சத்தியமாக் கேக் எடுத்து வந்து தருவேன்:)) டோண்ட் வொறி:))
நான் சமைச்சது கையளவு:), இங்கு பகிராதது உலகளவு:).. எனும் நிலைமையாகிப் போச்சு:).. போஸ்ட் போட நினைக்கும் அனைத்தையும் போட முடிவதில்லை, என் ஒரு போஸ்ட்டுக்கே நீங்கள் எல்லோரும் மயங்கிப் போறீங்கள்[போஸ்ட்டின் பெருமை பார்த்துத்தான்:)], இதில அடிக்கடி போஸ்ட் போட்டால், காசிக்குப் போய்க் கையாலம் கண்டிடுவீங்கள் எனும் பயத்தில:).. .. அதாவது நல்லெண்ணத்தாலதான் அடிக்கடி போஸ்ட் எழுதாமல் இருக்கிறேனாக்கும்:)..
ஓகே ஸ்ரெயிட்டா நான் களம் குகிக்கப்போறேன் இண்டைக்கு... சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீங்கள், ஆனா நான் இப்படி ஒரு வாழைப்பழக் கேக் இதுவரை சாப்பிட்டதில்லை, என்னா சுவை தெரியுமோ.. அத்தோடு செய்வதும் மிக மிக ஈசி... பேக் பண்ணும் நேரம் தவிர்த்து வெறும் 10 நிமிடங்கள்தான் தேவை...
பிளேன் பிளவர் - 1 1/2 கப்[நான் பாவித்தது, ரைஸ் குக்கருடன் வரும் கப்]
வாழைப்பழங்கள்[ஓரளவு பெரியது,கனிந்தது] - 3
பேக்கிங் பவுடர் இலையெனில் சோடா போதும் - ஒரு தேக்கரண்டி
சீனி - முக்கால் கப்
வெண்ணெய் அல்லது எண்ணெய் -கால் கப்பிலும் கொஞ்சம் கூடுதலாக எடுக்கலாம்.
தயிர் - 1/2 கப்
பால் - 1/2 கப்[மாவின் தன்மைக்கு ஏற்ப, பாலைக் கூட்டிக் குறைக்கலாம்]
மாவுடன் பேக்கிங் பவுடர் கலந்து அரித்தெடுத்து வைக்கவேண்டும்.
சீனி[சுகர்] சின்னதெனில் அப்படியே பாவிக்கலாம், கொஞ்சம் பெரிதெனில், மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து[பவுடராக்க வேண்டாம்], வெண்ணெய் எனில் அதனை உருக்கி, சீனியுடன் சேர்த்துக் கலக்கவும்[2,3 நிமிடங்கள் போதும்]
1. பின்பு தயிரையும் சேர்த்துக் கலக்கி, அதனுள் வாழைப்பழங்களை நசித்து சேர்த்துக் கலக்கவும்.
2. இப்பொழுது மாவைச் சேர்க்கவும், மாவின் பதம் கேக் பதத்துக்கு வரும்வரை, கொஞ்சம் கொஞ்சமாகப் பாலைச் சேர்த்துக் கலக்கவும்.
கேக் ட்ரேயில் கலவையை சேர்த்து, விரும்பினால் ஏதும் நட்ஸ் சேர்க்கவும்.
ஹாஸ் அவண் எனில், 4 இல் வைத்து 35-40 நிமிடங்கள் பேக் பண்ண வேண்டும், அல்லது அடுப்பிலும் செய்யலாம்.. அடுப்பில் செய்யும் முறைக்கு இங்கே தொடவும்.
இப்போ ரெடியாகிவிட்டது
வாவ்வ் அதிராவின் பனானா பிரட் கேக் ரெடீஈஈஈ
✨சுடச்சுட சாப்பிடுவதை விட, 5,6 மணித்தியாலங்களின் பின்பு சாப்பிட்டால் இக்கேக் இன்னும் அதிகம் சுவையாக இருக்கு..
✨ இம்முறை நெல்லைத்தமிழன், இதனைச் செய்யோணும்:)),ஏனெனில் இது உங்கள் ஃபேவரிட் கேக் ஆச்சே...[ஊசிக்குறிப்பு:.. வீட்டில் இனிப்பு சாப்பிடாமல் வந்து இந்த ரெசிப்பியைப் படிக்கவும்:), இல்லை எனில், நான் சாப்பிட்டமையால எனக்கு இதில ஆசை வரவில்லை எனச் சொல்லப்போறார் கர்ர்ர்:))]
🔆🔆🔆🔆🔆🔆இடைவேளை🔆🔆🔆🔆🔆🔆
ஸ்ரீராம் இப்போ டெய்லி வெயிட் செக் பண்ணுறாராமே [நெல்லைத்தமிழன் சொன்னார்:)] ஹா ஹா ஹா நானும்...... தேன்.. இது எங்களிடம் இருக்கும் ஸ்கேல், வயலெஸ் மூலம், விபரங்கள் நம் மொபைலுக்கு வந்துவிடும்... இதில பாருங்கோ எப்பூடி எப்பூடி விபரமெல்லாம் சொல்லுது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா... பூஸோ கொக்கோ.. மேலே இருக்கும்.. weight, BMI, அளவுகளை எல்லாம் ஒளிச்சுப் போட்டேனாக்கும்..:).
கடந்த காலத்தில் எவ்வளவு வெயிட் குறைஞ்சிருக்குது அல்லது கூடியிருக்குது, என்பது முதற்கொண்டு, இந்த வெயிட் க்கு, கணக்கின்படி உன் வயசு... இத்தனை இப்பூடி எல்லாம் சொல்லுது கர்ர்ர்ர்:)).. இதுதான் சொல்லிச்சுது.. அதிரா உங்கட வயசு 16 எண்டு:)) ஹையோ ஹையோ..
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஓகே இப்போ என் புதினா... இலை வடாம் பார்ப்போமா?:)
இலை வடாமுக்கு அரிசியை ஒரு இரவு ஊறப்போட்டு, மானே தேனே சேர்த்து அரைச்சு, இரு பங்காகப் பிரிச்சு வச்சுப்போட்டு, எங்கள் கார்டினுக்குள் ஓடினேன்.. புதினா பிடுங்கி வரத்தான்:))
புதினாவை அரைச்சு வடிகட்டி, அந்த பாதி பங்கு மாவினுள் சேர்த்தேன், பின்னர் வட்ட டிஸ் க்கு எங்கின போவேன், என ஸ்ரோர் ரூமுக்குள் ஓடி, பழசை எல்லாம் கிண்டினால், இப்போ அம்மா எனக்கு 16 வயசானதும் சீதனமாக வாங்கி அனுப்பிய கறிடிஸ் செட்:) இருந்துதா, அதன் மூடிகளை எடுத்துக் கொண்டு ஓடி வந்து, இப்பூடி அழகாக மாவை ஊத்தி...
இப்படி வைத்து மூடி அவிச்செடுத்தேன்...
அவித்தது, காய்ந்தது, பொரித்தது....
பொரித்தபின்பு பச்சைக்கலர் லைட் கலராக மாறி விட்டது.
இந்த ஸ்கொட்லாண்டில், நான் அதிகம் வியக்கும் முதல் அதிசயம் இதுதான்.. இது என்ன தெரியுதோ? இப்போ ராத்திரி எடுத்தபடம் இது, நேரம் இரவு 10.28 . பாருங்கோ எவ்வளவு வெளிச்சமாக இருக்குது. இரவு 10 மணிவரை வீட்டில் லைட் போடத் தேவையில்லை, அவ்ளோ பிறைட்டாக இருக்கும்.. இப்படித்தான் காலையிலும், 4 மணிக்கே வெளிச்சம் நன்கு வந்துவிடும்.. இனி யூலையில் காலை 3.30 க்கு இங்கு சூரியன் வரும், இரவு 11 மணிக்கே மறையும்.
ஹா ஹா ஹா இது எனக்கானது அல்ல அல்ல:))
ஊசி இணைப்பு:)
ஊசிக்குறிப்பு
ஹா ஹா ஹா.........:)
🔆🔆🔆🔆🔆🔆🙏🔆🔆🔆🔆🔆🔆
|
Tweet |
|
|||
நான் தானே ஃபர்ஸ்டூஊஊஊஒ செகன்ட்? தேர்ட்? ஃபோர்த் ஆர் அட்லீஸ்ட் ஃபிஃப்த்?!!!
ReplyDeleteஹப்பா இத்தனை நேரம் உங்கள் தளம் ஓப்பனே ஆகலை....இன்னும் படங்கள் கூட வரலை...கமென்ட் பாக்ஸ் வந்ததும் அடிக்கிரென்...இன்னும் முழுவதும் டவுன் லோட் ஆகலை. கிட்டத்தட்ட 20 மினிட்ஸ் முதலில் கமென்ட் போட்டு போகலை எரர் வந்து இப்ப மீண்டும் இதுவாச்சும் போகுதோ...
இதில் மழை வேறு வந்துவிட்டது நெட் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எபியில் கமென்டும் ஸ்டாப் ஆகிப் போச்சு ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
நேற்று தளங்கள் கொஞ்சம் பாக்கி இருக்கு அதை எலாம் ஒரு ரவுன்ட் அடித்து விட்டு வருகிறேன் மீண்டும்
கீதா
ஆஆஆஆஆ வாங்கோ கீதா வாங்கோ இம்முறை நீங்கதான் 1ச்ட்டூஊஊஊஉ:).. கமலாக்கா இறங்கிட்டா, அதனால ட்றைவர் சீட்டுக்குப் பக்கத்தில நீங்கள் இருங்கோ கீதா.. ரோட்டெல்லாம் சூப்பராகத் தெரியுதோ?:).. முசல், மான் எல்லாம் குறுக்கே வரும் ஆனா பயப்பூடாதீங்கோ என்னிடம் யானைக் கோன் இருக்குது:) அதை அடிச்சால் அவை எல்லாம் ஓடிடுவினம் ரோட்டை விட்டு:))...
Delete//ஹப்பா இத்தனை நேரம் உங்கள் தளம் ஓப்பனே ஆகலை....இன்னும் படங்கள் கூட வரலை...கமென்ட் பாக்ஸ் வந்ததும் அடிக்கிரென்...இன்னும் முழுவதும் டவுன் லோட் ஆகலை. கிட்டத்தட்ட 20 மினிட்ஸ் முதலில் கமென்ட் போட்டு போகலை எரர் வந்து இப்ப மீண்டும் இதுவாச்சும் போகுதோ...///
ஹா ஹா ஹா 1ச்ட் கொமெண்ட் போட்டிடோணும் எனும் உங்கள் படபடப்பு எழுத்தில தெரியுது, ஆனால் இப்பூடி நிறைய அடிக்கும்போது வேறு ஆராவது முந்தும் வாய்ப்பு அதிகம்:)).. ஹா ஹா ஹா..
இங்கு வெயிலோ கொளுத்திங்:))... நான் இலைக் கொப்புக்கள் வெட்டி, செடிகளின் மேலே நிழலாக போட்டு வைத்திருக்கிறேன், இல்லை எனில் பொசுங்கிடுவினம் எனப் பயமாக இருக்குது...
அதிரா அவங்க போட்டோவை இந்த வளைத்தளத்தில் பதிவிட்டு இருக்காங்க அதனாலதான் லோடு ஆக ரொம்ப நேரம் எடுக்குது. இவங்க தளத்திற்கு பூ அது லோடாகும் சம்யத்தில் வேரு ஐந்து தளங்களை திற்ந்து பதில் சொல்லிட்டுவந்திடலாம்
Deleteஅதிரா நீங்க பண்ணினதை கேக்குன்னு சொல்லுறீங்க அதைத்தான் எங்க ஊர்ல பனானா ப்ரெட் என்று சொல்லுறாங்க
Deleteவாங்கோ ட்றுத் வாங்கோ... எப்பவும் சந்து பொந்தெனப் பூந்து ஒளிச்சே வாறீங்களே ஹா ஹா ஹா...[இது என்ன எனப் புரியாதே.. ஹா ஹா ஹா]..
Deleteஅல்லோ ட்றுத், ... எங்களைப்போல faster fibre ..downloadload speed 38-40 mb/s நெட் பாவிச்சால்தான் என்பக்கம் திறக்குமாக்கும்:))... ட்றம்ப் அங்கிள் விண்வெளிக்கே ஆட்களை அனுப்பிட்டார்ர்.. இந்த நேரத்தில போயும் புளொக் திறக்குதில்லை எனச் சொல்லிக்கொண்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. சரி சரி முறைக்காதீங்க.. இப்போ அடிக்கடி இண்டநெட்டுக்கும் கொரோனா வருது எனக் கேள்வி:))
ட்றுத் நானும் பனானா பிரெட் கேக் எனத்தானே சொல்லியிருக்கிறேன் கர்ர்ர்ர்ர்ர்:)).. அது சரி உங்கட ஊர் எது ட்றுத்?:)) டவுட்டாகவே இருக்கெனக்கு:)). ஹா ஹா ஹா சரி சரி மிக்க நன்றி.
Deleteஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ நான் தான் ஃபர்ஸ்டோ!!! ஓ மை கடவுளே!!!
Deleteஹா ஹா ஹா மதுரை அதுதான் காரணமா....!!!!!!!!!!!!!!!!!!!!!!
சரி சரி சட்டுபுட்டுனி மீதிக்கும் இங்கயே சொல்லிட்டுப் போறேன் இன்னும் எபி கில்லர்ஜி வெங்கட்ஜி எல்லாம் போகணும்...
தொற்று ஜோக் ஹா ஹா ஹா ஹா...
அது சரி ஸ்ரீராம் வெயிட் செக் பண்ணுறாரா தினமும்....ஆஆஆஆஆஆஆஆஆஆஅ ஜொல்லவே இல்லையெ! ஓ அது ரகசியம் வெயிட் எல்லாம் ஹா ஹா
புதினா சூப்பரா வளர்ந்திருக்கு அதிரா!!!!!!!! பச் பச்சென்று
கீதா
ஹப்பா முதல் கமென்ட் போயிருச்சு ஆஆஆஅ இன்னும் படனள் எதுவும் வரலை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ReplyDeleteகீதா
ஹா ஹா ஹா..
Deleteபிடித்த பாடல். கேட்டேன். பூனை, ஆடு நட்பு படம் அருமை.
ReplyDeleteமகன் வெனிலா கேக் செய்து இருக்கிறான். நீங்களும் கேக் செய்து இருக்கிறீர்கள்.
என்றும் 16 வயதாக மகிழ்ச்சியாக இருங்கள் அதிரா, வாழ்க வளமுடன்.
இலை வடகம், அருமை.
வாங்கோ கோமதி அக்கா வாங்கோ.. இம்முறை கோமதி அக்கா ஸ்பீட்டா ஓடி வந்திட்டா...:)..
Deleteபாட்டு எனக்கு வட்சப் இல் வந்துது கோமதி அக்கா, என்னெவெனில், இதில பழைய கால முறைப்படி வேலை செய்கிறார்கள், அம்மி அரைச்சு, கிணற்றில் தண்ணி அள்ளி, பகிர்ந்து உண்டு, நிலத்தில் படுத்து.. இப்படி...
அதையேதான் இனிச் செய்யட்டாம் எனச் சொல்லி...
அப்போதான் பாட்டுக் கேட்டேன் நல்லாயிருக்குது... கேட்க இனிமையாக இருக்குது.
ஓ மகனும் கேக் செய்தாரோ.. இப்போ எல்லா இடத்திலும் கேக் மற்றும் பிரட் தான் அதிகம் செய்கிறார்கள்..
//என்றும் 16 வயதாக மகிழ்ச்சியாக இருங்கள் அதிரா//
நன்றி கோமதி அக்கா நன்றி.. நாம் என்ன நினைக்கிறோமே அதுதான் நடக்குமாம்:)) ஹா ஹா ஹா..
எனக்கும் இந்த பாட்டு வட்சப்பில் வந்தது.
Deleteஆனால் இந்த படம் எனக்கு பிடிக்கும் , தொலைக்காட்சியில் வைக்கும் போது பார்ப்பேன் அடிக்கடி.
பாடல் தேனும் பாலும், என்றும் இனிமை இவற்றில் அடிக்கடி கேட்கும் பாடல்.
ஆஆஆ கோமதி அக்காவுக்கும் இப்பாட்டுப் போயிருக்கு.. அதை இங்கு போட டவுன்லோட் பண்ணினேன், அது பேஸ்புக் எக்கவுண்ட் வேணும் எனக் கேட்டுது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அதனால அதை விட்டுப்போட்டு, யு ரியூப் தேடிப் போட்டேன்.
Deleteஇலைவடாம் மிக அருமை. முதலில் வட்டவடிவமாக இலைவடாமை பார்த்ததும் நிறைய எண்ணெய் வைக்க வேண்டுமே பொரிப்பதற்கு என்று நினைத்தேன் நல்லவேளை அழகான பூக்களாக மாற்றி விட்டீர்கள்.
ReplyDeleteஇந்த ஸ்கொட்லாண்டில், நான் அதிகம் வியக்கும் முதல் அதிசயம் இதுதான்//
இயற்கையின் அதிசயம் எனக்கு பிடித்துஇருக்கிறது. படம் மிக அழகு.
//ஹா ஹா ஹா இது எனக்கானது அல்ல அல்ல:))//
வாக்கியம் அருமை. உங்களுக்கு இல்லைதான்.
படம் மிக அழகு.
ஊசி இணைப்பு இரண்டும் நன்றாக இருக்கிறது.
ஊசிக்குறிப்பு சொல்வது போல்தான் அதிரா கடைபிடிக்கிறார். எவ்வளவு வேலைகள், வடாம், கேக் வீட்டு வேலைகள் செய்து கொண்டு ஒரு அலட்டல் இல்லாம்ல் குஷியாக பதிவு போட்டுக் கொண்டு ஆரோக்கியமாய் இருங்கள் அதிரா.
ஹா ஹா ஹா.........:)
நானும் படித்து சிரித்தேன்.புதன் கிழமை உறவினர்கள் வீடு போகலாம் முடிவு செய்தோம் இப்போது வேண்டாம் என்று முடிவு செய்து விட்டோம்.
அவசியமானால் போவோம் வீடியோசாட்டில் பேசிக் கொள்வோம் என்று முடிவு.
ஹா ஹா ஹா பூச் செய்யும் ஐடியா என் செக் தந்தா, நான் வட்டத்தை வெட்டினால் அழகு போயிடுமே எனக் கவலைப்பட்டேன், போனால் போகுது புச் செய்யுங்கோ என ஏசிப்போட்டா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..
Deleteஆனால் கோமதி அக்கா, நிறைய எண்ணெய் போட்டுப் பொரித்தால் தான் இப்படி அழகாக வருது. நான் இதுக்காகவே, வேறு ஏதும் முறுக்கு கட்லட் இப்படி பொரிக்கும்போது இதையும் பொரிச்சேன்.. நிறைய வடகம் செய்திட்டேன்ன்.. இனி ஸ்ரொக் பண்ண இடமில்லை ஹா ஹா ஹா...
//வாக்கியம் அருமை. உங்களுக்கு இல்லைதான்.
//
அப்பூடிச் சொல்லுங்கோ கோமதி அக்கா ஹா ஹா ஹா.. ஆனா அஞ்சு மிரட்டுறா என்னை கர்ர்ர்ர்:))
//எவ்வளவு வேலைகள், வடாம், கேக் வீட்டு வேலைகள் செய்து கொண்டு ஒரு அலட்டல் இல்லாம்ல் குஷியாக பதிவு போட்டுக் கொண்டு ஆரோக்கியமாய் இருங்கள் அதிரா.//
Deleteஉண்மை கோமதி அக்கா, இப்படி தோட்டம் செதல், வடகம் போடுதல், சமைத்தல் எல்லாம்.. மனதுக்கும் உடம்புக்கும் பயங்கர புத்துணர்வைத் தருது.
இங்கு எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லோரும்.. விடிய 10 மணிக்கு வெளியே வந்து, வெயிலைப் பார்த்தபடி படுத்தால், பின்பு மேற்குப்பக்கம் வெயில் போகும் வரை, சூரியகாந்திபோல, முகத்தை அப்படியே செயாருடன் திருப்பி திருப்பி வெயிலைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் வேலை...
என்னைப் பார்க்க அவர்களுக்கு ஆச்சரியம்.. அவர்களிடமும் பெரிய கார்டின் இருக்குது, ஆனா புல்லு வெட்டுவதோடு சரி.. ஆனா என்னை அடிக்கடி பாராட்டுவார்கள் தெரியுமோ.. போன வாரமும் பாராட்டினார்களே ஹா ஹா ஹா...
//அவசியமானால் போவோம் வீடியோசாட்டில் பேசிக் கொள்வோம் என்று முடிவு.//
Deleteஉண்மைதான் கோமதி அக்கா, தேவை இல்லாமல் எங்கும் போகக்கூடாது, அதுவும் வீடுகளுக்குள் போய் இருப்பது நல்லதல்ல, முடிஞ்சவரை நம்மைத் தனிமைப்படுத்தி வாழ்வதே கொஞ்சக் காலத்துக்கு நல்லது..
மிக்க நன்றிகள் கோமதி அக்கா.
இங்கு கேரளத்தில் வாழைப்பழ இனிப்பு உண்ணியப்பம் போல் உள்ளது. பிளைன் பிளவர் + கனிந்த வாழைப்பழம் + வெல்லம் (சர்க்கரை) + சோடா + ஏலக்காய் குழைத்து பணியார சட்டியில் ஊற்றி பொரித்து எடுப்பர். இது கோவில்களில் கணபதிக்கு நெய்வேத்தியம் செய்வர்.
ReplyDeleteபக்கத்துக்கு வீட்டுக்காரன் நல்லா இருக்கணும். இதைத்தான் எல்லாம் நன்மைக்கே என்று சொல்லினமோ?
அதிரா குறும்புத்தனமாக இருக்கலாம். ஸ்வீட் 16 அல்லோ! (19 வயசு பையர் உண்டு). வயசானவங்கள் குறும்புத்தனம் செய்தால் கிழம் சும்மா இரு என்ற பேச்சு தான் கிடைக்கும்.
வாங்கோ ஜேகே ஐயா வாங்கோ..
Deleteநானும் இங்கு நவராத்திரி காலங்களில் வாழைப்பழரொட்டி செய்து சுவாமிப் படத்துக்கு வைப்பதுண்டு... அது ஒருவித சுவை, ஆனா இது உண்மையில் சூப்பரோ சூப்பர்.
//இதைத்தான் எல்லாம் நன்மைக்கே என்று சொல்லினமோ? //
அதேதான்:) கொரோனா வந்ததும் ஒருவிதத்தில நன்மைதான் ஹா ஹா ஹா..
//ஸ்வீட் 16 அல்லோ! (19 வயசு பையர் உண்டு). ///
யா யா சுவீட் 16:)).. பிள்ளைக்கு எத்தனை வயசானால் என்ன ஜேகே ஐயா, நாமும் அவர்கள் ரேஞ்சுக்கு டிசைனர் குளோத்ஸ் உம் ஓவர் மேக்கப்பும் அப்படிப் போடுவதுதான் தப்பு.. மற்றும்படி நாமும் இளைஞர்கள்தான் ஹா ஹா ஹா.. குருஜி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமோ?..
“உங்கள் பிள்ளைகள் நல்லா இருக்கோணும், ஆரோக்கியமாக இருக்கோணும் என எண்ணுங்கோ அதில் தப்பில்லை, ஆனா அதேபோல நீங்களும் இருக்கோணும் என நினைக்க வேண்டும்”... ச்சும்மா ச்சும்மா ஆஆஆஆஆஅ எனக்கு வயசாகிட்டுது கை நோகுது கால் நோகுது எனச் சொல்லிக்கொண்டிருந்தால்தான் இக்காலத்துப் பிள்ளைகளுக்குப் பிடிக்குதில்லையாக்கும்:)).. அதிராவைப்போல இருப்பதைத்தான் இத்தலைமுறையினர் விரும்புகிறார்கள்:)).. ஹையோ ஜேகே ஐயாவுக்கு ஒரு சிறிய:)), சுவீட் 16 .. பெதும்பை:)) பாடம் நடத்த வேண்டிக் கிடக்க்கே:)) ஹா ஹா ஹா
/// வயசானவங்கள் குறும்புத்தனம் செய்தால் கிழம் சும்மா இரு என்ற பேச்சு தான் கிடைக்கும். //
சே..சே.. அப்படி நீங்கள் தப்பாக நினைக்கிறீங்கள், இது எங்கள் நாட்டினரின் தப்பான மெண்டாலிட்டி... , அப்படி ஆரும் சொல்ல மாட்டார்கள்.. நீங்களும் இளமையாகத்தான் இருக்கிறீங்கள், நாளையிலிருந்து எப்பவும் கலகலப்பாக சிரித்துப் பேசி, உசாராக இருங்கோ.. பார்ப்போம் உங்கள் வீட்டில் என்ன சொல்லுகிறார்கள் என... ஹா ஹா ஹா மிக்க நன்றி ஜேகே ஐயா.
//நான் சமைச்சது கையளவு:), இங்கு பகிராதது உலகளவு:)..// - வீட்டிலயும் டைனிங் டேபிளில் பகிரமுடியலைனு ஏஞ்சலின் சொல்லியிருந்தாங்களே.
ReplyDeleteவாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..
Deleteஹா ஹா ஹா வரும்போதே என்ன கொண்டுவாறீங்களோ என நெஞ்சு பக்குப் பக்கெண்ணுதே:)).. அது அஞ்சுவுக்குச் சொல்லோணும் இனிமேல் பெரிய ரேபிள் வாங்கும்படி ஹா ஹா ஹா..
ஆஹா அருமையான குறிப்புகளும் படங்களும் ஃபாலோ விமென்!!!!!!
ReplyDeleteஹாஹ்ஹா.
அந்த கொரோனா தடை ஸ்கூட்டரைப் பார்த்தாலே பயமா இருக்கே.
டூ மச்.
வடிவேலு சூப்பர்.!!
இங்கேயும் சூரியனார் காலை நாலரைக்கு ஜன்னலைத் தட்டுகிறார்.
களையரம் நிறைந்த காலத்தில் இயற்கை ஒன்று தான் மாறாமல் இருக்கிறது.
படங்களுக்கு நன்றி அதிரா.
வாங்கோ வல்லிம்மா வாங்கோ..
Delete//ஃபாலோ விமென்!!!!!!
ஹாஹ்ஹா.//
ஹா ஹா ஹா ச்சும்மா இருந்த சங்கை ஊதிவிட்ட கதைபோல, இனி எல்லோரும் வுமினைப் ஃபலோ பண்ணப்போகினம்:))..
//அந்த கொரோனா தடை ஸ்கூட்டரைப் பார்த்தாலே பயமா இருக்கே//
ஹா ஹா ஹா அங்கு தமிழ்நாட்டில நிறைய நடக்குது போலும், ஒரு லேடி, தலை முழுக்க வேப்பங்குழை, முகம் முழுக்க மஞ்சள் அப்பியபடி, ரொம்ப சீரியசாக பேசுவதையும் பார்த்தேன் ஹா ஹா ஹா... எல்லாம் பயத்தினால் வந்த நம்பிக்கைதான் போலும்..
நன்றி வல்லிம்மா...
// விரும்பினால் ஏதும் நட்ஸ் சேர்க்கவும்// - கேக்கு மேல என்ன போட்டிருக்கீங்க? எனெக்கென்னவோ நீங்க கடைக்குப் போகலை, நட்ஸ்லாம் வாங்கலை என்பதால் உங்க 'கருப்பு' வற்றலை உடைத்து நட்ஸ் அளவில் கட் பண்ணிச் சேர்த்த மாதிரி இருக்கு. எனக்கு மட்டும் உண்மையைச் சொல்லுங்க
ReplyDeleteஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:)).. கேக்கைச் சாப்பிட்டுப் பார்த்துப் பாராட்டாமல் உப்பூடி ஜந்தேகப்படலாமோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது சன்ஃபிளவர் சீட்ஸ் நெ தமிழன், இங்கு பிரெட் வகைகளுக்குப் போட்டிருப்பினம்... ஹா ஹா ஹா என்னைப்பொறுத்து இந்தக் கேக்குக்கு எந்த நட்ஸ் உம் தேவையில்லை.. அவ்ளோ சூப்பர்ர்...
Delete// உண்மையைச் சொல்லுங்க//நான் சொல்வதெல்லாம் உண்மை:) உண்மையைத்தவிர வேறில்லை இது அந்த உங்கட பக்கத்து வீட்டில் இப்போ காச்சிருக்கும், அந்த கொத்தாக இருக்கும் மாங்காய்மீது ஜத்தியம் ஹா ஹா ஹா...
பனானா ப்ரெட் கேக் படம் அழகா இருக்கு. ஆனால் வால்நட் லாம் போடாத பனானா கேக் எப்படி இருக்கும்?
ReplyDeleteஇங்க வீட்டில் பெண், மனைவி செஞ்சாங்கன்னா வால்நட் போடாம பண்ண மாட்டாங்க.
அதை எபிக்கு எழுதி அனுப்பணும்னு நினைச்சுக்கிட்டே இருக்கேன். ஆனா எல்லாரும் அவங்க தளத்துல பனானா கேக் செய்முறை எழுதி வெளியிட்டுடறாங்க. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
//ஆனால் வால்நட் லாம் போடாத பனானா கேக் எப்படி இருக்கும்?//
Deleteஆஆஅ இது என்ன புதுக் கதையாக இருக்கு கர்:)).. இங்கு எங்கள் விட்டில எப்பவும் நட்ஸ் வகை இருக்கும், ஆனா எனக்கென்னமோ அதைப்போட்டால், கேக்கின் ஒவ்வொரு சொந்த சுவை மாறிடுமோ எனப் பயம், வெறும் பட்டர் கேக் எனில் போடலாம் என நினைப்பேன்.
இது பனானா சுவை அப்படியே பொருபொரு என வாயில இறங்கும்போது சூப்பர் ரேஸ்ட்.. நான் பயந்தேன், பனானா போட்டதனால மொழு மொழு என ஆகிடுமோ என..
முன்பு ஒரு தடவை செய்திருக்கிறேன், அது முட்டையும் சேர்த்து, ஆனா அதன் சுவை பெரிதாக எழும்பவில்லை.
//இங்க வீட்டில் பெண், மனைவி செஞ்சாங்கன்னா வால்நட் போடாம பண்ண மாட்டாங்க, அதை எபிக்கு எழுதி அனுப்பணும்னு நினைச்சுக்கிட்டே இருக்கேன்.//
ஓ அந்த ரெசிப்பியையும் அனுப்புங்கோ பார்ப்போம்ம்.. அனுப்ப மாட்டீங்கள் எனில், பின்னூட்டத்திலாவது ரெசிப்பி சொல்லவும்.
//ஆனா எல்லாரும் அவங்க தளத்துல பனானா கேக் செய்முறை எழுதி வெளியிட்டுடறாங்க. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//
ஹா ஹா ஹா அடுத்து இன்னொரு ரெசிப்பியும் விரைவில் வரபோகுது:)) அதுக்கும் நீங்க இப்படிச் சொல்லுவீங்கள் பாருங்கோ:)) ஹா ஹா ஹா..
பனானா கேக் என் ஃபேவரைட். மைலாப்பூரில் செளமியா கேக் கடையில் நான் அடிக்கடி வாங்குவேன். வீட்லயும் அவ்வப்போது செய்வாங்க.
ReplyDeleteசமீபத்தில்கூட எனக்கு ஒரு கேக் என் மனைவி செஞ்சு தந்தாங்க. நல்லா இருந்தது (வெயிட் கூடிப்போயிடுச்சு. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)
//சமீபத்தில்கூட எனக்கு ஒரு கேக் என் மனைவி செஞ்சு தந்தாங்க. நல்லா இருந்தது (வெயிட் கூடிப்போயிடுச்சு. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)//
Deleteஹா ஹா ஹா அதுக்குத்தான் எங்களிடம் இருப்பதைப்போல ஒரு ஸ்கேல் வாங்கிடுங்கோ.. அதில் கிராம் கணக்கில காட்டும்போது, ஹையோ இன்று சாப்பிடவே கூடாது எனும் எண்ணம் வரும் ஹா ஹா ஹா..
பனானா கேக் நன்றாக வந்திருக்கு.
ReplyDeleteசுவைக்க இதமாக இருக்கும்.
அருமையான ரெசிப்பிக்கு மிக நன்றி அதிரா மா.
பேரனுக்குக் காரசாரமாக சமையல் வேண்டும்.
அவனுக்காக எலுமிச்சை ஆவக்காய் ஊறுகாய் நேற்றூப்
போட்டிருக்கிறேன்.
ஒ வல்லிம்மா நன்றி நன்றி..
Delete//பேரனுக்குக் காரசாரமாக சமையல் வேண்டும்.//
ஓ எங்கள் மூத்தவருக்கும் அப்படித்தான், அவருக்கும் ஊறுகாய் பிடிக்கும்..
நானும் தேசிக்காய் ஊறுகாய் போட்டுவிட்டேன் வல்லிம்மா.. மாங்காயில் போடலாம் எனப் பார்த்தால் மாங்காய் கிடைக்குதில்லை[குட்டி மாங்காய்].. ஆவக்காயோ?.. ஓ இதுவும் மாங்காய் என நினைக்கிறேன்ன்...
நல்லது போடுங்கோ, நான் நாளைக்கு மோர்மிளகாய் போடப்போகிறேன். வத்தல்களும் போடலாமே வல்லிம்மா.. மனதுக்கும் உடலுக்கும் மகிழ்ச்சி.
மிக்க நன்றிகள் வல்லிம்மா.
//நேரம் இரவு 10.28 . பாருங்கோ எவ்வளவு வெளிச்சமாக இருக்குது.// - இதை முதலில் ஃப்ரான்ஸின் (Lilleல என்று நினைவு என் ஆல்பத்தைப் பார்க்கணும்) ஒரு பகுதியில்தான் பார்த்தேன். 9 1/2 மணிக்கு (இரவு) வெயில். ரொம்ப அதிசயமா இருந்தது எனக்கு.
ReplyDeleteஅங்க (மற்றும் யூகே) சூப்பர்மார்க்கெட்டில் ஒயின் போன்றவை பெரிய பெரிய வரிசையில் சல்லிசாக இருப்பதைப் பார்க்கவும் எனக்கு அதிசயமாக இருந்தது.
புதிய ஒரு நாட்டுக்குச் செல்லும்போது நம் வழக்கத்தில் இல்லாதவற்றைக் காண்பதற்கு நமக்கு அதிசயமாக இருக்கும்.
அதேபோல வெளிநாட்டினருக்கும் இந்தியாவில் (மும்பையில்) மின்சார வண்டிகளில் 1000 பேர் செல்லலாம் என்ற இடத்தில், 10,000 பேர் பயணம் செய்வது கண்டு மயக்கம் வராத குறையாக இருக்கும்.
உண்மைதான் நெ தமிழன், நீங்கள் பல நாடுகளுக்கும் போயிருப்பதால் அனுபவிச்சிருப்ப்பீங்கள், ஆனா அமெரிக்கா கனடாவை விட இங்கு யூரோப் பக்கங்களில் இரவு நேரம் அதிகம் குறைவாக இருப்பதைப்போல தோணும்.. இங்குகூட, இங்கிலாண்டை விட ஸ்கொட்லாண்ட் இரவு நேரம் இன்னும் குறைவாக இருப்பதாகச் சொல்கின்றனர்.. சூரியன் கடக்கும் பாதைக்கு நேர் கீழே வருகிறதோ...
Deleteநேற்றும் ஒரு படம் எடுத்தேன், அடுத்த போஸ்ட்டில் போடுகிறேன்...
ஹா ஹா ஹா அங்கிருந்து வந்த எங்களுக்கு ஊர் நிலைமை தெரியும், இப்போ நம் பிள்ளைகள் பார்த்தால் மயக்கமடைவினம்.. அதிலும் முக்கியமாக எங்கட பிள்ளைகள் ரென்சனாவது.. அங்கு வீடு இல்லாமல் சாப்பாடு இல்லாமல் இருப்போரைப் பார்த்து, எங்கள் பிள்ளைகள் இருவரும் பதட்டப்படுவர் ரீவிகளில் பார்த்து.. இப்படி எப்படி இருக்கினம்.. பாவமெல்லோ என.. அதுக்கு முக்கிய காரணம்.. ஸ்கொட்லாந்தில் பிச்சை எடுப்போரை இதுவரை கண்டதே இல்லை... இப்போ மோல் வாசலில் ஒருவர் இருந்து, பணம் கேட்கத் தொடங்கி இருக்கிறார்.. அவர் துருக்கி அந்தப் பக்க நாட்டவர்போல இருக்கு.. அவரைப் பார்த்தால் ஏதோ குடிக்கு அடிமையானதுபோல தெரியுது...
ஆனால் பாருங்கோ இனி இலங்கை இந்தியாவிலும் கொரோனாவால எல்லாம் வெளிநாடுபோல ஆகிவிடும் கொஞ்சமாவது:))
நீங்களே சொல்லிட்டீங்க இல்லையா? இனி விமனை ஃபாலோ பண்ண வேண்டியதுதான்.
ReplyDeleteஅடி விழுந்தால் என்ன செய்ய என்பதையும் சொல்லியிருக்கலாம்.
///நீங்களே சொல்லிட்டீங்க இல்லையா? இனி விமனை ஃபாலோ பண்ண வேண்டியதுதான்.//
Deleteஹா ஹா ஹா கர்ர்:)) விமனைத்தான் ஃபலோ பண்ணச் சொல்லியிருக்கு:)) அதுக்காக அழகான, ஸ்டைலா விமனை எண்டெலலம் சொல்லவில்லை என்பதனையும் கவனத்தில் கொள்க:))..
//அடி விழுந்தால் என்ன செய்ய என்பதையும் சொல்லியிருக்கலாம்.//
அதை அண்ணி பார்த்துக் கொள்ளுவா ஹா ஹா ஹா.
பின்ன அவவுக்கும் தெரியோணுமெல்லோ நீங்கள் ஆரைப் ஃபலோ பண்ணுறீங்கள் எண்டு ஹா ஹா ஹா:))..
நீங்களும் கமெண்ட்ஸை போட்டவுடன் வெளிவருமாறு மாற்றிவிடுங்கள். இப்போ எல்லாம் தெரிந்தவர்கள்தானே வருகிறார்கள்.
ReplyDelete@ நெ தமிழன்
Delete//இப்போ எல்லாம் தெரிந்தவர்கள்தானே வருகிறார்கள்.//
நீங்கள் அந்த கோபு அண்ணனோடு எடுத்த செல்வியை:)) எல்லாம் போட்டு விடுங்கோ இங்கின:)) இப்போ எல்லாம் தெரிஞ்சவர்கள்தானே வருகிறார்கள்:)) ஹா ஹா ஹா.... கரீட்டுத்தானே கோபு அண்ணன் நான் ஜொன்னது?:))[என்ன கோபு அண்ணனைக் கூப்பிடுறேன் எனத்தானே ஓசிக்கிறீங்கள்?:)), அவர் கொமெண்ட் போடாவிட்டாலும் அனைத்தும் படிக்கிறார்ர் தெரியுமோ?:)) இது அவரின் அந்த குண்டா சுவீட் மீது ஜத்தியம்:))].. ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி மகளே என்பது போலவேஏஏஏஏஏஏஎ ஒரு பேச்சு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..
பூனை கண்ணை மூடிட்டால் பூலோகமே இருண்டுவிட்டதைப்போல நினைப்பு:))..
அதிரா உப்பூடிப் பொயிங்கப்பிடாது அடங்கு அடங்கு:))[அதிராவின் மனச்சாட்சி:))].. சரி சரி நோர்மலுக்கு வருகிறேனாக்கும்:)) ஹா ஹா ஹா..
நீங்க சொல்லுவது 100 வீதம் கரீட்டு நெ தமிழன்...., அதேபோல இதுவரை எந்தத்தப்புத்தண்டாக் கொமெண்ட்டும் வந்ததில்லை.. ஆரம்பம் திறந்திருந்த காலத்தில்கூட.. ஆனா இது எனக்கு ஈசியாக இருக்குது ஏனெனில்,
1)எந்தப் போஸ்ட்டுக்கு கொமெண்ட் வந்திருக்குது என்பதைக் கண்டு பிடிக்க முடியுது. இல்லை எனில், நினைவாக தேடிப்பார்த்து கண்டுபிடிக்கோணும்.
2. கொமெண்ட் போடுவோருக்கு இது ஈசி, ஒரு கொமெண்ட் போடுபவருக்கு ஓகே, ஆனா நிறையக் கொமெண்ட் போடும்போது, மெடெரேசன் இல்லை எனில், ஒவ்வொரு தடவையும் புளொக் ரீ-ஃபிரெஸ் ஆகும், அப்போ நீண்ட நேரம் எடுக்கும்[சும்மாவே திறக்க கஸ்டம் என கொம்பிளைண்ட் வருகுதெல்லோ].. இது கடகடவெனக் கொமெண்ட் போடலாம்.
3. எனக்கும் மெயில் நோட்டிபிகேசன் இருப்பதால், ஆர் இப்போ ஓன்லைனில் இருக்கிறார்கள், ஆருடைய கொமெண்ட்ஸ் எல்லாம் வந்திருக்குது எனத் திறந்து படிக்காமலேயே அறிய முடிகிறது.
முடிஞ்சவரை பக்குப்பக்கெனப் பப்ளிஸ் பண்ணிவிடுகிறேன், ஆனா சில சமயங்களிலும், நித்திரை நேரத்திலும்தான் உடனே பப்ளிஸ் பண்ணுவதில்லை, இனி நினைத்திருக்கிறேன், சாமத்தில் முழிச்சால், பப்ளிஸ் பண்ணிவிட்டு நித்திரையைக் கொண்டினியூ பண்ணோணும் என:)) ஹா ஹா ஹா...
வணக்கம் சகோதரி
ReplyDeleteஇம்முறையும் ரயிலை தூரத்தில் பார்த்து விட்டேன். சரி.. ஏறிக் கொள்ள வேண்டியதுதான் என படித்துக் கொண்டிருக்கும் போது காப்பி வேண்டுமென மகன் கேட்டதும், நீங்கள் வாழைப்பழத்தை வைத்து கேக்கெல்லாம் அமர்க்களமாக பண்ணி உங்கள் வீட்டார்களை அசத்துகிறீர்கள். ஒரு காப்பித்தானே, என எழுந்து போனால், கொஞ்சம் நேரம் கிச்சன் அரெஸ்ட்...! மீண்டு வந்து பார்க்கும் போது பதிமூன்று பயணிகள் ஏறி விட்டனர். ஹா.ஹா.ஹா.
கேக் படங்கள், செய்முறைகள் என பிரமாதம். எல்லாமே நன்றாக இருக்கிறது. எல்லாவற்றையும் குறித்துக் கொண்டேன். என்னிடம் "அவன்"இல்லை.. இருக்கும் "அவளில்"தான் இந்த கேக்கெல்லாம் செய்ய வேண்டும். இந்த சோடா, பேக்கிங் பவுடர் எல்லாம் ஒவ்வாமை வந்து விடுமோ என்ற பயத்தில் இதுவரை வாங்கி வைத்து பயன்படுத்தியதில்லை. இனி இவற்றை வாங்கித்தான் பண்ண வேண்டும். மைதா வாங்க வேண்டும். அதற்குள் வாங்கி வைத்திருக்கும் வாழைப்பழங்கள் ஒவ்வொன்றாய் காணாமல் போய் விடும்.அதனால் உங்கள் செய்முறையில் உருவான கேக்கை ஆசை தீர பார்த்து படித்து தெரிந்து கொண்டேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்கோ கமலாக்கா வாங்கோ...
Deleteஓஓ சே சே ஒரு ரீ ஊத்தப் போனதால எஞ்சின் சீற்றைக் கோட்டை விட்டுவிட்டீங்களே ஹா ஹா ஹா.. இப்போ அதில கீதா ஏறி இருந்து ஹாயா ஊர் பார்த்துக் கொண்டு வாறா ஹா ஹா ஹா...
//என்னிடம் "அவன்"இல்லை..//
வாங்கிட்டால் போச்சு.. அவனைத்தான் ஹா ஹா ஹா:))
//இருக்கும் "அவளில்"தான் இந்த கேக்கெல்லாம் செய்ய வேண்டும்.//
ஹா ஹா ஹா அடுப்பைப் பெண்பால் ஆக்கிட்டீங்களோ?:)).. உங்களுக்குத் தெரியுமோ? ஃபிரான்ஸ்சில் அனைத்துக்கும் பெண்பால் ஆண்பால் உண்டு... அதாவது ஜடப்பொருள்களுக்குக்கூட...
உங்கள் புலம்பலைப் பார்த்தால்ல்.. பிளீஸ்ஸ்ஸ்ஸ் நீங்கள் ச்சும்மா இருங்கோ.. நானே ட்றம்ப் அங்கிளின் ஸ்பெசல் பிளேனில ஒரு பார்சல் எடுத்து வந்து தருகிறேன்ன்.. இல்ல இல்ல எயார்ட்ரொப் பண்ணுகிறேன்.. ஹச் பண்ணுவீங்கள்தானே உங்கட முற்றத்தில நிண்டு:)) ஹா ஹா ஹா...
வடகம் அழகாக பூக்களைப்போல் இருக்கிறது.
ReplyDeleteகேக் படத்தில் அழகாக இருக்கிறது சுவை அனுப்பி வைத்தால் தின்று பார்த்து மார்க் லிஸ்ட் அனுப்பி வைக்கப்படும்.
ஸ்கோட்லாண்ட் அருகில்தான் நோர்வே இருக்கிறதோ ?
வாங்கோ கில்லர்ஜி வாங்கோ.
Deleteபூப்பொல இருந்தால் பூ வடகம், பூனைபோல இருந்தால் பூஸ் வடகம், அதுவும் செய்தேனே.. இனி வரும் அடுத்தடுத்த போஸ்ட்களில் ஹா ஹா ஹா..
//அனுப்பி வைத்தால் தின்று பார்த்து மார்க் லிஸ்ட் அனுப்பி வைக்கப்படும்.//
நீங்கள் உகண்டா போகும்போது, பிளேனை ஒரு முறுக்கு முறுக்குங்கோ ஸ்கொட்லாண்டுக்கு ஹா ஹா ஹா.. பாகுபலி அன்னக்கப்பலை முறுக்குவதைப்போல .. அது இங்கின திரும்பினால், பார்சலை நான் ஏத்தி விடுகிறேன்:)) எத்தனி கிலோ வேணும்?:))..
//ஸ்கோட்லாண்ட் அருகில்தான் நோர்வே இருக்கிறதோ ?//
ஓமோம்.. மேல் பகுதியில் கிட்ட வருகிறது, அங்கிருந்து ஸ்கொட்லாண்டுக்கு காரில் வரலாம்[ஃபெரி மூலம்]..
மிக்க நன்றி கில்லர்ஜி.
அருமை
ReplyDeleteவாங்கோ கரந்தை அண்ணன்.. நன்றி.
Deleteஹை ஆனி முத்து பாட்டு பார்த்து கேட்டு ரசித்தேன் :) இந்த மாதிரி கூட்டுகுடும்பத்தையெல்லாம் இப்படி சினிமாவில் பார்த்தால்தான் உண்டு ஹ்ம்ம் எவ்ளோ அழகு நடிப்பு சூப்பரா இருக்கு பாட்டு
ReplyDeleteஆஆஆ வாங்கோ அஞ்சு வாங்கோ.. ஏன் இவ்ளோ லேட்டூஊஊஊஊ?:)).. ஆஆ இல்ல இல்ல நான் தான் பதில் தர லேட்டுப்போல ஹா ஹா ஹா..
Deleteஅது ஆணி முத்தெனத்தான் இவ்ளோ காலமும் நினைச்சிருந்தேன் ஹா ஹா ஹா..
அதேதான் அஞ்சு... அக்கால கூட்டுக் குடும்பத்தையும், அம்மி, ஆட்டுக்கல்லு கிணறு என அனைத்தையும் காட்டுகின்றனர். நன்றி ரசிச்சிருக்கிறீங்க இம்முறை.
ஹாஹாஹா ==== :) ஹையோ ஹையோ
ReplyDeleteஎல்லாரும் வேலைக்கு பழையபடி திரும்பறத நினைச்ச கொஞ்சம் கலக்கமாவும் இருக்கு .இன்னிக்கு ரோட்டில் நிறைய வாகனங்கள் கன்ரோல் இல்லாம ஓட்டிட்டு போறாங்க என்ன நடக்குதுன்னு பார்ப்போம் பொறுத்திருந்து
அதேதான் அஞ்சு, கவன்மெண்ட் கொஞ்சம் தளர்த்தியதும், ஊரெல்லாம் கொண்டாட்டமாகவே இருக்குது, ஏதோ ஊருக்குள் சிங்கம் பூந்து நாமெல்லாம் ஒளிச்சிருந்தது போலவும், இப்போ விரட்டியாச்சு வெளியே உலாவலாம் போலவுமெல்லோ இருக்கு மக்களின் நினைப்பு.. கொரோனா அங்கிள் இன்னமும் இருக்கிறார்தானே:)).
Deleteகுறும்புத்தனம் சரி ஆனா அது கடின உழைப்பை உழைக்கிறவங்களுக்கு தான் அது :)
ReplyDeleteகடின உழைப்பு= யூ மீன்..... அதிராவைப்போல வடகம், கேக் செய்வோரைத்தானே சொல்லுறீங்கள்:)) ஹா ஹா ஹா
Deleteகுறும்புத்தனம் என்பது குழந்தைகளிடம் இருக்கும்போது ரசிக்கிறோம்.. அதேபோல பெரியவர்களின் குறும்புத்தனம் என்பது, கலகலப்பாக இருப்பது.. எதையோ இழந்ததைபோலவே எப்பவும் உம்மெனவும் கோபித்துக் கொண்டும் சோகமாகவும் இருக்காலம் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பது... உற்சாகமாக சுறுசுறுப்பாக இருப்பது..
நாம் - பெரியவர்கள் கலகலப்பாக இருந்தால்தான், வீடும் கலகலப்பாக இருக்கும்.. கரீட்டுத்தானே நான் சொல்வது?:))
//ஹா ஹா ஹா இது எனக்கானது அல்ல அல்ல:))//
ReplyDeleteஹலோ மேடம் உங்களுக்கானதுதான் அது :) இருங்க எதிர்பாராத நேரத்தில்// வறேனா // னு உங்களை தேடி வரப்போகுது :)
ஹா ஹா ஹா ஆவியானால்..
Delete1. அதுக்கு பழசு மறந்துபோகுமாம்:))
2. காது கேளாதாம்
அதனால அந்த ஆவி எல்லாம் இங்கின முகம் காட்டாமல் சுற்றிக் கொண்டிருக்கும் நெ தமிழன் ஸ்ரீராமைத்தான் உங்களையும்தான் கலைக்கும்:)).. நான் தொட்டதே இல்லை என்னை விடு எனச் சொன்னால் அதுக்கு காது கேட்காதாம்:)) ஹா ஹா ஹா.. முகம் தெரியாததால.. முகம் காட்டாத எல்லோரையும் மிரட்ட்ட்ட்டும் ஹா ஹா ஹா:))..
அதிரா, முகம் காட்டியிருப்பதால.. “நீ ஒரு அப்பாவி, நீ பாவம்.. ஓடிடு” என விட்டிடுடும்.. ஹா ஹா அஹ எங்கள் வீட்டுக்குள் வந்த கள்ளன் எனக்கு சொன்னதைப்போல ஹா ஹா ஹா..[கதை சொன்னேனா இங்கு நினைவில்லை:)]
//இந்த ஸ்கொட்லாண்டில், நான் அதிகம் வியக்கும் முதல் அதிசயம் இதுதான்.. இது என்ன தெரியுதோ?//
ReplyDeleteஅதை விடுங்க நான் வியக்கும் அதிசயம் நீங்களேதான் :) வற்றல் வடாம் போடறேன் என்னிக்கும் இப்படி கலரா வந்ததில்லை :) பெற்ரறாமையா இருக்கு :)
பொரித்த வற்றல் வடாம்லாம் அழகாத்தானே வந்திருக்கு. கரெக்டா ஸ்டார் மாதிரி வந்து என்ன செய்யப்போறோம்? ஒடிச்சு சாப்பிடத்தானே போறோம்.
Deleteஎவ்வளவு அழகா வட்ட வட்டமா தயார் செய்திருக்காங்க. பார்க்கவே ரொம்ப அழகா இருக்கே.
நல்லா வந்துடுச்சே என்ற பொறாமையில் சொல்றாங்களா இருக்கும்..க்கும்..க்கும். ஹா ஹா
ஹாஹாஆ :) ஒரு குறிப்பு படமெடுத்து அனுப்பினாங்க நான் என்னையே கிள்ளி பார்த்துக்கிட்டேன் அவ்ளோ அழகா இருந்தது .. வெளியிடலை அந்த குறிப்பை ..அதை பார்த்தா நீங்களும் மயங்கி விழப்போறீங்க :)
Delete@ அஞ்சு

Delete//அதை விடுங்க நான் வியக்கும் அதிசயம் நீங்களேதான் :)//
@ நெ தமிழன்

Delete///எவ்வளவு அழகா வட்ட வட்டமா தயார் செய்திருக்காங்க. பார்க்கவே ரொம்ப அழகா இருக்கே.
நல்லா வந்துடுச்சே என்ற பொறாமையில் சொல்றாங்களா இருக்கும்..க்கும்..க்கும். ஹா ஹா///
ஆஆஆ அப்பூடியோ விசயம் நெல்லைத்தமிழன், அப்போ வேணுமெண்டே அஞ்சு செய்த ஜதி இதூஊஊஊஊஊஉ கர்:)).. நில்லுங்கோ இப்பவே தள்ளுறேன் தேம்ஸ்ல...
அவ புல்லுத்தடக்கி விழும் பேமஸ்:) பேர் வழி ஆச்சே:))..அதனால அதிரா தொட்டாலே விழுந்திடுவாவாக்கும்:)) அடிக்கவே தேவையில்லை ஹா ஹா ஹா படம் பாருங்கோ.. மீ ஒண்ணும் பண்ணல்லே ஹா ஹா ஹா...
@ அஞ்சு
Delete///அதை பார்த்தா நீங்களும் மயங்கி விழப்போறீங்க :)//
ஹா ஹா ஹா அவர் ஓல்ரெடி வுமினைப் ஃபலோ பண்ணி:) அடி வாங்கி:) மயங்கி விழப்போகிறார்..:)) அத்தொடு இதுவும் வேறையோ ஹா ஹா ஹா:))
///இப்போ அம்மா எனக்கு 16 வயசானதும் சீதனமாக வாங்கி அனுப்பிய கறிடிஸ் செட்:) இருந்துதா, //
ReplyDeleteஅதாவது உங்களுக்கு 16 வயதானபோது அம்மா அனுப்பினத்தை இப்போ 66 வயதில் பயன் படுத்தி காட்டுறீங்க :)அந்த டிஷ் செட் சூப்பரா இருக்கு
இந்த வருசம்தானே நானே கேக் அடிச்சு 16 என எழுதி பேர்த்டே கொண்டாடினோம்ம்.:). உங்களுக்கு வரவர மறதி அதிகம் அஞ்சு:)).. நெல்லைத்தமிழனின் வயசை எல்லாம் அதிராவின் வயசென நினைக்கிறீங்க:)) எல்லாம் அந்த கொரோனாவாலதான் கர்ர்ர்:)) ஹா ஹா ஹா..
Deleteஅது சூப்பரா இருக்குதஞ்சு, அதனாலேயே இன்னும் பாவிக்காமல் இருக்கிறேன்.. அது இப்போ 2019 இல் அனுப்பின அம்மா ஊருக்குப் போயிருந்தபோது.
பிஞ்சு அந்த புதினா காடாய் வளரும் .எங்க தோட்டத்தில் அருகே இருக்கும் எல்லா செடிலையும் புதினா வாசனை தெளிச்சு விட்டிருக்கு :)புதினா அருகில் டெய்சி மலர்களும் அழகு
ReplyDeleteஉண்மை அஞ்சு, முன்பு நானும் செடிகளுக்கு கிட்ட தெரியாமல் வச்சு, பின்னர் பிடுங்கி விட்டேன். இது தூரவா வேலிக்கரையில வச்சிருக்கு, பின்பு படம் போடுறேன் பாருங்கோ.. எவ்ளோ தொலைவில் இருக்குதென.
Deleteபுல்லு வெட்டாட்டில் கார்டின் முழுக்க டெய்சி மலரும், பட்டர்கப் மலர்களும்தான் அஞ்சு, படமெடுத்தேன் அதையும் தேடிப்போடுகிறேன்.. புல்லு வெட்டினதும் போயிடும், மீண்டும் வளரும்.
பனானா கேக் நல்லா இருக்கு கண்ணால் மட்டும் பார்த்துவிட்டு கடந்து செல்கின்றேன் :)
ReplyDeleteஅது சரி அந்த மியாவ் ஆட்டுக்கிட்டே என்ன ரகசியம் சொல்லுது :) ஆடு நம்பாதே அது கள்ளமியாவ் :)
குளூட்டன் ஃபிறீ வாங்கிச் செய்யலாமே அஞ்சு..
Delete//ஆடு நம்பாதே அது கள்ளமியாவ் :)//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..
ஹலோ நீங்க காட்டின வெயிட் டீடெயில்ஸ் தப்பூ அதில் வெயிட்டை காணோமே ஏ :)
ReplyDeleteஹா ஹா ஹா பூஸோ கொக்கோ.. மேல் பகுதி டீரெயில் எல்லாம் மறைச்சிட்டனே:))
Deleteமிக்க நன்றிகள் அஞ்சு..
உங்க டெய்சி பிள்ளைனா கண்டிப்பா கேக் எடுத்துக் கொண்டு போய் கொடுத்திருப்பா!! ஹா ஹா ஹா ஹா
ReplyDeleteகீதா
ஹா ஹா ஹா அதேதான் கீதா, எனக்கு கிஃப்ட் எடுத்து வந்து தருபவ ஆச்சே:))
Deleteகேக் ரொம்ப அருமையா வந்திருக்கு!! மீண்டும் ஒரு பொக்கே...பாராட்டுகள்!!
ReplyDeleteஅசத்துங்கோ தூள் கிளப்புங்க!!!
நானும் இதே அளவுதான் கோதுமை மாவிலும் செய்துள்ளேன் அதுவும் நல்லா வருது அதிரா. அப்புறம் பனானா வால்னட் கேக், பனானா சாக்கோ கேக் அதில் சாக்கோ சிப்ஸ் மேலே தூவி என்று.
ஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் கொட்டாவி வருது...நித்திரா தேவி கண்களைத் தழுவுறா. ஸோ நாளை மதியம் மேல் வருகிறேன் அதிரா....வடாம் சாப்பிட. நமுத்துப் போகாமல் நல்ல ஏர் டைட் கண்டெயினர்ல போட்டு வையுங்கோ. ஒன்று கூடக் குறையப்படாது...நம்ம நெல்லை நான் கேக் சாப்பிட மாட்டேன் ஸோ வத்தல் வடாம் கோடுங்கன்னு கூடுதல் சாப்பிட்டார்னா காலி ஆகிடும்....எனக்குத் தனியா பொரிச்சு வையுங்கோ...ஓகேயா...ஹா ஹா ஹா ஹா
கீதா
நன்றி கீதா நன்றி, நானும் எதிர்பார்க்கவில்லை, பனானா கேக் இவ்ளோ கொரகொரப்பாக வருமென, களிபோலாகிடுமோ எனப் பயந்தேன்... தயிர் போட்டமையாலதானாக இருக்கும்.
Deleteநான் இன்னும் குழப்பத்திலேயே இருக்கிறேன்.. கோதுமை, மைதா.. இரண்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லை.
நாங்கள் பிளேன் ஃபிளவரைத்தான் கோதுமை என்போம்... சனல்களில் பார்த்தால் அதை மைதா என்கின்றனர் கர்:)).. தவிடுள்ளதை சப்பாத்திமா, ஆட்டாமா என்கிறோம்.
உங்களுக்கு பொரிச்ச வடாம் பெரிய கொன்ரெயினரில போட்டு வச்சிட்டேன் கீதா..
ஹா ஹா ஹா மிக்க நன்றிகள்.
ஆல் பர்பஸ் ஃப்ளவர் - மைதா. என் மனதில், வெளிநாட்டு ஆல் பர்பஸ் ஃப்ளவர், நம் நாட்டின் மைதாவைவிட பெட்டரா இருக்கும்னு எண்ணம். ஆட்டாமா - கோதுமை மாவு.
Deleteநல்லதொரு பாடல். ஆனிமுத்து வாங்கி ஆவணி வீதியில் வருவது..
ReplyDeleteபூணாச்சுவின் அன்பான சத்தியம் சிரிக்க வைத்தது.
வங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. ஆஆஅ நன்றி பாடலை ரசித்தமைக்கு.. நல்ல பாட்டுத்தான் எனக்கும் பிடிச்சுப் போச்சு.
Deleteஇந்த லாக் டவுன் காலத்திலே எல்லோருமே வகை வகையாய் வீட்டில் செய்திருக்கிறோம். இதைப் பகிரலாமே, இதைப்பகிரலாமே என்றெல்லாம் தோன்றும். சரியான புகைப்படங்களும் எடுத்து வைத்துக் கொள்ளவில்லை. எனவே விட்டுவிடுவோம் என்று விட்டும் விடுவோம்!
ReplyDeleteஹா ஹா ஹா உண்மைதான்.. இதனால இன்னொரு உத்வேகமும் எல்லோ வரப்பார்க்குது.. அதாவது இப்பூடியே ஒரு யூ ரியூப் தொடங்கினால் என்ன என ஹா ஹா ஹா.. மீ ஓடிடுறேன்:))
Deleteவாழைப்பழ கேக் பார்க்க படத்தில் பிரமாதமாக வந்திருக்கிறது. சாப்பிடவும் நன்றாகவே இருக்கும் என்று நம்புகிறேன்.
ReplyDeleteஉண்மையில் நல்ல ரேஸ்ட் ஸ்ரீராம்.. செய்து பாருங்கோ விடுமுறையில் செய்து வீட்டில எல்லோரையும் அசத்துங்கோ... முக்கிய குறிப்பு: இது அதிராவின் ரெசிப்பி எனச் சொல்லோணுமாக்கும்:))
Deleteவெயிட்டே செக் செய்வதில்லை. கொஞ்சகாலம் வீட்டுக்குள்ளேயே நடந்தேன். இப்போ அதுவும் இல்லை. ஆனால் ஒன்று வெரைட்டியாக நிறைய எதுவும் நான் சாப்பிடுவதில்லை என்பதால் பெரிய மாற்றமில்லை. இந்த ஆப் எல்லாம் நான் செல்லில் வைத்த்துக் கொள்வதில்லை! அனாவசிய மனக்கவலை, ஸ்ட்ரெஸ்!!!!
ReplyDelete////கொஞ்சகாலம் வீட்டுக்குள்ளேயே நடந்தேன்.//
Deleteஹா ஹா ஹா இதுவும் நல்ல விசயம்தானே.. இன்விசிபிள் ரெட்மில் கூடச் செய்யலாம் வீட்டுக்குள்:)) நான் அப்படியும் செய்வதுண்டு சிலசமயம்:).
சாப்பாடு ஒரே மாதிரி இருந்தால் பிரச்சனை இருக்காது.
//இந்த ஆப் எல்லாம் நான் செல்லில் வைத்த்துக் கொள்வதில்லை! அனாவசிய மனக்கவலை, ஸ்ட்ரெஸ்!!!!//
இது ஸ்ரீராம், நாம் வெயிட் பார்த்ததும், அதில் எடை மட்டுமே காட்டும், மிகுதி அனைத்தையும் வயலெஸ்ஸில் அனுப்பி மொபைலுக்கு வரும்... ஆனால் இதைப் பார்ப்பதால் கொஞ்சம் ஆர்வமாகி, வெயிட் ஏறியிருப்பின், உடனே டயட் பண்ணி இறக்கிட வசதியாக இருக்குது.
ஆனாலும் உண்மைதான் சிலசமயம்.. சே..சே ஏறியிருக்கே எனவும் கஸ்டமாக இருக்கும்.
புதினா இலவடாம் அழகாய் இருக்கிறது. நீங்கள் புதிய முறையில் செய்திருக்கிறீர்களோ? சாப்பிடும்போது மெல்லிசாக, சாப்பிட எளிதாக இருந்ததா?
ReplyDeleteபுதிய முறை இல்லை ஸ்ரீராம்.. இப்படித்தானே அரிசியை அரைச்சு, தட்டில் ஊற்றி அவித்து எடுத்துக் காயப்போடுகிறார்கள்...
Deleteபொரித்த படமும் மேலே இருக்கே.. கிரிஸ்ப் சாப்பிடுவதைப்போல இருக்கு, சரியான சொஃப்ட்டாக... ஆனா புதினாவைப் பச்சையாகச் சேர்ப்பதனால், கொஞ்சம் மணம் அடிக்குது புதினா மணம்.
இரவின் இருள் என்பது கொஞ்ச நேரம்தான் இருக்கும் என்றால் போர் அடித்து விடாது?!!! இரவு பதினோரு மணிக்கு இருட்டி, மூன்றரை மணிக்கே விதித்து சூரியன் வந்து...!
ReplyDeleteஇல்லை ஸ்ரீராம், போறிங் எல்லாம் இல்லை, விடுமுறை நாள் எனில்., இரவு பத்து மணியாகிவிடுவதே தெரியாது.. ஆறு மணி என நினைப்போம்.... நன்றாக இருக்கும், கார்டினில் இருந்து நிலவையும் பார்ப்போம்.. மகிழ்ச்சியாக இருக்கும்.
Deleteவேலை, ஸ்கூல் நாட்கள் எனில், அதுக்காகத்தான் இங்கு திக், டபிள் கேட்டின்ஸ் பாவிப்போம்... மூடி விட்டால், உள்ளே கும்மிருட்டாகிடும், நித்திரை ஆகிடலாம்.. தப்பித்தவறி கேட்டின் ஒழுங்காக மூடுப்படவில்லை எனில்.. அதிகாலை 4 மணிக்கு சூரியன் கண்ணில அடிச்சு எழுப்பிடுவார் ஹா ஹா ஹா...
ஆடுகளும் கோழிகளும் ஆவியாய் அலைய வேண்டும் என்றால் உலகம் முழுக்க ஆவி மயமாய் இருக்கும்! ஊசி இணைப்பு சிரிக்க வைத்தது. உண்மை என்றும் சொல்ல வைத்தது (முதலாவது). ஊசிக்குறிப்பு 1 : அதுதான் முடியலையே! 2. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... வாட்சாப்பில்தான் பார்த்துப் பார்த்து எழுத்து விட்டது என்றால் இங்குமா?!!
ReplyDelete//ஆடுகளும் கோழிகளும் ஆவியாய் அலைய வேண்டும் என்றால்// - மனுஷப்பயலுகதான் அவைகளைக் கொல்வதால், ஆவியா எல்லாம் வர விடுவதில்லை இறைவன். உடனே மனிதனாகப் பிறவி கொடுத்துவிடுகிறான் (மனுஷியாக). அதுதான் மருமகள், மருமகன் ரூபத்தில் வருதோ? அப்போ, வெஜ் சாப்பிடறவங்களுக்கு எனக் கேட்டு என்னை டென்ஷன் படுத்த வந்திடுவாங்க. எனக்கு எதுக்கு வம்பூ
Deleteஹா ஹா ஹா நான் போட்டது ரொம்ப லேட்டாகி விட்டது, எனக்கும் எப்பவோ வந்தவை அவை..
Deleteமிக்க நன்றிகள் ஸ்ரீராம்.
@ நெ தமிழன்
Delete//உடனே மனிதனாகப் பிறவி கொடுத்துவிடுகிறான் (மனுஷியாக). அதுதான் மருமகள், மருமகன் ரூபத்தில் வருதோ?///
ஹா ஹா ஹா உண்மை உண்மை...
// அப்போ, வெஜ் சாப்பிடறவங்களுக்கு எனக் கேட்டு என்னை டென்ஷன் படுத்த வந்திடுவாங்க. எனக்கு எதுக்கு வம்பூ///
ஹா ஹா ஹா அதானே.. நீங்கள் சொல்லியிருக்காட்டிலும் இக்கொஸ்ஸனை:)) நான் கேட்டிருப்பேன்:)).. ஹா ஹா ஹா... பொல்லிக்குடுத்தே அடிவாங்குவோரும் இருக்கிறார்கள்:))
ஹையோ, கொஞ்சம் தாமதம் என நினைச்சால் அதுக்குள்ளே 50 கருத்துகளா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இன்னும் எத்தனைத் தணிக்கையிலே காத்திருக்கோ? நான் காணாமல் போயிடுவேன் போல!
ReplyDeleteவாங்கோ கீசாக்கா வாங்கோ..
Deleteநீங்கள் எப்பூடிக் காணாமல் போவீங்கள்?:) ஏன் அதிராவைப்போல ரொம்ம்ம்ம்ம்ம்ப மெலிஞ்சிட்டீங்களோ? ஹா ஹா ஹா ஹையோ கீசாக்கா கலைக்கிறா. விழுந்திடப்போறீங்கள் ஓடாதீங்கோ:)) ஹா ஹா ஹா...
பான் கேக் என்றால் தோசை மாவு பதத்தில் உள்ள மாவை தோசைக்கல்லில் ஊற்ற வேண்டாமோ? போகட்டும், இந்தக் கேக் எங்க அப்புவும் நன்றாகப் பண்ணுவாள். ஹாஹாஹா! நானும் ஒரு முறை கனிந்த வாழைப்பழங்களைப் போட்டு அடுப்பில் பண்ணிப் பார்த்திருக்கேன். இன்னொரு தரம் செய்யணும் என்றால் நம்மவருக்குப் பிடிக்கிறதில்லை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ReplyDeleteஅக்கா அது PAN இல்லை PAAN (பாண் ) அநேகமா சிங்கள மொழியில் பிரெட்டை பாண் என்கிறார்கள்னு நினைக்கிறன்
Delete//பான் கேக்//
Deleteஎன் செக்:) சொல்லியிருக்கிறா கீசாக்கா.. அது ந் அல்ல ..ண் ஆக்கும்.. இலங்கையில் நாங்கள் ஒட்டு மொத்த மக்களும் பிரெட் ஐ பாண் எனத்தான் சொல்லுவோம்... அது சிங்களச் சொல்.
நீங்கதான் ஆங்கிலம் பேசுறீங்க கர்:)) பிரெட்டைத் தமிழில் சொல்லோணும்.. வெதுப்பிக் கேக் என ஹா ஹா ஹா... நன்றி கீசாக்கா, டாங்ஸ் அஞ்சு:))
இந்தப் புதினா இலை வடாம் அம்மா பண்ணி இருக்கார் அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்போவே! தக்காளிச் சாறை வடிகட்டி ஊற்றியும் பண்ணி இருக்கார். இலை வடாம் எங்க வீட்டில் நிறையப் பண்ணிக் கொண்டிருந்தோம். இப்போத் தான் எல்லாமே நின்று விட்டது. சாப்பிட ஆள் இல்லையே! இரண்டு பேருக்குக் கொஞ்சமாக் கடையில் வாங்கிக்கறோம். அது அழுத்தமாக இருக்கு! வேறே வழியில்லை.
ReplyDeleteஉண்மைதான் செய்து போட்டு சாப்பிடவும் வேண்டும், இங்கு வெள்ளைகளுக்கு பொரிச்சுச் சாப்பிடத் தெரியுமோ தெரியாது அதனால குடுக்க முடியாது, இனி கனடா போனால் கொண்டுபோய்க் குடுத்து என் அருமை பெருமையைப் பறை சாற்றலாம்:))
Deleteஆனா வெள்ளி மற்றும் விரத நாட்களுக்கு எங்கள் வீட்டில் இப்படி பப்படம் தேவை...
பீற்றூட் போட்டும் செய்கின்றனர், நான் கொஞ்சம் போட்டுப் பார்த்தேன் பெரிசாக கலர் வரவில்லை... அது சாதத்தைக் கஞ்சி காச்சிய வடகத்துக்குப் போட்டுப் பார்த்தேன்...
ஊசி இணைப்பும், ஊசிக்குறிப்பும் சிரிப்பாய்ச் சிரிக்க வைத்தாலும் ஊசிக்குறிப்பு 2 அதான் அந்த நகைச்சுவைத்துணுக்கு வாட்சப், முகநூல்னு எல்லாத்திலேயும் ஏற்கெனவே சுத்திட்டிருக்கு. அதே போல் ஆடுகள் துணுக்கும். நீங்க இந்தத் தரம் தாமதமாய் இதெல்லாம் போட்டிருக்கீங்க!
ReplyDelete///நீங்க இந்தத் தரம் தாமதமாய் இதெல்லாம் போட்டிருக்கீங்க!//
Deleteஆவ்வ்வ்வ்வ்வ் மறந்திருப்பீங்க என நினைச்சேன்:)) ஹா ஹா ஹ மிக்க நன்றிகள் கீசாக்கா.
பனானா கேக், வடாம் என அனைத்தும் அருமை...
ReplyDeleteஉங்கள் தளத்தை(யும்) கைபேசியில் திறப்பது எளிது என்று, சகோதரி கீதா அவர்களுக்கு எப்படி புரிய வைப்பது...?
http என்பதை முதலில் மாற்றவும்...
வாங்கோ டிடி வாங்கோ..
Delete//உங்கள் தளத்தை(யும்) கைபேசியில் திறப்பது எளிது என்று//
கைபேசியில் திறபடாத தளங்களே இல்லையே... ஐபாட் இலும் எனக்கு பொதுவாக எல்லாம் திறக்குது, ஆனா அதில் தமிழ் எழுத்துப் போடவில்லை நான்.
//http என்பதை முதலில் மாற்றவும்...//
இது புரியவில்லையே எனக்கு... புளொக் ஐடியில் http வரவேண்டுமோ?
நன்றி டிடி.
https என்று வர வேண்டும்...
Deleteஊசி இணைப்புகள் நன்று.
ReplyDeleteவாழைப்பழ கேக், புதினா வடாம் - ஆஹா... எஞ்சாய்.
கேக் பார்க்க நல்லாவே இருக்கு! சுவை பற்றி நான் எப்படிச் சொல்ல? எனக்கு இன்னும் முதல்ல சொன்ன பார்சலே வந்து சேரல!
வாங்கோ வெங்கட் வாங்கோ..
Delete//எனக்கு இன்னும் முதல்ல சொன்ன பார்சலே வந்து சேரல!//
வெயிட் வெயிட்:)) கொஞ்சம் பொறுமை தேவை:).. இப்போதான் மோடி அங்கிளுடன் ட்றம்ப் அங்கிள் பேசிக்கொண்டிருக்கிறார், அதிராவை அங்கு ஸ்பெசல் பிளேனில மீட்டிங்க்கு அனுப்புவது பற்றி:)).. விரைவில முடிவு தெரியும்... அங்கு மோர் மார்கட்டில் வந்து பார்சலைப் பெற்றுக் கொள்ளுங்கோ ஹா ஹா ஹா..
நன்றி வெங்கட்...
புதினா வடாம் சூப்பர்.
ReplyDeleteகொரோனா ஜோக்ஸ் ஹா...ஹா.
வாங்கோ மாதேவி வாங்கோ..
Deleteஇன்னும் வடாம் பபபபப..படாம்:) எல்லாம் வர இருக்குது கியூவரிசையில்:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி மாதேவி.
வணக்கம் அதிரா சகோதரி
ReplyDeleteமுகப்பு பாடல் அருமை. என்ன இருந்தாலும் பழைய பாடலில் ஒரு ஈர்ப்பு உள்ளது.
புதினா இலை வடாம் நன்றாக வந்திருக்கிறது. பூ மாதிரி உள்ளதெல்லாம் பார்க்கவே அழகாக உள்ளது. நான் எப்பவாவது கடையில்தான் வாங்குவேன். இங்கு வடாமிட வெய்யில் சௌகரியமில்லை. மொட்டை மாடிக் கெல்லாம் போய் வைக்கவும் என்னால் இயலாது. நீங்கள் இட்ட வடாம்கள் ஒவ்வொரு புகைப்படமும் அழகாக உள்ளது.
ஊசி இணைப்பு, ஊசிக்குறிப்பு அனைத்தும் அருமை. கொரானாவை விரட்டும் ஐடியா சூப்பர். கொரோனா பற்றி மேன்களும், விமன்களும் எழுத்து வாரியாக தந்த தகவல்களும் அருமை.
ஊசிக்குறிப்பில், குறிப்பிட்டபடி அப்படியான மனோபாவத்தில் நீங்கள் அனைவருடனும் பேசி பழகுவதால்தான், நானும் நீங்கள் ஏதும் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற தைரியத்தில் நட்பாக பழகுகிறேன். சரியா? பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆஆஆ மீண்டும் கமலாக்கா...:)
Delete//என்ன இருந்தாலும் பழைய பாடலில் ஒரு ஈர்ப்பு உள்ளது//
உண்மைதான்..
//நீங்கள் இட்ட வடாம்கள் ஒவ்வொரு புகைப்படமும் அழகாக உள்ளது.//
மிக்க நன்றி, நாங்கள் விதம் விதமான பப்படம் தான் கடையில் வாங்கியதுண்டு, இப்படி வடாம் வாங்கியதில்லை, இதுதான் முதல் முதலாக இப்படி சுவைக்கிறோம்.
///நானும் நீங்கள் ஏதும் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற தைரியத்தில் நட்பாக பழகுகிறேன்///
தப்பாக எடுக்க என்ன இருக்கப் போகிறது, பயம் வேண்டாம்....
மிக்க நன்றிகள் கமலாக்கா.
இப்ப உங்க பேவரிட் அ.கோ.மு இல்லாமல் கேக் செய்றீங்க. இந்தமாதிரி கேக் நல்லா யிருக்குதான் ஆனா இங்கு எண்ணெய் சேர்த்து முதலில் செய்ய பிடிக்கேல்லை.பின் அதையே பட்டரா மாத்திவிட்டேன். சாப்பிட்டாங்க. ஆனா உறைப்பு தான் வேணுமென அடம். அதனால் இனிப்பான ரெசிப்பி 1தரம்தான். உங்க பனானா பிரட் கேக் நன்றாக செய்திருக்கீங்க. வாழைபழத்தினை அடித்துவிட்டும் சேர்க்கலாம் தானே.(கூழா)
ReplyDeleteவாங்கோ அம்முலு வாங்கோ..
Delete//அ.கோ.மு இல்லாமல் கேக் செய்றீங்க.//
ஹா ஹா ஹா அதை தனியாக கையில எடுத்து ருசிச்சு ருசிச்சுச் சாப்பிடோணுமாக்கும்:)) அதை இதற்குள் பொட்டு விட்டு என்ன பண்ணுவதாம்:))..
லொக்டவுன் ஆரம்பமான சமயம் கடைகளில் முட்டை இல்லாமல் போச்சு:)).. மீ.. ஹையோ இனி எப்போ அ.கோ.மு யைக் கண்ணாலே காண்பேனோ என ஏங்கினதில காச்சலே வந்திட்டுது எனக்கு:)) ஹா ஹா ஹா...
முட்டை போட்டதென்றால், அச்சச்சோ இதில முட்டை இருக்கு செய்ய மாட்டோம் என்கிறீங்க:) சரி சரி முட்டை போடாமல் செய்து காட்டினால்:)) அதுக்கும் ஒரு சாட்டுச் சொல்றீங்கள் எல்லோரும் கர்ர்ர்ர்ர்ர்:))... எண்ணெய் அல்லது பட்டர்.. இரண்டும் ஓகே தான் அம்முலு, பட்டர் எனில் கொஞ்சம் உருக்கிப்போட்டுச் சேர்த்தால் சரி.
வாழைப்பழம் மசித்துப்போட்டுச் சேர்ப்பதுதான் நல்லதென நினைக்கிறேன், கூழாக்கினால் எப்படி வருமோ தெரியவில்லை, ஆனா நன்கு நசிச்சால் கூழ் போலதான் வரும் அம்முலு...
வடாம் நல்லாயிருக்கு. நான் மோர் மிளகாய் போட்டுவிட்டேனே. ஆவ்வ்வ்வ் இந்த புதினா பொல்லாத மோசம். நானும் ரோஸ் இருக்கும் தொட்டியில் போட அது ரோசை வளரவிடாமல் இருக்க. இப்ப அதை தனி தொட்டியிலும்,நிலத்திலும்(கொஞ்சம் த்ள்ளி) நட்டு தொட்டியில் நல்லா வளர்ந்து அதை வெட்டி சட்னியும் ,புதினா சாதமும் செய்தாச்சு. இனி வளருவதை வடாம் போடலாம் போல. உங்க வடாம் ஆசை ஏற்படுத்தியிருக்கு. நல்ல ஐடியா. சும்மா பொர்ப்பதிலும் பார்க்க டிசைனா பொரித்தால் அழகு.
ReplyDelete//நான் மோர் மிளகாய் போட்டுவிட்டேனே//
Deleteஆஆஆஆஆஆ நான் தே.ஊறுகாய் போட்டேன், ஆனா மோ மி க்கு மிளகாய் கிடைக்கவில்லை, நேற்றுத்தான் வாங்கியாச்சு.. ஆனா இன்று மழை பெய்யுது... மழை முடிஞ்சதும் போடுவேன்.
//நானும் ரோஸ் இருக்கும் தொட்டியில் போட//
தனிச் சாடியிலதான் நடோணும், நான் தனியே சாடியிலும் வளர்க்கிறேன்.
//சும்மா பொர்ப்பதிலும் பார்க்க டிசைனா பொரித்தால் அழகு.//
ஹா ஹா ஹா அதேதான், கடையிலும் டிசைனான கலரான பப்படங்கள்தான் வாங்குவேன்.. ஹா ஹா ஹா மிக நன்றி அம்முலு.
ஏற்கனவே கொழுப்பு சீச்சீ இனிப்பு கூடித்தானாம் சினேஹா போல கும்முன்னு இருக்கின்றீங்க என்ற குரல் காதில் விழுது ஆகவே வாழைப்பழக்கேக் பார்த்து மட்டுமே![[
ReplyDeleteவாங்கோ நேசன் வாங்கோ..
Delete//ஏற்கனவே கொழுப்பு சீச்சீ இனிப்பு//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா உங்களுக்கும் டங்கு ஸ்லிப்பாகுதே :))..
ஸ்நேகா குண்டாகிட்டா எனக் கழட்டிவிடப் பார்க்கிறீங்க போலும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
நானும் சீனாவுக்கு போறேன் படம் சூப்பர்! புதினா சம்பல் நல்லாக இருக்கும் வடகம் செய்ய சிந்தனையில்லை!
ReplyDeleteபுதினாவில் சட்னியும், யூஸ் உம் செய்வேன் நேசன், ரெசிப்பி போடுறேன் யூஸ் க்கு.
Deleteநீங்க வியக்கும் அதிசயம் எனக்கும்தான். 10 மணிக்கு கூட படுக்க போனால் சூரியனார் இருப்பார். அதுவும் நல்ல வெயில் எனில் வெளிச்சம் அதிகமா இருக்கும். அழகா இருக்கு உங்க படம்.
ReplyDeleteபாட்டும் நல்ல பாட்டு.பழையகால முறையில் இனி வேலைகள் செய்யமுடியுமா. அங்கு கூட அம்மி,ஆட்டுக்கல்லு தேடுவார்ற்று இருக்கே. மா கூட உரலில் இடிப்பது குறைவு. எல்லாமே மில் தான்.
ஊசி இணைப்பு,குறிப்பு நன்றாக இருக்கு.
இன்று மழை பெய்யுது அம்முலு, அதனால 9 க்கு இருட்டு வந்துவிட்டது... நேற்று கடும் வெக்கை, இன்று கூலாக இருக்குது..
Deleteஉண்மைதான் இக்கரைக்கு அக்கரைப் பச்சை.. நம்மவர்கள் சிலர், வெளிநாட்டில் இப்போ ஊரிலிருந்து அம்மிகூட கப்பலில் கொண்டு வந்து வீட்டில் வச்சு அரைக்கத் தொடங்கியிருக்கினமாம்..
நன்றி அம்முலு.
வழமைபோல ஊசிக்குறிப்பு டாப்!1
ReplyDeleteநன்றி நேசன் நன்றி.
Deleteவாழைப்பழக் கேக் இன்று தான் அறிகிறேன்.
ReplyDeleteஇலங்கை, யாழ்ப்பாணத்தில வாழைப்பழ ரொட்டி தான் மலிவு
இனிய பதிவு