நல்வரவு_()_


Friday 29 August 2014

குயின் அம்மம்மாவும் அதிராவும்:)


த்தனை தடவைதான் நான் ஆர் என்பதையும், என்னை நினைவிருக்கோ என்பதனையும் கேட்பது :).. அதனால ஸ்ரெயிட்டா விஷயத்துக்குப் போய்விடுவது நல்லதென முடிவெடுத்திட்டன்:) இது நல்ல முடிவுதானே?:).

ந்த முறை எங்கட குயின் அம்மம்மா என்னை விடவேயில்லை, அவட பூட்டனின்[(இப்பூடி விபரமா எழுதாட்டில் பிறகு அதிராவின் பூட்டனோ என சனம் கதை கட்டிடும்:) நாங்க இதில எல்லாம் வலு உஷார் ஆக்கும்:))]பிறந்தநாள் வந்ததெல்லோ யூலையில அதுக்கு வா வா என ஒற்றைக் கால்ல நிண்டா..:) அதனாலதான் ஒருக்கால் பக்கிங்காம் பலஸ் பக்கம் போய் ... குட்டியின் கையைப் பிடிச்சு நான் தான் கேக் கட் பண்ணி தீத்தியும் விட்டனான்:.. தொட்டிலில் போட்டதும் நான் தானே:).. அப்போ எப்பூடி இதுக்குப் போகாமல் விடுவது?? :).

பக்கிங்காம் பலஸ் முன் பக்கம்...


இதில பாருங்கோ, 1ம் மாடியில இருக்கிற 4 வது கண்ணாடி தெரியுதெல்லோ? அந்த அறைதான் குயின் அம்மம்மான்ர அறை:)

இது பலஸ் க்கு எதிர்ப்பக்கமா இருக்கும் பூந்தோட்டம்:) இதில இருந்துதான் நானும் குயின் அம்மம்மாவும் கேக்கும் சாப்பிட்டு இங்கிலீஸு ரீயும் குடிச்சம்:)

இதில எனக்கு பிடிக்காத விஷயம் ஒண்டிருக்கு.. என்னண்டால்ல்.. சிவப்பு கோட்டும் கறுப்பு ஜீன்ஸ்ஸும்.. கண்ணை மறைக்கும் தொப்பியும் போட்டு ஒருவர் நிற்பது தெரியுதெல்லோ? ஒவ்வொரு வாசலுக்கும் ஒருவராக நிற்கினம்.. கார்ட்.. கொடுமை என்னண்டால்ல்ல் சிலைபோல, கையில் துவக்கை ஏந்தியபடி நிற்கவேண்டும்... கைவலித்தால், ஆமிக்காரர் , போலீஸ் ச்லூட் போடுவதுபோல , காலை தூக்கி அடித்து கையில் இருக்கும் துவக்கை மாற்ற வேண்டும்... 24 மணி நேரமும் இதுதான்... இது மட்டும் எனக்கு பிடிக்கவேயில்லை, அவர்களுக்கு காவல் காக்க இப்படி மனிதர் கஸ்டப்பட வேண்டுமோ???



ஆவ்வ்வ்வ் கிட்ட வந்தாச்சூஊஊஊ... இதுதான் லண்டன் ஐ:).. எதுக்கு கிட்டவோ? வெயிட் சொல்லுவன்தானே? :)

இது ஒரு கண்:).. கிட்ட வந்தாச்சூஉ.. அதாவது தேம்ஸ்ஸ் தெரியுதெல்லோ.. இதுதான் தேம்ஸ்ஸ்ஸ் :)

இது லண்டன் ஐ இலிருந்து தேம்ஸ் நதி.. Big Ben - UK Parliament தெரியுது





இது தேம்ஸ் நதியில், குரூஸில் போனபோது, மேல் தட்டில் இருந்து எடுத்த London Bridge...

========================================================================

ஊசிக் குறிப்பு:
இனிமேல் தினமும் காலை ஆறு மணிக்கு, பிரித்தானிய நேரப்படி:) அதிராவின் புளொக்கில் புதுப் பதிவு வெளிவரும் என்பதனையும்:) அதனை படிக்காமல் மிஸ் பண்ணி, உங்கள் வாழ்க்கையின்.. அதாவது நீங்க பிறந்ததன் பயனை அடையாமல் விட்டிடாதையுங்கோ என்பதனையும், அதுக்கு முன் “சிக்னல்” பல்பசை கொண்டு பல் துலக்கி, குளிர் நீரில் முகம் கழுவி, உங்கள் உங்கள் தெய்வங்களையும் வணங்கிக் கொண்டு.. ஓடிவந்து படிக்கும்படியும் சொல்லிக் கொள்கிறேன்....
இப்படிக்குப் புலாலியூர்ப் பூஸானந்தா:).

=========================================================================
உங்களிடம் இருக்கும் உண்மைகள் எல்லாவற்றையும் நீங்கள் சொல்லவேண்டும் என்றில்லை - ஆனால் நீங்கள் சொல்பவை எல்லாம் உண்மையாக இருக்கட்டும்..
=========================================================================