நல்வரவு_()_


Tuesday 26 July 2011

வன்.. ரூஊஊ.. த்றீஈஈஈஈ... ந.. நோ நோ நொட்ஸ்ஸ்ஸ்ஸ்:)).

என்னையும்...தேன்ன்ன்ன்ன்ன்:)))


என்னை தொடர் பதிவு எழுத அழைத்த கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அஞ்சலினுக்கு மிக்க நன்றி.
அத்தோடு, நான் அழைத்து:), ஓடிவந்து எழுந்தப்போகும் “அந்த ..... க்கும்” மிக்க நன்றி. ஹா...ஹா...ஹா.... இப்போ, கீழ போய்ப் பார்த்திடாதீங்க மக்கள்ஸ்ஸ்:), முழுவதையும் படிச்சிட்டு, அப்புறமா பாருங்க ஓக்கை:)).
--------------------------------------------------------------------------------------------
முத்துக்கு முத்தாக சொத்துக்குச் சொத்தாக அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக
--------------------------------------------------------------------------------------------


1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?          

1. குடும்பத்தோடு நீண்டதூரம் காரில் “றைவ்” போவது.

2. நல்ல சோவெண்ட மழை அல்லது ஸ்ஸ்ஸ்னோ நாளாக இருக்க வேண்டும், ஸ்கூல், வேர்க் எதுவும் இருக்கப்படாது:), விரதம் இல்லாத நாளாகவும் இருக்க வேண்டும், நல்ல வடிவா சமைத்துச் சாப்பிட்டுப்போட்டு, படம் பார்த்து... கூத்துப்போடுவது(வீட்டுக்குள்ளேயே) ரொம்பவும் பிடிக்கும்.

3. காலையில் பரபரப்பாக எழுந்து, ரீ, உணவு கொடுத்து, வெளிக்கிடப்பண்ணி டாட்டா சொல்லி அனைவரையும் அனுப்பியபின், ஒரு மயான அமைதி வீட்டில் நிலவும்,அப்போது ஒரு கப் ரீ ஊத்திக்கொண்டு, சோபாவில் இருந்து வெளியே ஆற்றைப்பார்த்துக்கொண்டு, மெல்லமாக பாடலை சிடியில் போட்டுக் கேட்டுக்கொண்டு ஒரு 15 நிமிடமாவது இருக்கும்போது..... அதுவும் பிடிக்கும்....

இன்னும் நிறையப் பிடிக்கும்... ஆனா வாணாமாம்:)), சொல்லப்பிடாதாம்:) 3 போதுமாமே.
--------------------------------------------------------------------------------------------
ஆகாயப் பந்தலிலே.. பொன்னூஞ்சல் ஆடுதம்மா 
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா
--------------------------------------------------------------------------------------------
2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?
1.இழப்பு(எந்த இழப்பாயினும், உயிர், பணம், பதவி, பெயர், புகழ், நல்லபெயர்...). பிறந்ததிலிருந்து எதுவும் இல்லாமல் இருக்கலாம், ஆனால் இருந்ததை இழந்திடக்கூடாது!!!!.

2. காரணமின்றி தொட்டதுக்கெல்லாம்,கோபித்து, முகத்தை உம் என வைத்திருப்பது..... பிடிக்கவே பிடிக்காது. நேரே கதைத்துப் பேசி கிளியராகிட வேண்டும், மனதில் வைத்துக் கடைந்து, பின் சாதிப்பது.

3.  “அடி நாக்கில் நஞ்சும் நுனி நாக்கில் தேனும்” என்பார்களே.... அப்படியானவர்களைப் பிடிக்காது, ஆனா அப்படியானவர்களை என்னால் உடனே கண்டு பிடிக்கவும் முடியாது:(. சரியோ தப்போ, நேரே வெளிப்படையாகப் பேசுவதே பிடிக்கும்.
--------------------------------------------------------------------------------------------
பறவையின் சிறகுகள் விரிந்தால்தான்  
வானத்தில் அது பறக்கும்
--------------------------------------------------------------------------------------------

3) பயப்படும் மூன்று விஷயங்கள்
1.பிறந்ததிலிருந்து இன்றுவரை முன்னுக்கு இருப்பது, “பயம்” தான். இருட்டென்றாலே பயம். இரவில் ஏதும் சத்தம் கேட்டால்.. இதயம்... புஸுக் பூஸ் என அடிக்காது:)... டொமார்:)... டொமார்:) என அடிக்கும்... காதில் அந்த ஒலி பலமாகக் கேட்கும்.

2. மது அருந்தியோர்.... அவர்களுக்கு வெறி இல்லையென்றாலும், மணம் அவர்களிலிருந்து வருகிறதென்றால் பயம். இங்கெல்லாம் அப்படிக் காணவில்லை. ஆனா இலங்கையில் ஆராவது குடித்துவிட்டு கொஞ்சம் தள்ளாடிக்கொண்டு வருவதுபோல தெரிந்தாலே பாதை மாத்தி ஓடிவிடுவேன். இங்கு ரோட்டோரங்களில்அடிக்கடி barஇருக்கும். அதன் வாசலில் சிலர் நின்று கதைப்பார்கள், அவர்களைக் கடக்கும்போது நெஞ்சு பக் பக் என அடிக்கும்(ஆனா அவர்கள் குடிக்காமலும் நிற்கக்கூடும், என் மனப்பயத்தை நீக்க முடியவில்லை).

3. ஊர்வனவற்றைப் பார்த்தால் பயம், ஏன் நினைக்கவே பயம்(மண்புழு, அனைத்து நெளியும் புழுக்களும்,மசுக்குட்டி, ஸ்லக்... இப்படியானவை). ரீவியில் காட்டினாலே கண்ணை மூடிவிடுவேன். இது தெரிந்தே என் மகன், என்னிடம் கேட்பார்.. அம்மா வன் மில்லியன் பவுண்ட்ஸ் தருகிறேன் என்றால் மண்புழுவைப் பிடிப்பீங்களோ என...:))).... அதைக் கேட்டாலே உடம்பெல்லாம் கூசும்.
--------------------------------------------------------------------------------------------
கடவுள் நினைத்தான் மணநாள் தொடுத்தான் வாழ்க்கை  உண்டானதே 
கண்ணே நீ வாழ்கவே!!! கலைமகளே நீ வாழ்கவே!!
--------------------------------------------------------------------------------------------

4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?
1. மரணம் ஏன் வரவேண்டும்? சரி ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல், வயதாகி வரலாம்... சின்னச் சின்ன பிஞ்சுகளுக்கெல்லாம் ஏன் வரவேண்டும்?.

2. எம் பிறப்புக்கு முன் எப்படி இருந்தோம்? மரணித்த பின் எப்படி இருப்போம்? இப்போதுள்ள வாழ்க்கை மரணத்தின் பின்பும் எமக்குத் தெரியுமா? அங்கே என்ன நடக்கிறது?. இப்போ நடக்கும் நல்லது கெட்டதுக்கெல்லாம் விதி என்கிறோம். ஒரு தடவை இலங்கையிலே இலங்கை/இந்திய ராணுவம் கடுமையாக தாக்கிக் கொண்டிருந்தவேளை, விசாரணை எனக் கூறி 35 ஆண்களை மட்டும் அழைத்துச் சென்று, ஒரு சுடலைக் காட்டிலே அத்தனை பேரையும் சுட்டு, எரித்தார்கள், அதில் கிட்டத்தட்ட 30 பேர் திருமணமானோராம், அப்போ ஒரே நேரத்திலே 30 குடும்பத்துக்கு தந்தை இல்லை கணவன் இல்லை.....

இதுவெல்லாம் விதியா? ஏன் இப்படியெல்லாம் நடக்க வேண்டும்?. (சுனாமி... இப்படியெல்லாம் பல கதைகள் இருக்குதுதானே, ஆனா சின்னனில் நான் கேட்டு ரத்தம் உறந்துபோன கதைதான் நினைவில் இருக்கு.. எங்கள் வீட்டிலிருந்து ஒரு 10 மைல் தொலைவில் நடந்த சம்பவம்தான் அது).
    
3. நன்மை செய்வோர், நல்லவர்கள், கண் முன்னே துன்பம் அனுபவிக்கிறார்கள், கஸ்டப்படுகிறார்கள். ஆனால் பொல்லாதவர்கள், அடுத்தவருக்கு 5 சதம்கூட உதவி செய்யாதவர்கள், அடுத்தவர் குடும்பத்தை நாசமாக்கியோர்.. இவர்களெல்லாம் நல்லா இருக்கிறார்கள்... இது எப்படி?.

இவை எல்லாம் முற்பிறவிப் பயன் என்கிறார்கள். ஆனாமுற்பிறவி என்று ஒன்று இருந்ததென எப்படிச் சொல்ல முடியும், கொஞ்சமாவது எமக்கு முற்பிறப்பு நினைவிருக்கோ? இல்லையே?....

இதில் கொஞ்ச நஞ்சமல்ல... நிறையவே குழப்பங்கள் கேள்விகள் என்னிடம் இருக்கு. ஆராவது நல்ல பதில் சொல்லும்போது, விடை கிடைத்துவிட்டதுபோல இருக்கும்,

ஆனா மீண்டும் மனம் குழம்பிப்போய்க் கேள்விகள் கேட்கும்.
--------------------------------------------------------------------------------------------
முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ 
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ
--------------------------------------------------------------------------------------------

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?

ஒவ்வொன்றுக்கும் என ஒவ்வொரு மேசை இருக்கிறது, அதற்குரிய பொருட்கள் தவிர்த்து, மேசையில் எதுவும் வைப்பது பிடிக்காது. கொம்பியூட்டர் மேசை எனில்,அதற்குரிய பொருட்களே இருக்க வேண்டும், ஹோலில், கிச்சினில் எனில் ஒரு அழகிய வாஸ் மட்டுமே வைப்பேன்.

எந்த வேலையாயினும், மேசையில் வைத்துச் செய்து முடித்ததும், அனைத்தையும் தூக்கி உள்ளே வைத்துவிட்டு மேசையை ஃபிரீயாக வைத்திருப்பதையே விரும்புவேன்... ஆனா அதையும் மீறி.. பென்சில் ரேசர்... கொப்பி, புத்தகம்.. etc..etc.. அப்பப்ப:) தென்படும்.

--------------------------------------------------------------------------------------------
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாயது காலங்களும் நேரங்களும்   கலைத்தாலும் கலையாதது
--------------------------------------------------------------------------------------------

6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?

எனக்கு + என் குடும்பத்துக்கு நகைச்சுவை என்றாலே.. அது யார் சொன்னாலென்ன... பிடிக்கும். வீட்டிலேயே மிகவும் நகைச்சுவையாளர் என் கணவர்தான். எதையாவது சொல்லி சிரிப்புக் காட்டிக்கொண்டே இருப்பார். எம்மிடம் வருவோர் சொல்வார்கள், உங்கள் வீட்டில் இருந்தால் நேரம் போனதே தெரியாமல் சிரித்துவிட்டோம் என...

நிறைய வாசிப்பார்... கேட்பார்(மீடியாக்கள்) பின் மறக்காமல் சொல்வார். அதனால் வீட்டில் ஒரு ஆசைக்குக்கூட கோபிக்க முடியாமல் இருக்கும்:), கோபம் வந்தால் (எனக்கு:)) எதையாவது சொல்லி சிரிப்பாக்கிடுவார்.

எங்களுக்கென குடும்பப் பழமொழி இயற்றி வைத்திருக்கிறோம்:).... அது “No வெட்கம் No ரோஷம்”:). ஆருக்காவது எமக்குக் கோபம் வந்தால், குடும்பப் பழமொழியை மறந்து கோபிக்கலாமோ எனக் கேட்டே சிரித்திடுவோம்.. ரோஷம் இருந்தால்தானே கோபம் வரும்?:)))). இப்பழமொழியால் வெளியாட்களோடு எமக்கு கொஞ்சம் கோபமாக வந்தாலும், எமக்குத்தான் நோ வெட்கம், நோ ரோஷமாச்சே, பிறகெதுக்கு கோபிக்கவேண்டும் என எமக்குள் நாமே சொல்லி மனதை மாற வைத்திடுவோம்:).

புளொக்குகளிலும் பல நகைச்சுவைப் பின்னூட்டங்கள், பல பதிவுகள் பார்த்து விழுந்தூஊஊஊஊஊ விழுந்தூஊஊ சிரிப்பதுண்டு... நல்லவேளை அடிகிடி எப்போதும் படவேயில்லை விழுந்ததால:))).
--------------------------------------------------------------------------------------------
காற்றினில் பிறந்தவளோ அதிலே கற்பனை வடித்தவளோ 
சேற்றில் மலர்ந்த  செந்தாமரையோ செவ்வந்திப் பூச்சரமோ
--------------------------------------------------------------------------------------------

7)தாங்கள் தற்போது செய்து கொண்டு  இருக்கும் மூன்று காரியங்கள்?
1. கோடை என்பதால் கார்டினிங்..
                                                                              
2. பெயிண்டிங் + பூப்போடும் வேலை ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கு.(தனிப்பதிவாக பின்பு படம் போடுகிறேன்).

3. மீன் தொட்டியில் மீன்கள் வளர்ப்பது(தண்ணி மாத்துவது, லைட் போடுவது, சாப்பாடு போடுவது அனைத்தும் என் வேலைதான்:)) . நான் வீட்டில் இல்லையெனில் அவை பட்டினிதான்:)).





--------------------------------------------------------------------------------------------
விழியே கதை எழுது  கண்ணீரில் எழுதாதே..
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி  
உனக்காகவே நான் வாழ்கிறேன்
--------------------------------------------------------------------------------------------


8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
வாழ்நாள் எப்ப முடியப்போகுதெண்டே தெரியாதே..2012 இல் உலகம் அழியப்போகுதாமே:)))... அதுக்குள் மனதில்/கைவசம் இருக்கும் பொக்கிஷங்களை புளொக்கில ஆவது எழுதிடோணும் என எதிர்பார்க்கிறேன் அவ்வ்வ்வ்வ்வ்:)).


ஒரு தடவையாவது, பிளேனில பைலட் சீட்ல இருந்து பயணம் செய்யோணும்(அதொன்றுதான் பார்க்காத சீட்).

நிறைவேற முடியாத ஆசை ஒன்றிருக்கு.... விண்வெளியில போய் நடக்க ஆசை:)). எனக்கு ஸ்பேஸ் புரோகிராம் எண்டால்... நித்திரைகொள்ளாமல் பார்ப்பேன்..

-------------------------------------------------------------------------------------------
பாரம்மா பறவைக்கும் பாசங்கள் இருக்கின்றது 
பறந்தோடி இரை தேடி  பிள்ளைக்குக் கொடுக்கின்றது
--------------------------------------------------------------------------------------------

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?

நிறையவே பயப்படுவேன், ஆனால் எந்த விஷயமாயினும் செய்து முடித்துவிடுவேன், முடியாதென பெரிதாக எதுவும் சொல்ல மாட்டேன், கண் பார்த்தால் கை செய்யும்.

சமையல், தையல், பூப் போடுதல், பெயிண்டிங், சில கைவினைப் பொருட்கள் செய்தல், பெட்டி,  பின்னுதல்(இப்போ கொஞ்சம் மறந்திருக்கிறேன்)... இவை எல்லாம் வகுப்புப் போய் பழகவில்லை, எல்லாம் பார்த்துக் கேட்டு அறிந்து செய்பவையே....

இன்னுமொன்று சூஊஊஊப்பராகப் பாடுவேனே நான்:)))))))))))))))))))...
சிந்து சிந்து நான் ஒரு சிந்து....
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓஓஓஓஓஓ மைனா ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ மைனா.... கேட்குதோஒ? நான் பாடுவது? சூப்பராக இருக்கில்ல?:)))... சரி சரி முறைக்காதீங்கோ கர்ர்ர்ர்ர்:)).
 
--------------------------------------------------------------------------------------------
மனதாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்  திருக்கோயிலே ஓடிவா
--------------------------------------------------------------------------------------------
 

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?

 1. ஆராக இருப்பினும்... சிறியவரோ பெரியவரோ ... இறந்துவிட்ட செய்தி...         உடனே ஒருகணம் இதயம் டிக் என ஸ்தம்பித்து அடிக்கும்.
 2. வாய் கூசாமல், தேவையில்லாமல் சொல்லும் பொய்கள், சடாரென முகத்திலடிப்பதுபோல, அன்பில்லாதமாதிரி, அன்பாக இருப்போர் கூறினால் ..
 3. தேவையில்லாத:)))), நமக்கு உபயோகமே இல்லாத அடுத்தோரைப் பற்றிய   விடுப்ஸ்:) செய்திகள்.
--------------------------------------------------------------------------------------------
சிறிதாக வரைந்தாலும் பெரிதாக வரைந்தாலும்
பூஜ்யத்தில் பெருசெல்லாம் மதிப்பா என்ன

--------------------------------------------------------------------------------------------


11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
 கற்றுக்கொள்ள நிறையவே இருக்கு, கற்றது கை மண் அளவுகூட இல்லையே, ஆனால் குறிப்பிட்டுச் சொல்ல எதுவுமில்லை.
--------------------------------------------------------------------------------------------
மடியில் பிறந்த நதியை மலைகள்
மறைத்து வைப்பதும் இல்லை
செடியில் பிறந்த மலரைச் செடிகள்
சிறையில் வைப்பதும் இல்லை
--------------------------------------------------------------------------------------------


12) பிடிச்ச மூன்று உணவு வகை?
   
 1. சைனீஸ் உணவுகளே முதலிடத்தில் பிடிக்கும்.

  2. KFC சிக்கின்:)

 3. அவித்த கோழி முட்டை(ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆஆ:))). சைவ உணவுகள் பிடிப்பது குறைவு:(, ஆனா நிறைய நாட்கள் சைவமாக இருப்போம்(கோயில்கள்,விரதங்கள்).

அசைவ உணவுகள்தான் பிடிக்கும் அதிலும் மட்டின்தான் அதிகம் பிடிக்கும்...
--------------------------------------------------------------------------------------------
கங்கைக் கரைக் கோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் 
கண்ணன் நடுவினிலே கண் திறந்து பார்த்தேன்  
கண்ணன் அங்கு இல்லை கண்ணீர் பெருகியதே
--------------------------------------------------------------------------------------------
  
13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?

 அப்படியெல்லாம் முணுமுணுக்கமாட்டேன்:))). பிடித்த பாடல்கள் பல உண்டு.. குறிப்பிட்டு எதைச் சொல்வேன் எதை விடுவேன்....
10 வயதாக இருந்தபோது கேட்ட பாடல்கள்... சூப்பராக இருந்தன... இப்பவும்தான், அதேபோல 20 வயதாக இருந்தபோது வெளிவந்த பாடல்கள் அவையும் சூப்பரே... அதேஏஏஏஏஏபோல இப்போ சுவீட்16:) இல் இருக்கும்போது பல அருமையான பாடல்கள்.. பிடிச்சிருக்கு ... குறிப்பிட்டுச் சொல்ல எதுவுமில்லை... சில சம்பவங்களைப் பார்க்கும்போது என்னையறியாமலே, அதுக்குப் பொருத்தமான பாடல்வரிகள் என் வாயில் வந்துவிடுவதுண்டு.

--------------------------------------------------------------------------------------------
நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே 
நிழலைப் பார்த்துப் பூமி சொன்னது என்னைத் தொடாதே
--------------------------------------------------------------------------------------------

14) பிடித்த மூன்று படங்கள்?

  1. ஆங்கிலம், 2.தமிழ் தவிர வேறு எந்த மொழிப்படமும் பார்த்ததில்லை. வாழ்க்கையிலே முதலும் கடைசியுமாக முழுவதுமாகப் பார்த்த 3.ஹிந்திப்படம் “அபிமான்”. பலபேர் பார்க்கச் சொல்லி வற்புறுத்தியமையால் பார்த்தேன்.

வீட்டிலும் பார்ப்போம், தியேட்டருக்கு வரும் ஆங்கிலப் படங்கள், நான் மறுத்தாலும் கணவர் விடமாட்டார், கழுத்திலே கயிறு போடாத குறையாக:)) என்னையும் கூட்டிப்போய் இருத்தினால்தான் நிம்மதி:). ரிவியூ பார்த்து, நல்லகதை எனில் போய்ப் பார்ப்போம். பல நல்ல படங்கள் பிடிச்சிருக்கு.. (Geisha..., மம்மா மியா, ........,).

எனக்கோ தியேட்டரைப் பார்த்தாலே நித்திரை வந்துவிடும், பறவாயில்லை வாங்கோ எனக் கூட்டிப்போவார்கள்,(சின்னவர்களின் படங்களுக்கும்) பெரியவர் சொல்வார் நான் பில்லோ கொண்டு வாறேன், நீங்கள் படுங்கோ என, சின்னவர் சொன்னார், காலை என் மடிமீது போட்டு நீங்க நித்திரை கொள்ளுங்கோ, அங்கு அவர்கள் ஏசமாட்டார்கள்:) என்று...இப்படியே தொடரும் என் தியேட்டர் கதை:).

  ரஜனியின் “சிவாஜி” வெளிவந்தபோது, கனடாவில் நின்றோம், கணவருக்கு ரஜனி என்றால் பிடிக்கும். சரி இதை நிட்சயம் பார்க்கவேண்டும் தியேட்டரில் என, ரொறொன்ரோவில் ஒரு பெரீஈஈய ஸ்கிரீன் உள்ளதாக ஒன்றுக்குப் போனோம்.... இருவரும் மட்டுமே போனோம், மெட்னிக்கு. போகப்போக எனக்கு காதில் ஒரே ஓதல்:)... நித்திரை கொண்டிடாதையுங்கோ நல்ல படமாம், முளுவதும் பார்க்கவேண்டும் எண்டெல்லாம்.. நான் நித்திரையாகாமலிருக்க, பேகர், பொப்கோர்ன்.... யூஸ் எல்லாம் வாங்கித்தந்து... உள்ளே போய் இருந்தோம், சூப்பரான புதுத் தியேட்டர்... படமும் சூப்பராகப் போனது.

இடையில் “இடைவேளை” வந்ததாக நினைவு, ரஜனியின் முகம் சிங்கம்போல மாறுவதாகப் பார்த்த நினைவு, அதன்பின் சண்டைப்படம்போல மாறியதுபோல ஒரு உணர்வு..... இடையிடையே ஆரோ:) தட்டிஎழுப்பியதாக:) கனவு...

கண்விழித்தேன் படம் முடிந்திருந்தது.... எவ்வ்ளோ ஹப்பியாக இருந்துது தெரியுமோ.... அப்பாடா படம் முடிஞ்சுபோச்ச்ச்ச்ச் எண்டு.

இதுக்கு மேலும் என்னிடம் படம் பற்றிக் கேட்க ஆசைப் படுறீங்களோ?:)))).
--------------------------------------------------------------------------------------------
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் நீரலைகள்
நீரினிலே நெஞ்சிரண்டில் நினைவலைகள்

--------------------------------------------------------------------------------------------

15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்றுவிஷயம்?
  1. அன்பு
  2. அரவணைப்பு
  3. ஆறுதல்
(இவை இல்லையெனில் என்னால் தாக்குப் பிடிக்கவே முடியாது, துவண்டு போய்விடுவேன்) ஒரு மனிதனுடைய அடிப்படைத் தேவைகளை அடுத்து, இவை    மூன்றும் கிடைத்தால் மட்டுமே(அது குடும்பத்திடமிருந்து, சொந்த பந்தத்திடமிருந்து, நட்புகளிடமிருந்து) என்னால் ஒரு மனிதனாக இருக்க முடியும்.

பணம், பதவி இல்லாமல்கூட இருந்திடலாம், ஆனா இந்த அன்பு, பாசம், ஆறுதல் கிடைக்கவில்லையெனில், எழுந்து நிற்கவே முடியாது, துவண்டு போகும் நேரத்தில் ஒருவரை தூக்கி நிறுத்துவது பணம் அல்ல, இவை மூன்றும்தான்.  இன்றுகூட ரீவியில் சொன்னார்கள், குழந்தைகள் இல்லத்துக்கு பணம் கொடுப்பது பெரிய உதவியல்ல...

ஒரு இரண்டு மணித்தியாலம் அங்குபோய் அக்குழந்தைகளைத் தடவிக் கொடுத்து கதை சொல்லி வாருங்கள், அதில்தான் அவர்களின் எதிர்காலமே மிளிரும் என.

ஒன்றைக் கொடுத்தால் பத்து மடங்காகத் திரும்பிக் கிடைப்பது.... இந்த அன்பு பாசம்தான். காசா பணமா? எதுக்கு யோசிக்க வேண்டும், தாராளமாகக் கொடுக்கலாமே.
  
--------------------------------------------------------------------------------------------
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு 

மலையை மூடப் பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

--------------------------------------------------------------------------------------------

16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?
ஆஆஆஆஆஆஆஆ பொயிண்டுக்கு வந்தாச்ச்ச்ச்ச்ச்ச்:))).
எனக்கு மயிலுக்கு மேல மயில்கள்:)))) வந்து என் உள்பெட்டியே:)))(அதுதாங்க inbox:)) முட்டி வழியுது:). என்னவென்று கேட்கிறீங்களோ?:))). இனிமேலும் என்னைத் தொடர்ப்பதிவுக்கு அழைப்பீங்களோ?:))).. அழைத்தால் கொலை பண்ணிடுவேன்.. புளொக்கை டிலீட் :) பண்ணிடுவேன்... அப்பூடி இப்பூடியெண்டு அப்பப்பா சொல்லமுடியாத கடிதங்கள்:))).. என்னை மிரட்டீஈஈஈஈஈஈஈஈனம்:))).... அதால நான் இம்முறை அழைக்கப்போவது....

 இ..... இல்லை இல்ல... நான் ஒண்ணுமே சொல்லல்ல்லலலலலலல:), ஸா .அ ..கடவுளே... சும்மா உச்சரிக்கிறேன்...,  வா... ஆஆஆஆஆஆ வாயில வந்திட்டுதூஊஊஊ..., ம..... ஹையோ நான் என்ன பண்ணுவேன்...., ஜல்.அ.. என்னை விட்டிடுங்கோ நான் ஓடிடுன்ன்ன் ஜெ..... ஆஆஆ... சும்மா ஒரு ஆசையில சொல்லிப்பார்த்தேன் மீண்டும் தண்ணிக்குள்ள போயிட வாணாம்....

வெரி வெரி சொறி... நான் ஆரையுமே அழைக்கவில்லையே இம்முறை:), அதிரா ரொம்ப நல்ல பொண்ணு:) ஆறு வயசிலிருந்தே:))))) அவ்வ்வ்வ்வ்வ்.

--------------------------------------------------------------------------------------------
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்தும் என்ன 
வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்
--------------------------------------------------------------------------------------------


பின்குறிப்பு:
பதிவுக்கும் பாடல் வரிகளுக்கும் சம்பந்தம் இல்லை... மனதுக்குப் பிடித்த வரிகளை அங்கின இணைத்திருக்கிறேன். முணுமுணுக்கும் பாடல் பற்றிக் கேட்டிருப்பதால் இப்பூடியெல்லாம் ஐடியா கிட்னியில் வந்துச்சா... எழுதிட்டேன். சே..சே.. சம்பந்தம் பற்றிப் பேசவைக்கிறாங்களே என்னை அடிக்கடி அவ்வ்வ்வ்வ்:))).


ஊசி இணைப்பு:
நீங்களே சொல்லுங்க மக்கள்ஸ்ஸ்ஸ்:)) அன்பாக் கூப்பிட்டாச்சு:), பாசமாக் கூப்பிட்டாச்சு:), மிரட்டியும் கூப்பிட்டாச்சு:)).... இனி அதிரடித் தாக்குதல்தான்:)))... இனியாவது வருவினமோ பார்ப்பம்:)))


 ==========================================================
பெளணமி நேரம் பாவை ஒருத்தி மின்னல் போலே 
முன்னால் போனாள் பின்னல் கண்டு பின்னால் சென்றேன் 
பொண்ணு ஊருக்குப் புதுசோ என்றேன்
காலில் உள்ளது புதுசூஊஊஊ என்றாள் 
ஓ மேலே கேட்காதே..
==========================================================


Friday 15 July 2011

அந்தநாள் ஞாபகம்:))



தலைப்பைப் பார்த்ததும், முன்பு ஐ லவ் யூ எண்டு தலைப்புப் போட்டா, இப்போ அந்தநாள் ஞாபகமாம்:), அதிரா ஏதோ அண்டவாளம் தண்டவாளம் எல்லாம் அவிழ்த்து விடப்போறாவாக்கும் என, வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்திருப்பீங்கள்:), முதல்ல இந்தாங்கோ இதைக் குடியுங்கோ... நிறைய ஐஸ் கட்டிகள் போட்டு கூலான மோர்:), ஏனெண்டால் கூல் வோட்டர் குடித்தால்/குளித்தால் கோபம் வராதாம்:) ஸாதிகா அக்கா சொல்லியிருக்கிறா.

வடிவா வயிறுமுட்டக் குடிச்சுப் போட்டுப் பதிவைப் படிக்கத் தொடங்குங்கோ, அப்பத்தான் இதெல்லாம் ஒரு பதிவோ எனக் கோபிக்க மாட்டீங்கள்:).

எங்கட “இளைய தளபதி நிரூபன்”, எனக்கு வெற்றிலை பாக்கெல்லாம்:) வச்சு அழைப்பு விடுத்திருந்தார் (தொட்டதுக்கெல்லாம் முறைக்கப்பிடா.. முதல்ல கண்ணாடில முகத்தைப் பாருங்கோ..ஸா.அ. சொல்லியிருக்கிறா:)) “நண்பேண்டா” தலைப்பில் தொடரும்படி.


ஆனா நான் என் நட்புக்கள்பற்றி பல விஷயங்கள் “அங்கின (டோண்ட் டச் கியர்:))” எழுதியிருக்கிறேன், நேரமுள்ள்போது, விரும்பினால், ஒரு எட்டுப் போய்ப் பார்த்திட்டு வாங்கோவன்.... காசா பணமா?:).  “இங்கின”யும் என் நண்பி பற்றிச் சொல்லியிருக்கிறன்... ஆனா..

இப்போ என்னிடம் இருப்பது, நட்புக்களின் சில மறக்கமுடியாத நினைவுகள், அவற்றையே பகிர்ந்து கொள்கிறேன்.. நன்றி நிரூபன்.

என் பேபிக்காலத்து நினைவுகளை மட்டுமே சொல்லுவன், பின் காலங்களைச் சொல்லமாட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))).




நான் படித்த பிறைமறி ஸ்கூல், ஆண்+பெண் பாடசாலை. வகுப்பிலே குரூப் குரூப்பாகப் பிரித்துத்தான் இருந்தோம். என் குரூப்பில் 4 boys.... A,B,C,D.

A எப்பவும் நகைச்சுவையாளன்(எங்கள் பக்கத்து வீடு), சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார், கையைக் காட்டுங்கோ எனச் சொல்லி, அனைவருக்கும் கைரேகை சாத்திரம் சொல்வது இவருக்குப் பொழுது போக்கு.

ஒரு தடவை, நண்பியொருவரின் கொப்பியினுள் இருந்த ஒரு கடித்தத்தை எடுத்து ஆருக்கும் தெரியாமல் படித்துப்போட்டு,அந்த நண்பிக்குச் சாத்திரம் சொன்னார் (கடிதத்தில் இருந்த தகவல் பற்றி), நண்பி ஷொக்ட் ஆகிட்டா... எங்களுக்கெல்லாம் சொன்னா... உண்மையெல்லாம் சொல்கிறார் என,  நாங்களும் ஏங்கிட்டோம் (8 வயதுதானே அப்போ:)). பின்பு A தானாகவே உண்மையைச் சொல்லிச் சிரித்தார்.

இப்போது அவர் குடும்பத்தோடு வெளிநாட்டில்தான் இருக்கிறார்,  அதே நகைச்சுவையோடயே இருக்கிறார். ஒரு தடவை நாமும் மீற் பண்ணியிருக்கிறோம், இனியும் சந்திக்கலாம்.

B எப்பவும் போட்டி போட்டுப் படிப்பார். நாங்கள் எல்லோரும் ஒன்றாக விளையாடுவோம், பகிர்ந்து சாப்பிடுவோம். ஒருநாள் எங்கள் வகுப்புச் ரீச்சர் எம்மைப் பார்த்துச் சும்மா சொன்னா, “ பெரியாட்களானதும், B ஜீன்சுடன் போவார், அதிரா அவரைப் பார்க்கவே வெட்கப்படுவா” என்று:).

5ம் தரப் புலமைப் பரிட்சை(ஸ்கொலசிப்) வந்தது, எங்கள் வகுப்பில் எனக்கு 200 க்கு 194 புள்ளிகள், B க்கு 160 என நினைக்கிறேன், இருவரும்தான் பாஸ் பண்ணினோம் எங்கள் ஸ்கூலிலேயே.

அத்தோடு B ஆண்கள் பாடசாலைக்கும், நான் பெண்கள் பாடசாலைக்கும் போய்விட்டோம். இடையில் சந்திக்கவேயில்லை. உயர்தர வகுப்பிலிருந்தபோது, Double Maths  க்காக ரியூசன் சென்ரர் போனபோது, B உம் வந்திருப்பதைக் கண்டேன், நல்ல உயரமாக, ஜீன்ஸ்:) போட்டிருந்தார்.

வகுப்பு முடிந்து வெளியே வந்ததும், ஹலோ அதிரா எப்படி இருக்கிறீங்க எனக் கேட்டார், நானும் மரியாதையாக ஓரிரு சொற்கள் பேசிவிட்டு விலத்திவிட்டோம்,,, அதன்பின் கதைத்ததாக நினைவில்லை. தொடர்ந்து கதைத்தால், சும்மாவே பெயர் சூட்டி, ரோட்டால் போய்வரும்போது கூப்பிடுவார்கள் என்று பயம்.  ஆனா ரீச்சர் அன்று சொன்னது நினைவு வந்தது.

C நல்ல கெட்டிக்காரனாகத்தான் படித்தார், ஆனா பின்பு கேள்விப்பட்டேன், சின்ன வயதிலிருந்தே அவருக்கு இதயத்தில் துவாரம் இருந்ததாகவும், 16 வயதில் இறந்துவிட்டதாகவும்:(.

D படிப்புக் குறைவு(C இன் உறவுக்காரன்), மிகவும் அமைதி, சரியான சொவ்ட். 5ம் வகுப்பில் விலத்திய பின், 19ஆவது வயதில் ஒரு கோயிலில் எதிர்பாராமல் சந்தித்தோம், நன்கு கதைத்தார்.

அது முடிஞ்சு போச்ச்ச்ச்ச்ச்ச்:).

பின்பு ஹொஸ்டலில் இருந்த காலத்தில், என் வகுப்புக்குக் கீழ் வகுப்பில், “பாரதி” நான் செல்லமாக “பார்(Bar)” என அழைப்பேன் அவவை. என்னோடு வலு ஒட்டு, எப்பவும் அதிராக்கா என்றே ஒட்டாக இருப்பா. பின்புதான் கண்டு பிடித்தோம், அவ என்னைவிட 8 நாட்கள் வயதில் மூத்தவ. ஆனா எனக்கு டபிள் புரொமோஷன் கிடைத்திருந்தமையால், ஒரு வகுப்பு அதிகமாகப் படித்து வந்தேன். வயது தெரிந்த பின்பும், அவ என்னை அக்கா என அழைப்பதை நிறுத்தவில்லை, நானும் அவவுக்கு பொஸ்:) ஆக இருப்பதை நிறுத்தவில்லை.

அவ வகுப்பில் நல்ல கெட்டிக்காரி. என்னைப்போலவே கதை கவிதை எழுதுவா:)), பொன் மொழிகள், பழமொழிகள் சேகரிப்பா. நான் அவவுக்கு கண்ணதாசனின் எழுத்துக்கள் பற்றி நிறையக் கூறுவேன். காதலில் சிக்கிடக்கூடாது, நன்கு படிக்க வேண்டும் என அறிவுரை:) எல்லாம் சொல்வேன்.

நான் சொல்வதை அப்படியே கேட்டு நடப்பா. என் பேச்சுக்கு மறுபேச்சே சொல்ல மாட்டா, அவவின் பிறந்த எண்ணும், என் பிறந்த எண்ணும் ஒன்றுதான்:). ஆனா அவ எனக்கு ஒரு வகுப்பு கீழே என்பதால், ஹொஸ்டலில் மட்டும்தான் என்னோடு, வகுப்பில், ரியூசன் எல்லாம் வேறொரு நண்பியோடுதான்.

இடையிலே அறிந்தேன், தன் வகுப்பிலே படிக்கும் ஒருவரை இவ விரும்புவதாக. கூப்பிட்டுக் கேட்டேன், இல்லையக்கா அது நண்பிகள் சும்மா பகிடி பண்ணுகிறார்கள் என்றிட்டா. இவவோடு கூடவே திரியும் இவவின் நண்பிக்கும்(மிகவும் அழகானவ), அதே வகுப்பில் இன்னொருவரோடு காஆஆஆதலாம் எனவும் அறிந்தேன்.

நான், இந்த “பார்” க்கு எவ்வளவோ எடுத்துச் சொன்னேன், இப்போ 9ம் வகுப்பில் இருக்கிறீங்க, அந்த boy உம் 9ம் வகுப்பு, இந்தக் காதல் எங்கே வருங்காலம் எங்கே... இது எதிலபோய் முடியப்போகிறது, அப்பா அம்மா உங்களை நம்பியெல்லோ ஹொஸ்டலில் விட்டுப் படிப்பிக்கினம், இதையெல்லாம் விட்டுப் போட்டு ஒழுங்காப் படியுங்கோ என. அனைத்துக்கும் ஓம் அக்கா.... ஓம் அக்கா என சொல்லுக் கேட்டா, நானும் நம்பிவிட்டேன்.

திடீரென ஒருநாள் பார்த்தால், இந்த பார் உம், அந்த அழகிய நண்பியும், காதலர்களோடு போகிறோம் எனக், ஹொஸ்டலில் கடிதம் எழுதி வைத்துப்போட்டு  ஓடிவிட்டார்கள்,  கதை அறிந்து பிரின்சிபால் பெற்றோருக்கும் அறிவித்து பெரிய அமளி. அனைவரும் ஷொக்ட் ஆகிட்டோம். இதுக்கு முன் இப்படி நடந்ததாக இல்லை அங்கு. எனக்கும் கோபமாக இருந்தது, என்னையும் ஏமாற்றி விட்டாரே என.

பின்புதான் அறிந்தோம், இவர்கள் இருவரையும், இரு காதலர்களும், வேறொரு ஊர் பஸ் ஸ்ராண்டுக்கு வந்து நிற்கும்படியும், அங்கு தாம் வந்து மீற் பண்ணிக் கூட்டிப் போவதாகவும் சொல்லியிருக்கிறார்கள். இதை நம்பி, இவர்கள் இருவரும், தம், தோடு, தங்க மோதிரங்களை , ஹொஸ்டலுக்குக் கிட்ட இருந்த நகைக் கடை ஒன்றிலே அடைவு வைத்துப் பணத்தை எடுத்துக் கொண்டு, அந்த பஸ் ஸ்ராண்டுக்குப் போயிருக்கிறார்கள் அங்கே அந்த boys  வரவில்லை(அவர்கள் விளையாட்டுக்குச் சொன்னார்களோ தெரியாது).

அப்போதெல்லாம் மொபைல், படிக்கும் யாரிடமும் இல்லை. இருட்டியும் விட்டது, இவர்களுக்குப் பயம் வந்துவிட்டது, புது ஊர், திரும்பி வரவும் பஸ் நேரம் முடிந்து விட்டது. ஆரையோ பிடித்து ஒரு லொஜ்ஜில் தங்கி மறுநாள், நேரே தத்தமது வீட்டுக்குப் போயிருக்கிறார்கள்.

அதன் பின், அவர்கள் பெற்றோரே வந்து ஸ்கூலில் மன்னிப்புக் கேட்டு, மீண்டும் சேர்க்கும் படி கேட்டதால், பல ரூல்ஸ் போட்டு, மீண்டும் படிக்க அனுமதி கொடுத்தார்கள். இதற்குள் புதினம் என்னவென்றால், மோதிரம் அடைவு வைத்தபோது, கடைக்காரர் கேட்டிருக்கிறார், முளுப்பெயர் சொல்லுங்கோ என, அதுக்கு இந்த “பார்”, என் முளுப்பெயரை அதாவது எங்கள் அப்பாவின் பெயரையும் சேர்த்துக் கொடுத்திருக்கிறார்.

அந்த ரிசீட்டை, அவவின் தாய் தந்தையே கொண்டு வந்து, எம் ஹொஸ்டல் மிஸ் க்குக் காட்டி மன்னிப்புக் கேட்டிருக்கிறார்கள்.

காதலித்தது, ஓடியது.... அதையெல்லாம் வயதுக்கோளாறு என நினைத்து, மன்னித்து, மீண்டும் பார் உடன் கதைத்திருப்பேன், ஆனா, என் பெயரைக் கொடுத்ததை என்னால் மன்னிக்கவே முடியவில்லை ( வேறு ஒரு பொய்ப் பெயர் சொல்லியிருக்கலாம்தானே).  அத்தோடு அந் நட்புக்கும் முற்றுப் புள்ளி வைத்து விட்டேன்.

இன்னும் ஒரு கதை மட்டும் சொல்லி முடித்து விடுகிறேன். யாழ்ப்பாணத்தில் கொஞ்சக்காலம் இருந்தபோது ஒரு ஸ்பெஷல் கிளாஸுக்காகப் போய் வந்தேன். நான் அங்கு படிக்காததால் யாரும் நட்புகள் அங்கில்லை. என் பாட்டில் போய் வந்து கொண்டிருந்தேன். பெரும்பாலும் எல்லோருமே சைக்கிளில்தான் வருவார்கள், ஒருசிலர் மட்டும் நடந்து வருவதுண்டு.

கொஞ்ச நாட்களாகப் பார்த்தேன், நான் வீட்டுக்குத் திரும்பி வரும் பக்கமாக ஒரு நண்பி, மெயின் ரோட்டில், நெஞ்சோடு புத்தகத்தை அணைத்தபடி வகுப்பு முடிய தனியே, அமைதியாக நடந்து போவார். பார்க்கப் பாவம்போல ஒரு உணர்வு எனக்குள். ஆனா நான் நானாக ஆரோடும் வலியப் போய்க் கதைக்கப் பயமெனக்கு, ஆனா சிரிச்சால் சிரிப்பேன், கதைத்தால் கதைப்பேன்... அது ஆராக எவராக இருந்தாலும் சரிதான், ஆண் பெண் பேதமோ, வேறு எந்தப் பேதமோ பார்க்க மாட்டேன். என் அப்பாவின் அட்வைசும் எமக்கு அதுதான். எல்லாக் கதையும் வீட்டுக்குப் போனதும் அம்மாவிடம் ஒப்புவித்து விடுவேன், அதனால் எப்பவும் எப்பிரச்சனையும் வந்ததில்லை.

அப்போ ஒருநாள், இப்படித்தான் நான் வரும்போது அந் நண்பியைக் கண்டேன், சைக்கிளை நிறுத்தி, எங்கே போகிறீங்கள், வாங்கோவன் என் கரியரில் ஏறுங்கோ கொண்டுபோய் விடுகிறேன் என்றேன். எதிர்பார்த்திருந்தவர்போல மறு பேச்சில்லை தடாரென ஏறி என் தோளைப் பிடித்துக் கொண்டு இருந்தார். அப்போதான் முதன் முதலாக வாய் திறந்து அவ என்னிடம் பேசிய முதன் வசனம்.... “ அதிரா நான் இந்த வகுப்பிற்கு, தொடர்ந்து வருவதே.. நீங்கள்  போடும் அழகான சட்டைகளைப் பார்ப்பதற்காகவே “ என்றார்.

எனக்கு அப்படியே இதயமெல்லாம் என்னவோ போலாகிவிட்டது. கண்கூட கலங்கிவிட்டது. நான் நினைத்திருந்தது, நான் அங்கு படிக்காததால் என்னை ஆரும் கவனிக்க மாட்டார்கள், தம் நட்புக்களையே கவனிப்பார்கள் என. ஆனா இவ இப்படிச் சொன்ன வார்த்தை, என் மனதை விட்டு நீங்காததாகிவிட்டது.

அதன் பின்பு, ஒவ்வொரு தடவையும் ஏத்தி இறக்குவேன், மெயின் ரோட்டிலேயே விடுவேன், அவ சைட்ரோட்டில் உள்ளே போகவேண்டும் வீட்டுக்கு, இங்கு இறக்கினால் போதுமென்பா, அப்படியே இறக்கிவிட்டுப் போய் விடுவேன். பின் அவவின் குடும்பக் கதையெல்லாம் பகிர்ந்து கொள்வா, கொஞ்சம் வறிய குடும்பம். அக்கா ஒருவர் ரீச்சராம், பொல்லாதவவாம், தன்னை வேலை வாங்குவாவாம்... இப்படி நிறையச் சொன்னா... நானும் முடிந்தவரை ஆறுதல் சொல்வேன். அவவின் பெயர் நினைவில்லை, ஒரு கொஞ்ச மாதங்கள்தான் பின் விலத்தியாச்சு:(.

பொறுமையோடு கதை படித்த அனைவருக்கும் நன்றி.... படிப்பவர்கள்.. கடேசீஈஈஈ ஸ்மைலியாவது போட்டுவிட்டுப் போங்கோ... இல்லாவிட்டால் வழியில கடிநாய் கடிக்கும்:)).( கடவுளே ஆருமே ஸ்மைலி போட்டிடாமல், பின்னூட்டம் போடும்படி, பார்த்துக்கொள்ளப்பா:)).

அனைவர் வாழ்விலும் நட்பு பின்னிப் பிணைந்ததே... அதனால.. முடிந்தால் இல்லாவிட்டால் அழாதீங்கோ இந்தாங்கோ ரிசூ... தொடரும்படி அழைப்பது..
ஸாதிகா அக்கா, இமா, மகி, சந்தனா, வான்ஸ், ஜெய், ஆசியா, மனோ அக்கா, புது வரவு கிரிஜா..... இல்ஸ் ஐ எழுதிட வாண்ட்டாமென மிகவும் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

ஊசி இணைப்பு:

எனக்கொரு தம்பி இருந்தார்... ஜீனோ:) எண்டு பெயர், தம்பிதான், ஆனாலும் நாங்க பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ்.... ஆனா அவரையும் இப்போ மறக்கமுடியாத, காணாமல் போய் விட்ட நட்பில, சேர்க்க வேண்டியதாப்போச்ச்ச்ச்ச்... இமாஆஆஆஆ டிஷ்யூ பிலீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))

=====================================================
 “பணத்தால், நீ விலைக்கு வாங்கும் நண்பனை,
இன்னொருவர் பணம் கொடுத்து வாங்கிக் கொள்வார்”

 “தெளிந்த சிந்தனையும், அனுதாபமுமுள்ள 
ஒரு நண்பரைப் பெற்றவர்,
தன் அறிவாற்றல்களை இரட்டிப்பாக்கிக் கொண்டவராவார்”
=====================================================

Wednesday 6 July 2011

ஐஈஈஈஈஈ லவ்வ்வ்வ்வ்வ் யூஊஊஊஊஊ:))

"காதலிக்க நினைத்தபோது
நினைவு வந்தது
காதலைச் சந்திக்காது
இருந்திருந்தால்
எவ்வளவோ சாதித்திருப்பேன்
நண்பன் சொன்னது"
இப்படத்தை நான் எந்த புளொக்கிலிருந்தும் களவெடுக்கேல்லை...:)

தலைப்பைப் பார்த்துக் கண்டபடி யோசிச்சுப் பிரெஷர் ஏத்திடாதீங்க:), பொறுமையாகப் படிக்கோணும் ஓக்கை?:).

வானதியின் “கயல்விழி என்னை மன்னித்துவிடு” தலைப்பின் பாதிக்கதை:) படித்ததும், அதனைத் தொடர்ந்து வந்த நிரூபனின் பின்னூட்டத்தையும் படித்ததில், இத்தலைப்புப் போடும் ஐடியா பட்டென கிட்னியில் உதித்தது... ஏனெனில் இதுபற்றி நிறைய மனக்குமுறல்கள் என்னிடமும் இருக்கு..

ஒவ்வொருவரின் மன எண்ணங்கள், கற்பனைகள், ஒவ்வொரு விதமாக இருக்கும். அதனால், நான் சொல்வதுதான் சரி என்றில்லை, இருப்பினும் என் மனக் கருத்துக்களை இங்கே பதிக்கின்றேன்.

நான், சின்ன வயதிலிருந்தே மிகவும் பயந்த சுபாவம்(ஆரது முறைப்பது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), அத்தோடு துணிவுமில்லை, எதற்குமே அப்பா, அம்மாவின் பின்னாலேயே நின்று பழக்கப்பட்டிருந்தேன், அத்தோடு கண்ணதாசன் பதிப்புக்கள் + நிறையப் புத்தகங்கள் படிப்பேன், அவற்றிலிருந்து நான் கற்றுக்கொண்ட முடிவு.. “காதலிக்கக் கூடாது” (முறைக்காதீங்க கர்ர்ர்ர்ர்:)), அதையும் தாண்டி ஒருவேளை காதலித்துவிட்டால், கடசிவரை கைவிடக்கூடாது என்பதுதான் என் குறிக்கோள்.

ஆனா, எனக்கு என்னைப்பற்றி நன்கு தெரியும், அதாவது, அப்பா ஒரு பார்வை பார்த்தாலே போதும், நான் பயந்துபோய் அனைத்தையும் கைவிட்டு விடுவேன் என்பது:). அதனாலேயே காதல் வேண்டாம் என ஸ்ஸ்ஸ்ரோங்காக இருந்தேன். “அவளைத் தொடுவானேன் கவலைப் படுவானேன்” என்பதைப்போல, எதிலும் சிக்காமல் இருந்தால், நண்பர்களோடு நிறைய அனுபவிக்கலாம், இல்லையெனில் காதல் டென்ஷனிலேயே இளமைக் காலம் கழிந்துவிடும்.

அதிலும், குழந்தைப் பருவத்துக் காதல் வேண்டவே வேண்டாமே. ஓரளவு ரீன் - ஏஜ் முடிந்து ஒரு தகுதி(பதவி) வந்தபின் என்றாலாவது, ஒருவரை அறிந்துகொள்ளும்/ புரிந்துகொள்ளும் தன்மையும், எம் குடும்ப அமைப்புக்குப் பொருத்தமான ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் மனப்பக்குவமும் வந்திருக்கும், அப்போ கண்டதும் காதல் என இல்லாமல், பொருத்தமான துணையை ஓரளவாயினும் தேர்ந்தெடுக்கும் மனநிலைக்கு தள்ளப்பட்டிருப்போம்???.

ஆனால் எந்த வயதாயினும் காதல்(கொன்று) கொண்டுவிட்டால், கடசிவரை, உறுதியோடு நின்று போராடி வெற்றிபெறும் துணிவு இருவருக்குமே இருக்க வேண்டும். அத்துணிவு இல்லையெனில் தயவு செய்து காதலிக்காதீர்கள்.

காதலித்தோரெல்லாம் கெட்டுப்போய் விட்டனரோ எனக் கேட்கப்பிடா:)). இப்படியான விஷயங்களுக்கு, மேலே இருப்பவர்களைப் பார்க்கப்படாது, கீழே விழுந்து கிடப்போரைத்தான் பார்க்க வேண்டும்.

எங்கள் அப்பா, சின்னனில் எமக்கு அடிக்கடி ஒரு வசனம் சொல்வார் “எப்பவுமே மேலே பார்க்காதீர்கள், கீழே பார்க்கப்பழகுங்கள்” என. அதாவது அதிக வசதியாக இருப்போரைப் பார்த்து ஏங்காமல், எமக்கு கீழ் இருப்போரைப் பார்த்து, நம்மைத் திருப்திப்படுத்திக்கொள்ள வேண்டும், அவர்களைவிட  நாம் எவ்வளவோ வசதியாக இருக்கிறோம் என.

(இங்கே வலையுலகில்கூட எத்தனையோ பேர் கொடிகட்டிப் பறக்கிறார்கள், அதைப் பார்த்து ஏங்காமல், நம்மிடம் புளொக்காவது இருக்கே, இன்னும் எத்தனை பேரிடம் புளொக்... ஏன் இன்ரநெட்கூட இல்லாமலும் இருக்கிறார்களே என எண்ணவேண்டும்:)).

அதன்பின் ஒரு வசனம் கண்ணுக்குப் பட்டது, அது மனதில் பதிந்துவிட்டது.

“உன் கால்களுக்கு அழகான பாதணிகள் வாங்கப் பணமில்லையே என எண்ணி ஏங்காதே,பின்னாலே பார், ஒருவர் பாதங்களே இல்லாமல் தவழ்ந்து வருவதை”.

இதேபோல, காதலில் தோற்று, இருந்ததையும் இழந்து வாடுவோரைப் பார்த்தாவது, நாம் சறுக்கி விழுந்திடாமல் வாழ முயற்சிக்கலாமே.

காதல் விஷயத்தில், பெற்றோர் பிரித்து விட்டனர் என, அவர்கள் மீது பழி போடுவது தவறிலும் தவறு. காதலிக்கும்போது அவர்களின் சம்மதத்தைப் பெற்றுக் கொண்டோ காதலிக்கிறோம்?. நாம் இவரோடுதான் வாழப்போகிறோம் என முடிவெடுத்து, காதலிக்கத் தொடங்கிவிட்டால் கடைசிவரை கை விடக்கூடாது, பெற்றோர் மீது பழியைப் போடக்கூடாது.

துணிவு என்பது, நமக்கு மட்டும் இருந்தால் போதாது, நம்மைக் காதலிப்பவருக்கும் இருக்க வேண்டும் “இரு கை தட்டினால்தானே ஓசை வரும்” . ஆனாஆஆஆ அப்பூடிப்பட்ட துணையைக் கண்டுபிடிப்பது எப்பூடி?:).

அதனால காதலிக்காமலே இருப்பது பெட்டர்தானே?... என்ன எல்லோரும் பேசாமல் இருக்கிறியள்.. ஏதாவது ஒரு பக்கம் தலையை ஆட்டுங்கோவன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

 “உணர்வுகளும் உணர்ச்சிகளும் நமக்கு அடங்க வேண்டுமே தவிர, நாம் அதற்கு அடிமையாகிடக் கூடாது” ... கண்ண..தாசன்..

என் நண்பி ஒருவர், கம்பஸிலே தன் வகுப்பில் இருக்கும் ஒரு Boy  ஐ விரும்பினா. நண்பிக்கு 3 ஆண் சகோதரர்கள் மட்டுமே, தந்தை இல்லை.  வசதியான குடும்பம்தான். அந்த boy க்கு சகோதரங்கள் இல்லை, வறிய குடும்பம், தந்தை இல்லை  தாயுடன் வசித்து வந்தார்.

ஆனால், நம் நாட்டில் இன்னும் தலைவிரித்தாடும் பிரச்சனை சாதி... இதை ஒருபோதும் நண்பி வீட்டில்/உறவில் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள் என நன்கு தெரிந்தும், நண்பி அந்த boy  ஐ விரும்பினார்.

Boy ன் வீட்டுக்கெல்லாம் போய், தாய் சமைத்துக் கொடுப்பதை சாப்பிட்டு நன்கு உறவாடி வந்திருக்கிறார்.

திடீரென இடம்பெயர்வு வந்தது, நண்பி குடும்பம் வந்து கொழும்பில் இருந்தார்கள். Boy  க்கு, கொழும்புக்கு வந்து சந்திக்க வசதியிருக்கவில்லை. ஃபோன் வசதியும் கிடைக்கவில்லைப்போலும், கடித்தத்தில் மட்டும் கதைத்தார்கள் என்றுதான் நினைக்கிறேன்.

நண்பி வீட்டில் திருமணப்பேச்சு ஆரம்பமாகியதும், தன் காதலைச் சொல்லியிருக்கிறார், சொன்னதும்தான் வீட்டிலுள்ளோர் எல்லோரும் மாறி மாறி அடித்திருக்கிறார்கள். அத்தோடு வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு திருமணம் பொருந்திவந்திருக்கிறது. நண்பிக்கோ கொஞ்சம் ஆசை வந்துவிட்டது, கார் வீடு என வசதியாக வாழலாம் என.

எனக்குச் சொன்னா, தன்னால் காதலனை மறக்க முடியவில்லை, எதைப் பார்த்தாலும் அவரின் நினைவே வருகிறது, ஆனால், வீட்டில் அடிக்கிறார்கள், சாதிப் பிரச்சனை இருப்பதால், இதை நிட்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அதனால் இத் திருமணத்துக்குச் சம்மதிக்கப் போகிறேன் என்று.(அப்போ நம்பிக் காதலித்த அந்த boy இன் கதி?????).

நல்லபடியே திருமணமும் நடந்தது, 4ம் நாள் கணவரோடு எம் வீட்டுக்கு வந்திருந்தார், வந்தவ என்னை அறைக்குள்ளே கூட்டிச் சென்று கேட்டார், “அதிரா!! என் காதல் கதையை இன்னும் என் கணவருக்குச் சொல்லவில்லை, ஒவ்வொருநாளும் மனம் உறுத்துகிறது, இன்றே சொல்லிவிடவோ?” என்று. ஒரு பார்வை பார்த்தேன் நண்பியை........, என்ன பதில் சொல்லியிருப்பேன் என கண்டுபிடியுங்கோ......:).

இப்படிச் சில கதைகள் இருக்கு, அதில் ஒன்றுதான் இங்கு சொன்னேன். இதிலிருந்து என்ன சொல்ல வருகிறேன் என்றால், காதலிக்குமுன் ஓரளவுக்குத் தெரிகிறதுதானே இது சரிவருமோ இல்லையோ என, தெரிந்துகொண்டும் ஏன் காதலிக்கிறார்கள், பொழுதுபோக்கிற்காகவோ? காதலித்தல் என்பதும், கிட்டத்தட்ட திருமணம் முடித்ததுக்குச் சமானானதுதானே?... அதாவது இவரோடுதான் இனி வாழப்போகிறோம் என முடிவெடுத்துத்தானே காதலிக்கிறோம்.

அப்போ காதலித்துவிட்டால் பெற்றோர், சகோதரங்களைக் காரணம் காட்டி கைவிட்டுவிடக்கூடாதூஊஊஊஊ. அதேநேரம் இன்னொன்றையும் சிந்திக்க வேண்டும், காதல் மட்டும் போதுமா? திருமணம், குடும்பம் என்றானபின், நமக்கு பெற்றோர், உறவுகள் எல்லாமே தேவைதான், அதனால் எல்லா விதத்திலும் நம் குடும்பத்தோடு ஒத்துப்போகக்கூடிய இடமாயின் ஓக்கை, அல்லது.....

வெளிநாட்டு மக்களைப்போல தமக்குத் தாமே துணைதேட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை நமக்கு இன்னும் ஏற்படவில்லை, பெற்றோர், உறவுகள் இருக்கிறார்கள் அவர்கள் நிட்சயம் இப்பொறுப்பை ஏற்று நமக்கு நல்ல வாழ்வை அமைத்துத் தருவார்கள் என நினைத்து இளமைக்காலத்தை எஞ்சோய் பண்ணவேண்டும்.

உஸ் அப்பா முடியல்ல.... ஆரும் அடிக்க வந்திடப்புடாது, இவை எல்லாம் என் மனக் கருத்து மட்டுமே. எனக்கு ஒரு ஆசை, இதை ஒரு தொடர்ப்பதிவாக ஏற்று... முடிந்தால் உங்கள் கருத்துக்களையும் சொல்லும்படி கேஏஏஏட்டு மேடைக்கு... ஸாதிகா அக்கா, வானதி, சந்தனா, இமா, மகி யை அழைக்கிறேன்ன்ன்ன்ன்.

=======================( _ )=========================

குண்டூசி இணைப்பு:
இவர்களை நெடுநாட்களாக “என் பக்கத்தில் மட்டும்”:))))காணவில்லை, கண்டுபிடித்துக் கொடுப்போருக்கு  4 சவரன் “சங்கிலி” இலவசமாக வழங்கப்படும்



ஊசிக்குறிப்பு:
கொஞ்ச நாளாக எனக்கு “நாசா” விலிருந்து ஃபோனுக்கு மேல ஃபோன் வந்துகொண்டிருக்கு, சந்திரமண்டலத்துக்கு விண்கலம் போகுதாம் அதில் போகத்தான் அழைக்கிறார்கள். எத்தனை நாளைக்குத்தான் நானும் மறுப்புச் சொல்ல முடியும்:), அதனால புறப்படப்போகிறேன், அங்கே ஒரு ரெண்டு ஏக்கர் காணி வாங்கி விடும் யோசனையும் இருக்கு:), என்ன ... தண்ணிதான் கொஞ்சம் தட்டுப்பாடாம்... அஜீஸ் பண்ணிடலாம்.. 2012 க்கு முன்:) வேறிடம் பார்ப்பது நல்லதுதானே.


அதால நான் சொல்ல வருவது என்னவென்றால், இத் தலைப்பு பார்த்து ஆராவது கத்தி, பொல்லு, துவக்கு எனத் தூக்கிக்கொண்டு கலைக்கும் எண்ணம் இருந்தால் கை விட்டு விடுங்கோ:))... நான் அகப்படமாட்டேன் விண்கலம் வெளிக்கிட்டுவிடும்.

========================================================
நிலவு ஒருவருக்காகக் காய்வதில்லை
========================================================

Friday 1 July 2011

நெக்ஸ்ட் குவெஸ்ஷன் பிளீஸ்ஸ்ஸ்:)))



கேள்வி கேட்டல்
கேள்வி கேட்கிறதெண்டால் என்ன பெரிய விஷயமோ, 2 வயது குழந்தைகூட பல கேள்விகள் கேட்குதே என நாம் நினைப்பதுண்டு. ஆனா சமீபத்தில பூஸ்:) ரேடியோவில சொன்னார்கள், கேள்வி கேட்பதென்பது சாதாரண விஷயமில்லையாம். கேள்வி கேட்பதுதானாம் மிகப் பெரிய விஷயம்.


  “ஒரு விடயம் பற்றி எடுத்துக் கொண்டால், அதில் கேள்வி கேட்கும் திறமையைப் பொறுத்துத்தானாம், பதில் சொல்பவரின் திறமை தங்கியிருக்கு”. அதாவது, கேள்வி கேட்பவர் புத்திசாலியான கேள்வியாகக் கேட்டால்தான், பதில் சொல்பவரும், குப்புறக்கிடந்து, கிட்னியை யூஸ் பண்ணி, புத்திக்கூர்மையான அறிவுபூர்வமான பதிலைச் சொல்வாராம்.

மொத்தத்தில, ஒரு பதிலின் அழகு, கேட்கப்படும் கேள்வியிலேயேதான் தங்கியுள்ளதாம்.

ஒரு ஊரில் ஒரு சாமியார் இருந்தாராம், அவரிடம் மக்கள் சென்று, பல சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டனராம், சாமியாரும் நல்ல நல்ல விளக்கமான பதில்கள் கூறி மக்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தாராம். இதை அறிந்த ஒரு பொறாண்மைக்காரருக்குப் பொறுக்கவில்லையாம்:), சாமியாரை கேள்வி கேட்டே மடக்கிட வேண்டும் என எண்ணி, ஒருநாள் போனாராம்.




போனவர், சாமியாரைப் பார்த்துக் கேட்டாராம்,
“சாமி!!! நீண்ட நாளாக எனக்கிருக்கும் சந்தேகத்தை, நீங்கதான் தீர்த்து வைக்க வேண்டும், என் சந்தேகம் என்னவென்றால், இந்தப் பரந்திருக்கும் கடலெல்லாம் தீப் பிடித்தால், கடலிலுள்ள மீன்களெல்லாம் என்ன பண்ணும்?” என.

அதற்கு சாமியார், பட்டெனப் பதில் அளித்தாராம்..
“கடலெல்லாம் தீப் பிடித்தால், மீன்களெல்லாம், அருகிலுள்ள மரங்களில் ஏறிவிடும்” என.

கேள்வி கேட்டவர், மீண்டும் கேட்டாராம், “ என்ன சாமி சொல்றீங்க? மீன்களெல்லாம் எப்படி மரமேறும்? என்று.

சாமியார் சொன்னாராம்,  “கடல் தீப்பிடிக்குமேயானால், மீன்களும் மரமேறுவது உறுதி” என.(ஏனெனில் இரண்டுமே சாத்தியமில்லாத விடயங்கள்).

முடிவு என்னன்னாஆஆஆ....
புத்திசாலியான கேள்வி கேட்டால், புத்திசாலியான பதிலை எதிர்பார்க்கலாம், அதே நேரம் விகடத்தனமான கேள்வியைக் கேட்டுவிட்டு, புத்திசாலியான பதிலை எதிர்பார்க்க முடியாது...










எனிவே... சே..சே.. ஒரு எழுத்தால சரித்திரமே மாறிடும்போல இருக்கே:)))... எனவே, இனிமேல் நீங்கள் எப்படியான பதிலை எதிர்பார்க்கிறீங்களோ, அதுக்குத் தகுந்தமாதிரி கேள்வி கேட்கப் பழகுங்க மக்கள்ஸ்ஸ்ஸ்:)))).



 <><><><><><><><><><><><><><><><><><><><><><><>
சும்மா சிரிச்சுக்கொண்டு ஓடாமல், கொஞ்சம் சீரியசாக இறுக்கி அமத்துங்கோவன் ஆக்‌ஷிலலேட்டரை:), கூட்டத்தோடு பொல்லுத் தூக்கிக்கொண்டு துரத்தி வாறமாதிரி ஒரு ஃபீலிங்ஸாக்கிடக்கு எனக்கூஊஊஊஊஊ:))))

<><><><><><><><><><><><><><><><><><><><><><><>
ஊசி இணைப்பூஊஊஊஊஊஊஊஊஊஊஊ:)

இதூஊஊஊ எப்ப தொடக்கமாக்கும்?:), நான், கண் + நாடியைக் கேட்டேன்:)))

<><><><><><><><><><><><><><><><><><><><><><><>
அமைதி:
சமீபத்தில் ஒரு புத்தகம் வாசிக்கையில், பிடித்துப்போன அமைதிபற்றிய விளக்கம்.
அமைதி என்பது... அன்பு செலுத்துவது, விரும்புவது, ஆறுதல் அளிப்பது, நட்பை வளர்ப்பது என்பனவற்றுக்காகவே தவிர, வெறுப்புக்காக அல்ல.
<><><><><><><><><><><><><><><><><><><><><><><>