நல்வரவு_()_


Showing posts with label யோசிச்சுப்போட்டு எழுதுறேனே:). Show all posts
Showing posts with label யோசிச்சுப்போட்டு எழுதுறேனே:). Show all posts

Saturday, 20 January 2018

கடவுளுக்கு ஏன் இந்த ஓர வஞ்சனை கர்:))

டவுளின் சாகசங்களைக் கண்டு:) பல தடவைகள் நான் வியர்த்திருக்கிறேன்:) வெரி சோரி வியத்திருக்கிறேன்:).. முற்றும் துறந்த ஞானிகள் சொன்னார்கள்:).. ஒருவருடைய வாழ்வில் துன்பம் என்பது, அவரால் தாங்கக் கூடிய அளவுக்குத்தானாம் கடவுள் கொடுப்பார் என, ஆனா இதில் எனக்கு உடன்பாடில்லை, மனித மனத்தை சாந்தப்படுத்தவே அப்பூடிக் கடவுள் ஜொன்னார்:) என எல்லோரும் ஏமாத்துறாங்க, மீ இதுக்கெல்லாம் ஏமாற மாட்டேன்:)..
இந்த பூங்கன்று கிரிஸ்மஸ் க்கு கிவ்ட் டாக கிடைச்சது, இந்த அழகிய மலர்க்கொத்தைப் பார்த்ததும் என் மனதில் பல எண்ணங்கள் தோன்றின, அதில் ஒன்றுதான் இந்த தாங்கும் சக்தி பற்றிய ஆராச்சி.

ஒரு பெரீய அலரி மரத்திற்கு.. பாரமே இல்லாத குட்டிப் பூக்கள்... அதுபோல செம்பரத்தைக்கும் பாரமில்லாத குட்டிப் பூக்கள்... நாகலிங்கம் மரமோ பென்னாம் பெரியது ஆனா அதன் பூக்களோ மிகவும் மென்மையான பாரமில்லாத பூக்கள்... 

ஆனா இச் செடியையும் பூவையும் பாருங்கோ.. பாவம், தண்டு பூவை விட மென்மையானதாக இருக்கு... பூவின் சைசோ பென்னாம் பெரிசு.. அப்போ அதனை அத்தண்டு எப்படித் தாங்கும்? ஏன் கடவுள் இப்படிப் பண்ணினார், நிலத்தில் எனில், அப்படியே பூவோடு தண்டு சரிந்துவிடுமே.

இது நான் தூண்போல வோட்டர் ஜக் ஐ தோளாகக் கொடுத்து நிமித்தியிருக்கிறேன்.... “முல்லைக்கு முட்டுக் குடுக்க தேரைத் தேடாதே, சாய்ந்த மலருக்கு உன் தண்ணி ஜக் ஐக் கொடு”:) என என் காதில் ஆரோ சொல்வதுபோல ஒலித்தது:) அதுதான் உதவினேன்:)..

பிந்தைய இணைப்பு:

========================================================
இது என்ன எனத் தெரிகிறதோ?
இங்கே பெரும்பாலும் ஆற்றங்கரை எல்லாம் இப்படி பெஞ் கள் போடப்பட்டிருக்கும், நடப்போர்.. இருந்து புறுணம்:) பார்க்க என, சிலர் ஏதும் வாங்கி வந்து ஆற்றைப் பார்த்தபடி சாப்பிடுவர் இப்படி, ஆனா சில வயதானோர், எப்பவும் தங்களுக்கென ஒரு பெஞ் செலக்ட் பண்ணி பெரும்பாலும் அதில் வந்து இருப்பர், அப்படி இருப்போருக்கு ஏதும் ஆகி விட்டால், அவர்கள் அடிக்கடி இருக்கும் அந்த பெஞ் இல்,, இப்படி மலர்க்கொத்துக்கள் கொண்டு வந்து வைத்து விட்டுப் போவார்கள்.

இப்படி சம்பவங்கள் இங்கு அடிக்கடி காணலாம்.. 

ஊசி இணைப்பு:
இது எனக்குத் தெரியாதே.. புதுசூஊஊ ஹா ஹா ஹா எனச் சிரிக்கோணும் ஸ்ரீராம்:) ஜொள்ளிட்டேன்ன்ன்:)).. 


ஊசிக்குறிப்பு:
தூரத்து மணியோசை சொல்லி விடுகிறது
தபாற்காரரின் வருகையை!!
அடுப்பங்கரையில் கொதிக்கும் கறியின் வாசம்
சொல்லி விடுகிறது உறவுகளின் வருகையை!!
தரையைத்தேய்க்கிற செருப்புச் சத்தம் 
சொல்லி விடுகிறது அந்நியரின் வருகையை!!
பூனைப் பாதம் பதித்து மெல்லப் பின் வந்து
1ஸ்ட்டூஊஊ என்கையில்தான் தெரிகிறது உன் வருகையை!!
ஹா ஹா ஹா இதனை உங்களுக்காக வெற்றிகரமாகக் களவாடி எடுத்து வந்திருப்பவர்:- உங்கள் அன்புக்கும் பண்புக்கும் பாத்திரமான புலாலியூர்ப் பூசானந்தா அவர்கள்[மருவாதை:)]
<><><><><><><><><><><><>_()_<><><><><><><><><><><>

மெயில் இணைப்பு:
இதுதான் கீழே கொமெண்ட்டில் நாங்க பேசியிருக்கும், நெல்லைத்தமிழன் சொன்ன பெரீய வாழைப்பழங்கள்... இதை அனுப்பியவர்:) எனக்கு தலைப்புக் கொடுத்திருந்தார்   “நெ த உ அ சொ”    என:))  இதில ஏதாவது உங்களுக்குப் புரியுதோ?:)) ஹா ஹா ஹா மீக்கும் பிரியல்லே:)) , ஆனா இப்போ கேட்டுப் புரிஞ்சிட்டேன்:), நீங்க கேட்டால் புரிய வைப்பேன்:))) ஹா ஹா ஹா

_()_ நன்றி நன்றி _()_

Monday, 9 January 2017

இது நானேதான்..


மிக நீஈஈஈஈண்ட இடைவெளிக்குப் பின் திரும்படியும் என் முன்னங்காலை முதன் முதலில் எடுத்து வைக்கிறேன், ஏதோ மீண்டும் பழையபடி கலக்கோணும் புளொக்குகள் எல்லாம் எனும் நம்பிக்கையோடு... என்னை வாழ்த்தி ஆஜீர்ர்ர்ர்ர்ர்ர்ர் வதியுங்கோ:)...


நிறையப்பேர் என்னை மறந்திருக்கலாம், மறக்க நினைச்சிருக்கலாம், மறக்காமல் இருக்கலாம்... நினைச்சுக்கொண்டும் இருக்கலாம்:)... அனைவருக்கும் ஒண்ணு டெல்ல ஆசைப்படுறேன்.. அது என்னவெண்டால் நான் யாரையும் மறக்கேல்லை, ஏன் தெரியுமோ... இப்போதானே “சுவீட் 16” பேர்த்டே கொண்டாடினேன்(எனக்குத்தேன்:)).. [தெளிவாச் சொல்லாட்டில் குறுக்க குறுக்க கேள்வி கேட்பினம்.. எங்கிட்டயேவா?:))...

எனக்கு எழுத ஒண்டும் இப்போ வருகுதில்லை... எல்லோரும் கொஞ்சம் புளொக் பக்கமும் வாங்கோ... பெயர் சொல்லி அழைக்கப் பயமா இருக்கு ... தப்பித் தவறி யாரையாவது தவறவிட்டு, வந்ததும் வராததுமா மனதைப் புண்படுத்திட வாணாம் என நினைச்சு... எல்லோருக்கும் ஓபின் இன்விட்டேஷன் வைக்கிறேன்...

இலங்கை கம்பன் கழகத் தலைவர் திரு ஜெயராஜ் அங்கிள் ஒரு பேச்சின் போது சொன்னார், “தலைமுறை மாற்றம்” என்பதை முதன்முதலில் 2005 ஆண்டில்தான் நான் உணர்ந்தேன் என... அதாவது அவரது அலுவலகம் நல்லூரடியில் இருந்தது (இப்பவும் அங்குதானாக்கும்)... அப்போ 90 களில் அவர் மிகவும் பிரபல்யம்...

அதனால் அப்போ தான் அந்த வீதியால் போகும்போது அனைவரும் தலையசைத்து வணக்கம், நலம் விசாரிப்பார்களாம், பின்னர் இடம்பெயர்வு வந்தது 1995 இல் அப்போ அவரும் ஊரை விட்டு தமிழ்நாடு, கொழும்பு என அதிக காலம் வாழ்ந்திட்டு பின்பு 2005 இல் யாழ்ப்பாணம் போய் , 1990 காலம்போல் அதே வீதியால் போனபோது யாருமே கண்டுகொள்ளவில்லையாம்... அதாவது தலைமுறை மாற்றம் ஏற்பட்டதால் யாருக்கும் இவரை பெரிதாக புரியவில்லையாம்...

இதேபோலதால், இடைவெளி விடும்போது தலைமுறை மாற்றங்கள் ஏற்பட்டுவிடும்... அதனால நாங்க இடைவெளியில்லாமல் இருக்க முயற்சிக்கோணும் என ஜொல்லிக்கொண்டு..... மீண்டும் வருகிறேன்...

என் இனிய புளொக் ஓனர்கள்.. அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

==========================================================================
நாம் போகுமிடமெல்லாம் - நம் மனதும்
கூடவே வருவதில்லை...
ஜிப்படிக்குப் புலாலியூர்ப் பூஸானந்தா
====================================================================

Monday, 4 April 2011

என் எழுத்து:)



பெண் எழுத்து அதுதானே “என் எழுத்து”.

முதலில் என்னை “பெண் எழுத்து” எனும் தொடருக்கு... “ஹைலைட்ல” அழைத்த வானதிக்கு நன்றி(கர்ர்ர்ர்ர்:)) சொல்லிக்கொண்டு தொடர்கிறேன்.

என்னை தெரிஞ்சோ தெரியாமலோ அழைத்துவிட்டீங்க, இனி என் அலட்டலை எல்லாம் பொறுமையோடு கேளுங்க.

“பெண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” .. இது ஒளவையார் சொன்னது(யாரும் குறுக்க பேசிடக்கூடாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..:))

இதைவிட வேறென்ன வேணும் பெண்ணெழுத்திப் பற்றி பெருமையாக சொல்லுவதுக்கு.



இந்த மசாஜ் போதுமா?:))))

ஒவ்வொரு பெண்ணின் எழுத்துக்கும் பின்னால் ஒரு ஆண்தான் உறுதுணையாக இருக்கிறார். வலைப்பூக்களை எடுத்துக்கொண்டாலே திருமணமான பெண்கள்தானே அதிகம் வலைப்பூவில் எழுதுகிறார்கள்(நானறிந்து). அவர்களின் ஊக்கத்துக்கு கணவர்தானே காரணம். என்னைப்பொறுத்து பப்ளிக்கில் கதைக்கவே எனக்கு பயம், ஒவ்வொரு விஷயத்தையும் கணவரோடு பகிர்ந்து பகிர்ந்துதான் என் தன்னம்பிக்கையை வளர்த்து.... வலைப்பூவை இதுவரை ஓட்டிவந்திருக்கிறேன். யார் என்ன பதில் போட்டாலும், என் கணவர் ஒரு வார்த்தை “நீங்கள் எழுதியிருக்கும் விதம் நன்றாக இருக்கு” எனச் சொல்லிவிட்டாலே எனக்கு போதும், மனம் சோராது.

சரி விஷயத்துக்கு வருவோம். நான் ஓடி ஓடி நிறையப் பேரிடம் கேட்டுவிட்டேன்.. அனைவரும் சொல்கிறார்கள்... பெண் எழுதினால் அது பெண் எழுத்துதானே என. அதைத்தானே நான் தினமும் எழுதிக்கொண்டிருக்கிறேன் அதையும் மீறி பெண் எழுத்துப் பற்றிக் கேட்டால் நான் எங்கே போவேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்.

எந்த ஒரு நல்ல விஷயத்தையும் எவர் ஒருவர் அழகாக வெளிப்படுத்துகிறாரோ.. அது பாராட்டப்படவேண்டியதே, இதில் பெண் என்ன ஆண் என்ன? எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. பெண்ணின் எழுத்துக்கு வரையறை இருக்கு என்கிறார்கள், இந்த வரையறையைக் கொண்டுவந்தது யார்? எதிலாவது சட்டம் தீட்டப்பட்டிருக்கோ?. பெண்ணுக்கு மட்டுமல்ல, பப்ளிக்கில் எழுதும் ஒவ்வொருவருக்கும் வரையறை வேண்டும், இதில் பெண்ணை மட்டும் குறிப்பிட என்ன இருக்கு.

பெண் உடைக்கு வரையறை, ஒழுக்கத்துக்கு வரையறை... இதையெல்லாம் நம்மவர்தான் கொண்டுவந்தார்கள், சரி அதனை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் பெண் எழுத்துக்கு வரையறை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.

அதாவது ஒரு கதை படிக்கிறோம்.. அதை யார் எழுதியது என்பதனைத் தெரிந்துகொண்டு படிப்பதற்கும், தெரியாமல் படிப்பதற்கும் மனதளவில் நிறைய வேறுபாடு இருக்கிறது. எம் மனம்தான் அனைத்துக்கும் காரணம்.

 சமீபத்திலே, ரீவியிலே ஒரு பேட்டி நிகழ்ச்சியில் ஒருவர் கலந்து கொண்டார். அவர் வலைப்பூக்கள் பற்றி நிறைய விஷயங்கள் சொன்னார். அதில் அவர் சொன்னது. யாரும் வலைப்பூ ஆரம்பிக்கலாம், அது ஒரு பெரிய விஷயமே இல்லை, அதுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது, ஏனெனில் அது அவரவர்க்கு சொந்தமானதே. அதில் அவர் எதையும் எழுதலாம், ஆனால் ஆரம்பத்தில் எப்படி எழுதுவது எதை எழுதக்கூடாது என்றெல்லாம் புரியாது, சிலகாலம் போக, தாமாகவே புரிந்துகொண்டு, தமக்கென ஒரு வரையறையை உருவாக்கிக் கொள்வார்கள்.. அதாவது அடுத்தவரை தாக்கிடாமல், அடுத்தவர் மனம் புண்படாமல் எழுதப்பழகிடுவார்கள் என்று சொன்னார்.

அது உண்மையே, வரையறை என்பது இருபாலாருக்கும் பொதுவான ஒன்றென்பதுதான் என் கருத்து. ஒவ்வொருவருக்கும் என ஒவ்வொரு ஸ்டைல் இருக்கிறது, ஒரு நிகழ்வை வெளிப்படுத்தும் விதம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும்.

உதாரணமாக ஒரு பூனை மரத்திலே இருந்ததைப் பார்த்துவிட்டு வந்து, அதைப்பார்த்த விதத்தை ஒருவர் கையை அசைத்துக்காட்டிச் சொல்வார், இன்னொருவர் கண்ணையும் விரித்து கையையும் ஆட்டிக்காட்டிச் சொல்வார், இன்னொருவர் உடல் அங்கம் அனைத்தையுமே அசைத்துச் சொல்வார், இன்னொருவர் ஆடாமல் அசையாமல் சொல்வார்... இப்படிப் பலவகை உண்டு. இப்படித்தான் பெண் எழுத்தும்... ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள்....

அதேபோல, அதை ரசிப்பவர்களுக்கும் தம் ரசனைக்கேற்ப ஒவ்வொருவிதம் பிடிக்கும். ஒவ்வொரு பெண்ணின் எழுத்து நடையும் ஒவ்வொரு விதமாக(ஸ்டைலாக) இருக்கும், அதனை மாற்ற முடியாது.... முடிவு என்னவென்றால்..... “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”.

நான் எப்பவுமே எதையுமே தப்பான கண்ணோட்டத்தில் படிப்பது மிக மிகக் குறைவு, எதுவாயினும் எனக்கு சாதகமாக மாத்திப் படிப்பதுதான் வழக்கம். அதிலும் சமீபத்திலே ஒரு பதிவில் ஜெய்... சொன்னார் “மாத்தி யோசியுங்க” என, அதுவும் ஆழமாக மனதில் பதிஞ்சுபோச்ச்ச்ச்ச்.. இப்போ பலதையும் மாத்திமாத்தி யோசிக்கிறேன். (தப்பாக அல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

யாம் பெற்ற இன்பம் பெறவேண்டாமோ இவ் வையகம்.... அதுக்காகத்தானே நான் அழைக்கிறேன்....

ஜலீலாக்கா, இமா, இலா, சந்தனா.
ஃபோர் எ சேஞ்..... ஜெய்...(100 உடன் 101 ஆக உங்கட எழுதாமவிட்ட லிஸ்ட்ல இதையும் சேர்த்திடுங்க அவ்வ்வ்வ்வ்வ்).

ஐவரையும் அழைத்திருக்கிறேன்..... எழுதினால் சந்தோஷம், எழுதாதுவிட்டால் அதைவிட சந்தோஷமா?:)) எனக் கேட்டிடாதீங்க கர்ர்ர்ர்ர்ர்.... நான் எதுக்கும் கோபிக்கப்போறதில்லை. இதென்ன பணத்துக்காகவா தொடர்ப்பதிவு நடத்துகிறோம்.... ஒரு மகிழ்ச்சி, பொழுது போக்கிற்காகத்தானே.... இதில் கோபித்து முகம் சுழிக்க என்ன இருக்கிறது, தலைப்பு பிடித்திருந்தால், உங்களால் எழுதமுடிந்தால் எழுதுங்கோ.

=========================================================
இது அன்புத் தம்பி ஜீனோ, அக்கா அடிக்கடி கர்ர்ர்ர்ர் சொல்லிச்சொல்லி பல்லுப் பழுதாகியிருக்குமாம் என புதிதாக ஒரு பல்செட் அனுப்பியிருக்கிறார்.... வைரம் பதித்தது.... இப்ப நான் இதோடுதான் திரிகிறேன்....:) (தம்பிக்கு அக்காவில் இருக்கும் அக்கறை, வேற ஆருக்குமே இல்ல:)).


============================================================================
இல்ஸ் உம் ஒரு பெரிய கயிறு அமெரிக்காவில இருந்து அனுப்பியிருக்கிறா, ஏதும் பிரித்தானியாவில நிலநடுக்கமென்றால்.... இதைப் பிடிச்சு ஏறி அங்கின வந்திடட்டாம்... நுனியை(கயிற்றின்) அவ இறுக்கமாகப் பிடிச்சிருக்கிறா....

///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

ஊசி இணைப்பு:
TODAY A READER TOMORROW A LEADER