நல்வரவு_()_


Showing posts with label Ships. Show all posts
Showing posts with label Ships. Show all posts

Thursday, 14 May 2020

யோகா என்பது உங்கள் உடல்🙇
 ஜிம் என்பது உங்கள் வருங்காலம்🙌:))

என்ன நான் சொல்றது புரியுதோ?:)

இந்தப் போஸ்ட்டில் புதுசாப் பெரிசா ஒன்றுமில்லை.. எல்லாம் ஒரு கவலை, இழப்பின் வெளிப்பாடுதான் இப்போஸ்ட்:)) ஹா ஹா ஹா பயந்திடாதையுங்கோ.. நான் சொல்ல வருவது இப்போ ஜிம் போக முடியவில்லை, யோகா ரீச்சரையும் பார்க்க முடியவில்லை.. என்பதனால கவலையாகவும் இருக்குது:).. “yoga is your body".. இது எங்கட ரீச்சர் அடிக்கடி சொல்லும் வசனம்:)

எனக்கு அனைத்திலும் பிடிச்சது இப்போ யோகா தான்... இங்கு அனைத்திலும் போகக்கூடியவாறே மெம்பஷிப் எடுத்து வச்சிருந்தேன், நேரம் தான் போதாமல் இருந்தது, மற்றும்படி, ஜிம் களில் எந்த வகுப்புக்கள் நடந்தாலும் போகலாம், எங்கள் மாவட்டத்தில் இருக்கும் அத்தனை ஜிம்களுக்கும் போகலாம், மற்றும் யோகா, சுவிம்மிங், வோட்டர் ஏரோபிக் கிளாஸ், சோனா இப்படி அனைத்துக்கும் போகலாம்.. நேரம் இல்லாமையால ஜிம் ஐயும் யோகாவையும் மட்டுமே ஒழுங்காகப் போனேன், ஏனையவற்றுக்கு, நேரம் கிடைத்தபோது மட்டும் போனேன்..

இப்போ வீட்டில் யோகா செய்வது பிடிச்சுப் போச்சு:), நேரமும் தாராளமாகக் கிடைக்குதெல்லோ...

நான் யோகாக் கிளாஸ் க்கு முன்னர் ஒருபோதும் போனதில்லை, ஆனால் சின்ன வயசிலிருந்தே டான்ஸ் ஒரு பாடமாக எடுத்தமையால, வீட்டில் யோகா போல செய்வேன்.. 

இப்போ வகுப்புக்குப் போனதும் பயத்தில, கடசி வரிசையில போய் இருந்தேன் 2,3 வகுப்புக்கள், இதை அவதானிச்ச யோகா ரீச்சர், ஒருநாள் வழியில என்னை மடக்கிச் சொன்னா “நீ எப்பவும் என் கண்ணுக்கு தெரியாமல் ஒளிச்சிருக்கிறாய், இனி முன் வரிசையில் வந்திருக்கோணும்” என ஹா ஹா ஹா அதிலிருந்து, ஒளிப்பதை விட்டு விட்டேன்...

ஆனாப் பாருங்கோ இங்கு அதுவும் முழுக்க முழுக்க ஸ்கொட்டிஸ் மக்களே இருக்கும் நம் ஏரியாவில், யோகா வகுப்பில்... ஓம் சாந்தி... ஓம் சாந்தி..., ஒம் நம ஸ்....வா...ய.... இப்படி எல்லாம் ரெக்கோர்டில் போடுவார்கள், எனக்கோ மெய் சிலிர்க்கும்....

😹😹😹😹++++++++++இடைவேளை+++++++😹😹😹😹

வட்ஸப் யோகா,ஜிம் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன, சொல்லித்தருபவர் பிஞ்சு  ரீச்சர் அதிரா:).. இடம் முடிஞ்சிடும் எனவே உடன் பதிவுக்கு முந்துங்கள்:))
¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬

சரி அதை விடுங்கோ.. ஜிம் க்கு வருவோம்.. இப்போ ஜிம் இல் அனைத்தும் டிஜிட்டல் மயம், நமக்கென ஒரு பென் ட்றைவ் தந்திருக்கினம், அதில் நாம் என்ன என்ன செய்ய விரும்புகிறோம் என்பதை சேஃப் பண்ணி வைத்தால், அந்த மெசினில் அப் பெண்ட்றைவ் ஐப் போட்டதும், நம் பெயர் விபரத்தோடு, என்ன ஸ்பீட், எவ்வளவு நேரம் என்பதெல்லாம் சொல்லி, ஓட்டமெட்டிக்கா ஸ்ராட் ஆகும், பின்பு ரைம் வர நிற்கும்[தேவை எனில் கூட்டிக் குறைக்கலாம்]... இதில் மேலே வலது மூலையில் போட்டிருக்கிறேன் மஞ்சள் நிறத்தில்.. அதுதான் அந்தப் பென் ட்றைவ்.. அதை நாம் எப்பவும் வைத்திருப்ப்போம்.. அதில் நாம் செய்வதெல்லாம் சேஃப் ஆகிக் கொண்டிருக்கும்.

ட்ரெட்மில், சைக்கிள் போன்ற மெசின்களில் இப்படி அதனோடு ரிவியும் உண்டு, நம் விருப்பத்துக்கு ஷனல் ஐ மாத்திப் படம்  பார்த்துக் கொண்டே செய்யலாம்..

இது யும்மா:), எங்கள் ஜிம் அமைந்திருப்பதும் ஒரு ஆத்தங்கரைதான், அப்போ ஜிம் செய்யும்போது வெளியே தெரியும் காட்சிகளைப் படமெடுத்தேன்.. இதுவும் ஒரு அழகும், மனதுக்கு இதமுமாக இருக்கும்.. பாருங்கோ.. ஆற்றங்கரை தெரிவதற்காக, ஒரு பக்கம் முழுவதும் கண்ணாடிச் சுவர்களே அங்குண்டு...
(1)

(2)

 (3)

 (4)

 (5)

 (6)

 (7)

இது என்ன  கப்பல் தெரியுமோ?, பென்னாம் பெரிசு,
 இது கப்பல்களைத் திருத்தும் கப்பல் ...


ஊசிக் குறிப்பு
ஹா ஹா ஹா இது உண்மையோ? திகிலாக இருக்காது?:)

ஊசி இணைப்பு 

அதிரா இணைப்பு..........:) 
🙏🙏🙏😷🙏🙏🙏

Friday, 1 June 2018

கண்ணழகியைக் கலைத்த அதிரா...

நில்லுங்கோ மம்மி... கப்பல் பார்த்திட்டு வாறேன்:)
வ உங்களுக்குத் தெரிஞ்ச கண்ணழகியேதான்:).. ஒவ்வொரு வருடமும் தவறாமல் வருவா. ஆனா வழமையா ஏழியா வந்திடுவா. இம்முறை காலை 8 மணிபோல வந்தா.. அதனால அவவை விட்டுக் கலைத்து, பக்கம் பக்கமாகப் படமெடுத்திட்டேன்ன்:)) பூஸோ கொக்கோ:))

ங்களுக்குத் தெரியும்தானே பிளேனுக்கு றிவேர்ஸ் கியர் இல்லை, அதனால பின்னாலே நகர பிளேனால முடியாது, அப்படித்தான் கப்பலையும் நினைச்சிருந்தேன்.. ஆனா பாருங்கோ நடு ஆத்தில் வச்சு என்ன அழகா ஃபுல் ரேன் பண்ணி றிவேசில போனா தெரியுமோ? நான் அப்பூடியே ஷாக்க்க் ஆகிட்டேன்:))..

இது கிழக்கிலே சூரியன், நான் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி எடுத்தமையால் இருட்டாகவே இருக்கு படங்கள் அனைத்தும். முதல் படம் வீட்டில் இருந்து எடுத்தமையால், வெயில் என் பின்னால் இருந்துது.

ரிவேர்ஸ் எடுக்க திரும்பும்போது அதிராவுக்கு பம்:) ஐக் காட்டுறா கர்ர்ர்ர்ர்ர்:))

திரும்பி விட்டா:)

இது கீசாக்காவுக்காக ஆதாரத்துடன்:))., இல்லை எனில், அதிரா எடுக்கல்லே வேறு ஆரோ எடுத்திருக்கினம் என சவுண்டு விடுவா கர்ர்ர்:))

அஞ்சூஊஊஊஊ வாங்கோ கப்பல் பார்த்துக் கொண்டே நடக்கலாம்:)) தள்ளி எல்லாம் விட மாட்டேன்ன்:)) பயமெனில் அம்முலுவையும் கூட்டி வாங்கோ:))

தண்ணி கொஞ்சம் உள்ளே போயிருந்தபோது.. பாசி மிக அழகாக இருந்தது.. கீதாவை நினைச்சு எடுத்தேன்:)

சீ ஹல்ஸ் அழகாக உறக்கம் கொள்கிறார்கள்... இது கோமதி அக்காவின் புறாச் செல்லங்களுக்கு எசப்பாட்டு:))

ஆற்றங்கரையை அழகுபடுத்தும் மலர்களில் சில:).. ஆவ்வ்வ் பிங்கி:) அஞ்சு பெயர் தேடிச் சொல்லவும்:))

பிங் ரியூலிப்ஸ்ஸ்:)


ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச் மை கார்.. இப்போதான் கழுவினேன்:)) இதில்தான் வீட்டிலிருந்து கண்ணழகியைக் கலைச்சுக் கொண்டு வந்து பிடித்தேன்:))

கார்டினிலே மகள் விளையாடிய களைப்பில் நித்திரை கொள்றா:).. டெய்சிக்கு வெயில் வெக்கை தாங்க முடியவில்லை.. குளிர் வேணுமாம்:)

வெயில் காலம் தொடங்கி விட்டமையால், ஸ்பரோ பிடிக்கத் தொடங்கிட்டா டெய்சி கர்ர்:)) தெய்வாதீனமாக உயிருடன் பறிச்சு.. தண்ணி கொடுத்து களைப்பைப் போக்கி பறக்க விட்டோம்:))

 எங்கட முற்றத்து குண்டுராணி:)

இந்த ஒரேஞ் மலர்கள் கொள்ளை அழகெல்லோ.. எங்கட பக்கத்து வீட்டுப் பருவமங்கை:)


ஊசி இணைப்பு:
பாருங்கோ.. கீதா ரெங்கன் எவ்ளோ அழகா மயில்களுக்கு உணவு குடுக்கிறா:) மயிலுக்கெல்லாம் குடுக்கத் தெரியுது.. பூஸ் என்றால் மட்டும் அடிச்சுக் கலைக்க வாறா கர்ர்ர்ர்ர்ர்:))
---------------------------------------------------------------------

ஊசிக்குறிப்புக்கள்:) 

 ========================================================================
========================================================================
படம் படமாப் போட்டுப் பெருமை பேசியே:), எல்லோரையும் பொத்துப் பொத்தென மயங்கி விழ வச்ச:) பெருமைக்குரியவர்:- உங்கள் பெருமதிப்புக்கும் பேரன்புக்கும் உரிய புலாலியூர்ப் பூஸானந்தா அடிகளார்:))
_________________()_________________