நல்வரவு_()_


Monday 7 December 2020

 சகுனங்களை நம்பலாமோ??

போஸ்ட் எழுதி கனகாலம் ஆகிவிட்டது, எப்படி எழுதுவதென்றும் தெரியவில்லை, மனமும் ஒரு நிலையில் இல்லை, அடுத்தடுத்த மனம் தாங்காத சம்பவங்களால், புளொக்கே வேண்டாம் எனக்கூட அப்ப அப்ப எண்ணம் வந்து செல்கிறது... இந்த ஆண்டு கடகடவென ஓடி முடிஞ்சு புத்தாண்டு விரைவில் வந்திடோணும் எனப் பயமாக இருக்கிறது.. அப்படிப் பயந்தவண்ணம் இருந்தபோதே, கோமதி அக்காவின் மாமாவின் செய்தி காதுக்கு வந்தது, அதிலிருந்து மீளவே முடியவில்லை:(..

Saturday 29 August 2020

 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களோடு💗 

எங்கட பிளாக்பெரீஸ்🍒🍒

பிறந்தநாள் அன்றே போஸ்ட் ரெடி பண்ணினேன், ஆனால் தவிர்க்க முடியாத நிகழ்வால், போட முடியாமல் போய் விட்டது, அதனால தாமதமாக இன்று போஸ்ட்டைப் போடுகிறேன். 

Sunday 23 August 2020

வி சது வாழ்த்துக்களோடு🙏, பயற்றம் பணியாரம்

ல்லோரும் நலமே இருக்கிறீங்கள் என்பது தெரியும், மீயும்தேன்:)... எங்களுக்கு இங்கு ஸ்கூல் தொடங்கி விட்டது, அதனால நானும் பழையபடி உழைக்க ஆரம்பித்து விட்டேனாக்கும்:), கொரோனா நேரம் நல்ல ஒய்யாரமாக ரெஸ்ட் எடுத்தமையால, இப்போ ஒரு வேலை செய்தால் இன்னொரு வேலை செய்ய மனம் இடம் கொடுக்க மறுக்குது கர்ர்:)).. அதனால புளொக் பக்கம் வருவது குறையப் பார்க்குது, இருப்பினும் முடிஞ்சவரை வரவே முயற்சிக்கிறேன்.

எனக்குப் பாருங்கோ ஓவரா அலட்டுவது பிடிக்காதென்பது உங்களுக்குத் தெரியுமெல்லோ?:) அதனால ஸ்ரெயிட்டா களம் குதிப்போமா?:))..

எப்படியாவது ஒரு போஸ்ட் போட்டிட வேணும் என்பதாலயே, சமையல் குறிப்பைப் போடுகிறேன்.. இது ஈசி எல்லோ:)), நிறைய எழுத அலுப்பாக இருக்குது:)..

இலங்கைப் பயற்றம் பணியாரம்...
ஆஆஆஆஆ எந்தாப் பெரீஈஈஈசு.. நான் அப்பளத்தைச் சொன்னேன்:)...

இதற்கு தேவையானவை[உங்களுக்குப் பிடித்த ஒரு கப் ஐ எடுத்துக் கொள்ளுங்கோ அளவுக்கு:)]
*வறுத்து அரைச்சு அரித்தெடுத்த பயற்றம் மா - 1 கப்
*வறுத்த அரிசிமா - 2 கப்புக்கு கொஞ்சம் குறைவாக எடுக்கோணும்..
*சக்கரை - முக்கால் கப்
*சீனி[சுகர்]- முக்கால் கப்
*உடனே திருவி, நன்கு வறுத்த தேங்காப்பூ - முக்கால் கப்
*இதனோடு கொஞ்சம் வாசனைக்காகவும், கொஞ்சம் காரத்தன்மைக்காகவும்.. ஒரு முக்கால் தேக்கரண்டு வறுத்து அரைச்ச மிளகு +சீரகம்[சிலருக்கு இவ்வாசம் பிடிக்காதெனில்.. தவிர்க்கலாம்]

இவ்வளவும்தான் முடிஞ்சுபோச்ச்ச்ச்ச்:)).. இத்தனை பொருட்களையும் ரெடி பண்ணுவதுதான் இதில் வேலை.. இனி பெரிசாப் புதுசா ஏதுமில்லை...

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இடைவேளை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இடைவேளையில குண்டுப்பிள்ளையாரை [சே சே டங்கு ஸ்லிப்பாகுதே அவருக்குக் கோள்வம்:) வந்திடப்போகுதே வைரவா:))].. குட்டிப் பிள்ளையாரை எனச் சொல்ல வந்தேனாக்கும்:)) வணங்கிக் கொண்டு தொடர்வோமோ?:))

வழமையாக பூங் கொத்து வாங்கி வைத்திருப்போமெல்லோ ஹோலில்.. முன்பு படங்கள் போட்டேனெல்லோ... அது எப்பவும் வாங்குவோம், ஆனா கொரோனா ஆரம்பிச்சதிலிருந்து வாங்குவதில்லை, அதனால சதுர்த்திக்கு பூ இல்லையே எனக் கவலைப்பட்டபடி.. ச்சும்மா வெளியே எட்டிப் பார்த்தேனா, என் ஊசி மல்லிகை பூத்திருந்தது[கொஞ்சமாக], அப்போ தான் நினைச்சேன் நம் கார்டின் மலர்கள் இருக்கக் கவலை எதுக்கு என.. இப்போ பூத்திருக்கும் மலர்களைப் பிடுங்கி வந்து, பிள்ளையாரைக் குளிர்விச்சேனாக்கும்...
இம்முறை நான் கற்கண்டுப் புக்கை, கடலைச் சுண்டல், பருப்புவடைதான் அவருக்குக் கொடுத்தேன், கொழுக்கட்டை வேண்டாம்.. கோமதி அக்காவும் நெல்லைத்தமிழனும் தருவார்கள் எனச் சொல்லிட்டார்:))
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

ஓகே ஓகே பிள்ளையாரிடம் நேர்த்தி வச்சது போதும்:)).. வாங்கோ கிச்சினுக்குள் தொடர்வோம்:))
மேலே சொன்ன அனைத்தையும் ஒன்றாகக் கொட்டிக் கலக்கவும்...
கொஞ்சம் வென்நீரை மெதுவாக தெளிச்சால் போதும், சகரை, சீனி, தேங்காய்ப்பூ எல்லாம் சேர்ந்து இளகி விடும்... இப்படி குழைத்து எடுத்துக் கொண்டு....

உங்களுக்கு விரும்பிய சைஸ் இல் உருண்டையாக உருட்டவும்.. உருட்டும்போது, ஏனோ தானோ என உருட்டாமல், அதிராவைப்போல நன்கு அழுத்தி, இறுக்கமான உருண்டையாக உருட்டோணுமாக்கும்.. அப்போதான் உடையாமல் வரும்..

உருட்டிய உருண்டைகளை, நீண்ட நேரம் வைத்திருக்காமல் பொரிப்பது நல்லது... அதற்கு பச்சை கோதுமை மாவை, கொஞ்சம் கெட்டியாகக் குழைத்தெடுத்து... அதில் உருண்டையை ஒவ்வொன்றாக தோய்த்து எடுத்து, போண்டா பொரிப்பதைப்போல பொரித்தெடுக்கவும்...

இந்தாங்கோ ஒராளுக்கு ஒன்றுதான் தருவேன்.. பந்திக்கு முந்தோணும்:))

இது ஸ்கொட்டிஸ் குணுக்காக்கும்:)).. நானே செஞ்சது:), அஞ்சு முருங்கை இலை போடவில்லையாக்கும்.. மீ போட்டனே.. என்னா சுசி:) என்னா சுசி:)).. ரெசிப்பி இங்கே

ஊசிக்குறிப்பு 

ஊசி இணைப்பு
💢💢💢💢💢💢💢💢💢💢

Sunday 28 June 2020

எங்கட வீட்டுக் கூஸ்பெரி🍈🍈 
பறிக்கலாம் வாங்கோ..

வாங்கோ வாங்கோ எல்லோரும் வாங்கோ.. காசோ பணமோ:).. ச்ச்சும்மா தான் பார்க்கலாம் வாங்கோ.. விரும்பினால் தேம்ஸ்கரை ஆச்சிரமத்தில மெம்பராகலாமே!!!:).. நா ஒண்ணும் வாணாம் ஜொள்ளலியே:))..
ஆஆஆவ் எலியாரை இந்தக் கோலத்தில பார்த்ததும், இன்று பூஸார் ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளிச்சிட்டார்போலும்:) ஆளைக் காணம்:)) ஊசிக்குப் பயம் போலும்:)

Thursday 25 June 2020

மாஷ்மலோ🍣 - மாம்பழ புடிங்🍮

நீண்ட நாட்களாகிறதே போஸ்ட் போட்டு, இப்பூடியே விட்டால், அதிராவா?அதாரது?:) எனக் கேட்டிடப்போகினமே எனும் பயத்தில இன்று ஒரு போஸ்ட் போடோணும் என எழுதுகிறேன்.
ஏன் எல்லோரும் தலைகீழாக நடக்கீனம்?:).. ஒருவேளை கொரோனா எபெக்ட்டோ?:)).. ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)) 

Sunday 7 June 2020

ஆஆஆ.. பப்படம்🍪, சாதப் பூ வடகம்🌺
பாசிப்பருப்பு இட்டலி

 “கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப் போனேன்..
காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப்போனேன்:)”
வாறீங்களோ வோக் போகலாம்?:)

               து மேலே கரெக்ட்டா எனக்கு சிட்டுவேஷன் சோங் போகுது பாருங்கோ:))..பிபிசியில கர்ர்ர்ர்:)).. அதூஊஊ உங்களில் பாதிப்பேரை ஆவது ஞானி ஆக்கலாம் எனும் முயற்சியில ஆச்சிரம் ஆரம்பிச்சேன்ன்,  கொரோவான தற்காலிக சேவை நிறுத்தமாகிப்போச்சு:))..
                                                ரி போனால்போகுது, அதிரா ஞானி மட்டுமில்லை ஒரு “பயங்கர” செஃப்:) ஆக்கும் என்பதைக் காட்டி, உங்களை ஒரு சமையல் வல்லுனராக ஆக்க நினைக்கிறேன்.. அதுக்கு எனக்கு அலர்ஜி, என்னிடம் ஈஸ்ட் இல்லை, கிச்சின் தருகிறார்கள் இல்லை:) எனச் சாட்டுக்கள் வேறு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஆனாலும் அம்முலு சமைச்சுக் காட்டிப்போட்டாவாக்கும்:))..

                ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கொரோனா நேரத்தில மாஸ்க்குடன் பேசுவது எவ்ளோ கஸ்டம் தெரியுமோ.. அதனால ஸ்ரெயிட்டா விசயத்துக்கு வந்திடுறேன்..  இது என் சாத வடகப் பூமரமாக்கும் அவ்வ்வ்வ்வ்வ்:))

வடக மலரைப் பார்த்து அதிரா சொன்னதூஊஊஊஊ... 
பூவைத் தொடாதீங்கோ:))

                           ரவே அரிசியைச் சாதமாக்கி எடுத்து வச்சுப்போட்டு, காலையில் அதனுள் உப்பும் பெருங்காயத் தூளும் சேர்த்து கூழாக அரைத்துப்போட்டு, ஒரு பொலித்தீன் பாக்கில் போட்டு, இப்பூடிப் பற்றன் போட்டு எடுத்தேன்..[ஜேகே ஐயா சொன்னார் முறுக்கு வடாமும் செய்யுங்கோ என, அதிலிருந்து பிறந்ததுதான் இந்தப் பற்றன்ஸ் எல்லாம்:))]

            இதில் சிவப்பாக இருப்பது, கலருக்கு பீற்றூட் சேர்த்தேன் கலர் போதவில்லை, அதனால கொஞ்சம் மிளகாய்த்தூள் சேர்த்தேன்..

இது யும்மா, பூஸ் உம் மீனும் செய்தேன் 
ஆனா காய்ந்ததும் உடைஞ்சு போச்ச்ச்:))

ஆஆஆ கலகல எனக் காய்ஞ்சு  காய்ச்சு போச்சு:))

இது பொரிச்சது, வாயில அப்படியே....
 சீஸ் போல்ஸ் சிப்ஸ் போல கரையுது...

இது பேப்பிள் அதிரா:)

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸இடைவேளை🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இடை வேளையில் அதிராவின் பாசிப்பருப்பு இட்டலி சாப்பிடலாம் வாங்கோ..
ஒரு கப் உளுந்துக்கு மூன்று கப் பாசிப்பருப்பு/பயற்றம்பருப்பு.. இதுதான் அளவு,. ஆனா என்னிடம் பாசிப்பருப்பு இல்லாமையால முளுப்பயறில் 2 1/2 கப் போட்டேன்... என்னா சுவை தெரியுமோ.. வெந்தயம், உப்பு, அரைப்பது ஊறுவது எல்லாமே நோர்மல் இட்டலி மெதேட்தான்.. எனக்கென்னமோ அரிசி சேர்ப்பதெனில் பிடிப்பதில்லை[சோறு சாப்பிடுவதுபோலாகுமே என], அதனாலேயே இப்படி ஏதும் செய்கிறேன்..

இதில் ஒரு விசயம், நாங்கள் இட்டலி, தோசை எனில் நிறைய வெங்காயம் செத்தல் மிளகாய், கறிவேப்பிலை இப்படித் தாளிச்சுக் கொட்டியே செய்வோம்.. தாளிக்காமல் செய்வதில்லை. ஆனா நான் இப்போ  தாளிப்பதை மறந்திருந்தேன்..  என் நண்பி, லண்டனில் இருக்கிறா என் பள்ளிக்காத் தோழி எனச் சொல்லியிருக்கிறேன் தானே, நாங்கள் இப்பவும் நல்ல குடும்ப நண்பர்கள்.

அப்போ போன கிழமை, நண்பி கேட்டா, அதிரா ரவ்வைத் தோசை ரெசிப்பி சொல்லுங்கோ, நீண்ட காலம் தோசை சுடவில்லை, அதனால எல்லாம் மறந்துவிட்டேன் என. நான் ரெசிப்பி சொன்னேன், ஆனா இந்த தாளிச்சுக் கொட்டுவதை சொல்ல மறந்துவிட்டேன்.

பின்னர் அவ செய்துபோட்டு, நன்றாக வந்தது, ஆனா எங்கட வீட்டிலும் பெரிதாக ஆருக்கும் பிடிப்பதில்லை தோசை என்றா.. பேசிக்கொண்டிருக்கும்போது, அவவின் கணவர் வந்து டக்கெனப் ஃபோனை வாங்கி,  “அதிரா, தோசை எனில் அம்மா ஊரில் சுட்டுத்தந்ததுதான் தோசை தெரியுமோ?”.. என்றார் கர்ர்ர்ர்:)), “ஏன் நண்பி செய்தது நல்லாயில்லையோ?” என்றேன்...  “தோசை நன்றாக இருந்தது, ஆனா அம்மா எனில் நிறையத் தாளிச்சுக் கொட்டிச் செய்வா, அதுதான் சுவை, சும்மாவே சாப்பிடலாம் அதை” என்றார்.. ஹா ஹா ஹா அப்போதான் எனக்கும் பொறித்தட்டியது ஆஹா தாளிப்பதைச் சொல்ல மறந்துவிட்டேனே என..:)..

அதனால இன்று தாளிச்சு அசத்தி விட்டேனே:))
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் நானும் வாடினேன்.....
நல்ல வெய்யிலைக் கண்டபோதெல்லாம் வடகம் செய்தேன்:))...

                                ஹா ஹா ஹா நம்ப மாட்டீங்கள், கொஞ்சம் எல்லாம் எனக்குச் செய்ய வராது, நிறையவே செய்து பெரிய ரின்களில் அடைச்சு வச்சிருக்கிறேன், ஆட்களுக்கு கொடுக்க ஆசை, ஆனா இங்கு வெள்ளைகளுக்கெனில் பொரிச்சுத்தான் கொடுக்கோணும்.. இப்போ கொரோனா என்பதால எதுவும் முடியாது.

                       ங் இது அதிராஸ் பப்படம்:))... உளுந்தை அரைச்சுப் பவுடராக்கி, நன்கு அரித்தெடுத்து, உப்பும் பெருங்காயமும் கொஞ்சம் பேக்கிங் சோடாவும் சேர்த்தேன்... நான் அடிச்சுக் குழைச்சது போதாது, அதனால கடும் சொஃப்ட்டாக வரவில்லை, இருப்பினும் ஹார்ட் ஆகவும் இல்லை. இதுவும் 2 தரமாகச் செய்து எடுத்து வச்சிருக்கிறேன் ஹா ஹா ஹா. இதில் கடசிப்படத்தில் இருப்பது, எண்ணெய் எடுத்து பொரிச்சு, பின்னர் எண்ணெயை கொட்ட வேண்டும், இது மைக்குரோவேவ் இல் வச்சு எடுத்தேன்.. பொயிங்கி இருக்குது பாருங்கோ.

அவசரத்துக்கு பப்படத்தை மை.வேவ் இல் நான் வைப்பேனாக்கும்:))

இது எண்ணெயில் பொரிச்சது... 
இடது பக்கம் இருக்கும் பூ பொயிங்கி வந்திருக்குது

இது அடுத்து வர இருப்பது...:)

ஊசிக்குறிப்பு
இம்முறை ஊசிக்குறிப்பு சற்று மாறுதலாக:)
      ங்கள் வீட்டின் எதிர்ப்புறமாக, வீடுகளுக்கு நடுவே படிகள் இறங்குகின்றன.. அதால இறங்கி கொஞ்சம் நடந்தால், நேரே ஆற்றங்கரைதான்.. இது படியால இறங்க முன் மேலிருந்து எடுத்த படம்... 

இது இறங்கும்போது மலைச் சரிவில பாருங்கோ பூத்திருக்குது அழகாக, இப்படி நிறைய மலர்கள் விதம் விதமாக காட்டுக்குள் இருப்பதைப்போல படர்ந்திருக்கும்..

இப்போதான் எங்களுக்கு எல்லா இடமும் ரோஜா தன் மொட்டை விரிச்சிருக்குது, இவற்றைப் பாருங்கோ ஆற்றங்கரையில எவ்ளோ அழகாக சிவப்பு அண்ட் பிங்கி ரோஜாக்கள்..
அம்முலு பாருங்கோ, இந்த இன ஃபியூசியா இப்படி வளர்வினம் 
பென்னாம் பெரிதாக...

ஆஆஆ பாருங்கோ.., மீ ஒரு அப்பாவியை அஞ்சு இடிக்கிறா கர்ர்ர்ர்ர்:)) வீடியோக் கேட்டால் புரியுமாக்கும்:))

இது அதிரா ஓவியமாக்கும்.. சே சே டங்கு ஸ்லிப்பாகுதே.. அஜந்தா ஓவியம்போல டிசைன் பண்ணியிருக்கும் கற்கள் ஆற்றங்கரையில்...

ஊசி இணைப்பு
🌼🌼🌼🌼🌼🌼🙏🌼🌼🌼🌼🌼🌼

Thursday 4 June 2020

பிஞ்சுத் தோட்டத்திலே ஒரு பிஞ்சின், பிஞ்சுக் கவிதை🌗

ந்தப் போஸ்ட்டில நான் வளர்த்துக் கொண்டிருப்பனவற்றைத்தான் காட்டப்போகிறேன்... மொட்டாகி மலராகி.. பூவாகி இருக்குது... தனிப்பதிவாகப் போடும்போதுதான் நன்றாக இருக்குமென நினைத்தேன்:)...ஆஆஆ சுத்தத் தமிழில் பேசுகிறேனே:))
நல்லா இருங்கோ நல்லா இருங்கோ.. 
என்றைக்கும் என் ஆசீர்வாதம் 
உங்களுக்கு உண்டு- தேம்ஸ்கரை ஆச்சிரமம் வந்தால்:))


Monday 1 June 2020

வாழைப்பழப் பாண் கேக்/ Banana Bread Cake, புதினா வடாம்

சத்தியமாக் கேக் எடுத்து வந்து தருவேன்:)) டோண்ட் வொறி:))

நான் சமைச்சது கையளவு:), இங்கு பகிராதது உலகளவு:).. எனும் நிலைமையாகிப் போச்சு:).. போஸ்ட் போட நினைக்கும் அனைத்தையும் போட முடிவதில்லை, என் ஒரு போஸ்ட்டுக்கே நீங்கள் எல்லோரும் மயங்கிப் போறீங்கள்[போஸ்ட்டின் பெருமை பார்த்துத்தான்:)], இதில அடிக்கடி போஸ்ட் போட்டால், காசிக்குப் போய்க் கையாலம் கண்டிடுவீங்கள் எனும் பயத்தில:).. .. அதாவது நல்லெண்ணத்தாலதான் அடிக்கடி போஸ்ட் எழுதாமல் இருக்கிறேனாக்கும்:)..

Thursday 28 May 2020

சிட்டைக்🐈 காத்பெதும்பை:))

மாசமோ வைகாசி மாசம், குளிர் வேறு இருந்து கொண்டே இருந்தது, ஊஊஊஊ என மழை இலேசாகத் தூறிக் கொண்டிருந்தது. காற்றும் கொஞ்சம் நல்ல்ல்ல் என வீசிக்கொண்டிருக்க, ஏதோ நான் வணங்கும் தெய்வம், எனக்கு ஒரு உசார் தந்தது, வெளியே போய், செடிகளைப் பார்த்துப்போட்டு வா... பூச்சி புழுக்கள் ஏதும் இருக்கலாம், இரண்டு நாட்களாக எட்டிப் பார்க்காமல் இருக்கிறாய் என ஆரோ ஒருவர் என் உள்ளே இருந்து என்னை வெளியே உந்துவதுபோல ஒரு ஃபீலிங்ஸா இருந்திச்சா.. பூட்ஸ் ஐயும் போட்டு, ஜக்கெட்டையும் போட்டுக் கொண்டு, கிளவுஸ் ஐயும் போட்டபடி.. அந்த மெல்லிய ஊஊஊ மழையில இறங்கி, என் செடிகளைத் தடவிப் பார்க்கத் தொடங்கினேன்..

Tuesday 26 May 2020

கேக்கில் நூறு வகை🜓
 அதில நான் செய்தது இரண்டு வகை❁❀

சே சே அதிரா எவ்ளோ பெரிய ஆள் [சமையலில், உருவத்தில் அல்ல கர்ர்:)] என்பதை முழுமையாக இங்கின காட்டவே முடியல்லியே:)).. வெள்ளிக்கிழமையிலிருந்து போஸ்ட் ஒன்று எழுத நினைக்கிறேன், இன்னும் ஆரம்பிக்கவே இல்லை, சரி... தோஓஓஒ எழுதிக்கொண்டிருக்கிறேன்:)..

ஓவரா அலட்டினால் உங்களுக்கும் பிடிக்காது.. எனக்கும்தேன்:)... அதனால நான் செய்து, வீட்டில பாராட்டுப்பெற்று, 5 நிமிடத்திலேயே முடிஞ்சு போன:), ரெண்டுவகைக் கேக்கை இங்கு சொல்லப்போறேன்...

முதலாவது வகை.

சொக்கலேட் மாபிள் கேக்
சீனி - 1 கப்[1 1/2 கப் போட்டால் நல்ல இனிப்பாக இருக்கும், இது இனிப்பு குறைவாக இருந்தது]
எண்ணெய்[refined oil]/வெண்ணெய் - 1/4 கப் 
பால் - 1 கப் [கொஞ்சம் கூடத் தேவைப்படலாம்]
plain flour - 1 1/2 கப்
கொக்கோ பவுடர் - 4 தே.கரண்டி
பேக்கிங் பவுடர் - 1 தே.கரண்டி
பேக்கிங் சோடா - 1/2 தே.கரண்டி

இந்த வகைக் கேக்குகள் எல்லாம் மிக மிக ஈசியானவை, ரெடி பண்ண கொஞ்ச நேரம் போதும்..

முதலில் மாவுடன் பே.பவுடர், சோடாவைக் கலந்து ஒரு தரம் அரித்து ஒன்றாக்கி எடுத்து வைக்கவும்.

பேக்கிங் ட்ரேயை எடுத்து, நன்கு பட்டர் தடவி வைத்துக் கொள்ளவும்..

பின்பு சீனியை[சுகர்] மிக்ஸியில் போட்டு மாவாக்கி எடுத்து, அதனுள் எண்ணெயை ஊற்றிக் கலந்து, அதனுடன் ஒரு கப் பாலை ஊற்றி நன்கு கலக்கவும்.

பின்பு ரெடியாக்கி வைத்துள்ள மாவை அதனுள் போட்டு, கட்டி இல்லாமல் நன்கு கலக்கவும்.. இப்படிக் கலந்து முடிந்ததும், மாவின் தன்மை, தோசை மாப் பதம்போல வர வேண்டும், ஆகவும் தண்ணி ஆகிடாமலும், கட்டியாக இல்லாமலும் இருக்க வேண்டும்.

அதற்காககத்தான், தேவைப்பட்டால், கொஞ்சம் இன்னும் பால் ஊற்றிக் கலக்கவும். பால் குளிராக இல்லாமல், கொஞ்சம் அறை வெப்பநிலைக்கு சூடாக்கிப் பாவிக்கவும்.. இவ்ளோதான் மற்றர் ஓவர்:)!!!

அடுத்து, கலக்கி வைத்திருக்கும் மாக்கலவையை, இரண்டாகப் பிரித்து, ஒன்றினுள் மட்டும் கொக்கோ பவுடரை சேர்த்து மிக்ஸ்ட் பண்ணிப்போட்டு, 

வேறு வேறு கரண்டிகள் பாவித்து, முதலில் ஒரு குட்டிக்கரண்டி மாவை நடுவில் ஊற்றி, பின்பு கொக்கோவில் ஒரு குட்டிக் கரண்டியை அதன் நடுவில் ஊற்ற வேண்டும்.. இப்படி மாத்தி மாத்தி ஊத்தும் போது, இங்கு படத்தில் ஊத்தியதைப்போல பரந்து விரிந்து வட்டமாகும்.

அனைத்தும் ஊத்தி முடிஞ்சதும், ஒரு பாபகியூ ஸ்ரிக் அல்லது ஏதும் கூரிய ஆயுதம்:) எடுத்து, இங்கு கடசிப் படத்தில் உள்ளதைப்போல கோடுகள் போட்டு பற்றன் மேக் பண்ணவும்...

அவணை 3-4 காஸ் மார்க்கில் விட்டு, 25-30 நிமிடங்கள் அவித்து எடுக்கவும். அடுப்பிலும் செய்யலாம்.. அந்த முறையைக் கீழே சொல்கிறேன். பட்டர் நைவ் ஆல் குத்திப் பார்த்தால், ஒட்டாமல் இருக்கவேண்டும் அதில் மா, அப்போ ரெடி ஆகிவிட்டது என அர்த்தம்... மற்றர் ஓவர்:)!!!!


ஆவ்வ்வ்வ் இதோ அதிராவின் அழகிய கேக் ரெடீஈஈஈஈஈ:))

=================🜋இடைவேளை🜋===============
சே சே இதென்ன இது, கேக் செய்த இடைவேளையில், அபச்சாரம் அபச்சாரம் ஹா ஹா ஹா:)
================🝝🝝🝝===============
இது ரெண்டாவது கேக்கூஊஊஊ:)...

கேக் எனும்போது, எனக்கு எப்பவுமே ஒரு நினைவு வரும். ஊரில் ஒரு பையன், அவர் கொஞ்சம் விவேகம் குறைவானவர், வீடுகளுக்கு வந்து, சொல்லும் வேலை எல்லாம் செய்துபோட்டு பணம் வாங்குவார்.

அவருக்கு பணத்தோடு சாப்பாடும் குடுப்போம். அப்போ ஒருநாள் காலையில், அம்மா கேட்டிருக்கிறா, சாப்பிட்டுப்போட்டு வேலை செய், என, அப்போ சொன்னாராம், இல்லை இப்போ வேண்டாம், நான் கேக் சாப்பிட்டு விட்டேன் என, இந்தக் காலையில கேக் ஆ? எங்கு சாப்பிட்டாய் என, அவர் சொன்னாராம் அது வெள்ளைக் கேக், பக்கத்து வீட்டில் என்று. பின்புதான் பக்கத்து வீட்டு ஆன்ரியிடம் விசாரித்தபோது, அவ சொன்னா அது கேக் அல்ல இட்லி என்று ஹா ஹா ஹா.

நம் நாட்டில் புட்டு இடியப்பம்தானே நம் தேசிய உணவு:), எங்கும் செய்வார்கள், கடைகளிலும் கிடைக்கும், இட்லி தோசை குறைவான கடைகளில்தான் கிடைக்கும், வீடுகளிலும் கிழமையில் ஒருதடவை.. இப்படித்தான் செய்வது வழக்கம், அதனால இப்படி வறிய குடும்பத்தில் இருப்போருக்கு இவை தெரிய நியாயமில்லை. இப்போ எல்லாக் கடைகளிலும் எல்லாம் கிடைக்கிறதாம். 

ஓகே ஓகே மெய் மறந்து கதை கேட்டது போதும் வாங்கோ வகுப்பறைக்குள் நுழைவோம்:)

ஈசி சொவ்ட் கேக்
பிளேன் ஃபிளவர்/ஓல் பேப்பஸ் ஃபிளவர் - 1 கப்
பட்டர்/எண்ணெய் - 1/4 கப்
தயிர் -1/2 கப்
சீனி[சுகர்] - 1/2 கப்
பேக்கிங் பவுடர் - 3/4 தே கரண்டி, பே.சோடா - 1/4 தே.க.

வழமைபோல மாவுடன், பேக்கிங் சோடா, பவுடர் சேர்த்து அரித்து எடுத்து வைக்கவும்.

கேக் பேக் பண்ணப்போகும் பாத்திரத்தில் எண்ணெய் அல்லது வெண்ணெய் நன்கு தடவி, மேலே பிளேன் ஃபிளவர் கொஞ்சம் போட்டு நன்கு பிரட்டி எடுத்து வைக்கவும், அப்போதான் கேக் ஒட்டாமல் வரும்.

பின்பு சீனியை கொஞ்சம் பவுடராக்கி, எண்ணெயும் தயிரும் சேர்த்து நன்கு கலக்கவும்.. விரும்பினால் வனிலா எசன்ஸ் கொஞ்சம் சேர்க்கலாம்[இது அனைத்துக் கேக்குக்கும் சேர்க்கலாம்]

அதனுள் ரெடியாக்கி வைத்திருக்கும் மாவையும் சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கலக்கவும்.. ரெடியாக்கிய கேக் பாத்திரத்தில் ஊத்தவும்.

இங்கும் அதேபோல, கொஞ்சம் பால் சூடில்லாத பதமாக வைத்திருக்கவும், மாவின் பதம், தோசைப்பதம்போல வரும் வரை பால் சேர்த்துக் கலக்கவும்.. 

இது நான் அடுப்பில் செய்த முறையைக் காட்டுகிறேன்..
அடுப்பில் செய்வதற்கு, ஒரு அடிகனமான பாத்திரத்தை எடுத்து, அடியில் கொஞ்சம் உப்பு போட்டு,

அடுப்பில் வைத்து கொஞ்சம் ஹீட் பண்ணி, உப்பு சூடானதும், இந்த கேக் பாத்திரத்தை வைத்து மூடி, மிடியம் ஹீட்டில் அவிய விடவும்... படம் எடுக்க தவறிவிட்டேன், உப்பின் மேல் ஒரு கம்பித்தட்டு ஏதும் வைத்து அதன்மேல் பாத்திரத்தை வைக்கவும், நேரடியாக உப்பில் வைத்தால், அடிப்பகுதி கருகிவிடும்.

 அரை மணித்தியாலம் எடுக்கும்

நல்ல கலர் வந்ததும், அதேபோல கத்தியால குத்திப் பார்த்து ஒட்டாமல் வந்தால் உடனே இறக்கி ஆறவிட்டு எடுக்கவும்
 மேலே செய்ததைப்போல அவணிலும் வைத்து எடுக்கலாம், இரண்டிலும் முடிவு ஒன்றுதான்:)

அதிரா செய்த டபிள் கலர் ஜெலியையும் சேர்த்துச் சாப்பிடலாமே.. லாமே:))


இன்று ஒரு திருக்குறள் குறிப்பு:)

சமையலுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை:)

ஊசிக் குறிப்பு
இதை எனக்கு அனுப்பினவர் என் அன்பான எதிரி  எனச் சொல்ல மாட்டேனே:))

ஊசி இணைப்பு
∰∰∰🙏🙏🙏∰∰∰