரொம்பப் பிடிக்கும் அதுவும் சுற்றுச்சூழலுக்கு ரொம்ப நல்லதாம்...இந்த cattail எல்லாம் நாணல் என்ற பொதுப்பெயரில் சொல்றாங்க...ஆனால் அவை நாணல் குடும்பம் இல்லைதான். என்றாலும் கதிர் வெடித்து பூவாக பார்க்க நல்லா இருக்கு....ஆமாம் இவற்றின் இலைகள் சொர சொரன்னு...

      நீங்கள் சொல்வது நாணல் புல் வகை...அதிரா இதில் நிறைய வித்தியாசங்கள் குடும்பங்கள் இனங்கள் என்று இருக்கு...தனியாகப் படித்தால்தான் வித்தியாசம் புரிபடும் என்று நினைக்கிறேன். கூகுளில் சொல்வதை வைத்துச் சொல்ல முடிவதில்லை உறுதியாக.

      கீதா

      Delete
  26. ஆறும், பூவும் அழகோ அழகு. சரி அந்த இடத்தில் ஒரு சின்ன வீடு கீதாவுக்கு புக் பண்ணிடுங்க பூசார்!!!

    //இந்தப் புதினத்தைப் பாருங்கோ//

    ஆஆஆஆ..நான் நினைச்சேன் ஓ நம்ம அதிரா பொசெ வாசிட்டாங்க போலன்னு நினைச்சேன் இல்லை டெய்சி பிள்ளைக்கு வாசிக்க வாங்கிருக்காங்கன்னு நினைச்சேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!ஹாஹாஹாஹா இங்க புதினம் என்றால் நாவல் புக்!!! (எனக்குமே புதினம் என்ற வார்த்தை எல்லாம் ப்ளாக் வந்துதான் தெரிந்தது)

    ஹாஹாஹா டெய்சி பிள்ளை செக் பண்ணுறா....உங்க செக் தான் டெய்சிய செக் பண்ணச் சொல்லிருக்காங்க....டெய்ஸி உனக்கு ஜெசி, மல்டி ஃப்ரெண்ட்ஸ் அவங்க மம்மிய பிடிக்கும்தானே!!....பார்த்து சொல்லு நிஜமாவே உங்க மம்மி பயத்தங்காய் போலதான் இருக்காங்களா? யோகா பண்ணுறாங்களான்னு பாத்து அப்பப்ப அப்டேட் பண்ணனும் ஓகேயா...ன்னு டீல் போட்டிருக்காங்க!!!! அதான் இப்படி பாக்குறா டெய்சி பிள்ளை!!!! டெய்சி பிள்ளை கூட இப்ப நானும் ஃப்ரென்ஷிப் கார்டு கொடுத்தாச்சு!! எனக்கும் அப்படியே அப்டேட் பண்ணிடுங்க!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //சரி அந்த இடத்தில் ஒரு சின்ன வீடு கீதாவுக்கு புக் பண்ணிடுங்க பூசார்!!!//
      பண்ணிட்டால் போச்சு, என் சுவிஸ் எக்கவுண்டில இப்பவே அட்வான்சை அனுப்பவும்:)).... உண்மையில் இன்னும் பல வீடுகள் கட்டிக்கொண்டிருக்கினம்.

      புதினம் என்றால் நாவலோ ஆவ்வ்வ்வ்வ்வ்... எங்கட பேச்சு வழக்கு மொழி அது:).

      //ஓ நம்ம அதிரா பொசெ வாசிட்டாங்க போலன்னு//
      ஹா ஹா ஹா இங்கின ஜாமத்திலகூட சூரியன் உதிக்குது, ஆனா நீங்கள் நினைப்பது மட்டும் நடக்க மாட்டேங்குதே கர்ர்ர்ர்ர்:))...

      ///டெய்ஸி உனக்கு ஜெசி, மல்டி ஃப்ரெண்ட்ஸ் அவங்க மம்மிய பிடிக்கும்தானே!!// யேஸ்ஸ்ஸ் யேஸ்ஸ்ஸ் டெய்சிக்குச் சொல்லி வச்சிருக்கிறேன் "அஞ்சு கிரான்மா" என ஹா ஹா ஹா.

      Delete
  27. ப்ளம், பேபிள் பீன்ஸ் எல்லாம் செழுமையா இருக்கு. சுத்திப் போடுங்க!! ஹையோ இப்படி விரல் ரேகை தெரியறாப்ல படம் போட்டிருக்கீங்களே நெல்லை ஜோசியம் சொல்லிடுவாரே!!!!

    இரவில் வெளிச்சம் படங்கள் அழகு. ஆமாம் அங்கெல்லாம் அப்படித்தானே...அமெரிக்காவிலும் கூட இப்படி நைட் வெளிச்சம் இருக்கும் இந்த மாதங்களில் ஆகஸ்ட் மாதமும்...

    கீதா



    ReplyDelete
    Replies
    1. எல்லாம் நன்கு பூத்திருக்குது கீதா, ஆனா இப்போ 2,3 நாட்களாக நல்ல மழை கொட்டுது ஆனால் குளிர் இல்லை, பூக்கள் என்னாகுமோ தெரியவில்லை.

      //ஹையோ இப்படி விரல் ரேகை தெரியறாப்ல படம் போட்டிருக்கீங்களே நெல்லை ஜோசியம் சொல்லிடுவாரே!!!!//

      சே சே சே அவர் இப்போ சாத்திரம் சொல்லும் மூட்டில் இல்லையாக்கும் ஏனெண்டால் நீங்கதான் வயசைச் சொல்லிப்போட்டீங்களே ஹா ஹா ஹா ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்கோ கீதா.

      Delete
  28. ஊகு, ஊஇ - ரசித்தேன்.....ஹாஹாஹா எதுக்கு கதவுக்கு இடையில கை விட்டுப் பார்க்கணும்? இப்ப எல்லாம் காதல் வலின்னு இருக்கா என்ன...? அப்படினாக்க எத்தனை முறை கதவுக்கு இடையில கை கொடுக்கணுமோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஹாஹாஹாஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ///இப்ப எல்லாம் காதல் வலின்னு இருக்கா என்ன...? அப்படினாக்க எத்தனை முறை கதவுக்கு இடையில கை கொடுக்கணுமோ//

      ஹா ஹா ஹா உண்மைதான்.. மிக்க நன்றிகள் கீதா.

      Delete
  29. அனைத்து படங்களும் அருமை.

    ReplyDelete
  30. வணக்கம் அதிரா சகோதரி

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் கண்களுக்கு குளிர்ச்சியாக நன்றாக உள்ளன.

    படுக்கைக்கும், படுகைக்கும் உள்ள ஓரெழுத்து வித்தியாச விளக்கம் அருமை.

    நடக்கும், பாதை, நாணல்கள் முளைத்த பாதை என எல்லா பாதைகளும் சுத்தமோ சுத்தம். பார்த்துக் கொண்டேயிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

    அந்த குழந்தை அவ்வளவு அழகாக உள்ளது. ஆமாம்.. அஞ்சு மாத குழந்தை எப்படி எழுந்து நிற்கும்.?ஹா ஹா ஹா.. பயத்தங்காய் என்றால் இதுவும் புரியவில்லை..(கொத்தவரங்காயா?) பொண்ட் என்பதும் விளங்கவில்லை.

    நீரில் பறவைகள் படங்கள், மல்லிகை மலர்கள் விபரம், கங்கை நீரின் விளக்கம், தங்கள் டெய்சி பிள்ளையின் குறும்புத்தனம், தங்கள் தோட்டத்தின் பார்வை என படங்களாக போயின பதிவு. ஆனாலும் உங்கள் விரலசைத்து (பீன்ஸ் படத்தை சொல்கிறேன்.) "இங்கே பாருங்க"வென ஒவ்வொன்றையும் ரசிக்க வைத்து விட்டீர்கள். மனம் நிறைந்த வாழ்த்துகள் .

    நள்ளிரவில் சூரியன் நகரமல்லவா அது. "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்" என்பது போல், வெய்யிலை இப்போதே ரசித்து விட வேண்டும். பின் ஒரே பனி, குளிர் என்றாகும் அல்லவா?

    ஊ.சி குறிப்பு அருமை." பணம் பத்தும் செய்யும்" போது, இந்த ஒன்றை மட்டும் விட்டு விடுமா என்ன?

    ஊசி. இ....கதவிடுக்கில் அறியாமல் கை வைத்து வலியை பட்டிருக்கிறேன். அதற்கு முந்தைய வலி அனுபவித்ததில்லை. . அதனால் இரண்டுக்கும் உள்ள ஒற்றுமையை அறியேன்.:)) பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலாக்கா வாங்கோ..

      இங்கு நடைபாதை எல்லாம் சுத்தமாகத்தான் இருக்கும். பப்பீஸை நடக்கக்கூட்டிப் போனாலும் கையில் பையுடன் போவார்கள், அசுத்தம் பண்ணினால் உடனே அள்ளி அதற்குரிய இடத்தில் போட்டுவிடுவார்கள் அதனால 99 வீதமும் சுத்தமாக இருக்கும்.

      //அந்த குழந்தை அவ்வளவு அழகாக உள்ளது. ஆமாம்.. அஞ்சு மாத குழந்தை எப்படி எழுந்து நிற்கும்.?ஹா ஹா ஹா..///

      அந்தக் குழந்தை காலால சுவிஜ் போடுகிறது:), சிங்கை.....கழுவுகிறது ஹா ஹா ஹா, அப்போ அஞ்சு மாசத்தில் எழுந்து நிற்கும் என்பது ஆச்சரியப்படுவதற்கில்லை ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்கோ:)))

      ///பயத்தங்காய் என்றால் இதுவும் புரியவில்லை..(கொத்தவரங்காயா?) பொண்ட் என்பதும் விளங்கவில்லை.//

      ஏன்? இதனை அப்படித்தானே எல்லா இடத்திலும் சொல்லுவோம்.. லோங் பீன்ஸ் என்போம்.. பயற்றங்காய்// இதுதான் சரியான தமிழ் என நினைக்கிறேன், பயத்தங்காய் பேச்சுவழக்குச் சொல். பீன்ஸ் இல் மிக நீளமாக இருக்கும்.

      அது குளம்... pond... ஹா ஹா ஹா என் டமில் உங்களுக்குப் புரியுதில்லை:), ஆச்சிரமத்துக்கு வாழ்ங்கோ வன் வீக் கிளாஸில எல்லாம் பழகிடும்:))

      Delete
    2. ///வெய்யிலை இப்போதே ரசித்து விட வேண்டும். பின் ஒரே பனி, குளிர் என்றாகும் அல்லவா?///

      அதேதான், அதனாலதான் இக்காலத்தில் கொம்பியூட்டரில் மினக்கெட மனம் வருவதில்லை, வெளியே போகவே மனம் விரும்பும்.

      அனைத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  31. எனக்கு முதன் முதலில் (அங்கு...அதாவது யூரோப்பில், லண்டனிலும்) இரவு 9 1/2 மணிக்கு நல்ல வெயிலைக் கண்டதும் மிகப் பெரும் ஆச்சர்யம். ரொம்பவே வித்தியாசமாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. அதேதான் நெல்லைத்தமிழன்.. புதுசுக்கு நம்ப முடியாமல் இருக்கும்.. எனக்கும் ஆரம்பகாலம் ஆச்சரியம் தாங்க முடியவில்லை, ஆனா அதேபோல குளிர் காலம் சரியான டார்க் ஆகிடும், பல நாட்கள் சூரியனே தெரியாது, பகலெல்லாம் வீட்டுக்குள் லைட் போடோணும்.

      Delete
  32. இன்னிக்கு பாடலில் இருந்து ஆரம்பிக்கிறேன் :) செம soothing calm song பிடிச்ச பாடகர் :) ரொம்ப பிடிச்ச நடிகர் அரவிந்த்சாமி .வெறும் ஆடியோவை மட்டும் போட்டதுக்கு உங்களை கீறிக்கொள்கிறேன் :) 

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ் அஞ்சுவோ வாங்கோ வாங்கோ

      //இன்னிக்கு பாடலில் இருந்து ஆரம்பிக்கிறேன் ://

      அப்பாடா கீழிருந்து மேலேயா? தப்பித்தேன் ஜாமீஈஈஈஈஈஈ:)) நா ஒண்ணும் ஒங்களைப்பற்றி இங்கின பேசல்லே:)).

      //வெறும் ஆடியோவை மட்டும் போட்டதுக்கு உங்களை கீறிக்கொள்கிறேன் :) //
      ஆஆஆஆஆஆ பாட்டைக் கேட்டபடி கொமெண்ட் போட்டுவிட்டுப் போவோர்தான் அதிகம் என நினைச்சேன்.. அவரா நீங்க???:)) ஹா ஹா ஹா

      Delete
  33. //கவனமாக "க்" கன்னா வந்திடாமல் எழுதி//
    என்னே  கவனம்  //தோழில் // கவனமா இல்லையே மேடம் :)

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆஆஆஆ திரும்படியும் காலை வாரி விட்டிடுச்சா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஓ முன்பு ஒருதடவை அம்முலுவும் திருத்திவிட்டா.. அது கைப்பழக்கமாகிட்டுதுபோலும், சில சொற்கள் மாறக் கஸ்டப்படுது.. ஆனாலும் மீக்கு இப்போதான் சுவீட் 16 ஆக்கும்:)) அதனால நெல்லைத்தமிழனின் வயசு வரமுன் மாறிவிடுவேனாக்கும்:) ஹா ஹா ஹா.

      Delete
  34. அந்த யோகா போஸ் பார்த்தா ஒண்ணு சொல்லணும் :)))ஆனா சொல்ல மாட்டேனே .

    ReplyDelete
    Replies
    1. ஓ அந்த சிங்:))) ஆஆஆஆஆஅ மீயும் ஜொள்ள மாட்டனே ஹா ஹா ஹா:))

      Delete
  35. ///இது அஞ்சு..., அஞ்சு மாசக் கொயந்தையாக இருந்தபோது எடுத்தது... பாருங்கோ அஞ்சு அப்பவே இப்படி:).///

    ஹலோவ் :)  இப்போ உங்களால் எனக்கொரு நினைவு வந்திருச்சு அதாவது எனக்கு 4  வயசிருக்கும் .அப்போ டவுனில் ஸ்கூலுக்கு காலைல ஒரு அண்ணா கொண்டு போய் விடுவார் ஈவ்னிங் அவரே வந்து கூட்டிட்டுப்போவார் .அன்னிக்கு பார்த்து அவர் டைமுக்கு வரலை நான் ஸ்கூல் வாசலிலே இருந்தேன்    காத்துக்கிட்டு அவர் வரலை .அப்போ என்னுடை குட்டி ஹார்ட்டுக்கு பயம் வந்து அங்கிருந்து நேர நடக்க ஆரம்பிச்சேன் எங்கே தெரியுமா அந்த ரோட்டின்  ஒரு மூலையில் 15 நிமிஷம் நடந்தா குடும்ப நண்பர்கள் வீடு வரும் அங்கே நடந்து போனேன் .ஆனா அவங்க வீட்டுக்கு பதிலா அவங்க  வீட்டின் முன்பக்கம் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு போயிட்டு இந்த மாதிரி நரசிம் அங்கிள் வீடுன்னு கேட்டேன் அந்த அறிவு ஜீவிகள் வழி காட்டுனாங்க அது திரும்ப என்னை மெயின் ரோட்டுக்கே கொண்டாந்து விட்ருச்சு .
    இப்போ நீங்க bambi ஸ்டோரியை மனசுக்குள்ள நினைச்சுக்கோங்க .அந்த பாம்பி நான் .பிறகு அப்படியே நடந்த ஸ்கூலுக்கு வந்து வாசலில் அமர்ந்தேன் அந்த ஸ்கூல் எதிரில் இருக்கும் ஒரு வீட்டில் வசித்த டீச்சர் ஒருவர் என்னை பார்த்து பரிதாபப்பட்டு பொறுப்போடு  பத்திரமா எங்க வீட்டுக்கு கொண்டு போய் சேர்த்து விட்டார் .அட்ரஸ் நானா சொல்லலை நான் சொன்னது அவருக்கு புரிம்ஜிருக்க சான்ஸ் இல்லை அந்த ஏரியாவுக்கே one and onlyமாட்டு மற்றும் மனுஷ doctor என்பதால் அவர் கண்டுபிடிச்சி விட்டார் .எதுக்கு இதை சொல்றேன்னா எவ்ளோ பொறுமை அருமையான பிள்ளை பாருங்க நான் சின்ஸ் 4 இயர்ஸ் :)

    ReplyDelete
    Replies
    1. தோழில் - இதைக் குறை சொல்லிட்டு, புரிம்ஜிருக்க. னா என்னா லேங்குவேஜ் னு கேட்க மாட்டேன். பெரியவங்க, சரியாத்தான் எழுதியிருப்பாங்க.

      Delete
    2. ///அப்போ டவுனில் ஸ்கூலுக்கு காலைல ஒரு அண்ணா கொண்டு போய் விடுவார் ஈவ்னிங் அவரே வந்து கூட்டிட்டுப்போவார் ///

      ஆஆஆஆஆஆஆஅ இதென்ன இது புதுக்கதையா இருக்கு:)).. ஆரிவர்:)) திடீரெனக் காளான்கள் முளைக்குதே ஹா ஹா ஹா:))..

      ஒண்ணு மட்டும் புரியுது:), பொறுமையாக இருக்க வேண்டிய இடத்தில இருக்காமல்.. ஊர் சுத்தியிருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா...

      Delete
    3. ///நெல்லைத்தமிழன்Saturday, June 24, 2023 1:24:00 am
      தோழில் - இதைக் குறை சொல்லிட்டு, புரிம்ஜிருக்க. னா என்னா லேங்குவேஜ் னு கேட்க மாட்டேன். ///

      ஆஆஆஆஆஆஆ இந்த கிட்னி எனக்கு வேர்க் பண்ணல்ல:)) அப்பாடா முதேல் தடவையாக அதிராக்கு சப்போர்ட் பண்ணிட்டார்ர்ர்ர்:)) ஆனா எப்போ காலைவாருவார் எனத் டெரியாதே ஹா ஹா ஹா..

      ///பெரியவங்க, சரியாத்தான் எழுதியிருப்பாங்க.///
      ஹா ஹா ஹா இனிமேல் ஏஞ்சல்(க்கா) போடுங்கோ நெ தமிழன்:).. இனி இந்தப்பக்கம் அஞ்சு வருவாவோ தெரியல்லியே ஹா ஹா ஹா

      Delete
  36. //என ரோட்டோரமெல்லாம் அழகாக ரோட் போட்டிருக்கும், இதிலதான் அதிரா சைக்கிள் ஓடுறனான்...:).. இது மெயின் ரோட்.....
    ஆமா நீங்க காலாற  ஓடி சைக்கிள் ஓடி ரோட்  பிளந்ததில்  கவுன்சிலுக்கு செம செலவு வச்சீங்களாமா ஸ்கொட்லாந்துக்கு புது ரோட் போட :))))))))))))

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒரு பயித்தங்காயைப் பார்த்துப் பேசுற பேச்சா இது, நான் சைக்கிள் ஓடின வேகம் பார்த்து ஒரு ஸ்கொட்டிஸ்கார லவ் புரொப்போஸல்கூட வந்துதே ஹா ஹா ஹா.. ஆனா அவரின் வயசு ஜொள்ளமாட்டேன் ஹையோ ஹையோ:))

      Delete
    2. ஆன்ரீ.. இந்த வயசுல இவ்ளோ வேகமா சைக்கிள் ஓட்றீங்களே.. ஐ லவ் யூன்னு மூணு வயசு பொடிப்பயல் சொன்னதையா லவ் ப்ரொபோசல் னு கூசாம எழுதறீங்க

      Delete
    3. ///நெல்லைத் தமிழன்Tuesday, February 20, 2024 10:07:00 am
      ஆன்ரீ.. இந்த வயசுல இவ்ளோ வேகமா சைக்கிள் ஓட்றீங்களே..///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா தன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டும் தான்:), ஆனா அதுக்காக தன்னுடைய வயசுதான் எல்லோருக்கும் என எண்ணப்பிடாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அதுவும் ஸ்பெஷலா ஒரு சுவீட் 16 பிள்ளையைப் பார்த்து:))

      Delete
  37. ஹலோ திரீ ஆணி :) பெயர் காரணம் சொல்லுங்க 
    படங்கள் டெய்சி எல்லாம் அழகு அப்பாடி  ரெசிப்பி ஏதும் வரலை எல்லாரையும் காப்பாத்திய கடவுளுக்கு நன்றீஸ் 

    ReplyDelete
    Replies
    1. அதிரா ரெசிப்பியை யார் குறை சொன்னாலும் தவறில்லை..... ஆனால் அச்சப்பம் புகழ் ஏஞ்சலின் சொல்லுவது நியாயமா?

      Delete
    2. நான் திருகாணி அதிரா என்று படித்து விட்டேன் ஹி... ஹி... ஹி...

      Delete
    3. //AngelFriday, June 23, 2023 9:30:00 pm
      ஹலோ திரீ ஆணி :) பெயர் காரணம் சொல்லுங்க///

      //KILLERGEE DevakottaiSaturday, June 24, 2023 3:55:00 am
      நான் திருகாணி அதிரா என்று படித்து விட்டேன் ஹி... ஹி... ஹி...///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இருவரும் என் ஆச்சிரமம் வாங்கோ உங்களுக்கு வன் வீக் கிளாஸ் எடுக்கோணும்:)) அப்போதான் டமில் ஒயுங்கா வருமாக்கும்:)) சே சே ஆசைக்கு இங்கின ஒரு பெயர் வைக்க முடியுதா இங்கின:)).. இனிமேல் கே எப்சில மக்டொனால்ஸ் ல வைக்கிற பெயர்கள் மாதிரி வாய்க்குள் நுழையாத பெயர் வைக்கோணுமாக்கும் கர்ர்ர்ர்:))..

      இதைப் படிங்கோ பார்ப்பம், நான் பாடமாக்கி எடுக்க ரெம்ம்ம்ம்ப நாளாச்சு, ஆனா இன்னமும் தடுமாறுறேன் உச்சரிக்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      //Dunelm//// haa haa haa

      Delete
    4. //நெல்லைத்தமிழன்Saturday, June 24, 2023 1:26:00 am
      அதிரா ரெசிப்பியை யார் குறை சொன்னாலும் தவறில்லை..... ஆனால் அச்சப்பம் புகழ் ஏஞ்சலின் சொல்லுவது நியாயமா?///

      ஆங்ங்ங் இது பொயிண்ட்டூஊஊஊஊஊஊஊ:) ஹா ஹா ஹா அது என்னமோ தெரியேல்லை கர்நாடாகா போனதிலிருந்து நெல்லைத்தமிழன் கரீட்டாவே பேசுறார் ஹா ஹா ஹா:))..

      நான் இத்தால் சகலருக்கும் அறியத் தருவதென்னவெனில்.. விரைவில் அச்சப்ப அச்சு வாங்கப்போறேன்ன்ன்ன்ன்.. ரெசிப்பி வெளிவருமாக்கும் ஹா ஹா ஹா:))..

      அஞ்சு, கில்லர்ஜி, நெ த அனைவருக்கும் மிக்க நன்றி.

      Delete
  38. அப்பாடா.. நான் இன்று கடைசி பெட்டியில்லை . ஒரளவு விரைவாக வந்து ஏறி விட்டேன். ஹா ஹா ஹா.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா உங்களுக்கு இம்முறை 2ண்ட் கிளாஸ்ல விண்டோ சீட் கிடைச்சிருக்குது கமலாக்கா:))

      Delete
  39. காதல் வலி, கதவிடுக்கில்்சுண்டுவிரல் நசுங்கும் வலி.... சிரிக்கலாம். ஆனால் விரல் வலி கொஞ்ச நாளில் போய்விடும். புத்திர சோகம் போல உண்மைக் காதல் வலி மனதிலேயே தங்கி, அவ்வப்போது வெளிப்பட்டு நம்மைக் கொல்லும் அல்லவா?

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ் இதுவும் கரெக்ட்டுத்தான் ஹா ஹா ஹா... ஒவ்வொரு கிட்னிக்கும் ஒவ்வொருகோணம் இருக்கும் சிந்திக்க, இதனாலதான் தனியே சிந்திப்பதை விட, சேர்ந்து சிந்திக்கும்போது ஐடியாக்கள் பலபல உருவாகும்.

      எந்த ஒரு பிரச்சனையும் இருகோடுகள்போலத்தான் நெ தமிழன், எந்தக்கோடு பெரிதாக இருக்கிறதோ அங்குதான் வலி அதிகம்போல தெரியும்.. அதேபோல, சந்தோசக்கோடு ஒன்று பெரிதாக உருவாகிவிட்டால், பழைய வலி மறைஞ்சிடும் என நினைக்கிறேன்..

      மிக்க நன்றி நெ தமிழன் மீள் வருகைகளுக்கும்.

      Delete
  40. வணக்கம் அதிரா ,வாழ்க வளமுடன்
    மிக அழகான படங்கள், படுகை படுக்கை விழக்கம் அருமை.
    பதிவில் என் பேரும் இடம்பெற்று இருக்கிறது.

    தோட்டம் படங்கள் எல்லாம் அழகு.
    ஊசிக்குறிப்பு ஊசி ஈனைப்பு எல்லாம் ரசித்தேன்.

    நானும் ஜூன் மாதம் 9 ம் தேதி வலைதளம் ஆரம்பித்தேன்.
    14 க்கு முடிந்து 15 ம் வருடத்தில் கால பதித்து இருக்கிறேன். பதிவுகள் போட வேண்டும்.

    குட்டி ஹவுஸ், டெய்சிக்கு நன்றாக இருக்கிறது வெளியே இருந்து அம்மாவை பார்ப்பது அருமை.



    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா,
      மிக நீண்ட நாட்களுக்குப் பின் இப்போதான் பதில் தருகிறேன், இவ்ளோ கொமெண்ட்ஸ் க்கு இப்படி பதில் போடாமல் எப்பவும் நான் இருந்ததில்லை, இம்முறை முடியவில்லை விட்டு விட்டேன்.. எல்லோரும் மன்னிச்சுக்கோங்கோ அதிராவை.

      ஓ உங்கட புளொக் 15 வருடத்தில் கால் பதிக்கிறதோ.. வாழ்த்துக்கள்...

      என்னுடையதும் அதேதான்.. 24 ம் ஆண்டு 16 ஆவது வருடம் நடக்கிறது.

      மிக்க நன்றி கோமதி அக்கா.

      Delete
  41. படங்கள் வெகுஅழகு!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பானு அக்கா .. மிக்க நன்றி.

      Delete

  42. வணக்கம் பூஸாரே நலமா !
    இன்றுதான் வலைப்பூ வந்தேன் ......
    பொறுத்தருள்க !

    கொஞ்சிடப் பேசும் பிள்ளை
    குணத்தினை ஒத்துப் போகும்
    வஞ்சமில் லதிரா தன்னின்
    வலைத்தளம் வந்து நோக்கப்
    பஞ்சமில் லாதி யற்கைப்
    பச்சையத் தழகி னோடு !
    அஞ்சுவின் படத்தைப் பார்த்து
    அதிர்ந்துநான் போனேன் ஐயோ !

    உடுபதி கங்கை மீதில்
    உதிப்பதைக் கண்டு பூக்கள்
    விடியலின் முன்னே பூத்து
    வீசிடும் தாது கள்போல்!
    எடுத்தநற் படங்கள் யாவும்
    என்னுளம் நிறைக்கும் காட்சி !
    குடிமையில் மேவும் மக்கள்
    கொழித்திடும் அழகைச் சொல்லும் !

    அடிக்கடி வலைப்பூ வந்து
    அருங்கவி எழுதும் ஆசை
    துடித்திடும் இதயத் துள்ளே
    தூங்கியே பலநாள் ஆச்சு !
    அடித்ததை எழுப்பும் எண்ணம்
    ஆழ்மனத் திருந்தும் ! பட்ட
    அடலையால் தூங்க வில்லை
    அறிந்தவர் அறிவர் தானே !

    திரிவேணி அதிராவின் வலைப்பூ வந்த மகிழ்வோடு
    அழகழகான படங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்
    வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் !


    ReplyDelete
    Replies
    1. பலப்பல மாதங்களுக்குப்பின் சீராளனைக் காண்பதில் மகிழ்ச்சி. கவிதை சூப்பர்

      Delete
    2. எவ்வளவு அழகா சந்தம் ஓசை நயத்துடன் சீராளன் கவிதை எழுதியிருக்கிறார். அருமை. பாராட்டுக்கள்.

      சீராளனின் அடலைகள் தீரட்டும்

      Delete
    3. வாங்கோ மேஜர் .. கவிஞர்..சீராளன்... மனமகிழ் கவிதை தந்திருக்கிறீங்கள் ஆனா நான் படிச்சிட்டேன் பதில் தரத்தான் இவ்ளோ தாமதம் மன்னிச்சுக்கோங்க:)...

      அஞ்சுவின் படம் பார்த்து மீயும் தான் ஷொக்ட் ஆகிட்டேனே ஹா ஹா ஹா, அஞ்சுவையும் காணம் :))
      மிக்க நன்றி சீராளன்..

      ----------------------------
      //சீராளனின் அடலைகள் தீரட்டும்///

      இதென்ன இது புதுச்சொல்.. என் போன்ற சுவீட் 16 கொயந்தைகளுக்குப் புரியாதெல்லோ நெ தமிழன்:))

      Delete
  43. திரிவேணி அதிரா, அமைதி அதிராவாக பெயர் மாற்றிக்கொண்டது, புதிய பதிவுகள் இப்போதைக்கு எழுதவேண்டாம் என்பதாலா

    ReplyDelete
    Replies
    1. @நெ.த//

      ஹா ஹா ஹா நிறைய மனதில அப்பப்ப தோணுது எழுதுவதற்கு, ஆனா ரைம் உம் மனதும் இடம் கொடுக்குதில்லை:(. அத்துடன் அது என்னமோ தெரியவில்லை, கொரோனாவுக்குள் எங்கும் அசையாமல் இருந்ததாலோ என்னமோ, இப்போ அடிக்கடி பயணம் வருகிறது, பிளேன் என்பது காரில் போவதுபோல இருக்கு.. சந்தோசமான விசயம்தான் ஆனா.. இவற்றால எதையும் தொடராக எடுத்துச் செல்ல முடியவில்லை.

      இன்னொன்று, புளொக்கில் ஒரு போஸ்ட் போட்டாலும், அனைவர் வீட்டுக்கும் போய்க் கொண்டிருந்தால் மட்டுமே நம்மை திரும்பிப் பார்ப்பினம், போகாது விட்டால் நம்மிடம் வரமாட்டினமெல்லோ... ஆனால் யூ ரியூப்பில் அப்படி பிரச்சனை இல்லை, என் பாட்டுக்கு வீடியோப் போட்டிட்டு என் வேலையைப் பார்க்கிறேன்... விரும்பியோர் பார்ப்பார்கள்:)).

      Delete
  44. வனவாசம் போய் ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. இணையத்துக்குத் திரும்ப இன்னும் வேளை வரவில்லையா? சீராளன் கவிதைகூட உங்களை இழுத்துவரவில்லையா?

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆ..... எங்கேயோ கேட்ட குரல்.. காசியில பார்த்த முகமாய்க் கிடக்கே:))... எத்தனையோ போராட்டங்களுக்குப் பிறகு, இன்றுதான் புளொக் வந்திருக்கிறேன்.. மன்னிச்சுக்கோங்க.. அது என்னவெனில் போனும் ஐபாட்டுடனும் யூ ரியூப் செய்துவிடுகிறேன்.. எந்த நாட்டுக்குப் போயிருந்தாலும், ஆனால் இந்த புளொக் மட்டும் வீட்டில லப்ரொப் திறந்துதான் கொமெண்ட் போட முடியுது, அதனால என்ன பண்ணுவதென விட்டு விடுகிறேன் உடன் பதில் போடாமல்...

      அதனால நெல்லைத்தமிழன் மற்றும் அனைவருக்கும் ஜொள்ள்கிறேன் ஆரும் கோச்சிக்கப்பிடாது, புளொக் வர நேரமில்லை அதிராவுக்கு ஆனா யூ ரியூப் ல மட்டும் ப்ஸ்ட் போட நேரமிருக்கோ என... கிடைக்கும் நேரத்தை அங்கு செலவிட்டு விடுகிறேன்..

      முன்பு போட்டோவாக எடுத்து இங்கு போஸ்ட் போடுவேன்.. அந்தக்காலத்தில் அது ஒரு நல்ல பொழுதுபோக்காக இருந்தது, இப்போ யூ ரியூப் மனதுக்கு இதமாக இருக்கிறது அவ்ளோதான்.. கொஞ்சம் முன்னேறியிருக்கிறானாக்கும் .."முற்றும் துறந்த.. சே சே டங்கு ஸ்லிப்பாகுதே.. முற்றும் அறிஞ்ச அதிரா":)..

      நன்றி நெல்லைத்தமிழன் தேடி வந்து கொமெண்ட் போட்டமைக்கு... இப்பவும் சொல்கிறேன், முடியும்போது புளொக் வருவேனாக்கும்:))

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.