நல்வரவு_()_


Showing posts with label my youtube channel. Show all posts
Showing posts with label my youtube channel. Show all posts

Saturday, 6 March 2021

     “அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏

 

பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))

மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை.. அது என்னமோ கொஞ்சக்காலமாக ஒரு வெறுப்பு, புளொக்கே வேண்டாம் என ஒரு எண்ணம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது, வேலையும் முழுநேரமானதும், எதுவும் வேண்டாம் என மனம் சொல்லியது, அப்படி இருந்தும் விடக்கூடாது என இடைக்கிடை ஃபோஸ் பண்ணி புளொக் வந்தாலும் ஏதோ ஒன்று மனம் வெறுக்க வைத்து, ஓஃப் ஆக்கிக் கொண்டே இருந்தது, அது என் ராசி அப்படித்தான், எப்பவும் எதிலும் நிலையாக இருக்க விடாது:))..

அப்படி இருக்கையில்தான், போன வருட மார்ச் லொக்டவுனில் ஆரம்பித்த யோசனை, ஒரு யூ ரியூப் சனல் திறக்கோணும் என்பது, எங்கள் ஆட்களும் எல்லோரும் அப்பப்ப சொல்லிக் கொண்டிருந்தார்கள் ஒரு சனல் திறக்கலாமே என... பொறுத்திருந்தேன், 2021 வந்ததும் டமால் எனக் குதித்து விட்டேன்.

ஆனா இங்கு சொல்ல ஒரே ஷை ஷையா இருந்துதா:)).. அதனால கொஞ்ச நாள் போகட்டும் என இருந்தேன், ஆனா என் செக் அதுக்குள் போஸ்ட் போட்டு விட்டா:)), அதனால எனக்கும் கொஞ்சம் ஷை குறைஞ்சு போச்ச்ச்:)).

உங்கள் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும் அஞ்சு மூலம் என் சனல் முகவரி[நன்றி அஞ்சு].. இருப்பினும் நானும் நினைவு படுத்தோணும் எல்லோ:))..

இதுதான் என் சனல்...   athees palace

ஆரம்ப காலம் பலரும் என்னை அதீஸ் எனவே அழைப்பினம், அப்போ அந்தப் பெயரிலேயே ஆரம்பித்தேன், அதிராவாக இல்லையாக்கும்:)).

இதுவரை பார்க்காதோர், subscribe பண்ணாதோர், ஒரு தடவை பண்ண முடிஞ்சால் பண்ணி விடுங்கோ பிளீஸ். அஞ்சு மூலம் அறிந்து, வந்து பண்ணிய அனைவருக்கும் மிக்க மிக்க நன்றிகள்_()_.

என்னில எப்பவும் ஒரு பழக்கம், ஒரு அலுவல் எனில், ஒழுங்காகச் செய்யோணும், இல்லை எனில் செய்யாமலே இருக்கலாம் என எப்பவும் நினைப்பேன்.. அதாவது “செய் அல்லது செத்துப்போ” என.

இது காந்தித்தாத்தா சொன்ன வசனம். நான் குட்டியாக இருந்தபோது, எங்கட அண்ணன், அவர் படிக்கும் மேசை, ஒரு கோனரில் இருந்தது, அந்தக் கோனர் சுவரில பென்சிலால சில வசனங்கள் அழகாக எழுதியிருப்பார். அதில இந்த வசனம் இருந்தது, அப்பவே எழுத்துக் கூட்டிப் படிச்சு மனதில பதிச்சுக் கொண்டேன், விளக்கமே தெரியாமல்:)).. அதனால நிறைய நேரத்தை எடுக்கிறது சனல் இப்போ:))

நான் சமைப்பதை முதல் ஆளாகச் சுவை பார்க்கும் என் “செக்”:), அவவுக்கும் இப்போ பதவி உயர்வு குடுத்திட்டேன்:)..  “செக் + பேசனல் அட்வைஸர்”

ஆனால் சம்பளம் இன்னும் தீர்மானிக்கவில்லையாக்கும்:)). பாருங்கோ மூக்கில கட்ட வேண்டியதைத் தலையில கட்டிக்கொண்டிருக்கிறா கர்ர்ர்ர்:)).

உப்புப் புளி எல்லாம் கரெக்ட்டாக இருக்குதோ எனப் பார்க்கிறேனாக்கும்:))
🙏🙏🙏😻🙏🙏🙏

இது எங்கள் புளொக்குக்காக செய்த என் கை வண்ணம், பெயிண்ட் பண்ணி, தலையணை உறையாகத் தைத்து எடுத்து, தலையணையிலும் போட்டு வச்சிட்டேன், இன்னும் பாவிக்கவில்லை... நாங்க சென்னை போனால் ஸ்ரீராமுக்கு குடுக்கப்போறேன்:))

EB = Engal Blog


முடியும்போது அப்ப அப்ப போஸ்ட் உம் இங்கு போட இருக்கிறேன், அனைவருக்கும் நன்றி.

ஆஆஆஆ ஜொள்ள மறந்திட்டேன், நெல்லைத்தமிழன் 2019 இல் இங்கு சொன்னார், 2021 இல் தங்களுக்கு ஒரு விஷேசம் உண்டு என, அப்போ நினைச்சேன், அதுக்கு இன்னும் எவ்ளோ காலமிருக்குது எண்டு, ஆனா திரும்பிப் பார்க்க முன் வந்திட்டுது, நெல்லைத்தமிழன், விசேசத்துக்கு எங்களை அழைக்காவிட்டாலும் கோபிக்க மாட்டோம், ஆனா சமையல் ஓடர் மட்டும் அதீஸ் பலஸ் லதான் குடுக்கோணும்:)).. இதுபற்றிப் பேச என் “செக்” ஐத் தொடர்பு கொள்ளவும்:)).

ஊசி இணைப்பு:
இது ஆருடைய வெயிட்டாக இருக்கும்...?:))

ஊசிக் குறிப்பு:
 “முன்னே செல்பவரை விட்டு விடுங்கள், பின்னால் வருபவரிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள், அவரால்தான் உங்களை முந்த முடியும்”

 “மீண்டும் ஒருமுறை முகம் பார்த்துப் பேச வேண்டியிருக்கும் என்ற ஒரு காரணத்துக்காகவே, நமது பல கோபங்கள் தற்கொலை செய்து கொள்கின்றன”

இவ்வரிய தத்துவங்களை உங்களுக்காக இங்கு கஸ்டப்பட்டுக் காவி வந்திருப்பவர்:- உங்கள் பேரன்புக்கும் பெருமதிப்பிற்கும் உரிய.. “புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்”
🌹🌹🌹🌻🌻🌻🐱🐱🐱🌻🌻🌻🌹🌹🌹