நல்வரவு_()_


Wednesday, 6 July 2011

ஐஈஈஈஈஈ லவ்வ்வ்வ்வ்வ் யூஊஊஊஊஊ:))

"காதலிக்க நினைத்தபோது
நினைவு வந்தது
காதலைச் சந்திக்காது
இருந்திருந்தால்
எவ்வளவோ சாதித்திருப்பேன்
நண்பன் சொன்னது"
இப்படத்தை நான் எந்த புளொக்கிலிருந்தும் களவெடுக்கேல்லை...:)

தலைப்பைப் பார்த்துக் கண்டபடி யோசிச்சுப் பிரெஷர் ஏத்திடாதீங்க:), பொறுமையாகப் படிக்கோணும் ஓக்கை?:).

வானதியின் “கயல்விழி என்னை மன்னித்துவிடு” தலைப்பின் பாதிக்கதை:) படித்ததும், அதனைத் தொடர்ந்து வந்த நிரூபனின் பின்னூட்டத்தையும் படித்ததில், இத்தலைப்புப் போடும் ஐடியா பட்டென கிட்னியில் உதித்தது... ஏனெனில் இதுபற்றி நிறைய மனக்குமுறல்கள் என்னிடமும் இருக்கு..

ஒவ்வொருவரின் மன எண்ணங்கள், கற்பனைகள், ஒவ்வொரு விதமாக இருக்கும். அதனால், நான் சொல்வதுதான் சரி என்றில்லை, இருப்பினும் என் மனக் கருத்துக்களை இங்கே பதிக்கின்றேன்.

நான், சின்ன வயதிலிருந்தே மிகவும் பயந்த சுபாவம்(ஆரது முறைப்பது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), அத்தோடு துணிவுமில்லை, எதற்குமே அப்பா, அம்மாவின் பின்னாலேயே நின்று பழக்கப்பட்டிருந்தேன், அத்தோடு கண்ணதாசன் பதிப்புக்கள் + நிறையப் புத்தகங்கள் படிப்பேன், அவற்றிலிருந்து நான் கற்றுக்கொண்ட முடிவு.. “காதலிக்கக் கூடாது” (முறைக்காதீங்க கர்ர்ர்ர்ர்:)), அதையும் தாண்டி ஒருவேளை காதலித்துவிட்டால், கடசிவரை கைவிடக்கூடாது என்பதுதான் என் குறிக்கோள்.

ஆனா, எனக்கு என்னைப்பற்றி நன்கு தெரியும், அதாவது, அப்பா ஒரு பார்வை பார்த்தாலே போதும், நான் பயந்துபோய் அனைத்தையும் கைவிட்டு விடுவேன் என்பது:). அதனாலேயே காதல் வேண்டாம் என ஸ்ஸ்ஸ்ரோங்காக இருந்தேன். “அவளைத் தொடுவானேன் கவலைப் படுவானேன்” என்பதைப்போல, எதிலும் சிக்காமல் இருந்தால், நண்பர்களோடு நிறைய அனுபவிக்கலாம், இல்லையெனில் காதல் டென்ஷனிலேயே இளமைக் காலம் கழிந்துவிடும்.

அதிலும், குழந்தைப் பருவத்துக் காதல் வேண்டவே வேண்டாமே. ஓரளவு ரீன் - ஏஜ் முடிந்து ஒரு தகுதி(பதவி) வந்தபின் என்றாலாவது, ஒருவரை அறிந்துகொள்ளும்/ புரிந்துகொள்ளும் தன்மையும், எம் குடும்ப அமைப்புக்குப் பொருத்தமான ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் மனப்பக்குவமும் வந்திருக்கும், அப்போ கண்டதும் காதல் என இல்லாமல், பொருத்தமான துணையை ஓரளவாயினும் தேர்ந்தெடுக்கும் மனநிலைக்கு தள்ளப்பட்டிருப்போம்???.

ஆனால் எந்த வயதாயினும் காதல்(கொன்று) கொண்டுவிட்டால், கடசிவரை, உறுதியோடு நின்று போராடி வெற்றிபெறும் துணிவு இருவருக்குமே இருக்க வேண்டும். அத்துணிவு இல்லையெனில் தயவு செய்து காதலிக்காதீர்கள்.

காதலித்தோரெல்லாம் கெட்டுப்போய் விட்டனரோ எனக் கேட்கப்பிடா:)). இப்படியான விஷயங்களுக்கு, மேலே இருப்பவர்களைப் பார்க்கப்படாது, கீழே விழுந்து கிடப்போரைத்தான் பார்க்க வேண்டும்.

எங்கள் அப்பா, சின்னனில் எமக்கு அடிக்கடி ஒரு வசனம் சொல்வார் “எப்பவுமே மேலே பார்க்காதீர்கள், கீழே பார்க்கப்பழகுங்கள்” என. அதாவது அதிக வசதியாக இருப்போரைப் பார்த்து ஏங்காமல், எமக்கு கீழ் இருப்போரைப் பார்த்து, நம்மைத் திருப்திப்படுத்திக்கொள்ள வேண்டும், அவர்களைவிட  நாம் எவ்வளவோ வசதியாக இருக்கிறோம் என.

(இங்கே வலையுலகில்கூட எத்தனையோ பேர் கொடிகட்டிப் பறக்கிறார்கள், அதைப் பார்த்து ஏங்காமல், நம்மிடம் புளொக்காவது இருக்கே, இன்னும் எத்தனை பேரிடம் புளொக்... ஏன் இன்ரநெட்கூட இல்லாமலும் இருக்கிறார்களே என எண்ணவேண்டும்:)).

அதன்பின் ஒரு வசனம் கண்ணுக்குப் பட்டது, அது மனதில் பதிந்துவிட்டது.

“உன் கால்களுக்கு அழகான பாதணிகள் வாங்கப் பணமில்லையே என எண்ணி ஏங்காதே,பின்னாலே பார், ஒருவர் பாதங்களே இல்லாமல் தவழ்ந்து வருவதை”.

இதேபோல, காதலில் தோற்று, இருந்ததையும் இழந்து வாடுவோரைப் பார்த்தாவது, நாம் சறுக்கி விழுந்திடாமல் வாழ முயற்சிக்கலாமே.

காதல் விஷயத்தில், பெற்றோர் பிரித்து விட்டனர் என, அவர்கள் மீது பழி போடுவது தவறிலும் தவறு. காதலிக்கும்போது அவர்களின் சம்மதத்தைப் பெற்றுக் கொண்டோ காதலிக்கிறோம்?. நாம் இவரோடுதான் வாழப்போகிறோம் என முடிவெடுத்து, காதலிக்கத் தொடங்கிவிட்டால் கடைசிவரை கை விடக்கூடாது, பெற்றோர் மீது பழியைப் போடக்கூடாது.

துணிவு என்பது, நமக்கு மட்டும் இருந்தால் போதாது, நம்மைக் காதலிப்பவருக்கும் இருக்க வேண்டும் “இரு கை தட்டினால்தானே ஓசை வரும்” . ஆனாஆஆஆ அப்பூடிப்பட்ட துணையைக் கண்டுபிடிப்பது எப்பூடி?:).

அதனால காதலிக்காமலே இருப்பது பெட்டர்தானே?... என்ன எல்லோரும் பேசாமல் இருக்கிறியள்.. ஏதாவது ஒரு பக்கம் தலையை ஆட்டுங்கோவன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

 “உணர்வுகளும் உணர்ச்சிகளும் நமக்கு அடங்க வேண்டுமே தவிர, நாம் அதற்கு அடிமையாகிடக் கூடாது” ... கண்ண..தாசன்..

என் நண்பி ஒருவர், கம்பஸிலே தன் வகுப்பில் இருக்கும் ஒரு Boy  ஐ விரும்பினா. நண்பிக்கு 3 ஆண் சகோதரர்கள் மட்டுமே, தந்தை இல்லை.  வசதியான குடும்பம்தான். அந்த boy க்கு சகோதரங்கள் இல்லை, வறிய குடும்பம், தந்தை இல்லை  தாயுடன் வசித்து வந்தார்.

ஆனால், நம் நாட்டில் இன்னும் தலைவிரித்தாடும் பிரச்சனை சாதி... இதை ஒருபோதும் நண்பி வீட்டில்/உறவில் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள் என நன்கு தெரிந்தும், நண்பி அந்த boy  ஐ விரும்பினார்.

Boy ன் வீட்டுக்கெல்லாம் போய், தாய் சமைத்துக் கொடுப்பதை சாப்பிட்டு நன்கு உறவாடி வந்திருக்கிறார்.

திடீரென இடம்பெயர்வு வந்தது, நண்பி குடும்பம் வந்து கொழும்பில் இருந்தார்கள். Boy  க்கு, கொழும்புக்கு வந்து சந்திக்க வசதியிருக்கவில்லை. ஃபோன் வசதியும் கிடைக்கவில்லைப்போலும், கடித்தத்தில் மட்டும் கதைத்தார்கள் என்றுதான் நினைக்கிறேன்.

நண்பி வீட்டில் திருமணப்பேச்சு ஆரம்பமாகியதும், தன் காதலைச் சொல்லியிருக்கிறார், சொன்னதும்தான் வீட்டிலுள்ளோர் எல்லோரும் மாறி மாறி அடித்திருக்கிறார்கள். அத்தோடு வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு திருமணம் பொருந்திவந்திருக்கிறது. நண்பிக்கோ கொஞ்சம் ஆசை வந்துவிட்டது, கார் வீடு என வசதியாக வாழலாம் என.

எனக்குச் சொன்னா, தன்னால் காதலனை மறக்க முடியவில்லை, எதைப் பார்த்தாலும் அவரின் நினைவே வருகிறது, ஆனால், வீட்டில் அடிக்கிறார்கள், சாதிப் பிரச்சனை இருப்பதால், இதை நிட்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அதனால் இத் திருமணத்துக்குச் சம்மதிக்கப் போகிறேன் என்று.(அப்போ நம்பிக் காதலித்த அந்த boy இன் கதி?????).

நல்லபடியே திருமணமும் நடந்தது, 4ம் நாள் கணவரோடு எம் வீட்டுக்கு வந்திருந்தார், வந்தவ என்னை அறைக்குள்ளே கூட்டிச் சென்று கேட்டார், “அதிரா!! என் காதல் கதையை இன்னும் என் கணவருக்குச் சொல்லவில்லை, ஒவ்வொருநாளும் மனம் உறுத்துகிறது, இன்றே சொல்லிவிடவோ?” என்று. ஒரு பார்வை பார்த்தேன் நண்பியை........, என்ன பதில் சொல்லியிருப்பேன் என கண்டுபிடியுங்கோ......:).

இப்படிச் சில கதைகள் இருக்கு, அதில் ஒன்றுதான் இங்கு சொன்னேன். இதிலிருந்து என்ன சொல்ல வருகிறேன் என்றால், காதலிக்குமுன் ஓரளவுக்குத் தெரிகிறதுதானே இது சரிவருமோ இல்லையோ என, தெரிந்துகொண்டும் ஏன் காதலிக்கிறார்கள், பொழுதுபோக்கிற்காகவோ? காதலித்தல் என்பதும், கிட்டத்தட்ட திருமணம் முடித்ததுக்குச் சமானானதுதானே?... அதாவது இவரோடுதான் இனி வாழப்போகிறோம் என முடிவெடுத்துத்தானே காதலிக்கிறோம்.

அப்போ காதலித்துவிட்டால் பெற்றோர், சகோதரங்களைக் காரணம் காட்டி கைவிட்டுவிடக்கூடாதூஊஊஊஊ. அதேநேரம் இன்னொன்றையும் சிந்திக்க வேண்டும், காதல் மட்டும் போதுமா? திருமணம், குடும்பம் என்றானபின், நமக்கு பெற்றோர், உறவுகள் எல்லாமே தேவைதான், அதனால் எல்லா விதத்திலும் நம் குடும்பத்தோடு ஒத்துப்போகக்கூடிய இடமாயின் ஓக்கை, அல்லது.....

வெளிநாட்டு மக்களைப்போல தமக்குத் தாமே துணைதேட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை நமக்கு இன்னும் ஏற்படவில்லை, பெற்றோர், உறவுகள் இருக்கிறார்கள் அவர்கள் நிட்சயம் இப்பொறுப்பை ஏற்று நமக்கு நல்ல வாழ்வை அமைத்துத் தருவார்கள் என நினைத்து இளமைக்காலத்தை எஞ்சோய் பண்ணவேண்டும்.

உஸ் அப்பா முடியல்ல.... ஆரும் அடிக்க வந்திடப்புடாது, இவை எல்லாம் என் மனக் கருத்து மட்டுமே. எனக்கு ஒரு ஆசை, இதை ஒரு தொடர்ப்பதிவாக ஏற்று... முடிந்தால் உங்கள் கருத்துக்களையும் சொல்லும்படி கேஏஏஏட்டு மேடைக்கு... ஸாதிகா அக்கா, வானதி, சந்தனா, இமா, மகி யை அழைக்கிறேன்ன்ன்ன்ன்.

=======================( _ )=========================

குண்டூசி இணைப்பு:
இவர்களை நெடுநாட்களாக “என் பக்கத்தில் மட்டும்”:))))காணவில்லை, கண்டுபிடித்துக் கொடுப்போருக்கு  4 சவரன் “சங்கிலி” இலவசமாக வழங்கப்படும்



ஊசிக்குறிப்பு:
கொஞ்ச நாளாக எனக்கு “நாசா” விலிருந்து ஃபோனுக்கு மேல ஃபோன் வந்துகொண்டிருக்கு, சந்திரமண்டலத்துக்கு விண்கலம் போகுதாம் அதில் போகத்தான் அழைக்கிறார்கள். எத்தனை நாளைக்குத்தான் நானும் மறுப்புச் சொல்ல முடியும்:), அதனால புறப்படப்போகிறேன், அங்கே ஒரு ரெண்டு ஏக்கர் காணி வாங்கி விடும் யோசனையும் இருக்கு:), என்ன ... தண்ணிதான் கொஞ்சம் தட்டுப்பாடாம்... அஜீஸ் பண்ணிடலாம்.. 2012 க்கு முன்:) வேறிடம் பார்ப்பது நல்லதுதானே.


அதால நான் சொல்ல வருவது என்னவென்றால், இத் தலைப்பு பார்த்து ஆராவது கத்தி, பொல்லு, துவக்கு எனத் தூக்கிக்கொண்டு கலைக்கும் எண்ணம் இருந்தால் கை விட்டு விடுங்கோ:))... நான் அகப்படமாட்டேன் விண்கலம் வெளிக்கிட்டுவிடும்.

========================================================
நிலவு ஒருவருக்காகக் காய்வதில்லை
========================================================

82 comments :

  1. அட,நான்தான் முதல் கமென்ட்டா இங்கயும்? ;)
    இருங்க,படிச்சிட்டு வரேன்! :)

    ReplyDelete
  2. avvvvvvvvvvv! நானா வந்து வலையிலே மாட்டிருக்கேஏஏஏஏனே! கடைஐஐஐஐசி வரியை முதல்ல்ல்ல்ல்ல பாத்திருந்தா நைஸா காக்கா போயிருக்கலாமோ? ;) ;)

    உங்க குறிக்கோள் நல்லா இருக்கு அதிரா! அங்கங்கே வசனங்களும் நல்லா இருக்கு. தோற்றுப்போவோம் என்று அஞ்சியே தேர்வையெல்லாம் ஒத்தி வைக்கலாம்,அல்லது பெற்றோர் ஸப்போர்ட்டுடன் எழுதலாம் என்று சொல்றீங்க.கரெக்ட்டுத்தான்! :)

    லிஸ்ட்லே என் பேர் கடைசியா இருக்கறதாலே சீனியர்ஸ் அல்லாஆஆஆரும் எழுதினதும் நானும் எழுதுவேன்.நிஜமாலுமே அவிங்க எல்லாருமே எனக்கு சீனியர்ஸ்தான்! ;)

    ReplyDelete
  3. அதீஸ்..என்னையுமா தொடர அழைத்து இருக்கீங்க...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  4. மியாவ் வைப்போல இப்ப நீங்க போட்ட தலைப்பும் எனக்கு எப்[பவுமே அலர்ஜி.உங்கள் கருத்துக்களை அப்படியே ஆமோதிக்கிறேன்.

    ReplyDelete
  5. //நான் அகப்படமாட்டேன் விண்கலம் வெளிக்கிட்டுவிடும்.
    // ஸாதிகாக்கா கொக்கா..விண்வெளிக்கும் ஏறி வந்து கம்பூஊஊஊஊஊ பிடிப்போம்ல..

    ReplyDelete
  6. //“அவளைத் தொடுவானேன் கவலைப் படுவானேன்” என்பதைப்போல, எதிலும் சிக்காமல் இருந்தால், நண்பர்களோடு நிறைய அனுபவிக்கலாம், இல்லையெனில் காதல் டென்ஷனிலேயே இளமைக் காலம் கழிந்துவிடும்.
    // ஆஹாஹா..அருமையா சொல்லி இருக்கீங்க அதீஸ்.இளமை காலம் மட்டுமல்ல முதுமை காலத்திலும் கண்ணியமாக,பிள்ளைகளுக்கு ஒரு முன் மாதிரியாக,நம் வாழ்க்கை சுவட்டை மற்றவர் சிலாகித்து போற்றும் படியான உன்னத நிலை கிடைக்கும்.

    போதுமா?பின்னூட்டத்திலேயே ஒரு ஊசிப்பதிவு போட்டுட்டேன்.அப்புறம் இதற்கு வேறு தனி பதிவு போட்டு என்னால் விண்வெளிகெல்லாம் பறந்து கொண்டிருக்க முடியாது.

    ReplyDelete
  7. எப்பூடி? இப்படியெல்லாம் எழுதுறீங்க?.. :))

    ReplyDelete
  8. //நிலவு ஒருவருக்காகக் காய்வதில்லை//

    Classic...

    ReplyDelete
  9. வாங்க மகி...

    நீங்கதான் இங்கேயும் முதல்:)). வடை எடுங்க முதல்ல பின் பேசலாம்.

    நீங்களா வந்து மாட்டினா என்ன, நாங்க தேடிப்புடிச்சா என்ன.. மாட்டியாச்சில்ல அவ்வ்வ்வ்வ்:). உங்களுக்குக் என் குழல்புட்டுக் கதை தெரிந்திருக்கும்தானே மகி:), முந்தி அங்கின இலாதான் குழல்புட்டு எப்பவும்:).

    அதேபோல இம்முறை நீங்க குழல்புட்டு:), அதாவது குழல்ல கடேஏஏஏஏசியாகப் போடும் புட்டுத்தான், அவிந்ததும் முதலாவதாக வெளிவரும்.... அதைத் தெரிஞ்சேதான் உங்களைக் கடேசியாகப் போட்டேன் ஓக்கை?:)... கெதியா எழுதிடுங்க...மீ வெயிட்டிங்யா...

    மகி, ஏதாவது சொல்லாட்டிலும் பறவாயில்லை, கடசி, காதலில் தோற்ற கதைகளாவது(உண்மைச்சம்பவம்) இருக்குமே.. அவற்றையாவது எழுதினால்... நிறையப்பேர் வருமுன் காப்போனாக இருக்க நாம் வழிவகுத்துக் கொடுக்கலாம்ம்ம்ம் இல்லையா?:)).

    மியாவும் நன்றி மகி... எழுத்தில நீங்களும் சீனியர்தான்:)).

    ReplyDelete
  10. வாங்க ஸாதிகா அக்கா...

    //அதீஸ்..என்னையுமா தொடர அழைத்து இருக்கீங்க...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதிலென்ன சந்தேகம்:), எம்மிடம் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணென ஒரு ஸாதிகா அக்காதான் இருக்கிறா.

    //ஸாதிகாக்கா கொக்கா..விண்வெளிக்கும் ஏறி வந்து கம்பூஊஊஊஊஊ பிடிப்போம்ல.. //

    பார்த்து ஸாதிகா அக்கா, அங்கின காத்தூஊஊஊஉ இல்லையாம், மூச்சுப்பயிற்சியெல்லாம் செய்திட்டு வாங்க... அப்பத்தான் தாக்குப் பிடிப்பீங்க:))).

    //போதுமா?பின்னூட்டத்திலேயே ஒரு ஊசிப்பதிவு போட்டுட்டேன்.அப்புறம் இதற்கு வேறு தனி பதிவு போட்டு என்னால் விண்வெளிகெல்லாம் பறந்து கொண்டிருக்க முடியாது.//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), ஒரு செக்கனில ஆர் ஸாதிகா அக்காவின் மனதை மாற்றி விண்வெளிப்பயணத்தை தடை செய்தது..?:).

    ஏன் ஸாதிகா அக்கா காதல் என்றால் எல்லோரும் பயப்புடீனம்..:).

    எங்கள் அப்பம்மா அவ இப்போ இல்லை, கடசி காலத்தில் அவ குழந்தைபோல மாறி இருந்தா... அப்போ நான் சொல்வேன் அப்பம்மா என்னைப் பார்த்து “ஐ லவ் யூ” சொல்லுங்கோ என்று, அவவும் அழகாகச் சொல்லுவா ஐ லவ் யூஊஊ என்று....:)).

    ReplyDelete
  11. //ஸாதிகா said... 4

    மியாவ் வைப்போல இப்ப நீங்க போட்ட தலைப்பும் எனக்கு எப்[பவுமே அலர்ஜி.உங்கள் கருத்துக்களை அப்படியே ஆமோதிக்கிறேன்.//

    ஸாதிகா அக்கா, உப்பூடித்தான் நான் எங்கட அப்பா அம்மாவுக்கும் புடிக்காதாக்கும் என நினைச்சிருந்தேன்:), ஆனா கடேசியாக, கடேசியான நானும் திருமணம் முடித்தபின், அம்மா எனக்கே ஒரு ஸ்ரேட்மெண்ட் ஐச் சொன்னா:))... என்னவென்றால்.

    ஆராவது காதலித்துவிட்டால், அவர்களைப் பிரிக்கவேகூடாதாம், பிரித்து வேறு திருமணம் முடித்தாலும் அவர்கள் சந்தோசமாக இருப்பது கஸ்டமாம், அதனால ஆராவது விரும்பிவிட்டால் திருமணம் முடித்துக் கொடுத்திடோணுமாம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))... என்னா தைரியம் அம்மாவுக்கு இல்லையா?:))))))).

    மியாவும் நன்றி ஸாதிகா அக்கா.

    ReplyDelete
  12. ஆ.. சிசு வாங்கோ... முதன்முதலா வந்திருக்கிறீங்க நல்வரவு.

    //சிசு said... 7

    எப்பூடி? இப்படியெல்லாம் எழுதுறீங்க?.. :))//
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), நான் கேள்வி கேட்டா, நீங்க திருப்பிக் கேள்வி கேட்கப்பிடா:)))).. பதில் சொல்லோணும்:))).

    முதல் முறை வந்திருக்கிறீங்க பயந்திடாதீங்க, நான் ரொம்ப நல்ல பொண்ணு:))), 6 வயசிலிருந்தே:)))))).

    மிக்க நன்றி சிசு.

    ReplyDelete
  13. //நான் ரொம்ப நல்ல பொண்ணு:))), 6 வயசிலிருந்தே:)))))).//அப்போ ஆறு வயசுக்கு முன்னாடி.....??????????????

    ReplyDelete
  14. மீ.. க கா போ
    கிக் கிக் ;))))

    ReplyDelete
  15. //நிஜமாலுமே அவிங்க எல்லாருமே எனக்கு சீனியர்ஸ்தான்! ;)// ம்.. ;))

    ReplyDelete
  16. //அப்போ ஆறு வயசுக்கு முன்னாடி.....?????????????? //

    ஸாதிகா அக்கா... அப்போ நான் குட்டி பேபிதானே? சரியான அமைதியாம்...அம்மா சொன்னவ:). அது பால்மணம் மாறாப் பருவமெல்லோ.. அதால ஒண்ணுமே சொல்றதுக்கில்ல அவ்வ்வ்வ்வ்வ்:)).

    மியாவ்...மியாவ்வ்வ்வ் ஸாதிகா அக்கா.

    ReplyDelete
  17. வாங்க இமா..

    காக்கா போக விட்டிடுவமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). என்னாது பழையபடி கைவலி தொடங்கிட்டுதோ இமா? நலம்தானே?...

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  18. //“நாசா”விலிருந்து ஃபோனுக்கு மேல ஃபோன் வந்துகொண்டிருக்கு, சந்திரமண்டலத்தில் ரெண்டு ஏக்கர் காணி வாங்கி விடும் யோசனையும் இருக்கு:)//

    உஷ் காத கிட்ட கொண்டாங்க!! மேற்படி செய்தியை ஏன் பப்ளிஷ் பண்ணுனீங்க! சிபிஐ உங்களை தேடிக்கொண்டு வாராங்காலாம். அம்புட்டு பணம் ஏது? ஸ்பெக்ட்ரம் 'ராசமொழி' தொடர்பு ஏதும் உங்களுக்கு?? அவ்வவ்..!!!!!

    ReplyDelete
  19. // நான் அகப்படமாட்டேன் விண்கலம் வெளிக்கிட்டுவிடும்.//

    சரி போங்க!! எங்க போனாலும் பூஸாரை தேடிக்கிட்டு வருவீங்களா மாட்டீங்களா? விதவ்ட்டில் கூட்டி போக முடியாதாம்!!அவ்வவ்..அப்படியே விரல் நகக்கண்ணில் ஒழிச்சு வச்சு கூட்டிப் போனாலும், விண்ணில் வாக்கிங் போறதுக்கு பூஸாருக்கெல்லாம் நாட் அலவ்டாம்..எப்பூடி??? கர்ர்ர்ர்ர்...

    ReplyDelete
  20. சரி லவ்வப் பத்தி ஏதோ சொன்னீங்க!! லவ்வுன்னா என்னா?? அவ்வ்வ்வ்...[சும்மா லுலுவாயிக்கு கேட்டேன்.] "காதலிக்க நினைத்த போது..காதலிக்க நேரமில்லை!! காலம் கடந்து யோசித்த போது காதல் வரவில்லை!" யாரோ சொன்னது...அது ஆஆஆஆரது

    மியாவ் பூஸ்!!

    ReplyDelete
  21. http://imaasworld.blogspot.com/2011/07/blog-post_08.html ;)

    ReplyDelete
  22. அட,நான்தான் முதல் கமென்ட்டா இங்கயும்? ;)
    இருங்க,படிச்சிட்டு வரேன்! //

    no no no mee the firstuuuuu..erunga nanum padichtu,,2time padichtu vanthu comment podren..

    ReplyDelete
  23. தலைப்பில் சிவாஜி பாடும் பாட்டே போதும் ,மொத்த பதிவின் ரகசியத்தை சொல்லிடுச்சே :-)))

    ReplyDelete
  24. //நிலவு ஒருவருக்காகக் காய்வதில்லை //

    நிச்சயமா..!! அமாவாசையின் போது மட்டும்
    நிலவு ஒருவருக்காக காய்வதில்லை

    ReplyDelete
  25. என்னது மயிலையும் கானோமாஆஆஆ..அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  26. அழகா எழுதி இருக்கீங்க .
    காதலில் உண்மை அன்பு மட்டும் இருந்தா பிரச்சினை இல்லை .அந்த காதல் வெற்றி பெரும்
    ஆனா over posessiveness /doubting /பணம் அந்தஸ்து etc etc ...இதையெல்லாம் சமாளிக்கிற தைரியம் இள வயது பிள்ளைகளுக்கு இருக்கா .
    ????
    so
    //பெற்றோர், உறவுகள் இருக்கிறார்கள் அவர்கள் நிட்சயம் இப்பொறுப்பை ஏற்று நமக்கு நல்ல வாழ்வை அமைத்துத் தருவார்கள் என நினைத்து இளமைக்காலத்தை எஞ்சோய் பண்ணவேண்டும்.//
    என் கமேண்ட பாத்து என்னை அடிக்கனும்னு தோனுச்சினாஅடுத்த விண்கலதில
    டிக்கட் போட்டு தரேன் போய் அங்கே அடிங்க .escapeeeeeeeeeeeee .

    ReplyDelete
  27. "இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்.
    அதிராஆவுக்கு ஒன்று,ஆன்ரிக்காக ஒன்றூஊஊஊ
    இரண்டு மனம் வேஏஏஏண்டும்."

    "//ஆனால் எந்த வயதாயினும் காதல்(வயப்பட்டால்)(கொன்று) கொண்டுவிட்டால், கடைசிவரை, உறுதியோடு நின்று போராடி வெற்றிபெறும் துணிவு இருவருக்குமே இருக்க வேண்டும். அத்துணிவு இல்லையெனில் தயவு செய்து காதலிக்காதீர்கள்.//"
    100க்கு 100 உண்மை.

    அதிரா நல்லாஆஆ அந்தப்பாட்டைக்கேளுங்கோ. TMS எவ்வளவு அழகாக உச்சரிப்புச்சுத்தத்தோடு பாடியிருக்கிறார்.சூப்பர் பாட்டு.

    நீங்க விண்வெளிக்கு போறீங்களோஓஓ??காணியும் வேண்டப்போறியளோஓஓஒ நீங்களும் இருபது பன்னிரன்டுக்குள்ள செய்யிறதெல்லாம் செய்யிறியள் போல. ஒரு soல்லு maக்களுக்கு soன்னது நல்லதா போச்சு.இல்லையென்டா உங்க ஊர் யார்ட்(yard) இடம் மனுகொடுத்துப்போடுவினம். கவனமா போங்கோ.கோனர் ஸீட் கேட்டு அடம்பிடிக்காதேங்கோ.

    ReplyDelete
  28. வாங்கோ அப்துல் காதர்...

    அப்பாவியா வாலையும் ஆட்டாமல் போகிற ஒரு அப்பாவிப் பூஸை:)) நீங்களே பிடிச்சுக் குடுத்திடுவீங்கபோல இருக்கே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    //சிபிஐ உங்களை தேடிக்கொண்டு வாராங்காலாம். அம்புட்டு பணம் ஏது? //

    நீங்க வேற:)). நான், விண்கலத்தில சும்மா ஏறினாலே போதுமென ஒற்றைக் கால்ல:) நிக்கினம்:))) இதில பணமெல்லாம் கேட்பினமோ? அவ்வ்வ்வ்வ்வ்:))).

    //விதவ்ட்டில் கூட்டி போக முடியாதாம்!!அவ்வவ்..// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எப்படியாவது பூஸாரைப் பிரிச்சிடோணும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டுதான் இருக்கிறீங்கபோல... 2012 க்கு முன் அதெல்லாம் முடியாத காரியம்:)).

    ReplyDelete
  29. //எம் அப்துல் காதர் said... 20

    சரி லவ்வப் பத்தி ஏதோ சொன்னீங்க!! லவ்வுன்னா என்னா?? ///

    அடக் கடவுளே.... இவ்ளோ அப்பாவியா நீங்க?:)) கடவுளே நான் ஒண்ணுமே சொல்லல்லே:)))

    // "காதலிக்க நினைத்த போது..காதலிக்க நேரமில்லை!! காலம் கடந்து யோசித்த போது காதல் வரவில்லை!" யாரோ சொன்னது...அது ஆஆஆஆரது//

    ஆர் சொன்னாலென்ன... படித்துச் சிரித்திட்டேன்... :)). காதல் வராதென்றெல்லாம் இல்லை, காதல் வரும், ஆனா அதை நல்வழிப்படுத்தக்கூடிய மனப்பக்குவம் அந்நேரம் வந்திருக்கும்.

    மியாவ் மியாவ் அப்துல் காதர்....

    உங்கட பக்கம், ஆரோ தலைகீழாக நிற்பதுபோல சத்தம் கேட்குதே அவ்வ்வ்வ்வ்வ்:)))).

    ReplyDelete
  30. ஆகா இமா.. இவ்ளோ விரைவாக? நம்பவே முடியவில்லை.. மியாவும் நன்றி.

    இந்த நேரம் பார்த்து ஜீனோவைக் காணவில்லையே:)..இப்போ வந்திருந்தால் கேட்டிருக்கலாம்.. ஜீனோவின் மரீஜ் லவ் மரீஜ்ஜோ இல்ல அரேஞ் மரீச்சோ எண்டு.

    ReplyDelete
  31. வாங்க சிவா....

    எப்ப வந்தாலும் நீங்கதான் 1 ஸ்ட்டூஊஊஊஊ.. பயப்பூடாதீங்க...

    2 ரைம்ஸ் இல்ல 22 ரைம்ஸ் படிக்கோணும் சிவா:).

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  32. அடடா..... எங்கேயோ கேட்ட குரல்ல்ல்ல்ல்ல்ல்ல்... ஆனா இப்போ தண்ணில இல்ல(இது வேற தண்ணி:)) வெளியில கேட்குது... நிஜம்தானே இது....

    அட நம்மட ஜெய்.. வாங்க ஜெய் வாங்க... வந்ததும் வராததுமா சமையல் வேற பண்றீங்க...அவ்வ்வ்வ்வ்வ்:)).

    //தலைப்பில் சிவாஜி பாடும் பாட்டே போதும் ,மொத்த பதிவின் ரகசியத்தை சொல்லிடுச்சே :-)))//

    வந்த வேகத்திலயே கரெக்ட்டாப் பிடிச்சிட்டீங்க அவ்வ்வ்வ்வ்:)).

    ReplyDelete
  33. //ஜெய்லானி said... 24

    //நிலவு ஒருவருக்காகக் காய்வதில்லை //

    நிச்சயமா..!! அமாவாசையின் போது மட்டும்
    நிலவு ஒருவருக்காக காய்வதில்லை//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அமாவாசையில ஒருவருக்குமே:) காயாது நிலவு:)))).

    மயில் நாசாவுக்குக் கிட்டப் போயிருக்காம், அங்கின வந்து மீ:) ஐ, மீட் பண்றதா வாக்குறுதி வேற கொடுத்திருக்கிறாங்கோஓஓ:).

    மயில் இருக்கு ஆனா இல்ல:)).

    மியாவும் நன்றி ஜெய்.... நேரம் இல்லை ஜெய்.. இருப்பினும் பதிலுக்காக ஓடி வந்தேன், பிறகு வாறேன்:)).

    ReplyDelete
  34. வாங்கோ ஏஞ்சலின்/அஞ்சலின்.. (எது சரியோ தெரியேல்லையே)...

    முதன்முதலா வந்திருக்கிறீங்க நல்வரவு.

    //இதையெல்லாம் சமாளிக்கிற தைரியம் இள வயது பிள்ளைகளுக்கு இருக்கா .
    ????//

    உண்மை, கரெக்ட்டான கேள்விதான்..

    //என் கமேண்ட பாத்து என்னை அடிக்கனும்னு தோனுச்சினாஅடுத்த விண்கலதில
    டிக்கட் போட்டு தரேன் போய் அங்கே அடிங்க .escapeeeeeeeeeeeee //

    வந்த உடனேயே எஸ்கேப் ஆகுறீங்களே:)... அங்கின போய்ய்ய்ய்ய்ய் ஆரை அடிக்கச் சொல்றீங்க.. என்னை இல்லைத்தானே:))... ஃபிறீஈஈஈஈஈ டிக்கெட்வேற தாறதாச் சொல்லியிருக்கிறீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்:))). நான் ரொம்ப நல்ல பொண்ணு.. 6 வயசிலிருந்தே..:))).

    மியாவும் நன்றி அஞ்சலின்.

    ReplyDelete
  35. வாங்க அம்முலூ...

    //அதிராஆவுக்கு ஒன்று,ஆன்ரிக்காக ஒன்றூஊஊஊ
    இரண்டு மனம் வேஏஏஏண்டும்."// ஹா..ஹா..ஹா... இப்பூடிச் சிரிக்க வைக்கிறீங்க... வர வர ஜீனோமாதிரியேஏஏஏஏஏஏ கதைக்கப்பழகியிருக்கிறீங்க...:)).

    அதிராவையும் ஆன்ரியையும் புறிச்சுக் கதைக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்:)).... குடும்பிச் சண்டையெல்லாம் வெளியாலதான்:), உள்ளுக்குள்ளால நாங்க அந்த:) மாதிரியாக்கும்:)).

    //100க்கு 100 உண்மை.// யெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

    //TMS எவ்வளவு அழகாக உச்சரிப்புச்சுத்தத்தோடு பாடியிருக்கிறார்.சூப்பர் பாட்டு.// ஆருமே ரசிக்கவில்லையே... என நினைச்சிருந்தேன்... வந்ததும் வராததுமா ஜெய் ரசிச்சிட்டார்... இப்போ நீங்க தங்கியூஊஊஊஊஊ...

    கண்ணதாசன் இயற்றி, ரிஎம் எஸ் பாடி, அதை சிவாஜி நடித்திருந்தால்....சொல்லவே தேவையில்லை...

    ReplyDelete
  36. //நீங்க விண்வெளிக்கு போறீங்களோஓஓ??காணியும் வேண்டப்போறியளோஓஓஒ //
    இந்த ஓஓஓஒ வைப் பார்த்தாலே... என்னில சந்தேகப்பட்டுக் கேட்கிறமாதிரி இருக்கே அவ்வ்வ்வ்வ்வ்:)). நான் வாணாம் வாணாம் எண்டுதான் சொன்னேன்... நாந்தான் ரொம்ப பிஸியான பேர்வழியாச்சே.... கேட்க மாட்டினமாம்...:)).

    வலிய அழைக்கும்போது போயிடோணும்.. பிறகு கொஞ்ச நாள்ல தேடவும் மாட்டினம்... ஆறின கஞ்சி பழங்கஞ்சி என்றாகிடும் என்ற பயத்தில, லெவல் அடிச்சு, ஓம் பட்டிருக்கிறன்.. 3 மாடி வீடு கட்டுறத்துக்கு பிளாஆஆஆஅனும் போட்டாச்சு... சரி சரி இதைப்பற்றி பிறகு பேசுவம்:)).

    //கோனர் ஸீட் கேட்டு அடம்பிடிக்காதேங்கோ. //

    கிக்..கிக்...கீஈஈஈஈஈஈஈ எப்பூடி இப்பூடியெல்லாம் எழுதுறீங்க... கோனர் சீட்ல இருந்தால்தானே விண்கலம், விண்கூஊஊஊஊஊஊஊஊஊஉவிக்கொண்டு போகேக்கை, நான் எங்கட சகோஸ் மகோஸ் க்கெல்லாம் டாட்டா சொல்லலாம்...:))).

    கடவுளே... நிஜமாலுமே கல்லு வந்து விழப்போகுது என் பக்கத்தில.. அதால இத்தோடு ஓடிடறேன்:)))... மியாவும் நன்றி அம்முலு. தவறாமல் வந்து பதில் போடுறீங்க... கண்படாமல் இருக்கோணும்.

    எல்லாரும் இருக்கிறம், எங்கட அண்ணனும் தம்பியும்தான் வரவே மாட்டம் எண்டு அடம் பிடிக்கினம்:(((((((.

    ReplyDelete
  37. அதிரா,

    ரொம்ப நல்ல எழுதறீங்க. என்ன பதிவ பார்த்தா சுவாமி காதல் ஆனந்தா அப்படின்னு பட்டம் கொடுக்கலாம் போல இருக்கே ? நல்ல அட்வைஸ் பண்ணி இருக்கீங்க.
    (இங்கே வலையுலகில்கூட எத்தனையோ பேர் கொடிகட்டிப் பறக்கிறார்கள், அதைப் பார்த்து ஏங்காமல், நம்மிடம் புளொக்காவது இருக்கே, இன்னும் எத்தனை பேரிடம் புளொக்... ஏன் இன்ரநெட்கூட இல்லாமலும் இருக்கிறார்களே என எண்ணவேண்டும்:)). //

    சூ...ப்பர் போங்க இப்படித்தான் இருக்கணும். இனிமே இப்படி கீழே இருப்பவங்கள பார்க்கும் போது என் ப்ளாக் யும் பாருங்க. இந்த மாதிரி மொக்கை போடுறவங்க எல்லாம் இருக்கும் போது நாம எவ்வளவோ தேவல அப்படின்னு தோணும் (ஆ....வ்வ்வ்:)


    அட,நான்தான் முதல் கமென்ட்டா இங்கயும்? ;)
    இருங்க,படிச்சிட்டு வரேன்! :)

    இந்த மாதிரி படிக்காம கமெண்ட் போட வந்ததுக்கு மகி சீக்கிரம் தொடர் பதிவு போடணுமுன்னு கண்டிஷன் போட்ட்ருங்க அதிரா.

    ReplyDelete
  38. //ஜீனோவின் மரீஜ் லவ் மரீஜ்ஜோ இல்ல அரேஞ் மரீச்சோ எண்டு...// எதுக்குக் கேட்பான் அதீஸ். 'ஜீனோ'வுக்கு நிலாதான் அரேஞ்ச் பண்ணி இருக்கவேணும். அப்ப, அங்க 'டோரா' இருக்கேல்ல. இது பிறகு வேற எங்கயோதான் ரெண்டு பேரும் சந்திச்சு இருக்கினம்.

    //குடும்பிச் சண்டையெல்லாம் வெளியாலதான்:)// க்ர்ர்ர்ர்ர் எப்ப பிடிச்சனான்!!

    //அதிராஆவுக்கு ஒன்று,ஆன்ரிக்காக ஒன்றூஊஊஊ
    இரண்டு மனம் வேஏஏஏண்டும்.// வேலை நடுவில நெட் பக்கம் வந்தால் போட்டுக் குடுத்துருவன், பத்திரம் அம்முலு. ;) //வேஏஏஏண்டும்.// அட! சுப்பரா ராகத்தோட பாடுறீங்களே!

    ReplyDelete
  39. வணக்கம் பூசார்ர்ர்..., இது பதிவுக்கான பின்னூட்டம் அல்ல,

    உங்களின் மின்னஞ்சல் முகவரியினைப் பெற முடியாத காரணத்தால், பின்னூட்டம் மூலமாக இடையூறு செய்கிறேன், மன்னிக்கவும்.

    நண்பேன்டா தொடர்பதிவினைத் தொடர உங்களையும் அன்போடு அழைகிறேன்.

    http://www.thamilnattu.com/2011/07/blog-post_09.html

    ReplyDelete
  40. வணக்கம் ப்ளாக் ஓனர், சாரி, ஆதிரா.

    முதலில் இந்த வலைப் பதிவினைப் பாலோ பண்ணிப் பதிவுகள் வெளியாகிய உடன் வந்து படிக்க முடியாதவாறு, பாலோவர்/ FOLLOWERS விட்ஜெட்டினை வைக்காது இவ் ப்ளாக்கினை நடாத்துவதற்கு வன்மையான கண்டனங்கள். வெகு விரைவில் இந்தப் ப்ளாக்கிற்கும் பாலோவர்ஸ் இணைப்பீங்க என்று நம்புகிறேன்.

    Go to your Dashbooard,
    Click on the Design menu,
    then have a look in your right hand side.
    U can see Page Elements.

    After that, Click on the Add New Gadget Button,
    Add Followers...
    Save.
    That's All only you have to do.

    ReplyDelete
  41. "காதலிக்க நினைத்தபோது
    நினைவு வந்தது
    காதலைச் சந்திக்காது
    இருந்திருந்தால்
    எவ்வளவோ சாதித்திருப்பேன்
    நண்பன் சொன்னது"//

    இது தான் பட்ட பின்னர் புத்தி தெளிவதென்பதோ;-)))

    ReplyDelete
  42. இப்படத்தை நான் எந்த புளொக்கிலிருந்தும் களவெடுக்கேல்லை...:)//

    ம்....விளங்குது, விளங்குது, நானே கூகுளில் சுட்ட படத்தை வைச்சு ப்ளாக்கில் ஒரு பதிவினைத் தேத்தியிருக்கேன், நீங்க நம்மளை மறைமுகமா கடிக்கிறீங்க.

    ஹா...ஹா...

    ReplyDelete
  43. “காதலிக்கக் கூடாது” (முறைக்காதீங்க கர்ர்ர்ர்ர்:)), அதையும் தாண்டி ஒருவேளை காதலித்துவிட்டால், கடசிவரை கைவிடக்கூடாது என்பதுதான் என் குறிக்கோள்.//

    இது அந்தக் காலத்திற்கு ஓக்கே. அதாவது இன்றைக்குப் பத்து வருடங்களுக்கு முன்னர். ஆனால் இக் காலத்தில் எப்படா ஒருத்தியைக் காதலித்து, அவளைக் கை கழுவி விட்ட பின்னர் அடுத்த ஆளை காதலிக்கலாம் என்று தான் எம் இளையோர்களில் பெரும்பாலானவர்கள் அலைகிறார்கள்.

    ReplyDelete
  44. “எப்பவுமே மேலே பார்க்காதீர்கள், கீழே பார்க்கப்பழகுங்கள்” என. அதாவது அதிக வசதியாக இருப்போரைப் பார்த்து ஏங்காமல், எமக்கு கீழ் இருப்போரைப் பார்த்து, நம்மைத் திருப்திப்படுத்திக்கொள்ள வேண்டும், அவர்களைவிட நாம் எவ்வளவோ வசதியாக இருக்கிறோம் என//

    இந்தத் தத்துவத்தை எங்கள் நாட்டுப் பெரும்பான்மை அரசியல்வாதிகள் பின்பற்றியிருந்தால்- இவ்வளவு உயிரிழப்புக்கள் ஏற்படாது, தமிழனுக்கு ஒரு சிறிதளவு சுதந்திரமாவது கிடைத்திருக்கும்,

    ReplyDelete
  45. (இங்கே வலையுலகில்கூட எத்தனையோ பேர் கொடிகட்டிப் பறக்கிறார்கள், அதைப் பார்த்து ஏங்காமல், நம்மிடம் புளொக்காவது இருக்கே, இன்னும் எத்தனை பேரிடம் புளொக்... ஏன் இன்ரநெட்கூட இல்லாமலும் இருக்கிறார்களே என எண்ணவேண்டும்:)).//

    சத்தியமா இது எனக்கில்லை என்பது தெரியும், ஆனால் ஒவ்வோர் பதிவிலும் சுத்திச் சுத்தி, யாரையோ போட்டு விறாண்டுறதெண்டு தான் கிளம்புறீங்க.

    ReplyDelete
  46. காதல் பற்றிய பல்வேறு பரிணாமங்கள் நிரம்பிய பதிவொன்றினைத் தந்திருக்கிறீங்க. காதலிக்க முன்னர் எத்தகைய எண்ணங்களை மனதில் இருத்தி- வாழ்க்கையின் ஒவ்வோர் அடிகளையும் நகர்த்த வேண்டும் என்பதனை அருமையாக விளக்கியிருக்கிறீங்க.

    காலத்திற்கேற்ற காத்திரமான பதிவு.

    ReplyDelete
  47. வாங்க “என் சமையல்”... நல்வரவு.


    பதிவு பார்த்ததும், ஏதாவது அகப்படுமா என ஓடிப்போய் உங்கட புளொக் பார்த்தேன் இப்போ, அவ்வ்வ்வ்வ் அங்கின ஒண்ணுமே பிரியல்ல உங்களைப்பற்றி:)).

    சும்மா, அதிராவுக்காகவெண்டாலும் ஒரு பெயரைப் போட்டிருந்தால் கிட்னியை யூஸ் பண்ணிக் கண்டுபிடிச்சிருப்பேன்.. “அங்க” எங்கட பழைய உறவுபோலமட்டும் தெரியுது:)... சரி அது போகட்டும்..

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... சுவாமி காதல் ஆனந்தா இல்லை:). யான்.. ”பூஸானந்தாஆஆஆஆஅ”:).

    //இனிமே இப்படி கீழே இருப்பவங்கள பார்க்கும் போது என் ப்ளாக் யும் பாருங்க//

    சூப்பரா என்னை வலையில பிடிச்சிட்டீங்க... டோண்ட் வொரியா... மீ கம்மிங்யா:)).

    மகிக்குத்தான் “குழல்புட்டு” பட்டம் கொடுத்தாச்சு:), ஆனா அந்தப்புட்டை மீறி, இமா வெளில வந்திருக்கிறா:), இன்னும் அந்தப்புட்டு அவிஞ்சு முடியேல்லை அவ்வ்வ்வ்வ்:)).

    மியாவும் நன்றி என் சமையல்...(இது ஒருமாதிரி இருக்கே அழைக்க, ஒரு பெயர் போட்டால்தானே வசதி எமக்கு:)).

    ReplyDelete
  48. என்ன இமா...

    //எதுக்குக் கேட்பான் அதீஸ். 'ஜீனோ'வுக்கு நிலாதான் அரேஞ்ச் பண்ணி இருக்கவேணும்.//

    கடவுளே!!! எனக்கு ஆராவது சுட்டாறின தண்ணி.. கொஞ்சம் குளிராத் தெளியுங்கோஓஓஓஓ..:). இதென்ன இது நிலா? புதுக்கொயப்பம் அதிராவுக்கு:)... நிலாவைக்காதலிச்சுப்போட்டு டோராவைக் கைப்பிடிச்சவரோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. நான் நம்பமாட்டன் இமா, அம்பி ரொம்ப நல்ல தம்பி:)))).

    //க்ர்ர்ர்ர்ர் எப்ப பிடிச்சனான்!! //
    அப்ப, அதிராட வீட்டுக்க வராமல் பக்கத்து வீடுகள்ல நிண்டு, வேலியால எட்டி அதிராவுக்கு ஹாய்... சொல்றது குடும்பிச்சண்டை இல்லையோ?:), கடவுளே நான் தான் தப்பா, அதுதான் குடும்பிச் சண்டையாக்கும் என நினைச்சுட்டேன்... பொறுங்கோ வாறன்:).

    அம்மு...அம்மு...அம்முலூஊஊஊஊஊ நான் முந்திச்சொன்னதைப் படிச்சதும் கிழிச்சிடுங்கோ:)).... நாங்கள் குடும்பிச் சண்டையும் போடுறேல்லைத் தெரியுமோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்... ஆர் சொன்னது அப்பூடியெண்டெல்லாம்:)))).

    மியாவும் நன்றி இமா.

    எங்கட நிரூபனை எங்காவது கண்டனீங்களோ?:)))

    ReplyDelete
  49. பெயர்தானே Girija அப்படின்னு வெச்சுக்கோங்க. ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் ......ssssssssssssss யா ஏன் ப்ளோக உடனே ஓடி வந்து பார்த்ததுக்கு. என்கிட்டஎல்லாம் மேட்டர் தேத்த வந்த உங்கல நெனச்ச அழுகிறதா சிரிக்கிறதான்னு தெரியல. என்ன வெச்சு காமெடி கீமெடி ஏதும் பண்ணலையே ??


    மகிக்குத்தான் “குழல்புட்டு” பட்டம் கொடுத்தாச்சு:), ஆனா அந்தப்புட்டை மீறி, இமா வெளில வந்திருக்கிறா:), இன்னும் அந்தப்புட்டு அவிஞ்சு முடியேல்லை அவ்வ்வ்வ்வ்:)).//

    மகிக்கு புட்டு பண்ண தெரியாதாம்?அதான் கன்னத்துல கைய வச்சு உக்கார்ந்து இருக்காங்க.

    அடுத்து நான் டார்ச்சர் பண்ண போறது இமாவத்தான். இமா ஏஸ்கபூஊஊஊ

    ReplyDelete
  50. ஆ..... வனஜா கிரிஜா:)))... இல்லையில்லை கிரிஜா.... இதுவரை நெட் உலகில கேள்விப்படாத பெயர்:). ஓக்கை இது ரொம்ப நல்லாவே இருக்கு.

    வாங்க கிரிஜா..

    //உங்கல நெனச்ச அழுகிறதா சிரிக்கிறதான்னு தெரியல.// எனக்கும் அதே .. டபிள் பீலிங்ஸாவே இருக்கு அவ்வ்வ்வ்வ்வ்:).

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... ஆர் சொன்னது மகிக்கு புட்டவிக்கத் தெரியாதென... இன்னும் தேங்காய் உடைக்கேல்லையாம்... சுத்தியலால எப்பூடித்தான் உடைக்கிறதோ அவ்வ்வ்வ்வ்:)), தேங்காயை உடைச்சால், புட்டு அவிஞ்சமாதிரித்தான்..

    //இமா ஏஸ்கபூஊஊஊ // நினைச்சேன் சிரிச்சேன்.. கிக்..கிக்..கீஈஈஈஈஈ...

    மியாவும் நன்றி கிரிஜா...

    ReplyDelete
  51. வாங்க நிரூபன்...

    //வணக்கம் பூசார்ர்ர்..., இது பதிவுக்கான பின்னூட்டம் அல்ல,/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    நான் தினமும் நிரூபனின் பூவுலகுக்குப் போய்ச் செக் பண்ணினனான் புதுத் தலைப்பு வந்திருக்கோ என்று,(போய்ப் பார்த்தால் மட்டுமே புதுத்தலைப்பு வந்திருப்பதைக் கண்டுபிடிக்க முடியுதெனக்கு, விரைவில அதுக்கு ஒரு முடிவு பண்ணோனும், நேரம் கிடைக்குதில்லை) ஆனா நான் போகாம விட்ட நேரம் வந்திருக்கு அவ்வ்வ்வ்வ்வ்:))...

    என்னையும் அழைத்தமைக்கு மியாவும் நன்றி நிரூபன்.. முடிந்தவரை எழுதுவேன். என் நண்பி பற்றி இதில் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்...

    http://gokisha.blogspot.com/2010/07/blog-post_18.html

    ReplyDelete
  52. //நிரூபன் said... 40

    வணக்கம் ப்ளாக் ஓனர்/// பிளாக் ஓனர்ர்ர்ர்ர்... எங்கேயோ பார்த்திருக்கிறேனே......:)).

    //பாலோவர்/ FOLLOWERS விட்ஜெட்டினை வைக்காது இவ் ப்ளாக்கினை நடாத்துவதற்கு வன்மையான கண்டனங்கள். வெகு விரைவில் இந்தப் ப்ளாக்கிற்கும் பாலோவர்ஸ் இணைப்பீங்க என்று நம்புகிறேன்//

    எனக்குப் புரியேல்லை, ஏன் ஃபலோவராக இணையும் வசதி இருக்குத்தானே?, சரி நீங்க சொன்ன ஸ்ரெப்ஸ் படி செய்கிறேன் ஓக்கை?.

    //நீங்க நம்மளை மறைமுகமா கடிக்கிறீங்க. //
    கற்பூரம் மாதிரி கரெக்ட்டாக் கண்டுபிடிச்சிட்டீங்களே மைக் பிடிக்கும் பூஸாரை:))).

    //ஆனால் இக் காலத்தில் எப்படா ஒருத்தியைக் காதலித்து, அவளைக் கை கழுவி விட்ட பின்னர் அடுத்த ஆளை காதலிக்கலாம் என்று தான் எம் இளையோர்களில் பெரும்பாலானவர்கள் அலைகிறார்கள். //
    இப்ப புரியுதோஓஓ? “அப்பாவியா” இருக்கிற “எம் பாலார்” ஐக் காப்பாத்தத்தான் இப்பதிவூஊஊஊஉ:)).... ஆஆஆ... நான் ரெண்டுகாலையும் விண்கலத்துள் வைத்திட்டேன், இனி என்னை ஒண்ணும் பண்ண முடியாதூஊ:))))).

    ReplyDelete
  53. முடிந்ததை நினைத்து என்ன காணப்போகிறோம்.... இனிமேலாவது கீழுக்கு இருப்பவர்களைப் பார்த்துத் திருப்திப்படுவோமே.

    //சத்தியமா இது எனக்கில்லை என்பது தெரியும், ஆனால் ஒவ்வோர் பதிவிலும் சுத்திச் சுத்தி, யாரையோ போட்டு விறாண்டுறதெண்டு தான் கிளம்புறீங்க//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), யாரையும் குறிப்பிடவில்லை, ஆனா மற்ற பூவுகளைப்பார்த்து எம் கூட்டமும்:)) மெல்ல மெல்ல மூடிவிட்டுப் போய்விடுவார்களோ என்ற ஒரு கவலையில, அனைவரும் மனதில இப்படி நினைத்தால், இன்னும் தைரியம் வரும் இன்னும் தொடர்ந்து எழுதலாம் என்பதற்காகவே சொன்னேன்.

    ஏனெனில் வரவர பூக்களெல்லாம் சோஓஓஒருது, தண்ணி ஊத்தோணும்:)).

    தலைப்புப் பார்த்துப் பயந்து ஓடிட்டீங்களோ என நினைத்தேன்... ஒரு கலக்குக் கலக்கிட்டீங்க....

    மியாவும் நன்றி நிரூபன்.

    ReplyDelete
  54. //காதலிக்க முன்னர் எத்தகைய எண்ணங்களை மனதில் இருத்தி- வாழ்க்கையின் ஒவ்வோர் அடிகளையும் நகர்த்த வேண்டும் என்பதனை அருமையாக விளக்கியிருக்கிறீங்க.//

    பல கதைகள் மனதிலே இருக்கு நிரூபன்... அனைத்தையும் பதிவில் சொல்ல முடியவில்லை.

    எம் உறவினரின் உறவு முறையிலே ஒரு அக்கா, அவ 6 ஆண்பிள்ளைகளோடு பிறந்த ஒரே ஒரு பெண். நிறைய சொத்துப் பத்துக்கள், வாகனங்கள், வசதியானவர்கள்.

    இந்த அக்கா, படிக்கும்போது ஒருவரை விரும்பினா, அந்த அண்ணா, வேறு சாதியாம். பெரிய படிப்பு, பதவி ஏதும் இல்லைப்போல் தெரிந்தது. திருமணப் பேச்சு வந்ததும், அந்த அக்கா வீட்டில் எதிர்ப்பு ஆரம்பித்துவிட்டது.

    அந்த அக்காவோ, முடித்தால் அவரைத்தான் முடிப்பேன் என ஒரே பிடிவாதம்... வயதும் புஸ் புஸ் என ஏறிக்கொண்டு போனது, அப்போ அக்காவின் பெற்றோர் சொன்னார்கள், நாம் திருமணம் முடித்து வைக்க மாட்டோம், நீ வேணுமெண்டால் அவரோடு ஓடிப் போயிடு என.

    இதை அக்கா, அவருக்குச் சொல்லிக் கேட்டிருக்கிறா. அதுக்கு அவர் சொன்னாராம்... உன் பெற்றோருக்கு அவ்வளவு சாதித் தடிப்போ, நான் உன்னைக் கூட்டி வரமாட்டேன், திருமணம் முடிப்பதாயின், உன் பெற்றோரை என் வீட்டுக்கு வந்து முறைப்படி மாப்பிள்ளை கேட்கச் சொல் என.

    இப்படியே இருவரும் திருமணம் முடிக்காமலே காலம் கடந்தது. அக்காவின் தம்பிமார் எல்லோரும் முடித்துவிட்டார்கள். நான் கடசியாக கேள்விப்பட்டபோது அந்த அக்காவுக்கு 40 வயதெனச் சொன்னார்கள். பின்பு என்ன நடந்ததென அறியவில்லை.

    அப்போ யோசித்துப் பாருங்கள்... கண்டறியாத காதலால் எல்லாமே வீணாகிவிட்டது.. காதலித்தது ஒன்றுதான் மிச்சம்... அந்த அக்காவே தான் வருகிறேன் எனச் சொல்லும்போது, உண்மையான காதலன் என்றால் உடனே முடித்திருக்கவேண்டும்.

    இதுக்குத்தான் சொல்றது காதலிக்கும்போது இருப்பதுபோலவேதான் திருமணத்தின்போதும் இருப்பார்கள் என எதிர்பார்க்கமுடியாதே.... அப்போ என்ன நம்பிக்கையில் காதலிப்பது... ஒருகணம் யோசியுங்க மக்கள்ஸ்ஸ்ஸ்...

    சொத்துப் பத்துக்கு ஆசைப்பட்டாரோ தெரியாது, ஆனா என்னதான் இருந்தாலும் எம் நாட்டில் எல்லாமே பெண் பிள்ளைக்குத் தானே கொடுப்பார்கள், அதிகம் மிஞ்சி இருந்தால்தான் ஆண் பிள்ளைக்கும் கொடுப்பார்கள். இவர் குடும்பத்தில் ஆண் பிள்ளைகள் எல்லோருமே வெளிநாட்டிலாம், அப்போ இருப்பதெல்லாம் அந்த அக்காவுக்குத்தான் என்றாவது போய்ச் சேரும்.

    காதலரின் வீண் பிடிவாதத்தால் எல்லாமே போய்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்.

    ”உரலுக்குள் தலையைக் கொடுத்து விட்டு, இடிக்குப் பயப்பட முடியாது”

    தலை கொடுக்குமுன் யோசிக்க வேண்டும்.

    ReplyDelete
  55. அதீஸூ, இதில் எனக்கு மாற்றுக் கருத்து இருக்கு. காதலிப்பது பெற்றோர் சம்மதத்துடன் தான் கல்யாணம் முடிப்பது என்று இருந்தால் எங்க நாடுகளில் பாதிப் பேருக்கு மேல் முதிர்கன்னிகளாகவே இருப்பார்கள். அதுக்காக காதலிக்கவே கூடாது என்று சொல்வது நியாயமில்லை. அந்த அந்த வயதில் ஒரு குறு குறுப்பு எல்லோருக்கும் இருக்கும். இருக்க வேண்டும். தும்மல், கொட்டாவி போல காதலும் வந்து தொலைத்து விடுகிறது. சாதி முதல் காரணம், இரண்டாவது படிப்பு, மூன்றாவது வசதி. இதில் ஆண் வீட்டாருக்கு ஒன்று குறைவாக இருந்தாலும் பெண்ணின் வீட்டில் மறுத்து விடுவார்கள். எப்படித் தலை கீழாக நின்றாலும் ஒரு புண்ணியமும் இல்லை. இப்படி நிறையப் பேரை எங்கள் ஊரில் நான் பார்த்திருக்கிறேன். அதன் பிறகு பெற்றோர் பார்க்கும் ஆணை/பெண்ணை மணம் செய்து வாழ்கிறார்கள். காலப் போக்கில் மறந்து/ மறந்து போனது போல் இயல்பாக இருக்கவும் செய்கிறார்கள்.

    என்னையும் அழைத்து இருக்கிறீங்க!!!! கொஞ்சம் பிஸியாக இருப்பதால் இப்பதைக்கு எழுத முடியவில்லை. ஆறுதலா எழுதுவேன்.

    ReplyDelete
  56. வாங்க வான்ஸ்ஸ்.. நலம்தானே.. விடுமுறைக்குப் பின்?:)).

    உங்கட கருத்துக்கள் சரிதான் வான்ஸ்..

    நான் காதல் கூடாது என்றோ, காதலிக்க வேண்டாம் என்றோ சொல்லவில்லை, சொல்லவும் மாட்டேன், காதலிக்க முன் சற்று சிந்திக்கச் சொல்கிறேன் அவ்வளவுதான்.

    இயல்பாக, தானாக வருவதுதான் எல்லாமும் என்றாலும், அவற்றைக் கட்டுப்படுத்தவும் பழக வேண்டும். தும்மல் இயற்கையாகத்தான் வருகிறது.. ஆனா வீட்டிலிருந்தால்... நல்ல சுகந்திரமாக தும்மி விடுவோம், அதே நேரம், ஒரு ஒபீசில் அல்லது மீற்றிங்கில் இருக்கும்போது, அதை அடக்கி அருகிலிருப்பவருக்கும் கேட்காமல் தும்முகிறோமே, அதேபோலத்தான் சொல்கிறேன், எந்த உணர்வையும் தானாக வந்தாலும் கட்டுப்படுத்தவும், கொஞ்சம் சிந்திக்கவும் தெரிய வேண்டும்.

    எல்லோருக்கும் எல்லோர் மீதும், அன்பு காதல் வராது, சிலவேளை சிலருக்கு எம்மைப் பிடிக்கும் ஆனா எமக்கு அவர்களைப் பார்க்கவே பிடிக்காது, இருவருக்குள்ளிருந்தும் அது மலரவேண்டும், ஆனா, இது இயற்கையாக வருவது என எல்லோரையும் காதலிக்க வேண்டாம் என்றுதான் சொன்னேன்.

    வீட்டில் சம்மதிக்காதுவிட்டால் ஓடிப்போய்த் திருமணம் செய்யவும் ரெடி என இருப்பின் ஓக்கே, ஆனா அது முடியாத விஷயமெனில், ஏன் இன்னொருவரின் வாழ்வை நாசமாக்க வேண்டும் காதல் என்ற பெயரில்.

    திருமணமாகிவிட்ட ஒரு பெண்/ஆண் மீது, ஒருவருக்குக் காதல் வந்தால், அதை கட்டுப்படுத்தத் தெரியவேண்டும்.. அப்படியெல்லாம் காதல் வராது எனச் சொல்லிட முடியுமோ?, இல்லை, இயல்பாக வந்துவிட்டதே என ஏற்றுக்கொள்ள முடியுமோ? அப்படியெனில் குடும்பமே நாசமாகிவிடுமே. இதைத்தான் சொல்கிறேன், பலமுறை சிந்திக்க வேண்டும், முடிந்தவரை மனக் கட்டுப்பாடு அவசியம்.

    என்னோடு படித்த ஒரு பெண் கெட்டிக்காரி, அழகான பிள்ளை, அவ கண்டதும் காதலென ஒருவரை விரும்பிட்டா... படிப்பதும் குறைந்துவிட்டது, இத்தனைக்கும் அவரும், முன்னால் பின்னால் துரத்தித் துரத்தித்தான் காதலித்தார்... ஆனா சிலகாலம் சைக்கிளில் ஊற்சுற்றிக் காதலித்தபின், நைசாக விட்டுவிட்டார், இப்பெண் தேடியபோது..

    இன்னொரு girl உடன் போவதைக் கண்டாராம்.. வந்து பெரிய ஒப்பாரி. அதன் பின்புதான் அந்த boy ஐ விசாரிக்கும் எண்ணம் வந்து விசாரித்தால், அவரின் பொழுதுபோக்கே இதுதானாம். இப்போ விசாரித்ததை, முன்பே விசாரித்திருக்கலாமெல்லோ.. அதைத்தான் சொன்னேன்.

    காதலிப்பதென்பது கெட்டித்தனமில்லை, காதலித்துவிட்டால் கடசிவரை அதை நிலைநாட்டுவதுதான் கெட்டித்தனம். கண்ணை மூடிக்கொண்டு காதலிக்காமல் வருங்காலத்தையும் மனதில் நிறுத்திக் காதலிக்க வேண்டும்.
    ...... தொடர்கிறது:)

    ReplyDelete
  57. காதலிப்பதற்கு, படிப்பு, பதவி, அஸ்தஸ்து, அழகு, சாதி, சமயம் இவை எல்லாம் முக்கியமில்லை, ஆனா கடைசிவரை நிலையாக நின்று வெற்றியைக் காணும் துணிவு வேண்டும், அது இல்லையெனில் காதலில் இறங்காதீர்கள்..... எங்கட கண்ணதாசனின் கதைப்புத்தகத்தில் படித்தேன்.

    ஒரு கிறிஸ்தவ பெண்ணும், இந்து ஆணும்(அப்பாவின் ஒபீஷில் வேலை பார்த்தவர்கள்) காதலித்தார்கள், திருமணமும் முடித்துக் குழந்தையும் பிறந்தது, இரு கோயிலுக்கும் போய் வந்தார்கள்.

    குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும்போது பிரச்சனை ஆரம்பமானது, பிள்ளை என்ன சமயம் என்பதை தீர்மானிக்க இருவராலும் முடியவில்லை, இருவருமே விட்டுக்கொடுக்க முன்வரவில்லை, வீட்டில் ஒரே அடிபாடு சண்டை ஆரம்பமானது..... பிரியப்போகிறார்கள் என்றே கதை அடிபட்டது, ஆனா முடிவு தெரியாது எனக்கு. இதையெல்லாம் காதலிக்கும்போதே தீர்மானித்திட வேண்டுமெல்லோ.

    இன்னொரு கதையும் இதே கதைதான், ஆனா, பெண் காதலிக்கும்போதே கேட்டுக்கொண்டார், குழந்தைகளை என் கிரிஸ்தவ சமயத்தில்தான் சேர்க்கவேண்டும், இதுக்கு சம்மதமோ என, ஆண் ஒத்துக்கொண்டார்.... பிரச்சனை இல்லாமல் காதல் கசிந்து கல்யாணமாகி இப்போ பிள்ளைகள் கிரிஸ்தவம், ஆனா சைவக் கோயிலுக்கும் போவார்கள், வெள்ளிக்கிழமையில் சைவமாக இருப்பார்கள் அதெல்லாம் நடக்கிறது.

    உஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆஆஆ... வியர்க்குதெனக்கு... என்னைத் தேடுவோர்.. நாசாவுக்கு வந்து, வெயிட் பண்ணும்படி மிகவும் தாழ்மையாக, அடக்கொடுக்கமாக, அன்பாக... கேட்டுக்கொள்கிறேன்....:)))).

    மியாவும் நன்றி வான்ஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
  58. அதிரா, தேங்காயெல்லாம் உடைச்சுட்டேன். ஆனா இப்போதைக்கு மேல்மாடி காலியா இருக்குது இந்த விஷயத்தில்.ஒரு ஸ்பார்க் வரும்,வந்த உடனே எழுத ஆரம்பிச்சா நல்லா வரும்,அதுக்கு முன் என்ன எழுதினாலும் தேறாது.

    ஸோ,குழல்புட்டு வேக இன்னும் கொஞ்சம் நாளெடுக்கும்! அட்ஜஸ்ட் பண்ணுங்க.

    ஆனா உங்க அளவுக்குத் தெளிவா எல்லாம் என்னால் எழுத முடியுமான்னு தெரில.ஏதோ என்னால் முடிஞ்சளவு குழப்புவேன்,ஹிஹி!

    ReplyDelete
  59. athira said...
    ஆ..ஸாதிகா அக்கா, குலாப் ஜாமூன் போலவே ஒரு பதிவு போட்டு பல அறிவுக்கண்களைத் திறந்திட்டீங்க.

    இதேபோல... கோபக்காரருக்குமாகவும் ஒரு பதிவு போடுங்க, கோபம் வந்தால் எப்பூடிக் கன்ன்ன்ன்ன்ன்ன்ன்றோல் பண்ணலாம் என.... இப்போதைக்கு மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

    February 22, 2011 5:10 PM

    அதீஸ் கோபப்படாமல் இங்கே கொஞ்சம் வாங்களேன்

    ReplyDelete
  60. ஆ... மஹி..

    //இந்த விஷயத்தில்.ஒரு ஸ்பார்க் வரும்,வந்த உடனே எழுத ஆரம்பிச்சா நல்லா வரும்,அதுக்கு முன் என்ன எழுதினாலும் தேறாது. //

    கரெக்ட்டாச் சொல்லிட்டீங்க, உண்மைதான், சிலநேரம் ஒரு லைட்னிங் வரும், உடனே எழுதிடோணும், சிலநேரம் எப்பூடிச் சிந்தித்தாலும் எதுவுமே தோணாது.

    நீங்க முடிந்தால் எழுதுங்கோ இல்லாட்டில் வாணாம், ஒரு குறையும் இல்லை:)).

    நான் ஏன் அழைத்தேன் என்றால், சில தலைப்புக்கள் பற்றி சிலரிடம் பல எண்ணங்கள் இருக்கும், ஆனா ஆராவது இப்படித் தூண்டினால்தான் வெளிப்படும், இல்லாவிட்டால்... கிட்னியில் இருப்பது தெரியாமலேஏஏஏஏ போயிடும், அதனால்தான் அழைத்தேன்.

    மியாவும் நன்றி மகி.

    ReplyDelete
  61. ஸாதிகா அக்கா... தலைப்புக்குக் காரணம் நான் எனக் ககையைக் காட்டிட்டீங்களே... இனி நான் எப்பூடி மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ் உடன் கோபிப்பேன்... அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))). கோபிக்காமலே இருந்தால் ஆரும் பயப்புடுறாங்க இல்லை ஸாதிகா அக்கா... இடைக்கிடை கோபித்தால்தான்... பயப்புடீனம்ம்ம்ம்ம்ம்ம்...

    என் நண்பி(செம்மறி ஆடு:)) ஒரு தடவை என்னைக் கேட்டது எனக்கு நினைவு வருது..

    “உனக்குக் கோபமே வராதா அதிரா?”.:))).

    மியாவும் நன்றி ஸாதிகா அக்கா. பாருங்கோ நான் சிரிச்சுக்கொண்டிருக்கிறேன் கோபிக்காமல்:)))).

    ReplyDelete
  62. அதிரா! ரொம்பவே நன்றாக எழுதியிருக்கிறீர்கள்! ஒரே வார்த்தையில் சொல்லி விடலாம் உண்மையான காதல் ஜெயிக்கும் என்று!

    ReplyDelete
  63. வாங்கோ மனோ அக்கா, நீண்ட நாட்களுக்குப் பின் வந்திருக்கிறீங்க...

    உண்மைதான், உண்மையான காதல் ஜெயிக்கும். ஆனாலும் மனோ அக்கா, காலம் கடந்தபின் தானே தெரியுது... உண்மையான காதலோ இல்லையோ என.

    மிகவும் நன்றி மனோ அக்கா.

    ReplyDelete
  64. பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
    காதல் கொண்ட அனைவருமே மணம்முடிப்பதில்லை
    மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
    சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

    ReplyDelete
  65. ஆஅ... தத்துவம்... தத்துவம்... ஜெய்...

    விதி வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுது...

    மகன்: காதலிப்பது தப்பா அப்பா?

    அப்பா: காதலிப்பது தப்பே இல்லை மகனே, ஆனா, காதலித்த பெண்ணைத்தான் மணம் முடிப்பேன் என ஒற்றைக்காலில் நிற்கிறாயே... அதுதான் தப்பு.

    கடவுளே!!!!!.... என்னைக் காப்பாத்தூஊஊஊஊஊஊஊஊஊஊஉ..

    //சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை//

    சேர்ந்துதானே போகிறோம்... வெளியில போகும்போது:))))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))))

    ReplyDelete
  66. //மகன்: காதலிப்பது தப்பா அப்பா?

    அப்பா: காதலிப்பது தப்பே இல்லை மகனே, ஆனா, காதலித்த பெண்ணைத்தான் மணம் முடிப்பேன் என ஒற்றைக்காலில் நிற்கிறாயே... அதுதான் தப்பு.//

    மகன் : ஏன் அப்பா அப்படி சொல்றீங்க ..?

    அப்பா : நான் என்னத்த சொல்ல அவளையேதான் நானும் காதலிக்கிறேன்..

    மீ..எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் :-)))))))))

    ReplyDelete
  67. //என் நண்பி(செம்மறி ஆடு:)) ஒரு தடவை என்னைக் கேட்டது எனக்கு நினைவு வருது..

    “உனக்குக் கோபமே வராதா அதிரா?”.:))).//


    பரவாயில்லையே செம்மறி ஆட்டுகிட்டே எல்லாம் ஃபிரன்ஷிப் வச்சி இருக்கீங்க :-))
    அதுகிட்டே கோவபட்டா முட்டிடாது ஹா..ஹா.. ((நல்ல டிரைனிங்))

    ReplyDelete
  68. மின்னல்மியா,நீங்க அழைத்த பதிவை என் மனதில் இருந்து எழுதிவிட்டேன். ;) :)
    http://mahikitchen.blogspot.com/2011/07/blog-post_21.html

    /கடசி, காதலில் தோற்ற கதைகளாவது(உண்மைச்சம்பவம்) இருக்குமே.. /மன்னிக்கவும்,நீங்கள் கேட்ட இந்த விஷயம் என் எல்லைக்குள் வராததால் சொல்லமுடியவில்லை!

    நன்றி!

    ReplyDelete
  69. இத்தலைப்புப் போடும் ஐடியா பட்டென கிட்னியில் உதித்தது..... ஆஹா ஆரம்பிச்சுட்டாங்கய்யா...

    ReplyDelete
  70. // என்ன பதில் சொல்லியிருப்பேன் என கண்டுபிடியுங்கோ......:).//

    அடியேய் கொஞ்சமாவது அறிவிருக்காடி... கல்யாணத்துக்கு முன்னால எப்படி இருக்கோங்கறது முக்கியமில்ல கல்யாணத்துக்கு அப்பறம் ஒழுங்கா இருக்கமாங்கறது முக்கியம்...புரியுதா...போய் முதல்ல உன் புருசனோட கேரக்டர முழுசா புரிஞ்சுக்கோ.... சரியா புரிஞ்சிக்குற பக்குவம்மா இருந்தா மெதுவா சொல்லு இல்ல பழச மறந்துரு.. மறக்க முடியாது ... மறக்க முயற்சி பண்ணு... இல்ல மறந்துட்ட மாதிரி நடி.... பி ஹேப்பி ... அப்படீன்னு சொல்லியிருப்பீங்களோ......

    ReplyDelete
  71. //“காதலிக்கக் கூடாது” (முறைக்காதீங்க கர்ர்ர்ர்ர்:)), அதையும் தாண்டி ஒருவேளை காதலித்துவிட்டால், கடசிவரை கைவிடக்கூடாது//

    டைலாக்கெல்லாம் பின்றீங்க.... கலக்குங்க

    ReplyDelete
  72. //“உன் கால்களுக்கு அழகான பாதணிகள் வாங்கப் பணமில்லையே என எண்ணி ஏங்காதே,பின்னாலே பார், ஒருவர் பாதங்களே இல்லாமல் தவழ்ந்து வருவதை”.//

    அருமை

    ReplyDelete
  73. //உணர்வுகளும் உணர்ச்சிகளும் நமக்கு அடங்க வேண்டுமே தவிர, நாம் அதற்கு அடிமையாகிடக் கூடாது” ... கண்ண..தாசன்..//

    அவரு சொல்லிட்டார்ரு...

    ReplyDelete
  74. போரடிக்காம இண்ட்ரஸ்டிங்கா பதிவை கொண்டு சென்ற விதம் அற்புதம்ங்கோ ங்கோ ங்கோ ங்கோ (echo)


    எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்.- nice

    ReplyDelete
  75. எப்பூடி? இப்படியெல்லாம் எழுதுறீங்க?.. மிக்க நன்றி.

    ReplyDelete
  76. இடை இடையே கர்ர்ர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று வருகிறது தமிழ் ஆங்கிலம் அகராதியெல்லாம் தேடிவிட்டேன் அர்த்த்ம் இல்லைங்க அது என்ன அர்த்த்ங்க....

    ReplyDelete
  77. ஜெய்லானி said... 66



    மகன் : ஏன் அப்பா அப்படி சொல்றீங்க ..?

    அப்பா : நான் என்னத்த சொல்ல அவளையேதான் நானும் காதலிக்கிறேன்..

    மீ..எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் :-)))))))))//

    ஹாஆஆஆஆஆஆஆ ஹாஆஆஆஆஆஆஅ ஹாஆஆஆஆஆஆ ஜெய்... உப்பூடி எஸ் ஆக விட்டிடுவமோ?:)) ...

    இந்தாங்க பிடியுங்க... கூட்டிப்போங்க:))).. தண்ணிக்கடியில் போனாலும் கூட்டிட்டுத்தான் போகோணும்:)).

    செம்மறிக்கு கொம்புமில்லை, அத்தோடு நோ ரோஷம்.....:), சோஓஓஓஓ முட்டாதூஊஊஊஊஊஊஊ:)).

    மியாவ் மியாவ் ஜெய்.

    ReplyDelete
  78. மின்னலே... வந்திட்டுப் போம்மா...

    மியாவ் மியாவ்..:)).

    வாங்க மகி. எதை எழுதினாலும், அதை எழுத உங்களுக்கு பூரண உரிமை உண்டு. என் வாண்டுதலை ஏற்றுத் தொடர்ந்தமைக்கு மியாவ் மியாவ் மகி.

    ReplyDelete
  79. ஆஹா... வாங்க மாயா...
    ஆரம்பமே அமர்க்களமாக களமிறங்கியிருக்கிறீங்க...

    //மாய உலகம் said... 69

    இத்தலைப்புப் போடும் ஐடியா பட்டென கிட்னியில் உதித்தது..... ஆஹா ஆரம்பிச்சுட்டாங்கய்யா... //

    பயப்பூடாதீங்க... தைரியமா இருங்க:)).

    //டைலாக்கெல்லாம் பின்றீங்க.... கலக்குங்க //

    தங்கூஊஊஊ.. தங்கூஊஊஊஊஊஊ.

    ReplyDelete
  80. //மாய உலகம் said... 73

    //உணர்வுகளும் உணர்ச்சிகளும் நமக்கு அடங்க வேண்டுமே தவிர, நாம் அதற்கு அடிமையாகிடக் கூடாது” ... கண்ண..தாசன்..//

    அவரு சொல்லிட்டார்ரு...//

    ஹா....ஹாஆஆஆஆ... ஹாஆஆஆஆஆ.. ஏன் மாயா? உங்களால முடியாமல் இருக்கோ?:))).

    உங்கட “எக்கோ” பார்த்துச் சிரிச்சதில... என் சிரிப்பும் எக்கோ பண்ணுதூஊஊ:)).. எச்சூச்ச்மீஈஈ, சிரிச்சதுக்குச் சொன்னேன்:)).

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் க்கு அர்த்தமா? க்கி..க்கி....க்க்க்கீஈஈ....:)).

    அது... பூஸுக்கு கோபம் வந்தால் எழுப்பும் ஓசை:)).

    மியாவ் மியாவ் மாயா.

    ReplyDelete
  81. நண்பிக்கோ கொஞ்சம் ஆசை வந்துவிட்டது, கார் வீடு என வசதியாக வாழலாம் என.
    //

    அதான பாத்தேன்....

    ReplyDelete
  82. ஒரு பார்வை பார்த்தேன் நண்பியை........, என்ன பதில் சொல்லியிருப்பேன் என கண்டுபிடியுங்கோ......//

    அட என்ன சொன்னீங்க சொல்லுங்க... மண்டை வெடித்துவிடும் போலிருக்கே... அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.